பாஹி ந: பாதுகே யஸ்யா விதாஸ்யந் அபிஷேசநம்
ஆபிஷேசநிகம் பாண்டம் சக்ரே ராம: ப்ரதக்ஷிணம்-—181-
பாஹி ந: பாதுகே -எங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும்
யஸ்யா விதாஸ்யந் அபிஷேசநம்-பெருமாளே விரும்பி யாருக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஸங்கல்பித்தானோ –
கைங்கர்ய பரர்கள்- பாதுகா -சுக்ரீவன் -விபீஷணன் -திருவடி இவர்களுக்கு பண்ணி செய்த பின்பே தனக்கு
பெருமாள் ஸங்கல்பமே நடை பெறும் அன்றோ –
ஆபிஷேசநிகம் -அபிஷேகத்துக்கு உரிய
பாண்டம் சக்ரே ராம: ப்ரதக்ஷிணம்—-பெருமாள் பட்டாபிஷேகத்து வைத்த பாண்டங்களை ப்ரதக்ஷிணம் செய்து அருளினாரோ
அனுஷ்டு சந்தஸ்ஸூ தொடர்ந்து -ஆர்யா சந்தஸ்ஸு முடிவு செய்கிறார் -30 ஸ்லோகங்கள் கொண்ட பத்ததி –
சாஷாத் பெருமாளே பட்டாபிஷேக உபகரணங்களை ப்ரதக்ஷிணம் செய்து பாதுகா பட்டாபிஷேகம் செய்யப் போவதை காட்டி அருளினான்
பாதுகையே! இராமன் கானகம் புகுதற்கு முன்பாக, தனது பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை
ஒரு முறை வலமாக வந்து பார்வை இட்டான். இதன் மூலம் உனக்கு அப்போதே இராமானால் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு விட்டது.
இப்படிப்பட்ட பாதுகையே! எங்களைக் காக்க வேண்டும்.
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் முன்னர் பட்டாபிஷேகதிர்கான திரவியங்களைப் பிரதஷிணம் செய்து
பெருமாள் யார் பொருட்டு இது பயன்பட வேண்டும் என ப்ரார்த்திதாரோ அப்பேர்பட்ட நீ எம்மைக் காத்தருள வேண்டும் –
ஆழ்வார் பரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -ஆ முதல்வனாம் இவன் என்று -கடாக்ஷம் -ஒருங்கே பிறழ வைத்தான் –
என் நா முதல் வந்து புகுந்து –தூ முதல் பத்தருக்குத் தான் தன்னைச் சொல்ல –வாய் முதல் அப்பனை என்றும் மறப்பேனோ –
குல பதி வகுளாபிராமம் -திருப்புளி ஆழ்வாரை வலம் வந்து ஆழ்வார் அருளிச் செயல்களை பெற திவ்ய தேச எம்பெருமான்கள் –
பட்டாபிஷேகம் செய்து அருளினார்கள் அன்றோ –
பாட்டு வாங்கவே வந்தார்கள் –
கடியன் கொடியன் -என்று பாடினாலும் உத்தேச்யமே
நீங்களே அடியோங்களைக் காத்து அருள வேண்டும்
அதிகாரம் இல்லாத எங்களை –
பாண்டம் -நதிக்கரை என்றும் -பொரு நல் -துரை -என்றுமாம்
37-திவ்ய தேச எம்பெருமான்கள் பாசுரம் பெற்றுச் சென்றார்கள்
1-9-இவையும் அவையும் -சூழலில் வந்து -காதல் மிக்கு -காதலன் காதலியை அணுகுமா போல்
கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் –
சூழலில் -என் அருகில் -ஒழிவிலன் என்னோடே உடனே -ஓக்கலையானே -மாயன் நெஞ்சில் உளானே –தோளிணையானே –
நாவில் உளானே -கண்ணில் உளானே -நெஞ்சில் உளானே -உச்சியில் உளானே -அபிஷேகம் செய்து அருளினான்
கேட்ட நமக்கும் -சென்னி பெறுமே -பல ஸ்ருதி –
—————————————————————
ராகவஸ்ய சரணௌ பதாவநி ப்ரேக்ஷிதும் த்வத் அபிஷேகம் ஈஷது:
ஆபிஷேசநிக பாண்ட ஸந்நிதௌ யத் ப்ரதக்ஷிண கதிர் சநைர் யயௌ—182-
ராகவஸ்ய சரணௌ பதாவநி -பாதுகைகள்
ப்ரேக்ஷிதும் த்வத் அபிஷேகம் ஈஷது:-காண ஆசைப்பட்டு
ஆபிஷேசநிக பாண்ட ஸந்நிதௌ -அவற்றின் அருகிலேயே
யத் ப்ரதக்ஷிண கதிர் சநைர் யயௌ—மெதுவாஹ நடந்ததாம் -சநைர் -மெதுவாக
சனீஸ்வரன் -மெதுவாக செல்லும் கிரஹம் –
மெதுவாக நடந்தது -ஆச்சார்யர் மேல் மரியாதையால் பெருமாள் நடக்க -தற் குறிப்பு ஏற்று அணி மூலம் கவி இது
பாதுகை கண்டு களித்து நடந்ததாம்
ரதோத்ததா சந்தஸ்ஸு
பாதுகையே! இவ் விதமாகப் பட்டாபிஷேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருள்களை இராமன் மெதுவாக வலம் வந்தான்.
ஏன்? அவனுடைய திருவடிகள் உனது பட்டாபிஷேகத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டன.
ஆகவே அவனது திருவடிகள், உனது பட்டாபிஷேகம் வரை கால தாமதம் செய்யவே மெதுவாக நடந்தன போலும்.
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு எழுந்து அருளும் முன்னர்
திரு அபிஷேகத்திற்கான மங்கள த்ரவியங்களை வலம் வரும் போது
பார்த்துக் கொண்டே தன் திருவடிகள் நன்கு பதியும் படி அடி மேல் அடியாக மெல்ல எழுந்து அருளினார்
அத்தகைய கடாஷ விசேஷம் பெற்ற மங்கள வஸ்துக்கள் உனக்கு திரு அபிஷேகத்தைச் செய்வித்தன –
ஆசார்யரை எவ்வளவு கொண்டாடினாலும் பெருமாளுக்கு உகப்பாகும் என்றவாறு –
ஆழ்வார் பரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பட்டாபிஷேகம் காண தானே கண்டு களிக்க
இனி இனி 20 தடவை கூவும்படி வைத்து
நான்கு சரணாகதி -நோற்ற நோன்பு தொடங்கி
நாட்டைத் திருத்த
நச்சுப் பொய்கை ஆகாமைக்காக
பிரபந்தம் தலைக் கட்ட
35 வருஷங்கள் துடித்துக் கொண்டே இருக்க வைத்தான் அன்றோ
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அங்கேயே இருந்து அருளிச் செய்ய வைத்து
ஆழ்வாரைச் சுற்றி எங்கும் இன்றும் அர்ச்சா ரூபமாக திருவேங்கடமுடையான் சந்நிதிகள் உண்டே
புளிங்குடி கிடந்து –விஜாயாசன பெருமாளாக வரகுண மங்கை அமர்ந்து- -ஸ்ரீ வைகுண்டம் நின்றும் -போக பாக த்வரை -தெளிந்த என் சிந்தை அகம் கழியாமல் இருந்தான்
—————————————————————-
மூர்த்தா பிஷிக்தைர் நியமேந வாஹ்யௌ
விசிந்த்ய நூநம் ரகு நாத பாதௌ
ரத்ன ஆஸநஸ்த்தாம் மணி பாதுகே த்வாம்
ராமாநு ஜந்மா பரதோ அப்ய ஷிஞ்சத்—-183-
மூர்த்தா பிஷிக்தைர் -பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டவர்களாலேயே
நியமேந வாஹ்யௌ-முறைப்படி வஹிக்கப்பட வேண்டும் என்று
விசிந்த்ய நூநம் -நன்றாக சிந்தித்து
ரகு நாத பாதௌ
ரத்ன ஆஸநஸ்த்தாம் மணி பாதுகே த்வாம்-உன்னை அமர்த்தி
ராமாநு ஜந்மா பரதோ அப்ய ஷிஞ்சத்—-தம்பி பட்டாபிஷேகம் செய்வித்தான்
உபஜாதம் விருத்தியில் இது தொடங்கி மூன்று ஸ்லோகங்களும்
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனின் தம்பியான பரதன் எண்ணியது என்ன?
தகுந்த பட்டாபிஷேகம் செய்யப்பட்ட ஒருவர் மட்டுமே இராமனின் திருவடிகளைச் சுமந்து, அதன் தொடர்பு பெற இயலும் என்பதாகும்.
இதன் காரணமாகவே மாணிக்கக் கற்கள் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில் உன்னை அமர வைத்து,
உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான் போலும்.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் திருவடிகளைப் பட்டாபிஷேகம் ஆனவர்களே தாங்க வேண்டும் என்று ஸ்ரீ பரதாழ்வான் உன்னை
ரத்ன சிம்மாசனத்திலே எழுந்து அருளச் செய்து உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார் –
ஆழ்வார் பரம் –
பெருமாள் திருவடிகளை சிந்தித்து இருப்பவர்களை கொண்டாட வேண்டுமே
ரத்நாசானம் -அத்யயயன உத்சவம் -அமர்ந்த திருக்கோலம் -ஞான பிரத ஹஸ்தம்
மற்ற ஆச்சார்யர்கள் நின்ற திருக்கோலம்
ஆச்சார்ய பீடம் -குல பதி
ராமானுஜன் -எம்பெருமானார் குறித்து -பரத தாளம் வழங்கு தமிழ் மறை தந்த வள்ளல் நாதமுனிகள் –
—————————————————————
ப்ராது: நியோகே அபி அநி வர்த்தமாநம்
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—-184-
ப்ராது: நியோகே அபி அநி வர்த்தமாநம்—நாட்டுக்குத் திரும்ப பெருமாள் கட்டளை மீறி
ராஜ்ய அபிஷேகம் ச பரித்ய ஜந்தம்-பட்டாபிஷேகம் துறந்து
ராமாநுஜௌ தௌ நநு பார தந்த்ர்யாத்-உனது பாரதந்தர்யத்தால்
உபௌ உபாப்யாம் பவதீ ஜிகாய—அதே இரண்டு கட்டளை நிறைவேற்றி நீயே உயர்ந்தாய்
சேஷத்வம் அவனுக்குப் பெருமை சேர்க்கவே கைங்கர்யம் செய்து கொண்டே இருக்க வேண்டும்
பாரதந்தர்யம் -அவன் உகந்த கைங்கர்யம் ஒன்றே செய்வது
இரண்டிலும் பாதுகா தேவியே ஸீமா பூமி என்றவாறு –
காட்டுக்குச் சென்றதால் லஷ்மணன் கொஞ்சம் தாழ்ந்து -பட்டம் சூட்டிக்க மறுத்ததால் பரதனும் கொஞ்சம் தாழ்ந்து -நஹி நிந்தா நியாயம்
நீயே அவன் ஆணைப்படி செய்து கொண்டாய் –
பாதுகையே! இராமனின் ஆணைகளை அவனது தம்பிகளான இலட்சுமணனும், பரதனும் மீறாதவர்களே ஆவார்கள்.
ஆயினும் இராமனின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் இருவரும் பட்டாபிஷேகம் ஏற்க வில்லை.
ஆனால், நீ ஏற்றுக் கொண்டாய். இதன் மூலம் அவர்கள் இருவரையும் நீ வென்றாய்.
ஸ்ரீ பாதுகையே இளைய பெருமாளும் ஸ்ரீ பாரதாழ்வானும் பெருமாள் நியமனத்திற்குக் கட்டுப் படாமல் முறையே
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் இருந்து திரும்பி வராமலும் திரு அபிஷேகத்தை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கையில்
நீ மட்டுமே உன் குணத்தினால் அவர்களை விஞ்சி அவர் நியமனப் படி திரும்பி வந்து திரு அபிஷேகம் செய்து கொண்டாய் அன்றோ –
ரிக் வேதம் தேவர்களுக்கு
யஜீர் வேதம் மநுஷ்யர்களுக்கு
சாம வேதம் பித்ருக்களுக்கு
மனு சுரம் தப்பாமல் இருக்க சொல்லுமே
ஆழ்வார் பரம்
விஷ்வக் சேனர் -ஆணை ஏற்று ஆழ்வாராக வந்து -லஷ்மணனை விஞ்சி
ஞானம் கனிந்த நலம் கொண்டு அவன் தர ஆழ்வார் நம்மை ஆக்கி திருத்திப் பணி கொண்டு -நான்மறையாளர்கள் கை விட்டதே பற்றாசாக செய்து –
இருவரையும் விஞ்சி -ஆழ்வார்
———————————————————————–
நிவேஸ்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே
பத்ராஸநே ஸாதரம் அப்ய ஷிஞ்சத்
வசீ வஸிஷ்ட்டோ மனு வம்ச ஜாநாம்
மஹீக்ஷிதாம் வம்ஸ புரோஹிதஸ் த்வாம்-—185-
நிவேஸ்ய ரங்கேஸ்வர பாத ரக்ஷே-ரெங்கன் பாதுகையே -பெருமாள் பாதுகையோ இல்லையே
பத்ராஸநே ஸாதரம் அப்ய ஷிஞ்சத்-ஆசையுடன் உன்னை எழுந்து அருளிப்பண்ணி –
வஸிஷ்டர் இரண்டுமே ஓன்று என்று அறிவார்
ஜகந்நாதன் -பெருமாள் பாதுகை தினம் திருவாராதனம் செய்து
அதனாலே ஆதாரம் மிக்கு அன்புடன் வசிஷ்டர் -நமது குலதெய்வத்தின் பாதுகை என்று எண்ணி
வசீ வஸிஷ்ட்டோ -இந்திரியங்களை வென்றவர் -முக்குணத்தில் இரண்டினில் அகற்றி ஒன்றினில் ஒன்றியவர்
மனு வம்ச ஜாநாம்-மனு வம்சம் இஷுவாஹு வம்சம்
மஹீக்ஷிதாம் வம்ஸ புரோஹிதஸ் த்வாம்—-உன்னை குல குருவானவர் பட்டாபிஷேகம் செய்து அருளினார் அன்றோ
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மனு வம்சத்தில் வந்த அனைத்து அரசர்களுக்கும்
குருவாக உள்ளவரும், இந்த்ரியங்களை வென்றவரும் ஆகிய வசிஷ்ட்டர் செய்தது என்ன?
உன்னை ஸிம்ஹாசனத்தில் எழுந்தருளச் செய்து, மிகவும் ஆசையாக உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
ஸ்ரீ பாதுகையே உன் பிரபாவங்களை அறிந்தவரும் இஷ்வாகு வம்சத்தின் உபாத்யாயருமான வசிஷ்டர் உனக்கு
ராஜ்யாசனத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்தார் –
ஆழ்வார் பரம்
ஸ்ரீ பாஷ்யம் ஸிம்ஹாஸனம்
ஆழ்வார் அருளிச் செயல்கள் கொண்டே ஸூத்ர வாக்யங்களை ஒருங்க விடுவர்
அகில புவன –பெருமாள் பாரமாக மேல் எழுந்த ஸ்ரீ நிவாஸன் மேல் பக்தி வடிவான ஞானம்
பக்வாதான் அவதாரம் ஜன்ம-ஸ்தேம-பிறந்தவாறும்-வளர்ந்தவாறும் -இத்யாதி
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருந்தவர்
திருவடி -செயல் நன்றாகத் திருத்திப் பனி கொண்டார்
நிறைவு பாசுரம் லுருகூர் சடகோபன் -சிரசில்
ஸ்ரீ நிவாஸன் கைங்கர்ய ஸ்ரீ
ஆழ்வார் -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
வசிஷ்டர் சிரேஷ்டர் ஆச்சார்ய ஸ்ரேஷ்ட பவ்மர்
மனித குல ஆச்சார்யர் -மனு வம்ச
மானவ -மனு வம்சத்தில் வந்த மனுஷ்யர் லிபிகாச்சார்யார்
‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
ஆதரத்துடன் ஆழ்வாரை பட்டாபிஷேகம் செய்து வைத்து மகிழ்ந்தார் என்றவாறு –
—————————————————————
க்ருத அபிஷேகா பவதீ யதாவத்
ரங்கேஸ பாதாவநி ரத்ந பீடே
கங்கா நிபாத ஸ்நபிதாம் ஸுமேரோ:
அதித்யகா பூமிம் அதஸ் சகார-—186-
உபஜாதி மீட்டரில்
தங்கப் பாதுகை -தங்க மயமான மேரு மலை –
க்ருத அபிஷேகா பவதீ -நீ பட்டாபிஷேகம் செய்த அப்பொழுது
யதாவத்-சாஸ்த்ரா விதிப்படி
ரங்கேஸ பாதாவநி
ரத்ந பீடே-ரத்னா ஸிம்ஹாஸனத்தில்
கங்கா -திருவடியில் இருந்து விழுந்த கங்கா
நிபாத ஸ்நபிதாம் ஸுமேரோ:–விழுந்ததால் நனைந்த மேரு
அதித்யகா பூமிம் அதஸ் சகார—-உச்சியையையே கீழ்ப்படியாக்கி அருளினாய் -வைபவத்தால் –
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட ஸிம்ஹாசனத்தில்
உன்னை எழுந்தருளச் செய்து, சாஸ்திர முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டாய்.
அப்போது உன் மீது புனித நீர் சேர்க்கப்பட்டது. இதனைக் காணும்போது மேரு மலையை விட நீ உயர்ந்தும்,
உன் மீது விடப்பட்ட நீர், கங்கையை விடப் புனிதமானதாகவும் தோன்றியது.
ஸ்ரீ பாதுகையே உன்னை ரத்ன சிம்ஹாசனத்தில் எழுந்து அருளப் பண்ணி திரு அபிஷேகம் செய்த போது
மேரு பர்வதத்தில் கங்கை விழுவதைக் காட்டிலும் அழகுற்று விளங்கியது –
ஆழ்வார் பரம்
நாதமுனிகள் -மேல் ஆழ்வார் கடாக்ஷம் -அருள் மழை
ஆழ்வார் மேகம் -நாதமுனிகள் மலை மேல் பொழிய
லஷ்மீ நாதாஸ்ய சிந்தவ் -பிரதம குரு -கடல் போல்
சடரி பூ ஜலதய ப்ராப்ய காருண்ய -மேகம் போல் வர்ஷிக்க
நாக அத்ராவ் -நாதமுனி மலை மேல் பொழிய
உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள்
கத்வா யாமுனாஃயாம் -காட்டாறு நிரம்பி
சம்பூரிய -ஐந்து ஆச்சார்யர்கள் -பிரிந்து
யதீந்த்ரர் ஏரி
தேசிகேந்திர -ஸிம்ஹாஸனாதிபதிகள் -தேங்கிய மடுக்கள் போல் நம் ஆச்சார்யர்கள்
——————————————————–
வசிஷ்ட முக்யைர் விஹித அபிஷேகாம்
ராஜ்யாஸநே ராம நிவேச யோக்யே
துஷ்டாவ ரங்கேஸ்வர பாத ரக்ஷே
ப்ராசேதஸஸ் த்வாம் ப்ரதம: கவீநாம்—-187-
உபஜாதி மீட்டர்
வசிஷ்ட முக்யைர் -வஸிஷ்டர் போன்ற முனிவர்களால்
விஹித அபிஷேகாம்-பட்டாபிஷேகம் செய்யப்பட்டு
ராஜ்யாஸநே ராம நிவேச யோக்யே-ராம பிரானுக்கே உரித்தான ராஜ்ய ஸிம்ஹாஸனத்தில்
துஷ்டாவ -ஸ்துதித்தார்
ரங்கேஸ்வர பாத ரக்ஷே த்வாம்
ப்ராசேதஸஸ் -வால்மிகி பகவான் –
ப்ரதம: கவீநாம்—-ஆதி கவி கொண்டாடி ஸ்துதித்தாரே
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! இராமன் எழுந்தருள வேண்டிய ஸிம்ஹாசனத்தில்
வசிஷ்டர் போன்றவர்கள் உன்னை அமர்த்தி, உனக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.
உன்னை ஸ்துதிப்பவர்களில் முதன்மையான வால்மீகி முனிவர், இவ்விதம் நீ அமர்ந்தவுடன், உன்னைத் ஸ்துதித்து நின்றார்.
ஸ்ரீ ரங்க பாதுகையே -பெருமாள் எழுந்து அருளி இருக்க வேண்டிய ஸ்ரீ சிம்ஹாசனத்தில் உன்னை எழுந்து அருளப் பண்ணி
வசிஷ்டர் முதலானவர்கள் பட்டாபிஷேகம் செய்து வைத்தனர் என ஆதி கவி யாகிற வால்மீகி ஸ்தோத்ரம் பண்ணினார் –
ஆழ்வார் பரம்
சங்கப் பலகையில் மதுரகவி ஆழ்வார் கண்ணன் கழலிணை –புலவர்கள் அனைவரும் ஸ்துதிக்க –
நம்பெருமாளுடைய தோளுக்கு இனியானில் ஆழ்வாரை எழுந்து அருளப் பண்ணி திருமங்கை ஆழ்வார் -அத்யயன உத்சவம் -தொடங்கி வைத்து
அனைவரும் ஸ்துதிக்க —
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ உறுமிப் புலி முன்
நரி கேசரி முன் நடையாடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமாள் வகுளா பரணன் அருள் கூர்ந்து
ஓவாதுரை ஆயிரம் மா மறையின்
ஒரு சொல் பொறுமா உலகில் கவியே
உவமைக்கு கவிச்சக்கரவர்த்தி கம்பரும் சடகோபர் அந்தாதி பாடி ஸ்துதிக்க-
பொன்னை உரைப்பது அப்பொன்னோடே அன்றே புலமைக்கு ஒருவர்
உன்னை உரைத்து உரைத்தற்கு உளரோ உயர் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவது அல்லால் பெரும் தண் குருகூர்
தென்னை உரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகா மணியே–சடகோபர் அந்தாதி- 55-ஆணிப்பொன் போல் ஆழ்வார் அன்றோ –
——————————————————
ரக்ஷோ வதார்த்தம் மணி பாத ரக்ஷே
ராமாத்மந: ரங்க பதே: ப்ரவாஸே
ரக்ஷோ பகாராத் பவதீ விதேநே
ராஜந் வதீம் கோஸல ராஜ தாநீம்-—188-
ரக்ஷோ வதார்த்தம் –ராக்ஷஸர்களை வாதம் செய்வதற்காக
மணி பாத ரக்ஷே-
ராமாத்மந: ரங்க பதே: ப்ரவாஸே-பெருமாள் பயணிக்க
ரக்ஷோ பகாராத் -ரக்ஷணம் உபகாரம் செய்யவே
பவதீ -நீயே
விதேநே ராஜந் வதீம் கோஸல ராஜ தாநீம்—-கோசல தலைமயிரை அராஜகம் இல்லாமல் ஆக்கி அருளினாயே
இந்திர வர்ஜா மீட்டர்
ஏழு ரகாரங்கள் -தனியாக உள்ள ஸ்லோகம் -உபகாராத்-சேர்க்காமல்
பெருமாளின் பாதங்களை ரக்ஷிப்பவளே
ராக்ஷஸரை அழிக்க
ராமனாகிய ரங்க நாதன் சென்ற சமயத்தில்
ராஜாவாகிய நீயே
கோசல ராஜ தானியில் இருந்து
ரக்ஷணம் செய்து அருளினாயே
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! அரக்கர்களை வதம் செய்வதற்காகவே ஸ்ரீரங்கநாதன்
இராமனாக திருஅவதாரம் செய்தான். அவன் தண்டகாரண்ய வனம் சென்றான்.
அப்போது நீ கோஸல நாட்டைக் காக்க முடிவெடுத்தாய். அதனால் கானகத்தை விட்டு அயோத்திக்கு வந்த நீ,
அந்த நாட்டை நல்ல ஓர் அரசன் உடையதாகச் செய்தாய்.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் ராஷசர்களை நிரசனம் செய்ய ஸ்ரீ தண்ட காரண்யம் சென்ற பொழுது
ஸ்ரீ கோசல சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பாற்றினாய் –
ஆழ்வார் பரம்
தீயவர்களைத் தண்டிக்க அவன் அவதாரம் செய்ய
ஆழ்வார் ஊரும் உலகும் நாடும் தன்னைப்போல் ஆக்கி
அவனுக்கு வேலை இல்லாமல்
ரக்ஷ உபகாரம் செய்து அருளினார் அன்றோ-பிதாமஹம் நாதமுனிம் விலோஸ்ய –ஆளவந்தார் போல் –
பாபங்களுக்கு ராஜதானியாக நாங்கள் இருக்க -ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கி -அவர் அபிமானத்தாலேயே –
பிரபன்னராக்கி -பிரபன்ன ஜன கூடஸ்தராக
ரஸம் உள்ள ஸ்லோகம் –
—————————————————————-
ப்ராப்த அபிஷேகா மணி பாத ரக்ஷே
ப்ரதாபம் உக்ரம் ப்ரதி பத்யமாநா
ஸஸாஸ ப்ருத்வீம் பவதீ யதாவத்
ஸாகேத ஸிம்ஹாஸந ஸார்வ பௌமீ-—189-
உப ஜாதி மீட்டர்
ப்ராப்த அபிஷேகா -செய்யப்பட
மணி பாத ரக்ஷே
ப்ரதாபம் உக்ரம் -தேஜஸ் மிக்க பராக்ரமம்
ப்ரதி பத்யமாநா-உள்ளபடி ஒன்றும் குறையாமல் -யதாவத்
ஸஸாஸ ப்ருத்வீம் -பூமியையே ரக்ஷித்து அருளினாய் அன்றோ
ஸாகேத ஸிம்ஹாஸந -அயோத்யா சிம்ஹாசனத்தில்
ஸார்வ பௌமீ—-சாஷாத் சக்ரவர்தினியாகவே இருந்தாய்
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நீ பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டு,
அயோத்தியின் ஸிம்ஹாசனத்தில் அமர்ந்தாய். மிகவும் கடுமையான பராக்ரமம் அடைந்தாய்.
எந்த விதமான குறைவும் இன்றி இந்தப் பூமியைச் சரியான முறையில் காப்பாற்றினாய்.
ஸ்ரீ பாதுகையே பட்டாபிஷேகத்தாலே அளவற்ற பராக்கிரமம் பெற்று சாகேத சிம்ஹாசனத்தில் ஒப்பற்று விளங்கின நீ
பூமியை முறைப்படிக் காப்பாற்றினாய்
ஆழ்வார் பரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-குலபதி -பட்டாபிஷேகம் செய்யப்பட்டார்
அனைவரையும் காக்க வல்ல ஆற்றல் கொண்டு
உள்ளபடி பூமியையே காத்து-பிறவி துயர் அறுத்து -ஆத்ம ரக்ஷணம் பண்ணி அருளினீர்
எல்லாரையும் -ப்ருத்வீ முழுவதையும்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தாரை -தேஷாம் சதத யுக்தானாம் -ததாமி புத்தி யோகம் ப்ரீதி பூர்வகம் -செய்வான் அவன்
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
ஆழ்வாரோ
பயன் அன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் –
நன்றாக அடை மொழி இங்கு தானே
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தோர்க்குமே இவை யுள்ளது -இவ்வாறு பரம காருண்யம் உண்டு
———————————————————————————————
தசாந நாதீந் மணி பாத ரக்ஷே
ஜிகீஷதோ தாசரதேர் வியோகாத்
ஜாதோப தாபா த்வயி ஸம் ப்ரயுக்தை:
தீர்த்தோதகை: உச்ச்வ ஸிதா தரித்ரீ—-190-
இதுவும் உபஜாதி மீட்டர்
தசாந நாதீந் -பத்து முகம் கொண்ட ராவணன் போல்வாரை
மணி பாத ரக்ஷே
ஜிகீஷதோ தாசரதேர் வியோகாத்–வெல்வதற்காக சென்ற பெருமாளாது பிரிவால்
ஜாதோப தாபா -வருந்திய
தரித்ரீ—-சகலத்தையும் தரிக்கும் பூமியை
த்வயி ஸம் ப்ரயுக்தை:-உம் மேல் சேர்க்கப்பட்ட
தீர்த்தோதகை–தீர்த்தம் -தூய்மை ஆக்க வல்ல நீரால்
உச்ச்வ ஸிதா –ஆஸ்வாசப்பட்டாள்
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனால் ஆளப்பட வேண்டும் என்ற ஆவல் பூமிக்கு இருந்தது.
ஆனால், இராமன் இராவணனை வெல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிட கானகம் சென்றான்.
இதனால் வருத்தம் கொண்ட பூமியானது, உன் மீது பட்டாபிஷேகத்தின்போது சேர்க்கப்பட்ட புண்ணிய நீர்
தன் மீது விழுந்தவுடன் சமாதானம் அடைந்தது.
ஸ்ரீ மணி பாதுகையே -பெருமாள் இராவண வதத்துக்காக எழுந்து அருள பிரிவால் வருந்திய பூமா தேவி
உனது திரு அபிஷேக தீர்த்தம் பட்டவுடன் தாபம் தீர்ந்து பூரித்து நிம்மதி அடைந்தாள் அன்றோ –
ஆழ்வார் பரம்
கலியுகத்தில் பெருமாள் விபவ அவதாரம் இல்லாததால்
வருந்திய பூமி
ஆழ்வார் அவதாரத்தால் சமாதானம் அடைந்தது அன்றோ
தீர்த்த உதகம் -தீர்த்தம் ஆயிரம் -பாசுரங்களால் புனிதமாக்கி
அத்ரி -அந்தணர் தத்தாத்ரேயர் வாமனன்
ஜமதக்கினி -பரசுராமன்
பங்கிரத-க்ஷத்ரியர் பெருமாள்
வஸூ நந்த ஸூநு -த்வாபர யார் குலம்
ஆனவனுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
திருக்குறுங்குடி நம்பி தானே வந்து அவதரித்து -ஆழ்வார்
————————————————————–
அத்யாஸிதம் மநுமுகை: க்ரமசோ நரேந்த்ரை:
ஆரோப்ய தேவீ பவதீம் தபநீய பீடம்
ராஜ்ய அபிஷேகம் அநகம் மணி பாத ரக்ஷே
ராம உசிதம் தவ வசம் பரத: விதேநே.—191-
வசந்த திலகம் மீட்டர் இது தொடங்கி ஐந்து ஸ்லோகங்களும் -14 அச்சு எழுத்துக்கள் பாதம் தோறும்
அத்யாஸிதம் மநுமுகை: க்ரமசோ நரேந்த்ரை:—-மனு தொடங்கி கிராமமாக வரிசையாக மன்னர்களால் அமரப்பெற்ற
ந போதோ ந பவிஷ்யதி -இதே போல் பட்டாபிஷேகம் எங்குமே நடந்தது இல்லையே
மனு தொடங்கி அரசர்களே -இங்கு மட்டும் உன்னை
ஆரோப்ய தேவீ பவதீம் தபநீய பீடம்-பொன் மயமான பீடத்தில் உன்னை அமர்த்தினான்
ராஜ்ய அபிஷேகம் அநகம் -தோஷமே இல்லாமல் -குறை ஒன்றுமே இல்லாமல்-தன்னைத் தீண்டியவர்கள் குறைகளையும் தீர்க்கும் பாதுகை அநகம் அன்றோ மணி பாத ரக்ஷே-ஸாஷாத் பகவானின் பாத ரக்ஷை அன்றோ -ஸூத்த ஸத்வம் -உணர் முழு நலம் -கட்டடங்க இனிமை –
திண் கழல் -அவனும் அவளை விட திண்ணியதாக ரக்ஷிக்குமே -திருவடியைச் சொல்லும் பொழுது பாதுகையும் அடங்குமே
ராம உசிதம் தவ வசம் பரத: விதேநே.–பெருமாளுக்கு உசிதம் அன்றோ -பொன்னடி சாத்த பாதுகை தீர்த்தத்தால் தீர்த்தமாக்குவது போல் –
அடுத்து ராமன் ஸிம்ஹாஸனம் எழுந்து அருள முன்புள்ள தோஷங்களையும் போக்கவே இப்பொழுது பரதன் உன் வசம் ஒப்படைத்து செய்து அருளினான் –
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! மனு முதலான அரசர்கள் வரிசையாக அமர்ந்து
ஆட்சி செய்த தங்க ஸிம்ஹாசனத்தில், உன்னைப் பரதன் அமர வைத்தான்.
இராமனுக்குச் செய்ய வேண்டிய பட்டாபிக்ஷேகத்தை, அதே போன்ற முறையில் எந்த விதமான குறைவும் இன்றி உனக்குச் செய்தான்.
ஸ்ரீ பாதுகையே மநு போன்ற அரசர்கள் வீற்று இருந்த பொன் மயமான சிம்ஹாசனத்தில் உன்னை எழுந்து அருளப் பண்ணி
பெருமாளுக்கு செய்ய வேண்டிய திரு அபிஷேகத்தை உனக்குச் செய்தார் அன்றோ –
ஆழ்வார் பரம்
முன்பு ரிஷிகள் -வேதாந்தம் -அதி க்ருதா அதிகாரம் -மந்த்ர த்ரஷ்டா ரிஷிகள் கண்டு வழங்கினார்கள்
நாத முனிகள் -ஆச்சார்ய சிம்ஹாசனத்தில் ஆழ்வாரை அமர்த்தி
தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல் கொண்டாடுகிறோம் அன்றோ
பிரபன்ன குல பதி -மாதா பிதா -ஆழ்வார் -அரையர் சேவை உகந்து செவி சாய்த்து அருளுகிறான்
ஆழ்வார் வசமே நாதமுனிகள் -பாவம் ராகம் தாளம் -நாதமுனிகள் -தம்மை அர்ப்பணித்தார் அன்றோ –
———————————————————————-
ஸ்நேஹேந தேவி பவதீம் விஷயே அபிஷிஞ்சந்
த்விஸ் ஸப்த ஸங்க்ய புவ நோதர தீப ரேகாம்
ஜாதம் ரக்ஷத்வஹ திவாகர விப்ர யோகாத்
அந்தம் தமிஸ்ரம் அஹரத் பரத: ப்ரஜாநாம்.-—192-
ஸ்நேஹேந-அன்புக்கும் எண்ணெய்க்கும் இதே பதம் -அன்பே தகளியா ஞானச்சுடர்
தேவி பவதீம் விஷயே -கோசல தேசத்தில்
அபிஷிஞ்சந்
த்விஸ் ஸப்த ஸங்க்ய -14 லோகங்கள்
புவ நோதர தீப ரேகாம்-மத்யம் உள்ள கோசல தேசம் -விளக்கு போன்ற பாதுகை
ராம திவாரகம்- பரம வ்யோம பாஸ்கரன் பிரிந்தால் வந்த இருளைப் போக்க ரத்ன தீபம் -அன்பு எண்ணெய்
எண்ணெய் ஸ்தானம் பட்டாபிஷேகம்
ஜாதம் ரஹுத்வஹ திவாகர விப்ர யோகாத்-ரகு குல திவாகரன் பிரிவால் மக்களுக்கு ஏற்பட்ட
அந்தம் தமிஸ்ரம் .–இருள் -அநு கதா மே த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி –
அஹரத் பரத ப்ரஜாநாம்–பரதன் ஏற்றிய தீபத்தால் இருள் நீங்கப் பெற்று மகிழ்ந்தார்கள் என்றபடி
பாதுகா தேவியே! அனைத்து உலகங்களுக்கும் நடுவே, அவற்றுக்கு ஒளி அளிக்கும் விளக்கு போன்று நீ உள்ளாய்.
இப்படியாக உள்ள உனக்கு, பரதன் தனது அன்பு என்னும் எண்ணெய் கொண்டு, அயோத்தி என்னும் திரியிட்டு,
பட்டாபிஷேகம் என்ற விளக்கு ஏற்றி வைத்தான்.
இதன் மூலம் இராமன் என்ற ஸூரியன் அகன்றதால் சூழ்ந்த இருள் என்னும் பிரிவை அந்நாட்டு மக்கள் அறியாமல் இருக்கச் செய்தான்.
பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருள ஈரேழு உலகங்களும் துக்கமாகிய இருள் சூழ ஸ்ரீ பரதாழ்வான் உனக்குப்
பட்டம் கட்டி ஒரு விளக்காக உன்னை ஏற்றி இருள் அனைத்தும் நீக்கி ஒளி பெறச் செய்தார் அன்றோ –
ஆழ்வார் பரம்
அச்யுத பானு தன்னுடைச் சோதி எழுந்து அருளிய பின்பு
கலி இருள் மூட
வகுள பூஷண பாஸ்கரர் தீபம் -நாதமுனிகள் ஏற்றி வைக்க
இதத்தாய் வளர்க்க
கலியும் கெடும் கண்டு கொண்மின்
பொலிக பொலிக பொலிக
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
அன்பாலே பட்டாபிஷேகம் நாதமுனிகள் செய்து வைக்க –
அந்த கூபம் -நரகம் போல் ஸம்ஸார மண்டலம் ஒளி பெற்றதே
——————————————————–
ஹஸ்தாபசேய புருஷார்த்த பல ப்ரஸூதே:
மூலம் பதாவநி முகுந்த மஹீருஹ: த்வம்
சாயா விசேஷம் அதிமசத் யத் அஸௌ ப்ரஜாநாம்
ஆவர்ஜிதைஸ் த்வயி ஸூபை: அபிஷேக தோயை:—-193-
ஹஸ்தாபசேய -கைமேல் பலனாக
புருஷார்த்த பல ப்ரஸூதே:-அறம் பொருள் இன்பம் வீடு -அனைத்தையும் அளிக்க வல்ல -பழம் போல் பலனை அளிப்பவன்
மூலம் பதாவநி முகுந்த மஹீருஹ: த்வம்-முக்தி தரும் -மரத்துக்கு நீயே வேர்
சாயா விசேஷம் அதிமசத் -நிழல் போல் தந்து காத்து
யத் அஸௌ ப்ரஜாநாம்-அனைத்து மக்களையும்
ஆவர்ஜிதைஸ் த்வயி ஸூபை: அபிஷேக தோயை:—-உனது அபிஷேக தீர்த்தத்தால் –
அன்று சராசரங்களை நல் கதிக்கு ஏற்ற வழி வகுத்ததே உனது பட்டாபிஷேகம் என்றவாறு
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற
நான்கு பழங்களும் பெரிய பெருமாள் என்ற வ்ருக்ஷத்தில் (மரம்) கனிந்துள்ளன.
இந்த மரத்தின் வேராக நீயே உள்ளாய்.
உன் மீது சேர்க்கப்பட்ட பட்டாபிஷேகத்தின் தூய நீரால் அல்லவா இந்த மரம் இவ்விதம் வளர்ந்து,
மக்களுக்கு நல்ல நிழல் அளித்தபடி உள்ளது?
ஸ்ரீ பாதுகையே புருஷார்த்தங்களை கைக்கு எட்டிய விதத்தில் அளிக்கும் முகுந்தன் -பெருமாள் -ஆகிய
மரத்திற்கு நீ வேர் போன்றவள் -உனக்கு மங்கள தீர்த்தத்தால் பண்ணிய திரு அபிஷேகம் அந்த மரம் வளர்ந்து
உலகத்திற்கு ஒப்பற்ற நிழலையும் அழகையும் தரச் செய்தது –
ஆழ்வார் பரம்
ஸடாரி -வேர் போல் அவனுக்கு
தேவு மற்று அறியேன் என்றாலே கரிய கோலத் திரு உரு காட்டக் காண்போமே
இனி இனி என்று கூப்பிட வேண்டாதபடி பெற்றோம் என்று களிக்கலாம் அன்றோ
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. –சடகோபர் அந்தாதி -52-
தொண்டக் குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்-யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே
அருகு ஊர் -நவ திருப்பதிகள்-அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்-இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்
——————————————————————————-
அஹ்நாய ராம விரஹாத் பரிகிந்ந வ்ருத்தே:
ஆஸ்வாஸநாய பவதீ மணி பாத ரக்ஷே
தீர்த்த அபிஷேகம் அபதிஸ்ய வஸுந்தராயா:
சக்ரே ததா ஸமுசிதம் சிசிரோபசாரம்.-—194-
அஹ்நாய -அன்ஹாய என்றே உச்சரிக்க வேண்டும் -விரைவாகவே -ஒரே மாதத்தில் பாதுஹா பட்டாபிஷேகம் நடந்ததே
சித்திரை மாதம் வனவாசம் -வைகாசி மாதம் பட்டாபிஷேகம் -வால்மீகி ராமாயணம் சொல்லும் –
ராம விரஹாத் பரிகிந்ந வ்ருத்தே:-பிரிவித் துயரால் மிகவும் வருந்திய பூமியை
வாயும் திரை யுகளும் -2-1- நந்தா விளக்கமே ஆசையால் வேவாயே -விரஹ அக்னி –
கோதாவரியில் பஞ்சவடியில் நீராடும் பொழுது சரயுவில் பரதன் எவ்வாறு விடி காலை நீராடுவான் என்ற
இளைய பெருமாளுக்கு -அவன் வெப்பத்தால் சரயுவும் வேகுமே என்றாரே பெருமாள்
ஆஸ்வாஸநாய பவதீ மணி பாத ரக்ஷே-ஆஸ்வாஸம் செய்து அருளினாய்
தீர்த்த அபிஷேகம் அபதிஸ்ய வஸுந்தராயா: சக்ரே ததா ஸமுசிதம் சிசிரோபசாரம்–இந்த பட்டாபிஷேகத்தால் பூமா தேவிக்கு -தகுந்த குளிர்ந்த உபசாரம் செய்தாயே
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! இராமனுடைய பிரிவைத் தாங்க இயலாமல்
இந்தப் பூமி மிகவும் வருந்தியபடி இருந்தது. அப்போது நீ செய்தது என்ன?
பூமியைச் சமாதானம் செய்வதற்காகப் பட்டாபிஷேகம் என்பதன் மூலம், புண்ணிய தீர்த்தங்களை,
இந்தப் பூமி மீது விழும்படிச் செய்தாய். குளிர்ந்த அவை மூலம், பூமியின் வருத்தம் நீக்கினாய்.
ஸ்ரீ மணி பாதுகையே பெருமாளைப் பிரிந்து மிகுந்த தாபத்தை அடைந்த பூமிக்கு -உனக்கு
திரு அபிஷேகம் செய்து கொள்ளும் வ்யாஜத்தினால் -சிசிரோபசாரம் வைத்தாய் –
ஆழ்வார் பரம்
கலி வெப்பம்-தாப த்ரயங்கள் போக்கவே -அருளிச் செயல் -பாசுரங்கள் –
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றுஓர் சரணில்லை என்று எண்ணித்
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனனாகிச் செழுங்குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.–7-10-11-
தீர்த்தனான அவனுக்கே அற்றுத் தீர்ந்த ஆழ்வார் -அருளிச் செய்த ஆயிரமும் தீர்த்தங்கள்
நித்ய ஸூரிகள் கொண்டாடும்படி அன்றோ இவை வல்லார்களும்
இந்த கலி கோலாகலம் -நடவாத படி இவர் அருளிச் செயல்களால் செய்து அருளினார் அன்றோ
——————————————————————————-
மாலிந்யம் ஆஸ்ரிதவதீ மணி பாத ரக்ஷே
பங்கேந கேகய ஸுதா கலஹ உத்திதேந
ஸூத்திம் பராம் அதி ஜகாம வஸுந்தரேயம்
த்வத்த: க்ஷணாந் நிபதிதை: அபிஷேக தோயை:—195-
மாலிந்யம் ஆஸ்ரிதவதீ மணி பாத ரக்ஷே-மலம் அழுக்கு தன்மயயை அடைந்த பூமி
பங்கேந கேகய ஸுதா கலஹ உத்திதேந—கைகேயி கூனி போல்வாரை வையம் சுமப்பது வம்பு -பங்க -சேற்று களங்கம் அழுக்கு
ஸூத்திம் பராம் அதி ஜகாம வஸுந்தரேயம்-இயம் இந்த பூமி -அழுக்கு நீங்கப் பெற்று விரைவில் ஸூத்தியும் அடைந்தாள்
த்வத்த: க்ஷணாந் நிபதிதை: அபிஷேக தோயை:-உன்னுடைய அபிஷேக சித்தியால் உடனே உயர்ந்த கதி அடைந்தாள் அன்றோ
இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
கேகய நாட்டு மன்னனின் மகளான கைகேயி செய்த கலகம் காரணமாக, இந்த உலகம் பாவம் என்ற
அழுக்கை (துக்கம்) அடைந்து விட்டது. ஆனால் உனக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்ட போது
விழுந்த புண்ணிய நீரால் இந்தப் பூமி கழுவப்பட்டு, உயர்ந்த மகிழ்வை அடைந்து விட்டது.
ஸ்ரீ பாதுகையே கைகேயின் தீச் செயலால் பெருமாளை ஸ்ரீ தண்ட காரண்யம் அனுப்பியதால் அழுக்கு அடைந்து
களங்கம் உற்று இருந்த பூமி உனது அபிஷேக ஜலத்தால் அலம்பப்பட்டு மிகுந்த சக்தியை க்ஷணப் பொழுதில் பெற்றது –
ஆழ்வார் பரம்
கலி கோலா கலத்தால் -தோஷம்
பாசுரங்கள் தீர்த்தம் பாவனம் ஆக்கி
கைகேயி -கலி புருஷன் இங்கு
பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. -சடகோபர் 3–
————————————————————-
ஆவர்ஜிதம் முநி கணேந ஜகத் விபூத்யை
தோயம் பதாவநி ததா த்வயி மந்த்ர பூதம்
மூலாவஸே கஸலிலம் நிகம த்ருமாணாம்
சாபோதகம் ச ஸமபூத் க்ஷண தாசராணாம்––196-வசந்த மீட்டர் ஸ்லோகம்
முநி கணேந ஜகத் விபூத்யை-செல்வச்செழிப்புக்காக
தோயம் பதாவநி ததா ஆவர்ஜிதம் -தீர்த்தம் சேர்க்கப்பட்டது
த்வயி மந்த்ர பூதம் மூலாவஸே கஸலிலம் நிகம த்ருமாணாம்-வேத நெறி தழைக்கும் படி –
சாபோதகம் ச ஸமபூத் -சாப தீர்த்தம் -ஆகவும் ஆனதே
க்ஷண தாசராணாம்–இருட்டில் ஸஞ்சரிக்கும் அசுரர்களுக்கு
அயோத்யா உள்ளே அரக்கர்களே வரவில்லையே
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி இரண்டுமே செய்ததே-கவி பாணியில் அருளிச் செய்கிறார்
ராம ராஜ்யத்தில் ஒருவன் செய்த தவறு போல் கூட இல்லையே-லவணாசுரன் தொல்லை அங்கு இருந்ததே –
பாதுகையே! இந்த உலகத்தின் ஐச்வர்யத்தின் பொருட்டு முனிவர்கள் உன் மீது புண்ணிய நீரைச் சேர்த்தனர்.
அப்படிப்பட்ட நீரானது, வேதம் என்ற மரம் வளர அவற்றின் வேர்களில் சேர்க்கப்பட்டதாகியது.
மேலும் அந்த நீர், அசுரர்களுக்குச் சாபம் அளிக்க முனிவர்கள் தங்கள் கமண்டலங்களில் இருந்து தெளித்தது போன்றதாகிறது.
ஸ்ரீ பாதுகையே -ரிஷிகள் மந்திரித்து உனக்குச் சேர்த்த தீர்த்தம் இரண்டு வேலைகளைச் செய்தது
ஓன்று வேதமாகிய மரத்தின் வேர் நீராகி அதை வளரச் செய்தது –
ராஷசர்களுக்கு அழிவைக் கொடுக்கிற சாப ஜலமாகவும் வேலை செய்தது –
ஆழ்வார் பரம்
ஜீவர்கள் உஜ்ஜீவனம் அடைய ஆழ்வாருக்கு மயர்வற மதி நலம் அருளி
வேதம் தமிழ் செய்த மாறன்
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோமே
தீர்த்தம் இவர் திருவாய் மொழி -தீர்த்தங்கள் ஆயிரம் இவரே கொண்டாடும் படி
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-
முனிவர்கள் கண்டு வழங்கிய வேதம் -இவர் இடம் எம்பெருமான் சேர்க்க
என் நா முதல் –வாய் முதல் அப்பன் –
——————————————————–
விப்ரோஷிதே ரகு பதௌ பவதீ யதார்ஹம்
மாந்யே பதே ஸ்த்திதிமதீ மநு வம்ச ஜாநாம்
ஆத்மநி அதர்வ நிபூணை: ப்ரஹிதை: ப்ரஜாநாம்
அஸ்ரூணி அபாஸ்யத் அபிஷேக ஜல ப்ரவாஹை:—-197-வஸந்த திலகம் இதுவும் –
விப்ரோஷிதே ரகு பதௌ பவதீ யதார்ஹம்-நீயும் வீற்று இருந்து அருளினாய்
மாந்யே பதே ஸ்த்திதிமதீ மநு வம்ச ஜாநாம்-போற்றத்தக்க ஸிம்ஹாஸனம்
ஆத்மநி அதர்வ நிபூணை: -அதர்வர் போன்ற முனிவர் -வசிஷ்டாதிகள் -அதர்வண வேதம் உப லக்ஷணம்
ப்ரஹிதை: ப்ரஜாநாம் அஸ்ரூணி அபாஸ்யத் அபிஷேக ஜல ப்ரவாஹை–திரு அபிஷேக தீர்த்தம் கண்ண நீர் வெள்ளம் போக்கி
நீர் வெள்ளம் அணை கட்டி தடுக்க வேண்டாம் -நீர் வெள்ளம் போக்குவது வியப்பு அன்றோ
ராமனே வந்ததாக உணர்வு
ஆச்சார்ய பாதுகை பூஜை இன்றும் நம் இல்லங்களில் உண்டே
பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர் நீ செய்தது என்ன?
மனு குலத்தில் வந்த அரசர்களின் போற்றத் தகுந்த உயர்ந்த ஸிம்ஹாஸனத்தில் நீ அமர்ந்தாய்.
உனது பெருமைக்கு ஏற்றபடி நீ வீற்றிருந்தாய்.
அதர்வண வேதத்தில் சிறந்தவர்களால் உன் மீது புண்ணிய நீர் சேர்க்கப்பட்டது.
அந்த நீர் வெள்ளம் மூலம், நீ இந்த உலகில் உள்ளவர்களின் கண்களில் வரும் நீரைப் போக்கினாய்.
ஸ்ரீ பாதுகையே மநு வம்ஸ அரசர்களின் உயர்ந்த சிம்ஹாசனத்தில் வீற்று இருந்த நீ அதர்வண வேதத்தில் நிபுணரான
வசிஷ்டர் முதலான ரிஷிகள் சேர்த்த பட்டாபிஷேக தீர்த்தத்தை கொண்டு பெருமாளைப் பிரிந்த ஜனங்கள் விட்ட கண்ணீரை அகற்றி விட்டாய் –
ஆழ்வார் பரம்
கலியுகம் விபவ அவதாரம் இல்லாத குறையைப் போக்கி
ஆழ்வார் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-வேதம் தமிழ் செய்த மாறன் –
ரிக் திருவிருத்தம் -யஜுர் -திருவாசிரியம் -சாம -திருவாய் மொழி -அதர்வண -பெரிய திருவந்தாதி
ஸம்ஸாரம் வெள்ளம் -பிறவிப் பெரும் கடல் வற்றும்படி -ஆழ்வார் அருளிச் செயல் வெள்ளம் போக்கி அருளிற்றே
மனு வம்சம் -மனிதர்கள் இங்கு -குல பதி -இவரே
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-
நம் ஆழ்வார் இன்ப வாரி-பக்த ஆனந்தக வாரி-தொண்டர்க்கு அமுது -பக்தாம்ருதம்
திருமங்கை ஆழ்வார் அருள் வாரி
—————————————————————————————–
ப்ராயோ விசோஷி தரஸா பதி விப்ரயோகாத்
பர்யாகுலீக்ருத ஸமுத்ர பயோதரா கௌ:
அம்ப! த்வதீயம் அபிஷேக பய: பிபந்தீ
தேநுர் பபூவ ஜகதாம் தந தான்ய தோக்த்ரீ–198-வஸந்த திலகம் இதுவும் –
ப்ராயோ -ஒரு வேளை
விசோஷி தரஸா பதி விப்ரயோகாத்–தலைவன் பிரிவால் வரண்டு நிலையில்
பர்யாகுலீக்ருத -கலங்கிய நிலையில்
ஸமுத்ர பயோதரா கௌ:அம்ப! த்வதீயம் அபிஷேக பய: பிபந்தீ-பூமி பசு அபிஷேக அம்ருதம் பருகி –
தேநுர் பபூவ ஜகதாம் தந தான்ய தோக்த்ரீ-சுரந்து -வள்ளல் பெரும் பசுக்கள் -பால் வெள்ளம் நிரம்பி -ஓன்று பத்தாகி –
தாயே! பாதுகையே! தனது கணவனான இராமன் தன்னை விட்டுப் பிரிந்ததால் பூமி என்ற பசுவிற்கு நேர்ந்தது என்ன?
அதன் ஸமுத்திரங்கள் என்னும் மடிகள் கலங்கின. இதனால் மகிழ்ச்சி என்னும் பாலைச் சொரியாமல் நின்றது.
அந்த நேரத்தில் உனது பட்டாபிஷேகத்தில் விடப்பட்ட புண்ணிய நீரைப் பருகியது.
உடனே அனைத்து உலகங்களுக்கும் தேவையான செல்வம், தானியங்களை அள்ளி வழங்கியது.
ஸ்ரீ பாதுகையே தாயே பெருமாள் பிரிவினால் பூமியாகிற பசுவிற்கு சந்தோஷம் என்கிற பால் வற்றி விட
உனது அபிஷேக தீர்த்தம் கிடைத்தவுடன் பூமி மறுபடியும் பெரும் தன தான்யச் செல்வங்களை சுரக்கும் காம தேனுவாக மாறி விட்டது
ஆசார்யர் உடைய ஸ்ரீ பாத தீர்த்தம் பெருமை அளவிட முடியாதே -பாதுகா தீர்த்தம் பசுவுக்குத் தீனி-
கௌ -பூமி -பசு -சிலேடை உருவகம் இரண்டும் சேர்த்து இங்கு -கடல் மடி போல் -பால் -தன தானியங்கள்
கோவிந்தன் -ராமன் -பசுவின் தலைவன் -கூனே சிதைய உண்டை விரல் தெறித்தாய் கோவிந்தா
ஆழ்வார் பரம்
கலி யுகத்தில் விபவ அவதாரங்கள் இல்லாமல்
பக்தி வரண்டு -ரஸம் இங்கு -கீழ் பால்-
வேதக்கடல் -வேதங்கள் மறைகளாகி -எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பாடி அருளிய வள்ளல் அன்றோ
பாசுரம் தீர்த்தம் பருகி பக்தி ஞானம் மிக்கு -ஆனதே
தாய் போல் அன்பு கூர்ந்து -பாசுரங்கள் பருகி -வேதார்த்தங்கள் வெளிப்பட்டன
ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. -ஸ்ரீ சடகோபர் அந்தாதி–11-
——————————————————————————-
வ்ருத்தே யதாவத் அபிஷேக விதௌ பபாஸே
பஸ்சாத் தவ அம்ப பரதேந த்ருத: க்ரீட:
ஆகஸ்மிக ஸ்வகுல விப்லவ சாந்தி ஹர்ஷாத்
ப்ராப்தஸ் த்விஷாம் இவ பதி மணி பாதுகே த்வாம்-–199-வஸந்த திலகம் இதுவும் –
பபாஸே-நன்றாக ஒளி வீசி-ஸ்வகுல விப்லவ சாந்தி -குலம் வருத்தம் தீர்ந்து-
ஹர்ஷாத் ப்ராப்தஸ் த்விஷாம் இவ பதி மணி பாதுகே த்வாம்-மகிழ்ந்து ஒளி வீசும்
பதார்த்தங்களுக்குத் தலைவானான ஸூர்யன் உடைய தேஜஸ்ஸே கிரீடமானது என்றபடி
இராமனின் திருவடிகளை, அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
உனது பட்டாபிஷேகம் என்பது பரதனால் மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டு, உனக்கு அழகான க்ரீடம் ஸூட்டப்பட்டது.
இராமன் கானகம் சென்றதால் ஸூரிய வம்சத்திற்கு திடீரென்று துன்பம் ஏற்பட்டது.
இத்தகைய துயரம் உன்னால் நீங்கியது. ஆக உன்னைக் காணும் போது ஸூரியன் வந்தது போன்றே இருந்தது.
ஸ்ரீ பாதுகையே பட்டாபிஷேகம் பண்ணி ஸ்ரீ பரதாழ்வான் உனக்கு மகுடம் சாற்றினார் –
அது தன் குலத்திற்கு நேர்ந்த கஷ்டம் நீங்கியதால் சந்தோஷம் கொண்டு ஸூர்யன் உதித்தது போல் இருந்தது –
ஸூர்யனே கிரீடமாக -தற் குறிப்பு ஏற்று அணி
தைல மாட்டுப் படலம் -கம்பர் -வனவாசம் மாலை நேரம் போகும் பொழுது -கான் புகக் காண்கிலேன் என்று அஸ்தமித்தான்
மீண்டும் உதித்தது -பாதுகையின் கிரீடமாகப் பார்த்து மகிழ்ந்தான்
ஆழ்வார் பரம்
தேஜஸ் -வகுள பூஷண பாஸ்கரர் -மதுரகவி ஆழ்வாரைக் கொண்டு வந்து ஆழ்வார் திருவடிகளில் சேர்த்ததே
இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. –சடகோபர் அந்தாதி –49–
பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளை போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்
———————————————————————–
மநு வம்ஸ புரோஹிதேந மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம்
அபிஷேக ஜலம் க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்-—200-ஒவ்பஷ்சந்ததிகம் மீட்டர்
மநு வம்ஸ புரோஹிதேந -வசிஷ்டராலே
மந்த்ரை: அபிமந்தரய த்வயி பாதுகே ப்ரயுக்தம் அபிஷேக ஜலம் -மந்திரித்து சேர்த்த திரு அபிஷேக தீர்த்தம்
க்ஷணேந ராஜ்ஞாம் சமயாமாஸ ஸமுத்திதாந் ப்ரதாபாந்—பிரதிகூத்திலருடைய பொங்கி வரும் ராக்கிரம ஆகிய நெருப்பை அவித்ததே
பாதுகையே! மனுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர் உன் மீது மந்திரங்கள் கொண்டு ஜபிக்கப்பட்ட புண்ணிய நீரை,
பட்டாபிஷேகத்தின்போது சேர்த்தார். இந்த நீர் செய்தது என்ன?
விரோதிகளான அனைவருடைய வீரம் என்ற தீயை அணைத்து விட்டது.
ஸ்ரீ பாதுகையே மநுகுல குருவான வசிஷ்டர் சேர்த்த மந்த்ரிக்கப் பட்ட திரு அபிஷேக தீர்த்தம்
வேற்று அரசர்களுடைய பராக்கிரமம் என்கிற நெருப்பை அணைத்து விட்டது –
ஆழ்வார் பரம்
பாசுரங்கள் தீர்த்தம் புற சமய நெறிகளை மாய்த்து
கோசல நாடு வேதம்
மனு வம்சம் -மனிதர்களுக்கு -ஜெகதாச்சார்யர் ராமானுஜர்
பாசுரங்கள் சேவித்து ஆழ்வாரை திருமஞ்சனம் செய்து
வாதங்களாகிய நெருப்பை அணைத்து
தத்வமஸி
அஹம் ப்ரஹ்மாஸ்மி
மஹா வாக்கியங்கள்
அல்லல் எல்லாம் தீர்த்தான் அன்றோ
பதிம் விஸ்வேஸ்வர ஆத்மாநாம்
ஸரீராத்மா பாவம் -உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் –
தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சொம்பில் கொண்டு வந்து -தண்ணீர் உடைய சொம்புக்கு தண்ணீர் என்றே சொல்வது போல்
யஸ்ய ஆத்மா சரீரம் -ஸ்ருதிகள் -இது கொண்டு ஸூத்ர வாக்யங்களை ஒருங்க விட்டார் அன்றோ
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
யானே நீ என்னுடைமையும் நீயே
—————————————————————–
ரதோத்காதா விருத்த ஸ்லோகம்
கற்பகக் கொடியாக உருவகம்-பெருமாள் கற்பக மரம் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
பரதன் விவசாயி -பாத்தி போல் ஸிம்ஹாஸனம்-நீரூட்டி ரிஷிகள் வளர்க்கிறார்கள்
பாதபாத் உபஹ்ருதா ரகூத்வஹாத் ஆலவாலமிவ பீடம் ஆஸ்ரிதா
அப்யஷேசி பவதீ தபோதநை: பாரிஜாத லதிகேவ பாதுகே—201-
பாதபாத் –பாதத்தால் தண்ணீர் உறிஞ்சும் –கற்பக மரம்
உபஹ்ருதா-பரத்தாழ்வானால் கொண்டு வரப்பட்டாள்
ரகூத்வஹாத் -ரகுகுலத் திலகம் பெருமாள்
ஆலவாலம் இவ பீடம் ஆஸ்ரிதா-பாத்தி -ஸிம்ஹாஸனம்
அப்யஷேசி பவதீ தபோதநை: -தபஸ்ஸை செல்வமாகக் கொண்ட ரிஷிகளால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டாய்
பாரிஜாத லதிகா இவ பாதுகே -பாரிஜாத கொடி போல்
பாதுகையே! இராமன் என்ற பெரிய மரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்பகக் கொடி போன்று நீ உள்ளாய்.
உன்னை ஸிம்ஹாஸனத்தில் அமர்த்தி உயர்ந்த ரிஷிகள் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.
ஸ்ரீ பாதுகையே -ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பெருமாள் திருவடியில் இருந்து எழுந்து அருளப் பண்ணி
சிம்ஹாசனத்தில் முநி ஸ்ரேஷ்டர்களால் அமர்த்தி அபிஷேகம் செய்ததும்
ஒரு கற்பகக் கொடியை நட்டு தீர்த்தம் சேர்த்தால் போலே இருந்தது –
ஆழ்வார் பரம்
எம்பெருமான் மரம் கற்பக கொடியை நாதமுனி -எழுந்து அருளப்பண்ணி
பிரபன்ன ஜன கூடஸ்தர் ஸிம்ஹாஸனம்
ந்யாஸம் சரணாகதி சிறந்த தபஸ் -இதில் ஈடுபட்ட ஆச்சார்யர்கள் மூலம் நீரூட்டி -காத்த குணவாளர் -வளர்த்த இதத்தாய் –
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
கோமள வல்லி -திருத்தாயாரும் –
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. –சடகோபர் அந்தாதி -72–
குருகூர் வந்த கற்பகமே.
பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் -ப்ரசன்ன புத்தர் மாயாவதி போன்ற மதஸ்தர் வாத வித்வான்களுக்கு பூட்டு போன்றும்
பொய்ச் சமயம் மித்யா வாதம் மாயா வாதம்
போக்கு வல்வாய் வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு -சமணர்களுக்கு மாறுபாட்டை போக்கும்
கூர் வாயை யுடைய வாட்சி-மரத்தைச் சீவும் – கருவியாகவும்
அது மரக் கோணலைத் தீர்ப்பது போல் இது மனக் கோணலைத் தீர்க்கும்
வாள் என்று கொண்டு சி பகுதிப் பொருள் விகுதி என்றுமாம்
மன் உயிர் கட்கு ஆட்சி கண்டீர் -உலகில் நிலை பெற்ற உயிர்களுக்கு அழிவற்ற பொருளாகவும்
ஜீவாத்மாக்கள் நித்யம் என்பதால் மன்னுயிர்
ஜீவ ராசிகளை ஆளுபவர் என்றுமாம்
தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் -அடியவர்களுக்குப் பேரின்பப் பெருக்காகவும்
அறிவைக் காட்சி கண்டீர் -அவர்கள் அறிவுக்கு காணத்தக்க பொருளாகவும்
ஞான ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்தை விசத தமமாக அறிந்தவர் என்றுமாம்
பரவும்
ஆகவே பரவும் -வணங்கி புகழ்ந்து வழி படுங்கோள் என்று உபதேசிக்கிறார்
—————————————————————————————
மாலினி விருத்தம் இது தொடங்கி நான்கு ஸ்லோகங்களும்-15 அச்சு எழுத்துக்கள் பாதம் தோறும்
அலகுபி: அபிஷேக வ்யாப்ருதை: அம்புபிஸ் தே
திநகர குல தைந்யம் பாதுகே க்ஷாளயிஷ்யந்
ஸ கலு கமல யோநேஸ் ஸூநுராதத்த மந்த்ரேஷு
அதிக நியம யோகாம் சக்திம் ஆதர்வணேஷு-—202-
பாதுகே
அலகுபிர் அபிஷேக –மிகவும் உயர்ந்த அபிஷேகத்தில்
வ்யாப்ருதை: -பயன்படுத்திய
அம்புபிஸ் தே–தீர்த்த பலத்தால்
திநகர குல தைந்யம் க்ஷாளயிஷ்யந்–ஸூர்ய குலத்துக்கு ஏற்பட்ட தீன தசையை -அழுக்கை -அலம்பிக் கழுவிப் போக்கி அருளி
ஸ கலு -அந்த வசிஷ்டர்
கமல யோநேஸ் ஸூநுர் –தாமரையில் தோன்றிய நான்முகனின் மகன்
அதிக நியம யோகாம் சக்திம் -அனுஷ்டான சக்தியால் வந்த
ஆதர்வணேஷு-அதர்வண
மந்த்ரேஷு ஆதத்த-சேர்த்து மேலும் பலம் கூட்டினார்
பாதுகையே! உனது பட்டாபிஷேகத்தில் சேர்க்கப்பட்ட புண்ணிய நீர் அனைத்தும் மிகுந்த பெருமை அடைந்தன.
இவற்றை ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் என்ன செய்தார்? இராமன் நாட்டை விட்டு அகன்றதால்
ஸூரிய குலத்திற்குப் பெரும் துன்பம் ஏற்பட்டது. இந்த அழுக்கை, அந்தப் புண்ணிய நீர் கொண்டு அவர் விலக்கினார்.
இதன் மூலம் அதர்வண வேதங்களில் கூறப்பட்ட மந்திரங்கள் அனைத்தையும் ஓதி, மிகவும் அதிகமான சக்தி ஏற்படுத்தினார்.
ஸ்ரீ பாதுகையே ஸூர்ய வம்சத்திற்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று பிரம்மா புத்திரன் வசிஷ்டர் உனக்கு
திரு அபிஷேகம் செய்வதற்கு உரிய அதர்வண வேத மந்த்ரங்களில் அதிகமான சக்தியை தனது வ்ரதங்களால் உண்டு பண்ணினார் –
ஆழ்வார் பரம்
வசிஷ்டர் ஸ்தானத்தில் இங்கு -நாதமுனிகள்
யோக அப்பியாசம் மேற்கொண்டு
கண்ணி நுண் சிறுத்தாம்பு -12000 தடவை -சக்தி ஊட்டி ஆராதிக்க
அருளிச் செயல் அமுத வெள்ளம் பெற்றுக் கொடுத்து அருளி
உலகின் ஸம்ஸாரிக இருளைப் போக்கி அருளினார்
———————————————————————–
திநகர குல ஜாநாம் தேவி ப்ருத்வீ பதீநாம்
நிருபதிம் அதிகாரம் ப்ராப்நுவத்யாம் பவத்யாம்
அஜ நிஷத ஸமஸ்தா: பாதுகே தாவகீந:
ஸ்நபந ஸலில யோகாந் நிம்நகா: துங்கபத்ரா—-203-
திநகர குல ஜாநாம் –ஸூர்ய குலத்தில் பிறந்த
தேவி ப்ருத்வீ பதீநாம்–பூமி ஆளும் ராஜாவாக
நிருபதிம் அதிகாரம் -இயல்வாக அடைந்த
ப்ராப்நுவத்யாம் பவத்யாம்
அஜ நிஷத ஸமஸ்தா:
பாதுகே தாவகீந:-உன்னுடைய
ஸ்நபந ஸலில யோகாந் நிம்நகா: -திருமஞ்சந தீர்த்த சேர்த்தியாலே அனைத்து நதிகளும்
துங்கபத்ரா- -துங்க உயர்ந்த -பத்ரா -மங்களம் தருபவை -ஸ்லேடை ஆனதே
பாதுகையே! ஸூரிய குலத்தில் வந்த அரசர்களுக்கே உரித்தான அதிகாரத்தை நீ அடைந்தாய்.
அப்போது உன் மீது சேர்க்கப்பட்ட புண்ணிய நீரின் தொடர்பு காரணமாக அனைத்து ஆறுகளும் உயர்ந்தன.
வற்றிக் கிடந்த ஆறுகள் கூட, துங்கபத்திரை நதி போன்று பெருக்கெடுத்து, உலகிற்கு நன்மை ஏற்படுத்தும்படி ஆயின.
ஸ்ரீ பாதுகா தேவியே ஸூர்ய வம்ஸ அரசர்களது ஒப்பற்ற அதிகார பீடத்தை ஏற்று நீ பட்டாபிஷேகம் கண்டு அருளிய போது
உனது திரு அபிஷேகப் பெருக்கால் அநேக சிற்றாறுகள் பெருக்கு எடுத்து வரும்
மங்கள கரமான துங்க பத்தரை போல் மங்களத் தன்மையும் பெருமையும் பெற்றன —
ஆழ்வார் பரம்
ப்ருத்வீ பதி -ஆச்சார்யர்
நீரே ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –
விஷ்வக் சேனர் பிராட்டி பெருமாள் -நித்யர் -இவர் ஒருவரே பூமியில் அவதரித்து முதல்
ஆ முதல்வன் இவன் என்று தட்டேற்றி
திருவாயமொழி தீர்த்தம்
ஆச்சார்யர்கள் -ஆறு போல் நன்மை செய்பவர் ஆன்மிகம் for ever
உயர்ந்த மங்களங்களும் ஷேமங்களும் பெற்று
உலகோருக்கும் அருளுகிறார்கள்-
—————-
ஸ்லேடை அலங்காரம் ஸ்லேஷை அலங்காரம் ஸமஸ்க்ருதத்தில் -15 அச்சு எழுத்துக்கள் பாதம் தோறும்
தவ விதிவத் உபாதே ஸார்வ பௌம அபிஷேகே
பரத ஸமய வித்பி: பாதுகே மந்த்ரி முக்யை:
த்வதவதி நிஜ கர்ம ஸ்த் தாயிநீ நாம் ப்ரஜாநாம்
ப்ரதம யுக விசேஷா: ப்ராதுராஸந் விசித்ரா—-204-
தவ விதிவத் உபாதே -விதிப்படி செய்யும் பொழுது
ஸார்வ பௌம அபிஷேகே-சக்ரவர்த்திக்காக பட்டாபிஷேகம்
பரத ஸமய வித்பி: பாதுகே மந்த்ரி முக்யை:-முக்கிய மந்திரிகளால்
த்வதவதி =நீயே எல்லை நிலை
நிஜ கர்ம ஸ்த் தாயிநீ நாம் ப்ரஜாநாம்–அனைத்து மக்களும் ஸமர்ப்பித்து
ப்ரதம யுக விசேஷா: -கிருத யுகங்களை அவர்களுக்குத் தந்ததே
க்ருத யுகம் முதல் யுகம் என்றும் –சிறப்பாக செய்யப்பட செயல் உடன் கூடி இருத்தல் என்றும் கொண்டு
கர்ம யோகம் -கர்ம அனுஷ்டானங்கள் வர்ணாஸ்ரமங்கள் விடாமல் செய்து –
அவற்றை ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ண பாதுகா தேவி அர்ப்பணம் அஸ்து -என்பதால் விசேஷ க்ருத யுகம்
ப்ராதுராஸந் விசித்ரா-உண்டானாயின -ஆச்சார்யமாக த்ரேதா யுகத்திலே இவ்வாறு ஆனதே –
பாதுகையே! பரதனின் வேண்டுகோளுக்கு ஏற்றபடி அனைத்து மந்திரிகளும் இணைந்து, சாஸ்திர முறைப்படி
உனக்குப் பட்டாபிஷேகம் நடத்தி வைத்தனர். அப்போது அந்த நாட்டு மக்கள் யாவரும் ஒன்று கூடி,
தங்கள் செயல்கள் அனைத்தையும் உனக்கு அர்ப்பணித்தபடி நின்றனர். இதனைக் காணும் போது
அந்த யுகம் (த்ரேதா யுகம்) பல யுகங்களுக்கு முன்னாலிருந்த க்ருதயுகம் போன்று விளங்கியது
(நாம் நல்ல செயல்கள் செய்துவிட்டு, ”கிருஷ்ணார்ப்பணம்” என்பது போன்று இங்கு ”பாதுகா அர்ப்பணம்” என்றனர்).
ஸ்ரீ பாதுகையே மந்த்ரிகள் ஸ்ரீ பரதாழ்வான் திரு உள்ளம் அறிந்து சாஸ்திரப் படி பட்டாபிஷேகம் பண்ணினார்கள் –
எல்லா ஜனங்களும் தங்கள் கர்மங்களை உன்னிடம் சமர்ப்பித்தார்கள் –
க்ருத யுகம் போலவே உயர்ந்ததாயிற்றே –
ஆசார்யருக்கு அர்ப்பணம் செய்வதே மிகவும் நலம் அளிக்கும் என்றதாயிற்று –
ஆழ்வார் பரம்
நாதமுனிகள் தொடக்கமாக -விதிப்படி ஆராதித்து
ஆழ்வாருக்கு அடியவர்கள் ஆகி
விசேஷ ஸ்வரூப ஞானம் அடைந்து
ஆத்மாவையும் செயல்களையும் உம்மிடம் சமர்பித்து
கலியுகத்தில் விசித்திரமாக நாமும் அடையும்படி செய்து அருளினார்கள் –
———————————————————
அவஸித ரிபு சப்தாந் அந்வபூ: த்வம் ததாநீம்
ரகுபதி பத ரக்ஷே லப்த்த ராஜ்ய அபிஷேகா
சலித புஜ லதா நாம் சாமர க்ராஹிணீ நாம்
மணி வலய நிநாதைர் மேதுராந் மந்த்ர கோஷாந்-—205-
அவஸித ரிபு சப்தாந் -எதிரிகள் சப்தமே இல்லாமல்
அந்வபூ: -அனுபவித்தாய்
த்வம் ததாநீம் ரகுபதி பத ரக்ஷே லப்த்த ராஜ்ய அபிஷேகா–அந்த பட்டாபிஷேகம் சேயும் நேரத்தில்
சலித புஜ லதா நாம் சாமர க்ராஹிணீ நாம்-சாமரங்கள் வீசும் பெண்கள் கையில் வளையல்கள் ஓசை
மணி வலய நிநாதைர் மேதுராந் மந்த்ர கோஷாந்-ரிஷிகள் மந்த கோஷம் பெருகி
வியாக்யானம் பண்ணுவது போல் வளையல்கள் ஒலி
கம்பர் -இலங்கையில் இருந்த அரக்கர்கள் பட்டாபிஷேகம் வரவில்லை -மலைகள் வரவில்லை -அஷ்ட திக் கஜங்கள் வரவில்லை -மற்ற அனைவரும் வந்தனர் -அதே போல் இங்கும் சத்ருக்களின் ஒலி தவிர மற்ற அனைத்தும் கேட்டதே
இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனக்குப் புண்ணிய தீர்த்தம் கொண்டு பட்டாபிஷேகம்
செய்விக்கப்பட்ட போது நிகழ்ந்தது என்ன? காற்றில் கொடிகள் அசைவது போன்று,
சாமரம் வீசிக் கொண்டிருந்த பெண்களின் கைகள் மெள்ள அசைந்தன.
அவர்கள் கைகளில் இருந்த இரத்தின வளையல்களின் ஒலி எங்கும் ஒலித்தது.
மேலும், அங்கு வேத மந்திரங்களின் ஒலியும் சூழ்ந்திருந்தது.
இதனால் அந்த இட்த்தில் “சத்துரு” என்ற சொல், எங்கும் கேட்காமல் விளங்கியது. இதனை நீ மகிழ்வுடன் அனுபவித்தாய்.
ஸ்ரீ பாதுகையே உனது பட்டாபிஷேக மகோத்சவத்தின் போது மந்திர கோஷங்களையும் உனக்கு சாமரம் வீசிய
பெண்களின் கை வளைகளின் ரத்னங்கள் உண்டாக்கிய மதுரமான சப்தத்தையும் அனுபவித்தாய்
அவை சத்ரு என்கிற சப்தமே இல்லாமல் செய்து விட்டன –
ஆழ்வார் பரம்
செவிக்கு இனிய செஞ்சொல்
காமம் க்ரோதாதிகள் இருக்கவே இருக்காதே
ஆச்சர்ரியர்கள் வியாக்யானம் -வளையல் ஓசை போல் வ்ருத்தி
ஈடு பெருக்கர் -மா முனிகள்
ஸ்ருதி ஸூகை -செவிக்கு இனிய செஞ்சொல் சொல்லியே திருவாராதனம் -ராமானுஜர்
—————————————————-
மாலினி விருத்தம் இதுவும் அடுத்த இரண்டு ஸ்லோகங்களும்
ஸமுசிதம் அபிஷேகம் பாதுகே ப்ராப்நுவத்யாம்
த்வயி விநிபதிதாநாம் தேவி தீர்த்த உதகாநாம்
த்வநி: அநுகத மந்திர: ஸீததாம் கோஸலாநாம்
சமயிதும் அலம் ஆஸீத் ஸங்குலாந் ஆர்த்த நாதாந்-—206-
ஸமுசிதம் அபிஷேகம் -நன்கு தகுந்த -உசிதமான
பாதுகே
ப்ராப்நுவத்யாம்-நீ பெற்ற போது
த்வயி விநிபதிதாநாம் தேவி தீர்த்த உதகாநாம்-உனது மேல் விழுந்த புண்ய தீர்த்தங்களின்
த்வநி: ஒலியானது
நுகத மந்திர: -உடன் சேர்ந்த வேத மந்த்ர சப்தங்களும்
ஸீததாம் கோஸலாநாம்-வருந்திய அயோத்யா மக்களின்
சமயிதும் அலம் ஆஸீத் ஸங்குலாந் ஆர்த்த நாதாந்–துன்பத்தால் புலம்பிய ஒலிகளை போக்கடிக்கப் போதுமானதாக இருந்தனவே
பாதுகை தேவியே! இராமன் கானகம் சென்ற பின்னர் அயோத்தி எங்கும் மக்களின் புலம்பல் ஒலியே கேட்டபடி இருந்தது.
ஆயினும் உனக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட நேரத்தில், உன் மீது சேர்க்கப்பட்ட நீரின் ஓசையாலும்,
அப்போது ஓதப்பட்ட மந்திரங்களின் ஒலியாலும் மக்களின் புலம்பல் நீக்கப்பட்டது.
ஸ்ரீ பாதுகையே பெருமாளை பிரிந்த மக்களின் புலம்பலை உனது அபிஷேக தீர்த்தங்களின்
ஓசை சேர்ந்த மந்த்ரங்களின் சப்தம் அடக்கி விட்டது –
ஆழ்வார் பரம்
திருவாய் மொழி பாசுர பண்களும்
ஸ்ரீ பாஷ்ய அக்ஷரங்கள் -தொட்ட இடம் எல்லாம் இதன் வாசனை
இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
இரண்டும் சம்சார தாப த்ரயங்களினால் வருந்தும் நம்மை ரக்ஷிக்குமே
குல பதி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
தீர்த்தங்கள் ஆயிரமும் -பாவின் இன்னிசை பாடித் திரிவனே
சடகோபன் பொன்னடி -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -அநு கத பின் தொடர்ந்து கம்பீர ஸ்ரீ ஸூக்திகள் –
உலகியல் வாழ்க்கை புலம்பல் ஒலி போக்கடிக்குமே
——————————————————
திவிஷத் அநு விதேயம் தேவி ராஜ்ய அபிஷேகம்
பரத இவ யதி த்வம் பாதுகே நாந்வமம்ஸ்த்தா:
கதம் இவ ரகுவீர: கல்பயேத் அல்ப யத்ந:
த்ரி சதுர சர பாதை: தாத்ருசம் தேவ கார்யம்-—207-
திவிஷத் -தேவர்களின்
அநு விதேயம் -கொண்டாட்டம் -செய்யும் படி
தேவி ராஜ்ய அபிஷேகம்
பரத இவ -போல்
யதி த்வம் பாதுகே ந அந்வ மம்ஸ்த்தா:—ஒரு கால் நீயும் அனுமதிக்காமல் இருந்தால்
கதம் இவ ரகுவீர: -எப்படி
கல்பயேத் அல்ப யத்ந:த்ரி சதுர சர பாதை: -மூன்று நான்கு அம்புகளால் -அநாயாசேந-குறைந்த முயற்சி யால்
தாத்ருசம் தேவ கார்யம்-அந்தப்பெரிய தேவ காரியத்தை
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் அன்றோ -மூன்று நான்கு அம்புகளே போதுமே -அநாயாசேந-செய்த கார்யம் அன்றோ –
பாதுகா தேவியே! அனைத்து தேவர்களாலும் கொண்டாடப்பட்ட பட்டாபிஷேகத்தை நீ பரதன் போன்று
ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் தேவர்களுக்காக இராமன்,
மூன்று நான்கு அம்புகள் மூலமே இராவணனை எந்த விதமான சிரமமும் இன்றி வதம் செய்ததை எவ்விதம் முடித்திருக்க இயலும்
(பாதுகை அரசப் பொறுப்பை ஏற்ற நிம்மதி காரணமாக அல்லவா இராமன் நாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் சென்றான்?)?
ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ பரதாழ்வானைப் போல நீயும் பட்டத்தை ஒப்புக் கொள்ளாமல் இருந்து இருந்தால் பிரயாசை இல்லாமல்
பெருமாளால் ராவணனை தேவர்களின் பொருட்டு வதம் செய்து இருக்க முடியாது அன்றோ –
ஆழ்வார் பரம்
நீர் திரு அவதரிக்காமல் இருந்தால்
பாபங்களான -ராவணன் -போக்குவார் யார்
திவிஷத் -நித்ய ஸூரிகள் கொண்டாடும் படி
கண் பார்வை -மூன்று நான்கு கடாக்ஷ லேசத்தாலேயே நாடும் ஊரும் உலகமும் தம்மைப் போல் ஆக்கி அருளினார் அன்றோ
———————————————————
கதிசந பத பத்ம ஸ்பர்ச ஸௌக்யம் த்யஜந்தீ
வ்ரதம் அதுலம் அதாஸ் த்வம் வத்ஸராந் ஸாவதாநா
ரகுபதி பத ரக்ஷே ராக்ஷஸைஸ் த்ராஸிதாநாம்
ரண ரணக விமுக்தம் யேந ராஜ்யம் ஸுராணாம்—208-
பத பத்ம ஸ்பர்ச ஸௌக்யம் த்யஜந்தீ–திருவடித் தாமரை ஸ்பர்ச பேர் இன்பம் துரந்து
உலக இன்பத்துக்காக கடவுளையே தியாகம் பண்ணுகிறோம் நாம்
வ்ரதம் அதுலம் அதாஸ் த்வம் கதிசந வத்ஸராந் ஸாவதாநா ரகுபதி பத ரக்ஷே ராக்ஷஸைஸ் த்ராஸிதாநாம்-சில காலம் செய்த தவத்தின் பலனாகவே ராக்ஷஸர்கள் மாண்டனர்
ராஜ்யம் ஸுராணாம் ரண ரணக விமுக்தம் -நடுக்கத்தில் இருந்து தேவர் விடுபட்டார்
யேந -அந்த விரத்தாலேயே
ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராமனுடைய திருவடிகளின் சுகத்தை
நீ எப்போதும் அனுபவித்து வந்தாய். ஆயினும் நாட்டிற்காக அந்தச் சுகத்தை ஒதுக்கி விரதம் மேற்கொண்டாய்.
இது நாள் வரை அசுரர்களால் அச்சம் கொண்டு விளங்கிய தேவர்களின் உலகம், உனது விரதம் காரணமாகத் தனது துக்கம் நீங்கி நின்றது.
ஸ்ரீ பாதுகையே சில வருஷங்கள் பகவான் திருவடியை விட்டுப் பிரிந்து இருப்பதான கடுமையான விரதத்தை அனுஷ்டித்தாய்-
அதனாலேயே ராஷஸர்களால் யுண்டான தேவர்கள் உடைய எல்லை யற்ற துன்பம் நீங்கிற்று –
ஆழ்வார் பரம்
ஸ்ரீ வைகுண்டம் -அணுக்க தொண்டைத் தியாகம் செய்து
இங்கே சஜாதீயராக அவதரித்து தவம் இருந்ததாலேயே
நாம் உஜ்ஜீவனம் அடைகிறோம்-பக்தர் கூட்டம் அச்சம் தீர்ந்தது
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-பிரிந்து வாடி இருந்தார் -பிரஜையைப் பட்டினி இட்டு நம்மை உஜ்ஜீவிக்க –
——————————————————
சிகரிணி -விருத்தம் -கிரீடம் உடன் இருப்பதால்-
அதர்வோபஜ்ஞம் தே விதிவத் அபிஷேகம் விதததாம்
விஸிஷ்டா தீநாமபி உபசித சமத்கார பரயா
த்வத் ஆஸ்தாந்யா ரங்கக்ஷிதி ரமண பாதாவநி ததா
லகீயஸ்ய: ஜாதா ரகு பரிஷத் ஆஹோ புருஷிகா-—209-
அதர்வோபஜ்ஞம் -அதர்வண வேதம்
விதிவத் -ஸாஸ்த்ர விதிப்படி
தே அபிஷேகம் விதததாம்- உனக்குச் செய்து வைத்தார்கள் —
விஸிஷ்டா தீநாமபி உபசித சமத்கார பரயா–வசிஷ்டாதி ரிஷிகளுக்கு வியப்பு வளர்ந்து கொண்டே போனதே
த்வத் ஆஸ்தாந்யா -உனது ஆஸ்தான மஹிமையாலேயே
ரங்க க்ஷிதி ரமண பாதாவநி ததா-ஸ்ரீ ரெங்க நாத பாதுகையே -அப்போது
ரகு பரிஷத் ஆஹோ புருஷி லகீ யஸ்ய: ஜாதா–மன்னர்களின் சாத்விக கர்வப் பேச்சு -சிறியவையாகவே ஆகி விட்டன
ரகு குலம் -லகு ஆனதே -சிலேடை
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! அதர்வண வேதத்தில் கூறப்பட்ட முறை தவறாமல்
உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வசிஷ்டர் போன்றவர்கள் பெரும் வியப்பு அடைந்தனர்.
என்ன காரணம் ? உன் மீது அந்த நாட்டினர் வைத்த பத்தியே காரணம் ஆகும். இதனால் நேர்ந்தது என்ன?
தங்களுக்கு மட்டுமே இத்தகைய மரியாதையை மக்கள் செய்து வந்தனர் என்று கர்வம் கொண்டிருந்த
ரகு வம்சத்து அரசர்களின் இறுமாப்பு ஒடுங்கி விட்டது.
ஸ்ரீ பாதுகையே இஷ்வாகு முதல் அனைத்து அரசர்களும் அரசாட்சி செய்ததைக் கண்ட
வசிஷ்டாதி முனிவர்கள் நீ சபை நடத்தி மக்களை ஒழுக்கம் ஞானம் பக்தி
இவைகளில் ஓங்கியவர்களாகக் கொண்டு மற்ற அரசர்களை விட விமரிசையாக ஆட்சி செய்ததைக் கண்டு வியந்தார்கள் –
ஆழ்வார் பரம்
நாதமுனிகள் தொடக்கமான நமது பூர்வ ஆச்சார்யர் ஆழ்வாருக்கு முடி சூட்ட –
உண்டோ வைகாசி விசாகத்துக்கு -சடகோபருக்கு ஒப்பு -திருவாய் மொழிக்கு ஒப்பு -ஆழ்வார் திருநகரிக்கு ஒப்பு
சார ஸாரம் -ஸாரஸ்வத –
ஆஸ்தானம் -பாசுரப்பெருமைகள்
ரிஷிகள் வார்த்தை -வேதம் லகு வானதே
ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. –சடகோபர் அந்தாதி 75–
———————————————————————————–
ஆர்யா விருத்தம்
அனுஷ்டுப் தொடங்கி ஆர்யா விருத்தம் நிகமானம் அனைத்து பந்ததியிலும் உண்டே
அபிஷே சயது ஸ ராம: பதேந வா ஸ்ப்ருசது பாதுகே பவதீம்
அவி சேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: க்ஷமா ஸமேதாநாம்–-210-
அபிஷே சயது ஸ ராம: –ராமனே தனது திருக்கையால் அபிஷேகம் செய்தாலும்
பதேந வா ஸ்ப்ருசது-திருவடியால் ஸ்பர்சித்தாலும்
பாதுகே பவதீம்
அவி சேஷித மஹிமா த்வம் கிம் வா விசேஷ: –உனது மஹிமைக்குக் குறை இல்லையே
க்ஷமா ஸமேதாநாம்-பொறுமை பூமி உடன் கூடியே உள்ளாயே
ஷமா பூமி பொறுமை-சிலேடை -உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
பூமி யுடன் தொடர்பு படுக்கைக்கு எப்பொழுதும்
வெற்றியே எப்பொழுதும் உண்டே -பெருமை குறையாதே
அடுத்த பந்ததி -மீண்டும் திருவடியில் சேரப் போகிறாள்
அதுக்கு பதிலாக இங்கேயே அருளிச் செய்கிறார் –
ஸிம்ஹாஸனம் இருந்தாலும் திருவடியில் இருந்தாலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லையே
பாதுகையே! இராமன் உனக்கு உயர்ந்த அரச பதவி என்ற பட்டாபிஷேகம் அளித்தாலும், தனது திருவடிகளில் உன்னை வைத்தாலும் –
உனது பொறுமை காரணமாக, நீ குறைவற்ற பெருமை மாறாமலேயே உள்ளாய்.
பூமியின் பொறுமையை ஒத்தபடி உள்ளவர்களுக்கு இது போன்று ஏற்றத் தாழ்வுகளில் பேதம் என்ன உள்ளது?
ஸ்ரீ பாதுகையே பெருமாள் உனக்கு பட்டாபிஷேகம் பண்ணினால் என்ன -திருவடியால் தொட்டால் என்ன –
ஒப்பற்ற உன் பெருமைக்கு ஒரு குறைவும் வாராது -பொறுமை மிக்கவர்களுக்கு தூஷித்தாலும் ஸ்துதித்தாலும் மனது கலங்காது –
ஆழ்வார் பரம்
பூமியில் எங்கள் குலபதி
ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கைங்கர்யம் செய்தாலும்
ஷமா பூமிப்பிராட்டி அருள் பெற்ற உமக்கு
அங்கும் நாம் ஆழ்வாருக்கு தாஸ பூதர்கள் தானே
அத்ர பரத்ர சா அபி -ஆளவந்தார்
உங்கள் மஹிமை மாறாமலேயே இருக்குமே –
————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply