ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்- 5-பிரதி பிரஸ்தான பத்ததி -பதில் பயணப் பத்ததி -பெருமாளை விட்டு ஸ்ரீ பாதுகை பரத ஆழ்வான் உடன் சென்றது -ஸ்லோகங்கள் -121-140-

நாடு திருத்திய -கோசல நாட்டில் -நந்தி கிராமம் திரும்பி வந்தது -பிரதி பிரஸ்தான
அனுஷ்டுப் சந்தஸ்ஸில் தொடங்கி

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே பர்யுபாஸ்மஹே
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்—-121-

ப்ரசஸ்தே ராம பாதாப்யாம் பாதுகே -மிக உயர்ந்த பெருமாளுடைய பாதுகைகளை -பெருமாளை விட –
பர்யுபாஸ்மஹே-முழுமையாக வணங்குகிறேன்
ஆந்ரு சம்ஸ்யம் யயோர் -எந்தப்பாதுகையின் கருணையானது
ஆஸீத் ஆஸ்ரிதேஷு அநவக்ரஹம்–ஆஸ்ரிதர் பக்கல் தடை இல்லாமல்
பெருமாள் கருணைக்குத் தடை இருப்பதைச் சொல்லாமல் ஸூ சிப்பிக்கிறார் –
பெருமாள் தேவர்களுக்கு கொடுத்த வாக்கு தடங்கல்
கைகேயிக்கு தசரதன் கொடுத்த வரன்கள் -இதுவும் தடங்கல் ஆனதே –
கருணா காகுஸ்தன் அன்றோ
அவரை விஞ்சியது பாதுகையின் கருணை –

இராமனின் திருவடிகளை விட மிகவும் உயர்ந்த அவனுடைய பாதுகையை நாங்கள் த்யானம் செய்கிறோம் –
காரணம், அயோத்தி நாட்டின் மீது இராமனுக்கு இல்லாத தயை
பாதுகைக்கு இருந்த காரணத்தால் அல்லவா பாதுகை மீண்டும் வந்தாள்?

பரதன் இராமனைப் பலமுறை கெஞ்சிய போதும், அவன் மனம் மாறவில்லை. ஆனால் பாதுகையின் மனம் துடித்தது.
தனக்கு மிகவும் ப்ரியமான இராமனின் திருவடிகளை உதறி, பரதனுடன் மக்களின் பொருட்டு மீண்டும் ஓடி வந்தாள்.
ஆக இராமனோ, அவனது திருவடிகளோ இங்கு உதவ வில்லை; பாதுகையே உதவினாள்.
“அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்” என்று திரு நாமத்தின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர்
தனது முமுக்ஷுப்படியில் அருளிச் செய்தது ஒப்பு நோக்குக.

திருவடிகளைக் காட்டிலும் பெருமை மிக்கதும்
பெருமாளை அண்டினவர்கள் இடம் இடையறா அன்பு பூண்டதும்
கருணை அதிகம் கொண்டு ஸ்ரீ அயோத்யைக்கு எழுந்து அருளி வந்ததுமான
ஸ்ரீ பாதுகையே உன்னை த்யானிக்கிறேன்-

ஆழ்வார் பரம்
ஆழ்வாரை -மிக பெரியவர் அன்றோ -நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
பரம காருண்யர்
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்வான் அவன்
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வார் இவர்

————————————————————————–

ப்ருசாம் ஆதுர ஸஹோதர ப்ரணய கண்டந ஸ்வைரிணா
பதேந கிம் அநேந மே வநம் இஹ அவநாத் இச்சதா
இதீவ பரிஹாய தந் நிவவ்ருதே ஸ்வயம் யத் புரா
பதத்ரம் இதம் ஆத்ரியே த்ருத ஜகத் த்ரயம் ரங்கிண:—-122-

ப்ருசாம் ஆதுர -மிகவும் வருந்திய
ஸஹோதர ப்ரணய கண்டந ஸ்வைரிணா-தம்பியுடைய பிரார்தனையைக் கண்டித்து பாதுகை போக
பதேந கிம் அநேந மே வநம் இஹ அவநாத் இச்சதா-அவநம் காப்பாற்றுதல் -விட்டு வானம் காட்டுக்கு ஆசைப்பட்டு
காத்தல் விட்டு கானகம் போனது
இதீவ பரிஹாய -என்று சொல்லி விட்டு
தந் நிவவ்ருதே ஸ்வயம் யத் புரா-அவளாகவே திரும்பி வந்து -கருணையால் –
பதத்ரம் இதம் ஆத்ரியே த்ருத ஜகத் த்ரயம் ரங்கிண:-மூன்று லோகங்களையும் காக்க வல்ல அரங்கன் இந்த பாதுகையை வணங்குகிறேன்

இராமன் கானகம் சென்ற வருத்தத்தில் இருந்த பரதன்,
இராமனிடம் சென்று அவனை மீண்டும் நாட்டிற்குத் திரும்புமாறு அழைத்தான்.
அப்போது பரதனை இராமன் கண்டித்து, மறுத்து விடுகிறான்.
இப்படியாக இந்த உலகைக் காப்பாற்றுவதற்காக வந்த இராமன்,
நாட்டை விட்டுக் கானகம் புகுவதையே பெரிதும் விரும்பியது கண்ட பாதுகை,
”இவன் (இராமன்) திருவடிகளால் நமக்கு ஆவது என்ன?” , என்று மனம் வருந்தினாள்.
ஆதலால் அந்தத் திருவடிகளை விட்டு, தான் மட்டும் நாட்டிற்கு வந்தாள்.
மூன்று உலகையும் காக்கும் அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்கிறேன்.

இராமனின் திருவடிகளை விட்டுப் பாதுகைகள் பிரிந்தமைக்குப் பல காரணங்களைக் கூறுகிறார் –
இராமன் பரதனைக் கடிந்து கொண்டது,
நாட்டை ஆள வேண்டிய கடமை இருக்கக் கானகம் விரும்பியது – என்ற காரணங்களைக் காட்டுகிறார்.

மனம் வருந்தி ஸ்துதித்த ஸ்ரீ பரதாழ்வான் வேண்டுதல்களை நிராகரித்து
தன்னிச்சையாக ஸ்ரீ தண்ட காரண்யம் நோக்கிச் சென்ற
பெருமாள் உடைய திருவடிகளுடன் என் சம்பந்தம் வேண்டாம் என்பது போலே
அத் திருவடிகளை விட்டு திரு அயோத்யைக்கு எழுந்து அருளிய
மூவுலகங்களையும் ரஷித்து அருளும் ஸ்ரீ ரங்க நாதனுடைய ஸ்ரீ பாதுகையை கொண்டாடுகிறேன் –

ஆழ்வார் பரம்
வருந்தும் அடியார்களின் பிரார்த்தனை விட்டு விட்டு
திருவடியில் இருந்து ஆழ்வார் புறப்பட்டார்
விஷ்வக் சேனர் -அங்கு இருந்து -நமக்காக இங்கு திரு அவதரித்து –
ந க்ஷமாமி -என்பவனை விட்டு
மூ உலகோரையும் பிறவிப் பிணியில் இருந்து காக்க வல்லார்
அரங்கனின் பாதுகையே ஆழ்வார் –

—————————————————————————-

தசவதந விநாசம் வாஞ்சத: யஸ்ய சக்ரே
தசரதம் அநகோக்திம் தண்டகாரண்ய யாத்ரா
ஸ ச பரத விமர்த்தே ஸத்ய ஸந்தஸ் த்வயா ஆஸீத்
ரகுபதி பத ரக்ஷே ராஜதாநீம் ப்ரயாந்த்யா—-123–

தசவதந -பத்து முகம் கொண்ட
விநாசம் வாஞ்சத: யஸ்ய சக்ரே-ராவணனை வதம் செய்ய விரும்பி
தசரதம் அநகோக்திம் தண்டகாரண்ய யாத்ரா-தந்தையை ஸத்ய சந்தனாக்கவே காட்டுக்குப் பயணம் செய்தான்
ஸ ச பரத விமர்த்தே -பரதன் தடுக்கவே
ஸத்ய ஸந்தஸ் த்வயா ஆஸீத் ரகுபதி பத ரக்ஷே ராஜதாநீம் ப்ரயாந்த்யா-உன்னால் தான் அவர் கூட ஸத்ய சந்தனானான்
ஸத்யம் மேல் ஆணை நான் ஸத்ய சந்தன் என்றாரே பெருமாள் சுக்ரீவன் இடம்

தந்தையை ஸத்ய சந்தனாக்கிய ராமனையே ஸத்ய சந்தனாக்கியதே ஸ்ரீ பாதுகா தேவி தானே
அயோத்தியை விட்டு தண்டகாரண்யம் அந்தப் பயணம்
அயோத்தியை நோக்கி இந்தப் பயணம்

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இராவணனை வதம் செய்யும் விருப்பம் கொண்டிருந்த இராமன்,
தண்டகாரண்யம் என்ற கானகம் புகுந்தான். இதன் மூலம் தசரதனின் வாக்கு சத்ய வாக்கே என்று நிலைத்தது.
இது போன்று பரதன் இராமனை அயோத்தி திரும்புமாறு வற்புறுத்தினான்.
அப்போது இராமன் பரதனிடம் உன்னை அளித்தான்.
நீ அயோத்திக்குப் புறப்பட்டதன் மூலம், “மக்களைக் காப்பேன்”, என்ற இராமனின் சத்தியமும் நிலைத்தது.

இராமன் கானகம் சென்றதால், தசரதனின் வாக்கு நிறைவேற்றப்பட்டது.
இராமனுக்குத் தனது நாட்டு மக்களைக் காப்பாற்றும் கடமை இருந்தது.
பாதுகைகளை அவன் மீண்டும் அனுப்பியதன் மூலம் அவனது வாக்கும் காப்பாற்றப்பட்டது.
ஆக, தசரதனின் வாக்கை இராமன் காப்பாற்றினான், இராமனின் வாக்கை பாதுகை காப்பாற்றினாள்.

கைகேயியினுடைய வரனையும் பூர்த்தி செய்யவும்
ராவணாதி அசுரர்களை சம்ஹரிக்கவும் பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யத்துக்கு ஏகினார்
ஸ்ரீ பாதுகையே நீ மட்டும் அயோத்யைக்கு வந்து இரா விட்டால் இரண்டு கார்யங்களும் கெட்டு இருக்குமே

ஆழ்வார் பரம்
நம்மாழ்வார் அருளால் நாம் ரக்ஷிக்கப்பட்டு
சரணாகத ரக்ஷணம் செய்வேன் என்ற அவனது வாக்கை ஸத்யமாக்கினவரே ஆழ்வார் தானே
ஆசார்யர் அனுக்ரஹம் இராதே போனால் ஜீவனுக்கு பகவானால் மோஷம் அளிக்க முடியாதே –

————————————————————————-

அப்யுபேத விநிவ்ருத்தி ஸாஹஸா தேவி ரங்க பதி ரத்ந பாதுகே
அத்யசேத பவதீ மஹீயஸா பாரதந்த்ர்ய விபவேந மைதிலீம்—-124–

அப்யுபேத விநிவ்ருத்தி ஸாஹஸா -கண்ணில் நிற்கும் ராமனே கண்ணன் -கம்பர் –
மனத்துக்கு இனியான் -ரம்யதே இதி ராம
விட்டுப்பிரிவது ஸாஹஸ செயல் அன்றோ
அக் குளத்து மீன் போல் சீதாப் பிராட்டியும் இளைய பெருமாளும் –
வெவ்வேறே கோணங்களில் பாதுகா பிரபாவம் அருளிச் செய்யும் காவ்யம் தானே ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்
பிரியச் சொன்னதை ஒத்துக் கொண்டு
தேவி ரங்க பதி ரத்ந பாதுகே-ஸ்வரூபம் ஒளி வீசி விளங்கும் தேவி –
அத்யசேத பவதீ மஹீயஸா -மஹிமை மிக்கு -பிராட்டியும் பாரதந்தர்யம் காட்டிய இடங்கள் உண்டு
ஆனால் நில் என்ன நிற்காமல் அக்ர செல்வேன் -நின் பிரிவினிலும் சுடுமோ காடு –
பாரதந்த்ர்ய விபவேந மைதிலீம்–அவன் இட்ட வழக்காக -அவனுக்காகவே –
அம்மி மிதிக்க -சேஷத்வம் அம்மி போல் -ஜீவாத்மா -அவன் இஷ்டப்படி விநியோகம் கொள்ள இருக்க வேண்டுமே
அவனுக்கே ஆட் பட்டு -மைதிலி தேவியை விஞ்சி விட்டாயே –
ஆர்ய புத்ரா –அயோத்யா -27-3-மனைவி மட்டும் பாப புண்யங்களில் பங்கு கொள்ள வேண்டும்
முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்றுவேன்
பிரிந்தால் நரகம் -சேர்ந்து இருப்பதரே ஸ்வர்க்கம் –
புருஷ விக்ரஹம் -என்று தந்தை நினைப்பார் -ப்ரணய ரோஷம்

இரத்தினங்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
இராமனின் திருவடிகளை விட்டுப் பிரிந்து,
அயோத்தி செல்வது என்னும் தீரச் செயலுக்கு நீ உடன்பட்டாய்.
இப்படியாக மிகவும் உயர்ந்த செயலாகிய
இராமனின் சொற்படி நடத்தல் என்னும் தன்மையில் சீதையை நீ விஞ்சி நிற்கிறாய்.

இராமன் சீதையிடம் கானகம் வர வேண்டாம் என்று கூறினான்.
ஆனால் சீதையோ இராமனின் சொல் கேளாமல் கானகம் வந்தாள்.
பாதுகையிடம் இராமன் அயோத்திக்குத் திரும்புமாறு கூறினான்.
அதனை உடனே ஏற்ற பாதுகை, பரதனுடன் அயோத்தி வந்தாள்.
இதன் மூலம் பாதுகை, சீதையை விட மேம்பட்டவள் ஆனாள்.
அயோத்தி மக்கள் மீது சீதையை விட பாதுகைக்குப் ப்ரியம் அதிகம் எனலாம்.

ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ சீதா பிராட்டி
எதிர் மறையான வார்த்தைகளைப் பேசி பிடிவாதமாக உடன் சென்றாள்-
நீயோ மறு வார்த்தை பேசாமல் ஜன ரஷணத்துக்காக
பெருமாளை பிரிந்து ஸ்ரீ சீதா பிராட்டியை விட சிறந்து விட்டாய்

ஆழ்வார் பரம்
நித்ய ஸூரிகள் ஒலக்கத்தில் இருந்து விட்டுப்பிரிந்து ஸாஹஸ செயல்
பிராட்டி அவன் உடனே அவதாரம் –
இவர் விஞ்சி -பிரிந்து வந்தார் -நம்மத் திருத்த அவன் அனுப்ப -வந்து அவதரித்தார்

ஆச்சார்யர்கள் பகவானை விட்டாவது ஆஸ்ரிதர்களை ரஷித்து அருளுவார்கள் என்றதாயிற்று –

—————————————————————————————

அவ்யாஹதாம் ரகுபதேர் வஹத: ப்ரதிஜ்ஞாம்
அம்சாதி ரோஹண ரஸே விஹதே தரண்யா:
ப்ராதாந் நிவ்ருத்ய பவதீ மணி பாத ரக்ஷே
ஸ்பர்சம் பதே ந விகத வ்யவதாந கேதம்—-125-

அவ்யாஹதாம் ரகுபதேர் வஹத: ப்ரதிஜ்ஞாம்
அம்சாதி ரோஹண ரஸே விஹதே தரண்யா:–யாராலும் தடுக்க முடியாத சபதம்
அம்சம் -தோளில் அமர -ஆசை நிறைவேறாமல்
பூ ப்ருத் -அரசன் -பூமியைத் தோள்கள் மேல் தங்குவதால் வந்த பெயர்
பூ மகளை திருமணம் செய்ய முடியாமல் சக்ரவர்த்தி வருந்த – -ஸ்ரீ தேவி அம்சம் சீதா தேவி –
ப்ராதாந் நிவ்ருத்ய பவதீ –நீ விலகி வந்தாய் -பூமாதேவி கஷ்டம் அறிந்து -விலகி
மணி பாத ரக்ஷே
ஸ்பர்சம் பதே ந விகத வ்யவதாந கேதம்-திருவடி ஸ்பரிசத்தை அளித்து அருளினாயே
பூமி தேவிக்கு ஸ்பர்சம் கொடுத்து அருளவே பாதுகா தேவி விட்டுப் பிரிந்தாள்
அனுக்ரஹம் செய்த பாதுகா தேவி என்று அனுபவிக்கிறார்

இரத்தினக் கற்கள் இழைத்த பாதுகையே! பூமா தேவி இராமனின் தோளில் ஏறுவதற்கு பெரு முயற்சி எடுத்தாள்.
ஆயினும், தான் கானகம் செல்வேன் என்ற சபதத்தில் இராமன் இருந்ததால், அந்த விருப்பம் நிறைவேறவில்லை.
இவ்வாறு அவள் மகிழ்வு போக்கடிக்கப் பட்டது. அப்போது நீ அயோத்திக்குத் திரும்பினாய்.
இதன் மூலம் பூமா தேவிக்கு இராமனின் திருவடித் தொடர்பை ஏற்படுத்தி, இழந்த மகிழ்வை மீண்டும் கொணர்ந்தாய்.

தசரதன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாக அறிவித்தவுடன் பூமா தேவி மிகவும் மகிழ்ந்தாள்.
தான் இராமனின் தோள்களில் அமர வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ந்தாள்
(ஒரு நாட்டு அரசன் அந்த நாட்டைத் தனது தோள்களில் வைத்துக் காப்பதாகவே கூறுவர்).
ஆனால் இராமன் கானகம் சென்றதால், பூமா தேவியின் அந்த மகிழ்ச்சி பறி போனது.
இதனைப் பார்த்த பாதுகை பூமாதேவி
இழந்த மகிழ்வை மீண்டும் பெறும் விதமாக, இராமனின் திருவடிகளை விட்டு அகன்றாள்.
இதன் மூலம், இராமனின் திருவடிகள் நேரடியாகப் பூமியில் பட, பூமா தேவிக்கு
அவனது திருவடித் தொடர்பு கிட்டியதால் மகிழ்ச்சி உண்டானது.

அல்லது, இராமனின் ஸிம்ஹாஸனத்தில் பாதுகை அமர்ந்து ஆண்டதால்,
பூமா தேவி மீண்டும் மகிழ்ச்சி அடைந்தாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

பூமி -ராஜ்ய பாரம் -பெருமாள் திருத் தோளிலே ஏற முயன்றாள்-
பின்பு ஸ்ரீ பாரதாழ்வானும் அரும் பாடு பட்டு பூமியை அவர் தோளில் ஏற்ற முயன்றார் –
இரண்டும் நடை பெறாததால் ஸ்ரீ பாதுகையே நீ அவரைப் பிரிந்து உன்னால் ஏதும் இடையூறு வராத வகையில்
நேரிடையான திருவடி சம்பந்தத்தை பூமிக்கு ஏற்பட வழி வகுத்தாய்

ஆழ்வார் பரம்
அபாயம் ஸர்வ பூதேப்யோ ஏதத் விரதம் மம -தீக்ஷை கொண்டு
அம்சம் -திருக்கரம் பிடித்து -அவனைப்பற்றுவது -அஹங்கார க்ரஸ்தராக பூமியில் உள்ளார் இருக்க
பாப ப்ரஸுரராய் இருக்க உதறி விட கொஞ்சம் வாய்ப்பு உண்டே
ஆழ்வார் -அவனைப் பிரிந்து
நம்முடைய தலையிலே வந்து அமர்ந்து -ஸ்வரூப ஞானம் உணர்த்தி –
நீர் நுமது என்ற இவை மாய்த்து
திருவடி இடம் சேர்த்து அருளுகிறார்
திண்ணிய கழல் அன்றோ –
ஆசார்யன் தான் எந்த கஷ்டத்தையும் பட்டாவது பக்தனை பெருமாள் இடம் சேர்ப்பிக்கிறார் என்றவாறு –

——————————————————————

மந்த்ர அபிக்ஷேக விரஹாத் பஜதா விஸூத்திம்
ஸம்ஸ்கார வர்ஜ்ஜந வசாத் அபி ஸம்ஸ் க்ருதேந
மூர்த்நா நிநாய பரதோ மணி பாதுகே த்வாம்
ராம ஆஜ்ஞயா விநிஹிதம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்—-126-

மந்த்ர அபிக்ஷேக விரஹாத் -பரதாழ்வானுக்கு பட்டாபிஷேகம் செய்யாமல் இருந்ததாலேயே
பஜதா விஸூத்திம்-தூய்மையான தலையில் –
விரோதம்-காட்டி அருளி –
ஸம்ஸ்கார வர்ஜ்ஜந -சடங்குகளை விலக்கி
வசாத் அபி ஸம்ஸ் க்ருதேந-நன்கு கட்டு அமைக்கப்பட்டு
ஸம்ஸ்க்ருதம் -கட்டுப்பட்ட மொழி
இங்கும் ஒரு முரண்பட்டு அழகாகக் காட்டி
மூர்த்நா நிநாய பரதோ -கிரீடமாக ஏற்றுக்கொண்டு
மணி பாதுகே த்வாம்
ராம ஆஜ்ஞயா விநிஹிதம் இவ ராஜ்ய லக்ஷ்மீம்-பெருமாள் கட்டளையால் –

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான்.
இயல்பாகவே தூய்மையான பரதன் – மந்த்ரங்கள் ஓதுவது, தலையை வாருவது முதலான சடங்குகள்
ஏதும் இன்றி தனது தலையில், இராமனின் கட்டளையால் அமர்த்தப்பட்ட உன்னை
ராஜ்ய லக்ஷ்மி போன்று எழுந்தருளச் செய்தான்.

இந்த உலகில் ஒருவனுக்குப் பட்டம் கட்டுவதற்கு முன்பாக மந்திரங்கள் உரைக்கப்பட்டு,
புண்ணிய நீரைத் தெளித்து பின்னரே பட்டம் கட்டுவார்கள். இது சாதாரண அரச பதவிகளுக்கு மட்டுமே ஆகும்.
உன்னை இராமன் பரதனின் தலையில் சூட்டினான்.
இயல்பாகவே தூய்மையான பரதன், இது போன்ற சடங்குகள் ஏதும் இன்றி உன்னை ஏற்றான்.

ஒருவனுக்கு பட்டம் கட்டுவதானால் புண்ய தீர்த்தங்களை கொணர்ந்து மந்திரங்களை ஜபித்து செய்விப்பார்கள் –
ஸ்ரீ பரதாழ்வான் செய்த தவத்தால் நீ அப்படி எதுவும் அன்றி அவர் தலையில் பட்டம் கட்டிக் கொண்டாய்-

ஆழ்வார் பரம்
நாத முனிகள் -தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்
கண்ணி நுண் சிறுத்தாம்பு -12000–யாகம் தவம் செய்து –
நம்மாழ்வாரை தலையால் சேவித்து
மோக்ஷ சாம்ராஜ்ய லஷ்மி -திருவாய் மொழி-நாலாயிரமும் – பெற்றார்
ஸ்ரீ மதுர கவிகளும் ஸ்ரீ நாத முனிகளும் ஆழ்வாரை அடைய வெகு ஸ்ரமம் பட்டார்களே –

——————————————————————–

ரக்ஷார்த்தம் அஸ்ய ஜகதோ மணி பாத ரக்ஷே
ராமஸ்ய பாத கமலம் ஸமயே த்யஜந்த்யா:
கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹோ வா
கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தஸா ஸா—-127–

ரக்ஷார்த்தம் அஸ்ய ஜகதோ -உலகை ரக்ஷிக்கவே செய்த கார்யம் -பிரியாமல் இருக்கும் ஸ்ரீ பாதுகா தேவி
என்றுமே புரியாதவர்கள் -அடியார் ரக்ஷணம் உறைப்பைக் காட்டவே இந்த லீலைகள்
அகலகில்லேன் இறையும் என்று இருப்பவர்கள் -எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்-
தானே வலிய சிறை புகுந்தாள் -பத்து மாதம் பிரிந்து –
இவளோ 14 ஆண்டுகள் பிரிந்து -சாஹசம் அன்றோ
மணி பாத ரக்ஷே
ராமஸ்ய பாத கமலம் ஸமயே த்யஜந்த்யா:ஒரு காலத்தில் -திருவடித் தாமரையை -விட்டுப் பிரிந்து –
கிம் துஷ்கரம் தவ விபூதி பரிக்ரஹோ வா–உன்னுடைய சொத்து -ராஜ்ஜியம் ஏற்றது செய்யவதற்கு அரிய செயலா
கிம் வா விதேஹ துஹிது: க்ருபணா தஸா ஸா—விதேக ஜனக மன்னன் -திருமகள் -வாடி அசோக வனத்தில் –
ப்ரதமையில் பாடம் கற்காத வைதிகர் ஞானம் போல் இளைத்து இருந்தாள் -த்ருஷ்டாந்தம் –
இது அரிய செயலா

இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
ஒரு கால கட்டத்தில் இராமனின் தாமரை போன்ற திருவடிகளை
விட்டுப் பிரிந்து ராஜ்ய பாரத்தையும் நீ ஏற்றாய்.
இந்தச் செயல் அரியதா அல்லது
இராமனை விட்டுப் பிரிந்த சீதையின் வருத்தத்துடன் கூடிய நிலை கடினமானதா?

இந்த உலகைக் காப்பாற்றும் பொருட்டு, ஒரு கால கட்டத்தில் சீதையும் இராமனை விட்டுப் பிரிந்தாள்;
நீயும் அவனது தாமரை போன்ற திருவடிகளை விட்டுப் பிரிந்தாய்.
சீதை மிகவும் வருந்தியபடி இருந்தாள்.
நீயோ – அந்த வருத்தத்துடன் நாட்டை ஆட்சி செலுத்தியபடியும் இருந்தாய்.
இந்தச் செயல் அல்லவா (சீதையின் செயலை விட) கடினமானது?

லோகத்தை ரஷிக்க நீயும் ஸ்ரீ சீதா பிராட்டியும் இரு கால கட்டங்களில் பெருமாளை பிரிந்து வந்தீர்கள்
ஸ்ரீ சீதா பிராட்டியோ பிரிவாற்றாமையால் அழுது கொண்டு இருந்தாள்
நீயோ உனது கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து அருளினாய் –

ஆழ்வார் பரம்
நித்ய ஸூரி -சேனை முதல்வராக இருந்து -நமக்காக -இங்கே திரு அவதரித்து -பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிறவிப் பிணி அறுத்து-கலி யுகத்தில் -ஸமயே –
பாதுகா தேவி சிம்ஹாசனத்தில் இருந்து ரக்ஷணம் -குல பதி தானே ஆழ்வார் –
32 -வருஷங்கள் பிரிந்து -இது அரிய செயலா -சீதா பிராட்டி பிரிந்து பத்து மாதங்கள் அரிய செயலா
கூவிக்கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -ஜன்மம் களையாயே–இனி இனி என்று இருபதின் காலம் கதறினாரே

——————————————————————–

ஸீதா ஸகஸ்ய ஸஹஸா சரணார விந்தாத்
பக்த்யா நதே க்ருதபதா பரத உத்தமாங்கே
ஆருஹ்ய நாகம் அபிதோ பவதீ விதேநே
மாயூர சாமர பரம் மணி ரஸ்மி ஜாலை:—-128-

ஸீதா ஸகஸ்ய ஸஹஸா சரணார விந்தாத்–சீதா கேள்வனான பெருமாளுடைய திருவடித்தாமரைகளில் இருந்து விரைவாகப் புறப்பட்டு
பக்த்யா நதே க்ருதபதா பரத உத்தமாங்கே—பக்தியுடன் வணங்கி இருக்கும் -பரதன் தலை மேல் ஒரு அடி வைத்து
ஆருஹ்ய நாகம் பவதீ விதேநே-சத்ருஜயன் யானை மேல் அமர்ந்து -அயோத்யா மக்களை ரஷித்தோம் என்ற தேஜஸ்ஸூ விளங்க
அபிதோ மாயூர சாமர பரம் மணி ரஸ்மி ஜாலை: -இரு புறமும் ரத்ன ஒளி -பரவி -மயில் தோகையால்
செய்யப்பட தோகை போல் பல வண்ணங்களுடன் -வீசுவது போல் இருந்ததே –

பாதுகையே! சீதைக்கு மிகவும் பிரியமான இராமனின் தாமரை மலர் போன்ற திருவடிகளில் இருந்து,
இராமனைப் பக்தியுடன் வணங்கி நின்ற பரதனின் தலையில் விரைவாக ஏறினாய்.
உன்னைப் பரதன் யானை மீது ஏற்றி அமர்த்தினான்.
உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினக் கற்கள் யானையின் இரு பக்கமும் ஒளி வீச,
அதனைக் காணும் போது மயில் தோகை கொண்டு செய்யப்பட்ட சாமரம் வீசுவது போன்று இருந்தது.

யானை மீது பாதுகை பேரரசியாக அமர்ந்தாள்.
அப்போது அந்தப் பாதுகைகளில் பதிக்கப்பட்ட உயர்ந்த கற்கள் பேர் ஒளி வீசின.
இந்த ஒளியானது இரு பக்கங்களிலும் சாமரம் வீசுவது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே -பக்திக்கு இணங்கி பெருமாள் திருவடியின் நின்றும் பிரிந்து
ஸ்ரீ பரதாழ்வான் தலையை உடனே அலங்கரித்தாய்
அவன் உன்னை சத்ருஜ்ஞயன் என்ற யானையின் மீது ஏற்றினான்
உன் மீதுள்ள ரத்னங்களின் தேஜஸ் மயில் தோகையினால் உனக்கு சாமரம் வீசுவது போல் இருந்தது –

ஆழ்வார் பரம்
ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு
நாத முனிகள் திருமுடியில் திருவடி வைத்து
பாவம் ராகம் தாளம் -தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல் –
மாறன் பசும் தமிழ் ஆனந்தம் –ராமானுஜ முனி வேழம் -தலையில் அமர்ந்து –
இவர் மூலமே வியாக்கியானங்கள் -வரம்பு அறுத்து -நமக்கு வழங்கி –
ஞான ஒளி நாம் பெரும் படி -செய்து அருளினார் அன்றோ –

——————————————————

மூர்த்நா முகுந்த பத ரக்ஷிணி பிப்ரதஸ் த்வாம்
ஆவிர் மதஸ்ய ரகுவீர மதாவளஸ்ய
ஆமோதிபிஸ் ஸபதி தாநஜல ப்ரவாஹை:
லேபே சிராத் வஸுமதி ருசிரம் விலேபம்—-129-

முகுந்த பத ரக்ஷிணி -முகுந்தனுடைய பாதுகையே
மூர்த்நா பிப்ரதஸ் த்வாம்-உன்னைத் தலையாலே தாங்கியதாலேயே
ஆவிர் மதஸ்ய ரகுவீர மதாவளஸ்ய-பட்டத்து யானை யுடைய
ஆமோதிபிஸ் ஸபதி தாநஜல ப்ரவாஹை:-வாசனை மிக்கு மத ஜல வெள்ளம்
லேபே சிராத் வஸுமதி ருசிரம் விலேபம்-விரைவாக பூமியானது நிலை நிற்கும் சந்தனப் பூச்சு பெற்றாள்

ஸாத்விக அஹங்காரத்தால் பெருகும் மதம்
மும்மதத்து -இரண்டு கண்கள் பின் பகுதி –
வாசனையாய் இருக்குமே –
இனி யாவர் நிகர் அகல் ஞாலத்தில்
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் எண்ணலாமே –
அடியாருக்கு அடியாராக இருக்க -நம்முடைய மத ஜலம் -சாத்விக அஹங்காரம் -உலகுக்கே இன்பம் பயக்கும்

முகுந்தனின் பாதுகையே! அவனது திருவடிகளைக் காப்பாற்றுபவளே!
உன்னைத் தன் மீது ஏற்றிக் கொண்ட இராமனின் யானைக்கு மத ஜலம் வெகுவாகப் பெருகியது.
அந்த மத ஜலம் மிகுந்த வாசனையுடன் விளங்கிற்று.
அவை பூமி மீது சந்தனம் பூசுவது போன்று விழுந்தன.

பாதுகைகள் யானை மீது அமர்ந்தவுடன், அந்த மகிழ்ச்சியால் யானைக்கு மத நீர் பெருகி நின்றது.
அந்த மதநீரானது பூமியில் ஓடியது. இதனைக் காணும் போது சந்தனப் பூசியது போன்று உள்ளது.

ஸ்ரீ பாதுகையே சத்ருஜ்ஞயன் உன்னைத் தன் மீது கொண்டதால் அதிகமான மத ஜலத்தைப் பெருகி அதனால்
நெடு நாள்களுக்கு பின்பு அதிக காலம் நிலை நிற்கும் சந்தனப் பூக்களை செய்தது போலே ஆயிற்று –

ஆழ்வார் பரம்
ராமானுஜ முனி வேழம் மேல் அமர்ந்து -கீழ் பார்த்தோம்
உம்மைத் தலையால் தாங்கி -காரி ஸூதன் கழல் சூடிய முடியும் -கன நற் சிகை முடியும் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -பராங்குச பாத பத்மம்
இதனால் வந்த மதம் – – மாறன் பசும் தமிழ் பா ஆனந்தம் பாய் மதமாய விண்டிட –
திருவாய் மொழி அனுபவ ரசமே -மதநீர் -வெள்ளம் -பக்தி ஞானம் உள்ளிட்ட நல்ல கந்தம் நாம் பெற்றோமே –
படித்து அறிய முடியாது -சேவித்து கால ஷேபம் மூலம் ஆச்சார்யர் உபதேஸ கம்யமாகவே பெறுவோம் –

—————————————————————–

ஆஸா: ப்ரஸாதயிதும் அம்ப ததா பவத்யாம்
தைவாத் அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:—-130-

ஆஸா: ப்ரஸாதயிதும் -மக்கள் ஆசைகளை நிறைவேற்ற
அம்ப ததா பவத்யாம்-தாயே -அப்பொழுது
தைவாத் -தைவா தீ னமாக -ஆவணியில் வந்த ஐப்பசி போல் –
அகாண்ட சரதீவ ஸமுத்திதாயாம்-நீ வந்த பொழுது -சரத் காலம் -இலை உதிர் காலம் இனிமையான காலம் –
ஐப்பசி கார்த்திகை -எதிர்பாராமல் வந்தது போல் வந்தாயே –
ஸாகேத யௌவத விலோசந வாரிவாஹா:–அயோத்தியில் உள்ள இளம் பெண்கள் கூட -கண்கள் -நீரைச் சுமந்த மேகங்கள் –
ஸ்தோகாவசேஷ ஸலிலாஸ் ஸஹஸா பபூவு:-கொஞ்சம் மிச்சம் தண்ணீர் உள்ளவனாக ஆகி விட்டனவே

தாயே! பாதுகையே! இராமன் கானகம் புகுந்தவுடன் நீ அயோத்திக்கு மீண்டும் வந்தாய்.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வல்ல சரத் காலம் போன்று நீ வந்தாய்.
உன்னைக் கண்டவுடன் அயோத்தி நகரத்தில் இருந்த பெண்களின் கண்கள் என்ற மேகங்கள்,
தங்கள் மழை நீரை நிறுத்தின.

சரத் காலம் என்பது மழை நிற்கும் காலம் ஆகும்.
சரத் காலமாகிற பாதுகை மீண்டும் வந்தவுடன், பெண்களின் கண்கள் என்னும் மேகங்கள்
இராமனைப் பிரிந்து சிந்திய கண்ணீர் என்னும் மழையை நிறுத்தின என்று கருத்து.

ஸ்ரீ பாதுகையே உன்னையும் பெருமாளையும் ஏக காலத்திலேயே பிரிந்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாது
சாகேத பட்டணத்து இளம் பெண் ஜனங்கள் கண்ணீர் சொரிய ப்ரலாபித்துத் தவித்தனர் –
எதிர்பாராது வந்த சரத் காலம் போலே நீ மட்டும் திரும்பி வந்தது
அவர்கள் துக்கத்தை மட்டுப் படுத்தி விட்டது –

ஆழ்வார் பரம்
கலியுகத்தில் -ஆழ்வார் -பகவத் ஆசையை நிறைவேற்றவே -தைவ வசத்தால் திரு அவதரித்து
கிருத யுகம் வாமனன் முதல் குலம்
ராமன் -ஷத்ரியன்
கண்ணன் வைசியன்
நம்மாழ்வார் கலியுகம் -நான்காம் வர்ணம்
சேமம் குருகையோ இத்யாதி
பக்தியினால் கண்ணீர் சிந்தும்படி -ஆக்கி அருளி -மரங்களும் இரங்கும் வகை –
ஈரச் சொல் -பாகவத புராணம் ஸூ சிப்பிக்குமே இவர் அவதாரம்
வடதிசை பின்பு காட்டி -அருளிச் செயல் வாசனை இல்லாமல் -பின்பு அழகு -முன்னிலும் பின் அழகு காட்டி
வரட்டு வேதாந்திகளைத் திருத்திப் பணி கொள்ள
நமக்கு திரு முகம் காட்டி சேவை –

—————————————————————

அந்தே வஸந் அசரமஸ்ய கவேஸ் ஸ யோகீ
வந்யாந் ப்ரக்ருஹ்ய விவிதாந் உபதாவிசேஷாந்
ஆதஸ்துஷீம் ரகுகுல உசிதம் ஔபவாஹ்யம்
ப்ரத்யுஜ் ஜகாம பவதீம் பரத உபநீதாம்—-131-

அந்தே வஸந் -அதே வாஸீ சிஷ்யர்
அசரமஸ்ய கவேஸ் ஸ யோகீ-அசரம முதல் ஆதி கவி வால்மீகி –
வந்யாந் ப்ரக்ருஹ்ய விவிதாந் உபதாவிசேஷாந்–காட்டில் உள்ள பலவித உபகாரங்களை சேகரித்துக் கொண்டு வந்து
ஆதஸ்துஷீம் ரகுகுல உசிதம் ஔபவாஹ்யம்—ரகு குல மன்னர்களுக்கு ஏற்ற யானை மேல் ஏறி வந்த தேவி உம்மை
ப்ரத்யுஜ் ஜகாம பவதீம் பரத உபநீதாம்-எதிர் கொண்டு வந்து வரவேற்றார்

பாதுகையே! அனைத்துக் கவிகளுக்கும் முதன்மையானவரான வால்மீகி முனிவரின் சிஷ்யரான
பரத்வாஜ முனிவர் செய்தது என்ன?
காட்டில் கிடைத்த பலவிதமான காணிக்கைப் பொருள்களை எடுத்துக் கொண்டு –
பரதனால் அழைத்து வரப்பட்டவளும் ,
ரகு குலத்தின் அரசர்கள் மட்டுமே ஏறத் தகுதி உடைய யானையில் அமர்ந்து வந்தவளும்
ஆகிய உன்னை எதிர் கொண்டு வணங்கினார்.

ரகு வம்சத்தினர் மட்டுமே ஏறி அமர்வதற்கு உரிமையான யானை மீது பாதுகை கம்பீரமாக அமர்ந்து வந்தாள்.
ஆக இராமனுக்கு முன்பாகவே பாதுகை அந் நாட்டு யானையின் மீதும் அமர்ந்து செல்லும்படியான பெருமை பெற்றாள்.

ஸ்ரீ பாதுகையே உன்னை சத்ருஜ்ஞ்ஜயன் யானையின் மீது ஸ்ரீ பரதாழ்வான்
எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வரும் பொழுது
வால்மீகியின் சிஷ்யரான பரத்வாஜ மகரிஷி எதிர் கொண்டு வந்து
அநேக பதார்த்தங்களை சமர்ப்பித்து உன்னை சேவித்தார் –

ஆழ்வார் பரம்
விஷ்ணு சஹஸ்ர நாமம் -134 -கவி நாராயணனே ஆதி கவி –
அதிருஷ்டம் த்ருஷ்டா -அனைவரையும் பார்க்கும் – நீண்ட அப்பெரியவாய கண்கள் -ஆதி கவி இவரே
யோக நாதமுனிகள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு ஜபம் -இதுவே இவர் சமர்ப்பித்த உபகாரம்
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் -குலபதி -நாதமுனிகள் மூலம் பெறப் பெற்றோம்

—————————————————————————

மாதஸ் த்வத் ஆகமந மங்கள தர்ஸ நீநாம்
ஸாகேத பக்ஷ்மள த்ருசாம் சடுல அக்ஷி ப்ருங்கை:
ஜாதாநி தத்ர ஸஹஸா மணி பாத ரக்ஷே
வாதாய நாநி வதநைஸ் சத பத்ரி தாநி—-132-

மாதஸ் த்வத் ஆகமந மங்கள தர்ஸ நீநாம்–தாயே உன்னுடைய வருகை யாகிய மங்கள நிகழ்வைப் பார்த்துக் கொண்டு இருந்த
ஸாகேத பக்ஷ்மள த்ருசாம் சடுல அக்ஷி ப்ருங்கை:-கோசல நாட்டு பெண்களின் -அசைகின்ற கண்கள் ஆகிய வண்டுகள் –
போதரிக் கண்ணினாய் -தாமரை மலர் -பூவுக்குள் இருக்கும் வண்டு போல் –
ஜாதாநி தத்ர ஸஹஸா மணி பாத ரக்ஷே-அங்கு விரைவில்
வாதாய நாநி வதநைஸ் -முகத் தாமரையில் வண்டுகள் போன்ற கண்கள் –
சத பத்ரி தாநி- -தாமரை நிறைந்த ஜன்னல்கள் ஆயினவே

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே!
அயோத்தி நகரத்திற்குள் வருகை தந்த உனது வரவைத் திருமணம் போன்று,
மங்களகரமான நிகழ்வாகவே கண்டார்கள். யார்?
அந்த நகரத்தின் பெண்கள், தங்கள் மாளிகைகளின் ஜன்னல்கள் வழியே கண்டனர்.
அவர்கள் முகம் உன்னைக் கண்டதும் மலர்ந்தன. இதனைக் காண்பதற்கு – எவ்வாறு இருந்தது என்றால்,
ஜன்னல் தோறும் தாமரை பூத்தது போன்று இருந்தன.
அவர்களது கண்கள், அந்த மலர்களின் மொய்க்கும் வண்டுகள் போன்று விளங்கின.

பாதுகைகள் வருவதை அந்த நகரத்தின் பெண்கள் தங்களது மாளிகைகயின் ஜன்னல்கள் வழியே பார்த்தனர்.
அவர்களது முகம் தாமரை போன்று மலர்ந்தன.
அந்த முகத்தில் உள்ள அவர்களது கண்கள், முகமாகிய தாமரையை மொய்க்கும் வண்டுகள் போன்று காணப்பட்டன.
இப்படியாக ஒவ்வொரு மாளிகையின் ஜன்னல்களிலும் தாமரை மலர்ந்தது போன்று இருந்தது.

ஸ்ரீ பாதுகையே நீ எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ அயோத்யா நகரத்து பெண் மணிகள்
ஜன்னல்கள் வழியாக உன்னை தர்சித்த போது
அங்கு அவர்கள் அழகிய முகங்கள் தாமரைகள் போலவும்
அலை பாயும் அவர்கள் கரு விழிகள் வண்டுகள் போலவும் தோன்றின –

ஆழ்வார் பரம்
நீர் பூமியில் அவதரித்தது மங்களகரமான -நிகழ்வு
பெண்கள் போன்ற அடியார்கள் -அநந்யார்ஹ சேஷ பூதர்கள் –
பாரதந்தர்ய காஷ்டை-மணிவல்லிப்பேச்சு வந்தேறி இல்லையே
கண்கள் -முகம் -தாமரை -விகஸிக்க -ஞானம் மலர்ந்து -உள்ளமாகிய ஜன்னலில் ஞானம் மலர்ந்து
தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த்தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே.–சடகோபர் அந்தாதி 2-

முன்பு ஸூர்ய குல சந்த்ர குல -சுடர்கள்-இரண்டு நமது பிறவித் துன்பங்களைத் தீர்க்கும்
இரண்டு தாமரைத் திருவடிகள்
திருவாய் மொழி அருளிச் செய்த பின்பு மூன்றாயினவே-

பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளி வரும் வில்லாளன் -ராம திவாகரன்
அச்யுத பானு
பண்டு -த்ரேதா யுகம்-த்வாபர யுகம்
பின்பு கலியுகம் – -43-நாள் ஆவிர்பவித்தார் அன்றோ -வகுள பூஷண பாஸ்கரர் –

அச்சம் தருவதால் வினையை இருள் என்கிறார் இதில்
இடர் இரண்டு -புண்ய பாப வினைகள்

முதல் இரண்டு சுடர்களுக்கும் விசேஷணம் இல்லாமலும்
திருவாய் மொழி சுடருக்கு மட்டும் –
துகள் தீர்ந்துலகத்து-இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன-என்பதால்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆச்சார்ய ஹிருதயம்–83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி
அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )

திருவாய் மொழியே மூன்றாவது சுடராகி பிறவி முடித்து -திருவடி சேர்க்கும் –
அருகிலே இருந்து களங்கம் இல்லாமல் பவித்ரம் மிக்கு -அஞ்ஞானம் போக்கி –
தாமரை அல்லி மலர வைக்கும் அவை போல் இல்லையே -ஞான ஒளி அன்றோ
பகல் வந்தாலும் மீண்டும் இருள் வருமே -அது போல் இல்லை –
நிரந்தரமாக -மீண்டு வராத அந்தமில் பேர் இன்பம் அளிக்குமே –

—————————————————————-

ஸாகேத ஸீம்நி பவதீ மணி பாத ரக்ஷே
மாங்கல்ய லாஜ நிகரைர் அவகீர்யமாணா:
கீர்த்தி ஸ்வயம் வரபதேர் பரதஸ்ய காலே
வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே—-133-

ஸாகேத ஸீம்நி பவதீ மணி பாத ரக்ஷே–பொன் போல் சிவந்த -அக்னி போல் இருக்க -நீ அயோத்தியின் எல்லையில் வந்த சமயம்
மாங்கல்ய லாஜ நிகரைர் அவகீர்யமாணா:–உன் மேல் இறைக்க -துதிக்க -பூவைத் தூவுவது போல் –
நுண் மணல் தூவி -போல் -லாஜ ஹோமம் -பொறி இட்டு -பெண் கையால் செய்யும் ஒரே ஹோமம் இதுவே
கீர்த்தி ஸ்வயம் வரபதேர் பரதஸ்ய காலே-புகழ் பெற்ற பரதாழ்வானுக்கு கீர்த்தி உடன் திருமணம் -கவிக்கண் –
கீர்த்தியே இவனைத் தேர்ந்து எடுத்த ஸ்வயம்வரம் –
வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே-திருமணத்தில் அக்னியின் ஜ்வாலை போல் ஒளி வீசித் திகழ்ந்தாயே –

எங்கள் தாய் போன்ற பாதுகையே! நீ பரதனுடன் அயோத்திக்குள் வந்தாய்.
அப்போது அங்கிருந்த பெண்கள்,
மங்களத்தின் அடையாளமாக பொரியை வாரி உன் மீது இரைத்தனர்.
அவை உன் மீது விழுந்தவுடன்,
உன்னில் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக் கற்கள் காரணமாக அக்னி போன்று தோன்றின.
இதனைக் காண்பதற்கு எவ்விதம் இருந்தது –
கீர்த்தி என்ற பெண் தனது கணவனான பரதனுடன் வந்தது போன்று இருந்தது.

லாஜ ஹோமம் என்றால் பொரியைத் தூவி நிகழ்த்துவதாகும்.
பரதனுடன் பாதுகை மட்டும் வரவில்லை;
பாதுகை வந்த காரணத்தால் பரதனுடன் கீர்த்தியும் சேர்ந்தே நாட்டிற்குள் வந்ததாகக் கருத்து.

ஸ்ரீ பாதுகையே -நீ ஸ்ரீ அயோத்தியில் நுழைந்த போது மக்கள் பொரியை வாரி இறைத்து
மங்களமாக உன்னை வரவேற்றனர்
சிகப்பு கற்கள் இழைத்த உன் மேல் பொரி விழுந்து சுற்றிலும் தென் பட்டது –
அதனால் ஸ்ரீ பரதாழ்வான் உடைய விவாஹ காலத்தில் லாஜ ஹோமம் செய்த போது
இருந்த அக்னி சிகை போலே நீ விளங்குகிறாய் –

ஆழ்வார் பரம்
நாத முனிகளுக்கு அனுக்ரஹம் -புகழ் கிடைக்கும் படி
அருளிச் செயல் மீட்ட புகழ் இவருக்கே –
அக்னி ஜ்யோதி வடிவமாக அருள் வழங்கி
மதுரகவி ஆழ்வாருக்கும் ஜ்யோதி கண்டே வடக்கே இருந்து திரும்பினார்
ஆழ்வாரை அக்னி ஜ்வாலை என்னலாம் –

———————————————————

சத்ர இந்து மண்டலவதீ மணி பாதுகே த்வம்
வ்யாதூத சாமர கலாப சர ப்ரஸூநா
ஸத்யோ பபூவித ஸம்க்ர விகாஸ ஹேது:
ஸாகேத பௌரவநிதா நயந உத்பலாநாம்—-134–

சத்ர இந்து மண்டலவதீ மணி பாதுகே த்வம்– வெண் கொற்றக் குடை -சந்த்ர மண்டலம் போல்
வ்யாதூத சாமர கலாப சர ப்ரஸூநா- நெற் கதிர்கள் போல் சாமரம் வீசினார்கள்
ஸத்யோ பபூவித ஸம்க்ர விகாஸ ஹேது:
ஸாகேத பௌரவநிதா நயந உத்பலாநாம்-கண்களே முழுமையாக மலர

சரத்கால சந்திரன் நன்றாக ஒளி வீசும்
மந்த மாருதம் வீசும்
சீரார் செந்நெல் கவரி வீசும்
கரு நெய்தல் பூ மலரும்
சித்திரை மாதம் பெருமாள் கிளம்பி -பாதுகா தேவி வைகாசியில் வந்தாலும் சரத்காலம் மீண்டு வந்தது போல்
வெண் கொற்றக்கொடை போல் சந்த்ர மண்டல ஒளி
சாமரம் வீசினார்கள் நெற் கதிர்கள் போல்
பெண்கள் கண்கள் நீலோத்பலம் -கரு நெய்தல் பூ போல் இருந்தனவே –

இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! வெண் குடைகள் என்னும் சந்த்ர மண்டலம் உடையவளும்,
வரிசையாக வீசப்படும் சாமரம் என்னும் நாணல் மலர்களை உடையவளும் ஆக நீ அயோத்திக்கு வந்தாய்.
இப்படியாக நீ அங்கிருந்த பெண்களின் நெய்தல் மலர் போன்ற கண்கள் மகிழ்வதற்குக் காரணமானாய்.

அயோத்தி நகரத்திற்கு வந்த போது உனக்குப் பிடிக்கப்பட்டிருந்த வெண்மையான குடைகளைக் கண்டால்
சந்திரன் போன்று இருந்தன.
உனக்கு வீசப்பட்ட சாமரங்கள் அனைத்தும் நாணல் மலர்கள் போன்று இருந்தன.
நீ சரத் காலம் போன்று காணப்பட்டாய்.
இப்படியாக நீ வந்தபோது – உன்னைக் கண்ட அயோத்தியில் இருந்த பெண்களின் கண்கள்,
கரு நெய்தல் மலர்கள் போன்று மலர்ந்தன.

ஸ்ரீ பாதுகையே ஸ்ரீ அயோத்யா பட்டணத்தில் உன் பிரவேசம் கண்டு பெண்களுடைய கண்கள்
கரு நெய்தல் போலே விகசித்து மலர்ந்தன
நீ சரத் காலமாகவும் விளங்கினாய் –
வெண் குடை சந்திரனைப் போலவும்- சாமரங்கள் நாணல் பூக்கள் போலவும் விளங்கின –

ஆழ்வார் பரம்
சரத் காலம் போல் இவர் அவதாரமும்
வேத சாரமான ஞானம் சந்திரன் ஒளி
நாணல் புல் -ரோமங்கள் -புல்லரிக்குமே -மயிர் தாரைகள் பொடிக்கும்
கண்கள் நீர் மல்கி கண்ணீர் பெருகுமே -ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும் –

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே.– சடகோபர் அந்தாதி –33

உயிர்த் தாரையில் புக்குஉ று –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————————————————-

சரத்காலம் போல் மட்டும் அல்ல -பெருமாள் உடனே ஒப்புமை இதில்
ஆச்சார்யர் திருப் பாதுகை -அவரே எழுந்து அருளி இருப்பதாக நாமும் திருவாராதனம் செய்கிறோம்

இச்சா மோஹி மஹா பாஹூம் ரகுவீரம் மஹா பலம்
கஜேந மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம் -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப் பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –

ப்ரை க்ஷந்த வக்த்ரை: மணி பாத ரக்ஷே
சத்ருஞ்ஜயம் சைலம் இவ அதி ரூடாம்
ராமாபிதாந ப்ரதிபந்ந ஹர்ஷை:
உத்தாநிதை: உத்தர கோஸலாஸ் த்வாம்—-135-

ப்ரை க்ஷந்த வக்த்ரை: -முகத்தால் பார்த்தார்கள்
மணி பாத ரக்ஷே
சத்ருஞ்ஜயம் சைலம் இவ -மலை போன்ற பட்டத்து யானை மேலே
அதி ரூடாம்-எழுந்து அருளி இருந்த உன்னை
ராமாபிதாந ப்ரதிபந்ந ஹர்ஷை:-பெருமாளே என்று கருதி மகிழ்ந்து
உத்தாநிதை: உத்தர கோஸலாஸ் த்வாம்—உத்தர கோசல தேச மக்கள் உயர்த்தி முகத்தால்
அண்ணாந்து உன்னையே பார்த்தார்கள்

இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே!
சத்ருஞ்ஜயம் என்று அழைக்கப்பட்ட மலை போன்ற யானை மீது அமர்ந்து வந்த உன்னை,
வடக்குக் கோஸல தேசத்தில் உள்ளவர்கள் இராமன் என்றே பார்த்தனர்.
மிகுந்த மகிழ்வுடன் தங்கள் தலை நிமிர்த்தி உன்னைக் கண்டனர்.

மலை போன்ற யானை மீது அமர்ந்து நீ வந்தாய்.
இப்படி வந்த உன்னைக் கோஸல தேசத்தில் இருந்த அனைவரும் நோக்கினார்கள்.
அவர்கள் உன்னை இராமனாகவே கண்டனர்.
அவர்கள் முகம் இராமனைக் கண்டது போன்றே மகிழ்ந்து காணப்பட்டது.

ஸ்ரீ பாதுகையே -நீ சத்ருஜ்ஞயன் பட்டத்து யானையின் மீது ஏறி வந்த போது
திரு அயோதியை மக்கள் பெருமாளே நேரிலே வந்ததாகக் கருதி
மிகுந்த முக மலர்ச்சி யுடனே சந்தோஷமாக உன்னைப் பார்த்தார்கள் –

ஆழ்வார் பரம்
ஆச்சார்யர் மூலம்
ராமானுஜ முனி வேழம் மூலமே ஆழ்வார் கடாக்ஷம் பெறுகிறோம்
காரி ஸூ தன் கழல் சூடி
மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
சேமம் குருகையோ -அவனே -என்றும் அவனிலும் அதிகமாக –
அபிநவ தசாவதாரம்
ஸஸ்த்ர பாணி இல்லாமல் ஸாஸ்த்ர பாணி
உறங்கும் பெருமாளே உலாவும் பெருமாள்
ஆசார்யரை பெருமாளுக்கு சாம்யமாகவே கருத வேண்டும் என்றவாறு –

——————————————————————

சீதாப் பிராட்டிக்கு சாம்யம் இதில் –
கல்லும் முள்ளும் படாமல் அக்ரே செல்வேன்
பூமி தேவியைக் கொஞ்சுவது போல் நளினம்
இடை சிறுத்து -இருவருக்கும் -இப்படி பல சாம்யம்
நமக்கு அநுக்ரஹம் செய்யவே

த்ரஷ்டும் ததா ராகவ பாத ரக்ஷே
ஸீதாம் இவ த்வாம் விநிவர்த்த மாநாம்
ஆஸந் அயோத்யா புர ஸுந்தரீணாம்
ஔத்ஸுக்ய லோலாநி விலோசநாநி—-136-

த்ரஷ்டும் ததா ராகவ பாத ரக்ஷே-அப்போது -உன்னைப்பார்த்து
ஸீதாம் இவ த்வாம் விநிவர்த்த மாநாம்-நாடு திரும்பிய சீதாபிராட்டி என்றே எண்ணி
ஆஸந் அயோத்யா புர ஸுந்தரீணாம்-பெண்கள் கண்கள்
ஔத்ஸுக்ய லோலாநி விலோசநாநி–உத்ஸாகம் மிக்கு -ஆசையுடன் பார்த்தார்கள் –

இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
நீ மீண்டும் அயோத்திக்கு வந்த போது அங்கிருந்த பெண்களுக்குச் சீதையைப் போன்றே தோன்றினாய்.
உன்னை இவ்விதம் காண்பதற்கு அந்தப் பெண்களின் கண்கள் ஆசை கொண்டு, அங்கும் இங்கும் அசைந்தன.

உத்தமமான பெண்கள் வீதி வழியாகச் செல்லும்போது அவர்களைக் காண்பதற்கு
அனைத்துப் பெண்களும் போட்டியிடுவது இயல்பே ஆகும்.
இங்கு பாதுகா தேவி அல்லவோ செல்கிறாள்? சீதையைக் காட்டிலும் உயர்ந்தவள் ஆயிற்றே!
ஆக இவளைக் காண்பதற்குப் பெண்கள் கூடி நின்றதில் வியப்பில்லை.

ஸ்ரீ பாதுகையே திரு அயோத்யா பெண்கள் ஸ்ரீ சீதா பிராட்டியைப் பார்ப்பது போலவே
மிகவும் ஆவல் கொண்டவர்களாகக் கண்களை சிவந்து உன்னைப் பார்க்க முற்பட்டனர் –

ஆழ்வார் பரம்
ஆசார்யர் பிராட்டிக்கு சமம் என்றவாறு –
பின்னை கொல் நில மா மகள் கொல் -இத்யாதி –
அநந்யார்ஹ சேஷத்வம் –
அநந்ய சரண்யத்வம் –
அநந்ய போக்யத்வம்
அன்வயத்தில் தரித்தும்
வியதிரேகத்தில் வருந்தியும் -தரியேன் இனி
ஸாம்ய ஷட்கம்

—————————————————————

அயோத்தியை மத்திய பகுதிக்கு எழுந்து அருளப்பண்ணிய பின்பே
நந்திக்ராமத்தில் எழுந்து அருளி இருந்தான்
அப்பொழுது உள்ள காட்ஷி விவரணம் இதில்
ப்ரணவாகார விமானத்துக்குள் உள்ள ஸ்ரீ பாதுகா தேவி ஒப்புமை –

கிரந்த அக்ஷரம் போல் இருக்குமே –
விபவம் -பின்னானாருக்கு -தேசம் காலம் ஞானம் பக்தி அனைத்திலும் பின் பட்டவர்கள் நாம் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்னும் –
கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே என்னும் -இத்யாதி

அன்று பாதுகா தேவி எழுந்து அருளியவற்றை சேவிக்காத குறை தீர
திருவரங்கத்தில் கண்டு களிக்கலாமே
இதில் அர்ச்சாவதார ப்ராதான்யம் காட்டி ஒப்புமை

ஆஸ்த்தாய தத்ர ஸ்புட பிந்து நாதம்
ஸ்தம்பேரமம் தாத்ருஸ ஸந்நிவேசம்
அதசயஸ் த்வம் புரமத்யபாகே
பாதாவநி த்வத் ப்ரணவாஸ்ர யத்வம்—-137-

ஆஸ்த்தாய தத்ர ஸ்புட பிந்து நாதம்-அங்கு பிரகாசிக்கும் வண்ணம் தீட்டி -ஒலி உடன்
ஸ்தம்பேரமம் தாத்ருஸ ஸந்நிவேசம்-அப்படிப்பட்ட லக்ஷணங்கள் அனைத்தும் நிரம்பிய பட்டத்து யானை
அதசயஸ் த்வம் புரமத்யபாகே-நீ அயோத்யா மத்யத்திலே
பாதாவநி த்வத் ப்ரணவாஸ்ர யத்வம்-திருவடி ரக்ஷிக்கும் ஸ்ரீ பாதுகையே -பிரணவ வடிவுடன் –
ப்ரணவாகார விமானம் -உள்ளே இருப்பது போல் – வெளிப்படுத்தி அருளினாய்

எம்பெருமானின் திருவடியைக் காப்பாற்றும் பாதுகையே!
நீ கம்பீரமாக யானை மீது அமர்ந்து அயோத்தியின் நடுவில் வந்து நின்றாய்.
அந்த யானை எப்படி இருந்தது –
பிந்து என்ற புள்ளிகள் மிகவும் நேர்த்தியாகவும்,
ஸ்வரம் போன்று இனிய பிளிறுதலை உடையதுமாக இருந்தது.
இவ்விதமாக நீ ப்ரணவாகார விமானத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாய்.

ப்ரணவாகாரம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் விமானம் ஆகும்.
அதனைப் போன்று இங்கு யானை விளங்கிற்று.
அதில் கம்பீரமாகப் பாதுகை வீற்றிருந்தாள்.
அங்கு ப்ரணவாகாரம் போன்ற யானையில் வீற்றிருந்தாள்,
இங்கு (திருவரங்கத்தில்) ப்ரணவாகாரத்தின் உள்ளே கண் வளரும் அழகிய மணவாளனின் திருவடிகளில் வீற்றிருக்கிறாள்.

ஸ்ரீ பாதுகையே நன்கு அலங்கரிக்கப் பட்ட பட்டத்து யானை மீது பிரணவாகராமான ஸ்ரீ ரங்க விமானத்தில்
பெருமாள் எழுந்து அருளி இருப்பது போலவே தர்சனம் தந்தாயே –

ஆழ்வார் பரம்
பிரணவ அர்த்தங்களையே -திருவாய் மொழி
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இதுவே முக்கியமான அடையாளம் –
ஸ்ரீ யபதிதவம் அவனுக்குப் போல் அநந்யார்ஹ சேஷத்வம் -ஜீவாத்மாவுக்கு –
அடியார் அடியார் தம் அடியார் –அடியோங்களே -ததீய பர்யந்தம் -காட்டி அருளினார்
ராமானுஜ முனி வேழம் -கம்பீரமாக மதம் கொண்ட யானை -ஆனந்த வெள்ளம் -ஸத்ருஞ்ஞன்-யானை ஸ்தானம்
ஸ்ரீ பாஷ்யம் -இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விட்டு அருளினார் –
ஸ்ரீ பாஷ்யத்தின் மதியத்தில்-ப்ரணவாராகம் -விளங்கும் படி -இதுவே மத்யே
நடாதூர் அம்மாள் -ஸூத பிரகாசிகை -காத்து அருளின தேசிகர்

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே

அப்புள்ளார் -நடாதூர் அம்மாள் திருக்குமாரர் -இவர் சிஷ்யர் தேசிகர்
தேவராஜன்- குமாரர் தான் -வரத குரு -பின்பு -நடாதூர் அம்மாள் ஆனார்
அகில புவனம் -நிகில சகல ஏன் இல்லை
எங்கள் ஆழ்வான் இடம் போகச் சொல்ல
நான் செத்து வா
அடியேன் வரதன்
கொல்லம் கொண்டான் அருகில் ஸ்ரீ வில்லி புத்தூர் அருகில் ஸ்ரீ பாஷ்யம் காலஷேபம்
அகில -ஸ்ரீ ரெங்கம் பொங்கும் பிரிவால் -ஸ்ரீ ரெங்க விமானம் வடிவில் அமைத்தார்
இதுவே ரஹஸ்யம்
அ -தொடக்கி -2-2- உகாரம் -ஸமஞ்ஜசம் -மகாரம் –
இந்த அர்த்தங்கள் உள் வாங்கி இந்த மங்கள ஸ்லோகம்
ரெங்கனே சேஷி
நாம் சேஷ பூதர் -அறிகிறோம்
ஆதி சேஷன் மேல் கண் வளர்ந்து அருளி காட்டி அருளுகிறார் –

—————————————————————

உருவகமாக -ஆண் ஸிம்ஹம் -பெண் ஸிம்ஹம் -குட்டி ஸிம்ஹம் –
ஆண் ஸிம்ஹம் யானை உடன் சண்டைக்குப் போக -மீள
குகை அயோத்தியை
யானை ராவணன்
ராமன் -ராகவ ஸிம்ஹம்
பரத்தாழ்வான் -ஸிம்ஹ குட்டி
பாதுகா தேவி பெண் ஸிம்ஹம்

தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே
விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகு ஸிஹ்மே வந புவம்
ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ
நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்—-138-

தசக்ரீவ ஸ்தம்பேரம தளந துர்த்தாந்த ஹ்ருதயே-பிளக்க வேண்டும் என்று
விஹார ஸ்வாச்சந்த்யாத் விசதி ரகு ஸிஹ்மே வந புவம் -இஷ்டப்படி வேட்டையாட காட்டுக்குள்ளே போக
ஸ்வ வாத்ஸல்ய க்ரோடீக்ருத பரத சாபேவ பவதீ–வாத்சல்யத்தாலே நீ குட்டியை அணைத்து –
நிராபாதம் பாதாவநி ந விஜஹௌ கோஸல குஹாம்–கோசல தேசத்துக்குள்ளே பத்திரமாக வைத்து காத்து அருளினாயே

இராவணன் என்ற யானையை அழிப்பதில் வேகம் கொண்ட சிங்கமாக
இராமன் அடர்ந்த கானகத்தில் புகுந்தான்.
நீ செய்தது என்ன? பரதன் என்ற குட்டி மீது உள்ள வாத்ஸல்யம் காரணமாக,
நீ அந்தக் குட்டியுடன் கோசல நாடு என்னும் குகைக்குத் திரும்பி விட்டாய்.

ஆண் சிங்கமாகிய இராமன் வெளியே கிளம்பியவுடன், பெண் சிங்கமாகிய பாதுகை செய்தது என்ன?
தனது குட்டிச் சிங்கமான பரதனைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு,
அயோத்தி என்ற தனது குகைக்குள் புகுந்தாள்.

ஸ்ரீ பாதுகையே -பெருமாள் ஆகிற ஆண் சிங்கம் ராவணன் என்கிற மத யானையைப் பிளக்க
காட்டுக்கு புறப்பட்டவுடன்
பெண் சிங்கம் போன்ற -நீ குட்டி யாகிற ஸ்ரீ பரதாழ்வான் உடன்
கோசல குகைக்குள் வந்து தங்கி விட்டாய் –

ஆழ்வார் பரம்
நாராயணன் தந்தை
சம்சாரம் குகை
ஆழ்வார் -அன்னையாய் -நம்மில் ஒருவராக தேடி வந்து
தாய் பாசத்துடன் அவன் திருவடிகளில் சேர்த்து அருளுகிறார் –

——————————————————————–

கைகேயீ வரதாந துர்த்திந நிராலோகஸ்ய லோகஸ்ய யத்
த்ராணார்த்தம் பரதேந பவ்ய மநஸா ஸாகேதம் ஆநீயத
ராம த்யாக ஸஹைர ஸஹ்ய விரஹம் ரங்கக்ஷி தீந்த்ரஸ்ய தத்
பாத த்ராணாம் அநந்ய தந்த்ர பணி தேர் ஆபீடம் இடீமஹி—-139-

கைகேயீ வரதாந துர்த்திந நிராலோகஸ்ய லோகஸ்ய யத்-வரம் தந்த கெட்ட நாள் -ஸூர்யனே மறைந்து
ராமன் காட்டுக்கு போவதை பொறுக்காமல் –
இருள் நாள் தானே -இருண்ட உலகுக்கு
த்ராணார்த்தம் -ஒளி தந்து காக்கவே
பரதேந பவ்ய மநஸா ஸாகேதம் ஆநீயத-அயோத்யைக்கு மீண்டு வந்து
ராம த்யாக ஸஹைர ஸஹ்ய விரஹம்–பெருமாளை பிரிந்தாலும் -பாதுகா தேவியைப் பிரிய முடியாமல் உள்ள அயோத்யா மக்களுக்கு
ரங்கக்ஷி தீந்த்ரஸ்ய தத் பாத த்ராணாம் அநந்ய தந்த்ர பணி தேர் ஆபீடம் இடீமஹி-யாராலும் எழுதப்படாத
வேதம் -தலைக்கு -உபநிஷத்துக்கு அலங்காரமாக இருக்கும் ஸ்ரீ ரெங்கராஜனுடைய பாதுகையை வணங்குகிறேன்

எந்த ஒரு பாதுகையானது – தசரதன் கைகேயிக்கு வரம் கொடுத்த நாளன்று துக்கம் என்ற இருள் மூடிய உலகுக்காக,
நல்ல மனம் படைத்த பரதனால் மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரப்பட்டதோ;
இராமனைப் பிரிய நேரிட்டாலும் சகித்துக் கொண்ட மக்களால், இதன் பிரிவைத் தாங்க இயலாமல் உள்ளனவோ;
யாராலும் இயற்றப்படாமல் உள்ள வேதங்களின் தலைக்கு மகுடம் போன்று உள்ளதும் ஆகிய –
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றியபடி இருக்கும் பாதுகையை நாங்கள் ஸ்துதிக்கிறோம்.

இங்கு பாதுகையின் பலவிதமான மேன்மையைப் பட்டியல் இடுகிறார். இராமனின் பிரிவைத் தாங்க முடிந்த அயோத்தி மக்களால்,
பாதுகையின் பிரிவைத் தாங்க இயலவில்லை என்னும் இந்தக் கருத்தை சற்றே மாற்றி –
அயோத்தி மக்களைப் பிரிந்து இராமனால் இருக்க முடிந்தது, ஆனால் பாதுகையால் இருக்க முடியவில்லை – என்று கொள்ளலாம் –
இதன் மூலம் பாதுகையின் வாத்ஸல்யத்தை உணரலாம்.

கைகேயி கேட்ட வரத்தின் பொருட்டு பெருமாள் ஸ்ரீ பாதுகையே உன்னுடன் ஸ்ரீ தண்ட காரண்யம் போன போது
மகத்தான இருள் ஸ்ரீ அயோதியை சூழ்ந்து கொண்டது –
நீ நல்ல மனசால் ஸ்ரீ பரதாழ்வான் உடன் திரும்பியதும் திரு அயோதியை ரஷிக்கப் பட்டது
வேதங்களுக்கு அலங்காரமான உன்னை ஸ்துதிப்போமாக-
பெருமாள் பிரிவையும் தாங்கிக் கொண்ட திரு அயோத்யா மக்கள் உனது பிரிவை
தாங்க முடிய வில்லையே என்றால் உனது பிரபாவம் தான் என்னே –

ஆழ்வார் பரம்
கலி யுகம் -ஞானம் ஸூர்யன் மறைந்த நாளில்
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் நித்தியமாக சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் -அப்பா இருந்தாலும் செய்ய வேண்டும்
செய்பவரை இகழ்வார்களே
வகுள பூஷண பாஸ்கரர்
நாதமுனி மூலம் -தமிழ் மறை தந்த வள்ளல் -மீட்டுக் கொடுக்க
ஆழ்வாரை விட்டுப் பிரியாமல் -சடகோபர் அந்தாதி –
கண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ பெற்றிலேனே போல் கம்பர் ஆழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ பெற்றிலேனே
கண்ணி நுண் சிறுத்தாம்பு -இதுவே அருளிச் செயல்களின் உபநிஷத் ஸ்தானம் பி-
இதுக்கு அலங்காரம் ஆழ்வார் தானே
ரெங்கநாதன் பாத ரக்ஷை ஆழ்வார் தானே –

———————————————————————————-

அனுஷ்டுப் தொடங்கி
ஆர்யாவில் முடித்து

ஸமுபஸ்திதே ப்ரதோஷே
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்
அபஜத புநஸ் ஜந பதம்
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ—-140-

ஸமுபஸ்திதே ப்ரதோஷே–அஸ்தமனம் போல் இருந்த
ஸஹஸா விநிவ்ருத்ய சித்ரகூட வநாத்-விரைவாகப் புறப்பட்டு
அபஜத புநஸ் ஜந பதம்-மீண்டும் நாட்டை அடைந்து
வத்ஸம் தேநு: இவ பாதுகே பவதீ-பசுமாடு கன்றுகளைத் தேடி அஸ்தமனம் வருமா போல்
கருணையால் வந்தாயே -இதுவே பிரதி பிரஸ்தானம்

பாதுகையே! மேய்வதற்காகச் செல்லும் பசுவானது அஸ்தமன நேரத்தில் கன்றுக் குட்டியிடம் வந்து விடுகிறது.
அது போன்று நாட்டிற்கும் பரதனுக்கும் கவலை ஏற்பட்ட போது,
நீ சித்திர கூடத்தில் இருந்து மிகவும் விரைவாக கோசலத்திற்குத் திரும்பினாய் போலும்.

தாய்ப் பசுவானது மேய்ச்சலுக்குக் கிளம்பிச் சென்று, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில்,
கன்றின் ஞாபகம் உண்டாகி விட, விரைவாக கன்றிடம் ஓடி வரும்.
இது போன்று பாதுகைக்கு அயோத்தியின் நினைவு வந்தது போலும்.
ஆகையால் மிகவும் விரைவாக அயோத்திக்கு ஓடி வந்தாள்.

ஸ்ரீ பாதுகையே மேய்ச்சல்க்குப் போன பசு மாடுகள் அஸ்தமித்ததும் கொட்டிலுக்கு வருவது போலே
ஜனங்கள் இடம் தாய்ப் பாசம் கொண்ட நீ சித்ர கூடத்தில் நின்றும் திரு அயோத்யைக்கு திரும்பி விட்டாயே –

ஆழ்வார் பரம்
ஞானம் அறியாமை
ஞான ஒளி -வகுள பூஷண பாஸ்கரர்
கலி –42 நாள் வந்தார்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading