பஜாம: பாதுகே யாப்யாம் பரதஸ்ய அக்ரஜஸ் ததா
ப்ராய: ப்ரதி ப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—-101-
பாதுகே -இரட்டை -இணை
பஜாம: -வணங்குகிறோம்
யாப்யாம் பரதஸ்ய அக்ரஜஸ்
ததா-அப்போது
ப்ராய: -perhaps அநேகமாக
ப்ரதி ப்ரயாணாய –அன்றே திரும்புவதாக
யாப்யாம் ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—-அதே பாதுகைகளை பிரஸ்தநிகமாக தந்து அருளினான்
அழிலும் தொழுலிம் உருக்காட்டான் -பிரதிநிதியாக ஸத் ஆச்சார்யாரை அனுப்பு அருளுவான் -இத்தையே இது காட்டும்
பாதுகா தேவியே ஆச்சார்யர்
சம்பந்தம் பெற்றதும் பெருமாளே தானே பரதனை அனுக்ரஹிக்க பின்பு வந்தானே –
ததா -பிராரத்த பொழுது -லோக ரக்ஷணம் தனது என்று -ததா -என்பதற்கே இந்த பந்ததி ஸ்லோகங்கள் எல்லாம்
ப்ராய: ப்ரதி ப்ரயாணாய ப்ராஸ்தாநிகம் அகல்பயத்—திரும்பி வரும் வரை விஸ்வஸித்து அனைவரும் இருக்க
பர ஸ்தானம் போகிறோம் -பெருமாள் பட்டாபிஷேகம் பண்ண இங்கே பரஸ்தானம் –
சமர்ப்பணம் ஆகிக் கொண்டு -அலங்காரம் -திருமலையில் பரிபாஷை –
திரு ஆபரணங்கள் அவனை அடைந்து பெருமை -பரதனுக்கு கொடுக்கிறார் இங்கு-
பாதுகையே பெருமாள் -தன்னை விட ஸ்ரேஷ்டமாக பெருமாள் எண்ணிக் கொள்கிறார் –
மகுட ஸ்தானத்தில் இந்த பாதுகை -ஸீரோ பூஷணம் இது -சமர்ப்பணம்
பரதனின் தமையனான இராமன், தான் அயோத்திக்கு மீண்டும் வருவதற்கான ஏற்பாடுகளை,
பரதனுக்குத் தனது பாதுகையை அளித்ததன் மூலம் செய்தான்.
அப்படிப்பட்ட பாதுகைக்கு எங்கள் த்யானம் உரித்தாக வேண்டும்.
ஒருவன் ஊருக்குக் கிளம்பும் போது, அன்று ஏதோ ஒரு காரணத்தினால் புறப்படாமல் இருந்து விடக்கூடும்.
மீண்டும் ஊருக்குச் செல்ல வேறு நல்ல நாள் கிட்டாமல் போகக்கூடும்.
ஆகவே அவன் செய்வது – தன்னுடைய முக்கியமான பொருள்களை, தான் முன்பே குறித்திருந்த நாளில்,
வேறு இடத்தில் வைத்து விட்டு வந்து விடுவான்.
பின்னர் வேறு ஒரு நாளில், நாள்-கிழமை ஆராயாமல் புறப்பட்டு விடுவான்.
இவ் விதம் இராமன் தனக்கு முன்பாக பாதுகையை அயோத்திக்கு மீண்டும் அனுப்பினான் என்றார்.
ஸ்ரீ பாதுகையே -பெருமாள் தாம் வரும் வரை உன்னை அன்றோ பரஸ்தானமாக அருளினார்
உன்னை நாம் பூஜிக்கிறோம் –
ஜீவாத்மாக்களுக்கு எம்பெருமான் திருவடி அடையும் வரை இவ்வுலகில் தனது பிரதிநிதியாக
ஆசார்யரை நியமித்து அருளுகிறான் –
ஆழ்வார் பரம்
ஸாஸ்த்ரம் எனது நம்மைத்திருத்த
ஸூத்த ஸீமா
திருவாய் மொழி நெஞ்சில் நிறைய
தானே பிராட்டிமார் நித்யர் திவ்ய தேசங்கள் உடன் வந்து பேரேன் என்று குடி புகுவான் –
———————————————————-
ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்
பௌராந் ச பாதரஸிகாந் ப்ருதிவீம் ச ரக்தாம்
த்வாம் ஏவ ஹந்த சரணாவநி ஸம்ப்ரயாஸ்யந்
ஆலம்பத ப்ரதமம் உத்தர கோஸலேந்த்ர:—102-
ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம்-ரகுகுல அரசர் ராஜ்ய பட்டம் விட்டு விட்டு
பௌராந் ச பாத ரஸிகாந்-விஹாய- -திருவடிகளை விரும்பும் அயோத்யா மக்களையும் விட்டு விட்டு
ப்ருதிவீம் ச ரக்தாம்- விஹாய-அன்பு மிக்க நில மங்கையையும் விட்டு விட்டு
ஹந்த -wow -ஆஹா -வியப்பு
த்வாம் ஏவ –உன்னை மட்டுமே
சரணாவநி ஸம்ப்ரயாஸ்யந்-திருவடிகளை அளித்தது
ஆலம்பத ப்ரதமம் -முதலில் அணிந்து கொண்டு
உத்தர கோஸலேந்த்ர:—வடக்கு கோசல -தேசம் -வளம் மிக்கு இருந்தாலும் உன்னையே மிக்க செல்வமாக கருதி –
ராஜ்யம் விஹாய ரகுவம்ச மஹீ பதீநாம் தனது ராஜ்ஜியம் விட்டார் –
எப்படிப் பட்ட ராஜ்ஜியம் —ரகு வம்ச மஹீ பதி நாம் -அதற்கு இட்டு பிறந்த –
கைங்கர்ய சாம்ராஜ்யம் விட்டு நாம் உண்டியே உடையே போகிறோமே
பௌராந் ச பாதரஸிகாந் ப்ருதிவீம் ச ரக்தாம்
ராமோ ராமோ பிரஜா நாம் -சொல்கிறவர்களையும் விட்டு -திருவடியே பரம உபாதேயம் என்று இருக்கும் அயோத்யா மக்களையும் விட்டு
கல்லை ரிஷி பத்னியாக்கி -கரிக் கட்டையை ராஜ குமாரன் ஆக்கும் -பிராட்டிமார் -கூசிப் பிடிக்கும் திருவடி
ப்ருதிவீம் -அசேதனங்களும் பிரிவால் வாடுமே -மேலே மேலே உத்க்ருஷ்டமானவற்றை அருளிச் செய்கிறார்
அநுராகம் பொழியும் பிருத்வீயும் விட்டு –
இவர்களைத் தேற்றி -ஜல் ஜல் சப்தம் உடன் -பெருமாளை கூட்டிக் கொண்டு வருவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி –
த்வாம் ஏவ ஹந்த சரணாவநி சம்ப்ரயாஸ் யன் -ஆலம்பத ப்ரதமம் உத்தர கோச லேந்திர
ஹேம பாதுகை -மர உரி சாத்தி கொண்டாலும் இத்தை விடாமல் –
சரணம் என்று அடைபவர்களைக் காக்கும் திருவடிகளைக் காப்பவளே!
வடக்கில் உள்ள கோசலை நாட்டின் சக்ரவர்த்தியான இராமன் செய்து என்ன?
ரகுவம்சம் என்ற பட்டம், தனது திருவடிகளின் மீது மிகவும் அன்பு வைத்த ஜனங்கள், தனது நாடு ஆகியவற்றைத் துறந்து
காட்டிற்குச் சென்றான். ஆயினும் அவன் உன்னை விடாமல் அணிந்து கொண்டு போனான்.
அவனுக்கு உன் மீது அத்தனை ப்ரியம் போலும்.
இராமன் காட்டிற்குச் செல்லும் போது தன்னுடன் தனது படைகள் இல்லை, தனது நாட்டு மக்கள் இல்லை,
பரிவாரங்கள் ஏதும் இல்லை என்று உணர்ந்தான்.
ஆயினும், இவற்றைக் காட்டிலும் மேலான பாதுகைகள் உண்டே என்று எண்ணியபடி, பாதுகையுடன் சென்றான்.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளுகிற போது எல்லாவற்றையும் துறந்து புறப்பட்டார் –
உன்னை மட்டும் சாற்றிக் கொண்டு அல்லவா புறப்பட்டார் –
பெருமாள் தன் பக்தர்களை விட மாட்டார் –
ஆசார்யனை அடையாதவர்களை தன்னிடம் அடையவும் விட மாட்டார் -என்றவாறு –
ஆழ்வார் பரம்
கலியுகம் -அர்ச்சா நிரந்தரமாக இருந்து திருத்துவதற்காக -ஆழ்வார் போல்
மற்ற யுகம் விபவமாக
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அன்று பேர மாட்டாமல்
அனைத்தையும் -ஸ்ரீ வைகுண்டம் விரக்த்தாயா –
முதல் துணையாக நம்மாழ்வார் -சடாரி ரூபமாக –
பாதுகையாக முதல் துணையாக
உயர்ந்த ஸ்ரீ வைகுண்ட நாதன் அர்ச்சாவதாரமாக வரும் பொழுது ஆழ்வார் உடன் சேர்ந்தே எழுந்து அருளி
நம்மாழ்வார் சந்நிதி எல்லா பெருமாள் கோயில் களிலும் உண்டே
சடாரியாகவாவது உண்டே
ஆழ்வார் சந்நிதி இல்லா கோயிலிகளுக்கு மஹான்கள் எழுந்து அருள மாட்டார்கள் –
——————————————————
ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ—-103-
தற் குறிப்பு ஏற்று அணி
பாதுகை ஒலி நாதம் கேட்டு -திருவடிகளை பிடித்து யாசிக்கும் ஒலியோ
ப்ராப்தே ப்ரயாண ஸமயே மணி பாத ரக்ஷே–ரத்தினங்கள் -புறப்படும் நேரம் வந்த பொழுது
பௌரான் அவேக்ஷ்ய பவதீ கருண ப்ரலாபாந்-அயோத்யா மக்கள் கலங்கி அலுத்து உயிர் பிரிவைதை பார்க்க நீ பார்த்து –
மஞ்ஜு ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம்-திரும்ப வைக்கவே
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-திருவடிகளை பிடித்து -கெஞ்சி பிரார்த்தித்து -யாசிப்பது போல் –
திரு அருளை கெஞ்சி பிரார்தித்தகு நமக்கு அருளும்
மஞ்ஜூ ப்ரணாத முகரா விநிவர்த்த நார்த்தம் -சமாதானம் சொல்கிறாள் -ஆசுவாசம் படுத்துகிறாள்
ராமம் பத க்ரஹண பூர்வம் அயாசதேவ-காலைப் பிடித்து பிரார்த்தனை பண்ணுவேன் என்கிறாள் ஸ்ரீ பாதுகா தேவி
உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு பதிக்கப் பெற்ற பாதுகையே!
இராமன் காட்டிற்குக் கிளம்பிய போது அயோத்தி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தம் கொண்டு புலம்பியபடி நின்றனர்.
அந்த நேரத்தில் உன்னில் பதிக்கப்பட்ட கற்கள் ஓசை எழுப்பின. அந்த ஓசை எவ்விதம் இருந்தது என்றால் –
நீ இராமனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு,
“இந்த மக்களைக் காக்கும் பொருட்டு என்னை மீண்டும் அயோத்திக்கு அனுப்ப வேண்டும்”, என்று கேட்பது போன்று இருந்தது.
தன்னைக் கெஞ்சும் மக்களைக் கண்டு இராமன் நெகிழாமல், தனது உறுதி குலையாமல் நின்றான்.
ஆனால், பாதுகையோ மக்களின் நிலை கண்டு துடித்துப் போனது. இராமனின் திருவடிகளைப் பிடித்தபடி,
“என்னைப் பரதனுடன் மீண்டும் இவர்களுக்காக அனுப்புவாயா?”, என்று கேட்பது போன்று, அதனுள் இருந்த இரத்தினக் கற்கள் ஒலித்தன.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளிய பொழுது உன் குமிழியில் உள்ள ரத்னங்கள் சப்தித்தது –
அது அயோத்யா நகரத்து ஜனங்களுக்காக நீ வருந்தி பெருமாள் இடம்
என்னை யாவது இங்கே விட்டு செல்லுங்கள் என்று முறையிட்டது போலே இருந்தது –
ஆழ்வார் பரம்
நிரங்குச ஸ்வ தந்த்ரன்
இனிமையான பண் தரும் பாசுரங்களால் மகிழ்வித்து
புருஷகாரம்
——————————————————–
மத்வா த்ருணாய பரத: மணி பாத ரக்ஷே
ராமேண தாம் விரஹிதாம் ரகு ராஜ தாநீம்
த்வாம் ஏவ ஸப்ரணயம் உஜ்ஜயிநீம் அவந்தீம்
மேநே மஹோதய மயீம் மதுராம் அயோத்யாம்—-104-
ஸப்த மோக்ஷ -ஐந்து திரு நாமங்கள் கொண்ட ஸ்லோகம்
ராமன் இல்லாத அயோத்யா -புல்லுக்கு சமம்
இதராயா த்ருணாய –
மத்வா த்ருணாய -துரும்புக்கு சமம் என்று எண்ணித் தள்ளி விட்டு
பரத: மணி பாத ரக்ஷே
ராமேண தாம் விரஹிதாம் -பெருமாள் இல்லா அந்த
ரகு ராஜ தாநீம்-அயோத்தா -ராமன் இல்லாமல் -ரகுராஜ தானி -புல்லுக்கு சமம்
த்வாம் ஏவ ஸப்ரணயம் -உன்னையே அன்புடன் ப்ரீதி உடன்
உஜ்ஜயிநீம் -மிக உயர்ந்த வெற்றி –
அவந்தீம்–காப்பவள்
மேநே மஹோதய மயீம் -செல்வம் மிக்கு
மதுராம் –இனிமை –
அயோத்யாம்—வெல்ல முடியாத
ஐந்தும் பாதுகா தேவியே –
த்வாம் ஏவ ஸப்ரணயம் உஜ்ஜயிநீம் அவந்தீம்—இத்தை விட உத்கர்ஷம் இல்லை –
அவந்தீம் -தேசம் -ரக்ஷணம் சாமர்த்தியம்
மேநே மஹோதய மயீம் மதுராம் அயோத்யாம்–ராம ராஜ்யத்துக்கும் மேலான ராஜ்ய பரிபாலனம் –
மதுராம் -இனிமை சப்தம் ஸ்வ பாவம் –
அயோத்யாம்-அபரிஜாதாம் –
பரதன் உள்ள இடம் எல்லாம் கொண்டு ஸ்ரீ பாதுகா தேவி ஐந்தையும் கொடுத்தாள்-
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
இராமனைப் பிரிந்த பரதன் அயோத்தியை துச்சமாகவே எண்ணினான்.
ஆனால் இராமனின் பாதுகையான உன்னை – உஜ்ஜயிநி, அவந்தி, மதுரா, அயோத்தி என்று
மிகவும் உயர்த்தியான புண்ணிய இடங்களாகவே அறிந்து கொண்டான்.
இராமன் இல்லாத அயோத்தியை பரதன் ஒரு துரும்பாகவே எண்ணினான்.
ஆனால், பாதுகையை மிகவும் உயர்ந்த, மோக்ஷம் அளிக்க வல்ல ஸ்தலங்களாகவே எண்ணினான்.
ஸ்ரீ ரத்ன பாதுகையே ஸ்ரீ பரதாழ்வான் பெருமாள் பிரிவால் மாசுற்ற ராஜ பட்டத்தை வேண்டாம் என்று உதறி விட்டு
உன்னையே பரம புருஷார்த்தமாக மதித்து மேலான அன்புடனே உன்னை எல்லாமாக அடைந்தான் –
அனைத்தையும் புல்லாக தள்ளி ஆசார்யன் இடத்திலே பக்தி செலுத்தி வாழ்வதே உஜ்ஜீவன உபாயம் என்றதாயிற்று –
ஆழ்வார் பரம்
உஜ்ஜயினி -உயர்ந்த வெற்றியாக -பெற்று தருபவர்
அவந்தி -காப்பவர் -பயன் அன்றாகிலும் பங்கமு அல்லர் ஆகிலும்
பெரும் செல்வம் இவரே மாதா பிதா –
மதுரா -செவிக்கு இனிய செஞ்சொல்
அயோத்யா -வெல்ல முடியாத பராங்குசன்
நம்மாழ்வார் திருமேனிக்குள்ளும் அனைத்து எம்பருமான்கள் திவ்ய தேசங்கள்
திருமாலிருஞ்சோலை -என் தலையே –எனது உயிரே
மனமே வாக்கும் கருமம் ஒரு மா நொடியும் பிரியான் ஊழி முதல்வன் ஒருவனே
இருப்பிடம் வைகுந்தம் இத்யாதி -ஆச்சார்யர் திரு மேனி த்யானம் பரம உத்தேச்யம் –
———————————————————————
ராமாத்மந: ப்ரதி பதம் மணி பாத ரக்ஷே
விஸ்வம் பரஸ்ய வஹநேந பரீக்ஷிதாம் த்வாம்
விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந்
விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே—-105-
ராமாத்மந: ப்ரதி பதம் மணி பாத ரக்ஷே-ஒவ்வொரு அடியையும்
விஸ்வம் பரஸ்ய -உலகத்தைத் தாங்கும்
வஹநேந பரீக்ஷிதாம் த்வாம்-தங்குவதால் மனசால் ஆராய்ந்து
விஸ்வஸ்ய தேவி வஹநே விநிவேசயிஷ்யந் விஸ்ரப்த ஏவ பரதோ பவதீம் யயாசே-
ஒளியுடன் விளங்கும் உன்னை உலக நிர்வாகம் தாங்க யாசித்துப் பெற்றான்
உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இந்த உலகத்தை இராமனாகிய பெரிய பெருமாள் தூக்கி ஆதரித்தபடி உள்ளான்.
பாதுகையாகிய நீ அவன் நடக்கும் போது அவனைத் தூக்கியபடியே செல்கிறாய்.
ஆக நீ மறைமுகமாக உலகையும் தூக்குகிறாய் அல்லவா?
இத்தனை உயர்த்தி உன்னிடம் உள்ளதால் பரதன் உன் மீது நம்பிக்கை கொண்டு உன்னை வேண்டி நின்றான் போலும்.
சக்ரவர்த்தியாகப் போகிற ஒருவனுக்கு, அதற்கான தகுதி இருக்க வேண்டும் அல்லவா?
இந்த உலகையே தாங்கும் இராமனை, பாதுகை தாங்குவதால், பாதுகையின் மீது பரதனுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது.
அதனால் இராமனிடம் பாதுகையை வேண்டிப் பெற்றான்.
ஸ்ரீ மணி பாதுகையே இவ்வுலகம் அனைத்தையும் தாங்குகின்ற எம்பெருமானையே தரிக்கும் சாமர்த்தியம்
உள்ள படியால் தான் உன்னை உலகாளும் பதத்திற்காக முழு நம்பிக்கையுடன் ஸ்ரீ பரதாழ்வான் யாசித்தான் –
ஆழ்வார் பரம்
நாத முனிகள் பாவம் ராகம் தாளம்
தாளம் வழங்கி தமிழ் மறை பெற்றார்
யான் பெரியன் நீ பெரியை என்பதை யார் அறிவார்
அருள் பெற்ற நாதமுனி
யாசித்து 12000 கண்ணி நுண் சிறுத்தாம்பு-மூலம் பெற்று நம்மை உஜ்ஜீ வித்தார் –
————————————————————–
பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ:
த்வத் ப்ரார்த்தநம் ரகு பதௌ மணி பாத ரக்ஷே
கேந அசயேந ஸ முநி: பரமார்த்த தர்மீ (தர்சீ)
பத்ராய தேவி ஜகதாம் பவதீம் அவாதீத்—-106-
பக்த்யா பரம் பவது தத் பரதஸ்ய ஸாதோ:-உயர்ந்த பக்தியால் உன்னிடம் பிரார்த்தித்தான்
குணங்களில் உயர்ந்த பரதன் -பிறக்கும் பொழுது ஒரு –கேகேய தேசத்தில் -மூன்று -குகன்
ஆயிரம் -கோடி ராமருக்கு நிகர் கௌசல்யை
த்வத் ப்ரார்த்தநம் ரகு பதௌ -ராகவன் இடம்
மணி பாத ரக்ஷே
கேந அசயேந ஸ முநி: பரமார்த்த தர்மீ (தர்சீ)- தத்வ தர்சீ வசிஷ்டர் -அந்த முனி – எந்த அபிப்ராயத்தால்
பத்ராய தேவி ஜகதாம் பவதீம் அவாதீத்—உன்னை உலகங்களுக்கு மங்களம் அளிப்பதாக சொன்னார்
முத்தமிழ் கவிகள் பேச்சு பித்தர் பேச்சு பக்தர் பேச்சு பேதையர் பேச்சு -பெரியதாகக் கொள்ள வேண்டாமே
கோடி அசைந்தால் காற்று வந்ததா -காற்று வந்ததால் கோடி அசைந்ததா -ஆராயக்கூடாதே
lunaatics lovar poet -shekspear கூட இப்படியே சொன்னாராம்
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! இராமனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த பரதன்,
அந்தக் காரணத்தால் மட்டுமே உன்னை ஆராதித்தான் என்று கூற இயலாது.
உண்மையை நன்கு அறிந்த வசிஷ்ட மகரிஷி , நீ உலக நன்மைகளை அளிப்பவள் என்று கூறினார் அல்லவோ?
வெறும் பக்தி காரணமாக பரதன் உன்னை ஆராத்தித்தான் என்றால், வசிஷ்டர் புகழ்ந்தது என்ன காரணத்தினால்?
நம்மிடம் ப்ரியமானவர்களின் பொருள்களை நாம் பாதுகாத்துப் போற்றுவது இயல்பே ஆகும்.
இதன் மூலம், வெறும் பக்தி, ப்ரியம் காரணமாக மட்டுமே பரதன் பாதுகையைப் போற்றினான் என்று கூற இயலாது.
ஏன் என்றால் – வசிஷ்டர் பாதுகையைப் போற்றினார் என்பதை நாம் காணலாம்.
உண்மையான பெருமை பாதுகைக்கு உள்ளதால் அல்லவோ அவர் போற்றியிருக்கக் கூடும்?
ஸ்ரீ பாதுகையே -தன்னுடைய பக்தியினால் ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்தித்தாரோ என்று
சங்கை கொள்வதால் உனக்கு குறை வர நியாயம் இல்லை -ஏன் எனில் உண்மையை உள்ளபடி
கூறும் சக்தி படைத்த வசிஷ்ட மகர்ஷி யல்லவா உலகத்தை காப்பாற்றும் சக்தி உனக்கு இருப்பதாக கூறினார் –
ஆழ்வார் பரம்
ஸூ கர் -ஸ்ரீ மத் பாகவதம் -தாமிரபரணி -பின்னால் அவதரிப்பதை சொல்ல
ரகுபதி பெருமாள் இடம் சாதுக்கள் பூர்வாச்சார்யர்கள் -நீரே பெரியவர்
பரமபக்தியால் சொல்ன்னாராக சிலர் எண்ணலாம்
ஆனால் தத்வ தர்சீ ஸூகர் போல்வார்
எவ்வாறு சொன்னார்
உண்மையாகவே பெருமை இருப்பதாலே தானே –
————————————————————-
ராமே வனம் வ்ரஜேதி பங்க்திரதே ப்ரஸுப்தே
ராஜ்யாபவதா சகிதே பரதே ததாநீம்
ஆஸ்வாஸயேத் க இவ கோஸல வாஸிநஸ் தாந்
ஸீதேவ சேத் த்வம் அபி ஸாஹஸ விருத்தி: ஆஸி:—107-
ராமே வனம் வ்ரஜேதி -கானகம் பெருமாள் போக
பங்க்திரதே ப்ரஸுப்தே-சக்கரவர்த்தி வணக்கம் போக
ராஜ்யாபவதா சகிதே பரதே -ராஜ்ஜியம் ஏற்றால் பழி என்று பரதாழ்வான் ஏற்காமல் இருந்தார்
ராஜ்ஜியம் ச அஹம் ச -ராமஸ்ய -இரண்டு சொத்துக்கள் -சேதனர் அசேதனங்கள் சொத்துக்கள் தானே -ஒரே ஸ்வாமி
ததாநீம்–அந்தச் சமயம்
ஆஸ்வாஸயேத் க இவ கோஸல வாஸிநஸ் தாந்–அந்த கோசல மக்களை யார் சமாதானம் படுத்துவார்கள்
ஸீதேவ சேத் த்வம் அபி ஸாஹஸ விருத்தி: ஆஸி:–நீயும் கூட சீதாபிராட்டி போல் ஸாஹஸமாக பெருமாள் உடன் போய் இருந்தால்
உன்னைத் தவிர வேறே யாரும் ஆஸ்வாஸப் படுத்த வில்லையே
பெருமாள் பிராட்டி இருவரும்–பந்துக்களும் -ஜீவாத்மாவை விட்டாலும் –
ஆச்சார்யர் கைவிட மாட்டாமல் உத்தாரகமாக இருப்பார்
இத்தையே காட்டும் -திண் கழல் -போல் ஆச்சார்ய அபிமானம் –
இராமன் கானகம் சென்று விட்டான்; தசரதர் இதன் காரணமாக இறந்து விட்டார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பரதன் நாட்டை ஆளும் பட்டத்தை ஏற்றான் என்று பலர் ஏசக் கூடும்.
அந்த நேரத்தில் சீதை போன்று நீயும் இராமனுடன் காட்டில் வசித்தால், கோசல நாட்டில் உள்ள மக்களுக்கு
யார் ஆதரவு கூற இயலும்? இதனால் நீ மட்டும் வந்தாய் போலும்.
இராமனின் பிரிவுத் துன்பம் காரணமாக தசரதன் மறைந்தார்.
அந்த நேரத்தில் பரதன் பட்டாபிஷேகம் செய்து கொண்டால், பலரும் அவனை ஏசக் கூடும்.
அந்தப் பழியானது பாதுகையால் மட்டுமே நீங்கும். மேலும் இராமனுடன் சீதையும் சென்று விட்டாள்.
இந்த நேரத்தில் அயோத்தியின் மக்களுக்கு ஆறுதல் யார் உள்ளனர்? இதனை உணர்ந்த பாதுகை மீண்டும் திரும்பியது போலும்.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரணயம் செல்ல –
சக்ரவர்த்தியும் வான் ஏறிச் செல்ல –
ஸ்ரீ பாரதாழ்வானும் பட்டாபிஷேகம் மறுக்க
சீதா பிராட்டியைப் போலே பெருமாளை பிரிந்து வர மறுத்து இருந்தால்
கோசல தேச மக்களை யார் சமாதானம் பண்ணுவர்-
ஆழ்வார் பரம்
வனவாசம் காலம் -கலியுக தொடக்கம் –
கலி கோலாகலம் -ரக்ஷிக்க ஆழ்வாராதிகள்
திவ்ய பிரபந்தம் கொஞ்ச காலம் மறைய
அந்த நிலையில்
நாத முனிகள் பாவம் ராகம் தாளம் -இவரே பரதன்
நம்மாழ்வார் தோன்றி யோகநிலையில் உபதேசித்து அருளி
நம்மை உஜ்ஜீவிப்பித்து அருளினார் அன்றோ
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி –
—————————————————————————–
பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ—-108-
பாதாவநி -பாதுகையே
ப்ரபவத: ஆளும்
ஜகதாம் த்ரயாணம்-மூன்று உலகையும்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்-நீயே உயர்ந்துள்ளாய் நிச்சயம்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:-அவன் ஒருவனையே விரும்பி இருந்த பரதாழ்வான்
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ -நம்பிக்கை கொடுக்கும் பணயப் பொருளாக உன்னைக் கொண்டாரே
பணயப் பொருள் உயர்ந்தது என்று சொல்லவும் வேண்டுமோ –
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
மூன்று உலகங்களுக்கும் தலைவனாக உள்ள இராமனைக் காட்டிலும் உன்னுடைய மேன்மைகள் நிச்சயம்
அதிகமாகவே இருக்க வேண்டும் எப்படி?
இவ்விதம் இல்லை என்றால் இராமனையே அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பரதன்,
இராமனுக்குப் பதிலாக உன்னை ஏற்றுக் கொள்ளும்படியாக, அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கக் கூடிய
அடகுப் பொருளாக நீ எப்படி ஆக முடியும்?
அடகு வைக்கப்படும் பொருளானது, அதன் மீது வழங்கப்படும் கடன் தொகையைக் காட்டிலும் அதிக மதிப்பு
உள்ளதாக இருந்தால் மட்டுமே கடன் வழங்குவார்கள் அன்றோ?
ஆக இராமனை வேண்டி நின்ற பரதனுக்கு, பாதுகை கிட்டியவுடன் அவன் த்ருப்தி அடைந்தான் என்றால்,
இராமனைக் காட்டிலும் பாதுகைக்கு மதிப்பு உள்ளது என்று தானே ஆகிறது?
இவ் விதம் இல்லை என்றால், இராமனுக்குப் பதிலாகப் பாதுகையை அடகுப் பொருள் போன்று பரதன் எப்படி ஏற்பான்?
ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –
உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே
உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்
ஆழ்வார் பரம்
மதுரகவி -பெருமாளைத் தேடிப் போனவர்
ஆழ்வாரைப் பெற்று திருப்தி அடைந்தார்
தேவு மற்று அறியேன் -நிஷ்டை
——————————————————-
மந்யே நியுஜ்ய பவதீம் மணி பாத ரஷே
பார்ஷ்ணி க்ரஹஸ்ய பரதஸ்ய நிவாரணார்த்தம்
ரத்னாகரம் ஸபதி கோஷ்பதயந் விஜிக்யே
ராம: க்ஷணேந ரஜநீசர ராஜதாநீம்—-109-
மந்யே நியுஜ்ய பவதீம்
மணி பாத ரஷே
பார்ஷ்ணி க்ரஹஸ்ய பரதஸ்ய -பெருமாளுடைய பின்னங்கால்களைப்பிடித்து பரதாழ்வான்
தென் திசை நோக்கி அவதார நோக்கம் -பரதன் பின் தொடர்ந்து வந்து கெஞ்ச
திரும்பாமல் நிற்பதால் இப்படி -நின் சரண் அல்லால் சரண் இல்லை -கதறுகிறான்
நிவாரணார்த்தம்–அவனை திரும்பி அயோத்யா செல்ல வைக்க
ரத்னாகரம் ஸபதி -கடலை விரைந்து
கோஷ்பதயந் விஜிக்யே-பசுமாட்டுக் கால் குளம்படி போல் கடந்து
ராம: க்ஷணேந ரஜநீசர ராஜதாநீம்-விரைவாக ராக்ஷஸர்களுடைய இலங்கையை அழித்து திரும்பினான்
பிராட்டியும் அவனும் கை விட்டாலும் திண் கழல் ஸ்ரீ பாதுகை கைவிடாதே –
அவதார நோக்கம் நிறைவேற ஸ்ரீ பாதுகா தேவி தான் காரணம் –
அடுத்த ஸ்லோகம் இத்தை விவரிக்கும்
உயர்ந்த இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே!
இராமன் கடலைக் கலக்கியபடி சென்று அரக்கர்கள் வாழ்ந்து வந்த இலங்கைக்குச் செல்வதற்காக எழுந்தான்.
அப்போது பரதன் இராமனின் கால்களைப் பற்றியபடி இருந்தான்.
அவனைத் திசை திருப்புவதற்காக உன்னை அளித்தான் போலும்.
அழும் குழந்தையைச் சமாதானம் செய்து, அதன் கவனத்தைத் திசை திருப்ப எண்ணும் தாயானவள்,
அதன் கைகளில் விளையாட்டுப் பொருள்களைக் கொடுப்பது வழக்கம் அல்லவா?
இது போன்று இங்கு இராமனின் செய்கை இருந்ததாகக் கூறுகிறார்.
பரதன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் தனது அவதார நோக்கம் நிறைவேறாது என்று இராமன் எண்ணி, இவ்விதமாகச் செய்தான்.
ஸ்ரீ பாதுகையே -பெருமாள் சமுத்ரத்தை பசுவின் குளம்படி யாகப் பண்ணி
அசுரர் ராஜ்யத்தை நொடியில் ஜெயித்து தனது திருவடியை பிடித்துக் கொண்டு
மீளாத ஸ்ரீ பரதாழ்வானுக்கு உன்னைத் தந்து அருளிய பின்னரே தனது திருவவதார கார்யத்தை முடிக்க முடிந்தது –
ஆழ்வார் பரம்
பாசுரங்களால்
சம்சாரம் இலங்கை கடக்க
ப்ரபன்னர்
களான நம்மை மீட்கவே ஆழ்வாரை அனுப்பி
ஸம்ஸார சாஹாரம் குளப்படி போல் ஆக்கி
விரைவில் முக்தி
—————————————————————–
பாதாவநி ப்ரபுதராந் அபராத வர்க்காந்
ஸோடும் க்ஷமா த்வம் அஸி மூர்த்திமதீ க்ஷமைவ
யத் த்வாம் விஹாய நிஹதா: பரிபந்தி நஸ்தே
தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா—110-
பாதாவநி -ஸ்ரீ பாதுகா தேவியே
ப்ரபுதராந் அபராத வர்க்காந் ஸோடும் க்ஷமா த்வம் அஸி -குற்றக்கூட்டங்களையும் பொறுக்கும் படி
மூர்த்திமதீ க்ஷமைவ-உருவம் கொண்ட -பொறுமையே வடிவமாக
பரிபந்தி நஸ்தே தேவேந தாசரதி நா தச கண்ட முக்யா-ராவணாதிகள்
யத் த்வாம் விஹாய நிஹதா:– -வதைக்கப்பட்டார்கள்
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே!
அனைத்துக் குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு சரீரம் பெற்றவளாக, பொறுமையே வடிவமாக நீ உள்ளாய்.
ஆகையால் தான் இராமன் உன்னைப் பரதனிடம் அளித்து விட்டு, இராவணன் போன்றவர்களை அழித்தான் போலும்.
பாதுகைக்குப் பொறுமை அதிகம் என்பதால், எப்படிப்பட்ட குற்றத்தையும் மன்னித்து விடுவாள் என்று
இராமன் அறிந்திருந்தான் ஆகையால், தன்னுடன் அவள் இருந்தால் இராவணன் போன்றோரையும்
மன்னித்து விடுவாள் என்பதால், பரதனுடன் அனுப்பி விட்டான்.
அதன் பின்னரே அவனால் இராவணனை அழிக்க இயன்றது என்று கருத்து.
ஸ்ரீ பாதுகையே அனைத்து குற்றங்களையும் பொறுக்கும் பொறுமையின் வடிவம் நீ –
ஆகையால் தான் உன்னை ஸ்ரீ பரதாழ்வான் இடம் கொடுத்து விட்டு குற்றம் நிறைந்த
இராவணன் முதலான அரக்கக் கூட்டத்தை பெருமாள் நிரசிக்க முடிந்தது –
ஆழ்வார் பரம்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வார்
அனுக்ரஹம் பண்ணும் பொழுது மட்டும் ஆழ்வார் உடன் எழுந்து அருளுவான்
——————————————————————–
111-பெருமாள் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள் -ஆழ்வார் நம்மைத் திருத்த உதவியவர்
112- பரதாழ்வான் பெற்ற பெருமை -ஆழ்வாரை வணங்கும் அடியாரின் சிறப்பு
113- கிரீடம் விட ஸ்ரேஷ்டம் -யோக சாஸ்திரம் விட அருளிச் செயல்களுக்கு ப்ராதான்யம் நாதமுனிகள்
114-ராமனே தானே பாதுகைக்கு பட்டாபிஷேகம் -கூடஸ்தர் கௌரவம் பெருமாளே ஆழ்வாருக்கு
115-வசிஷ்டர் சொல்லி ரிஷிகள் அக்னி ஹோத்ர இடத்தில் பாதுகை -நித்ய அனுசந்தானம் ஆழ்வார் அருளிச் செயல்கள்
116-பாதுகை தான் பெருமாளுக்கு காட்டில் நடக்க சக்தி -நம்மையும் திருத்தும் சக்தி ஆழ்வார் அவனுக்குத் தந்ததாக சொல்லி ஆழ்வார் பெருமை
117-அயோத்யா மக்கள் கொண்டாடி–ஆழ்வார் அர்ச்சா ரூபமாக அத்யயன உத்சவம் திருவரங்கம் எழுந்து அருள மக்கள் கொண்டாடி பல்லாண்டு –
—————
வாக்யே கரீயஸி பிதுர் விஹிதே அபி அத்ருப்த்யா
மாதுர் மனோரதம் அசேஷம் அவந்த்யயிஷ்யந்
மந்யே ததா ரகுபதி: பரதஸ்ய தேநே
மாதஸ் த்வயைவ மணி மௌளி நிவேச லக்ஷ்மீம்—-111-
வாக்யே கரீயஸி பிதுர் -தந்தையின் பெரிய வாக்கை -அரச குமாரனைக் காட்டுக்கு அனுப்புவது பெரிய கார்யம் அன்றோ
விஹிதே அபி அத்ருப்த்யா-நிறைவேற்றியும் கூட -அப்போது அலர்ந்த செந்தாமரை போல் உகந்தே செய்தாலும் திருப்தி அடையவில்லை
மாதுர் மனோரதம் -கைகேயி விருப்பம்
அசேஷம் அவந்த்யயிஷ்யந்-மிச்சம் இல்லாமல் முழுமையாக நிறைவேற்ற
இரண்டு வரன்கள் உண்டே -பரதனுக்கு ஏற்ற அபிஷேகம் சூட்டி பட்டாபிஷேகம் செய்து
தானும் மகிழ்ந்து கைகேயியையும் மகிழ்விக்க
மந்யே ததா ரகுபதி: பரதஸ்ய தேநே-அப்போது ரகுகுல திலகமான-வண்மை
மாதஸ் த்வயைவ மணி மௌளி நிவேச லக்ஷ்மீம்—உன்னாலே -உன் மூலம் கிரீடம் சூடும் அழகைக் கொடுத்து
தானும் கைகேயியும் மகிழும் படி -அடியேன் -மன்யே -கருதுகிறேன் என்கிறார் தேசிகர் இங்கு
மன்னவன் பணி அல்லாமல் இருந்தாலும் நும் பணி மறு ப்பேனோ
தாயான பாதுகையே! இராமன் தனது தந்தையான தசரதனின் சத்யத்திற்கு இணங்கக் கானகம் சென்றான்.
இப்படியாகத் தனது தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய பின்னரும், இராமனுக்குத் த்ருப்தி உண்டாக வில்லை.
தனது தாயான கைகேயியின் ஆசைக்கு ஏற்ப பரதனுக்கு முடிசூட்ட எண்ணினான்.
அதனால் அல்லவோ இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட உன்னைப் பரதன் தலைகளில் சூட்டி அழகு பார்த்தான்?
தசரதனின் சொல்லில் ஒன்றைக் காப்பாற்றியாகி விட்டது. அடுத்த வாக்கான பரத பட்டாபிஷேகம் நிகழ்த்தவேண்டுமே!
ஆகையால் மிகவும் தந்திரமாக இராமன் செய்தது என்ன? பரதனின் தலையில், பாதுகைகளை ஏற்றி, பட்டாபிஷேகம் செய்தான்
ஸ்ரீ பாதுகையே தாய் தந்தை சொற்படி ஸ்ரீ தண்டகாரண்யம் சென்றும்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு பட்டம் சிறப்பாக பூர்த்தி செய்து தாயின் மநோ ரதம்
முழுவதையும் நிறைவேற்றி வைக்கவுமே பெருமாள் ரத்னங்கள் இழைத்த உன்னை
ஸ்ரீ பரதாழ்வான் சிரசில் கிரீடம் போலே வைத்து அருளினார் –
ஆழ்வார் பரம்
வேதம் பக்தி
உபநிஷத் பக்தி யோகம் ப்ரஹ்ம வித்யை
ஆழ்வார் பிரபத்தி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
நாத முனிகளுக்கு தலைக்கு அணிகலனாக ஆழ்வார் திருவடிகளை சாத்தி
நாம் இன்றும் அனுபவிக்கிறோம்
தந்தை பெருமாள் வேதம் வேதாந்தம் பின்பற்றி அதிருப்தி
தாய் பிராட்டி விருப்பம் நிறைவேற்ற -குழந்தைகள் எல்லாரையும் கரை ஏற்ற மநோ ரதம் –
தாய் ஸ்தானம் ஆழ்வார் ஹிதமாயும் பிரியமாயும் ஈரச் சொற்கள்
————————————————————————-
பாதாம் புஜாத் விகளிதாம் பரமஸ்ய பும்ஸ:
த்வாம் அதரேண விநிவேஸ்ய ஜடா கலாபே
அங்கீசகார பரதோ மணி பாத ரக்ஷே
கங்காதீரூட சிரஸ: கிரிசஸ்ய காந்திம்—112-
பாதாம் புஜாத் விகளிதாம் பரமஸ்ய பும்ஸ:-பெருமாளுடைய திருவடிகளில் இருந்து நழுவி வந்த உன்னை
த்வாம் ஆ தரேண விநிவேஸ்ய ஜடா கலாபே-தனது தலையில் ஆதாரத்துடன் வைத்த போது
அங்கீசகார பரதோ மணி பாத ரக்ஷே- கங்காதீரூட சிரஸ: கிரிசஸ்ய காந்திம்-கங்கையை சுமந்த சிவனது காந்தியை அடைந்தான் –
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகவும் உயர்ந்த புருஷனாகிய இராமனிடமிருந்து
உன்னைப் பரதன் பெற்ற போது, தாமரை மலர்கள் போன்ற திருவடிகளில் இருந்த உன்னை, மிகவும் அன்புடன் தனது தலையில் ஏற்றான்.
அப்போது அவன், கங்கையைத் தனது சடையில் வைத்துள்ள காரணத்தால் மேலும் அழகு பெற்ற சிவன் போன்று அழகு பெற்றான்.
எம்பெருமானின் திருவடிகளில் இருந்து கங்கை வெளிப்பட்டது. அந்தக் கங்கையைத் தனது தலையில் சூடியதால் சிவன் அழகு பெற்றார்.
இங்கு இராமனின் திருவடிகளில் இருந்து பாதுகை பரதனால் பெறப்பட்டது. அதனைத் தலையில் ஏற்றதால் பரதன் அழகு பெற்றான்.
ஆக எம்பெருமானின் திருவடித் தொடர்பு பெற்றவையுடன் நமக்குத் தொடர்பு உண்டானால், நமது வாழ்வும் மணம் வீசும் என்று கருத்து.
ஸ்ரீ பாதுகையே -பெருமாள் திருவடியில் இருந்து நழுவிய உன்னைத் தனது சிரசில் பரிவுடன் தரித்த
ஸ்ரீ பரதாழ்வான் கங்கையைத் தன் சடை முடியில் தரித்த பரம சிவனுடைய தேஜசை அடைந்தார் –
ஆழ்வார் பரம்
சடாரி ரூபத்தால் -பெருமாள் திருவடிகளில் நழுவி வருவது போல்
பரதனைப் போன்ற பக்தர்கள் ஆதரவுடன் தாங்கி
சிவனைப் போல் ஸ்ரேஷ்ட விஷ்ணு பக்தர் ஆகி
கங்கைக்கு நீராடியதுக்கு சமம் தானே இதைத் தரித்து ஸ்பர்ஸத்தால்
————————————————————————
அவிகலம் அதிகர்த்தும் ரக்ஷமே ஸப்த லோக்யா:
ரகுபதி சரணேந ந்யஸ்த திவ்ய அநுபாவாம்
பஜத பரதஸ் த்வாம் அஞ்ஜஸா பாத ரக்ஷே
மணி மகுட நிவேச த்யாக தந்யேந மூர்ந்தா—-113-
அவிகலம் அதி கர்த்தும் ரக்ஷமே ஸப்த லோக்யா:-இஷ்வாகு -ஏழு உலகாண்டு -காக்கும் சக்தி பெறவே
ரகுபதி சரணேந ந்யஸ்த திவ்ய அநுபாவாம்-பெருமாள் திருவடிகளே சரணம் -தஞ்சம் -பெருமை மிக்க பாதுகை
பஜத பரதஸ் த்வாம் அஞ்ஜஸா பாத ரக்ஷே-பரதாழ்வான் உன்னை கொண்டு
மணி மகுட நிவேச த்யாக தந்யேந மூர்ந்தா–சாதாரண கிரீடம் உபேக்ஷித்து உன்னைப் பெற்றான்
முதல் முதல் பாதுகை தலையில் தரித்து சக்தி பெற்று நமக்கும் பிரபத்தி மஹிமையை காட்டிக் கொடுத்தான்
பெரிய பெருமாளின் திருவடிகளைக் காப்பவளே! ஏழு உலகங்களையும் எந்தவிதமான குறையும் இன்றிக் காப்பாற்றும்
தகுதியை அடைய பரதன் எண்ணினான். ஆகவே இராமனின் திருவடிகளின் தொடர்பு என்ற பெருமை உடைய
உன்னைத் தனது தலையில் ஏற்றான்.
அவன் தலையில் க்ரீடம் வைக்காமல், நேரடியாகவே உன்னை ஏற்றதனால் பரிசுத்தி அடைந்தான்.
அனைத்தையும் காத்து நிற்கும் இராமனின் திருவடித் தொடர்பு கிட்டப் பெற்ற பாதுகையானது, ஏழு உலகங்களையும் ஆளும்
வல்லமையை ஒருவனுக்கு அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதனை அறிந்த காரணத்தினாலேயே பரதன் பாதுகையிடம் தஞ்சம் புகுந்தான்.
ஸ்ரீ பாதுகையே ஏழு உலகங்களையும் காப்பாற்றும் சக்தி பூரணமாக ஏற்பட
பெருமாள் தன் திருவடிகளில் சாற்றிக் கொண்டு தந்த உன்னை அரச பட்டத்திற்கு உரிய சாதாரண
கிரீடத்தைத் துறந்ததால் பாக்கியம் செய்த தனது தலையில் ஸ்ரீ பரதாழ்வான் வகித்தான் –
ஆழ்வார் பரம்
யோக முறை கிரீடம் போல் -ராஜ வித்யை-
அருளிச் செயல்களே அனைவருக்கும் உஜ்ஜீவிக்க உயர்ந்த உபாயம்
தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்
ஆழ்வார் திருவடி பெற்று நமக்கு அருளியவர்
———————————————————–
இயம் அவிகல யோக க்ஷேம ஸித்யை ப்ரஜாநாம்
அலம் இதி பரதேந ப்ரார்த்திதாம் ஆதரேண
ரகுபதி: அதிரோஹந் அப்யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம்
சரணநக மணீநாம் சந்த்ரிகா நிர்ஜஜரேண—-114-
இயம் அவிகல யோக க்ஷேம ஸித்யை ப்ரஜாநாம் அலம் -இதுவே பிரஜைகளுக்கு குறைவற்ற யோக ஷேம சித்திக்கு போதும்
இல்லாதது பெற்று இருப்பது நிலைப்பது இரண்டும் –
யோக க்ஷேமம் வஹாம் அஹம் -கீதை
இதி பரதேந ப்ரார்த்திதாம் ஆதரேண–ஆதாரத்துடன் பரதன் பிரார்த்திக்க
ரகுபதி: அதிரோஹந் அப்யஷிஞ்சத் ஸ்வயம் த்வாம்–தானே விரைந்து -உற்றம் உடையாய் என்று போற்றுகிறோம்
தானே ஏறி நின்று தானே உனுக்கு பட்டாபிஷேகம்
சரணநக மணீநாம் சந்த்ரிகா நிர்ஜஜரேண—சந்த்ரன் போல் பத்து நக ஒளி வெள்ளத்தால் –
நீர் பால் வெள்ளம் இல்லை -தேஜஸ் வெள்ளம் இங்கு –
பாதுகையே! பரதன் இராமனிடம், “உனது பாதுகைகள் மக்களிடம் இல்லாதவற்றை அளிப்பதும் (யோக),
இருப்பதைக் காப்பதற்கும் (க்ஷேம) ஏற்றதாகும். ஆகவே அவற்றை என்னிடம் அளிக்க வேண்டும்”, என்று யாசித்தான்.
உடனே இராமன் செய்தது என்ன? உன் மீது ஏறி நின்று, தனது நகங்கள் என்னும் இரத்தினக் கற்கள் ஒளி கொண்டு
உனக்குப் பட்டாபிஷேகம் செய்தான் அல்லவா?
ஒருவருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பாக அபிஷேகம் செய்தல் வேண்டும். இங்கு பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு
முன்பாக, அதன் மீது தனது திருவடிகளை வைத்து, தனது திருநகத்தின் ஒளி கொண்டு அபிஷேகம் செய்தான்.
ஸ்ரீ பரதாழ்வான் உடைய விண்ணப்பத்திற்கு இணங்க பெருமாள் ஸ்ரீ பாதுகையே
உன் மீது ஏறி ரஷணம் பண்ணக் கூடிய சக்தி உனக்கு உண்டு என்று சாதித்தார் –
அப்போது தம்முடைய திரு நக தேஜஸ் என்கிற ஒளியில் தாமே
ஒருமுறை உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார் பெருமாள் –
பிறகே ஸ்ரீ பரதாழ்வான் நந்தி கிராமத்தில் உனக்கு திரு அபிஷேகம் செய்து வைத்தார்
சகல லோகங்களின் யோக ஷேமங்கள் குறைவின்றி நிறைவேற நீயே போதும் என்று
ஸ்ரீ பரதாழ்வான் உன்னை பிரார்த்திக்க இது நடந்ததே –
ஆழ்வார் பரம்
மோக்ஷமாகிய யோகம்
கைங்கர்யமான க்ஷேமமும்
கிடைக்க மயர்வற மதி நலம் அருளி
பிரபன்ன ஜன கூடஸ்தர் பட்டாபிஷேகம் பண்ணி நமக்கு கொடுத்து அருளினார் –
உஊரும் நாடும் உலகும் தன்னைப் போல் திருத்தி
நாத முனிகள் பிராத்தனையும் உண்டே இங்கும்
——————————————————————————–
ப்ரணயிநி பத பத்மே காடம் ஆஸ்லிஷ்யதி த்வாம்
விதிஸுத கதிதம் தத் வைபவம் தே விதந்த:
அநுதிநம் ருஷயஸ் த்வாம் அர்ச்சயந்தி அக்ந்ய காரே
ரகுபதி பத ரக்ஷே ராமகிரி ஆஸ்ரமஸ்தா:—-115-
திருவடி கணவன் பாதுகை மனைவி அணைத்து -திருவடிகளால் ஏறி நின்றதை கவி நயம்
ரிஷிகளும் பாதுகை பிரார்த்தித்துப் பெற்று ஸ்துதிப்பதாக இங்கு தேசிகன்
ப்ரணயிநி பத பத்மே -கணவனான திருவடித்தாமரை
காடம் ஆஸ்லிஷ்யதி த்வாம்-உன்னை அணைத்துக் கொண்டு
பிரிந்து போகும் பொழுது ஆலிங்கனம் செய்து ஆறி இருக்க சொல்வது உண்டே
விதிஸுத கதிதம் தத் வைபவம் தே விதந்த:–ப்ரஹ்மா மகன் வசிஷ்டர் உனது பிரபாவம் சொன்னதை அறிந்தனர்
அநுதிநம் ருஷயஸ் த்வாம் அர்ச்சயந்தி அக்ந்ய காரே-அக்னி ஹோத்ர சாலையில் உன்னை எழுந்து அருளப் பண்ணி நித்தியமாக ஆராதித்தார்கள் –
ரகுபதி பத ரக்ஷே ராமகிரி ஆஸ்ரமஸ்தா:-சித்ரா கூட ஆஸ்ரமத்தில்
ரகு குலத்தின் நாயகனான இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ பரதனுடன் செல்லப் போகிறாய் என்று
அறிந்த முனிவர்கள் செய்தது என்ன? ப்ரம்மனின் புத்திரரான வசிஷ்டர் மூலம் உனது பெருமைகளை அறிந்தவர்களுக்கும்,
சித்திர கூட ஆஸ்ரமத்தில் உள்ளவர்களும் ஆகிய முனிவர்கள் தங்கள் தங்கள் இடத்திற்கு உன்னை எழுந்தருளச் செய்து,
அக்னி ஹோத்ரம் போன்றவை நடைபெறும்படியாக, யாக சாலைகளில் வைத்து வழிப்பட்டனர்.
மேலும் பிறந்த வீடு செல்லும் மனைவியைக் கணவன் கட்டி அணைத்து விடை கொடுப்பது போன்று,
இராமனின் திருவடிகள் உன்னைக் கட்டி அணைத்தன.
இந்தச் ச்லோகத்திற்கு வேறு விதமாகவும் பொருள் உரைக்கலாம். இராமனின் திருவடிகள் – கணவனானவன் மனைவியை
அணைத்துக் கொள்வது போன்று, பாதுகையிடம் மிகவும் ப்ரியமாக இருந்தன. இதனைக் கண்ட முனிவர்கள்,
“இந்தப் பாதுகையை நாம் வழிபட்டால், நம் மீது இராமனின் திருவடிகள் மிகவும் ப்ரியமாக இருக்கும்.
இதன் மூலம் இராமனும் நம்மீது அளவற்ற பாசம் கொள்வான்”, என்று எண்ணினர்.
இதனால் பாதுகையை மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள்.
ஸ்ரீ பாதுகையே தன்னை விட்டுப் பிரியும் பத்னியை ஆரத் தழுவும் கணவனைப் போல்
பெருமாள் திருவடிகள் உன்னைக் கெட்டியாகப் பிடித்தன –
ப்ரஹ்ம புத்ரரான ஸ்ரீ வசிஷ்ட மஹர்ஷி உன் பெருமைகளை எடுத்துக் கூறியதையும் கேட்டு
சித்ர கூடத்தில் இருந்து மகரிஷிகள் ஆஸ்ரமத்தில் -அக்னி ஹோத்ர சாலையில் -தினமும் உன்னை பூஜித்தனர் –
ஆழ்வார் பரம்
தலைவனான பெருமாள்
பராங்குச நாயகி -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே
திருவாராதனம் யாகம் -வேள்வி யஜ தேவ பூஜாயாம்
ஆழ்வார் பாசுரம் சொல்லியே திருவாராதனம்
சாற்று முறை நித்யம் எங்கும் உண்டே
வேதம் அனைத்துக்கும் வித்து அன்றோ
——————————————————————————-
நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—116–
நியதம் அதிருரோஹ த்வாம் அநாதேய சக்திம்-நிச்சயமாக உன் மேல் ஏறி நின்றது
நிஜசரண ஸரோஜ சக்திம் ஆதாது காம:-உனது சக்தியைத் தன் திருவடிகள் பெறுவதற்காகவே
ஸ கதம் இதரதா த்வாம் ந்யஸ்ய ராம: விஜஹ்ரே-இல்லா விட்டால் உன்னை விட்டு விட்டு
த்ருஷத் உபசித பூமௌ தண்டகாரண்ய பாகே—கல் நிறைந்த பாதையில் எவ்வாறு சஞ்சரிப்பான் —
எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மெல்லடி அன்றோ
ஸ்ரீ பாதுகையே பொறுமையின் பிறப்பிடமான உன் மீது ஏறி பெருமாளும் தானும் எதையும் தாங்க வல்ல
உனது குணத்தை சம்பாதித்துக் கொண்டார் -இல்லாவிடில் மிருதுவான பாதங்களைக் கொண்டு
கற்கள் முட்கள் நிறைந்த ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எவ்வாறு சஞ்சரிப்பார்
பாதுகையே! இராமன் உன்னைப் பரதனிடம் அளிப்பதற்கு முன்பு உன் மீது எழுந்தருளி நின்றான். ஏன் தெரியுமா?
உன்னிடம் இயற்கையாகவே உள்ள சக்தியைத் தனது தாமரை போன்ற திருவடிகளுக்கு ஏற்றுவதற்காகவே ஆகும்.
இவ்விதம் அவன் செய்யவில்லை என்றால் உன்னைப் பரதனிடம் அளித்த பின்னர், கற்கள் போன்று கடுமையான
பாதைகள் நிறைந்து தண்டகாரண்யத்தில் அவன் எவ்விதம் நடந்திருக்க முடியும்? அவன் திருவடிகள் எவ்விதம் தாங்கியிருக்கும்?
பாதுகையிடம் இயல்பாகவே சக்தி உள்ளதால் தான் இராமனால் கானகத்தில் எளிதாக நடக்க முடிந்தது.
பாதுகையைப் பரதனிடம் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், தனது திருவடிகளுக்குப் பாதுகையிடமிருந்து
சக்தியைப் பெற இராமன் எண்ணினான். அதனால் தான், அதன் மீது சற்று நேரம் எழுந்தருளிவிட்டு, பின்னர் பரதனிடம் அளித்தான்.
ஆழ்வார் பரம்
சம்சாரக் காட்டில் ரஜஸ் தமஸ் மிக்க நம்போல்வாரை ரக்ஷிக்க
அர்ச்சாவதாரம் -நம்மை ரக்ஷிக்க வர
தாங்கும் பெருமை ஆழ்வார் இடம் தான் பெறுகிறான்
திருக்குறுங்குடி நம்பி -வைஷ்ணவ நம்பி -ராமானுஜர் –
நான் பெரியவன் சொன்னால் நம்புவார் இல்லை
அவன் பெரியவன் இவர் சொல்ல நாடே திருந்துமே
இல்லாவிட்டால் எவ்வாறு நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே முடியும் –
அடியார் குழாங்கள்
ஆழ்வார் அருளிச் செயல்கள் கொண்டே திவ்ய தேசங்கள் ஆகின்றன –
———————————————————————–
ரகுபதி பதபத்மாத் ரத்ன பீடே நிவேஷ்டும்
பரத சிரஸி லக்நாம் ப்ரேக்ஷ்ய பாதாவநி த்வாம்
பரிணத் அபுருஷார்த்த: பௌரவர்க்க: ஸ்வயம் தே
விதிம் அபஜத ஸர்வ: வந்தி வைதாளிகாநாம்—-117–
ரகுபதி பதபத்மாத் -திருவடிகளில் இருந்து
ரத்ன பீடே நிவேஷ்டும்-ஸிம்ஹாஸனம் ஏறவே
பரத சிரஸி லக்நாம் ப்ரேக்ஷ்ய பாதாவநி த்வாம்-பரதன் உன்னை வாங்கி தலையில் சுமக்க -அப்பொழுதே
ராமானுஜர் தோன்றிய அப்பொழுதே நாரணற்கு ஆளாயினரே போல்
பரிணத் அபுருஷார்த்த: பௌரவர்க்க: ஸ்வயம் தே–புரத்தில் வசிக்கும் அயோத்யா மக்கள்
அனைத்து புருஷார்த்தங்களையும் பெற்றதாகவே உன்னைப் பார்த்து ஸ்துதிக்க
விதிம் அபஜத ஸர்வ: வந்தி வைதாளிகாநாம்–தாமே வந்து ஸ்துதித்து -திருப்பள்ளி எழுச்சி மங்களா ஸாஸனம் –
காரியங்கள் செய்யத் தொடங்கினார்கள்
பாதுகையே! இராமனின் தாமரை போன்ற திருவடிகளில் இருந்து, உயர்ந்த இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட
ஸிம்ஹாசனத்தில் அமர்வதற்கு நீ புறப்பட்டாய். பரதன் உன்னைத் தனது தலையில் ஏற்றுச் சென்றான்.
அப்போது அனைத்து மக்களும் தங்களுக்கான நான்கு புருஷார்த்தங்களும் (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ – அறம், பொருள், இன்பம், வீடு)
தங்கள் கைகளில் கிட்டிவிட்டதாகவே எண்ணினர். உன்னைப் புகழ்ந்து துதித்தபடி நின்றனர்.
பெருமாளோ அல்லது அரசனோ ஓர் ஆசனத்திலிருந்து மற்றோர் ஆசனத்திற்குச் செல்லும்போது, கட்டியம் கூறுவது வழக்கமாகும்.
இங்கு பாதுகை முதலில் இராமனின் திருவடிகளில் இருந்து, பரதனின் தலையில் எழுந்தருளினாள்.
பின்னர், அயோத்தியில் ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருள வந்தபோது, அந்த நாட்டு மக்கள் கட்டியம் கூறியபடி நின்றனர்.
ஸ்ரீ பாதுகையே உனக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக ஸ்ரீ பரதாழ்வான் உன்னைத் தனது தலையிலே ஏற்ற பொழுது
கோசல நாட்டு மக்கள் சதுர் வித புருஷார்த்தங்களும் கைக்கு வந்தது போலே உன்னை ஸ்துதித்தார்கள் –
———————————————————————–
அநந்ய ராஜந்ய நிதேச நிஷ்ட்டாம்
சகார ப்ருத்வீம் சதுரர்ண வாந்தாம்
ப்ராதுர் யியாஸோ: பரதஸ் ததா த்வாம்
மூர்த்நா வஹந் மூர்த்தி மதீம் இவ ஆஜ்ஞாம்—-118-
அநந்ய ராஜந்ய நிதேச நிஷ்ட்டாம்-வேறு ராஜாவின் கட்டளைக்கு ஆள் படாமல்
சகார -ஆக்கி
ப்ருத்வீம் -பூமியை
சதுரர்ண வாந்தாம்-நான்கு கடல்களால் சூழ்ந்த
ப்ராதுர் யியாஸோ: -காடு செல்ல விரும்பிய பெருமாளுடைய
மூர்த்தி மதீம் இவ ஆஜ்ஞாம்-கட்டளைக்கு வடிவமான ஸ்ரீ பாதுகா தேவி -கருதும் இடம் பின் பற்றி நடக்க முன் உதாரணம்
பரதஸ் ததா த்வாம்-அப்போது பரத்தாழ்வான்
மூர்த்நா வஹந் -தலையால் சுமந்து கொண்டு –
அநந்யார்ஹ சேஷத்வம் -மணம் பூவுக்கே போல் -சேஷ பூதன் சேஷி ஒருவனுக்கே
பாதுகையே! இராமன் கானகம் சென்ற பின்னர், அவனது உத்தரவு என்பதே ஒரு வடிவம் எடுத்தது போன்று நீ இருந்தாய்.
உன்னைத் தனது தலையில் ஏற்றிக் கொண்ட பரதன் செய்தது என்ன?
நான்கு கடல்களையும் எல்லையாகக் கொண்ட தனது நாட்டை வேறு யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட
வேண்டிய அவசியம் இல்லாமல், உன்னால் வழி நடத்தப்பட்டு, ஆட்சி செய்தான்.
பாதுகையின் துணையுடன் பரதன் எந்தவிதமான இடையூறுகளும் இன்று, யாருக்கும் அச்சம் கொள்ளாமல்,
நீதி தவறாத “இராம ராஜ்ஜியம்” அமைத்தான் என்று கருத்து.
ஸ்ரீ பாதுகையே பெருமாள் ஸ்ரீ தண்ட காரண்யம் எழுந்து அருளும் பொழுது அவரது ஆஜ்ஞையின் ஸ்வரூபமாக
உன்னை மதித்து கடல் சூழ்ந்த உலகை ஸ்ரீ பரதாழ்வான் வேறு யாருக்கும் ஆட்படாமல் உன்னைக் கொண்டு ஆண்டார் –
நல்ல ஆசார்யருக்கு உட்பட்டவனுக்கு இந்த உலகமே ஸ்வ அதீனமாகுமே –
ஆழ்வார் பரம்
ததா -அப்பொழுது -கலி யுகத்தில்–43 நாள்
பரத -பாவம் ராகம் தாளம் -இசை அமைத்து –
தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல் – நாதமுனிகள்
கட்டளை வடிவான நம்மாழ்வார் -விஷ்வக் சேனர் -தானே இவர்
தலையால் வணங்கி அடி பணிந்து யோக நிலையில்
தலைக்கு மேல் சுமந்து
பூமியை அவனுக்கே உரியவராக்கி
திருவாய் மொழி தானே அநந்யார்ஹ சேஷத்வம் தெரிய வைக்கும்
வேதம் மூலம் அறிவது கஷ்டம்-ஆகவே மறை என்கிறோம்
மறைப்பாற் கடலைக்கடைந்து தொண்டர்க்கு அமுது உண்ண
எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகிலா–அண்ணல் தோன்றிய அப்பொழுது -நாரணர்க்கு ஆளாயினர் –
அர்த்த பஞ்சகம் -மிக்க இறை நிலையும் -மெய்யாம் உயிர் நிலையும்-தக்க நெறி -தடையாகி –வாழ்வு –ஓதும்
உயர் திண் அணை ஓன்று -பர ஸ்வரூபம்
பயில் ஏறு-ஏறாளும் கண்கள் சிவந்து கருமாணிக்க -ஸ்வ ஸ்வரூபம்
நோற்ற நாலும் -உபாய ஸ்வரூபம் -5-7-ஆராவமுது மானே திருவல்ல வாழ் நோக்கு பிறந்தவாறு –
வீடுமின் முற்றவும் – சொன்னால் விரோதம் -ஒரு நாயகமாய் -கொண்ட பெண்டிர் மக்கள் -விரோதி ஸ்வரூபம்
எம்மா -ஒழிவில் -நெடுமாற்கு -வேய் மறு தோளிணை ப்ராப்ய ஸ்வரூபம்
அத்யயன உத்சவம்
முதலில் வேதங்கள் மட்டும்
திருமங்கை ஆழ்வார் -வரம் பெற்று இராப்பத்து திருவாய் மொழி கேட்கவே –
கார்த்திகை கார்த்திகை அன்று நம்மாழ்வார் (தை ஹஸ்தம் மீள )
அர்ச்சா விக்ரஹம் நம் பெருமாள் தோளுக்கு இனியனில் எழுந்து அருளி வர
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைத்து புருஷார்த்தங்களும் பெற்றதாகவே சேவித்தார்கள்
(ராமானுஜர் ஆழ்வார்களை பிரதிஷ்டை ஸ்ரீ ரெங்கத்தில் -பின்னர் )
பொலிந்து நின்ற பிரான் திருவடிகளில் இருந்து
ரத்னாங்கியில் திகழ்ந்த நம் பெருமாள் இடம் சேர்க்க
மூலவர் முத்தங்கி சேவை –
—————————————————————————–
யத் ப்ராத்ரே பரதாய ரங்க பதிநா ராமத்வம் ஆதஸ்துஷா
நித்ய உபாஸ்ய நிஜ அங்கிரி நிஷ் க்ரயதயா நிச்சித்ய விஸ்ராணிதம்
யோக க்ஷேம வஹம் ஸமஸ்த ஜகதாம் யத் கீயதே யோகிபி:
பாத த்ராணம் இதம் மிதம்பச கதாம் அஹ்நாய மே நிநுதாம்—-119-
யத் -எந்த பாதுகை
ப்ராத்ரே பரதாய ரங்க பதிநா ராமத்வம் ஆதஸ்துஷா-அரங்கனாளே ராமன் தன்மையை அடைந்து –
நித்ய உபாஸ்ய -நித்யமும் உபாஸிக்க
நிஜ அங்கிரி -தனது திருவடிகளுக்கு
நிஷ்க்ரயதயா நிச்சித்ய விஸ்ராணிதம்-பதிலாக நிச்சயித்து வழங்கப்பட்டதோ
யோக க்ஷேம வஹம் -இல்லாதவற்றைக் கொடுத்து இருப்பதைக் காப்பதாக
ஸமஸ்த ஜகதாம் -அனைத்து உலகங்களையும்
யத் கீயதே யோகிபி:-யோகிகள் வசிஷ்டாதிகள் சொல்கிறார்களோ
பாத த்ராணம் இதம் -இப்படிப்பட்ட தன்மை
மிதம்பச கதாம் -என்னுடைய இழிந்த நிலையை
அஹ்நாய மே நிநுதாம்—விரைந்து போக்கி அருளட்டும்
ஆர்ய பாதவ் வால்மீகி – -திருவடி முடி சூட்டுப்படலம்-திருவடி நிலை முடி சூடப் படலம் இல்லையே –
திருவடி வேறு இல்லை பாதுகா தேவி வேறே இல்லை
ஆச்சார்யர் தானே திருவடி ரூபமாக நமது க்ருஹங்களில்
யோக க்ஷேமம் வஹாம் அஹம் -இரண்டையும் வகிப்பவள் பாதுகை
சர்வ லோகஸ்ய யோக க்ஷேமம் விதாஹ்ய -இல்லாத ஒன்றைக் கொடுத்து இருப்பதை பாதுகாத்து –
ஸ்ரீ ரங்கநாதனே இராமனாக அவதரித்து, தனது திருவடிகளுக்குப் பதிலாக, அதனைவிட உயர்ந்த தனது பாதுகைகளை,
தனது தம்பியான பரதனிடம் அளித்தான். அந்தப் பாதுகைகளை எப்போதும் உபாஸிக்கும்படி அளித்தான்.
இந்தப் பாதுகைகள் உள்ளதைக் காப்பாற்றும், இல்லாதவற்றை அளிக்கவும் செய்யும் என்று பெரியோர்களால் கூறப்படுகின்றன.
அப்படிப்பட்ட இந்தப் பாதுகைகள் எனது அற்பத் தன்மையை நீக்க வேண்டும்.
நமது அற்பமான தன்மைகள் என்ன என்பது நாமே அறிய மாட்டோம்.
அவற்றைப் பாதுகைகள் அறிந்து, அவற்றை நீக்கியும் விடுகிறாள் என்றார்.
பெருமாள் -தானே ஸ்ரீ ரங்க நாதன் -அனைத்து உலகங்களுக்கும் அனைத்து ஷேமங்களையும் அளிப்பார் என்று
வசிஷ்டாதிகள் நன்றாக அடையாளம் காணப் பட்ட ஸ்ரீ பாதுகைகளைத் ஸ்ரீ பரதாழ்வானுக்கு தந்து அருளினார் –
அவற்றின் பிரபாவத்தை முழுமையாக விவரித்து சொல்ல சொல் வன்மை அடியேன் இடம் இல்லை
இந்த குறையை நீயே போக்கி அருள வேணும் –
ஆழ்வார் பரம்
பெருமாள் திருவடி நிலையே நம்மாழ்வார் -சடாரி ரூபம்
சரணாகதி பலனை பெறுகிறோம் -நம்புவார் பதி வைகுந்தம் -காண்மினே –
யோகம் -பெறாத மோக்ஷம்
க்ஷேமம் -அங்கு நிலையான ஸர்வவித கைங்கர்யம்
சம்சாரமான இழிந்த நிலையைப் போக்கி அருளுகிறார்
—————————————————————–
பரதஸ் ஏவ மாம் அபி பிரசமித விஸ்வாபவா துர் ஜாதா
சேஷேவ சிரஸி நித்யம் விஹரது ரகுவீர பாதுகே பவதீ –120-
அனுஷ்டுப் ஸ்லோகம் தொடங்கி
ஆர்யா சந்தஸ்ஸால் நிகமிப்பார் பந்ததிகள் தோறும்
பரதஸ் ஏவ மாம் அபி -பரத்தாழ்வான் போல் அடியேனையும் கூட அனுக்ரஹம் செய்ய வேண்டும்
பிரசமித -போக்கடித்து
விஸ்வாபவா துர் ஜாதா -விஸ்வ அபவாத கூட்டங்கள்
சேஷேவ -பரிவட்டம் போல்
சிரஸி நித்யம் விஹரது -நித்தியமாக தலையில் விழங்கி
ரகுவீர பாதுகே பவதீ -ராமபிரானுடைய பாதுகா தேவியே
அந்திம ஸம்ஸ்கார அதிகாரம் இல்லை என்றார் வால்மீகி
கௌசல்யா தேவியாரும் அதி சங்கை பரதன் மேல்
பரத்வாஜர் லஷ்மணன் குகன் போல்வாரும் முதலில் அதி சங்கை
பாதுகையை தலை மேல் தாங்கி-அவதூறுகள் வாசனை யுடன் போக்கி அருளப் பெற்றான்
தேசிகரையும் அவதூறு சொல்வார்கள் உண்டு
வீரனாகிய இராமனின் பாதுகையே!
”இராமனைக் கானகம் அனுப்பிய கைகேயின் மகன்” என்ற அபவாதங்கள்
பரதன் மீது விழாமல் அவன் காப்பாற்றப்பட்டான் –
எப்படி?
உன்னைத் தனது தலையில் ஏற்ற காரணத்தினால் ஆகும்.
இது போன்று எனது தலையிலும் நீ எப்போதும் தங்கி நின்று, எனது அபவாதங்களையும் போக்க வேண்டும்.
எப்படிப்பட்ட த்ருஷ்டிகள், பழிகள் ஆகியவற்றை நீக்கக்கூடிய வல்லமை பாதுகையிடம் உண்டு என்றார்.
ஸ்ரீ பாதுகையே உன்னை ஆஸ்ரயித்து
ஸ்ரீ பரதாழ்வான் எல்லா லோக அபவாதங்களில் நின்றும் தப்பி நற்பெயர் பெற்றான் –
அது போலே என் தலையிலும் திருப் பரிவட்டம் போல் இருந்து
என் அபவாதங்களைப் போக்கி அருள வேண்டும் –
ஆழ்வார் பரம்
சடாரி -பரிவட்டம் போல்
அவதூறு -கெடுதல்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
காரி சுதன் கழல் திகழும் திரு முடி –
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply