இது முதல் 3 பாசுரங்கள் ஸ்ரீ வராக அவதார வைபவம் –
ஆருக்கு இவரை அளவிடல் ஆம் -தென் அரங்கர் இந்தப்
பாருக்கு அரந்தை தவிர்ப்பதற்காக பழிப்பு இல் பெரும்
சீர் உற்ற செங்கண் கரும்பன்றி ஆகி திருக் குலம்பின்
மேரு கண கணமா தலை நாளில் வினோதிப்பரே –26-
அரந்தை -துன்பம்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் மருவாதாற்கு உண்டாமோ வான்
வராகத் தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து –
எறி திரை வையம் முற்றும் ஏனத் துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும்
மற்று எல்லாவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் மேரு கிரி கண கணப்ப
திருவாகாரம் குலுங்க நில மடந்தை தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
குளம்பின் அகமண்டலத்தில் ஒருபால் ஒடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தியது நம்மை யாளும் அரசே –
———————————————————————————-
மருமலர்க் கோயில் மடமான் விரும்பும் மதில் அரங்கர்
பெருமையை பேசுவது எப்படி நாம் பிறைவாள் எயிற்றுக்
கரு முகில் கோலப் பெரும் பன்றி ஆய களேபரத்தின்
ஒரு மயிர்க்காலடி யூடே கடல் புக்கு ஒளிந்தனவே –27-
களேபரத்தின் ஒரு மயிர்க்காலடி யூடே-திரு மேனியினது ஒரு மயிர்க்காலினது அடியிடத்திலேயே
கடல் புக்கு ஒளிந்தனவே -ஏழு கடல்களும் பிரவேசித்து மறைந்தன –
—————————————————————-
நிறக்கும் செழும் சுடர்க் கோடும் இப்பாரும் நிசா முகத்துச்
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக் குஞ்சரம் செற்ற மாயோன் அரங்கன் வராகம் அது ஆயப்
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே –28-
குஞ்சரம் -குவலயா பீடம் -குஞ்சம் புதரும் துதிக்கையும் –
புரா வராஹச்ய தவேய முர்வரா தம்ஷ்ட்ரா ஹ்வயேந்தோ கில லஷ்ம லஷிதா -கூரத் தாழ்வான்
கிளரகன்புனலுணிண் றரி யோர் கேழலாய் இளை எனும் திருவினை எய்தினானரோ உளை வரும் பெருமையோர்
எயிற்றின் உட்புரை வளர் இளம் பிறை யிடை மறுவில் தோன்றவே -கம்பர்
பன்றியாய் படியெடுத்த பாழி யாய் என்பாரது வென்றியார் உனது எயிற்றின் மென்றுகள் போன்று இருந்ததால் -திருவரங்கக் கலம்பகம்
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி -திரு விருத்தம் -கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை
கோடு பிறையையும் பார் களங்கமாகவும் –
—————————————————————
இது முதல் நான்கு பாசுரங்கள் ஸ்ரீ நரசிம்மாவதார வைபவம் –
ஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா
நீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்
ஊடும் புறத்தினும் உண்மை எவ்வாறு இவ்வுலகு அறியும்
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே –29-
அளந்திட்ட தூணை அவன் தட்ட வாங்கே வளர்ந்திட்ட வாள் உகிர்ச் சிங்க யுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகள்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம்-ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
சுரர் அசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர் வானில் பகலில் இரவினில் உள் புறம்பில் பெரும் படையில் தான் சாகா இரணியன் தனிப் பிரகலாதன்
தர்க்கித்து உண்டு என்ற தூணில் நரகரியாய் பொழுது புகு நேரம் தன்னிலே நாடி உதித்து உயர் வாசப் படி மீதேறி
இறநியனைத் தொடை மிசை துகிரினாலே இரு பிளவாக்கினை யரியே எம்பிரானே –
——————————————————————
மறந்த மறையும் மழுங்கிய மந்திரமும் மகமும்
இறந்த தெய்வங்களும் எல்லாம் முன் எங்கு உறைந்து எங்கு இயன்ற
அறம் தரும் கோயில் அரங்கன் அவ் ஆள் அரிக்கு ஆளரியாய்ப்
பிறந்த பின் அன்றோ பிறந்து பெருகிப் பிறங்கியதே –30-
மகமும் -யாகங்களும்
முக்கணான் எண் கணானும் உளரி யாயிரம் கணானும் திக்கணாம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடித் புக்கு
நாடறி குறா மற்றிரிகின்றார் புகுந்து மொய்த்தார்
எக்கணால் கண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் -கம்பர்
அந்தியம் போதில் அறி உருவாகி அரியை அழித்தவன் -ஆளரிக்கு ஆளரியாய் –
—————————————————————
அடிக்கண்டிலர் அதலத்தவர் ஐம்முகனோடு அமரர்
கடி கண்டிலர் மலை வான் இவர்ந்ததும் கமலத்து அயனார்
முடி கண்டிலர் அண்ட மா முகடு ஏறியும் மூதுணர்ந்தோர்
படி கண்டிலர் அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே –31-
சிங்கப் படி தனக்கே அடிக்கண்டிலர் அதலத்தவர் -கீழ் உலகத்தில் உள்ளவர் திருவடிகளைக் கண்டார் இல்லை
சிங்கப் படி தனக்கே ஐம்முகனோடு அமரர் கடி கண்டிலர் மலை வான் இவர்ந்ததும் –
சிங்கப் படி தனக்கே சிவனும் மற்றைத் தேவர்களும் முறையே கைலாச கிரியில் மேலும் சுவர்க்க லோகத்திலும் உயர விருந்தும் கடி கண்டிலர்
சிங்கப் படி தனக்கே கமலத்து அயனார் முடி கண்டிலர் அண்ட மா முகடு ஏறியும்
சிங்கப் படி தனக்கே திரு நாபி கமலத்து தோன்றிய பிரமதேவரும் அண்ட கோளத்தின் மிக உயர்ந்த உச்சியிடத்தில் ஏறி இருந்தும் திரு முடியைக் கண்டார் இல்லை
சிங்கப் படி தனக்கே மூதுணர்ந்தோர் படி கண்டிலர் -பலவற்றையும் அறிந்த பழைய பெரியோரும் அளவைக் கண்டார் இல்லை –
அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே –அரங்க நாதர் கொண்ட நரசிங்க உருவத்துக்கு –
நரசிங்க விஸ்வரூப பெருமை அருளிச் செய்கிறார் –
பிளந்த தூணும் ஆங்கே -பிறந்தது சீயம் பின்னே -வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல் அற்று மளந்த
தப்புறத்துச்செய்கை யார் யறிந்து யறைய கிற்பார் கிளர்ந்தது ககன மூட்டை கீழும் மேலும் –
மன்று அலந்துளப மாலை மானுடமடங்கல் வானில் சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படி யிற்றீண்ட நின்றதோர்
பொழுதின் அண்ட நெடு முகடு இட்டிருந்த முன்னோன் அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினால் –
நோக்கினார் நோக்கினார் முந்நோக்கு உறுமுக மங்கையும் -யாக்கையும் தாளுமாகி எங்கணும் தானேயாகி –
வாக்கினான் மனத்தினான் மற்று அறிவினால் அளக்கவாரா மேக்குயர் சீயம் தன்னை கண்டனர் வெருவுகின்றார் -கம்பர்
விண்டிடு தூணில் எழுந்து எழிலார் நரமீள வளர்ந்த செயல் எண்டவராலும் உணர்ந்து அறிதற்கு அரிது என்றிடில் யார் அறிவார்
அண்ட முகட்டின் வயங்கி யமர்ந்திடும் ஆதி இவ்வரியின் ஒளிர்
முண்டக வுந்தியின் வந்தது போன்றனன் முடி வறைக்கு எளிதோ -மகா பாகவதம்
—————————————————————-
அறியின் அரங்கர் முன் ஆளரி ஆகிய அப்பொழுது
கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ
தறியின் வயிற்றின் தகுவன் நெஞ்சும் சரபத்து உடலும்
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ தணிந்தது நீள் சினமே –32-
அறியின்-ஆராய்ந்து அறியும் இடத்து
அரங்கர் முன் ஆளரி ஆகிய அப்பொழுது
கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ
ஆடுகள் போன்ற அசுரர்களுடைய கோடி வெள்ளங்களையும் கொன்றதனாலோ
தணிந்தது நீள் சினமே —அவ்வளவினால் கோபம் ஆற வில்லை
பின்னை எப்பொழுது ஆறிற்று
தறியின் வயிற்றின் -தான் தோன்றிய தூணினது நடுவிடத்தைப் பிளந்தால் போலே
தகுவன் நெஞ்சும் -அசுரனான இரணியனது மார்பையும்
சரபத்து உடலும்-சிவபிரான் ஆகிய சரபத்தினது உடம்பையும்
நெறியின் வகிர்ந்த பின் அன்றோ -முறையே பிளந்த பின்பே அன்றோ அச்சிங்க பிரான் கோபம் தணிந்தது –
வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேலோர் முகத்தே சூழ் கருணையும் முனியும் தோன்றியவாறு
-கேழ் கிளரும் அங்க வேள் குன்ற வாழால் சரபத்தை பிளந்த சிங்க வேள் குன்றத்தினார்க்கு -நூட்ட்று எட்டு திருவந்தாதி
புக்க கருடனையோர் புன்மசகம் வென்றதிற மொக்கும் கனகன் உரம் கீண்ட மிக்க திறல் ஆளரியை பொன்னுக்காய்
அஞ்சிக் கிடந்த சிவன் கோள் விளைத்தான் என்னும் குறி –
———————————————————————–
இது முதல் ஐந்து கவிகள் திருவிக்ரமான வாமன திருவவதார வைபவம் அருளுகிறார் –
தார் ஏற்ற வெண் குடை மாவலி வார்க்கவும் தாமரை மேல்
சீர் ஏற்ற தொல் நான் முகத்தோன் விளக்கவும் செம்பொன் முடிக்
கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க
நீர் ஏற்ற வண் திருக் குறள் ஆகி நிமிர்ந்த அன்றே -33-
செம்பொன் முடிக் கார் ஏற்ற மேனி அரங்கேசர் கையும் கழலும் ஒக்க நீர் ஏற்றன -சமகாலத்தில் நீர் எற்றனவே
கையில் நீர் ஏற்றிய காரணமும் கழல் நீர் ஏற்றல் ஆகிய காரியமும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன
உதக ஜலமும் திருவடி விளக்கின ஜலமும் ஏகோதகமாம் படி வளர்ந்தது அல்லையோ
ஆலமர் வித்தின் அரும் குறள் ஆனான் -பேர் உருவைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு தானே அடி வைத்து ஆட்கொண்டு அருளும் உதார குணம் –
——————————————————————————-
தேமிக்க பச்சைத் துழாய் அரங்கேசர் திருக் குறள் ஆயத்
தாம் இப்புவனம் கிடந்த அந்நாள் மணல் சாகரம் சூழ்
பூமிப் புடை அளவிட்ட பொற்றாமரைப் பூம் கழற்கு
நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே –34-
நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே –
16000 யோஜனை உயரமும் -16000 யோஜனை பரப்பும் உள்ளசக்ரவாள பர்வதம் அழகிய சிலம்பு என்னும் அணியாகி நிற்றலைப் பெற்றதே –
சகரர் தொட்டலால் சாகரம் எனப் பெயர் தழைப்ப மகரவாரிதி சிறந்தது -கம்பர் –
———————————————————————
பூமரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலாங்கழலால்
பாமரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
காமரு மோலிச் சிகா மணி ஆகி கவுத்துவம் ஆய்
தேமரு நாபி அம் தாமரை ஆனது செஞ்சுடரே –35-
செஞ்சுடரே –சூரிய மண்டலம்
பழிப்பு இல் பெரும் காமரு மோலிச் சிகா மணி ஆகி -முடியில் உள்ள சிகா மணி ஆகி
மோலிச் சிகா மணி என்றது கிரீடத்தில் உள்ள நடு நாயக மணி என்றவாறு
அதன் பின்
கவுத்துவம் ஆய்
பிறகு
தேமரு நாபி அம் தாமரை ஆனது
முன்னம் குடை போல் -முடி நாயக மணி போல்-மன்னும் திலகம் போல் –
வாள் இரவி -பொன்னகலம் தங்கு கவுத்துவம் போல் அங்கண் உலகு அளந்தாற்காம்
———————————————————————–
ஓதப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உலகு அளந்த
பாதத்து நீர் விண் படி பிலம் மூன்றிலும் பால் புரை வெண்
சீதத் தரங்க மந்தாகினி ஆகி செழும் கங்கை ஆய்
மேதக்க போகவதி ஆகி நாளும் விழுகின்றதே –36-
விண் படி பிலம் மூன்றிலும் -ஸ்வர்க்க பூ பாதாள லோகங்கள் மூன்றிலும் முறையே மந்தாகினி கங்கை போகவதி ஆனதே
எழுமையும் கூடி ஈண்டிய பாபம் இறைப் பொழுதினில் அளவினில் எல்லாம் கழுவிடும் பெருமை கங்கை –
——————————————————————–
ஓலப் புனல் அரங்கேசர் பொற்றாள் பட்டு உடைந்த அண்ட
மேலக் காடாகத் தொளை வழியாக விழும் புனல் போய்
கோலத் திரு உருக் கொண்ட அந்நாள் குரம் பட்டு உடைந்த
மூலக் கடாகத் தொளையால் விழுந்தது முன் புனற்கே –37-
ஸ்ரீ வராக திருவிக்கிரம அவதாரங்களை சேர்த்து அருளுகிறார் -உலகத்தை எடுத்தும் அளந்தும் ஆண்ட அவதாரங்கட்கு ஒற்றுமை உண்டு இறே-
குரம் பட்டு உடைந்த -அந்த வராக நாயனாரது திருக் குளம்பு பட்டதனால் உடைந்த
மூலக் கடாகத் தொளையால் விழுந்தது முன் புனற்கே-
அடிப்பக்கத்தின் மூடியின் துளை வழியாகச் சென்று பழைமையான அக்கடல் இடத்திலேயே விழுந்திட்டது-
பார் அளவும் ஓரடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே -பொய்கை ஆழ்வார்
அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -நம்மாழ்வார்
மேல் எடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழ் உலகும் போய் கடந்து -திருமங்கை ஆழ்வார்
நண்ணு பொற்றுகள் என நாகர் நாட்டோடு மண்ணகம் பொதிந்த தோர் பத மற்றோர் பதம் விண்ணகம் கடந்து போய்
விரிஞ்சன் நாடுறீஇ ஒன்ணிற அண்டமும் உடைய நீண்டதே -என்றும்
செங்கண் மால் மலர்ப்பதம் சென்ற மோழையில் துங்க வண்டத்தில் சூழ்ந்த நீள் கடல் போங்க வீழ்ந்து ஒழுகிய புனலை
யன்று கொல் கங்கை என்று இன்னமும் கழருகின்றதே -என்றும் ஸ்ரீ கூர்ம புராணம் செய்யுள்கள்
——————————————- ———————-
ஸ்ரீ பரசுராம அவதார வைபவம் –
மறிக்கும் கயல் கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்
பறிக்கும் கபடன் பணிப் புயமோ அவன் பைங்கடகம்
செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண் புயமோ அவற்றைத்
தறிக்கும் திறல் மழுவோ அரங்கா சயத்தார் உடைத்தே –38-
மறிக்கும் கயல் கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப் பறிக்கும் கபடன் பணிப் புயமோ
பிறழ்கின்ற கயல் மீன் போன்ற கண்களை யுடைய அம்பிகையை இடப்பக்கம் கொண்ட சிவபிரான் வசிக்கும் பெரிய
வெள்ளி மலையான கைலாசத்தை -அடியோடு பெயர்த்து எடுத்த வஞ்சகனான இராவணனது பருத்த இருபது கைகளோ –
எட்டினால் குடிமியைப் பிடிப்பது -எட்டா விட்டால் காலைப் பிடிப்பது -அருவி யம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப
வெருவிய வெற்பு அரையன் பாவை பெருமான் அணியாகம் ஆரத் தழுவினாள்-
அவன் பைங்கடகம் செறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண் புயமோ
இராவணனுடைய பசும் பொன்னால் ஆகிய கடகம் என்னும் வளையை அணிந்த கைகளை வலி அழித்து நெருக்கிக் கட்டிய
வலிய கார்த்த வீர்ய அர்ச்சுனனது ஆயிரம் கைகளோ
அவற்றைத் தறிக்கும் திறல் மழுவோ அரங்கா சயத்தார் உடைத்தே –
அந்த ஆயிரம் கைகளையும் வெட்டித் தள்ளிய ஸ்ரீ பரசுராமனது கோடாலிப் படையோ -இவற்றில் எதி வெற்றி மாலையை யுடையது –
திறம் மழு சயத்தார் உடைத்து –வென்று மா மழு வேந்தி -செரு நுதலூடு போகி யாவராவி மங்க மழு வாளின் வென்ற திறலோன் -திருமங்கை ஆழ்வார்
திசையுறு கரிகளைச் செற்றுத் தேவனும் -வசையுறக் கயிலையை மறித்து வானெலா மசையுறப் புரந்தரன் அடர்த்த தோள்களின் இசையினைத்
தும்புரு விசையினத்தவே ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை ஊசி வேரோடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்
அரண் தரு திண் தோள் சால யுள வெனில் ஆற்றல் உண்டோ கரண்ட நீர் இலங்கை வெந்தை சிறை வைத்த கழல் கால் வீரன்
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியதோர் பருவம் தன்னில் இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்-கம்பர்
—————————————————–
இது முதல் எட்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதார வைபவம்
மாதண்டம் மேவும் கரத்தர் அரங்கர் வடமிதிலைக்
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது குவட்டு வெள்ளி
வேதண்டம் மேய மழுவாளி நாணினன் வென்றி கண்டு
மூதண்டம் அஞ்சும் மழுவாளி கோபம் முதிர்ந்ததுவே –39-
மாதண்டம் -பெரிய கௌமோதகி-தண்டம் மேவும் கரத்தார் என்றும் ஏவும் கரத்தார் என்றும் பிரிக்கலாம்
கோதண்டம் வேகம் பிறப்பித்த போது -வில்லை வளைத்து முறித்து அதில் இருந்து உக்ரமான ஓசையை உண்டாக்கிய பொழுது
மழு ஆயுதம் உடைய சிவபிரான் வெள்கினான் -கோடாலிப் படையை உடைய பரசுராமன் கோபம் மிக்கது –
———————————————————–
மாகம் பிலம் திக்கு இமையோர் உலகம் மழுவுடையோன்
நாகம் நல் நாடு அளவாக பல் நாகம் நடுங்க அம்பு
வேகம் கொடு தொடர பறந்து ஓடியும் மீண்டு வந்து
காகம் சரண் என்ன நம் பெருமாள் உயிர் காத்தனரே –40-
மாகம்-பெரிய ஆகாயம்
பிலம்-பாதாள லோகம்
திக்கு இமையோர் உலகம்
மழுவுடையோன் நாகம் -மழு ஏந்திய சிவபிரானது கைலாசம்
நல் நாடு அளவாக பல் நாகம் -பல் திசைகளில் உள்ள பிராணிகளும் –
சித்ர கூடத்து இருப்ப –அத்திறமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -பெரியாழ்வார்
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படியான கிருபாவாளன்-சீல குணத்தாலே ரமிப்பிக்க வல்லவன்
அங்கதஞ்சி நடுங்கி யயன் பதியண்மி இங்கு நின் வர வென்ன கனல் எய்த மங்கை பங்கனோடு எண்டிசையும் செல்ல
மற்றோர் தங்கள் தங்கள் இடங்கள் மறுத்தமை தைப்பாய் -என்றும்
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் ஏழு புல்லால் வேக வெம்படை விட்டது -என்றும் கம்பர் –
ஸ்ரீ இராமபிரானது ஆற்றல் அருள் சரணாகத ரஷகத்வம் பரத்வம் அருளிச் செய்கிறார் இத்தால் –
———————————————————–
மாதவர் உம்பர் பெருமாள் அரங்கர் வலி உணராது
ஆதவன் மைந்தன் அயிரத்த அந்நாள் இலக்கு ஆய நெடும்
பாதவம் ஏழும் உடனே நெடும் கனை பட்டு உருவ
பூதலம் ஏழும் எழு பாதலங்களும் புண் பட்டவே –41-
மாதவர்-மாதவன் திரு நாமம் -மா தவம் பெரிய தபம் செய்யும் முனிவர்களுக்கும் என்றுமாம்
உம்பர் பெருமாள் அரங்கர் வலி உணராது
ஆதவன் மைந்தன் -சூரிய குமாரன் ஸூ க்ரீவன்
அயிர்த்த அந்நாள் -சந்தேகித்த அக்காலத்திலே
இலக்கு ஆய நெடும் பாதவம் ஏழும்-மரா மரங்கள் ஏழும்
உடனே நெடும் கனை பட்டு உருவ -உடனே -சமகாலத்திலேயே
பூதலம் ஏழும் எழு பாதலங்களும் புண் பட்டவே –பூமி முதலிய மேல் உலகங்கள் ஏழும் அதலம் முதலிய கீழ் உலகங்கள் ஏழும் விரணம் அடைந்தன –
———————————————————-
ஒற்றைச் சரம் சுட்ட உட்கடல் போல் புறத்து ஓலம் இட
மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ -மத மா அழைக்க
அற்றைக்கு உதவும் அரங்கர் வெங்கோ பத்தை அஞ்சி அரன்
கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே –42-
ஒற்றைச் சரம் சுட்ட-ஒப்பற்ற ஸ்ரீ ராம பானம்
உட்கடல் போல் -இந்த உவர்ப்பு கடல் போலே
புறத்து ஓலம் இட -மற்றை கருப்பஞ்சாறு கடல் முதலான ஆறு கடல்களும்
ஆவரண ஜலமான பெரும் புறக் கடலும் அடங்கும்
அஸ்த்ர அக்னிக்கும் கோப அக்னிக்கும் அஞ்சி
மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ
-மத மா அழைக்க -ஸ்ரீ கஜேந்திர ஆள்வான் ஆதி மூலமே என்று கூப்பிட
அற்றைக்கு உதவும் அரங்கர் வெங்கோ பத்தை அஞ்சி
அரன் கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே –
——————————————————————-
கொங்கு உண்டு வண்டு அமர் தண் தார் அரங்கர் வெங்கோபமுடன்
பொங்கும் சரம் செய்த மாயம் என்னோ தன் புகழ் அடைய
மங்கும் படிக்கு மறம் செய் இராவணன் வாகினி கண்டு
எங்கும் குரங்கு எங்கும் ராமன் என்று ஏங்கி இரிந்திடவே –43-
வெங்கோபமுடன் பொங்கும் -இத்தை சரம் -அரங்கர் -விசேஷணம் என்று கொள்ளலாம் –
வாகினி -மூல பலம் என்னும் சேனை –
——————————————————————
பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் அது ஆயிரம் ஆடின் நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண் கிணி சற்று ஒலித்திடும் அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே –44-
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவல் ஆயிரம் படில் செழும் கவந்தம் ஓன்று ஆடும்
கானம் ஆயிரம் ஆயிரம் கோடிக்கு கவின் மணி கணில் என்னும் எனை யம் மணி ஏழரை நாழிகை யாடியது இனிதன்றே -கம்பர்
நாளில் ஏட்டில் ஓர் பாகம் -யாமம் -ஏழரை நாழிகை
——————————————————
சற்பத்து உறங்கும் அரங்கா உன் பாதம் தனை அடைந்த
நற்பத்தருக்கு ஒரு நாசம் உண்டோ நல மா மருத்தின்
வெற்பைக் கொணர்ந்த விறல் அனு மானும் அவ் வீடணனும்
கற்பத்து அளவும் அழியாது இருக்கவும் கற்பித்தையே –45-
————————————————————–
ஆவும் பயமும் அமுதும் ஒப்பு ஆன அரங்கருக்கு
மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ அவர் மெய் அருளால்
தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சரா சரங்கள்
யாவும் கிளையுடன் வைகுந்த யோகத்தில் ஆர்ந்திட்டவே –46-
ஆவும் பயமும் அமுதும் ஒப்பு ஆன அரங்கருக்கு -பசுவையும் -அதன் இடத்து பாலையும் அதன் இடத்து இனிமையும் போல் உள்ள அரங்கர்
அசித்தாகிய சரீரத்தில் சித்தாகிய ஜீவனும் அதன் இடத்தில் அந்தராத்மாவாக அரங்கர் என்றபடி
மேவும் புகழ் இன்னும் மேவும் கொலோ -வேறு யாருக்கும் உண்டோ
அவர் மெய் அருளால் தாவும் தரங்கத் தடம் சூழ் அயோத்திச் சரா சரங்கள் யாவும் கிளையுடன் வைகுந்த யோகத்தில் ஆர்ந்திட்டவே –
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி –
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
தாவும் தடம் -சரயு என்றபடி –
——————————————————————-
ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில்
ஒரு தாய் சொலச் சென்றது என் அரங்கா வையம் உய்யும் வண்ணம்
ஒரு தாய் உதரத்தில் ஓர் அறு திங்கள் உறைந்த பின்னை
ஒரு தாய் வயிற்றில் வந்து உற்றது எம்மாயம் உரைத்து அருளே –47-
சுரத்தில் -கொடிய காட்டில் -கொன்னவிலும் வெம்கானம்
மன்னவன் பணி யன்றாகில் நும் பணி மறுப்பனோ –இப் பணி தலை மேல் கொண்டேன் மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் –
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன சீற்றம் இலாதான் –
————————————————————————-
கதி பட்ட பொன்னி அரங்கேசர் ஆடு -கருந்திரை நீர்
நவின்றிடல் ஆகும் நலம் கெழு கூர் நுதி பட்ட நெட்டலத் தாலே நலம் கெழு –
-கூர் நுதி பட்ட நெடு அலத்தாலே -இழிந்திட நூற்றுவர் தம்
பதி -பட்ட கண் கலக்கம் தெரியாது பகருதற்கே -48
கதி பட்ட பொன்னி அரங்கேசர்
ஆடு -பலராம அவதாரத்தில் நீராடுகின்ற
கருந்திரை நீர் -யமுனை
நதி பட்ட பாடு -கலப்பை கொண்டு இழுத்ததனால் அடைந்த வருத்தம்
நவின்றிடல் ஆகும் நலம் கெழு கூர் நுதி பட்ட நெட்டலத் தாலே
நலம் கெழு -நன்மை மிக்க -கூர் நுதி பட்ட நெடு அலத்தாலே -கூர்மையான நுனி பொருந்திய நீண்ட கலப்பையினாலே
இழிந்திட நூற்றுவர் தம் பதி -ஹஸ்தினாபுரி
பட்ட கண் கலக்கம் தெரியாது பகருதற்கே -துன்பத்துக்கும் அலக்கண் என்பர் –
——————————————————————-
இது முதல் 25 கவிகள் ஸ்ரீ கிருஷ்ணாவதார மகிமை
பண்டு விழுங்கிய பாரும் திசையும் பனிக் கடலும்
சண்ட நெடும் கிரித்தானம் எல்லாம் சண்பகாடவி மேல்
மண்டு பெரும் புனல் சூழ் அரங்கேசர் தம் வாய் மலருள்
கண்டு மருவினள் சீர் நந்த கோபர் தம் காதலியே –49-
பண்டு விழுங்கிய -முன்பு கற்பாந்த காலத்திலேயே உட்கொண்ட
பாரும் திசையும் பனிக் கடலும் சண்ட நெடும் கிரித்தானம் எல்லாம்
சண்பகாடவி மேல் -சண்பகம் அடவி மேல்
மண்டு பெரும் புனல் சூழ் அரங்கேசர் தம்
வாய் மலருள் -செவ்வாம்பல் மலர் போன்ற திருவாயின் உள்ளே
கண்டு மருவினள் சீர் நந்த கோபர் தம் காதலியே —
வையும் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -வாயுள் வையம் கண்ட மட நல்லார்
மருவினள் -மகிழ்ந்து அக்குழந்தையை அணைத்துக் கொண்டாள் என்னவுமாம்
——————————————————————–
உன்னைக் களவில் உரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி போது அலை ஆழி மங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்று ஆர் என்று பேசுகவே –50-
அலை ஆழி மங்கை தன்னைப்-அலைகளை உடைய திருப் பாற் கடலில் தோன்றிய திருமகளை –
அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பூமி தேவியை சேர்ந்து அருள்கின்ற என்றுமாம்
பூ மடந்தையும் நில மடந்தையும் தேவியர் -பங்கய மின்னொடு பார் மகள் தேவி –
————————————————————————
கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply