ஸ்ரீ யதிராஜ விம்சதி -6-7-8-9-10-11-12– ஸ்லோஹங்கள் –ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

அவதாரிகை –

கீழ் சரணம் என்று பிரஸ்துதமான உபாய க்ருத்யம் இஷ்ட ப்ராபணமும் அநிஷ்ட நிவாரணமும் யாகையாலே
இஷ்டத்தை மூன்று ஸ்லோஹங்களாலே விண்ணப்பம் செய்து
மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே
நிவர்த்த நீயமான அநிஷ்டத்தை விண்ணப்பம் செய்யா நின்று கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் தோஷ பூயஸ்வத்தையும் விண்ணப்பம் செய்கிறார் –

அதில் பிரதமத்தில்
நீர் திரு மந்த்ரத்தினுடைய பத த்ரயார்த்த நிஷ்டையை பிரார்த்தியா நின்றீர் –
உமக்கு இதில் பிரேமமும்-தத் இதரங்களில் அருசியும் உண்டோ என்ன -அடியேனுக்கு இவை இரண்டும் இல்லை
தேவரீரே இவற்றையும் உண்டாக்கித் தர வேணும் என்கிறார்
அன்றிக்கே –
அஷ்டாஷாக்ரய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய -என்றவாறே
உமக்கு இது இல்லையோ என்ன
இல்லை என்கிறார் ஆகவுமாம் –

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

அல்பாபீத்யாதி
பிராப்தியையும் -போக்யதையும் விசாரித்தால் பரி பூரணமாக ப்ரேமம் செய்ய வேண்டும் விஷயத்தில் அடியேனுக்கு
அல்பாம்சமும் பிரேமம் இன்றிக்கே ஒழிவதே என்று இன்னாதாகிறார்
அல்பாபி
அப்ராப்த விஷயங்களில் பரி பூரணமான பிரேமத்தைச் செய்யும் அடியேனுக்கு பிராப்த விஷயத்தில் ப்ரேமம்
அல்பாம்சமும் இன்றிக்கே ஒழிவதே என்கிறார்

மே-
அப்ராப்தனாய் இருந்து வைத்து செய்யாது ஒழிந்தேனோ -பிராப்தனாய் இருந்து வைத்து காணும் செய்யாது ஒழிந்தது காணும் -என்கிறார்
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே –பகவச் சாஸ்திரம் -இறே
மே
தேவரீர் திருவடிகளிலே நிரவதிகமான ப்ரேமம் செய்யக் கடவ வம்சத்தில் பிறந்த அடியேனுக்கு என்னுமாம்

பவதீய –
அடியேனுடைய உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணுகிற தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்–
பிராப்தரான தேவரீர் சம்பந்திகளான -என்னுதல்-
உபகாரகர் அன்று என்று ஆறி இருக்கலாமோ –
அப்ராப்தர் என்று ஆறி இருக்கலாமோ -என்கிறார்

பதாப்ஜ பக்தி –
ஸ்வரூப அனுரூபமான திருவடித் தாமரைகளில் பக்தியானது –
பதாப்ஜ-
போக்யதை இல்லை என்று ஆறி இருக்கலாமோ என்கிறார்

நாஸ்தி –
இத்தால் பக்தியில் ஸ்வல்ப அம்சமும் இல்லை என்று பக்தி சப்த வாச்யத்தினுடைய த்வம்ச பிராக பாவங்களை
சொல்லுகை யன்றிக்கே அத்யந்தா பாவத்தை சொல்லுகிறது

அன்றிக்கே –
பவதீய பஜாப்ய பக்தி –
நல்லார் பரவும் -44- என்கிற பாட்டில் சொல்லுகிறபடியே கரண த்ரயத்தாலும் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும்
சமஸ்த வித கைங்கர்யங்களைப் பிரார்த்திதுச் செய்ய வேண்டும் விஷயமாய்
தேவரீர் சம்பந்திகளான ஸ்ரீ ஆழ்வான் முதலானோர் திருவடிகளில் பக்தியானது அடியேனுக்கு அல்பாம்சமும் இல்லை என்னவுமாம்
ஆக பிரதம பாதத்தால் பிரதம பதார்த்தம் இல்லை என்கிறது –

இவர் இப்படி சாநுதாபமாக விண்ணப்பம் செய்தவாறே -உமக்கு நம்மிடத்தில் பக்தி இல்லையாகில் உண்டாக்கித் தருகிறோம்
இதர விஷயங்களில் அருசி தான் உண்டோ என்ன -அதுவும் இல்லை என்கிறார் மேல்
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா -என்று
சப்தாதி விஷய அனுபவத்தில் கிடீர் அடியேனுக்கு ப்ரேமம் உண்டாகிறது -என்கிறார் –
போக ருசி –
விஷயம் போலே தானும் ஸ்லாக்யமாய் இருக்கை-அஸ்லாக்யமாக இருந்தாலும் –
அன்வஹம்
அது தன்னில் ஒரு கால் உண்டாய் கழிகை யன்றிக்கே தினம் தோறும் உண்டாகா நின்றது -என்கிறார்
ஏததே
அது தன்னிலும் -ஒருபடிப் பட்டு இருக்கை யன்றிக்கே ஸ்வயம் பிரயோஜனமாக அபிவிருத்தம் ஆகா நின்றது என்கிறார் –

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா –
விரோதி வாசனையும் இல்லாமையாலே சப்தாதி விஷயத்தில் பிரேமமானது அகுதோபயமாக அநு தினம்
அபிவிருத்தமாகா நின்றது என்கிறார்
அன்வஹம் ஏ ததே –
அஹோ ராத்ரங்களை இரண்டையும் சொல்லாமல் அஹஸ் சை மாத்ரம் சொன்னது பகல் முப்பதும் ஆசையை வளர்த்து
இரா முப்பதும் அனுபவித்தாலும் விடிய விடிய ஆசை வளரா நிற்கையாலே –
ஹா
பிராப்த விஷயத்தில் ருசி அல்பாம்சம் இல்லாமையையும் -அப்ராப்த விஷயத்தில் அநு தினம் அபிவிருத்தம்
ஆகிறபடியையும் நினைத்து ஐயோ என்று கிலேசிக்கிறார் —
இத்தால் சரமபதார்த்தம் இல்லை என்கிறது –

நீர் இப்படி கிலேசிப்பான் என்-இவை இரண்டுக்கும் அடி ஆராய்ந்து பரிஹரிக்கலாகாதோ என்ன –
அது பிரசித்தம் அன்றோ என்கிறார் –
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய –
இவை இரண்டுக்கும் அடி அடியேன் பண்ணி வைத்த பாபமே யன்றோ என்கிறார்
மத் பாபம் என்று
தாம் அறிந்ததாகச் சொல்லுகையாலே ப்ராமாதிகத்தை வ்யாவர்த்திக்கிறது
ஏவ காரத்தாலே –
த்விஷந்த பாப க்ருத்யாம்-ஷாட்யாயன ஸ்ருதி -என்கிறபடியே -ப்ராப்தமான சந்க்ராந்த பாபத்தை வ்யாவர்த்திக்கிறது
மத் பாபம் -என்று தாம் அறிந்ததாகவும் -தாம் செய்ததாகவும் தோற்றுகையாலே-அவை இரண்டும்
சந்திக்தம் -தள்ளி ஏவ காரத்திலே வ்யவச்சேதிக்கப் படுகிறது –

பாபமாகில் பிராயச் சித்த விநாச்யமாய் யன்றோ இருப்பது -நீர் பிராயச் சித்தங்களைப் பண்ணி போக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேனுக்கு கர்த்ருத்வம் உள்ளது பாபங்களிலே யாகையாலே பிராயச் சித்தங்களிலே அன்வயிக்க அவசரம் இல்லை என்று
பிராயச்சித்த அந்வய அநவகாசம் ஆகவுமாம் –
இத்தால் பிராயச்சித்த அந்வய அவகாச அசஹமான பாபமே காரணம் -என்கிறது –

மத் பாபம் என்கையாலே
லௌகிக பாபம் போலே அனுபவ விநாச்யமாதல் பிராயச்சித்த வி நாச்யமாதல் –
அன்றிக்கே
ஸ்வ ப்ரவ்ருத்தி சாமான்யத்துக்கு காரணமாய் -அனுபவ அநு தின வர்திஷ்ணுவாய் இருக்கும்
பாபம் என்று
பாப வைஷண்யத்தைச் சொல்லவுமாம் –
அன்றிக்கே –
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ் தின சம்சய -சுந்தர -38-46-என்கிறபடியே ஜ்ஞாதாம்சம் அல்பமாய்
அஜ்ஞ்ஞாதாம்சம் பஹூவாய் இருக்கும் பாபம் என்னவுமாம் –
ஹி-
இவ்வர்த்தம் அடியேன் சொல் கொண்டு அறிவது அன்றிக்கே ஜகத் விதிதமாய் யன்றோ இருப்பது -என்கிறார்

நிதானம்
பாப சேஷத்தால் பிறந்த பாபம் அன்றிக்கே பாபங்களுக்கு எல்லாம் மூலமான பாபம் -என்கிறார் –
நிதா நந்தவாதி காரண -அமரம் -இ றே

அமூஷ்ய
இம் மகா அனர்த்தத்துக்கு-இது ஒழிய மற்று ஓன்று காரணமோ என்கிறார்
பாப விஜாதீயமான ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் ஆனாலோ என்ன

நாந்யத்-
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் -அன்று -என்கிறார் –
பரம தயாளுவான ஈஸ்வரனுக்கு பர அனர்த்த அவஹமாய் இருப்பதொரு ஸ்வா தந்த்ர்யம் உண்டோ என்று கருத்து –
இத்தால் மத்யம பதார்த்தம் இல்லை என்கிறது –
ஆகில் நிலை நிற்குமே என்ன -நிவாரகர் இல்லாமையோ நிலை நிற்பது -என்ன -ஆகில் நிவாரகர் ஆர் என்ன –

தத் வாரய-
பிராயச் சித்த அனுபவங்களால் நசிக்கை யன்றிக்கே -அநு தின வர்திஷ்ணுவாய் பிரசித்தமான
அப் பாபத்தை தேவரீரே போக்கி யருள வேணும் -என்கிறார்
வாரய –
தேவரீருக்கு அசக்யமானது ஓன்று உண்டோ என்று விதிக்குத் தாத்பர்யம் -என் கொண்டு இந் நிர்பந்தம் என்னில்

ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –
பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு தேவரீர் சர்வஜ்ஞ்ஞர் அல்லீரோ –
அஸூததரையும் ஸூத்தராக்க வல்ல சக்தி உடையீர் அல்லீரோ
இது இஷ்டமாய் இருக்குமவர் அல்லீரோ -பர துக்கம் பொறுக்கைக்கு கிருபை உடையீர் அல்லீரோ
அடியேன் பாபத்தைப் போக்கி யருளாமைக்கு -என்கிறார் –
ஆர்ய
அடியேன் பாபத்தைப் போக்கும் விரகு அறிகைக்கு போரும்படி சர்வஜ்ஞ்ஞர் ஆனவரே -என்கிறார்
யதிராஜ
அறிந்தபடி செய்கைக்கு தக்க சக்தியை உடையவராய் -அத்தாலே விளங்குமவரே என்கிறார்
பிரகாசம் இஷ்ட சித்தி அதீநம் ஆகையாலே இது இஷ்டமாய் இருக்குமவர் என்கிறார்
தயைக சிந்தோ –
ஜ்ஞான சக்திகள் இரண்டும் கார்யகரமாம் படி தயா குணம் உடையவரே -என்கிறார்
தயைக சிந்தோ –
ராம பாணம் போலே தயை குறி யழியாமல் கிடப்பது தேவரீர் இடத்திலே என்கிறார்
தயைக சிந்தோ
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை -25-என்கிறபடியே அபரிச்சின்னமான தயா குணம் உடையவரே என்கிறார்
இதில் த்ருதீய பாதத்தாலே ஆகிஞ்சன்யத்தைச் சொல்லுகிறது –

————————————–

அவதாரிகை –

கீழ் இவர் இப்படி நிர்பந்திக்கையாலே-நீர் மனுஷ்யர் அல்லீரோ –
ஆஸ்திக்யாதிகளை உண்டாக்கிக் கொள்ளலாகாதோ என்ன
அடியேன் சரீர மாத்ரத்தாலே மனுஷ்யன் -வ்ருத்தியாலே பஸூ சஜாதீயனும் பஸூ வ்யாவ்ருத்தனும் -என்கிறார் –
வ்ருத்த்யா பஸூர்-இத்யாதியாலே

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
து சப்தம் -வ்யாவ்ருத்யர்த்தமாய் -அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது தம்முடைய மனுஷ்யத்வம் லோக விலஷணம் என்கை-அத்தை விவரிக்கிறார் –
அடியேன் வ்ருத்தியாலே பஸூ என்னவுமாய் -சரீரத்தாலே மனுஷ்யன் என்னவுமாய் இருப்பான் ஒருவன் என்கிறார் –
பஸூத்வே நரத்வம் லோக விலஷணம் இறே –
இத்தால் அடியேனுக்கு உள்ளது பஸூவுக்கு போலே ஆஹார நித்ரா பயமைதுந நிமித்தமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஒழிய
ஸ்வ ஆத்ம உஜ்ஜீவன ரூபமான பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் இல்லை -என்கிறது

ஆகில் உமக்கு வருத்தி யன்றோ சிஷணீயை-அத்தை சத்துக்களை அனுவர்த்தித்து சிஷித்துக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது அவர்கள் என் பக்கல் தாங்கள் வ்ருத்தி சிஷை
பண்ணி வைத்துக் கொள்ளும் படி காணும் என்கிறார் –
ஈத்ருசோ அபி –
இப்படி நர பஸூவாய் இருந்தேனே யாகிலும் -பிறர் அடியேனைக் கண்டால்
ஐயோ -இவன் மனுஷ்யனாய் இருந்து வைத்து தத் அநு ரூபமான சாஸ்திர வச்யதா ஜ்ஞானம் இன்றிக்கே ஒழிவது என்று
தயை பண்ணும்படி வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
அவர்கள் இவன் சர்வஜ்ஞன என்னும் படி காணும் என்னும் படி வர்த்தித்தது -என்கிறார்

ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம் -இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ
நித்ய நிர்தோஷமாய்-ஸ்வத பிரமாணமாய் -என்றும்
ஒக்க -குரு முக ஸ்ரவண சித்தமான ஸ்ருதியாலும்-
தத் உப ப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரங்களாலும்-
சாந்தோ தாந்தோ -ப்ருஹத -6-4-23-இத்யாதிப்படியே சம்சய விபர்யயம் அற
பிரதிபாதிக்கப் படா நின்றுள்ள சமஸ்த ஆத்ம குணங்களுக்கும் வகுத்த இடம் இவன் என்று அறுதி இட்டு
இந்தளத்தில் தாமரை பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே இப்படி இருப்பான் ஒருவன் உண்டாவதே என்று
ப்ரீதியுடனே அல்பஜ்ஞ்ஞர் அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஸ்ருத்யாதிகள் அடைய அர்த்தங்களை யாதாவாக அறியும்படியான
ஜ்ஞான சக்த்யாதிகளை யுடையவர்களும் தங்களிலே தாங்கள் விஸ்வாச பூர்வகமாகச் சொல்லுகையே பிரயோஜனமாக
ஸ்வ வ்ருத்தியை தேவரீர் சந்நிதியிலே விண்ணப்பம் செய்யும் தசையிலும் பர வஞ்சனத்திலே
அத்யாதர விசிஷ்டனாய்க் கொண்டு இவ்விபூதியில் வர்த்தியா நின்றேன் –

வஞ்சன பர –
அவர்கள் அடியேனுடைய பாஹ்யாகாரத்தில் ஆதாரத்தைப் பண்ணுமாபோலே யாய்த்து அடியேன் அவர்களை
வஞ்சிக்கையில் பண்ணும் ஆதாரமும் -என்கிறார் –
அத்யாபி வஞ்சன பர –
இப்படி விண்ணப்பம் செய்கிறதும் ஒரு வஞ்சனா விசேஷம் என்கிறார்
வஞ்சன பர –
இதுவாய்த்து வ்ருத்தியால் யுண்டான பஸூவில் வ்யாவ்ருத்தி -இதுக்கு ஹேது ஏது என்ன

அத்ர
இவ்விபூதியில் இருப்பாய்த்து -என்கிறார் –

யதீந்திர –
ஜிதேந்த்ரியரில் தலைவராகைக்கும் அடியேன் பர வஞ்சன பரனாகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு என்கிறார்
அன்றிக்கே –
இத்தால் பெற்ற பலம் ஏது என்ன
அத்ர வர்த்தே –
பத்தும் பத்தாக சம்சாரத்துக்கு ஆளானேன்

யதீந்திர வர்த்தே-
தார்மிகர் கரையில் இருக்க பெருக்க்காற்றில் மூழ்கிப் போவார் கூவுமா போலே
தாம் சம்சார ஆர்ணவ நிமக்னராய் -தத் உத்த்ரணதஷரான- ஸ்ரீ எம்பெருமானாரைக் கண்டு –
தேவரீர் சந்நிஹ்தராய் இருக்க அடியேன் இப்படி சம்சார சாகர நிமக்னன் ஆவதே என்று கூப்பிடுகிறார் –

ப்ரவக்தும் வஞ்சன பர –
சாஸ்த்ரார்த்தங்களை அறிந்து வைத்து -அனுஷ்டியாமல் பர வஞ்சனம் பண்ணுகிற அடியேன் நாஸ்திகன் ஆகையாலே
அடியேனை ஒரு நாளும் திருத்த லாகாது -என்று கருத்து –
அன்றிக்கே –
து -சப்தம் –
வ்யாவ்ருத்யர்த்தமாய் -அஹம் து -என்று தம்முடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறார் –
அதாவது மனுஷ்யர் என்கிற பிராந்தி விஷயனான அடியேர் மனுஷ்யன் அன்று என்கை –
ஆனால் பின்னை யார் என்னில்

பஸூ –
பஸூ என்கிறார்
உம்மிடத்தில் தத் வ்யாவ்ருத்தி தோற்றா நின்றதே என்ன
நர வபு ப ஸூ
அது தன்னிலும் விஜாதீய பஸூ என்கிறார் –
அதாவது பாஹ்யமான சதுஷ் பாத்த்வம் இல்லை யாகிலும் ஆந்தரமான அஜ்ஞ்ஞானம் உண்டு என்கை –
ஜ்ஞா நேன ஹீன பஸூபிஸ் சமான -என்கிறபடியே த்விபாத்வ ப ஸூவும் உண்டு என்கிறார் ஆகவுமாம் –
இத்தால் பிரயோஜக ஜ்ஞான பாவ பஸூத்வம் அடியேன் இடத்தில் உண்டு என்கிறார் –

அஹம் நரவபு ப ஸூ –
பஸூ வான வடியேன் த்விபாத் பஸூ வாகையாலே –
கேவல நரனும் அன்று -கேவல ப ஸூ வும் அன்று -உபய வ்யாவ்ருத்தன் என்கிறார்
இத்தால் கேவல நரனைப் போலே சாஸ்திர வஸ்யனும் அன்றிக்கே
கேவல பஸூவைப் போலே கட்டவும் விடவுமாம் படி பர வச்யனும் அன்றிக்கே –
ஸ்வேச்சாரியாய் இருப்பான் ஒருவன் என்கிறது
இத்தால் சாத்ய சித்த உபாயங்களுக்கு அநதிகாரி என்கிறது -ஆகில் உமக்கு ஜ்ஞானம் அன்றோ வேண்டுவது –
அத்தை சத்துக்களை அநு வர்த்தித்து உண்டாக்கிக் கொள்ள லாகாதோ என்ன –
அடியேன் வ்ருத்தியாலே அவர்களை வஞ்சித்துக் கொண்டு இருப்பது
அவர்கள் தாங்கள் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி அடியேன் பக்கல் பண்ணி வைத்துக் கொள்ளலாம் படி காணும் என்கிறார் மேல்

ஈத்ருசோ அபி
இப்படி நர ப ஸூ வ்யாவ்ருத்தனாய் ஜ்ஞான அபாவ நிபந்தனமான பஸூ த்வம் உடையேனாய் இருந்தேனேயாகிலும்
தத் அநு ரூபமான பாஹ்ய ஆகாரத்தோடு வர்த்தித்தேனோ -அதுவும் இல்லை –
தத் விருத்தமாய்க் காணும் வர்த்தித்தேன் என்கிறார் –

வ்ருத்த்யா
கேவல பாஹ்ய ஆகாரத்தாலே கிடீர் அவர்கள் இப்படி சாரஜ்ஞ்ஞர் என்று தாங்கள் விஸ்வாச பூர்வகமாக சொல்லும் படி
காணும் அவர்களை வஞ்சித்தேன் -என்கிறார் –

வ்ருத்த்யா அத்யாபி வஞ்சன பர –
இப்படி தேவரீரை அனுவர்த்தித்துப் போருகிறதும் வஞ்சனா விசேஷம் என்கிறார்

அத்ர யதீந்திர வர்த்தே –
தேவரீர் இவ்விபூதியிலே ஜிதேந்த்ரியரில் தலைவராய் வர்த்திக்குமா போலே அடியேன்
வஞ்சகரில் தலைவனாய் வர்த்திக்கும் படி என்கிறார் –

யதீந்திர வர்த்தே –
தேவரீருக்கு இந்த்ரிய ஜயத்தால் பிறந்த ஐஸ்வர்யம் தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இருக்க
அடியேன் இந்த்ரிய பரவசனாய் சம்சாரத்துக்கு ஆளாவதே என்கிறார் –

—————————————————————————–

அவதாரிகை –

நீர் சரணாகதர் அன்றோ -உமக்கு ஆநு கூல்யாதிகள் இல்லையோ -அவை ஜ்ஞான கார்யங்கள் அன்றோ என்ன
அவை விபரீதமாய்க் காணும் இருப்பது என்கிறார் -துக்கா வஹோ அஹம்-இத்யாதியால் –

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணா கதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –-8-

துக்கா வஹோ அஹம் –
இது வாய்த்து அடியேனுடைய ஆனுகூல்ய சங்கல்ப்பம் –
சர்வ பிரகாரத்தாலும் ஆனுகூல்ய சங்கல்பம் செய்கைக்கு யோக்யமான விஷயத்தில்
ப்ராதி கூல்யம் செய்கை மாதரம் அன்றிக்கே
ப்ராதி கூல்ய காரணத்தால் உண்டான துக்கத்தை தேவரீர் அனுபவிக்கும் படி பண்ணினேன் -என்கிறார் –
துக்கா வஹோ அஹம் –
ஆனுகூல்யம் செய்கையை இட்டு நிரூபிக்கை தவிர்ந்து துக்காவஹன் என்றாய்த்து அடியேனுக்கு நிரூபகம் இருக்கும் படி
அஹம் –
இப்படியானது தான் மற்று ஆரேனும் ஒருவன் என்று ஆறி இருக்கலாமோ
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாசாய -என்கிறபடியே தேவரீர் திருவடிகளிலே சமஸ்த வித கைங்கர்யங்களையும் செய்கைக்கு
இட்டுப் பிறந்த அடியேன் காணும் துக்காவஹன் என்னலாம் படி யாவது –

அநிசம்
இது தான் ஒரு காலத்தில் அன்றிக்கே ஸ்வரூபம் உள்ளதனையும் இதுவே யாத்ரை யாய்த்து என்கிறார்
இப்படி துக்கவஹனாய் இருந்தது யாருக்குத் தான் என்னில்

தவ
மற்றை யாரேனும் விஷயத்திலே யாகில் ஆறி இரேனோ –
காமாதி தோஷ ஹரம்-என்று கீழ்ச் சொன்னபடியே ஆஸ்ரயித்து துக்க நிவர்த்தகரான தேவரீர்
விஷயத்திலே கிடீர் அடியேன் துக்கத்தைச் செய்வது
தவ துக்கவஹா –
இதுவாய்த்து அடியேன் செய்யும் பிரத்யுபகாரம் என்கிறார் –
அன்றிக்கே –ரிபூணாமபி வத்சலா என்கிறபடியே
குற்றம் செய்தவர்கள் திறத்திலும் வத்சலரான தேவரீருக்கு என்னுமாம் –

துஷ்ட சேஷ்ட
இப்படி உபகாரகர் விஷயத்தில் துக்கம் செய்வது மாநசிகமாக வன்றிக்கே காயத்தாலும் துர்வ்யாபாரங்களை செய்தாயிற்று
துக்கத்தை உண்டாக்குவது என்கிறார் -அவை யாவன -தேவதாந்திர பஜநாதிகள்
துஷ்ட சேஷ்ட
மானசிகமாகவும் துக்கம் செய்ய நினைக்க ஒண்ணாத விஷயத்தில் அடியேன் காயிகமாக துர்வ்யாபாரங்களை
செய்தாய்த்து துக்கத்தைச் செய்வது என்கிறார்
இது தனக்கு அடி என் என்ன

சப்தாதி போக நிரத-
அனுதபிக்கைக்கு மனஸ்ஸூ தான் இல்லை –
அது சப்தாதி விஷயங்களில் மிகவும் ஆசக்தமாகைக்கு த்வாரமாய்த்து என்கிறார் –ரதி -மன கார்யம் இறே
நீர் சப்தாதி விஷய பிரவணராய் நிந்திதங்களைச் செய்தீர் ஆகில் நமக்கு துக்கா வஹம் ஆகும் படி எங்கனே என்ன –

சரணாக தாக்ய-
சரணாகதன் தன குறை சரண்யனது அன்றோ –
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றும் –
த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம -என்றவனோடு பழகினவன் அன்றோ தேவரீர்
சரணா கதாக்ய –
பிரசித்தி மாத்ரமே யாய்த்து உள்ளது
சரணா கதாக்ய –
தேவரீர் துக்கப் படுக்கைக்கு போரும் -அதில் வ்யுத்பத்தி இல்லை என்கிறார் ந நாம்நி வ்யுத்பத்தி இறே
உமக்கு சிஷ்ட பரிக்ரஹம் உண்டே -அது ஆனுகூல்யாதிகளிலே ஏக தேசம் அன்றோ என்ன
அது அடியேனுடைய வஞ்சன சாமர்த்தியத்தால் உண்டான இத்தனை போக்கி தத்யம் அன்று என்கிறார் மேல் –
வஞ்சித்த படி தான் எங்கனே என்ன

தவ பாத பக்த இவ
அடியேனை சிஷ்டர் பரிக்ரஹிக்கைக்கு அடியேன் அனுஷ்டித்த உபாயம் –
தேவரீர் திருவடிகளிலே ப்ரீதி உள்ளவன் போலே வர்த்தித்தது –
தத் பின்னத்வே சதி தத் கத பூயோ தர்மம் இறே -சாத்ருச்யம்
தத் பேதம் –
பக்தி இல்லாமை –தத் கத பூயோ தர்மம் -பக்திமான்கள் செய்யும் செயல்கள் –
அவை யாவன ஸ்வர நேத்ராங்க விக்ரியாதிகள்

சிஷ்ட ஜனக மத்யே –
ஈவ்வநுகார மாத்ரத்தாலே பிரமாண பரதந்த்ரரானவர்கள் அடியேனை மெய்யே தேவரீர் சம்பந்தியாக
பிரதிபத்தி பண்ணி ஸ்வ கோஷ்டியிலே புகுர விட்டார்கள் –

மித்யா சராமி –
அவ்வளவிலும் ஒரு விசேஷம் இன்றியே அக் கோஷ்டியின் நடுவே கோமுக வ்யாக்ரம் போலே
அவர்கள் மேல் மேலும் விஸ்வசிக்கும் படி அன்ருதத்தையே அனுஷ்டியா நின்றேன் –
அதாவது பூர்வ அநு காரத்தை விடாது ஒழிகை –

சிஷ்ட ஜநௌக மத்யே மித்யாசராமி –
ஒருவர் இருவர் அன்றிக்கே மஹா சங்கமான சிஷ்ட ஜனங்கள் உடைய நடுவில் அடியேன்
அன்ருத்தத்தையே அனுஷ்டியா நின்றேன் என்கிறார் –
இத்தால் மஹா ஜனோ யேன கதஸ் ஸ் பந்தா –வன பர்வம் -313-17-என்கிற மார்க்கத்தையும் தப்பினேன் -என்கிறது –
அதாவது பாவ பந்தம் இல்லாமை –

யதிராஜ
இக்கோஷ்டிக்கு நிர்வாஹகர் தேவரீர் என்று அறிந்து வைத்துச் செய்யும் வஞ்சனத்தை தவிருகிறிலேன்-
அன்றிக்கே –
தேவரீர் இக் கோஷ்டியின் நடுவே இந்த்ரிய ஜயத்தால் புகர் பெற்று சஞ்சரிக்குமா போலே யாய்த்து
அடியேன் வஞ்சனத்தால் புகர் பெற்று சஞ்சரிக்கும் படி என்கிறார் ஆகவுமாம்
அங்கனும் அன்றிக்கே –
தேவரீர் இக்கோஷ்டியின் நடுவே தத்யத்தை ஆஸ்ரயித்து புகர் பெறுமா போலே யாய்த்து
அடியேன் மித்யா சரணத்தாலே புகர் பெறும்படி என்கிறார் ஆகவுமாம் –
நம்மை இக்கோஷ்டிக்கு நிர்வாஹகராக அறிந்து வைத்து பயமும் இன்றிக்கே இப்படி வஞ்சனத்தை செய்வான் என் என்ன

ததோ அஸ்மி மூர்க்க –
ஆகை இறே அடியேன் மூர்க்கன் ஆகிறேன் -என்கிறார்
மூர்க்கோ அஸ்மி
இம் மௌர்க்யம் அடியேனுக்கு ஸ்வரூபம் என்கிறார் –
ஹித அஹித விவேகம் இன்றிக்கே பிடித்தது கை விடாமல் இருக்குமவனே
மூர்க்கனாவது –மூர்க்க வைதேய பாலிஸா -என்று இறே அமர கோசம் –

—————————————————————————-

அவதாரிகை –

கீழும் மேலும் ஸ்வ கதமாக அனுசந்திக்கிற வஞ்சநாதி தோஷங்களுக்கு எல்லாம் நிதானத்தை விண்ணப்பம் செய்கிறார் –
நித்யம் த்வஹம் இத்யாதியால்
அன்றிக்கே –
இவர் மித்யாசராமி -என்றவாறே -நீர் பிறர் விஸ்வசிக்கும் படி மித்ரா வேஷத்தை தரித்து திரியா நின்றீர் யாகில்
உமக்கு குரு மந்திர தேவதைகளில் விஸ்வாசம் இருக்கும் படி எங்கனே என்ன –
ஐயோ அடியேனுக்கு இவ் விஷயங்களில் விஸ்வாசம் இல்லாமை மாதரம் அன்றிக்கே
அவ் விஷயங்களை பரிபவியா நின்றேன் -என்கிறார் –

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –9-

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம் –தத்தேவதாமபி
யாவதாத்மா பாவியாக ஸ்லாக நீயமான விஷயங்களை கிடீர் அடியேன் நித்தியமான பரிபவிப்பது

அஹம் து
என்று பரிபவிக்கிற தம்முடைய வை லஷண்யத்தைச் சொல்லுகிறார் –
அதாவது சம்சாரிகளிலும் முமுஷூக்களிலும் வேறு பட்டு இருக்கை-
அதாவது சம்சாரிகள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் அல்லாமையாலே குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பார்கள்
முமுஷூக்கள் ஸ்வரூப ஜ்ஞ்ஞர் ஆகையாலே ஸ்லாகியா நிற்பார்கள்
அடியேன் ஸ்வரூப ஜ்ஞனாய் இருந்து வைத்து பரிபவியா நிற்பன் என்கிற இதுவாய்த்து அடியேன் வை லஷண்யம் –

நித்யம் து பரிபவாமி
உச்சி வீடு விடுமா போலே அல்ப கால விச்சேதமும் இன்றிக்கே பரிபவியா நின்றேன்

அஹம் து நித்யம் பரிபவாமி
லோகத்தில் உள்ளவர்கள் ப்ரம ப்ரமாதிகளாலே காதா சித்கமாக பரிபவிப்பார்கள் ஆகில் அடியேன் அப்படி இன்றிக்கே புத்தி பூர்வகமாக
யாவத் காலமும் பரிபவியா நின்று கொண்டு அதில் நின்றும் கை வாங்குகிறிலேன்
அஹம் து நித்யம் பரிபவாமி
லௌகிகரும் கூட நித்யமாக ஆதரிப்பார்கள் ஆகில் அடியேன் நித்யமாக பரிபவியா நிற்பன் என்கிறார்
து சப்தம்
ஏவ காரார்த்தமாய் அடியேனைப் போலே நித்தியமாய் பரிபவிப்பார் மற்று ஒருவர் இல்லை என்கிறார் ஆகவுமாம் –
இப்படி பரிபவிக்கிறது தான் எவற்றை என்னில்

குரும் ச மந்த்ரம் தத் தேவதாமபி –
ஸ்வ உபதேசாதிகளால் தேஹாத்மா அபிமானம் முதலான அஜ்ஞ்ஞானத்துக்கு நிவர்த்தகனாய் –
ந குரோர பரஸ் த்ராதா-என்கிறபடியே
இவன் தனக்கு சர்வ வித ரஷகனான ஆசார்யனையும் –
மந்தாரம் த்ராயதே இதி மந்திர -என்கிறபடியே
ஸ்வார்த்த பிரகாச நத்வாரா -இவன் தனக்கு ஸ்வ ஆச்சார்ய உபதேஷ்டார்த்தங்களில் விஸ்ம்ருதியும்-
தத் அனுரூபமான அனுஷ்டான ப்ரஸ்யுதியும் வாராமல்
ரஷகமான மந்தரத்தையும்
அம் மந்த்ரத்துக்கு உள்ளீடாய் ஸ்வ ஆசார்யனாலே இவ்வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியாக உபதேசிக்கப் பட்ட தேவதையையும்
கிடீர் அடியேன் பரிபவிப்பது -என்கிறார் –

சகாரம்
சமுச்சாயார்தமாய் -குரு மந்திர தேவதைகளையும் என்று சமுச்சயிக்கிறது
அபி சப்தம்
விரோதார்த்தமாய் –யஸ்ய தேவே பரா பக்திர் யதா தேவே ததா குரௌ–ஸ்வேதா -6-23-என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர ப்ரதே குரௌ பத்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
இச் சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு பிரதம காரணமாக விதிக்கப் பட்ட பக்திக்கு விஷயமான குரு மந்திர தேவதைகளையும்
அதுக்கு எதிர் தட்டாக பரிபவியா நின்றேன் -என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –

இதில் குரு பரிபவமாவது
கேட்ட அர்த்தத்தின் படி நடவாது ஒழிகையும்-அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –
மந்திர பரிபவமாவது –
அதின் அர்த்தங்களின் விஸ்ம்ருதியும் -விபரீதார்த்த பிரதிபத்தியும்
தேவதா பரிபவமாவது
கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் -இதர விஷயங்களில் பிரவணம் ஆக்குகையும் –
இவை இறே அடியேனுக்கு உள்ளது -என்று கருத்து –

இப்படி இருந்து பரிபவிக்கையில் பயம் தான் இல்லையோ என்ன
ந கிஞ்சித ஹோபி பேமி –
ந கிஞ்சித்
அல்பாம்சமும் பயப்படுகிறது இல்லை –
லோகத்தில் புராண வைராக்கியம் போலே -ஸ்ரவண தசையில் பயம் உண்டாகலாம் இறே –
அதுவும் இல்லை அடியேனுக்கு என்கிறார்
அஹோ
தம்முடைய நிலை தமக்கு ஆச்சர்யமாகத் தோற்றுகையாலே-அஹோ -என்கிறார்
அன்றிக்கே –
இப்படி பிராப்த விஷயங்களைப் பரிபவித்தாலும் பரிபவித்தோம் என்கிற பயம் அல்பாம்சமும் இல்லாது ஒழிவதே
என்று வியசனப் படுகிறார் என்றுமாம்

கிஞ்சித் அபி ந பிபேமி -என்ன வேண்டி இருக்க –
முன்னே ந கிஞ்சித் -என்கிறது –
நிஷேத்யமான பய லேசத்தினுடைய அத்யந்தா பாவத்தைப் பற்ற

மத்யே -அஹோ -என்று பிறந்த ஆச்சர்ய விஷாதங்கள் உள் அடங்காமையாலே –
நீர் இப்படி குரு மந்திர தேவதைகளை பரிபவிப்பது தான் பிறர் அறியும்படியாயோ என்ன கூடமாய்க் காணும் என்கிறார்

இத்தம் சடோப்ய –
கீழ்ச் சொன்ன படியே குரு மந்திர தேவதைகளை கூடமாய் பரிபவித்து பய லேசமும் இன்றிக்கே இருந்தேனே யாகிலும்
அசடவத் –
அது பிறர் நெஞ்சில் தட்டாத படி கரண த்ரயத்தாலும் தேவரீர் திரு உள்ளத்துக்கு அபிமதம் செய்பவன் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு –

பவதீய சங்கே –
தேவரீருடைய சம்பந்தமே நிரூபகமாய் இருக்குமவர்கள் அடியேனை பாவ பரிஷை பண்ணாமல் ஸ்வ கோஷ்டியில் புகுர விட்டார்கள்

ஹ்ருஷ்டஸ் –
இவர்களை வஞ்சித்து இவர்கள் சங்கத்தில் புகுந்தேனாவது எப்போதோ என்று இருந்த அடியேன்
அது பெற்றவாறே மனஸ் சந்தோஷம் உடையவனாய்

சராமி –
நிவாரகர் இல்லாமையாலே யதேச்சமாக சஞ்சரியா நின்றேன்

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி
இவ்வஞ்சனை தான் புறம்பே செய்யப் பெற்றதோ
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -86- என்கிறபடியே –
இவ்வாத்ம வஸ்துவுக்கு ப்ராப்த சேஷியான தேவரீர் சம்பந்திகள் திறத்தில் கிடீர் செய்யப் பெற்றது -என்கிறார்
அன்றிக்கே –
அடியேனுக்கு ஸ்வ வஞ்சனத்தால் பிறந்த ஹர்ஷத்தை அவர்கள் ஸ்வ கோஷ்டியில் புகுருகையால்
வந்தது என்னும் படி காணும் -என்கிறார் ஆகவுமாம்

யதிராஜ
அடியேனுக்கு இந்த்ரிய நிக்ரஹத்திலே ருசியை உண்டாக்கி அன்றோ தேவரீர் ஸ்ரீ யதிராஜராக வேண்டியது என்கிறார் –
ரஞ்ஜ நாத் ராஜா விறே

பவதீய சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ
இந்த்ரிய நியமனத்தால் புகர் பெரும் தேவரீருக்கு -அடியேன் இந்த்ரிய வச்யனாய் தேவரீர் சம்பந்திகளை வஞ்சித்து திரிவதே -என்கிறார்
அறிந்து வைத்து வஞ்சிப்பான் என் என்ன

ததோஸ்மி மூர்க்க —
கீழ்ச் சொன்னவை எல்லாம் ஸ்வரூப விரோதிகள் என்று அறிந்து இருக்க பய லேசமும் இன்றிக்கே
அவற்றை விட மாட்டாமையால் செய்கையாலே மூர்க்கன் ஆகிறேன் –

மூர்க்கோஸ்மி-
அடியேனுக்கு மௌர்க்க்யம் யாயிற்று சத்தை என்கிறார் –
கீழ் கருதி நோபி –என்றும் –
சிஷ்ட ஜநௌக மத்யே –என்றும் சாமான்யேன சொன்னதை –
பவதீய சங்கே -என்று ஒரு விசேஷத்திலே பர்யவசிப்பிக்கிறார் –
இத்தால் எம்பெருமானார் சம்பந்திகள் யாய்த்து சாஸ்தரார்த்த வித்துக்களும் தத்தர்த்த பிராமாண்ய வாதிகளும் என்கிறது –

—————————————————————————–

அவதாரிகை –

தேவரீர் சம்பந்திகளை வஞ்சிக்கும் மாதரம் அன்றிக்கே தேவரீர் தம்மையும் வஞ்சிக்கப் பெற்றேன் என்கிறார் –
ஹா ஹந்த ஹந்த-இத்யாதியால் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-

ஹா ஹந்த ஹந்த-
வீப்சையால் விஷாதிசயம் தோற்றுகிறது-
தாம் அத்தலையில் கரண த்ரயத்தாலும் பண்ணுகிற அபராதங்களையும் வஞ்சனைகளையும் பார்த்து –
அவற்றை விண்ணப்பம் செய்வதற்கு முன்பே துக்கம் இரட்டித்து ஐயோ என்கிறார் –
அபராதங்களைச் செய்வது உபகாரக விஷயத்திலே யாகையாலே பொறுக்க மாட்டிற்று இலர்

மநஸா க்ரியயா ச வாசா –
சகாரம் சமுச்சயார்த்தகம் -அது தானும் ஒரு கரணத்தால் அன்றிக்கே கரண த்ரயத்தாலும் செய்யப் பெற்றேன்
மநஸா க்ரியயா ச
பிரமாதிகமாக அன்றிக்கே சங்கல்ப பூர்வமாயிற்றுச் செய்வது
வாசா
நினைத்த போதே சொல்லில் அறிந்து பரிஹரிப்பார்கள் என்று நினைத்து செய்த பின்பாயிற்று சொல்லுவது
வாசா
அது தானும் கூட மாயோ -பிறர் அறிந்ததும் என் வாயாலே காணும்

மநஸா க்ரியயா ச வாசா –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் -என்கிறதுக்கு எதிர் தட்டாய் கிடீர் அடியேன் செய்து இருப்பது –

யோ அஹம் –
பாபிஷ்ட ஷத்ர பந்துச -என்கிறபடியே பாபம் செய்கையிலே பிரசித்தனான அடியேன் —
யோ வஜ்ர பாத -இத்யாதிகளாலே
யோ சப்தம் பிரசித்த பராமர்சி இறே
யோ அஹம் –
இப்பிரசித்தியை இட்டு நிரூபிக்கும் படி காணும் அடியேன் இருப்பது

சராமி –
அனுதாபம் பிறந்து க்லேசிக்கிற தசையிலும் அபராதங்களை செய்கையை தவிருகிறிலேன்

சததம் –
தம்தாம் பிரசித்தியை ஒரு நாளும் கை விடார்கள் இறே –
அபராதங்கள் தான் எவை என்ன –

த்ரிவித அபசாரான்-
மூன்று வகைப் பட்டு இருந்துள்ள அபசாரங்களைக் காணும் அபராதங்கள் இருப்பது என்கிறார் –
அவை யாவன -அக்ருத்ய கரண க்ருத்ய அகரண -பகவத் அபசாரமும் -பாகவத அபசாரமும் -அசஹ்ய அபசாரமும் -என்று –
நிஷித்தங்களை நாலு விதமாகச் சொல்லா நிற்க இங்கு அபராதங்களை மாத்ரம் சொல்லுகிறது –
விதி நிஷேதங்கள் இரண்டும் பகவத் ஆஜ்ஞா ரூபங்கள் ஆகையாலே
தத் அதிக்கிரமம் பகவத் அபசாரத்திலே சேரும் என்னும் அபிப்ப்ராயத்தாலே யாதல்
அக்ருத்ய கரணாத்ய பேஷயா பகவத் அபசாராதிகள் க்ரூரங்கள் ஆகையாலே அவற்றினுடைய அனுஷ்டானத்தைச் சொன்ன போதே
தத் அனுஷ்டானம் கிம்புனர் நியாய சித்தம் இறே என்னுய்ம் அபிப்ராயத்தாலே யாதல் –
அங்கன் அன்றிக்கே
மனசேத்யாதிக்கு சேர கரண பேத நிபந்தனமான கார்ய பேதத்தை திரு உள்ளம் பற்றி த்ரிவித அபசாரம் என்கிறார் ஆகவுமாம்
அப்போதைக்கு ஒரொரு அபசாரங்களை கரண த்ரயத்தாலும் அனுஷ்டித்தேன் என்று பொருளாகக் கடவது-

ஸோஅஹம் –
கீழ்ச் சொன்னபடியே அபராதங்களைச் செய்யா விடில் சத்தை பெறாத அடியேன்

தவ
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் எதிராஜோ ஜகத் குருர் -ச ஏவ சர்வ பூதா நாம் உத்தர்த்தா நாஸ்தி சம்சய -என்கிறபடியே
சர்வ உத்தாரகரான தேவரீருக்கு என்னுதல்-
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித —என்கிறபடியே
பர துக்கம் பொறுக்க மாட்டாத ம்ருது பிரக்ருதிகரான தேவரீருக்கு என்னுதல்

அப்ரியகர –
உபகாரத்தைப் பார்த்தாலும் -சௌகுமார்யத்தைப் பார்த்தாலும் பிரியமே செய்யத் தக்க விஷயத்தில் அப்ரியத்தைச் செய்யா நின்றேன் –
சிஷ்யன் ஆசார்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் என்கைக்கு எதிர்தட்டாய் யாயிற்று அடியேன் நிலை என்கிறார்

அப்ரியகர
நெஞ்சாலும் அபிரியம் நினைக்க ஒண்ணாத விஷயத்தில் கிடீர் அடியேன் அபிரியத்தை காயிகமாகச் செய்வது என்கிறார்
ஆகில் நம் முன் நிற்கும் விரகு என் என்ன

ப்ரியக்ருத் வத் –
தேவரீர் திரு உள்ளம் அறிய தேவரீருக்கு விபிரியம் செய்தேனே யாகிலும் -அது தேவரீர் திரு உள்ளத்தில் தட்டாத படி
தேவரீர் திரு உள்ளத்தாலே பிரியம் செய்வான் போலே வர்த்தித்தேன் –
அது கொண்டு தேவரீர் திரு முன்பே நிற்கலாய்த்து என்கிறார் –
ராவணன் சந்நியாசி வேஷத்தைக் கொண்டு பிராட்டியை வஞ்சித்தால் போலே அடியேன் சாத்விக வேஷத்தை
தேவரீரையும் வஞ்சித்தேன் என்று கருத்து

ஏவம் காலம் நயாமி –
இப்படி ஆசார்ய அபசாரம் பண்ணாது ஒழியில்அடியேனுக்கு காலம் செல்லாது என்கிறார்
கால மேவம் நயாமி
குணானுபவ கைங்கர்யங்களே போது போக்கு ஆகையும்-முமுஷுப்படி -என்கிறபடியே குணானுபவ கைங்கர்யங்களாலே
போக்கத் தக்க காலத்தைக் கிடீர் அடியேன் அவ் விஷயங்களை வஞ்சித்து அதுவே யாத்ரையாகப் போக்குகிறது என்கிறார் –

யதி ராஜ-
இவர் இப்படி விண்ணப்பம் செய்தவாறே இவர் செய்த அபராதங்களை தம் திரு உள்ளத்திலே தட்டாமல்
ஸ்வ அபராதங்களை அறிந்து அனுபவித்து பிராப்த விஷயத்தில் அவற்றை விண்ணப்பம் செய்யும் படி ஓர் அதிகாரியும் உண்டாவதே -என்று இவர் திரு உள்ளம் உகந்து இருக்கும் படி இருக்கும் இருப்பைக் கண்டு -யதி ராஜ -என்று சம்போதிக்கிறார்-
அன்றிக்கே –
இவர் அனுதாபத்தைக் கண்டு இவர் இவ் வபசார கரணத்தில் நின்றும் மீண்டாராகும் விரகு ஏதோ வென்று
தம் திரு உள்ளத்தில் ஓடுகிற படி தோற்ற இருக்கும் இருப்பைக் கண்டு ஆஸ்ரித விஷயத்தில் உஜ்ஜீவன யத்னமே யன்றோ
தேவரீருக்கு புகர் என்று -யதி ராஜ -சப்தத்தாலே சம்போதிக்கிறார் ஆகவுமாம் –
இப்படி சாநுதாபமாக ஸ்வ அபராதங்களை விண்ணப்பம் செய்த பின்பும் அபசாரங்களிலே அன்வயிக்கிற படியைக் கண்டு –
அபசாரங்கள் என்று அறிந்து வைத்து அவற்றில் அன்வயிக்கப் பெறுவதே என்று
ததோஸ்மி மூர்க்க —
ஆகாது என்று அறிந்து வைத்து அவை தன்னையே செய்கையால் இறே அடியேன் மூர்க்கன் ஆகிறது என்கிறார் –

——————————————————————————————

அவதாரிகை –

சப்தாதி போக ருசி ரன்வஹ மேத தேஹா -எனபது –
அத்யாபி வஞ்சன பர -எனபது –
ததோ அஸ்மி மூர்க்க -எனபது
ஹா ஹந்த -என்பதாகா நின்றீர்
ஆகையால் உமக்கு பய அனுதாபாதிகள் உண்டு போல் தோற்றுகிறது -இனி உமக்கு பிராயச்சித்தி அதிகாரம் உண்டாயிற்று -இறே
பேற்றுக்கு குறை என் என்ன –
அதுவோ அநுகாரம் இத்தனை போக்கி மெய்யே அடியேனுக்கு அவை இல்லை என்கிறார் –
பாபே க்ருதே -இத்யாதியால் –

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோஹே ந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –11

பாபே –
பாபம் ஆகிறது -நிஷித்த அனுஷ்டானம் -நிஷித்தங்கள் தானும் நாலு விதமாய் இருக்கும் –
அதில் ஓன்று ஒன்றே அநேக விதமாய் இருக்கும் –
ஆக பாபம் என்று ஜாத் ஏக வசனமாய் -பாபத்வ ஜாத்ய வச்சின்ன சகல பாபங்களையும் சொல்லுகிறது
இது இவனுக்கு ப்ராப்தி பிரதிபந்தகம் ஆகிற மாத்ரம் அன்றிக்கே இஹ பரங்களிலும் பய ஹேதுவாய் இருக்கும்
இஹத்திலே ப்ரத்யஷ தண்ட ஹேது வாகையாலும் லோக அபவாத ஹேது வாகையாலும் பய ஜனகமாய் இருக்கும் –
பரத்தில் யம வஸ்யத ஹேதுவாகையாலும் -பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் பய ஜனகமாய் இருக்கும்
இப்படி இருந்துள்ள பாபமானது

க்ருதே –
சங்கல்ப்பித்து விடுகை யன்றிக்கே காயிகமாகச் செய்யப் படா நிற்கச் செய்தேயும்

யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா –
நாம் இவற்றைச் செய்தால் பிரத்யஷத்தில் ராஜ தண்ட லோக அபவாதங்களும்
பரத்தில் யம தண்டனையும் வருமே என்கிற பயமும்
இப்படி பய ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என்ன தப்புச் செய்தோம் என்கிற அனுதாபமும் –
இப்படி நரக ஹேதுவான பாபத்தைச் செய்தால் நாம் என் கொண்டு சிஷ்ட கோஷ்டியில் புகுரக் கடவோம் என்கிற லஜ்ஜையும்
முதல் தன்னிலே உண்டாகிறனவல்ல –

யதி பவந்தி –
ஒரு நாள் வரையில் உண்டாயிற்றதுகளாகில்

புன கரண மஸ்ய கதம் கடேத –
பயாநுதாப லஜ்ஜா நிவர்த்தயமான இப் பாபத்தினுடைய புனர் அனுஷ்டானம் எவ்வகையில் கூடுவது
பிரதிபந்தகம் கிடக்க கார்யம் உண்டாமோ என்று கருத்து
பிராயச் சித்தம் அன்றோ பாப நிவர்த்தகம் ஆவது -பய அனுபாதிகள் பாப நிவர்த்தகங்கள் ஆகிற படி எங்கனே என்ன –
மணிக்கு அக்னி ஸ்வரூப நாசகத்வம் அன்றியிலே ஒழிந்தாலும்-தாஹ பிரதிபந்தகதவம் உண்டாகிறாப் போலே பய அனுபாதிகளுக்கு
பாப ஸ்வரூப நாசகத்வம் அன்றிலே ஒழிந்தாலும் உத்தர உத்தர பாப அனுஷ்டான பிரதிபந்தகத்வம் உண்டாகக் குறை இல்லை
இத்தால் ஹா ஹந்த இத்யாதியில் தோற்றுகிறது பய அனுதாபாதிகளுடைய அநுகாரம் இத்தனை போக்கி வாஸ்தவம் அன்று என்கிறது –
இப்படி லோக ந்யாயம் அறிந்த உமக்கு பய அனுதாபாதிகள் இல்லாமைக்கு அடி என் என்ன

மோஹே ந மே –
அதுக்கு அடி அடியேனுடைய அஜ்ஞ்ஞானம் என்கிறார்
மோஹமாவது
தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்ம வஸ்து என்று ஓன்று உண்டு என்று அறியாதே
தேஹமே ஆத்மா என்று இருக்கை யாகிற அஜ்ஞ்ஞானம் –

மோஹே ந மே –
இவ் வஜ்ஞ்ஞானத்தை இட்டு நிரூபிக்கும் படியான அடியேனுக்கு -என்னுதல் –
தேஹாத்மா அபிமானியாய் புத்தி பூர்வகமாக பாபத்தை பண்ணா நிற்கிற அடியேனுக்கு என்னுதல்

ந பவதீஹ பயாதி லேச
இப்படி புத்தி பூர்வகமாக பாபத்தைச் செய்கையாலே பய அனுதாப லஜ்ஜைகள் பூரணமாக இன்றிக்கே ஒழிந்தாலும்
அல்பாம்சமே யாகிலும் உண்டாகக் கூடுமே அதுவும் இல்லை –
இங்கே அபி சப்தம் அத்யார்ஹார்யம்

தஸ்மாத் –
பாப அனுஷ்டான பிரதிபந்தங்களான-பய அனுதாபாதிகள் இல்லாமையாலே

புன புநரகம் யதிராஜ குர்வே
புன புன -மேலும் மேலும் –
அகம் -பாபத்தை
அகம் புன புன -இதில் ஒரு புதுமை இல்லை
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹஸ்ரே ஸோ யன்ன மா வயதாயி -ஸ்தோத்ர ரத்னம் -25–என்கிற படியே
செய்த குற்றத்தையே மென்மேலும் செய்யா நின்றேன் –

இவர் இப்படி அனுதாப ஸூந்யராய்-பய அனுதாபாதிகள் இன்றிக்கே மென்மேலும் பாபத்தைச் செய்வேன் என்றவாறே
நீர் இவ் வக்ருத்ய கரணங்களுக்கு எல்லாம் மூலமான இந்த்ரிய வஸ்யதையை தவிர்க்க மாட்டீரோ என்ன
யதிராஜ
அடியேனுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுகிற தேவரீரே இத்தை தவிர்த்து அருள வேணும் என்று சம்போதிக்கிறார் ஆதல்
யதிராஜ குர்வே
மாத்ரு சந்நிதி இருக்க பிரஜை கிணற்றில் விழுவதே என்கிறார் –

பவதீய பயாதி லேச – என்ற பாடமான போது-
இஹ பரங்களிலே பிறர் நிமித்தமான பாதிகள் இன்றிக்கே ஒழிந்தாலும்-
நேரே ஹித அஹிதங்களை உபதேசிக்கிற நம்மிடத்தில் பயம் இல்லையோ என்ன -அதுவும் இல்லை என்கிறார்
பவதீய
மற்றயோர் நிமித்தமான பயாதிகள் இல்லாமை யன்றிக்கே இவ்வாத்மாவினுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிப் போருகிற
தேவரீர் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை -என்கிறார்
அன்றிக்கே –
யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெட்டு துணுக்கற்று மார்விலே கை வைத்து உறங்கும் படி
இவனுக்கு அபய பிரதரான தேவரீர் நிமித்தமான பயலேசமும் இல்லை -என்கிறார் –
இவரைக் கொண்டு யமாதிகள் நிமித்தமாய் வரும் பயம் கெடும் படி எங்கனே என்ன –
லோக வேதங்களில் பாபமாயிற்று யமாதிகள் நிமித்தமான பயம் வருகைக்கு ஹேது –அந்த பாபம் தானும்
துரோ சாரோ அபி -விஹிதங்களைச் செய்யாமலே ஒழிந்தானே யாகிலும் –
இங்கு துராசார சப்தத்தாலே நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லாமல் விஹித அநனுஷ்டானத்தைச் சொல்லுகிறது-
மேல் சர்வாசீ என்று நிஷித்த அனுஷ்டானத்தைச் சொல்லுகையாலே —
துர்ஜ்ஞ்ஞேயம் இத்யாதிகளில் ஜ்ஞேயத்வபாவம் இறே-விவஷிதம்

சர்வாசீ
இது நிஷித்த அனுஷ்டானங்களுக்கு எல்லாம் உப லஷணம் –

அபஷய பஷணாதிகள்-நிஷித்தங்களை செய்தானே யாகிலும்
க்ருதக்ந –
இரண்டுக்கும் அடியாக உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி இல்லாத மாத்ரம் இன்றிக்கே
செய்த உபகாரகங்களை அப்போதே மறக்குமவனே யாகிலும்
நாஸ்திக
அதுக்கும் அடியாக சாஸ்திர விஸ்வாசமும் இன்றிக்கே ஒழிந்தானே யாகிலும் —
இப்படி சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே ஒழிந்தது தான் எத்தனை காலம் என்னில்
புரா
முன்பு உள்ள காலம் எல்லாம் —

ஆக முன்பு உள்ள காலம் எல்லாம் சாஸ்திர விஸ்வாசாதிகள் இன்றிக்கே விதி நிஷிதங்களை அதிக்ரமித்து வர்த்தித்தானே யாகிலும்
ஆதிதேவம்
இவன் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே இவன் தன்னையும் அங்கீ கரிக்கையில் உண்டான நசையாலே உஜ்ஜ்வலனான எம்பருமானை
ஸ்ரத்தயா –
விஸ்ரம்ப-பாஹூள்யத்தோடே கூட
சரணம்
உபாயமாக
சமாஸ்ர யேத்யதி-
இவனைப் பார்த்தால் ஆஸ்ரயிக்க விரகு இல்லை -அவனைப் பார்த்தால் இவன் ஆஸ்ரயிக்கா விடில் தரிப்பில்லை –
ஆகையாலே அவனுடைய ஜீவநாத்ருஷ்டத்தாலே இவன் அவனை ஆஸ்ரயித்தான் ஆகில் –
இங்கு விஸ்ரம்ப பாஹூள்ய வாசியான ஸ்ரத்தா சப்தத்தாலே உபாயாந்தர நிவ்ருத்தியையும் –
சமாஸ்ர யேத்-என்கிற இடத்தில்
சம் -என்கிற உப சர்க்கத்தாலே ஆஸ்ரயணத்தில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தியும் -சொல்லப்படுகிறது –

தம்
அப்படி சர்வாபதார விசிஷ்டனாய் பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவனை
ஐந்தும்
தேவ திர்யக்-மனுஷ்ய ஸ்தாவரங்களில் யாதொன்று ஆகவுமாம் அதிலே ஒரு நிர்பந்தமும் இல்லை
நிர்தோஷம் வித்தி –
சவாசனமாக -வானோ மறி கடலோ -என்கிறபடியே தெரியாதே போன பாபங்களை உடையேனாக புத்தி பண்ணக் கடவி –

என் கொண்டு என்னில்
பிரபாவாத் பரமாத்மன –
தனக்கு மேற்பட்ட வியாபகர் இல்லாமல் தானே சர்வ அபேஷயா வ்யாபகனான எம்பெருமானுடைய ப்ரபுத்வ சக்தியாலே –
பாப மாத்ரம் க்ரியா ரூபமாகையாலே அது செய்த போதே நசித்துப் போம் –
அத்தை திரு உள்ளத்திலே வைத்து இவன் இப்படி விதி நிஷேதங்களை அதிக்ரமிப்பதே என்னும் நிக்ரஹத்தாலே
பிராப்த காலங்களிலே தத் அனுரூபமான பலத்தை கொடுப்பான் ஈஸ்வரன் யாயிற்று
அவன் தானே சரணா கதியை வ்யாஜி கரித்து இச் சேதனனை அனுக்ரஹித்தவாறே தந் நிக்ரஹம் கழி யுண்கையாலே –
பாபங்கள் எல்லாம் போயிற்று என்கிறது

ஸ்ரத்தயா சஹிதம் ஆதி தேவம் -என்று யோஜிக்கவுமாம் –
அப்போது ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்கிற இடத்தில் ஸ்ரத்தா சப்தம் பிராட்டிக்கு வாசகம் ஆகிறது –
இத்தால் ஈஸ்வரன் ஜகத் காரணன் ஆகிறதும் -பரஞ்ஜயோதிஸ் ஆகிறதும்
சேதனரை அங்கீ கரிக்கும் இடத்தில் இவர்கள் ஆஸ்ரயிப்பதற்கு முன்னே அவர்களை ரஷிக்கைக்கு அவசர பிரதீஷனாய்
இருக்கும் இருப்பும் பிராட்டி சம்பந்த்தாலே என்கிறது

ஆக இஸ ஸ்லோஹத்தில் சொல்லுகிறபடியே
பிரபத்தி யாய்த்து பிராயச் சித்த ரூபமாய் இருக்கும்
இப்பிரபத்தி தானும் –
மந்திர ரத்னம் த்வயம் நயாச பிரபத்திஸ் சரணா கதி –என்கிறபடியே த்வயாத்மகமாய் –
ஆச்சார்யாத் தைவ வித்யா விதிதா சா திஷ்டம் ப்ராபயதி -என்கிறபடியே ஆசார்ய அதீனமாய் இருக்கும்
ஆசார்யம் தாம் –
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சபதம் பாதி நான் யத்ர-என்கிறபடியே எம்பெருமானாருக்கு அசாதாரணமாய் யாயிற்று இருப்பது
மற்றையவர்களுடைய ஆசார்யத்வம் இவருடைய சம்பந்த நிபந்தனம் –
ஆகையால் இவர் சம்பந்தம் உண்டாகவே யமாதிகள் நிபந்தமாய் வரும் பாதிகள் கெடக் குறை இல்லை –

தஸ்மாத்
சகல பய நிவர்த்தகரான தேவரீர் நிமித்தமான பயாதிகள் இல்லாமையாலே
புன புன ரகம் யதிராஜ குரவே –
மேன்மேலும் பாபத்தைச் செய்யா நின்றேன் -என்கிறார்
அன்றிக்கே –
பவதீய -அவர் எம்மை நின்றாளும் பெரியவரே -என்கிறபடியே
அடியேனை அடிமை கொள்ள வல்ல தேவரீர் சம்பந்திகள் நிமித்தமான பயாதி லேசமும் இல்லை என்கிறார் ஆகவுமாம் –
இத்தால்
ஆசார்ய ததீய நிமித்தமான பயாதிகள் இன்றியிலே அபராதங்களைச் செய்வேன் என்கையாலே
அசஹ்யா அபசாரங்கலையே யாயிற்று அடியேன் செய்வது என்கிறார் –

————————————————————————————

அவதாரிகை –

புன புனரகம் யதிராஜ குர்வே -என்று விண்ணப்பம் செய்தவாறே
நீர் நம் மேல் பழி ஒதுக்கிறது என் -சர்வ வஸ்துக்களிலும் -அந்தர்யாமியாய்
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு கடவனாய் –
கண்டார் கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சா ரூபேண ஸூலபனாய் -சர்வ நியந்தாவான எம்பெருமானைக் கண்டு
உம்முடைய இந்த்ரிய வஸ்யதையை தவிரும் என்ன
அவன் சர்வ ஸூலபனாய் சர்வ கதனாய் இருந்தானே யாகிலும் -அடியேன் அவனைக் காணாமல் காம பரவசனாகா நின்றேன்
இனி தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார் –
அந்தர்ப்ப ஹிஸ் சகல–இத்யாதியால் –

அந்தர்ப் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ஹந்த த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ--12 —

அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ –
அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜ நா நாம் சர்வாத்மா –யஜூர் -ஆற -3-10-என்றும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா –-ஸூ பால உபநிஷத் -7-என்றும்
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ர்ய நாராயண -என்றும்
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்துள்ளான் -8-8-2- என்றும் சொல்லுகிறபடியே
சகல வஸ்துக்களிலும் அந்தர் பஹிர் வ்யாப்தனாய் –
இப்படி வியாபிக்கிறது தான் எதுக்கு எனில் –

சகல வஸ்துஷூ —
சகல பதார்த்தங்களுக்கும் வஸ்துத் வாதிகளை உண்டாக்குகைக்காக –
தத் அநு பிரவிச்ய சச் சத்யச் சாபவத் -தை ஆனா -என்றும்
அநு பிரவிச்ய நாம ரூபே வ்யாக்ரவாணி -சாந்தோ -6-3-2–என்றும் சொல்லக் கடவது இறே-

சந்தம்
இவற்றுக்கு வஸ்துத் வாதிகளை உண்டாக்கி தான் சத்தை பெற்றானாய் இருக்கை-

புரஸ் ஸ்திதம் –
அந்த பிரவிச்ய சத்தா தாரகனாய் நியமித்துப் போருகை மாத்ரம் அன்றிக்கே இவன் கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி
அர்ச்சா ரூபேண முன் நிற்குமவனாய்-பின்னானார் வணங்கும் சோதி இறே
ஈசம்
இவற்றினுடைய கார்யம் எல்லாம் தனக்கு புருஷார்த்தம் ஆக்குகைக்கு ஈடாக –
ஈ சேசிதவ்ய சம்பந்தாத் -அநிதம் பிரதமாதபி –-ஸ்ரீ லஷ்மி தந்த்ரம் -17-70-என்கிறபடியே ஸ்வாமி யானவன் –

சகல வஸ்து ஷூ சந்தம் –
பிரஜையினுடைய சர்வாங்க ஸ்பர்சம் தாயானவளுக்கு தாரகமாம் போலே காணும் இவனுக்கும் இவற்றினுடைய ஸ்பர்சம்
சகல வஸ்து ஷூ
சிறியார் பெரியார் எனபது இல்லை -சங்கல்ப ரூப ஜ்ஞானத்தால் அன்றிக்கே ஸ்வரூபேண் வர்த்திக்கிறவனாய்-
ஈஸம்
இப்படி செய்கை சிறியாய் பெரியார் அன்றிக்கே இவற்றினுடைய ஸ்பர்சம் தனக்கு தாரகம் ஆகைக்கு ஈடான பிராப்தியை உடையவனாய்
புரஸ் ஸ்திதம்
பிராப்தனாய் துர்லபனாய் இருக்கை யன்றிக்கே கண்ணாலே கண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஸூ லபனானவனாய்
அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்த மீசம் –
ஸூ சீலனாய் -ஸூ லபனாய் -தோஷ போக்யனாய்-ஸ்வாமி யான பெரிய பெருமாளை

அந்த மிவ-
கண்ணில் வைசத்யம் இல்லாதவன் போல் –
அந்தன் பதார்த்த தர்சனம் பண்ணாது ஒழிகிறது-பதார்த்தத்தின் குறை யன்றே -அது போலே
சர்வேஸ்வரன் வாத்சல்யாதி குண விசிஷ்டனாய் -அர்ச்சா ரூபேண முன் நிற்க –கண்டு அனுபவியாமை இவன் குறை இறே –
அதாவது சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக காணாமை -இப்படி காணாமைக்கு ஹேது என்ன என்ன –

அஹம்
தேஹமே ஆத்மா என்று இருக்கும் அடியேன் -என்னுதல்-
மித்யா சராமி -இத்யாதியில் சொல்லுகிறபடியே பாபம் செய்கையே போந்து இருக்கிற அடியேன் என்னுதல் –
இத்தால் அவன் காணாமைக்கு ஹேது தேஹாத்மா அபிமானமும் தந் மூலமான பாபமும் என்றதாயிற்று –

அவீஷ மாண-
அவன் அடியேன் தன்னைக் காண்கைக்கு ஈடாக கிருஷி பண்ணுமாபோலே யாய்த்து
அடியேன் அவனைக் காணாமைக்கு கிருஷி பண்ணும்படியும் என்கிறார் –

இத்தால் பெற்ற அம்சம் ஏது என்ன –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்-
அடியேன் மனஸ் ஸூ காம பரவசமாய்த்து என்கிறார் -அதாவது பிரயோஜ நாந்தரங்களை விரும்புகை-

இது தான் எத்தனை காலம் என்ன
சததம் பவாமி
சததம் -இதுக்கு ஒரு கால நியதி இல்லை -சர்வ காலமும் -என்கிறார்
பவாமி -இது தான் வந்தேறி யன்றிக்கே சத்தையாய் விட்டது என்கிறார் –

ஈசம் அவீஷ மாண் கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ்வநர்த்தம் உண்டாய்த்து -உஎன்கிரார்

ஹந்த –
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-
அப்ராப்த விஷயத்தை இடைவிடாமல் நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்
அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்-

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல் –
தேன மைத்ரீ பவது தே -ஸூ ந்தர – 21-20–என்னும் பிராட்டியைப் போலே ஸ்வ உபதேசாதிகளாலே
பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-
த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –
த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
தேவரீர் இந்த்ரிய நியமன சக்தரில் தலைவர் ஆனமையை அடியேன் உஜ்ஜீவிக்கைக்கு உடல் என்று இருந்தேன் –
அது விபரீதமானதே என்கிறார்

ஈசம் அவீஷ மாண் கந்தர்பவச்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ப்ராப்த விஷயத்தில் கண் வையாமை யன்றோ அடியேனுக்கு இவ்வநர்த்தம் உண்டாய்த்து -என்கிறார்
ஹந்த –
கீழ் தமக்கு உண்டான பிராப்த விஷயத்தை கடக்க நிற்கையும்-அப்ராப்த விஷயத்தை இடை விடாமல்
நிரூபிக்கையும் கண்டு ஐயோ என்கிறார்
அன்றிக்கே –
மேல் சொல்லுகிற அயோக்யதையை நினைத்து ஐயோ என்கிறார் ஆகவுமாம்

த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ-
ஈஸ்வரன் – ந ஷமாமிக்கு இலக்கான வன்றும் கை விடாமல் –
தேன மைத்ரீ பவது தே –ஸூ ந்தர – 21-20–என்னும் பிராட்டியைப் போலே
ஸ்வ உபதேசாதிகளாலே பகவத் விஷயத்திலே அத்வேஷாதிகளை உண்டாக்கி ரஷிக்கும் தேவரீர் முன்பே வருகைக்கு யோக்யனாய் ஆகிறிலேன்-
த்வதக்ரக மனஸ்ய நார்ஹ– என்கிறது
தேவரீர் முன்பே வருகைக்கும் யோக்யதை இல்லாதவனுக்கு கிட்டுகை என்றும் ஒரு பொருள் உண்டோ என்னும் அபிப்ப்ராயத்தாலே –
ஈசம் அவீஷமாண ஸ்வ த்வதக்ரக மனஸ்ய நார்ஹ-
பகவத் ப்ராப்யத்வ ஜ்ஞானம் இறே -ஆசார்ய சமாஸ்ரயணத்துக்கு மூலம் -அது இல்லாமையாலே அடியேன்
தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யன் அன்று என்கிறார்
கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
காம பரவசனான அடியேன் ஜிதேந்த்ரியரில் தலைவனான தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை தான் உண்டோ என்கிறார் –
ஈசம் அவீஷமாண கந்தர் பவச்ய ஹ்ருதயஸ் ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
அடியேனைப் பார்த்தாலும் -தேவரீரைப் பார்த்தாலும் -அடியேன் தேவரீர் திரு முன்பே வருகைக்கு யோக்யதை இல்லை என்கிறார்
அடியேன்
மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா தவனாய் –41-
பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே மருள்–39- கொண்டவன் –

தேவரீர்–அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தமக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமர் –57-
ஹந்த நார்ஹ
யோக்யதையும் போயிற்றுக் கிடீர் என்று கிலேசிக்கிறார் –
ஈசம் அவீஷமாண ஸ்வ தக்ரக மனஸ்ய நார்ஹ –
முதல் தன்னிலே சாமான்யத்திலே கண் வையாதவன் விசேஷத்தைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading