இரண்டாம் ஸ்லோஹம் –
அவதாரிகை –
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதிர்
ததைவ ஜ்ஞான கர்மப்யாம் ப்ராப்யதே புருஷோத்தமம் -என்கிறபடியே
ஜ்ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பகவத் பிராப்தி சாதனமாக சாஸ்திர விஹிதம் ஆகையாலே
கீழ் ஸ்லோஹத்திலே இவருடைய ஜ்ஞான பூர்த்தியைச் சொல்லி இஸ் ஸ்லோகத்திலே தத் அனுகுணமான
அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்கிறார் –ஸ்ரீ ரங்கேத்யாதியாலே
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-
ஸ்ரீ ரங்க-
ஈஸ்வரனே உபாயம் என்று இருக்குமவர்க்கு ஜ்ஞான அனுஷ்டானங்களை கொண்டு பிரயோஜனம் என் என்னில்
இவருக்கு இவற்றால் வருவதொரு பிரயோஜனம் இல்லை யாகிலும் இவை தான்
ஸ்வரூப அநு பந்திகள் ஆகையாலே விட அரிதாய் இருக்கும்
ஸ்வரூப அநு பந்தங்கள் யாய்த்து கைங்கர்ய ரூபங்கள் யாகையாலே –
ரஜ்யதே அநேநேதி ரங்கம்-ரஜ்யதே அஸ்மின் இதி ரங்கம் என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும்
ஸ்ரீ பெரிய பெருமாளுக்கும் சர்வ சேதனரும் தன்னை ஆஸ்ரயிக்கையால் வந்த ப்ரீதிக்கு காரணம் ஆகையால்
அவர் தமக்கே ப்ரீதி விஷயமான தேசம் என்கிறது
அதுக்கு மேலே ஸ்ரீ மத்வம் ஆகிறது-
தேசாந்தரகதோ வா அபி த்வீபாந்தர கதோ அபி வா ஸ்ரீ ரெங்கா முகோ பூத்வா ப்ரணீபத்ய ந்சீததி
மரங்கம் ரங்கமதி ப்ரூயாத் ஷூத் ப்ரசகல நாதி ஷூ ப்ரஹ்ம லோகம் அவாப்நோதி சத்யா பாபஷயன் நர பி இத்யாதியில் சொல்லுகிறபடியே
இதுக்கு உண்டான பகவத் அங்கீகார பலத்தாலே தான் இந்த திக்கை நோக்கி தண்டம் சமர்பித்தல்
பேரைச் சொல்லுதல் செய்வார் என்ன –
அவ்வளவாலே அவர்களுக்கு உண்டான சமஸ்த துரிதங்களையும் போக்கி அபிமத பல விசேஷத்தையும்
கொடுக்கைக்கு ஈடான சக்தி விசேஷமாதல்
ஆத்யம் ஸ்வயம் வ்யக்தமிதம் விமாநம் ரங்க சம்ஜ்ஞிகம்-என்கிறபடியே
ஸ்வயம் வ்யக்த தேசங்களில் பிரதான்யமாதல் –
ஸ்ரீ சப்தம் பூஜ்ய வாசியாகையாலே பகவத் சம்பந்தத்தால் உண்டான பூஜ்யதையைச் சொல்லவுமாம்-
அன்றிக்கே
ஸ்ரியா ரங்கம் -ஸ்ரீரங்கம் என்கிற வ்யுத்பத்தியாய் –
அத்தாலே ஔதார்ய காருணிக தாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ சர்வம் அதிசாயிதம் அதர மாத -ஸ்ரீ குணா ரத்ன கோசம் – 57-
என்கிறபடியே ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய ஔதார்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசம் -என்னவுமாம்-
ராஜ –
அத் தேசத்துக்கு நிர்வாஹகன் ஆகையாலே வந்த ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்-
தன்னுடைய சௌலப்யாதி குணங்களுக்கு பிரகாசகமான தேசத்தைப் பெறுகையாலே வந்த
ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் தன்னைத் தனக்கு கொடுக்கைக்கு பாங்கான தேசத்தைப் பெறுகையாலே வந்த
ஔஜ்வல்யத்தை உடையவன் என்னுதல் –
ஸ்ரீ ரங்க ராஜ –
உபய விபூதி ஐஸ்வர்யத்தைக் காட்டில் இவ்வைஸ்வர்யம் இவனுக்கு வி லஷணமாய் காணும் இருப்பது என்கிறார் –
ஸ்ரீ ரங்க ராஜ –
அவன் ஒன்றை அபிமாநிப்பது அது தனக்கு நிரூபகமாக இறே அபிமாநிப்பது
சரணாம் புஜ –
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திருவடித் தாமரைகளுக்கு உபமானம் நேர் இல்லாமையாலே
உபமேயம் தன்னையே உப மானமாகச் சொல்லுகிறது
ஸ்ரீ ராஜ ஹம்சம் –
அத திருவடித் தாமரைகளில் விஹரிக்கும் ராஜ ஹம்சம் காணும் இவர் என்கிறார் —
அதாவது ராஜ ஹம்சதுக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆகிறாப் போலே
இவருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானம் ஆனபடியும் என்கை
ரமந்தே யோகி நோசனந்தே சத்யா நந்தே சிதாத்மநி -என்னக் கடவது இறே -ஆகையாலே
அத்ரைவ ஸ்ரீ ரங்க ஸூ க மாஸ்வ-என்று பெரிய பெருமாள் அனுக்ரஹித்ததும்
அன்றிக்கே
தாமரைக்கு ராஜஹம்சம் பிரகாசகம் ஆனாப் போலே இவரும் திருவடிகளுக்கு பிரகாசகர் -என்னவுமாம்
சேஷ சேஷிகள் ஒருவருக்கு ஒருவர் பிரகாசகர் இறே
அன்றிக்கே –
கபர்த்திமத கர்தமம் -யதிராஜ சப்ததி -38 இத்யாதியில் சொல்லுகிறபடியே
பகவத் தத்வத்துக்கு பாஹ்ய குத்ருஷ்டிகளால் உண்டான அப்ரகாசதையைப் போக்கி அந்த தந்த்வத்தை
ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களால் பிரகாசிப்பிக்குமவர் என்னவுமாம்
பகவத் தத்வம் ஸ்வயம் பிரகாசகமாய் யன்றோ இருப்பது -இவர் பிரகாசகராவது என் என்னில் –
அது ஸ்வயம் பிரகாசகமே யாகிலும்
தத் விஷய ஜ்ஞானம் இல்லாதவர்க்கு அபிரகாசமாய் யன்றோ இருப்பது –
அவர்களுக்கும் தத் விஷய ஜ்ஞானத்தை உண்டாக்கி அத்தை
பிரகாசகமாம் படி பண்ணுகை-ஆகையால் ஈஸ்வரர் சேதனர் இருவருக்கும் உபகாரகர் என்கிறது
இவ்வுபகாரம் சேஷி முக விகாச ஜனகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமாய் இருக்கும்
கீழ் இவருக்கு உண்டான பகவத் அங்கீகாரத்துக்கு நிதானத்தைச் சொல்லுகிறது -மேல் –
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
இவருக்கு ஸ்ரீ மத்வமாவது -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று
அடைந்த வண் குருகூர்ச் சடகோபன் -என்கிறபடியே ஸ்ரீ ஈஸ்வரனை சர்வ வித பந்துவாகப் பற்றின சீர்மை யாதல்
உண்ணும் சோற்றில் படியே அவன் தன்னையே தாரக போஷக போக்யங்களாகப் பற்றின சீர்மையாதல் –
ஒழிவில் காலப்படியே சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சமஸ்த வித கைங்கர்யங்களையும் தாம் ஒருவருமே
செய்ய வேணும் என்கிற மநோ ரதமாதல் –
அன்றிக்கே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி தம்படி
ஸ்வ சம்பந்தி பரம்பரைக்கும் உண்டாம்படி பண்ணுகை யாதல்
பராங்குச
இப்படிகளாலே பாஹ்ய குத்ருஷ்டிகளை வசீகரிக்க வல்லரான ஆழ்வாருடைய
பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
அத் திருவடித் தாமரைகளின் மதுவைப் புஜித்து-மதுபான மத்தமாய் சுழன்று திரிந்து விளங்குகின்ற பருங்க ஸ்ரேஷ்டரான
இத்தால் பிரமரமானது தாமரையின் மதுவை உண்டு தன் குறை தீர்ந்தற்று அன்றிக்கே மதுபான மத்தமாய் சுழன்று திரியுமா போலே
இவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து கவியமுதுண்டு களித்து குமதி க்ருதிகளை மதியாதே பூ மண்டலம் எங்கும்
விஜய யாத்ரையாய் சஞ்சரிக்குமவர் என்கிறது
ப்ருங்கத்துக்கு மது ஜீவனம் ஆனாப் போலேயும் ராஜ ஹம்சத்துக்கு தாமரை விஹார ஸ்தானம் ஆனாப் போலேயும்
இவருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் தாரகமாயும் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் விஹார ஸ்தானமாயும் இருக்கும் என்கிறது
ஆசார்யவான் புருஷோ வேத -என்கிறபடியே ஆசார்ய ஆதீனம் இறே உஜ்ஜீவனம் –
சிஷ்யன் பிரதம பர்வத்தில் இழிகிறதும் அவன் உகந்த விஷயம் என்றாய்த்து
இனி இவர் ததீய விஷயத்தில் கிஞ்சித் கரித்த படியைச் சொல்லுகிறது மேல்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் –
ஸ்ரீ சப்தம்
பூஜ்யதையைச் சொல்லுகிறதாதல்-
ஸ்ரீ மத்வத்தை சொல்லுகிறதாதல்
இவர்களுக்கு ஸ்ரீமத்வமாவது –
ஸ்ரீ மாலா காரரைப் போலே திரு நந்தவனம் செய்து திருமாலை சமர்ப்பிக்கையும்
பரமத நிரசன பூர்வகமாக ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற தத்தவத்தை ஸ்தாபித்து அவன் தன்னை சாஷாத் கரித்து-
தம்மைப் பேணாதே அத்தலைக்கு மங்களா சாசனமே பண்ணுகையும்–
ஸ்ரீ கோபுர ஸ்ரீ பிரகார நிர்மாணம் முதலிய கைங்கர்ய கரணங்களும் ப்ராப்யத்வமாதல் –
ஆக இப்படி ஸ்ரீ மான்களாய் இருந்துள்ள
பட்ட நாத
ப்ராஹ்மண ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரியாழ்வார் என்ன
இவருக்கு -ப்ராஹ்மணரில் ஸ்ரைஷ்டைமாவது -மந்திர ப்ரஹ்மண ஸ்ரீ திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தாலே சொல்லப் படுகிற
ஸ்வரூப அநு ரூபமான மங்களா சாசனமும் -அஸ்தானே பய சங்கையும் மேன்மேலும் மங்களா சாசனமும் –
பரகால
சத்ரு ம்ருத்யுவான ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் என்ன –
இவருக்கு சத்ருக்கள் பகவத் விட்டுக்கள்-அவர்கள் ஆகிறார் ஆத்மைக்யம் -இத்யாதியில்
சொல்லப் படுகிற ஆத்மைக்ய வாதிகள் முதலானவர்கள் -இவர்களுடைய
முகாப்ஜ
திரு முக மண்டலங்கள் ஆகிற தாமரைகளுக்கு -முகத்தை தாமரையாகச் சொல்லுகிறது –
தாமரை உடைய சௌகுமார்யம் ஸ்பர்சஹம அன்றிக்கே இருக்குமா போலே
திரு முக மண்டலமும் பர துக்கம் பொறுக்க மாட்டாத சௌகுமார்யத்தை உடையது என்கிறது
மித்ரம்
ஸூர்யனாய் இருக்குமவராய்-அதாவது ஆதித்யன் ஸ்வ உதயத்தாலே தாமரையை அலர்த்துமா போலே
இவரும் பரமத ஷேபாத்ய அநேக வித கைங்கர்யங்களாலே இவர்களுக்கு அபிமதமான ஸ்ரீ பெரிய பெருமாளை உகப்பிக்கை –
அன்றிக்கே –
முக சப்தம் -ஆதி சப்த பர்யாயமாய் -ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திரு மங்கை யாழ்வார் முதலான ஸ்ரீ ஆழ்வார்கள் ஆகிற
தாமரைகளுக்கு மித்ரரானவர் என்னவுமாம்
அப்போதைக்கு அவர்கள் உகந்த விஷயம் என்று ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அனந்த கைங்கர்யங்களையும் செய்து
அருளுகையாலே அவர்கள் திருமுக மண்டலத்துக்கு விகாசகர் என்கிறது
ஆக கீழ் ஸ்லோஹத்தில்-பூர்வார்த்தத்தில் சொல்லப் படுகிற இவருடைய ததீய சேஷத்வ பர்யந்தமான தத் சேஷத்வ ஜ்ஞானத்துக்கு
குணமான பர்வ த்ரய கிஞ்சித் காரம் சொல்லிற்று யாயிற்று
இனி ஆஸ்ரித விஷயத்தில் இவர் இருக்கும் இருப்பைச் சொல்கிறது
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே
ஸ்ரீ வத்ஸ சின்ஹாம்ச பூதராகையாலே ஸ்ரீ வத்ஸ சின்ஹர் என்கிற திரு நாமம் உடைய ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு
ராமானுஜஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே –ஸ்ரீ வை ஸ்தவம் -1- என்று
தம் வாயாலே சொல்லலாம் படி உபாய பூதராய்-ஸ்ரீ ஆழ்வான்- இறே –
ந சேத ராமானுஜேத் யேஷா சதுரா சதுரஷரீ -என்று வ்யதிரேகத்திலும்
ஸ்ரீ ராமானு ஜாங்கரி சரணோஅஸ்மி -என்று அன்வயத்தாலும் இவருடைய உபாயத்வத்தை அருளிச் செய்தார்
ஆகையாலே -ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்கிறார் -இது எல்லாருக்கும் ஒக்குமாகையாலே உப லஷணம்-
கீழ் ஸ்லோஹத்திலே காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதா நாம் -என்கிற விடத்தில் தாத்பர்ய விதையா தோற்றுகிற உபாயத்வம்
இங்கு ஸ்ரீ வத் சிஹ்ன சரணம்-என்று சரண சப்தத்தாலே வியாக்யானம்
யதிராஜம்
கீழ்ச் சொன்ன ஆகாரங்களால் உண்டான ஸ்வ உத்கர்ஷம் நெஞ்சிலே தட்டாத படியான
வைராக்கியம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை
அன்றிக்கே –
கீழ்ச் சொன்ன ஏற்றங்களுக்கு எல்லாம் நிதானமான வைராக்கியம் உடைய எம்பெருமானாரை என்னவுமாம்
இவ் வைராக்யம் இறே இவருக்கு பிரகாச ஹேது –
ஈடே –
வாக் இந்த்ரியம் படைத்த பலம் பெற்றோம் என்று ஸ்தோத்ரத்தில் பிரவ்ருத்தர் ஆகிறார்
ஈடே
கீழே மூர்த்நா ப்ரணமாமி -என்று காயிகமான கைங்கர்யத்தைச் சொல்லி
இதுலே ஈடே என்று
வாசிகமான அடிமையைச் சொல்லுகிறது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி போலே குணா ஜிதர்க்கு ஸ்தோத்ரம் இறே க்ருத்யமாவது –
———————————————————————————
அவதாரிகை –
கீழ் இரண்டு ஸ்லோஹத்தாலும் ஸ்ரீ எம்பெருமானாருடைய ஜ்ஞான அனுஷ்டான பூர்த்தியை அருளிச் செய்து –
மேல் மூன்று ஸ்லோஹத்தாலே
ப்ராப்ய பிரார்த்தனை செய்து அருளுகிறார் -உபாய வரணம் ப்ராப்ய சேஷம் இறே –
அதில் முதல் ஸ்லோஹத்திலே
கரண த்ரயத்தாலும் ஸ்ரீ தேவரீர் திருவடிகளையே உபாய உபேயங்களாக அத்யவசித்து இருக்கும்
ஸ்ரீ பூர்வாசார்யர்களுடைய திருவடிகளை அடியேன் இடைவிடாமல் நினைத்துக் கொண்டு இருக்க கடவேனாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் -என்று பிரஸ்துதமான உபாய க்ருத்தியம் இஷ்ட பிராப்தியும் அநிஷ்ட நிவாரணமும் ஆகையாலே
அதில் இஷ்டத்தை மூன்று ஸ்லோஹத்தால் அருளிச் செய்கிறார்
அதில் பிரதமத்தில்
ஆசார்ய அன்வயத்துக்கு அவஸ்ய அபேஷிதராய் கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வ அனுஷ்டான உபதேசங்களாலே
தத் விஷய ப்ரீதி வர்த்தகரான உபகாரக விஷயத்தில் க்ருதஜ்ஞதை தமக்கு யாவதாத்மபாவியாக வேணும் என்கிறார் –
வாசா -இத்யாதியால் –
வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் –3-
வாசா –
திருவடிகளுடைய போக்யதாதிசயம் நெஞ்சால் நினைப்பதற்கு முன்னே
வாயால் சொல்லலாம் படி காணும் இருப்பது
வாசா -என்ற அனந்தரம்-
யதீந்திர -என்கிறது
இந்த்ரிய நிக்ரஹத்தால் பிறந்த ஐஸ்வர்யம் ஸ்வ சம்பந்திகள் அளவும் சென்று –
அத்தை அறியும்படியாய் இருக்கையாலே –
இத்தால் தம்முடைய கரணங்களையும் நியமிக்க வேணும் என்று கருத்தாகிறது
மநஸா வபுஷா ச –
மனஸ் அடியாக வரும் க்ரமம் குலைந்தது -கரணங்களுடைய பதற்றத்தாலே –
ப்ரேமம் தலை எடுத்தால் க்ரமம் பார்க்க ஒட்டாது இறே
வாங் மன காயை -என்று கூட்டிச் சொல்லாதே பிரித்துச் சொல்லுகையாலே
கரண ஏக தேச சமாஸ்ரயணமும் கார்யகரம் என்கிறது
யுஷ்மத் –
ப்ராப்தரான தேவரீருடைய -என்னுதல் –
ஆன்ரு சம்சய பிரதானரான தேவரீருடைய என்னுதல்
பாதார விந்த யுகளம் –
அப்ராப்தமாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயத்தை யுடைய திருவடிகளுடைய யுகளத்தை-
யுகளம் என்கையாலே
மற்றொரு துணை தேட வேண்டாத படி நிரபேஷமாய் போந்திருக்கையும் –
சேர்த்தி அழகையும் –சொல்லுகிறது
பஜதாம் –
போக்யதாதிசயத்தாலே இடைவிடாமல் ஆஸ்ரயித்து கொண்டு இருக்குமவர்களாய்-
உபாயமாக ஆஸ்ரயிக்கும் அவர்கள் என்னுதல்
பஜநம் -பக்தி விசேஷம் இறே
குருணாம்-
திருவடிகள் சம்பந்தத்தால் தங்கள் அஜ்ஞ்ஞானம் போகிற மாத்ரம் அன்றிக்கே தாங்களும் ஸ்வ சம்பந்திகளுக்கு
தேஹாத்ம பாவ அஜ்ஞ்ஞா நிவர்த்தகராம் படி யாகிறதும் இவர் திருவடிகளை ஆஸ்ரயித்ததாலே–
அஜ்ஞ்ஞான நிவர்த்தகதவம் இறே குரு சப்தார்த்தம் –
யுஷ்மாத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் –
ப்ராப்தமான விஷயத்தை பற்றினவர்கள் ஆகையாலே -அப்ராப்த விஷயங்களிலே ப்ராப்தத்வ புத்தி நிவர்த்தகரான என்னுதல் –
பரம போக்யமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -அபோக்ய விஷயத்தில் போக்யதா புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
நிரபேஷ உபாயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே சாபேஷ உபாயங்களிலே உபாயத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல் –
க்ருபா மாத்ர பிரசன்னமான விஷயத்தைப் பற்றினவர்கள் ஆகையாலே -தேஹி மே ததாமி தே-என்கிறபடியே
இத்தலையில் ஏதேனும் ஒன்றை அபேஷிக்கும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
அன்றிக்கே –
பரித்யஜ்ய -வ்ரஜ -மோஷயிஷ்யாமி -என்னும் விஷயத்தில் க்ருபா மாத்ர பிரசன்னத்வ புத்தி நிவர்த்தகர்களான என்னுதல்
இவருடைய த்யாக ஸ்வீ காரங்கள் இரண்டும் சம்சாரிகளுடைய சம்சார மோஷத்துக்கு இறே
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் விண்ணின் தலை நின்று மண்ணின் தலை உதித்தவர்-95- இறே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் –
ஸ்வ அவதாரத்தாலே அவ் வூரை சநாதமாக்கி அது தன்னையே தனக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ ஆழ்வான் என்ன –
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் உபகார ஸ்ம்ருதியாலே அவர் திரு நாமம் சாற்றத் திரு உள்ளமாய் –
ஸ்ரீ எம்பெருமானாராலே புத்ரத்வேன அபிமதராய் ஸ்ரீ குருகைப் பிரான் என்று சாத்தப் பட்ட திரு நாமத்தை உடைய
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஸ்ரீ பூர்வாச்சார்யர்களுடைய முக சப்தத்தாலே
ஸ்ரீ முதலியாண்டான் -ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ப்ரப்ருதிகளைச் சொல்லுகிறது –
இவர்களுடைய கரண த்ரய சமாஸ்ரயணமும் அஜ்ஞ்ஞான நிவ்ருத்தி பூர்வாக ஜ்ஞான பிரதத்வமும்
இவர்கள் கிரந்தங்களிலே காணலாம்
பாதாநுசிந்தன பரஸ்
இவர்கள் பண்ணின உபகாரங்களை நினைத்து இவர்கள் ஸ்ரீ பாதங்களுடைய அவிச்சின்ன ஸ்ம்ருதியிலே
தாம் ஆசக்தராக வேணும் என்கிறார் –
சததம் –
இது தான் கால தத்வம் உள்ளதனையும் நடக்க வேணும் என்கிறார்
பாதாநுசிந்தன பரஸ் சததம் பவேயம் –
உபகாரக விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு தாரகம் ஆகையாலே அது தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்கிறார்
பாதாநுசிந்தன பரோ பவேயம்
வ்யதிரேகத்தில் தாம் உளர் அன்று போலே காணும் -உபேயத்வா பிரதிபத்தி இறே கருதக்நதா பீஜம்
அன்றிக்கே
நாம் ஆதரிக்கைக்கு ஸ்ரீ எம்பெருமானாருடைய சாஷாத் சம்பந்தி சம்பந்தம் வேணுமோ –
அவர்களுடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே அமையாதோ என்கிறார் –
————————————————-
அவதாரிகை –
உபகார விஷயத்தில் உபகார ஸ்ம்ருதி தமக்கு யாவதாத்மா பாவியாக வேணும் என்று பிரார்த்தித்து ததுபக்ருதமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே கைங்கர்யம் தம்முடைய கரண த்ரயத்துக்கும் அநவரத அந்வயம் உண்டாக வேணும்
என்று அவர் தம்மையே பிரார்த்திக்கிறார் –
அன்றிக்கே –
பாத அநு சிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்று தாம் பிரார்த்தித்த புருஷார்த்தம் தமக்கு அப்போதாக சித்தியாமையாலே
அது தனக்கும் அடியான தத் விஷய ப்ரேமமும் போனதாகக் கொண்டு அது தன்னை பிரார்த்திக்கிறார் ஆகவுமாம் –
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு ஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்தநே சௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கர த்வயஸ்ய
வருத் யந்தரேஸ் து விமுகம் கரண த்ரயஞ்ச –4-
நித்யம் யதீந்திர தவ திவ்ய -வபுஸ்ருதௌ-
மேல் தாம் அபேஷிக்கிற ஸ்ம்ருதி தமக்கு அத்யந்தம் போக்யமாய் இருக்கையாலே அத்தை பிரார்த்திப்பதற்கு முன்னே
அதனுடைய அவிச்சேதத்தை பிரார்த்திக்கிறார் –நித்யம் என்று –
ஸ்வ அபேஷிதம் செய்கைக்குத் தக்க சக்தி விசேஷத்தை யொப்பி சம்போதிக்கிறார்-யதீந்திர என்று –
அன்றிக்கே
இதர விஷய வைராக்யத்தால் உண்டான பெரு மதிப்புத் தோற்ற இருக்கும் இருப்பு கண்டு
யதீந்திர -என்று சம்போதிக்கிறார் ஆகவுமாம் –
தவ –
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
சாஷான் நாராயண தேவ -என்றும் –
ஆசார்யஸ் ச ஹரிஸ் சாஷாத் -என்றும் சொல்லுகிறபடியே பகவத் அவதார விசேஷமான தேவரீருடைய -என்னுதல்-
காருண்யாத் குரு ஷூத்தமோ யதிபதி –என்கிறபடியே க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யரான தேவரீருடைய -என்னுதல்
எந்தை எதிராசர் இவ்வுலகில் எம் தமக்காக வந்துதித்த -என்கிறபடியே
அடியோங்களை உத்தரிப்பிக்க அவதரித்த தேவரீருடைய -என்னுதல்
இவை எல்லா வற்றாலும் பிரார்த்திக்கிறது அத்தலைக்கு அவஸ்ய கர்த்தவ்யம் என்கிறது
திவ்ய –
திவி பவம் திவ்யம் -என்கிற வ்யுத்பதியாலே அப்ராக்ருதம் -என்னுதல் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –104- என்கிறபடியே மிக்க தேஜஸ்சை உடைத்தான என்னுதல் –
ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –என்றது ததியர்க்கும் ஒக்கும் இறே-
ஆவிர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீயா -என்றும் –
தருனௌ ரூப சம்பன்னௌ-என்றும் சொல்லக் கடவது இறே
தவ திவ்ய
ப்ராப்தமானதுவே போக்யமாய் இருக்கும் என்கிறது
வபு ஸ்ம்ருதௌ-
திருமேனி ஸ்மரணத்திலே த்யேயம் ஸூபாஸ்ரயம் இறே
வபு –
திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கும் திவ்ய மங்கள விக்ரஹம் போக்யமாய் இருக்கிறது காணும் இவர்க்கு
ஸ்ம்ருதௌ –
விஷயத்தோபாதி ஸ்ம்ருதி தானும் போக்யமாய் இருக்கிற படி
தவ -என்று
பகவத் அவதாரங்களையும் -ஆழ்வார்களையும் வ்யாவர்த்திக்கிறது
திவ்ய என்று
இவர் தம்முடைய விக்ரஹாந்தரங்களையும் வ்யாவர்த்திக்கிறது –
இத்தால் ஸ்ரீ நம்மாழ்வார் –
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று தொடங்கி-ஈஸ்வரனுடைய ஆநந்தாதி குணங்களையும்
திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் -நிர பேஷ உபாயத்வத்தையும் பரத்வத்தையும் அனுசந்தித்து தாம்
துயர் அறு சுடர் அடி -என்று திருமேனியிலும் சௌந்தர்யாதிகளிலும்-ஈடுபட்டு தமக்கு அந்தரங்கமான திரு உள்ளத்துக்கு
தொழுது எழு என் மனனே -என்று உபதேசித்தாப் போலே
இவரும் –தவ -என்று
ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் ஆத்ம குணங்களான க்ருபா சௌலப்யாதிகளையும் அனுசந்தித்து
திவ்ய வபு -என்று
அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானமான திரு மேனியிலே ஈடுபட்டு ஸ்வ சம்பந்தியான மனஸ்ஸூம் திருமேனி ஸ்மரணத்திலே
சக்தமாக வேணும் என்கிறார் என்கிறது –
வபு –
உப்யதே பித்ரேதி வபு -என்கிற வ்யுத்பத்தியாலே –
சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ –என்றும் –
தேவ தேவோ ஹரி பிதா -என்றும்
பூதா நாம் யோ அவ்யய பிதா –என்றும் சொல்லுகிறபடியே –
சகல ஜகத் பிதாவான ஸ்ரீ எம்பெருமானாலே கேவலம் ஸ்வ இச்சையாலே சர்வ சேதன விஷயமாக
ஹித பிரவர்த்தன உபயோகி தயா க்லுப்தமாகையாலே-ஜன்ம ஜரா மரணங்களாலே விவர்ஜிதமாய் –
நித்தியமாய் -பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூப மான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வர்த்தகமான
திருமேனியுடைய ஸ்மரணத்தாலே என்னவுமாம் –
திருமேனி அப்ராக்ருதம் ஆகையாலே ஜ்ஞான வர்த்தகமாய் இறே இருப்பது –
மே –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிறபடியே ஜன்ம பரம்பரைகளிலே தோள் மாறித் திரிகிற என்னுடைய -என்னுதல் –
திருமேனி ஸ்மரணத்துக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய என்னுதல் –
திருமேனி ஸ்மரணத்த்தில் போக்யதை அறியும் அடியேனுடைய என்னுதல் –
அசௌ-என்றத்தை லிங்க வ்யக்தமாக்கி -அதோ மன -என்று மனஸ் ஸூ க்கு விசேஷணம் ஆக்கி –
இதர விஷயங்களில் சபலமாய் இதன் வாசி அறியும் மனஸ் -என்னுதல் –
ஜ்ஞான ப்ரசரண த்வாரமான மனஸ் -என்னுதல்
மே மன –
மனஸ்ஸூ தான் ஜ்ஞான ப்ரசரண த்வாரமே யாகிலும்
அது ப்ராப்த விஷயத்தில் ஆகாமல் அப்ராப்ருத விஷயங்களிலேயாய்த் தடுமாறுகைக்கு அடி
அடியேனுடைய சம்பந்தம் என்கிறார் –
மே மன –
அடியேனுக்கு பவ்யமான மனஸ் -என்கிறார் -இத்தால் ஸ்வ சம்பந்திகளுக்கும் இவை உண்டாக வேணும் என்கிறது –
சக்தம் மநோ பவது –
அப்ராப்த விஷயத்தில் அநவரத சஞ்சரணத்தால் உண்டான உறாவுதல் தீரும் படி தேவரீர் திரு மேனியை நினைக்கையே
தனக்கு ஸ்வரூபமாம் படி யாக வேணும் என்கிறார் –
ஜ்ஞான இந்த்ரியங்களிலே பிரதானமான மனஸ்ஸூக்கு விஷயம் சொன்ன போதே உப லஷண தயா
மற்ற சஷூராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் தத் தர்சன தத் சௌகுமார்ய-தத் குண ஸ்ரவண –
தத் திவ்ய கந்த -தத் தீர்த்த பிரசாத -மாதுர்யாதிகள் விஷயங்களாக வேணும்
என்னுமதுவும் சொல்லப் பட்டது –
மனஸ்ஸூக்கு சேஷம் இறே மற்ற இந்த்ரியங்கள் –குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்னக் கடவது இறே
அசௌ வாக்
நிதியைப் பொழியும் முகில் என்று –மன்னா மனிசரைப் பாடி -இளைத்து இருக்கிற என் நா என்னுதல்
தேவரீருடைய குண கீர்த்தன லுப்தையான என் நா வென்னுதல்
குண கீர்த்தன –
தேவரீருடைய ஆத்ம குணங்களான வாத்சல்யாதிகளுக்கும்
திரு மேனி குணங்களான சௌந்தர்யாதிகளுக்கும் வாசகங்களான
திரு நாமங்களைச் சொல்லுகையாலே –
நித்யம் சக்தா பவது -சொலப்புகில் வாயமுதம் பரக்கும் -என்கிறபடியே
திரு நாம அனுசந்தானம் -உபக்ரமே தொடங்கி போக்யமாய் இருக்கையாலே இதில் என் நாவானது
அநாதி காலமே பிடித்து விஷயாந்தரங்களை ஸ்துதித்து இளைத்துக் கிடந்த தன்னிளைப்பு எல்லாம் தீரும் படி
என்றும் ஒக்க சக்தமாக வேணும் என்கிறார்
குரோர் நாம சதா ஜபேத் -என்னக் கடவது இறே –
இவ்விடத்தில் குண சப்தத்தாலே திரு நாமத்தை லஷிக்கிறது –
இப் பிரமாண அநு குணமாக குணாவி நாபத்தைப் பற்றவுமாம் –
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியை சேவிக்க எழுந்து அருளின போது-
அவர் த்யானத்தில் எழுந்து அருளக் கண்டு பின்பு
தண்டன் சமர்ப்பித்து த்யானம் எது மந்த்ரம் எது -என்று கேட்க அவரும் –
த்யானம் ஸ்ரீ ஆளவந்தார் திரு மேனி –
மந்த்ரம் ஸ்ரீ யமுனைத் துறைவர் என்கிற திரு நாமம் –என்று அருளிச் செய்தார் ஆகையாலே
த்யாநாந்ந்தர பிராப்தி திரு நாமத்துக்கு இறே
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்தி தே-அயோத்யா -2-26- என்கிறவிடத்தில் குண சப்தத்தை
திரு நாமத்துக்கு வாசகமாக அருளிச் செய்தார் இறே ஸ்ரீ பெரிய ஜீயர் –
இப்படி மநோ வாக் காயங்களுக்கு விஷயத்தைச் சொல்லி –
மேல் காயிக வியாபாரம் தேவரீர் விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார் க்ருத்யம் -இத்யாதியால்
அன்றிக்கே
காயம் தனக்கு விஷயத்தைச் சொல்லுகிறார் ஆகவுமாம் -விசித்ரா தேஹ சம்பந்தி ஈஸ்வராய விஷ்ணு தத்வம் -விறே
கர த்வயஸ்ய-
கைங்கர்யம் செய்யும் இடத்தில் மற்றொரு துணை தேட வேண்டாத படி அந்யோந்ய சஹாயமான-கரத் வயத்தினுடைய –
கருத் யஞ்ச –
வியாபாரமும்
தவ தாஸ்ய கரணம் து பவேத் –
தேவரீர் விஷயமாய் -விலஷணமாய் இருக்கிற கைங்கர்யம் ஆக வேணும் என்கிறார்
து -சப்தம் –
வைஷ்ணவ வாசி -கைங்கர்யத்துக்கு வைஷண்யமாவது-இதர விஷய ஸூஸ்ருஷை போலே ஸ்வரூப விரோதியாய்
துக்கோ தர்க்கமாய் இருக்காய் யன்றிக்கே ஸ்வரூப அநுரூபமாய் ஸூ கோதர்க்கமாய் இருக்கை-
அன்றிக்கே –
பகவத் கைங்கர்யம் போலே சாஸ்த்ரைகசமிதி கம்யமாய் இருக்கை யன்றிக்கே தேவரீர் ஸ்ரீ ஸூக்திகளால்
அறியத் தக்கதாய் இருக்கை யாகவுமாம்
அன்றிக்கே –
கரதவயஸ்ய து கர்த்தவ் யஞ்ச -என்று அந்வயித்து-முன்பு எல்லாம் இதர விஷயங்களை ஸூஸ்ருஷித்து அதுவே
யாத்ரையாய்ப் போந்த இந்த கரத்வயத்தினுடைய வ்ருத்தி என்னவுமாம் –
அங்கன் அன்றிக்கே –
து சப்தம் -அப்யர்த்தமாய் காயிக வியாபாரமும் தாஸ்ய கரண ரூபமாக வேணும் என்கிறார் ஆகவுமாம்
உபாய வரணாத்மகத்வம் உண்டு இறே அஞ்சலிக்கு –
இத்தால் கரண த்ரயத்துக்கும் உபாய உபேயங்களில் அந்வயம் உண்டு என்கிறது
இத்தால் கர்மாத் யுபாயங்களுக்கு பகவன் நிஷ்ட உபாயத் வாபி வ்யஞ்சகத்வம் ஒழிய சாஷாத் உபாயத்வம் இல்லை என்கிறது
நிதித்யாசிதவ்ய என்கிறதும் இவனுடைய அஜ்ஞ்ஞாதையைப் பற்றி இறே
யத்வா சகாரா துகாரங்கள் இரண்டும் -ஏவகாரார்த்தமாய் -கரண த்வயத்தினுடைய வியாபாரம் தானே ப்ராப்த விஷயத்தில் பண்ணும்
கைங்கர்யமே யாக வேணும் -என்கிறார் ஆகவுமாம்
அங்கனும் அன்றிக்கே –
து -சப்தம் -ஏவகாரார்த்தமாய் விஷயாந்தர ஸூஸ்ருஷையை வ்யவச்சேதிக்கிறது ஆகவுமாம் –
அன்றிக்கே
கர த்வயஸ்ய ச தவ தாஸ்ய கரணந்து க்ருத்யம் பவேத் -என்று யோஜிக்கவுமாம் –
குரோர் வார்த்தாச்ச கதயேத்-என்னக் கடவது இறே –
இவ்விடத்திலே ச காரத்தாலே கைங்கர்யத்தைச் சொல்லுகிறது –
இப்படி கரண த்ரயமும் அநு கூல விஷயங்களில் மண்டி இருந்தாலும் வ்யாபாராந்தரங்களில் ஆனால் கொத்தையாம் இறே –
ஆகையால் கரண த்ரயமும் வ்யாபாராந்தரத்தில் விமுகமாக வேணும் என்கிறார் –
வ்ருத்யந்தரே அஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச -என்று
இது ஏவ கார பர்யாயமான து சப்தத்தாலே நிரசிக்கப் பட்டது அன்றோ என்னில் –
அத்தாலே தாஸ்யே தரங்கள் யாய்த்து வ்யவச்சேதிக்கப் படுகிறது
இங்கு பகவத் கைங்கர்யம் தாஸ்யம் ஆகையாலே அத்தை வ்யவச்சேதிக்கிறது –
ஆசார்ய நிஷ்டனுக்கு த்வய புருஷார்த்தமான பகவத் கைங்கர்யம் விரோதி இறே –
கரண த்ரயஞ்ச வ்ருத்யந்த்ரே விமுக மஸ்து –
து சப்தம் வை லஷண வாசியான போது இங்கு விஷயாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது
அன்றிக்கே –
சகாரம் -இவ்வர்த்தமாய் -கரண த்ரயமானது வகுத்த விஷயத்தில் சக்தமானால் போலே தத் இதர விஷயங்களில்
விமுகமாக வேணும் என்கிறார் என்னவுமாம் –
குரோர் அந்யன்ன பாவயேத் -என்னக் கடவது இறே –
——————————————
அவதாரிகை —
கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே-
தாம் பிரார்த்த அர்த்தங்களுக்கு பிரமாணமாக திரு மந்த்ரத்தை ப்ரசக்தி பண்ணி-
தாம் பிரார்த்தித்த அர்த்தங்கள் திரு அஷ்டாஷரத்தின் பத த்ரயார்த்தங்கள் யாகையாலே –
தந் நிஷ்டையை அடியேனுக்கு பிரசாதித்து அருளி
அடியேன் புத்தியானது தேவரீர் திருவடிகளை அனுபவித்து ஹ்ருஷ்டமாம் படி செய்து அருள வேணும் என்கிறார் –
கீழ் ஸ்லோகத்தாலே
பிரதம பாதத்தாலே -ப்ரணவார்த்தமும் -வாக் குண கீரத்தநே அசௌ -என்றத்தாலே வாத்சக்யாதி
குண கீர்த்தனத்திலே என்ற போதே -அக் குணங்கள் உபாய குணங்கள் ஆகையாலே மத்யம பதார்த்தமும்
த்ருதீய பாதத்தாலே -சரம பதார்த்தமும் –
சதுரத்த பாதத்தாலே -பிரதம சரம பத ஸ்தான அந்வித நமஸ் சப்தார்த்தமும் சொல்லப் பட்டது இறே
அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்ய மனுபூய மமாஸ்ய புத்தி –5-
அஷ்டாஷராக்ய –
ஏதத்வை நாராயணஸ் யஷ்டாஷரம் பதம் -என்றும்
எட்டு எழுத்தும் ஓதுவார் -என்றும்
கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம்-என்றும்
மந்த்ரம் அஷ்டாஷரம் வித்யாத் -என்னும் இத்யாதி பிரமாணங்களாலே-
ஸ்ரீ அஷ்டாஷரம் -என்று பிரசித்தமான -வென்னுதல்-
ஸ்ரீ அஷ்டாஷரம் என்ற திரு நாமம் உடைய என்னுதல்
மநுராஜ –
தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
ராஜாதி ராஜ சர்வேஷாம் -என்றும்
வானோர் இறை என்றும்
அமரர்கள் அதி பதி -என்றும்
தேவ தேவேச -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வாச்யனான ஸ்ரீ ஈஸ்வரன்
ஸ்வ அபேஷயா நியாமகாந்தர ஸூ யனாய்-தான் சர்வ நியந்தாவாய் இருக்குமா போலே வாய்த்து
வாசகமான ஸ்ரீ திரு அஷ்டாஷரமும்
மந்த்ராணாம் பரமோ மந்திர -என்றும்
ந மந்த்ரோ அஷ்டாஷராத் பர -என்றும் சொல்லுகிறபடியே
பகவன் மந்த்ரங்களில் ஸ்வ அபேஷயா அதிசயித மந்த்ராந்திர ரஹீதமாய்
தான் பிரதானமான படியும்
ஈஸ்வரனை ஒழிந்தவர்களுக்கு ரஷகத்வம் உண்டாம் போதாய்த்து மந்த்ராந்தங்களுக்கு மந்த்ரத்வம் உள்ளதும் –
ஆக இப்படி
பகவத் மந்த்ரங்களில் பிரதானமான ஸ்ரீ திரு மந்த்ரத்தினுடைய –
அவனுடைய பிரதாந்யம்-குண பௌஷ்கல்யாதி நிபந்தனம்-இதனுடைய பிரதானம் அர்த்த பௌஷ்கல்யாதி நிபந்தனம்-
பத த்ரயார்த்த –
பிரணவ -நமோ -நாராயணாய -என்கிற பத த்ரயத்தினுடைய
அனந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வங்கள் ஆகிற அர்த்தங்களிலே
நிஷ்டாம்-
அவிசால்யமான இருப்பை –
அர்த்த ஸ்திதியில் அவிசால்யத்வமாவது –
விரோத் யுதயாஸஹிஷ்ணுத்வம் -அதாவது –
அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான அந்ய சேஷத்வத்தினுடையவும் –
அநந்ய சரணத்வ விரோதியான உபாயாந்தர சம்பந்தத்தினுடையவும் –
அநந்ய போக்யத்வ விரோதியான உபேயாந்தரங்களுடையவும் உதயத்தை பொறாது ஒழிகை
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களில் ஸ்வார்த்ததா புத்தி தவிர்கை யாக்கவுமாம் –
இது இறே நமஸ் சப்தத்தாலே
பூர்வ உத்தர பதங்களோடு காகாஷி ந்யாயத்தாலே அன்வயித்து கழி யுண்கிறது
அஸ்ய மம-
உண்டியே உடையே உகந்தோடும் -என்கிறபடியே அன்ன வஸ்த்ராதி விஷயார்ஜன லோலனான அடியேனுக்கு என்னுதல்-
அதில் ஆசா லேசம் இல்லாத அடியேனுக்கு என்னுதல் –
மேலே –விதர -என்றதுக்கு அனுகுணமாக மஹ்யம் -என்ன வேண்டி இருக்க
மம -என்கிறது சம்பந்த சாமான்ய அபிப்ப்ராயத்தாலே
அன்றிக்கே –
அஸ்ய மம -அதில் ஆசை உடைய அடியேனுக்கு -என்னுதல்
விதர –
பிராசாதித்து அருள வேணும் -என்கிறார் –
தேவரீர் தரப் பார்க்கில் அத்தை இப்போதே தர வேணும் என்ன -தேச விசேஷத்திலே யாகிறது -என்ன
அத்ர–
இருள் தரு மா ஞாலமான இத் தேசத்திலேயாக வேணும் என்கிறார் -தேவரீர் சம்பந்திகளுக்கு இதுவன்றோ அசாதாரண லஷணம்-
ஆகில் தருகிறோம் –பொறுத்து இரும் என்ன
அத்ய –
அபேஷையுடைய இக்காலத்திலேயாக வேணும் -என்கிறார் –நின்றவா நில்லா நெஞ்சு இறே
அன்றிக்கே -உமக்கு இப்படி ஸ்வரூப அனுரூபங்களான அர்த்தங்களில் ஆசை இல்லாமைக்கு அடி என் என்ன
அத்ராத்ய –
இருள் தரும் மா ஞாலமான இத்தேசமும் -சத் அனுஷ்டான விரோதியான இக்காலமும் -என்கிறார்
காலம் கலி இறே -தேச கால -பாத்ரங்களைப் பாராமல் தேவரீர் இந்த சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் என்கிறார்
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டுவது -ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் -என்று
அத்தலையில் நினைவு அறிந்து இறே இவர் அருளிச் செய்தது
இப்படி அநதிகாரயாய் இருந்து வைத்து நம்மை நிர்பந்திக்கிறது என் என்ன
யதீந்திர –
நம் குறை ஆராயும்படி யன்றோ தேவரீர் பூர்த்தி -தேவரீருக்கு உள்ள சம தம யாத்ம குணங்கள்
தேவரீர் சம்பந்திகளுக்கும் போரும்படி இறே தேவரீர் மதிப்பு –
ஆகில் உமக்கு என் என்ன –
நாத
தேவரீர் இத்தலைக்கு ஸ்வாமி யன்றோ நம் கார்யம் செய்யாமைக்கு என்கிறார் -யாசித்தும் பிறர் கார்யம்
செய்யுமவர்க்கு பிரார்த்தனை மிகை யன்றோ என்கிறார் –
ஸ்வாமி யானமையை நீ என் கொண்டு அறிந்தீர் என்ன –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய
பிரமாணங்களில் பிரதானமான சிஷ்டாசாரம் கொண்டு அறிந்தேன் -என்கிறார் –
தர்மஜ்ஞ சமய பிரமாண-இறே –
வேத பிரமாண்ய வாதிகளிலே முதல் எண்ணத் தக்கவர்களான ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ முதலி யாண்டான் –
முதலான சிஷ்ட ஜனங்களாலே சேவிக்கத் தகுதி யானவரே என்று சம்போதிக்கிறார்-
இவர்கள் ஆஸ்ரயிக்கும் போது-பிராப்த விஷயமாக வேணும் என்று அறிந்தேன் என்று கருத்து –
அன்றிக்கே –
சிஷ்டாக்ரகண்யருடைய சம்பந்தி ஜனங்களால் சேவிக்கத் தகுந்தவரே என்னவுமாம் –
அப்போது அவர்கள் தந்தாமைப் பற்றினவர்களுக்கு ப்ராப்த விஷயம் என்று உபதேசித்துக் காட்ட –
அவர்களும் கண்டு ஆஸ்ரயிக்கை யாலே தேவரீர் ஸ்வாமி யானயமையை அறிந்தேன் என்று கருத்து
ஆகில் தருகிறோம் என்று இவர் பிரார்த்தித்த படியே பிரதம பர்வதத்தை வெளிச் சிறப்பிக்க –
அடியேனுக்கு இவ்வளவால் போராது-இதினுடைய எல்லை நிலமான தேவரீர் திருவடிகளை அனுபவித்து
அடியேனுடைய புத்தியானது ஹ்ருஷ்டமாக வேணும் என்கிறார் –
ஆசார்ய கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்தினுடைய சரம அவதி யானமை எங்கனே என்னில்
ப்ராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் -என்று தொடங்கி-சரம பர்வம் பாகவத கைங்கர்யம் -என்று அருளிச் செய்து
அதுக்கு அர்த்தம் ஆசார்யன் உகப்புக்காக பண்ணும் பகவத் கைங்கர்யம் ஆசார்ய கைங்கர்யம் என்று தொடங்கி –
பாகவதர்கள் உகப்புக்காக பண்ணும் ஆசார்ய கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் -என்று ஆசார்ய கைங்கர்யத்தை
சரம பர்வமாக அருளிச் செய்தார் இறே பிள்ளை லோகாச்சார்யர் –
ஆசார்யன் திரு மந்த்ரத்தை உபதேசித்து அதுக்கு அர்த்தமாக பகவத் தாதர்த்தமாக உபதேசிக்க
பகவானும் —மத் பக்த ஜன வாத்சல்யம் -என்று தொடங்கி –ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் என்றும்
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் -என்று பாகவத தாதர்யத்தை உபதேசிக்கையாலே
அவர்களுடைய ஆசார்ய சம்பந்தத்தை யிட்டு இவனை அங்கீ கரித்து
பதி வ்ரதைகள் பதி வ்ரதைக்கு பாதி வ்ரத்யத்தை உபதேசிக்குமா போலே
குருரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிகளாலே ஆசார்ய தாதர்யத்தை உபதேசிக்கையாலே ப்ராப்யத்தில்
சரம பர்வம் ஆசார்ய கைங்கர்யம் என்கிறது –
இத்தை இறே-திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை என்று
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்தது
பகவத் கைங்கர்யத்தில் ஆசார்யன் உகப்புண்டு —
பாகவத கைங்கர்யத்தில் ஆசார்ய பகவத் ப்ரீதி உண்டு
ஆசார்ய கைங்கர்யத்தில் ஆசார்ய பகவத் பாகவதர்கள் உகப்பு உண்டு –
ஆகையால் ஆசார்ய கைங்கர்யம் ததீய கைங்கர்ய கர்ப்பமாய் இருக்கும்
ஆகையால் ஆசார்ய கைங்கர்யமே திரு அஷ்டாஷரத்துக்கு பிரதான ப்ரமேயமாகக் கடவது
அன்றிக்கே
சிஷ்டேத்யாதி-க்கு
இப்படி சம்பந்த மாதரம் கொண்டு நாம் ஆருக்கு அதிகாரம் உண்டாக்கி உதவினோம் என்ன
சிஷ்டேத்யாதி –
சாஸ்திர விஸ்வாச சாலிகளான ஜனங்கள் உண்டு -யாதவ பிரகாச யஜ்ஞ மூர்த்தி யாதிகள் -அவர்களாலே
சேவ்யர் ஆனவரே -என்றுமாம் –
அவர்களை அதிகாரிகள் ஆக்கி யன்றோ தேவரீர் திரு மந்த்ரார்த்தை உதவி யருளிற்று –
அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்று இரண்டும் சம்போதனம் ஆகவுமாம் —
அப்போது நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -என்றும்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்றும் சொல்லுகிறபடியே
சகல சாஸ்திர தாத்பர்யமான ஆன்ரு சம்சய பிரதானரில் முதல் எண்ணத் தக்கவர்
ஆகையாலே சர்வ ஜனங்களாலும் சேவிக்கத் தக்கவர் என்று பொருள் –
இவருக்கு ஆன்ரு சம்சய பிரதானரில் அக்ர கண்யத்வம் ஆவது –
முன்புள்ள முதலிகள் க்யாதி லாப பூஜா நிரபேஷராய்-ஆன்ரு சம்சய பிரதானராய்
பர அநர்த்தம் பொறுக்க மாட்டாதே ஆஸ்திக்யாதி பரிஷை பண்ணி ஹிதம் அருளிச் செய்வார்கள் ஆகில் –
இவர் அங்கன் அன்றிக்கே
பரர அனர்த்தமே பற்றாசாக ஆஸ்திக்யாதர பரிஷை பண்ணாமல் ஹிதம் அருளிச் செய்து போருகை
ஆழ்வானை மாச உபவாசம் கொண்டது நம்பி நியமனத்துக்காக –
அன்றிக்கே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய -என்கிறது பதாப்ஜ விசேஷணம் ஆகவுமாம் -அப்போது
ராமானுஜஸ்ய சரனௌ சரணம் பிரபத்யே -என்றும் –
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலித -என்றும்
இராமானுசன் தன் இணை யடியே –உதிப்பன உத்தமர் சிந்தையுள் -என்கிறபடியே
ஆழ்வான் முதலான சிஷ்ட ஜனங்களால் சேவிக்கத் தகுதியான பதாப் ஜங்கள் -என்கிறது –
இத்தால் தாம் அயோக்யர் என்கிறது –
பவத் பதாப்ஜே-
பரம பிராப்யரான தேவரீருடைய பரம போக்யங்களான திருவடித் தாமரைகளை –
அனுபூய ஹ்ருஷ்டாஸ்து-என்ன வேண்டி இருக்க முதலில் ஹ்ருஷ்டாஸ்து என்றது திருவடிகளுடைய போக்யதாதிசயம்
அனுபவ உன்முகமாகும் தசையிலும் அனுபவ ஜனித ஆனந்தத்தை உண்டாக்கவற்று என்னும் அபிப்ராயத்தாலே
நித்யம் –
அனுபாவ்ய வஸ்துவோபாதி-அனுபவமும் ரசித்து இருக்கையாலே இது நித்யமாக வேணும் என்கிறார் –
அன்றிக்கே –
ஹ்ருஷ்டா அனுபூயாஸ்து-
திருவடிகளினுடைய போக்யாதிசயத்தைக் கண்டு அலாப்யங்களான இத் திருவடிகள் நமக்கு
அனுபாவ்யங்களாகக் கடவது என்று ஹ்ருஷ்டமாய் அனுபவித்து தான் சத்தை பெறக் கடவது என்கிறார் ஆகவுமாம் —
முன்பு அசந்நேவ -இ றே-
அன்றிக்கே –
அனுபூயாஸ்து ஹ்ருஷ்டஸ்து-அனுபவித்து தான் உளதான மாத்ரம் அன்றிக்கே –
ஸ்வ தர்மமான ஆனந்த ரூபத்தை யும் அடைந்ததாக வேணும் என்கிறார்
நித்யம் அனுபூய ஹ்ருஷ்டஸ்து –
இவ் வனுபவம் போக்யமாய் இருக்கையாலே கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்து அனுபவ ஜனிதமான ஹர்ஷம்
புறம்பு ஒசிந்து காட்டும்படியாக வேணும் என்கிறார்
ஏன் தான் என்னில் –
மமாஸ்து புத்தி –
நிரூபகம் முன்னாக நிரூப்ய சித்தி யாகையாலே நிரூபகமான அனுபவத்தை முன்னே சொல்லி
அநந்தரம் நிரூப்யமான தம்மை அனுசந்திக்கிறார்
மமாஸ்ய–
தேவரீருடைய திருவடிகளை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகனாம் படியான அடியேன் இப்படி ஸ்வரூப நாசகங்களான
விஷயங்களிலே சபலன் ஆவதே என்கிறார் –
இப்படி விஷய சாபல்யனான அடியேனுடைய -என்னுதல்-
இவ்வளவான மனஸ் ஸ்வ பாவம் உடைய அடியேனுடைய -என்னுதல்
புத்தி-
ஞானமாதல்
மனஸ் ஆதல்
மமாஸ்ய புத்தி –
ஜ்ஞானமாகில் தேவரீரை ஒழிய மற்று ஒன்றில் புகாது –
அது விஷயாந்தரத்தில் புகுருகைக்கு அடி அடியேனுடைய சம்பந்தம் யாய்த்து
இப்படி இருந்துள்ள அடியேனுடைய புத்தி -என்னவுமாம்
அன்றிக்கே –
மமாஸ்ய புத்தி –
தேவரீராலே கொடுக்கப் பட்ட அஷ்டாஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டையை யுடையனாய்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேனுடைய புத்தியானது -என்னவுமாம்
இத்தால் பிரதம பர்வம் அதி விலஷணமாய் இருந்ததே யாகிலும் அதில்
சரம பர்வ நிஷ்டனுடைய புத்தியானது புகாது என்கிறார்
சிஷ்டேத்யாதி–பதாப்ஜ விசேஷணம் ஆன போது-நாத -என்ற அநந்தரம் —
ஆகில் செய்கிறோம் இத்யாதி சங்கதி கண்டு கொள்வது –
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply