வார்த்தா மாலாவில் –எம்பெருமானார்– பற்றிய வார்த்தை -முத்துக்கள் –

கண்ணியனூர் சிறியாச்சான் -தாசரதி என்னும் திரு நாமம் கொண்டவர் -எம்பாரை தண்டம் இட்டுதிரு உள்ளத்தில் தஞ்சமாக நினைத்து இருக்குமத்தை
எனக்கு அவசியம் அருளிச் செய்யவேணும் -என்ன-தாசரதீ –எம்பெருமானார் ஸ்ரீ பாத த்வயம் ஒழிய தஞ்சமாய் இருப்பது இல்லை என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று –பிரபத்தி என் -என்று விண்ணப்பம் செய்ய –கனிப் பழம் -தானே -காம்பு அற்றால் போலே இருக்கும் என்ன –இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் இவ் அர்த்தத்தைதிருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் கேளும் -என்ன –
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும் விழுக்காடே -ஞான சாரம் -1- இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் –சக்ருதேவ -என்று அருளிச் செய்ய -சஹசைவ சடக்கென திருவடிகளில் விழ வேணும் -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய -ஆகில்
இவ் அர்த்தத்தை திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன -இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும்
இத்தனை பிசகுகைக்கு உண்டோ –ஒரு ரேகை மாதரம் என்ன -அதாவது நாம் பற்றும் பற்று ச்வீகாரம் ஆகுமோ -என்ற சங்கை வேண்டாம் –
கையில் உள்ள ரேகை போலே அதிகாரி விசேஷணம் ஆகவே இருப்பது பரிகாரம் என்ற கருத்து – இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் இவ் அர்த்தத்தை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஸ்ரீ பாதத்திலே கேளும்  என்ன -இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய
அவரும் ததீய பர்யந்தமாக  காணீர் -என்று அருளிச் செய்தார் –பாகவத அபிமானத்துக்கு விஷயம் ஆகிறவனுக்கு பிரபத்தி ஏற்பட்டு எம்பெருமான் அருள் கிட்டும்

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன்  -வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று -பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
-அவனும் அங்கே சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
-நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் -இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
-என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

உடையவர் -சந்யசித்து அருளுகிற போது -சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க -முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –
இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –த்ரிதண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி திருமாலை யாண்டானையும் – அழைத்துக் கொண்டு எம்பெருமானார் மடமே எழுந்து அருள -அவரும் தண்டன் சமர்ப்பிக்க – அவரைப் பார்த்துஅருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து தாம் மீண்டு எழுந்து அருளினார் -திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி -திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள -ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி -ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன
அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை -உபகர ச்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன -அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து -சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும் உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது -ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் -நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –

பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை -அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து -அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து – பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆஸ்ரயத்தை காண்கைகாக எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க -அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன – அங்கே விசேஷம் என் என்று கேட்க –சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –

யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின் ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க – யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று சொல்லிப் போக விட – அவன் தன்னை அங்கு நின்று போகச்சொன்னேன் -என்று ப்ரஹ்ம ரஷ ஸூ சொல்ல – யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு -மஹா மந்தரத்தையும்
ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸூ முன்னே போய் நிற்க -ரஷ ஸூ -உம் முடக்கின காலை பின்னையும் நீட்டி -வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ நீ உன் ஜன்மமும் அறியாய் -என் ஜன்மமும் அறியாய் -என்ன -ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில் உன்னுடைய ஜன்மம் ஏது -என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –உன்னுடைய ஜன்மம் ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய் அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி –திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து – அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் – அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் -இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் – யாகம் பண்ணினேன் –மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம  ரஷஸ் ஆனேன் -என்ன -ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன-உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய சூரிகளிலே ஒருவர் -என்று உடையவரைக் காட்டி -அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார்
ஆகில் போகிறேன் -என்ன -ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன -ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன -இவ்வரசு முறிந்து விழும் -என்று அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று -யாதவ பிரகாசனும் –இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் –என்று மிகவும் உபச்லோகித்து -மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –

உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு -ஸ்ரீ விபீஷணப்  பெருமாள்
ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக -சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
-பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட – உடையவர் அருளிச் செய்த படி –கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்குபெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று ஆழ்வானை முதலிகள் கேட்க -ஓர் இரவெல்லாம் விசாரித்து -பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் – ந த்யஜேயம் -என்றார் பெருமாள் -ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் -நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை – இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –

ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க -பெரிய நம்பி தண்டன் இட -உடையவர் அஞ்சலி பண்ணிப் போக -உடையவரை இது என்
என்று கேட்க -அப் போது –அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ -நமக்கு ஸ்வரூபம் –என்று அருளிச் செய்தார் –

அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது -அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன -இது-ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது -வேறு
ஒருவருக்கும் இல்லை -ஒருவரை தண்டன் இடக் கடவதாய் அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது -இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக -என் பரமாச்சார்யர் வார்த்தையை கேட்டு சொன்னேன் இத்தனை –அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் -பரம பதத்தில் அளவும் -சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று ஆள வந்தார் அருளிச் செய்வர் —நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான் என்று எம்பார் அருளிச் செய்வர் –

திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க – ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் நிர்வஹிததது ஒழிய -பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து -இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய – இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்து – இங்கனே நடவா நிற்கச் செய்தே -அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழ வாலே அருளிச் செய்கிறார் -என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய -இத்தை எம்பெருமானார் கேட்டருளி – முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே  நடவா நிற்க -நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது -இங்கனே யாம் இத்தனை -அறியா மா மாயத்து அடியேனை –அறியாக் காலத்துள்ளே – அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய -இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் –

எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது -திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க -அம மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள -இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக -நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க -கோயில் நின்றும்
வருகிறேன் -என்ன -எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே -பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க -என்ன எம்பெருமானாரும் என்ன–திருச் – செல்வமும்  -எம்பெருமானார் வெள்ளை   எழுந்து அருளினார் -இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய – அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் -ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும்
இடியுமாய் -குளிரிலே ஈடுபட்டு -இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் – என்று அருளிச் செய்ய -முதலிகளும் அங்கே எழுந்து அருளி -வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க – பிராமணக் குரலாய் இருந்தது -பெருவிடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து -வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து -சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க -கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய -எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க -நீங்கள் எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –நாங்கள் நல்லான் அடிமைகள் –எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது – எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் -அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன -ஆகில் அவர் இ றே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட -இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க -உடையவரும் –நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள -பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே-சமர்ப்பித்து – இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய – அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் -மற்றை நாள் விடிந்த வாறே -அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் -ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட -அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் – அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய் ஒரு வேடன் அகத்திலே – விட்டு வர -அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-ராத்ரி உண்ணப் புக்க வாறே – பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று -அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் -ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து -இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் -அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் -உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன -வேண்டா -என்றார்கள் -உங்களுக்கு பயப்பட வேண்டா -நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் -நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க -நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே  கோயிலிலே வந்து இருந்தோம் -என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய்  இருக்கும் -அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் -திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும் இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் -இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் -நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் –இது என் பெண்ணே என்றார் –
உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் -நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே -அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகை -யாலே காண் என்று அருளிச் செய்ய -அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும்  -என்ன -அப்போது அருளிச் செய்து அருளினார்–பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது -அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே -அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே -அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்தேன் –அப்போது சாத்தி இருந்த பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார்நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் –என்றவாறே -திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து -இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு
ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க -அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து -உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி -திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு
தண்டன் சமர்ப்பித்து –முதலிகளை -ஸ்ரீ பாதம்விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள – இவளும் திருப்போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து -திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் – கறுத்து நீண்டு இருந்தது எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவரே அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாதரஷையை ஏறி அருளப்பண்ணி திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய -அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே -எம்பெருமானார்அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் – அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன -அவளும் விண்ணப்பம் செய்தாள் -வார்த்தையும் ஒத்து இருந்தது -ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன -அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் – எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து -எம்பெருமானார் திருவடிகள் போலே
இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே -நான் காண் -என்ன – அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே -கண்ண நீரைத் துடைத்து -விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது -முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய – அவர்களும் அமுது செய்து கண் வளர -இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து -மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி -பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி தான் பிரசாதப் படாதே கிடக்க -இது என் -என்று கேட்க -கோயில் நின்றும்
எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம் என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே -நான் இதுக்கு என் செய்ய  வேணும்-என்ன -நீ எம்பெருமானார் திருவடிகளைஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன -இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க -இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி -விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு – இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் -இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய -எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி -அந்த க்ராமத்திலெ நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே
அவற்றை உடையவர் தரித்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள -இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் –ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் -திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ  பாதத்திலே நின்று நெடு நாளோடு கூட ஸ்தோத்ரம் கேட்டருளி சாத்தினவாறே -இனி ஜ்ஞான கார்யத்தில் உமக்கு கர்த்தவ்யம் ஒன்றும் இல்லை -பெரிய நம்பிக்கு பிரியமாக கோயில் திருவாராதனம் நடத்தல் ஆகாதோ -என்று சரம ஸ்லோக அர்த்தத்தையும் அவ்வளவிலே அருளிச் செய்து -விடை கொடுத்து அருள – இவரும் விடை கொண்டு -திருக் குளக் கரையிலே எழுந்து அருள -முதலியாண்டான் எம்பெருமானார்
தாழ்த்த அருளினவாறே ஸ்ரீ பாதத்திலே கண்டு வர வேணும் என்று வர -ஓரடி முற்பட்டீர் இல்லையே – எனக்கு சரம ஸ்லோகம் அருளிச் செய்த உருகு பதத்தோடு எழுந்து அருளி -இருக்கிறார் புக்கு தண்டனிட்டு வா – என்று அருளிச் செய்ய-ஆண்டானும் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டனிட்டு நிற்க-
ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே யிருந்தாய் -என்று விஷயீ கரித்து -சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச் செய்து -உனக்கு பரிஹரிக்க வேண்டுவது மூன்று படு குழி உண்டு – அத்தைக் கேள் -என்ன -அருளிச் செய்யலாகாதோ -என்ன -வித்வான் -அபிஜாதன் -எம்பெருமானார் மருமகன் என்கிறவற்றை -எல்லாம் -உத்தேச்ய என்று இராதே – எம்பெருமானார் திருவடிகளில் பண்ணின சம்பந்தமே உனக்கு உத்தாரக ஹேது -என்று இரு என்று அருளிச் செய்ய-அத்யந்த ஹேயனாய் இருக்கிற என்னையும் தங்களோடு ஒரு கோவையிலே கோப்பதே -என்று கண்ணும் கண்ண நீருமாய் விடை கொண்டு எம்பெருமானார் ஸ்ரீ பாதத்து
ஏறப் போந்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

எம்பெருமானார் -உந்து மத களிற்றன் என்கிற பாட்டை அனுசந்தித்துக் கொண்டு திருக் கோட்டியூர் நம்பி திரு வாசலிலே -சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்கிற இடத்தை அனுசந்திக்கிற போது -நம்பி திரு மகளார் -தேவகிப் பிராட்டியார் -திருக் கதவைத் திறந்து கொண்டு புறப்பட -எம்பெருமானார் விழுந்து தெண்டன் இட்டு கிடக்க -நெரித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போக நம்பி -இது என் பெண்ணே -என்ன -என்னை எம்பெருமானார் தண்டன் இட்டார் -என்ன –
அதுக்கு பயப்பட வேணுமோ என்று அருளிச் செய்து -எபெருமானார் உள்ளே புக்கு அருளினவாறே – இளையாழ்வீர் –இப்போது அனுசந்தானம் உந்து மத களிற்றனோ -என்று அருளிச் செய்தார்
என்று பிள்ளை அருளிச் செய்வர் –

பெரிய நம்பி திருமகளார் அத்துழாய் புக்ககத்திலே இரா நிற்க -ஒருநாள் தீர்த்தமாடத் துணை வர வேணும் -என்று மாமியாருக்கு அருளிச் செய்ய -உன் சீதன வெள்ளாட்டியை கொண்டு போ என்று தடுத்துச் சொல்ல -நம்பி பக்கல் வந்து-நம்பீ என்னை இப்படி சொன்னார் என்ன – நாம் அறியோம் உங்கள் ஜீயருக்கு சொல்லும் -என்ன -இவளும் அங்கு சென்று விண்ணப்பம் செய்ய அருகே இருந்த முதலி யாண்டானைப் பார்த்து -உமக்கு இந்தாரும் அம்மா ஸ்ரீ தன வெள்ளாட்டி -என்று திரு உள்ளமாய் -இவரைக் கொண்டு போ -என்ன -ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடப் பண்ணு வித்து – இவருடைய புககத்திலே நின்று -தாஸ வ்ருத்திகளை செய்யத் தொடங்கினார் -இவருடைய புக்ககத்தார் – இது என் ஆண்டான் -என்ன -என்னை வர விட்ட உடையவரும் எங்கள் நாய்ச்சியாரும் சொன்னது செய்ய வேணுமே -என்ன -அவர்களும் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஏறப் போய் -நம்பீ முதலி யாண்டானை ஏற விட்டு இப்படி எங்களை நசிப்பிக்கிறது என் -என்ன -நாம் அறிந்தோமோ -எம்பெருமானாருக்கு சொல்லுங்கோள்- என்ன -அங்கே  சென்று விண்ணப்பம் செய்ய – உடையவரும் -ஆண்டானை அத்துழாய் க்கு ஸ்ரீ தன அடிமையாகக் கொடுத்தோம் -அங்கு உங்களுக்கு நிற்க ப்ரியம் அன்று  ஆகில் இங்கே நின்று அடிமை செய்கிறது -என்று அருளிச் செய்து அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே – ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க – இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து –
ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன –தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தைஉடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

த்ரை லோக்யாள் -என்பாள் ஒரு ஸ்த்ரி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் வங்கி புரத்து ஆச்சிஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருக்கும் -அங்கே அனந்தாழ்வான் எழுந்து அருள -அவரை ஆறு மாசம் சேவித்து இருந்து அவர் எழுந்து அருளின வாறே ஆச்சி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்றாள் -அவரித்தனை நாள் வந்திலையீ என்ன -அனந்தாழ்வானை சேவித்து இருந்தேன் என்ன -அவர் நான் சொன்னதிலும் ஏற்றமாக சொல்லிற்று உண்டோ -என்ன – உண்டு –உம்மை ஆஸ்ரயித்து -பதினாறாட்டை நாளுண்டு -எம்பெருமானார் திருவடிகளைத் தஞ்சம் என்றீர் இத்தனை -அவர் ஆறு மாசத்திலே உம்முடைய திருவடிகளே  தஞ்சம் என்னும்படி பண்ணினார் – என்றாள் –

உடையவர் அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
ஒருவன் பிரபன்னன்  ஆனால் – அவனுடைய தேக யாத்ரை கர்ம ஆதீனம் ஆகையாலே -கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆம் இத்தனை -ஆத்ம யாத்ரை பகவத் ஆதீனம் ஆகையாலே அதில் தனக்கு அந்வயம் இல்லை -உண்டு என்று இருந்தான் ஆகில் -ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை -ஆகையால் உபய யாத்ரை யும் கொண்டு அந்வயம் இல்லை -ஆகையால் கரண த்ரயங்களையும் கொண்டு வேண்டிற்று செய்து திரியவோ -என்னில் -அது ஸ்வரூபம் அன்று –இனி உபாயாந்தரத்தில் அந்வயம் இல்லா விட்டால் ப்ராப்யமான கைங்கர்யத்தில் அந்வயிக்கும் இத்தனை –இங்கே இருக்கும் நாள் செய்யும் கைங்கர்யம் ஆறு -அவை யாவன –
நீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிக்கவும் -அதுவும் மாட்டிற்று ஆகில்
அருளிச் செயலை ஓதி ஓதுவிக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
உகந்து அருளின திவ்ய தேசங்களிலே அமுதுபடி சாத்துப்படி ஆராய்ந்து போரவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டி இருக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
த்வயத்தின் அர்த்த அனுசந்தானம் பண்ணவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் அபிமாநத்திலே ஒதுங்கி இருக்கவும் –
இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவது மூன்று விஷயங்கள் உண்டு –
அவர்கள் ஆர் என்னில் —அநு கூலரும் -பிரதி கூலரும் அநு பயரும் –
இதில் அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்பிரதி கூலர் ஆவர் பகவத் விட்டுக்கள் -எம்பெருமானை த்வேஷிப்பவர்கள் – அநு பயர் ஆவார் சம்சாரிகள்
இதில் அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -சந்தனகுஸு ம தாம்பூலாதிகளைப் போலவும் – நிலாத் தென்றல் சந்தனம் போலேயும் – அபிமத விஷயம் போலேயும் –உகந்து வர்திப்பான்பகவத்த்விட்டுக்களைக் கண்டால் சர்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான் –
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே உபேஷித்து வர்த்திப்பான் -இப்படி வர்த்திக்க ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம ப்ராவண்யம் -அர்த்த காமம் அடியாக அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமானம் பண்ணினால் – ராஜ புத்ரனை அவமானம் பண்ணினால் ராஜஹ்ருதயம் புண் படுமா போலே த்த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் -பிரதி கூலரான பகவத்த்விட்டுகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் -ராஜா சார்வ பௌமனாய் இருக்க –ராஜ மஹிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கலிலே மடிப் பிச்சை புக்கால் ராஜாவுக்கு அவத்யமாம்போலே எம்பெருமானுக்கு அவத்யமாய் -தத்த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும்அநு பயரான சம்சாரிகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாரைப் போலே நமக்கும் பிறர்க்கும் வாசி அறிந்திலன் -இவனுக்கு பிறந்த ஞானம் கார்யகரமாக பெற்றிலோமே என்று இவன் அளவில் ஈஸ்வரன் உதாசீனனாய் போரும் –

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரோடே பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அனர்த்தப் பட ஒண்ணாது என்று பெருமாள் திருவடிகளில் எழுந்து அருளி நிற்கச் செய்தே -அவனும் அங்கே
சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யம் இல்லை -நான் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள்
இவ்வாத்மாவுக்கு தஞ்சமாய் இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை -என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து
சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டரானார் –

எம்பெருமானார் தம்முடைய அந்திம தசையிலே அருளிச் செய்த வார்த்தை –
உடையவர் தம்முடைய திரு உள்ளத்திலே ஆர்த்தியோடே விசாரித்து பெரிய பெருமாளை திருவடி தொழுது விண்ணப்பம் செய்தபடி
சம்சாரத்தில் அருசி பிறந்தது என்று சாங்கப் பிரபத்தியை பண்ணி அருளினார் இப்போது இது என் என்று பெரிய பெருமாள் வினவி அருள -கால அதிக்ரமம்
பிறந்ததே என்ன -காலத்துக்கு நாம் அன்றோ கடவோம் -சிறிது காலம் உம்மைக் கொண்டு லோகத்தை திருத்தப் பார்த்தோம் -அறப் பதறினீர் -இனி உமக்கு வேண்டுவது என் என்ன –சடக்கென திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ன -ஆகில்
இற்றைக் கிழைமைக்கு நாலாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன –
அப்போது என்னுடைய சம்பந்த சம்பந்திகள் எல்லாரும் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்து –
மடத்துக்கு எழுந்து அருளி -அப்போது முதலிகள் எல்லாரையும் அழைத்து அருளி ஒருகாலும் அருளிச் செய்யாத அர்த்தங்களை எல்லாம் அருளிச் செய்தார் –
அவ்வர்தங்களை எல்லாம் கேட்டு அதி சங்கை பண்ணி விண்ணப்பம் செய்ய –
இவரும் வெள்ளக்கேடாக ஒண்ணாது என்று இற்றைக்கு நாலாம் நாள் பெரிய பெருமாள் திருவடிகளில் போகிறோம் என்று அருளிச் செய்ய -இவருடைய
விச்லேஷத்தில் ஆத்மத்யாகம் பண்ணக் கடவோம் என்று முதலிகள் தேறி இருக்கிற பிரகாரத்தை திரு உள்ளம் பற்றி -ஆளவந்தார் ஸ்ரீ பாதமே –ஆத்மத்யாகம்
பண்ணினார் உண்டாகில் நம்மோடு அந்வயம் இல்லை என்று அருளிச் செய்ய – இவர்களும் இத்தைக் கேட்டு மிகவும் சோகார்தராய் -இனி எங்களுக்கு செய்ய அடுப்பது என் பட்டி புகுதல் -பட்டினி கிடத்தல் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய -அருளிச் செய்த வார்த்தை –
சகல வேதங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் சகலமான ஆழ்வார்கள் திவ்ய
பிரபந்தங்களிலும் -சகல ஆசார்ய பாசுரங்களிலும் பார்த்த இடத்தில் -ஒரு அதிகாரிக்கு
த்வயம் ஒழிய மந்த்ரம் இல்லை —
மிதுனம் ஒழிய வஸ்து இல்லை –
மிதுன கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை –
ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-

பாகவத அபசாரம் தான் பஹூ விதம் -அதில் பிரதான அபசாரம் பன்னிரண்டு –
அவை எவை என்னில்
-ஜன்ம நிரூபணம் –சரீர நிரூபணம் -பாவ -பாக -நிரூபணம் –ஆஸ்ரம நிரூபணம் -அவயவ நிரூபணம் -ஆலச்ய நிரூபணம் –
வாஸ நிரூபணம் -பந்து நிரூபணம் -பிரகாச நிரூபணம் –பிரகார நிரூபணம் -வர்த்தன நிரூபணம் -தோஷ நிரூபணம் –
இதில்-
1- ஜன்ம நிரூபணம் ஆவது -ஸூ த்ரம் வா பகவத்பக்தம் நிஷாதம் ஸ்வ பசம்ததா -வீஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -ந ஸூ த்ரா பகவத்
பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா -சர்வ வர்னேஷூ தே ஸூ த்ரா யே ஹ்யபக்தா ஜநார்தனே -ய பஸ்யதி ஸூ பாசாரம் வைஷ்ணவம் வீத கல்மஷம்
ஸ வை யஸ்மின் குலே ஜாதம் பிரணமேத் தண்டவத் புவி -கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி நஸ் சர்வ யோநிஷூ -பிரத்யஷிதாத்மா நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் என்று இத்யாதி புராணங்களிலே சொல்லப்பட்டு இருக்கையாலே தான் வைஷ்ணவர்களை ஜன்ம நிரூபணம் பண்ணுவது அபசாரம்
2-சரீர நிரூபணம் ஆவது -புருஷ சரீரம் என்றும் -ஸ்திரீ சரீரம் என்றும் -திருவனந்த ஆழ்வானை பாம்பு சரீரம் என்றும் -ஸ்ரீ கருட ஆழ்வானையும் -ஸ்ரீ ஜடாயு மகா ராஜரையும் பஷி சரீரம் என்றும் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானையும் திருவடியையும் ஸ்ரீ சுக்ரீவ மகாராஜரையும் மிருகங்கள் என்றும் -பிரகலாத
ஆழ்வானையும் ஸ்ரீ விபீஷண பெருமாளையும் மகா பலியையும் இவர்கள் முதலான பகவத் தாசரை ராஷசர் என்றும் -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபங்களான சதுர்வித சரீரங்களிலே பகவத் பக்தர் யாதொரு சரீரம் பரிகிரஹித்து இருந்தாலும் இந்த சரீரம் என்று சரீர நிரூபணம் செய்கை அபசாரம்

3-பாவ -பாக நிரூபணம் ஆவது ஷட்பாவ விகாரமான பால்ய யௌவன வருத்தத்வாதி வயோ நிரூபணம் செய்கை அபசாரம்
4-ஆஸ்ரம நிரூபணம் ஆவது -ப்ரஹ்மசர்ய -க்ருஹச்த -வானப்ரஸ்த -யதியாதிகளில் ஸ்ரீ வைஷ்னவர்களை
இந்த ஆஸ்ரமம் என்று ஆஸ்ரம நிரூபணம் செய்கை அபசாரம்
5-அவயவ நிரூபணம் ஆவது -திருமேனியிலே ஆதல் -அவயவங்களிலே ஆதல் ஸ்ரீ வைஷ்ஹ்னவர்களுக்கு ஒரு தோஷம் உண்டே ஆகிலும்
அவர்கள் ஜ்ஞானமே சர்வ அவயவ பூர்த்தி என்று பாராமல் இருக்கை அபசாரம்
6-ஆலச்ய நிரூபணம் ஆவது -பிரபன்னனானவன் தன்னுடைய திருமேனியை உபேஷை பண்ணி ஹேயமாய் இருக்குமிடத்தில் குத்சியாமல் அவர் விக்ரகமே
போக்யமாகபாராது இருத்தல் அபசாரம் -இதுக்கு விண்ணப்பம் செய்வார் கதை -கொட்டைப் பாக்கொடு பெருமாளையும் வாயில் இட்ட அரையர் கதை –

7-வாஸ நிரூபணம் ஆவது -கோயில் திருமலை பெருமாள் கோயில் நின்றும் எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை எத்தனை ஆதரிப்பார்கள் அப்படியே
ஒரு குப்பத்தில் இருந்து எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவரை அவர் இருந்த ஸ்தலமே திவ்ய தேசம் என்று உத்தேச்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை -அபசாரம் -கருடன் -சாண்டிலி அம்மையார் வ்ருத்தாந்தம் –
8-பந்து நிரூபணம் ஆவது -தன்னுடைய பிரகிருதி பந்துக்களிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உண்டாகில் தன்னுடைய ஸ்வாமி என்று உத்தேச்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை அபசாரம்
9-பிரகாஸ நிரூபணம் ஆவது -ஆசார்யரையும் சிம்ஹாசனத்தில் அவர்களையும் பூஜ்யர் ஆனவரையும் -பிரசித்தமாக ஆசார்ய கைங்கர்ய தாஸ்ய க்ருத்யம்
பண்ணுமவர்களையும் -உபாய சூன்யராய் ஒதுங்கி வர்த்திக்கும் அவர்களையும் ஏக பிரகாரத்தில் ரஷகர் என்று பாராது இருத்தல் அபசாரம் –
10-பிரகார நிரூபணம் ஆவது –திரு நந்தவனம் செய்கிற பிரப்ன்னரையும் -திரு முற்றங்கள் கட்டுவிக்கிற பிரபன்னரையும் -சாத்துப்படி திருமாலை திரு விளக்கு இடுகிற பிரபன்னரையும் -மற்றும் இத்யாதி பரிசாரகங்கள் செய்கிற பிரபன்னரையும் – பார்வைக்கு ஒன்றும் செய்ய மாட்டாத வெறுமனே இருக்கிற பிரப்ன்னரையும் ஏக பிரகாரத்தில் உத்தேச்யர் என்று பாராது இருக்கை அபசாரம்
11-வர்த்தந  நிரூபணம் ஆவது-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி யாத்ரையான பிரகிருதி வஸ்யர் நிரூபணத்தில் வ்யவஹாரம் பண்ணுதல் -கிருஷி பண்ணுதல் -ஆயுதம் பிடித்து சேவித்தல் – எவ்வகையில் பாங்காய் இருந்தாலும் இவ்வகையில் இருக்கிறார்கள் என்று நினைக்கை அபசாரம் -இதுக்கு அவரை வியாபாரி கதை
12-தோஷ நிரூபணம் ஆவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி போகமான பிரவ்ருத்தி ஸா கதா பாரதீ புண்யா த்ரௌபதி ச பதி வ்ரதா -தத் விதா பாண்டவா தன்யா பிரசன்னே புருஷோத்தமே -என்று த்ரிவித கரணங்களாலும் அவி சேஷஞ்ஞர் என்றும் – அனுஷ்டாதா அன்று என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை ஏவ மாதி தோஷங்கள் நிரூபிக்கை அபசாரம் –
தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தோஷத்தை பார்க்க கடவன் அல்லன் -கண்ணாலே பார்த்து மனச்சாலே நினைத்து வாக்காலே சொல்லி -அம்மை கனக மிருகத்தைக் கொண்டு வரச் சொல்லி -பகவானை அனுப்ப்பின அபசாரம் – அது எங்கனே என்னில் -கந்தர்ப்பகோடி லாவண்யமாய் பஞ்சோபஷிணத்மயமாய்
ஹாவு ஹாவு ஹாவு என்று திவ்ய மங்கள விக்ரக அனுபவம் பண்ணி —சப்தாதி விஷய ப்ராவண்யத்தில் ஒரு ஸுவர்ண பாஸ மிருகத்தை அபேஷித்து
பெருமாளை விட்ட போதே -பரம பாகவதனான இளைய பெருமாளை பருஷ வாக்யங்களைச் சொன்ன போதே ராஷ சர்கையிலே சிறை போக வேண்டிற்று –
வாசகத்தால் செய்த அபசாரத்துக்கு பிராயச்சித்தம் இல்லை -ந ஷமாமி கதாசன – மத் பக்தம் ஸ்வ பசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நரா -பத்ம கோடி சதேனா சபிந ஷமாமி வஸூ ந்தரே -இவை தான் ஓரொன்று பஹூ முகமாய் வந்தேறும் – இவ்வபராதங்களை தான் பண்ணுகையும் -தனக்கு உத்தேச்யனான ஆசார்யன்
பண்ணிலும் -ந்யமாதி க்ரமம் ரஹசி போதயேத் -என்கிறபடி ஏகாந்தத்தில் நியமித்து தவிர்ப்பியாது ஒழிகையும் -பரதந்த்ரரானவர்கள் பண்ணுமிடத்தில் முதுகிலே யடித்து விலக்காது ஒழிகையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் அபராதம் பண்ணும் இடத்தில் அவர்கள் ஸ்ரீ பாதத்தைக் கட்டிக் கொண்டு ஆனவளவும் நியமித்து தவிர்ப்பியாது ஒழிகையும் -அவர்கள் தவிராத அளவிலே தான் பகவத் விஷயத்தில் சரணம் புகாது ஒழிகையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏகாந்தத்தில் பண்ணின அபராதங்களை பிரகாசம் ஆக்குகையும் அபராத ஷாமணம் பண்ணினவர்களை பாகவத அபசாரம் பண்ணினார்கள்  என்று நினைத்து இருக்கையும்
இவ்வபதாரங்களுக்கு எல்லாம் அடி –

அவஸ்யம் பரிக்ராஹ்யங்கள் ஆன பன்னிரண்டு அறிய வேணும் -அவை யாவன –
ஆகார நியமமும் -விஹார நியமமும் -அன்ன நியமமும் -போஜன நியமமும் – ஸ்நான நியமமும் -ஸ்வரூப நியமமும்
-உபாய நியமமும் -உபேய நியமமும் -வாஸ நியமமும் -போக நியமமும் -ஆசார நியமமும் -சம்சர்க்க நியமமும் –
1-ஆகார நியமம் ஆவது -பாகவத அன்னமே புஜிககை
2-விஹார நியமம் ஆவது –பகவத ஆலயங்களிலும் திரு நந்தவனங்களிலும் ஸ்வா சார்யன் சஞ்சரிக்கும் ஸ்தலங்களிலும் -மற்றும்
விலஷணமான ஸ்தலங்களிலும் சஞ்சரியாதே  -மற்ற விடத்திலே சஞ்சரிக்கை –
3-அன்ன நியமம் ஆவது -ப்ராக்ருதர் இடத்தில் தன்னைக் கீழ் படுத்தி ஆர்ஜியாதே அமுதுபடி -சாத்துப்படி -ஸ்ரீ கார்யம் முதலானவற்றுக்கு அர்ஹமான த்ரவ்யங்களுக்கு கர்தவ்யதயா அநு கூலரை நெருக்கி ஆர்ஜியாதே ஸ்வ ஷேத்ரத்தில் ஸ்வ சரீரத்தில் க்ருஷி பண்ணி யாதல் -அநு கூலருடைய ச்நேஹத்தாலே வந்த த்ரவ்யம் ஆதல் – மாதுகர முஷ்டியினால் ஆர்ஜித்த த்ரவ்யம் ச்வீகரிக்கையும்
4-போஜன நியமம் ஆவது -இப்படி ஆர்ஜிதமான த்ரவ்யத்தை பகவத் பாகவத விஷயத்தில் சமர்ப்பித்து பிரசாத பிரதிபத்தி பண்ணும் போது பிரசாத ஸ்வீகாரம்
என்றும் -ஷு ந நிவ்ருத்தி மாத்ரம் என்றும் -தேஹ  தாரண மாத்ரம் என்றும் – புருஷார்த்தம் என்று இருக்கை –
5-ஸ்நான நியமம் ஆவது -பாப விமோசனம் என்று ஆதல் -பிரயோஜனாந்தர நினைவு ஆதல் -புண் கழுவுகிறோம் என்றாதல் -அதிகாரி சம்பத்துக்கு உடலாக வாதல் -சரீர மாலின்யத்துக்காகவாதல் அன்றிக்கே பர்த்ரு போகத்துக்கு பதி வ்ரதை ஸ்நானம் பண்ணுமா போலே பகவத் பாகவத சமாராதனம் செய்கைக்காக ஸ்நானம் பண்ணுகை
6-ஸ்வரூப நியமம் ஆவது -ததீய சேஷமாய் இருக்கை –
7-உபாய நியமம் ஆவது -அநந்ய சாதநனாய் இருக்கை
8-உபேய நியமம் ஆவது அநந்ய பிரயோஜனனாய் இருக்கை
9-வாஸ நியமம் ஆவது -அநந்ய பிரயோஜனரான மகா பாகவதருடைய திருமாளிகை கடைத்தலையிலே ஒதுங்கி வர்த்திக்கை –
10-போக நியமம் -ஆவது -அவர்களுடைய சேவையே எல்லா போகங்களும் என்று இருக்கை
11-ஆசாரநியமம் ஆவது -அர்த்த காம அபிமானங்கள் ஹேதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளத்திலும் ஆசார்யன் திரு உள்ளத்திலும்
கலக்கம் வாராமல் வர்த்திக்கை –
12-சம்சர்க்க நியமம் ஆவது -சாத்விகர் அங்கீகாரம் உள்ள தேசத்தில் வசித்து இருக்கை –
இந் நியமங்கள் உண்டாய் போரவே -இவ்வபதாரங்கள் ஒன்றும் புகுராது என்று–அருளிச் செய்து அருளினார் –

உடையவர் திருமலைக்கு எழுந்து அருளுகிற போது உத்தர நல்லூரிலே எழுந்து அருளின அளவிலே -வானமாமலை தாசர் என்று ஒரு கோபால
ஸ்ரீ வைஷ்ணவர் -ஆய்க்குலத்தை சேர்த்தவர் -பாலமுது காய்ச்சி கொண்டு வந்து உடையவருக்கு பாங்காக பரிமாற -உடையவர்
விரும்பி அமுது செய்ய -மீண்டும் எழுந்து அருளுகிற போதும் அப்படியே பாங்காக கொண்டு வந்து பரிமாற -இது நன்றாய் இருந்ததீ -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர் முன்பு விரும்பி அமுது செய்தவாறே இப்போதும் பாங்காக கொண்டு வந்தேன் -என்ன -அங்கனேயோ -என்று ஒருநாள் உபவசித்து அருளினார் –அஹங்காரம் த்வநிக்கையாலே எடுத்துக் கொண்டதுக்கு வருந்தி உபவாசம் இருந்தார் என்று தாத்பர்யம்

உடையவர் திருக்கண்ணபுரத்துக்கு எழுந்து அருளுகிற போது ஆளவந்தார் சிஷ்யர் அம்மங்கிக்கு போய் வருகிறேன் என்ன –
அம்மங்கி உடையவருக்கு பிரசாதித்த வார்த்தை –
அக்நி ஜ்வாலையிலே அகப்படாதே கிடீர்–அரு நஞ்சு தின்னாதே கிடீர்–அ ஸூ சி மிதியாதே கிடீர் – அபலைகளோடே செறியாதே கிடீர் —
-ஆஸ்திகரோடு செறிந்து போரும் கிடீர் —இதுக்கு வ்யாக்யானமாக உடையவர் தமது சிஷ்யர்களுக்கு அருளிச் செய்தபடி –
அக்நி ஜ்வாலை என்கிறது விரோதிகளை –விரோதிகள் சர்பாக்நி போலே அவர்கள்-ஆகிறார் பாஹ்ய குத்ருஷ்டிகள் –
அரு நஞ்சு என்கிறது ப்ரசன்ன விரோதிகளை —ப்ரசன்ன விரோதிகள் எலுமிச்சம் பழம் கருப்பூரமும் போலே -அவர்கள் ஆகிறார்
ரூப நாமங்களை ஏறிட்டுக் கொண்டு உள்ளே புகுந்து பின்னப் பிரதிபத்திகளாய் இருக்குமவர்கள் –
அ ஸூசி என்கிறது -விரோதிகளை -விரோதிகள் காஷ்ட லோஷ்டாதிகள் போலே -அவர்கள் ஆகிறார் சரீரை கதத் பரரான சம்சாரிகள்அபலைகள் என்கிறது
அநுகூலரை -அநு கூலர் கன்னிகளைப் போலே -அவர்கள் ஆகிறார் –த்யாஜ்ய உபாதேயங்களை தெளிய அறியாதவர்கள்ஆஸ்திகர் என்கிறது –
அநு போக்தாகளை -அநு போக்தாக்கள்-காமிநிகளைப் போலே -அவர்கள் ஆகிறார் -பூர்ணாதிகாரிகள் -என்று –

பெரிய திருநாள் தீர்த்தம் பிரசாதித்து பெருமாள் எழுந்து அருளுகிற போது எம்பெருமானார் தாமும் தீர்த்தமாடி சேவித்து எழுந்து அருளுகிறவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கை கொடுத்து வர -இதென் -என்று சிலர் விண்ணப்பம் செய்ய –ஜன்மம் உயர்ந்து இருக்கத் தாழ நின்றோமே என்கிற அபிமாநம் உண்டு இ றே எல்லாருக்கும் -அக்கொத்தையும் இல்லாதவர் இ றே இவர் -என்று அருளிச் செய்து அருளினார் –
வேதகப்பொன் -ராமானுஜ ஸ்பர்ச வேதி -என்று அழைக்கப்பட்டார் பிள்ளை உறங்கா வல்லி -தாசர் –இரும்பை பொன்னாக்கும் ஸ்பர்ச வேதி –

வீர ஸு ந்தரனுக்கு பயப்பட்டு எம்பார் அடிமையான ஜகந்நாத ப்ரஹ்ம ராயருடைய வேச்யை மடத்திலே வந்து இருக்க -இவளை அவன் சொன்ன
வார்த்தையைக் கேட்டு பயத்தாலே உடையவர் -எம்பார் இவளை இங்கு நின்றும் போக விட வேண்டும் -என்ன -எம்பாரும் பயார்தையான இவளை ரஷிக்கவே
தர்மம் தானே ரஷிக்கும் -எம்பெருமான் ரஷகன் என்னும் இடமும் – ஆஸ்த்ரீ பாலமும் அறியுமே –அவனே ரஷகன் என்கிற அவதாரணம் அறிகைக்கு
அன்றோ ஆசார்ய சேவை பண்ணுகிறது -என்று விண்ணப்பம் செய்தார் –

எம்பெருமானார் எம்பாரை  நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே -எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன -இப்படி எளியனாகில் நமக்கு
என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன – இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய -முமுஷுகளுடைய காலஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் -சாதனா ஈஸ்வரன் கிருபை என்கிற
பிரதிபத்தி நழுவாது ஒழிகையும் – அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம் பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் –
இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில் பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் – இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் – தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –
உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் – இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம் பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – -ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் –

முதலியாண்டான் திருவாய்மொழி ஓதுகிற போது -உடையவர் எழுந்து அருளி இருந்து
ஒரு பாட்டு சந்தை இட்ட அளவிலே இதினுடைய அர்த்த அநுசந்தானத்திலே பரவசரானார் –

ஈஸ்வரனுடைய ஆகாரத் த்ரயமாவதுமேன்மையும் -நீர்மையும் -வடிவு அழகும் –அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராவதி மன்னன் மணி வண்ணன் -திருவாய்மொழி -5-3-5- என்றும் –
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -திருவாய்மொழி -1-10-11- என்றும் –
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை -திருவாய்மொழி -5-1-5-என்றும் –
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினை -அமலனாதி பிரான் -10-என்றும் –
பச்சை மா மலை போல் மேனி அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திருமாலை -2-என்றும் –
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப -கை தொழக் கிடந்த -மூவுலகளந்த -திருவாசிரியம் -1- என்றும் இத்யாதிகளாலே அனுசந்திப்பான் –

அநாதியான கர்ம பிரவாஹத்தாலே சதுர்வித சரீரங்களிலும் பிரவேசித்து
சதுர்தச புவனங்களிலும் தட்டித் திரிகிற சேதனரை  ஈச்வரன் தன்னை பெறுகைக்கு உறுப்பாக
த்ரிவித சரீரங்களை த்யஜிப்பித்து –மனுஷ்ய ஜன்மத்திலே ஆக்கி  –
கரண த்ரயத்தாலும் -காலத் த்ரயத்திலும் -கர்ம த்ரயத்தில் அன்வயிப்பித்து
அசித் த்ரயத்துக்கு அவ்வருகு ஆனவன்
குண த்ரயத்தாலே ஷூ தரனாய் -ஆசாத்ரயத்தாலே அலமந்து –அபராத த்ரயத்தை
ஆர்ஜித்து –ஈஷணா த்ரயத்தாலே அடிபட்டு –தத்வ த்ரயத்தை அறியாதே -தாப த்ரயத்தாலே தப்தனான இவனை
தேவதா த்ர்யத்துக்கு சேஷியாய் –மஹிஷி த்ரயத்துக்கு வல்லபனாய் –ஆத்ம த்ரயத்தை ஆளுமவனாய்
த்ரிவித பரிச்சேத ரஹீதனாய் –த்ரிவித காரண வஸ்துவான ஸ்ரீ மான் கடாஷித்து –
விரோதி த்ரயத்தை விடுவிக்கக் கோலி –ஸூ க்ருத த்ரயத்தை தொடுமானம் ஆக்கி –
ஆனுகூல த்ரயத்திலே அன்வயிப்பித்து –அனுவர்தன த்ரயத்துக்கு ஆளாக்கி –
அதிகாரி த்ரயத்தை உடைய ஆசார்ய உபதேசமான மந்திர த்ரயத்தாலே மாசறுத்து –
பத த்ரயத்தை அறிவிப்பித்து –ஜ்ஞான த்ரயத்திலே நாட்டி வைத்து –சங்கா த்ர்வ்யத்தை தவிர்ப்பித்து
ஆகார த்ரயத்திலே அன்வயிப்பித்து பர்வ த்ரயத்தாலே போகமாக்கி
லோக த்ரயத்தை உபேஷிப்பித்து –பாத த்ரயத்திலே கொண்டு போய் –
சாம்ய த்ரயத்தை சம்பன்னமாக்கி புன்மை த்ரயம் அற்ற போகத்தை புஜிப்பிக்கும்

த்ரிவித சரீரமாவது –தேவ திரயக் ஸ்தாவர சரீரங்கள்
கரண த்ரயமாவது -மநோ வாக் காயங்கள்
கால த்ரயமாவது -பூத பவிஷ்யத்  வர்த்தமானங்கள்
கர்ம த்ரயமாவது -நினைக்கை செய்கை சொல்லுகை
நினைக்கை யாவது -பர சம்ருத்ய சஹத்வமும் -பரா நர்த்த சிந்தனையும் –
பர தோஷ பிரதிபத்தியும் -ஸ்வ யாத்ரா நிரூபணமும்
சொல்லுகையாவது -குடி முடியும்படி தோஷம் சொல்லுகையும் ஸ்வம் அறுதி கொள்ளும்படி
கோட் சொல்லுகையும் -இதர சரிதங்களை சொல்லுகையும் -பொய் சொல்லுகையும் –
செய்கையாவது -பர ஹிம்சையும் -பர த்ரவ்ய அபஹாரமும்
அசித் த்ரயமாவது -வ்யக்தமும் அவ்யக்தமும் காலமும்
குண த்ரயமாவது -சாத்விக ராஜஸ தாமஸும்
ஆஸா த்ரயமாவது -அஹங்கார யுக்த  ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் –
அதாவது -வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி -பெரிய திருமொழி -1-1-4-என்கிற இவை

அபாரத த்ரயமாவது -பகவத -அபசாரமும் பாகவத அபசாரமும் அசஹ்ய அபசாரமும்
ஈஷணா த்ரயமாவது -அர்த்தேஷணை -தாரேஷணை -புத்ரேஷணைகள் -பாசத்தில் அடி பட்டு கிடப்பது
தத்வ த்ரயமாவது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
தாப த்ரயமாவது -ஆத்யாத்மிகம் ஆதி தைவிகம் ஆதி பௌதிகம்
தேவதா த்ரயமாவது -வானவர் தம்மை யாளுமவன் -திருவாய்மொழி -3-6-2-பிரம ருத்ர இந்த்ராதிகள்
மஹிஷீ த்ரயமாவது -ஒருமகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகள் -பெரிய திருமொழி -3-3-9-
ஆத்ம த்ரயமாவது -பத்தர் முக்தர் நித்யர்
த்ரிவித பரிச்சேத ரஹிதனாவது -காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துக்களாலும்
பரிச்சேதிக்கப்  போகாது ஒழிகை
த்ரிவித காரண வஸ்து வாவது -நிமித்த உபாதான சஹகாரி காரணமாகை –
விசேஷ கடாஷம் ஆவது -சௌஹார்த்தம்
விரோதி த்ரயமாவது -ஸ்வ ஸ்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும் -தேஹாத்ம அபிமானமும்
ஸூக்ருத த்ரயமாவது -ஆநுஷங்கிகம் -பரா சங்கிகம் -யாத்ருச்சிகம்
ஆநுகூல்ய த்ரயமாவது -அத்வேஷமும் ஆபிமுக்யமும் சத் சம்பாஷணமும்

அநுவர்த்தன த்ரயமாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் –
அதிகார த்ரயமாவது பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாசித
என்கிறபடியே -அறியக் கற்று வல்லார் ஆகை
மந்திர த்ரயமாவது -சாஸ்திர ருசி பரிக்ரஹீதமும் -சரண்ய ருசி பரிக்ரஹீதமும் –ஆசார்ய ருசி பரிக்ரஹீதமும் –
பத த்ரயமாவது -அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் அந்ய உபாய நிவ்ருத்தியும் – பிரயோஜனாந்தர-நிவ்ருத்தியும் பண்ணிக் கொடுக்குமது
ஜ்ஞானத் த்ரயமாவது -ஸ்வ ஜ்ஞானம் -ப்ராபக ஜ்ஞானம் -பிராப்ய ஜ்ஞானம் –
சங்கா த்ரயமாவது -விரோதி பூயஸ்தையும் -ப்ராப்ய ப்ராசுர்யமும் -உபாய லகுத்வமும்
ஆகார த்ரயமாவது -ஈஸ்வரனுடைய மேன்மையும் நீர்மையும் வடிவு அழகும் -அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராபதி மன்னன் மணி -வண்ணன் -திருவாய்மொழி -5-3-6-
பர்வ த்ரயமாவது -ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியும் -சாதன விரோதி நிவ்ருத்தியும் -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியும் –
லோக த்ரயமாவது -பூம்யந்தரிஷத ஸ்வர்க்கம்
பாத த்ரயமாவது த்ரிபாத் விபூதி
சாம்ய த்ரயமாவது -ரூப சாம்யம் -குண சாம்யம் -போக சாம்யம்
புன்மை த்ரயமாவது -அல்பம்  அஸ்திரம் அபோக்யம்
அறுகை யாவது இவை இன்றிலே ஒழிகை-

1-சங்கத்தைக் கழித்து -2–ஈஷணையைக் கழித்து -3–பால்யத்தை கழித்து -4-யௌவனத்தை கழித்து –
5-ஜரையைக் கழித்து -6–மரணத்தைக் கழித்து -7–நரகத்தைக் கழித்து -8-அவித்யையைக் கழித்து –
9-கர்மத்தைக் கழித்து -10–வாசனையைக் கழித்து –11-தாபத் த்ரயத்தைக் கழித்து -12-சூஷ்ம த்ரயத்தைக் கழித்து –
13-விரஜைக்கு அக்கரைப் படுத்தி -14–லோகப் ப்ராப்தியை உண்டாக்கி -15–ரூபப் ப்ராப்தியை-உண்டாக்கி -16–சமீப ப்ராப்தியை உண்டாக்கி -17–சாயுஜ்யத்தை உண்டாக்கி –
18-ஜ்ஞானத்தை உண்டாக்கி-19- -பலத்தை உண்டாக்கி –
20-ஐஸ்வர்யத்தை உண்டாக்கி -21–வீர்யத்தை உண்டாக்கி –
22-சக்தியை உண்டாக்கி -23–தேஜசை உண்டாக்கி –
24-விக்ரஹ அனுபவத்தை உண்டாக்கி 25–கைங்கர்யத்தை உண்டாக்கி –
இவன் கைங்கர்யத்தை கண்டு அவன் உகந்தால் அவன் உகந்தபடி கண்டு உகக்கை
சேஷத்வத்துக்கு பிரயோஜனம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் -வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ்வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக்கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார்
ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலை-நம்பி
இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய சூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷசூ -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –
ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி –
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் -நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி
என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி –
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்
அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி –
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –
வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி
விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் –
நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் –
பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்-என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading