ஸ்ரீ யதிராஜ விம்சதி –

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முநிம்–

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதநீம் வ்யாஜாஹர யதிராஜ விம்சதீம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் நௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –ஸ்ரீ எறும்பு அப்பா அருளிச் செய்த தனியன் —

ஸ்வாமி இதயத்தை மகிழ்விக்க பெரிய ஜீயர் இந்த பிராப்தம் வழங்கினார் -அவரை வணங்குவோம் -சாஸ்திர அமிர்தம் அளித்தவர்
சாதக பறவை பௌர்னமி நிலவு கண்டு மகிழ்வது போலே அநந்ய பிரயோஜனரான அடியோம் இவர் அளித்த சாஸ்திரம் கொண்டு மகிழ்வோம் –

ய யதிபதி பிரசாதநீம் -யாவர் ஒருவர் எம்பெருமானாரை அருள் செய்யும் படி பண்ணுமதான
ஸ்துதிம் வ்யாஜாஹர யதிராஜ விம்சதீம் -20-ஸ்லோகங்கள் கொண்ட இந்த யதிராஜ விம்சதி என்ற திவ்ய கிரந்தத்தை அருளிச் செய்தாரோ
பிரபன்ன ஜன சாதகாம்புதம்– -பிரபன்ன ஜனங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரை உதவும் மேகம் போன்றவரான
தம் நௌமி சௌம்ய வர யோகி புங்கவம் -அந்த அழகிய மணவாளர் என்னும் பெயர் கொண்ட
முனி ச்ரேஷ்டரான -அழகிய மணவாள மா முனிகளை -ஸ்துதி செய்கிறேன் –
மோக்ஷம் அளித்து உயிர் காக்கும் எம்பெருமானார் -என்றபடி –
திருமந்திரம் -மூன்று பதங்களும் -மந்த்ர ரத்னம் ஆறு பதங்களும் -சரம ஸ்லோகத்தில் -11-பதங்களும் -சேர்ந்த -20-இது என்பர் –
சரம உபாய உபேயம் யதிராஜரே -உபாயத்துக்கு வேண்டிய விஷய பூர்த்தி முதல் இரண்டு ஸ்லோகங்களில் –
–ஞான பூர்த்தியை முதல் ஸ்லோகத்திலும் அனுஷ்டான பூர்த்தியை இரண்டாவதில் அருளிச் செய்கிறார்-
நம்மாழ்வார் திருவடிகளில் பிரேம புஷ்கல்யமும் –ஸ்வ அபிமானத்தில் ஒதுங்கியவர்களின் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -ரக்ஷகத்வத்தையும் –
ஞான ஆஸ்ரயம் –பிரபன்ன காயத்ரி போலவே முதல் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் -இதனால் இது பிரபன்ன காயத்ரி யுடைய சங்க்ரஹம் ஆகும்
மேலே மூன்று ஸ்லோகங்களில் –3-/4-/-5—உபாய உபேய பிரார்த்தனை
அபராத-தோஷ – பூயஸ்தம் ஆகிஞ்சன்யம் –மேலே எழு ஸ்லோகங்களில் -6- முதல் –12-வரை
அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனை -13-ஸ்லோகம்
அநந்ய கதித்வம் -14-/-15-ஸ்லோகங்களில்
ப்ராப்தியின் சரம அவதி பிரார்த்தனை -16-/ தேவரீர் இதற்கு சக்தர் -17-நிரதிசய கைங்கர்யம் அருள -தம் ஆச்சார்யர் முன்பே
அருளியதை அனுதினம் அபி விருத்தி செய்து ததீய பர்யந்தம் ஆக்கி அருள பிரார்திக்கிறார் -மேலே –

———————————————————————-

1-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

நம்மாழ்வார் உடைய தாமரை போன்ற திருவடிகளில் ஆழ்ந்த அன்பும் பக்தியும் பூண்ட ராமானுஜரை -மாறன் அடி பணிந்து உய்ந்தவரை வணங்குகிறேன் –
தனது திருவடிகளை பணிந்தவர்களுடைய காமம் தோஷம் குரோதம் அனைத்தையும் நீக்க வல்லவர் –

-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய–திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடி இணைகளில் செய்யத் தக்க
நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய-நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவை யுடைய
பராங்குச பாத பக்தம் -பராங்குசர் -நம்மாழ்வார் -திருவடிகளில் பரம பக்தி பூண்டவரும் –
ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம்–தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுடைய
காமாதி தோஷ ஹரம் -காமம் முதலிய தோஷங்களை போக்கடிப்பவரும்
-ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –துறவிகளுக்கு தலைவருமான எம்பெருமானாரை தலையால் வணங்குகிறேன் –

——————————————————————————————-

2-ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் –
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் -ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –

திருவரங்கன் திருவடித் தாமரையில் வீற்று இருக்கும் அன்னப்பறவை -நம்மாழ்வார் தாமரைத் திருவடிகளில் பக்தி என்னும் தேனைப் பருகும் தேனி-
ஸ்வாமி கண்டதும் அர்ச்சாவதார பெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார் திரு முகத் தாமரைகள் மலர்கின்றன –
ஸ்ரீ கூரத் ஆழ்வானை நிரந்தரமாக கொண்ட ஸ்வாமி திருவடிகளில் சரணம் புகுகிறேன் –

-ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம் –ஸ்ரீ ரெங்கநாதனுடைய திருவடிகள் ஆகிய தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கி இருக்கும் ராஜ ஹம்சம் போன்றவரும் –
–ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம் -ஸ்ரீ மத் பராங்குசர் ஆகிற நம்மாழ்வார் உடைய திருவடிகள் என்னும்
தாமரை மலர்களில் தேனைப் பருக படிந்து இருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் -பெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார் -இவர்களுடைய திரு முகங்களான
தாமரை மலர்களை மலர்ச்சி செய்யும் ஸூர்யன் போன்றவரும்
-ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணம் யதிராஜ மீடே -ஸ்ரீ கூரத் தாழ்வானை திருவடிகளாக உடையவருமாகிய எம்பெருமானாரை ஸ்துதிக்கின்றேன்
கீழே மூர்த்நா -காயிகம் -இங்கே ஈடே -வாசக -இவை இரண்டும் மாநசகத்துக்கும் உப லக்ஷணம்

—————————————————————————————————————————————–

3-வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத் –பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம் -பாதா நு சிந்தன பர சததம் பவேயம் –

ஸ்வாமி யால் நியமிக்கப் பட்ட குரு பரம்பரையில் தொடரும் ஆச்சார்யர்கள் திருவடி தாமரைகளில் எண்ணியபடி இருத்தல் வேணும்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் பிள்ளான் போன்றோர் வாக்கு மனம் செயல் மூன்றாலும் உனது திருவடிகளில் நிலைத்து நின்றனர்
இவர்கள் திருவடிகள் எனது எண்ணத்தில் நிலை நிற்க வேணும் –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச -எதிராஜரே -நாவினாலும் மனத்தினாலும் தேஹத்தினாலும்
யுஷ்மத் –பாதாரவிந்த யுகளம்-தேவரீருடைய தாமரை திருவடி இணைகளை-
பஜதாம் குரூணாம்–இடைவிடாமல் சேவித்துக் கொண்டு இருக்கும் ஆச்சார்யர்கள் ஆகிய
கூராதி நாத குருகேச முக ஆத்ய பும்ஸாம்–ஸ்ரீ கூரத் தாழ்வான் -திரு குருகை பிரான் பிள்ளான் -முதலிய பூர்வாச்சார்யர்களுடைய
பாதா நு சிந்தன பர சததம் பவேயம் –சததம் பாத அநு சிந்தன பர பவேயம் –எப்பொழுதும் திருவடிகளை சிந்திப்பதில்
ஊன்றியவனாக அடியேன் ஆகக் கடவேன்-எம்பெருமானார் உமது அடியார்க்கு என்னை ஆட்படுத்தி அருளுவாய் என்றவாறு –

————————————————————————————————————–

4-நித்யம் யதீந்திர தவ திவ்ய வபு சம்ருதௌ மே-சக்தம் மநோ பவது வாக் குணா கீர்த்தநேசௌ-
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத்வ யஸ்ய -வ்ருத்யந்த்தரேஸ்து விமுகம் கரணத்ரயம் ச

ஸ்வாமி உனது அழகிய திருமேனியையே எப்பொழுதும் த்யானித்து இருக்கும் படி அருளுவாய் -உனது திருக் கல்யாண குணங்களையே வாய் பேச வேண்டும்
உனது தாஸ்ய கைங்கர்யத்துக்கே கைகள் பயன்பட வேண்டும் -விஷயாந்தரங்களில் எனது முக்கரணங்களும் செல்லாதபடி அருள வேணும் –

யதீந்திர தவ திவ்ய வபு சம்ருதௌ மே- மநோ –யதிராஜரே அடியேன் மனம் தேவரீருடைய அழகிய திருமேனியை நினைப்பதிலேயே
நித்யம் சக்தம் பவது -எப்பொழுதும் பற்றுடையதாக இருந்திடுக
வாக் அசௌ–அசௌ மே வாக் -தேவரீரை ஸ்துதியாமல் தூரத்தில் உள்ள அடியேன் வாக்கானது –
தவ குண கீர்த்தநே-தேவரீருடைய ஸ்வரூப ரூப கல்யாண குணங்களையே ஸ்துதிப்பதில்
சக்தா பவது -பற்றுடையதாக இருந்திடுக –
மே கரத்வ யஸ்ய –அடியேனுடைய இரண்டு கைகளுக்கும்
தவ தாஸ்ய கரணம் து க்ருத்யம் அஸ்து-தேவருக்கு கைங்கர்யம் -அடிமை -செய்வது ஒன்றே கடமையாக இருந்திடுக
மே கரணத்ரயம்–இப்படி உம்மிடையே பற்றுடையவையாகும் படி பிரார்த்திக்கப் பட்ட -அடியேனுடைய முக்கரணங்களும்
வ்ருத்யந்த்தரே விமுகம் அஸ்து -வேறு ஒருவரை நினைப்பது ஸ்துபிப்பது அடிமை செய்வது ஆகிய காரியங்களில் பராமுகமாக இருந்திட அருள வேண்டும் –

————————————————————————————————————–

5-அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரய அர்த்த நிஷ்டாம் -மம அத்ர விதர அத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே-ஹ்ருஷ்டாஸ்து நித்யம் அனுபூய மம அஸ்ய புத்தி –

மூன்று பதங்களுடன் கூடிய மந்திர ராஜமும் அதன் அர்த்தங்களின்-அனன்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரன்யத்வம் அநந்ய போக்யத்வம்
– சிந்தனையுமே அறியும் படி சம்சாரத்தில் சிக்கித் திளைக்கிற அடியேனுக்கு அருள வேணும்
இதன் மூலம் உனது உயர்ந்த திருவடி நிலைகளிலே எப்போதும் பொருந்தியவனாக இருக்க அருள் புரிய வேணும்-

அஷ்டாஷராக்ய மநுராஜ -அஷ்டாக்ஷரம் என்று பிரசித்தி பெற்ற திரு மந்திரத்தில் உள்ள
பத த்ரய அர்த்த நிஷ்டாம் –அநன்யார்க சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் –மூன்றினுடைய சரம பர்வ-நிஷ்டையை
மம அத்ய –மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு கலி புருஷன் அரசு செலுத்தும் இக்காலத்தில்
விதர-தந்து அருள வேணும் –
யதீந்திர நாத -அடியோங்களுக்கு ஸ்வாமி யாகிய யதிராஜரே –
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே–தேவரீரே பரதத்வம் -மோக்ஷ உபாயம் -புருஷார்த்தம் -என்று நினைப்பதினாலேயே
முதலில் என்னத்த தக்க கூரத் தாழ்வான் பிள்ளான் ஆண்டான் எம்பார் போன்ற சத் சிஷ்டர்களாலே கைங்கர்யம்
நித்யம் அனுபூய-எப்போதும் அனுபவித்து
அஸ்ய மம புத்தி -மிக்கது தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது
ஹ்ருஷ்டாஸ்து -அனுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததால் உண்டான சந்தோஷத்தை உடையதாக ஆயிடுக —
பிரதம பர்வம் -பகவான் / மத்யம பர்வம் –பாகவதர்கள் / சரம பர்வம் -ஆச்சார்யர் –
இந்த ஸ்லோகம் தொடக்கி மேல் உள்ளவை அனைத்தும் நித்ய யதீந்த்ர கைங்கர்யங்களும் யதீந்த்ர தாச கைங்கர்யங்களும் பிரார்த்தித்தமை –

—————————————————————————————————-

6-அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி -சப்தாதி போக ருசி அந்வஹம் ஏதத்தே ஹா
மத் பாபம் ஏவ ஹி நிதாதம் அமுஷ்ய நாந்யத்-தத்வாரய ஆர்ய யதிராஜ தயைக சிந்தோ –

கருணைக் கடலே எதிகளின் அரசே -உனது திருவடிகளில் ஆழ்ந்த பிடிப்போ சிறிதளவேனும் பக்தியோ இல்லை -விஷயாந்தரங்களிலேயே செல்லுகின்றேன்
பாபங்களின் பலத்தாலே -அனைத்தையும் உனது கருணை மூலம் அழித்து அருள வேணும் –

தயைக சிந்தோ -தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே
ஆர்ய யதிராஜ மே -உத்தாரக ஆச்சார்யரான யதிராஜரே அடியேனுக்கு
பவதீய பதாப்ஜ பக்தி–தேவரீருடைய திருவடித் தாமரைகளில் ஆசையானது
அல்பாபி ந –அல்பம் கூட இல்லாமல் இருக்க
சப்தாதி போக ருசி-சப்தாதி -தாழ்ந்த போகம் அனுபவிக்கும் ஆசையானது
அந்வஹம் ஏததே-நாள் தொறும் வளர்ந்து வருகிறது
ஹா அமுஷ்ய–என்ன கஷ்டம் –வகுத்த விஷயத்தில் அல்ப ஆசையும் இல்லாமல் -தகாத விஷய ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு
நிதாதம் -மூல காரணம்
மத் பாபம் ஏவ-அடியேனுடைய அநாதியான பாபமே யாகும்
அந்யத் ந -தத்வாரய -வேறு ஒன்றும் இல்லை -அந்த பாபத்தை போக்கி அருள வேணும் –

————————————————————————————————————————

7-வ்ருத்யா பசுர் நரவபு த்வஹம் ஈத்ருசோபி-ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோயம்
இத்யாதரேண க்ருதி நோபி மித ப்ரவக்தும் -அத்யாபி வஞ்சன பரோத்ர யதீந்திர வர்த்தே-

மனித வடிவில் இருந்தாலும் விலங்கு போலே செயல்கள் செய்கின்றேன் -வேதாந்தம் படி வாழ்வதாக போலியாக
காட்டிக் கொள்கிறேன் -இப்படி இகழத் தக்கவனாய் உள்ளேனே –

ஹே யதீந்திர –
வஞ்சன பர-பிறரை ஏமாற்றுவதில் பற்றுடையவனாக
நரவபு அஹம் பசஸூ து –மனித உடல் கொண்ட விலங்காகவே
வ்ருத்யா-அடியேனுடைய செய்கையினாலே
ஜ்ஜேயே–அறியப் படுகிறேன்
ஈத்ருசோபி–இப்படிப்பட்ட வனாக இருந்த போதிலும்
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரய–வேதம் முதலியவற்றால் அருளப்பட்ட ஆத்ம குணங்களுக்கு இருப்பிடமானவர்கள்
இதி க்ருதி நோபி-என்று இவ்வாறாக -பாமரர் அன்றிக்கே பண்டிதரும் ஆராய்ச்சி வல்லுனரும் கூட
ஆதரேண-மனமார்ந்த அன்போடு
மித -தங்களில் ஒருவருக்கு ஒருவர்
ப்ரவக்தும்-சொல்லுவதற்கு தக்கப்படியாக -அவசியம் சொல்ல வேண்டிய நல்ல வார்த்தையை போலே
அத்ர அபி -வேறு ஒருவர் இடத்தில் இல்லாமல் -இந்த ஸ்ரீ ரெங்கத்திலும்
அத்ய வர்த்தே-இப்போது இருக்கிறேன் -வஞ்சனமே அறியாத பூர்வாச்சார்யர்கள் விரும்பி நித்ய வாசம் செய்யும் ஸ்ரீ ரெங்கத்தில்
வஸிப்பதும் செய்கின்றேனே -இத்தை விட வேறே வஞ்சனை உண்டோ
தத் வாரய-அந்த வஞ்சிக்கும் தன்மையை போக்கி அருள வேணும்

———————————————————————————————————–

8-துக்காவஹா அஹம் அநிசம் தவ துஷ்ட சேஷ்ட -சப்தாதி போக நிரத –சரணா கதாக்க்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே -மித்த்யா சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –

மூர்க்கனையும் கபடனாயும் இருந்தும் சரணா கதன் போலே காட்டிக் கொள்கிறேன் -சாஸ்த்ரங்களில் படி செயல் ஆற்ற வில்லை -உனக்கு மிக வருத்தம்
அடையும் படி உள்ளேன் -உனக்கு சிஷ்யனாக இருக்க தகுதி படைத்தவன் அல்லன் -பிரியமான சிஷ்யனாக காட்டிக் கொண்டு உள்ளேன்-
-என் மீது கருணை கொண்டு காத்து அருள வேண்டும் –

ஹே யதிராஜ
சரணா கதாக்க்ய -பிரபன்னன் என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்
-சப்தாதி போக நிரத –நீச விஷய அணுவத்தில் மிக ஊற்றம் உடையவனாய்
துஷ்ட சேஷ்ட -சாஸ்திரங்களில் -செய்யக் கூடாது என்று விதித்த அக்ருத்ய கரணாதிகளை பண்ணிக்க கொண்டு
அதனால்
தவ துக்க ஆவஹ -தேவரீருக்கு துக்கத்தை உண்டு பண்ணுபவனாய் இருக்கிற
அஹம் -த்வத் பாத பக்த இவ-அடியேன் தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட பிரபன்னன் போலே
சிஷ்ட ஜநௌக மத்யே -சரம பர்வ நிஷ்டர்களான கூரத் தாழ்வான் போல்வார் கோசடிகளின் நடுவில்
-மித்த்யா சராமி -பொய்யனாகவே திரிகிறேன்
ததோஸ்மி மூர்க்க —தத மூர்க்க அஸ்மி -அதனாலேயே அடியேன் மூடனாக -அறிவற்றவனாக ஆகிறேன்
தத் வராய -அப்படிப்பட்ட அறியாமையை போக்கி அருள வேணும் –

—————————————————————————————————————–

9-நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச -மந்த்ரம் தத்தேவதாமபி ந கிஞ்சித் அஹோ பிபேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே -த்ருஷ்ட சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க

நான் ஆச்சார்யர்களையும் அவர்கள் உபதேசித்த மந்த்ரங்களையும் அவற்றால் தொழப் படும் தெய்வத்தையும் அவமதிக்கின்றேன்
-இத்தையே நித்யமும் செய்து வெட்கமும் பயமும் இன்றி உள்ளேன் -உனது அந்தரங்க சிஷ்யர்கள் மத்தியில் நானும்
ஒரு சிஷ்யன் என்று சொல்லி உலாவுகின்றேன் -எத்தனை மூர்க்கன் நான் –

ஹே யதிராஜ
அஹம் குரும் ச -மந்த்ரம் தத்தேவதாமபி-அடியேன் ஆச்சார்யரையும் -அவரால் உபதேசிக்கப் பெற்ற திரு மந்திரத்தையும் –
அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீ மன் நாராயணனையும்
நித்யம் து பரிபவாமி -எப்போதுமே அவமதிக்கிறேன்
கிஞ்சித் அபி ந பிபேமி-சிறுத்தும் கூட -இப்படி அவமதிப்பதனால் பின்பு என்ன கேடு விளையுமா -என்று அஞ்சுவதும் இல்லை
அஹோ-என்ன ஆச்சார்யம்
இத்தம் சட அபி அ சடவத் -இவ்விதமாக தீமை செய்பவனாக இருந்தும் -சாஸ்த்ர விசுவாசம் இல்லாமல் இருந்தும் –
உள்ளும் புறமும் நன்மை செய்பவன் போலேயும் -சாஸ்த்ர விசுவாசம் உள்ள ஆஸ்திகன் போலேயும்
பவதீய சங்கே -தேவரீர் திருவடிகளில் பரி பூர்ண விசுவாசம் கொண்ட பரம ஆத்திகர் கோஷ்டியில்
ஹ்ருஷ்ட சன் -நாம் செய்யும் தீமைகள் இவர்கள் அறியார்கள் என்று மகிழ்ந்து
சராமி-சஞ்சரித்து கொண்டு இருக்கின்றேன்
ததோஸ்மி மூர்க்க -தத அஹம் மூர்க்க அஸ்மி -அதனால் மூர்க்கனாய் இருக்கின்றேன்
தத் வராய –கீழ் சொன்ன மூர்க்கத்தனைத்தை போக்கி அருள வேணும்

————————————————————————————

10-ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா -யோஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
சோஹம் தவாப்ரியகர ப்ரியக்ருத்வ தேவம் -காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க

மனம் வாக்கு செயல் மூன்றாலும் அபராதங்களை செய்த படி உள்ளேன் -பகவத் பாகவத அசஹ்ய அபசாரங்களை பண்ணிக் கொண்டே தொடர்ந்து செய்து
மூர்க்கனாகவே இருக்கின்றேன் -தேவரீருக்கு பிரியமானவற்றை செய்பவன் போலே பாவித்து அப்ரியமானவற்றையே செய்கின்றேனே –

யதிராஜ
அஹம் -எத்தகைய அடியேன்
மநஸா க்ரியயா ச வாசா-மனம் மொழி மெய்களால்
த்ரிவித அபசாரான்–பகவத் பாகவத அஸஹ்யா அபசாரங்கள் -மூவகை பட்ட பாபங்களையும்
மூ வகை அபசாரங்களையும் செய்வதால் ஹா ஹந்த ஹந்த என்று மூன்று தடவை அருளிச் செய்கிறார்
சததம் சராமி-இடைவிடாமல் எப்பொழுதும் செய்து வருகிறேனோ
ச அஹம் -அப்படிப்பட்ட அடியேன்
தவ -அடியேன் இடம் பரம தயாளுவாய் பேர் அன்பு பூண்ட தேவரீருக்கு
அப்ரியகர சன் -இஷ்டம் இல்லாதவற்றையே செய்பவனாய்க் கொண்டு
ப்ரியக்ருத்வத் ஏவ -இஷ்டமானவற்றையே செய்பவன் போல்
காலம் நயாமி-காலத்தை கழித்து வருகிறேன்
ஹா ஹந்த ஹந்த தத அஹம் மூர்க்க அஸ்மி -ஐயோ ஐயோ இதனால் அடியேன் மூர்க்கனாகவே இருக்கிறேன்
தத் வராய –அந்த மூர்க்கத்தனத்தை போக்கி அருள வேணும்
நித்யம் யதீந்த்ர -4- ஸ்லோகத்தில் மனம் மொழி மெய்களைக் குறிப்பிட்டு
வ்ருத்தயா ப ஸூ -7-/ துக்க அவஹோ அஹம் -8-/நித்யந்த்வஹம் -9-/ஹா ஹந்த ஹந்த -10-/ என்ற இந்த நான்கு ஸ்லோகங்களிலும்
மனம் மொழி மெய்களை குறிப்பிட்ட போதிலும் —7-/-8-ஸ்லோகங்களில் வ்ருத்தயா துஷ்ட சேஷ்டா என்று மெய்யின் செயல்களையும்
-9-குரும் பரிபவாமி என்று வாக்கின் செயலையும் -10-மனசா என்று மனத்தின் செயலையும் பிரதானமாக அருளிச் செய்கிறார்
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே –திருமாலை -32-போலே மா முனிகள் -8-/-9-/-10-/ மூன்று ஸ்லோகங்களிலும் மூர்க்க சப்தம் –

——————————————————————–

11-பாபே க்ருதே யதி பவந்தி பய அனுதாப -லஜ்ஜா புன கரணம் அஸ்ய கதம் கடேத
மோஹேந மே ந பவதி இஹ பயாதிலேச-தஸ்மாத் புன புன அகம் யதிராஜ குர்வே

வெட்கமும் பயமும் இல்லாமல் பாபங்களை சேர்த்துக் கொண்டே உள்ளேன்-

பாபே க்ருதே யதி–பாபம் செய்யப் பட்ட போது
மம -அடியேனுக்கு
பவந்தி பய அனுதாப -லஜ்ஜா-பயமோ பச்சாதாபமோ வெட்கமோ உண்டாகுமே யானால்
புன கரணம் அஸ்ய கதம் கடேத-அப்பாவத்தை மறுபடியும் செய்வது என்பது எப்படிப் பொருந்தும்
இஹ பயாதிலேச-இப்பாவம் செய்யும் விஷயத்தில் பயம் முதலிய மூன்றில் சிறிது அளவு கூட
மோஹேந மே ந பவதி–நீச விஷயத்தில் அனுபவிக்கத் தக்கது என்னும் மோஹம் அடியேனுக்கு உண்டாகிறது இல்லை
தஸ்மாத் புன புன அகம் யதிராஜ குர்வே-அதனால் பாபத்தை மறுபடியும் மறுபடியும் செய்து வருகிறேன்
தத் வராய -இந்த மோஹத்தையும் தேவரீரே போக்கி அருள வேணும் –

—————————————————————————————————————————————-

12-அந்தர் பஹி சகல வஸ்து ஷூ சந்தம் ஈசம் -அந்த புரஸ் ஸ்திதமிவ அஹம் அவீஷமாணா
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சததம் பவாமி -ஹந்த த்வத் அக்ர கமனச்ய யதீந்திர நார்ஹ-

அந்தர்யாமியாக இருப்பவனை நான் காண வில்லை -அனைத்தையும் நியமிப்பவனாகவும் உள்ளவனை நான் காண வில்லை –
ஆசைக்கு வசப்பட்டு உழன்று உன் முன்னால் நிற்கவும் தகுதி படைத்தவன் அல்லேன் –

யதீந்திர
அஹம் சகல வஸ்து ஷூ அந்தர் பஹி ச சந்தம் -அனைத்து பொருள்களிலும் உள்ளும் புறமும் பரந்து இருந்து
ஈசன் -நியமித்து அடக்கி ஆளும் ஸ்ரீ மன் நாராயணனை
-அந்த புரஸ் ஸ்திதமிவ -புரஸ் ஸ்திதம் அந்த இவ-முன்னே நிற்கும் மனிதனை குருடன் போலே
அவீஷமாணா சன் -பாராதவனாய்க் கொண்டு -அதனால் –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ்-மன்மதனுக்கு -ஆசைக்கு -வசப்பட்ட மனத்தை யுடையவனாய் கொண்டு
சததம் பவாமி-எப்பொழுதும்
த்வத் அக்ர கமனச்ய -தேவரீர் திரு முன்னே வருவதற்கு
அஹம் ந அர்ஹ -அடியேன் தகுந்தவனாக இல்லை
ஹந்த -ஐயோ கஷ்டம் -தேவரீரை கிட்டுவதற்கும் தகுதி இல்லாமல் அன்றோ இருக்கிறேன்
வ்ருத்தயா பஸூ நர வபு அஹம் -விலங்காய் காமத்துக்கு வசப்பட்டு உள்ளவன் -காமத்துக்கே பரவசப் பட்டு
தேவரீர் முன்னே நிற்க தகுதி அற்றவனானேன் என்கிறார்

————————————————————————–

13–தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-தேஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ
ஏகச்ய காரண மஹோ மம பாவமேவ நாத -த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –

ஆதி ஆத்மிகம் -ஆதி பௌதிகம் ஆதி தைவிகம் -ஆகிற தாபத் த்ரயங்க ளால் வருந்தியும் உடலை பேணிக் கொண்டே துறக்க மனம் இல்லாத படி உள்ளேன்
-நான் சேர்த்து வைத்துள்ள பாபங்களே காரணம் -அனைத்தையும் போக்கி அருள வேணும் –

-தாபத் த்ரயீ ஜனித துக்க நிபாதி நோபி-மூவகை தாபங்களினால் உண்டாகும் துக்கங்கள் நடுவிலே விழுந்து கொண்டே இருந்த போதிலும்
தேஹஸ்தி தௌ மம-நீசனான அடியோனுக்கோ என்றால் -ஒரு படி பட்டு இராத உடல் இப்படியே அழியாமல் நிலைத்து நிற்கும் நிலையில்
ருசிஸ்து ந தன்னிவ்ருத்தௌ-ஆசை உண்டாகி -உடல் அழிவில் வெறுப்பும் உண்டாகிறதே
ஏகச்ய காரண -உடல் அழியாமையில் விருப்பும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு காரணமானது
மம பாவமேவ–அடியேனுடைய பாபமே யாகும்
நாத -த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் -ஸ்வாமீ அடியேனுக்கு தலைவரும் -பாபம் போக்கும் ஆற்றல் படைத்தவருமாகிற தேவரீரே
இப்பாவத்தை இந்த ஷணத்திலேயே போக்கி அருள வேணும் –

————————————————————————-

14-வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய-கூராதி நாத கதித அகில நைச்ய பாத்ரம்
ஏஷ அஹம் ஏவ ந புநர் ஜகதி ஈத்ருசஸ் -தத் ராமாநுஜார்ய கருணைவ து மத் கதிஸ்தே

தாழ்ந்த மனிதர்களுக்கும் நானே கீழ்ப்பட்டவன் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் நைச்யா நுசந்தானம் பண்ணி தன்னை தாழ்வாக கூறிக் கொண்டாலும் அத்தனை
தாழ்வுகளும் எனக்கு பொருந்தும் -ஸ்ரீ கூரத் ஆழ்வானுக்கு அருளியது போலே உனது கருணைக்கு நானும் ஏற்றவன் ஆவேன்

ஹே ராமாநுஜார்ய
வாசாம் அகோசர மஹா குண-வாயால் வருணிக்க முடியாத -ஒவ் ஒரு குணமே எவ்வளவு அனுபவித்தாலும் அனுபவித்து முடிக்க முடியாத
பெருமையை உடைய நல் குணங்களை யுடைய
தேசிக அக்ர்ய-கூராதி நாத-ஆச்சார்ய ச்ரேஷ்டரான கூரத் தாழ்வானால்
கதித அகில நைச்ய பாத்ரம் –பஞ்ச ஸ்தவம் முதலிய வற்றில் சொல்லிக் கொண்ட எல்லாவித நீசத் தன்மைக்கும் கொள்கலமானவன்
ஏஷ அஹம் ஏவ-இந்த அடியேன் ஒருவனே ஆவேன்
ஈத்ருசஸ் புனர் ஜகதி ந -இத்தகைய மற்றவனோ என்னில் உலகில் இல்லவே இல்லை
தத் தேது-இக்காரணத்தினால் -கருணை புரியும் விஷயத்தில் நிகர் அற்ற தேவரீருடைய
கருணைவ து மத் கதிஸ்தே-கருணை ஒன்றே எல்லாரையும் விட குற்றவாளியான அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக ஆகிறது –

———————————————————————————

15-சுத்த ஆத்ம யாமுன குருத்தம கூர நாத பட்டாக்க்ய தேசிக வர உக்த சமஸ்த நைச்யம்
அத்ய அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி இஹ லோகே -தஸ்மாத் யதீந்திர கருணைவது மத் கதிஸ் தே-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ பராசர பட்டர் போன்றோரும் நைச்ய அனுசந்தானம் செய்து அருளினார்கள் –
அதே வழியில் நானும் கூறினேன் -உனது கருணைக்கு முழு இலக்காக வேண்டும் –

ஹே யதீந்திரே
இஹ லோகே-குற்றம் செய்பவர்கள் மலிந்த இப்பூ உலகில்
அத்ய –கலி புருஷன் தனி அரசு செய்யும் இக்காலத்தில்
சுத்த ஆத்ம யாமுன -சுத்த ஆத்ம ஸ்வரூபத்தை உடைய யாமுனாச்சார்யர் என்ன
குருத்தம கூர நாத –-ஆத்ம குணங்கள் மிக உயர்ந்த கூரத் தாழ்வான் என்ன
பட்டாக்க்ய தேசிக வர -பூர்வாச்சார்யர்களில் பெருமை மிக்க பராசர பட்டர் என்ன இவர்களால்
உக்த சமஸ்த நைச்யம்–தங்கள் தங்கள் நூல்களில் தம்மிடம் உள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லா வித நீச தர்மங்களும்
அஸ்தி அசங்கி சிதம் ஏவ மயி -அடியேனிடத்திலே குறைவற பூர்ணமாக உள்ளன
-தஸ்மாத் -ஆகையால்
கருணைவது மத் கதிஸ் தே-உலகில் பெரியதாக பிரசித்தி பெற்ற தேவரீருடைய கருணையானது -அடியேனை விஷயமாக கொண்டது ஆகிறது –

—————————————————————————————————————

16-சப்தாதி போக விஷயா ருசி அஸ்மதீயா -நஷ்டா பவதி இஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணா நா சரம அவதௌ-யஸ் தத் தாஸ தைக ரசதா அவிரதா மம அஸ்து

விஷயாந்திர பற்றை நீயே அறுத்து விட வேண்டும் -அடியார்கள் கணங்களில் கடை நிலை அடியானாக ஆக்கி அருள வேணும் -இதன் மூலம் உன்னை
சரண் அடையும்படிசெய்து அருள வேணும் -ஆகிஞ்சன்யன் நான் -எதையும் எதிர்பாராமல் உனது கருணையால் என்னை ஏற்றுக் கொண்டு அருள வேணும்

யதீந்திர
சப்தாதி போக விஷயா ருசி அஸ்மதீயா -அடியேனுடையதான -நீச விஷயாந்த அனுபவ ஆசையானது
இஹ -இந்த சரீரம் இருக்கும் நிலையிலே
பவத் தயயா –தேவரீருடைய தாய் துக்கத்தையே பற்றுக் கோடாக கொண்ட தயையினாலே
நஷ்டா பவதி-உருத் தெரியாதபடி காணாமல் போகட்டும்
மேலும்
த்வத் தாஸ-தேவரீருடைய இட்ட வழக்காய் -விற்கவும் வாங்கவும் உரிய -அடியவர்கள் உடைய
தாஸ கணா நா சரம அவதௌ--அடியார் அடியார் என்று எண்ணும் பொழுது கடைசி நிலையில் இருக்கும்
-யஸ் தத் தாஸத -அந்த அடியவனைக் குறித்து செய்யும் அடிமையை
-ஏக ரசதா -மற்றவற்றில் ஆசையோடு கலசாமல் -ஓன்று பட்ட ஆசையானது
பவத் தயயா அவிரதா மம அஸ்து-தேவரீருடைய தயையினால் நித்தியமாக அடியேனுக்கு உண்டாகட்டும் –
ஸ்வாமி தயைக்கு தாம் ஒருவரே இலக்கு என்று முந்திய இரண்டு ஸ்லோகங்களில் அருளிச் செய்து
அந்த தயையினால் தாம் பெற வேண்டிய புருஷார்த்தத்தை இதில் அருளிச் செய்கிறார்
பவத் தயா –காரேய் கருணை ஒன்றாலே -தயாளுவான பகவானால் முடியாத – இவற்றை -பிரார்த்திக்கிறார் –

———————————————————

17-ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப -பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ –
வஸ்ய சதா பவதி தே யதிராஜ தஸ்மாத் -சக்த ஸ்வ கீய ஜன பாப விமோசன் த்வம் –

வேதாந்தங்கள் மூலம் போற்றப்பட்டவனும் திவ்ய எழில் உடனும் அனைத்து கல்யாண குணங்களுடனும் உள்ள ஸ்ரீ ரெங்க நாதன்
— ஸ்வாமி உனக்கு வசப் பட்டுள்ளான்
எனக்கே நீயே எனது பாபங்களை போக்கி நற்கதி அருள வேண்டும் –

யதிராஜ
ச்ருத்யக்ர வேத்ய -வேதாந்தங்கள் மூலமாகவே -ஆச்சார்யர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளத் தக்க
நிஜ திவ்ய குண ஸ்வரூப -தனக்கே உரிய அனுவபிக்கத்தக்க ஞானம் சக்தி முதலான குணங்கள் என்ன -உடப்புகுந்து நியமிக்கும் தன்மை என்ன
-ஆஸ்ரித பரதந்த்ர குணம் என்ன இவற்றை உடையவனாய்
பிரத்யஷதாம் உபகத இஹ ரங்க ராஜ -இப்பூ மண்டலத்தில் சகல மனுஷ நயன -விஷயமாம் படி ஸ்ரீ ரெங்க நாதன்
வஸ்ய சதா பவதி தே -தேவரீருக்கு எப்போதும் வசப்பட்டவனாய் இருந்து -தான் சத்தை பெற்றவனாய் இருக்கிறானே
தேவரீர் சங்கல்பம் படி நடப்பதே தனக்கு கர்த்தவ்யம் என்று அன்றோ இருக்கிறான்
தஸ்மாத் -அப்படி அவன் தேவரீருக்கு வசப்பட்டவனாய் இருப்பதனால்
சக்த ஸ்வ கீய ஜன-தேவரீருடைய அடியவர்களின் தாஸ ஜனங்களின் யுடைய
பாப விமோசன் த்வம் சக்த பவசி-பாபங்களை நிரசிப்பதில் தேவரீர் ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்
எம்பெருமானாருடைய தயை –பஞ்சம உபாயம் -பிரபதிக்கும் மேலே –பாப விமோசனம் பெற்றால் தன்னடையே பகவத் ப்ரீதி காரித கைங்கர்யமும் கிட்டுமே

————————————————————-

18-கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவ
சா ச த்வயைவ கமலா ரமணே அர்த்திதா யத் -ஷேமஸ்ச ஏவ ஹி யதீந்திர பவஸ்ரிதா நாம்

மனம் வாக்கு காயம் மூலம் எண்ணற்ற பாபங்களை செய்தாலும் மூன்று காலத்திலும் ஸ்ரீ ரெங்க நாதன் அடைக்கலம் அருள இயலும் அதை நேராக செய்வது இல்லை
ஸ்வாமி தேவரீர் ஸ்ரீ ரெங்க நாச்சியார் உடன் பங்குனி உத்தர நல் நாளில் எங்களுக்காக சரண் புகுந்து கத்யம் அருளி செய்ததால் தானே
-நாங்கள் உஜ்ஜீவிக்க உபாயம் ஆனது –

யதீந்திர
கால த்ரயேபி –முக்காலங்களிலும்
கர்ண த்ரய நிர்மித–முக்கரணங்களாலும் செய்யப்பட
அதி பாபக்ரியச்ய -தயாளுவான பகவானால் பொறுக்க முடியாத விஞ்சினா பாவச் செயல்களை செய்யும் ஜீவாத்மாவுக்கு
சரணம் பகவத் ஷமைவ-பாவங்களை போக்கும் உபாயமானது -குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும் -அந்த பொறுமையோ என்னில்
த்வயைவ -பகவானையும் ஆணையிடும் ஆற்றல் படைத்த தேவரீராலேயே
கமலா ரமணே-கருணையே வடிவு எடுத்தவளான -பகவான் தயை பொறுமை -இவற்றை கிளப்பும் ஸ்ரீ ரெங்க நாச்சியாருடைய
அழகிய மணவாளன் ஆகிய ஸ்ரீ ரெங்க நாதன் இடத்தில்
அர்த்திதா யத் -கத்யத்தில் பிரார்த்திக்கப்பட்டது என்பது யாது ஓன்று உண்டோ
ச ஏவ -அந்த பிரார்த்தனையே
பவஸ்ரிதா நாம் -தேவரீருடைய அபிமானத்துக்கு இலக்காக -தேவரால் கைக் கொள்ளப் பட்ட அடியார்களுக்கு
ஷேமஸ்ச ஏவ ஹி -ஒரே உய்யும் உபாயம் அல்லவா –
நாம் அனைவருக்குமான இங்கு அருளிச் செய்கிறார் நம் பெரிய ஜீயர்

——————————————————————————-

19-ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம் தத்தாம் –
தாம் அந்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா-காமம் விருத்தம் அகிலம் ச நிவர்த்தய த்வம் –

ஸ்வாமி உமது திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யம் செய்யுமாறு அருள வேணும் -இத்தகைய பணியை கருணையால்
ஸ்ரீ சைல நாதர் -திருவாய் மொழிப் பிள்ளை
அடியேனுக்கு அருளினார் முதன் முதலில் -வரும் தடைகளை நீக்கி நித்ய கிங்கரனாக்கி பணி கொள்ள வேண்டும் –

ஸ்ரீ மன் யதீந்திர –-திரு முடி திருவடி சம்பந்தத்தால் அனைவருக்கும் மோக்ஷம் அளிக்கும் ஸ்ரீயை உடைய யதி ராஜரே
த்வம் மே -தேவரீர் அடியேனுக்கு
ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம் தத்தாம் -திருமலை ஆழ்வாரான அடியேனுடைய ஆச்சார்யருடைய மிக்க கருணையால் தரப்பட்ட
தாம் -மிகச் சிறந்த
தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-தேவரீருடைய திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை
அந்வஹம் விவர்த்தய -நாள் தொறும் விசேஷமாக வளர்ந்து அருள வேணும் –
அதாவது தேவரீர் தாஸ்ய சரம நிலையில் அடியேன் கைங்கர்யம் செய்யும் படி அத்தை வ்ருத்தி செய்து அருள வேணும் என்றபடி
நாத தஸ்யா–காமம் விருத்தம் அகிலம் ச நிவர்த்தய த்வம் –
ஸ்வாமியான யதிராஜரே -அந்த கைங்கர்யத்துக்கு தடையாகிய எல்லாவற்றையும் அடியோடு போக்கி அருள வேணும் –
யதிராஜருடைய சேவையின் வளர்த்தியும் -ஸ்வாமி அடியார் சேவையின் வளர்த்தியும் பிரார்த்திக்கிறார் –

———————————————————————

20–விஜ்ஞாபனம் யதித மத்ய து மா மகீநம் -அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்புராசே
அஜ்ஞ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச -தஸ்மாத் அநந்ய சரணோ பவதி இதி மத்வா –

கருணைக் கடலே ஏதும் அறியாத அடியேனை அங்கீ கரித்து அருள வேண்டும் -அதிகாரம் இல்லாத அடியான் பணித்த இந்த ஸ்துதி யையும் ஏற்று அருள வேணும்
அநந்ய கதியான என்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேணும் –

தயாம்புராசே -யதிராஜ--தயைக்கு கடல் போன்ற யதிராஜரே
அத்ய மா மகீநம் -இப்போது அடியேனுடையதான
யத் விஜ்ஞாபனம் இதம் -அடியேன் செய்த விண்ணப்பங்களை
அஜ்ஞ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தச்ச-நல்ல அறிவு இல்லாதவன் இவன் -மனம் பொறி அடக்கம் போன்ற ஆத்ம குணங்கள் லேசமும் இல்லாதவன் இவன் –
-தஸ்மாத் -ஆகையால்
அநந்ய சரணோ பவதி இதி மத்வா -வேறு உபாயம் இல்லாதவனாக இருக்கிறான் என்று நினைத்து அருளி ஏற்றுக் கொண்டு அருள வேணும்
தயைக ஸிந்தோ -6-/ ராமாநுஜார்ய கருணைவது -15- / பவத் தயயா -16-/ கருணா பரிணாம -19 –/ தயாம்புராசே -20-என்று
அடுத்து அடுத்து பிரஸ்தாபித்தது – கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் –என்பதாலேயே –

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம் —
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –இராமானுசன் – போலே -என்று தொடங்கி-
ஸ்ரீ மன் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம் விவர்த்தய-என்று உன் தொண்டர்க்கே அன்புற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்து -போலே நிகமிக்கிறார்

—————————————————————————————————

இதி யதி குலதுர்ய மேதமாநை –ஸ்ருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷ யந்தம்
வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் –

செவிக்கு இனிய செஞ்சொற் களான எம்பெருமானாரைத் ஸ்துதித்து மகிழ்ந்த திரு உள்ளம் யுடையவரான மா முனிகளையே
சிந்தனை செய்யும் என்மனதானது ஒப்பில்லாத தெளிவு பெற்று விளங்குகிறது –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading