ஸ்ரீ பாஷ்யம்-3-1– மூன்றாம் அத்யாயம்-சாதனா அத்யாயம்-முதல் பாதம் —வைராக்ய பாதம்–

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

———————————————————————————————————————-

சாதனா அத்யாயம்
55 அதிகரணங்கள்
181 சூத்ரங்கள்

————————————————————-
முதல் பாதம் -வைராக்ய பாதம்-ஜீவனுக்கு உள்ள தோஷங்களை விளக்கி -இவை இல்லாத ப்ரஹ்மத்தை அடைய வைராக்கியம் ஏற்பட இவை முதலில் கூறப்படுகின்றன –6 அதிகரணங்கள்-27-ஸூ த்ரங்கள்-

——————————————————————-

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7  ஸூ த்ரங்கள் -ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூ த்ரங்கள்அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-

-மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூ த்ரங்கள்–பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பதுநிரூபிக்கப் படுகிறது-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூ த்ரம்-மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது

ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூ த்ரம்-ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூ த்ரங்கள்–மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-

—————————————————————————————————————————

முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –

——————————————————————————————————————————-
3-1-1-ததந்திர ப்ரதிபத்தௌ ரம்ஹதி சம்பரிஷ்வக்த ப்ரசன நிரூபணாப்யாம்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை /ஸ்வப்னம் -கனவு நிலை /ஸூஷுப்தி -தூக்க நிலை /மூர்ச்சை -மயக்க நிலை
பூத ஸூ ஷ்மங்களுடன் சேர்ந்தே செல்வதை நிரூபிக்கிறார்
2-4-17-சம்ஜ்ஞா மூர்த்திக் லுப்தி -பெயர் ரூபம் மாறுதல் -பற்றி சொல்லி மூர்த்தி பதம் உடலைக் குறிக்கும் அதையே இங்கே தத் பதம் சொல்லும்
-ததந்திர ப்ரதிபத்தௌ -மற்று ஒரு உடலை அடையும் பொழுது
சம்பரிஷ்வக்த -பூத ஸூ ஷ்மங்களுடன் இணைந்து
ரம்ஹதி -செல்கிறான்
ப்ரசன நிரூபணாப்யாம் -கேள்வி பதில்கள் ஆகும் சாந்தோக்யம் பஞ்சாக்னி வித்யையில் உள்ளவை கொண்டு நிரூபணம்-

ஆருணி என்பவரின் பிள்ளை ஸ்வேதகேது-என்பவன் பாஞ்சால தேசம் சென்று ப்ரவாஹணன் அரசன் இடம்
1-யாகம் முதலானவற்றை இயற்றினவர்கள் உயிர் பிரிந்த பின்பு எங்கு செல்கின்றனர்
2-மீண்டும் எந்த பாதையில் உலகிற்கு வருகின்றார்கள்
3-தேவ யானம் பித்ரு யானம் வலிகளின் வேறுபாடு
4-ஸ்வர்க்க லோகத்தை அடையாதவர்கள் யார்
5- கேள்வியாக சாந்தோக்யம் -5-3-3- வேதத யதா பஞ்சம் யா மாஹூதாவாப் புருஷ வசசோ பவந்தி -என்று
ஐந்தாவது ஆஹூதியாக அளிக்கப் படும் நீர் எனபது எவ்விதம் புருஷன் என்று கூறப்படுகிறது என்று அறிவாயா
இதற்கு -ஸ்வர்க்கம் என்பதையே அக்னியாகக் கொண்டு பதில் உள்ளது -சூரியன் சமித்துக் கட்டை -சூர்ய கிரணங்கள் புகை -சந்தரன் தணல் நட்ஷத்ரங்கள் பொறிகள்
சாந்தோக்யம் இதனை தொடர்ந்து -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதே சோமராஜாபவதி-என்று
ஸ்வர்க்கம் என்னும் அக்னியில் தேவர்கள் -இந்த்ரியங்கள் -அனைத்தும் இணைந்து ஸ்ரத்தை என்னும் நீரை ஆஹூதியாக அளிக்க சோமராஜா என்ற பெயருடன் அழகிய உடலை அடைகிறான் என்கிறது
கர்மபலன்கள் முடிவைந்த நிலையில் பர்ஜன்யம் என்ற அக்னியில் பிராணன்கள் சோமராஜாவை இட உடல் நீராக மாறி ஜீவனுடன் சேர்ந்து மழை ஆகிறது
அந்த மழையைபூமி என்ற அக்னியில் அதே இந்த்ரியங்கள் இட -ஹோமம் செய்கின்றன என்ற கருத்து –
மழை நீர் நெல் போன்ற உணவாக மாற -அந்த உணவை புருஷன் என்ற அக்னிக்கு அதே இந்த்ரியங்கள் ஹோம திருவ்யமாக இட
புருஷன் இடம் சென்ற அன்னம் ரேதசாக மாறி அந்த விந்துவை இந்த்ரியங்கள் பெண் என்ற அக்னியில் ஆஹூதியாக இட கர்ப்பம் ஆகிறது
சாந்தோக்யம் -5-9-1-இதி து பஞ்சம்யாமாஹூதா வாப புருஷவசசோ பவந்தி -இப்படியாக ஐந்தாவது ஆஹூதியாக விடப்படும் நீர் -விந்து -புருஷனாக பெயர் அடைகின்றது
புதிய உடல் எடுக்க பூதங்களுடன் ஸூ சமமாகவே செல்கின்றான் என்று உணரலாம்
ஆப புருஷ வசஸ -சாந்தோக்யம்-5-9-1-நீரான ரேதஸ் புருஷன் ஆகிறது
பஞ்ச பூதங்களுடன் செல்வதாக சொல்ல முடியுமோ -இதற்கு பதில் அடுத்த ஸூத்ரம்

——————————————————————————————————————————-

3-1-2-த்ர்யாத்மகத்வாத் து பூயஸ்த்வாத்

து -நீர் மட்டும் கொண்டு உடல் உண்டாக வாய்ப்பில்லையே
தாஸாம் த்ரிவ்ருத்தம் த்ரிவ்ருத்தம் ஏகைகாம் -சாந்தோக்யம் -6-3-3-நீர் நெருப்பு நிலம் -ஒவ் ஒன்றிலும் மற்ற இரண்டின் பகுதியைச் சேர்த்து உருவாக்குவதே த்ரிவ்ருத்தம் ஆகும்
ஸ்தூல நீர் -பாதி ஸூ ஷ்ம நீரும் கால் பகுதி ஸூ ஷ்ம நெருப்பும் கால் பகுதி ஸூ ஷ்ம நிலமும் சேர்ந்தது ஆகும்-

———————————————————————————————————————————-

3-1-3-பிராண கதே ச

பிராணன்களும்-இந்த்ரியங்களும் -செல்வதால் இந்த்ரியங்களுக்கு ஆதாரமாக உள்ள பூத ஸூ ஷ்மங்களுடன் ஜீவன் செல்கின்றான்
ப்ருஹத் உபநிஷத் -4-4-2- தம் உத்க்ராமந்தம் பிராண அநூத்க்ராமாதி பிராணம் அநூத்க்ராமந்தம் சர்வே பரானா அநூத்க்ராமந்தி -என்றும்
ஸ்ரீ கீதை 15-7/8-மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி
உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே
ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான் இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூ சமங்களும் கூட செல்கின்றன –

————————————————————————————————————————————-
3-1-4-அக்னி நயாதி கதி ஸ்ருதே இதி சேத ந பாக்தத்வாத் –

மரண காலத்தில் இந்த்ரியங்கள் அக்னியுடன் இணைவதாகக் கூறுவதால் பிராணன் ஜீவனுடன் செல்வது இல்லை எனபது பூர்வ பஷம்
புருஹத் உபநிஷத் -5-12-13-யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதச்ய அக்னிம் வாக் அப்யேதி வாதம் பிராண சஷூராதித்யம் -என்று
இறந்தபின்பு வாக்கு அக்னியிலும் பிராணன் வாயுவிலும் கண்கள் சூரியனிலும் இணைகின்றன
எனவே ஜீவனுடன் இந்த்ரியங்கள் செல்வது இல்லை என்பர்
தம் உத்க்ராமந்தம் சர்வே ப்ராணா உத்க்ராமந்தி -என்று
அந்த அந்த அபிமான தேவதைகள் அவற்றின் மீது தங்கள் தொடர்பை கை விடுகின்றன என்றே கொள்ள வேண்டும்
அதே உபநிஷத்தில் -ஓஷதீர் லோமா நி வனச்பதீன் கேசா -தலை முடிகள் மரங்களிலும் கைமுடிகள் செடிகளிலும் கலக்கின்றன என்கிறது
ஆக அந்த அந்த தேவதைகளின் கட்டுப்பாட்டை நீக்கி ஜீவன் இந்த்ரியங்களுடன் அவற்றின் பூதங்களுடன் செல்கின்றான் –

—————————————————————————————————————————————-

3-1-5-ப்ரதமே அச்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே –

சாந்தோக்யம் -5-4-2-தஸ்மின் ஏ தஸ்மின் அக்னௌ தேவா ஸ்ரத்தாம் ஜூஹ்வதி –தேவ லோகம் –ஸ்ரத்தை நீர் அல்லவே
நீர் என்பதே ஸ்ரத்தை -சோமராஜா -வர்ஷம் -அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் பல விதமாக மாறும் -இத்தையே ஏவம் ஆப புருஷவசச
தைத்ரீய பிரமாணம் –3-2-4- அப பிரணயதி ஸ்ரத்தா வா ஆப -என்று அவன் நீரை எடுக்கிறான் -ஸ்ரத்தை என்பதே நீர்
ஜீவன் சோமராஜாவாக மாறுவது நீரால் தான் என்பதை சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி -என்று கூறியது
எனவே நீர் முதலான பூத ஸூ ஷ்மங்களுடன் இணைந்து ஜீவன் கிளம்புகின்றான்

———————————————————————————————————————————————-
3-1-6-அசருத்வாத் இதி சேத் ந இஷ்ட அதிகாரிணாம் பிரதீதே –

இஷ்டம் பூர்த்தம் தானம் -பலனை விரும்பி யாகம் செய்பவர்கள் -சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –
குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்துது மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –
இதை முடிக்கும் பொழுது -5-10-4/5-பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி
தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று
பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்
சாந்தோக்யம் -5-4-2-ஸ்ரத்தாம் ஜூஹ்வதி தஸ்யா ஆஹூதி சோமோராஜா சம்பவதி
இத்தால் ஸ்ரத்தை போன்ற மன நிலையை கொண்டு யாகம் செய்த ஜீவனே
தம் தேவா பஷயந்தி -5-10-4-சோமோ ராஜாவை உண்கிறார்கள் -ஜீவனை உன்ன முடியுமா கேள்விக்கு பதில் அடுத்த ஸூ த்ரம்

———————————————————————————————————————————————
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்சயதி-

ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்
ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் -மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்
இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –
ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து
இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்
ஆக ஜீவர்கள் பூத ஸூ ஷ்மங்களுடனே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் பட்டது-

——————————————————————————————————————————————

இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்

அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

——————————————————————-

3-1-8-க்ருதாத்யயே அநு சயவான் த்ருஷ்ட சம்ருதிப்யாம் யதேதேம் அநேவம் ச –

புண்யம் செய்தவர்கள் தூ மாதி மார்க்கம் தொடங்கி பித்ரு மார்க்கம் அடைந்து சந்திர மண்டலம் செல்கிறார்கள்
புண்ய பலன்களை அனுபவித்த பின்பு சாந்தோக்யம் -5-10-5-யாவத் சம்பாதம் உஷித்வா அத ஏதமேவ அத்வானம் புன நிவர்த்தந்தே -என்று
கர்ம பலன் உள்ளவரையில் ஸ்வர்க்கத்தில் வாழ்ந்து எஞ்சிய கர்மங்களுடன் உலகிற்கு திரும்புகின்றார்கள்
யாவத் சமபாதம் உஷித்வா -என்று எந்த கர்மத்தின் மூலமாக ஸ்வர்க்கம் புகுந்தாரோ அந்த கர்ம பலன் அனுபவித்த பின்பு என்றபடி
இதனை ப்ருஹத் உபநிஷத் -4-4-6-ப்ராப்யாந்தம் கர்மண தஸ்ய யத் கிஞ்சேஹ கரோத்யாயம் தஸ்மாத் லோகாத் புனரேத்யச்மை லோகாய கர்மணே-என்றது-

த்ருஷ்ட ஸ்ம்ருதி ப்யாம்–ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் இப்படியே கூறும்
சாந்தோக்யம் -5-10-7-தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா
அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்
இதே ப்கருத்தை கௌதம ஸ்ம்ருதி -2-11/12/13-வர்ண ஆச்ரமாச்ச ஸ்வ கர்ம நிஷ்டா ப்ரேத்ய கர்மபலம் அநுபூய தத சேஷேண விசிஷ்ட தேச ஜாதி குல ரூப ஆயு ஸ்ருத வித்த வ்ருத்த
ஸூ க மேதசா ஹி ஜன்ம பிரதிபத்யந்தே விஷ்வஞ்ச விபரீதா நச்யந்தி -என்றும்
ஆபஸ்தம்ப தர்ம ஸூ த்ரமும்-2-1/2/3–தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி
பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்
சாந்தோக்யம் -5-10-5-யாவத் சமபாதம் என்றது பலன் அளிக்கத் தொடங்கிய கர்மங்கள் ஆகும் -ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்
எஞ்சிய கர்மங்களுடன் திரும்புகிறான் -மேலே கிளம்பும் பொழுது தூமம் -புகை

இரவு கிருஷ்ண பஷம் தஷிணாயணம் பித்ரு லோகம் ஆகாயம் சந்தரன் பாதையிலும்
கீழே வரும் பொழுது ஆகாயம் காற்று தூமம் -மேகம் மழை என்ற பாதையில் இறங்குகின்றனர்
—————————————————————————————————————————————
3-1-9-சரணாத் இதி சேத ந தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –

ஆசாரம் என்பதே கபூய சரணா ரமணீய சரணா பதங்கள் கூறப்பட்டது அவை கர்மங்கலையே குறிக்கும் என்று கார்ஷ்ணாஜி நி முனிவர் கூறுகிறார்
தைத்ரிய சம்ஹிதை -1-11-12- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–
இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்

—————————————————————————————————————————————–
3-1-10-ஆ நர்த்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்

புண்ய பாபா கர்மங்கள் ஆசாரத்தையே சார்ந்து உள்ளன –
தஷ ஸ்ம்ருதி -2-027-சந்த்யா ஹீ நோ அசுசி நித்யம் அனர்ஹா சர்வ கர்ம ஸூ -சந்த்யா வந்தனம் செய்யாதவன்
அசுத்தமானவன் -அவன் எந்தக் கர்மங்களை செய்ய தகுதி அற்றவனாகிறான் –
வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-ஆசார ஹீ நம் ந புநந்தி வேதா –ஆசாரம் இல்லாதவனை வேதத்தாலும் புனிதன் ஆக்க முடியாது –

———————————————————————————————————————————————–

3-1-11-ஸூ க்ருத துஷ்க்ருதே ஏவ இது து பாதரி —

புண்யம் கர்ம ஆசரதி பாபம் கர்ம ஆசரதி- யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி என்று
சரண என்ற பதமும் கர்ம என்ற பதமும் தனித் தனியே சொல்லப்பட்டன -யானி அன்வத் யானி கர்மாணி -என்று ஸ்ருதிகளில் நேராகக் கூறப்பட்ட கர்மங்கள் உணர்த்தப் பட்டன –
யானி அஸ்மாகம் ஸூ சரிதானி -ஆசாரம் மூலமாக செய்யும் கர்மங்கள் -கோபலீவர்த்த ந்யாயம்-மாடுகளை அழைத்து வா எருதுகளை அழைத்து வா சிறப்பித்து சொல்வது போலே
ஆக இத்தால் எஞ்சிய கர்மங்களுடன் ஜீவன் மீண்டும் வருகிறான் என்றதாயிற்று –

———————————————————————————————————————————————-

-மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-

பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பதுநிரூபிக்கப் படுகிறது

————————————————————————–

3-1-12-அநிஷ்டாதிகாரிணாம் அபி ச ச்ருதம்-

யாகம்-இஷ்டங்கள் -குளங்கள் வெட்டுதல் -பூர்த்தம் -தத்தம் தானம் – போன்றவற்றை செய்யாமல் பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது கூறப்படுகிறது –
பூர்வபஷ ஸூ த்ரங்கள்-இதுவும் அடுத்த நான்கும் -கௌஷீதகீ உபநிஷத் -1-2- யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி
இந்த உலகில் இருந்து அனைவர்களும் சந்திர மண்டலம் செல்கிறார்கள்
—————————————————————————————————————————————-
3-1-13-சம்யமனே து அனுபூய இதரேஷாம் ஆரோஹ அவரோஹா தத்கதி தர்சநாத்–

யமனின் ஆணைக்கு ஏற்ப தண்டனை அனுபவித்த பின்பே சந்திர மண்டலம் செல்வதும் இறங்குவதும் நடக்கும்
கட உபநிஷத் -அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புன புன வசமாபத்யே மே-என்றும்
தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –

—————————————————————————————————————————————–

3-1-14-ச்மரந்தி ச

பராசரர் போன்ற மகரிஷிகள் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–சர்வே சைதே வசம் யாந்தி யமச்ய பகவன்கில -என்று அனைவரும் யமனின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பர்

——————————————————————————————————————————————

3-1-15-அபி சப்த –

ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய ஏழு நரகங்கள் ஸ்ம்ருதிகளில்கூறப்படுகிறது

ஏழு நரகங்களுக்குச் செல்பவராக சொல்லி யமனிடம் செல்வதாக எங்கனம் சொல்ல முடியும் என்றால்

——————————————————————————————————————————————

3-1-16-தத்ர அபி தத் வ்யாபாராத் அவிரோத —

யமனுடைய ஆணைக்கு உட்பட்டே நரகங்கள் உள்ளதால் விரோதம் இல்லை
இனி இந்த பூர்வ பஷங்களுக்கு பதில் கூறப்படுகிறது

——————————————————————————————————————————————-
3-1-17-வித்யா கர்மணோ இதி து பிரக்ருதத்வாத்

ப்ரஹ்ம வித்யை உள்ளவர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கமும் கர்மங்களை சரிவர இயற்றுபவர்களுக்கு தூமாதி மார்க்கமும் கிட்டும் என்றே படிக்கப் படுகிறது
தேவயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1- தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்
பித்ருயானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3-அத யே இமே க்ராமா இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது
கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்
பாவம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்லா விடில் ஐந்தாவது ஆஹூதி ஏற்படாமல் உடலும் தோன்றாதே என்ன அடுத்த ஸூ த்ரத்தில் சமாதானம்

——————————————————————————————————————————————–

3-1-18-ந த்ருதீயே ததா உபலப்தே

மூன்றாவது இடமாகிய நரகம் செல்லும் பாபம் செய்தவர்களுக்கு பொருட்டு ஐந்தாவது ஆஹூதி அவசியம் இல்லை என்று ஸ்ருதி கூறும்
சாந்தோக்யம் -5-3-3-வேத்த யதா கே நா சௌ லோகோ ந சம்பூர்யதே –என்று கேட்டு விடையாக -5-10-8-அத எதையோ பதோர்ந கதரேண ச தானி இமானி ஷூத்ராணி அசக்ருதா வர்த்தீநி பூதானி பவந்தி
ஜாயாஸ்ய ம்ரியச்வேதி ஏதத் த்ருதீயம் ஸ்தானம் தே நா சௌ லோகோ ந சம்பூர்யதே
ஐந்தாவது ஆஹூதி இல்லாமலேயே உடல் எடுத்தவர்கள் உண்டே -என்கிறது-

——————————————————————————————————————————————–

3-1-19-ஸ்மர்யதே அபி ச லோகே —

த்ரௌபதி திருஷ்டத்யும்னன் போன்ற புண்ணியம் செய்தவர்களுக்கு ஐந்தாவது ஆஹூதி இல்லாமலே உடல் உண்டானதே -மகாபாரதம் சொல்லும்
——————————————————————————————————————————————–
3-1-20-தர்சநாத் ச –

சுருதியிலும் இதே கருத்தைக் காணலாம் -சாந்தோக்யம் -6-3-1-தேஷாம் கலு ஏஷாம் பூதானாம் த்ரீண்யேவ பீஜானி பவந்தி அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று
தேஜஸ் உஷ்ணம் மூலம் முட்டை உடைந்து உயிர் பிறப்பதும்
ரேதஸ் விந்து மூலம் கர்ப்பம் மூலம் பிறப்பவை -பூமியை பிளந்து செடி போன்றவை பிறப்பதும் -வியர்வை மூலம் போன்றும் கிருமிகள் -போன்றவை ஐந்தாவது ஆஹூதி இல்லாமல் உண்டானவை
———————————————————————————————————————————————
3-1-21-த்ருதீய சப்தாவரோத சம்சோகஜச்ய

சாந்தோக்யம் -அண்டஜம் ஜீவஜம் உத்பிஜ்ஜம்-என்று உத்பிஜ்ஜம் பதம் மூலம் வெப்பத்தாலும் வியர்வையாலும் உண்டாகும் கிருமிகள் பற்றிக் கூறப்பட்டது
எனவே பாபம் செய்தவர்களும் சந்திர மண்டலம் செல்வது எனபது பொருந்தாது என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————-

நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் –
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————————————

3-1-22- தத் ஸ்வா பாவ்யாபத்தி உபபத்தி

ஆகாயம் போன்றவற்றின் ஸ்வ பாவம் அடைகிறான் என்று கூறுவதே பொருந்தும்
சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6-அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–
சோமராஜா சரீரம் போலே ஆகாயம் முதலான சரீரங்களை எடுக்கின்றான் பூர்வ பஷம்
ஸ்வா பாவ்யா பதி என்பதால் சரீரம் எடுக்க வில்லை -தன்மைகளை மட்டுமே அடைகின்றான் எனபது சித்தாந்தம்-

———————————————————————————————————————————————-

-ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –

———————————————————————————————————————–

3-1-23-நாசிசிரேண விசேஷாத்

சாந்தோக்யம் -5-10-6-அதோவை கலு துர் நிஷ் பிரபதரம் சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்
எனவே ஆகாசம் முதலானவற்றில் குறிகிய காலமே இருந்து வெளியேறுகின்றான் என்றதாயிற்று –

—————————————————————————————————————————————

ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் –
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று

——————————————————————————————————————————
3-1-24-அந்யா திஷ்டிதே பூர்வவத் அபிலாபாத் —

தொடர்பு மட்டுமே கொள்கின்றான்
சாந்தோக்யம் -5-10-6-மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே
தேவா ஜாயந்தே-மனுஷா ஜாயந்தோ போலே இங்கும் கூறப்படுவதால் த்காஅவர உடல்களுடன் பிறக்கிறான் என்பர் பூர்வ பஷி –
அப்படி அல்ல -ஆகாயம் மழை மேகம் போலே தொடர்பு மட்டுமே கொள்கிறான்-
சாந்தோக்யம் -ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன
பஞ்ச ஆஹூதிக்கு பின்பு எடுக்கும் உடலிலே மீண்டும் கர்ம பலன்கள் அனுபவிக்க வேண்டும்
இடைப்பட்ட காலத்தில் அனுபவிக்க கர்மங்கள் இல்லை என்பதால் தொடர்பு மட்டுமே என்றதாயிற்று-

—————————————————————————————————————————————-

3-1-25-அசுத்தம் இதி சேத ந சப்தாத் –

அக்னி ஷோமம் போன்ற பசு ஆடு வதையுடன் கூடிய யாகங்களால் -பெற்ற பாவங்களால் தான்ய உடல் கொள்வான் என்பர் பூர்வ பஷி
ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -சாந்தி பர்வம் -278-5–சாஸ்திர விதி என்பதால் பாபம் வாராது என்றாலும் ஏதாவது பலனை குறித்து செய்யும் யாகத்தில் பசு வதை பாபம்ஆகுமே என்றால்
தைத்ரிய சம்ஹிதை -2-5-5-சவர்க்க காமோ யஜேத-என்றும் ஆபஸ்தம்ப சூ த்ரம்-2-1-2-2-சர்வ வர்ணானாம் ஸ்வ தர்ம அனுஷ்டானே பரம் அபரிமிதம் ஸூ கம் –
ஆக ஆசை விருப்பத்தின் அடியாகவே யாகம் செய்வதால் பாபம் கிட்டி தான்ய உடலை பெறுகிறான் என்பர் பூர்வ பஷி
மனு ஸ்ம்ருதி -1-2-9-சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவரதாம் நர -என்றும் சொல்லும்
சித்தாந்தம் -பசு வதை இல்லை -ஸ்வர்க்கம் செல்லவே -என்பர் -ஹிரண்ய சரீர ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமேதி -என்று சொல்லுவரே
தைத்ரிய பிராமணமும் -நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று
சவிதா என்னும் சூர்யன் அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-

—————————————————————————————————————————————-

3-1-26-ரேதஸ் சிக்யோக-அத —

விந்துவை விடுபவனாக கூறுவது போன்று -சாந்தோக்யம் -5-10-6-யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி -போலே
நெல் போன்றவைகளுடன் சேர்த்தி அடைகின்றான் என்றே கொள்ள வேணும்

—————————————————————————————————————————————–

3-1-27- யோ நே சரீரம்

கர்ப்பத்தை அடைந்த பின்னரே உடல் தோன்றுகிறது
ஆகாயம் போன்றவற்றுடன் சேர்த்தி மட்டுமே கொள்கிறான் என்றதாயிற்று-

————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading