ஸ்வரூபத்தின் கண் உள்ள வேறுபட்ட குணங்களைக் கூறினார் முன் ஸ்லோகத்தில் –
திரு மேனியின் கண் உள்ள வேற்பட்ட குணங்களை அனுசந்திக்கிறார் இதில் —
கந கநக த்யுதீ யுவ தசாமபி முக்த தசாம்
யுவ தருண த்வயோ ருசிதம் ஆபரணாதி பரம்
த்ருவ மாசமாந தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயிச குசேசயோதர விஹாரிணி நிர்விசசி–35–
கந கநக த்யுதீ -மேகம் பொன் போன்ற ஒளிகளையும்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான்
நீலதோயத -சுருதி -பொன்னின் சோதி இலக்குமியிடம் -ஹிரண்ய வர்ணாம்
இரண்டு ஜோதிகளின் சேர்த்தி அழகை நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தி அருளுகிறார் –
யுவ தசாமபி முக்த தசாம் -யௌவன இளம் பருவங்கள் –
காளைப் பருவம் இறைவனுக்கு -பால்யம் யௌவனம் சந்தி- நிலை பிராட்டிக்கு
ஸூதி சைசவ யௌவன வ்யதிகர -என்பர் 43 ஸ்லோகத்தில்-
யுவ தருண த்வயோ ருசித மாபரணாதி பரம் –
யௌவனம் இளமை இவைகளுக்கு ஏற்றதே –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -ஒரே வயது இல்லை ஏற்ற வயது –
ஆபரணாதி -ஆதி சப்தத்தால் ஆண்களுக்கே உரிய அவயவ அமைப்பு பெண்களுக்கே உரிய அவயவ அமைப்பு
முதலியன கூறப்படுகின்றன
பரம் -விலஷணம் என்றவாறு -சமானம் -ஏகம் ஓன்று -அசமானம் -அநேகம் பின்னம் –
வேறு வேறு திவ்ய ஆபரணங்கள் திவ்ய அவயவங்கள் –
த்ருவ மாசமாந தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ த்வயிச குசேசயோதர விஹாரிணி நிர்விசசி-
த்ருவம் -நிச்சயம் –
தேச -இடங்களில்
விநிவேசி -அமையப் பெற்றதும்
பரம் -சிறந்ததுமான
ஆபராணாதி-திவ்ய ஆபரணங்கள் முதலியவற்றையும்
ஹரௌ -இறைவன் இடத்தும்
த்வயிச -நின்னிடத்தும்
விபஜ்ய -பிரித்து
நிர்விசசி -அனுபவிக்கின்றாய்-
பிராட்டி பிரதான்யம் பற்றி இறைவனைக் கூறாமல்
பிராட்டி அனுபவத்தை மாத்ரம் அருளிச் செய்கிறார் –
கரு முகில் பொன்னின் காந்தி கட்டிளம் காளை மங்கைப்
பருவம் அந்நிலைகட்கு ஏற்பப் பால் வகை வெவ்வேறான
உருவினில் ஒளிரு நற் பூண் உறுதி நீ துய்த்தி மற்றும்
அரிமிசை பிரித்துன் மீதும் அம்புசத் தாடுவாளே–35–
அம்புசத் தாடுவாளே–தாமரையில் விளையாடுபவளே –
—————————————————————
இனி மூன்று ஸ்லோகங்களால் திவ்ய மங்கள விக்ரஹத்தை வருணிக்கிறார் –
இதில் பாற் கடலின் சாரம் எல்லாம் திரண்டு பிராட்டி திரு மேனி யாயின –
தம் சாரத்தை இழந்த பாற் கடல் பொருளாகிய சந்தரன் முதலியன எல்லாம் கோது ஆகிவிட்டன என்று வருணித்து
நித்யமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை இங்கனம் வருணிப்பது தகுமோ -என்கிறார் –
அங்கந்தே ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் கும்பத
ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா மன்யே மஹார்காச் தத
இந்து கல்ப லதா ஸூதா மது முகா இத்யாவிலாம் வர்ண நாம்
ஸ்ரீ ரங்கேஸ்வரி சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர் நார்ஹதி –36–
அங்கந்தே ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர்-திருமேனியை மென்மை என்ன -குளிர்ச்சி என்ன
முக்த -அழகு என்ன -இனிமை என்ன -உதாரை -பெரும் தன்மை என்ன –
இந்த சாரமான குணங்களைக் கொண்டு
கும்பத ஷீராப்தே கிம் ருஜீஷதா முபகதா மன்யே மஹார்காச் தத- –
இந்து கல்ப லதா ஸூதா மது முகா இத்யாவிலாம் வர்ண நாம் –
கும்பத -கோக்கின்ற பாற் கடலுக்கு –
இந்து -சந்திரனும் -கற்பகக் கொடியும் அமுதமும் மது முதலியனவும் –
ருஜீஷதாம் -சாறு பிழிந்த கோதாக இருக்கும் தன்மையை
உபகதாகிம் -அடைந்தன கொல்-
தத மஹார்கா-அதனால் அவை மிகவும் மதிப்புடையன என்று மன்யே -எண்ணுகின்றேன் –
இதி ஆவிலாம் வர்ணா நாம் -என்று கலங்கின வருணனைக்கு
ஸ்ரீ ரங்கேஸ்வரி
சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர் நார்ஹதி –செயற்கைப் பேச்சே இல்லாத
அப்ராக்ருதமான உனது திருமேனி தகுதி உடையதாய் இல்லை-
சந்த்ரனிடம் உள்ள அழகு குளிர்ச்சி மென்மை என்னும் குணங்களை எடுத்தும்
கற்பகக் கொடியில் உள்ள ஔதார்ய குணத்தை எடுத்தும்
அமுதத்தினுடைய இனிமையை எடுத்தும்
மதுவினிடமுள்ள குளிர்ச்சியை எடுத்தும் -பிராட்டியின் திருமேனியை வகுத்ததனால் இவை கோது ஆகி விட்டன
நித்தியமான திருமேனி என்று அறியாமல் கலக்கத்தால் வர்ணனை –
அமிர்தம் போல பிறக்கவில்லை
தோன்றினாள் –
மதி யமுது மது கற்ப வல்லி மானும் மாண் பொருளின் தண்மை யழகு இனிமை வன்மை
மெதுமை எனும் குணம் கொண்டு உன் விளங்கும் அங்கம் வெண் திருப் பாற் கடல் கோப்பக் கோதாய் நின்றே
அதிக மதிப்பதனாலே யடைந்த போலும் அவை யெனவே அகம் கலங்கி வருணித் திட்டால்
அது திவிய மா மாக்கற் பேச்சே யற்ற ஆருடம்புக் கடுக்குமோ சி ரரங்கத் தாளே–36–
ஆக்கல் பேச்சே அற்ற – புதிதாக உண்டாகப்படுதல் என்கிற பேச்சிற்கே இடமில்லாத-
————————————————————————————
சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –
ப்ரணம தநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந
பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி –37–
ப்ரணம தநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய -வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே -பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாக வுமாம் –
கநக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும்
செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –
வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-
——————————————————–
கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன்
தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –
ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம் புஜம்
த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்யா கூலங்கஷ
ஸ்பாரா பாங்க தரங்க மம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம் –38-
பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-
ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்க விட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும்
தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பாரா பாங்க தரங்க மம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பஸ்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –
பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பஸ்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும்
பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-என்பது போலே-
நளின மலர்த் தாள் ஓன்று நாலவிட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரம் அபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளிகரையில் பொருவுமகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–
——————————————————————–
இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத்
திருவடிகளிலே வணங்குகின்றார்-
ஸூரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப
ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–39-
ஸூரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –
தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –
இந்திராயா இதி பரமைஸ்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமலபலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி –
இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் – களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –
பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமார் இதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-
பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-
—————————————————————————–
வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —
த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷார் ஆஜ்ஞாம் த்ருசோ துர்வசா
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ஸ்ரீ நிர் பராப்யாம் பதிம்
த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
சாஷால் லஷ்மி தவ அவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே –40–
த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-துர் வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –
செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால்
நிறைந்தவைகளாய்-இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே
அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –
மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –
த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –
சாஷால் லஷ்மி தவ அவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –
நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–
பிரசம் -தேன்
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply