ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ந கோசம் –ஸ்ரீ திருமலை நல்லான் இயற்றிய ஸூவர்ண குஞ்சிகா -ஸ்லோகங்கள்-5/6/7/8/–

கீழ் இரண்டு ஸ்லோகங்களில் இவர் வேண்டினபடியே பிராட்டி குளிரக் கடாஷித்து அருள
ஸ்வரூபாதிகளை நேரே சாஷாத் கரித்து-
பிரமன் முதலியோரும் துதிக்க அரிய இந்த வைபவத்தையோ நான் துதிப்பது –
அழகிது வாழ்க என் சிறந்த வாக்கு  என்று தம்மையே தாம் பரிஹசித்துக் கொள்கிறார் –

யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா
ஸ்தோதும்கே வயமித்ய தச்ச ஜக்ருஹூ ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய
அப்யே வந் தவ தேவி வாங்மனஸ் யோர் பாஷா நபிஹ்ஞம் பதம்
காவாச ப்ரயதா மஹே கவயிதம் ஸ்வஸ்தி ப்ரசச்த்யை கிராம்—5-

யத் யாவத் தவ வைபவம் ததுசித  ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா –
யத் -என்ன ஸ்வரூபம் உடையது -யாவத் -என்ன அளவுடையது -என்றபடி
தவ   வைபவம் -இறைவனது வைபவத்திலும் வேறுபாடு தோன்ற உனது வைபவத்தை –
வேதங்கள் அவன் வைபவத்தை பேச முயன்று திரும்ப -எதோ வாசோ நிவர்த்தந்தே -தவ வைபவம் —

தூரோ ஸ்ப்ருஹ–
ஸ்ப்ருஹ-விருப்பம் -முயன்று என்னாமல்-விரும்பத் தக்க பலம் -முக்தியை விட இத்தை அன்றோ விரும்புவார்கள் –
இன்னாருக்கு  விருப்பம் என்னாமல் -இது சர்வருக்கும் விரும்புகை அரிது –
யஸ் யாஸ்தே மகிமான மாத்மன இவத்வத் வல்லபொபி ப்ரபு-நாலம் மாது மியத்தயா நிரவதிம் -ஆளவந்தார் –
தேவி தவன் மஹிமாவதிர் நஹரிணா நாபித்வையா ஞாயதே -கூரத் ஆழ்வான் –
தூரோ நடுவில் வைத்து ஸ்தோத்ரத்துடன் ஸ்ப்ருஹையை சேர ஒட்டாமல் -அமைந்த அழகு
பொருளில் மட்டும் அன்றி சொல்லிலும் சேர ஒட்டாமல் அமைந்துள்ளதே-

ஸ்தோதும்கே வயமித்யதச்ச  ஜக்ருஹூ ப்ராஞ்சோ விரிஞ்ச்யாத்ய –
ப்ராஞ்ச-நீண்ட கால அறிவும் அனுபவமும் வாய்க்கப் பெற்ற-
விரிஞ்சி -படைப்பவன் -பிரமன் -என்றபடி சகாரம் அவன் முதலாக அனைவராலும் –
அத -சுட்டுச் சொல் -இதம் -ஏதத் அத தத் -நான்கு சுட்டுச் சொற்கள்
கண் எதிரில் நெருங்கி உள்ளதை -இதம் -என்றும் -மிகவும் நெருங்கி உள்ளதை ஏதத்-என்றும் –
தொலைவில் உள்ளதை அத -என்றும் -கண்ணுக்குத் தெரியாததை தத் -என்றும் சுட்ட வேண்டும்
பிராட்டியுடைய வைபவம் ப்ரஹ்மாதிகளுக்கும் ஸ்துதிக்க அரிதாம் படி தொலைவில் உள்ளதால் -அத -என்கிறார்
நதே வர்ணயிதம் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதச -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ப்ரஹ்மாதிகள்-பிரமன் ருத்ரன் சனகாதிகள் -சர்வபிதா மஹாத்யை-விதிசிவ சனகாத்யை-என்று
ஒரு கோவையாக பிறர் எடுத்தமை உண்டே –

அப்யே வந்ததவ தேவி வாங்மனஸ் யோர்  பாஷா நபிஹ்ஞம் பதம்-
அப்யேவம்-ஏவம் அபி
பாஷா -பேசுதல் -இலக்கணையால் பழகுதல் –
பதம் -பத்யத இதி பதம் -பெற்று அனுபவிக்கத் தகும் -பிராட்டியினது வைபவம் –

காவாச ப்ரயதா மஹே கவயிதம் ஸ்வஸ்தி ப்ரசச்த்யை கிராம்-
ப்ரயதா மஹே-விடாப்பிடியாக முயல்கின்றோம் –சாபலத்தால் முயல்வதால் ப்ர விசேஷணம்-
கவயிதும் -பிராட்டியின் வைபவத்தை உள்ளது உள்ளபடி சொல்லி விடுகை அன்றிக்கே இல்லாததும் புனைந்து
கவிஞர் போல் வருணிக்கவும் புகுந்தேன் –
தத்த்வேன யஸ்ய மகிமார்ண வசீகராணு-ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தை அடி ஒற்றியது இது –

பிராட்டி மகிழ்ந்து புகர் பெற்று தனது ஸ்வரூபாதிகளை நேரே காட்டிக் கொடுத்தருள –
தேவி -என்று விளித்து
நினது என்று முன்னிலைப் படுத்தி அருளிகிறார் –

தேவி நின வைபவம் அத்தனைக்கும் சேரும்
திறந்தன வாந் துதி விழைதல் அரிதே யன்றோ
யாவரது துதித்திடற்கு யாம் என்றார்கள்
யாத் தசகத்தான் முதலா முன்னோர் கூட
நா வலிமை இல்லாதேம் நாமானாலும்
நா மனங்கள் பழகலா நின் வைபவத்தைப்
பா வரிசை பாடிடவே முயல்கின்றேமால்
பா வனங்களின் சிறப்பு வாழ்க மாதோ –5

—————————————————————————-

பிரமன்  முதலியோரும் ஸ்துதிக்க அறிய பிராட்டியினது வைபவத்தை
ஸ்துதிக்க நானே உரியேன்  -என்கிறார் –

ஸ்தோதாரன் தம் உசந்தி தேவி கவையோ  யோ விஸ்த்ருணீதே குணான்
ஸ்தோதவ்யஸ்ய ததச்சதே ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி
யஸ்மா தஸ்ம தமர்ஷணீய பணிதி ஸ்வீகார தஸ்தே குணா
ஷாந்த் யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரன் ப்ரதாம்–6-

ஸ்தோதாரன் தம் உசந்தி-உசந்தி -விரும்புகிறார்கள்
தேவி கவையோ -கவய -அறிஞர்கள்
யோ விஸ்த்ருணீதே குணான் ஸ்தோதவ்யஸ்ய -ஸ்துதிக்கத் தக்கதனுடைய குணங்களை விவரிகின்றானோ –
ததச்சதே-ஆகையினாலே உன்னைக் குறித்து
ஸ்துதி துரா மய்யேவ விஸ்ராம்யதி-ஸ்துதிக்கும்   பொறுப்பு என்னிடமே முடிவடைகிறது –
யஸ்மா தஸ்ம தமர்ஷணீய பணிதி ஸ்வீகார -ஏன் எனில் எமது பொறுக்க ஒண்ணாத  சொற்களை ஏற்பதனால்
தஸ்தே குணா ஷாந்த் யௌதார்ய தயாதயோ பகவதி ஸ்வாம் ப்ரஸ்து வீரன் ப்ரதாம்-நினது பொறுமை கொடை தயவு
முதலிய குணங்கள் பிரசித்தியை வெளியிடும் –

என்னைப் போன்ற புன்சொல் யுடையார் வேறு யாரும் இலராதலின் யானே பிராட்டியைத் ஸ்துதிப்பிக்க அதிகாரி ஆயினேன் –
மய்யேவ என்று கீழே ஒருமையில் சொல்லி அஸ்மத் என்று பன்மையில்  தமது இழவு தோற்ற அருளுகிறார் –
நம் போன்ற அனுசந்திப்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறார் என்றுமாம் –
தே குணா -பகவான் குணம் போன்ற ஸ்வாதந்த்ரம் கலசாத திருக் குணங்கள் –
ஷாந்தி ஔதார்ய தயாதய-ஆதி சப்தத்தால் வாத்சல்யாதி குணங்களும் அனுசந்தேயம் –

ஷாந்தி சொற்களில் உள்ள பிழைகளை பொறுத்தல் –
ஷாந்திஸ்துதே ஸவிஷயா மம துர்வசோபி-கூரத் ஆழ்வான்-

தன்னை ஸ்துதிக்க விஷயம் ஆக்கியதால் ஔதார்யம் வெளிப்படும் –
நாவலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே -நம் ஆழ்வார்

ஸ்துதிக்க முடியாமல் படும் ஸ்ரமத்தைக் கண்டு தயை வெளிப்படும் –
கிஞ்சைஷ சக்தி யதிசயேன ந்தேநுகம்ப்ய ஸ்தோதாபிது ஸ்துதி க்ருதேன பரிஸ்ரமேண-ஆளவந்தார் –

புன் சொல்லையும் இன் சொல்லாக ஏற்பதால் வாத்சல்யம் விளங்கும் –
இளைய புன்கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் –

பகவதி -இப்படி பல குணங்கள் உடைமை பற்றி -குற்றம் இன்றிக் குணமுடையவள் என்றபடி –
குற்றம் இல்லாமை -ஷாந்தி ஔதார்யம் தயை மூன்றும் உபேஷியாமைக்கு ஹேது
குணமுடைமை -வாத்சல்யம் ஏற்றலுக்கு ஹேது –
உபேஷியாமைக்கு ஹேது தயா சாந்திகள் –
பச்சையாகக் கொள்ளுகைக்கு ஹேது வாத்சல்யம் -மணவாள மானிகள் ஸ்ரீ ஸூக்திகள்
ஆஸ்ரயண உந்முக சேதன  கதங்களான-என்றதால் ஔதார்யமும் சேரும் –

பகவதி -பூஜிக்கத் தக்கவள்  பற்றியும் -என்றுமாம் –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் –புனைந்த தண்ணம் துழாயுடை யம்மான் -என்னுமிடத்து
பட்டர் பெருமாளே பிராட்டியைப் பூஜிப்பதாக விசேஷ அர்த்தம் காட்டி அருளினார்-

சப்தோயம் நோபசாரேண ஹ்யன்யத்ரஹ்  யுபசாரத –
பகவான் சொல்லுக்கு இறைவனே முக்யப் பொருள் –
அதற்ககடியான இவள் பகவதி என்னத் தட்டில்லையே –
ஸ்வ தச் ஸ்ரீ ஸ்தவம்–தத்  ஏவைஷ பகவான் -மேலே அருளிச் செய்வார் இவரே –

ப்ரஸ்து வீரன் பாடமே சரி- ப்ரஸ்நுவீரன்-பிழையான பாடம் —

துதித்திடுவோன் துதி படுவதன் கணுள்ள
தூய குணங்களை விரிப்போன் என்பர் மேலோர்
துதித்திடு நற் பொறுப்பதனால் எந்தன் மீதே
சுமந்து விடும் ஏன் என்னில் பொறுக்க ஒணாத
அதிப் பிழைகள் படும் எமது சொற்கள் ஏற்ப
தரிதேனும் பகவதி நீ ஏற்றுக் கொள்வாய்
இதிற் பல நின் பொறை கொடை தண்ணளி முன்னான
இயற் குணங்கள் தேவி நனி விளங்கும் அன்றே –6

————————————————————————–

பொறுக்க ஒணாத எனது சொல்லை ஏற்பதை விட
நல்ல கவிதையாகத் தனது ஸ்துதியை
பிராட்டியே பூர்த்தி செய்து கொள்வாளாக -என்கிறார்-

ஸூக்திம் சமக்ரயது நஸ் ஸ்வயமேவ லஷ்மீ
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ மதுரை கடாஷை
வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் யாம்
கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி –7 –

ஸூக்திம் சமக்ரயது நஸ் ஸ்வயமேவ லஷ்மீ ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீ மதுரை கடாஷை –
ஸ்ரீ ரங்கராஜனுடைய பட்டத்தரசியான ஸ்ரீ ரங்க நாச்சியார்
இனிய கடாஷங்களினால் நமது நல் வாக்கை தானே பூர்த்தி செய்து கொள்வாளாக –

வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர் -பொருள் திறம்   என்ன எழுத்துக் குணங்கள் என்ன
சேர்த்திச் சிறப்பு என்ன இவைகளினாலே –
யாம்  கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி –அறிஞர்கள் தினவெடுத்த காதின் தொளைகளை
உடையவர்களாய் குடிக்கின்றார்களோ –

இவரின் தாய் தானே ஸ்ரீ ரங்க நாச்சியாரும் –
சமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதுமீஹா மஹே யுக்தாம் பாவய பாரதீம் -கூரத் ஆழ்வான் பிரார்த்தித்தது போலே –
ஸூக்திம் சமக்ரயது -லஷ்மியின் கடாஷத்தால் வாக்கு நல்லதாகவும் பூர்த்தியாகவும் அமையும் என்பதால் ஸூக்திம் என்கிறார்
வகுத்த விஷய ஸ்திதி என்பதாலும் –
சமாபயது -முடித்துக் கொடுத்திடுக -என்னாது -சமக்ரயது -நிறைத்துக் கொடுத்திடுக –
எந்த அம்சமும் குறைவின்றி நிறையும்படி செய்தருள வேணும் –

ஸ்வயமேவ -என் தொடர்பு இல்லாமலே -என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -நம்மாழ்வார் –
அது போலே என்னை உபகரணமாகக் கொள்ளக் கூடாது –
ஆழ்வார் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் -நானோ அறிவிலி –
சிறு பிரஜை எழுதிடப் புக்கால் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக் கட்டும் –
பிதாவாதல் உபாத்யாயன் ஆதல் இடப் புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்
அங்கன் இன்றிக்கே அவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே இவன் ஓர் இடத்தே இழுக்க -குதறிக் கொட்டியாய்
ரூபம் அழிந்து சித்தரிப்போம் -எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் -என்றைக்கும் திருவாய்மொழி ஈட்டில்-

இந்த வேண்டுகோள் செய்ய சௌலப்யமும்-அதனை நிறைவேற்றப் பரத்வமும் தேவை என்பதால்
ஸ்ரீ ரங்க ராஜ மகிஷி -லஷ்மீ -லஷணம் உள்ளவள் –
மதுரை கடாஷை -சீதலீக்ரியதே தாபோ யேன தம் மதுரம் ஸ்ம்ருதம் -தாபம் தணித்து குளிரச் செய்யும் கடாஷம்
முன்னுரு செய்து அருளிய திருவாய்மொழி போலே இல்லாமல் கடாஷமே போதும் —
யம் த்வம் தேவி நிரீஷசே –சச பண்டித-என்னக் கடவது இறே

வைதக்ய வர்ண குண கும்பந கௌரவைர்-
வைதக்யமாவது அணி சுவை முதலிய பொருள் திறம் -சாமர்த்ய்மாக என்றுமாம் –
வர்ண -எழுத்து குணங்கள் -தெளிவு மென்மை இனிமை
கும்பந கௌரவம் -சொற் கோப்பின் சிறப்பு-

யாம்  கண்டூல கர்ண குஹரா கவையோ தயந்தி-கேட்கப் பேராவல் கொண்டவர்கள் என்றபடி –
குடிக்கின்றார்கள் என்றதால்
அமுதம் போன்ற இனியது என்றதாயிற்று-

நல்லதா முற்றத் தானே நடத்துக நமது சொல்லை
செல்வி சீர ரங்க ராசன்  தேவி தனது குளிர்ந்த நோக்கால்
சொல்லியை பருத்தச் சீர்மை தொகுப்புறும் குணங்களோடு
வல்லுநர் செவியின் வாஞ்சை மாறிடப் பருகுமாறே –7–

————————————————————————-

கீழ் சொன்னதையே விவரித்து அபேஷிக்கிறார்-

அநாக்ராத அவத்யம் பஹூ குண பரீணாஹி மனசோ
துஹாநம் சௌஹார்த்தம் பரிசுத மிவாதாபி கஹநம்
பதாநாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ
த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் –8-

அநாக்ராதாவத்யம் -அ நாக்ராத அவத்யம் –தோஷ கந்தமே இல்லாததும்
பஹூ குண பரீணாஹி -பல கல்யாண குணங்களின்  பெருக்கத்தை யுடைய
மனசோ-துஹா நம் சௌஹார்த்தம்-ரசிகர்களின் மனதிற்கு களிப்பை காப்பதும்
பரிசுதமிவ-பழகியது -அர்த்தம் தெரிந்தது போன்றதும்
அதாபி கஹ நம் -ஆயினும் ஆழ் பொருளை உடையதும் –
பதா நாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ-சொற்களின் சேர்க்கையினாலே செவிகளுக்கு இமை கொட்டாமல் கேட்கத் தக்கதுமான
த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் –வாக் விலாசத்தை எனக்கு நீயே பல வாயிலாகப் பெருக்க வேணும் –

ருத்ர பட்டர் -யோ ஹேது காவ்யசோபாயா ச சோலங்கார பிரகீர்த்தயதே குணோபி தாத்ருசோ ஜ்ஞேய தோஷஸ் ஸ்யாத் தத்விபர்யய-
சோபைக்கு ஹேது அலங்காம் -குணமும் அத்தகைத்தே -இதற்கு மாறுபட்டது தோஷம் –
தததோஷௌ சப்தார்தௌ சகுணா வநலங்குருததீ -காவ்ய பிரகாசிகை –
பரிசுதமிவாதாபி கஹநம்-பொருள் விளங்குவதாய் இருப்பினும் உள்ளுறை பொருளால் ஆழமுடைத்தாய் இருத்தல் வேண்டும் –
த்வநி ப்ரதானதா யத்ர ததுத்தம முதாஹ்ருதம் –
பரிசிதம என்பதால் தெளிவும் கஹநம் என்பதால் காம்பீர்யம்
கீழ் ஸ்லோகத்தில் அருளிய வைதக்த்யம் வர்ண குணம் விவரிக்கப் பட்டது-

பதா நாம் சௌப்ராத்ரா தநிமிஷ நிஷேவ்யம் ஸ்ரவணயோ-இதனால் கும்பந கௌரவத்தை விவரிக்கிறார் –
சௌப்ராத்ரம்-சொற்களின் இயைபைச் சொன்னபடி
கவனமாய் கேட்டல் -ஆச்சாரமாக கேட்டல் –

த்வமேவ ஸ்ரீர் மஹ்யம் பஹூமுகய வாணீ விலஸிதம் -அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -வாக் பிராட்டியின் விபூதி
என்பதால் நீயே எனது வாக் விலாசத்தைப் பெருக்க வேணும் என்கிறார்
அகிலம் வாங்மயம் யத் விபூதி -சரஸ்வதி தேவியும் பிராட்டியின் அடியாள்
சாபாரதீ பகவதீது யதீய தாஸி-கூரத் ஆழ்வான் –

த்வயா ஜூஷ்டா ஜூஷமாணா துருக்தான் ப்ருஹத் வதேம விததே ஸூ வீரா -உன்னால் விரும்பப் பட்ட
புன் சொல்லாளர் ஆகிய யாம் பெரிதாகப் பேசக் கடவோம்
என்ற மேதா ஸூக்தத்தை அடி ஒற்றி இந்த பிரகரணம் அமைந்த அழகு கண்டு மகிழ்க –

குற்றத்தின் வாடை யற்றுக் குணம் பல பல்கி நெஞ்சில்
குற்ற வின்பத்தை நல்கி உள்ளுற்று ஆழ்ந்து எளிய தேனும்
சொற்றச் சொல்லியைப் பெற்றுச் சுருதிகள் இமையாது   ஏற்கும்
பெற்றிய வாணி லீலை பெருக்குக திருவே நீயே –8–

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading