ஸ்ரீ ஹரியுடைய படைத்தலை ஏற்பது மாத்ரம் அன்றி
படைப்பதற்கு ஹேதுவாவதும்
பிராட்டியின் கடாஷமே எனக் கூறி மீண்டும் பிராட்டியை வணங்குகிறார் –
உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோரகித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்ய தல மங்கள தீப ரேகாம்
ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–ஸ்லோகம் – 2-
உல்லாச -ஏழு உலகத் தோற்றத்தால் –தனது மலர்ச்சியை சொல்லுகிறதாகவுமாம்-கடாஷ லீலை விகாசம்
பல்லவித-தளிர்த்ததும் -உத்பத்தி -பட்ட மரம் தளிர்ப்பது போலே உலகங்களின் உத்பத்தி
பாலித சப்த லோகீ -ஆளப்படும் ஏழு லோகங்களையும்
நிர்வாஹ -தாங்குவதனால்
கோரகித -அரும்பியதுமான
நேம கடாஷ-சிறிய நோக்கத்தின் –
லீலாம் –விளையாட்டுடையவளும்
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -திருவரங்கத்தில் உள்ள விமானத்திற்கு
மங்கள தீப ரேகாம் -மங்கள விளக்கு ஜ்வாலை போன்றவளும்
ஸ்ரீ ரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியமாஸ்ரயாம –ஸ்ரீ ரங்கராஜனுடைய பட்ட மகிஷியுமான ஸ்ரீ ரங்கநாச்சியாரை வணங்குகிறோம்
தளிர்ப்பதும் அரும்புவதும் கூறப் படுவதால் கடாஷ லீலை ஒரு கொடி போன்றதே –
அந்த கொடியின் தளிரே ஏழு உலகங்கள் தோற்றம் –
நிர்வாஹம் அதன் அரும்பு
பிராட்டியின் கடாஷமே ஸ்ருஷ்டி ஸ்திதி என்றது ஆயிற்று-
ஈஷத்த்வத் கருணா நிரீஷண் ஸூதா சந்துஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் ததலாபத்தஸ் த்ரிபுவனம்
சமப்ரத்ய நந்தோதயம்–ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகள்-
யஸ்யா கடாஷ ம்ருது வீஷண தீஷணேந ச்தயஸ் சமுல்லசித பல்லவ முல்லலாச விச்வம் விபர்யய சமுத்த
விபர்யயம் ப்ராக் தாம் தேவதேவ மஹிஷீம் ஸ்ரியமாஸ்ரயம –ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸூக்திகள் –
இவள் கடாஷத்தாலேயே புருஷோத்தமன் விரிந்து உலகம் ஸ்ருஷ்டிக்கிறான் –
சிருஷ்டியில் இவளுக்கு சம்பந்தம் -அந்வயம்-உண்டோ என்று பிரச்னம் பண்ணின
நடாதூர் அம்மாளுக்கு கிடாம்பி ஆச்சான் –
இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ –
ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யாநி பிரஜாச்ச உத்பாதயிதவ்யா –பிரமாணம் சொல்லுகையாலே
சஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயம் உண்டு என்று அருளிச் செய்தார்-
ஸ்ருஷ்டியே லீலை தான் –
தனித்து விளையாடுவது இன்பம் பயக்காதே-
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரச தாஸ்யாத்-கூரத் ஆழ்வான் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே -ஸ்ருதி
ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம் -சம்ஹாரத்திலும் ஸ்வதா -அவள் கூடவே உள்ளாள்-ஸ்வதா தவம் லோகபாவி நீ –
ஏகோ வித்யா சஹாயஸ்த்வம் யோகீ யோக முபாகத -ஸ்ரீ ஹரி வம்சம்
சர்வே நிமேஷா ஜ்ஞ்ஞிரே வித்யூத புருஷா ததி-ஸ்ருதி –
மின்னல் நிறம் கொண்ட புருஷோத்தமனே ஸ்ருஷ்டிக்கிறான் –
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் –
அநு சிகிநி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -பெண் மயிலின் சமீபத்திலே ஆண் மயில் தோகை
விரித்தாடும் என்றார் இவரும்-படைப்பவன் அவனே -படைக்குமாறு தூண்டுபவள் இவள் –
ஸ்ரீ ரங்க தீபரேகாம்-
ஷீராப்தேர் மண்டலாத்பாநோ யோகி நாம் ஹ்ருதயாதபி ரதிம் கதஸ் சதா யத்ர தத்ரங்கம் முனயோ விது —
திருப் பாற் கடல் –
ஸூர்ய மண்டலம் –
யோகிகளிடைய ஹிருதயம் –
இவைகளை விட விரும்பி உகந்து அருளி உறைகின்றான் ஸ்ரீரங்க ஹர்ம்யதலம்-
ராஜ மகிஷி வசிக்கும் உடம் -ஹர்ம்யதலம் -செல்வர் வசிக்கும் இடம் -ஹர்ம்யாதிர் தநிமாம் வாஸ -நிகண்டு –
ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -வேற்றுமைத் தொகையாக கொண்டு இவ்வர்த்தம்
பண்புத் தொகையாக கொண்டு -விமானத்து விளக்கு -குன்றத்து விளக்கு என்னவுமாம் –
நல் விளக்கு -மங்கள தீபரேகாம் –தன்னையும் காட்டி அருளி அவனையும் நம்மையும் சேர்த்து அருளுபவள் –
மாமேகம் தேவதேவச்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத் -மஹிஷீ -அநந்த நாமதேயாச சக்தி சக்ரச்ய நாயிகா –
இவளே தலைவி -சக்தி சக்ரம் -மனைவியரின் திரள் –
சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவதஸ் தத்ததவஸ் தோசித பரிசர்யாயாம் அக்ஞாபயந்த்யா-எம்பெருமானார்
ஸ்ரீ கத்யத்தில் அருளிச் செய்தது போலே –
ச்ரியம்-ஸ்ரீ யதே -ஆஸ்ரயிக்கப் படுகிறவள் –
உல்லாச -ஸ்ரீ ரங்க ஹர்ம்யதல -ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீம் -என்பதால்
இவள் அவனை ஆஸ்ரயிக்க நிலையையும் அருளுகிறார் –
ச்ரியம் ஆச்ரயாம -எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுகிறவளை நாமும் ஆஸ்ரயிக்கிறோம்-
சர்வலோக சரண்யனை ஸ்ரீ விபீஷணன் பற்றியது போலே –
இத்தால் பிராட்டியின் மேன்மையையும் எளிமையையும் சொல்லிற்று ஆயிற்று-
உதித்திடத் தளிர்த்த லோடாள் உலகங்கள் ஏழும் தாங்கும்
விதத்தினில் முகிழ்க்கும் அற்ப விழி விளையாட்டினானைப்
பதித் தலை யரங்க மாடத் தலத் தணி தீபம் என்ன
மதித் திடும் அரங்க ராசன் மகிடியாம் திருவைச் சார்வாம் —2
உதித்திடத் தளிர்த்த லோடாள்-உதித்திட தளிர்தலோடு ஆள் -ஆளப்படுகிற என்றபடி-
—————————————————————————–
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும்
நமஸ்கார ரூபமான மங்களம் கூறி வணங்கி
அதன் மேல் கடாஷத்தை செலுத்தி அருள
ஆசீர்வாத ரூபமான மங்களத்தை மீண்டும் அருளிச் செய்கிறார் –
அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதி திச புஜ சாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந் -ஸ்லோகம் – 3-
அநுகல -ஷணம் தோறும்
தநு காண்ட -கொள் கொம்பு போன்ற திருமேனியை
ஆலிங்க நாரம்ப -தழுவத் தொடங்கும் போது
சும்பத் -விளங்குகின்ற
ப்ரதி திச புஜ சாக -நான்கு பக்கங்களிலும் கிளை போன்ற கைகள் கொண்ட –
ஸ்ரீ சகா நோகஹர்த்தி-ஸ்ரீ சக அநோகஹா ருத்தி – -மரம் போன்ற திருமாலினுடைய செழிப்பை உடையவளும் –
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-பூங்கொத்து போன்ற கொங்கைகளும் –
மலர்ந்த பூவின் கண் உள்ள வண்டு போன்ற கருவிழிகளும் உடையவளுமான –
ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லி கடாஷான்–கற்பகக் கொடி போன்ற திருமகள் அருள் கடாஷங்களை என் மீது புரிந்திடுக –
கற்பக வ்ருஷத்திற்குக் கற்பகக் கொடி ஏற்புடைமையது அன்றோ –
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -நம்மாழ்வார் –
சதா தவை வோசித யா தவ ச்ரியா–ஆளவந்தார் –
அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத் ப்ரதிதிச புஜசாக ஸ்ரீ சகா நோகஹா ருத்தி –
இவளும் இறைவனது திருமேனியை
யயள வஷஸ் ஸ்தலம் ஹரே -என்றபடி
சென்று அணைந்து கொள்கிறாள் –
தநு காண்டம் -காண்டம் போன்ற திருமேனி -பிரகாண்டம் அடித் தண்டு –
திருப் பாதங்கள் -வேர் –
மேல் உள்ள திருமேனி -காண்டம் –
கொடியுடன் சேர்ந்த மரமே சோபிக்கும் –
அநோகஹா –சும்பத் பிரகாசிக்கும் –
அநு கல –சும்பத் -ஷணம் தோறும் பிரகாசிக்கும் என்றுமாம் –
பிராட்டியின் தழுவதல் -அடியாக பிறந்த ஹர்ஷத்தால் -திசைகள் தோறும் –
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளுடையான் –
பிரதிசக புஜசாக –
தோள்கள் ஆயிரத்தாய்
இவளை அனுபவிக்க பாரித்து அநந்த பாஹூம் -ஸ்ரீ கீதையின்படி விஸ்வரூபம் கொண்டான் என்றுமாம் –
செழிப்பு ஆவது –
ஞானம் சக்தி முதலிய ஆத்ம குணங்களும்
அழகு ஒளி போன்ற திருமேனி கல்யாண குணங்களும் -பிராட்டி சம்பத்தாலே என்கை-
ஹர்ஷத்தால் ஏற்பட்ட திமிர் பற்றி மரம் போலே என்ற உவமை –
வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேக-ஸ்ருத
சம்சார வெக்கைக்கு ஒதுங்கும் நிழல் –
சாயா வ்ருஷ மிவாத்வகா -காளிதாசன் –
வாஸூதேவ தருச்சாயா –
நிவாச வ்ருஷஸ் சாது நாம் –
அநோகஹ–பொதுப்பட அருளினாலும்
கற்பக வருஷம் என்று விசேஷித்து பொருள் கொள்ள வேண்டும்
ஸ்ரீ நிவாச -திவ்ய வல்யா
இவ கல்பத்ரும தஸ்யா நித்யோபக்ன -கற்பகக் கொடிக்கு கற்பக வருஷம் போலே
லஷ்மிக்கு எப்போதும் உள்ள கொள் கொம்பு சஹச்ர நாம ஸ்ரீ பாஷ்யம் –
ஸ்தன நயன குளுச்ச ஸ்பார புஷ்பத் விரேபா-
பூவின் கண் உள்ள வண்டு -நயனம் கருவிழியைக் குறிக்கும் –
மலர் போன்ற திருக்கண்கள் -ஸ்பாரம் -விசாலமானது
லஷ்மீ கல்பவல்லீ -பிராட்டியுடைய பாரதந்த்ர்யம் ஸ்வாபாவிகம், -வந்தேறி அன்று
இவள் பாரதந்த்ர்யமும் அவனது விருப்பமும் நித்யம் –
கற்பகக் கொடி -சர்வகாம பிரதாம் -நிருபாதிகமான பெண்மையும் வண்மையும் தோன்றும் –
ரசயது மயி லஷ்மீ கல்ப வல்லி கடாஷான்-
மயி -துதிக்கப் புகுந்த என் மீது -கடாஷ லஷணம்-
யத் கதாகத விஸ்ராந்தி வைசித்ர்யேண விவர்த்தனம் தாரகாயா கலாபிக்ஞா தம் கடாஷம் பிரசஷதே —
இன்பம் பயக்குமாறு இங்கும் அங்குமாக கரு விழிகள் பிறழ்தலே கடாஷம் —
வண்டு என்றதே இதனால் –
கடாஷான் -பன்மையால்
மீண்டும் மீண்டும் இலக்காக பாரித்தமை தோன்றும் –
இந்த ஸ்லோகத்தில்
முற்கூற்றால் திருமேனி அழகும்
பிற்கூற்றால் அவயவ அழகும் கூறப்பட்டன –
கணம் தொறும் மேனி கலந்ததும் கவினுற்று எங்கும்
பணைக் கிளைக் கரத்து மாலாம் பாதவம் செழிப்பச் சேர்ந்தே
இணர் முலை கொத்தும் கண்கள் எழில் மலர் வண்டு மான
அணங்கு கற்பகத்தின் வல்லி அடியனேற்கு அருள்க நோக்கே –3
பாதவம் -மரம் –
இணர் -நெருங்கிய
கவினுற்று -அழகு பெற்று
———————————————————————–
பிராட்டியினது ஜகத் காரணத்வம் இத் தகைத்து என்று காண்பித்து –
மேலும் பிராட்டிக்கு சில சிறப்புக்கள் கூறி
மீண்டும் திருக் கடாஷத்தை அபேஷிக்கிறார்–
யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வரூப் யாநு பாவா
ஸா நஸ் ஸ்ரீர் ஆஸ்த்ருணீதா மம்ருதலஹரிதீ லங்கநீயை ரபாங்கை –4–
யத் ப்ரூ பங்கா-எவளுடைய புருவங்களின் நெறிப்புக்கள்
ஸ்திர சர ரசநா தாரதம்யே முராரே-இறைவனுடைய -தாவர ஜங்கம-பொருள்களையும் படைத்தலின் ஏற்றத் தாழ்வில்
பிரமாணம் –வழிகாட்டியோ –
வேதாந்தாஸ் -மறை முடிகள்
தத்வ சிந்தாம் -பரம் பொருளைப் பற்றிய ஆராய்ச்சியை
முரபிதுரசி-முரபித் உரசி -இறைவனது மார்பகத்தில்
யத் பாத சிஹ்நைஸ் -எவளுடைய திருவடிகளின் அடையாளங்களினாலே –
தரந்தி-முடிகின்றனவோ
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைச்வரூப் யாநு பாவா-
போக உபோத்காத கேளீ சுளுகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா –
அனுபவத்தின் தொடக்கத்தில் விளையாட்டாக சிறாங்கை யளவாகச் செய்யப்பட இறைவனது விஸ்வரூபத்
தன்மையின் மகிமையை எவள் உடையவளோ –
ஸா -அத்தகைய
நச்-நம்மை
ச்ரீ -ஸ்ரீ -பிராட்டி
ஆஸ்த்ருணீதாம் -மறைத்திடுக
மம்ருதலஹரிதீ லங்கநீயை -அமுத அலை என்னும் அறிவினால் அறியத் தக்க –
அபாங்கை-கடைக் கண் நோக்கங்களாலே-
தத் இங்கித பாரதீநோ விதத்தேகிலம் -ஸ்ரீ கூரத் ஆழ்வான்
புருவக் குறிப்பாலே ஏற்றத் தாழ்வுகள் –
கருமத்துக்கு தகுந்தபடி பிராட்டி குறிப்பால் உணர்த்துவதால் நைர்க்ருண்யங்கள் இல்லை –
ப்ரூபங்கா பிரமாணம் –
வேத பிரமாணம் போலே -கண் இழந்தேன் தனம் இழந்தேன் -போலே
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரசதா ஸ்யாத்-விளையாட்டு இவள் வசப்பட்டு செய்யா விடில் இன்பம் பயக்காதே
இவள் கல்வியால் கீழ் சொன்ன படி மரம் போலே மெய்ம் மறந்து இருப்பானே –
தூண்டியேயாக வேண்டும்
அவளும் தனக்கு ஈடுபட்ட அவனது நிலை கண்டு மிகவும் ஊக்கம் கொண்டனள் –
தன்னைக் குறித்து தோற்ற தோல்வியாகவே சேவலின் மிடுக்கும் இதன் மேலே வந்தேறும் இறே
முரன் அசுரனை நிரசித்தவன் முராரி -உபேஷையாய் இருந்து விடுவாள் அழிக்கும் பொழுது –
நம ஸ்ரீ ரங்க நாயக்யை யத்ப்ரூ விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோன்நத மிதஞ்ஜகத் -ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் –
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி-
திருவில்லாத் தேவரை தேவர் என்ன மாட்டார்களே –
லஷ்மி பத லாஷைக லஷணம்-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –
பூர்ணம் தேஜஸ் ஸ்புரதி பவதீ பாத லாஷார சாங்கம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் –
சிஹ்நை -செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் –
ஸ்ரீ யபதித்வ லிங்கத்தாலும் நாராயண சப்தத்தாலும் இறே ஸ்ருதிகளில்
பரதத்வ விசேஷ நிர்ணயம் பண்ணப்பட்டது –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் –பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ –பிராட்டி மகிழ்ந்து மார்பகத்தே
நடமாடியதை முரபித் உரசி யத்பாத சிஹ்நை-
போகோ போத்காத கேளீ சுளுகித பகவத் வைச்வரூப் யாநு பாவா-
அவன் விஸ்வரூபம் எடுத்து அனுபவிக்கப் புக்காலும் போதாது இவளுடைய போக்யதை –
போகம் -ஸ்வரூப ரூப குணங்களை நேரே சாஷாத்காரம் செய்தல் –
அநேக பாஹூ தர வக்த்ர நேத்ரம் -தச சத பாணி பாதவத நாஷி முகைரநிலை –
தம் திறத்தில் நித்ய முக்தர்கள் படும் பாட்டை பிராட்டி திறத்தில் இவன் படுவதே
ஸ்வ வைஸ்வ ரூப்யேண சதா அநுபூத யாப்ய பூர்வவத் விஸ்மய மாததா நயா-ஆளவந்தார் –
ஸா நச் ச்ரீ ராஸ்த்ருணீதா மம்ருதலஹரிதீ லங்கநீயை ரபாங்கை-
லங்க நீயை-அடையத்தக்கவை -கத்யர்த்தா புத்யர்த்தா –
அமுத அலையில் புத்தி செல்லாதபடி அதனிலும் இனிய கடாஷங்கள்
இறைவனை ஏவிக் காரியம் கொள்ளும் வால்லப்யமும்-நிரூபகத்வமும் போக்யதையில் சிறப்பும் கூறப்பட்டுள்ளன –
மஹீஷீ பாவம்
ஏற்புடைமை
ஏவிற்றுச் செய்யும்படி அவனுக்கு பிடித்தமாய் இருத்தல்
மார்பை விட்டு அகலாமை
நிரூபகத்வம்
போக்யதையின் சிறப்புக்கள் போன்றவை பிராட்டியின் ஆதிக்யத்துக்கு ஹேதுக்கள்
அதனால் இவளே புருஷாகாரமாக பற்றத் தக்கவள்-லஷ்மி புருஷகாரத்வே நிர்திஷ்டா பாமர்ஷிபி
மற்ற தேவிமார்களுக்கு இவள் சம்பந்தத்தாலே வந்தது -இயல்பானது அல்லை இவளைப் போலே –
நிற்பனவும் திரிவனவும் ஏற்றத் தாழ்வாய் நிருமித்தான் எவள் புருவ நெறிப்புக்கு ஏற்ப
மற்பகர் தோளவன் மார்பில் எவள் காற்சின்னம் மறை முடியில் பரம் பொருளின் சங்கை தீர்த்த
பற்பல பாரித்து இறைவன் விஸ்வரூபத் துடன் இழியில் பரியாது போகத்தின் முன்
அற்பமதாய்க் கரத்தடக்கும் அவ் வணங்கே அமுதவலைக் கடைக் கணிப்பால் அணைக்க எம்மை –4
பரியாது -வருத்தமின்றி –
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply