அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ
ஆத்மானம் பூஜயன் ராம ப்ருச்சச்ய ஸமான் ஸூ ஹ்ருத்தம் -யுத்த -17-33-
அஜ்ஞாதம் கிஞ்சித் நாஸ்தி-தெரியாதது சிறிதும் இல்லை
தே -உமக்கு
த்ரிஷூ லோகேஷூ-மூன்று வகைச் சேதனர்கள் விஷயத்தில்
ராகவ -ரகு குல திலக
ஆத்மானம் பூஜயன் ரா -யுத்த -17-33
அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ
ஆத்மானம் பூஜயன்-உம்மைப் பெரும்மை படுத்திக் கொண்ட
ராம ப்ருச்சச்ய ஸமான் ஸூ ஹ்ருத்தம் -நட்பினால் எங்களைக் கேட்கிறீர்-
அவதாரிகை –
தந்தாமுடைய மதத்தை சொல்லுவார்களாக நினைத்து
கீலில் சோபசாரம் -என்று ப்ரஸ்துதமான பிரகாரத்தைச் சொல்லுகிறார்கள் மேல் -இரண்டு ஸ்லோகத்தாலே
அதில் முதல் ஸ்லோகத்தில் –
தேவர் சர்வஜ்ஞராய் இருக்கச் செய்தே -எங்களைக் கேட்கிறது ஆ ஸ்ரீ தர் சொல்லிற்று அல்லது செய்து அருளார் என்கிற ஏற்றம் தேவர்க்கு உண்டாகைக்கு இ றே-என்கிறது –
அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ-
அநு கூல பிரதிகூல மத்யஸ்த ரூப கோடி த்ரயமாய் இருந்துள்ள சேதனர் நிமித்தமாக
ஸ்வ தஸ் சர்வஜ்ஞராய் இருந்துள்ள தேவர்க்கு
அவர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் என்ன –
உத்கர்ஷ அபகர்ஷ விபாகம் என்ன –
த்யாஜ்ய உபாதேய விபாகம் என்ன –
இவற்றில் அஜ்ஞாதமாய் இருப்பது ஓன்று இல்லை –
அஜ்ஞாதாம் –நாஸ்தி -என்று வ்யதிரேகத்தி-
ராகவ-
இந்த சர்வ ஜ்ஞயம் என்ன -வஷ்யமான ஸ்வ பாவங்கள் என்ன இவை எல்லாம் ரகு குலோத்பவத்தாலே வந்தது என்கை-
யசஸ்வீ ஜ்ஞான சம்பன்ன -என்னக் கடவது இ றே –
ஆத்மானம் பூஜயன் ராம ப்ருச்சச்ய ஸமான் ஸூ ஹ்ருத்தம்
ஆ ஸ்ரீ தற்கு நன்மையே என்னும் திரு உள்ளத்தை உடையீர் என்கிற இம் மஹா குணத்தைப் பிரகாசிப்பைக்காக ஆரம்பித்தீர்
இத்தாலும் ஆ ஸ்ரீ தர் சொன்னபடி அல்லது செய்யார் என்று தேவர்க்கு வந்த ஏற்றத்தை லோகம் கொண்டாடுகைக்காக –
சர்வஜ்ஞரான தேவரீர் ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத திர்யக் ஜாதியான எங்களைக் கேட்டு அருளுகிறது இத்தனை –
——————————————————————————————————————————————————————
த்வம் ஹி சத்யவ்ரத ஸூரோ தார்மிகோ த்ருட விக்ரம
பரீஷ்யகாரீ ஸ்ம்ருதி மான் நிஸ் ருஷ்டாத்மா ஸூ ஹ்ருத் ஸூ -யுத்த -17-34-
த்வம் ஹி -நீர் தான்
சத்யவ்ரத -சத்ய சங்கல்ப்பத்தை யுடையவர்
ஸூரோ -பராக்ரமத்தை யுடையவர்
தார்மிகோ -தர்மிஷ்டர்
த்ருட விக்ரம-உறுதியான செயலை யுடையவர்
பரீஷ்யகாரீ -எதையும் ஆலோசித்துச் செய்பவர்
ஸ்ம்ருதி மான் -முன்பு செய்தவற்றை நினைவு கொள்ளுமவர்
நிஸ் ருஷ்டாத்மா ஸூ ஹ்ருத் ஸூ -நண்பர்கள் இடத்திலே தன்னையே ஒப்படைத்தவராகவும் இருப்பவர்-
அவதாரிகை –
ஆ ஸ்ரீதர் அர்த்தமாக செய்ய வேண்டுமாவை ஒருவருக்கு ஒருத்தரைக் கேட்டுச் செய்ய வேண்டாதே இருக்க –
இவர்கள் பக்கல் இப்படி பர ந்யாசம் பண்ணி வைத்தீர் –
இது என்ன ஸ்வ பாவம் -என்று
தங்கள் ப்ரீதி அதிசயத்தாலே சொல்லுகிறார்கள் -த்வம் ஹி -இத்யாதி நா –
த்வம்-
வஹ்யமான குண ஆஸ்ரயமான தர்மியுடைய வைலஷண்யம் சொல்லுகிறது –
பகவத் வ்யதிரிக்தர்க்கு குணாதீனம் இ றே ஸ்வரூப உத்கர்ஷம் –
இவ்விடத்திலே குண உத்கர்ஷம் ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி இருக்கும் -என்கை –
குணா யத்தம் லோகே -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -11 என்றார் இ றே ஆழ்வான் –
ஹி –
கீழ் உக்தமான ஸூ ஹ்ருத்தா பிரதி பாதன ஸூசகம்
சத்யவ்ரத –
அமோக சங்கல்ப -அதாகிறது -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம-என்ற ஆ ஸ்ரீ தா சம்ரஷண சங்கல்பம் அமோகமாய் இருக்காய் –
ஸூரோ –
அந்த ரஷணத்துக்கு விக்னசதம் வந்தால் அவற்றை அழியச் செய்யும் ஹிம்ச சாமர்த்தியம் ஸூ ரத்வம்
தார்மிகோ –
அது தான் செவ்வைப் பூசலாய் இருக்கை –
அதவா –
அந்த ரஷண தர்மம் ஸ்வ பிரயோஜனத்துக்காய் இருக்கை அன்றிக்கே தத் ரஷண ஏக பலமாய் இருக்கும் என்றுமாம் –
த்ருட விக்ரம-
த்ருட வியாபாரம் செய்தது ஒன்றை ஒருத்தராலும் அழிக்க ஒண்ணாமை-
அதாகிறது -ஆ ஸ்ரீ தார் தங்களாலும் பிறராலும் அழிக்க ஒண்ணாது இருக்கை
பரீஷ்யகாரீ-
ஆ ஸ்ரீ தர் அர்த்தமாக பராக்ரமிக்கும் இடத்தில் பார்த்துச் செய்கை –
அதாகிறது -பிறரால் வரும் விரோதத்தை விக்ரமத்தால் அழிப்போம்-
அவன் தன்னால் வரும் விரோதத்தைப் பொறியாலே அழிப்போம் என்று பார்த்துச் செய்கை –
தாஸ்யம் ஐஸ்வர்ய வாதே ந-பார-சாந்தி -81-5-என்றும் –
யஸ்யா ம்ருதா மலயசஸ் ஸ்ரவணாவகா ஹ -பார்வதம் -3-16-6- என்றும் சொல்லக் கடவது இ றே
ஸ்ம்ருதி மான் –
முன்பு பிறந்த ஜ்ஞானம் அவசரே ஸ்ம்ருதி விஷயமாகை-
அதாகிறது ஆ ஸ்ரீ தர் புத்த்யா பண்ணும் அபராதத்தைப் பொறுக்கைக்கு அடி -இவன் அடியில் பண்ணின ஆபி முக்யத்தை நினைத்து இருக்கை –
நிஸ் ருஷ்டாத்மா ஸூ ஹ்ருத் ஸூ –
ஆ ஸ்ரீ தர் பக்கல் இப்படி சர்வ பிரகார ரஷகராய் இருக்கச் செய்தே
தேவர் கார்யம் ஆ ஸ்ரீ தர் இட்ட வழக்காம்படி அவர் பக்கலிலே சமர்ப்பித்து வைத்தீர்
கீழ் உள்ள குணங்கள் உண்டு அறுக்கிலும் இம் மஹா குணத்தை ஒருத்தராலும் யுண்டு அறுக்கப் போமோ -என்று கருத்து
ச சப்தத்தாலே அநு க்தமான குணங்களை சமுச்சயிக்கிறது –
———————————————————————————————————————————————————————————
தஸ்மாத் ஏகைஸஸ் தாவத் பருவந்து சசிவாஸ் தவ
ஹேதுதோ மதி சம்பன்னாஸ் சமர்த்தாஸ் ஸ புனஸ் ததா -யுத்த -17-35-
தஸ்மாத்-ஆகையால்
ஏகைஸஸ் தாவத் பருவந்து சசிவாஸ் தவ -ஒவ்வொருவராய் உம்முடைய மந்த்ரிகள் அனைவரும் சொல்லட்டும்
ஹேதுதோ -காரணம் காட்டி
மதி சம்பன்னாஸ்-புத்தி மான்களாயும்
சமர்த்தாஸ் ஸ-வாக் வன்மை யுடையவர்களாயும்
புனஸ் ததா -அப்படியே-
அவதாரிகை –
இப்படி தேவர் கார்யத்தை ஆ ஸ்ரீ தர் இட்ட வழக்காக்கி வைத்தீர் எனபது யாதொன்று
அத்தாலே தேவருடைய சசிவராய் இருந்துள்ள அங்கத பிரமுகர் நால்வரும் தனித்தனியே தங்கள் கருத்துக்களை விண்ணப்பம் செய்யக் கடவர்கள் –
இது எங்களுக்கு எல்லாம் கருத்தாகக் கடவது என்று மேல் விண்ணப்பம் செய்யப் புகுகிற நாலு முதலிகளையும் ஒளிந்தார் அடங்கச் சொல்லுகிறார்கள் –
தஸ்மாத் –
தேவரை ஆ ஸ்ரீத பர தந்த்ரராக்கி அடியோங்கள் சொன்ன படி செய்யக் கடவதாக எங்களை வைத்த வைப்பாலே-
ஏகைஸஸ் –
தனித்தனியே தந்தாமுடைய கருத்துக்களை விண்ணப்பம் செய்யக் கடவர்கள்
தாவத் பருவந்து –
முந்துற முன்னம் எல்லாரும் விண்ணப்பம் செய்யக் கடவர்கள் –
கார்ய வேளையிலே திரு உள்ளமானபடி செய்து அருளுகிறது -என்கை –
சசிவாஸ் தவ -தவ சசிவா –
ஆ ஸ்ரீத ரஷண மஹாத் வரத்திலே தீஷிதராய் இருக்கிற தேவர்க்கு ஆர்த்விஜ்யம் பண்ணுகிறவர்கள் –
இப்படி தாங்கள் சொல்லுகிறது பெருமாள் சரணாகத ரஷணத்துக்கு சஹகாரியாக தங்களை நினைத்து இருக்கையாலே
ஹேதுத-
பிரதி பன்னங்கள் என்று உபேஷிக்க ஒண்ணாத படி சஹேதுகமாக –
மதி சம்பன்னாஸ் –
கார்ய நிர்ணயத்தில் தனித் தனியே நிபுணர் என்கை
சமர்த்தாஸ் ஸ புனஸ் ததா –
யாதொருபடி நிர்ணயித்தார்கள்
அப்படியே பின்பு பெருமாள் திரு உள்ளத்திலே படும்படி பிரதிபாதன சமர்த்தராய் இருக்குமவர்கள்
இப்படி முதலிகள் இவர்கள் நால்வர் வார்த்தையையும் பெருமாள் கௌரவிக்கைக்காக பிரசம்சித்து விண்ணப்பம் செய்தார்கள் –
—————————————————————————————————————————————————————————-
இத்யுக்தே ராகவாய அத மதிமாநங்கதோ அக்ரத
விபீஷண பரீஷார்த்தம் உவாச வசனம் ஹரி –யுத்த -17-36-
இத்யுக்தே -இவ்வண்ணம் சொல்லப் பட்ட அளவிலே
ராகவாய அத -ஸ்ரீ ராம பிரானுக்காக -அதற்குப் பின்
மதிமாநங்கதோ அக்ரத-அக்ரத மதிமான் அங்கத -முதலில் புத்திமானான அங்கதன் என்னும்
ஹரி -வானரன்
விபீஷண பரீஷார்த்தம்-விபீஷணனை சோதிப்பதற்காக
உவாச வசனம் -இவ்வார்த்தை சொன்னார் –
அவதாரிகை –
அநந்தரம்-சர்வ பிரதானராய் -யுவராஜாவாய் -இருந்துள்ள அங்கதப்பெருமாள் தம்முடைய மதத்தை உபன்யசிக்கிறார் -இத்யுக்தே இத்யாதியாலே-
இத்யுக்தே –
எல்லாருக்கும் இவர்கள் நால்வருமே கடவராக முதலிகள் விண்ணப்பம் செய்துள்ள இடத்தில்
ராகவாய உவாச வசனம் ஹரி —
ரகு குலத்தார் கார்யம் ஒரு குரங்கினுடைய வார்த்தை கொண்டு ஈடாக்கும் படி யாவதே -என்று
பெருமாளுடைய ஆ ஸ்ரீத பார தந்த்ர்யத்தை ரிஷி கொண்டாடுகிறான் –
அத அக்ரத –
என்கிறது பரியட்ட முறையாலே மஹா ராஜர்க்கு அநந்தரம் அவராகையாலும்
முதலிகள் எல்லார்க்கும் ப்ரதானர் ஆகையாலும்
மதிமாநங்கதோ –
பரியட்ட முறை ஒழிய கார்ய நிர்ணயத்திற்கு பரிகரமான ஜ்ஞானாதிக் யத்தை யுடைய அங்கதப் பெருமாள் –
விபீஷண பரீஷார்த்தம் –
வத்ய தாம் -என்றார் மஹா ராஜர்
ந த்யஜேயம்-என்னுமளவாய் இருந்தது பெருமாள் திரு உள்ளம்
இவை இரண்டும் ஆராயாமல் செய்கை யுக்தம் அல்ல என்று பரீஷார்த்தமான வார்த்தையைச் சொல்லுகிறார் –
————————————————————————————————————————————————————————————-
சத்ரோ சகாசாத் சம்ப்ராப்த சர்வதா சங்க்ய ஏவ ஹி
விஸ்வாச யோக்ய சஹஸா ந கர்தவ்யோ விபீஷண -யுத்த -17-37-
சத்ரோ சகாசாத்-எதிரியிடத்தில் இருந்து
சம்ப்ராப்த-வந்தவன்
சர்வதா -எல்லா விதத்திலும்
சங்க்ய ஏவ ஹி -ஐயமுறத் தக்கவனே அன்றோ –
விஸ்வாச யோக்ய -நம்பத் தகுந்தவனாக
சஹஸா ந கர்தவ்யோ -விரைவில் செய்யத் தகுந்தவன் அல்லன்
விபீஷண -விபீஷணன் –
அவதாரிகை –
சத்ரு சகாசத்தின் நின்றும் வந்த விபீஷணன்
சஹஸா விஸ்வாச யோக்யன் அல்லன் -சங்க்யன்-என்கிறார் -சத்ரோ -இத்யாதியாலே-
சத்ரோ சகாசாத் சம்ப்ராப்த –
த்வேஷாதி ரேகத்தாலே நாம க்ரஹணம் பண்ணாதே சத்ரோ -என்கிறார் –
பகவத் விமுகரை சத்ருக்கள் என்று இ றே ததீயர் நினைத்து இருப்பது
இது இ றே சேஷ சேஷிகளுக்கு அந்யோந்யம் பரிவு இருக்கும் படி –
அல்லது ஸ்வ சத்ருக்கள் என்று சிலரை மதியார்கள் இ றே –
சகாசாத் சம்ப்ராப்த -ஹி –
அவன் சத்ருவாகில் இவனுக்கு என்-என்ன
அவன் ஒலக்கத்தின் நின்று வந்தவன் என்னும் இடம் தேவர்க்கும் சம்ப்ரதிபன்னம் அன்றோ
ஆனபின்பு அவன் கார்யத்துக்கு வந்தான் ஆகக் கூடாதோ –
சர்வதா சங்க்ய ஏவ ஹி –
ஆகையால் சர்வ பிரகாரத்தாலும் சங்க் யனே-
வத்யன்-என்னாது ஒழிந்தது பெருமாள் திரு உள்ளத்திலே இவன் மேல் உண்டான தண்ணளி யாலே
அவன் சஹவாசத்தில் நின்றும் வந்தபடியாலும் –
அவன் தம்பி என்று தானே சொல்லுகையாலும்
ராஜச ஜன்மம் ஆனபடியாலும்
விஸ்வசிக்கைக்கு ஒரு ஹேது இல்லை –
விஸ்வாச யோக்ய சஹஸா ந கர்தவ்யோ-
சரணம் என்று வந்தவன் விஸ்வாச யோக்யன் அல்லனோ என்று பெருமாள் அபிப்ராயமாக
அப்படி தன்னாலும் சடக்கென விஸ்வசிக்கைக்கு யோக்யன் அல்லன் –
அது எத்தாலே என்ன-
விபீஷண –
பர ஹிம்சையாலே சர்வ லோக பயங்கரனானவன் பண்ணின சத்ரு சரணாகதி யாகையாலே –
நம்மை நலிகைக்கு இந்த கோஷ்டியிலே விலைச் செல்லும் வார்த்தையை சொல்லி வந்தானாக சம்பாவனை யுண்டு –
ஆகையாலே சஹஸா விஸ்வசிக்க அடுக்காது
சங்கிக்க வடுக்கும் -என்கை –
—————————————————————————————————————————————————————————
சாதயித்வா ஆத்மபாவம் ஹி சரந்தி சட புத்தய
ப்ரஹரந்தி ஸ ரந்ரேஷூ ஸோ அனர்த்தஸ் தத்க்ருதோ பவேத் -யுத்த -17-38-
சாதயித்வா -மறைத்து வைத்து
ஆத்மபாவம்-தம்முடைய கருத்தை
ஹி சரந்தி -நல்லோர் போலே நடையாடுகிறார்கள் அன்றோ
சட புத்தய-துஷ்ட புத்தியை யுடைய அரக்கர்
ப்ரஹரந்தி ஸ-நலியவும் செய்கின்றார்கள்
ரந்ரேஷூ -இடம் கிடைத்த பொது
ஸோ அனர்த்தஸ்-அந்த தீங்கு
தத்க்ருதோ பவேத் -நம்பிக்கை வைத்தவன் தானே விளைத்துக் கொண்டதாக முடியும் –
அவதாரிகை –
ஆர்த்தி தோற்ற வந்து சரணம் புகுந்தவனை விஸ்வசிக்க வேண்டாவோ -என்று ராம அபிப்ராயமாக
சரணாகதன் ஆனாலும் சஹஸா விஸ்வாச யோக்யன் அல்லன் என்னும் இடத்தை சஹேதுகமாக பிரதிபாதித்து
விஸ்வசித்தால் வரும் அனர்த்தத்தை சொல்லுகிறது –
சாதயித்வா ஆத்மபாவம் ஹி சரந்தி சட புத்தய-
சட புத்தய
துஷ்ட புத்தய -தாமச பிரகிருதிகள் ஆகையாலே ராஷசர் துஷ்ட புத்திகளாய் இ றே இருப்பது –
ஆத்மபாவம் சாதயித்வா –
நலியக் கடவதாக நிச்சயித்து வருகிற தன் நினைவை மறைத்து
சரந்தி –
சாதுவத் சரந்தி
தங்களுடைய பாவ தோஷத்துக்கு எதிர்த் தட்டான அநு கூல வேஷத்தைக் கொண்டு வ்யவஹரியா நிற்பர்கள் –
பாதகரான ராஷசர் அநு கூல வேஷத்தோடு சஞ்சரிப்பர் என்னும் இடம்
மாரீசன் பக்கலிலும் ராவணன் பக்கலிலும் நமக்கு அநு பூதம் அன்றோ
இவ்வளவால் சஹஸா விஸ்வாச யோக்யன் அல்லன் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
ஸ்வ தோஷத்தை மறைத்து அநு கூல வேஷத்தோடு தான் வந்தால் அவன் நம்மைச் செய்வது என் -என்ன
ப்ரஹரந்தி ஸ ரந்ரேஷூ-
இடங்களிலே நலியா நிற்பர்கள் -அதாவது -தனி இருப்பு -அந்ய பரதை
தன்னோடு ஒரு நீராக கலக்கை-இவை இ றே
ஸோ அனர்த்தஸ் தத்க்ருதோ பவேத் –
அனர்த்தம்
சஹஸா விஸ்வசித்தவனுக்கு பலமாகக் கடவது –
————————————————————————————————————————————————————————
அர்த்தா நர்த்தௌ விநிஸ்சித்ய வ்யவசாயம் பஜேத ஹி
குணத சங்க்ரஹம் குர்யாத் தோஷ தஸ்து விசர்ஜயேத்–யுத்த -17-39-
அர்த்தா நர்த்தௌ-நன்மை தீமைகளை
விநிஸ்சித்ய -நன்றாக முடிவு கட்டி
வ்யவசாயம் -வந்து அடைந்தவனைக் கொள்ளுவது விடுவது விஷயமான மன வுறுதியை
பஜேத ஹி -மனிதன் அடைய வேண்டும் அன்றோ
குணத -அவனிடம் குணம் இருந்தால்
சங்க்ரஹம் குர்யாத் -ஏற்றுக் கொள்ள வேண்டியது
தோஷ தஸ்து விசர்ஜயேத்-தோஷம் இருந்ததாகில் கை விட வேண்டியது-
அவதாரிகை-
இவனுடைய த்யாக உபாதானத்துக்கு உறுப்பான பரீஷா பிரகாரத்தைச் சொல்லுகிறது-
அர்த்தா நர்த்தௌ விநிஸ்சித்ய –
இவனைப் பரிக்ரஹித்து ஒரு கார்யத்திலே நியோகித்தால் இவனால் வரும் பிரயோஜனங்களை நிச்சயித்து –
வ்யவசாயம் பஜேத ஹி –
த்யாக பரிக்ரஹ வ்யவசாயத்தைப் பண்ணுவது –
இப்படி பரீஷியாது சஹ சைவ த்யாக பரிக்ரகாம் கார்யம் அல்ல
ஹி
இது நீதி சாஸ்திர பிரசித்தம் அன்றோ
நீர் அறியாதது ஓன்று அன்றே –
குணத சங்க்ரஹம் குர்யாத் தோஷ தஸ்து விசர்ஜயேத்–
நம் கார்யம் முற்றுச் செய்யும் தனையும் குணவானால் பரிக்ரஹிப்பது –
நம் கார்யத்தைக் கெடுக்கும் தனையும் குண ஹீநன் ஆகில் கடுக விடுவது –
குணம் கண்டு வைத்தே பரிக்ரஹியாது ஒழிந்தால் இவனால் கொள்ளும் கார்யம் இழக்க வரும் இ றே
தோஷம் கண்டு விட்டிலன் ஆகில் ஸ்வ நாசத்தோடே தலைக் கட்டும் இ றே
ஆகையாலே விசர்ஜயேத்-என்கிறது-
———————————————————————————————————————————————————————
யதி தோஷோ மஹாம்ஸ் தஸ்மின் த்யஜ்யதாம விசங்கித
குணான் வாபி பஹூன் ஜ்ஞாத்வா சங்க்ரஹ க்ரியதாம் ந்ருப -யுத்த -17-40-
யதி தோஷோ மஹாம்ஸ் -பெரிதான குற்றம் இருந்தால்
தஸ்மின் -அவனிடத்து
த்யஜ்யதாம விசங்கித-ஐயம் இல்லாமல் கை விடப் படட்டும்
குணான் வாபி பஹூன்-பல நன்மையாவது
ஜ்ஞாத்வா -அவனிடம் அறிந்து
சங்க்ரஹ க்ரியதாம் -அவனை ஏற்றுக் கொள்வதைச் செய்ய வேண்டும்
ந்ருப -அரசனே-
அவதாரிகை –
கட்டடங்க குணவானாய் இருத்தல்
துஷ்டனே இருத்தல்
செய்வார் ஒருத்தர் இல்லையாக்கையாலே
த்யாக பரிக்ரஹங்களுக்கு இவை ஹேதுவாக மாட்டாது என்ன
தத்தத் ப்ராசுர்யங்க ளைக் கொண்டு த்யாக உபாதானங்களைப் பண்ணைத் தட்டில்லை -என்கிறார்-
ந்ருப -நாடாள இட்டுப் பிறந்த தேவர்க்கு இந்த நீதி நாங்கள் உபதேசிக்க வேணுமோ
தேவர்க்கு சம்ப்ரதிபன்னம் அன்றோ –
தஸ்மின் தோஷோ மகான் யதி விசங்கிதஸ் த்யஜ்யதாம –
தோஷம் மஹானாய் இருக்குமாகில் அல்பமான குணம் அத்தாலே அபி பூதம் ஆகையாலே அது ஜீவிக்க மாட்டாது
ஆகையாலே அந்த குண லேசம் கொண்டு ச்வீகாரம் கர்த்தவ்யம் அன்று
கண்ணற்று விடப்படும் –
குணான் வாபி பஹூன் ஜ்ஞாத்வா சங்க்ரஹ க்ரியதாம் –
அப்படியே குணம் குவாலாய் இருக்குமாகில் அத்தாலே அபி பூதமான அல்ப தோஷம் தலை எடுக்க மாட்டாமையாலே
அந்த தோஷத்தைக் கொண்டு கைவிடக் கடவோம் அல்லோம் ச்வீகாரம் கர்த்தவ்யம் –
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply