யே து ராமஸ்ய ஸூஹ்ருதஸ் சர்வே தே மூட சேதச
சோக பாரேண சாக்ராந்தாச் சயனம் ந ஐ ஹூஸ் ததா –அயோத்யா -41-20-
யே து -எவர்களோ
ராமஸ்ய -ராமனுக்கு
ஸூ ஹ்ருதஸ் -தோழர்கள்
சர்வே தே-அனைவரும்
மூட சேதச-அறிவற்ற மனத்தை யுடையவர்களுமாய்
சோக பாரேண-துன்பப் பளுவினால்
சாக்ராந்தாச் -ஆக்ராந்தா -அமுக்கப் பட்டவர்களுமாய்
சயனம் ந ஐ ஹூஸ் ததா -அப்போதே விட்டார்கள் இல்லை –
யே து –
சக்ரவர்த்தி போக்கை அனுமதி பண்ணினான் –
ஸ்ரீ கௌசலையார் மங்களா சாசனம் பண்ணி விட்டாள்-
அவ்வளவு அன்றிக்கே பத்தொன்பதாம் பாஷையாய் ஆயிற்று தோழன்மார் படி –
ராமஸ்ய ஸூஹ்ருதஸ் –
தாய் தகப்பனுக்கு மறைத்தவையும் வெளியிடும்படி உட்புக்கவர்கள் இ றே தோழன்மார் ஆகிறார்
தங்களைப் பேணாதே அவனுக்கே நன்மையை எண்ணிப் போந்தவர்கள் படுகுலைப் பட்டவர்கள் -என்கிறது –
சர்வே தே –
ஒரு விபூதியாக சாம்யா பத்தி பெற்று இருக்குமா போலே –
மூட சேதச-
ஸூ ஹ்ருத்துக்கள் ஆகில் எழுந்து இருந்து காலைக் கட்டி மீளாது ஒழிவான் என் என்னில்
அறிவி கலந்தால் செய்யுமத்தை நெஞ்சில் வெளிச் செறிப்பில்லாத போதும் செய்யப் போகாது இ றே –
அறிவு கெடுகைக்கு ஹேது என் என்னில்
சோக பாரேண சாக்ராந்தாச் –
மலை அமுக்கினால் போலே சோகம் அமுக்க அமுக்கா நிற்கச் செய்வது என் –
சயனம் ந ஐ ஹூஸ் ததா-
படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்கள் ஆகில் மீட்டுக் கொண்டு புகுந்த வாசி அன்றோ
தாம்தாமே படிக்கையில் கிடந்து போந்தவர்கள் அன்றே-
——————————————————————————————————————————————————————————–
ராமம் மே அநு கதா த்ருஷ்டி ரத்யாபி ந நிவர்த்ததே
ந த்வா பஸ்யாமி கௌசல்யே ஸாது மா பாணிநா ஸ்ப்ருஸ-அயோத்யா -42-34-
அவதாரிகை –
முடியானே யில் கரணங்கள் போலே சக்ரவர்த்தியினுடைய கரணங்களும் பெருமாள் பக்கல் தனித் தனியே அனந்யார்ஹ சேஷமான படியைச் சொல்லுகிறது –
கடல் கொண்ட வஸ்து மீளப் புகுகிறதோ -என்கிறான்
சமுத்திர இவ காம்பீர்யே -பால -1-17-என்றும்
குணா நாமா கரோ மஹான்-ஸ்தோத்ர ரத்னம் -18-அமுதக் கடல் -என்றும்
தம்மைக் கடலாகச் சொல்லக் கடவது இ றே-
1-ராமம் மே அநு கதா த்ருஷ்டி –
ராமோ ராமயதாம் வர -அயோத்யா -61-1-என்கிறபடியே சேதன அசேதன விபாகம் அறத் துவக்குகிற அவர் மினுக்கிக் கொடு போக்கியது குற்றமோ –
2-ராமம் மே அநு கதா த்ருஷ்டி-
சஷூர் இந்த்ரியம் தான் ரூபவான்களை க்ரஹிக்குமது ஒழிய ரூபவான்கள் சஷூஸ் சை க்ரஹித்துக் கொண்டு போம்படியாவதே –
ரூபரூபி ரூபைகார்த்த சமவேத க்ராஹியாய் இ ரே சஷூஸ் இருப்பது-
1- அநுகதா –
பதார்த்த தர்சனத்துக்கே கண்ட கரணம் பாதக்ருத்யமான கமனத்தை அனுஷ்டிப்பதே
2- ராமம் மே அநுகதா த்ருஷ்டி-
யேன யேன தாத்தா கச்சதி மூல சம்ஹிதை -என்றும்
காம ரூப்ய நு சஞ்சரன் -தைத் ப்ரு-10-5- என்றும்
அவ்வஸ்துவைப் பின் செல்லுகை ஒரு சேதன க்ருத்யமாய் இருக்க அசேதனமான இந்த்ரியம் அனுஷ்டிப்பதே –
3- ராமம் மே அநு கதா –
அது தான்செய்யும் இடத்தில் ஒரு தேச விசேஷத்திலே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் பக்கல் பண்ணும் அநு தாவநத்தை
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -என்கிறபடியே இஸ் சம்சாரத்திலே ராம விஷயத்திலே பண்ணப் பெறுவதே –
4-த்ருஷ்டி ராமம் அநுகதா –
சஷூர் தேவா நா முத மர்த்யா நாம் -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்றும்
ஜகத் பிரதானமான கண் முன்னே போகத் துடங்கின வாறே
நீக்கி நின்ற கண்ணும் அதின் பின்னே போகத் துடங்கிற்று –
5- த்ருஷ்டி-
த்ருசில் ப்ரேஷணே -என்கிற தாத்வர்த்தத்தின் படியே சார அசார விவேகம் பண்ணி விசேஷ க்ரஹண சக்தமாகை இ றே அதற்க்கு அடி என்கிறான்
6-த்ருஷ்டி –
நமக்கப் பட நன்மை தீமைகளை அறிவிக்குமது தனக்கு அறியாது இராதிரே
7- மே த்ருஷ்டி
எனக்கு சேஷமாய் வைத்ததன்றோ தன கார்யம் செய்கிறது
சேஷம் ஆவார்க்குப் பரகத அதிசயா தானம் பண்ண வேண்டாவோ
8- மே த்ருஷ்டி
அழகியதாய் நெடும் காலம் பழகிப் போந்தோம் –
9- மே த்ருஷ்டீ ராமம் அநுகதா –
சிரபரிசிதனான நான் இருக்க அங்கெ இதொரு கண்ணின் நாட்டம் இருந்த படி ஏன்
10-மே த்ருஷ்டி
இது தான் ஸ்வ தந்த்ரமாயிற்று ஆகிலும் இப்படிச் செய்யலாம் இ றே
11- மே த்ருஷ்டி
கைகேயி மந்த்ரைகள் உடைய கண்ணாகில் இப்படிச் செய்யாது இ றே-
நந்தாமி பஸ்யன் நபி தர்சநே–அயோத்யா 12-104-என்று இதுக்கு வழி காட்டிக் கொடுத்தேன் நானே கிடீர் –
12- மே த்ருஷ்டி-
அவ்விஷயத்தில் பிரவணன் ஆனபடியாலே அது தான் விட்டுப் போகச் செய்தேயும்
இவன் அத்தோடு தனக்கு சம்பந்தத்தை எடுத்துக் காட்டுகிறான்
பெற்ற தாயாரை விட்டகன்று -பெரிய திருமொழி -3-7-1-என்று பெண் பிள்ளை தானே விட்டுப் போகச் செய்தே இ றே
திருத் தாயார் -வள்ளி மருங்குல் எந்தன் மடமான் –பெரிய திருமொழி -3-7-1-என்று சம்பந்தம் சொல்லுகிறது
13 மே த்ருஷ்டி ராமம் அநுகதா –
என்னுடைய இந்த்ரியமானால் என் நெஞ்சைப் பின் செல்லும் அத்தனை போக்கி ராமனைப் பின் செல்லுவதே –
அதற்கு உறுவது என் -தனக்கு விஷயம் ஆகிறவளவும் பின் செல்லுகிறது -அனந்தரம் மீளாதோ என்னில்
1-அத்யாபி நிவர்த்ததே —
அதிக்ராந்தேபி ராகவே -அயோத்யா -17-1-என்று- ஸ்வ விஷயத்தைக் கை கழிந்த இப்போதும் மீளக் காண்கிறிலோம்
2-த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே –
இங்கே வரில் இன்னமும் கைகேயி முகத்தில் விழிக்க வேண்டில் செய்வது என் -என்கிற பயத்தாலே இன்னமும் வருகிறது இல்லை
3- மே த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே –
ஒருவனுக்கு ஒரு கிலேசம் பிறந்தால் பரிகர பூதர் ஆனவர்கள் அடைய வந்து உதவக் கடவதே இ றே இருப்பது
ஆயிருக்க நான் ராம விரஹத்தாலே க்லேசிதனான இவ்வளவிலும் வந்து உதவுகிறது இல்லை
4- மே த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே –
நெடும்காலம் பண்ணின வாசனை எல்லாம் கிடக்க
நோ பஜனம் ஸ்மரன் நிதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-என்கிறபடியே
நம்மை மறந்து வராது ஒழிவதே
5- த்ருஷ்டிரத்யாபி ந நிவர்த்ததே
போன பெருமாளை மீட்க மாட்டாதாகிலும் தான் மீளத் தட்டென்ன-
6- ராமம் அநு கதா த்ருஷ்டிர் ந நிவர்த்ததே
ஏதேனுமாக அவ்வஸ்துவை பின் சென்றார்க்கு ந ச புநரா வர்த்ததே –சாந்தோக்யம் -8-15-1-
என்கிறபடியே மீட்சி இல்லையே இருந்தது இ றே-
மீட்சி இல்லை யாவது என் -அது உம்மை விட்டுப் போயிற்றோ மீளுகைக்கு -என்ன –
7-ந த்வா பச்யாமி
கெடுவாய் -தோற்றுகிற கோளம் அன்று காண் சஷூர் இந்த்ரியமாவது –
அதீந்த்ரியம் ஆகையாலே கார்ய கல்ப்யம்
ஆனபின்பு புரோ வர்த்தியான உன்னைக் காணாமையாலே போயிற்று -என்கிறான்
8- ந த்வா பச்யாமி –
உன்னைக் காணாத போதே கண் தோற்றாதேயும்
உன்னைக் கண்ட போதே கண் விழித்தும் போரக் கடவனான நான்
நீ முன்னே நிற்கச் செய்தே காணாது ஒழிகிறேன்
த்வா -என்று
என்னை சந்நிஹிதையாக சொல்லா நிற்கச் செய்தே
ந த்வா பச்யாமி -என்கிறபடி என் என்னில்
9- ந த்வா பச்யாமி –
அபி துச் ரு ணோமி -என்றும்
வச்சா ஜ்ஞாத ஸ்வரேண உக்த-என்றும்
வார்த்தை சொல்லுகையாலே சந்நிஹிதை என்று அநுமித்தேன் இத்தனை –
சஷூர் இந்த்ரியம் குடி போகையாலே பிரத்யஷிக்கப் பெற்றிலேன் -என்கிறான்
10- ந த்வா பச்யாமி –
அவர் முகத்தில் விழிக்கப் பெறாது ஒழிந்தால் அவரைப் பெற்ற உன் முகத்திலே யாகிலும்
விழிக்கலாம் என்று இருந்தேன் -அதுவும் கிடையாது ஒழிவதே –
11- ராமம் மே அநு கதா த்ருஷ்டி ந த்வா பச்யாமி –
பிரதான பரிகரமான கண் தானே அவர் பின்னே போகையாலே அசந்நிஹிதம் ஆயிற்று
சந்நிஹிதையான உன்னையோ காணப் பெறுகிறிலேன்
நான் என்ன செய்வேன் -என்கிறான்
12- ராமம் மே அநு கதா த்ருஷ்டி ந த்வா பச்யாமி –
அண்டர்கோன் அணி யரங்கன் அமுதனைக் கண்ட கண்கள் மற்று யொன்றினைக் காணாவே -என்னுமா போலே
அவ்விஷயத்தில் ஆழம் கால் பட்டது இனி வேறு ஒன்றைக் காண வற்றோ -என்கிறான் –
இப்படி சஷூர் இந்த்ரியம் தனக்கு உதவாமையாலே வாக் இந்த்ரியத்தைக் கொண்டாகிலும்
ஆஸ்வசிப்போம் என்று பார்த்து அவள் பேரைச் சொல்லி ஆறுகிறான்-
1- கௌசல்யே-
ஏஷ மே ஜீவிதஸ் யாந்தோ ராமோ யத்யபிஷிச்யதே -அயோத்யா -9-59- என்று
தென்றல் பகையாய் பெருமாளுடைய அந்வயத்தில் முடியத் தேடுகிற கைகேயியும் ஒருத்தி
கிம் புன ப்ரோஷிதே தாதத்ருவம் மரணமேவ மே -அயோத்யா -19-14- என்று
அவர் வ்யதிரேகத்தில் முடியத் தேடுகிற நீயும் ஒருத்தி –
2- கௌசல்யே-
கௌசல்யா லோக பர்த்தாரம் ஸூஷூவே யம மனஸ்வி நீ -சுந்தர -48-56-என்று
நீ நாடு வாழ மநோ ரதித்து பிள்ளை பெற்ற படியும்
அது எல்லாம் கிடக்க நாடோடு என்னோடு வாசி அறக் கெடும்படி யாவதே
3- கௌசல்யே த்வா ந பச்யாமி
அனர்த்தகரையான கைகேயியை இத்தனை போதும் கண்ட கண்கள்
ஆச்வாசகரையான உன்னைக் காணாது ஒழிவதே-
இவன் இப்படி தன் தளர்த்தி தோற்றக் கௌசல்யே -என்று அழைத்தவாறே
தொங்கின இவனையும் இழக்க வாகாதே புகுகிறோம் என்று
துணுக்கோடே கிட்ட வந்து செய்ய வேண்டுவது என் -என்று கேட்க –
1- சாது மா பாணிநா ஸ்ப்ருஸ-
என்னுடைய கிலேசம் எல்லாம் போம்படி உன்னுடைய ஈரக் கையாலே தடவி ஆஸ்வசிப்பாய்-என்கிறான் –
2- பாணிநா ஸ்ப்ருஸ-
புரோ வர்த்தினியான உன்னைக் காணாமையாலே சஷூர் இந்த்ரியம் குடி போயிற்று என்று அறிந்தோம்
உன்னுடைய வாக் ச்ரவணம் பண்ணின படியாலே ஸ்ரவண இந்த்ரியம் கிடந்தது என்று அறிந்தோம் –
கௌச்ல்யே- என்று நாம கரஹணம் பண்ணின படியால் வாக் இந்த்ரியம் கிடந்தது என்று அறிந்தோம்
கந்த க்ரஹணம் பண்ணாமையாலே அவரை உச்சி மோந்த க்ராண இந்த்ரியம் போயிற்று என்று அறிந்தோம்
ஸ்பர்ச இந்த்ரியம் செய்தபடி -என் என்று அறியலாம் படி என்னை அணைத்துக் காணாய்
கள்ளர் புகுந்து போன அகத்திலே கிடந்ததும் கிடவாததும் ஆராய்வாரைப் போலே –
வந்து போனவர் தாம் வஞ்சக் கள்வன்-திருவாய் -10-7-1-இ றே –
என்னைப் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருனல் எழுந்து அருளிப் போன புனிதர் -பெரிய திருமொழி -7-5-9-என்றார் இ றே-
3-சாது ஸ்ப்ருஸ-நன்றாகத் தொடு-
இத்தனை போதும் கைகேயியோடே ஒரு மிடறாய்-அவனைக் காடேறப் போக விட்டு
இப்போதாக நின்று ஆரோதம் அடியா நின்றான் -வெளி வேஷக் கூத்து -என்று நினைத்து இராதே
அவித்யா ஸ்பர்சத்தாலே இக்கலக்கம் இவனுக்கு வந்தேறி
இப்பாவி என் செய்வான் என்று நெஞ்சு இரக்கத்தோடு தொட வேணும் –
4- பாணி நா ஸ்ப்ருஸ–
அன்றிஅக்னி சாஷிகமாக மங்கள முஹூர்த்தத்திலே ஸ கௌதுகமாகப் பிடித்த அக்கையாலே அந்நினைவோடே தொட வேணும்
5- பாணி நா வாஹி வாத யத காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாம்பி ஸ்ப்ருச
த்வயி மே காத்திர ஸம்ஸ்பர்ச்ச சந்த்ரே திருஷ்டி சமா கம -யுத்தம் -5-6-என்று
அவர் தாமும் இத்தலை யைப் பெறாத போது இப்பாடு பட்டார் இ றே
9-பாணி நா ஸ்ப்ருஸ–
சர்வ அங்கங்களாலும் என்னை அணைத்து வெள்ளக் கேடாகாமே சாத்மிக்கும் படி ஏக அவயவத்தாலே ஸ்பர்சிக்க வேணும்
6- சாது மா பாணி நா ஸ்ப்ருஸ-
பெருமாளை எடுப்பது ஒப்பிப்பதாய் அவருடைய அங்க ஸ்பர்சத்தாலே பரிமளிதமான அக்கையால் தொட வேணும்
7- மா ஸ்ப்ருஸ-
ராம ஸ்பர்சம் பெரில் உஜ்ஜீவித்தும்
பெறாத போது முடியும்படியாய் இருக்கிற என்னை
அவரைப் பெற்ற உன்னுடைய அக்கையாலே அணைக்க வேணும்
பகவத் ஸ்பர்சம் நேர் கொடு நேர் கிடையாது ஒழிந்தால்
அவருடைய சம்பந்தி சம்பந்திகள் உடைய ஸ்பர்சம் கொண்டு உஜ்ஜீவிக்கக் கடவதே இ றே இருப்பது
8- வாஹி வாத யத காந்தா தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாம்பி ஸ்ப்ருச
த்வயி மே காத்திர ஸம்ஸ்பர்ச்ச சந்த்ரே திருஷ்டி சமா கம -யுத்தம் -5-6-என்று
அவர் தாமும் இத்தலை யைப் பெறாத போது இப்பாடு பட்டார் இ றே
9-பாணி நா ஸ்ப்ருஸ-
அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -திருவாய் -10-5-5-என்று
அவ்விஷயத்திலே சொல்லக் கடவ பாசுரத்தை
அது கிடையாமையாலே
ததீய விஷயத்திலே சொல்லுகிறான் இ றே
1-அண்டர் கோன்-
இதர விஷயங்களில் போகாதபடி கால் தாழப் பண்ணுகிற விஷயத்தில் வைலஷ்ண்யம் இருக்கிறபடி –
2-அண்டர் கோன் –
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவா -புருஷ ஸூ கதம் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -திருவாய் -1-1-1-என்றும் சொல்லுகிற படியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கு நிருபாதிக நிர்வாஹகனான மேன்மையை உடையவன்
3- அண்டர் கோன் –
தனித் தனியே முடியுடை வானவராய் -திருவாய் -10-9-8-நிரபேஷமான பெரும் திரளுக்கு நியாமகனானவன்
4- அண்டர் கோன் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ -திருவாய் -8-1-5- என்றும்
பர பராணாம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-என்றும் சொல்லுகிறபடியே
மனுஷ்யாதிகளில் அத்யந்த விலஷணரான நித்ய சூரிகளுக்கு மேலானவன் –
இப்படி நெட்டேணி யிட்டு ஏற வேண்டும் படி மிசை கொம்பாய் -எட்டாக் கொம்பாய் – எட்டா நிலத்திலே இருக்குமோ என்னில்
1- அணியரங்கன் –
அக்குறை தீரத் தன்னைக் கொண்டு வந்து ஸூ லவன் ஆக்கினவன்
2- அணியரங்கன் –
அரங்கத் தரவணைப் பள்ளியான் -பெரியாழ்வார் -4-10-1-என்னுமா போலே
போக்குவரத் தற ஸ்தாவர ப்ரதிஷ்டையாக வந்து சாய்ந்தவன்-
சேஷ்யே புரஸ்தா ச்சாலாயாம் யாவநமே ந ப்ரசீததி-அயோத்யா -111-14 என்று
அவர் பக்கல் நாம் பண்ணுமத்தைத் தாம் இங்கே வந்து வளைப்புக் கிடக்கிறவன்
பயிர்த் தலையிலே குடில் கட்டிக் கிடப்பாரைப் போலே
ஜீவா சம்ரஷண அர்த்தமாக வந்து படுகாடு கிடக்கிறவன் –
3- அணியரங்கன்
அண்டர் கோன்-என்கிற இடத்தில் அவர்களுக்கும் அணுக ஒண்ணாத படி பெரிய மதிப்போடு
தஹ பச என்று நியாமகனாய்
அது நிரூபகமாம்படி இருந்தான்
இவ்விடத்தில் தேசிகரில் தானும் ஒருவனாய்க் கலந்து பரிமாறி
புனலரங்கமூர் என்று போயினாரே -திரு நெடும் -25-என்று அடையாளம் சொல்லிப் போயிற்று –
4- அணியரங்கன் –
அப்ராக்ருதமான தேசத்தை விட்டு பற்ற வேண்டும்படி சம்சாரத்துக்கு ஆபரணமான கோயிலை உகந்தவன்
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் -திருமாலை -14- இ றே-
5- அணியரங்கன் –
நாள் தோறும் சேஷ வஸ்துவைப் பெருகையாலே நித்யோத்ஸவமாய்
சிக்த ராஜபதாம் க்ருத்ஸ் நாம் பிரகீர்ண கமலோத்பலாம் -அயோத்யா -7-2- என்றும்
பதாகாத் வஜமாளி நீம் -அயோத்யா -7-6-என்றும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -திருவாய் -7-2-3-என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அலங்க்ருதமான கோயிலிலே வாழ்கிறவன்
6- அணியரங்கன் –
தேசோயம் சர்வ காமைதுக் -காருடம்-11- என்கிறபடியே
பரம ப்ராப்யமான அவனை அகப்பட இங்கே அழைத்து
தன பக்கல் ஏக ராத்ர வாசத்தாலே இஸ் சம்சாரிகள் உடைய பிரதி பந்தகங்களையும் போக்கி
சேர்த்து ரஷிக்கக் கடவோம் என்று அதிலே ஒருப்பட்டு இருக்கிற கோயிலிலே இருக்கிறவன் –
7-அணியரங்கன் –
ரங்கம் ச்யான் நர்த்தன ஸ்தானம் -ஸ்ரீ ரெங்க மகாத்மியம் -என்று சொல்லுகிறபடியே
அவர் மநோ ரத லாபத்தாலே உகந்து வர்த்திக்கிற தேசம்
நித்ய விபூதியிலே இருக்கும் பொது அங்கு குறைவாளர் இல்லாத படியினாலே தான் குறைவாளனாய் யாயிற்று இருப்பது
இங்கே வந்த பின்பாயிற்று ரஷ்ய வர்க்கம் பெற்றுப் பரி பூரணராய் திருவரங்கச் செல்வர் ஆயிற்று –
நமக்குப் பரமபதம் உத்தேச்யமாப் போலே யாயிற்று அவருக்கு கோயில் உத்தேச்யமாய் இருக்கும் படி –
ஸூ லபனான இத்தால் உமக்குப் பேறு என் என்னில்
1- என்னமுதனை –
எனக்குத் தாரகனான என்னமுதனை –
தேவர்கள் அம்ருதத்தில் வ்யாவ்ருத்தி -அதாவது
தான் உப்பு நீராய் அசேதனமாய் உடம்பு நோவக் கடைய வேண்டி சரீரத்தைப் பூண் கட்டக் கடவதே
இத்தனை பட்டாலும் மாளும்படியாய் இருக்கும்
இது சர்வ ரசமுமாய் -பரம சேதனமுமாய்-அயத்ன சித்தமுமாய் -ஆத்மாவைப் பூண் கட்டக் கடவதே -நித்யமுமாய் -இருக்கும் –
2- அமுதனை
அசௌ வா ஆதித்யோ தேவமது -சாந்தோக்யம் -3-1-1- என்றும்
ஆத்மாவை புருஷஸ்ய மது -என்றும்
ரசோ வை ஸ -என்றும்
சர்வ ராசா -சாந்தோக்யம் -3-14-2- என்றும்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -யஜூ -2-4-6- என்றும்
தூய வமுதை -திருவாய் -1-7-3- என்றும்
ஆராவமுதே -திருவாய் -5-8-1- என்றும் சொல்லுகிறபடியே
ஒருகாலும் தேக்கிடாத அமுதம் ஆயிற்று
3- அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனை
உபய விபூதி ஒரு தட்டும் நான் ஒரு தட்டுமே அன்றோ விஷயீ கரித்தது –
அண்டர் கோன் என்கையாலே நித்யவிபூதி யோகம் சொல்லிற்று
அணியரங்கன் என்கையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று
அவ்வோபாதி தன்னையும் ஒரு விபூதியாக நினைத்து என்னமுதனை -என்கிறார்
திருமால் வைகுந்தமே திருப் பாற் கடலே என் தலையே -திருவாய்-10-8-8-என்னுமா போலே –
அண்டர் கோன் என்கையாலே ஸ்வாமித்வம் சொல்லிற்று
அணியரங்கன் என்கையாலே சௌலப்யம் சொல்லிற்று
என்னமுதனை என்கையாலே சௌசீல்ய வாத்சல்யம் சொல்லிற்று –
அண்டர்கோன் அணியரங்கன் -என்கையாலே அகில ஜகத் ஸ்வாமின் என்கிறார்
என்னமுதனை என்கையாலே அசமத் ஸ்வாமின் -என்கிறார்
என்னமுதனை –
தமேவ விதித்வா அதிமருத யுமேதி -என்று அவனைப் பெற்று இவன் அம்ருதனானாப் போலே யாயிற்று
இவரைப் பெற்று அவர் அம்ருதரானபடி-
இப்படி நிரதிசய போக்யரான இவரைப் பெற்று செய்தது என் என்னில்
1- கண்ட கண்கள் –
காணாத கண் என்றும் கண் அல்ல -பெரிய திருமொழி -11-7-1-என்றபடி
என்றும் பாழ் போகாத படி அனுபவிக்கப் பெற்றவன -யாயிற்று
2- கண்ட கண்கள் –
காண வாராய் -திருவாய் -8-5-2- என்றும்
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா-ஸ்தோத்ர ரத்னம் -என்றும்
காண ஆசைப் பட்டுப் போகை அன்றிக்கே
யதா மநோ ரதம் காணப் பெற்றன வாயிற்று –
3- அமுதினைக் கண்ட கண்கள் –
ரச இந்த்ரிய விஷயமான அம்ருதத்தை சஷூஸ் ஸூ விஷயீ கரிப்பதே
4- அமுதனைக் கண்ட கண்கள்
பர்ஹாயிதே தே நயனே நராணாம் விஷ்ணோர் ந லிங்காநி நிரீஷ தோயே -ஸ்ரீ பாகவதம் -2-3-22- என்கிறபடியே
பீலிக் கண்களான கண்கள் அன்றிக்கே பெற்ற கண்கள் –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -ருக்வேதம் -என்றும்
ந சஷூ ஷா பச்யதி கச்ச நை நம் -என்றும்
கட்கிலீ -திருவாய் -7-2-3- என்றும்
பிரமாணங்கள் நிஷேதிக்கச் செய்தேயும் முற்பட இன்று காணப் பெற்ற கண்கள் –
5-அமுதனைக் கண்ட கண்கள் –
நாட்டாரைப் போலே மாளும்படியாகப் பானம் பண்ணி அனுபவிக்கை அன்றிக்கே
நாச்சந்தி ந பிபந்தி ஏததேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -சாந்தோக்யம் -3-6-என்கிறபடியே
முதலில் சிதையாத படி காட்சியாலே பருகிக் களித்தன வாயிற்று இவை
6- கண்கள் –
அன்யோன்ய சத்ருசம் என்னுமா போலே ஒன்றுக்கு ஓன்று ஒப்பாம் இத்தனை போக்கி
வேறு உபமானம் இல்லாதவை –
1-மற்று ஒன்றினைக் காணாவே –
பாதி வ்ரத்ய தர்மத்திலே தீஷித்து ஆயிற்று இருப்பது
மற்று ஒன்றை எடுத்துக் கழிக்கைக்குப் பாத்தம் போறாதே இருக்கிறபடி
2- காணாவே –
பச்யந்தி ஸூரய -ருக்வேதம் -என்றும்
சதா பச்யந்தி -ருக்வேதம் -என்றும்
த்ரிபாத் விபூதியாக இமை கொட்டுவதும் செய்யாதே அனுபவிக்கிற வடிவழகு
இது ஒன்றுமே அனுபவிக்கப் புக்கால் வேறு ஒன்றில் புகுரலாயோ இருப்பது
3- அணியரங்கனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
சாஸ்த்ராத வேத்மி ஜனார்த்தனம் – என்றும்
சாஸ்திர த்ருஷ்டே ந வர்தமநா -விஷ்வக்சேன சம்ஹிதை -என்றும் சொல்லுகிறபடியே
ஓலைப் புரத்திலே கண்டு போகை அன்றிக்கே இக்கண்ணாலே இங்கு காணப் பெற்றது
வேறு இன்று காண வற்றோ –
4- என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
கண்ட போதே முகத்தை மாற வைக்க வேண்டும் படி
செந்தீ -திரு நெடும் -2- யாய் எரிந்து இருக்கை அன்றிக்கே
கண்கள் குளிர்ந்து இருக்கும்படி நிரதிசய போக்யமான அத்தை
விட்டு புறம்பே கால் வாங்கப் போயோ இருப்பது
5- கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே –
காணாத படி அடியிலே விலக்கினோம் ஆகில் மீட்கலாம் அத்தனை போக்கி கண்ட பின்பு மீட்கலாமோ –
6- அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
உபய விபூதி விசிஷ்டனாய்
சர்வாத்மகனான இவனைக் கண்டால்
ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இதம் சர்வம் த்ருஷ்டும் பவதி -ப்ருஹ-6-5-6- என்றும்
நான்யத் பச்யதி நாந்யச் ச்ருணோதி -சாந்தோக்யம் -1-2-4-என்றும் சொல்லுகிறபடியே
சர்வமும் ததாத் மகமாய்த் தோற்றும் அத்தனை ஒழிய
தத் வ்யதிரிக்தமாக ஒன்றும் தோற்றாது என்றாகவுமாம்
7- மற்று ஒன்றினைக் காணாவே –
என்று அவனையே உருவக் காணும் என்னும்படி யாயிற்று –
அதாவது உகந்து அருளின திரு மேனியில் சாஷாத்காரம்
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -முண்ட -2-2-9- என்றும்
ஆத்மா வா அரேத் த்ரஷ்டவ்ய -ப்ருஹ -6-5-6- என்றும் சொல்லுகிற
உபாய தசையில் சாஷாத் காரத்தில் கொண்டு போய் மூட்ட
அது சதா பச்யந்தி -ருக்வேதம் -என்கிற பல தசையில் சாஷாத் காரத்தோடு மூட்ட
அது யாவதாத்மபாவி யாகையாலே உருவ இப்படி நடக்கும் என்று கருத்து –
அத்தை இ றே
ராமம் மே அநு கதா திருஷ்டி ந தவா பச்யாமி -என்று ரிஷி சொல்லுகிறது –
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply