ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –ப்ரியவாதீ ச பூதா நாம்-அயோத்யா -2-33-/யச்ச ராமம் ந பச்யேத்-அயோத்யா -17-14-/ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம்-அயோத்யா -23-29-/கிம் த்வா மன்யத வைதேஹ பிதா-அயோத்யா -30-3-/–

ப்ரியவாதீ ச பூதா நாம் சத்யவாதீ ச ராகவ
பஹூ ஸ்ருதா நாம வ்ருத்தா நாம் ப்ராஹ்மணா நாம் உபாஸிதா–அயோத்யா -2-33-

ப்ரியவாதீ -இனியதையே  உரைப்பவர்
பூதா நாம் -சத்தையை யுடைய  எல்லாப் பிராணிகளுக்கும்
சத்யவாதீ ச -ஹித மானத்தையே சொல்லுவர்
ராகவ -ரகு குல திலகரான ஸ்ரீ ராமபிரான்
பஹூ ஸ்ருதா நாம -பலர் இடம் பலகால் கேட்டு அறிந்த
வ்ருத்தா நாம் -பெரியோர்களான
ப்ராஹ்மணா நாம் -பிராமணர்களுக்கு
உபாஸிதா–சேவை செய்பவர் –

அவதாரிகை –
ஒருவன் ஒருவனுக்கு கூறு செய்யப் புக்கால் பிரஜைகள் பக்கலிலும் குளிர விழியா நின்றான் ஆயிற்று
அவ்வாசனையும் புறம்பு குடிமகன் ஏனோ நீ பண்ண வேண்டி இருக்கிறதோ என்னும் பயத்தாலே –
அவ்வளவே அன்றிக்கே பூமிப் பரப்புக்காகக் கடவரான பெருமாள் பிரஜைகள் விஷயத்திலே பலிக்கும் படி சொல்லுகிறது-

ப்ரிய வாதீ-
கர்ம காலத்திலே ஒடுக்கமாகப் பிளந்த நிலத்திலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே யாயிற்று
ஒருவனைக் குறித்து வார்த்தை அருளிச் செய்வதாய் இருக்கும் படி –
இப்படிச் செய்வது தான் -திவ்ய அந்தரப்புரத்துக்கு ஆதல் –
திருத் தாய்மார்க்கு ஆதல்
வசிஷ்டாதிகளுக்கு ஆதலோ என்னில்
பூதாநாம் –
சத்தாயோகி சகல பதார்த்தங்களுக்கும் இப்படியே இருப்பர்-
இருந்ததே குடியாக எல்லார்க்கும் ஒக்க ஒரு வார்த்தை சொல்லி விடுமத்தனை யோ என்றால் –
சத்யா வாதீ -ச –
அது தான் பூத ஹிதமுமாய் -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
அத்ருஷ்டார்த்த சாதகமுமாய் இருக்கும் –
கீழ்ச் சொன்ன இரண்டாலும் பிரிய ஹிதங்களைச் சொன்னபடி இ றே-
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத் சத்யமப்ரியம் ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயா தேஷ தர்மஸ் ச நாதன -மனு -4-138-
இவை தான் புறம்பே ஒரு வ்யக்தியிலும் சேராது
இவை இரண்டும் தன பக்கல் சேர்ந்து கொண்டு இருக்கிறது
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையனான ஈஸ்வரனோ என்னில்
ராகவ –
ஈஸ்வரத்வம் கிடக்கட்டும் ரகு குலத்தில் பிறப்பாலாயே இத்தன்மைகள் உண்டாயின -என்கை-

இப்படி இருக்கும்   போது-இப்படிப்பட்ட குணங்களையும் -குடிப் பிறப்பையும் அனுசந்தித்து
இவை நமக்கு உண்டாவதே -என்று மதித்து இருப்பாரோ -என்னில்
நம்மைக் கண்டது பிரஜைகள் உடைய ரஷண அர்த்தமாக -ஆனபின்பு இன்னமும் நமக்கு இதுக்கு ஈடான அளவு போராது என்று  உள்ள அளவும் பார்த்து த்ருப்தர் ஆகாதே
இன்னமும் இதுக்கு ஈடான நன்மைகள் உண்டாக வேணும் என்று
அறிவுடையார் வாசலிலே போய்க் கால் கட்டியிருப்பார்
பஹூ ஸ்ருதா நாம் –
நால் இரண்டும் கற்ற அளவிலே பர்ய வசிக்கை அன்றிக்கே
ஓர் ஓன்று தன்னைப் பலகாலும் கேட்டிருப்பார் ஆயிற்று
பஹூப்ய ஸ்ருதம் -பஹஊதா ஸ்ருதம்
ஜ்ஞான வ்ருத்தா மயா ராஜன் பஹவ பர்யுபாசிதா -என்றால் போலே
பஹூப் யச்ச மஹத் பயச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர சர்வமா தத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத -என்று
பலர் பக்கலிலும் சார க்ரஹணம் பண்ணினதாயிற்று –

வ்ருத்தா நாம் –
த்ரிவித வ்ருத்தா நாம் –
சீல வ்ருத்தைர் வயோ வ்ருத்தைர் ஜ்ஞான வ்ருத்தைர் -அயோத்யா -1-12-என்று
சீலத்தாலும் வயசாலும் ஜ்ஞானத்தாலும் அதிகராய் இருப்பார்கள் –

அது தான் அர்த்த சாஸ்திரம் கற்றால் போலேயோ என்னில்
1-ப்ரஹ்மாணாம்-
ஷத்ரியர் ப்ராஹ்மணரைப் பற்றி –
அவ்வழியாலே தத்வங்களையே அபேஷிதமாக பெறக் கடவதாய் இ றே இருப்பது –
2-ப்ரஹ்மாணாம்–
என்று அவர்கள் பலருமாய்
தாம் இருந்த இடத்தே வந்து கேட்கும்படியான யோக்யதை யுண்டானால்
அவர்களைத் தாம் அழைத்து விட்டோ தர்ம சம்சயம் அறுத்துக் கொள்வது என்றால்  –

உபாஸித-
அவர்கள் இருந்த இடத்தே தாமே சென்று
அவர்கள் சொல்லும்படிக்கு அவர்கள் காலும் தம்முடைய தலையுமாயுமாய் யாயிற்று -தான் அனுவர்த்திப்பது

——————————————————————————————————————————————————————-

யச்ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி
நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –அயோத்யா -17-14-

யச்ச ராமம் -யவன் ஒருவனும் ராமனை
ந பச்யேத் -காணாது இருப்பானோ
து =மேலும்
யஞ்ச ராமோ ந பச்யதி -யம் ராமச்ச ந பச்யதி -எவனை ஸ்ரீ ராமனும் காணாது இருக்கிறாரோ
நிந்திதஸ்  ஸ வசேஸ்  லோகே –ஸ லோகே நிந்தித்த வசேத் -அவன் உலகினில் நிந்திக்கப் பட்டவனாய்  வாழ்வான்
ஸ்வாத்மாப்யே நம் விகர்ஹதே –ஸ்வா த்மா அபி ஏநம் விகர்ஹதே -தன்னுடைய ஆத்மாவும் இவனை நிந்திக்கிறது –

யச்ச ராமம் ந பச்யேத் து-
ராமம் -என்கிறது கண்ணுக்கு வகுத்த விஷயத்தை –
ய-காணாது இருக்கிறான் யாவன் ஒருவன்
ச-எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகவுமாம்-
து -இது தப்பினாலும்
தப்பாதது தப்பினால் –
வருமது இவ்வளவு அன்று என்கைக்காக விசேஷிக்கிறது
யஞ்ச ராமோ ந பச்யதி-
யம் ச ராமோ ந பச்யதி –
எத்தனையேனும் சிறியாரும் இவர் கண் பார்வைக்கு இலக்காதார் இல்லை –
யம் -எத்தனையேனும் சிறியவன் -என்கிறது –
எத்தனையேனும் சிறியார் இ றே இவர் கண்ணில் பார்வைக்கு இலக்காவார் –
யாருமோர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான்
யாருமோர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -திருவாய் -1-3-4-
ப்ரஹ்மாதிகள் உடைய ஜ்ஞானத்துக்கும் அவிஷயமாய் இருக்கும் –
ஓர் இடைச்சிக்கும் வேடனுக்கும் கை புகுந்து இருக்கும்
எத்தனையேனும் உயர்ந்தவன் ஆகிலும் பெருமாள் உடைய ஒரு வேளை புறப்பாடு கானான் ஆகில் அவன் பெரியன் அல்லன் –
எத்தனையேனும் சிறியனானவன் பக்கலிலும் தப்பாது அவருடைய பார்வை –
தப்புகிறான் யாவன் ஒருவன் -அவன் அவஸ்துக்களோடும் எண்ணப் பட்டான் –
எண்ணப் படாமையிலே எண்ணப் படும் -முயல் கொம்பு போலே —
எல்லாரும் நிந்தித்து சீ சீ என்னப் எண்ணப்படும் –

இவனை நிந்திப்பார் வசிஷ்டாதிகள் தொடக்கமனார் நால்வர் இருவரோ என்னில்
நிந்திதஸ்  ஸ வசேஸ் லோகே -லோகே நிந்தித-
இவனை நிந்திக்கைக்கு உரியார் அல்லாதார் இல்லை –

விஷய பிரவணனானவன் இப்போது பழியாய்
மேல் நரகமாய் இருக்கச் செய்தே
தான் நல்லது செய்கிறோம் என்று இருக்கும் இ றே
அப்படித் தான் நல்லது செய்கிறோம் என்று இருக்குமோ என்னில்
ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே –
தானும் தன்னை நிந்தித்துக் கொள்ளும்
திருக் கைத்தலம் இழந்தவன்
இற்றைப் புறப்பாடு காணப் பெறாத நாம்
கருப்பூரமும் எலுமிச்சம் காயும் பெற்றோம் ஆகில் முடிந்து பிழைக்கல்  ஆயிற்று -என்று இருக்கும் இ றே-

—————————————————————————————————————————————————————————–

ராஜ்யஞ்ச தவ ரஷேயமஹம் வேலேவ சாகரம்
ப்ரதிஜா நாமி தி வீர மா பூவம் வீர லோகபாக் –அயோத்யா -23-29-

ராஜ்யஞ்ச தவ – தவ ராஜ்யம் ச –
உம்முடைய ராஜ்யத்தையும்
ரஷேயமஹம் -அஹம் ரஷேயம்
நான் காப்பாற்றுவேன்
வேலேவ சாகரம் -வேலா இவ சாகரம்-
கடலை கரை போலே –
ப்ரதிஜா நாமி தி வீர –
சூரனே பிரதிஜ்ஞ்ஞை செய்கிறேன்
இல்லா விடில் –
மா பூவம் –
உம நாட்டிலும் வாழக் கடவேன் அல்லேன்
வீர லோகபாக் —
வீரரான தசரதர் அடையப் போகும் உலகை அடையக் கடவேன்-

ராஜ்யஞ்ச தவ ரஷேயம் –
ரஷ தர்மேன பலேன-கிஷ்கிந்தா -1-128-என்கிறபடியே உம்முடைய ரஷணம் பண்ணுகை அன்றிக்கே
உம்முடைய ராஜ்யத்தையும் ரஷிக்கக் கடவேன் –

எனக்குத் தாதர்த்யம் ஸ்வரூபம் ஆனாலும்
உம்மால் என்னை மீரா ஒண்ணாது காணும்
அஹம் வேலேவ சாகரம்-
கடலுக்கு கரை சேஷமாய் இருக்கச் செய்தேயும்
கரையை அதிக்ரமிக்க மாட்டாது இ றே கடல்
அப்படியே நீர் பெரியீர் என்னா உம்மால் என்னை விஞ்ச ஒண்ணாது காணும் –

ப்ரதிஜா நாமி –
நான் இப்படி பிரதிஜ்ஞ்ஞை பண்ணுகிறேன்

தி வீர-தே வீர
ஒரு கோழை முன்னேயோ நான் பிரதிஜ்ஞ்ஞை பண்ணிற்று-
பிரதிஜ்ஞ்ஞை பண்ணினால் அத்தத் தலைக் கட்டித் தர வல்ல ஆண் பிள்ளைத்தனம் உடைய
உம்முடைய முன்னே அன்றோ –

மா பூவம் –
இப்படிச் செய்திலேன் ஆகில் உம்முடைய சந்நிதியிலே வர்த்திக்கப் பெறாது ஒழிகை அன்றிக்கே
உம்முடைய ராஜ்யத்திலும் வர்த்திக்கப் பெறாதவன் ஆகிறேன் –

வீர லோகபாக்-
உம்மை முடி சூட்டி அனுபவிக்கப் பாரித்து
அது பெறாதே போன சக்ரவர்த்தி புக்க லோகம் புகுகிறேன் –

———————————————————————————————————————————————————————

அவதாரிகை –

பித்ரு வசன பரிபாலன  அர்த்தமாக -வநவாசோ மஹோதய-அயோத்யா -22-29-என்று
சௌமுக்யத்தோடே வநவாச ஸூ முகர் என்று நாட்டார் அபர திரு நாமம்  சாற்றும்படி வநவாச ஸூ முகராய் –
அப்போது உலகுடைய நாச்சியாரான ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் உடைய ஸூ குமாரமான திரு மேனியிலே மென்மையைத் திரு உள்ளம் பற்றி பிராட்டியை
திரு அயோத்யையில் நாம் மீண்டும் வருமளவும் ச்வச்ருச்வ சுராதி பரிபாலனம் -மாமியார்கள் மாமனார்கள் பரிபாலனம் -பண்ணிக் கொண்டு இரும் -என்று பெருமாள் வேண்டிக் கொள்ள
அவ்வார்த்தை வ்ரண ஷாரம் போலே பிராட்டிக்கு அசஹ்யமாய் -புண்ணில் புளிப் பெய்தால் போலே –
பிரணய அபிமானங்கள் வ்யுத்க்ரமம் ஆகையாலே
பெருமாளைக் குறித்து ஷேபோக்தி பண்ணுகிறாள் இஸ் ஸ்லோஹத்தாலே-

கிம் த்வா மன்யத வைதேஹ பிதா மே மிதிலாதிப
ராம ஜாமாதரம் ப்ராப்ய ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –அயோத்யா -30-3-

கிம் த்வா மன்யத -த்வா கிம்  அமந்யத-உம்மை என்ன நினைத்து இருப்பர்
வைதேஹ-விதே ஹ குலத்தில் பிறந்த
பிதா மே -மே பிதா -என்னுடைய தகப்பனாரான ஜனகர்
மிதிலாதிப -மிதிலைக்கு அரசராய்
ராம-வெளி அழகாலே ரமிக்கச் செய்பவரே
ஜாமாதரம் ப்ராப்ய -மாப்பிள்ளையாக அடைந்து
ஸ்த்ரியம் -பெண்ணான
புருஷ விக்ரஹம் -ஆண் உடம்பை யுடைய –

கிம் –
கிம் என்கிற இது குத்ஸா பரமான அவ்யயம் –
அப்போது கிம் வஷ்யதி -என்று குத்ஸா பாரமாகச் -தாழ்வாகச் -சொல்லுவர் என்றபடி –
அன்றிக்கே
கிம் -என்று பிரசன்னமான போது -என்ன -என் சொல்லுவர் -என்று பொருள் – –

கிம் த்வா வஷ்யதி என்றும் கிம் த்வா அந்யத-என்ற பாட பேதங்கள்
அமந்யத -என்ற பாடமா போது
குத்ஸா விஷயமாக நினைத்து இருப்பர் என்றும்
என் நினைத்து இருப்பர் -என்றும் இரண்டு அர்த்தம் –

1-த்வா-
உளுத்த வில்லை முறித்து
ததாது ஜ்ருமபிதம் சைவம் தநுர் பீம பராக்கிரமம் -பால -75-20-என்றபடி முறித்து
லோகத்தை ஊமத்தங்காய் தீற்றின உம்மை –
2-த்வா –
வசிஷ்ட அநு வர்த்தனம் பண்ணிப் போருகையாலே என்னோபாதி ஸூ சம தர்மஜ்ஞ்ஞர் இல்லை என்று பொய்யே இறுமாந்து இருக்கிற உம்மை
3- த்வா –
எழிலே கோழை யான   உம்மை

கிம் த்வாம் அந்யதே -கிம் வஷ்யதி –
ராஜா அன்று என்ன ஒண்ணாதே
ராஜ தர்மம் அறியீர் என்ன ஒண்ணாதே –
குருகுல வாசம் பண்ணி அறியீர் என்ன ஒண்ணாதே –
குல க்ரம ஆயாதமான ஆசாரம் அறியீர் என்ன ஒண்ணாதே
குல ஸ்திரீகளுக்கு பர்த்ரு சஹ வாசம் ஆவச்யகம் என்னும் இடம் அறியீர் என்ன ஒண்ணாதே
குல ஸ்திரீயை உபேஷியாமைக்கு பிரதம பரிகரமான ஏக தார வ்ரதவ்யம் உமக்கு இல்லை என்ன ஒண்ணாதே
கிம் பஹூ நா-பல சொல்லி என் –
தேவர் அனுஷ்டானம் கண்டால் உம்மைக் கனக்கத் தப்பிதம் என்று இருக்கும் இத்தனை இ றே –

கிம் த்வாம் அந்யத வைதேஹ-
உம்மை ஐயர் என்ன நினைத்து இருப்பார் –
திருமாமனார் தசரத சக்ரவர்த்தி கையிலே யாதல் –
திரு மாமியார் ஸ்ரீ கௌசலையார் கையிலே யாதல் -அன்றே என்னைக் காட்டிக் கொடுத்தது –
1-இயம் ஸீதா-என்று -உம்முடைய கையில் அன்றோ காட்டிக் கொடுத்தது –
ஸ்த்ரீத்வத்தில் கொற்றை யற்ற பெண்களுக்கு பர்த்ரு விரஹத்தில் சத்தா நாசம் பிறக்கும் என்று சொல்லிக் கொடுத்தாரே
2-இயம் –
இவள் அத்யந்த அபிமானி -என்று சொல்லிக் கொடுத்தாரே –
ஆர்த்தார்த்தே முதிதே ஹ்ருஷ்டா ப்ரோஷித மலி நா க்ருஸா
ம்ருதே ம்ரியேத யா நாரீ சா ஸ்திரீ ஜ்ஞேயா  பதிவ்ரதா -இத்யாதி ஸ்லோகங்களாலே மந்வாதி ஸ்மர்த்தாக்கள் பாதி வ்ரத்யத்துக்கு வாயோலையிட்ட பெண்டாட்டி அன்று கிடீர் இவள் என்று சொன்னாரே –
அந்த லஷணங்கள் சொல்லலாவது-பர்த்தாவுக்கவும் தங்களுக்கும் பிரிந்து உடலும் உயிரும்  உள்ளார்க்கு அன்றோ –
இவளுக்கு உடலும் உயிரும்  தேவரீர் என்று அறுதியிட்டுக் கொடுத்தாரே
3-இயம் –
நிழலோடு மல் பொருவார் இல்லை கிடீர் -என்றாரே
4-இயம்
இவள் தலையாலே ஏதேனும் குறை விளைந்தது உண்டாகிலும்  தேவரீரது கிடீர் என்றாரே –

ஸீதா –
பெண்களுக்கு தாய் கூறு மிக்கு இருக்கும் ஆகையாலே மாதரம் அங்க நா -வேறு மணம் கிடீர் –
எடுத்து விநியோகம் கொள்ளும் அத்தனை கிடீர் என்றாரே
ஸீதா
பிறக்கும் போதே கீற்று தப்பாமல் பிறந்தாள் -என்றாரே
மம ஸூதா –
இவளைப் பாராதே என்னைப் பார்க்க வேணும் என்றாரே
சஹ தர்ம சரீதவ
தேவர் உத்தியோகத்துக்கு கூட எழுந்து அருளி இருக்கும் இவள் -என்றாரே
தவ
சஹ தர்ம சரியாம் இடத்தில் சேஷத்வம் கை விடாள்-என்றாரே
ப்ரதீச்ச -அங்கீ கரித்து அருள வேணும்
அத்தலைக்கு அர்ஹமாம் படி திரு உள்ளம் பற்ற வேணும் -என்றாரே
ச -உம்மைத் தொகை
அர்ஹதா ஜ்ஞானம் மாத்ரம் அன்றிக்கே விஷய வைலஷ்ண்ய அநு ரூபமான போகம் கொடுத்து அருள வேணும் -என்றாரே
ஏநாம் –
இப்படி நோற்றுப் பிறந்தவளை
நெடும் காலம் கண்ணன் நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்ற தொடும் கால் ஒசியும் இடை இள மான் -திரு விருத்தம் -37
பத்ரம் தே –
நோற்றுப் பிறந்தாள் என்கிறேன் இத்தனை போக்கி
பேறு தேவரீரது  காணும் என்றாரே –
போக்யம் மிக்கதனையும் போக்தாவுக்குப் பேறாம் அத்தனை இ றே-

பாணிம் க்ருஹ்ணீஷ்வ –
கை நீட்ட அறியாள் காணும் -நீரே பிடியீர் -என்றாரே –
கையைப் பிடிப்பது கையாலேயாய் இருக்க
லோகம் எல்லாம் ஒதுங்கினாலும் நிழல் விஞ்சிப் போஷ்யம் சிறுக்கும் படியான
வீரப் பாட்டை உடைத்தான தேவரீர் திருத் தோளிலே கண் வைத்துத் தகுதியாகத் தொழில் செய்ய வல்ல  கையாலே பிடிடீர் என்று விசேஷித்தாரே-
பாணிநா –
என்று கையை விசேஷித்து கவி பாடுகிறது
இங்கன் ஒத்த தசையிலே எடுத்துக் கொண்டு போம் என்றாரே –
இவ்வாகாரங்கள் ஒன்றும் -பிரிவு பொறாமை -சொல் பொறாமை -அத்யந்த பாரதந்த்ர்யம் -தர்ம அனுஷ்டான சஹாகாரித்வம்
நிரந்தர போக அர்ஹத்வம் போக்யதை முதலான ஆகாரங்கள் -தேவரீர் திரு உள்ளம் பற்றிலீரே
உம்முடைய பிரதிபத்தி அந்யதா வி றே இருந்தது-

இயம்
என்று என்னுடைய சௌந்தர்யம் சொல்லுகிறார் என்று இருந்தீர் –
ஸீதா
என்று என்னுடைய மாத்ரு குல ஸூ த்தி சொல்லுகிறார் என்று இருந்தீர்
மம ஸூ தா –
என்று என்னுடைய பித்ரு குல ஸூ த்தி  சொல்லுகிறார் என்று இருந்தீர்
சஹாதர்மசரீ –
என்று என்னுடைய சௌசீல்யம் சொல்லுகிறார் என்று இருந்தீர்
தவ
என்று உம்மைக் கொண்டாடுகிறார் என்று இருந்தீர்
ப்ரதீச்ச
என்று வரில் போகடேன் -கேடில் தேடேன் -என்று இராதே கொள்ளீர் என்கிறார் என்று இருந்தீர்
ச -காரத்தாலே
கண்ணுக்குத் தைத்ததோ என்று கேட்டார் என்று இருந்தீர் -அழகு கண்ணில் பட்டதோ என்று –
ஏ நாம் –
என்று என் தகபனாகையாலே சௌந்தர்யாதிகள் கண்ணிலே பட்டு வாத்சல்யத்தாலே சொல்லுகிறார் என்று இருந்தீர்
பத்ரம் தே –
என் பக்கல் பிரேமத்தால் சத் குணமான ப்ரேமம் உம்முடைய பக்கலிலே விளைந்து
திருஷ்டி தோஷம் வருகிறது என்று அஞ்சி உமக்குக் காப்பிட்டார் என்று இருந்தீர்
பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா
என்று க்ரியா கலாபத்துக்குச் சடங்கம் சொல்லுகிறார் என்று இருந்தீர்
அப்படி சர்வஜ்ஞரான ஐயர் சொன்ன வார்த்தையை நேராகத் திரு உள்ளம் பற்றாதே
இன்று என்னை வைத்துப் போனீர் என்றால்
கிம் த்வாம் அந்யத -உம்மை ஐயர் என்ன நினைத்து இருப்பார் –

1-வைதேஹ –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜானகாதைய -ஸ்ரீ கீதை -3-20-என்று
க்ரியாகலா பாதிகளைக் கை விடாதே மோஷ சித்திக்கு யத்நிக்குமவர் ஆகையாலே
ஒரு முஹூர்த்தமும் பத்நீ வியுக்தராய் இருந்து பழக்கம் இல்லாதவர் –
2- வைதேஹ-
விகத தேஹாபிமானர்  -பழுதற வென்னுமவர்-
3- வைதேஹ-
ஜன்ம ப்ரப்ருதி சோகம் கண்டு அறியாதவர் -தேஹம் அற்றவர் –
என்னைப் பெறுகையாலேஎல்லாம் காண வேண்டா நின்றது இ றே
பாதி சம்யோக   ஸூ லாபம் வயோ த்ருஷ்ட்வா து மே பிதா சிந்தார்ணவகத பாரம் நாஸ ஸாதா ப்லாவோயதா -அயோத்யா -118-34-
அவரை மேலும் கவலைக் கடலில் அமிழ்த்தி விடாதீர் –

பிதா மே –
பிள்ளைகள் சமர்த்தர்கள் ஆனால் கல் நெஞ்சராய்க் காட்டுக்கு விட வல்லாரும் உண்டு
நான் ஏதேனும் அசமர்த்தை யாகிலும் அவருக்கு வயிறு பிடியே இ றே உள்ளது
தனியிருக்கவும் பொறுக்கவும் வல்ல பிள்ளையைப் பெறாதே வகுத்தவன் நிழல் பெறில் பிழைத்து
இலக்கில் சத்தா நாசம் பிறக்கும்படியான என்னைப் பெற்றுக் கெட்டாரே-

1- மிதிலாதிப
ஐயர் திரு உள்ளத்தில் நோவ
அத்தேசம் எல்லாம் நோமே
2- மிதிலாதிப –
ஒரு தேசத்தை தோள் நிழல் கீழ் இட்டுக் கொண்டு இருக்கிறவருக்கு
ஒருவன் ஒருத்தியை தோள் நிழல் கீழ் ஒதுக்க மாட்டிற்று இலன் என்றால் புண்ணாய் இருக்குமே-

1-ராம –
ஐயோ வடிவிலே பசை போலே இருந்ததாகில் உன் அகவாயும்
2-ராம –
அகவாய் கண்டு -கடினமான நெஞ்சைக் கண்டு -சத்ருக்னன் என்று பேரிட்டது அன்றே
அது கடைக் குட்டியான தம்பியார்க்கு ஆயிற்றே –
ராம இத்யபி ராமேண வபுஷா தஸ்ய சோதித நாமதேயம்  குருச்சக்ரே ஜகத் பிரதம மங்களம்-என்று
உம்முடைய அழகு மாத்ரத்துக்கு அன்றோ வசிஷ்டன் பேர் இட்டது
அஜ் ஜகத்தோடும் எனக்கும் உறவு அற்றது இ றே-இவற்றின் புறத்தாள் என்று எண்ணா -திருவிருத்தம் -33-
3-ராம –
சஹஸ்ரநாம தஸ் துல்யம் -என்று ஆயிரம் பேருடைய சக்திக்கு சமாநமாய்
தனித் தனியே எழுந்து இரா நின்றது ஆயிற்று-

நாம் இங்கனே யாக வேணுமோ
1-ஜாமாதரம்
உங்கள் ஐயருக்கு மூத்த பிள்ளை ஆனால் போலே
எங்கள் ஐயருக்கும் மணவாளப் பிள்ளை ஆனீரே –
2- ஜாமாதரம் –
ஜாமாதா தசமோ க்ரஹ -என்று பெண் பிள்ளை பெற்றுக் கொடுத்தார்க்கு க்ரஹம் பத்தாய் இ றே இருப்பது-

ப்ராப்ய –
தாமே உகந்து செய்தது ஆகையாலே ஒருவர் முகம் பார்த்து வெறுக்க விரகு இல்லையே –
1-ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம் –
உம்முடைய முடியும் உடையும் பேதித்த பெண்டாட்டி யானீரே-
2-புருஷ விக்ரஹம் –
அது தனக்கு நிலையுண்டாமாகில் காட்டிலும் துணையாம் இ றே-
3- புருஷ விக்ரஹம் –
புறம் பூச்சான ஆண் தோல்  இ றே படை வடித்தது -ஆயுதம் பிடித்தது –
4- புருஷ விக்ரஹம் –
உடம்பு எரி குத்தாதே -செம்புள்ளிகள் கரும் புள்ளிகள் குத்தாமல் –
நாட்பு வயலுக்கு மிரள் காட்டினால் போல் -பேர் சுமந்தீர் இத்தனை இ றே –
பட்சிகள் தானியங்களை எடுத்துச் செல்லாமல் இருக்க
அவர்களை மிரளச் செய்ய
செம்புள்ளி கரும்புள்ளி குத்தப் பெற்ற மனித உருவம் வயல்களில் நாட்டப் பட்டு இருக்கும் -அவற்றுக்கு மிரள் -என்று பெயர்
5- புருஷ விக்ரஹம் –
அகவாய் ஸ்திரீயும் புறவாய் புருஷனுமான ஸ்திரீ புருஷக் கலப்பை த்ருதீய பிரகிருதி என்பார்கள்  நாட்டார்  –
த்ருதீய பிரகிருதியை நாடு சொல்லும் பேரை நான் சொல்ல அஞ்சினேன்
நாடு தானும் சொல்லாது இறே
ஆண் பிள்ளைச் சொற்றாழ்வி-என்னும் இத்தனை இறே –

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading