கீழ் திருவாய் மொழியில் -எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினும் -என்றார்
ஆழ்வார் இன்னம் திருப் புளி ஆழ்வார் அடியில் இருந்து பாசுரங்கள் பாடி தலைக் கட்ட வேண்டுமே
எம்பெருமான் வந்து முகம் காட்டாமலேயே ஒரு விரகு செய்தான் ஆயிற்று
இருத்தும் வியத்து என்னை -நடந்த விலஷண சம்ச்லேஷம் நடந்து இருந்ததை -அத்தை நினைப்பூட்டி தரிக்கச் செய்தான் –
அதனால் தரித்து இருந்து இப்பதிகம் அருளிச் செய்த படி –
குருகூர் சடகோபன் சொல் ஆயிரம் -முதலிலே சொன்னாரே -தலைக் கட்ட வேண்டுமே
ஈரச் சொற்களை கேட்டுக் கொண்டு இருந்து வியக்க இன்னம் ஆசை கொண்டு இருந்தான் எம்பெருமான்
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொல்ல ஆழ்வாரும் பாரித்து தொண்டர்களும் பாரித்து இருந்தனர்களே –
அசோக வனத்தில் திருவடி சென்று கிட்டின பொழுது -நெடு நாளும் பட்ட கிலேசம் எல்லாம் கிடக்கச் செய்தேயும்
பெருமாளும் வந்து முகம் காட்டாது இருக்கச் செய்தேயும்
வனவாசம் முன்பு திரு அயோத்யையில் பன்னிரண்டு ஆண்டுகள்
பெருமாள் உடன் ஏகபோகமாய் இருந்து பேரின்பம் நுகர்ந்த நுகர்ச்சி நினைவுக்கு வர
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே புஞ்ஜானா அமானுஷான் போகன் சர்வ காம சம்ருத்தி நீ -என்று
அத்தைச் சொல்லி போது போக்கினால் போலே
இருத்தும் வியந்து பதிகத்தில்
மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு –சிறியேனுடைச் சிந்தையுள் –நின்று ஒழிந்தான் -என்னும்படி
முறை கெடப் பரிமாறின பரிமாற்றம் நினைவுக்கு விஷயமாக்கி
அது கேவலம் ஸ்ம்ருதி மாத்ரம் மாத்ரமே அல்லாமல் இப்போதே அனுபவம் என்று கொள்ளலாம்படி
அந்த சீலகுணத்தை பேசி சிதிலர் ஆகிறார் இதில் -இப்படி பழைய கலவியை நினைப்பூட்டி
ஒருவாறு தரித்து நிற்கச் செய்து பேசுவிக்கிறவன் திருக் காட்கரை எம்பெருமான் போலும் –
ஆகவே திருக் காட்கரை எம்பெருமான் விஷயமாக அவதரிக்கின்றது இப்பதிகம் –
———————————————————————————————————————————————————————————————–
உருகுமால் நெஞ்சம் உயரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெரு வெல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினை தொறே –9-6-1-
நெஞ்சு நீர்ப்பண்டம் ஆகிறதே -அனுபவத்துக்கு முதன்மையான கருவி நெஞ்சு அன்றோ –
அது சிதிலம் ஆகிறதே -பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதல் அடியிலே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என் செய்வது –
ஆத்மாவால் தாங்க ஒண்ணாதபடி அபி நிவேசம் பெருகுகின்றதே -ஆற்றுப் பேருக்கு போலே பெருகி வருகின்றதே
ஆல் ஆல் – அடி தோறும் -விஷாத ஸூ சனம்
நெஞ்சு உருகாதபடிக்கும் வேட்கை பெருகாத படிக்கும் செய்ய உபாயம் அறியேனே
அவன் திரு கல்யாண குணங்கள் தவிர்த்தால் அன்றோ இவை செய்யலாவது
தெருவெல்லாம் செங்கழுநீர் பரிமளம் வீசா இருக்க
உள்ளே சர்வகந்த வஸ்து உடைய பரிமளம் வாசாமகோசரம்
அவனோ மாயன் -சௌந்தர்ய சௌசீல்ய குணங்களால் பிறரை பிச்சேற்ற வல்லவன்
அப்படிப்பட்டவன் உடைய மாயம் -கிட்டின பொழுது தாழ நின்று பரிமாறின சீலகுணம் –
அதை நினைதொறும் உருகுமால் நெஞ்சம் -என்று அந்வயம் –
—————————————————————————————————————————————————————————————————
நினைதொறும் சொல்லும்தொரும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர்
சுனைகொள் பூம் சோலைத் தென் காட்கரை என்னப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே –9-6-2-
உன்னுடன் கலந்து பரிமாரினவற்றை நினைக்க சக்தன் அல்லேன்
நினைக்கத் தொடங்கினால் நினைவு மாறாதே செல்ல முடியாதபடி பல ஹானி ஏற்படும்
ஆனாலும் மறக்க முடியாதே -மீண்டும் நினைப்பார் -முடியவும் தலைக் கட்ட முடியாதே
எத்தனை காலம் நினைக்கப் புக்கது -எத்தனை காலம் மீண்டது
நெஞ்சால் நினைக்க ஒண்ணாத ஒன்றை வாயால் சொல்ல ஒண்ணுமா
மனஸ் சஹகாரியாய் இல்லாமல் இருந்தாலும் அஹ்ருதயமாகவே சொல்லிக் கொண்டு இருப்பரே –
இவர் பேசுகிறார் இல்லை -இவர் வாக்கு பேசிக் கொண்டே இருக்கும் என்கை
அது செவி வழியே புகுந்து -ஊற்று இருந்து -குணாதிக விஷயம் ஆகையால் நெஞ்சை அழிக்கும் –
நெஞ்சு இடிந்து உகும் -பெருக்காற்றின் கரை இடிந்து பின் நீராய் கரைந்து போமாபோலே
ஓர் அவயவியாய் காண ஒண்ணாத படி உக்குப் போகா நின்றது -ஈடு
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனதாருயிர் -வினைகொள் -வினை =தீ வினை பாபஹரமான திருக் கல்யாண குணங்கள்
வினை =சேஷ்டிதம்
சீர் -குண சாமான்யமான சீலகுணம்
சேஷ்டிதத்தை கொண்ட ஷீலா குணம் -தாழ நின்று பரிமாறினது
ஆருயிர் வேம் -அதாஹ்யம் -கீதை
எல்லாவற்றையும் குளிரப் பண்ணும் பனி தாமரையை கருக்கப் பண்ணுமா போலே
சகலர்க்கும் ஆர்த்தி கரமான திருக் கல்யாண குணங்கள் எனக்கு ஆர்த்தியை விளைவிகின்றன
ஆகவே -சுனைகொள் பூம் சோலைத் தென் காட்கரை என்னப்பா –
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே-நீ தாழ நின்று ஆட்செய்து காட்டின சீலகுணத்தை நினைக்க மாட்டிற்று இலேன்
நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மை -எம்பெருமான் உக்தியின் அநுகாரம்
எம்பெருமானே -நீ தாழ நின்று -நான் உமக்கு ஆட் செய்கிறேன் காணும் -என்கிறாயே
இந்த சொல்லும் மர்மத்தை பிளக்கின்றதே –
———————————————————————————————————————————————————————————————————
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய என்னுயிர் யுண்டான்
சீர்மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன்
கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் –9-6-3-
கீழ்ப் பாட்டின் ஈற்றடிக்கு வ்யாக்யனமாய் இப்பாட்டுக்கள் எல்லாம் இருக்கும்
அடிமை கொள்வதாக ஒரு வியாஜ்யம் இட்டு உள்ளே புகுந்து
தன் படிகளைக் காட்டி
சர்வஸ்வபஹாரம் பண்ணின வாற்றை அந்தோ -நினைக்க மாற்றிற்று இலேன் –
வஞ்சித்து என் நெஞ்சம் புகுந்து நீர்கையால் ஈர்மை செய்து -என்று அந்வயம்
தான் சேஷியும்-நான் சேஷனுமான முறை தவறாது பரிமாறுவதாக சொல்லி
நெஞ்சை இசையப் பண்ணி
புகுந்து -தான் சேஷனாயும் இவர் சேஷியாகவும் இவர் இசைய மாட்டார் என்று அறிந்து பொய் சொல்லி புகுந்தான் ஆயிற்று
புகுந்த பின் நீர்மையைக் காட்டத் தொடங்கினான்
தாழ நின்று பரிமாறினான்
அதனால் நெஞ்சை ஈரும் தன்மைகளைச் செய்து -இரு பிளவாக்கி ஈடுபடுத்திக் கொண்டான்
நீராம்படி பண்ணினான்
என்னுயிராய என்னுயிர் யுண்டான் -எனக்குத் தாரகரைப் போலே புகுந்து என்னை அழித்தான்
எனக்கு தன்னால் அல்லது செல்லாதபடி பண்ணி
என்னை புஜித்தான்
என்னோடு கலந்து நீர்மையையும் கொள்ளை கொண்டதனால்
கடலைக் கழுத்து அளவாக உண்ட கார் மேகம் போலே புகர்படைத்து விளங்குகிறான்
கள்வம் அறிகிலேன்-சர்வ ஸ்மாத் பரன் இங்கனே தாழ நின்று பரிமாறுகை அசம்பாவிதம் -நான் மருண்டு பேசுகிறேனோ-
—————————————————————————————————————————————————————————————————————–
அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன்
சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளே –9-6-4-
தான் சேஷியாகவும்
உலகம் எல்லாம் சேஷபூதமாயும்
முறை தப்பாமல் எல்லாரோடும் கலக்கிரவன்
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத அதி ஷூத்ரனான என் பக்கலில் காட்டும் வியாமோஹம்-இன்னது என்று
சொல்ல முடியவில்லையே -தடுமாறுகிறார்
சிறிய வென்னாருயிர் உண்ட திருவருளை அறிகிலேனே -என்று அந்வயம்
அன்றிக்கே
உகப்பாலே செய்தானோ -இவ்வஸ்துவை அழிக்கைக்கு செய்தானோ -அறிகிறிலேன் -என்பர் நம்பிள்ளை
இவ்வர்த்தத்திலே திருவருளே -ஈடு பாடாக வினைமுற்று இன்றி முடியும்
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -உலகங்கள் எல்லாம்
தன்னுடைய சங்கல்பத்தைப் பற்றிக் கிடக்க
தான் அவற்றின் உள்ளே சேஷத்வ முறை தப்பாமல் நிற்குமவன்
இப்படிப் பட்டவன் சிறியேனான என்னுடைய நற்சீவனை கபளீ கரித்த வ்யாமோஹம் தான் என்னே-
————————————————————————————————————————————————————————————————————————-
திருவருள் செய்பவன் போலே என்னுள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன்
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே –9-6-5-
என்னுள் புகுந்து -என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புசியா நின்றான் இது என்ன வ்யாமோஹம்
அடிமை கொள்ளுகையே -திருவருள் செய்கை ஆழ்வார் திரு உள்ளம்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று பாரித்தார்
அவன் இங்கனே பாரித்து -பேறும் தலைக் கட்டப் பெற்றானே –
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் –பொய் நின்ற ஞானமும் –அழுக்கு உடம்பும் -தாம் வெறுத்தத்தை அவன் விரும்பப் புகுந்தான்
அவன் அங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பிப் போந்தார் –
அவன் இவரை அங்கீஹரித்த பின்பு இவர் தம் தேஹத்தை வெறுக்க
அவன் இவருடைய தேஹத்தை விரும்பப் புக்கான்
இவருக்கு அவனோட்டை சஹவாசம் ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு உடலாயிற்று
அவனுக்கு இவரோட்டை சஹவாசம் தேகாத்ம அபிமானத்துக்கு உடலாயிற்று -நம்பிள்ளை
ஹேய உபாதேயதா புத்தி இன்றிக்கே இரண்டிலும் துல்யமான பிரதி பத்தியை கொண்டான்
ஆழ்வாரை புஜித்து செழிப்பு கொண்டமை அவன் அளவில் நில்லாமல் திவ்ய தேச சோலைகளிலும் ஏறிப்
பாய்ந்ததே -திருவளர் சோலைத் தென்காட்கரை என்னப்பன் -என்கிறார்-
——————————————————————————————————————————————————————————————————————–
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மை எய்திப் புலம்பி இராப் பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை யேத்துமே –9-6-6-
வஞ்சகன் என்று அறிந்தால் சஹவாசம் விடலாமே என்ன
அவனைக் கண்டவாறே வஞ்சனைகள் மெய் என்று தோற்றுகின்றனவே
என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் -எனக்கு அற்றுத் தீர்ந்தனவாக காணப்படுகிற
அவனுடைய வஞ்சனைகள் ருஜுவாகவே தோற்றுகின்றன
எனக்குச் செம்மாய் நிற்கும் என்றத்தை எனக்கு சேமமாய் நிற்கும் என்று ஒரு தமிழன் நிர்வஹித்தான் -ஈடு
கீழ் நம் கண்ணன் கள்வன்களே -அந்தம்
இங்கு என் கண்ணன் கள்வம் -ஆதி
பொருள் இசை அந்தாதியாய் இருக்கும் -இரண்டு இடங்களிலும் ஒரே பாடமாகவும் இருக்கும் -நம்பிள்ளை –
என்னாருயிர் அம் கண்ணன் உண்ட கோது -அவனால் பூஜிக்கப் பெற்று நிஸ் சாரமாய்-ஆயிற்று
அம் கண்ணன் -அதி சபலன் – அதி பிரவணரை அங்கண்ணன் என்னக் கடவது இ றே -என்பர் -நம்பிள்ளை
இப்படி ஆருயிர் கொத்தாய் போனாலும்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும் -ஆண்டாள்
பின்னும் உயிர்க்கு சாரம் கொடுத்து பரிமாறத் தொடங்கவே
புன்கண்மை எய்தி-தைன்யத்தை அடைந்தது ஆயிற்று இவ்வாத்மா
அதனாலே –
என் கண்ணன் என்று -இராப் பகல்-புலம்பி -அவன் காட்கரை யேத்துமே-முன்பு
எனக்கு விதேயனாய் இருந்தவன் என்று சொல்லி
இராப்பகலும் கூப்பிட்டு
இவன் நித்ய வாசம் செய்து அருளும் திருக் காட்கரை திருப்பதியை கொண்டாடா நின்றது
பசித்தவன் பழம் கணக்கு பார்க்கிற ரீதி போலும்-
————————————————————————————————————————————————————————————————————————
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என்னாருயிர் உண்ட மாயனால்
கோள் குறை பட்டது என்னாருயிர் கோளுண்டே –9-6-7-
என்னை மாளப் புசித்து புசியாதான் போலே கிடந்து படா நின்றான்
காட்கரை ஏத்தும்-அவனைக் காட்டிலும் திவ்ய தேசத்தின் மேல் ஆசை மிகுந்து ஏத்தா நின்றது என்னாருயிர்
திவ்ய தேசத்துக்கு அவனால் ஏற்றம் -அவனால் திவ்ய தேசத்துக்கு ஏற்றம் என்பதால் அதனுள் கண்ணா என்னும் –
அந்த திவ்ய தேசம் சம்பந்தம் இட்டு அவனையும் ஏத்தா நின்றது
பரமபத்திலும் இங்கு வாசம் செய்வதால் ஏற்றம் என்று நித்ய வாசம் செய்து அருளுகிரானே
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் –திவ்ய தேசத்தையும் அங்கு வாசம் செய்யும் எம்பருமானையும் நினைத்த மாத்ரத்திலே காதல் நோய் அதிகரிக்கும்
த்ரவீபாவமும் சைதில்யமும் விளையும்
இதற்கு எல்லாம் அடி -கீழ் திருவருள் என்று மறைத்து சொன்னதை வெளியிடுகிறார் -என்பர் நம்பிள்ளை –
அடிமை கொள்வான் போலே வந்து என்னை சூன்யம் ஆக்கி அருளிய ஆச்சர்ய பூதனாலே –
ஆட்கொள்வான் ஒத்து உண்ட மாயனால்
என்னாருயிர் கோளுண்டே கோள் குறை பட்டது-என் ஆத்மா நிஸ் சேஷமாக புஜிக்கப் படா நிற்கச் செய்தேயும் இத்தலையில் சிறிது சேஷித்தது
இன்னமும் இருந்து கிலேசப் பட காண்கையாலே இன்னமும் சிறிது சேஷம் இருந்து இருக்க வேண்டுமே -அது கொண்டு சொல்லுகிறது-
——————————————————————————————————————————————————————————————————————————————-
கோளுண்டான் அன்றி வந்து என்னாருயிர் தான் உண்டான்
நாளு நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர்த் தென் காட்கரை என்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே –9-6-8-
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -எம்பெருமான் உடைய அனுபவம் ஆழ்வாருக்கு போலே
எம்பெருமானுக்கும் ஆழ்வார் உடைய அனுபவம் நித்யம் அபூர்வமாய் இருக்குமே
நாள் தோறும் புஜியா நிற்றாலும் பெறாப் பேரு பெற்றால் போலே
கோளுண்டான் அன்றி வந்து என்னாருயிர் தான் உண்டான்
என்னிடம் உபகாரம் கொள்ளாமலே நிர்ஹேதுகமாக
ஆத்மவஸ்துவை அனுபவித்தான்
அன்றிக்கே
இதற்கு முன்பு இப்படி ஒரு சரக்கு கண்டு அறியாதவன் போலே அபி நிவேசம் மிக்கு கொண்டான்
அன்றிக்கே
என்னாலே தான் கொள்ளப்படாது இருக்க தான் என்னைக் கைக் கொண்டான்
நாளு நாள் வந்து-ஒரு நாள் புஜித்து -இது நாம் புஜித்தது அன்றோ என்று பழமை தோன்றி அருசியோடு இருப்பான் அல்லன்
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் இருக்கிறபடி -என்பர் நம்பிள்ளை
என்னை முற்றவும் தானுண்டான் -என்னை -அஹமர்த்தமான ஆத்மவஸ்துவை
அணு பரிணாமாய் அன்றோ -முற்றவும் என்பான் என் என்னில்
அணு பரிணாமமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக் கொலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது தனக்கு ஏற்றமாம் படி கௌரவியா நின்றான் -ஈடு
அணு வஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு –
விதுரம் அன்னம் உபாஹரத் -அன்னம் இட்டார் என்பதை ஏக வசனத்தில் சொல்லி -விதுரான் அன்னானி புபுஜே சுசீனி குணவந்திச -என்று
கண்ணன் அமுது செய்து அருளியதை பஹூ வசனத்தாலே சொன்னது போலே
விசேஷ அர்த்தம் ஈண்டு அனுபவிக்கத் தக்கது
இப்படி அனுபவிப்பனான
காள நீர்த் தென் காட்கரை என்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே-அடிமை புக்கதாக நினைத்து இருப்பது அத்தனையே –
ஆத்மா படும்பாடு வாசாமகோசரம்
எம்பெருமான் உடன் எதிர் அம்பு கோப்பவர்கள் உடம்பை இழப்பதோ
புண்பட்ட துக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ உண்டே
இது ஆழ்வாருக்கே
அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக் குணங்கள் படுத்தும் பாட்டுக்கும் நெடு வாசி உண்டே
——————————————————————————————————————————————————————————————————————————————————————-
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது
பேரிதழ்த் தாமரைக் கண் கனி வாயதோர்
காரெழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே –9-6-9-
கீழே -ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டது என்றார்
அத்தை மேலும் விபரிக்கிறார் -எனதுயிர் பட்டது -ஆருயிர் பட்டது -என்று
குணானுபமே யாத்ரையாக கொண்ட நிதர சூரிகளில் கூட யாரும் இப்பாடு பட்டது இல்லையே
இங்கு எனதாருயிர் பட்டது -அங்கு ஆருயிர் பட்டது -என்று அருளிச் செய்வாராம் எம்பெருமானார்
ஆழ்வார் உயிர் அழிந்ததற்கு ஹேதுக்களை மேல் சொல்கிறார்
பேரிதழ்த் தாமரைக் கண் கனி வாயதோர் காரெழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள் சீர் எழில் நால் தடம் தோள்
திருக் கண்களும்
திரு அதரமும்
திரு வடிவும்
திவ்ய தேசமும்
கற்பகக் கா வென நற்பல தோள்களும் படுத்தின பாடு
தெய்வ வாரி-எம்பெருமானுக்கு ஆழ்வார் இட்ட திரு நாமங்களில் இதுவும் ஓன்று
வாரி -ஜலம் -கடல் -தெய்வங்கள் படும் கடல் -தெய்வங்களுக்கு உத்பாதகன்
தெய்வ வாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது -என்று அந்வயம் –
———————————————————————————————————————————————————————————————–
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரை யப்பான் கடியனே –9-6-10-
உயிரான பாசுரம்
சேதன லாபம் தான் ஈஸ்வரனுக்கு புருஷார்த்தம்
எம்பெருமான் ஸ்ருஷ்டி யவதாராதி கிருஷி பண்ணுவது எல்லாம் ஒரு சேதனன் நமக்கு கிடைப்பானா என்கிற நப்பாசையினாலே
வாசுதேவஸ் சர்வம் ச மகாத்மா ச துர்லப –
எம்பெருமானார் அநாவ்ருத்தி சூத்திர ஸ்ரீ பாஷ்யத்தில்
நச பரமபுருஷஸ் சத்ய சங்கல்ப அத்யந்தப்ரியம் ஜ்ஞாநிநாம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி -என்று
ஜ்ஞாநிநாம் லப்த்வா -ஸ்ரீ ஸூ க்தியால் இப்பாசுர அர்த்தம் வெளியிட்டு அருளுகிறார்
ஆழ்வார் ஸ்வ அனுபவ முகத்தாலே இப்பரமார்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார்
உன்னை காணில் -வாரிக் கொண்டு-விழுங்குவன்-என்று-ஆழ்வார் பாரித்து இருக்க
என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் -என்று தமக்கு முன்பே நெடுநாளாக
பாரித்து இருந்து தனது மநோ ரதம் தலைக் கட்டப் பெற்றான்
ஸ்வ கத ச்வீகாரத்தைக் காட்டில் பரக்கத ச்வீகாரமே வலித்து என்றும்
முற்பட்டதாய் இருந்து கார்யகரம் ஆகும் என்றும் சொல்லிற்று ஆயிற்று
கீழ்ப் பாட்டுக்களில்
என்னுயிர் உண்ட மாயன் -என்றும்
என்னுயிர் தான் உண்டான் -என்றும்
என்னை முற்றவும் தான் உண்டான் -என்றும்
உண்டபடியை சொன்னார்
உண்டவனுக்கு தண்ணீர் அபேஷிதமாய் இருக்குமே
தான் என்னை முற்றப் பருகினான் -என்கிறார் இதில்
இவருடைய உண்ணும் சோறு பருகு நீர் அவன்
அவனுடைய உண்ணும் சோறு பருகு நீர் -ஆழ்வார்-
————————————————————————————————————————————————————————————————————-
கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவமை யாயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவெய்தி நாசம் கண்டீர்கள் எங்கானலே –9-6-11-
பிறவி முடிந்து அதுக்கடியான சம்சாரமும் நசிக்கும் –
கீழ் காட்கரை யப்பான் கடியனே -என்றார்
இதில் கடியனாய்-என்கிறார்
சொல் ஒன்றாலும் பொருள் வேறுபாடும்
அங்கே தன்னை அனுபவிப்பதில் விரைவு கொண்டவன் பொருளில் கடியனே என்றார்
இங்கே கோபத்தை ஏறிட்டுக் கொண்டவன் -கடியனாய்
கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் –
கம்ச விஜயத்துக்கு கொடி காட்டிற்று திருநகரிலே யாய்த்து
ஸ்வாமி விஜயத்துக்கு உரிய வடியார் இருந்த இடத்தே இ றே கொடி கட்டுவது -நம்பிள்ளை
வடிவமை யாயிரத்து -எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்ற ஆயிரம்
இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி -கீதையிலே -ஜன்ம கர்மச மே திவ்யம் எவம் வோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூனா-என்று
தன்னுடைய அவதார சேஷ்டிதங்களை அனுசந்திப்பார்க்கு சொன்ன பலனைப் பெற்று
நாசம் கண்டீர்கள் எங்கானலே -கானல் – ம்ருகத்ருஷ்ணிகை -ஒன்றுமே இல்லாமல் வீணாக ஆசையைப் பிறப்பிக்குமது
சம்சாரம் கானல் என்றது மிகப் பொருத்தமே-
————————————————————————————————————————————————————————————————————————-
திருவாய்மொழி நூற்றந்தாதி –
உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாது இருப்பது இங்கு –86
—————————————————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply