திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–உலகமுண்ட பெருவாயா –6-10-

கீழ்த் திருவாய் மொழியில் அபரிமித ஆர்த்தி உடன் பரம பதத் அளவும் கேட்கும் படி கூப்பிட்டார்
அங்கனம் கூப்பிடச் செய்தேயும் திரு முகம் காட்டி அருளாமையாலே தளர்ந்து நோவு பட்ட ஆழ்வார்
திரு வேங்கட மலையிலே
நித்ய சூரிகளோடு நித்ய சம்சாரிகளோடு திர்யக்குகளோடு வாசி அற
எல்லாரும் வந்து ஒரு மிடறாக ஆஸ்ரயிக்கலாம் படி நித்ய சந்நிதி பண்ணி அருளி இருக்கும் படியை அனுசந்தித்து
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
பெரிய பிராட்டியார் முன்னிலையாக
தம்முடைய அநந்ய கதித்வத்தை விண்ணப்பம் செய்து சரணம் புகுகிறார் –
தேச-கால -பிரகார -அதிகாரி -பல நியமங்கள் இல்லாத
விஷய நியமம் ஒன்றே உள்ளது சரணாகதிக்கு -அதாவது
சௌலப்யாதி குணங்கள் பூரணமாய் இருக்கிற இடமே விஷயமாகை
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான எம்பெருமானே சொல்லப் புகுந்தாலும் சொல்ல ஒண்ணாத குணங்கள்
பூர்த்தியாய் உள்ள அர்ச்சாவதாரத்தில் தலையான திரு மலையிலே சரணாகதி செய்து அருளுகிறார்
ஒன்பது பாட்டாலும் சரண்யன் படி சொல்லி
பத்தாம் பாட்டில் சரணம் புகுகிறார்–

————————————————————————————————————————————————————————————-

உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே –6-10-1-

உன்னுடன் கூடாது இருப்பது பிரளய ஆபத்துடன் ஒக்கும்
ஒரு விபூதிக்கு ஆபத்து வரிலோ நோக்கலாவது
விபூதிக்கு உண்டான ஆபத்து என் ஒருவனுக்கு உண்டானால் நோக்கலாகாதோ –
பிரளய ஆர்ணவத்தில் அழுந்துவாரையோ நோக்கலாவது –
சம்சார ஆர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாவது
அபேஷியாதரையோ நோக்கலாவது
அபேஷித்தார்க்கு உதவலாகாதோ
சரீரத்துக்கு வரும் ஆபத்தோ நோக்கலாவது
ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாவாதோ
ஜல பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது
விரஹ பிரளயத்தில் அகப்பட்டால் நோக்கலாகாதோ
பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது
உன்னால் வந்த ஆபத்தை நோக்கலாகாதோ
சரணம் புகாதாரை ரஷிக்க வேணும் என்ற ஒரு நியதி உண்டோ
சரணம் புக்காரை ரஷிக்கல் ஆகாதோ -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்

பெரு வாயா -ரஷிப்பின் பாரிப்பைச் சொன்னபடி
ருணம் ப்ரவ்ருத்தம் இவம் மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி –
நாதி ஸ்வதஸ் மநா யயௌதிரு உள்ளத்தில் புண்ணோடு எழுந்து அருளினான் இ றே
உலப்பில் கீர்த்தி யம்மானே -முடிவு இல்லாத திருக் கல்யாண குணங்கள்
தனித் தனியாகவும் ராசியாகவும் என்ன முடியாதவை அளவிட முடியாதவை
எதிரிகள் கோஷ்டியாரும் புகழும்படி
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
நிலவும் எப்பொழுதும்
நிரவதிக தேஜோ ரூபமாய் உள்ளும் புறமும் ஒக்க ஒளியாய் இருக்கை
குணங்கள் இல்லாவிடினும் ரஷிக்கா விடினும் விட ஒண்ணாத வடிவு அழகு
நெடியாய் -தொட்ட தொட்ட துறையிலும் கரை காண ஒண்ணாத
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
அடியேன் ஆருயிரே
வடிவு அழகையும் திருக் குணங்களையும் காட்டி
பிரிந்து தரிக்க முடியாதபடி பண்ணி அருளிணவனே
திரு வேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆருயிரே –
திருமலையில் நின்று சேஷத்வ முறையை அறிவித்து
உன்னால் அல்லது செல்லாத படி பண்ணி அருளினவனே
திருமலை பூமிப் பிராட்டிக்கு திலகம் என்னும் ஆபரணமாய் திகழ
குல தொல் அடியேன் -தன் படி சொல்லிக் கொள்கிறார்
அடியானுக்கு அடியோடு அன்றோ சேர்த்தி பெறுவது
அடியைப் பிரிந்து அடியேன் என்றால் தகுதி ஆகுமோ –
அடியேன் உன் திருவடி சேரும் வகையை அருளிச் செய்து அருள வேண்டும்-

——————————————————————————————————————————————————————————————————

கூறாய் நீராய் நிலனாகிக் கொடுவல்லசுரர் குலம் எல்லாம்
சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வக் கோமானே
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே
ஆறா வன்பிலடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே –6-10-2-

ஆகி -ஆக -ஆக்க -என்றபடி
இரு துண்டமாக்கி -நீராக்கி -பின்பு அதுவும் காண ஒண்ணாதபடி வெறும் தரை யாக்கும் திரு வாலி
வலவா -திரு வாழியை அடக்கி ஆள வல்லவனே
தெய்வக் கோமானே –
யாம் கடவுள் என்று இருக்கும் எவ் உலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ என்றால் அது உனக்கு வியப்பாமோ –
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும்
எண்ணெயால் எறியும் விளக்கு ஒழிய
நீரால் எறியும் விளக்கு கண்டு அனுபவிக்கக் காணும்
இவர் ஆசைப் படுகிறது
நீரிலே நெருப்பு எழுந்தால் போலே இருக்கிறது -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்
ஆறா வன்பிலடியேன்-ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் போலே இதுவே நிரூபகம்
சுனைகளில் நீர் வற்றினாலும் ஆழ்வார் அன்பு வற்றாதே
நீ திருமலையிலே நிற்கிற நிலைக்கு பயன் பெற வேணும்
என் அன்புக்கு இரையிட வேணும் –

———————————————————————————————————————————————————————————————

வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா மாய வம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தெண்ணல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திரு வேங்கடத்தானே
அண்ணலே யுன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே -6-10-3-

அருளே வடிவெடுத்த வண்ணம்
தெளிந்த அழகிய அருவிகள்
அருள் வண்ணம் கொள் அணி மேக வண்ணா -அந்வயம்
மருள் கொள் -கண்டார் நெஞ்சை இருளப் பண்ணும் அழகு என்றுமாம்
அழகு மட்டும் இல்லை குண சேஷ்டிதங்களாலும் பெரியவனே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே -உப்புச்ச் சாறு உண்ண தேவ யோனி வேண்டும்
சாதனா அனுஷ்டானங்களுக்கு யோக்யதை உண்டாகும்படி ஆகாச கங்கை நீராடி ஜபம் போன்றவை செய்து வருந்த வேண்டும்
இவ்வமுதாமோ –இன்னார் இனையார் நியதி இல்லை
சிந்தித்த மாதரத்தில் எண்ணம் புகுந்து
ஆரா வமுதாய் அடியன் ஆவி அகமே தித்திப்பாய் –
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன் -ஆகையாலே
எண்ணம் புகுந்து தித்திக்கச் சொல்ல வேணுமோ
இமையோர் அதிபதி சதா பச்யந்தி இமை கொட்டாமல் அனுபவிக்கும் நித்ய முக்தர்களுக்கு அதிபதி
ஆனால்
அது மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலே அன்றோ
எம்போல்வாருக்கு வந்து நிற்கும் இடம் திருமலை
அங்குத்தை அருவிகள் ஔதார்யம் உனக்கு வேண்டாமோ
சர்வஸ்வ தானம் பண்ணுகின்றனவே
ஒன்றும் கொடுக்க வேண்டாம்
திரு உள்ளத்தில் ஐயோ இரங்க கூடாதா

——————————————————————————————————————————————————————————————————

ஆ ஆ என்னாது உலகத்தை யலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-

மகா பாபியான நான் கிட்டுமாறு அருள வேணும் –

ஐதிகம் –
நம்பிள்ளை ஜீயரை ஒருநாள் பஞ்சம உபாயம் என்று கொண்டு ஓன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்
நாட்டிலேயும் அங்கனே இருப்பது ஓன்று உண்டோ என்று கேட்டருள
நான் அறிகிலேன் -இதி சதுர்த்த உபாயம் தான் பகவானாய் இருக்க
வ்யோமாதீதம் சொல்லுவாரைப் போலே அவனுக்கும் அவ்வருகே ஓன்று உண்டு என்று என்கையை நான் கேட்டறியேன் -என்று அருளிச் செய்தார்
ஆச்சார்ய அபிமானம் தான் சித்த உபாயத்துக்கு உள்ளே அந்தர்பூதமாய் நினைக்கத் தக்கது
ஈஸ்வரனைப் பற்றுகை கையைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி-

இப்படியானால் ஆவா வென்னாது -என்கிற பாட்டை அருளிச் செய்யும் பொழுது எனக்கு தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார் என்று
தேவரீர் அருளிச் செய்வது உண்டே அது எங்கனம் -என்று கேட்க
நான் அங்கனே சொல்வதற்கு தாத்பர்யம் கேளாய்
எம்பெருமானே நீ இருக்கும் போது நான் இங்கனே இழக்கலாகுமோ
சித்தோபாயமும் தட்டுப் படலாகுமோ -என்று வெறுத்துச் சொல்வது மாத்ரமே தாத்பர்யம் -என்று அருளிச் செய்தாராம்

தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹி பர்த்தாரம் பரிஷச்வஜே –
சேர்த்தி அழகு –கர தூஷணர் வதம் அநந்தரம் அனைத்து கொண்டதை காட்டி அருளும் -இத்தால் –
திருமா மகள் கேள்வா தேவா –
ச்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே –
இவள் அணைத்த பின்பு -திரு மேனியில் புகுந்த புகர்
அன்றியே
விரோதிகளை போக்குகையாலே வடிவிலே பிறந்த காந்தியை சொல்லவுமாம்

பூ ஆர் கழல் -புஷ்பங்கள் நிரம்பிய திருவடி -பூ போன்ற திருவடி

பூவார்கழல் இங்கு
திருப் பொலிந்த சேவடி -அழகிய மணவாளன்
துயர் அறு சேவடி தேவ பெருமாள்
பொது நின்ற பொன்னம் கழல்

—————————————————————————————————————————————————————————————————————————

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திரு வேங்கடத்தானே
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே–6-10-5-

நாளிட்டுத் தரலாகாதோ என்கிறார்
அதிசங்கை கொண்ட குரக்கனுக்கு சங்கையைப் போக்கி அருளினாய்
குபேரபுத்ரர் சாபம் தீர்த்தாய் இன்னார் சாபம் தான் தீர்ப்பது என்ற நியதி கொண்டாயோ
களிறு அன்ன மேகம் சேரும் -மேகம் அன்ன களிறு சேரும் –
தென்னானாய் வடவானாய் குட பாலானாய் குணபால மத யானாய் –
சோலை மலைக் களிறே
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
யானை தானாகவும் மேகம் தானானகவும் சொல்லலாம் இ றே
உன் கையில் வில் இருக்கவும் நான் இழக்க வேண்டுமோ –

———————————————————————————————————————————————————————————————————–

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி யினமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே –6-10-6-

இமையோர்களும் சௌலப்யாதிகளை அனுபவிக்க பாரிப்புடன் வந்து முக்கரணங்களாலும் வழிபட
மெய்யினால் -பிரதஷின நமஸ்காரங்கள்
நாவினால் ஸ்தோத்ரம்
மனத்தால் -சிந்தித்தல்
குண அவிஷ்காரத்தாலே மானஸ அனுபவத்தை
பண்ணுவித்து புகட்ட ஒண்ணாது
நான் உன் திருவடிகளை பத்தும் பத்தாக கிட்டி
பின்னை விச்லேஷத்துடன் வ்யாப்தமாகாத படி
பொருந்தப் பெறுவது என்றோ என்கிறார்
ஓரடி விடில் சத்தை அற்று இ றே இவருக்கு இருக்கிறது –ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்
பவிஷ்யத் புராணம் -லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ராஜம் விபோ
அதனால் உலகளந்த பிரஸ்தாபம் இதில்-ஆறாம் பத்தில் -சரணாகதி சாரம் -என்பதால் மலிந்து இருக்கும்
மின்கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன்கள்வன் -என்றும்
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த தாள் இணையன்-என்றும்
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன் -என்றும்
திசை ஞாலம் தாவி யளந்ததும் -என்றும்
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்றும்
மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மான் -என்றும்
ஓரடியால் உலகம் தடா வந்த மாயோன் -என்றும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்
மண்ணளந்த இணைத் தாமரைகள் –
இதனால் திருவேங்கடமுடையான் திருவடிகளே
உலகளந்த திருவடிகள்
சௌலப்யம் சௌசீல்யம் காட்டி அருளும் திருவடிகள்-

———————————————————————————————————————————————————————————————————————–

அடியேன் மேவி அமர்கின்ற வமுதே இமையோர் அதிபதியே
கொடியாவடு புள்ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே
நொடியார் பொழுது உனபாதம் காணா நோலாது ஆற்றேனே –6-10-7-

அடியேன் மேவி அமர்கின்ற வமுதே-எம்பெருமானுக்கு ஆழ்வார் சாத்தும்க் திரு நாமம்
இவர் அனுபவிக்கும் அமுதே -இமையோர்கள் அதிபதி
ஒரு நாடாக அவனை அனுபவிக்க இவர் அனுபவம் அதற்க்கு ஒப்பு
ஆகர்ஷன் த்விஜராஹம் அப்யதிஜவாத் -பெரிய திருவடியை இடுக்கிக் கொண்டு விரைவது சிலருக்கு மட்டும் தானே

கொடியாவடு புள்ளுடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே –ஆஸ்ரிதர் இவ்வழகை அனுபவிப்பைக்கு
கொடி கட்டிக் கொண்டு இருக்கிறவனே -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்
மலையில் விளையும் மருந்து சிறக்குமே -ஆர் மருந்து இனி யாகுவர் -அசேதனமாக கூடாதே ஆழ்வாருக்கு
மருத்துவனாயும் மருந்தாயும் உள்ளவன் மலையப்பனே –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே
அவ் அமுதம் புஜிப்பார்க்கு மலை மேல் மருந்து இ றே
அவ்வமிர்தம் புஜிப்பார்க்கு சாய்கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிற படி -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்

உன பாதம் காண நொடியார் பொழுதும் நோலாது ஆற்றேன்
அன்றிக்கே
உன பாதம் காண நோலாது நொடியார் பொழுதும் ஆற்றேனே -என்று அன்வயிக்கலாம் –

சாதனத்தை கண் அழிவற்று அனுஷ்டித்து பலன்
தாழ்பாரைப் போலே படா நின்றேன்
தனியே ஒரு சாதனம் அனுஷ்டிக்கும் அவனுக்கு அது தலைக் கட்டினவாறே பெறுகிறோம் என்றாதல்
அதிலே சில வைகல்யம் பிறப்பப் பட்டு இ றே
பலன் தாழ்த்தது என்று ஆறி இருக்கலாம்
அவனே சாதனமான இவர்க்கு விளம்பித்தால்
அவன் கிருபையும் ஏறிப் பாயாதபடி ஆனேனே
என்னும்பயம் இ றே அனுவர்த்திப்பது -ஈடு

இப்பாசுரத்தை பட்டர் திருவாராதனம் பெருமாளுக்கு அமுது செய்து அருளிப் பண்ணும் போது அனுசந்திப்பது என்று நியமிப்பார்-

———————————————————————————————————————————————————————————————————————

நோலாது ஆற்றேன் உனபாதம் காண வென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி யடியேன் பால் வந்தாய் போலே வாராயே –6-10-9-

நோலாது ஆற்றேன் உனபாதம் காண-என்று ப்ரஹ்ம ருத்ர இந்திரர்கள் சொல்லும் பாசுரம்
உபாய தாரித்ர்யத்தை சொல்லிக் கொண்டு உன்னைக் காண பெறுகிறது என்கிறார் –
ஒரு பாணாசுர யுத்தத்திலே தோற்று போக்கடி அற்றவாறே
இங்கனே வந்து விழுவார்கள் –
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை எடுத்த போது
ஈச்வரோஹம் -என்று இருப்பார்கள்
மூட்டினவாறே -கிருஷ்ண கிருஷ்ண மகா பாஹோ ஜானே த்வாம் புருஷோத்தமம் -என்று
ஸ்தோத்ரம் பண்ணத் தொடங்குவார்கள் -ஈடு –
நுண்ணுணர்வின்-
ஈசாநாத் ஞானமன்விச்சேத்-ஞானம் அளிக்க வல்ல ஸூ சம ஞானம் உடையவன்
விஷத்தை கண்டத்திலே தரித்தவன் ஆகையால் உலகில் தலைவனாக தன்னை அபிமானித்து இருக்கை
அஹிர் புத்ன்ய சம்ஹிதையிலே இவர்கள் உடைய வாக்யங்களை
பிரமாணமாகக் கொண்டு போரா நின்றோமே என்னில் சத்வம் தலை எடுத்த போது சொல்லுமவை எல்லாம் கொள்ளக் கடவோம்
இவை கைக் கொண்டோம் என்னாஇவர்கள் தாங்கள் உத்தேச்யர்கள் ஆகார்கள் –
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் -என்றுண்டே என்று பட்டர் அருளிச் செய்வர் -ஈடு

சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும்-ஆபத்து வந்தவாறே மணாட்டிமார் கழுத்திலும்
தங்கள் கழுத்திலும் கப்படம் கட்டிக் கொண்டு வந்து விழத் தொடங்குவார்கள் -ஈடு

மாலாய் மயக்கி யடியேன் பால் வந்தாய் போலே வாராயே-
மாலாய் மயக்கி வந்தால் போல்
அடியேன் பால் வாராய் -என்று அந்வயம்
கிருஷ்ணனாய்க் கொண்டு உன் குண சேஷ்டிதங்களாலே
அவ் வவதாரத்தில் உள்ளாரை பிச்சேற்றிக் கொண்டு வந்தால் போல்
எனக்காக ஒரு வரத்து வர வேணும் -ஈடு –

————————————————————————————————————————————————————————————————————————–

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே
அந்தோ வடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே –6-10-9-

விஸ்லேஷ விசனத்தை கனக்க அருளிச் செய்கிறார்
மானஸ அனுபவம் கொடுத்து அணைக்க கை நீட்டினால் கிட்டாமல் இருக்கை
வரமாட்டான் என்று இருந்தால் ஆகஸ்மிகமாக தோற்றி அருளுவான்
அன்றிக்கே அநாஸ்ரிதர் விஷயத்தில்
கை புகுந்தான் என்று தோற்றி இருக்கச் செய்தே புரம்பார்
ஆஸ்ரிதற்கு இவன் கிட்ட அரியன் என்று இருக்கச் செய்தே
உட்புகுந்து இருக்கும் படியைச் சொல்லிற்று ஆகவுமாம்–ஈடு

செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே-கண்டார் உடைய சகல தாபங்களும் தீரும்படி பரம போக்யனாய் இருப்பவன்
எனது உயிரே -அனுபவிக்கும்படி பண்ணி பிரியில் தரியேன் என்னப் பண்ணி அருளி
சிந்தாமணிகள் -இத்யாதி
திருமலையில் உள்ளவை
திருவேங்கடமுடையான் திருமேனியில் உள்ளவை
ஒளியால் எப்பொழுதும் பகலாகவே செய்து
படியிடை மாடத்தடியிடை தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரி தாய திரு வெள்ளியங்குடி யதுவே

அந்தோ போக்யமும் குறைவற்று
அவன் தானும் சந்நிஹிதனாய்
எனக்கு ஆசையும் மிக்கு இருக்க
கிட்டி அனுபவிக்கப் பெறாது ஒழிவதே -ஈடு

திருவடிகளை நீங்காமல் இருப்பதால் அடியேன்
தர்சியா நிற்கச் செய்தே
அதுக்கு வர்த்தகமாக கண்ணை மாற வைக்கிலும் பொறுக்க மாட்டேன் -ஈடு
கலவிக்கு உத்தேஜகமாக அந்ய பரத்வம் காட்டுவதையும் பொறுக்க மாட்டேன்-

—————————————————————————————————————————————————————————————————————————————–

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பா
நிகரில் புகழாய் யுலகம் மூன்றுடையாய் என்னை யாள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா வடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –6-10-10-

கீழ் ஒன்பது பாட்டாலும் சரண்யன் உடைய ஸ்வரூபத்தையும் தன்னுடைய ஆற்றாமையையும் சொன்னார்
இதில் தன்னுடைய அபேஷிதம் சிதிக்கைக்காக பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு
தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்யத்தையும் தெரிவித்துக் கொண்டு சரணம் புகுகிறார்
சம்பந்த உணர்ச்சி உள்ளவனுக்கும் அபராத பயத்தாலே புருஷகார புரச்கரணம் அவசியம் ஆகும்கே
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –
ஞானம் ஆனந்தம் போலே ஸ்ரீ யபதித்வமும் நிரூபக தர்மம்
ஆஸ்ரயணம் சமய ப்ரதீஷை பார்க்க வேண்டாம் -ருசி பிறக்க வேண்டும் அத்தனையே
காகாசுரன் தப்பினதும் ராவணன் முடிந்ததும் இவள் சந்நிதியாலும் அசந்நிதியாலும்
இவ்வர்த்தத்தை
ஒரு நாள் பட்டர் பிள்ளை அழகிய மணவாள அரையருக்கு த்வயம் அருளிச் செய்கைக்காக எல்லாரையும் போங்கோள் என்ன
நஞ்சீயரும் எழுந்து இருந்து போய் நம்மைஇராய்- என்று அருளிச் செய்திலர் என்று வெறுத்து இருக்க
அப்போது ஜீயர் எங்குற்றார் என்று கேட்டு அருளித் தேடி அழைத்து கூட வைத்துக் கொண்டு இருந்து
த்வயத்தை அருளிச் செய்யா நிற்கச் செய்தே அப்போது அருளிச் செய்த வார்த்தை விசேஷங்கள் -ஈடு
திருக்குனங்கள் இரண்டு வகை
ஆச்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் என்றும் -ஆஸ்ரித கார்ய ஆபாதகங்கள் -என்றும் –
ஆச்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -வாத்சல்யம் /ஸ்வாமித்வம் /சௌசீல்யம் சௌலப்யம் போன்றவை
தோஷங்களை பார்த்து அஞ்சும் பொழுது வாத்சல்யம் உணர்ந்து தேறி
நம் கார்யம் செய்வானோ சங்கை உண்டானால் ஸ்வாமித்வம் உணர்ந்து தேறி
பராத்பரன் தன்னுடைய தண்மை பார்த்து கிட்டுவானோ அச்சம் தீர சௌசீல்யம் உணர்ந்து தீர
இந்த்ரியங்களுக்கு எட்டாதவனை எப்படி பற்றுவது அச்சம் தீர சௌலப்யம் உணர்ந்து தேறி
நிகரில் புகழாய் -வாத்சல்யம்
உலகம் மூன்று உடையாய் ஸ்வாமித்வம்
என்னை யாள்வானே -சௌசீல்யம்
நிகரில்அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே -சௌலப்யம்
கைங்கர்ய நிஷ்டர் -அமரர்
குணானுபவ நிஷ்டர் -முனிக் கணங்கள்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
புகழ் ஒன்றில்லா அடியேன் -ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் சொல்லிற்று
ஆக இவ்வளவிலும் த்வயத்தின் பூர்வ கண்டம் அனுசந்திக்கப் பட்டது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –
வாசிகம் -வாயால் பிரார்திக்கை
காயிகம் -அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ –அஞ்சலியும் ரஷகன் இருந்த இடம் வருகையும்
மனசிகம் -திண்ணிய அத்யாவசாயம் கொள்ளுதல்
கத்யர்த்தா புத்யர்த்தா -ஜ்ஞானான் மோஷம் அதுவே உற்றது
அஸ்மாதாதிகள் உடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஆழ்வார் பாசுரம் இட்டு அருளிச் செய்தது இத்தனை
இத்தால் ஆழ்வார் உடைய பிரபத்தி வாசிகம் என்னக் கடவது-

—————————————————————————————————————————————————————————————————————

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்துத் திரு வேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –6-10-11-

படி கேழில்லா-ஒப்புயர்வற்ற -படி -ஒப்பு கேழ் -உயர்வு -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
அன்றிக்கே அருள் கொடுக்கும் படிக்கு கேழில்லாப் பெருமானை-என்றுமாம்
ஆஸ்ரித விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வ பாவத்துக்கு ஒப்பில்லா சர்வேஸ்வரன் -ஈடு
பிடித்தார் பிடித்தார்-சாஷாத்தாகவும் பரம்பரையாகவும் -சம்பந்த சம்பந்திகளை சொன்னதாக ஒரு நிர்வாஹம் –
அன்றிக்கே சொல்லை பற்றினவர்கள்
பொருளைப் பற்றினவர்கள் என்றுமாம்
திரு நாட்டிலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்
இந்த திருவடியே தஞ்சம் என்று அவனே காட்டி அருளி நிற்கிறான்
கிரீடம் ஸ்ரீ ரெங்கே சயிது–நிஹி நாநாம் முக்கியம் சரணமிதி பாஹூஸ் ததிகர ஸ்புடம் ப்ருதே பாதாம்புஜ யுகளம் ஆஜாநு நிஹித -பட்டர்
முடிப்பான் சொன்ன வாயிரம்
தம் மநோ ரதத்தை நிறைவேற்றிக் கொள்ள செய்த ஆயிரம் என்றார் சிலர்
பல நீ காட்டிப் படுப்பாயோ
என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே
திரு உள்ளத்தாலே அருளிச் செய்த ஆயிரம் -என்பர் நம்பிள்ளை –
திரு வேங்கடத்துக்கு இவை பத்தும் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் –
திரு வேங்கடத்துக்கு பகுத்துக் கொடுக்கப் பட்ட பத்து –
இவர் பண்ணின பிரபத்தியே நமக்கு எல்லாம்
தனித்து வேண்டா
இப்பாசுரத்தை சொல்லி பலத்திலே அன்வயிக்கும் இத்தனையே
நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கும் இரங்குமா போல
இவரை நினைத்து இப்பத்தும் கற்றார் பக்கலிலும் ஈஸ்வரன் பிரசன்னனாம்
ஸ்ரீ வீபிஷண ஆழ்வான் உடன் வந்த நால்வர்க்கும் அவன் பண்ணின பிரபத்தியே அமைந்தது இ றே
இவனுடையவன் என்று எதிர் தலைக்கு தோற்ற இருக்கும் அத்தனையே வேண்டுவது –ஈடு-

————————————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணே நெஞ்சமே யுள் –60-

———————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading