திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை–நீராய் நிலனாய்த் தீயாய்–6-9-

கீழ் திருவாய் மொழியில் பறவைகளை நோக்கி தூது செல்ல வேண்டினார்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமால் -பஷிகள் இரங்காதோ -இரங்குதல் மனம் அழிகை
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே -பலன் பலித்ததே அவர்கள் இடம் முன்னமே
நம்மிடம் பிரம்மாஸ்திரம் -பெரும் மிடறு செய்து கூப்பிடலாமே பரபதத்து அளவும் -பரம சேதனன் -தரித்து இருக்க மாட்டாமல்
கால் குலைந்து வரும்படி –
உள்ளம் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -தசையிலும் ஒரு அபி நிவேச விசேஷத்தாலே உரக்கக் கூப்பிடுகிறார் –

பிராட்டி சிறை இருந்தது பர அனுக்ரஹத்தாலே ஆனால் போலே
இவருடைய வியசனமும் பர அனுக்ரஹ கத்துக்கு உடலாய் இருக்கிறபடி
அவள் சிறை இருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைத்து இன்று நாடு எல்லாம் வாழ்வது போலே
அன்று இவர் தாம் வ்யசனப் பட்டாரே யாகிலும் இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் லோகத்துக்கு தண்ணீர் பந்தல் யாயிற்று
திருக் குழல் ஓசையால் திருவாய்ப்பாடியில் பெண்கள் எல்லாம் பட்டதை
தம் மிடற்று ஓசையால் அவன் தான் படும்படி பண்ணுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூ க்தி

இப்படி தூத ப்ரேஷணம் பண்ணியும்
எம்பெருமான் வரக் காணாமையாலே
அவனைத் தம்முடைய பெரிய ஆர்த்தியோடே கூட
திரு நாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டு அழைக்கிறார் -ஆறாயிரப்படி-

—————————————————————————————————————————————————————————————————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால்
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே –6-9-1-

எப்பொருளுமாய் நீ நிற்கும் படியை அறியாமல் இல்லை
சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களும் -உனது திவ்ய மங்கள விக்ரஹ வேஷத்தை கண்டு களிக்க ஆசை பெருக
ஒரு நாளாகிலும் காட்சி தந்து அருள காண் நான் கதறுவது
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை யாவீர் அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் -பெரிய திருமொழி -4-9-5-
அந்தராத்மதையில் நான் திருப்தி பெறுவேன் அல்லேன்
விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனன் -இந்த ரூபத்தை காட்டினது போதும்
உன்னுடைய அசாதாராண திரு உருவத்தை காட்டி அருள வேணும் -என்று அபேஷித்தமை இங்கு ஒப்பிடத் தக்கது –

————————————————————————————————————————————————————————————————————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே
நண்ணி யுனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி யொருநாள் ஞாலத்தூடே நடவாயே –3-9-2-

பிரகிருதி மண்டலத்துக்கு வர நிர்பந்திப்பதோ என்ன மாவலி போல்வார்க்கு சஜாதீயமாய் வந்து அருளினாயே
கௌபீ நம் கடி ஸூ த்ர சீம் நீ கடயன் மௌஞ்ஜீம் அபிவ் யஞ்ஜயன்
க்ருத்திம் க்ருஷ்ணம் ருகச்ய வஷசி வஹன் ஆஷாட மம்சேர்பபயன்
ஸ்வா த்யாயஸ் வரசம்பதா பரிஷதாம் ப்ரீதிம் சமுத்பாதயன் யச்ஞாயை பலி யஜ்ஞவாட நிகடம் ப்ராப்தோ வடு பாது வ-என்னும்படியான அழகு பொலிந்து
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக –
மன்னன்தான் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த –
ஆசூர பிரக்ருதியான்ன அவள் மகிழ்ந்தது மண்ணும் விண்ணும் மகிழ்
ஸ்ரீ வாமன மூர்த்தி கார்யம் செய்து அருளா விடில் அழிவார் ஆகையால் மகிழ என்றுமாம்
வலம் காட்டி –
ஔதார்யம் என்ற ஒரு குண லேசம் கிடைக்கையாலே
ராவணாதிகளைப் போலே அம்பாலே அளிக்கப் போகாதே
அழகாகிற பலத்தைக் காட்டி வாய் மாளப் பண்ணின படி –
சுக்ராதிகள் உடைய நிரோதம் உண்டாய் இருக்கச் செய்தே இ றே
அழகுக்குத் தோற்று கொடுத்துக் கொண்டு நின்றபடி -ஈடு
மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளியதும்
நமுசியை வானில் சுழற்றியதும் முதலான மாயங்கள் –
நண்ணி யுனை நான் கண்டு உகந்து கூத்தாட –
மாவலி இழவோடே முடிந்து போனான்
இந்த்ராதிகள் பேறு பெற்றோம் என்று களித்து போனார்கள்
அப்போது வடிவு அழகைக் கண்டு உகந்து கூத்தாட பெற்றார் ஒருவரும் இல்லையே -அந்த குறை தீர
நண்ணி யொருநாள் ஞாலத்தூடே நடவாயே-நான் இருந்த இடத்தே வந்து கிட்டி
உன் நடை அழகைக் கண்டு அதிலே ஈடுபட வல்ல என் முன்னே ஒரு நாள் நடந்தால் ஆகாதோ –

—————————————————————————————————————————————————————————————————————————————-

ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப் பல நாள் உகம் தோறும் உயிர்கள்காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -6-9-3-

சம்பவாமி யுகே யுகே -செய்து அருளினாயே -எனக்காக ஒரு திருவவதாரம் செய்வது அரிதோ –
ஸ்ரீ ராமவதாரத்தில் சிம்ஹ விக்ராந்த காமினம் -காட்டிலே -குருடர்கள் முன்னே போலே -நடை அழகு காட்டி அருளினாய்
காண விரும்பும் என் முன்னே காட்டி அருளினால் ஆகாதோ –
ஐதிகம்
வட தேசத்தில் நின்றும் போரப் பாட வல்லராய் இருப்பார் ஒருவர் பெருமாளை திருவடி தொழ வேணும் என்று வர
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையரோடு தீர்த்தத்தின் அன்று இரா திருமாலையைப் பாடி சமைந்து
பெருமாளை ஒரு மத்த கஜத்தை கைப் படுத்துமா போலே ஏந்தி வசமாக்கிக் கொண்டு
நாயந்தே தேவரீர் திருவடிகளுக்கு போர நல்லான் ஒருவன் தேவரீரை திருவடி தொழ வேணும் என்று
நெடும் தூரம் வந்து இருக்கிறது இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி அருள வேணும் -என்ன
அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டு திருப் புன்னை கீழல் நின்றும் அவர் நின்ற இடத்து ஏறத் திருக் கைத்தலத்தே
எழுந்து அருளி திரு விண்ணப்பம் செய்வார்களை அருளப்பாடிட்டு
வாரிகோள்-நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்ததாம் -என்று திரு உள்ளமானார் –
நின்றும்
பல இடங்களில் நின்று அருளியும்
வாலி வதம் பின்பு அவஷ்டப்ய ச திஷ்டந்தம் -தாரை நெஞ்சு பறி கொடுத்தாள்
நிலையார நின்ற அழகில் ஈடுபட்டு பேசினாள் இ றே
கிடந்தது
கிடைகள் பல
பாஹூம் புஜகபோகாபம் உபதாயாரதி சாமிதன அஞ்சலும் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மகோததே –
கடல் கடல் உடன் ஸ்பர்சித்தால் போலே கடல்வண்ணன் கடல் நோக்கிக் கிடந்த கிடக்கை
ப்ரதிசயனபூமிகா பூஷித பயோதி புளின-ரகுவீர கத்யம்
இருந்து
பர்ண சாலையில்
இன்னம் எத்தனை நாள் தளர்வேன் –

——————————————————————————————————————————————————————————————————————————

தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரருடல் வேறா
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்த்ரன் விண்ணவர்ச் சூழ
விளங்க வொரு நாள் காண வாராய் விண் மீதே –6-9-4-

உன்னைக் காண எனக்கு உள்ள விரோதிகளையும் நிரசிக்க வல்லவன்
திருக்காலாண்ட பெருமான் –
நமக்கு மட்டும் அல்ல
அவனுக்கும் ரஷகம் -சகடாசுர நிரசனத்தில் காட்டி அருளி –
அசுரர் பன்மையில் சொன்னது சகடாசுரனின் பயங்கரத்வத்தால்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்னும் படி
தேவர்கள் புடை சூழ தோன்றி அருள வேணும்
யானைக்கு வந்து திரு முகம் காட்டி அருளினது போலே-

————————————————————————————————————————————————————————————————-

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீது இயன்ற புற வண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ -6-9-5-

பஞ்ச பிரகாரங்களிலும் தோன்றி அருளி அடியார்களை உகப்பிக்கும் நீ கண்ணுக்கு தோற்றாமல் இருக்க தளராமல் இருப்பேனோ –
வைகுண்டே து பர் லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணோர்
அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதஸ் சஹ –
ஒண் டொடியாள் தானுமாய் நித்யர் முக்தர்கள் உடன் விண் மீது இருந்து அருளியும்
விரோதி நிரசன சிரமம் ஆற பரம போக்யங்களான ஆராமம் சூழ்ந்த கோயில் திருமலை திவ்ய தேசங்களில் -மலை மேல் நிற்பாய்
எண் மீது இயன்ற புற வண்டத்தாய்-எண்ணுக்கு மேலே வர்த்திக்கை -எண்ண முடியாமை
அண்டா நாம் து சஹாஸ்ராணாம் சஹாஸ்ராண்ய யுதானி ச ஈத்ருசா நாம் ததா தத்ர கோடி கோடி சாத்தானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உள் மீது -ஹிருதயத்தின் உள்ளே சஞ்சரித்து
உள் மீது இரண்டாகி ஆத்மாவுக்கு உள்ளும் புறம்பும் சஞ்சரித்து
உருக்காட்டாதே யொளிப்பாயோ-குணானுபவத்தால் தரிப்பார் சிலர் உண்டு
அவர்கள் கோஷ்டியில் சேர்ந்தவன் அல்லேன் –
ஆசை உடையவனை வஞ்சிக்காதே –

————————————————————————————————————————————————————————————————————-

பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –6-9-6-

நீர முயற்சி செய்ய வேண்டாவோ எண்ண
உலகம் அபேஷிக்கவோ நீர் தாவி அருளினீர் -சாதனா அனுஷ்டானம் பண்ணினார் உண்டோ
எல்லார் தலையிலூம் திருவடிகளில் வைத்து அருளினார் -யோக்யதை பாராமல் -வசிஷ்ட சண்டாள விபாகம் அற
பாய் -பரவுதல் -ஓரடியைப் பரப்பி வைத்தருளி
என்னை உன் திருவடிகளிலே சேர்க்க வேணும் என்று
லோக விக்ரமண வ்யாஜ்யத்தாலே
விலை இல்லாத தொரு ரத்னம் கெடுத்துத் தேடுவாரைப் போலே
பெரிய வருத்தத்தோடு உன் திருவடியாலே என்னைத்
தேடிக் கொண்டு திரிந்த உன்னை -ஆறாயிரப்படி
என்னைத் தேடி வந்த காலத்தில் நான் அகப்பட வில்லை
இன்று உன்னை தேடி நான் வர அதுபோலே நீயும் அகப்படாமல் உள்ளாயோ
தீயோடு சேர்ந்த மெழுகு போல தம்முடைய நிலை
அக்னியில் புகுந்து கரிந்து போகவும் பெறாதே
தூரத்தில் இருந்து அழியாது இருக்கவும் பெறாதே
உருகுவது -வலிப்பது ஆகிறபடி
ஜீவிக்கவும் பெறாதே
முடியவும் பெறாதே
இப்படி எத்தனை காலம் திரிவேனோ-

————————————————————————————————————————————————————————————-

உலகினில் திரியும் கரும கதியாய்உலகமாய்
உலகுக்கே யோர் உயிருமானாய் புற வண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய வருவாயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே –6-9-7-

சாதனரூப கருமங்கள் எல்லாம் நீ இட்ட ழக்கு
பலமத உபபத்யே -ப்ரஹ்ம சூத்திரம்
ச ஏவஹி சர்வஜஞ சர்வ சக்திர் மகோதர —ஐஹிக ஆமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வ ரூபலாப்தி
ரூபமப வர்க்கஞ்ச தாதுமீஷ்டே நஹி அசேதனம் கர்ம ஷணத் வம்சி காலாந்தர பாவிபல சாதனம் பவிதுமர்ஹதி -ஸ்ரீ பாஷ்ய காரர்
உலகமாய் -அந்த கர்மம் அனுஷ்டிப்பவர்களும் நீ இட்ட வழக்கே
அவன் அருளின கர்ண களேபரங்களைக் கொண்டும்
அவன் கொடுத்து அருளின இசைவையும் கொண்டும்
உலகுக்கே யோர் உயிருமானாய்-
சரீரத்தை ஆத்மா அதிஷ்டித்துக் கொண்டு அபிமாநிப்பது போலே
அனைத்தைக்கும் அந்தராத்மாவாய் நோக்கி அருளுபவன்
உனது உடலான என்னை நோக்கி அருள வேண்டாவோ
அலகிலாமை -எண்ணிக்கை இல்லாமை -அறிவு இல்லாமையில் அந்வயம்
எண்ணிக்கை இல்லாதபடி விளங்கும் அஞ்ஞானத்தை உடையேனான எனது விஷயத்தில் கிருபை பண்ணி அருள வேணும்-

——————————————————————————————————————————————————————————————————–

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஓன்று அறியா வடியேன் ஆவி திகைக்கவே –6-9-8-

உபாயமும் உபேயமும் நீயே என்ற அத்யாவசாயமும் கூடக் கலங்கும்படி உன்னைக் காட்டாதே வஞ்சித்து
சப்தாதி விஷயங்களைக் காட்டி என்னை இன்னம் கெடுக்கவோ பார்த்து அருளிற்று
அறிவிலேனுக்கு -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் இப்படி சொல்வது இந்த அத்யாவசாயம் குலையாத படி காத்து அருள வேணும் என்றபடி
அறிவார் உயிர் ஆனாய் -ஞானிகளுக்கு உயிர் ஆனவனே -ஞானிகளை உயிராக கொண்டவனே
என்னதுன்னதாவியிலே
அறிவார் ஆத்மா வென்று
அவன் மதம் தோன்றும் -நாயனார்
ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் –
வெறி கொள் சோதி மூர்த்தி-நீ அருளாய் விடினும் விட ஒண்ணாத உன் வடிவு அழகு
வெறி -பரிமளம் -சர்வ கந்த
அடியேன் நெடுமாலே இப்பொழுது எட்டாமல் இருப்பவனே
வடிவைக் காட்டி வ்யாமோஹத்தை விளைவித்தவனே –
பிராட்டியை அசோகவனத்தில் வைத்தது பொலொஎ
என்னை சம்சாரத்தில் இருத்தி நலியப் பண்ணி அருள திரு உள்ளமா
முன்பு இழந்தது போராதா
அநந்ய கதியாய்
அநந்ய பரனே இருக்கிற என்னுடைய மனஸ் கலங்கும்படி செய்து அருள வேண்டாம் —

———————————————————————————————————————————————————————————————————————-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6-9-9-

உம்மை இங்குக் கெடுத்தது என் என்ன –
கண்ட காட்சியிலே இழுத்துக் கொள்ளக் கடவதான
விஷயங்கள் பரிமாறுகிற இடத்தில் வைத்தாய் ஆகில்
இனிக் கெடுக்கை என்று ஓன்று உண்டோ-என்கிறார்
என்னை இங்கே வைத்த போதே குழியை கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாய் அன்றோ -என்கிறார் -ஈடு
சேதனர் நலியுமாபோலே நலிவதால் ஐவர்
அசுணமா முடியுமா போலே
பகவத் அனுபவ ஏக பரனாய்
ம்ருது ப்ரக்ருதியாய் இருக்குமவன்
விஷய தர்சனத்தாலே முடியும்படி -ஸ்ரீ வசன பூஷணம்
அசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ச்ரவணத்தாலே
நெஞ்சு நீர்ப்பண்டமாய் இளகின தசையிலே
அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு பட்டுக் கிடக்குமா போலே யாயிற்று
பகவத் அனுபவம் ஒன்றிலுமே தத்பரனாய் தத் குணரசத்திலே நைந்து
இதர விஷயங்களின் பேர் கேட்கிலும் மாந்தும்படி
ம்ருது பிரக்ருதியாய் இருக்குமவன்
பகவத் ஏக போகத்வ ரூப ஸ்வரூப நாசகங்களான விஷயங்களை கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும்படி -ம முனிகள்
அடியேனை திருவடி சேர்த்துக் கொள்ளும் அந்நாள் இந்நாள் ஆக திரு உள்ளம் பற்றலாகாதோ
பிள்ளான் உடைய அந்திம தசையில் நஞ்சீயர் நோவு அறியப்புக்கிருந்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ என்று பல காலும் சொல்ல
இத்தைக் கேட்டு ஜீயர் அழ
ஜீயரே நீர் கிடந்தது அழுகிறது என்
அங்குப் போய் பெறப் புகுகிற பேறு
இதிலும் தன்னியது என்று தோற்றி இருந்ததோ -என்று பணித்தானாம் –
தாமரைகட்கே -உவமை ஆகு பெயர் -தாமரை போன்ற திருவடிகட்கே -என்றபடி-

———————————————————————————————————————————————————————————————–

குறுகா நீளா இறுதி கூடா வெனை யூழி
சிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும்
மறுகாலின்றி மாயோன் உனக்கே யாளாகும்
சிறு காலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே -6-9-10-

உனது கைங்கர்யம் அல்பமாயும் அஸ்திரமாயும் இருந்தாலும் கூட
அத்தையே வேண்டுவேன்
கைவல்யம் வேண்டாம் -அது குறுகா நீளாது-சிறுகா பெருகாது இருக்குமே
அந்தோ -பர்வத பரமாணுவுக்கு இருந்த வைஷம்யம் சொல்லும்படி ஆவதே -ஈடு
கைங்கர்ய ரசத்துக்கும்
கைவல்ய ரசத்துக்கும்
உள்ள வாசியை நான் எடுத்து உரைப்பது பரிதாபாஸ்பதம்-தெரியில் -நிரூபித்து பார்க்கில் –

——————————————————————————————————————————————————————————————————

தெரிதல் நினைத்தல் எண்ணலாகாத் திரு மாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்டராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-

அனன்யார்ஹ சேஷ பூதராக்கும்
நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ நமேதயா ந பஹூ நா ஸ்ருதேன யமேவைஷ வ்ருணுதே
தேன லப்ய தச்யைஷ ஆத்மா விவ்ருண்தே தநூம் ஸ்வாம் -கடோபநிஷத்
உரிய தொண்டராக்கும்-சம்சாரம் நன்றுமாய் -பகவத் விஷயம் தீதானாலும் அத்தை விட மாட்டாதவர்கள் -ஈடு
அதாவது ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யர்
குண க்ருத தாஸ்யர் அல்லர்-

————————————————————————————————————————————————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரிமாறன் சொல்லை
ஒதிடவே வுய்யும் வுலகு –59-

—————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading