ஸ்ரீ கீதாசார்யன்-தைவி ஹ்யேஷா குணமயீ மமமாயா துரத்யயா —மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-
இந்த திருமுக பாசுரத்தில் நம்பிக்கையால் பெரிய பிராட்டியார் முன்னாக மாயாப்பிறவி மயர்வருத்து
நித்ய கைங்கர்ய சாம்ராஜ்யம் பெற திருவேங்கடமுடையான் திருவடிகளில் ஆர்த்தராய் சரணம் புகுந்தார்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முன்பே தேவர்கள் சரணாகதி பண்ணினதால் பெருமாள் அது பலிக்க வில்லை
ஆழ்வாருக்கு முன்பே சிலர் சரணா கதி பண்ணி இருப்பார் போலும்-அதனால் பலன் அளிக்க எம்பெருமான் தாழ்த்தான்
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பத்தலைச் சிறப்பப்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி – –
முனிவர்கள் கூடி யாதோ வாஸோ நிவர்த்தந்தே -திரும்பி வந்தன
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் செவ்வனே பேச வல்ல திவ்ய பிரபந்தம் திரு வவதரிக்க வேணும் -என்று பிரார்த்திக்க
திருவவதரித்த பின்பு
எம்பெருமானுக்கு மேலும் இன்னம் குணங்களும் விபூதிகளும் உண்டாக வேணும் -என்று நினைத்தார்களாம்
இத்தையே -எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் –
அவனுடைய குண விபூதிகள் எல்லாம் கபளீ கரிக்கப் பட்டுவிட்டன – –
ஆக திருவாய்மொழி பாடி தலைக் கட்டி முடிக்க ஆழ்வாரை இன்னம் வைத்தான் ஆயிற்று
முன்னமே பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ -வயிறு எரிந்தார்
இன்னம் அகற்றுமவற்றின் நடுவே இருத்தி துடிக்க வைப்பது தருமமோ என்கிறார்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் ஏன் செய்யா மற்று நீயும் விட்டால் -என்கிறார் இதில் ஆறாம் பாட்டால் –
திருவுக்கும் திருவாகிய செல்வா -என்பதிலும்
மாற்றம் உள -என்பதிலும்
இரண்டு திரு மொழியாலும் மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆரங்கம் கூற அவதரித்த திருமங்கை ஆழ்வார்
இத் திருவாய் மொழியை விவரியா நிற்பர்-
முடியானே -யில் கரணங்களை உடைய இவருக்கு
இந்த்ரிய வச்யத்தை உண்டு என்னும் இடம்
கீழோடு விருத்தம் அன்றோ என்னில்
அசல் அகம் நெருப்புப் பட்டு வேவா நின்றால்
தாம்தாம் அகம் பரிஹரியாது இருப்பார் இல்லை இ றே
புற்றின் அருகே பழுதை கிடந்தாலும் சர்ப்பம் என்று புத்தி பண்ணி பிரமிக்கக் கடவதே இருக்கும் இ றே
அங்குத்தைக்கும் இங்குத்தைக்கும் பொதுவான உடம்போடு இருக்கிற படியைக் கண்டார்
நாட்டார் அடைய இந்த்ரிய வச்யராய் கிடந்தது நோவு படுவதைக் கண்டார்
இது நம்மளவில் வரில் செய்வது என்-என்று அஞ்சிக் கூப்பிடுகிறார் -ஈடு ஸ்ரீ ஸூக்திகள்-
——————————————————————————————————————————————————————————————————————————
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே யிமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்றுடைய
அண்ணலே யமுதே யப்பனே என்னை யாள்வானே –7-1-1-
பாஹ்ய சத்ருக்கள் போலே இல்லாமல் -உள்ளேயே இருந்து நலியும் பஞ்ச இந்த்ரியங்கள் -ஆந்த்ர சத்ருக்கள்
ஐவரால் -சேதன சமாதியால் –
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து -என்பர் திருமங்கை ஆழ்வாரும்
நீ ஹ்ருடீகேசன் அல்லையோ -நீ இட்ட வழக்கே இவைகள்
திருவடிகளை கிட்டாது ஒழிகையே ஆத்மாவுக்கு நலிகை
இன்னம் -அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்ற பின்பும்
ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது
பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது
பயாபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞாதையே சித்திக்கும் —
ஆனால் நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்கிற பாசுரங்களுக்கு அடி என் என்னில் -பந்த்த அனுசந்தானம்
பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே நிருபாதிக பந்துவாய் சக்தனாய் இருக்கிறவன் விலக்காது ஒழிந்தால் அப்படி சொல்லலாம் இ றே
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினால் என்னக் கடவது இ றே –ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்திகள்
சம்பந்த அனுசந்தானாத்தாலே அருளிச் செய்த பாசுரங்கள் என்றதாயிற்று
இத்திருவாய் மொழியில் முன்னடிகள் எல்லாம் அஞ்சிக் கதருகிறபடியாயும்
பின்னடிகள் எல்லாம் அச்சம் தீர எம்பெருமான் படிகளை பேசும் படியாகவும் செல்லா நின்றது
பிள்ளை திரு நறையூர் அரையர்
இப்பாட்டுக்களில் முன்னடிகள் எல்லாம்
புலியின் வாயில் அகப்பட்ட பிரஜை தாய் முகத்திலே விழித்துக் கொண்டு
புலியின் வாயில் கிடந்தது நோவு படுமா போலே யாய் இருக்கிறது –
என்று பணிப்பராம்
எண்ணிலா பெருமாயனே
எண்ணிறந்த ஆச்சர்யமான குணங்கள் உடையவன்
அன்றிக்கே
எண்ணிறந்த செயல்களைச் செய்ய வல்லதான பிரக்ருதியை பரிகரமாக உடையவனே -என்றுமாம்-
—————————————————————————————————————————————————————————————————————————————-
என்னை யாளும் வன்கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
கன்னலே யமுதே கார்முகில் வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே –7-1-2-
ஈஸ்வரன் சேஷி -ஜீவாத்மா –அடிமை -மனஸ் –அவனுக்கு விதேயம் -இந்த்ரியம் -அதுக்கு விதேயம்
இந்த முறை கெட்டு இந்த்ரியங்கள் என்னை ஆள்வதே
கோவை ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார் -நான் அவரைப் பொறுக்கிலேன் -பெரிய திருமொழி -7-7-9-
உன் அனுபவத்துக்கு ஏகாந்தமாக இவற்றை வைக்காமல்
அகற்ற நீ வைத்த மாய வால் எயம்புலன்கலாம் அவை நன்கு அறிந்தேன்
உன்னை நணுகா வகை செய்து –
இவை நலிவதை அறிவிக்க ஒண்ணாத படி கண் மறைய போகிறாயே -போதி கண்டாய்
உன்னை அனுபவிக்க வேணும் என்று
போந்த பிராட்டியை மாய மானைக் காட்டி பிரித்து
ஏகாஷி ஏகர்ணிகள் கையில் காட்டிக் கொடுத்து
உன்னைக் கொண்டு அகன்றால் போலே கிடாய் இதுவும் -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள்
கன்னலே யமுதே
உன்னுடைய பரம போக்யதையை நீ காட்டிக் கொடுக்காமல் இருந்தால் இவைகள் பின்னே ஓடித் திரிய ருசி உடையவன் ஆவேன்
இப்பொழுது உன் அனுபவத்துக்கு விரோதியாக இவை என்ன பாடு படுத்துமோ என்று அஞ்சா நிற்கிறேன்
கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்-காக்கின்ற நேமி –காக்கின்ற நேமியான் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர் -திரு விருத்தம்
கையும் திரு ஆழியுமான அழகைக் காட்டி புறம்பு தள்ளலாமா
வினையேனுடை வேதியனே –
தேவானாம் தானவாநாஞ்ச சாமான்யம் அதி தைவதம் -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் சொல்லுகிறபடியே
ஊர்ப் பொதுவாய் இருக்கிற நீ என்னளவில் வந்தவாறே
வேதைக சமதி கம்யனாய்
இன்று இருந்து ஒலைப்புறத்து கேட்கும்படியான பாபத்தை பண்ணுவதே நான் -ஈடு ஸ்ரீ ஸூ க்தி
வினையேனிடை வேதியனே -தப்பான பாடம்
வேதியன் -வேத வேத்யன் -என்றபடி-
—————————————————————————————————————————————————————————————————————————————–
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடிச் சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதியாகி யகலிடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீண் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே –7-1-3-
வேதியா -அடித்து ஹிம்சித்து
யாவஜ் ஜீவ மக்நிஹோத்ரம் ஜூ ஹூயாத் -என்றால் சாயம் ப்ராதா -என்று ஒரு காலங்களிலே ஒதுக்கா நின்றது இ றே
அங்கன் அன்றிக்கே சர்வ அவச்தைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டு
சொன்னது எல்லாம் இவற்றின் பக்கலிலே யானபடி
போகத்துக்கு பாரித்தது எல்லாம் கிலேசத்துக்கு உடலாவதே -ஈடு ஸ்ரீ ஸூ க்திகள் –
ஆதி யாகி -இத்யாதி
ரஷிப்பது ஒன்றே உன் தொழிலாக காண்கிறதே
நீ இங்கனே என்னை நலிய திரு உள்ளம் பற்றலாமோ
ரசிப்பதற்கு என்றே முடி கவித்து இருப்பவன் அல்லையோ-
——————————————————————————————————————————————————————————————————————————————–
சூது நான் அறியாவகை சுழற்றி யோர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின்னகம்பால் ஒடுக்கி ஒராலினீளிலை
மீது சேர் குழவி வினையேன் வினை தீர் மருந்தே –7-1-4-
சூது- க்ரித்ரிமம் பொருளில் இங்கு இல்லை
தொழக் கருதுவதே துணிவது சூதே -என்றும்
சூதாவது எந்நெஞ்சத்து எண்ணினேன் -என்றும்
சூது -உறுவது
போதி கண்டாய் –
கூட நிற்கில் இது எல்லாம் பட வல்லேன் கிடீர்
கூட நிற்கில் கண்ணோட்டம் பிறக்கும் என்று
கடக்கப் போவாரைப் போலே -ஈடு
ஆபத் சகத்வனாய் இருந்து வைத்து நீ செய்வது தகுமோ
வினையேன் வினை தீர் மருந்தே
பாபமே நிரூபகமான –
பாபங்களைப் போக்கி ஈடுபடுத்தி அருளிய பின்பு விஷய பிரவணனாம் படி வழி தேடலாமோ
இந்நிலத்தில் விட்டு வைப்பது விஷய பிரவணனாம் படிக்கு வழி அன்றோ-
———————————————————————————————————————————————————————————————————————————————–
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா வடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி யாகுவார் அடலாழி ஏந்தி யசுரர் வன்குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானேயோ –7-1-5-
செக்கிலிட்டு -சரீரம் ஆகிற செக்கிலே தள்ளி
நேர் மருங்கு உடைத்தா வடைத்து -நேரிலும் பக்கங்களிலுமாக நிறுத்தி
அபி மன்யு என்ற பாலனை நாழிகைக்கு
அதி ரத மகா ரதர்கள் அடங்கலும்
சூழப் போந்தால் போலே
இந்த்ரியங்களை கையடைப்பாக்கி -ஈடு
மருங்கு வேர் அறுத்தாய் -பக்க வேரோடு அறுத்தவனே
சப்தாதி விஷயங்கள் ஆகிற ஐந்து நோய்களால் தீர் மருந்து இன்றி -வேறு ஒரு பிரதிகிரியை பண்ண ஒண்ணாத படி
சர்வ சக்தினான சர்வேஸ்வரனாலும் போக்கப் போகாதவை
நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் -உன்னிடம் உள்ள விசுவாசமும் குலையும்படி –
நீ ரஷகன் இல்லை பஷகன் என்று சொல்ல வேண்டிய படி
மருத்துவன் நீயே கை விட்ட பின்பு -ஆர் மருந்து இனி யாகுவார்
உயர்திணையாக பேசி தம்முடைய மருந்து அசேதனம் இல்லை பரம சேதனன் தான் என்று காட்டி அருளுகிறார்
நிர்வாணம் பேஷஜம் பிஷக்
அடலாழி ஏந்தி யசுரர் வன்குலம் வேர் மருங்கு அறுத்தாய்-அசுரர் ராஷசர் அனைவரையும்
ஸூ தர்சன சதகம் காசீ விப்லோஷ சைத்ய ஷபண–
விண்ணுளார் பெருமானேயோ -ஒருத்தன் சிறை இருக்க
பிதாவும் மாதாவும் ப்ராதாக்க்களுமாய் கல்யாணம் செய்யக் கண்டு
தாம் கூடப் பெறாதே நோவுப்படுமா போலே
நித்ய சூரிகளும் பிராட்டியும் அவனுமாக பரமபதத்தில் இருக்கும்படியை அனுசந்தித்து
அங்கேயே கேட்கும்படி கிடந்தது கூப்பிடுகிறார்
ஹா ராமா ஹா லஷ்மணா ஹா சுமித்ரே -என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டால் போலே
பரமபதத்தில் இருக்கும் அணி கலங்கும் படி கூப்பிடுகிறார் -ஈடு
——————————————————————————————————————————————————————————————————————————
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்
பண்ணுள்ளாய் கவி தன்னுள்ளாய் பக்தியினுள்ளாய் பரம் ஈசனே வந்து என்
கண்ணுள்ளாய் நெஞ்சுள்ளாய் சொல்லுளாய் ஓன்று சொல்லையே –7-1-6-
விண்ணுளார் உடைய பெருமானுக்கு அடிமை செய்வார்
விண்ணுலகத்திலே இருப்பவர்களாக கொண்டு அடிமை செய்வார் என்றுமாம்
அடிமை செய்ய ருசி உடையார் என்றும் அடிமை செய்பவர்கள் என்றுமாம்
ஸ்வர்க்க லோக வாசிகள் -பாரிஜாத -வ்ருத்தாந்தம்
பரமபத வாசிகள் -சுமுகம் என்கிற சர்ப்ப விசேஷம் திருவடிகளிலே சென்று கிட்ட
பெரிய திருவடி ஓடிச் சென்று எனக்கு ஆமிஷமாய் இருக்கிற இத்தை கைக் கொண்டு நோக்குவதே என்று வெறுத்து
தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடும்காலம் வஹித்துக் கொண்டு திரிந்தேனே நான் என் பெற்றேன் என்றான் இ றே
இது இ றே சம்சார ஸ்வ பாவம் இருக்கும்படி -ஈடு
இந்த்ரன் சாரதி மாதலி தன் புதல்வி குணகேசிக்கு சுமுகனை வரனாக
கருடன் தோளில் இட்டு அடைக்கலமாக கொண்டு பாதுகாக்க கடவை –
அவன் தான் அவதரித்து சோகிப்பது மோஹிப்பது ஆனால் போலே யாயிற்று இவர்களும்
அன்றிக்கே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் இருக்கிற சர்வேஸ்வரனுக்கு
சம்சாரத்திலே முமுஷூக்களாய் கைங்கர்யத்திலே அவஹாகித்து இருக்கக் கடவரானவர்களையும்
நெருக்கக் கடவ இந்த்ரியங்கள் இவை
ஒரு விஸ்வாமித்ரா சூக்ரீவாதிகளைக் கண்டோம் இ ரே
ஜ்ஞானாதிகனான விஸ்வாமித்திரன் அகப்பட ஒரு விஷயத்தின் கால் கடையிலே நெடும் காலம் கிடந்தான் இ றே
பெருமாளுக்கு பரிவரான மகாராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக இட்டு வைத்து
நாலு மாசம் இந்த்ரிய பரவச இலரே -ஈடு
மண்ணுள் என்னைப் பெற்றால் -இத்தால் தன்னை விண்ணுளாரில் ஒருவர் எனபது தோற்றும் –
பண்ணுள்ளாய்-என் ஆர்த்த சுரம் கேளாது இருகிறாய் அல்லையே
கவி தன்னுள்ளாய்-என்னுடையார்த்தி கர்ப்பமான உக்தி கேளாது இருகிறாய் அல்லையே
பக்தியினுள்ளாய்-இப்படி சொல்லுகிற ஆற்றாமை அறியாது இருக்கிறாய் அல்லையே
பரம் ஈசனே-உனக்கு முடியாதது ஓன்று உண்டாய் இருக்கிறாய் அல்லையே
உன் சேஷித்வம் ஏறிப் பாயாத இடம் உண்டோ -ஈடு –
——————————————————————————————————————————————————————————————————
ஓன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன்கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன்னமுதே –7-1-7-
ஒருவிஷயத்தில் சாபல்யத்தைப் பண்ணி அது கை புகும் வரையில் அதில் நிலை இல்லாத படி
ஒருத்து -ஒருமைப்பாடு
ஒரு அர்த்தத்தில் நிற்கக் கடவல்லாத –
————————————————————————————————————————————————————————————————————
இன்னமுது எனத்தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்ன மாயம் எல்லாம் முழு வேர் அறிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கை தொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குல முதலே –7-1-8-
அனுபவிக்கும் காலம் அமுதையும் பரிணமிக்கும் காலத்தில் விஷமாயும் இருக்குமே சப்தாதி போகங்கள்
இங்கு ஐவர் -சப்தாதி விஷயங்களை சொன்னபடி
ஓரைவர் -தனித் தனியே பிரபலமாய்
அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும் –ஈடு
பன்னீராயிரப்படி மட்டும் ஐவர் -இந்த்ரியங்கள்
இந்த சம்சார சம்பந்தத்தை நிச்சேதமாக விடுத்து
இனது பஞ்சாயுத திவ்ய சின்னங்களையும்
அவற்றால் பொழியும் திருமேனியுமையே
இடையறாது
சிந்திக்கவும்
துதிக்கவும்
கை தொழவும்
பாங்கான திருவருளை செய்து அருள வேணும்-
————————————————————————————————————————————————————————————————————————————
குலமுதல் அடும் தீவினைக் கொடு வன்குழியினில் வீழ்க்கும் ஐவரை
வலமுதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நிலமுதலினி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன வென பொருள்
பலமுதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே –7-1-9-
விஷயங்களில் ஆத்மாவைத் தள்ளும் இந்த்ரியங்கள் என்னை நலியாதபடி பண்ணி அருள வேணும்
ஒருவன் உடன் போகாமல் குலமாக முதலற முடிக்க வல்ல பாபங்களை விளைக்க கூடியதாய்
குழி -சப்தாதி விஷயங்கள்
ந ஹி தர்ம விருத்தேஷூ பாஹ்வபாயேஷூ கர்ம ஸூ மூலகாதிஷூ சஜ்ஜந்தே புத்திமந்தோ பவத்விதா -என்று இ றே மால்யவான் ராவணனுக்கு
சங்கல்பம் மாத்ரத்தாலே ஸ்ருஷ்டியாதி பண்ணி அருளினாய்
கண்ணபிரானாக வந்து அவதரித்து உன் அழகை நாடாக அனுபவிப்பித்தாய் –
அந்த அழகை நான் ஒருவனும் அனுபவிக்கும் படி உதவி அருளினாய்
இத்தனையும் செய்து அருளின நீ பஞ்ச இந்த்ரியங்கள் படுத்தும் பாட்டையும் போக்கி அருளக் கூடாதோ
வளமே தந்து வரமே தந்து பாட பேதங்கள்
———————————————————————————————————————————————————————————————————————————-
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய்
வன்பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வழித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ –7-1-10- –
சரீரம் ஆகிற சும்மாட்டை தந்தாய் -இந்த்ரியங்கள் தரும் சுமை எல்லாம் சுமைக்கு ஈடான
என் பரஞ்சுடரே -ஸ்ரீ நாத நாராயண வாசூதேவ ஸ்ரீ கிருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே
ஸ்ரீ பத்ம நாப அச்யுத கைடபாரே ஸ்ரீ ராம பத்மாஷ ஹரே முராரே
அநந்த வைகுண்ட முகந்த கிருஷ்ண கோவிந்த தாமோதர –என்ற அனைத்து திரு நாமங்களுக்கும் உப லஷணம்
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் இருப்பன
இரண்டு செவ்விப் பூ போலே இருக்கிற உன்
திருவடிகளின் போக்யதையை அனுசந்தித்து
பிரேமவசனாய் நெகிழ்ந்து நீராய் நிற்கை இவ்வாத்மாவுக்கு ஸ்வரூபமாய் கடவது
அது நிற்க சுமடு தந்தாய்
ஸ்வரூபம் இதுவாய் நிற்க உன் பக்கலில் நின்றும் அகற்றி
விஷயங்களில் கொடு போய் மூட்டக் கடவதான சரீரத்தைத் தந்தாய்
உன்னை அனுபவிக்கைக்கு உறுப்பான தேஹத்தை தந்தாய் யானாய் நீ
அது தானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று
ராஜ புத்திரன் தலையிலே முடியை வாங்கி சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால்
அறியாதார் சுமை எடுத்தித்துக் கொண்டு போமா போலே யாயிற்று
பகவத் அனுபவத்துக்கு ஈடாக கொடுத்த சரீரம் இந்த்ரியங்களுக்கு பணி செய்யும் படியாய் விட்டது –ஈடு
ஒருவர் இன்றி ஐவர் வலிப்பது
அது தானும் ஒரு வழியாக அன்றி திசை தோறும் வலிப்பது
அமுதம் கொடுப்பது சிலருக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்ப்பது சிலர்க்கு -என்ற வ்ரதமோ-
————————————————————————————————————————————————————————————————————————————
கொண்ட மூர்த்தி யோர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே –7-1-11-
இந்த்ரியங்களால் நலிவு பட வேண்டிய பாபங்கள் தொலையும்
குணங்கள் கொண்ட மூர்த்தி யோர் மூவராய்
எம்பெருமானே முதல்வன் என்பதை திருக் கொப்பூழ் கோள் சொல்லிக் காட்டுமே
முதலாம் திரு வுருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்-விஷயங்களையும்
இந்த்ரியங்களையும் அனுசந்தித்த நெஞ்சாறல் தீர
சேஷத்வத்தின் உடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்
தாபர்த்தன் மடுவிலே ஆழ இழியுமா போலே –ஈடு
கங்குலும் பகலும் பாட வல்லார் வினை போம்
கண்டு பாட வல்லாருடைய கங்குலும் பகலும் வினை போம் -என்றுமாம்
————————————————————————————————————————————————————————————————————————
திருவாய்மொழி நூற்றந்தாதி –
உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ் வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல் –1
——————————————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply