இத் திருவாய் மொழிக்கு இரண்டு வித சங்கதிகள் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனனை தினைத்தனையும் விடாள் -சம்ச்லேஷம் -விளைந்ததாக தெரிகிறது
சம்ச்லேஷத்துக்கு பின் விச்லேஷம் என்பதால் தூது விடுகிறாள்
திருக் கோளூர் க்கே ஒல்கி ஒளி நடந்தாள் எங்கனே புகும் கொலோ ஒசிந்தே -சேர்ந்து இருக்க மாட்டோளோ-
இங்கும் தூது விடுகிறாளோ ஆற்றாமை தலை எடுத்து
ஆறாயிரப்படி –
இப்படி திருக் கோளூரில் எழுந்து அருளின பிராட்டியோடு உள்ள சிரகால சம்ச்லேஷ ஜனித அநவதிக ஆனந்த மஹார்ணவ அந்தர் நிமக்னனான எம்பெருமான்
அந்த ஆனந்த வெள்ளம் தனக்கு அசாத்யமானவாறே
அது சாத்மிக்கைக்காக விச்லேஷித்து நெடும் காலம் எழுந்து அருளாது இருந்தவாறே
தத் விச்லேஷத்தாலே அத்யந்தம் அவசன்னையான பிராட்டி
தன்னுடைய ஆற்றாமையாலே அவனைக் குறித்து சில பஷிகளை தூதாக விடுகிறாள் -என்றதாகவுமாம் –
திருக் கோளூரில் போய்ப் புக வேண்டும் என்று புறப்பட்ட இப்பிராட்டி தன்னுடைய அவசாதத்தாலே பின்னைப் போகை ஷமை இன்றியே
அங்கே உத்யானத்திலே இருந்து எம்பெருமானைக் குறித்து தூத ப்ரேஷணம் பண்ணுகிறாள் என்றுமாம் –
ஈடு -பன்னிரண்டு ஆண்டு தண்ணீர் துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே
அங்கே புக்கு
அவனை நெடும் காலம் அனுபவித்து
பிரிந்து தூது விடுகிறாள் -என்று பிள்ளான் –
புறப்பட்டவள் முடியப் போக மாட்டாதே நகரோபவனத்திலே கிடந்து தூது விடுகிறாள் -என்று பட்டர் அருளிச் செய்யும்படி –
கீழில் துவளில் மா மணி மாடம் என்கிற திருவாய்மொழி ஆதியாக இத் திருவாய் மொழி அளவும் நாற்பது பாசுரங்களும்
தோழி பாசுரமாக ஒரு பதிகமும்
தாய் பாசுரமாக இரண்டு பதிகங்களும்
தலைவி பாசுரமாக இப்பதிகமும் –
ஆச்சார்யர்கள் -ச பிரமச்சாரிகள் -சிஷ்யர்கள் -புத்ரர்கள் -தூது
இத் திருவாய்மொழி மூன்றாவது தூது –
அஞ்சிறைய மடநாராய் -முதல் தூது -வ்யூஹத்தில் தூது-
வைகல் பூங்கழி வாய் -இரண்டாம் தூது — விபவ அவதாரத்தில்
இத்திருவாய் மொழி -பொன்னுலகம் ஆளீரோ -பரத்வம் -அந்தர்யாமித்வம் – இரண்டிலும்
தம் பிழையும் சிறந்த செல்வமும் -நாயனார் –
இந்த தூதில் –
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான் -என்று
ஆஸ்ரிதர் உடன் ஒரு நீராக கலந்து இருக்கும் ஐகரசம் -என்னும் திருக் கல்யாண குணம் வெளியிடப் படுகிறது –
இப்பதிகத்தில் முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் யென்னலம் கொண்ட பிரான் தனக்கு -உயிரான பாசுரம் –
ஐக ரசம் கொண்டவனாக இருந்தும் ஜகத் ரஷணம் அருளிச் செய்யும் பராக்கிலே அத்தை மறந்து நினையாது இருக்கிறான்
அத்தை அறிவிக்கவே -தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான் –என்று
உறுதி கொண்டு இருக்கைக்கு உறுப்பானவர் அல்லீரோ நீர் என்று உணர்த்த கடுக வந்து சேர தூது விடுகிறாள்
இதில்
வானவர் கோனைக் கண்டுயாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்ற பாசுரத்தையும்
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மின் -என்ற
பாசுரங்களைக் கொண்டு பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும் தூது-
———————————————————————————————————————————————————————————————————————————-
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நன்னலப் புள்ளினங்காள் வினையாட்டினேன் நான் இரந்தேன்
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்தே –6-8-1-
ஆச்சார்யனுக்கு சத்ருச பிரத்யுபகாரம் பண்ணலாவது
விபூதி சதுஷ்ட்யமும் ஈஸ்வர த்வயமும்
உண்டாகில் -ஸ்ரீ வசன பூஷணம்
உபய விபூதியையும் விபூதிமானான ஈஸ்வரனையும்
தானிட்ட வழக்காம் படி பண்ணிக் கொடுத்த
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்துக்கு சத்ருசமான பிரத்யுபகாரம் பண்ணலாவது இப்படியே
இரண்டு விபூதியும் விபூதிமானாய் இருப்பான் ஒரு ஈஸ்வரனும் வேறே உண்டாகில் என்கை -மணவாள மா முனிகள் –
எம்பெருமான் தன் சரக்கை இஷ்ட விநியோகம் பண்ணலாம் படி அடியவர்க்கு ஆக்கி வைத்து அருளுகிறான்
பரமபத தாண்டாநி ஆத்மதேஹஸ் ததாத்மா வரத
சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -கூரத் ஆழ்வான்
தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷீ -தேசிகன்
ஆச்சார்யர் ஆஞ்ஞையை எதிர் பார்த்தே கொடுத்து அருளுகிறான்
ஞானி து ஆத்மைவ மீ மதம் -என்று இருக்கையாலே
பரமபதம் எதிர்பார்த்திருக்கும் ஆழ்வார் பொன்னுலகும் புவனியும் கொடுப்பதாக சொல்வது
தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலைகள் அருளத் தான் இங்கே வைத்துள்ளான்
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்கிறது -பிராட்டி என்னாதே சிறை இருந்தவள் என்று அருளிச் செய்தது
அவளுடைய தயாதிசயத்தை பிரகாசிப்பிக்கைக்காக -மணவாள மா முனிகள் –
நன்னலப் புள்ளினங்காள்
தேக குணங்கள் -ஆத்மகுணங்கள் -திரு மேனி குணங்கள் -சம தமதாதி -ஆச்சார்யர் இடம் உண்டே
வினையாட்டினேன் நான் இரந்தேன்
உபய விபூதியையும் கொடுத்து அவற்றை ஆளுவதற்கு இரக்கிறாள்
இக்குருவி காட்டும் இடத்தே அவன் வந்தால் தானும் அவனுமாக இருப்பார்கள் -அனந்தாழ்வான் பணிப்பாராம்
த்யாஜ்யமான லீலா விபூதியையும் கொடுக்க வேணுமோ
உபகாரத்தை நினைத்து கலங்கி இன்னது கொடுப்போம் என்று அறியாமல் சொன்னபடி – –
எம்பிரானுக்கு நான்கு விசேஷணங்கள்
முன்னுலகங்கள் எல்லாம் படைத்த சிருஷ்டித்து அருளினவன் -செடி வைத்தவன் தண்ணீர் விட வேண்டாவோ
முகில் வண்ணன் –வடிவு அழகைக் காட்டி ஈடுபடுத்திக் கொண்டாயே -மேலும் அவ வடுவு அழகாய் உபகரிக்க வேண்டாவோ
கண்ணன் -கையாளாக அன்று இருந்து இன்று ஒருத்திக்கு அருமைப் படுவது தகுதியோ
என் நலம் கொண்ட பிரான்-ஒருத்தியை இப்படி சர்வ ஸ்வாப ஹாரம் பண்ணி படு கொலை அடிப்பது பாங்கோ
என்நிலைமை யுரைத்தே –
ஜகத் காரணத்வம்
அவதாரம்
தன் பக்கல் விசேஷ கடாஷம்
இவை எல்லாம் கண் அழிவு அறச் சொன்னாள்
அவன் குணங்களிலே அவஹாகித்த தன்படி
தன்னாலும் பேசப் போகிறது இல்லை -ஈடு
பேச்சுக்கு நிலம் அல்லாததை எங்கனம் பேசுவது
என்னைக் கண்ட நீங்களே பாசுரம் இட்டுச் சொல்லுங்கோள்-
—————————————————————————————————————————————————————————————————————-
மையவர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள் விரைந்தோடி வந்தே –6-8-2-
முதல் பாட்டில் அவன் பதம் கொடுத்தாள் –
அதுக்கு மேல் ஒரு பதம் தேடிக் கொடுக்கிறாள் இப்பாட்டில்
அவன் பதம் ஆகிறது உபய விபூதியும் இ றே
அதுக்கு மேலான பதமாகிறது அவன் விரும்பும் தன்னைக் கொடுக்கை
தன்னைக் கொடுக்கும் இடத்தில் முன்னை பின்னை என்னாதே
எல்லாரும் காண கை மேல் இ றே கொடுக்கப் புகுகிறது -ஈடு
என் கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ-என்கிறாள் –
முந்துற முன்னம் இத்தைச் சொல்லி பின்பு தன் கார்யம் இரக்கிறது பாகவத் சத்காரமே தனக்கு பரம உத்தேச்யம்
மையவர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
மனஸி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சனே –பட்டர்
சித்தாஞ்சனே பவதைவ விபூஷி தாஷா -தேசிகன்
பக்தி -மை
கண் -ஞானம்
பக்தி பரிகர்மிதமான ஞானத்தை உடையார்
மெய்யமர் காதல்
அவளுக்கு உன் பக்கல் உள்ள ச்நேஹம்
மெய்யான ச்நேஹம் என்று அவனுக்கு சொல்லி -ஆறாயிரப்படி
திருமேனியிலே அணைய வேண்டும்படியான காதல் என்னுதல்
என் உடம்போடு அணைய வேண்டும்படியான காதல் என்னவுமாம் -ஈடு
கிளிகாள் –
கிளி வலையிலே அகப்படுமா போலே
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் படாதே
தாமரைக் கண் தடம் விழிகளின் அகவலைப் படுப்பான் -அவன் திருக் கண் நோக்கிலே அகப்பட்டு
வளர்த்து எடுப்பார் கை வசம் இருப்பது போலே
போஷகர்களான ஆச்சார்யர்களுக்கு அதீனமாய் இருந்தும்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்கள்-கிளிகள் –
———————————————————————————————————————————————————————————————————-
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடுடைய ஐவர் கட்காய்
ஆடிய மா நெடுந்தேர்படை நீர் எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே –6-8-3-
தலை மேல் வைத்துக் கொண்டாடுவேன் -என்கிறாள் இதில்
கூடிய வண்டினங்காள் –
மகாராஜரைப் போலே படை திரட்ட வேண்டா இ றே உங்களுக்கு
என்னுடைய ரஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டு இருக்கப் பெற்றது இ றே
இளைய பெருமாள் கிஷ்கிந்த த்வாரத்திலே சென்று குண கீர்த்தனம் பண்ணின பின்பு இ றே படை திரட்டிற்று -ஈடு
ராஜ்ய ப்ராப்தராய் சமாஸ்ரிதருமான பாண்டவர்கள் பக்கலில் உள்ள
வாத்சல்யத்தாலே த்ரைலோக்ய விஜய உபகரண பூதமாய்
அத்யுன்னமாய் இருந்த திருத் தேரிலே நின்ற அவர்களுக்கு சாரத்தியம் பண்ணி
தத் விரோதிகளை நிரசித்து அருளின சமயத்திலே
பரமபக்தி உக்தரான திவ்ய ஜனங்கள் சிசிரோபசாரமான
சாத்தி அருளப் பண்ணின
திவ்ய கந்தமான திருத் துழாய் மதுவைபானம் பண்ணி
அத் தூ மது வாய்களைக் கொண்டு ஓடி வந்து அம்மதுவையும்
அதி சீதளமான திவ்ய கந்தத்தையும் என் குழல் மேலே ஒளி மா மலர்கள் மேலே வர்ஷிக்க வேணும்
வர்ஷிக்கவே அம்மலர்களும் மலர்ந்து புதுக் கணிக்கும்
எந்நிறம் பண்டே போல் ஒக்கும்
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் –என்று வண்டுகளை நோக்கிச் சொல்கிறாள் -ஆறாயிரப்படி அருளிச் செயல் –
பரம சுலபன் அவன் -பந்தார் விரலாள் பாஞ்சலி கூந்தல் முடிகள் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
ஒருத்தி குழலை முடிக்க
கழுத்திலே ஓலை கட்டிக் கொண்டு தூது சென்று விரோதிகளை பிணம் படுத்தி அருளிய பெருமான்
சாராஹ்ராகிகள் -ஆச்சார்யர்களையும் சிஷ்யர்களையும் வண்டு என்கிறது
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-பகவத் விஷயம் ஆகிற தேனையே தாரகமாக கொண்டு இருப்பவர்கள்
——————————————————————————————————————————————————————————————————————-
தூ மது வாய்கள் கொண்டு வந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள்
பூ மது வுண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்து அகன்ற
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே –6-8-4-
என்னை நோவு படுத்தி போய் எட்டா இடத்தில் ஓலக்கம் இருப்பது ஸ்ரீ மத் காம்பீர்யாமோ
பாஹ்ய ஹீநையான எனக்கு
சம்ச்லேஷம் என்னும் ஒரு இந்திர ஜாலத்தைக் காட்டி -ஆறாயிரப்படி அருளிச் செயல்
மதுவைத் தேடித் பருக ஆசை கொண்டு இருக்கும் தும்பிகளை
பரமபத நாதன் திரு முடியிலே செவ்வித் திருத் துழாயில்
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
எனது தலையில் பூ சருகாய் வாடி உலர்ந்து இருக்க –
நான் ஒரு மூலையிலே முகத்தை மூடிக் கொண்டு உறாவிக் கிடக்க
நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுத்துக் கொண்டு வானவர் கோனாக வீற்று இருக்கிறான்
யாமிது தக்கவாறு -நீர் என்றபடி
பராங்குச நாயகியின் துடிப்பு அறியாதே போது போக்குகை தகுதியோ
வானவர் கோனைக் கண்டு -என்பாதால் பரத்வத்தில் தூது –
——————————————————————————————————————————————————————————————————————-
நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெங்கண் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழும் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே –6-8-5-
நுங்கட்கு யானுரைக்கேன் வம்மின்-தனக்கு முன்னே ஆற்றாமையிடே இ றே அவை இருக்கிறது
ஆருக்குச் சொல்லும் வார்த்தையை ஆருக்குச் சொல்லுகிறது
ஆற்றாமை சொல்லுவியாதது இல்லை இ றே -ஈடு –
வளர்த்த கிளிகாள்-தூது போகைக்காக வளர்த்தேன் -வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று கை கூப்பி வணங்கினாளே
அருளாளிப் புள் -என்றவள் வெங்கண் புள் என்கிறாள்
பலரையும் துடிக்க விட்டு பிரிந்த அவனை கருமுகில் கற்பகம் என்பார்கள்
அகப்படாமல் எங்கேனும் இருப்பான் -எங்கு இருந்தாலும் நீங்கள் கண்டு பிடிக்க வல்லீர்கள்
கண்டு அதிகம் பேச வேண்டாம் இதுவோ தக்கவாறு என்றால் போதும்
எங்குச் சென்றாகிலும் கண்டு-இத்தைக் கொண்டே அந்தர்யாமித்வத்தில் தூது -என்பர்
யமாத்மா என்று ஒளித்து இருக்கும் இடம் எங்கும் புக்கு -ஈடு ஸ்ரீ ஸூ க்தி-
————————————————————————————————————————————————————————————————————-
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மையான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லி
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே –6-8-6-
தூது செல்வது வீண் என்று இருக்குமவைகளுக்கு உத்சாஹம் பிறக்கும்படி வார்த்தை சொல்லி அனுப்புகிறாள்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயுடை யம்மான் –
திருவடிகளில் சாத்தின திருத் துழாயை நமக்கு அன்றி மற்றையோருக்கு தர மாட்டான் –
சங்கை இன்றி செல்லலாம் என்கிறாள்
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்தன அமிர்தம் –
உங்களுக்கு கற்ப்பித்த வார்த்தைகள் பல உண்டே
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து பயிற்றிய சொற்கள் இல்லையோ
த்வய அனுசந்தானம் பண்ணிக் கொண்டே செல்லுங்கோள் உள்ளுறை பொருள்
தீவினையேன் வளர்த்த-என்னுடைய பாபம் இருந்த படி பாருங்கோள்
அவனும் நானும் கூட இருந்து உங்களை கொண்டாடுகை அன்றிக்கே
உங்களைக் கொண்டு கார்யம் கொள்ளும்படியான பாபத்தை பண்ணினேன்
வயிற்றில் பிறந்தாரை இடுவித்து அபிமதனை
அழைத்துக் கொள்ளுகையோபாதி புன்மை இல்லையே -ஈடு ஸ்ரீ ஸூ க்தி-
————————————————————————————————————————————————————————————————————–
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமே நின்ற மாயன் என் ஆழிப்பிரான்
மாவை வல்வாய் பிளந்த மது சூதற்கு என் மாற்றம் சொல்லி
பாவிகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே —6-8-7-
பாவிகள் மரப்பாச்சிகளையும் இரக்கிறாள் -அறிவில்லாமைக்கு எல்லை நிலம்
அசேதனமும் கூட எழுந்து இருந்து
கார்யம் செய்ய வேண்டும் படி காணும்
இவளது அவஸ்தை -ஈடு ஸ்ரீ ஸூ க்தி
அந்தோ அவனுடைய திரு மேனி நிறமும் திருக் கண் அழகும்
மற்றும் உள்ள பிரபாவமும் குண சேஷ்டிதங்களும்
நினைக்க நினைக்க வாளா இருக்க ஒண்ணுமோ –
பூவைகள் போல் நிறத்தன்-ஆன் பெண்ணாம் படியான நிறம் படைத்தவன் -ஈடு
வால்மீகி சர்வேஷாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் சொல்லாமல் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் சொன்னாள் போலே
பாஞ்சாலியைக் கண்ட பெண்கள் -பும்பாவம் மனசா யயு -என்றால் போலே
புண்டரீகங்கள் போலும் கண்ணன் -திருமேனியோ பூவைப்பூ
காயம் பூவிலே தாமரை பூத்தால் போலே இரா நின்றது -ஈடு
யாவையும் யாவருமே நின்ற மாயன் -ஏக வஸ்து என்னலாம் படி கலக்க வல்லன்
என் ஆழிப்பிரான் -திவ்ய ஆயுத சேர்த்தி அழகைக் காட்டி என்னை ஈடுபடுத்திக் கொண்ட உபகாரகன்
எவ்வளவு பேசினாலும் அவதாரங்களை கூடவே பேசாமல் தரிக்க மாட்டாமல்
கேசி நிரசன -மதுகைடப சம்ஹாரங்களை சொல்லி– வார்த்தை தெரிவித்து துக்கம் தீர்க்க தூது விடுகிறாள்-
———————————————————————————————————————————————————————————————————————–
பாசற வெய்தி யின்னே வினையேன் எனை யூழி நைவேன்
ஆசறு தூவி வெள்ளைக் குருகே அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை யல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே -6-8-8-
இன்னே -படி எடுத்து சொல்லப் பெறாமல் பசலை நிறம் கொண்டதை குருகிடம் காட்டி
எந்த விஷயத்தால் இப்படி ஆனதோ அந்த விஷயம் பேச்சுக்கு நிலம் இல்லாதது போலே இதுவும் என்கிறாள்
வினையேன்-மறக்க மாட்டாமல் நிச்சலும் நினைந்து உருகி நைந்து
எனை யூழி நைவேன்-சம்ச்லேஷம் அல்ப காலம் விச்லேஷம் யூழி காலம் ஆவதே
ஆசறு தூவி வெள்ளைக் குருகே-தூவி இறகு -நிஷ் கல்மஷமாய் இருக்கை
ஞானம் அனுஷ்டானம் -சுத்தி –உள்ளும் புறமும் ஒருபடியாக நிர்மலமாய்
மனஸ் அந்யத் வசஸ் அந்யத் கர்மண் அந்யத் துராத்மனாம்
மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மண் ஏகம் மகாத்மனாம்
அருள் செய்து ஒரு நாள் -என்பதே பாடம் -க்ரியா பதம் வினை முற்று நீ போய் சொல்ல வேணும் வருவித்து கொள்ள வேணும்
அருள் செய் ஒரு நாள் -பன்னீராயிரப்படி
அருள் செய்து என்ற பாடமான போது என்று சொல் என்று வாக்ய செஷமாக கடவது என்று காட்டி அருளுகிறார்
இது போல் ஏசறு -துக்கப்பட்டு நான் துக்கப் படுவதை வடிவில ஏறிட்டுக் கொண்டு காட்டி என்றபடி
மாசறு நீலச் சுடர் முடி-முடி மயிர் முடியைக் காட்டும் நீலச் சுடர் விசேஷணம்
நீல ஜ்யோதிர்மய குந்தல பாராலங்குருதனாய் -ஆறாயிரப்படி –
சாம்ராஜ்ய யோகாத் -தேசிகன் -முடி திரு அபிஷேகம் -நீல மணிகள் அழுத்தின கிரீடம் –
————————————————————————————————————————————————————————————————————–
பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேலுலவி இரை தேரும் புதாவினங்காள்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி யுரையீர் வைகல் வந்திருந்தே –6-8-9-
புதாவினங்காள் -பெரு நாரைக் கூட்டங்களே -புதா நாரையிலே அவாந்தர ஜாதி பேதம்
கார்த்திரள் மா முகில் போல் விண்ணவர் கோனை-விடாய்த்தார் இருக்க மீனுக்கு
தண்ணீர் வார்த்து இருக்கிறவனை -ஈடு
மேகம் போலியா விடிலும் வாபி கூப தடாகங்களில் இருந்து நீரைப் பாய்ச்சுவாரை போலே
நீ தான் முகாந்தாரத்தாலே உய்யலாவாகாதோ என்ன –
பேர்த்து மற்றோர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –
நீர்த்திரை மேலுலவி இரை தேரும் புதாவினங்காள் ஆவரண ஜாலம் விரஜை தாண்ட வேணுமே என்ன
நீரிலே உலாவுமவர்கள் அன்றோ
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க இரை தேடுவது தகுதியோ
என்னை உண்பித்து அன்றோ நீங்கள் உண்ண வேணும்
வார்த்தைகள் கொண்டு அருளி-அனுகூலமோ பிரதிகூலமோ ததீயதவ ஆகாரத்தாலேஅனைத்தும் உத்தேச்யமாம்
வார்த்தைகள் –அபயபிரதான வார்த்தைகளோ என்பதாகவுமாம்
——————————————————————————————————————————————————————————————————————
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று
மந்திரத்து ஓன்று உணர்த்தி யுரையீர் மறு மாற்றங்களே –6-8-10-
மந்திரத்து -மந்திர ஆலோசனை செய்யும் இடத்து –அவனும் அவளுமான தனிமையிலே
மகா கோஷ்டியில் திரு உள்ளம் அந்ய பரமாய் இருக்குமே
அன்றிக்கே
பிரணவ மாகிய திரு மந்த்ரத்த்ல்
ஓன்று -ஒன்றாகிய உகார சப்தார்த்தம்
அனன்யார்ஹத்வத்தை-அறிவிக்க –
வந்திருந்து -ஆனந்தமாக -அருளிய வார்த்தை
தூது போக சொல்வார் எங்கே -என் ஆர்த்தியை பரிஹரிக்க-
ராஜ்ய தாரங்களை இழந்த சுக்ரீவ மகா ராஜர் முன்பே பெருமாள் முகம் காட்டி அருளினது போலே
உம்முடைய மணிச் சேவலும்-
தன்னுடைய மணிச் சேவல் கடக்க இருந்து
இவளை உடம்பு வெளுப்பித்து தன் குறி அழியாதே
இ றே இருக்கிறது -ஈடு -சேவல் -பொதுவாக நாயகனைச் சொன்னபடி
என் திரு மார்வற்கு என்னை-திவ்ய தம்பதிகளின் சேர்த்தியில் அடிமை செய்ய அபி நிவேசம்
இன்னவாறு இவள் காண்மின் என்று -உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு
மறு மாற்றங்களே-மறு மாற்றம் என்னாமல் மாற்றங்கள்
திரு சொல்லுகிற மாற்றமும்
திருமார்பன் சொல்லுகிற மாற்றமும்
கேட்க ஆசைப் பட்டமை தோற்றும் –
—————————————————————————————————————————————————————————————————————————-
மாற்றங்கள் யாய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடிமேல்
நாற்றம் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றி கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே–6-8-11-
கல் நெஞ்சராய் இராமல் ஈர நெஞ்சராய் இருந்து உருகப் பெறுவதே பலன்
மாற்றங்கள் யாய்ந்து கொண்டு சொன்ன ஆயிரம் -வால்மீகி அசத் கீர்த்தனம் வியாசர் பூசல் பட்டோலை
திருமாலவன் கவி யாது கற்பேன் -என்று அடியிலே வாயொலை இட்டபடி
மாற்றங்கள் யாய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடிமேல்-என்று இதர விஷய சம்பந்தம் கலசாத படி
வேதங்களில் புருஷ ஸூ க்தம் போலவும்
தர்ம சாஸ்த்ரங்களில் மனு ஸ்ம்ருதி போலவும்
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதை போலவும்
புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் போலவும்
அருளிச் செயல்களில் சாரம்
தோற்றங்கள் ஆயிரத்துள்-தோற்றம் ப்ராதுர்பாவம்
மத்ஸ்ய கூர்மாதி ரூபேண போலே பத்து பத்தாக அவதரித்த திருவாய் மொழி
சாது சனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் -சூர்ணிகை நாயனார் விசேஷார்த்தம் அருளிச் செய்வர் —
————————————————————————————————————————————————————————————————————————–
திருவாய்மொழி நூற்றந்தாதி —
பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர் –58
————————————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply