அவதாரிகை –
சர்வேஸ்வரன் வந்து இப்படி வந்து சந்நிஹிதன் ஆனபின்பு
இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடித்து
ஓடிப் போக வமையும்
என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -திருவாய் மொழி-5-2-1-என்னுமா போலே –
——————————————————————————————————————————————————————-
இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கறிந்த நா வலஞ்சூழ் நாடு ————————————————87-
———————————————————————————————————————————————————————-
வியாக்யானம் –
இனியார் புகுவார் எழு நரக வாசல் –
எழு வகைப் பட்டு இருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார்
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் உண்டோ
ஒருவன் -சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி -என்று நிற்கச் செய்தே –
அன்றிக்கே
எழுகிற நரக வாசல் உண்டு -எல்லாரும் போய்ப் புகுகிற நரக வாசல் -என்னுதல்
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அற்று -என்கை –
முனியாது –
யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை என்கிறது –
எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே
முனிந்தார்கள் ஆகில் யமபடர் கன்றும் விளவும் பட்டது படும் இத்தனை –
மூரித்தாள் கோமின் –
பெரும் தாளைப் பூட்டுங்கோள்-
அதுக்கடி இன்னம் ஒரு கால் திறக்கும் என்னும்படி இருக்கில் இ றே
எளிதாகக் கோர்க்க வேண்டுவது –
கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
கனிகள் உதிரும்படிக்கு ஈடாக கன்றை எறிந்த தோளை உடைய வனானவனுடைய
ஆபரணத்தால் வந்த த்வனியை யுடைத்தான திருவடிகளைக் காண்பதற்கு –
அதாகிறது
இலக்கைக் குறித்து எறிகிற போது மாறி இட்ட திருவடிகளில் வீரக் கழல் த்வநிக்கிற படி –
நன்கறிந்த நா வலஞ்சூழ் நாடு —
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது
அதாகிறது
திருக் கோவலூர் உடன் சூல்ந்தபூமியை விட்டு அவ்வருகே போவோம் தென்று இரார்கள் போலே
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இ றே ரஷிக்கைக்கு
பவத் விஷய வாஸின-ஆரண்ய -1-19-
திருக் கோவலூர் உப லஷணம்
உகந்து அருளின நிலங்கள் அடைய நினைக்கிறது –
நாவலம் சூழ் நாடு –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடை யாடின இடமே
நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –
———————————————————————————————————————————————————————–
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply