நாலாம் சூரணையிலே இவன் அபேஷ அனுகூலமாக அவனாலே ஸ்வீக்ருதனாய்க் கொண்டு
அனுகூல வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டு இருப்பான் -என்கிறது
சூரணை-4-அவதாரிகை –
இனி மேல் இப்படி பிரார்தன அநு குணமாக அங்கீ க்ருதனாய்
கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருப்பான்
என்கிறது –ததோ பாகவதா -இத்யாதியாலே
ததோ பகவதோ ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன
(அமர்யாத சீலவதா அதி ப்ரேமான் வி நேன )
அவலோக நேன அவலோக்ய
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித
அத்யந்த சேஷ பாவாயா ஸ்வீக்ருத
அநு ஜ்ஞாதச்ச அத்யந்த சாத்வச விநாய அவநன
கிங்குர் வாண
க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத
தத-
ஆத்ம சமர்ப்பணம் பண்ணின அநந்தரம்
பகவதோ –
புருஷோத்தமனாலே
ஸ்வயமேவ -இனி இவன் அபேஷித்த படி தானே
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன-
ஆத்ம சமுஜ்ஜீவன ஹேதுவான பார்வையாலே
அவலோக்ய –
கடாஷித்து
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசித அத்யந்த சேஷ பாவாயா-
எல்லா தேசத்திலும் எல்லா காலத்திலும்
எல்லா அவஸ்தை களிலும்(ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு) உசிதமான முடிவு இல்லாத சேஷ பாவத்தின் பொருட்டு
ஸ்வீக்ருத அநு ஜ்ஞாதச்ச –
அங்கீ கரிக்கப் பட்டவனாயும் அனுமதி பண்ணப் பட்டவனாயும் கொண்டு
ஸ்வரூப அநு ரூபமான அஞ்சலியைப் பண்ணிக் கொண்டு ஆணை இடப்பட்டவனாயும்(ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி)
ஸ்வரூப அநு ரூபமான அஞ்சலி செய்து கொண்டு
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-
அத்யந்த சாத்வச விநாயாவநன கிங்குர்வாண க்ருதாஜ்ஞசலி புட பகவந்தம் உபாசீத –
சோஸ் நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா -என்கிறபடியே
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஜ்ஞான சக்தியாதி கல்யாண குணங்களை அனுசந்தித்து –
ஏதத் சாம காயன்னாஸ்தே-என்றும்
அடியாரோடு இருந்தமை -என்றும் சொல்லுகிறபடியே சேவித்து இருப்பான் என்கிறார் –
(மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக் காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப் பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் –)
————————————————————————————–
ஐந்தாம் சூரணையிலே இப் புருஷார்த்தத்தை நெடும் காலம் இழந்த இழவு தீர
அநந்ய பரனாய் இமையாத கண்ணினாய்க் கொண்டு
ஸதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது
சூரணை -5- அவதாரிகை –
அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே
வேறு ஒன்றுக்கு ஆளாகாத படி
சதா தர்சனம் பண்ணிக் கொண்டு இருப்பான் -என்கிறது
ததஸ்ஸ -இத்யாதியாலே
ததஸ்ஸ அநு பூயமான பாவ விசேஷ
நிரதிசய ப்ரீதா
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் ஸ்மர்த்தும்
அசக்த புநரபி சேஷ பாவமேவ யாசமான
பகவந்தமேவ அவிச்சின்ன
ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன அவலோகயன் ஆஸீத
(பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –)
ததஸ்ஸ –
பின்னையும்
அநு பூயமான பாவ விசேஷ –
அனுபவிக்கப் படா நிற்கிற சர்வேஸ்வரனுடைய
ரஷகத்வாதி ஸ்வபாவ விசேஷத்தை உடையனாய்க் கொண்டு
தத்பாவ பாவமா பன்ன -என்கிறபடியே
பகவத் ஸ்வ பாவமான அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகத்தை அனுபவித்துக் கொண்டு இருக்குமவனாய் -என்றுமாம் –
நிரதிசய ப்ரீத்யா –
தன்னோபாதி புறம்பில் மிகுதி இல்லை என்னும்படியான ப்ரீதியாலே
அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்ரஷ்டும் ஸ்மர்த்தும் அசக்த –
ஏவமுக்தா சமுத்பத்ய சீதா சசி நிபா நனா
ப்ரஹர்ஷேண அவ்ருத்தா சா வ்யாஜஹாரன் அகிஞ்சன -யுத்தம் -116-14-என்று
பிராட்டி ப்ரீதி பிரகர்ஷம் மிடறு பிடிக்கப் பேசாது இருந்தால் போலே
ஆனந்த அதிசயத்தாலே வேறு ஒன்றைப் பண்ணுதல் நினைத்தல் பார்த்தல் செய்ய மாட்டாதானாய் -என்னுதல்-
நோபஜனம் ஸ்மரன்னிதம் சரீரம் -என்கிறபடியே சாம்சாரிக்க வியாபாரங்களை தவிர்த்து என்னவுமாம்
புநரபி சேஷ பாவ மேவ யாசமான –
சேஷ பாவம் பெற்று இருக்கச் செய்தேயும் அதின் இனிமையாலே
இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கையாலே
பின்னையும் இப்படிப் பட்ட சேஷ பாவம் குலையாதே நிற்க வேணும் என்று வேண்டிக் கொண்டு
பகவந்தமேவ –
ஸ்ரீ வைகுண்ட நாதனையே
அவிச்சின்ன ஸ்ரோதோ ரூபேண அவலோக நேன –
இடை விடாமல் இருக்கும் தரா ரூபமான பார்வையாலே
அவலோகயன் ஆஸீத –
பார்த்துக் கொண்டே இருக்கக் கடவன்-
நாஸநந்தி ந பிபந்தி யேத தேவாம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி என்கிறபடியே
புறம்புள்ள அன்ன பாநாதிகளைப் பேணாதே சதா தர்சனம் பண்ணி இருப்பான் -என்று ஆகவுமம் –
————————————————————————————–
ஆறாம் சூரணையிலே
அவன் இவனை வினவிக் குளிரக் கடாஷித்துத் திருவடிகளை தலையிலே வைக்க
அடி சூடும் அரசராய்-பெருமாள் திரு மொழி -10-7-
ஸ்வாராஜ்ய சாம்ராஜ்ய துரந்தரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
(அன்று ஈன்ற கன்றின் மேல் வாத்சல்யத்தால் –
விபீஷணனை ஏற்றுக் கொண்டு ஸுக்ரீவாதிகளிலும் மேலாக அபிமானித்து அருளியது போல்
இன்று வந்த முக்தனையும் நித்யருக்கும் மேலாக அபி மானித்து அருளுவான் அன்றோ)
(குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து
குலை கட்டி மறு கரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன்
இன் உயிர் கொண்டவன் தமிபிக்கு அரசும் ஈந்து
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே— 10-7-)
சூரணை -6- அவதாரிகை –
அநந்தரம்
கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே
முடி சூடும் அரசாய்
சுகமே வர்த்திப்பாய் –
என்கிறது -(இந்த கைங்கர்ய சாம்ராஜ்யம் அவனாலும் கிட்ட முடியாத ஓன்று அன்றோ)
ததோ பாகவதா ஸ்வயமேவ
ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய
சஸ்மிதம் ஆஹூயா சமஸ்த க்லேசாபஹம்
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்
ஸ்ரீ மத் பாதார விந்த யுகளம்
சிரஸி க்ருதம் த்யாத்வா
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ -ஸுக²மாஸீத ॥ 6
(அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்)
ததோ பாகவதா -ஸ்வயமேவ ஆத்ம சஞ்ஜீவ நேன அவலோக நேன அவலோக்ய சஸ்மிதம் ஆஹூயா –
அவன் எவ்விடத்தான் யானார் -திருவாய் மொழி -5-1-7-என்று
ஸ்வரூபத்தை நினைத்து அகல நிற்க
அழகிய கடாஷத்தாலே குளிரப் பார்த்து
ஈஸ்வரோஹம் -என்று இருந்தவன்
தாசோஹம் –என்று ஒதுங்குவதே -என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே முறுவல் செய்து
(அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-)
குஹேன ஸார்த்தம் தத்ரைவ ஸ்திதோஸ்மி திவசான் பஹூன்
ஆசயா யதிவா ராம புன சப்தாபயேதிதி -அயோத்யா -59-3-என்று சுமந்த்ரன் ஆசைப் பட்டால் போலே
அழகிய மிடற்று ஓசையாலே அருளப்பட்டு
சமஸ்த க்லேசாபஹம்-
சாம்சாரகமான சமஸ்த கிலேசங்களையும் போக்கக் கடவதாய்-
நிரதிசய ஸூகாவஹம் ஆத்மீயம்-
நிரதிசயமான -சுகத்தைப் பண்ணக் கடவதாய்
ஸ்ரீ மத் –
நிரதிசய போக்யமான
பாதார விந்த யுகளம்-
திருவடித் தாமரைகளை –
சிரஸி க்ருதம் த்யாத்வா-
தன் தலையிலே வைத்தானாக த்யானம் பண்ணி –
அம்ருத ஸாக ராந்தர் நிமக்ன சர்வாவயவ –
ஆனந்தம் ஆகிற அம்ருத சமுத்ரத்துக்கு உள்ளே முழுகின
சர்வ அவயவங்களை உடையவனாய் கொண்டு
சுகமே வர்த்திப்பான்
ஆக- ஒன்றாக சொல்லிற்று ஆய்த்து –
1-ஸ்வரூப அனுரூபமான பிரபத்தியே உபாயமாகக் கொண்டு
2-ப்ராக்ருத மண்டலத்தை விட்டு அப்ராக்ருதமான தேசத்திலே சென்று
3-ஸூரி பரிஷத் சேவ்யனான ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டிக்
4-கைங்கர்ய பிரார்த்தனா பூர்வகமாக கைங்கர்யத்தைப் பெற்று
5-யாவதாத்மபாவி ஆனந்த நிர்ப்பரனாய் இருக்கும் – என்கிறது-)
யாமுனார்ய ஸூதாம் போதி மவகாஹ்ய யதாமதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்ச யாம்யஹம் -எம்பெருமானார் அருளிச் செய்த –ஸ்ரீ வைகுண்ட கத்ய மங்கள ஸ்லோகம் –
லக்ஷ்மீ பதேர் யதி பதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ர ஸார: ||
॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜ முநி விரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥
ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்த்தியையே தஞ்சமாகக் கொண்டு
பிராகிருத மண்டலத்தை விட்டு நீங்கி
அப்ராக்ருதமான தேச விசேஷத்திலே சென்று
ஸர்வாங்க ஸூ ந்தரனாய்
ஸர்வ ஆபரண பூஷிதனாய்
திவ்யாயுத ஸோபிதனாய்
நித்ய ஸூரி பரிஷன் நிஷேவிதனாய்
இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கிட்டி
கைங்கர்ய பிரார்த்தனையை முன்னிட்டுக் கொண்டு
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவில்லாதபடி செய்யும் கைங்கர்யங்களைப் பெற்று
ஆனந்த அமுதக் கடலில் மூழ்கி இருக்குமாற்றை இங்கு இருக்கும் நாள் வரையில் பரம ஏகாந்தியானவன் நாள் தோறும் சிந்தனை செய்து கொண்டு இருக்கக் கடவன் என்று
அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆயிற்று –
த்வய வசன தனானான்
த்வத் பிரயோக அநபேக்ஷ -(மீண்டும் சொல்வது இனிமையாலும் காலஷேப அர்த்தமாயும் -ஆசை வளர்க்கவும் )
முஷித விவித தோஷே (பக்தி யோகத்தில் உள்ள தோஷங்களில் இதில் இல்லையே )
முக்தி உபாய ஸ்திதானாம்
அம்ருத இவ பயோதேக ஆத்மநேய யதீந்த்ர (உடையவரான பாற் கடலில் இருந்து கிடைத்த அம்ருதமே இந்த கத்யம் )
மித கத்யம் (ப்ருகுத் -லகு கத்யங்கள் போல் இல்லாமல் நடுவாக )
விவர்ணுதே வேங்கடேச
—————-
அடியார்கள் குழாங்கள் அழகோலக்கமிருக்க ஆனந்தமயமான மா மணி மண்டபத்துப்
படியாதுமில் படுக்கையாயிருக்கும் அனந்தன் பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகு மற்றை மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக நான் அனுபவிக்கும் வகை நல்கு என் எதிராசா!–🌸ஆர்த்தி ப்ரபந்தம் -🌸ஸ்ரீமாமுனிகள்.
போம் வழியைத் தரும் என்னும் இன்பமெல்லாம் புசித்து வழிபோய் அமுதவிரசையாற்றில் நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச் சற்கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று மாமலராள் கோன் மடியில் வைத்துகக்கும் வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே… -🌸ஆர்த்தி ப்ரபந்தம் -🌸ஸ்ரீமாமுனிகள்
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் . ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply