ஸ்ரீ வைகுண்ட கத்யம் -சூரணை -2-3–ஸ்ரீ -பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்

சூரணை -2- அவதாரிகை

இப்படி ஒரு கால் சரணம் புக்கு விடும் அத்தனையோ -என்னில்
ததஸ்ஸ ப்ரத்யஹம் ஆத்ம உஜ்ஜீவநா யேத்யாதி —
பலத்துக்கு ஒரு கால் அமைந்து இருந்தாலும்
சத்தா தாரணத்துக்கு நாள்தோறும்
அனுசந்திப்பான் என்கிறது –

இரண்டாம் சூரணையிலே பலத்துக்கு சக்ருதேவ அமைந்து இருக்கச் செய்தேயும்
மனஸ் வேறு ஒன்றில் கவலை போகாமைக்கும் -தனக்கு கால ஷேபத்துக்குமாக நித்ய அனுசந்தானம் பண்ணுவான் -என்கிறார்

———————————————————————————–

ததஸ்ச ப்ரத்யஹம் ஆத்ம உஜ்ஜீவ நாய ஏவம் அநுஸ் மரேத்

(பிற்பாடும் நாடொறும் தன்னை உஜ்ஜீவனம் செய்து கொள்வதற்காக இங்கனம் அநுஸ்யூதமாக ஸ்மரிக்க வேண்டும்
அது மேலே சொல்லுகிறது)

———————————————————————————–

ததஸ்ச –
தத் த்வயம் சக்ருது ச்சாரோ பவதி -என்றும் –
சக்ருதேவ பிரபன்னாய -என்றும் –
உபாய அம்ஸ்த்துக்கு ஒரு கால் அமைந்து இருக்க -பின்னையும் வேணும் என்கிறது -ஆகிறது -அதுக்கு அவதி என் என்னில் –

ப்ரத்யஹம் –
ஒரு கால் அனுசந்தித்தோம் என்று விடுகை அன்றிக்கே
நாள் தோறும் –

இப்படி நாள் தோறும் அனுசந்திக்கிறது சாதனா பூர்த்தி போராமையோ என்னில் –
ஆத்மா உஜ்ஜீவநாய –
யன் முஹூர்த்தம் ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
சா ஹாநிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா -என்கிறபடியே
ஷண மாத்ரமும் பகவத் அனுசந்தானம் பண்ணாத போது ஆத்ம விநாசம் ஆகையாலே
நித்ய அனுசந்தாநத்தாலே ஆத்மா உஜ்ஜீவிக்கும் படியாக

ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அனுசந்திக்கும் இடத்து போலியாக அனுசந்திக்க அமையுமோ -என்னில் –

ஏவம் –
பிரதம பர்வத்தில் யாதோர் ஆதரம் யாதொரு க்ரமம் -அப்ரகாரத்தில் ஒன்றும் குறையாத படி –
அநுஸ் மரேத் -ப்ரத்யஹம் -என்னச் செய்தே -அநுஸ் மரேத் -என்கிறது
நாள் தோறும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கால் நினைத்தாலும் போரும் இறே –
அங்கன் அன்றிக்கே
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹ சதா ஏவம் வக்தா -என்கிறபடியே
அநவரத அனுசந்தானம் பண்ண வேணும் என்கிறது

—————————————————————————————–

மூன்றாம் சூரணையிலே இவ் உபாய நிஷ்டனானவனுக்கு பல பிராப்த்திக்கு உறுப்பான
அர்ச்சிராதி வழியே போய் பிரகிருதி மண்டலத்தைக் கடக்கும் படியையும்-
கடந்து சென்று பிரவேசிக்கிற நித்ய விபூதி வைபவத்தையும்-
அத் தேசத்தின் உடைய பண்பையும்-
அங்கு உள்ள அலங்காரங்களையும்-
அப்படி அலங்க்ருதமான தேசத்தில் உலகுடைய உபய  நாய்ச்சிமாரும் தானுமாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்-
அவர்களாலே பரிசர்யமாணனாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனையும்-
அந்த நாய்ச்சிமாருக்கு அனுபாவ்யமான திவ்ய  அவயவ சௌந்த்ர்யத்தையும்
அதுக்கும் அதிசய ஆபாதாகமான திவ்ய ஆபரணங்கள் உடைய ஸூ கடிதத்வத்தையும்
இவற்றைக் காத்தூட்டும் (காத்து ஊட்டும்-ரஷித்தும் வளர்த்தும்)திவ்ய ஆயுத வர்க்கத்தையும்
இஸ் ஸமுதாய சோபையைக் கண்டு அனுபவித்து

அவ் வநுபவ ஜனித ப்ரீதியாலே அநேக்தாபவித்து அடிமை செய்யும் ஸூரி பரிஷத்தையும்
அவர்களால் அநவரத பரிசரித சரண நளினனாய் எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இப் பேற்றை நாம் எப்போது பெறக் கடவோம் -என்று மநோ ரதித்து

அம் மநோ ரத அனுகுணமாகச் சென்று கிட்டி
பெருமாளே என்னால் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் -என்று பிரார்த்தித்து
ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவான் -என்கிறார்-

சூரணை-3-அவதாரிகை –

இவ் உபாயம் கை வந்தவன் அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்
பிராபிக்கும் நித்ய விபூதியையும்
அங்கு உள்ள பிரகாரங்களையும் சொல்லுகிறது -மேல் –
சதுரத் தஸ புவ நாத்மகம் -இத்யாதியாலே –

சதுர் தஸ புவ நாத்மகம்
அண்டம்
தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம்
சமஸ்தம்
கார்ய காரண ஜாதம்
அதீத்ய -(வர்த்தமாநே)

(பதினான்கு லோகங்கள் மலிந்த அண்டத்தையும்
மேன் மேலும் பதின் மடங்கு அதிகமாய் இருக்கின்ற ஸப்த ஆவரணங்களையும்
மற்றுமுள்ள ஸமஸ்த கார்ய காரண வர்க்கங்களையும்
கடந்து அப்பால் விளங்கா நின்ற)

சதுர் தஸ புவ நாத்மகம் –
பூம் யந்தரி ஷாதி யான உபரிதன லோகங்கள் ஏழும்
அதல விதலாதிகள் ஆகிற பாதாள லோகங்கள் ஏழும் ஆகிற பதினாலு லோகங்களுமாய் இருக்கை –

இப்படி இருக்கிறது தான் எது என்னில்
அண்டம் –
இப்படிப் பட்ட லோகங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமாய்
பஞ்சாசத் கோடி விஸ்தீர்ணமாய் இருக்கிற அண்டம் –(பஞ்சாசத் கோடி-50 கோடி யோஜனைஒரு யோஜனை -பத்து மைல்)

தஸ குநி தோத்தரஞ்ச ஆவரண சப்தகம் –
உத்தர உத்தர தஸ குணிதம்
ஓர் ஆவரணத்துக்கு ஓர் ஆவரணம் தஸ குணிதமாய்
தஸ குணிதமான அவ் வாரணத்துக்கு அவ்வருகில் ஆவரணம் அதில் தஸ குணிதமாய்
இப்படி உக்த க்ரமத்தாலே உத்தர உத்தர தஸ குணிதமான ஏழு ஆவரணங்களை உடைத்தாய் –
ஆவரண சப்தகம் ஆவது -வாரி வஹ்ன் யநில ஆகாச அஹங்கார மஹத் அவ்யக்தங்கள் ஆகிற இவை –(பிருத்வி -நீர் -அக்னி -வாயு -ஆகாசம் -அஹங்காரம் -மஹான் -அவ்யக்தம்)

சமஸ்தம் –
ஓர் அண்டம் இறே இப்படி இருப்பது
அண்டா நாந்து சஹஸ்ராணாம் சஹஸ்ராண யயுதானி ச
ஈத்ரு ஸாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27-என்றும்
விண் மீது இருப்பாய் -மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் -எங்கும் மறைந்து உறைவாய்
எண் மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி
உள் மீதாடி உருக் காட்டாதே ஒழிப்பாயோ -திருவாய் மொழி -6-9-5- என்கிறபடியே
ஈத்ருசமான சமஸ்த லோகங்களையும்

கார்ய காரண ஜாதம் –
ஒன்றினாலே உத்பாத்யமாயும் -ஒன்றை உண்டாக்கக் கடவதாயும் உள்ள வஸ்து சமூஹத்தை

அதீத்ய –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்த்தி நோஅர்ஜூன
மாமுபேத்ய து கௌந்தேய புநர் ஜன்ம ந வித்யதே -ஸ்ரீ கீதை -8-16-என்கிறபடியே
கர்ம சேஷம் உள்ளவர்கள் மீண்டு திரியும் படியான ப்ராக்ருத மண்டலத்தை
அபுநா வ்ருத்தி  ப்ராப்தியாகக் கழித்து

———–

பரம வ்யோம சப்தாபி தேய
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே

(பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே –பரம ஆகாஸம் என்னும் சொல்லால் சொல்லப்படுகிற

ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே –பிரமன் முதலூக்கு வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாத

ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே -ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தில்)

சனக விதி சிவாதிபிரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை
நித்ய சித்தை அனந்தை
பகவத் அனுகூல்யைக போகை
திவ்ய புருஷை
மஹாத்மபி
ஆபூரிதே தேஷாமபி
இயத் பரிமாணம்
இயத் ஐஸ்வர்யம்
ஈத்ருச ஸ்வ பாவமிதி
பரிச்சேத்தும் அயோக்யே

(ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: நித்யஸித்³தை⁴: அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே—ப்ரஹ்ம பாவனையில் தலை நின்ற ஸநகாதிகளுக்கும்
கர்ம பாவனையில் தலை நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நினைக்க ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்
எப்போதும் பகவத் அனுபவ நிரதராய்
எண்ணிறந்தவர்களாய்
எம்பெருமான் பக்கல் பரிவே வடிவெடுத்தவர் களாய்
பூமியில் கால் பாவாதவர்களான மஹாத்மாக்களினால் மிடைந்ததாய்

தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி பரிச்சே²த்து மயோக்³யே–அந்த மஹாத்மாக்களுக்கும் அளவிட ஒண்ணாத
பரிணாமம் என்ன
ஐஸ்வர்யம் என்ன
ஸ்வ பாவம் என்ன –இவற்றை யுடையதாய்)

இத்தைக் கடந்து போய்ப் புகுகிற தேசம் இருக்கும் படி என் என்னில் –
பரம –
இதுக்கு அவ்வருகு இல்லை என்னும் படி இருக்கை-

வ்யோம சப்தாபி தேய –
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா -என்று கர்ம பூமி போலே தமஸாய்  இருக்கை அன்றிக்கே தெளி விசும்பாய் இருக்கை –

இப்படி இருக்கிறது தான் பரிச் சின்னமாய் இருக்குமோ -என்னில்
ப்ரஹ்மாதீ நாம் வாங் மனச அகோசர –
அல்ப ஜ்ஞராய் அசக்தராய் நம்மளவு அன்றிக்கே அதிகரான
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் அகப்பட வாக்குக்கும் நெஞ்சுக்கும்
விஷயம் அன்றியிலே இருக்கும்

இப்படி இருக்கும் தேசத்தின் பேர் என்ன என்னில் –
ஸ்ரீ மதி வைகுண்டே திவ்ய லோகே –
ஸ்ரீ வைகுண்டம் என்று பேர் –
கர்ம பூமி போலே கைங்கர்ய ஸ்ரீ உண்டானாலும் விச்சேதம் பிறக்கை அன்றிக்கே -கைங்கர்ய ஸ்ரீ நித்தியமாய் இருக்கை –

வைகுண்டே -கர்ம திரோதானம் இல்லாமையாலே ஜ்ஞான சக்த்யாதிகள் குண்டிதம் அன்றிக்கே இருக்கும் தேசம்

திவ்ய லோகே -மானுஷ லோகமாய் இருக்கை அன்றிக்கே அதில் வ்யாவருத்தமாய் இருக்கை –

தேசம் சொல்லி தேசாதிபதிகளைச் சொல்லுகிறது மேல் –
சனக விதி சிவாதிபிரபி அசிந்த்ய ஸ்வாபாவை ஸ்வர்யை-
ப்ரஹ்ம பாவனா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளோடு கர்ம பாவனா நிஷ்டரான சனகாதிகளோடு வாசி யற நினைக்க
ஒண்ணாத படியான பிரகார வைபவங்களை யுடையராய்

நித்ய சித்தை –
முக்தரைப் போலே காதாசித்க பகவல் லாபராய் இருக்கை அன்றிக்கே
சர்வதா லப்த பகவதநுபவராய் இருக்கை –

அனந்தை –
இப்படி இருக்குமவர்களுக்கு ஓர் எல்லை இல்லை
இவர்கள் தங்களுக்கு ஓர் அந்தம் இல்லை -என்னவுமாம்

பகவத் அனுகூல்யைக போகை
பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கை –

திவ்ய புருஷை
பூமியிலே கால் பாவாது இருக்கை

மஹாத்மபி –
ஷண அபி தே யத் விரஹோ அதிதுஸ் சஹ -என்றும்
ஒரு மா நொடியும் பிரியான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வேஸ்வரனும் அவர்களோட்டை ஷணம் மாத்திர விஸ்லேஷமும் பொறுக்க மாட்டாதானாம் படியான
பெருமையை உடையராய் இருக்கை –

(திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுஉடலே*
அருமாமாயத்து எனதுஉயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே.)

ஆபூரிதே-
ஏக தேசமும் பாழே கிடவாமே அவர்களால் நிரந்தரமாய் இருக்கை
தேசம் தான் ப்ரஹ்மாதிகளால் அளவிடப் போகாதபடி இருந்ததே யாகிலும் இவர்களுக்குத் தான் அளவிடலாய் இருக்குமோ என்னில்

தேஷாமபி
தங்களை பிறரால் அளவிட ஒண்ணாது இருக்கிறவர்களுக்கும்
தேஷாமபி –
அனந்தமாய் இருக்கிறவர்களில் ஒருவரால் தான் அளவிடலாய் இருக்குமோ -என்னில்
ஓர் ஒருத்தரும் கூட அளவிட ஒண்ணாதாய் இருக்கும் -என்கிறது

மேல் வாக்கியம் எது என்னில்
பரிச்சேத்தும் அயோக்யே –
பரிச்சேதிக்கைக்கு அயோக்கியம் -என்கிறது –

இப்படிப் பரிச்சேதிக்கைக்கு அயோக்யமாய் இருக்கிறது எது என்னில்
இயத் பரிமாணம் –
இவ்வளவு என்றும்

இயத் ஐஸ்வர்யம் –
இவ்வளவு சம்பத்து என்றும்

ஈத்ருச ஸ்வ பாவம் –
இப்படிப் பட்ட ஸ்வ பாவத்தை யுடையது என்றும்

இதி பரிச்சேத்துமயோக்யே-
இப் புடைகளாலே இன்னபடி என்றும் அளவிடப் போகாது –

திவ்ய ஆவரண சத சஹச்ர ஆவ்ருதே

(தி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே –லோக விலக்ஷணமான ஆயிரம் திரு மதிள்களை யுடைத்தாய்)

திவ்ய ஆவரண சத சஹஸ்ர ஆவ்ருதே –
லோக வ்யாவ்ருத்தமான நூறு ஆயிரம் திரு மதிள்களை உடைத்ததாய் இருக்கும்

சமஸ்த க்லேச ரஹீதமான தேசத்துக்கு திரு மதிள்கள் என் என்னில்
புரம் ஹிரண் மயம்- ப்ரஹ்மா விவேச ஆராஜிதாம் – என்று எழுந்து அருளி இருக்கும் திருப் படை வீடு ஆகையாலே
இதுக்கு உள்ள லஷணங்கள் அடைய வேண்டுகையாலும்

ததஸ் த்வஹம் ச உத்தம சாப பாண த்ருக்
ஸ்திதோ அபவம் தத்ரஸ் யத்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்க்னாதிபிர் ஆத்த கார்முகைர்
மஹேந்திர கல்பம் பரிபால யம்ஸ் ததா -என்றும்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்றும்
அஸ்தானே பய சங்கிகளாய் அத் தலை இத் தலையாய்
ரஷகனையும் ரஷிக்கத் தொடங்குவர்கள் இறே –
ஆகையால் அநேகம் திரு மதிள்கள் உண்டாய் இருக்கும்

————————

திவ்ய கல்ப தரு உபசோபிதே
திவ்ய உத்யான சத சஹஸ்ர கோடிபி
ஆவ்ருதே அதி ப்ரமாணே
திவ்ய ஆயதனே

(தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே -அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே போக்யமாய்

தி³வ்யோத்³யாந ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே -அநேகமாயிரம் திருத் தோப்புக்களால் சூழப்பட்டதாய்

அதிப்ரமாணே தி³வ்யாயதநே –அகலமும் நீளமும் அளவிட ஒண்ணாததான திருக்கோவிலிலே)

கச்மிம்ச்சித் விசித்ர
திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே
திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹஸ்ர கோடிபி உபசோபிதே
திவ்ய நாநா ரத்ன க்ருத ஸ்தல விசித்ரிதே
திவ்ய அலங்கார அலங்க்ருதே
பரித பதிதை பதமானை
பாதபஸ் தைச்ச நாநா கந்த வர்ணை
திவ்ய புஷ்யை சோபா மானை
திவ்ய புஷ்ப உபவனை உபசோபிதே

(திரு வோலக்க மண்டபம்:

கஸ்மிம்ஶ்சித்³விசித்ர தி³வ்யரத்நமய தி³வ்யாஸ்தா²ந மண்ட³பே –பலவகைப்பட்ட திவ்ய ரத்னங்களாலே பிரகாரமாய் இருப்பதான தொரு திரு ஓலக்க மண்டபத்திலே

தி³வ்யரத்ந ஸ்தம்ப⁴ ஶத ஸஹஸ்ரகோடிபி⁴ருபஶோபி⁴தே –அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களால் விளக்கமுற்றதாய்

தி³வ்யநாநாரத்ந க்ருʼத ஸ்த²ல விசித்ரிதே -அப்ராக்ருதமான பலவகைப்பட்ட மாணிக்கங்கள் செறிந்த தரையை யுடைத்தாய்

தி³வ்யாலங்கார அலங்க்ருʼதே-மேல்கட்டி திருத்திரை முதலான திவ்ய அலங்காரங்களினால் அழகு பெற்றதாய்

பரித: பதிதை: பதமாநை: * பாத³பஸ்தை²ஶ்ச நாநாக³ந்த⁴வர்ணை: * தி³வ்யபுஷ்பை: ஶோப⁴மாநை:

  • தி³வ்ய புஷ்ப உபவநை: உபஶோபி⁴தே –சுற்றிலும் உதிர்ந்தவைகளும் -உதிர்ந்து கொண்டே இருப்பவைகளும்
    மரங்களிலே நிற்பவைகளும்
    பலவகைப்பட்ட பரிமளத்தையும் நிறத்தையும் உடையவைகளுமான திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே விளங்கா நின்ற பைம் பூம் சோலைகளாலே ஸோபிதமாய்

ஸங்கீர்ண பாரிஜாதாதி³ கல்பத்³ரும உபஶோபி⁴தை:–ஒன்றோடு ஓன்று கலசி இருக்கிற பாரிஜாதம் முதலான கல்ப விருக்ஷங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய உத்யான சத ஸஹஸ்ரை )

அஸங்கீர்ணைஶ்ச கைஶ்சித் -ஒன்றோடு ஓன்று சேர்ந்து இராத சில

அந்தஸ்த² புஷ்பரத்நாதி³ நிர்மித தி³வ்யலீலாமண்டப * ஶதஸஹஸ்ரோபஶோபி⁴தைঃ–உள்ளே இருக்கின்ற புஷ்பம் ரத்னம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட அநேகம் ஆயிரம் திவ்ய லீலா மண்டபங்களினால் விளங்கிக் கொண்டு இருப்பவைகளும்)

இப்படி ரஷகமேயாய் போக்யதை யற்று இருக்குமோ என்னில் –
திவ்ய கல்ப தரு உபசோபிதே
அர்வாசீன ஸ்வர்க்காதிகலில் கல்பக தருக்கள் போல் அன்றிக்கே
அப்ராக்ருதமான கற்பகச் சோலையாலே நிரதிசய போக்யமாய் இருக்கும்

திவ்ய உத்யான சத சஹஸ்ர கோடிபி ஆவ்ருதே
நாய்ச்சிமாருக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் லீலா விஹாரம் பண்ணுகைக்கு ஈடாய் இருந்துள்ள
திருத் தோப்புக்கள் அநேகங்களாலே சூழப் பட்டு இருக்கும்

அதி ப்ரமாணே –
இத்தனை அகலமும் ஆயாமமும் என்று சொல்ல ஒண்ணாத படி இருக்கும் –

திவ்ய ஆயதனே –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைகுண்ட கோயிலிலே –

கச்மிம்ச்சித் விசித்ர-
ஒரு பிரதேசத்திலே

திவ்ய ரத்ன மயே திவ்ய ஆஸ்தான மண்டே –
நாநா விதமான ரத்னங்களாலே பிரசுரமாய் இருப்பதான
திரு வோலக்க மண்டபத்திலே

திவ்ய ரத்ன ஸ்தம்ப சத சஹஸ்ர கோடிபிர் உபசோபிதே-
அநேகம் ஆயிரம் மாணிக்கத் தூண்களாலே அலங்க்ருதமாய்

சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப தரும உபசோபிதை

திவ்ய நாநா ரத்ன க்ருத ஸ்தல விசித்ரிதே-
நாநா விதமான மாணிக்கங்களால் செறிந்த ஸ்தலத்தை யுடைத்தாய்

திவ்ய அலங்கார அலங்க்ருதே –
திரு மேல் கட்டி -திருத் திரை -தூக்கன்- தூணுடைத் தூங்கு பள்ளிக் கட்டில் தொடக்கமான அலங்காரங்களால் அலங்க்ருதமாய்

பரித பதிதை –
நாலு திக்குகளிலும் உதிர்ந்து நிற்பவனாய்

பதமானை –
விழுந்து கொடு நிற்பனவாய்-

பாதபஸ் தைச்ச –
மரங்களில் நிற்பனவாய்

நாநா கந்த வர்ணை-
நாநா விதமான நாற்றம் என்ன நிறம் என்ன இவற்றை உடைத்தாய்

திவ்ய புஷ்யை சோபா மானை –
இப்படிப் பட்ட திவ்ய புஷ்பங்களாலே விளங்கா நிற்பனவாய்

திவ்ய புஷ்ப உபவனை உப சோபிதே
ஊரடைய வளைந்து கொடு நிற்கிற திருத் தோப்புக்களாலே சோபிதமாய்

சங்கீர்ண பாரிஜாதாதி கல்ப த்ரும உப சோபிதை
பாரிஜாதம் -சந்தனம் ஹரி சந்தனம் தொடக்கமான வ்ருஷ விசேஷங்களோடு கூடின
சாமான்ய கல்பக வ்ருஷங்களாலே சோபிதமாய்

அசங்கீர்னைச்ச கைச்சித்
அந்தஸ்ச்த புஷரத் நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹஸ்ர கோடி சோபிதை
சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி
க்ரீடா சில சத சஹஸ்ரை ரலங்க்ருதை
கைச்சித் நாராயண திவ்ய லீலா அசாதாரணை
கைச்சித் பத்ம வநாலயா திவ்ய லீலா அசாதாரணை
சாதாரனைஸ் ச கைச்சித் சுக சாரிகா மயூர கோகிலாதிபி
கோமல கூஜிதை ஆகுலை
திவ்ய உத்யோன சத சஹஸ்ர கோடிபி
ஆவ்ருதே

(லீலோத்₃யாநங்கள்:–எம்பெருமானுடைய லீலைக்கே உரியவர்கள் சிலவும்
பிராட்டியுடைய லீலைக்கே உரியவைகள் சிலவும்
இருவருடையம் லீலைக்கே உரியவைகள் சிலவுமாய்
அழகிய குரலை யுடைய
கிளிகள்
பூவைகள்
மயில்கள்
குயில்கள் -முதலான பறவைகளின் கோலாஹலம் பொருந்தின திவ்யமான நூறாயிரம் பொழல்களாலே சூழப்பட்டதாய்)

அசங்கீர்னைச்ச கைச்சித்
தன்னில் தான் சேர்ந்து இருக்கை அன்றிக்கே இருப்பன சிலவற்றால்

அந்தஸ்ச்த புஷ்ப ரத்நாதி நிர்மித திவ்ய லீலா மண்டப சத சஹஸ்ர கோடி சோபிதை-
இத் தோப்புக்களுக்கு உள்ளே சமைந்த புஷ்ப மண்டபம் -மாணிக்க மண்டபம் இவற்றின் உடைய
அநேகங்கங்களாலே அலங்க்ருதங்களாய்

சர்வதா அநு பூய மானை ரபி அபூர்வத் ஆச்சர்யம் ஆவஹத்பி –
எப்போதும் அனுபவியா நின்றாலும் புதுமை போலே விஸ்மய நீயமாய் இருப்பதுகளாய்-

க்ரீடா சைல சத சஹஸ்ரை ரலங்க்ருதை –
அநேகம் ஆயிரம் கிரீடா சைலங்களாலே அலங்க்ருதங்களாய்

(கிரீடாத்ரி என்ற பெயரும் திரு வேங்கடத்துக்கு உண்டே)

கைச்சித் நாராயண திவ்ய லீலா அசாதாரணை
கைச்சித் பத்ம வநாலயா திவ்ய லீலா அசாதாரணை சாதாரணைச்ச கச்சித்

கைச்சித் நாராயண திவ்ய லீலா அசாதாரணை-என்று தொடங்கி –
சாதாரணைச்ச கச்சித் -என்கிறது இறுதியாக
எம்பெருமானதாயும் -நாய்ச்சிமாரதாயும் -இருவருக்கும் பொதுவாயும் உள்ள திருத் தோப்புக்களாலே(பத்ம வநாலயா -அவளுக்கு மட்டும்)

சுக சாரிகா மயூர கோகிலாதிபி-
கிளிகள் -அவற்றில் அவாந்தர ஜாதியான சாரிகைகள்,மயில்கள் ,குயில்கள் ,இவை தொடக்கமான பஷிகளாலே(பூவை பைங்கிளிகள் -பூவை சாரிகை)

அவற்றில் சுகம் ஆகிறது பைம் கிளி
சாரிகை ஆகிறது பூவை
ஆதி சப்தத்தாலே அன்னம் குருகு தொடக்கமானவை

கோமல கூஜிதை ஆகுலை
இனிய பேச்சை உடைய பஷிகளாலே ஆகுலங்களாய் உள்ள(நிறைந்துள்ள)

திவ்ய உத்யோன சத சஹஸ்ர கோடிபி ஆவ்ருதே –
இப்படிப் பட்ட அநேகம் தோப்புக்களாலே சூழப் பட்டு இருப்பதாய்

மணி முக்தா ப்ரவாள க்ருத சோபானை
திவ்ய அமல அம்ருத ரசோதகை
திவ்ய அண்டஜ வரை
அதி ரமணீய தர்சனை
அதி மநோ ஹர மதுர ஸ்வரை ஆகுலை
அந்தஸ்ச்த முக்தாமய திவ்ய க்ரீடா ஸ்தான உபசோபிதை
திவ்ய சௌகந்திக வாபீ சத சஹஸ்ரை
திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே

(நீரோடைகள்:

மணிமுக்தாப்ரவால க்ருʼதஸோபாநை: –ரத்னம் முத்து பவளம் முதலியவற்றால் செய்யப்பட்ட படிகளை யுடையவனவாய்

(இது முதலான த்ருதீயாந்த விசேஷணங்களுக்கு விசேஷ்யம் -திவ்ய ஸுகாந்திக வாபீ சத ஸஹஸ்ரை -என்பது )

தி³வ்யாமல அம்ருʼத ரஸோத³கை: -அப்ராக்ருதமும் நிர் மலமும் அம்ருதம் போலே ரஸ வத்துவமான நீர்ப்பரப்பை யுடையவனாய்

தி³வ்யாண்ட³ ஜவரை:
அதிரமணீய த³ர்ஶநை:
அதிமநோஹர மது⁴ரஸ்வரைராகுலை: –கண்ணுக்கு அழகியவைகளும்
பேச்சில் இனிமை யுடையவைகளுமான
அப்ராக்ருத பஷிகளாலே வ்யாப்தங்களாய்

அந்தஸ்ஸ்த² முக்தாமய தி³வ்ய க்ரீடா³ஸ்தா²ந உபஶோபி⁴தை:-உள்ளே உண்டான முத்துக்களாலான லீலா ஸ்தானங்களாலே ஸோபிதங்களாய்

தி³வ்ய ஸௌக³ந்தி⁴க வாபீ ஶதஸஹஸ்ரை: –அப்ராக்ருதமான செங்கழு நீரோடையால் பல ஆயிரம் நிறைந்துள்ளாய்

தி³வ்ய ராஜ ஹம்ஸாவலீ விராஜிதைராவ்ருʼதே,–ஸூத்த ஸத்வ மயமான ராஜ ஹம்ஸங்கள் விளங்கிக் கொண்டு இருப்பவைகளான)

மணி முக்தா ப்ரவாள க்ருத சோபானை –
ரத்னம் முத்து பவளம் தொடக்கமானவை களால் பண்ணப் பட்ட படி ஒழுங்குகளை உடைத்தாய் இருப்பனவாய்

திவ்ய அமல அம்ருத ரசோதகை –
அப்ராக்ருதமாய் நிர்மலமாய் அம்ருதம் போலே ரசவத்தான நீர்ப் பரப்பை உடையவைகளாய்

திவ்ய அண்டஜ வரை –
அப்ராக்ருதமான பஷி ஸ்ரேஷ்டங்களாலே

அதி ரமணீய தர்சனை
கண்ணுக்கு அழகியவாய் இருப்பனவாய்

அதி மநோ ஹர மதுர ஸ்வரை ஆகுலை
மிக்க மநோ ஹாரியான பேச்சில் இனிமையை உடையவனாய்

அந்தஸ்ச்த முக்தா மய திவ்ய க்ரீடா ஸ்தான உபசோபிதை –
உள்ளே உண்டான முத்துக்களாலே சமைந்த லீலா ஸ்தானங்களாலே சோபிதங்களாய்

திவ்ய சௌகந்திக வாபீ சத சஹஸ்ரை –
அப்ராக்ருதமான செங்கழு நீரை உடைத்தான நீர் வாவிகள் உடைய நூறு ஆயிரங்களாலே

திவ்ய ராஜ ஹம்சாவளீ விராஜிதை ஆவ்ருதே –
சுத்த சத்வ மயமான ராஜ ஹம்சங்கள் உடைய ஒழுங்குகளாலே விளங்கா நின்றுள்ள
முன் சொன்ன வற்றாலே  சூழப் பட்டு இருப்பதாய்

————–

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
ஆனந்த (அனந்த) யாச்ச பிரவிஷ்டான் உன்மாதயத்பி
க்ரீடோத்தேசை விராஜிதே

(லீலா ஸ்தானங்கள்:-உயர்வற உயர்ந்த ஆனந்தமே வடிவெடுத்து இருக்கையாலும்
அபரிச்சின்னமாய் இருக்கையாலும்
உள் புக்கவர்களை மயக்க வல்ல லீலா ஸ்தானங்களாலே விளங்கா நிற்பதாய்)

நிரஸ்த அதிசய ஆனந்தைக ரசதயா ச
நிரஸ்தமான மிகுதியை உடைத்தாய்
ஆனந்தமாய் முடிவு இன்றிக்கே இருக்கிற சுகமாய் இருக்கையாலும் –

ஆனந்த (அனந்த) யாச்ச –
முடிவு இல்லாமையாலும்

பிரவிஷ்டான் உன்மாதயத்பி –
ரச்யதையாலே உட் புகுந்தவர்களை பிச்சேற்ற வற்றான

க்ரீடோத்தேசை விராஜிதே-
இப்படிப் பட்ட க்ரீடோத் தேசங்களாலே விளங்கா நிற்பதாய்

தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே
நாநா புஷ்ப ரஸாஸ்வத மத்த ப்ருங்க ஆவலீபி
உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே
சந்தன அகரு கர்ப்பூர
திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே
மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே
மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம்
ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம்
ஆஜ்ஞா பயந்த்யா
சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்

தத்ர தத்ர கருத திவ்ய புஷ பர்யங்கோப சோபிதே –
(பூம் பள்ளிகள்:-)அவ்வோ இடங்களிலே பண்ணப் பட்ட பூம் படுக்கைகளாலே அலங்க்ருதமாய் –

நாநா புஷ்ப ரஸாஸ்வத  மத்த ப்ருங்க ஆவலீபி உத்கீயமான திவ்ய காந்தர் வேண ஆபூரிதே –
(வண்டுகளின் கானம்:)நாநா விதமான புஷ்பங்களில் உண்டான மதுவைப் பானம் பண்ணி அத்தாலே களித்த வண்டுகளின்
ஒழுங்குகளாலே பாடப் படா நின்ற காந்தர்வ வித்யையாலே நிறைந்து இருப்பதாய் –

சந்தன அகரு கர்ப்பூர திவ்ய புஷ்ப அவகாஹி மந்தா நிலா ஆசேவ்யமானே –
(மந்த மாருதம்)சந்தனம் அகில் கர்ப்பூரம் பூக்கள் இவற்றிலே உட் புகுந்து
அங்கு உள்ள பரிமளங்களைக் கொய்து கொண்டு வருகிற தென்றலாலே சேவிக்கப் படுமதாய்-

மத்யே திவ்ய புஷ்ப சஞ்சய விசித்ரிதே -மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி
(திருப் பள்ளிக் கட்டில்:)நடுவில் விடு பூக்களாலே விசித்ரமாய்பெரிய திருப் பள்ளிக் கட்டிலாய் இருக்கிறதிலே திரு வநந்த ஆழ்வான் மேலே –

(தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந பலைக தாமநி |
பணா மணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்ய தாமநி ||-ஶ்லோகம் 39

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

ஆளவந்தார், திருவனந்தாழ்வானின் திருமடியில் எம்பெருமானும் பிராட்டியும் கூடி யிருப்பதைப் பர்யங்க வித்யையில் காட்டியபடி அனுபவிக்கிறார்.

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஶ்லோகம் 40 –

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,
சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,
உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும்,
வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு
உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.
ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ்ஸதா’பவத் |”
(எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) சொன்னபடி,
கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.
ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.)

இப்படி இருக்கிற படுக்கையிலே நாய்ச்சிமார் உடன் கூடி எழுந்து அருளி இருக்கும் படி சொல்லுகிறது மேல் –

ஸ்ரீ மத்  வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் –
இப்படி இருக்கிற திவ்ய லோகத்தை

ஆத்ம காந்த்யா-
தன்னுடைய காந்தியாலே

விஸ்வம் ஆப்யா யந்த்யா –
விஸ்வத்தையும் ஆப்யாயனம் பண்ணு விப்பியா நின்று கொண்டு -(போஷாக்கு ஊட்டி வளர்க்க)

(திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
–10-6-9-)

சேஷ சேஷாசநாதி சர்வ பரிஜனம் –
திரு வநந்த ஆழ்வான் -சேனை முதலியார் உள்ளிட்ட பரிஜனம் எல்லாவற்றையும்

(த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-ஶ்லோகம் 42 –

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும்
பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி,
அவற்றை நடத்தக் கூடியவர்.

ஆளவந்தார் ஸ்ரீ ஸேனாபதி ஆழ்வானின் (விஷ்வக்ஸேனர்) தாஸ்ய ஸாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார்;
எம்பெருமான் தன்னுடைய எல்லாப் பொறுப்புகளையும் விஷ்வக்ஸேனரிடம் அளித்துத் தன்னையும் அவர் அதீனத்தில் அமைத்துக் கொள்கிறான்.)

பகவத தத்ததவஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா
சர்வேஸ்வரனுக்கு அந்த அந்த அவஸ்தைகளுக்கு ஈடாம்படியான கைங்கர்யத்திலே நியமியா நிற்பாளாய்

(தேவி மாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே! அமுதே! அலை கடல் கடைந்த அப்பனே! காணுமா றருளாய்.)

சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா –
சீல குண உபலஷிதமான ஆத்ம குணம் என்ன
ரூப குண உபலஷிதமான சௌந்த்ர்யாதி குணம் என்ன
விலாசம் என்ன
இவை தொடக்கமானவற்றாலே-சர்வேஸ்வரனுக்கு சத்ருசையாய் உள்ளவளாய்(அபிமத அநு ரூப-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா)

ஸ்ரீ யா சஹ ஆஸீனம் –
இப்படிப் பட்ட பெரிய பிராட்டியோடு கூடி இருப்பானாய்

———

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம்
ஸ்வச்ச நீல ஜீமூத சந்காசம்
அத் யுஜ்ஜ்வல பீத வாசசம்
ஸ்வயா ப்ரபயா
அதி நிர்மலயா
அதி சீதலையா
ஸ்வ ச்சயா
மாணிக்யாபயா
க்ருத்ஸ்னம் ஜகத் பாச யந்தம்
அசிந்த்ய திவ்ய அத்புத
திவ்ய யௌவன ஸ்வ பாவ
லாவண்ய மய அம்ருத சாகரம்
அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாட பலக திவ்ய அலகாவளீ விராஜிதம்
பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸூ விப்ரமப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூ சி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷன சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம்

அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கரதலம்
திவ்ய அங்கு லீயக விராஜிதம்

ப்ரத்யக்ர உன்மீலித சரசிஜ சத்ருச நயன யுகளம் –
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்  கண்களை உடையவனை –

(செங்கண் சிறுச் சிறிதே விழியாவோ
அப்போது அலர்ந்த செந் தாமரையை வென்றது அம்மா)

(ப்ரத்யக்³ர உந்மீலித ஸரஸிஜ ஸத்³ருʼஶ நயநயுக³ளம் * –அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூ போன்ற திருக் கண்களை யுடையவனும்

ஸ்வச்ச²நீலஜீமூதஸங்காஶம் –விமலமான கார் முகில் போன்றவனும்

அத்யுஜ்வலபீத வாஸஸம்-மிகவும் புகர் பெற்று விளங்குகின்ற பீதக வாடையை யுடையவனும்

ஸ்வயா ப்ரப⁴யா அதிநிர்மலயா அதிஶீதலயா அதிகோமலயா ஸ்வச்ச²யா மாணிக்யாப⁴யா க்ருʼத்ஸ்நம் ஜக³த்³பா⁴வயந்தம்–மிக நிர்மலமாய் –மிகக் குளிர்ந்ததாய் -மிகவும் ஸூ குமாரமுமாய் -ஸ்வச்சமாய் –
மாணிக்கம் போன்றதான தனது திவ்ய காந்தியினால் உலகம் முழுவதையும் விளங்காச் செய்யா நின்றவனும் –

அசிந்த்ய தி³வ்யாத்³பு⁴த நித்ய யௌவந ஸ்வபா⁴வ லாவண்யமய அம்ருʼத ஸாக³ரம்–சிந்தைக்கு எட்டாததாய் –திவ்யமாய் –ஆச்சர்யமாய் -நித்தியமாய் இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக் கடலாய் –

அதிஸௌகுமார்யாதீ³ஷத் ப்ரஸ்விந்நவத் * அலக்ஷ்யமாண லலாடப²லக தி³வ்ய அலகாவலீ விராஜிதம்–மிகவும் ஸூ குமாரமாதலால் -சிறிது குறு வியர்ப்பு அரும்பினால் போல் காண்கின்ற திரு நெற்றியிலே படிந்த திருக் குழல்களாலே விளங்கா நிற்பவனாய்

ப்ரபு³த்³த⁴ முக்³தா⁴ம்பு³ஜ சாருலோசநம் –அப்போது அலர்ந்த தாமாரைப் பூப் போன்ற அழகிய திருக்கண்களை யுடையவனாய்

ஸவிப்⁴ரமப்⁴ரூலதம் –விலாசத்தோடு கூடிக் கொடி போன்றதான திருப்புருவங்களை யுடையவனாய்

உஜ்வலாத⁴ரம் -பிரகாசிக்கின்ற திரு அதரத்தை யுடையவனாய்

ஶுசிஸ்மிதம்–கபடமற்ற புன் சிரிப்பை யுடையவனாய்

கோமலக³ண்ட³ம் –அழகிய கபோலங்களை யுடையவனாய்

உந்நஸம் –உயர்ந்த திரு மூக்கை யுடையவனாய்

உத³க்³ர பீநாம்ஸ விலம்பி³ குண்ட³ல அலகாவலீ ப³ந்து⁴ர கம்பு³கந்த⁴ரம்–உயர்ந்தும் பருத்தும் இருக்கிற திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்று சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை யுடையவனாய்

ப்ரியாவதம்ஸ உத்பல கர்ணபூ⁴ஷணஶ்லதா²லகாப³ந்த⁴ விமர்த³ஶம்ஸிபி:⁴ * சதுர்பி⁴: ஆஜாநுவிலம்பி³பி⁴ர்பு⁴ஜை: விராஜிதம்–பிராட்டிமார்களுக்கு கர்ண அலங்காரமான கரு நெய்தல் மலர் என்ன -கர்ண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன ஆகிய இவை அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவையாகித் திரு முழந்தாள் வரை தொங்குகின்ற நான்கு புஜங்களோடே பிரகாசிக்கின்றவனாய்

அதிகோமல தி³வ்ய ரேகா²லங்க்ருʼத ஆதாம்ரகரதலம் –மிகவும் அழகிய -தாமரை சங்கு சக்கரம் முதலான ரேகைகளினால் அலங்கரிக்கப் பட்டுச் சிறிது சிவந்து இருக்கிற திருக் கைத் தலத்தை யுடையவனாய்

தி³வ்ய அங்கு³லீயக விராஜிதம்–அப்ராக்ருதமான மோதிரங்களினால் விளங்குபவனாய்

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம் * அநுரக்தாங்கு³லீபி⁴: அலங்க்ருʼதம்-மிகவும் ஸூ குமாரமான திரு நகங்களினால் விளங்குகின்ற மிகச் சிவந்த திருவிரல்களால் அலங்கரிக்கப் பட்டவனாய் –

அதிகோமல தி³வ்ய நகா²வலீ விராஜிதம்-என்று இடையிலே பிரித்து எம்பெருமானுக்கு தனி விசேஷணம் ஆக்கவுமாம்
அநு ரக்த -அதி ரக்த -பாட பேதங்கள்

தத்க்ஷண உந்மீலித புண்ட³ரீக ஸத்³ருʼஶ சரணயுக³ளம்–அப்போது அலர்ந்த புண்டரீகத்தோடு ஒத்த திருவடி இணையை யுடையவனாய்)

அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கர தலம்
அதி கோமளமாய்-சால அழகியதாய் இருக்கிற திவ்ய ரேகை உண்டு
தாமரை சங்கம் சக்ரம் தொடக்கமான ரேகைகள்
அவற்றைத் திருக் கைத் தலத்திலே உடையவனாய்

(நாவல் பழக்காரி இந்த திருக் கை ரேகைகளைப் பார்த்து மோக்ஷம் கேட்டுப் பெற்றுப் போந்தாள்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்)

(கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-)

திவ்ய அங்குலீயக விராஜிதம்
திரு விரலில் சாத்தின அறுகாழி மோதிரத்தால் விளங்கா நிற்பவனாய்

(நம்பெருமாள் அபய ஹஸ்தத்தில் நடுவிரலையும் கட்டை விரலையும் தவிர ஒவ்வொரு விரல்களிலும் இரண்டு மோதிரங்கள் சாத்தி அருள்கிறார்)

ஸ்வச்ச நீல ஜீமூத சங்காசம் –
தெளிந்த காளமேகம் போலே இருக்கிறவனை

அத் யுஜ்ஜ்வல பீத வாசசம் –
அறப் பளபளத்த திருப் பீதாம்பரத்தை உடையவனை

ஸ்வயா ப்ரபயா –
தன்னுடைய காந்தியாலே

அதி நிர் மலயா –
மிகவும் அழுக்கு அற்று

அதி சீதலையா –
அறக் குளிர்ந்து இருப்பதாய்

ஸ்வ ச்சயா –
மிகவும் அச்சமாய் இருப்பதாய்

மாணிக்யாபயா
மாணிக்கம் போலே இருக்கிற ப்ர்பையை உடைத்தாய்

க்ருத்ஸ்னம் ஜகத் பாசயந்தம்
எல்லா ஜகத்தையும் பிரகாசிப்பிக்கும் அவனாய்

அசிந்த்ய திவ்ய அத்புத
சிந்தயிதும் அசக்யமாய் -அப்ராக்ருதமாய் -மிக ஆச்சர்ய பூதமாய்

திவ்ய யௌவன ஸ்வபாவ லாவண்ய மய அம்ருத சாகரம் –
போது செய்யாத படியான நித்ய யௌவனத்தையே ஸ்வ பாவமாக உடைத்தாய்
அழகாகிற அம்ருதத்துக்கு கடலாய்

அதி சௌகுமார்யாத் ஈஷத் பிரச்வின்னவத் ஆலஷ்யமான லலாட பலக திவ்ய அலகாவளீ விராஜிதம் –
அற மெல்லியதாகையாலே தளிர் போலே புரிந்து தோற்றுகிற திரு நெற்றியிலே அலை எறிகிற திருக் குழல் கற்றையாலே
விளங்கா நிற்பானாய்

———

பிரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸூ விப்ரம ப்ரூலிதம்
உஜ்ஜ்வல அதரம் ஸூசி ஸ்மிதம்
கோமல கண்டம் உன்நசம் உதகர பீன
அம்ச விலம்பி குண்டல அலகா வலீ பந்துர கம்பு கந்தரம்
ப்ரியா அவதம்ச உத்பல
கர்ண பூஷண சலாத அலகா பந்த விமர்த
சம்சிபி சதுர்ப்பி
ஆஜானு விலம்பிபிர் புஜை விராஜிதம் –

பிரபுத்த -தொடங்கி விராஜிதம் -இறுதியாக உள்ள பதங்களுக்கு பொருள் ஸ்தோத்ர பாஷ்யத்தில் கண்டு கொள்வது

(ஸ்தோத்ரம் -34- அவதாரிகை –

திருத் தோள்களுக்கு அனந்தரமான
திருக் கழுத்தையும்
தத் அனந்தரமான
திரு முகத்தில் சாமான்ய ஸோபையையும்
அனுபவிக்கிறார்-

உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-

உதக்ர பின அம்ஸ விலம்பி குண்டல அலக ஆவளீ –
ஓங்கித் தசைத்து இருந்துள்ள அம்ஸ்த்திலே வரத் தாழ்ந்த
திருக் குண்டலங்கள் -என்ன
அவ்வளவு வரத் தாழ்ந்த திருக் குழல்கள் -என்ன
இவற்றாலே சுந்தரமாய்-வடிவு தான் ரேகா த்ரயாங்கிதமாய்
இருந்துள்ள திருக் கழுத்தை உடையவனை –

பந்துர-
சுந்தர
ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே –
மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச -பெரிய திருமடல் -2-
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்டகம் -21-என்றும்-சொல்லுகிறபடியே
திருக் கழுத்துக்கு பர பாகமான ஒளியை யுடைத்தாய்
இரண்டு ஆதித்யர்கள் ஆபரண வேஷத்தாலே அலங்கரிக்கிறாப் போலே இருக்கை –
கொள்கின்ற கோள் இருளை -திருவாய்மொழி -7-7-9-இத்யாதிப் படியே
திருக் குழலாலே அலங்க்ருதமாய் இருக்கிறபடி

முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம் –
அத் திருக் குழலாலே அழகு திரு முகத்திலே மூட்ட
அந்த அழகை அனுபவிக்கிறார் –
தன்னுடைய ஜ்யோதிஸ்ஸாலே பூர்ண சந்தரன் உடைய ஒளியையும்
அப்போது அலர்ந்த தாமரைப் பூவில் அழகையும்
தோற்ப்பிக்கும் திரு முகத்தை உடைய உன்னை –

முக ஸ்ரீ யா -முக காந்த்யா
ந்யக்ருத -அவன்
சம்பூர்ண கலைகளாலும் பூரணமான பௌரணமாவாஸ்யையில்
சந்திர மண்டலமாய் மறு கழற்றின அளவிலே யாயிற்று-அஸ்த்ருசமாய் இருப்பது
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது
தேஜஸ்ஸே யன்றியே சௌகுமார்யத்துக்கும்
விகாஸி ஸார தாம்போஜமவஸ் யாய ஜ லோ ஷிதம் –
செவ்விக்கும் தாமரைப் பூவும் ஸ்த்ருஸ்ம் அன்று
பரிபூய ஸ்திதம் -என்னக் கடவது இ றே

(திருக் கழுத்துக்கு சங்கு உவமை -கம்பு -சிங்குக்கு பெயர் –
கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் -கொடுக்கல் அமைந்த கழுத்து -)

——————————————————————————

ஸ்தோத்ரம் -35-அவதாரிகை –

கோள் இழைத் தாமரை -திருவாய்மொழி -7-7-8-என்கிறபடியே
திரு முகத்தில் அவயவ சௌந்தர்யத்தின் உடைய
சேர்த்தியை அனுபவிக்கிறார்

ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-

ப்ரபுத்த –
ஆஸ்ரித சம்ச்லேஷத்தாலே
விகஸிதமாய் இருக்கை –

முக்த-
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே –அங்கண் இரண்டும் கொண்டு –திருப்பாவை -22-
என்கிறபடியே அலரத் தொடங்கின அளவாய் இருக்கும் -என்னுதல் –
பேதுறு முகம் செய்து -திருவாய் மொழி -9-10-9-என்னும் படிக்கு ஆஸ்ரிதர் ஓட்டைக் கல்வியால்
வந்த ஆனந்தாதிஸயத்தில் விக்ருதியைச் சொல்லுதல் –
அம்புஜ சாரு லோசனம் –
இப்படிப் பட்ட தாமரை த்ருஷ்டாந்தமாகப் போராமையாலே
தார்ஷ்டாந்திகம் தன்னையே சொல்கிறது
தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -என்று
ஆஸ்ரிதர் ஆசைப்படுமது இ றே

ஸவிப்ரமப் ரூலதம் –
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்-திருவாய்மொழி -7-7-4- என்கிறபடியே
ஆஸ்ருதர் பக்கல் ஆதரம் எல்லாம் தோற்றும்படி
நெரித்து இருக்கும் புருவத்தை உடைய உன்னை –
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் – நாச்சியார் திரு மொழி -14-7-என்று
த்ருஷ்டாந்திக்கும் படி இ றே

உஜ்ஜ்வலாதரம் –
வாலியதோர் கனி கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம் கொல் -திருவாய்மொழி -7-7-3- என்றும்
நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய் -திருவாய் மொழி -7-7-3- என்றும் –
சொல்லுகிறபடியே மிக்க அழகை உடைய திரு அதரத்தை உன்னை –

ஸூசி ஸ்மிதம்-
பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-என்றும்
என்னாவி யடும் அணி முத்தம் கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்
சொல்லுகிற திரு முறுவலை யுடையவனை

கோமள கண்ட-
அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகமாய்
ஸூகுமாரமான கண்ட ஸ்தலத்தை யுடைய உன்னை –

உநநஸ்ம் –
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -திருவாய் மொழி -7-7-2-
என்கிறபடியே நாஸ்லதையை உடைய உன்னை –

லலாட பர்யந்த விலம்பி தாலகம்-
முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் -பெரியாழ்வார் திருமொழி -1-5-5- என்றும்
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் -பெரியாழ்வார் திருமொழி -3-6-9- என்றும்
சொல்லுகிற திரு நெற்றியின் எல்லையிலே வர அலை எறிகிற திருக் குழலை உடைய உன்னை
பின்பு -அம்ஸ விலம்பி -யாய்
முன்பு லலாட பர்யந்தமாய் -இருக்கிறபடி-

(கீழே திரு முக மண்டலா சமுதாய சோபை -இங்கு திரு முக அவயவ சோபை அனுபவம்
முக்த -அழகிய புதியதான
சுசி ஸ்மிதம் -வெளுத்த –பரிசுத்த -ருஜுவான -கள்ளம் கபடு அற்ற
கீழே திருக் குழல்கள் திருத் தோள்கள் அளவும் -இங்கு முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர
நின்று விளையாட -நாச் -14–8-
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய்
மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )

——————————————————————

ஸ்தோத்ரம் -36- அவதாரிகை-

ஆபரண
ஆயுதாதிகள் உடைய
சேர்த்தி அழகை
அனுபவிக்கிறார்

ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-

ஸ்புரத் கிரீட-
உபய விபூதி நாதத்வம் ஆகிற ஐஸ்வர்யத்துக்கு அனுரூபமாய் –
திரு முடியிலே விளங்கா நிற்கிற திரு வபிஷேகம்
கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இ றே –

அங்கத-
சர்வ ஆஸ்ரயமான
திருத் தோள்களைப் பற்றி விளங்கா நின்றுள்ள
திருத் தோள் வளைகள்-

ஹார –
பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்
சொல்லுகிறபடியே விளங்கா நின்ற திருவாரம் –

கண்டிகா –
திருக் கழுத்திலே விளங்கா நின்ற முத்துத் திருக் கட்டு வடம் –

மணீந்த்ர –
அவன் தனக்கும் சதா ஸ்ப்ருஹணீ யமான ஸ்ரீ கௌஸ்துபம் –

காஞ்சீ குண –
திருவரையிலே விளங்கா நின்ற அரை நூல் பட்டிகை

நூபுர-
திருவடிகளைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருச் சிலம்பு –

ஆதி –
சப்தத்தாலே
பல பலவே ஆபரணம் -என்றும்
அபரிமித திவ்ய பூஷண – என்றும்
சொல்லுகிறபடியே
அசங்க்யாதம் என்கை –

ரதாங்க -சங்க அஸி கதா தநுர் வரை
இந்த ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படி
ஸோப அவஹமான திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார் –

லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்
சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் திருவடிகள் அளவும் தாழ்ந்து
அல்லித் துழாய் அலங்கல் -திருவாய்மொழி -7-9-10-
என்கிற வனமாலையால் விளங்கா நின்ற உன்னை
ஆபரண ஆயுதாதிகள் தன்னைப் பற்றி விளங்குகையும்
அவற்றாலே தான் விளங்குகையுமாக செல்லுகிறபடி-
ஸ்ரக் வஸ்த்ர ஆபரணைர் யுக்தம் ஸ்வரூபைர் அநு பூமி
சிந்மயை ஸ்வ பிரகாச சைஸ்ஸ அந்யோந்ய ருசி ரஞ்ஜகை –)

அதி கோமள திவ்ய ரேகா அலங்க்ருத ஆதாம்ர கர தலம்
அதி கோமளமாய்-சால அழகியதாய் இருக்கிற திவ்ய ரேகை உண்டு
தாமரை சங்கம் சக்ரம் தொடக்கமான ரேகைகள்
அவற்றைத் திருக் கைத் தலத்திலே உடையவனாய்

(நாவல் பழக்காரி இந்த திருக் கை ரேகைகளைப் பார்த்து மோக்ஷம் கேட்டுப் பெற்றுப் போந்தாள்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்)

(கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-)

திவ்ய அங்குலீயக விராஜிதம்
திரு விரலில் சாத்தின அறுகாழி மோதிரத்தால் விளங்கா நிற்பவனாய்

——————————————

அதி கோமள நகாவலீ விராஜிதம்
அதி ரக்தாங்குலீ பிரலங்க்ருதம்
தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அதி மநோ ஹர க்ரீடேத்யாதி
கிரீட மகுட சூடா அவதம்ச
மகர குண்டல க்ரைவேயக ஹார கேயூர கடக
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முக்தா தாம உதர பந்தன
பீதாம்பர காஞ்சி குண நூபுராதிபி
அத்யந்த ஸூக ஸ்பர்ச
திவ்ய கந்தை பூஷணை பூஷிதம்
ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம்

சங்க சக்ர கதா அஸி சார்ங்காதி திவ்ய ஆயுதை
சேவ்யமானம் –

ஸ்வ சங்கல்ப மாத்ர
அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி
த்வம் சாதிகே ஸ்ரீ மதி விஷ்வக்சேனே
ந்யஸ்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம்
வைனயதே யாதஈ பி –

அதி கோமள நகாவலீ விராஜிதம் –
மிகவும் ஸூ குமாரமாய் இருக்கிற திரு யுகிர் ஒழுங்குகளாலே விளங்கா நிற்பானாய் –

அதி ரக்த அங்குலீ பிரலங்க்ருதம் –
சிவந்த திரு விரல்களாலே விளங்கா நிற்பானாய் -(வ்ரஜ பூமியில் தவழ்ந்ததாலா -சாட்டை பிடித்ததாலா -சிவந்தது)

தத் ஷண உன்மீலித புண்டரீக சத்ருச சரண யுகளம்
அப்போது அலர்ந்த தாமரைப் பூப் போலே இருக்கிற இரண்டு திருவடிகளை உடையனாய்(கட்டுரைக்கில் -தாமரை –ஒவ்வா -)

அதி மநோ ஹர க்ரீடேத்யாதி-
கண்டார் நெஞ்சு பரி உண்ணும்படியான க்ரீடாதிகளாலே அலங்க்ருதன் என்கிறது –

கிரீட மகுட –
கிரீட மகுடம் என்ன -அன்றிக்கே கிரீடமான மகுடம் என்ன

சூடா
அதிலே சாத்தின திருச் சூட்டு என்ன

அவதம்ச
திருச் செவி மலர் என்ன –

மகர குண்டல –
திரு மகரக் குழை என்ன(மகர நெடும் குழைக்காதன் மாயன்)

க்ரைவேயக –
திருக் கழுத்து அணி என்ன –

ஹார –
திரு மாரிலே தழையச் சாத்தும் திரு வாரம் என்ன –

கேயூர –
பாஹுவலயம் -என்ன

கடக –
முன் கையில் சாத்தும் கடக வலயம் என்ன

ஸ்ரீ வத்ஸ-
திரு மார்பில் அநிதர சாதாரணமாக திரு மறு என்ன

கௌஸ்துப –
ஸ்ரீ கௌஸ்துபம் -என்ன

முக்தா தாம –
திரு முத்து வடம் என்ன

உதர பந்தன –
திரு உதர பந்தம் என்ன –

பீதாம்பர –
கனக லேசம் என்ன

காஞ்சி குண –
அரை நூல் பட்டிகை என்ன

நூபுராதிபி
திருச் சிலம்பு என்ன

ஆதி பி –
இவை தொடக்கமான –

அத்யந்த ஸூக ஸ்பர்ச –
திரு மேனிக்கு பூத் தொடுமா போலே ஸ்பர்சிக்கும் போது ஸூக கரமாய் இருப்பவனாய்-

திவ்ய கந்தை –
அப்ராக்ருதமான திவ்ய பரிமளத்தை உடைத்தாய் இருப்பனவாய் –

பூஷணை பூஷிதம்
இப்படிப் பட்ட திவ்ய ஆபரண ஆழ்வார்களாலே அலங்க்ருதனாய் இருப்பானாய்-

ஸ்ரீ மத்யா வைஜயந்த்யா வனமாலயா விராஜிதம் –
அழகை உடைத்தாய் -வைஜயந்தி என்று பேர் பெற்று இருக்கிற வனமாலையால் விளங்கா நிற்பானாய் –

சங்க சக்ர கதா அஸி சார்ங்காதி திவ்ய ஆயுதை- சேவ்யமானம் –
ஸ்நேஹத்தால் அஸ்தான சங்கா-ரஷா-வ்யசநிகளான பஞ்சாயுதம் தொடக்கமான திவ்ய ஆயுதங்களாலே
சூழ்ந்து இருந்து ஏத்தப் படுமவனாய் –

ஸ்வ சங்கல்ப மாத்ர அவக்லுப்த ஜகஜ் ஜன்ம ஸ்திதி த்வம்சாதிகே –
நினைத்த மாத்ரத்திலே நிர்வஹிக்கப் பட்ட ஸ்தாவர ஜங்கமாத்மகமான சமஸ்த வஸ்துக்களின் உடைய
உத்பத்தி ஸ்திதி விநாசங்கள் என்ன-நியம நாதிகள் என்ன-இவற்றை உடையராய் –

ஸ்ரீ மதி விஷ்வக்சேனே –
கைங்கர்ய லஷ்மிக்கு இட்டுப் பிறந்த சேனை முதலியார் பக்கலிலே –

ந்யஸ்த சமஸ்த ஆத்மை ஐஸ்வர்யம் –
வைக்கப் பட்ட தம்முடைய எல்லா நியந்த்ருத்வத்தை உடையவராய் உள்ளவரை –

பெரிய திருவடி நாயனார் தொடக்கமான ஸூரி பரிஷத்தாலே சேவ்யனாய் இருக்கும் என்கிறது மேல் –

வைனயதே யாதீபி –
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான பார்ஷ்தாத்யர்-
கண நாயகர்கள் தொடக்கமானவர்களாலே.

பார்ஷ்தாத்யர் ஆகிறார் கஜ வக்த்ராதிகள்-
கண நாயகர்கள் ஆகிறார் -குமுதாதிகள்

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41)

—————————————————————————————————-

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக ஸ்வ பாவை
பகவத் பரிசர்யா கரண யோக்யை
பகவத்-பரிசர்யைக போகை
நித்ய சித்தை
அநந்தை
யதா யோகம் சேவ்ய மாநம்
ஆத்ம போகேன அநு சம்ஹித பராதி கால திவ்ய அமல கோமள அவலோக நேன
விஸ்வம் ஆஹ்லாத யந்தம்
ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன
திவ்யா நநாரவிந்த சா ஜனகேன
திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண
திவ்ய லீலா ஆலாபா அம்ருதேன
அகில ஜன ஹ்ருதய அந்தராணி ஆபூர யந்தம்
பகவந்தம் நாராயணம் த்யான யோகேன த்ருஷ்ட்வா

ஸ்வ பாவதோ நிரஸ்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வ பாவை –
ஒரு நாள் வரையில் அன்றிக்கே
ஸ்வ சத்தா நிபந்தனமாக இன்றியிலே இருக்கிற சகல சாம்சாரிக்க ஸ்வ பாவத்தை உடையராய்

பகவத் பரிசர்யா கரண யோக்யை –
உடையவன் திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுகைக்கு இட்டுப் பிறந்தவர்களாய் –

பகவத் பரிசர்யைக போகை –
பகவத் கைங்கர்யம் ஒழியத் தங்களுக்கு தாரகம் இன்றியிலே இருப்பாராய்

நித்ய சித்தை –
இப்படி இருக்கிற நித்ய ஸூரிகளாலே-

அநந்தை –
இன்னதனை என்று முடிவு இல்லாதவர்களாலே

யதா யோகம் சேவ்ய மாநம்-
நின்ற நிலைகளுக்கு ஈடாக சேவிக்கப் படுமவனை –

ஆத்ம போகேன அநு சம்ஹித பராதி கால திவ்ய அமல கோமள அவலோக நேன –
இக் கடாஷம் பரார்த்தமாக அன்றிக்கே -கால தத்வம் உள்ளது அனையும்
ஸ்வ பிரயோஜனமாக அநு சந்திக்கப் பட்டு
வி லஷணமாய் அபராதங்களை நினைத்துக் கலங்குகை அன்றிக்கே
ஸூ பிரசன்ன ஸூந்தரமான கடாஷத்தாலே –

(கோலத் திருமா மகளோடு சாலப் பலநாள் உகந்து உயிர்கள் காப்பவன்)

(ஆத்மபோ⁴கே³ந அநநுஸம்ஹித பராதி³காலம் –ஸ்வ ஆத்ம அநுபவத்தினால் அளவிறந்த காலம் கடந்தமையும் அறிய கில்லாதவனாய்

ஆத்மபோ⁴கே³ந-என்பதற்கு
ஆச்சான் பிள்ளை -இகடாக்ஷம் பரார்த்தமாக அன்றிக்கே கால தத்வம் உள்ளதனையும் ஸ்வ ப்ரயோஜனமாகவே அனுசந்திக்கப்பட்டு
விலக்ஷணமாய் அபராதங்களை நினைத்த்துக் கலங்குகை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன ஸூ ந்தரமான கடாக்ஷத்தாலே -என்கிற வியாக்கியான ஸ்ரீ ஸூ க்தி இருப்பதால்
அநநு ஸம்ஹித -என்கிற ஸ்தானத்தில் அநு ஸம்ஹித-பாடமும்
பராதிகாலம் -என்று தனிப்படை அன்றிக்கே -பகவத் விசேஷணமாக அல்லாமல் -ஸமஸ்த பதமாய் -அவ லோகந விசேஷணமாகக் கொள்ளுகிற பாடமும் தோன்றுகிறது
பல ஸ்ரீ கோஸங்களிலும் பெரியோர்களின் அனுசந்தான பரம்பரைகளிலும் உள்ள பாடமே இங்கே நிவேசிக்கப் பட்டது
ஆத்ம போகமாவது -ரசாந்தாநந்தாத்ம அநுபவ ஜ -இத்யாதி வரதராஜ ஸ்தவ ஸ்ரீ ஸூக்தியில் பிரஸ்தாபிக்கப் பட்ட பரமபத நாதனுக்கு உண்டான ஸ்வ ஆத்ம அனுபவம் –
பிரமனுடைய ஆயுஸ் காலத்துக்கு பரம் என்று பெயர் -அப்படிப்பட்ட பெரிய கால பரிணாமம் தெரியாமல் செல்லுகிறதாம் ஸ்வ ஆத்ம அனுபவத்தில்
க்ஷண அணு வத் ஷிப்த பராதிகாலயா -என்று ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூ க்தியும் உண்டே ))

விஸ்வம் ஆஹ்லாத யந்தம்
சமஸ்த வஸ்துக்களையும் உகப்பிக்கக் கடவனாய் –

ஈஷத் உன்மீலித முகாம்புஜா உதர விநிர்க்க நேன –
சிறிது அலர்ந்த திரு முகத் தாமரையிடையின் நின்றும் புறப்பட்டு இருப்பதாய்

திவ்யா நநாரவிந்த சா ஜனகேன-
திருப் பவளத்துக்கு ஆபரணம் சாத்தினால் போலே அழகை உண்டாக்க கடவதாய்

(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று
காதலன் வார்த்தை என்னது சொல்லக்கூடாதே
ஆழ்வாருக்கே தெரியாதே -ஆதாரம் அழகையே பார்த்து மெய் மறந்து இருந்தார்_

திவ்ய காம்பீர்ய ஔதார்ய சௌந்தர்ய மாதுர்யாதி அநவதிக குண கண விபூஷி தேன
பெரிய முழக்கம் என்ன -அர்த்த போதகத்வம் என்ன -இனிமை என்ன-
ஓஜ ப்ரசாதாதிகள் என்ன -இவை தொடக்கமான எண்ணிறந்த குண கணங்களாலே அலங்க்ருதமாய் இருப்பதாய் –

அதி மநோ ஹர திவ்ய பாவ கர்ப்பேண-
நெஞ்சை வருத்தக் கடவதாய்
திவ்யமான அபிப்ராயத்தை உள்ளே உடையதாய்

திவ்ய லீலா ஆலாபா அம்ருதேன-
ஹர்ஷம் வழிந்த சொல்லாகிற அம்ருதத்தாலே-

அகில ஜன ஹ்ருதய அந்தராணி ஆபூர யந்தம்
எல்லாருடைய நெஞ்சுகளின் அவகாசம் அடைய நிறைப்பானாய் உள்ளவனை –

பகவந்தம் நாராயணம் –
இப்படி ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களுக்கு ஆகரனான நாராயணனை

த்யான யோகேன த்ருஷ்ட்வா
மானச சாஷாத் காரம் பண்ணி

த்யான யோகேன த்ருஷ்ட்வா -என்கையாலே பக்தியைப் பண்ணினால் தத் பலமாக வரும் சாஷாத்காரம் சொன்னால் போலே இரா நின்றது –

சரணம் அநுவ்ரஜேத் -என்று பிரபத்தி பண்ணினது நிஷ் பலமோ என்னில் அன்று
பிரபத்தி பலமான சாஷாத் காரத்தையே சொல்லுகிறது

ஆனால் த்யான யோகேன -என்றது செய்யும் படி ஏன் என்னில்
த்யான யோகத்தால் காணுமா போலே கண்டு என்கிறது

ப்ரத்யஹம் ஆத்ம உஜ்ஜீவநாய ஏவம் அனு ஸ்மரேத்-என்று சொன்ன-கால ஷேப அனுசந்தானம் முற்றி வெளிப்பட்ட தாகவும் –

———————————————————————————————————

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய
கதா அஹம் பகவந்தம் நாராயணம்
மம நாதம் மம குல தைவதம் மம குல தனம்
மம போக்கியம் மம மாதரம் மம பிதரம் மம சர்வம்
சாஷாத் கரவாணி சஷூஷா
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி
சங்க்ரஹீஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக ஸ்வபாவ
தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி

தத பகவத நித்ய ஸ்வாம்யம் ஆத்மனோ நித்ய தாஸ்யம் ச யதாவஸ்திதம் அனுசந்தாய –
இருவருடையவும் சாஸ்திர சித்தமான-ஸ்வம் ஸ்வாமி-சம்பந்தத்தை உணர்ந்து-இனி அந்த சாஷாத் கார லாபமான பேற்றில் மநோரத பிரகாரம் சொல்லுகிறதுகதாஹம் இத்யாதியாலே

கதாஅந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3 என்று பதறுகிறார் –

(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-)

(புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-)

அஹம் -அவ்யபிசாரியான உபாயம் கை புகுந்து பேற்றில் பதற்றத்தை உடையனான நான்

பகவந்தம் நாராயணம் –
ஆறி இருக்க ஒண்ணாத படியான குணங்களையும் ப்ராப்தியையும் உடையவனை

மம நாதம் –
எனக்கு வகுத்த சேஷியாய் உள்ளவனை

மம குல தைவதம்
சாமான்யமாய் இருக்கை அன்றிக்கே எங்களுக்கு குல க்ரமாகதனான நாதனாய் உள்ளவனை

மம குல தனம்
எனக்கு குல க்ரமமாக ஆபத்துக்கு ஜீவிக்க  கை முதலாய் உள்ளவனை

(யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந் அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி | ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத் பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||-ஶ்லோகம் 6 –

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன். இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

திருவாய்மொழி 7.9.7இல் “வைகுந்தனாகப் புகழ” (ஆழ்வார் “ஸ்ரீவைகுண்டநாதன்” என்று எம்பெருமானைப் புகழும்படி எம்பெருமான் செய்தான்) என்று சொன்னபடி, எம்பெருமானுக்குக் கொண்டாட்டங்கள் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடுவது ஆசார்யர்களுக்கும் விருப்பம் என்பதாலும், எம்பெருமானைக் கொண்டாடும் எண்ணத்துடன், எம்பெருமானே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்) என்று சுருக்கமாகச் சொல்லி, எம்பெருமானைக் கொண்டாடத் தொடங்குகிறார் ஆளவந்தார்.)

மம போக்கியம்
எனக்கு போக்யமானவனை

மம மாதரம்
எனக்கு தாரகனுமாய் ஹித பிரிய ப்ரவர்த்தகனாயும் உள்ளவனை –

மம பிதரம் –
எனக்கு உத்பாதகனுமாய் ஹித ப்ரவர்த்தகனுமாய் உள்ளவனை

மம சர்வம் –
மாதா பிதா ப்ராதா நிவாச சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -என்றும்
சேலேய் கண்ணியரும்-என்றும் சொல்லுகிறபடியே அனுக்தமான சமஸ்த வஸ்துக்களுமானவனை –

சாஷாத் கரவாணி சஷூஷா-
இப்போதை மானஸ சாஷாத் காரம் ஒழிய

சதா பஸ்யந்தி -என்கிறபடியே
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ கழிக்கும் நாள் -பெருமாள் திரு மொழி -1-1-என்கிறார் –
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வயம் சிரசா தாரயிஷ்யாமி -சங்க்ரஹீஷ்யாமி
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி-என்றும்
தளிர் புரையும் திருவடிகள் என் தலை மேலவே-திரு நெடும் தாண்டகம் -1- என்றும்
சொல்லுகிறபடியே வகுத்த சேஷியானவன் உடைய
நிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளை நான் சிரஸா வஹிப்பது என்றோ -என்கிறார் –

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும் கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் | த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.

இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே” (என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக் கைம்மா துன்பம் கடிந்த பிரானே அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய், பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும் பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி, தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.)

கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யா கரண யோக்யா
ததேக போக
தத் பாதௌ பரிசரிஷ்யாமி
கதா அஹம் பகவத் பாதாம் புஜ த்வய பரிசர்யாசயா
நிரஸ்த சமஸ்தேதர போகாச
அபக்த சமஸ்த சாம்சாரிக்க ஸ்வபாவ தத் பாதாம் புஜ த்வயம் ப்ரவேஷ்யாமி –
சர்வேஸ்வரன் திருவடிகளில் -கைங்கர்ய ருசியாலே போக்கடிக்கப் பட்ட
புறம்புள்ள விஷயங்களில் உண்டான போக ஸ்ரத்தையை உடையவனாய்
தன்னடையே பாறிப் போன ராக த்வேஷாதிகள் ஆகிற சமஸ்த சாம்சாரிக ஸ்வபாவத்தை உடையேனாய்க் கொண்டு
நான் என்றைக்கோ அந்தப் பாதாம் புஜ த்வயத்தைக் கிட்டுவேன் -என்கிறார்

———————————————————————————————————-

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா
தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய
தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம்
வைநதேயாதிபி
சேவ்யமானம்
சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
அத்யந்த ஸாத் வஸ விநயாவநந
பூத்வா பகவன் பாரிஷத கண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித
பூத்வா சம்யக் அபிவந்திதை தைரேவ அநுமத
பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மதா மூல மந்த்ரேண
பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா
கரணாய பரிக்ருஹ்ணீஷ்வ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்

கதா மாம் பகவான் ஸ்வகீயயா அதி சீதலயா த்ருசா அவலோக்ய
ஸ்நிக்த கம்பீர மதுரா கிரா பரிசர்யாயாம் ஆஜ்ஞாப யிஷ்யதி
புருஷோத்தமன் ஆனவன் தன்னுடைய அறக் குளிர்ந்த
திருக் கண்களாலே கடாஷித்து முழங்கி இனிதான பேச்சாலே
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்கிறபடியே கைங்கர்யத்தில் என்னை ஏவப் புகுகிறது எப்போதோ –

(வந்து தோன்றாய்அன்றேல்* உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* · முந்தி வந்து யான்நிற்ப* முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்* · செந்தண்கமலக் கண்கைகால்*)

இதி பகவத் பரிசர்யாயாம் ஆசாம் வர்த்தயித்வா –
என்று இப் புடைகளிலே பகவத் கைங்கர்யத்தில் ஆசையை வளர்த்தி –

தயைவ ஆசயா தத் பிரசாத் உஅ ப்ரும்ஹி தயா பகவந்தம் உபேத்ய-
பகவத் பிரசாதத்தாலே மேன் மேல் எனக் கரை புரண்டு பெருகி வருகிற
அந்த ஆசை யோடு கூட சர்வேஸ்வரனைக் கிட்டி –

தூராத் ஏவ பகவந்தம் சேஷ போகே ஸ்ரீ யா சஹ ஆஸீனம் -இத்யாதி –
தூர தேவ ப்ரணம்ய -என்று மேலே அந்வயம்-
திரு வநந்த ஆழ்வான் மடியிலே பெரிய பிராட்டியாரோடு கூட இருப்பானாய்-

வைநதேயாதிபி-சேவ்யமானம்
பெரிய திருவடி நாயனார் தொடக்கமான நித்ய ஸூரிகளால் சதா சேவ்யமானனாய் இருக்கிற பகவானை –

சமஸ்த பரிவாராய ஸ்ரீ மதே நாராயணாய நம-இதி ப்ரணம்ய
உத்தாய உத்தாய புன புன ப்ரணம்ய
என்று தூரத்திலே தண்டன் இட்டு விழுவது எழுவதாய்
பின்னையும் ஆதர அதிசயத்தாலே பலகால் தண்டன் இட்டு(ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று)

அத்யந்த ஸாத்வஸ விநய அவநந பூத்வா பகவன் பாரிஷத கண நாயகை
த்வார பாலை க்ருபயா ஸ்நேக கர்ப்பயா த்ருசா அவலோகித பூத்வா –
மிகவும் உண்டான உள் அச்சத்தாலே புடைவை ஒதுக்குவது
வாயைப் புதைப்பதாய்க் கொண்டு
தலை சாய்த்து –
பகவான் உடைய பாரிஷதத் திரு ஓலக்கத்தில் அவர்கள் –
கண நாயகர் -படைத் தலைவர் -திரு வாசல் காப்பார் -இவர்களால்
ஸ்நேஹத்தைப் பொதிந்து கொண்டு இருக்கிற கிருபையாலே பார்க்கப் பட்டு

(ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று)

(ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: * த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்)

சம்யக் அபிவந்திதை தைரேவ அநுமத பூத்வா பகவந்தம் உபேத்ய
ஸ்ரீ மதா மூல மந்த்ரேண பகவன் மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்ருஹ்ணீஷ்வ
இதி யாசமான ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத் –
புத்தி பூர்வகமாக தண்டன் இடப் பட்டு இருக்கிற அவர்களால்
அனுமதனாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதன் அருகே சென்று பெரிய திரு மந்த்ரத்தாலே
அடியேனை அநந்ய பரனாக்கி நிரவதிகமான கைங்கர்யத்தின் பொருட்டு
கைக் கொண்டு அருள வேணும் -என்று ப்ரார்த்தியா நிற்கிற தன்னை
எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கக் கடவன்

(ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்

ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு

பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு

ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்)

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading