ஆச்சார்ய ஹிருதயம்–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம்– சூர்ணிகை -121/122

சூரணை -121-

ஆனால் இவர்க்கு தம் பேச்சு அன்றோ ஸ்வாபாவிகம்–
பிராட்டிமார் தசையை ப்ராபித்து பேசும் பெண் பேச்சு வந்தேறி அன்றோ என்ன- —
பகவத் ஏக பரதந்த்ர்யமுமாய் பகவத் ஏக போகமுமாய் — இருக்கும் ஆத்ம வஸ்துவுக்கு
ஸ்திரீ சாதர்ம்யம் ஸ்வரூப அனுபந்தி ஆகையாலே தத் பிரயுக்தமான பேச்சு
இவருக்கு வந்தேறி அன்று என்னும் இடத்தை ரூபகவத்வேன (உருவகப்படுத்தி) அருளிச் செய்கிறார் மேல் —
(பவாடவி வர்ணனம் -பாரதம்-இருளில் சூழ்ந்து அவிவேகம் -விவாக ஞானம் இல்லாமல் –
பஹுதா சந்தத துக்க வர்ஷினி -ஆளவந்தார்
திருவடி ஆச்சார்யர் -உப்புக்கடல் பாவ சாகரம் போன்ற உருவகங்கள் உண்டே )

வித்யைத் தாயாகப் பெற்று ,
பாலும் அமுதமுமான திரு நாமத்தாலே
திரு மகள் போல் வளர்த்த
தஞ்சமாகிய தந்தை
மற்று ஒருவருக்கு பேச்சு உட் படாமல்
விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை
நாலு இரண்டு இழை கொண்டு
முப்பிரியான
ப்ரஹ்ம ஸூத்ர பந்ததோடே வரிப்பிக்க ,
பரம் புருடன் கைக் கொண்ட பின்
சதுர்த்தியுள் புக்கு
இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து
ஜன்ம பூமியை விட்டகன்று
சூழ் விசும்பிற் படியே உடன் சென்று
குடைந்து நீராடி
வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு
நானப் பொடி பீதக ஆடை பல் கலன் கொண்டு
நோக்கியர் அலங்கரித்துப்
பல்லாண்டு இசைத்துக்
கவரி செய்ய
நிறை குடம் விளக்கம் ஏந்தி
இள மங்கையர் எதிர் கொள்ள
வைகுந்தம் புக்கிருந்து
வாய் மடுத்து பெரும் களிச்சியாக
வானவர் போகமுண்டு
கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து
ஆரோஹித்து
பரத அக்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே
குருமா மணியாய் அணையும் வஸ்துவுக்கு
மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று —

வித்யையைத் தாயாகப் பெற்று-
அதாவது —
சஹி வித்யாதஸ் தம் ஜனயிதி -ஆபஸ்தம்ப சூத்ரம்-16–17-என்கிற படியே
ஆசார்யன் திரு மந்திர முகேன ஸ்வரூப ஞானத்தை உண்டாக்கின போது இவ் ஆத்மா சத்பாவம் ஆகையாலே ,
வித்தையை மாதாவாகக் கொண்டு இவ் ஆத்ம வஸ்துவை ஜனிப்பித்து-

பாலும் அமுதுமான திரு நாமத்தாலே திரு மகள் போல் வளர்த்த –
அதாவது
தேனும் பாலும் அமுதுமாய திரு மால் திருநாமம் -பெரிய திருமொழி -6-10-6–என்கிற
போக்ய பதார்த்தமான திரு மந்த்ரத்தாலே
திரு மகள் போல் வளர்த்த-
அதாவது —
திரு மகள் போலே வளர்த்தேன் -பெரியாழ்வார் -3-8-4-என்கிற படி –
அனந்யார்ஹ சேஷத் வாதிகளாலே ஸ்ரீ லஷ்மி சத்ருசமாக வளர்த்துக் கொண்டு போந்த-

தஞ்சமாகிய தந்தை-
அதாவது
தேஹோத்பாதகனாய் -ச பித்ரா ச பரித்யக்த ஸூ ரைஸ்ச சமஹர்ஷபி த்ரீன் லோகான் சம்பரிக்ரம்ய
தமேவ சரணம் கத –ஸூந்தர -38-32– -இத்யாதி படியே
ஆபத் தசைகளில் கை விடும் பிதாவை போல் அன்றிக்கே –
பூதாநாம் யோவ்யய பிதா -சஹஸ்ர நாமம் -என்கிறபடி
சம்பந்தம் கண் அழிவு அற்று இருக்க –
பவ மோஷண யோஸ் த்வ யைவ ஜந்து க்ரியதே–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர -88- -என்னும் படி
சம்சார மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் பிதாவைப் போலும் அன்றிக்கே –
ஸ்வரூப உத்பாதகனாய் -ஒரு தசையிலும் கை விடாதே -ஹிதைஷியாய் –
உஜ்ஜீவன ஏக பரனாய்க் கொண்டு மோஷைக ஏக ஹேதுவாய் இருக்கையாலே
ஆபத் ரஷகனான ஆச்சர்யனான பிதா-

மற்று ஒருவருக்குப் பேச்சுப் படாமல் –
அதாவது –
மற்று ஒருவருக்கு என்னை பேசல் ஒட்டேன்–பெரியாழ்வார் -3-4-5- -என்றும் ,
மானிடவர்க்கு பேச்சுப் படில் –நாச்சியார் -1-5-என்கிற
அந்ய சேஷத்வ பிரசங்கம் வாராதபடி —

விஸ்வபதி லோக பர்த்தா என்னும் மணவாளரை -அதாவது –
பதிம் விஸ்வஸ்ய –புருஷ ஸூக்தம் -என்றும் ,
கௌசல்யா லோக பர்த்தாரம் –ஸூந்தர -38-55–என்று
பதி சப்ததாலும் -பர்த்ரு சப்தத்தாலும் -சர்வ லோக நாயகராகச் சொல்லப் படுகிற
மணவாளரை –
பணவாள் அரவணை பற்பல காலமும் பள்ளி கொள்ளும் மணவாளரை –நாச்சியார் -10-6-
என்கிற அழகிய மணவாளரை –

நால் இரண்டு இழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்திர பந்தத்தோடு வரிப்பிக்க –
அதாவது –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருப்பதொரு மங்கள ஸூத்திரம் போலே -(முமுஷுப்படி )
எட்டு அஷரமாய் – மூன்று பதமாய் ,ஈஸ்வர சம்பந்த பிரகாசமான திருமந்தரம் ஆகிற
மங்கள ஸூத்தர சம்பந்தத்தோடே
பாணிம் க்ருஹ்ணீஷ் வ பாணி நா -பால –73-26-என்கிறபடி வரிக்கும் படி பண்ண –

பரம் புருடன் கைக் கொண்ட பின்-அதாவது –
பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -பெரியாழ்வார் -5-4-2–என்கிறபடியே
பரம புருஷனான மணவாளர் பரிக்ரஹித்த அநந்தரம் –

சதுர்தியுள் புக்கு –
அதாவது –
விவாஹா அநந்தரம் சேஷ ஹோம பர்யந்தமான சதுர் திவசத்திலும் அகலுதலும் அணுகலும் அற்று,
அனந்யார்ஹ சேஷத்வ அனுகுணமாக பரிமாற்றத்துக்கு அர்ஹம் என்னும் அளவைப்
பிரகாசித்துக் கொண்டு இருக்குமோபாதி,பிரணவோக்தமான அனந்யார்ஹ சேஷத்வத்தில்
கண் அழிவு அற அங்கீகரிக்கையாலும் , தத் அனுகுணமாக கிட்டிப் பரிமாறப் பெறாமையாலும் ,
அகலுதலும் அணுகலும் அற்று கைங்கர்ய பிரார்த்தனையோடு சொல்லும் சரம சதுர்த்தி யிலே உள் புக்கு –

இடை ஈடு நடுக் கிடக்கும் நாள் கழித்து –
அதாவது –
தம்பதிகள் இருவரும் -ஏக சய்யைலே வர்த்திக்கச் செய்தே -அந்யோன்ய ஸ்பர்ச யோக்யதை
இல்லாதபடி -இடையீடரான சோமாதிகள் நடுவே கிடக்கும் நாள் போலே –
சேஷத்வ ஞானமும் சேஷவ்ருத்தி பிரார்த்தனையும் உண்டாகையாலே ,
இரண்டு தலைக்கும் அண்ணிமை உண்டாய் இருக்கவும் -சேர்ந்து பரிமாற ஒண்ணாதபடி –
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு-திருவாய் -5-1-5- -என்கிறபடியே
அனுபவ விரோதியாய் இடையீடான சரீரம் நடுவே கிடக்கிற நாலு நாளையும் –
நாள் கடலை கழிமின் -திருவாய் -1-6-7- – என்கிற படியே கழித்து –

ஜன்ம பூமியை விட்டு அகன்று –
அதாவது –
முற்றிலும் பைம் கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற
செழும் கோதை -பெரிய திருமொழி -3-7-8-என்கிறபடியே
ஒருவராலும் விட அரிதான ஜன்ம பூமியான சம்சார விபூதியை முன்பு
ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூடப் புரிந்து பாராமல் விட்டு நீங்கி ..
அன்றிக்கே-
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த –64-என்னும் படி கிடந்த தனக்கு
ஆசார்யன் திரு மந்தரத்தால் உண்டான ஜன்மம் பெற்றது இங்கே ஆகையாலே ஜன்ம பூமியான இவ் விபூதியை
பகவத் அனுபவ ப்ராவண்யத்தாலே – முற்றிலும் பைம் கிளியே -இத்யாதி படியே –
முன்பு ஆதரணீயமான போந்த வஸ்துக்களோடே கூட விட்டகன்று என்னவுமாம் ..
பிறந்தகம் விட்டு புக்ககத்துக்கு போகிறதாக சொல்லுகிற இந்த ரூபகத்துக்கு
இது மிகவும் சேரும் இறே-

சூழ் விசும்பிற் படியே உடன் சென்று-
அதாவது –
சூழ் விசும்பு-10-9-1–என்கிற திரு வாய் மொழியில் சொல்லுகிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தாலே வழி உள்ளார் அடைய சத்கரிக்க –
அங்கு அவனோடும் உடன் சென்று -நாச்சியார் -6-10-என்கிறபடி-
நயாமி-ஸ்ரீ வராஹ சரமம்–என்கிற நாயகன் முன்பே போக -பின்னே போய் –

குடைந்து நீராடி- –
அதாவது –
குள்ளக் குளிர குடைந்து நீராடி -திருப்பாவை -13-என்கிறபடியே பர்த்ரு கிருஹத்துக்கு
போகிற பெண் அவ்வூர் எல்லையிலே சென்றவாறே அவர்கள் குளிப்பாட்ட குளிக்குமா போலே
அம்ருத வாஹிநியான விரஜையிலே -இப்பால் உள்ள அழுக்கு அறும்படி நீராடி –

வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்து –
அதாவது –
குளித்தேறின பெண்ணைப் பர்த்ரு பந்துக்களான ஸ்திரீகள் வந்து அலங்கரிக்குமா போலே –
வியன் துழாய் கற்பு என்று சூடும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் ,
ஆரார் அயிர் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து–சிறிய மடல் -10-என்றும் ,
மெய் திமிரு நானப் பொடி –பெரியாழ்வார் -1-4-9–என்றும் ,
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை-திருப்பல்லாண்டு -9-என்றும் ,
பல் கலனும் யாம் அணிவோம் -திருப்பாவை -27-என்கிறபடியே
அலங்கார உபகரணங்களான திவ்ய மால்ய -திவ்ய அஞ்சன -திவ்ய சூர்ண –திவ்ய வஸ்த்ர -திவ்ய ஆபரணங்களை –
தம் பஞ்ச சதான் யப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா –சதம் அஞ்சன ஹஸ்தா -சதம் சூரண ஹஸ்தா
-சதம் வாசோ ஹஸ்தா -சதம் பூஷண ஹஸ்தா –கௌஷீதகி-என்கிறபடியே ஏந்திக் கொண்டு –
மானேய் நோக்கியரான-5-8-1– திவ்ய அப்சரஸ் ஸூக்கள் எதிரே வந்து –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி- கௌஷீதகி – என்கிறபடியே
போக்த்ரு பூத ஈஸ்வர போக்யமாம் படி அலங்கரித்து-

பல்லாண்டு இசைத்து கவரி செய்ய –
அதாவது –
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரி செய்வர் ஏழையரே –திருவாய் -7-6-11–என்கிறபடியே
இவ் விஷயத்தில் கிஞ்சித் கரிக்கையில் உண்டான சாபலம் தோற்ற
திரள நின்று மங்களாசாசனம் பண்ணி சாமரம் பணிமாற-

நிறை குடம் விளக்கம் ஏந்தி இள மங்கையர் எதிர் கொள்ள –
அதாவது –
அலங்குருதையாய் உபலால நத்தோடே செல்லுகிற பெண் -பர்த்ரு கிருஹத்தை அணுகச் சென்றவாறே –
அங்குள்ள ஸ்திரீகள் மங்கள தீபாதிகளை ஏந்திக் கொண்டு எதிரே வந்து சத்கரிக்குமா போலே –
நிதியும் நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் –10-9-10–என்கிறபடியே
மங்கள அவஹமான பூர்ண கும்பாதிகளைத் தரித்துக் கொண்டு ,
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள-10-9-10- என்கிறபடியே
நித்ய யவ்வன ஸ்வபாவைகளான வேறு சில திவ்ய அப்சரஸ்ஸூகள் எதிர் கொள்ள –

வைகுந்தம் புக்கிருந்து –
அதாவது –
உபலால நத்தொடு சென்ற பெண் பர்த்ரு க்ரஹத்திலே புகுருமா போலே –
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பார் -நாச்சியார் -3-10–என்கிறபடியே –
ஸ்ரீய பதியானவனுக்கு போக ஸ்தானமான ஸ்ரீ வைகுண்டத்தை ப்ராபித்து -அவனோடு கூடி இருந்து –

வாய் மடுத்து பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு-
அதாவது –
பர்த்ரு க்ரஹத்திலே பெண் வந்த பின்பு , தம்பதிகளும்
மற்றும் உள்ள பந்துக்களும் கூடி இருந்து பெரும் களிச்சி உண்ணுமா போலே —
அடியார்கள் குழாங்களும்-2-3-10- அவனுமாக இருக்கிற சேர்த்தியிலே –
அடியேன் வாய் மடுத்து பருகிக் களித்தேன் -2-3-9–என்று பெரும் களிச்சியாக பெரும் முழு மிடறு செய்து –
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே –6-6-11–என்கிறபடியே –
நித்ய சூரிகள் புஜிக்கிற போகத்தை –
சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ராஹ்மணா விபிச்சதா –தைத்ரியம் –என்கிறபடியே புஜித்து –

கோப்புடைய கோட்டுக் கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து –
அதாவது –
பர்த்ரு சம்ச்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறுமா போலே –
கோப்புடைய சீரிய சிங்காசாசனம்-திருப்பாவை -23-என்றும்
கோட்டுக் கால் கட்டில் –திருப்பாவை 19-என்றும் சொல்லுகிற படி
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு சர்வ ஆஸ்ரயமான திவ்ய பர்வங்கத்திலே –
தமேவம் வித் பாதேநாத் யாரோஹதி -கௌஷீதகி -1-5-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு ஏறி –

பாரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே –
அதாவது –
தம் சமுதாப்ய காகுஸ்தஸ் சிரஸ்யாஷிபதம் கதம்
அங்கே பாரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -என்றும்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜக்ருத சிஹ்நேன பாணினா
சம்ச்ப்ருஸ் யாக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே –யுத்த -130-39–என்றும் ,
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹனுமதா
மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1–13– என்றும் சொல்லுகிறபடி ,
ஸ்ரீ பரத ஆழ்வானையும் அக்ரூரரையும் திருவடியையும் ஆதரித்து அணைத்துக் கொண்ட –
மணி மிகு மார்பு-10-3-5– -என்று
ஸ்ரீ கௌஸ்துபம் நிறம் பெரும் படி அழகிய திரு மார்பிலே ..

குரு மா மணியாய் அணையும் வஸ்துவுக்கு –
அதாவது –
குரு மா மணிப் பூண் –பெரியாழ்வார் -1-3-10-என்று ஸ்லாக்கியமாய் ஈஸ்வரத்வ சிஹ்நமான
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி போக்யமாய் தேஜஸ்கரமாய்க் கொண்டு அணிகிற ஆத்ம வஸ்துவுக்கு
(திரு மார்பில் சம்பந்தத்தால் மணிக்கு ஏற்றம் -புருடன் மணி வரமாக -ஸ்ரீ தேசிகன்)

மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல –
அதாவது –
வண் பூ மணி வல்லி –திருவிருத்தம் –9 -என்று
உதாரமாய் போக்யமாய் தனக்குத் தானே ஆபரணமாம் படி
அழகியதாய் கொள் கொம்பு பெறா விடில் தலை எடுக்க மாட்டாமை தரைப் பட்டு கிடக்கும்
கொடி போன்றவள் என்கிற ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் பேச்சு வந்தேறி அன்று —ஸ்வாபாவிகம் என்ற படி –
பெண் பேச்சு என்ன அமைந்து இருக்க மணி வல்லி பேச்சு என்றது –
மணி மிகு மார்பில் மணியாய் அணையும் -என்றதோடு ஒக்க -மணி வல்லி -என்றால்
சொற் கட்டளையால் வரும் ரசம் உண்டாகையாலே —

இத்தால் ஸ்த்ரீத்வம் ஆத்மாவுக்கு ஸ்வபாவிகம் ஆகையாலே ,அத்தை
உள்ளபடி தர்சித்த இவர்க்கு தத் பிரயுக்தமான பேச்சு ஸ்வபாவிகம் என்று சொல்லிற்று ஆய்த்து-

————————————

சூரணை -122-

இப்படி கேவலம் ஸ்திரீ சாம்யமே அன்றிக்கே –
நாரீணாம் உத்தமையான பிராட்டி யோடு சாம்யமும் பரிசுத்த ஆத்ம ஸ்வரூபதுக்கு உண்டு என்னும் அத்தை
ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் மேல் ..

இன்பும் அன்பும் முற்படுவது
கொழுந்து விடுவதாகிற
கடி மா மலர் பாவையோடு
உள்ள சாம்ய ஷட்கத்தாலே–

இன்பு முற்படுவது
அதாவது –
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -4-5-8–என்று
இன்று ஆஸ்ரயித்த நமக்கும் —
நித்ய சூரிகளுக்கும் அவ் அருகாய் ,ரூப குணத்தாலும் ,ஆத்ம குணத்தாலும் பூர்ணயாய் இருக்கும் பிராட்டிக்கும்
இன்பனாம் -என்ற இடத்தில் –முற்பட இங்கே இன்பனாய் பின்பாயிற்று அவளுக்கு ஸ்நேஹிப்பது என்னும் படி –
பிராட்டிக்கு முன்பே இவர் பக்கல் இன்பன் ஆவது –

இன்பனாவது -அன்பு கொழுந்து விடுவதாகிறது –
அதாவது
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பே 10-10-7–என்று
நிரதிசய போக்யையான பிராட்டிக்கு அன்பன் ஆகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலும் அன்பனாவனே என்னும் படி —
அவள் பக்கல் பண்ணின ஸ்நேஹம் இவர் அளவும் வளர வருவதாய் –
இப்படி இன்பு முற்படுகிறது அன்பு கொழுந்து விடுகிறது ஆகிறது –

கடிமா மலர் பாவை ஒப்பாள்–பெரிய திருமொழி -3-7-9–என்று
பரிமள பிரசுரமான பூவில் பிறப்பாலும் , நிருபாதிக ஸ்த்ரீத்வத்தாலும் நிரதிசய போக்ய பூதையான பிராட்டியோடு
ஒக்க சொல்லலாம் அவள் என்னும்படி பிராட்டியோடு இத் தலைக்கு உள்ள சாம்யத்துக்கு உடலான –
1-அனந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரணத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4-சம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5-விஸ்லேஷத்தில் தரியாமை
6-ததேக நிர்வாஹ்யத்வம்
ஆகிற ஆறு பிரகாரத்தால் என்கை ..

இன்பன் -என்றது ஸ்நிக்தன் என்றபடி ..ஆகையால் அன்போ பாதி
இன்பும் சிநேக வாசி ஆகையாலே ஸ்நேஹம் முற்படுவது -கொழுந்து விடுகிறது என்றபடி–
இன்பும் அன்பும் -இரண்டு போல சொல்லிற்று –
முற்படுதலும் ,கொழுந்து விடுதலும் சொல்லுகிற ஸ்தலங்களிலே சிநேக வாசக தயா ப்ரயுக்த சப்தங்கள்
இவை ஆகையாலே இரண்டு சந்தையும் தோற்றுகைக்காக –

பிராட்டியோடு உள்ள என்ன அமைந்து இருக்க -கடி மா மலர் பாவை யோடு உள்ள – என்றது –
அந்த சந்தையிலே பிராட்டி சாம்யம் முக்த கண்டமாக சொல்லி இருக்கையாலும் ,
கந்தல் கழிந்த ஸ்வரூபத்தை உடையோர் எல்லோரையும் இப்படிச் சொல்லுகிறது –
ஸ்வரூப அனுபந்தியான இஸ் சாம்ய ஷட்கத்தாலே என்று அறிவிக்கைக்காகவும் —

சாம்யத்தாலே என்னாது சாம்ய ஷட்கத்தாலே என்றது –
1-நிரூபகத்வம்
2-அனுரூபத்வம்
3-அபிமதத்வம்
4-சேஷத்வ சம்பந்த த்வாரபாவம்
5-புருஷகாரத்வம்
6-ப்ராப்ய பூரகத்வம்
முதலான ஸ்வாப விசேஷங்கள் தத் அசாதாரணங்கள் ஆகையாலே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading