சூரணை -101-
இனி இவ் ஆழ்வாருடைய பக்தி விசேஷம் இருக்கும் படியை அறிவிக்கிறார் …
இது உபயமும் அன்றிக்கே
அறியாக் காலத்தே
ஒக்கப் பிறந்து
தழுவி
நின்று
கட்டமே
நோயாய்
உலர்த்தி
வீழ்ந்து
அலப்பாய்
த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகள் ஆக்கி
சத்தா போக விருத்தி உபகரணம் ஆவது ஓன்று-
( இது -ஆழ்வாருடைய பக்தியானது -சாதன ஸாத்ய பக்திகள் போலே அன்றே –
சத்தைக்கும் போகத்துக்கும் கைங்கர்ய உபகரணம் என்றவாறு )
அதாவது
கீழ் உக்தையான இவ் ஆழ்வார் உடைய பக்தி ,
ஸ்வ யத்தன சாத்யையாய் உபாய பூதையாய் இருக்கும் பக்தியும் ,
உபாய பரிக்ரஹ அனந்தர அபேஷிக்க உபாய பலமாய் வரும் பக்தியும் ஆகிற
நடுவில் சொல்லுகிற இரண்டும் அன்றிக்கே –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் -2-3-3–என்றும்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த லஷ்மனோ லஷ்மி வர்த்தன –பால -18-27- -என்கிற படியே
அறிவுக்கு சம்பாவனை இல்லாத பால்யத்திலே ,பிராப்தி பலமான அடிமையிலே ,
அதி பிராவண்யத்தை பிறப்பித்தது என்னும் படி
திரு துழாய்க்கு மணம் போலே ஒக்கப் பிறந்து –
தழுவி நின்று –
அதாவது —
தழுவி நின்ற காதல் தன்னால் -திருவாய் -4-7-11–என்று
விடுவேன் என்றாலும் ,விட ஒண்ணாத படி உடன் வந்தியாய்-
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் –திருவாய் -7-2-4-என்றும் ,
வேட்கை நோய் கூர –9-6-7- என்று
அநுபாவ்ய விஷயத்தை யதா மனோரதம் அனுபவிக்கப் பெறாத போது ,போஜனம் பெறாத தசையிலே பசி போலே ,
கஷ்டம் எனபது -வியாதி என்பதாம் படி -வெறுப்பை விளைத்து –
உலர்த்தி –
அதாவது –
வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த –2-1-10-என்றும் ,
வீழ்ந்து –
அதாவது –
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து –5-7-2-என்றும் ,
அலப்பாய்-
அதாவது –
உன்னை காண்பான் நான் அலப்பாய் –5-8-4-என்றும் ,சொல்லுகிற படி
அசோஷ்யமான ஆத்ம வஸ்துவைக் குருத்து வற்றாம் படி சோஷிப்பித்து ,
கடலிலே விழுந்தால் போல் கரை ஏற ஒண்ணாத படி அபிநிவேச ரூபமான
தன்னுள்ளே ஆழ்ந்து போக்யமான ,அவ் விஷயத்தை காண வேண்டும் என்று அலமாக்கப் பண்ணி –
தியாக ஸ்வீகார நிஷ்டா ஹானிகளாக்கி –அதாவது –
தியாக நிஷ்டைக்கு ஹானி யாக்கி -/ ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி –என்று கொண்டு
தியாக நிஷ்டா ஹானியாக்கி
அதாவது –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-5-8-3- -என்கிற படியே
இதர உபாய பரித்யாக பூர்வமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு இருக்கும் இவரை-
குதிரியாய் மடலூருதும்-5-3-9- -என்றும்
மடலூர்ந்தும் எம்மாழி அம் கைப் பிரானுடைத் தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-5-3-10- -என்னும்படி
த்யஜித்த உபாயத்தில் மூட்டுகையாலே -த்யாக நிஷ்டா ஹானியையும் ,
ஸ்வீ கார நிஷ்டைக்கு ஹானி ஆக்கி —
அதாவது –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10–என்றும்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட–5-8-11- -என்றும் ,
அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5-9-11-என்றும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -5-10-11–என்றும் ,
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-6-10-10 -என்று-நோற்ற நோன்பு-5-7– பதிகம் தொடங்கி
அடுத்து அடுத்து பிரபத்தி பண்ணும்படி ஆக்குகையாலே
சக்ருதேவஹி ,சாஸ்த்தார்த்த க்ருதோயம் ,தாரயேன் நரம்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதிசயாசதே அபயம் சர்வ பூதேப்ய தாதாமி ஏதத் விரதம் மம –யுத்த –18-33- –
இத்யாதிகளில் சொல்லுகிற படியே சக்ருத் கர்தவ்யமான ஸ்வீகாரத்தில் ,நிஷ்ட ஹானியையும் உண்டாக்கி.-
சத்தா போக விருத்த உபகரணம்
ஆவது ஓன்று-
சத்தைக்கும் போகத்துக்கும் விருத்திக்கும் உபகரணமாவது ஓன்று உண்டு
பகவத் விஷயத்தை நினையாமை என்றும் ,சத்தா ஹானி என்றும் இரண்டு இல்லை என்று இருக்கும் இவருக்கு –
அநவரத தத் விஷய நினைவு -ஸ்மரண -ஹேது ஆகையாலே-சத்தைக்கும் –
எல்லாம் கண்ணன்-6-7-1- -என்று இருக்கும் இவருக்கு தத் விஷய அன்பு ருசியை
மென் மேலும் விளைக்கையாலே போகத்துக்கும் –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1-என்று இருக்கும் இவருக்கு ,
அசேஷ சேஷ தைக ரதித்வதுக்கு உடலாகையாலே வ்ருத்திக்கும் உபகரணமாய் இருக்கும் என்கை ..
அன்றிக்கே –
சத்தா போகேத்யாதிக்கு -நா கிஞ்சித் குர்வதச் சேஷத்வம்—ஸ்தோத்ர ரத்னம் -46-என்று
கிஞ்சித் கரியாத வஸ்துவுக்கு சேஷத்வம் இல்லை என்கையாலே ,சேஷத்வ ஏக நிரூபணியனான
இவனுடைய சத்தை -கிஞ்சித் காரத்திலே ஆதலால் இவனுக்கு சத்தா ஹேதுவாய்
தனக்கே ஆக எனைக் கொள்ளும் இதே -2-9-4- -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -10 -3 -9—-என்றும்
கதா பிரகர்ஷா இஷ்யாமி- ,ஸ்தோத்ர ரத்னம் -46-இத்யாதிகளின் படியே –
இது தான் பரம பிரயோஜனமாய் பண்ணும் அதாகையாலே
அவனுக்கு போகமாய் இருக்குமதான கைங்கர்ய வ்ருத்திக்கு உபகரணமாய் இருப்பது என்றுமாம்–
ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று –
இவருடைய பக்தி சாதித்து பெற்றதும் அன்று
அபேஷித்து பெற்றதும் அன்று-
சஹஜையாய் ,சத்தாதிகளுக்கு ,உபகரணமாய் இருப்பது ஓன்று என்றது ஆய்த்து –
————————————–
சூரணை-102-
இங்கன் அன்றிக்கே ,இவருடைய இந்த பரம பக்தி -கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரயத்தையும் ,
இஜ் ஜென்மத்திலே அனுஷ்டிக்கையாலே யாதல் ,
பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தாலே ஆதல் ,
உண்டானதாலோ என்கிற சங்கையில் ,
இரண்டு படியாலும் வந்தது அன்று என்னும் இடத்தை இவர் தம்முடைய உத்திகளாலே சாதிக்கிறார்-
இடகிலேன்
நோன்பறிவிலேன்
கிற்பன்
கீழ் நாள்கள்
என்கையாலே
சாதன த்ரய
பூர்வ அப்யாசஜம்
அல்ல-
(இடகிலேன் என்கையாலே/நோன்பறிவிலேன் என்கையாலே/கிற்பன் என்கையாலே/
கீழ் நாள்கள் என்கையாலே/சாதன த்ரய ஜம் அல்ல /பூர்வ அப்யாச ஜம் அல்ல-
அப்யாஸ ஜம் -செய்து போந்தவாற்றால் உண்டாவது )
இடகிலேன் என்கையாலே –
அதாவது –
இடகிலேன் ஓன்று அட்டகிலேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன் —
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே திருவாய் -4-7-9-
பசித்தாருக்கு சோற்றை இடுதல் ,தாஹித்தாருக்கு தண்ணீர் வார்தல் செய்தேன் ஆகில்
யஜ்ஞோ தான தப கர்ம -ஸ்ரீ கீதை -18-5–என்கிற படியே ,–தானமும் கர்ம யோக அந்தர் பூதமாகையாலே
கர்ம யோகத்திலே நிவேசிப்பிக்கலாம் ,,அது செய்ய மாட்டுகிறேலேன் –
இந்திரியங்களை விஷயத்தில் போகாத படி நியமித்தேன் ஆகில் ,
ஞான யோகத்தில் நிவேசிப்பிக்கலாம் –அதுவும்செய்ய மாட்டுகிறலேன்,
நியதனாய் கொண்டு சாஸ்த்ரோக்தமான காலங்களிலே , புஷ்பயாதி உப கரணங்களை
சம்பாதித்துக் கொண்டு ஆராதித்து ஸ்துத்திதேன் ஆகில் பக்தி சரீரத்தில் நிவேசிப்பிக்கலாம்
அதுவும் செய்ய மாட்டுகிறலேன் என்றும் –
நோன்பு அறிவிலேன் என்கையாலும் –
அதாவது
நோற்ற நோன்பிலேன் ,நுண் அறிவிலேன்–5-7-1–என்று
பல வ்யப்தமாம் படி அனுஷ்டிதமான கர்ம யோகம் உடையவன் அல்லேன் -அது இல்லாமையாலே ,
சூஷ்ம ரூபமான ஜீவ பர விஷய ஞான யோகத்தை உடையேன் அல்லேன் –ஆகையால் உபய சாத்யை யான
பக்தி இல்லை என்னும் இடம் அர்த்தா சித்தம் என்று அருளிச் செய்கையாலே வர்த்தமான ஜென்மத்தில்
கர்ம ஞான பக்திகள் ஆகிய சாதன த்ரய அனுஷ்டானத்தால் உண்டானது அல்ல –
கிற்பன் என்கையாலே
அதாவது
கிற்பன் கில்லேன் என்று இலன் முன நாளால் -3-2-6–என்று முன்பு உண்டான
காலம் எல்லாம் -குர்யாத்-( செய்யத்தகும் ) -என்று நன்மை செய்ய அடுக்கும் என்றால் ,வல்லேன் என்று இசைந்திலேன் –
ந குர்யாத் ( செய்யத்தக்கது )-என்று தீமை செய்யல் ஆகாது என்றால் ,மாட்டேன் என்று தவிர்ந்திலேன் —
இப்படி விஹிதத்தை செய்யாமல், நிஷிதத்தை செய்து போந்தேன் என்றும் –
கீழ் நாள் என்கையாலே –
அதாவது –
தெரிந்து உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் –ஆழி அம் கையானை ஏத்தாது அயர்த்து —
வாழா இருந்து ஒழிந்தேன் கீழ்–பெரிய திருவந்தாதி -82–என்று
பகவத் விஷயத்தை அறியும் ஆராயும்-ஞானம் ஒன்றையும் இல்லாமையாலே ,
பகவத் அனுபவ போக்யமான காலத்தை பாழே போக்கிய பாவியேன் –
பிராட்டி சொன்னது செய்தல் அல்லது ,நிற்க மாட்டாமையாலே ,மாயா மிருகத்தை அன்று பின் பற்றிப் போன –
அருகாழியை திருகையிலுடைய சர்வேஸ்வரனை மங்களாசாசனம் பண்ணப் பெறாதே அறிவு கெட்டு
வ்யர்தமே இருந்து விட்டேன் கீழ் உள்ள காலம் எல்லாம்-என்று அருளிச் செய்கையாலே
பூர்வ ஜென்மங்களில் அப்யாசத்தால் உண்டானதும் அல்ல என்கை-
—————————————
சூரணை-103-
இன்னமும் இவர் தம்முடைய திவ்ய ஸூக்தி விசேஷத்தாலே இது தன்னை
வ்யக்தீகரிக்கிறார்-
இப் பிறப்பே
சில நாளில் என்ற போதே
இரண்டும் கழியும்-
அதாவது
இப் பிறப்பே–சில நாளில் என்ற போதே
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய்தவமும் ,
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்—திருவாய் -2-3-8- -என்று
யம நியமாத்ய வஹிதராய் கொண்டு சம்பாதிக்க வேண்டும்
வேதன த்யாநோபாச நாத்யவஸ்தா விசேஷங்களான ஜ்ஞானங்களாலே
அநேக கல்பம் கூடி ஸ்ரவணமாய் ,மனனமாய் , த்ருவ அனு ஸ்ம்ருதியாய்
வரக் கடவ பக்தி யோகமாகிற தபசினுடைய பலத்தை ஒரு யத்னமும் இன்றிக்கே இருக்க –
நல் விரகானவனாலே -இஜ் ஜென்மத்திலே -அதிலும் அல்ப காலத்திலேயே
பெற்றேன் என்கையாலே ,
இரண்டும் கழியும் –
அதாவது
ஜென்மாந்தர அப்யாசஜம் என்றும் ,
இஜ் ஜென்மத்திலே சாதன அனுஷ்டானஜம் என்றும்
சொல்லுகிற இரண்டும் போம் என்ற படி —
இப் பிறப்பே -என்றும் -சில நாள்களில் -என்றும் இரண்டையும் அருளிச் செய்தது
ஜென்மாந்தர அப்யாசத்தையும் இஜ் ஜென்மத்தில் சிரகால சாத்தியமான வற்றில்
அன்வயத்தையும் வ்யாவர்த்திக்கைக்கா இறே-
அன்றிக்கே –
இடகிலேன்–நோன்பு அறிவிலேன் -கிற்பன் -சில நாளில் -இத்யாதி வாக்யத்தில் எடுத்த சந்தைகள் எல்லாத்தாலும்
பூர்வ ஜென்ம சித்தமான சாதன த்ரய அப்யாச பலம் இல்லாமையை சாதித்தாகவும் ,
அது இல்லையாகில் ,இஜ் ஜென்மத்தில் அவற்றை அப்யசித்து ,வந்தததனாலோ என்கிற சங்கை வர-
பூர்வ ஜென்மங்களிலும் இஜ் ஜென்மத்திலும் இவருக்கு அவற்றில் அன்வயம் இல்லை என்னும் இடத்தை
-இப் பிறப்பே -இத்யாதி -யான இவருடைய ஸ்ரீ ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பியா நின்று கொண்டு ,
உபய சங்கையும் சேரத் தள்ளுகிறார் என்று இங்கனே யோஜிக்கவுமாம் ..
இந்த யோஜனையைப் பற்றவும் , பூர்வ யோஜனையே இதனுடைய பட்டோலையான பெரிய படிக்கு சேருவது-
————————————-
சூரணை -104-
ஆனால் இவருக்கு இந்த பக்தி உண்டாகுகைக்கு ஹேது என் என்னும்
ஆ காங்க்ஷையிலே -பல போக்தாவான ஈஸ்வரன் கிருஷி பலன்-என்னும் அத்தை –
ஷேத்ரமும் ,கர்ஷகனும் ,க்ருஷியும் ,தத் பலமுமாக ரூபித்து கொண்டு அருளிச் செய்கிறார் ..
பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன்
பெரும் செய் -கலியார் ஏவ ஆளும் வன் குறும்பர்
குடி ஏறிப் பெரும் குடியும் தங்கள் கருத்துள்ளே ஆக்கிப்
படிந்து உண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்கு காவல் செய்து ,
குமைத்துத் ,திரித்து வீழ்த்தி ,வலித்து, எற்றி,
அருவி அறுத்துக் கடனாயின இறுப்பிக்கப்
பாழ்த்த விதியானவாறே-
தன் பால் மனம் வைப்பிப்பதாகத்
தேய்ந்தற மன்னி
ஒள் வாள் உருவி
வினைத் தூற்றை வேர் அறுவித்து
தீக்கொளீஇக் கவ்வை எரு இட்டு
அமுதவாறு தலைப் பற்றி
ஈரி யாய் கசிந்ததிலே
ஈர நெல் வித்தி-
எழு நாற்றுக் களையும்
வேர் முதல் மாய்த்துப்
பட்டிச் சேவதாக்கி
மீது கொள்ளாமல் ,குறிக் கொள்வித்து ,
கடல் புரைய விளைந்து ,
தலை வணக்கினவாறே ,
நாளு நாள் கோட் குறையாக
நின்றார் அறியாமல் ,
குந்தம் கொண்டு ஆராமை உண்டு ,
காலக் கழிவாலே நிலது உகாமல் பற்று அறுத்துத்
தண்டால் அடித்து ,பதர் அறுத்து
போர்த்த தோல் விடுத்து
ஸூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி ,
வேறோர் கலத்து இட்டு ,
பைம் தொடி மடந்தையரைக் கொண்டு ,
ஷட் குண ரச அன்னமாக்கி
வானோர்க்கு ஆரா அமுது ஆனவாறே ,
முற்றும் உண்ண முன்னம் பாரித்து ,
உழுவதோர் நாஞ்சில் கொண்டு ,
பெருக முயலும்
பக்தி உழவன்
க்ருஷி பலம் இறே-
(பெரும் பாழ்-மூலப் பிரக்ருதி / ஷேத்ரஞ்ஞன் -ஆன்மா / பெரும் செய் -மனம் -வயலாக உருவகம் )
பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெரும் செய் –
அதாவது –
முடிவில் பெரும் பாழ்–திருவாய் -10-10-10-என்று நித்தியமாய் -அபரிச்சேதமாய் ,
சேதனருக்கு போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் நிலமான பிரகிருதி தத்வத்தில் –
ஷேத்ரஜ்ஞன் ஆகிற பக்த சேதனுடைய ,
நெஞ்சப் பெரும் செய் -5-3-4-என்று பக்திக்கு விளை நிலமான மனஸ் ஆனது –
பாழ்த்த விதி ஆனவாறே -என்றதோடு இதுக்கு சம்பந்தம் ….
பாழ் படுகைக்கு அடி சொல்லுகிறது நடு உள்ளது அடங்கலும் .
கலியார் ஏவ ஆளும் வன் குறும்பர் குடி ஏறி –
அதாவது –
ஏவினார் கலியார் நலிக என்று என் மேல்—பெரிய திருமொழி -1-6-8-என்கிறபடியே
கலியுகமாகிற வன்னியன் -இவனை நலியும் கோள் -என்று ஏவ ,
ஆளும் வன் குறும்பர் –
அதாவது –
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -பெரிய திருவந்தாதி -51-என்கிறபடியே –
சேதன சேஷமான மனஸை -தங்களுக்கு சேஷம் ஆக்கி கொண்டு நடத்தும் அவர்களாய் –
முன் கை மிடுக்கராய் -அத்வீதியராய் இருந்துள்ள இந்திரியங்களாகிய குறும்பர் –
குடியேறி –
அதாவது –
கோவாய் ஐயர் என் மெய் குடியேறி -பெரிய திருமொழி -7-7-9-என்கிற படியே
இச் சேதனனுக்கு நியாமகராய் கொண்டு , தேஹத்திலே குடி புகுந்து ,
கலியார் ஏவ -என்றது-இந்திரியங்கள் உடைய நலிவுக்கு கலி காலம் பிரவர்தகம் ஆகையாலே –
கலியார் -என்றும் -ஐவர்-என்றும் -சேதன சமாதியாலே சொல்லுகிறது .
தனக்கு என்ன ஆக்ரஹம் உடையாரைப் போலே ,நலிகிற கொடுமையைப் பற்ற —
கலியார் என்று -ரேபாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது கலி காலத்துக்கு அஞ்சினபடி யாலே இறே —
பெரும் குடியும் தங்கள் கருத்துள்ளே ஆக்கி –
அதாவது –
முன்னின்று முறை போக்கும் பெரும் குடி போலே (இங்கு பெரும் குடி என்றது மனத்தினை )
தங்களுக்கு பிரதானமான மனசையும் –
ஐம்புலன் கருதும் கருத்துள்ளே திருத்தினேன் மனத்தை –பெரிய திருமொழி -1-1-8–என்கிறபடியே –
தாங்கள் நினைத்த வழியே ஒழுகும் படியாகப் பண்ணி-
படிந்து உண்ணும் போகத்தே –
அதாவது
படிந்துண்டும் போகத்தே தூராதே பொருக் கொணா போகத்து காவல் செய்து –பெரிய திருமொழி -1-6-2-
புலன் படிந்து உண்ணும் போகம் -என்று விஷயங்களிலே அவஹாகித்து புஜிக்கிற போகத்தில் –
தூராதே-
தூராக் குழி-திருவாய்-5-8-6- -என்ற படி ஒரு காலும் பூர்ணம் ஆகாதே –
பொருக் கொணா போகத்து-
பொறுத்து கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான்-என்கிறபடியே –பெரிய திருமொழி -7-7-7-
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ,ஆற்ற ஒண்ணாத படி ,
விஷய போகங்களை புஜிக்க வேணும் என்று , –
காவல் செய்து –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலை -பெரிய திருமொழி -7-7-8– -என்கிற படி
க்ரூரராய் ,நலிய நலிய- இளகிப் பதியா நின்ற பருவத்தை உடையராய்க் கொண்டு ,இவனைச் சிறை செய்து —
குமைத்து திரித்து வீழ்த்து வலித்து எற்றி அருவி அறுத்துக் கடனாயின இறுப்பிக்க –
அதாவது –
குமைத்து –
கூறை சோறு இவை தா என்று குமைத்துப் போகார்-பெரிய திருமொழி -7-7-9- -என்றும் ,
திரித்து-
செக்கலிட்டு திரித்துக்கும் ஐவர் –திருவாய் -7-1-5–என்றும் ,
வீழ்த்து-
கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவர் –திருவாய் -7-1-9-என்றும் ,
வலித்து-எற்றி-
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர் –திருவாய் -7-1-10–என்றும் ,
அருவி-
ஐவர் அருவித் தின்றிட–பெரிய திருமொழி -7-7-1- என்றும் –
அறுத்து-
ஐவர் அறுத்துத் தோன்றிட –பெரிய திருமொழி –7-7-7-என்றும் -என்கிறபடியே
தனக்கு அபீஷ்டமானவற்றை தா என்று துகைத்து இழுத்து ,
சரீரமாகிற செக்கிலே இட்டு ,சுழற்றி க்ரூரமாய் ,
கரையேற ஒண்ணாதபடி இருக்கும் விஷயங்கள் ஆகிற படு குழியில் தள்ளி ,
அவை தான் அநேகங்களாக ஸ்வ ஸ்வ விஷயங்களிலே கொடு போகைக்காக ,
நாலு திக்கிலும் இழுத்து ,நலிந்து அருவித் தின்னுமா போலேயும் ,அறுத்து தின்னுமா போலேயும் ,
என் விஷயத்தைக் காட்டு -என் விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கி ,
இப்படி பஹுவிதமாகத் தண்டித்து –
கடனாயின இறுப்பிக்க –
அதாவது –
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்து என் ஐம்புலன்கட்குக் கடனாயின –பெரிய திருமொழி -6-2-1-
என்று ஸ்ரோத்ராதிகளுக்கு ,பிராப்தமாய் இருக்கிற அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற ,இரண்டையும்
கடமை இருப்பாரை போலே அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன் என்னும் படி
தங்களுக்கு பிராப்த கரங்களை இறுப்பித்து கொள்ள —
பாழ்த்த விதி யானவாறே –
அதாவது –
இப்படி ஆகையாலே ,வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து ,நின் தலையை தாழ்த்து ,
இரு கை கூப்பு என்றால் ,கூப்பாத பாழ்த்த விதி –பெரிய திருவந்தாதி –84-என்கிற படியே
வகுத்த சேஷியானவனை வாழ்த்தி ஆராதித்து ,வணங்கி கும்பிடுகைகள் ஆகிற ,
இவற்றில் ஒன்றிலும் ,அன்வயியாமையாலே ,
தத் அங்கீகார பற்றாசான ஸூஹ்ருத கந்தம் அற்று ,மனஸ் பாழ் பட்டவாறே –
தன் பால் மனம் வைப்பிபதாக தேய்ந்து அற மன்னி –
( இது தொடங்கி -ஈர நெல் வித்தி முடிய -பயிர் செய்யும் இறைவன் பாழ் பட்ட மனமாகிய வயலைச்
செப்பன் இட்டுப் பக்தியாகிற நெல்லை விதைத்தமை )
அதாவது –
தன் பால் மனம் வைக்க திருத்தி -திருவாய் -1-5-10-என்கிறபடியே இந்திரிய அவஸ்தையாலே
இப்படி பட்ட பாழ் பட்ட மனஸை –பயிர் படும் படி தன் பக்கல் வைக்கப் பண்ணுகைக்காக –
தேய்ந்தற மன்னி-
அதாவது –
எனது ஏழை நெஞ்சாளும் திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்தற மன்னி இருந்தான் –திருவாய் -8-7-2-என்கிற படி
கண்டது எல்லாத்திலும் சபலமாய் இருக்கிற மனஸை ,அதுவே பற்றாசாக பொதி எடுத்து ஆளா நிற்ப்பராய்,
எத்தனையேனும் பலவான்கள் திருத்தப் புக்காலும் திருந்தாதே இனி இப்படி ஓர் ஐவர் இல்லை என்னும்படி
இருக்கிற இந்திரியங்கள் ஆகிற ஐவர் ஷயித்து , முடிந்து போம் படி ,
ஆசன பலத்தாலே குறும்பரை அழிக்கும் ராஜாக்களைப் போலே ,
ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருந்து —
ஒள் வாள் உருவி வினைத் தூற்றை வேர் அறுவித்து –
அதாவது –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி—பெரிய திருமொழி -6-2-4-என்கிற படியே –
மா மேகம் சரணம் விரஜ–ஸ்ரீ கீதை – -என்று என்னுடைய பிரசாதத்தையே ,உனக்கு
உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்ன –
ஸ்திதோஸ்மி கத சந்தேக–ஸ்ரீ கீதை -18–66 -என்னும் படி -சகல சந்தேகங்களையும் துணித்து பொகட வற்றாய் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி–ஸ்ரீ கீதை -என்று அருளிச் செய்த படி ,
சர்வ பாபங்களையும் சேதிக்கைக்கு சமர்ததுமான ஒண்மை உடைய கிருபை ஆகிற வாளை
அப்ரிதகதமாக்கி பக்தி யாகிற பயிருக்கு விளை நிலமாகக் கல்பிதமாய் இருந்துள்ள மனஸ் பாழே கிடந்தது போம் படி
கொடு வினை தூறு -திருவாய்-3-2-9-என்கிற படியே ,
இவனால் அடி காணவும் அறுக்க ஒண்ணாதாகவும் மூடின பாபமாகிய தூற்றை –
வினைகளை வேரற –திருவாய்-3-2-1–என்றும்
வல் வினை தொடர்களை முதல் அரிந்து -திருவாய்-3-2-2–என்றும் சொல்லுகிற படி
மறு கிளை உண்டாகாத படி வாசனா ருசிகள் ஆகிற ஊசி வேரோடும் ,பக்க வேரோடும் ,அறுப்பித்து
வினை தூற்றை ,வேர் அறுத்து -என்னாதே –வேர் அறுவித்து -என்கையாலே நிஜர்த்தமும் தோற்றுகிறது –
வினை அறுக்கையில் , பிரயோஜக கர்த்ருத்வம் ஈஸ்வரனுக்கும் ,சாஷாத் கர்த்ருத்வம் கிருபைக்கும் ஆகலாம் இறே-
(மோக்ஷயிஷ்யாமி –னிச்சாலே நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டுப் போகும் காண் –முமுஷுப்படி
-பிறவினையைக் காட்டும் விகுதி இருப்பதால் )
தீக் கொளீ இ-
அதாவது
வெட்டின காட்டை சுட்டிப் பொகட்டுமா போலே ,மோஷ இஷ்யாமி -என்கிற
கிருபா ப்ரயுக்த சங்கல்பத்தாலே ,முந்துற அடி அறுத்த வற்றை –
இறவு செய்யும் பாவக் காடு தீக் கொளீ வேகின்றதால் –பெரியாழ்வார் -5-4-2–என்று
இவ் ஆத்மாவை முடிக்கிற கர்ம சந்தானம் நெருப்பு கொழுந்தி வேகா நின்றது என்னும் படி ..
யாதேஷீ கா தூல மக்னவ் ப்ரோதம் ப்ரதூயேத
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -5-24–3 –என்கிற படி
( தீயிலிட்டு தூசு போலே )உரு மாய்ந்து போம் படி தக்த மாக்கி —
கவ்வை எரு இட்டு-
அதாவது
ஊரவர் கவ்வை எரு இட்டு–திருவாய் -5-3-4- -என்கிற படியே பகவத் ஆபிமுக்யம் பிறந்த அளவிலே ,
இவன் பாகவதன் ஆனான் என்று சம்சாரிகள் சொல்லும் பழி மொழியை
பக்தி ஆகிற பயிருக்கு வர்த்தகமான எருவாக இட்டு –
அமுதவாறு தலை பற்றி-
அதாவது –
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய் கொண்டது –பெரியாழ்வார் -5-4-2–என்கிற படியே ,
ஜ்ஞானம் ஆகிற அமுத நதியை ,வாயளவாய் தலைக்கு மேலே போம் படி ,பெருகப் பண்ணி —
ஈரி யாய் கசிந்ததிலே –
அதாவது –
கண்ணனுக்கு என்று ஈரி யாய் இருப்பாள் திருவாய் -6-7-9–என்றும் ,
கசிந்த நெஞ்சினளாய் –திருவாய் -6-7-8–என்றும் சொல்லுகிற படி அந்த ஞான வாரியாலே -( வெள்ளத்தால் )–
நல்லது கண்டால் அவனுக்கு என்னும் அனுசந்தானத்தாலே -ஆர்தரதை விளையும் படி ,
நெஞ்சு பதம் செய்து ,செவ்வி வாய்த்த வாறே அந் நெஞ்சிலே-
ஈர நெல் வித்தி-
அதாவது –
சங்கமாகிற நெல்லை விதைத்து .
எழு நாற்றுக்களையும் வேர் முதல் மாய்த்து –
( எழு நாற்று -என்ற இதில் தொடங்கி தலை வணக்கினவாறே -வரை மனமாகிய வயலிலே விதைத்த பக்தியாகிற
நெல் முளைத்துக் கருவிலே ஈன்று காய்த்து முற்றின படியை சொல்லிற்று )
அதாவது –
செய்தலை எழு நாற்று –பெரியாழ்வார் -3-7-9-என்கிறபடியே ,
தத் பிரத்யாசன்னமாய் , ததேக பரதந்த்ரமாய் ,ததேக போக்யமாய் ,வளருகிற இப் பயிரில் ,
வேர் முதல் மாய்த்து
அதாவது –
கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியை விளைக்கும் அஹங்கார மம காரங்களாகிய களையையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து–திருவாய் -1-2 3–என்கிறபடியே
வூசி வேரோடே பறித்து பொகட்டு–
பட்டி சேவை அதக்கி-
அதாவது –
களை பறித்தாலும் போராதே , பட்டி புகாமல் நோக்கினால் இறே பயிர் தலைப் பெற்றுச் செல்லுவது –ஆகையாலே –
வன் புலச் சேவை அதக்கி—பெரியாழ்வார் -5-2-3-என்கிற படி ,
விஷயாந்தரங்களிலே பிரவணமாய் ,பகவத் பக்தியை தலை அழிக்கை யாலே , பக்தி யாகிற இப் பயிருக்கு
பட்டியான இந்திரியங்கள் ஆகிற சேக்கள் உடைய ஸ்வைர சஞ்சார ஹேதுவான கர்வத்தைப் போக்கி —
மீது கொள்ளாமல் குறிக் கொள் வித்து –
அதாவது –
பயிர் பல பர்யந்தம் ஆனாலும் ,பலிதாம் சத்தை ,ராத்ரிசரர் அபஹரிக்க
யோக்யதை உண்டாகையாலே ,ரஷை பண்ணுவிக்க வேணும் ஆயத்து ..-அப்படியே –
விளைந்த தானியமும் ராக்கதர் மீது கொள்ள கிலார்கள்–பெரியாழ்வார் -4-4-8–என்கிற படி
அனந்யார்ஹமாம்படி-
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –திருவாய் -5-2-5-என்று ராஷச பிரக்ருதிகளும் , ஆசூர பிரக்ருதிகளுமாகச்
சொல்லலாம் படியான அபாகவாத ஜனங்கள் -எங்களுக்கும் இவன் ஸ்நேஹீ -என்று இருக்கும் அவ் வழியாலே ,
இத்தை அபஹரிக்கைக்கு அவகாசம் அற -பக்தியாகிற பயிர் விளைந்து இருக்கும் நெஞ்சுக்கு –
குறிக்கொள்வித்து –
அதாவது
பக்தியாகிற பயிர் விளைந்து கிடக்கிற நெஞ்சுக்கு –
பறவை அரையா உறகல் பள்ளி அறைக் குறிக் கொள்மின் -பெரியாழ்வார் -5-3-9-என்கிற படியே காவல் அடைத்து —
கடல் புரைய விளைந்து தலை வணக்கினவாறே –
அதாவது –
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி –திருவாய் -5-3-4–என்கிறபடியே எருவும் நீரும் உண்டானாலும் ,
மேல் வர்ஷம் இல்லாத போது பயிர் தலை குளிர்ந்து வளராது என்று ,காள மேக நிபஸ்யமான வடிவழகை ,
வர்ஷித்து வளர்க்கையாலே ,அந்த பக்தி ஆகிற பயிர் கடல் போலே ,அபரிசேத்யமாம்படி பலித்து ..
தலை வணக்கினவாறே –
அதாவது –
வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணக்கும் –பெரியாழ்வார் -4-9-8–என்கிற படி
பலித்த பயிரானது பரி பக்குவமாய் தலை வணங்குமா போலே ,
பலிதமான அதனுடைய பரிபாக நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யம் பிறந்தவாறே —
நாளு நாள் கோள் குறையாத நின்றார் அறியாமல் குந்தம் கொண்டு ஆராமை உண்டு-
( நாளு நாள்-இது முதல் முன்னம் பாரித்து முடிய விளைந்த நெற்களை உரிய காலத்திலே அறுத்து –
நெற்களை வேறாகப் பிரித்து-பின் அரிசியாக்கி -பின் சோறாக்கி – உண்டு பயன் பெற்றமயைச் சொன்னபடி ) –
அதாவது –
பத்தி பரிமாணம் சொன்ன இத்தால் பலித்தது –
தத் ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து பகவத் போக்யமாம் படி திருந்தினமை இறே –ஆகையால் –
நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்–திருவாய் -9-6-8- -என்றும் ,
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் —திருவாய் -9–6-7–என்றும் ,
நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு-10-7-1- -என்கிற படியே
ஒரு நாள் புசித்து விடுகை அன்றிக்கே ,நாள் தோறும் வந்து புஜியா நிற்கச் செய்தே .பின்னையும் ,
பர்யாப்தன் அன்றிக்கே படுகிற அலமாப்பு கண்டு ,இத் தலையிலே சிறிது தொங்கிற்று உண்டு
என்று நிரூபித்து அறிய வேண்டும் படியாக இப் பரிமாற்றத்தில் தலை நின்று-
பிராட்டி ,திருவடி ,திரு அனந்த் தாழ்வான் -முதலானாரும் அறிய மாட்டாதபடி ,
பெரும் பசியர் ஆனவர்கள் விளைந்த நெல்லை சேர அறுத்து கொண்டு போய் ,
புஜிக்கப் பற்றாமே முற்றின வளைவுகளை குந்தம் கொண்டு புசிக்குமா போலே ,
முக்தனான வாறே ,பின்னை சேரப் புஜிக்க பற்றாத தன் அபிநிவேசத்தால்,
இந்த சரீரதோடே இருக்கச் செய்தே விளைந்த பரிபாக அனுகுணமாக –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் —திருவாய் -10-10-6-என்கிறபடியே ,
மனசுக்கு ஒரு காலும் திருப்தி பெறாதே மென் மேலும் விரும்பி புசித்து —
காலக் கழிவாலே நிலத்து உகாமல் பற்று அறுத்து –
அதாவது –
காலக் கழிவு செய்யேல்–திருவாய் -2-9-2–என்றும் ,
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல—பெரிய திருமடல் -என்றும் சொல்லுகிற படி
பரிபக்வமான இவ் வஸ்து ,கால ஷேபத்தால் தரைப் பட்டு மங்கிப் போகாமல் ,
பற்று அறுத்து –
அதாவது –
வினை பற்று அறுக்கும்-பெரிய திருமொழி -11-4-9- -என்கிற படி –
பிராப்தி விரோதமான கர்மங்களை அறுத்து –
தண்டால் அடித்து பதர் அறுத்து –
அதாவது –
அறுத்த நெல் கதிரை தடியாலே அடித்து பதறும் மணியும் பிறிக்குமா போலே
அருள் என்னும் தண்டால் அடித்து -பெரிய திருவந்தாதி -26-என்கிறபடி
தன் உடைய கிருபை என்னும் த்ருட தர சாதனத்தாலே ,நெல்லோடு ஒக்க விளைந்து இருப்பதாய் ,
அசாரமான பதர் போல் இருக்கிற ஆத்ம அனுபவத்தில் ருசியை அறுத்து –
போர்த்த தோல் விடுத்து –
அதாவது
அந் நெல்லில் உமியை விடுவிக்குமா போலே ,
போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பவை பேர்த்து ––திருவாய் -7-5-10- என்கிற படி ,
ஆத்மாவை பொதிந்து கொண்டு கிடப்பதாய் ,ஆதிவ்யாதிகளுக்கும் (மனத்தின் சோர்வும் சரீர நோயும் ) ,
ஷட் பாவ விகாரங்களுக்கும் ,அடியான ஸ்தூல தேகத்தினுடைய ,விமோசனத்தைப் பண்ணி —
சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி-
அதாவது –
அநந்தரம் தண்டுலத்தை தவிடு அற கழுவுமா போலே ,ஸ்தூல தேஹம் போனாலும் ,
தான் போகக் கடவதன்றிக்கே ,சம்சரண ஹேதுவாய்க் கொண்டு , போந்ததாய் ,பகவத் அனுபவ
விரோதியாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்த கமன சாதனமாய் கிடந்த சூஷ்ம சரீரத்தையும் ,
தத்தோய ஸ்பர்ச மாத்ரென -என்கிற படியே -விரஜா ஜல ஸ்பர்சத்தாலே வாசனா ரேணுக்களுடன் போக்கி ,
கர்ம சம்பந்தம் அறுகையாலே ,சூஷ்ம சரீரம் இருக்கைக்கு ஹேது இல்லாமையால் ,இங்கே கழித்து
விடலாய் இருக்க செய்தே ,விரஜா பர்யந்தம் இவனுக்கு கமன சாதனமாக ஈஸ்வரன் தன் இச்சையாலே
வைத்து ,விரஜையிலே உள் புக்கவாறே கழித்து விடும் – -என்று இறே நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்வது ..
சூஷ்ம பிரகிருதி சம்பந்தம் கிடக்கும் அளவும் ,வாசனா ரேணுவும் கிடக்கையாலே ,
அதுவும் அப்போது ஆய்த்து நிவ்ருத்தம் ஆவது ..-விரஜைக்கு சென்று கிட்டி ,
வன் சேற்று அள்ளலையும் வாசனா ரேனுவையும் கழுவி-என்றார் இறே (–ஸ்ரீ பிள்ளைலோகாச்சார்யாரும் அர்ச்சிராதி கிரந்தத்தில் )
வேறோர் கலத்து இட்டு-
அதாவது
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு –சிறிய திருமடல் -30-
என்கிறபடியே ,ஸ்தூல சூஷ்ம ரூபியான பிரக்ருதியில் நின்றும் விவேகித்து வாங்கின இவ் ஆத்ம வஸ்துவை
அமானவ கர ஸ்பர்சத்தாலே ,அப்ராக்ருத தேஹத்திலே பிரவேசிப்பித்து-
பைம்தொடி மடந்தையரை கொண்டு ஷட் குண ரச அன்னமாக்கி-
அதாவது –
அணைவர் போய் அமரர் உலகில் பைம்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணை–திருவாய் -10-2-11- -என்கிறபடியே ,
தம் பஞ்ச சதான்யப்சரசாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -இத்யாதி பிரகரேன
வந்து எதிர் கொண்டு -தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ –1-35– என்று
தங்கள் கையாலே இவ் ஆத்ம வஸ்துவுக்கு ப்ரஹ்ம அலங்காரத்தைப் பண்ணி ,
சத்கரிக்கும் திவ்ய அப்சரஸூகளைக் கொண்டு ,
தன்னுடைய போகத்துக்கு அர்ஹகாம் படி ,அலங்கரிப்பியா நின்று கொண்டு ,
ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் -என்கிறபடி ஸ்வரூப ஆவிர்பாவம் பிறந்து ,முன்பு
திரோஹிதமாய் கிடந்த ஆத்ம குணங்கள் எல்லாம் பிரகாசிக்கப் பெற்று இருக்கிற இத் ஆத்ம வஸ்துவை
ஞானாதி ஷட் குணங்களாகிற ஷட் ரச யுக்தமாய்-அஹம் அன்னம்–தைத்ரியம் –என்கிற அன்னம் ஆம் படி ,
அவர்கள் கர ஸ்பர்சத்தால் பக்குவம் ஆக்கி , சேஷ வஸ்துகமான ஞான சக்த்யாதி ஷட் குணங்களும் ,
சேஷி விநியோகத்துக்கு உறுப்பு ஆகையாலே ,இக் குணங்களோடு கூடி -அஹம் அன்னம் –
என்று இருக்கும் இவ் வஸ்து அவனுக்கு அறுசுவை அடிசிலாய் இறே இருப்பது —
வானோர்க்கு ஆரா அமுதம் ஆனவாறே -அதாவது –
வானோர்க்கு ஆரா அமுதே -திருவாய் -5-7-11-என்கிறபடி ,
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுது -திருவாய் -10-9-9–என்பது –
விதி வகை புகுந்தனர்-10 -9 -10—-என்பது
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -10-9-10-இத்யாதி படி ஆதரிக்கும் நித்ய ஸூரிகளுக்கு
பரம போக்யமாம் படி ஆனவாறே —
முற்றும் உண்ண முன்னம் பாரித்து -அதாவது
என்னை முற்றும் உயிர் உண்டு-10-7-3- -என்கிற படி இத் ஆத்ம வஸ்துவை
முழுக்க புஜிப்பதாக -என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்கிறபடி-
இத் ஆத்ம வஸ்துவுக்கு ருசி பிறப்பதற்கு முன்னே பிடித்து பாரித்து –
உழுவதோர் நாஞ்சில் கொண்டு , பெருக முயலும் பக்தி உழவன் கிருஷி பலம் இறே –
( இதுக்கு மேல் எல்லாம் சர்வேஸ்வரனை உழவனாக உருவகம் செய்து அருளிற்று )
அதாவது
உழுவதோர் படையும் –பெரியாழ்வார் -4-7-5–என்றும் ,
ஒற்றை குழையும் நாஞ்சிலும் –பெரிய திருமொழி -8-8-8–என்கிறபடி
இவர் கர்ஷகன் என்று தோற்றும் படி க்ருஷி சாதனத்தைக் கையிலே கொண்டு ,
அரியது எளியதாகும் ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரைப் பெற்றால்–இரண்டாம் திருவந்தாதி -22-என்கிறபடியே ,
அரிதான தன் திரு அடிகளில் பிராப்தியும் எளிதாகும் படி ,இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு மிகவும்
யத்னியா நிற்கும் ஸ்வபாவனாய்-
பக்தி உழவன்–நான்முகன் -23–என்கிற படி ..
இவ் ஆத்மாவுக்கு ஸ்வ விஷய பக்தியை விளைக்கைக்கு கிருஷி பண்ணித் திரியும் சர்வேஸ்வரனுடைய –
கிருஷி பலமிறே இவ் ஆழ்வாருக்கு உண்டான இப் பக்தி- என்றபடி ..
இத்தால் இவருடைய பக்தி உத்பத்தி காரணம்- பகவத் கிருஷி -என்றது ஆய்த்து-
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply