ஆச்சார்ய ஹிருதயம்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வ்யாக்யானம் — சூர்ணிகை -105/106/107/108/109/110/11/112..

சூரணை -105

இப்படி இத் தலையில் நன்மை அற்று இருக்கச் செய்தே ஈஸ்வர கிருஷி
பலிக்கக் கண்ட இடம் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

கோசல
கோகுல
சராசரம் செய்யும்
குணம் ஓன்று இன்றியே
அற்புதம் என்னக் கண்டோம்-

(கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-என்றும்
கோகுல சராசரம் செய்யும் குணம் அற்புதம் என்ன கண்டோம்-என்றும் )

கோசல சராசரம் ஓன்று இன்றியே என்னக் கண்டோம்-
அதாவது-
த்வாம் ஆமனந்தி கவய கருணா ம்ருதாப்தே ஞான க்ரியா பஜன லப்யம் அலப்யம் அந்யை ஏதேஷு கேன ,
வரத உத்தர , கோசலஸ்தா பூர்வம் சாதுர்வம் அபஜந்த ஹி ஜந்தவஸ் த்வாம்–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69–என்கிற படியே ,
அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் –
ஓன்று இன்றியே நல் பாலுக்கு உய்த்தனன் –திருவாய் -7-5-1- என்று
திரு அயோத்யாதி கோசல தேச வர்திகளான சராசரங்கள் எல்லாம் நிர்ஹேதுகமாக ,
ராமோ ராமோ ராம இதி ,பிரஜாநாம் அபவன் கதா ,
ராம பூதம் ஜகத பூத் ராமே ராஜ்யம் பிரசாசதி –யுத்த –131-96–என்றும் ,
அபிவிருஷா பரிம்லானாஸ் ச புஷ் பாங்குர கோரகா
விஷயேதே மஹா ராஜா ராம வியசன கர்சிதா
உபதப் தோதகா நத்ய பல் வலானி சராம்சிச
பரிசுஷ்க பலாசாநி வநான் யுபவ நாசிச -அயோத்யா -59-4-5—(சுமந்திரன் தசரதனுக்கு சொன்னவை)–என்றும்
அகால புலினோ வருஷா சர்வேசாபி மதுரஸ் ரவா யுத்த –127-17–இத்யாதி படியே
ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கங்கள் ஆகிற நல்ல ஸ்வாபத்தை
உடையதாம் படி நடத்தினான் என்றும் –

கோகுல சராசரம் செய்யும் குணம்
அதாவது
கோகுலத்தில் உண்டான சராசரங்கள் எல்லாம் –அவன் ஒருவன் குழலூதின போது ,
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் , வளர் கொம்புகள் தாழும் ,
இரங்கும் கூம்பும் , திரு மால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -பெரியாழ்வார் –3-6-10–என்றும் ,
மருண்டு மான் கணங்கள் மேய்க்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர ,
இரண்டு பாலும் துளங்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே –பெரியாழ்வார் -3-6-9–என்றும் ,
பறைவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப ,
கறைவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி யாட்ட கில்லாவே -பெரியாழ்வார் -3-6-8–என்றும்
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப ,உடல் உளது வீழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–பெரியாழ்வார் -3-6-1– -என்கிறபடி
சைதன்ய பிரசரணம் இல்லாத வ்ருஷங்களோடு
சைதன்யம் லேசம் உள்ள திர்யக்கு களோடு ,
சைதன்ய விசேஷார்ஹா மனுஷ்ய ஜாதியாரான சிறு பெண்களோடு ,
(வலக்கை இடக்கை அறியாத இடைப்பெண்கள்–என்பதால் அர்ஹ சப்தம் )
வாசி அற நிர்ஹேதுகமாக பகவத் பிராவண்ய பரவசங்கள் ஆனவை கண்டு –
நங்கை மீர்காள் ஓர் அற்புதம் கேளீர்-ஸ்ரீ பெரியாழ்வார் -3-6-1-என்று
விஷேஷஜ்ஞர்-(ஸ்ரீ பெரியாழ்வார்-) வித்தராய் சொல்லும்படியாகக் கண்டோம் என்கை–

இத்தால் பகவத் நிர்ஹேதுக ,விஷயீகாரம் இப்படி பலிக்கக் காண்கையாலே ,
ஆழ்வார் உடைய பக்தியும் ,பகவத் நிர்ஹேதுக கிருஷி பலம் என்னத் தட்டு இல்லை என்றது ஆய்த்து-

——————————————

சூரணை -106-

ஆனால் இப்படி நிர்ஹேதுகமாக -விஷயீகரிக்கும் அளவில் ,எல்லோரையும் விஷயீகரிக்கலாய் இருக்க ,
இங்கனே இவர் ஒருவரை விஷயீகரிக்கைக்கு அடி என்ன என்னும் அபேஷையிலே-
நிரந்குச ஸ்வதந்த்ரனானவன் ஈச்வரஸ்த்வ செருக்காலே செய்யும் அவற்றுக்கு அடி ஆராயப் படாது என்னுமத்தை
லௌகிக த்ருஷ்டாந்தத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல்–
(ந்யோஜ்யம் -பர அநுயோஜ்யம்-இரண்டும் இல்லாதது அன்றோ நிரங்குச ஸ்வா தந்திரம் –
இன்னத்தை செய் செய்யாதே என்றும் எதனால் இப்படி செய்தாய் என்று கேட்க முடியாது
சத்ருஞ்சயன் -அயோத்யா தேச யானை பெயர் )

பட்டத்துக்கு உரிய
யானையும் அரசும்
செய்யுமவை
ஆராயாது-

(கழு மலத்து யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேல் சென்றதனால் –
விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது )

அதாவது
அராஜகமான தேசத்திலே ,பட்டத்துக்கு உரிய யானையைக் கண்ணைக் கட்டி விட்டால் ,
அவ் ஆனை எடுத்தவன் ஒருவன் ராஜாவாக்கும் அளவில் ,
அல்லாதார் எல்லாரும் கிடக்க ,இவனை இப்படி அது எடுக்கைக்கு அடி என் என்றும் ,

ராஜா ஆனவன் தன் செருக்காலே ஒருத்தியை தன் மகிஷியாக பரிக்ரஹிக்கும் அளவில் ,
இங்கன் ஒத்த ஸ்திரீகள் பலரும் உண்டாய் இருக்க ,இவளை இப்படிப் பரிகிரஹிக்க அடி என் என்றும்
ஆராய்வார் இல்லை என்ற படி —

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஸ்வாதந்தைர்யம் ஐஸ்வர்யம் அபர் அனுரோஜ்ய மாஹு –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–55-என்கிறபடியே
பர்யனுயோஜ்யம் அல்லாத ஐஸ்வர்ய ஸ்வாதந்தரனாய் –
(ரூப பிரகாரம் பரிமாணம் க்ருத வியவஸ்தை அனைத்துக்கும் அனைவருக்கும் செய்த நீ-
சத்தை அசத்தாக்கும் அசத்தை சத்தாகும் அபரிமித சக்தன் நீ –
உனது செல்வமே ஸ்வாதந்தர்யம் தானே)
பவ மோஷண ,யோஸ் த்வயைவ ஜந்து கிரியதே—ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்தர -88-என்கிறபடியே –
ஸூவாதீன பந்த மோஷனாய் ,( அடங்குவார் இல்லாத ஸ்வா தந்தர்யத்தால் )
வேண்டின போது வேண்டின வஸ்துவை வேண்டினபடி யாக்க வல்லனுமான சர்வேஸ்வரன் ,
அஹேதுகமாய் இருக்க ,ஆதார விஷயமாம் படி ,
பட்டத்துக்கு உரிய ஆனையும் ,அரசும் ,செய்யும் அவை போலே ,
ஸ்வாதீனமுமாய் ,ஸ்வார்தமுமாய்-( ஸ்வ பிரயோஜனமாய் ) ஆத்ம வஸ்துக்களில் ,ஓர் ஒன்றை ,
ஈஸ்வரத்துவ செருக்குக்கு அடியான ஸ்வ இச்சையாலே ,ஸ்வ விநியோக அர்ஹஹாம் படி , விஷயீகரித்தால் ,
அல்லாத ஆத்மா வஸ்துக்கள் எல்லாம் கிடக்க ,இவ் வஸ்துவை இவன் இப்படி விஷயீகரிப்பான் என் என்று
இதுக்கு அடி ஆராயப் படாது என்கை —

———————————————-

சூரணை -107-

இங்கன் சொல்லுவான் என் ?–இவர் தமக்கு ஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அன்றோ இல்லை என்றது ..
யாத்ருச்சிகாத் யஜ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியாக அங்கீகரித்தான் ஆனாலோ என்ன ,
அருளிச் செய்கிறார் –
(யதேச்சையாக நடந்தது யாதிருச்சிகம் -ப்ராசங்கிக்கம் பேச்சுவாக்கில் ஏதோ சொன்னது –
ஆனு ஷங்கிகம்-திருடன் வில்லாளி முன்பே போனவர் மூவருக்கும் அறியாமல் – காப்பாற்றப்பட்டதால் -அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள்
ஆழ்வார் சர்வஞ்ஞர் -அனைத்தும் அறிந்து பாடியவர் -இவை இருந்தால் பாடி இருப்பார் –
அனைத்தையும் திருப்புளிய மரம் அடியிலே காட்டி அருளினான் –
தெரியாமல் வந்து தலை மேல் விழும் ஸூஹ்ருதங்கள் இல்லை )

முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை ஆழி என்கிற
சாஷாத் க்ருத
ஸ்வ பர வ்ருத்தந்தார்க்கு
யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் —

(முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு-
வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு-
சூட்டும்-என்கிற -பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும்
கோவை ஆழி என்கிற ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும்
பர -பர ப்ரஹ்மத்தையும் பிறரையும் குறிக்கும்
யாத்ருச்சிகாதிகள் பற்றி பாடவில்லை -ஆகையால் தோன்றவில்லை -ஆகையால் இல்லை என்றவாறு )

முந்நீர் என்கிற ஸ்வ வ்ருத்தந்தார்க்கு
அதாவது
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே-3-2-1- -என்று தொடங்கி
சர்வேஸ்வரன்-விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி
ஸம்யுதா –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -இத்யாதிப் படியே
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணனே உபகரணமான கரண களேபரங்களை இவ் ஆத்மாவுக்கு உண்டாக்கி ,
உஜ்ஜீவிப்பைக்கையே பிரயோஜனமாக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ண ,நான் அவன் தந்த சரீரத்தைக் கொண்டு ,
அவனை ஆஸ்ரயிக்கை அன்றிக்கே -( ஆக்கையின் வழி உழல்வேன் ),அதன் வழியே ஒழிகி சம்சாரித்து போந்தேன் என்று ,
ஸ்வ வ்ருத்தாந்தையும் ,

வாழ்ந்தார் -என்கிற பர வ்ருத்தந்தார்க்கு
அதாவது
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது -4-1-6–என்று தொடங்கி ,முன்பு ஜீவித்தர்கள் வாழ்ந்த பிரகாரம் ,
மகா வர்ஷா ஜல புத் புத்தம் போலே -நசிந்து நசிந்து அதிபதித்தார்கள் என்னும் அது ஒழிய
சிருஷ்டி காலம் தொடங்கி ,இன்றளவும் வர ஜீவித்தவர்கள் ஒரு படிப் பட
ஜீவித்தே ,போந்தார்கள் என்னும் இவ் அர்த்தம் தான் இல்லை என்று –
ஐஸ்வர்யவான்களாய் முன்பு ஜீவித்தவர்கள் வ்ருத்தாந்தையும் ,

சூட்டும்
அதாவது –
சூட்டு நன் மாலைகள் –திரு விருத்தம் -21–என்று தொடங்கி ,
பரமபத வாசிகள் சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்கொண்டு , சாமாராதனம் பண்ணி நிற்கச் செய்தே
அத்தை உபேஷித்து திரு ஆய்ப் பாடியிலே வெண்ணெயை விரும்பி வந்து அவதரித்ததை சொல்லுகையாலே ,
பரம பதத்தில் உள்ளோர் வ்ருத்தாந்தையும் –

கோவை –
அதாவது
கோவை வாயாள் பொருட்டு-4-3-1- -என்று தொடங்கி –
தேச கால விப்ரக்ருஷ்டங்களான
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்வ்யவதாரங்களில் விரோதி நிரசன அபதானங்களை ,
தத் தத் தேச காலங்களில் போலே தர்சித்து ,நீ இப்படி விரோதி நிரசனம் பண்ணுகிற தசைகளில் ,
உதவி சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் ,
என்னுடைய ஹ்ருதயாதிகளே உனக்கு போக உபகரணனாம் படி என் பக்கலிலே
வ்யாமுக்தனாவதே ! என்கையாலும் ..

ஆழி –
அதாவது –
ஆழி எழ-7-4-1- -என்று தொடங்கி ,
த்ரை விக்ரமணம் ,சமுத்திர மதனம் ,பூமி யுத்தரணம் ,ஜகன் நிகரணம் ,பாரத சமர நிர்வகணம் (கை அறவு -நிர்மாணம் என்றவாறு)
ஹிரண்ய நிரசனம் ,ராவண வதம் ,பாணாகர சேதனம் ,ஜகத் ஸ்ருஷ்ட்டி ,கோவர்த்தன உத்தோரணம் ஆகிய பூர்வ சரிதங்களையும் ,
பத்துப் பத்தாக பேசுகையாலும் , ஈஸ்வர வ்ருத்தாந்தங்களையும் –

என்கிற சாஷாத்க்ருத பர வ்ருத்தந்தார்க்கு-யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் –
அதாவது
ஒரு உபாதி அற ஒரு போகியாக சாஷாத்தாக அருளிச் செய்கிற இவருக்கு அஜ்ஞாதமான ஓன்று இல்லாமையாலே ,
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரிக்கைக்கு அடியான ,யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்கள் உண்டாகில் ,
அல்லாதவற்றோ பாதி பிரகாசிக்கும் இறே என்ற படி ..

இத்தால் பிரகாசித்ததாகில் அருளிச் செய்வர் -அப்படி அருளிச் செய்யக் காணாமையாலும்,
கேவல நிர்ஹேதுக,பிரசாத பிரகாசக வசனங்கள் பலவும் அருளிச் செய்தமை காண்கையாலும் –
( வெறிதே அருள் செய்தமையை விளக்கும் அருளிச் செயல்கள் பல உண்டே )
அவையும்-யாத்ருச்சிகாதிகள்- இவர்க்கு இல்லை என்றது ஆய்த்து —

———————————————

சூரணை -108-

இப்படி அங்கீகார ஹேதுவாய் இருப்பதொரு ஸூஹ்ருதம் இல்லை யாகிலும் ,
அத்வேஷ ஆபிமுக்யங்கள் ,ஸூஹ்ருதம் அடியாக ஆனாலோ என்ன ,அருளிச் செய்கிறார் மேல் —

செய்த நன்றி தேடிக் காணாதே
கெடுத்தாய் தந்தாய்
என்ற அத்வேஷ ஆபிமுக்யங்களும்
சத் கர்மத்தால்
அல்ல –

(கெடுத்தாய் என்ற அத்வேஷமும் ( மருவித் தொழும் மனம் உடைத்தாய் இருத்தல் )-
தந்தாய் என்ற ஆபீமுக்யமும் ( தீ மனம் இல்லாதவனாக இருத்தல் )ஸத் கர்மத்தால் அல்ல என்றபடி
ஈஸ்வர ஸுஹார்த்தம் /யாதிருச்சா ஸூஹ் ருதம் /விஷ்ணு கடாக்ஷம்/ அத்வேஷம் -ஆபி முக்கியம் –
போன்ற -8 -படிக்கட்டுகள் முன்பே பார்த்தோம் / ஸூஹ்ருத தேவர் அவனுக்கும் பெயர்- வார்த்தா மாலை )

செய்த நன்றி தேடிக் காணாதே
அதாவது –
வாட்டாற்றாருக்கு என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே-10-6-8–என்று
சர்வேஸ்வரன் தம்மை விஷயீகரிக்கைக்கு உடலாக தாம் செய்த ஸூஹ்ருதம்
ஏதேனும் உண்டோ என்று ,தேடிக் காணாதே –

கெடுத்தாய் என்ற அத்வேஷமும் -தந்தாய் என்ற ஆபீமுக்யமும்-
அதாவது –
என்னை தீ மனம் கெடுத்தாய் -2-7-8–என்றும் ,
மருவித் தொழும் மனமே தந்தாய்-2-7-7- -என்று
(வரிசை கிரமும் இல்லாமல் அன்றோ அருளிச் செய்கிறார் -இவை அவன் மூலம் வந்தமையால் )
தீ மனம் போக்குகையாகிற அத்வேஷமும் ,
மருவித் தொழும் மனம் உண்டாக்குகை யாகிற ஆபிமுக்யமும் ,
இரண்டும் அவனாலே உண்டாய்த்து என்று ,தாமே நிஷ்கரிஷ்க்கையாலே ,
அத்வேஷ ஆபிமுக்யங்களும் சத் கர்மம் அடியாக வந்தது அன்று என்கை —
(ததாமி புத்தி யோகம் -தந்தாய் தேஷாம்–சதத யுக்தாயாம் ப்ரீதி பூர்வகம் மேல் விழுந்து தாதாமி புத்தி யோகம் -தந்தாய்
அனுகம்பார்த்தம் -தமஸை -நாசயாமி -கெடுத்தாய் -ஞான தீபேண பாஸ்கரா- கீதையிலும் -இவை இரண்டும் உண்டே –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் அன்றோ)

—————————————-

சூரணை -109-

ஆனால் பரம பக்திக்கு ,முகம் காட்டுமோ பாதி ,பரி கணனைக்கும் முகம் காட்டும் என்றார் இறே – இவர் தாம்-
அந்த பரிகணனை தான் இவர்க்கு உண்டால் ஆய்த்தோ என்ன -அருளி செய்கிறார் மேல் —

எண்ணிலும் வரும்
கணனைக்கு
எண்டானும்
இல்லை ..

(கணனை–எண்ணுதல் )

எண்ணிலும் வரும் கணனைக்கு—
அதாவது –
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்–1-10-2-என்றது ,
ஈஸ்வரன் குண ஆதிக்யம் சொன்ன இத்தனை போக்கி ,
அந்த பரகணனைக்கு தம்மோடு அந்வயம் இல்லாமை கண்டு ,

எண்டானும் இல்லை –
அதாவது –
நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ,ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு – கண்டாயே -1-10-5-–என்று
காரியங்கள் பலிக்கும் இடத்து ,எண்ணிலும் வரும் -என்றது தான் மிகை யாகும் படி
ஓர் எண் தானும் இன்றி இருக்கச் செய்தே ,பலித்துக் கொடு நிற்கிறபடி கண்டாய் என்று ,
தம் திரு உள்ளத்துக்கு மூதலிக்கையாலே,அதுவும் இவர்க்கு இல்லை என்கை —

——————————————————

சூரணை -110-

அது தான் வேணுமோ ? தமக்கு அனுமதி இச்சைகள் உண்டாக அருளிச் செய்தாரே ?
அவை தான் ஹேது ஆனாலோ என்ன -அதுவும் அவனாலே உண்டானது என்கிறார் —

மதியால் இசைந்தோம் என்னும்
அனுமதி இச்சைகள்
இருத்துவம் என்னாத என்னை
இசைவித்த
என் இசைவினது —

(மதியால் என்னும் அனுமதி -என்றும் -இசைந்தோம் என்னும் இச்சை -என்று கொண்டு
அனுமதி இச்சைகள் இசைவினது-இசைவு தானாக இருக்கின்ற இறைவனுடையது -என்றபடி
என் இசைவு என்று ஈஸ்வரனைச் சொல்லி -என் இசைவினது-ஈஸ்வரன் கர்த்தவ்ய பலன் என்றபடி
ஆழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் போலே அவனும் ஆழ்வார் இசைவு -திரு நாமம் அவனுக்கு சாத்துகிறார் )

மதியால் என்னும் அனுமதி –
அதாவது –
வைத்தாய் மதியால் எனது உள்ளத்து அகத்தே-8-7-10- -என்று
அனுமதி மாத்ரத்தாலே அவனை என் நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்று-
தமக்கு உளதவாகச் சொன்ன அனுமதியும்

இசைந்தோம் என்னும் இச்சை
அதாவது –
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -பெரிய திருவந்தாதி-என்று
விரோதியை போக்கும் படியாக நானும் என் நெஞ்சும் இசைந்தோம் என்றும் ,
தமக்கு உளவாகச் சொன்ன இச்சையும் –

இருத்துவம் என்னாத என்னை –
அதாவது
யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7–என்று
அவன் தம்முள்ளே புகுந்து இருப்பதாக கேட்ட அளவிலே நான் இசைந்து ,
என்னுடைய ஹிருதயத்திலே இருத்துவோம் என்று இலேன் என்ற படி ..
அவனை உள்ளே இருத்துவோம் என்று இசையாத தம்மை –

இசைவித்த என் இசைவினது –
அதாவது
இசைவித்து என்னை-5-8-9–என்கிற படி வருந்தி இசையப் பண்ணி –
மயர்வறவற என் மனத்தே மன்னினான் தன்னை என் இசைவினை-1-7-4– நான் அல்லேன் என்று அகலாத படி
என் இசைவு தானாய்ப் புகுந்தவனை என்னும் படி யத்தனித்த ஈஸ்வரனுடைய கிருஷி பலம் என்கை —
(மன்னினான் தன்னை -இரண்டாம் வெறுமையாக சொல்லி வந்து அடுத்து – -என் இசைவினை-விடுவேனோ –
பெருமாளையே இந்த சப்தத்தால் அருளிச் செய்கிறார் )

என்றது அனுமதி இச்சைகள் தமக்கு முன்னே உண்டாய் இருந்தது ஆகில் ,
இருத்துவம் என்றிலன்-என்றும் -இசைவித்து என்னை-என்று அருளிச் செய்யக் கூடாது இறே-

————————————————

சூரணை -111-

இவை ஒன்றும் இல்லை ஆகிலும் ,-மாதவன்-என்றும் -திரு மால் இரும் சோலை மலை -என்றும் ,
சொன்ன உக்தி மாத்ரங்களை பற்றாசாக கொண்டு விஷயீகரித்தானாக அருளிச் செய்கையால் ,அவை தான் உண்டோ என்ன ,
அவை பேற்றுக்கு அடியாக சொல்ல தக்கவை அன்று என்னும் இடத்தை ,மற்றும் இவற்றோடு சக படிதங்களாக தக்க வற்றையும்
கூட்டிக் கொண்டு அருளிச் செய்கிறார் மேல் —
(திரு மால் இரும் சோலை ஊரைச் சொன்னாய் /பேரைச் சொன்னாய் -மாதவன் -இவற்றுடன் சக படிதங்களாக ஸ்ரீ வசன பூஷணத்தில் உள்ளவை
அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -அவர்கள் விடாய் தீர்த்தாய் -அஃஞ்ஞான ஸூ ஹ்ருதங்களாய் சக படிதங்களாக என்றவாறு
அபுத்தி பூர்வகமாக வைதிக புத்திரர்கள் திரும்ப -விரஜை அருகில் போனாலும் இவர்கள் உள்ளே போகாதது போக இச்சை இல்லாத காரணம் )

மாதவன் மலை நீர் நிழல் என்று
ஏறிடுமது
வ்யாவ்ருத்த் யுக்தி
அன்யார்த்தம்
அ புத்தி பூர்வகம்
அ வி ஹிதம்
பல வி சத்ருசம்
பலாந்தர ஹேது —

(மாதவன் மலை-என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி–வேறுபாட்டினை அறிவிக்கும் சொற்கள் /
நீர் நிழல் என்று ஏறிடுமது அன்யார்த்தம்-வேறு ஒன்றின் பொருட்டு /
அ புத்தி பூர்வகம்-நினைவு இன்றிக்கே சொல்லுதல்
அ விஹிதம்-சாஸ்த்ரங்களால் விதிக்கப்படாதவை /
பல விசத்ருசம்-பலனுக்கு ஒத்ததாகாதவை /
பலாந்தர ஹேது –அல்ப பலன்களுக்கு ஹேது )

மாதவன் என்று
அதாவது –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து தீது அவன் கெடுக்கும் அமுதம் –திருவாய் -2-7-3–என்று
அந்தப் புர வாஸிகள் சொல்லும் -மாதவன்-என்கிற திரு நாமத்தை அஹ்ருதயமாக சொன்ன அளவில் ,
அத்தையே குவாலாக கொண்டு ,அல்லாத திரு நாமங்களுக்கும் – இதுக்கும் வாசி அறியாத என்னை விஷயீகரித்து ,
என்னுள்ளே புகுந்து (அதுக்கும் மேலே மன்னி )இருந்து , சகல கர்மங்களையும் போக்கினான் என்றும் –

மலை என்று –
அதாவது
திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன ,திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–என்று
ஓர் ஓர் தேசங்களில் ,மலைகளை சொல்லா நின்றால் ,ஒரோ விசேஷங்களை இட்டுச் சொல்லுமோ பாதி ,யாத்ருச்சிகமாக
(யஸ்ய கச்ச இதி யச்சா யதேச்சையாக)-திரு மால் இரும் சோலை மலை-என்னும் காட்டில்
தான் உகந்து அருளின திருமலையின் பேரை விரும்பி சொன்னேன் ஆகக் கொண்டு
நிரபேஷனான தான் பிராட்டி யோடு கூட வந்து என்னுள்ளே பரி பூரணமாக புகுந்தான் என்று சொல்லும் படி —

(மானத்து வண்டலுழ வோர் எழுத்தின் வடிவுற்ற சீர் மானத் துவண்ட வினையாளராயினும் மால் வளர்வி
மானத்து வண்டலமா மரங்கம் வழியா வரினும் மானத்து வண்டமர் தார் அண்டராம்பதம் வாய்க்கு மங்கே –திருவரங்கத்து மாலை )

மாதவன் என்று நம் பேரைச் சொன்னான் -என்றும்
திரு மால் இரும் சோலை மலை என்று நம் ஊரைச் சொன்னான்– என்றும்
எறிடுகிற இவை -(பெருமாள் ஆழ்வார் தலையிலே ஸூஹ்ருதத்தை ஏறிடுகிறான் என்றபடி )-
ஈஸ்வரன் உகந்த திரு நாமம் என்றும் ,
அவனுகந்து வர்த்திக்கிற திருமலை என்று சொன்னவை அல்ல –
பேருக்கும் பேருக்கும் ,மலைக்கும் மலைக்கும் வ்யாவ்ருத்தி சொன்ன மாத்ரம் —

நீர் நிழல் என்று ஏறிடுமது
அதாவது
மற்றும் இவற்றோடு சஹபடிதமாய் போருமவையான –
என் அடியார் விடாயை தீர்த்தாய் –அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் –என்று ஏறுடுகிற இவை
அன்யார்த்தம்
அதாவது
-தன் பயிர் தீயாமைக்காக நீர் உள்ள இடத்தில் நின்றும் நெடும் துலை இட்டு இறைக்கிறதும் ,
தனக்கு சூது சதுரங்கம் பொருகைக்கும் ,காற்று வரவுக்கு இருக்கையும் ஆக விரிவு உண்டாக
புறம் திண்ணை கட்டி வைக்கிறதும் ஒழிய ,-பாகவதர்கள் விடாயைத் தீர்க்கைக்கும் ,
அவர்களுக்கு ஒதுங்க நிழல் ஆகைக்கும் செய்கிறது அல்லாமையாலே அன்யார்த்தம்-

அபுத்தி பூர்வகம்
அதாவது
இவை தான் இத்தனையும் இத் தலையில் நினைவின்றி இருக்க ,
அவன் அடி தேறி இடுகிற அவை ஆகையாலே ,புத்தி பூர்வகமும் அல்ல.

அவிஹிதம்
அதாவது
இவை தான் பல ஹேதுதயா சாஸ்திர விஹிதங்களும் அன்று …

பல வித்ருசம்
அதாவது
பகவத் விஷயமாகிற மகா பலத்துக்கு இவை சத்ருசம் அல்ல –

பலாந்தர ஹேது
அதாவது
இவை உண்டாய்த்தாகில் இவ் அருகே சில அல்ப பிரயோஜனங்களுக்கு ,
ஹேதுவாம் இத்தனை என்கை –ஆகையால் இவை பகவத் அங்கீஹார ஹேதுவாக மாட்டாது என்று கருத்து —

கீழே -யாத்ருச்சிகாதிகள் உண்டாகில் தோன்றும் -சூரணை -107–என்றதுவும்
இங்கே மாதவன்-இத்யாதியாலே -அவன் ஏறிடத் தக்கவை சில உண்டாக ,இவர் தம்முடைய உக்தியாலே ,
கண்டு எடுத்து கழிக்கிற இதுவும் தன்னில் சேரும்படி எங்கனே என்னில் ,
யாத்ருச்சிகாதிகள் தான் பலவும் உண்டாகையாலே ,
அத்யுத்கடங்கலாய் (உயர்ந்தவையாய் ), மகா பலத்துக்கு உறுப்பாய் , வந்து விழும் அவையும் ,
ஆபாசங்களாய் இருக்கும் அவையும் உண்டாகையாலே ,
அத்யுத்கடங்கலாய் , அவனுக்கு ஹேதுவாகக் கொள்ளலாம் படி இருக்கும் அவற்றை கீழே சொல்லிற்றாகி ,
ஆபாசங்களாய் ,அவன் ஆரோபித்து கொள்ளத் தக்கவற்றை இங்கே சொல்லிற்று என்று
விபஜித்து கொள்ளும் அளவில் விரோதம் இல்லை–

——————————————-

சூரணை -112-

ஆனால் இவரை இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்க வேண்டுவான் என்
என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் மேல்-

இவன் நடுவே அடியான் என்று
ஓலைப் படா பிரமாணம்
பஷ பாதி ஸாஷி
வன் களவில் அனுபவமாக
இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள
காப்பார் அற்று
விதி சூழ்ந்தது-

(இவன் -சர்வேஸ்வரன் / ஓலைப் படா பிரமாணம்-வேதம்
இவன் நடுவே ( வந்து )அடியான் என்று-காட்டி-
நாம் ஓலைப் படா பிரமாணம்-என்று- சொல்ல
அவன் ஸாஷி-என்று-காட்டி-
நாம் பஷ பாதி -என்று சொல்ல
இப்படி காட்டியதைக் கூட்டி வியாக்யானம்
வன் களவில் அனுபவமாக- இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள
காப்பார் அற்று விதி சூழ்ந்தது–பகவத் கிருபாவையே விதி என்கிறார்

அதாவது
இப்படி ஒன்றை ஆரோபித்தாகிலும் ,விஷயீகரிக்கும் இவன் ,
நடுவே –
அதாவது –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -1-7-5–என்கிற படியே ,
நாதன் ஆகையால் நிர்ஹேதுகமாக வந்து –
அடியான் என்று –
அதாவது –
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10 –என்றும்
த்வம் மே -என்கிறபடியே
இவன் என் அடியான் என்று பிடிக்க ,
அஹம் மே -என்கிற படி -அதுக்கு இவர் இசையாமல் ,
என்னை நீ உன் அடியான் என்றது எத்தாலே -என்ன –
(த்வம் மே அஹம் மே குதஸ் தத் ததபிகுதஸ் இதம் வேத மூல பிரமாணாத் ஏதச்சா நாதி ஸித்தாத்
அநு பாவ விபவாத் ஸோபி சாக்ரோச ஏவ ஸ்யாத் க்வாக்ரோசஸ் கஸ்ய கீதா திஷு மம விவிதஸ் கோத்ர
ஸாஷீ ஸூதீ அந்த த்வத் பக்ஷபாதீ ச இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்த வத்வம் –ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –)
இதம் வேத மூல பிரமாணாத் -என்கிறபடியே இவரை இசைவிக்கைக்காக

ஓலைப் படா பிரமாணம்-
அதாவது-
பதிம் விச்வச்ய–புருஷ ஸூக்தம் -என்றும்
பிராதந ஷேத்ரஜ்ஞ பதி –ஸ்வேதா உபநிஷத் -என்றும்
ஷராத்மானாவ் வீஷதே தேவ ஏக–ஸ்வேதா உபநிஷத் -என்றும் இத்யாதிகளாலே
சேதன அசேதனங்கள் அடைய தனக்கு சேஷம் என்னும் இடத்தை
பிரதிபாதிக்கிற வேதத்தை பிரமாணமாக காட்ட ,
அது எழுதா மறை ஆகையாலே , அது ஓலைப் படா பிரமாணம் என்று இவர் அத்தை அந்யதாகரித்து ,
தம்முடைய அநாத்ய அனுபவத்தை பிரபலமாக கொண்டு நிற்கையாலே-

பஷ பாதி ஸாஷி-
அதாவது
ஆட்சியிலும் பிரபலமான துடர்ச்சியை முன்னிட்ட அளவிலே –
அதுக்கும் ஸாஷி யார் என்று கேட்டவாறே -ஸூதீச்யாத்-என்கிறபடி ,
தத்வ தர்சிகளான ஞானிகளைக் காட்ட – த்வத் பஷ பாதி ச -என்கிறபடியே
அவர்கள் உனக்கு பஷ பாதிகள் என்று அதுக்கும் இவர் கண் அழிவு சொல்லுகையாலே –

வன் களவில் அனுபவமாக
அதாவது
வன் கள்வனேன் –5-1-4-என்று
விஷயீகார அநந்தரம்-அநாதி காலம் தாம் அஹம் மம -என்று இருந்து போன அனுபவம் ,
ஆத்மா அபஹாரம் ஆகிற வலிய களவாலே வந்தது என்று இவர் அனுதபிக்கும் படி –
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் எழ உலகும் கொண்ட -9-5-6–என்று
இந்திர ஞாலங்கள் போலே ,திருஷ்ட்டி சித்த அபகாரிகளான-வடிவழகையும் ,சீலத்தையும் ,
சேஷ்டிதையையும் காட்டி,வாய் மாளப் பண்ணி ,
ஆசூர பிரக்ருதியான மகா பலி-என்னது என்று இருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டால் போலே
இவரையும் வடிவழகையும் சீலாதிகளையும் காட்டி வாய் மாளப் பண்ணி
இவர்-என்னது -என்று இருந்த ஆத்மாவை தன்னதாக்கிக் கொள்ளும் படியாக –

காப்பார் அற்று –
அதாவது
விதி வாய்க்கின்று காப்பார் யார்–5-1-1 -என்று
கிருபா ஜனிகையான இவள் காக்கவோ ?
கிருபா பரதந்த்ரனான நீ காக்கவோ ?
கிருபா பாத்ரமான நான் காக்கவோ -என்னும் படி
ஒருவரால் நிவாகரிக்க ஒண்ணாத படி பெருகுவதாய் ,
ஸ்வதந்த்ரனான தன்னாலும் தப்ப ஒண்ணாத படி இருக்கையாலே ,
விதி சப்த வாச்யையாய் இருந்துள்ள கிருபை –

விதி சூழ்ந்தது-
அதாவது-
எனைத்தோர் பிறப்பும் —-எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய –
அம்மான் திரிவிக்ரமனை –விதி சூழ்ந்தது -2-7-6–என்று
அநேக ஜன்மங்கள் நான் பிறந்த பிறவிக்கு எதிராகப் பிறந்து கொடு வந்து ,
எனக்கு ஒருவனுக்கே தன் பிரசாதங்களை பண்ணும் படியாக –
சர்வேஸ்வரனாய் வைத்து த்ரிவிக்ர அபதான முகத்தாலே
எல்லார் தலையிலும் திரு அடிகளை வைத்த ஸூசீலனை ,
கிருபை சூழ்ந்தது என்னும் படி இவரை அங்கீகரித்து அல்லது
நிற்க ஒண்ணாது வளைத்துக் கொண்டது என்கை –

காட்டிக் கொள்ள -என்கிற இடத்தில்-காட்டி-என்கிற இது –
பிரமாணம் காட்டிக் கொள்ள
ஸாஷி காட்டிக் கொள்ள
இந்திர ஞாலங்கள் காட்டிக் கொள்ள – என்று
சர்வாந்தர அன்விதமாய் கிடக்கிறது-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading