கண்ணி நுண் சிறு தாம்பு- கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ணப் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1-
ஆழ்வார் உடைய இனிமையை சொல்கிறார்
பிராப்யம் -கடை நிலை -ஆசார்யர்
இங்கு பிரதம நிலை சொல்லுவது எதனால் -அப்பனில் இழிவது
மூன்று வித சமாதானம்
ஆழ்வார் உடைய போக்யதை காட்ட
ஆழ்வார் முக மலர்திக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
பிறந்தவாறும் வளர்ந்தவாரும்
பையவே -நெய் உண் வார்த்தையுள்
ஆய்ச்சியாகிய அன்னையால் -அழு கூத்த அப்பன்
ஆழ்வார் ஆழம் கால் பட்ட இடம் -கட்டு உண்ணப் பட்ட சரித்ரம்
சர்வம் பிரிய பவத் -வஸ்துகள் அபிமதம் நமக்கு என்பதால் வைத்து கொள்கிறோம்
சாதனம்- பிராபகம் உபாயம் வழி
சாத்தியம் -உபேயம் பிராப்யம் பலம் -அபிமதமாய் இருக்க வழி
சுவர்க்கம் போக ஜோதிஷ்ட ஹோமம் போல்
அபிமதம் இரண்டு வகை உண்டே
பகவத் விஷயம் அனைவருக்கும் பேர் இன்பம்-வீவில் இன்பம் மிகை இல்லை -மேவியே அவனை பெற்று ஆனந்தம் –
திரு வாய் மொழி பாடி இசை மாலை -அவனை உகப்பிக்க –
அவன் இயல்பான ஆனந்தம் -தான் தோன்றி ஆழ்வார் இன்பம் காரணம் உண்டே -அடி உண்டு
தானே சாதனமாய் இருப்பன் அவனை அடைய
கண்ணி தாம்பு நுண் தாம்பு சிறு தாம்பு
தாம்பை கொண்டாடுகிறார்
ஞானம் பக்தி வைராக்கியம் மூன்று விசெஷணம்
ஸ்வாபதேச அர்த்தம்
திரு மேனிக்கு உறுத்தும் படி பல முடிச்சுகளாய் இருக்கும்
பிரதமத்தில் ருசி சங்கம் -காமம் அனுராகம் சிநேகம் பக்தி -பர பக்தி பர ஞானம் பரம பக்தி
இருள் துயக்கு மயக்கு மறுப்பு அற்று -மதி நலம்
ஞான உதயம் இருள் போக்க
சம்சயம் விபரியம்
மலர் மிசை எழுகிற ஞானம் காதல் அன்பு வேட்கை அவா -கலசி கலசி வரும் நான்கும் ஆழ்வாருக்கு
சங்க காம -பரம பக்தி தசை ஆக்கும்
சேர -மனக் கண் முன்னாடி பர பக்தி -சந்தோஷம்-சம்ச்லேஷம்
கண்ணை திறந்து பார்த்தல் தெரிய வில்லை விச்லேஷம்-பர பக்தி
99 திரு வாய் மொழியில்-பரம பதம் பார்கிறார் பர ஞானம் தசை
பரம பக்தி -இனிமேல் இங்கு இருக்க முடியாமல் அடி கொதிப்பு
ஆர்த்திஹரத்வம்
நிலைகள் பல உண்டே —

அசைக்க முடியாத பக்தி-வேண்டும் அநந்ய பக்திக்கு கட்டு படுவான் -பக்தி பவ்யன் அவன்
பக்தி கிராக்யோ கேசவ
கண்ணி-பக்தி நிலைகளை காட்டும் –
நுண் தாம்பு-திரு மேனியில் அழுந்தும் படி இருக்கும்-ஞானம் நுண்ணியதாக இருக்கும்
பக்தி யே ஞானம் -ஞான விசேஷம் பக்தி
ஞானத்தால் மோஷம் சங்கரர் மாம் இந்த ஞான விசேஷத்தால்
பக்த்யாலே உள்ள படி அறியலாம்
சிறு தாம்பு-பெரிய கயறு வேற பயன் உண்டே
வேறு ஒன்றுக்கும் இன்றி இவனுக்கே –
எழில் கொள் தாம்பு கொண்டு அடிக்கும் எள்கிய நிலை
அழகனை அடிப்பதால்  அழகான தம்பு
கண்ணனுக்கே விஷம் கொண்டு வந்த பூதனை மோஷம்
பேய்ச்சி விட நஞ்ச முலை-பெரிய விஷம்-விட நஞ்சு
பேய்ச்சி உயரை விடும் படி -நஞ்சு தீட்டிய முலை
பொத்த உரலும் அவனுக்கே என்று –
அனந்யார்கமாய் இருக்கும் ஒன்றுக்கே இவன் கட்டு படுவது
நீள பண்ண போகாது– உரலை இளைக்க பண்ண  போகாது –
கட்டு உண்ண- -வயிற்றை இளைக்க சொல்லி
சீற்றம் கொண்ட அழு கூத்த அப்பன்
கட்டு உண்ண பண்ணிய
 -பக்தி அவனே அமைத்து தர வேண்டுமே
நாயமாத்மா இத்யாதி -சுருக்கி கொண்டான்-
இனி இவன் நெஞ்சில் அந்ய பக்தி போக்குவான் பரகத ச்வீகாரம்
அவன் கடாஷமே
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தன்னை கட்டி
பத்தி-கயிர் திரு மந்த்ரமும் துவயம்
பிராப்யமும் பிராபகமும் சொல்வதாலும் துவயம்
அர்தானுசந்தானம் முக்கியம்
அர்த்தம் அறிவதற்கு முன்னால் பிறந்தார் என்று நினைப்பார் இல்லை அன்று நான் பிறந்திலேன்
பிறந்த பின் மறந்திலேன்
எட்டும் இரண்டும் அறியாதார்க்கு கட்ட முடியாது
நஞ்சீயர் காட்டும் அர்த்தம்
ஆஸ்ரிதர் கையால் கட்டு படா விடில் சீலத்துக்கு போதாது
சௌசீல்யம் விளங்கும் மற்றவரை கட்டி பிரபாவம் போகாது வீர குணம்-
ராஜாவானால் எதிரிகளை கட்டுவது புருஷத்வம்
மனைவியால் கட்டு பட பூ மாலையால்-பும்ச்த்வம் காட்டுவன்
மல்லிகை மா மாலை கொண்டு அடர்ததுவும் ஓர் அடையாளம்
 சீமாலி சரித்தரமும் இதுவும் உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம் சுவர் வழி எழுதி கொண்டேன்
ஆழ்வார்களுக்கு தான் அனைத்தையும் காட்டினான்-
பெரிய வாச்சான் பிள்ளை-வியாக்யானம்
ஆழ்வார் மயர்வற மதி நலம் பெற்று உயர்வற உயர் நலம் -குணம் பேசினார்
பொன் உருவாய் மணி உருவில்-திரு மேனி நீல மணி போல்
குணத்தை காட்டி ஆழ்வாரை கொண்டான்
அழகை காட்டி கலியனை மீட்டிகொண்டான்
ஆழ்வார் குணத்தில் ஈடு பட்டார்
இவர் முதல் அடியில் பற்றியதால் அவன் திரு மேனியில் ச்பர்சத்தால் வந்த கயிறு
கண்ணன் அசாறு-வெளியதாக -கொண்டு தாம்பை கொண்டாடுகிறார்
இவன் தன்னை கட்டுவது -பெண்ணை களவு கண்டான் வெண்ணெய் களவு கண்டான் –
சந்தோஷமாக அடி வாங்கி கொண்டான்
திரு மால் இரும் சோலை யால் சாமான்யர் இரு வகை கைங்கர்யம்-
அடித்து -தப்பாக -சாமான்யன் என்று நினைத்து -மேலும் அடிக்க சொன்னான்
இன்னும் கட்ட சொன்னான்
அழுகையும் தொழுகையும் -தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்
தொழ தொடங்குவர்
குழந்தை அழுதே வெல்லும் நாம் தொழுதே வெல்வோம்
அஞ்சலியே சாதனம் காட்ட தொழு தானாம்
கட்டி வைத்து மற்ற கார்யம்-செய்தாள்– ஆஸ்தானம் இருக்க வேண்டுமே
திரு அரங்கத்தில் ஆஸ்தானம் எழுந்து இருந்தால் தானே
புறப்பாடு கோஷ்ட்டி தான் முக்கியம்
சொல்லாலே விளங்கு இது வைத்தாள்
சிற்றவை பணியால் முடி துறந்தானே
-ஒரு சொல்லால்-பர தந்த்ரன் ஆனான் யசோதைக்கு
வாய் வாய்-அழவும் முடியாமலும்-விக்கி விக்கி-
கட்டினவள் அவுக்க வேண்டும்-கட்டினவன் நானே தான் முடியும் சொன்னானே கீதையில்
குடும்பினி-அ காரத்தை கட்டி ஆ வை கட்ட போனாள்
பெரு மாயன் -இவர் உடைய எத்திறம் இருக்கிற படி
பரமேஷ்ட்டி பஞ்ச சக்தி உபநிஷத் மயம்-மணி உருவில் பூதம் ஐந்தாய்- நித்ய விபூதி -அப்ராக்ருதம்
பூதனை விஷம் கொல்ல வில்லை- கண்ணன் அப்ராக்ருதம் அத்வைதி பொய் என்பர்
ஈஸ்வர தன்மை விடாமல் வந்து பிறக்கிறான்
நம் பிறவி போல் அவன் அவதாரம் சத்யம்

சோக போகம் காட்டி கொண்டான்
அவனுக்கு பசி-வெண்ணெயில் ஆசை
அத்தை இடுவர் இல்லாத பொழுது களவு
வாயது கையாக அகப்பட்டு படைக்க பட்டவரால் கட்டு உண்டு
சம்சாரபந்தம் அறுக்கும் இந்த சரித்ரம் நினைத்தால்
பால் உண்டான்  நினைத்தால் நாம் பால் உண்ண வேண்டாம்
வேளுக்கை ஓர் இருக்கை-போனான் வந்தான் நினைத்தால் போயும் வந்தும் இன்றி பெரு வீடு அடைவோம்-தேசிகன்
ஜன்ம கர்ம மே திவ்யம்
விட்டு கொள்ள  மாட்டாமல் இருக்கும் மாயம்-இவர் உடைய எத்திறம் நீர்மை தரை காண ஒண்ணாது மேன்மை கண்டாலும்
அவன் நினைக்க கொன்னாத  ஆஸ்ரிய சேஷ்டிதம் அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும்
உரலோடு கட்டி வைத்தவரே அழ
அந் நோக்கும்–கோபிகள் பார்க்க -இள ஆய்ச்சியார் கண்ணினுள் விடமே செய்து-விஷமம் செய்து
அனைவரும் வர களவான சாதனம் அனுஷ்டித்து
கள்ளனை காண ஒத்த பருவத்தில் பெண்கள் எல்லாரும் திரள
அவர்கள் முகத்தில் கபட நோக்கும்
 இசையாதவரை இசையும் படி பார்த்தும்
 இசைந்தாரை அறவிலை செய்தும்
 சிலர் கோபத்தை மாற்றியும் –
அமலங்களாக விளிக்கும்
கடாஷிகிறான் இப்படி பல வகையாலும்
தொழுகையும் -தாய் குழந்தை பற்றி அறிவாள் –
ஆய்ப்பாடி செய்த லீலை சொல்லி-அஞ்சலி செய்து -கோபம் போக்க அஞ்சலியே -ஷிப்ரம் தேவ பிரசாதம்-
தொங்க போட்டு கொண்டு இருக்கிற கை தொழுதால் போதும்
ராம லஷ்மணர் மின்னலுக்கும் இடிக்கும் இறை ஆக்கி சுக்ரீவன் -தாரை-இளைய பெருமாள்-
திரு அடி அஞ்சலி செய்ய சொன்னார் –
பெரிய பிராட்டியார் அஞ்சலி-செய்து கொண்ட போவானுக்கு அனைத்தையும் கொடுத்து ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் -வெட்கி இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே -அஞ்சலி பரம சாதனம்
இவை கண்ட யசோதை தொல்லை இன்ப இறுதி கண்டாலே பேர் இன்பத்தை சிற்று இன்பமாக
நித்யர் முக்தர் ஞானம்  சக்தி கொண்டும்
நாம் சௌந்தர்யம் கொண்டும்
இவள் சௌசீல்யம் கொண்டு அனுபவித்தாள்
என் அப்பனில்- அவர் அப்பனில்-
ஆழ்வார் உகப்பார் என்பதால்
ஆதி நாதர் காணாமல் கிடு கிடு என்று ஆழ்வாரைகாண போவாராம் -திரு உரு காண்பன் நான்-
இவருடைய குண கிருத தாஸ்யம்
இவரையும் உட்பட தோர்ப்பிக்க வல்ல மாயம்
சரம பர்வத நிஷ்டர் கூட  அனுபவிக்கும் படி பண்ணும் மயம்
சொரூப கிருத தாஸ்யம் சிறந்தது -சேஷத்வம்- குணம் கண்டு அனுபவிப்பது இங்கு
பம்பா சரஸ் -திரு அடி பார்க்க-லஷ்மணன்-அஹம் அஸ்ய-அவராப் பிராப்ய -தோள் தீண்டி -பெருமாள் ஒரு படி ப்ராதாநனோ தாசன்-என்கிறார் குணத்துக்கு தோற்று வந்தேன் -அ காரம் காரணத்வம் ரஷகத்வம் ஸ்ரீ சம்பந்தம் சேஷி பூதன் -இயல்பாகவே அடிமை-உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் துயர் அடி தொழுது எழு மனனே-வெள்ளம் மரம் அடித்து போக நாணல் புல் மணலில் இருந்தும் வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்குமே குணம் பார்த்து தலை சாய்ந்து தொழுது எல்லாம் அரச மரம் ஆல மரம் நிமிர்ந்து நின்று அழிந்து போயின -குணத்துக்கு தோற்று அடிமை
 -கங்கா கூலம்-கரை-
இவரையும் உட் பட தோற்று விக்கும் சேஷ்டிதம் இது –
ஆழ்வார் இதை நினைந்து மோகித்தார்
இள நெஞ்சு இல்லை மீண்டார் வீர்யம் இளைய நெஞ்சத்து ஆழ்வார் இடம் காட்டினான்
நண்ணி- விட்டு
அவரை விட்டு விட்டு ஆழ்வார் இடம் வந்தார்
நஞ்சீயர் படு குழி வார்த்தை இதற்க்கு-படு குழி தப்பினார் படுக்க பண்ணுமே
சப்தாதி விஷயங்களில் ஈடு பட்டு பெருமாளை சேவிக்காமல் இருக்க
பிள்ளை உறங்கா வல்லி தாசர்-சரித்ரம்
 அல்பத்வம் அஸ்திரத்வம்-இவை-
தம்பிரான் படி வியாக்யானம்
23 விஷயங்களில் வாசி
 அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதமே ஆழ்வார்
பகவத் விஷயத்தில் குற்றம் இல்லையே -அதை விட்டு விட்டு போவது துர் லபம்
பகவத் விஷய போக்யதையில் இன்று மீட்டு – உயிரும் உடலும் உடனே உண்டான்-
குருங்குடி காட்டில் குருகூர் நம்பி வியாவிகிறது
ஞான சக்தி களால் பூர்த்தி அவனுக்கு ஜகத்தை தனக்கு ஆக்கும் படி அவன் குணம்
ஞான பக்தி வைரக்யங்களால்  பூர்ணர் இவர் -அவனை தனக்காக்கும் படி இவர் குணம்
ஆழ்வாருக்கு போக்யதை உண்டு காட்டினாரே இத்தால்
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டாலும் -நல்கி என்னை விடான்
மல்கும் கண் பனி செல்வ நாரணன் சொல் கேட்டலும் ஆழ்வார் விட்டாலும் அவன் விடான்
பகவத் விஷயத்தை பற்றினால் அதன் எல்லை நிலம் அடியார் வரை வர வேண்டும்
அடியாரை பற்றா விட்டால் தேவதாந்தர பஜனம் போல் ஆகும் அடியார்கள் தானே சொல்லி திருத்துவார்கள்
ஆழ்வாரை பற்றினால் வேறு எல்லை இல்லையே
ஆசார்யர்-நம்பி -பெரிய நம்பி போல பலர்
நம்பியை-என் சொல்லி நன் மறப்பனோ
என்றக்கால் -நண்ணி-ஆழ்வார் பக்கலில் நெஞ்சை வைத்து
தென் குருகூர் நம்பி திரு நாமம் சொன்னால்
அண்ணிக்கும்-தித்திக்கும்
மற்ற தித்திப்பு கொஞ்சம் நேரம் நிற்கும்
 -நெஞ்சும் -நினைத்த நெஞ்சும் நாக்கும் -தித்தித்து
ஊறும் வர்த்த மானம்–என்றக்கால் அமுதூரும்
சாரச்யம் சதா காலம்-ஒரு தரம் சொன்னதற்கு எப் பொழுதும் தித்திக்க
-இனி பகவத் விஷயத்தை நினைக்க நெஞ்சும் நாக்கும் இல்லை
எங்களுக்கு இல்லை -என் நாவுக்கே
உங்களுக்கு பகவத் விஷயத்திலே இல்லையே-
அடியே பிடித்து ஆழ்வார் உடன்
என் நாவு கரணியான என்னோடு கரணங்களும் -நெஞ்சும் நாக்கும் -தித்திக்கும் வாசி இன்றி
என் நெஞ்சினால் நோக்கி  காணீர் என்னை முனியாதே ஆழ்வார் சொல்கிறார்
நம்பி அழகு படுத்தும் படு-அறிவீர்
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வீர் உலகத்தீரே -தொண்டர் அடி  பொடி ஆழ்வார்
எனக்கு அங்கு அது போல் என் நாவுக்கு இங்கு
திடமாக சேவிக்க நீங்கள் வைத்து இருக்கும் மருந்து கொடும்
அதவா நஞ்சீயர்
எதையோ ரசித்து -எதை ரசிக்கிறது இங்கு
மின் உருவாய்-தளிர் புரையும் திரு அடி என் தலை யாரோ கால் என் தலையில் இருக்க வகுத்த திரு அடி இங்கு
அமரர் சென்னி பூ  என் தலை மேலே –
ஆச்சார்யர் வகுத்த திரு நாமம் சொல்ல என் நா இனிக்கிறது-
————————————————————————————————————————————————————-
நம் ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகிய பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading