ஸ்ரீ திரு விருத்தம் -17-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

இருள்- யமகம் -வேறே வேறே பொருள் இருந்தால் தான்
இங்கு ஒரே அர்த்தம்
தலைவி பாசுரம்
தேர் வழி தூரல்–தேர் வழி நோக்கி -கடலைப் பார்த்துச் சொல்வது
அன்பர்-பாகவதர் -தலைமகன்
இருளிலே -இரவில் பிரிந்தான் – சக்கரச் சுவடு பார்த்து தரித்து இருக்கப் பார்த்தேன்
நெய்தல் நிலம்
கடல் அலை அழிக்கப் பார்க்க
நில் என்று சரணம் புகுகிறாள் -இதுவே பாசுரத்தில் முக்கிய பகுதி –
பெருமாள் நித்ய வாசம் செய்யும் கடல் -சயனம் அழகைச் சொல்லி -இவை பாசுர விரிவு
கண்ணி நுண் சிறுத்தாம்பு –அப்பனில் போல்

நீலக்கடல் கடைந்தாய்
தண்டகாரண்யம் ரிஷிகள் பெருமாள் வரவை அனுமானித்தது போல்
இவனது நிழல் வெளுத்த கடலை நீலமாக்குமே

உறையும் -வர்த்தமானம்
ஸம்ஸ்லேஷம் நித்யம் –
பிரிவே அறியாமல் உள்ளாய்
ஒரே கார்யம் செய்து கொண்டே அலுப்பு இல்லாமல் நிரதிசய ஆனந்தம் உண்டே
அலை ஓயாமல் இருக்க-அவன் உறைவதுதே ஹேது
பரம சேதனான எனக்கு விஸ்லேஷம் எப்படி இருக்கும்

பிரிந்த பெருமாள் சரண் புகுந்தது போல்
நடுவில் வாழியரோ சொல்லி -இயம் ஸீதா மம சுத -பத்ரம் தே -போல்
அவர் சரணாகதி பலிக்க வில்லை
அது போல் ஆகக் கூடாதே )

(அணைவது அரவணை மேல் -2-8-இதன் விவரணம்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-)

அவதாரிகை
சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே  முகம் தெரியாமே போக என்று நினைத்து ,
இருளிலே நாயகன் தேரிலே ஏறிப் போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனை போலே தேர் காலை மறைத்து போகாதே
தெரியும் படி போன தேர் காலை பார்த்துத் தரித்து இருக்க ,
சமுத்ரமானது ,தன் திரையாலே  வந்தது இத்தை அழிக்க புக ,
கடலை நோக்கி சரணம் புகுகிறாள் ..

மற்றும் ஆற்றமை மிக்கார் -பிரதிச்சையே மகோததே-என்று
கடலை சரணம் புகும் இத்தனை இறே இவர் உடைய அளவு —
பெருமாள் போலே இவரும் கடலை  சரண் அடைகிறார்

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர்  கால்வது  போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பாசுரம் -17-இருள் விரிந்தால் அன்ன -தலைவி கடலை நோக்கித் தேர்க்கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –
அணைவது அரவணை மேல் -2-8-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப் பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய
தேர் போன வழியை அழியா தொழிவையாக

இருள் விரிந்தால் அன்ன —
இருள் விரிந்தால் போலே இருக்கிற கடலை பார்க்கிற படி —

நீருக்கு வெளுப்பு ஸ்வாபமாய் இருக்க ,
கறுப்பை சொல்லுவான் என் என்னில்–
நீர் திரட்சியாலே –பறித் தள்ளினால் வெளுப்பே யாய் இருக்கும் —

கறுப்பை சிவப்பும் வெகுளிப்பு–
வெகுளிப்பாகிறது–சீற்றம் —
கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது ஆகவுமாம் —

(இருள் விரிந்த மா நீருக்கும் -செறிந்த நீர்–கடலுக்கும் )

மா நீர்த்  திரை கொண்டு –
சம்ருத்தமான நீர் திரைகள் ஆகிய கைகளால் ,தேர் காலை அழித்து கொண்டு வருகிற படி —

வாழியரோ–
வருகிற கடலை நோக்கி -வாழியரோ-என்று சரணம் புகுகிறாள் —
நலிய வந்தாரை வாழ்த்துமா போலே-

வாழியரோ–
திரை கடல் ஆகையாலே கார்யம் (தூரல் -கார்யம் )செல்லும் அளவும் கேளாதே
அழிக்கும் படியை கண்டு ,-
நடுவே சரணம் புக்காள்–

இவள் சரணம் புக்க படியாலே  –
நீ என் செய்தாய் என்று கடல் கேட்க –

கெடுவாய் பட்டது கேட்டு இலையோ -என்கிறாள்–

என் என்ன —

அன்பர் இருள் பிரிந்தார் காண்–
பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும்
அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு தரித்து இருத்தல் ஆகாது —

அவர் தாமும் பகல் போகில்-
இவளைக் கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார் —

எங்கேனும் போனாரும் சேரும் காலத்திலேயே போனார் —
பதார்த்த தரசனங்களாலே ஆறி இருக்க ஒண்ணாத காலத்திலேயே போனார் –

நான் செய்ய வேண்டுவது என்
என்று கேட்க
(விஸ்லேஷ வாசனையே இல்லையே இதுக்கு )

தேர் வழி தூரல்–
உள்ளது எல்லா வற்றையும்  கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரை போலே ,
அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் —
இத்தை அழியாதே கொள் என்கிறாள்
(அவனுக்கு நியாமகமான கடல் தனக்கும் நியாமகம் என்று சொல்கிறாள் )

அரவணை மேல் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் என்னுமா போலே —
நீர் உறுத்தாத படி  திருவனந்த  ஆழ்வானை  படுக்கையாக கொண்டு

இருள் நீல இத்யாதி —
இருள் விரித்தால் போலே நீலச் சுடரை புறப்பட விடா நின்று உள்ள ஆதித்யனை போலே —
இதி அபூதோ  உவமை –
பூதமான உவமை போதாது ஆகையாலே அபூத உவமை ஒன்றைக் கற்பிக்கிறது

இருள் விரி சோதி இத்யாதி —
இருள் விரிந்தால் போலே கறுத்த திரு மேனியில் ,தேஜஸ் உடைய சர்வேஸ்வரன்
நித்ய வாசம் பண்ணுகிற-

உறையும் எறி கடலே  —
வெண்ணெய் கட்டிப் போலே இருக்கிற சந்த்ரனைக் கண்டால் போலே அன்றிக்கே
சர்வேஸ்வரனுடைய நித்யவாஸம் பண்ணுகிற ஹர்ஷம்
மாலும் கரும் கடலே நோக்கும்

எறி கடலே
சம்ஸ்லேஷம் அறிந்தாய்  அத்தனை போக்கி  —
விஸ்லேஷம் புதியது  உண்டிலை காண் —
அவனை கிட்டினார்-பரசம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது —
உன்னை குற்றம் கொள்ளுகிறது என் ?
உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ?
தம்மையே ஒக்க அருள் செய்வாரே (பெரிய திருவந்தாதி )

இருள் விரி சோதி–பெருமாள்–அரவணை மேல்—-உறையும் எறி கடலே–
இருள் விரிந்தால் அன்ன–மா நீர்த்  திரை கொண்டு–
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்–வாழியரோ-
என்று அந்வயம்

இத்தால்
பகவத் விஸ்லேஷம் தீர காண்கிற பதார்த்தங்கள்  அடங்கலும் பாதகமாய் தோற்றுகிற படி-

தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading