திரு ஆடிப் பூரம்– -எமக்காக அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் –திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள் வாழியே –
14 பாசுரங்கள்-திரு வேம்கடம் உடையானுக்கு அருளி இருக்கிறாள் –
திரு துழாய் -புஷ்ப கைங்கர்யம்-கேசவ பிரிய=துளசி –மாநிடவர்க்கு என்று பேசு படில் வாழ கில்லேன்-
கண்ணனுக்கே ஆம் அது காமம்–மல்லி நாடு ஆண்ட மட மயில்–
மெல் இயலாள் வேயர் பயந்த விளக்கு ஆயர் குல விளக்கு அடைந்தாள்–
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழ –பிராட்டி திருவடி காட்டி- திரு இட எந்தை –
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே–செல்வன் சொல்லுக்கு அஞ்சான் -ஈன சொல் ஆயினும் ஆக –
யேனதுருவாய் இடந்த பிரான் –திரு பாவை- ராம கிருஷ்ண திரு விக்ரமன் -விபவம் உண்டு-திவ்ய தேசம் இல்லை-
பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் படி–கிள்ளி களைந்தான்–நரசிம்கன் என்று -ரசிகர் சொல்வார்கள்–
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2-
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் !
தெண்ணீர் பாய் வேம்கடத்து என் திரு மலும் போந்தானே ?
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே 8-1
மா முத்த நிதி சொரியும் மாமுகில்காள்! வேம்கடத்து
சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே !
காமத் தீ உள் புகுந்து கதுவ பட்டு இடை கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்கை நான் இருப்பேனே–8-2
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடு அழிய போயின வால்
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் ! வேம்கடத்து
தன்னாக திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள் தோறும்
பொன்னாகம் புல்குதற்க்கு என் புரிவுடைமை செப்புமினே–8-4
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்கள் வேம்கடத்து
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழி வீர்காள் !
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -8-5
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில் காள் மாவலியை
நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள்
உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்! வேம்கடத்து
செம் கண் மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மெல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே –8-7
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள்! வேம்கடத்து
போர் காலத்து எழுந்து அருளி பொருத வனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே–8-8
கொடியையே மாலையாக கட்டினாரே-மாலுக்கு -நாயகன்-அழகிய மணவாளன்-
ஒரு மகள் தன்னை உடையேன் திரு மகள் போல் வளர்த்தேன் செம் கண் மால் கொண்டு போனார் —
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே –கேசவ நம்பியை கால் பிடிக்க -கற்பக கோடி-குல நந்தன –
எனக்கே தன்னை தந்த கற்பகம் -அவாக்யன் அநாதரன்-ஒரு வார்த்தை கேளுன்கொள் மேகங்காள்—
தரிக்க போதும் ஒரு வார்த்தை–அனுபவிக்க நிறைய வேண்டும்–
மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி —
என் உள் மன்னில்- -திரு மாலை ஆண்டான்-ஒரு தடவை வந்தால் ஆழ்வார் நிர்பந்திக்க மாட்டார்- -எம்பெருமானார் நிர்வாகம்–
எக்காலத்து எந்தையாய் என் உள் மன்னில் எக் காலத்திலும் -மற்று யாது ஒன்றும் -கூடினத்தை தவிர -வேண்டேன்-
ஒரு நாள் அவன் பட்ட பாடுக்கு -சீதை பிரிந்து -இன்று இவள் படுகிறாள்- கார் காலம்- சீரிய சிங்கம்–போர் காலம்-தோலாத தனி வீரன்-
ராமனை நினைந்தே அருளுகிறாள்–பேர் சொல்லி-நாம சங்கீர்த்தனம் சொல்லி -தரிக்க வழி தெரிந்து -சொல்லி இன்னும் தூண்டி விட –
ரட்ஷிக்காமல் பெயரை கெடுத்து கொண்டானே -இதுவே நீர் காலத்து எருக்கு இலை-தளர்ந்து ஒட்டி கொண்டு இருக்குமா போல–
விரக தாபம்-சருகாய் உலர்ந்து நாம சங்கீர்த்தனம் முதல் மழை–
மத யானை போல் எழுந்த மா முகில்காள்! வேம்கடத்தை
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே!
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9
9 பாசுரம்-உயிர் ஆன பாசுரம்- யானை போன்ற மேகங்கள்–வேம்கடத்தான் ஆனந்தம்-
முக்தர் அங்கு பெரும் ஆனந்தம் இங்கு கிடைக்கும்–அசேதனம் -பெற்று போகுமாம் இங்கு–
அஹம் அன்னம் அஹம் அன்னம் –பத்தி-கதியாக -இருப்பிடம்–பிரம உத்சவம் சேவித்து கிளம்பாமல் அங்கே இருப்பது போல–
மாசி வைகாசி ஆழ்வார்க்கு –பங்குனி சித்தரை பொலிந்து நின்ற பிரானுக்கு/
ஸ்ரீ ரெங்கத்தில் மாசி பங்குனி சித்தரை வைகாசி நான்கும்-மாசி மட்டும் தேர் இல்லை துவஜாராகோனும் இல்லை–
மேகம் பெற்ற பாக்கியம் நான் இழந்தேனே–பதியாக இருப்பீர்காள் -இல்லை- வாழ்வீர்காள்–இருக்கையே வாழ்வு —
தொழுது எழு– தொழுகையே எழுவது– ஆத்மா உஜ்ஜீவனம் கீழே விழும் பொழுது தானே–பாம்பணையான்-திரு வேம்கடத்தில் —
அந்தரங்கமாக ஒரே படுக்கை நினைவு வர–திரு கல்யாணம் பண்ணி கொள்கிறேன் என்று சொன்னானே –என்னே –
சொன்ன விஷயம் சொல்ல வில்லை–மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-வாசல் காப்பான் இடம்-
உம் ஸ்வாமி என் காலில் விழுந்த நாள் உண்டு–அது போல அந்தரங்கம்–இரண்டு ஆற்றுக்கு நடுவே இருக்கும் இருப்பு –
நல்லார் பலர் வாழும் நளிர் அரங்கம்–கதி-என்றும் தேவர் தானவர் அனைவருக்கும் நித்ய கதி-
தான் தான் கதி என்பதை கருதாமல்–என்னை விட்டானே–வதை செய்தானே–சேவை சாதிக்காமல் இருப்பதே வதை–
மீன் -ஜலம் விட்டால் வாழ்வு இல்லை போல -என் சினம் தீர்வன் நானே -ஆழ்வார்–கோபம் காட்டி தீர்த்து கொள்வேன்-அரையர்–
காலால் எட்டி உதைந்து கையால் அடிப்பது போல- ஆனந்தம் கொடுக்குமே -எம்பார் சொல்ல –முகம் திருப்பி–
துடிப்புடன் வருபவனை பார்க்காமல் இருப்பதே–வையகத்தார் மதியாரே-நம்ப மாட்டார்கள்-முதல் அர்த்தம்–
இனி மேல் மதிக்க தொடங்குவார்கள்–பிரி நிலை ஏ காரம்—அடுத்து -ஆழ்வார்கள் சொல்வதை மதித்து -ஏ காரம்-சொன்னது–
மழுங்காத -தொழும் காதல் — சுடர் ஜோதி மறை யாதே- போல காரணமே என்று அழைக்க மதி சக்கரம் நல வலத்தையாய்–
உண்டே -கேள்வி இல்லை- மறையும் -பிரி நிலை ஏ காரம்–மறையாமல் காத்தாய்–அது போல் இங்கும் –
மதிக்காமல் இருந்தால் நல்லது என்ற எண்ணம் ஆண்டாளுக்கு –பிரகிருதி சொரூபம்-தம் தம் அழிந்தாலும்
அத் தலைக்கு வரும் அவத்யம் பரிதவிக்கும் குடி- குறை வர விட மாட்டார்களே –விஞ்சி நிற்கும் தன்மை–பர்தா கேட்டவன் என்று நானே தேடி தருவேனோ–
ஞானம் பக்தி வைராக்கியம்- சொத்து பெற்ற -கிருஷ்ண பக்தி-ஐந்து குடிக்கு ஓர் சந்ததி இவள் தானே
நாகத்தின் அணையானை நன் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேம்கட கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே 8-10–பல சுருதி சொல்லி தலை கட்டுகிறார்–
அவயவசோபை–நயந்து ஆசை கொண்டு–நாகத்தின் அனையான்–துடிப்பு உண்டு–அவனுக்கும் சேர்வதற்கு–
அறிவிக்கை ஒன்றே வேண்டுவது –படுக்கை தலை சாய்த்து இருகின்றான் நம் வரவை எதிர் பார்த்து -எழுந்தும் படுத்தும் –
திரு வேம்கடம் உடையான்- அரங்கன்–ரட்ஷிக்க அனுமதியே வேண்டும் -சத்யசங்கல்ப்பன்–நாரையை-
திரு கண்ண புரம் புக்கு–கீழே அணி அழுந்தூர் ஆ மருவி அப்பன்-இடம்
தூது விட்டார் திரு நெடும் தாண்டகம்
— வந்தவர் தான் தூது விட்டார் – ஹனுமான் – அங்கே மேகமும் பதியாக கொண்டு இருந்தன அதை தான் தூது விட்டாள் —
திரு வேம்கடத்தில் நின்று தூது விடுவார் யார் என்று தோதாக இறங்கி நித்ய வாசம் பண்ணுகிறான் —
மேகத்தை வேம்கட கோன் விடு தூதை —கொக்கு நாரை அங்கு உயரமாக போய் இருக்காது -உயரம் இருவரும் —
திரு அரங்கத்துக்கு மேகம் அனுப்ப கூடாதே –அவசர பிரதீஷனாக இருக்கிறான் –பர்தா மனைவி — சொல்லி –
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பை நினைந்து –ஜனன பவன -சமுத்ரம் – பெருமை குறையாமல் – புக்ககம் பெருமை வளர்த்து –
பரம பதம் பெருமை சேர்கிறாய் –பட்டர் –போகத்தில் வழுவாத -கிருஷ்ண அனுபவம் –ஒன்றும் குறையாத -அனைத்து சேஷ்டிதங்கள் – நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதி கொண்டேன் — அது இது உது எல்லாம் — அடைய பீஜம் -புதுவையர் கோன் கோதை —
ஆகத்து வைத்து பாடுபவர்த்கள் — நெஞ்சில் வைத்து சொல்பவர்கள் —
ஆண்டாள் பட்ட பாட்டை மனசில் வைத்து -நிலையில் -அடியார் ஆகுவர் –நினைத்த பொழுதே இவள் போல தூது விடாமல் அனுபவிக்க பெறுவார்
பாடும் குயில்காள் ! ஈது என்ன பாடல்? நல வேம்கட
நாடார் நமக்கு ஒரு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருள கொடி வுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே–10-5-
அவனுக்கு நன்மை–இங்கு வந்ததால்–குயில்களை தான் குறை சொல்கிறாள் அவனை விட்டே கொடுக்க மாட்டாள்-
ஸ்ரீ வில்லி புத்தூர் வர காலம் பார்த்து இருக்கிறான்–சினை ஆறு பட்டால்போல –பெருக்காறு வரும் முன் —
வாழ்வு தந்தால்-இந்த்ரியங்களால் அவனை அனுபவிக்க -குயில் பாடுவதை கேட்க்க காது இல்லையே –ஆடுகின்ற அசையும் –
கருட கொடு–வெற்றி –சூசுகம்–கருடனை பற்றி சொல்வது -இவள் இடம் கொண்டு சேர்க்க —
எப் பொழுதும்-சந்தோஷமாக இருக்கும் நித்யர்–எப் பொழுதும் துக்கம் சம்சாரிகள்- இரண்டும் வேண்டுமா —
யானை வரும் முன்னே -அவன் வருவதை– வந்து அருள் செய்ய வேண்டும்–அவனே வர வேண்டும் பர கத ச்வீகாரம்–
உகந்து வந்து அருளுவான் –ஆளவந்தார்- சிசுபாலனுக்கும் மோட்ஷம்–நமக்கும் –ஆசை ருசி உடன் பற்றினால் தான் மோட்ஷம் இனிக்கும்
இங்கு வைத்தால் இங்கு தாங்க மாட்டார்கள் என்று கொண்டு போனார்– ஐதீகம் பெரிய தேவ பிள்ளை- பட்டர் சிஷ்யர்-
வைத்து கொண்டே இருக்க கிழக்கே போக நஞ்சீயர் அகத்தில் உள்ளோர் பிழைத்தார்கள் –இங்கு இருந்து என் தலையே உருட்டலமே என்றார் பட்டர்
மழையே! மழையே! மண் புறம் பூசி உள்ளே நின்று
மெழுகுகூற்றினால் போல் ஊற்று நல் வேம்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட
தழுவி நின்று என்னை தகைத்து கொண்டு ஊற்றவும் வல்லையே —10-8–
பெரிய திருமலை நம்பி இதையும் அடுத்த பாசுரமும் அநு சந்தித்து கண்ணும் கண்ணீருமாய் விச்தராய் இருப்பாராம்–
மண் குடம் போல சரீரம் இருக்கிறது –உள்ளே ஆத்மா கொண்டு போனான்- நெருப்பு அளித்தால் போல் அவன் அழகு–
ம்மை நெஞ்சத்து அகப்படை-கண்ணை திறந்தால்-தழுவு கொள்ளும் படி–கணையாழி- விரல்-கை -தோள்- ராமன்-கண்டு
சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி மகிழ்ந்தாள் போல -நெருக்கி–தகைத்து கொண்டு–சேர்ந்து அனுபவிக்க-
உஷை-அநிருத்திரன் -சேர்த்து வைத்தால் போல மழையே சேர்த்து வை
மழையே மழையே– கேட்க்காது என்று இரண்டு தடவை கூப்பிடுகிறாள்
———————————–
1-3-/4-2-/-8- பதிகத்தில் -10-பாசுரங்கள் /–10-5-/ -10–8-/-14 / பாசுரங்கள்
இவனே ஸ்ரீ கண்ணபிரான்
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-
இவனே ஸ்ரீ உலகளந்த பெருமான்
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply