திரு மழிசை- மகீசார ஷேத்ரம்–மகி=பூ மண்டலம்–அதில் சாரமான இடம்–புலவர் புகழ் கோலால் தூக்க-ஆழ்வார் பிறப்பால்-வந்த ஏற்றம்–
அயோநிஜர் முதல் ஆழ்வார்கள் பூவில் தோன்றி– திரு மழிசை-பிறந்தது பிராமண குலம்- வளர்த்தோ –பங்கய செல்வி வளர்த்த தாயார்-
திரு வாளன்-வளர்த்த தந்தை- -பிரம்பு அறுத்து ஜீவனம் பண்ணினவர்கள்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆனார் கண்ணன் போல-
தாய் தந்தையர் இருவர்–சயனித்த பெருமாள் மேல் மிகவும் ஈடுபாடு இவருக்கு–
திரு குடந்தை–கனி கண்ணன்-சிஷ்யன்–திரு வெக்கா -யதோத்தகாரி-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
வாய் கொண்டு மானிடம் பாடேன்-என் நாவின்கவி ஒருவருக்கும் கொடுக்கிலேன்-நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே —
சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் கனி கண்ணன் போகின்றான்—நாகணை பாயை சுருட்டி கொள்–
எவ்வாறு நடந்தாய் எம் ராமாவோ-ராமன்-சீதை-லஷ்மணன்-பிரணவம் கால் கொண்டு நடந்தால் போல அங்கு–
இங்கு ம காரம் சிஷ்யன் முதலில் ஆசார்யன் உ நடுவில் அடுத்து அ காரம் —
பிரணவத்தின் பிரதி போல –ஓரிக்கை- ஓர் இரவு இருக்கை–இன்றும் தை மகம் உத்சவம்-
பை நாக பாயை விரித்து கொள்–ஆதரவு/ பாசம் கொண்டு சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–
த்வாபர யுகத்தில் அவதாரம்- நம் புவியில் -4700 இருந்தான் வாழியே–எழில் சந்த விருத்தம் 120 /நான் முகன் திரு அந்தாதி 96/
திரு குடந்தை-பெரும் புலியூர் அடிகள் சத் காரம் பண்ணி–பிரதட்ஷனம் கர்பிணி பெண் போல மெதுவாக செல்ல வேண்டும் குணம் நினைந்து கொண்டு–
ஆரா அமுத பெருமாள்-இவர் பிரதட்ஷனம் பண்ணும் பொழுது பக்கம் நோக்கி பார்க்க–ஆரா அமுத ஆழ்வான்–
திரு மழிசை பிரான் தையில் மகத்தில் இங்கு உதித்தான் வாழியே -சக்கரம் அம்சம்–உறையில் இடாதவர்–நாவை–
உபாசனம் பண்ண வேண்டியதை யாரை என்பதை முதல் ஆழ்வார்கள் சொல்ல அதில் களை அறுக்கிறார் –
இவர்–20 பாசுரங்கள்-
சிவ வாக்யர் என்ற பெயர் உடன் இருந்தார் சங்கரம் சாக்கியம் எல்லாம் கற்று இங்கு வந்தார்–
தம்பு செட்டி தெரு பக்கம் பவள கார தெருவில் வேணு கோபாலன் சந்நிதியில் அர்ச்சை ரூபத்தில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்தார்
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவன் அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே–திருச்சந்த -48
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழை கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே—60
நிற்பதுவும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நல் பெரும் திரை கடலுள் நானிலாதா முன் எல்லாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே–65
நிற்பதுவும்-வெற்பகத்து நிற்பதும் என் நெஞ்சு உள்ளே -முதல் பைத்தியம் பிராட்டி இடம் -திரு மால்- முடி சோதியாய் –திரு மாலே கட்டு உரையே–
திருவே மாலா — மாலே திருவா–திரு குடந்தை சாரங்க பாணி- கோமள வல்லி தாயார்- சாரங்க பாணி தளர் நடை நடவானோ–சக்கர பாணி அல்லையே –
ராம சுவாமி திரு கோவில்- அவனும் அவளும் சேர்த்தி உத்சவம்- திரு கோலம் மாற்றி சாத்தி- சேவிக்கணும் —
கல்லும் கணை கடலும் வைகுண்ட மா நாடும் புள் என்று ஒழிந்தன கொள்—அன்று நன் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்-
ஞான பிறவி-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சு உள்ளே -இளம் கோவில் கை விடேல்—திரு மலை-ஓர் -அத்வீதியமான –
கானமும் வானரரும் வேடம் உடை –வேம்கடம்-சொவ்சீல்யத்தில் அத்வீதியம்–திரு மால் இரும் சோலை கள்ளருக்கு- போலி சொல்ல முடியாது –
நல் பெரிய -அவனை கொண்டதால்- திரை-அலை-ஆயாசம் தீர திருவடி வருட–நாம் சேவிக்க தாபம் தீர்க்கும் —
திருவடி தீண்டும்- -மன்னாத பெருமாள்-நீள் ஓதம்-வந்து அலைக்கும் மா மயிலை மா வல்லி கேணியான்–
நான்கு -அற்புதன் -ஆச்சர்ய சேஷ்டிதங்கள் உடையவன்– இவரையும் அருளி பாட வைத்தானே– அனந்த சயனன்- சர்வேஸ்வரன் —
ஆதி பூதன் -ஜகத் காரணன் -முழு முதல் கடவுள்–மாதவன்-பிராட்டிக்கு சுவாமி –இதனாலே மற்றவை–
தாளும் தோளும் சமன் இலாத பல பரப்பி- -மூன்று துவார சேவை-நித்யர் தேவர் அடியவர் சேவை என்பதால் சர்வேஸ்வரன்–
பரத்வம் காட்ட நான் அங்கு போக -போக்யதை காட்ட அங்கு போக வந்து சேர்ந்தான்-சுலபன் என்று போக அவனும் வந்தான் —
இன்று தன் நின்றான் இருந்தான் கிடந்தான் உகந்து –முன்பு நிர்பந்தம் நின்றது இருந்தது சயநித்தது —
இப் பொழுது தான் பலன் பெற்றான் –சேர்தியால்–அந்தாமத்து அன்பு செய்து -ஆரம் உள -ஆழ்வார்
கடைந்து பால் கடல் கிடந்து கால நேமியை கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-திருச்சந்த -81-
அடைந்தாலே உய்யலாம்– நாளும் நாளும் அடைந்து –தனக்கு தானே வீடு கட்டி கொண்டான்- கோது கழித்து தான் அமிர்தமாக கிடந்தான்–
இனி யாராவது வருவார் களா என்று பார்த்து கொண்டு கிடக்கிறான்–கால நேமி கொன்றான்–தன் தனக்கு-தம்பி தனக்கு-
கடை குறைத்தல்-வாலிக்கும் உதவினான் –எம்பியை உம்பிமார்கள் இகழ் வரேல் தடுத்தி-வெற்று அரசு எம்பி எய்தி வீட்டு அரசு எனக்கு ஈந்தான்-
உதவி–ராம பாணத்தால் கிட்டியதே–தம்பி தனக்கே –தன் தனக்கே உதவ வந்த –மால்-அவன் பாதம் அடைந்து உய்ய வேண்டும்–
குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ ?
வேம்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்—நான்முகன்-34-
அகிஞ்சனர் நிதி-ஸ்ரீநிவாசன் தயை–நிரஞ்சன ஹேயம் குற்றம் அற்ற தயை-அனுகம்பா–தயா சதகம் -தான் கடத்தும் தன்மையான்-ஸ்வாபம்–
மெய் வினை- சரீரத்தால்-சம்சாரம் கடத்தும் தாள்–தானே பண்ணுவான்–கேட்க்காமலே –தண்ணீர் குளிர்வதும் அக்னி சுடுவதும் போல இவனுக்கு ஸ்வாபம் இது —
மாதவ பெருமாள் கோட்டியூரில்– ஆசை உடையார்க்கு எல்லாம்ஆரியர்கள் கூறும் என்று ..பேசி வரம்பு அறித்தார் பின்–மேயான்- நித்ய வாசம்-ஏத்துவது –
நன்மை பயக்க -ஆத்மாவுக்கு உஜ்ஜீவனம்–ஆத்மா தாஸ்யம் -ஹரி சுவாமி -சேஷத்வம் மறக்காமல்-மேல் விழுந்து -மெய் வினை-கர்ம-ஜன்ம-
மெய் வினை நோய்- வினையால் நோய் ஏற்படுவதுமே சத்யம்–சரீரத்தால் வந்த நோய்–வியாதி -பிறப்பு-அனைத்தும் தொலையும் –
தங்கள் தங்கட்கு நல்லனே செய்வார் ..அது சுமந்தார்கட்கே– வேம் கடன்கள் மெய் மேல் வினை முற்றவும்–பாபங்கள் எரிக்க படும்–
இதில் நன்மை பயக்க–அங்கு மெய் மேல் வினை முற்றவும் –இனி பிறவி இல்லை–வந்த சீதேவியை காலால் உதைப்பெனோ–வெறுப்பனோ
அழைப்பன் திரு வேம்கடத்தானை காண
இழைப்பன் திரு கூடல் கூட மழை பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவோடு ஓங்கும் வெற்பு–39
மணிகள்-ரத்னங்கள்-அருவி கொண்டு வர -வரன்றி-பேர் அருவி- அரித்து கொண்டு வர-பாம்பு மின்னல் யானை-நெருப்பு- பயம்–
இதை பார்த்து ஓட-இயற்க்கை அழகை அனுபவிகிறார்–மதம் பிடித்து ஓட-அரவு வாய் குகை போல யானை ஒடுங்கிற்றாம்-
மலை பெருமை காட்ட -கறிய மா –பெரிய மாசுணம் பெயர-திரு பிதிரி -மேகம் பார்த்து யானை என்று நினைந்து பாம்புகள் மலை போல நகர -ஜோஷி மட்-
அழைப்பன்-தர்சனத்துக்கு -வாய் வெருவி அவன் காது கேட்கும் படி-மோட்ஷம் வேண்டாம்–கண்ணே உன்னை காண —
அதற்க்கு காட்சிக்கு கண்ணாக நீயே இருக்க வேண்டும்- கண் -வழி-உபாயம் உபேயம் அவனே–பாவியே என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே–
முன் சேவித்தால் ஹ்ருதய முடிச்சுகள் போகும் பாபங்கள் எரிக்க படும்–தாமரை அலர்ந்து குவிந்து-திரு முகம் -உன் பேச்சு கேட்பதே வேணும்–
அவன் திரு முகம் மலர்தலே மோட்ஷம்–கோவிந்த நாமம் சொல்லி அழைப்பன்-காணும் வரை-கூடிடு கூடலே-போல பார்ப்பேன்–
வெற்பு என்று வேம்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டு இருந்தேன் காண்–40
அதுவும் அவனது அருளே- வெற்பு என்று –மலைகள் பெயரை சொல்ல-மனசு சகாயம் இன்றி-ஏனோ தானோ என்று–வீடு கொடுத்தானே–
மலை அப்பன் அவன் ஒருவன் தானே -எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெற்றது போல–
திரு மால் இரும் சோலை என்றேன்–திரு மால் வந்து புகுந்தான்- கெடும் இடையாரவன எல்லாம் கேசவா என்ன–நின்று நினைகின்றேன்–
ஈஸ்வரி ஜகத்துக்கு -தாய்-ஜகத்துக்கு-நியமன சாமர்த்தியமும் உண்டு—-ஜகன் மாதரம் வந்தே–சங்கல்பத்தால் திருத்த முடியும் சக்தி கொண்டவள்–
ஜகத்தில் அவனையும் -சேர்த்தால் விஷ்ணுவும்- அவன் சொல் படி கெடப்பான்-கற்கின்ற நூல் வலையில் பட்டு இருக்கும் நூலாடி கேள்வன்-
ஸ்ரீ வல்லபன்–அவள் கால் வலையில் படு கிடக்கிறான்-விசேஷ அர்த்தம்-நியமனத்தால் இல்லை-அவனே ஈஸ்வரன்–வல்லபன்-
அழகால்-புருவ நெறிப்பே பிரமாணம்–உறை மார்பன்–அனுசூயை-சீதை- ராமனின் குணம் பிரிக்க முடியாதே –
குண கிருத தாஸ்யம்–சொரூப கிருத தாஸ்யம்–நித்ய வாசம் இருந்து பொறுமை வளர்கிறாள்-பத்ம அலன்க்ருதம் பாணி பல்லவம் யுகம்-
மொட்டு விட்ட -திரு கைகள்-பத்ம ஆசனம்-அமர்ந்த அழகையும் திரு கைகள் அழகையும் காட்டி வளர்கிறாள் —
ஸ்ரியம்-வாட்சல்யாதி குணங்களை கிளப்பி விட்டு-குனோஜ்வலாம் பகவதீம்-இவளுக்கும் உண்டே–பகவதீம் ஸ்ரீயம் தேவீம்-கத்யம்–
ஆறு கல்யாண குணங்கள் ஞான பல ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்–துல்யம்–அவள் குணங்களை கிளப்பி விட நம் இடம் காட்ட வேற உதவி வேண்டாம்-
இவளை கண்ட உடன் அவனுக்கு பிரசவிக்கும்–ச்வாதந்த்ர்யம் சாம்பல் போல பூசி இருக்கும் -இதை விலக்க அவள்–
தலை சாயும் ச்வாதந்த்ரம்-தலை எடுக்கும் கல்யாண குணங்கள்–நின்று நினைகின்றேன்-சஞ்சல மனசு–
குணத்தில் பொறாமை பட்டு உயர்த்தி கொள்ள வேண்டும் –இந்த்ரியங்கள் கொண்டு அவனை அடைய உபயோகிக்க வேண்டும்–
கற்கின்ற நூல் –கால் வலையில்- பட்டு இருந்தேன்–கற்கின்ற நூல் -வேதம் இதிகாசம் புராணம்-வலை ரட்ஷிக்கும்–அகப் படுத்தி கொள்ளும் நம்மை–
இதில் பட்டு இருந்த நூல் ஆட்டி- ஸ்ரீ தேவி நாச்சியார்–இவளுக்கு பரிகாரம் தான் சரஸ்வதி- சம்சாரி யில் ஒருத்தி –
நவராத்திரி 9 நாள் உத்சவம் ஸ்ரீ தேவிக்கு தான்//விஷ்ணு பத்னி–ஈஸ்வரி-நியமிகிறவள்–நூலாட்டி கேள்வனார்–இவர் வலையில் பட்டு இருக்க வேண்டும்–
வேதம் வேதாந்தம்–நூலாட்டி-மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு–சாரம்–நாராயணன் கேசவன் சொல்லாமல் மாதவன்-அவளின் சுவாமி என்பதால்–
இதனால் இந்த பாசுரத்துடன் துவய அர்த்தம் சேர்த்து அனுசந்திப்பது என்று வியாக்யானம்–அவனுக்கு இருப்பதால் பிரித்து பேசாது -அதனால் –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ் உலகத்துக்கு எவ் –நின் புகழின்–மாது வாழ் மார்பினை–உடனே சொன்னார்–ஸ்ரிய பத்தி திருவடி பிடித்து பெற்றேன்
கானல் உறுகின்றேன் கல் லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேம்கடவா ! என் உள்ளம் புகுந்தாய்
திரு வேம்கடம் அதனை சென்று –41-
காணல் உறுகின்றேன்-..-அங்கு போய்–கல் அருவி -பட்டு ஓடி வருகிறது– முத்து உத்திர– விழ ஒழி– பல்லாண்டு பாட நிறைய–
பேணி ஆசை உடன் நாடி வருகின்றார் –நீ வந்து ஏன் உள்ளம் வந்தாய்–இங்கு இருந்து தானே வந்தாய்–அதனால் சென்று காணல் உறுகின்றேன்–
வேட்டகத்தை விரும்பி பிள்ளையும் புக்ககத்தை பெண் விரும்புவது போல–ஆசை மாறாமல் இருக்கும்–உள்ளத்தில் -பாபத்துக்கு உற்பத்தி-
அங்கு வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்– கல் அருவி முத்து -இங்கு ரத்தமும் சீழும்/அங்கு ஒண் விழாவின் ஒலி- திரு வோண திரு விழவு —
இங்கு நான் வைத்து கொண்டு இருக்கிறேன்– அங்கு பேணி வரும் வேங்கடவன் இங்கு வந்தவனை ஏன் வந்தாய் என்றுவிலக்கும்-என் உள்ளத்தில் –
வாத்சல்யம்-ஒரே குணம்–அங்கு ஸ்வாமித்வம் பரத்வம் காரணத்வம் போன்ற பல–நான் திரு வேம்கடம் விட்டு வர முடியாது
சென்று வணன்குமினோ சென் உயர் வேம்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் –என்றும்
கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும்
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு–42-
அடி கமலம் இட்டு -அநிஷ்டம் போகும்–இஷ்டம் கிட்டும்-பிரமன்/முக் கண்ணான்–இரவில் தேவர் பூஜை/
பத்ரியில்- தீபாவளி- சித்தரை அஷய கிருத்திகை வரை தேவர்கள் பூஜை–நாரதர்-அர்ச்சகர் -ஏழு பேர் உண்டு கற்ப கிருகத்தில் —
குபேரன் கருத்மான் பத்ரி விசால் உத்தவர் நாரதர் மேல் நர நாராயணன்வடக்கு திக்குக்கு அதிபதி -குபேரன்-காசாளர்-அகண்ட தீபம் –
திரு கதவு திறந்த பின் எரிந்து கொண்டு இருக்கிறது–சுமந்து மா மலர் நீர் சுடர் தீபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோன் உடன்–
ரஷைதிக தீஷை-கங்கணம்-கட்டி கொண்டு–சேன் உயர் வேங்கடம்–ஆகாசம் அளவு உயர்ந்து-இருக்கும் இடத்திலே கை கூப்பலாமே–
நீர்மையால்-நின்று வினை கெடுக்கும்–வேங்கடத்தில் நின்றுநம் வினை கெடுக்கும்–வந்கடத்தில் நாம் நின்றாள் வினை கெடுக்கும் –
நீங்காமல் நிற்கும் வினை கெடுக்கும்-கர்ம விட்டு பிரியாதே–நீர்மை-ச்வாபம்–நாம் பிரார்த்திக்காமல்-உன் அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி–
சவாசனமாக போக்கி-அநிஷ்டம் போக்கி–கடி கமலா நான்முகன்–தாமரை மணத்தில்-இருந்து திரு வடி தாமரை யில் பரிமளம்-
சர்வ ரச சர்வ கந்த பார்த்து ஏத்த வந்தான்–ஸு பாஸ்ர்யமான திரு மேனி தான் கந்தம் ரசம்-ஒளி-தேஜஸ்- அனைத்துக்கும் இருப்பிடம்–
கடி கமலம் விட்டு–கண் மூன்றத்தான்–ஆரோக்கியம் பாஸ்கரன்-ஞானம் சங்கரன்–பிரதிநிதி மூன்றாவது கண்–
இவனும் ஞானம் பெற்றது திரு வேம்கடத்தான் இடம்–முடவன் எழுந்து ஓடி குருடன் பார்க்க ஊமை பேச–இவர்களும் மோட்ஷம்-பெறுவான் என்பதே சப்ரதாயம்–
கர்ம ஆதீனம் பட்டே தீர்க்கணும்புஷ்ப மண்டபம்–அனந்தாழ்வான் தோட்டம்-திரு வேங்கடம் உடையவன் இரண்டு தடவை எழுந்து அருளி-
அப் பிரதட்ஷினமாக ஒரு தடவை-/கடப்பாறை–பச்சை கற்பூரம் சாத்தி கொண்டு-பெருமை
மங்குல் தோய் சென்னி வட வேம்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏற தாங்கு வித்துக் கொண்டு—43-
நித்யம் வந்து சேவிக்கிறார்கள் –சந்திர சேகரனும்—தாமரை மேலானும்–குடைகுவித்து கொண்டு– சத்திரம் சாமரம் கொண்டு —
ரட்ஷகனே வந்து சேவிக்க-வந்ததை சொல்கிறது–மேகங்கள் தோய்ந்து இருக்கும் சிகரம்–கங்குல்-இரவு–முதல் அர்த்தம்–
சாயம் கால பொழுதில்–நித்ய அனுசந்தானம்–அந்த வேளையில்– காப்பணிவான்–கப்பை அணிவிக்க– ஆராதனம் -பண்ணும் பொழுது –
காப்பு-பல்லாண்டு-மங்களா சாசனம்// திரு வந்தி காப்பு அணிவான்-ஹாரத்தி–பாசுரத்தின் மர்மம் அறிந்து வியாக்யானம்–கற்பூர நீராஞ்சனம்–
நெய் திரி –அக்னி தெய்வம்-என் ஒளியால் அவன் சேவை என்று நினைப்பதால் இதை சேவிக்க வில்லை ஸ்ரீ வைஷ்ணவர்கள்–
கும்ப ஹாரத்தி-ஜெய விஜயீ பவ–இதுவே மங்களா சாசனம்-
கொண்டு குடம் கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேம்கட மலைக்கே
போம் குமரர் உள்ளீர் ! புரிந்து–44-
குமரர் -இந்த்ரியங்கள் கட்டு படுத்தி-கிழார் ஒளி இளமை கேடுவதன் முன்-திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்–
செல்ல பிள்ளை–விஸ்வ ரூபமே மெதுவாக–காலம் வீண் ஆவதற்கு முன்-சீக்கிரம்-ராவணன் தபஸ்-
சிறிய குழந்தை எம்பெருமான் பரமன் மடியில் இருந்து -தலையை கீறி-எண்ணி சிரித்தாராம்-எங்கும் –
உன் உடைய விக்கிரமம்–ஒன்றுஒளியாமல் எல்லாம்-எழுத்தி கொண்டேன்
தண்ட அரக்கன் -தண்டிக்க பட வேண்டிய அரக்கன்- -பண்டு-வரம் கேட்க்கும் காலத்தில்-எண்ணி போம்-எண்ணி விட்டுமறைந்தான் —
அவன் நிற்கும் இடம் திரு வேம்கடம்–இந்த சரித்ரம் முதல் ஆழ்வார்களும் அருளி இருக்கிறார்களாம்–
வயசு ஆவதற்கு முன்-மகா ஞானி குழந்தை போல் –பரம ஆத்மா ஞானம் உடையவர்கள் போக –ஆமே அமரர்க்கு அரிய –
பாதமத்தால் எண்ணினான் பண்பு பொய்கை ஆழ்வார் /வாய்ந்த குழவியாய் மூன்று ஏழு எண்ணினான்-பேய் ஆழ்வார்
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம்
பரிந்து படு காடு நிற்ப –தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேம்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–45-
வானோர்க்கும்-நித்யர் மண்ணோர்க்கும் வைப்பு- நிதி- –வைத்த மா நிதி–திரு வடியில் தேன் கொட்ட அதை நிறுத்த புரிந்து மலர் இட்டு –
பல்லாண்டு பாடி—பிரதி பலன் எதிர் பார்க்காமல்–பர துக்கம் சகியாமல் இருப்பதே ஸ்ரீ வைஷ்ணவர் லஷணம்–வேர் அற்ற மரம் போல விழுந்தான்-
செய்த உதவிக்கு வேற ஒன்றும் கொடுக்க முடியாதே-லவ குசர் ஸ்ரீ ராமாயணம் பாட ரிஷிகள் ஆசீர்வாதம்-தபஸ் வலிமை-
வேதத்துக்கு ஓம் போல உள்ளத்துக்கு எல்லாம் மங்களம் திரு பல்லாண்டு–எங்கும் தெரிந்து ஓங்கி நிற்கின்றான்–
மலை போல அவன்-அரு பட்ட மரம் போல் நாம்- தன் அருவி வேம்கடம்
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப் பொழுதும் கை நீட்டும் யானையை –எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேம்கடமே
நாடுவளைத் தாடுது மேல் நன்று–46-
நாம சங்கீர்த்தனம்–தலை கீழாக ஆடி–யானை கை நீட்டி ஓடி-சந்த்ரனை விளக்காக வைக்க-பிடிக்க –
மா மதி மலையில் இருந்து கை கீட்டி- சேன் உயர் வேம்கடம்–மால்-பைத்தியம்–அவனால் ஆனைக்கு–எப் பொழுதும் நீட்டி கொண்டு–
ஆசையின் பாரிப்பால்–வேடர் யானை பிடிக்க–நால் புறமும் சூழ்ந்து ரஜோ தமஸ் குணம் கொண்டு–வில் எடுக்கும் குறவர்–
ரட்ஷிக்க-எப்படி- ஒரே ஜாதி தானே–வேடு வளைக்க குறவர் வில் எடுக்க–வெளி வேடர் -திரு வேம்கடத்து குறவர்–மாற்றி–
கைங்கர்யம் பண்ணும் பொழுது ரஜோ தமஸ் குணம் இருந்தாலும் ரட்ஷிக்க தான் வருவார்–எப் பிறப்பு-
கைங்கர்யம் பண்ணனும் இல்லை கைங்கர்யம் பண்ணுபவரை ரட்ஷிக்க வேண்டும்–
சம்சார நோக்கு இன்றி இருப்பார் கைங்கர்யம் பண்ணுபவர் –அறிவு இல்லா யானையும் குறவரும் போல –
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோள் அரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் –பன் மணி
நீரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேம்கடம்–47-
ச சதுர முக ஷன் முக பஞ்ச முக பிர முக அகில தைவிக மௌலி மனே– சிரோ பூஷணம் –
சரணா கத வட்சல சார நிதி பாலயமாம்-ரட்ஷிக்க வேண்டும்- -குற்றமே குணமாக கொள்பவன் -இவன்–
எற்றே தன் கன்றின் வழு வை காதலிப்பது –வட்ச-கன்று குட்டி –சார தமம்–ரட்ஷனம்-கோ பாலன்- கோ ரட்ஷிகிரவன்-
விரிஷா சைலம் வராக கிரி கருடாத்ரி க்ரீடாத்ரி-விளை யாடும் இடம்– அஞ்சனாத்ரி–யசோதை பாவனையில் அருளிய பெரி ஆழ்வார் திரு மொழி-
கிருஷ்ண அனுபவம் -ஆழ வைக்கும்–சீத கடலுள் அமுது-அன்ன -21 பாசுரம்-மூக்கு/ விரல்கள் இருந்தவாறு காணீரே –கண் எச்சில் வராதோ-
பேதை குழவி–பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம்-அவன் பேதை குழவி நாம் அழும் குழவி–இனிமை என்ன என்று பார்க்க–
உள் கை தளம் திருவடி சிவக்க- சேவிக்கும் கிரீடம் ரத்னம் ஒளி பட்டு –செய்யாள் வருடி -பராங்குச நாயகி திரு உள்ளம்-பகவத் காமம் ராகம் ஆசை-
சிவப்பு ஏறி-வி ராகம்-வைராக்கியம்–மாகம் மாநிலம் முழுவதும் வந்து இறைஞ்சும் மலர் அடி–அடியார் கோஷ்டியில் நானும் ஒருவன்–அனைவருக்குமாக நிற்கிறான்–
வேடர்களுக்கு முன் பார்த்தோம்–யானை குரங்கு–கூட்டம் கூட்டம் ஆக வரும்–குரங்குகள் மலையை நூக்க –
தேர் ஓட்டம்-அடியார் ஈட்டம் காணிட கூடுமேல் அது தானும் கண் பயன் ஆவதே -பறவை பறக்கும் பொழுதும் கூட்ட மாக –
குரு பரம்பரை—நல மணி வண்ணனூர்-ஸ்வாபம் வர்ணம்-முந்தானையில் முடிந்து கொள்ளும் படி சுலபன்–வசம்-வந்தால்- கொண்டாட்டம்-
சேர்ந்தால் ரட்ச்கனம் தொலைத்தால் தாங்க முடியாது–காண வாராய்-கூப்பிட வைக்கும்–நல்ல-விசெஷனம்–
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தான்-நல்ல அரக்கன்-விபீஷணன் உண்டே–சாதாரண மணி ரத்னம் ஊரில் உள்ள மணிகள்-
நமச்காரத்துக்கே வசம் இவன்–வைரத்தை வைரத்தாலே அறுக்க -கரடு முரடு-கடினம்-அந்த கடினம் இல்லை-இவன் நீர் பண்டமாக உருகிகிறான் —
ருக்மிணி-எழுதி அனுப்ப சந்தேசம் ஏழு ஸ்லோகம்–பிராமணரை-வைய ருக்மிணியையும் -நான் நினைக்கும் பொழுதே உருக –
அவள் உம்மையும் அனுப்பி இதையும் கொடுத்து குல தேவி பூஜைக்கு வருவேன்–மடுத்து ஊதிய சங்கொலி கொடு வந்தாய் என்று தெரிய –
மாலே மணி வண்ணா –ஒளி மணி வண்ணன் என்கோ–ஊர்-காடும் மலையும்-ரட்ஷிக்க ஆள் இருப்பதால்–
ஆளும் சிங்கமும் பொன்னும் மணி பூ மரமும் உண்டு–சுமத்ரை- நடக்கிற ராமனை பார்க்காதே-கைங்கர்ய ஹானி–
ராமம் தசரதம் வித்தி-மாம் வித்தி ஜெனகாத் ஜனி அயோத்யாம் கானகம் வித்தி–ஸ்தாவரங்கள் திர்யக்-எல்லாம் –
நித்யர்கள் வந்து கைங்கர்யம் பண்ண-மறைத்து கொண்டு–இவை பண்ணும் கைங்கர்யம்-நித்யர் பண்ணும் கைங்கர்யத்துக்கு ஒப்பு-
சாண்டிலி-கருடன் கதை-விஸ்வாமித்ரர் குரு தட்சிணை 800குதிரை-தேட -சிறகு எறிந்த கதை —
அனந்தாழ்வான் கட்டு பிரசாதம்-எறும்பு-நித்யர்-எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே –விண்ணுளாரிலும் சீரியர்–
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேம்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –வேம்கடமே
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு
வானவரை காப்பான் மலை–48-
ஆழி படை தொட்டு- ரட்ஷிகிறான்-மெய்ம்மையால்-விகல்பம்-தர்க்கம்-பொய்மையால்-எது–வணங்கும் பொழுது –
கைங்கர்யம் செய்வதற்கு வணங்குவது மெய்மை–வணங்கி மோட்ஷம் கேட்பது பொய்மை- நித்யர் இங்கு வந்து பிராப்யமாக
கைங்கர்யம் செய்வது மெய்மை–வானவர்களை காக்க ஆழி படை தொட்டால் போதும் -பிரயோக சக்கரம்- திரு கண்ண புரம்–
சென்று நின்று ஆழி தொட்டானை-சுழற்றி பண்ண வேண்டியது இல்லை கரும் இடம் பொருத்தும்–கை நின்ற சக்கரத்தன்–
வேங்கடமே-மூன்று தடவை-பொலிக பொலிக பொலிக போல–பல்லாண்டு பல்லாண்டு பல் ஆயிரத்தாண்டு–தத்வ ரகஸ்ய மண்டப த்ரயம் போல–
வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேம்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள்– மேல் திருந்தி
வாழ்வார் வரு மதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்–90-
பாகவத -அடியார்க்கு அடியார் வைபவம்-18 பாசுரம்-இதில் சொல்லி-வேறாக ஏத்தி இருப்பாரை-
அடியார்களை -வெல்லுமே மற்று அவரை சார்த்தி இருப்பார் தவம்–கேசவ பக்தியோ-பக்தர் பக்தர் பற்றுவதே வேண்டும்
இது கிட்டா விடில் கேசவ பக்தி-ஸ்வாமி அருளுவார் கீறிய கோளரியை சார்த்தி இருப்பார்-பெரி ஆழ்வாரை போல்வார்–
அந்தி அம் போதிலரி உருவாய்- வில்லி புத்தூர் –வல்ல பரிசு-ஆண்டாள் போல/தாயாய் தந்தையாய் கண்ணன் ஆழ்வார்/
அன்னையாய் அத்தனை சடகோபன் –மதுர கவி ஆழ்வார் –
அருள் பெறுவார் அடியார் –அடியார் தம் அடியினேர்க்கு–கண்ணன் கழலினை முன் அருளி– ப்ரீதி அதிகம்–
மேல் விழுந்து பகத் பக்தரை ஆதரிப்பான்–வரும் மதி–அவன் திரு உள்ளம் பார்த்தே–தாழ்வு-சேஷம்-அடிமை தனம்–
அடியார் அபிமானத்தில் ஒதுங்கின அடியார்கள்–வீற்று இருந்து விண் ஆழ -இங்கும் அங்கும் அரசர்–
அடியார்களுக்கு பல் மலர் வைத்து மேல் வாழ்வு பெறலாம்–இங்கும் கைங்கர்யம் அங்கும் கைங்கர்யம்–நித்யர் கொண்டாடுவார்கள்-
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன்–பசு மனுஷன் பட்ஷி-அடியான் நிழலில் ஒதுங்கி மோட்ஷம்–வாசி இல்லை–அவர்கள் ஏற்றத்தால் என்பதால் –
—————————————
திருச்சந்த–48–60–65–81–/நான்முகன்–34–39–40–41–42–43–44–45–46–47–48–90-/-ஆக -20-பாசுரங்கள் –
இவனே ஸ்ரீ வராஹன்
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-
இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–
இவனே ஸ்ரீ கண்ணபிரான்
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply