திருப்பள்ளி எழுச்சி- 7-அந்தரத்து அமரர்கள் –ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் ஐந்தாம் பாசுரம் மட்டும் –
கைங்கர்யம் கொண்ட -ஸ்வரூப நிரூபகம் -அரங்கத்தம்மா –சொல்லாமல் -கைங்கர்யம் செய்ததால் -இதுவும் நிரூபகம் –
பங்குனி உத்தர மண்டபம் -இன்றும் விபீஷ ணாதிகள் -சரணாகதிக்காக அமைந்த மண்டபம் –
ராமானுஜர் இங்கே சேர்த்தியில் நமக்காக -அன்றோ –

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-எனக்கு ஸ்வாமியான உன் கோவிலின் வாசலில் –
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
-இந்த்ரன் – ஐராவத யானை உடன்  –
மூன்றாவது வரியில் உள்ளதை முதலில் கொண்டு இந்திரன் பின் வரும் தேவர்கள் –
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
-மற்றைய தேவர்கள்-பரிவாரங்கள்- –
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ-
சனகன் சன குமரன்  சனகாதி – மானச புத்ரர்கள்-
கந்தர்வர்கள்-சுந்தரர் நெருக்க சுந்தரமான பாட்டு பாடுவார்கள்-
இயக்கரும்-
யஜ்ஜர்கள் – வித்யாரதர்கள் தள்ள  –
மகா தபச்விகள் ரிஷிகள்-மரு கணங்களின் மருத்துக்கள் கீழே சொல்லு இங்கு உப மருத்துக்கள் –
மயக்கம்-திருவடி தொழ வந்து -இடி பட்டு மயங்கினார்-
கல்யாண குணங்களில் ஈடுபட்டு மயங்காதவர்கள் அன்றோ இந்த ப்ரயோஜனாந்தர பரர்கள்
அந்தரம் பாரிடம் இல்லை-
அந்தரம்-ஆகாசம் பார்-பூமி-இடம் இல்லை/வரிசை ஆகாசம் வரை-33 கோடி என்பதால் –

ஸ்வாமி அவதாரம் பஜனை கோஷ்ட்டி நிறைந்து புறப்பட்ட இடமும் வந்து சேர்ந்த இடமும் இருப்பது போல  –
திரு அரங்க சந்நிதியும் நிறைந்து ஆகாசமும் நிறைந்தது -கடாஷித்து அருள வேண்டும்
கருவரங்கத்தில் உள்  கிடந்தேன்  கை தொழுதேன் –
ஜாயமான யம் பஸ்யேத் மது சூதன –சத்வ குணம் வந்து முமுஷு ஆவான் -கருவிலே திரு இல்லாதீர் –

நஞ்சீயர்
முதலில் சங்க்ரககமாக சொன்னதை விஸ்தரிகிறார்

இதிலும் மேல் பாசுரங்களாலும்-பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
தேவர் ஞானம் பெற்று -புண்யம் செய்து சொர்க்கம் போனவர்கள்–கர்ம பலன் அனுபவிக்க-
ஐஸ் வர்யார்திகள் தான் இவர்கள் அசித் அனுபவம் ஆசை பட்டு- தத்வம் மூன்று தானே
சித் ஆசை கொண்டு கைவல்யம்- பரமாத்மா தான் உயர்ந்தது என்று உணர்ந்து ஆசை கொண்டால்-பகவத் லாபார்திகள்

சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தம் அனுபவம் -ஐச்வர்யார்திகள்-அனுபவத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாம் –
நிலை உயர்ந்து இந்த்ரன் பட்டம்-இதனால் தான் ஆழ்வார்கள் இவர்களை உயர்த்தி பேசாமல் -பகவத் அனுபவம் இழந்து —
அகங்காரம் மிக்கு-வேதம் வேற சொர்க்கம் போக தூண்டும் வேத சாஸ்திரம் நம்பிக்கை வர அனுபவம் பெற்று திரும்பி வர –
திரும்ப இங்கு தான் வரணும் கர்ம பூமி இது தான்-
சாதனம் பண்ண முடியாத இடம் சொர்க்கம்-அப்படி அகங்கரிப்பவர்களே
பெரிய பெருமாளை சேவிக்க வந்த பின் நாம் வர வேண்டாமா-

எல்லோரும் ஈஸ்வர ஆதீனம் தான் என்று காட்ட-

பிரம்மா முதல் பிபீலிகா எறும்பு வரை-பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
நான் முன்னே நன் முன்னே என்று வாயில் நுழைந்தார்கள் பிரி கதிர் படாமல்-
ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
அகங்காரம் தொலைந்து வந்தார்களா-புண்யம்-அனுபவத்தில் ஈடு பட வைக்கும்-
நான் பிரதானம்-புண்ய பலன் திரும்ப வைக்காது பதவி தக்க வைக்க வந்தார்கள்
திருந்தி வந்தார்களா -இங்கேயே இருப்பார்களா
தேஷாம் சதத யுக்தாநாம்-எப் பொழுதும் சேர்ந்து இருக்க ஆசை கொண்டு இருப்பார்கள் பக்தர்கள்
சேஷத்வம் பார தந்த்ர்யம் மிகுந்து -நம்மை ரஷிக்க -அவன் இருக்கிறான் என்ற மகா விசுவாசம்
காலையில் மட்டும் சத்வ குணம் வந்து அபிமானம் குறைந்து
வைராக்கியம் கொஞ்சம் வந்து அவனை பற்றி-புல்கு பற்று அற்றே-
ஆழ்வான் ஆண்டான் வார்த்தை  -நீர் ஒருவரே அதிகாரி அனைத்தையும் விட்டு விட்டே பற்ற வேண்டும் என்றால்
கொஞ்சம் கைங்கர்யம் பண்ண சத்வ குணம் வளர-அபிமானம் பங்க -குறைந்து வந்தார்கள்
மனமே தான் பந்தத்துக்கும் மோட்ஷத்துக்கும் கரணம் –
இருக்கிறார் உள்ளே என்று நம்பி அவனை கேட்டு-காரியம் பண்ண -நெருங்கிய தொடர்பு கிட்டும்
அவன் நினைவு சாஸ்த்ரங்களில் பதித்து வைத்து இருக்கிறார்
பெருமாளை நேராக சேவிப்பது மங்களா சாசனம் பண்ண தான்
நம்பி செய்தால் நம்மை சரி படுத்தும் பொறுப்பை அவனே எடுத்து கொள்கிறான்

ஜீவாத்மாவுக்கு எது நல்லதோ அதுவே தீமை-ஞாதுருத்வம் கொண்டு-சாஸ்திரம் படித்து நடந்து மோட்ஷம் போகலாம்
நான் உசந்தவன் என்று நினைந்து அகங்காரம் கொண்டு ஐஸ்வர்யம் கைவல்யம்-
அணு சக்தி அழிவுக்கும் உயர்வுக்கும் போல-ஞானத்தாலே சேஷத்வ பார தந்த்ர்யம் புரிந்து கொண்டு இருந்தால்-
அம் கண் ஞால அரசர்கள்  பங்கமாய் வந்தது போல –
ஸ்த்ரீத்வம் என்கிற அபிமானம் தொலைந்து வந்தோம்-
என்கிறாள் —
இரும்பு போல் வலிய நெஞ்சம்-
காந்தச்தே புருஷோத்தமன் -கிட்டே போனதும் இழுத்து கொள்கிறான் அவன் இடம்-
ஆந்த்ரமான சேஷத்வம் பார தந்த்ர்யம் புரிய தான் இப்படி அருளுகிறார்-

ஸ்ரீ நஞ்சீயர்

கீழே ஸங்க்ரஹேன அருளிச் செய்ததை -விஸ்தரிக்கிறார் -ஆகாசப் பரப்பு முழுவதும் வந்தார்கள் –
திருப்பள்ளி உணர்ந்து அருளி கைங்கர்யம் கொள்ள வேணும் என்கிறார்
கீதை  13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –
இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
சேஷத்வம் நிறம் பெற -உகக்க வேண்டும் உன் தன் திரு உள்ளம் உகக்க செய்து-
அதை கண்டு நாம் உகக்க அது தான் சேஷத்வம்  பூர்த்தி-
குருஷ்மமாம் அநு சரம்-ஏவி பணி கொள்/கொண்டால் தானே கைங்கர்யம் –

குண க்ருத தாஸ்யம் -முதல் நிலை -அடுத்து ஸ்வரூப ப்ரயுக்த  தாஸ்யம்-
ஆழ்வார்கள் இந்த நிலை-சேவை சாதிக்க விடாமல் இருந்தாலும் எம் பிரான் –
கடியன் கொடியன் –ஆனாலும் அவன் பால் நெஞ்சம் செல்லும்/-
ஆகாச அவகாசம் உள்ள அளவும் நிறைந்து  ச பரிகரராய் வந்து புகுந்தார்-திருப்பள்ளி உணர்ந்து அருளி —
அடிமை கொண்டு அருள வேண்டும்-
சேஷத்வம் நிறம் பெற ஏவிப் பணி கொள்ள வேண்டும் –கிரியதாம் இதை மாம் வத–
உம் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் —
கைங்கர்யம் பண்ணி -கொண்டு அவன் யூகிக்க -அத்தைக்கு கண்டு நாம் உகக்க  வேணுடுமே
நீ குற்றேவேல் எங்களை கொள்ளாமல் போகாது-மடி படித்து –
தடுத்து வளைத்து பிரார்த்திக்கிறாள்- உரிமை நமக்கும் உண்டு –
பலாத் க்ருத்ய புந்தே- நிர்பந்தித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-

நினைப்பு அறியா வேகத்தில் கொண்டு கொள்வான் -ருசி பிறந்த உடன் –
போஜனத்துக்கு பசி வேண்டுமே-பகவானை அனுபவிக்க ருசி/அதையும் அவன் வளர்த்து கொள்வான்-
பரி பக்குவம் ஆகும் வரை உழைக்கிறான் -அடிமை தெரிந்து கொள்வது ஞான திசை அடிமை செய்வது புருஷார்த்தம்
மூன்று நிலை -சேஷ  பூதன் நான்- முதல் 100 -எம்மா வீட்டு திறம்- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள்ளும் -எழுதி வைத்து –
பண்ண  வேண்டியதை ஒழிவிலா காலம் அடிமை செய்ய மூன்றாவது நிலை கைங்கர்யம்  கொள்தல்-
சேஷத்வ ஞானம் -அறிந்து —அனுபவ ஜெனித ப்ரீதி உந்த கைங்கர்யமே புருஷார்த்தம் –
ஞான அனுகுணமாக நிஸ்கர்ஷம்  -அடுத்து கைங்கர்யம் பண்ணி பூர்த்தி அடைய வேண்டுமே –

அபிமானம் பக்ன-உடைந்து -பங்கமாய்-அடி சேர் முடியனராகி ..குரு நில மன்னர் முடி –
அரசர்கள் தாம் தொழ -முற்றத்தில் இருந்தவர்..பொடி சேர் துகளாய் -சிதைகிய பானையர் பிச்சை தாம் கொள்வர்-
நீர் குமிழ் போல -அண்ணல் அடியவர் ஆமினோ-அரும் தவம்-சனகாதிகளும் -மானச புத்ரர்கள்
கீழே அருளிச் செய்த தேவர்கள் ஒழிய அனுக்தமான அனைவரும் வந்தமை சொல்லிற்று
வஜ்ராயுதத்தால் 7 – 7- 49 கணங்கள் மருதுகள் பண்ணினானே -ஐராவதமும் –
ஆத்மாவால் கேட்டு மனனம் சிந்தித்து அர்த்த க்ரமம் படி மாற்றுவது போல இந்த்ரன் முதலில் சொல்லி-

திருப் பள்ளி உணர்ந்து அருளும் பொழுது அழகை காண
வித்யாதரர்கள் கந்தர்வர்கள் யக்ஜர்கள் -முற்  கோலி-இடம் இன்றி-நெருக்கு பட-நின்றார்கள்-மோகித்தார்கள்
த்வாரா பாலகர்கள் -இருக்க -சாந்தி நிலவு -தள்ளிக் கொண்டு இருக்க
சர்வ ஸ்வாமியான நீர் அடிமை கொள்ள திருப் பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

தேவ சேனன் வந்தது பார்த்தோம் -குமர தண்டம்
இதில் தலைவன்-இந்த்ரன் தன் வாகனம் உடன் ச பரிகரனாய்-
தேவ ஜாதியை ஜாக்கிரதையாக பார்க்க நியமிக்க பட்டவன்-
தேர் இட்ட வகை செய்வானாய் -வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
மெய் காட்டு கொள்ள-தலை எண்ணி காட்டனும்- 33 கோடி பெயரையும் காட்டி –
மெய் -சரீரம் -நீர் கொடுத்த வேலை சரியாக பண்ணுகிறேன் என்பதை பார்த்துக் கொள்ளும்
எல்லாரும் போந்தாரோ போந்து எண்ணி  கொள்/பர தேவ்யா பாரமர்த்யம் –
பீஷாச்மாத் வாத பவ-வாயு இந்த்ரன் மிருத்யு ஆணை படி வேலை செய்பவர்/பர தேவதா பராமர்த்யாயம் –
இவர்களை பூ சூட்டி பண்ணுவதால் தான் பூர்வர்கள் மீண்டும் சேஷ பூதன் அவனுக்கே என்று சொல்ல

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த  க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும்  ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல-
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை-
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர்  தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால்  –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

அண்டம் ஆகாசம் -அந்தரத்து அமரர் இவர்கள்- -அந்தரம் அண்டம் ஆகாசம் பர்யாயம் –
கேசவன் தமர் அல்லர் இவர்கள் -இவர் உள்ள இடம் வைத்தே இவர்களை –
பகவத் பக்தர்களை -கைங்கர்யம் இட்டும் அவனை இட்டும் -நிரூபகம் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
இவர்களை வஸ்த்வய இடம் வைத்து -பிரபன்னர் அநந்ய பிரயோஜனர்களை -கேசவன் தமர் -போல –
நந்தகோபாலன் கோவில் காப்பான்- தொண்டர் அடி பொடி-மண்டம் குடியார் இல்லை-கேசவன் தமர்-
மாதவன் தமர் -விதி வகை புகுந்தனர்-பகவத் பக்தர்களுக்கு பக்தி கைங்கர்யம் கொண்டே பெயர்-
தேவர்கள்- தேவ பட்டணம் உசத்தி என்று அந்தரத்து அமரர்கள் வர்த்திக்கும் இடத்தை இட்டு சொல்லும் இத்தனை-
திரு வேங்கடமுடையான்-தேசத்து இட்டு சொல்வது போல ஸ்வாதந்த்ர்யம் அகங்காரம் இவர்களுக்கும் உண்டு என்பதால்/-

அரும் தவ முனிவர்-
சப்த ரிஷிகள்-மானச புத்ரர்கள்- பிரம பாவனை மட்டுமே கொண்டவர்கள்
கர்ம பாவனைக்கு வர வில்லை இவர்கள்-தேவர் உபய பாவனை வேலையும் பண்ணி கொண்டு
இவர்கள்-அரும் தவ முனிவர்-கூட்டங்கள்- அமரர் கூட்டங்கள் முனிவர் கூட்டங்கள் மருதுகள் கூட்டங்கள் என்று கொள்ளலாம்-

பெரிய திரு மண்டபம் நுழைந்தார்கள் புகுந்தார்கள்-வந்தார்கள் இல்லை
வாசலில் -பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும் துன்னிட்டு புகல் அறிய –
சுந்தரம்-கந்தர்வர்- அழகாய் பாடுபவர்கள் -ஆகையால் சுந்தரர் –
வித்யாததரர் முன் கை வலி அதிகம் — யக்ஜர் மிருது ஸ்வ பாவம்  மயங்கி –
நெருக்கம் பட்டு மோகித்தார்கள்–இவர்கள் இங்கனம் பட வேண்டுமோ என்னில் திருவடி தொழ நசை–
உள் நெருக்கம் கண்டோம் –
புறம்பிலும் ஆகாசம் பூமி வித்யாசம் இன்றி–விவரமற- நெருக்கம்
வானத்திலும் உம்பரும் மண்ணின் கீழ் தானத்திலும்

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading