மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-
பதவுரை
மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.
ராவணனை முடித்த-குலம்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்–எங்கள் விரோதி முடித்து வேள்வியை காத்த –
எங்கள் ஆராதனை ஏற்று கொண்டு-
மேதி-எறுமை-கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் பெருத்த
தளை-பந்தம் விடும் ஓடும் ஓசையும்,
குழல் ஓசையும்–மணிகளின் ஓசையும் –பாட்டும் பக்க வாத்தியம் போல திசை பரந்தன–
எட்டு திக்குகளிலும் —வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
கழனிகளில் வண்டு கூட்டங்கள் ஆரவாரத்து ரீங்காரம் –
வரி சிலை-சார்ங்கம்-மா முனி-விஸ்வாமித்ரர் –
அவபிரதம்-ஸ்நானம்-பூர்த்தி அடு-மிடுக்கு –எம் அரசே-அரங்கன் –
மேட்டு இள மேதிகள் -வளர்ந்த கிருஷ்ண கர ஸ்பர்சம் மூலம் வளர்ந்து -இளமை உடன் உள்ள எருமைகள்
தளை விடும் ஆயர்கள்-கட்டுக்களை அவிழ்த்து விட்டு -மாட்டுக் கொட்டில்களில்
வேயம் குழல் ஓசையும்
விடை மணி குரலும்-கழுத்துக்களில் கட்டிய மணி ஓசையும்
ஈட்டிய இசை -ஒலிகள் சேர்ந்து பாட்டும் பக்க வாத்யம் போலே
திசை பரந்தன
வயலுள் இரிந்தன சுரும்பினம் -கழனிகளில் வண்டுக்கூட்டங்கள் ஆரவாரித்து கிளம்ப -ரீங்காரம்
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-ராக்ஷஸ வர்க்கம் -மூல பலம் -அனைத்தும் அழித்து-
சார்ங்கம் பிடித்த அயோத்தி அம் அரசு -பிரதி நிதியாக உள்ள நம் பெருமாள் வானவர் ஏறு
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய -ஸ்நானம் -வேள்வி பூர்த்தி –
அடு திறல் அயோத்தி எம் அரசே!-மிடுக்குள்ள சாமர்த்தியம் -பராபிபவனை சாமர்த்தியம்
எம் அரசே -இங்கும் அரங்கத்து அம்மான் -ராமன் நமக்காக பள்ளி கொண்டு அருளி உள்ளான்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-
ஸ்ரீ நஞ்சீயர் வியாக்யானம் –
சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி- அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-
மேடு -கொம்புகள் வளர்ந்து -இளமை பிராயம்–
மேடு -கொம்பு வளர ஆரம்பம் -நஞ்சீயர் -மேடாக வளர்ந்தன என்றுமாம்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிகிறார்-கீர்த்தியில் பெருத்து மூர்த்தியில் சிரித்து எம்பார் போல்வார்-
பொழுது போக்க குழல் வூதுகிரார்கள் -கட்டுப்படாத மாடுகள் இல்லையே இவைகள் -ஆகவே ஊதுவது பொழுது போக்குக்காக
விரஜை-ரிஷப ஒலி எங்கும் ஒலித்ததாம்-ரிஷபங்கள் கொஞ்சமாக இருக்கும் குறுக்க வர அவை விலகும் —
இவை நகராமல் மேய்ந்து இருப்பதால் இவைகள் மணிகள் த்வணிக்காதே –
ஆகவே விடை மணி குரல் -பசுக்களின் நடுவில் ரிஷபங்கள்
விரஜா பூமியில் இந்த ஓசை எங்கும் பரந்த –
பாகவதம்-இதை கொண்டே-
கீசு கீசு-மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் -முப்போத்தும் கடைந்து ஈண்டிய வெண்ணெய்-
காசும் பிறப்பும் கல கல கை பேர்த்து ஒலி-நிரஸ்தய–அமங்களம் எல்லா இடங்களிலும் -போக்கி -இந்த த்வனி
ஸ்ரீ வைகுண்டம் வர போனதாம் இந்த ஒலி –
அலருகிற கால புஷ்பங்களில்-அந்த அந்த காலத்தில் அலரும்-மதுவை பானம் பண்ணும் வண்டுகள் ரீங்காரம்
பெரிய ஆழ்வார் செண்பக மல்லி இத்யாதி –அருளியது போல-
இலங்கையர் இத்யாதி
துர் வர்க்கத்துக்கு புகலிடமாய்-இலங்கை-நிர்வாகனான இராவணன் குலத்தை ச பரிகரமாக மாய்த்த –
நல்லோர் ஓர் இருவர் இருந்தாலும் கேட்காத-நிரசித்த சார்ங்கம் –
பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
சமுத்திர ராஜன் பணிந்தான் -வில்லால் சேது -ஸ்ரீ சார்ங்கத்தை உடையவராய் –
ப்ரஹ்மாதிகள் அபேக்ஷிதம் முடித்தோம் -செய்யப் பெற்றோமே -என்று –
மேனாணிப்பும் உடையராய் -அஹங்காரம் இங்கு இவன் இடம் இருக்க வேண்டுமே –செய்து முடித்து அகங்காரம் கொண்டு–
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் –
அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி – திரு அயோத்தியை நிர்வகிப்பர் –
அவதாரத்துக்கு பிற்பட்டாருக்காக இங்கே வந்து திருக் கண் வளர்ந்து – பெரிய பெருமாள் ஸ்ரீ ராமராக அவதரித்து
இவற்றை செய்து முடித்து மீண்டும் சயனம் – தீபாத் உத்பன்ன பிரதி தீபம் -சர்வம் பூர்ணம் -அர்ச்சையே -அயோத்தியைக்
காட்டில் திருவரங்கம் உகந்து அருளி – அனைவருக்கும் என்றும் இங்கு தானே –
சர்வாதிகரான தேவரீர் உணர்ந்து அருளி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –
————————————–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்- ஆயர்களின் குழல் ஓசை –
நாகுகளின் மேல் செருக்கி இருக்கும் விடை எருதிகளின் மணி ஓசையும் -மணி குரல்-
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்-இரிந்தன சுரும்பினம்-
மது பானம் பண்ண வண்டுகளும் கிளம்பி ஓசை எழுப்ப /
ஆர்பாட்டம் அதிக்ரமித்து எங்கும் செல்லா நின்றது
மதுரமா வண்டு பாட மா மயில் ஆட -அதே கருத்து- அங்கும் ராவண நிரசனம் உண்டே –
சர்வ ரஷகர்-விரோதி நிரசனர்-எழுந்து அருள வேண்டும்-
மா முனி–விஸ்வாமித்ரர்= -பரித்ராணாயா சாதூனாம் / வேள்வி காத்து -தர்ம சமஸ்தாபனம்
ராவணன் ஆதிகளை நிரசனம்- மூன்று செய்து-
கற்று கறவை-இளம் கன்றே பால் கொடுக்கும் கிருஷ்ண ஸ்பர்சத்தாலே/
பெரு வீடு -நிதானமாக பராக்கு அற்று மேயும்
அவர்கள் குழல் ஊத்துவார்கள்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன் விலங்கல்
வேயின ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே -8-5-7- -விரக தாபம்-
விடை மணி ஓடும் ஆயன் விலங்கின ஓசையும் -ரிஷப கதி- மணி சேர்ப்பார்கள்/
இராப்பத்து -திருவாய் மொழி மண்டபம் -தொடங்கி மணல் மேடு தொட்டதும் ஓடுவது ரிஷப கதி –
மணி சேவிப்பார்கள் -வட்டமாக தட்டில் அடித்து போவார்கள்
இள மேதிகள் வாய்க்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே -3-8-6–
ஞானம் இல்லா பசு மாடுகளும் நாங்களும் எழுந்து வந்த பின்
சர்வஞ்ஞர் நீர் எழுந்து அருள வேண்டாமோ-
நீர்-ஆகார நித்திரை பயம் மைத்துனம் துல்யாணி -ஆகாரம்- நித்தரை -ஆண் பெண் கலவி –
மக்களுக்கும் மாக்களுக்கும் பொது /ஞானம் ஹீணன் பசு/-ஞானத்தால் சக்தியால் வாசி –இல்லா விட்டால் பசு ப்ராயர்-
ஈட்டம் -கூட்டம் /இசை -எங்கும் பரந்தன/திரண்ட த்வனிகள் திக்குகள் எங்கும் விஸ்திருதமாயின –
வெளி நிலம் வயல் தடாகங்களில் -காலை வேளை மலர்ந்த புஷ்பங்களில் மது உண்டு வண்டுகள் ரீங்காரம்-
கால புஷ்பங்கள் —செங்கழு நீர் தாமரை புஷ்பம் அலர்ந்து-வண்டுகள் தேன் பருக ரீங்காரம்/
கார் திறள்-மேகம் -வண்டுகள் கூட்டம் என்று நினைத்து மயில்கள் ஆட/-
பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –
உகந்து அருளின எல்லாம் உத்தேசம்
இலங்கையர் இத்யாதி
ராவண சந்தானத்தை வாட்டி -வாட்டுகை -நிஸ் சேஷமாக முடிக்கை -கரியாக்குகை/
மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
கரி ஆகுமோ என்னில்-
வீர பத்னி ஆகையால் விரோதித்தற்கு சொல்லுவது –
கிள்ளிக் களைந்தான் போலே -அநாயாசேனே என்று காட்ட வாட்டிய -வீர பத்னி வழி அன்றோ –
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம்-தலை அற்ற கபந்தம் ஆடும் –
ஆயிரம் -ஏழரை நாழிகை ஆடின -கணீர் -ஓசை -பெரிய யுத்தம் என்பர் மற்றோர் –
அங்குள் அக்ர தான் ஹந்யாம் -நரஸிம்ஹ அவதார நினைவு -பெருமாளே ஸூக்ரவன் இடம்
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –
தீப்த பாகவ ஸங்காசா –காஞ்சனா பூஷணை -பொன்னால் அலங்கரிக்கப் பட்ட ராம பானம் –
கரி ஆக்குமே
வாட்டிய -அழிக்கும் என்றும் -நேயம் அஸ்தி-/
கற்புக் கனல் -தேஜஸா தத்தாம்-ராமன் கோபத்தால் பீடிப்பட்டு முற்றுகை இட்டு –
வரி சிலை –
ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –
ஸ்ரீ ராமாயணம்–காஞ்சனா பூஷணை- அம்பை கொண்டாட இங்கு கோதண்டம் கொண்டாடுகிறார்-
வானவர் ஏறே-
இந்திரனுக்கும் அமராவதி பட்டணம் கொடுத்து ஸ்வர்க்க லோகமும் கொடுத்த படி–வேத அபஹார குரு பாதக தைத்ய பீடா –
விபீஷணனுக்கு இலங்கை கொடுத்தால் போலே –
மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –
கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –
ரிஷி மந்த்ர த்ரஷ்டா –
விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் -சித்த உபாயம் பற்றியதால் மா முனி –
முன்னால் முனியாக இருந்தார் -தம் தம் கார்யங்களை தாம் மனனம் பண்ணி -முனிகள்-
ஸூ ரக்ஷண சான்வயம் ஒழிந்து –ஈஸ்வர பிரவ்ருத்தி தடுக்க ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி தானே ப்ரவர்த்தி –
நினைத்து இருந்து சிரமம் தீர்ந்தேன் -என்ற படி -ஏஹி பாஷ்ய சரீராணி –என்றவர்களும் மா முனி –
எங்கள் பக்கல் இருப்பது எல்லாம் குழைச் சரக்கு-
உன் அம்பு பார்த்தே இருந்தோம் என்றவர்கள் -அப்படி பட்டவர்களுக்கு மட்டுமா போவதாவது –
விச்வாமித்ரர் சொன்னது -நானும் முன்னால் எப்படியோ இருந்தேன் -விப்ர நாராயணன் நான் –
அடியேன் தொண்டர் அடிப் பொடி ஆனேனே -என்று காட்ட –
நான் மாறி அடியேன் ஆனால் போதுமே கைக்கொள்ள –
அத்வர த்ராணம் -யாகம் ரக்ஷித்து -அவபிரதம் ஸ்நானம் பண்ணி –
வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –
அடு திறல் —
அரசின் கடமை செய்து அருளினவனே -அயோத்தி அம் அரசே -கடமை செய்து முடித்தவன் –
தச வருஷம் சஹஸ்ராணி -தீர்த்தம் பிரசாதியாமல் -கோயிலில் பள்ளி கொண்டு அருளிய பலன் வேண்டாமோ –
கடாக்ஷித்து கைங்கர்யம் கொள்ள வேண்டுமே –
உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –
உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –
அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply