திருப்பள்ளி எழுச்சி–6-இரவியர் மணி நெடும்–ஸ்ரீ நஞ்சீயர் -ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை -வியாக்யானம் – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

இரவியர்-நெடு மணி தேர்– சிறந்த பெரிய 12ஆதித்யர்கள் 
இறையவர்
-சம்சார நிர்வாககர் –விடை-ரிஷபம் 11ருத்ரர்கள்
திரு நாங்கூர் திவ்ய தேசம் சுற்றி 11 ருத்ரர்-
இவரோ-
கை காட்டுகிறார்-
மருவிய மயிலினன் அரு முகன்
– தேவ சேனாபதி -மயில் விட்டு விலகாமல்-இருக்கிறவர்-அடையாளம்-வேண்டுமே
49 மருதர்  8 வசுக்கள் 
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்-
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்-சேனையும் வந்தது –
குமர தண்டம்–போக பிரதானர்கள் அன்றோ இவர்கள் -பெரிய மலை போல
சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை  
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்

ஸ்ரீ நஞ்சீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்

தேவ சேனாதிபதி உடன் ஜெகன் நிர்வாஹம் பண்ணும் இவர்கள் –
ச பரிகரமாக ஸூவ அபிமத சித்யர்த்தமாக இதற்காக நாட்டி வைத்துள்ளான்
ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து- விலக்ஷணமான தேர்களுடன் வந்தார்கள்

தேவர் திரண்டு பரிச்சேதிக்க முடியாமல் மகா மேரு ஒத்து உள்ள கோயிலிலே
அநந்ய பிரயோஜனர்- பிரயோஜனாதி பரர் அனைவருக்கும்-சர்வருக்கும்  நிர்வாகராய்க் கொண்டு-

———————————-

ஸ்ரீ பெரியாச்சன் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம்

முற் கோலி கொண்டு வந்தார்கள்
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததை சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு
இறையவர்-
ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும்  என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்-ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு  தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார்
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு  இறங்க–அவர்கள் இறங்கி  இழியவும் கூடும் –
இவன் மயில் உடனே கருவில் இருந்து வந்தால் போலே – தேவ சேனாபதி மயில் உடன் கூடவே இருப்பார்
பாட்டும் ஆடலும் திரண்டு பரி சேதிக்க ஒண்ணாத படி-பிரதம கடாஷத்துக்கு -உணர்ந்து அருள –

தேர் பூண்ட குதிரை –
அன்றிக்கே
இவர்களுக்கு வாகனமாக வந்த குதிரை என்றுமாம் –
குமர தண்டம்-
தேவ சேன பதி –
தண்டம்-
சேனை கூட்டம்
அன்றிக்கே
குமாரகளாகிய கூட்டம்-என்றும் 16 வயசில் தேவர்கள் என்பதால்
தண்டம்-ஆயுத பேதங்கள் உடன் என்றுமாம்
நால்வர் இருவரோ  -வெள்ளமாய் கூட்டம் –
அருவரை அனைய நின் கோயில் –
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-
அம்சன் பாகன்.த்வஷ்டா.விஷ்ணு அருணன்..பர்ஜன்யன்-அம்சம் பாகன் – –விவஸ்மான்-
பெயர்கள் உடன்  12 ஆதித்யர்கள்-விஷ்ணுபுராணம்
பிரதம கடாக்ஷத்துக்காக நான் முற்பட நான் முற்பட என்று நெருங்கி உள்ளார்கள்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ.வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading