5-5-வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-
——————————————————————————————–
கை கூப்பி கொடுக்க ஒன்றும் இல்லை காலை சேர்த்து போக்கிடம் இல்லை /அவனை அவனுக்கு என்று சேவிக்க -வேறு பிரயோஜனம் இன்றி
/வேறு புகல் இன்றி அடி கீழ் புகுந்தேனே /ஆஜகாம முகூர்த்த-நான்கு பேர் உடன் விபீஷணன்/ கை கால் ஸ்தானம்
/நிவேதயாத-சர்வ லோக சரண்யன் ராகவன்-விசுவாசம் குறையாமல்/நீடித்த இன்பம் மெதுவாக தான் கிட்டும்
/ஒன்பது பதார்த்தங்கள் காட்டி சொல்கிறார் இந்த பதிகத்தில்
/தாய்-குழந்தை /கணவன் -குல மகள்/அரசன்-குடிமகன் /மருத்துவன்-நோயாளன்
/வங்கத்தின் கூம்பு -பறவை/திரு வடி தான் கொடி மரம்
/ விற் பெரு விழவும்–வேழமும்-குவலயா பீடம் -ஒரு வழி பாதை பக்தர் திரும்பார் விரோதி மடிவார்கள்
/வார் கெட வருவி-திரு செங்குன்றூர் திரு சிற்றாறில் காட்டி கொடுத்து ஆழ்வார் பயம் போக்கினவன்
/விரோதிகளை முடித்து ரட்ஷிப்பவன் /புலி துரத்த பாம்பின் கீழ்
-வேறு எங்கு போனாலும் பாம்பின் ஒரு கூரையில் பயின்றால் போல/ வாசு தேவன் தனு சாயா /
மா பறவை-நிறைய இடம் போனதால்- சிறகின் பலம் -போக போக ஆபத்து மிகும் ராஜா ஷத்ரியன் தன்னை தானே ரட்ஷிப்பான்-
மற்றவரையும் ரட்ஷிக்க தானே – என்று இருப்பானே //வெவ்விய கண் திண்ணிய நெஞ்சம் உடைய ஆணை
/வாலை தூக்கி வீச -பாகமும் வீழ-திண் பாகன் உயிர் செகுத்து//கிருஷ்ண அவதார சேஷ்டிதம் சொல்லி-
பிற்பட்டார் இழக்காமல் இருக்க -அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது திரு வல்லி கேணி
/பிரதி பந்தம் போக்கினது அவதார காலம்-தீர்த்தம் பிரசாதித்து–அர்ச்சை நித்யம் -ஸ்திர சாஸ்வதாக/
அறுவடை போது களத்து மேடு தான் இருப்பான்- -அதனால் திரு வித்துவ கோடில் நித்ய வாசம் /
மண்டினார்க்கு உய்யல் அல்லால் -ஆத்மா என்ற நெல் கதிரை கூட்டி போக ஸ்வாமித்வம் காட்ட /
பிராப்தனுமாய் பசியனுமாய் -வந்தவன்-எனக்கு சோறு இட நீ வந்து இருகிறாயே வித்து வக கோட்டு அம்மானே
-உண்ண அழைப்பாரை போல ஸ்ரீ வைகுண்டத்தில் அவாப்த சமஸ்த காமானை பற்றாவா/
நீ தானே என்னை பற்ற ஆசை உடன் வந்து இருக்கிறாயா- நீ தேடி வந்து என்னை கை கொள்ள வந்த போது
-விநாசம் அடைவது தேவதாந்த்ரம்-அத்யாவசியம்-புத்யர்தம் ஆவது-உறுதியான நம்பிக்கை-
கையாலும் வாயாலும் இல்லை மனசில் -புத்தி அர்த்தமே கத் அர்த்தம் /தஞ்சம் இன்றி வேறு எங்கு போனாலும் இழக்கிறோம்/
இழப்பதும் பெறுவதும் அபிரபத்தி பிரபத்தி தானே/மரக் கலம் கொம்பில்-நடு கடலில்- நான்கு திக்கிலும் போய் கரை காணாமல்-
திரும்பி வந்து கொம்பிலே -த்ரீ லோகன்-காகாசுரன்-திரும்பி விழ
-சம்சாரம் பெரும் கடல்-உகந்து அருளின திவ்ய தேசம் ஒழிந்தது எல்லாம் கடல் போல
-ஆகாசத்தில் கால் பாவாமல் இருந்தான் விபீஷணன்-நிராலம்பனம்-பற்று இன்றி இருக்கிறான்-
பற்று கொம்பாய் ராமன் திரு வடி கிட்டிய தைர்யம்-பற்றிலார் பற்ற நின்றான்
-சக்தி நினைந்து பறக்க ஆபத்து மிகும் -அகலம் எல்லாம் நீரிலே ஆழ்வது போல–
கை நெகிழ்ந்தான் என்று தோற்ற -சிக்கனே பற்றி கொள்ள வேண்டும் /
—————————————————————————————————–
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
பயங்கரமான கண்களை உடைய குவலயா பீட
யானையைக் கொன்றவனே
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
உனது உபய பாதங்களையே
நான் சரணம் அடைவது அல்லாமல்
வேறு யார் இடம் சென்று
உஜ்ஜீவிப்பேன்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
அலை எறிகிற கடலினிடையிலே
நான்கு திக்கிலும் போய் பார்த்து
எங்கும் கரை காணாமல்
திரும்பி வந்து
முன்பு பொருந்திய
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
மரக்கலத்தின் உடைய
பாய் மரத்தின் மீது சேருகிற
பெரியதொரு பஷியை
ஒத்திரா நின்றேன்-
————————————————————————————————–
5-6-செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே—5-6
——————————————————————-
எங்கோ இருக்கும் கதிரவன்-தாமரை/ குணம் உன் இடம் தான்/ நிரவிதிகமாய் பிராப்தமாய் குணம் உன் இடம் தானே
/உன் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு/
வேறு நெருப்பு சட்டி வைத்தால் அலரா து உலர்த்தும்/ நீர் பற்று இன்றி இருந்தாலும் சூர்யனே அலரா து உலர்த்தும்
ஆச்சர்ய சம்பந்தம் -நீர் பற்று- நீர் பசை -நீயே பாபம் போக்கா விடிலும்-உன் கல்யாண குணங்களுக்கே அகம் குழைவேன்
//ஆதித்தன் தூரச்தன் ஆனாலும் அவனாலே அலர்கிறதே/கர்ம போக்க வந்து இருகிறாய்/அனுபவித்து போக்க முடியாது
-கிருபை -அருள் என்னும் ஒள் வாள் உருவி /கிட்டி கிழங்கு எடுப்பான்-/ ஆத்மா -ஹ்ருதய தாமரை விகாசம் கொடுக்க நீ தான் –
அந்தமில் சீர் -வண் புகழ் -ஈரில- /
————————————————————————
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
செந்நிறம் உடைய நெருப்பு
தானாகவே அருகில் வந்து
வெப்பத்தைச் செய்தாலும்
செந்தாமரைகள்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வானத்தில் தோன்றுகிற
வெவ்விய கிரணங்களை உடைய
ஸூ ர்யனுக்கே அலருமே அல்லது
நெருப்புக்கு மலர மாட்டா
வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன்
அனுபவித்தே தீர வேண்டியவையான
கொடிய என் பாவங்களை
தீர்த்து அருளாது ஒழிந்தாலும்-உனது
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
எல்லை இல்லாத உத்தம
குணங்களுக்கே அல்லாமல்
வேறு ஒன்றுக்கும் நான் நெஞ்சு உருக மாட்டேன்-
——————————————————————————————
5-7-எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7
———————————————————
மழை மேகம்-பசும் கதிர்கள்-வான் மறந்த காலத்தும்-கருத்து எழுந்த பாரிய மேகம்/
-அனுக்ரகம் எதிர் பார்த்தே இருப்பேன் /அடியேன்-மெய் துயர்-சத்யம்- சந்தேகம் இல்லை-அன்பும் மனசும் உன் மேல் வைப்பேன்
-கடியன்கொடியன் நெடிய மால் . –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
/ வந்தாய் போல வாரதே வருவாய் போல வருவானே /நல்ல குணங்களால் ராமன் -திருட்டு குணங்களாலே கண்ணன் உள்ளம் கொண்டானே//
நீர் நிலம் தேடி போகாது பயிர்கள் /கறுத்து எழுந்த பெரிய மேகம்/ அவனும் பரன்-உன் இடமும் எதிர் பார்ப்பு உண்டு /
அவசியம் அனுபவித்து தீர்க்க வேண்டிய பாபங்களை முடிக்க தான் வித்துவகோட்டு வந்து இருகிறாய் /
மா சுச –சர்வா பாப மோஷ இஷ்யாமி-செய்திலை ஆகினும்/ரஷிக்க வில்லை என்று சொல்ல சொல்ல
-மிக -உன் பால் நெருங்கி வரும்-ஒரு காலுக்கு ஒரு கால்-அதிகமாக- நீ எனக்கு என்று தெரிந்து கொண்டேனே-
/கிருபை பொழிவார்/கொடுத்து கொண்டே வெளுக்க மாட்டார்-எப்பொழுதும் கறுப்பு/ மேகம் வெளுத்து போய் விடும் வெட்க்கி
/மழை பொழிந்த உடன்/ சப்தம் போடும் கொட்டாது சப்தம் போடாமல் கொட்டும் குசேலர்க்கு உதவினாரே
/ மொண்ட இடத்தில் கொட்டும்/தசரதன் கௌசல்யை இடம் கேட்ட பின் அவர்களுக்குமீண்டும் உபதேசித்தானே ராமன்
/மின்னு மா மழை தவிழும் மேக வண்ணா முகில் வண்ணன் /அஞ்சேல் என்று வைத்த கை//
————————————————————————————
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மேகமானது
எவ்வளவு காலமும் மழை பொழியாமல் உபேஷித்தாலும்
பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
கரு நிறம் கொண்டு கிளம்புகின்ற
பெரிய மேகங்களையே
எதிர் பார்த்து இருக்கும்
அப்பயிர்களைப் போலே
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
தவறாது அனுபவிக்கப் படுகிற
என் துன்பங்களை நீ
போக்காமல் உபேஷித்தாலும்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
உனக்கு தாசனான நான்
என் மனசை உன்னிடத்திலேயே மிகவும்
செலுத்துவேன்-
———————————————————————————————-
5-8–தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே ! —5-8
————————————————————————————-
கல்யாண குணங்கள்-புகுந்து விளங்கு கின்றன // ஈடு பட்டு/நீயே புண்ணியனே /பிராப்த பந்து
/நதிகள்-கடல்-நோக்கி ஓடுவது போல /கடலை அடைந்து அல்லது நிற்காது
/நம சப்தம் யாரை பார்த்து சொன்னாலும் கேசவனையே சேரும் /கடலை அடையும் முன் தான் நிறமும் பெயரும்
– அது போல அவனை அடையும் முன் தான் குலம் கோத்ரம் ரூபம் எல்லாம்
//கடலே வராதே என்றாலும் நிற்காது .சேர்ந்தால் கடல் நீர் உயராது /
உன் திரு கல்யாண குணங்கள்/கொண்டல் வண்ணன் –என் உள்ளம் கவர்ந்தானை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாதே
/தாண்ட-கலக்க -ஆழம் பார்க்க முடியாது -கடலையும் அவனையும்//சமுத்திர ராஜன்-இவை புகுந்து நிறைவதும் இல்லை புகா விடில் குறைவும் இல்லை/
/எண் நிறைந்த சொத்து -இருந்தாலும் ஒரு சொத்தையும் விடாதவன் /
ஸ்வாமி பெரிய நம்பி திரு குமாரரை நீர் விட்டாலும் நாம் உம்மை விட மாட்டேன்/
/அபரிமித வைபவம் கொண்டவன்/வளவேல்.. பின்னைக்காய்- விலகி விடுவேன் ஆழ்வார் புன் சொற்கள் என்று
/ஸ்தோத்ரம் பண்ணுவது நா சத்தை பெற தான் /மிக்கு இலங்கு-கருத்தும் பள பளத்தும்-மின்னல் கூடிய மேகம் போல /
ஒளி மிகுந்து ஔதார்யமும் அழகும் / அளம் புரிந்த நெடும் தட கையன்
/காட்டேன் மின் உம் உரு உயர்கு காலன் என்பர் /மேகம் மால் இரும் சோலை தங்கி வந்த மேகம் -சிறப்பு- பைத்தியம்
/ அக்கார கனி சோழ சிம்க புரத்தில் தங்கிய மேகம்
திரு வேங்கடம் மேகம் சாம்யா பத்த மோட்ஷம் /கார் திரள் அனைய -கண்ணன்-
/உள் புக ஆனந்தம் கொடுக்கும் கல்யாண குணங்கள்
/ புவியும் இரு விசும்பும் நின் அகத்தே –என் செவியின் வழியே நீ புகுந்து என் உள்ளாய்-
யான் பெரியன் நீ பெரியை /ஆழ பொருளை அறிய கல்யாண குணங்கள் தெரிந்து /நினைக்க வைத்ததே நீயே -புண்ணியம்
-உன் தன்னை பிறவி பெரும் ..புண்ணியம் யாம் உடையோம் /
சித்த புண்யம்-நித்யம்- /நாம் பண்ணுவது சாத்திய புண்யம் -அநித்தியம்
/கைலாச யாத்ரை பாசுபத அஸ்தரம்-மலர் கண்ணனின் திருவடிகளில் போட்டு ருத்ரன் தலையில் அர்ஜுனன் அந்த புஷ்பம் கண்டானே /
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் /சாத்தியம் -சித்தம்-/ஜோதிஷ்டஹோமம்-சுவர்க்கம்-விதி வாக்கியம்
/ஆசை ஏற்பட்டு-இசைந்து-/விதி நடத்தி அனுஷ்டானம்/பலம்-நான்கு பகுதி விதி/இசைவு/செய்கை/பலன் /
/சரண கதி- ஈச்வரனே உபாயம் புத்தி பண்ணுவது-விதி வாக்கியம்/அனுமதித்து இசையானும் நின் ஆணை திரு ஆணை கண்டாய் என்று சொல்லி விலக்குவோம்-
இரா மடம் ஊட்டுவாரை போல உள்ளே இருக்கிறான் -தான் ஏற நாள் பார்த்து கொண்டு-இசையணும் நம்பிக்கை-
அனுமதி -மூன்றாவது அனுஷ்டானம்-செய்கை-தனியாக ஓன்று இல்லை-நாம் செய்வது சாத்தியம்-
அனுஷ்டானம்-பெருமாள் செய்ய வேண்டியது-அவர் ரட்ஷித்தார்-எனக்கு பலம்/புண்ணியம் அவன் தானே /
——————————————————————————————————————-
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
ஜல பிரவாஹம் திரண்டு
விளங்குகின்ற நதிகள் எல்லாம்
கண்டவிடம் எங்கும் பரந்து
ஆழ்ந்த கடலிலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
சென்று சேர்ந்து அல்லது
மற்று ஓர் இடத்தே புகுந்து
நிற்க மாட்டா
அவ்வாறுகள் போலே
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன்
மிகுதியாய் விளங்குகின்ற
காளமேகம் போன்ற
கரிய திரு நிறம் உடையவனே
உனது
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே
-எனது நெஞ்சின் உள்ளே புகுந்து விளங்குகின்ற
புண்ணிய ஸ்வரூபியாய் உள்ளவனே
உனது கல்யாண குணங்கள் தவிர
மற்று ஓர் இடத்திலே ஆழ்ந்திடேன்-
———————————————————————————————
5-9-நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–5-9-
—————————————————————————————
தெளிவான உதாரணங்கள் கீழே அருளினார்/ஐஸ்வர்யம் துரந்து-அவனை பற்றினாலும் ,ஐஸ்வர்யம் அவனை தொடர்ந்து
/வைத்த மா நிதி பற்றியதும் எல்லாம் கிட்டி அடையும் –பொருந்திய தேசும்–செல்வமும் சேரும்-தானே பின் தொடர்ந்து வரும் /
தன்னை பற்றி சொல்லி கொள்கிறார்/ ராஜா இருக்கிற நிலை விட்டு இவர் இருந்தாலும்
-கொல்லி காவலன் கூடல் நாயகன் ஆனாரே இவர் திருவேம்கடம் உடையானே பற்றியதும்/
வீடு பேறு-ஹனுமான்/அன்று சரா சரங்களை வைகுந்தத்துக்கு -நற் பாலுக்கு உய்த்தனன்-புல் பா ஒன்றும் இன்றி/
ஹனுமான் விபீஷணன் -விஷ்வக் சேனர் மூவரும் சேர்ந்து சந்நிதி
/வினய சேவை/என்ன நியமனம் என்று கேட்டு கொண்டே
/அச் சுவை பெறினும் வேண்டேன்/என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா/
வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே/இவர்கள் அங்கு தானிருப்பார்கள்
/வேண்டாம் என்று சொன்னாலும் இந்த மோட்ஷ செல்வம் வந்ததே இவர்கள் பின் -அது போல
– நீ என்னை ஒதுக்கி விட்டாலும் நான் உன்னை விடாமல் வருவேன்
/பிர பன்னன் அதிகாரிக்கு பகவானை ஈடு படுத்து கொண்டு அர்த்தம் கொள்ளணும்
/குலசேகர் உள்ளே ஆசையால் அவன் தவிர்த்தாலும்
-மாதா கைகேயி ஆசை பட்ட பரதனுக்கும் பிதா ஆசை பட்ட ராமனுக்கும் இன்றி பாதுகைக்கு பட்டாபிஷேகம்
-ஈஸ்வர நியமனம்/மின்னல் போல ஒளி விட்டு கொண்டு இருக்கும் சுடர் ஆழி கொண்ட – /நீள் செல்வம்-மிக உயர்ந்த மோட்ஷம்/
தங்க வேட்டை-வரை படம்-கதை-அவன் இடமே வந்தது போல-
வேண்டாம் என்று ஒதுக்கின அவன் இடமே சமயம் பார்த்து வருமாம்
-சரியான தருணம் பார்த்து/ மோட்ஷ லஷ்மி போலவும்-கை கழலா நேமியான்-மின்னல் திரு ஆழியை பிரியாது திரு ஆழி கையை பிரியாது
/ரட்ஷணத்துக்கு என்று இவை எல்லாம் கொண்டு வந்து காற்கடை கொண்ட பின் -தள்ளினாலும்- விட மாட்டேன்-
———————————————————————————————————————
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
உன்னையே விரும்பி
மிக்க சம்பத்தை விரும்பாவதனையே
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
தானாக வந்து சேர விரும்புகிற
அந்த ஐஸ்வர்யம் போலே
உன் மாயையினால்
நீ என்னை உபெஷித்தாயே யாகிலும்
மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா !
மிக்க ஒளியைக் கொண்டுள்ள
சக்கராயுதத்தை உடைய
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே–
உன்னையே அடைய விரும்பி நிற்பேன்
பகவத் பிரேமை உடன் செல்வம் உபேஷித்தாலும்
அது தானாகவே வந்து சேர்வது போலே
நீ என்னை உபேஷித்தாலும்
நான் உன்னையே விடாது நிற்பேன் –
அன்றிக்கே
முன்பு நெடும் காலம் ஐஸ்வர்யகாமனாய் இருந்த அதிகாரி
அது பெறாமல்
அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட
ஒரு அதிகாரி
விசேஷ விஷயமாக கொள்ளலாம் என்பர் தேசிகன்-
————————————————————————————–
5-10–வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே– 5-10
——————————————————————————————————————————————-
உபேஷித்தாலும் அவனை கெட்டியாக பற்றினவர்-சம்சாரம் பிறக்காமல் நரகம் அடையாமல் -மோட்ஷம் பெறுவார்
/ரட்ஷிக்க என்று வந்து இருக்கிற வித்துவ கோட்டு அம்மானே -அநந்ய கதி-வேறு புகல் அற்ற -இளையாது உன தாள் பிடித்து போக இசை நீயே
/புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே /
அகதிம்-கிடாம்பி ஆச்சான் சொல்ல ஸ்வாமி அவதாரம் ஆன பின்பு யாரும் சொல்ல கூடாது அழகர் தெரிவித்தானே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ இல்லார்க்கு அன்றோ ஸ்வாமி இரங்குவார்/
/வெற்றி பெற வேலும் சைன்யமும் கொண்டவர் -பிரதி பஷ -போக்கும்-அது போல அநந்ய கதித்வம்-என்ற ஆயுதம் கொண்டவர்
/கடல் போல ஆழம்- உள்ளே உள்ள ரத்னம் தெரியாது-திரு மொழியும் உள்ளே சூஷ்மம் நிறைய உள்ள நல் தமிழ் /
சம்சாரம் பிறக்கும் படி பாபம் செய்து இருந்தாலும் பிறவி இல்லை /
தாய்-குழவி/பர்தா-பதி விரத்தை/ராஜா பிரஜை/மருத்துவன்-நோயாளி
/வங்கத்தின் கொடி-பறவை/சூர்யன்-தாமரை/மழை-பயிர்கள்/நதி-கடல்
/பிர பன்னன்-செல்வம் /
ஒன்பது விதமாக சொல்லி அநந்ய கதித்வம் விளக்கி -அருளினார்-
———————————————————————
வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
நீ என்னை உபேஷித்தாய் ஆகிலும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
வேறு எவரையும் நான் சரணமாக
அடைய மாட்டேன் என்ற
அத்யாவசாயத்தை வெளியிட்டு
அந்த எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டு அருளிய
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
வெற்றியைத் தரும்
வேலாயுதத்தையும் சேனையையும்
உடையரான குலசேகரர் அருளிச் செய்த
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
நல்ல தமிழ் பாட்டுக்கள் பத்தையும்
ஓத வல்லவர்கள்
கொடிய பாபங்கள் செய்து இருந்தாலும்
நரகத்தில் சேர மாட்டார்கள்-
தருதுயரம் -தாய் குழந்தை உறவு -அனைவரையும் படைத்து ரஷிக்குமவன்
கண்டார் இகழ்வன – கணவன் -மனைவி -ஸ்வாமி சொத்து –
அனந்யார்ஹத்வம்-சம்ச்லேஷத்தால் இன்பமும்
விச்லேஷத்தால் துன்பமும் –
கரணங்கள் எல்லா வற்றாலும் அவனையே அனுபவித்து ஆனந்தம்
மீனோக்கு நீள் வயல் -அரசன் பிரஜை ரஷ்ய ரஷக பாவம்
வாளால் அறுத்து -மருத்துவன் நோயாளி -ஹிதம் அருளுபவன் -விசுவாசம் வேண்டும்
வெங்கண் திண் களிறு -மரக்கலம் -பறவை -அவனை அன்றி அமையாது ஆதார ஆதேய பாவம்
செந்தழலே வந்து -சூர்யன் -தாமரை -இன்பம் தருபவன் அவன் -நாயக நாயகி பாவம் போலே
எத்தனையும் வான் -கால மேகம் பயிர் -ஜீவன ஆதாரம்
தொக்கி இலங்கி யாறு-கடல் நதி -பெருமை -சிறுமை -இறுதியில் அவனை அடைவதும் -நாயக நாயகி பாவம் தொனிக்கும்
நின்னையே தான் வேண்டி -செல்வத்துக்கு உரியவன் -செல்வம் -ஸ்வாமி ஸுவம் சம்பந்தம்
வித்துவக் கோட்டம்மா -ஆழ்வார் இடம் உள்ள கருணை பெருக்கு அருளிச் செயல்களில் ஆழுமவர்கள் அளவில் வெள்ளம் இடம்
———————————————————————————-
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய வாச்சான் பிள்ளை திரு வடிகளே சரணம்.
குலசேகர ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply