பெருமாள் திருமொழி-பாசுரங்கள் -6-1/2/3/4/6-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை-

அவதாரிகை

/ஊடல் திறத்தில் அருளுகிறார் இந்த பதிகம்/..உகந்து அருளின தேசத்தை -மூன்றினை-அனுபவித்தார் கீழ் /

அர்ச்சையையும் விபவமும் சேர்ந்தே /ராமனும் கண்ணனும் அரங்கத்தில்

/விபவ அனுபவ ஆசை மிகுந்தது /தோள் தீண்டிய கிருஷ்ண அவதாரத்தை அனுபவிகிறார்

/கிருஷ்ண அவதாரத்தை அனுபவித்தவர்களின் பாசுரங்கள்-கோபிமார்கள்-சொல் கொண்டு அனுபவிகிறார்

/இடைச்சி பாவத்தில் ஆண்டாள் அருளியது போல/நாயகி பாவம்-/27  ஆழ்வார்-தாய் மகள் தோழி  பாவத்தில்

திரு மங்கை ஆழ்வாரும் பல அருளி இருக்கிறார்-தோழி பாசுரம் ஸ்பஷ்டமாக இல்லை தாய் மகள் பாசுரம் உண்டு-

ஆண் பாவத்தில் திரு இந்தளூர் பரி மள ரெங்கன் இடம் ஊடி இருக்கிறார்  /

பேய் ஆழ்வாரும் 1 திரு மழிசை 1  பாடல் பாடினது போல இருக்கும்/இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை

/ இத் தலையில் வேறு செய்வது ஒன்றும் இல்லை கிலாய்க்க தொடங்கி –

பிராட்டிமார் தசை -அடைந்து -விருப்பம் கொழுந்து விட்டு-ப்ரேமம் அதிகரித்து கூடுவது பிரிவது ஊடுவது சம்ச்லேஷ விஸ்லேஷ ஊடல் மூன்றும் உண்டு/

ஆழ்வார்-6-2- மின் இடை மடவார் பதிகம் போல பந்தும் கழலும் போகு நம்பி/

/ திரு மங்கை ஆழ்வார்-காதில் கடிப்பு 10-8 இட்டு ..இது என் இது என் -ஊடல் மூவருக்கும் பொது/

-ஆழ்வார் பகவத் விஷயத்தில் நின்ற வூற்றம்  எல்லாம் தோற்ற வன்மை-மிடுக்கு- உடைத்தாய் இருக்கும் /

திரு மங்கை ஆழ்வார் மென்மை தோன்றும்-முதலில் நீலன் -கலியன்-மிடுக்கு –தெம்பாய் இருந்தார்-குனிய வைத்தார்  /

/குலசேகர  பெருமாள்- ராஜ  குல மகாத்மயம் தோன்ற /

திரு கணாம்பி -நம் பெருமாளும் ஆழ்வாரும் ஒரே வட்ட மணை

சேர்ந்து பாடவும்  தூது விடவும்/

திரு மங்கை ஆழ்வாரும் மண் அளந்த தாடாளா .. நேராக பாட ஆரம்பிப்பார் நான்கு பாசுரங்கள் தான் பாட முடியும் /

மலையாள ஊட்டு போல ஆழ்வார் -தெம்பு-நும் அடியார் எல்லாருடும் ஒக்க  எண்ணி நினைப்பீர்-ஆழ்வாரை எடுத்து களிக்கிறார் இதில்

————————————————————————————

6-1-ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்

எனை பலர் உள்ள  இவ் ஊரில் உன் தன்

மார்வு தழு வதற்கு  ஆசை இன்மை அறிந்து அறிந்தே

உன் தன் பொய்யை கேட்டு

கூர் மழை போல் பனி கூதல் எய்தி

கூசி நடுங்கி யமுனை ஆற்றில்

வார் மணல் குன்றில் புலர  நின்றேன்

வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே— 6-1-

————————————————————-

மார்பு தழுவ ஆசை பட்டு இருந்து  இருக்க கூடாது/நீ பலருக்கு -ஒருத்திக்கு நான் -என்று சொன்னாய்-

நீ அல்லது  புகல் உண்டு-கண்ணா நீ சொன்னாயே-ஸ்வாமித்வம் சேஷத்வம் சொரூபம் நம் இடம் வந்த பொழுது நான் உன்னை அன்றி இலேன் என்பான்

/வார்த்தையை கேட்டு கண் அழகில் தோற்றேன் /குளிரிலே அகப் பட்டு

– திரு பாவை-கனைத்து இளம்-கீழே பால் வெள்ளம் மேலே பனி வெள்ளம் நடுவில் மால் வெள்ளம்

/கூசி-யார் பார்கிறார்களோ என்று நடுங்கி அச்சம் பனி/யமுனை-ஏகாந்த இடம் இல்லை சர்வ சாதாரண தேசம்

-யமுனை ஆற்றில்-மறைவில் இல்லை– வார் மணல்  குன்றில்-காவேரி உசத்தி அரங்கனை மணல் மேட்டில் காட்டுவது போல

/அது போல யமுனை ஆற்றில் திட்டில் நிற்க வைத்தான்/ பிடித்தஇடம்/போகம் ஏகாந்த இடம் கூடாது-

அடுத்த நாள் காலை /மறந்து -புலர நின்றேன் –

எதுக்கு நின்றாய் -மெதுவே கேட்க- உன்னை நம்பி- இல்லை

-உன் தகப்பனாரை-ஒரு வார்த்தை அறியாத -சத்வ குணம் -உன் சௌந்தர்யம் பார்க்க

——————————————————–

பிரணய ரோஷம் கொண்ட கோபிகள்
கண்ணபிரானை வெறுத்து உரைக்கும் பதிகம்

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர்
அழகிய புஷ்பங்களை அணிந்த
பரிமளம் மிக்க கூந்தலை உடைய இடைப் பெண்கள்

எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
எத்தனையோ பேர்கள் இருக்க
பெற்ற இந்த திருவாய்ப்பாடியில்
உன்னுடைய

மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே
மார்போடு அணைவதற்கு
ஆசை இல்லாமையை
நன்றாக அறிந்து வைத்தும்

உன் தன் பொய்யை கேட்டு
உன்னுடைய பொய்யான வார்த்தைகளைக் கேட்டு
அவற்றை மெய் என மயங்கி
கனவிலும் போய் பேச அறியாத வாசு தேவர் வயிற்றில் பிறந்த நீயும்
தந்தையை ஒத்து இருப்பாய் என்று நம்பிக் கெட்டேன்

கூர் மழை போல் பனி கூதல் எய்தி
மிக்க மழை போல் பெய்கிற
பனியால் உண்டான குளிரிலே அகப்பட்டு

கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
யார் பார்த்து விடுவார்களோ என்று கூச்சம் அடைந்து
நடுங்கிக் கொண்டு
யமுனை ஆற்றில்

வார் மணல் குன்றில் புலர நின்றேன்
பெரியதோர் மணல் குன்றிலே
பொது விடும் அளவும்

வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே–
உன் வரவை எதிர் பார்த்துக் கொண்டு
அங்கேயே காத்து நின்றேன் –

—————————————————————————————-

6-2-கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி

கீழை அகத்து தயிர் கடைய

கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று

கள்ள விழியை விழித்து புக்கு

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ

வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப

தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்

தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

—————————————————————————————–

வேறு ஒரு பிராட்டி வார்த்தை/10 பாசுரங்களும் 10 பெண்களின் வார்த்தைகள் இதில்

/சிறுமி/மடப்பம் உடையவள் /தம் வீட்டுக்கு கீழை அகமாம்-வீடு வாங்கி இருக்கிறாம்/மேல் விழுந்தானாம்

/பசியன் சோற்றை கண்டால் போல /மகா பாரதம் போல எல்லாம் பண்ணினான் /குழல் அவிழ்ந்து /முத்து போல வேர்த்து /வாய் துடிக்க /

மெய்-எப்படி தெரியும்-தாமோதரா-என்றாள்-தழும்பு காட்டி கொடுக்குமே /செமந்த மணி திருட்டு பட்டமும் கட்டினார்களே

/சொல்லிற்று  எல்லாம் மெய் என்று கொள்பவள்-மடப்பம் உடையவள்-பாவனை க்கு ஏற்ப தானே கோகுலத்தில் அகமும் உண்டாய் அதற்க்கு கீழ் அண்டை பக்கம்

/மாமான் மகளே- ஆண்டாள்-பிரகிருதி சம்பந்தம் ஆசை பட்டாளே

/ஆழ்வான் ஆண்டான் போல தேக  சம்பந்தம் இல்லையே என்று குறை பட்டு கொண்டாரே /

/கீழை மேலை வடக்கு-கர்ம ஞான பக்தி- உபாயம்- தன் பற்று உள் அசல் /வீட்டுக்குள் இருக்கும் விரோதி -/

/மூலை அடி நடந்தது வேறு ஓர் இடத்தில் இல்லை/ ஊர் எங்கும் அடி ஒற்றி திரி கிறீரே  தனித்து தயிர் கடைவார் உண்டா என்று

/அலப்ய லாபம் பெற்றால் போல ஓடி சென்றாயே -நானும் கடைவன்-கெட்டி தயிர்-சடக்கென வெண்ணெய் கிடைக்க நானும் சேர்ந்து கடைய

/தேவர் அசுரர் வாங்க -தாளும் தோளும் சமம் இல்லாத பல பரப்பி-பிறர்கை விட்டால் -பிறர்  காரியம்-அங்கு நான் இங்கு நானும்

-உம்-தன் கார்யம்-சேர்த்து வேண்டும்-இது தான் தனக்கு பிரயோஜனம் -இடை களியிலே புலவர் நெருக்கு உகந்த பெருமான்-இவன் கள்ள விழி அவன் கெண்டை ஒண் கண்-

மனசால் வேற /நோக்கும்  செயலும் மனசும் கையும் -அவளுக்கு வெண்ணெய் இவனுக்கு வேற

/நோக்கு வேறு செயல் வேறு மனசு வேற / சிந்தையாலும் சொல்லாலும் ..தேவ பிரானை /

நோக்காலே எல்லாம் மெய் என்று விசுவாசம் /இவள் பார்க்காமல் அவளை பார்க்க /

மேல் பண்ணின வியாபாரங்கள் மகா பாரதம் பண்ணி உரைக்கில் பாரதமாம்

/ வண்டு உட்கார்ந்து -அவிழ -வண்டு என்ன ஆகுமோ கவலை ரட்ஷணத்தை விட்டால் ஆள் இல்லை

/அவிழ்ந்த அழகு நன்றாக இருக்காம் -அவளை மயக்க-/வாய் துடிக்க -கஷ்டமான செயல் செய்கிறான்-சாகச செயல்

/கடல் கடையும் பொழுதும் கேசவன் -வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை

இங்கும் ஆழ்வாருக்கு கேச பாச அழகு /உன் கழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டவோ

/அதர ச்பரணம் துடிக்க /புணர்ச்சிக்கு உரித்தான இவை /அக பொருள் இலக்கணம் சுனை ஆடல்

/ தண்-கண்ணன் -ஏரார்  இடை நோவ-போல-நெஞ்சுக்கு ஏற்ற தயிர் /உன் உடம்பில் தழும்பு -உன் செயல் காட்டி கொடுக்கிறதே

/பற்று உடை உரலினோடு ஏங்கி இருந்த  எளிவே /பிரேமத்தால் கட்டினாள் யசோதை

/ நஞ்சீயர் தழும்பை பார்க்க திரை உள் சென்று பார்த்த ஐதீகம்

/பக்த பராதீனன் /அன்றும் அமுதம் கடைய நோக்கு இல்லை அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்தாயே /

———————————————————————————–

கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கயல் போன்ற அழகிய
கண்களை உடையளான
ஒரு பெண் ஆனவள்

கீழை அகத்து தயிர் கடைய
எனது வீட்டுக்கு கீழண்டை வீட்டில்
தனியே தயிர் கடைவா நிற்கக் கண்ட
இவளை வசப் படுதுகைக்கு இது நல்ல
சமயம் என்று நிச்சயித்துக் கொண்டு

கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
நானும் உன்னோடு கூட
சீக்கிரமாக இத்தயிரைக் கடைகிறேன் என்று
வாயால் சொல்லி

கள்ள விழியை விழித்து புக்கு
திருட்டுப் பார்வை பார்த்து
அவள் அருகே சென்று சேர்ந்து

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ
வண்டுகள் படிந்த புஷ்பங்களை
அணிந்த மயிர் முடியானது
அவிழ்ந்து அசையும்படியாக

வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
ஒளி பொருந்திய முகமானது
வேர்க்கும் படியாகவும்
சிவந்த அதரமானது
துடிக்கும்படியாகவும்
திருட்டு விழி விளித்து

தண் தயிர் கடைந்திட்ட வண்ணம்
குளிர்ந்த தயிரை
நீ கடைந்த படியை

தாமோதரா! மெய் அறிவன் நானே
நான் மெய்யே அறிவேன்
நீ தயிர் கடைந்த வரலாறு எனக்குத் தெரியும் அப்பா
இன்னமும் அங்கேயே தயிர் கடையப் போ
இங்கே உனக்கு என்ன பணி-ஊடல் பேச்சு-

——————————————————————————-

6-3-கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை

கடை கணித்து  ஆங்கே ஒருத்தி தன் பால்

மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து

ஒரு பேதைக்கு பொய் குறித்து

புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை

புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை

மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே

வளர்கின்றதால்  உன் தன் மாயை தானே –6-3

———————————–

அது இது உது -நீ செய்வது எல்லாம் ஆனந்தம்/பிரணய ரோஷமும் ரசிக்கும்

/பிரணய கலகம்-பங்குனி- உத்தரம் /குதிரை வாகனம் கமல வல்லி நாச்சியார் சேர்த்தி ஆன பின்பு

-எட்டு திரு வீதிகளிலும் புறப்பாடு/நம் பெரியார் சொல் படி பொறுத்தோம்-/மாலை 1 மணிக்கு சேர்த்தி-/

நேர்  கொடு அனுபவித்து செவிக்கணும்/அன்பின் வெளிப்பாடு/கூந்தல் அழகியை கடை கண்ணால் நோக்கி

/அதே சமயம் மனம் வேறு ஒருத்திக்கு /வேறு ஒருத்திக்கு  வாயால் உரைத்து /இன்னும் ஒரு  பேதைக்கு பொய் குறித்து

/வேறு ஒரு பெண்ணை புணர்த்தி-அவளுக்கும் மெய்யன் இல்லையாம்/சேஷ்டிதங்கள் வளருகின்றனவே /

இந்த ஐவரில் ஒருத்தி பேச /நெய்த்து இருண்டு பூவை உடைய கூந்தல்-தானும் அவள்கூந்தல்  அழகில் தோற்றேன் என்று காட்ட கடை கணித்தானாம்

/நேராக பார்த்தல் பொது கணிப்பு ஆகுமே /அவளை அல்லது அறியேன் என்று இன்னும் ஒருத்தி நினைக்கும் படி மனம் வைத்து

-ராமன்-சீதை இடம் இருந்தது போல /வேறு ஒருத்திக்கு அடியேன்-என்று சொல்லி /

தும் மே அஹம் மே /இது அன்றோ எழில் ஆலி– சுட்டி காட்டி /நீ இருக்கிற இடமே /போகும் பொழுதில் ஆழ்வார் கட்டை விரலை காட்டி சொன்னானாம் /ஒரு பேதைக்கு பொய் சொல்லி-

சொன்ன வார்த்தை விச்வசித்து அக வாய் அறியாத இளம் பெண்-பேதை

/புரி குழல் மங்கை-அலைத்து குலைத்து இருக்கும் குழல் -பேணி பாதுக்காக்கும் அவள்-

இவள் கண்ணனுக்காகா தலை பேணாதவள்- புணர்ச்சிக்கு ஏற்ற-அவளுக்கும் மித்யா ஆலிங்கனம்-

/பருவம் நிரம்புவதற்கு முன் தீண்டினாரை கொல்ல புக்கன்/ இன்றும் கொல்லுகிறான் மெய்யன் இல்லை/

தீண்டுபவரை கொள்ளுவது ஸ்வாபம்/ வஞ்சனையும் வயசு கூடுவது போல வளர்கின்றது /

ஆத்மா ராமன் /கர்ம வசத்தவன் இல்லை/சுகர்-மைத்ரேயர்-ராச கிரீடை-சண்டை முடிந்ததும் அரசன் இழந்த பிள்ளை,

தாய்-பகவான் மட்டும் , கணவன் போல ,மனைவி போல தன்னை கொல்ல/உயந்த ஆத்மா –

திரு மேனி வடிவழகு-பல்லவமே விரலும் ..முக் கோல் தன் அழகும் .. எதிராசன் வடிவழகு என் இதயத்துள் இருப்பதால் இல்லை  எனக்கு எதிர்

-பெண்களும் சொல்லலாமே -பகவத் பக்தி ஞானம் தானே வடி அழகு ஸ்வாமி உடையது /

6-2/ச்வாபதேசம் பண்ண பார்த்தார்கள் முன்னோர்கள் /பட்டர்- இவ் ஊடல் பிரணய ரோஷம் ஆக இருக்கட்டும்

வைதிக காமம் //தூது விடுகிறாள் அம்சிறைய மட நாராய் -பசலை நோய் கண்டு -இட்ட கை கால்களாய்-இப் படி ஒருத்தனுக்கு சொல்ல நேர்ந்ததே

-கேட்டு எழுந்து போனவனை பார்த்து  தலையில் அடித்து கொண்டாராம் நஞ்சீயர்

/மின் இடை மடவார்- மின் இடை சேர் கண்ணன்-5-3 ஆழ்வார் மடல் ஊருதும் என்றார் ஆசை பட்டார்

இரவு வந்தது 5-4 ஊர் எல்லாம் துஞ்சி -ஆவி காப்பார் என்று வசனம் பட்டார் /

அடுத்து நம்பி அழகு உருவ வெளி பாட்டால்- செல்கின்றது என் நெஞ்சமே -உரு வெளிப்பாட்டால் 5-5 /அனுகரித்து தரிக்க

5-6 கடல் ஞாலம் செய்வேனும் நானே என்னும்

/அடுத்த 4 சரணாகதி /முகம் காட்டவில்லை 6-1/ திரு வண் வண்டூர் -தூது விட்டார்

/பேசி வருவதற்குள் பொறுக்க வில்லை/வருவான் என்று நம்பிக்கை வந்தால் தான் என்ன பண்ண போவேன் என்று சொல்கிறார்

மேல் விழ விழ வர வில்லை வந்து நிற்கும் பொழுதும் உனக்கு நான் இல்லை என்பேன் .

விட்டு பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே /உனக்கே நாம் ஆட செய்வேன்

-ஏகாந்தம் ஸ்தலம் தேர்ந்து எடுத்து கைகேயி தசரதனுக்கு வர காத்து இருந்தது போல இருந்தார்/

ஒற்றர்களை வைத்தார்/கதவு சாத்தி முகத்தை மாற்றி வைத்து இருக்கிறாள்

/ அரை குலைய தலை குலைய ஓடி வந்தான் வண்டு சொன்னதும்/

அகில காரண அத்புத காரணாயா நாராயணா இடர் நீக்காய் என்றதும் ஓடி வந்தானே

-வரும் பொழுது புடவை அனுப்பினது நினைவு-போனால் அல்லது பராங்குச நாயகி தரிக்க மாட்டாள்/பீஷ்மர் சரம நிலை நினைவு வர -எண்ணிலும் வரும்-

வேகம் கூட்டி/தண்ட காரண்ய மக ரிஷிகள் காட்டி வெட்க்க பட்ட ராமன் போல /நினைந்து கொண்டே போனானாம் இவை எல்லாம்

/மாசறு சோதிக்கே போய் இருக்க வேண்டும்//மனோ வேகம் /தோட்டத்துக்கு போக உபாயம் தேடினானாம்

/கூட்டணி-பிரிக்க- புருஷ கார -சீதை முன் இட்டு லஷ்மணன் போனால் போல

/ இங்கே கிட்டே விடாதே பேசி வைத்து இருக்கிறார் தோழிகளை/ நேராக போனால் சுக்ரீவன் மனசை மாத்தி விபீஷணனை கூப்பிட்டு வர

/மதுரம் வாக்கியம் பாடி பார்க்கலாம்/ பாரதம் ராமாயணம் நினைவு வர /ஹனுமான் கதை சொல்லி சீதையை

/ முளை கதிரை நாம சங்கீர்த்தனம் பண்ணி /பிரணய ரோஷம்/ ஹிரண்ய தேசத்தில் நாராயணன் சொன்னால் போல ஆகி விடும்

/ சுத்தி சுத்தி வந்தானாம்/ ஜீவன அதிஷ்டம் பட்டால் போல -பந்தாட்டம்-முகத்தை மாறி இருந்தால் தைர்யம்/ வரா விடில் ஒன்றும் இல்லை என்று காட்ட

-/ பந்து காலில் பட /மோதரம் கண்ட ஆனந்தம்/ நிற்க -என் உடைய பந்தும் கழலும்  தந்து  போ நம்பி/

/ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு

கூத்த வப்பன் தன்னை குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள்

இவையும் ஓர் பத்து இசை யோடும் நா தன்னால் நவில வுரைப்பார்க்கு இல்லை நல் குரவே

விட்டு விட்டு போக முடியாது /அழகுக்கு தோர்ப்பர் இந்த கோஷ்டியில் இல்லை கண் அழகு மிக்கவர்கள் உள்ள  கோஷ்டி மேன்மை காட்டலாமா –

அந்த புரத்தில் ஆனை காலில் இட்டு துவைக்க ஒண்ணாது  /தாழ்ச்சி காட்ட-ஓர் அடி எடுத்து வைக்க–நினைத்தான்-

நாம் சொல்ல நாம் போகவா அனைவருக்கும் அந்தர் ஆத்மா /காவேரி ஓட தீர்த்த தாகம்/பாலை வனம் போகவா

/அல்பம் காலம்  தாழ்ந்து வந்ததால் போ என்கிறாள்/அன்பு மிக்கு தான் சொல்கிறாள் வேறு எங்கு போனால் ஐஸ்வர்யம் கைவல்யம் கேட்ப்பார் தான் இருப்பார்

/ மேல் விழுந்து  ரட்ஷிக்கலாமா மென்மை முடிந்தே போவாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை போல போகவும் இருக்கவும் முடியாத படி திண் டாடுகிறான் /

கலந்தான் -சேர கூடாது என்று இருந்தேனே- நல் குரவும் சேராதவற்றை சேர்த்த விண்ணகரம் பெருமானை பாடுகிறார்/

பொறுக்க மாட்டாத துடிப்பு/அவனும் வராமல் இல்லை

—————————————————————————————————-

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
புஷ்பங்களை அணிந்துள்ள
கறுத்த கூந்தல் உடைய
மயிர் முடியை உடையளான
ஒரு பெண் பிள்ளையை

கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
கடைக் கண்ணால் பார்த்து விட்டு
அப்படி இருக்கச் செய்தே
வேறு ஒரு பெண் பிள்ளை இடத்திலே

மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
மனத்தை பொருந்தச் செய்தே
அவளையும் விட்டு
வேறு ஒரு பெண் இடத்தில்
உனக்கு நான் அடியேன் என்று சொல்லி வைத்து

ஒரு பேதைக்கு பொய் குறித்து
வேறு ஒரு பெண்ணுக்கு
சம்ச்லேஷத்துக்காக
பொய்யாகவே
ஒருஏகாந்த ஸ்தலத்தை
குறிப்பிட்டு வைத்து
ஆக இத்தனை போரையும் ஏமாத்தி விட்டு

புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
கடை குழன்று சுருண்ட
கூந்தலை உடையளான
ஒரு இளம் பெண்ணோடு

புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
கலவி செய்யா நின்றாய்
அந்தப் பெண்ணுக்கும்
பொய்யனாய் இரா நின்றாய்

மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
இரட்டை மருத மரங்களை
முறித்து தள்ளினவனே
நீ வளர்வதோடு கூட
நீ பருவம் நிரம்புவதற்கு முன்னமே
உன்னைத் தீண்டியவர்களை கொன்று முடித்தாயே
உன்னைத் தீண்ட நான் அஞ்சா நின்றேன் என்கிறாள்

வளர்கின்றதால் உன் தன் மாயை தானே
உன்னுடைய கள்ளம் கபடுகளும்
வளர்ந்து வாரா நின்றன
அந்தோ –

———————————————————————————————

6-4-தாய் முலை பாலில் அமுது இருக்க

தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று

பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு

பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்

ஆய மிகு காதலோடு யான் இருப்ப

யான் விட வந்த என் தூதி யோடே

நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்

அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே– 6-4-

———————————————————————————————

விவேக ஞானம் இல்லை என்று ஏச நின்றாய்/விட்டு பிரிந்தால் தாங்க முடியாத பசலை உடன் நான் இருக்க

/நான் விட்ட தோழியை தொடர்பு கொண்டாயே/ஸ்வாபம் மாற  வில்லை

/அற்புதம் பாலகம் தேவகி இடம்/ தாய் முலை பால் யசோதை /நோற்று– முலை உண்டால் நெரித்தும்  தரித்தும் –

–இவளை விட்டு பூதனை பாலை குடித்தாயே/-தனக்கு தான் தேடும் நன்மை விலை பால் அவன் ரட்ஷிப்பான் தாய் பால்/

முப் போதும் கடைவாள்- சந்த்யா வந்தனதுக்கு ஆள் வைக்காதது போல -வர்ணாஸ்ரம தர்மம்

/அகாரத்துக்கும்-கண்ணனையும்-மாடுகளையும் கட்டி வைப்பாள்- அகாரத்துக்கும்-ஆகாரத்துக்கும் வாசி தெரியாதவள் யசோதை/

/ முற்றும்  உண்ட கண்டம்/பசிக்கும்-பூதனை வந்தாள்-கண்ணனுக்கே-ஏதாவது உகப்பான்

/தவழ்ந்து -தளர் நடை இட்டு-அன்பு இல்லாதவள் -பால்ய சேஷ்டிதங்கள் விட்டில் பூச்சிகள் போல விளக்கில் விழும்

/பாலை வேகமாக உறிஞ்ச- உயிரும்  சேர்ந்து  வந்ததாம் /ஆசை துவேஷம் விவேக ஞானம் இன்றி

/ஆய மிகு காதல்-ஆயம் பொன்-வர்ணம் வளரும் காதல்-பசலை நோய்- வண்ணமும் பொன் நிறம் ஆவது//

மேனி விழுத்து – தூதி-அவளுக்கு நினைவு இன்றி–மிகு போகத்தை உகந்தாயே

சேம நல் வீடும்–சீரிய நல் காமமும்-சீரிய என்ற அடை மொழியால் கண்ணனுக்கே ஆம் அது காமம்

/பக்தி-காமமே மோட்ஷம்-ஆழ்வார்/ஏரார் நிறை கதிரோன் –ஆரா அமுதம்-அங்கு -எய்தி-பரி காசம்–வாராது ஒழிவது ஒன்றும் உண்டே–

———————————————————————-

தாய் முலை பாலில் அமுது இருக்க
தாயான யசோதை பிராட்டி உடைய
முலைகளிலே
போக்யமான பால் இருக்கச் செய்தேயும்
அதனை விரும்பாமல்

தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று
தவழ்ந்து கொண்டு
தட்டுத் தடுமாறி நடந்து சென்று

பேய் முலை வாய் வைத்து நஞ்சை வுண்டு
பூதனையினுடைய முலையிலே
வாயை வைத்து
அம்முலை மேலே தடவிக் கிடந்த
விஷத்தை உறிஞ்சி அமுது செய்து

பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
இப்படி செய்தது காரணமாக
பைத்திய காரன் என்று
அயலார் எல்லாம் பரிஹசிக்கும் படி
நின்ற பிரானே

ஆய மிகு காதலோடு யான் இருப்ப
நான் மிக ஆசையோடு
எதிர்பார்த்து இருக்கையில்

யான் விட வந்த என் தூதி யோடே
நீ என்னால் தூது அனுப்பப் பட்டு
உன்னிடம் வந்த
என் வேலைக்காரியிடம்

நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
நல்ல போக ரசங்களை
நன்றாக அனுபவித்தாய்

அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே
அந்தச் செய்கையும்
உனது தீங்குக்கு தகுந்து இருக்கும் ஆய்த்து-

———————————————————————————————

6-5–மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு

வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே

பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு

போகின்ற போது நான் கண்டு நின்றேன்

கண் உற்றவளை  நீ கண்ணால் இட்டு

கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?

இன்னம் அங்கே  நட நம்பி ! நீயே— 6-5

————————————————————–

வாடைக்குக் கூடல் இட்டு- முக்காடு/ பொன் போல கோள் சொல்லி கொடுக்கும்//இடை நுடங்காத படி இடுக்கி கொண்டு போகிறான்

/பெண்கள் பேரில் கோபம் -உண்மை பேசுகிறாள்/ கொண்டாட வில்லை/உண்மையாகவே மின் இடை கொண்டவர்கள் /

கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷம் –விதுர போஜனம்/ரெங்க மன்னார் ஆண்டாள் போல -இடை-நடு-மத்யம பதம்-ஈச்வரனே ரட்ஷகன்

-அதனால் அணைத்து கொண்டு போகிறான்-வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு

இடுப்பு மெலிசாக இருக்கிறது எனக்கு எட்டு கைகள் உண்டு அணைத்து கொள்ளட்டுமா என்று கேட்கிறானாம்/

வீங்கு அருள்- முன் அடி தோன்றாத
அதி  இருள் /என் தன் -வீதிவழியே வாராயே என்று -அருளாழி புள்  கடவீர் அவர்  வீதி  வழியே ஒரு நாள் —இங்கு வீதி வழியே -போனீரே கேட்கிறாள் -இங்கும் பக்தி தான்-

உனக்கு தெரிய வேண்டும் என்றே உன் தெருவில் பொன் ஆடை போத்தி வந்தேன்

/உன்னை போல் அந்ய பரர் இல்லை நான்-நீ போகும் இடம் எல்லாம் அடி ஒற்றுவதே –

தொடர்ந்து வருகிறாளா என்று அவனும் ஓர கண்ணால் பார்கிறான்/கண்ணன்-பேர்-எல்லார் கண் அடியும் அவன் மேல் தான்  படுகிறதாம் விரஜை பூமியில்

//நீ பார்த்ததும் தோற்றாள் தூது செய் கண்கள்//சேர்க்கும் வரை-ஜிதந்தே -தோற்றோம் மட நெஞ்சே தாமரை கண்கள் கொண்டு ஈர்தியாலோ

–வேய் மரு– தாமரை கண்களை கொண்டு ஈர்தியாலோ—இணை கூற்றன்களோ அறியேன்

-சேர்ந்த பின்பு திரு கண்களை இப்படி பேசுவார்கள் ///இவளை ஒரு கையாலே அணைத்து எதிர் வந்தவளை அடுத்த கையாலே ஜாடை காட்டி கொண்டு போகிறானாம்/

அப் பாவி -மெய்-என்று நினைக்கிறவளை வெறுக்கும் படி  விட்டு ஏன் வந்தாய்- -குற்றம் இல்லை அநந்ய கதி அன்றோ

/ உன் விட்டு எங்கு போவேன்-என்று சொல்ல- நீ பூர்ணர் அல்லையோ-நம்பி-குறைவாளன் போல பேசாதே

/நிறைந்த அவள் இடம் போய் கோள் என்கிறாள் //என் உடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி-ஆழ்வார்/அது போல

-இவள் பார்த்த பார்வையிலே அருகே வந்தானாம்–ஜெய விஜயர் போல நான்கு பக்கமும் காவல்

-எதேச்ச்சியாக பந்து வர -நெற்றியில் வைத்து மார்பில் அணைத்து கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடுக்கனாம்

/என்னது என்று நினைக்க கூடாது-இதம் நமம-எனக்காக இல்லை சொல்லி கொடுக்கணும்-

அதனால் என் பந்தும் கழலும் தந்து போகு நம்பி/ இப்படி கூட தழுவி கொண்டான்/

அறிவிலிகள் நம்மது சொன்னால் கீழே போடுவான் ஞானம் -மம காரம் விட்டவளின் மாமா காரம்

-அடி களைஞ்சு பெரும்-கூட சேர்ந்து அணைந்து கொண்டான்//தந்து போகு- கை பட்டது ரோஷம்-வேண்டாம் பந்தே த்யாஜ்யம்-

எடுத்து போகு சொல்ல வில்லை/ தந்து அவன் கை பட்டது பிரசாதமே ஜீவனம் என்று இருக்கிறாள்

/அவன் போனாலும் விரக தாபம் தீர்க்க இது/தந்த பின் போக மாட்டான்/ எடுத்து போ என்றாள் திருப்தியாக   போவான்

/ தர மனசு வராது அதனால் போக மாட்டான்/போகு நம்பி உன் தாமரை –கிட்டே வந்தானாம் முதலில்

– அதனால் மீண்டும் போ/ போ என்றாள் வா என்று பிரணய ரோஷம்/ துளிர் விட்டு போனது பார்த்து பேச ஆரம்பித்தாலே பேசினதே போதும்

/அருகே அருகே வந்தானாம் புடவை தலைப்பை தொடாதே

/போகு நம்பி உன் தாமரை புரை கண் செவ்வாய் முருவலையும்-சிரித்தானாம்-ஆகுலங்கள் செய்ய அழியாதர்க்கே  நோற்றோமே யாம் /

————————————————-

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
மின்னல் போன்ற சூஷ்மமான
இடையை உடைய பெண்ணை
அணைத்துக் கொண்டு

வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
மிக இருள் வேளையிலே
எனது வீதி வழியிலே

பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
பீதாம்பரத்தாலே
முட்டாக்கு இட்டுக் கொண்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்

கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
அவளும் நீயுமாக போகிற போது
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்
அன்றியும்
கண்ணில் தென்பட்ட வேறு ஒருத்தியை

கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
இன்ன இடத்தே வா என்று
கையாலே அழைத்து சம்ஞ்ஞை பண்ணினதையும்
பார்த்துக் கொண்டே தான் இருந்தேன்

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
அந்த பெண் மணியை விட்டு
என்னிடத்துக்கு
ஏதுக்கு வந்தாய்

இன்னம் அங்கே நட நம்பி ! நீயே
ஸ்வாமி இனிமேலும்
அவளிடத்திலே நடப்பாயாக
நான் கண்டு வயிறு எரிய வேணும் என்று
எனது தெரு வழியே போனாயே

———————————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை  திரு வடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார்  திரு வடிகளே சரணம் .

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading