பெருமாள் திருமொழி–பாசுரங்கள் -5-1/2/3/5-4/- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

அவதாரிகை–

அவன் அனுமதித்து தான் சம்சாரத்த்கில் இருக்கிறோம் நாம் அனுமதித்து தான் ஸ்ரீ வைகுண்டம் பெறுகிறோம் எனபது தவறு /

-இழவுக்கு அடி கர்மா// பேற்றுக்கு அடி கிருபை //அசோக  வனத்தில் இருப்பதற்கு தானே காரணம் என்கிறாள் சீதை பிராட்டியும்

/கூக்குரல் இட்டு ஆர்த்தி தலை எடுத்து  நான்கு பதிகம் பாடினது –சாதன கோஷ்டியில் சேர்த்து விட்டானோ-தானே அடையலாம் -என்று நினைகிறாரோ- அநந்ய கதித்வம் இதில் அருளுகிறார்

உய்ய வந்த பெருமாள்/அம்பரீஷர்/பஞ்ச பாண்டவர் கதை ஸ்தல வரலாறுகள் உண்டு

/பிரார்த்தனைக்கு எழுந்து அருளி இருக்கிறார்/வியூக ரூபத்தில் சேவிக்க ஆசை/நான்கு மூர்த்திகளையும் சேவிக்கலாம்

/நடுவில் அர்ஜுனன் /பரம சிவனாரும் கிங்கரராக இருக்கிறார்/நீளா நதி உண்டு/காசி விஸ்வ நாதரே வந்து இருக்கிறார்

/10 திவ்ய தேசங்களில் சிவனும் உண்டு/தாள் சடையும்-சங்கர நாராயண ரூபம் சௌலப்யம் -கூராளும் தனி உடம்பன்/உய்ய  வல்லி நாச்சியார் /

அநந்ய கதித்வம் சொல்லும் பதிகம்/ஆகிஞ்சன்யம்-நோற்ற நோன்புபதிகம்- அநந்ய கதித்வம் ஆரா அமுதம் பதிகம்

/உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன்/திரு மந்தரத்தால் சொன்னது -இன்றியமையாத அடிமை /அகங்காரம் மம காரம் இன்றி-நான் என்னது  இன்றிருக்கும்-

-இவை தான் சேஷத்வதுக்கு விரோதி –நீர் நுமது  வேர் முதல் மாய்த்து /விஷ விதைகள் சம்சார விஷ மரம்/விஷ்ணு புராணம்

/சேதனர் அனைவருக்கும் இவை போது/-ராஜாக்கள் இவை அதிகரித்து இவை வச்யமாய் இருக்கும்/ஆசை பட்ட பிராமணர் அழிவான் ஆசை படாத ராஜா அழிவான்

சேஷத்வம் நிறம் பெற நித்ய கைங்கர்யம் பண்ண வேண்டும்///நிலா தென்றல் சந்தனம் இவை பரார்த்தம் ஆகாது பொழுது சொரூப சித்தி இல்லை -பயன் பட வேண்டுமே

/அடிமை ஞானம் மட்டும் போராது பயன் பட வேண்டும்/அனந்யார்க்க  சேஷ பூதன்-/அகங்காரம் மம காரம் சொரூபத்தை அழிக்கும்/பதிம் விச்வச்ய அவன்

நாராயணம் சிவம் அச்சுதம்/அவன் ஸ்வாமி நாம் உடைமை/ஒன்றுக்கும் கடவன் அல்லன் /உடமை தன்னை  தானே ரட்ஷிக்காது

/எல்லாம் அவன் சொத்து நிலா புஷ்பம் சந்தனம் நாம் எல்லாம்/ஞானம் இருகிறதே-புஷ்பம்  தான் யார் என்று தெரியாது எதற்கு பயன் தெரியாது /

/நமக்கு இருக்கும் ஞானமே இதை காட்ட தானே/வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஞானம் தானே /

மோட்ஷம் கிட்ட இந்த ஆத்ம ஞானம் வேண்டும்  –முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி-ததீய சேஷத்வ  பர்யந்தம்

-நம -அடியார்க்கும் அடிமை/தனி மா தெய்வம்-புகுதல் அன்றி அடியார்கள் அடி கூடுவதே வேண்டும்/

/சம்சார இன்பம் ஆசை விட்டு பகவான் அடி பிடித்து/ அதை தாண்டி பாகவதர் /தப்பினால் பிரதம பார்வை நிஷ்ட்டையர் மீண்டும் சம்சார மடியில்

/ மதுர கவி ஆழ்வார் தவறினால் பகவான் அடியில் விழுவார்//ஓம் நம ஆனதும் கைங்கர்யம் கிட்ட வில்லை/

/தான் தன் கர்மம் செய்கிறான் என்று ஆதல்/ கிரமத்தில் செய்வோம் என்று ஆறி இருக்கிறான் ஆதல்

/நம் உடைய துவரைக்கு  அடியாக ருசி -பக்குவம் அடைய /போகய பாக துவரை வைகுந்தத்துள் நின்று அகம் கழியாதே  நத்தம் இருந்து திரு புளிங்குடி கிடந்தது காய்சின வேந்தன் –

– காத்து இருந்தால் போல//சர்வக்ஜன் சர்வ சக்தன் துடிப்பு தெரிந்தும் கருணையும் உண்டே-சில ஹேதுக்கள் உண்டாகி இருக்க வேண்டும்-

–  நான் இது வரை பண்ணினது சாதனம் என்று நினைந்து  கொண்டானோ- எனக்கு நானும் இல்லை -பிறரும் இல்லை-பேற்று த்வரையால் துடிக்கிறேன் –

சாதன அனுஷ்டானம் இல்லை/உவமை மூலம் வஸ்து எதிர் பார்த்து இருப்பதை காட்டி–புகல் இடம் இல்லாமை-நாமே ஒத்து கொள்ளும் படி-

அநந்ய கத்தித்வம் உள்ள பதார்த்தங்களை கதி-போக்கிடம் அந்ய கதி -வேறு போக்கிடம் அநந்ய கதி- வேறு போக்கிடம் இல்லை/என்று இந்த பதிகத்தில் அருளுகிறா

——————————————————

5-1–தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1

————————————————————-

பரிமளம் மிக்கு இருந்துள்ள-மலர்கள் நிறைந்த சோலை-சூழ்ந்த -/நீ கொடுத்து நான் அனுபவிக்கும் துன்பங்களை நீ போக்கா விடிலும்

-/பெற்ற தாய்-மிக்க சினத்தால்-அகற்றிடினும்-மறு படியும்-அவள் தன் அனுக்ரகம் கிடைக்க அழும் குழந்தை போல நான்-இருக்கிறேன்

/வேறு போக்கிடம் இல்லை/ஈன்ற தாய் மெய் நொந்து பெற்றவளே///நீ கொடுக்கிற துயரம் நீயே மாற்றா விடில்–சொல்லலாமா-

கர்மா -அடி தானே-தன்னாலே தனக்கு விரோதி வந்தது /சாதனம் அனுஷ்டித்து -மோட்ஷம்/சாஸ்திரம்/பிராதம் அப்ராப்தம் விவேக ஞானம் உண்டே இவருக்கு அதனால் சொல்கிறார்

/நிரந்குச ஸ்வதந்த்ரர் அவர்/அவன் இட்ட வழக்கு ஜீவாத்மா /சர்வ ஸ்வாமி அவன் /இன்றியமையாத அடிமை

/கர்மா வெட்டி விடும் திறன் அவனுக்கு உண்டு /சாதனம்-ஒன்றும் இல்லை/தடுப்பு ஊசி போடாமல் இருந்த குற்றம் தாயுக்கு தானே ரட்ஷிக்க விட்டது

உன் தப்பு தானே சம்பந்தம் தெரிந்தவன் தானே இப் படி பேச முடியும்//

தானே கர்மம் பண்ணினவன் தானே சாதனா அனுஷ்டானம் பண்ணி தவிர்த்து கொள்கிறான் என்று நினைத்து  தள்ள நினைத்தான் என்றால்

..கர்மா அடியேன் சாதனம்  பலம் எல்லாம் அவன் ஆதீனம் தானே/பர தந்த்ரம் இவை எல்லாம் பல பிரதானனும் அவனே /

பெரிய திரு  மண்டபம் கீழே முதலிகள் கூட/ரகஸ்ய அர்த்தம் விசாரம்-

நித்ய சம்சாரத்தில் போந்தவனுக்கு ருசி பிறந்த அடி என் -யாத்ரிசிக சுக்ருதம் /போன ஜன்மத்தில் சுக்ருதம்/கிடாம்பி பெருமாள்

– நமக்கு நம் பெருமாள் போல-சுக்ருத தேவர் பற்றணுமா-அடி ஈஸ்வர கிருபை தானே/பிள்ளை திரு நறையூர் அரையர்-

சுக்ருதம் என்று நீர் நினைத்தது என்ன- நம் பெருமாள் தவிர வேறு இல்லை

/ உன் தன்னை பிறவி புண்யம் நாம் உடையோம் சனாதன தர்மம் புண்யம் அவன் தானே

/ஐதீகம்-துயரத்தை கொடுப்பதும் அவனே புண்யம் அவன் ஆல் என்றதால்/இரண்டும் ஒரே தலை/ஓன்று ஆராய புக்கால் -அதற்க்கு மேல் போக முடியாத முழு முதல் காரணம் அவன் தானே/

இதற்க்கு வேர் எது  என்று ஆராய புக்கால் –அதற்க்கு அவ் அருகு வேறு  ஒன்றும் இல்லாத முழு முதல் காரணம்-பல பிரதானமே உபாயம்

/நடுவே அநேக அவஸ்தை பிறந்தால்-அவை காரணம் இல்லை-நடுவு இளைப்பு ஆறாது

/தடாயேல்-நீ தானே போக்க வேண்டும் / நான் தான் கட்டி வைத்து இருக்கிறேன் -மாயை ஒருவராலும் கடக்க முடியாது  நானே விடுவிக்கிறேன் என்று கீதையில் நீயே அருளி இருகிறாயே /

/ நீயே தந்தாய் என்று தோற்றுகிறதே//கிணற்றில் விழுந்தவனை ரஷிக்க வருபவரை குற்றம் சுமத்தலாமா

/ சுக்ரீவன் அபசாரம் பட விபீஷணனை அவன் மூலமே கூடி கொண்டு வர சொன்னானே

/பிள்ளை திரு நறையூர் அரையர் குருவி  கூட்டை கூட பிரிக்க இயலாத  -அவன் திரு வடி பற்றியே விடுவிக்க வேண்டும்

/இவ் வளவு நாளாக அநர்த்தம் தேடி இருந்த நான் ரட்ஷகன் இல்லை/சம்சாரத்தில் நீங்கியவர் தானே ரட்ஷகர்

/ கழுத்தில் கட்டி கொண்ட பாராங்கல் போல நான் செய்யும் நன்மைகள்/சாதனா அனுஷ்டானமும் கழுத்து கட்டு தானே

/சர்வ கந்த சர்வ ரச – பிராப்ய  வஸ்து குடி இருக்கும் இடம் கொள் சொல்லும் விரை குழுவும் மலர் பொழில் சூழ்/பிராப்ய வஸ்து..அளப்பரிய -ஆரமுதை அரங்க மேய அந்தணனை/

/உபாயம் ஆகும் பொழுது சுலபன் ஆகணுமே /உன் சரண்-வித்துவ கோட்டு அம்மானே-பர வாசுதேவன்

/வியூக விபவ அந்தர்யாமி -சரண் சரண் இல்லை -அம்மானே-ஸ்வாமி/பிரஜை உறங்கிகிற தொட்டில் கீழே உறங்கும் தாய் போல இங்கு வந்து உறங்கிறாயே/

/உன் சரண் அல்லால் சரண் இல்லை- தம் உடைய பார தந்த்ரயத்தால்-சொத்து நன்-ஸ்வாமி-சேஷி ஆகையாலே ரட்ஷனத்துக்கு நீ தான் என்கிறார் அம்மானே

ஸ்வாமித்வம் -நினைவு படுத்துகிறார் -தாயார் மருந்து உண்டு குழந்தைக்கு போவது போல-நாம் என்றுமே இப்படி //ஒருவன் பேற்றுக்கு -பிரஜை நோய்க்கு தாயே தான் மருந்து

-அம்மானே பொசிந்து காட்டும் /வெட்டி விட வேண்டும் என்ற கோபம் வந்தாலும்-சம்பந்தம் உள்ள இடத்தில் தான் உரிமையும் வரும்

/நீயே ரட்ஷகன் உறுதி நம்பிக்கை உண்டு/பெரு தாழ்ந்தால்- கால தாமதம் ஏற்பட்டால் வெறுத்து பேசும் படி சம்பந்தம் உண்டே

/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – அசித் போல பார தந்த்ர்யம் சொல்லி-/அசித் -சுக துக்கம் சமம் ஆக கொள்ள வேண்டுமே-/

அனுபவிக்கும் பொழுது புருஷார்த்த சித்தி உண்டே//உனக்கே ஆக-நேராக சொல்ல வில்லை ஆழ்வார்-பார்த்து உள்ளம் உருகி கைங்கர்யம் பண்ணமுடியாது/ /

எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே- புஷ்பம் சந்தனம் இப்படி சொல்லாதே

– சொத்து என்ற கோணத்தால் சமம் ஞானம் இருப்பதால் அவன் ஆனந்தம் கண்டு ஆனந்தம் அடைகிறோம்/

/ஸ்ரீமதே நாராயணா நம நாம் தான் கேட்கிறோம்-அர்தித்து பெற்றோம்-/வளர்த்த தாய் சொல்லாமல் ஈன்ற தாய் -பிராப்தி சொலிற்று

/எவ் உயர்க்கும் தாய் தந்தை அவன் தானே/அகற்றிடினும்-நடக்காத அசம்பாவிதம்/ஈன்ற கஷ்டம் -அகற்ற மாட்டாளே -வளர்ச்சியிலே தான் நோக்கு/

இவள் கோபித்தாலும் வேறு ஒருவர் அருளுக்கு போகாதே /பிரேமத்துக்கு அவதி இருந்தால் தானே கோபத்துக்கு எல்லை இல்லை

/அன்பு தொடர்பு இருக்கிற படியால் தானே கோபம்//முதலி ஆண்டான்–நம்பி திரு வழுதி  வட நாடு தாசர் -ஒரு நாள் பட்டினி-ஒரு நாள் பிடி சோறு  இட்ட பின்பு போவது இல்லை நாய்

/வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது /முன்னாள் முலை கொடுத்த உபகாரம் நினைந்து

/அளவில் பிள்ளைமை -ஜீவாத்மா பரமாத்வுக்கு என்றுமே கிருபை பால் குடிக்கும் குழந்தை தானே என்றும்-அதி பால்யம்

-ரத்த ஸ்பர்சம் எல்லாரையும் அறியாத சின்ன சின்ன குழந்தை சுமந்தால் பிரயத்தனம் பட்டவள் என்பதால்/

இதனால் தான் இவன் பேற்றுக்கு அவன் உபாயம் /உன் சரண் அல்லால் சரண் இல்லை /மாதா – பித்ரு  சம்பந்தம்

——————————————————————————————————-

ஸ்ரீ மன் நாராயணனைத் தவிர வேறு சரணம் இல்லாமையை
அநேக திருஷ்டாந்தம்
பூர்வகமாக திரு வித்துவக்கோட்டு அம்மான் முன்னிலையில் விண்ணப்பம் செய்கிறார்

திரு வித்துவக்கோடு -வித்வான்கள் கூடும் தேசம்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் 108 திருப்பதி அந்தாதியில்
திரு விற்றுவக்கோடு சேர்ந்தார் பிறவி கரு விற்று வக்கோடும் காண் -என்று அருளிச் செய்கிறார்

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
நீயே எனக்குத் தந்த துன்பத்தை
நீயே களைந்திடா விட்டாலும்
உனது திருவடிகள் அன்றி எனக்கு வேறு புகல் இல்லை

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
பரிமளம் விஞ்சிய புஷ்பங்களை உடைய
சோலைகளால் சூழப் பட்ட
திரு வித்துவகோட்டிலே எழுந்து அருளி இருக்கிற
ஸ்வாமியே

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
பெற்ற தாயார் மிக்க கோபம் கொண்டு
அதனால்
குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும்
பின்பும்
அத தாயினுடைய

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
கருணையே கருதி அழுகின்ற
இளம் குழந்தையையே
ஒத்திரா நின்றேன்-

————————————————————————————-

5-2–கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல

விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ

கொண்டு ஆளாய்    ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2

———————————————————————————

கை பிடித்த கணவன்-கற்புக்கு அரசி-

அல்லாது-பாடமும் உண்டு- / அவனை மட்டுமே தெரிந்தவள் அவன் பண்னிய உபகாரம் கூட தெரியாது

/காரணம் அற்ற உறவு/குல மகள் என்பதால்/கொண்டவன் என்பதால்- ஸ்ரீமன் நாராயணன் இடமும் நாம் இப்படி குல மகள் போல் இருக்க வேண்டும்

பத்ரு -பார்யா சம்பந்தம் காட்டி புரிய வைக்கிறார்/துன்பம் கொடுப்பதே அவன் பால் ஈர்க்க தான்/

/பிரணய கலகம் பரிகாரங்களுக்கும் எல்லை இல்லை/உதாசீனரும் -கூட இகழும் படி-அசக்யங்களை பண்ணினாலும்-காதலன்-பேரில் மட்டும் காதல்

-அனுசூயை-சீதை-குற்றம் புரிந்து இருந்தால் தானே கற்பு காட்ட முடியும்/ராவணனாக ஆக்க முடியாது ஒரு நாள் கூட/ குண க்ருத்ய தாஸ்யம்  விட சொரூப கருத தாஸ்யம் தானே வேண்டும்/

குற்றங்களை காற்கடை கொண்டு -அக்னி சாட்சியாக -அக்னிக்கு அந்தர்யாமியாக  ஸ்ரீ மன் நாராயணன் சாட்சி என்று உணர்ந்து-

அவனை அல்லது வேறு அறியாத -சீதை ராமன்-ஆழ்வார்- வித்துவ கோட்டு  அம்மன்- /நீ உபேஷித்தாய் என்று விலகி போகாமல்/

வீர கழல் அணிந்த திருவடி விட்டு போக மாட்டேன்/ தண்டை -இருப்பதே என்றும் நித்ய  ரட்ஷிப்பான் என்று அறிவிக்க தான்/இற பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் நாட்டியம் ஆட கண்டேன்-

வெறுப்பும் -எனது ஆவி யார் நான் யார் கொண்ட நீ –

எனது ஆவி உள் கலந்த  பெரு நல் உதவி கைம்மாறு -வசிஷ்டர் சண்டாளன்-தான் பெற்ற பாக்யமாய் நான் பிராதிக்காமலே-

-எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது ஓன்று உண்டு-எனது ஆவியும் நீ /நானும் நீ என் உடைமையும் நீ

– சமர்பித்த பின்பு-பண்ணினால் திருட்டு சொத்தை அவனுக்கு கொடுத்தது ஆகும் பண்ணா விடில் சர்வ முக்தி பிரசங்கம் வரும்/

/மயங்கி நிலையில் பண்ணுகிறோம்/நீயே தான் நான்-கொடுப்பவன் வாங்குபவன் வேற இல்லையே/

———————————————————————————–

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
பார்ப்பவர்கள் அனைவரும் இகழத் தக்க
செயல்களையே செய்தாலும்

கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
தன்னை மணம் செய்து கொண்ட அந்த
கணவனையே அன்றி வேறு ஒரு
புருஷனை நினைப்பதுவும் செய்யாத

விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
ஆகாசத்தை அளாவிய மதிள்கள்
எப்புறத்தும் சூழப் பெற்ற
திரு வித்துவக் கோட்டில் எழுந்து அருளி இருக்கிற
ஸ்வாமி
என்னை அடிமை கொண்டவனான நீ

கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
குறையும் தலைக் கட்டாமல்
உபேஷித்தாய் ஆகிலும்
ஒலிக்கின்ற வீரக் கழலை உடைய
உனது திருவடிகளையே சரணாகக் குறிக் கொள்வேன்-

————————————————————————————-

5-3-மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்

பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்

தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்

கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே— 5-3

———————————————————————–

பிரஜை ரஷிக்க வேண்டிய அரசன்-குடி மகன் செங்கோலை எதிர் பார்த்து இருப்பது போல்

கடல் வற்றினாலும்  சௌக்கியமாக இருக்கும் படி வயல்கள் சூழ்ந்த – மீன் கூட உன்னை நோக்கும் பொழுது நான் நோக்க மாட்டேனா

/மாலை-தீஷை- சிறியவனை பெரியவன் துன்புறுத்தாத படி ரஷிக்கும் என்பதை காட்ட தான் தோள் மாலை

/பொங்கோதம்–சூழ்ந்த புவனியும் விண் உலகும் அங்கு ஆதும் சோராத …செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்

//எங்கு கருணை வற்றினாலும் வித்து கோட்டு அம்மான் கை விட மாட்டான்/ கடல் வற்றினாலும் புகும் இடம் என்று மீன்கள் நினைக்குமே

/பரம பதத்தில் இருந்து இறங்கி வந்து சேவை சாதிக்கிறான் /நீதி வானவன் அங்கு/பரம பதத்தில் உள்ளாறும் சீல குணம் அனுபவிக்க வரும் இடம் இது

/உத்கர்ஷம் -பரத்வம் சாஸ்திரம் கண்டே அறிகிறோம்/என் பால் நோக்காய் ஆகிலும்-பரம பதம் விட்டு வந்ததே அங்கு  எல்லார் பேரிலும் காட்டும் கடாஷம் அருள தானே /

/உன் பற்று அல்லல் பற்று இலேன்-பாதகர் இடம் போவேனா/ரஷிப்பது போல்  வேஷம் போட்டு வந்தாலும்  போகமாட்டேன்

-நித்ய சம்சாரியாய் -என்னை பற்றவோ/ என் உடைய ரஷணத்தில் என்னோ பாதி இருப்பாரை பற்றவோ

/என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்–இப்பொழுதே நீயே செய்

/அரசன் ரட்ஷிகாது, -அதற்க்கு மேல்-துன்பம் கொடுத்தாலும் -அவன் கோல் பார்த்து இருக்கும் குடி மகன் போல்

காஷாயம் கட்டி கொண்டாவது அரசனை ரட்ஷிக்க சொல்வதே கடமை/சம்பந்தம் இருக்கிற படியால்/

என்னால் செய்ய முடிந்தது ஓன்று இல்லை/ உன்னால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை //

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என்
மீன்கள் எல்லாம் தாம் வசிப்பதற்கு
மிகவும் தகுதியான இடம்
ஆசை உடன் பார்க்கிற
நீர் வளம் மிக்க
விசாலமான கழனிகள் சூழ்ந்த
திரு வித்துவக் கோட்டில் எழுந்து அருளி இருக்கும் பெருமானே

பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
அடியேன் மீது நீ அருள் நோக்கம்
செய்யாது இருந்தாலும்
உன்னை சரணமாக பற்றுதலை விட்டு
வேறு ஒருவரை சரணம் புக மாட்டேன்

தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
அதற்கு ஏற்றபடி தான் கவனித்து
பாதுகாவாமல்
எப்படிப் பட்ட துன்பங்களை செய்தாலும்
குடிகளைக் காப்பதற்கு என்றே
மாலை அணிந்துள்ள அரசன் உடைய

கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே
செங்கோ லையே எதிர் பார்த்து வாழ்கிற
பிரஜைகளை ஒத்து இருக்கின்றேன்

————————————————————————————-

5-4–வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4

—————————————-

உன் அனுக்ரகம் -கிருபை-பார்த்தே இருப்பேன்/வெட்டினாலும் மருத்துவன் பல்- மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்

-பாபம் தொலைக்க அனுபவம் துன்பம்-மாயம்-பிரகிருதி-உடம்பு-அதனால் துயரம்//அவன் கடாஷமே வேண்டும் பேசியோ பார்த்தோ தெரிந்து கொள்ள முடியாது

/ஹிதம் பார்ப்பவர்  -பலம் அன்வயம் ஒரு தலைக்கே -என்று நம்பி-துன்பம் நல் வழி படுத்த தான்

/நம் நன்மைக்கே இருக்கும் அவன்-துன்பம் இருந்தாலும் நீடித்த இன்பத்துக்கு தான்-தொட்டியம் திரு நாராயண புரம் பிள்ளை திரு நறையூர் அரையர் பிள்ளைகள்

-புகை சூழ-சற்று போது அன்றோ விசன படுவது- ஸ்ரீ வைகுண்டம் சென்று மீளாத இன்பம் கிட்டும்

-.தான் தஞ்சமாக பற்றிய விஷயத்தில் -எனக்கு என்றே இருப்பவன்-துன்பத்துக்கு அவன் ஹேது இல்லை

-அவ் அருகில் பேற்றில் குறை இல்லை-விசுவாசம் முக்கியம் வாழ்வு நிலை அற்றது நிலை என்று கணக்கு போடுகிறோம்/

துன்பம் வரும் பொழுது விலக கூடாது -தண்டனை இல்லை இதுவும் என் நன்மைக்கு என்று நினைப்பவனே மகா விசுவாசி/

/வாளால் அறுத்து சுடினும்-ஹித காமன்-பிஷக்-மருத்துவன்-மயக்கம் கொடுத்து /ரத்தம் சாப்பாடு விதி-

துன்பம் மேலே மேலே கொடுத்தாலும் உயர்ந்த சம்பாவனை கொடுத்துசரீரம் பேணுவதில் ஆசை-/மம மாயா -பிரகிருதி-உடல்-துன்பத்துக்கு ஹேது

மீளா துயர்- நித்ய அனுபவம் அங்கு -எதிர் தட்டு இங்கு/அபுனர் ஆவர்த்தி லஷணம் இரண்டிலும்/
/இந்த தேகத்திலும் வந்து இருக்கிறானே உகந்து-நம் ரஷணத்துக்கு குடி ஏறி இருக்கிற நீ- நித்ய துக்கம் விளைவித்தாலும்
-பெற்ற தாய் குழந்தைக்கு அஹிதம் நினைக்காதவள் போல/சொரூப அநுரூப விருத்தி பெற –
ஆளா-க்ருபையையே புத்தி பண்ணி இருப்பேன் இப் பொழுது  கொடுத்த துக்கம் கணிசியாமல்
/அடியேன்-சேஷ பூதன் என்பதால்- நீ யார் நான் யார் என்று தெரிந்த பின்பு சுவாமி-சொத்து உறவு அறிந்த பின்பு
-திடமான நம்பிக்கை- அன்று கண்டால் போல கையும் வில்லும் ஆக நிற்ப்பர் –
அசவ்-சீதை ராவணனுக்கு உபதேசம்-அசவ் புருஷ ரிஷபு-கை காட்டுகிறாள்-எங்கோ இருக்கும்-
அன்று கண்டால் போல் கையும் வில்லும் ஆக நிர்ப்பார்-  ராவணன்  தூக்கிய அன்று நின்ற நினைவு
/அவனுக்கு அச்சம் தனக்கு உருவ வெளிப்பாடாலே எங்கும் தெரிவாரே
/திரு குருங்குடி நம்பி ஆழ்வாருக்கு எப்பொழுதும் சேவை போல
/மித்திரன் போல -புருஷ ரிஷபன்-உத்தம புருஷன்- மன்னித்து பேர் வாங்கி கொள்ளள
/ஓர் அடி  அவனை நோக்கி வந்தால் நீ பண்ணிய அபராதங்களை மறந்து விடுவான்
/தோஷம் குணமாக கொள்வான்/குற்றம் பண்ணின காலத்தையே மறந்து விடுவான்-குற்றம் தோற்றும் என்பதால்-

நீர் அல்லது புகல் இல்லை

———————————————————–

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
வைத்தியன் கத்தியைக் கொண்டு அறுத்தும்
ஊசியைக் காய்ச்சி சூடு போடுதலும்
செய்தாலும்
அந்த வைத்தியன் இடத்து

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
நீங்காத அன்புடைய
நோயாளியைப் போலே
உன் மாயையினால்

மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
நீ நீங்காத துன்பத்தை
எனக்கு விளைத்தாலும்

ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
உனது அடியவனான நான்
ஆளா -ஆளாக -அவ்வடிமை சித்திப்பதற்க்காக
உன்னுடைய கருணையே நோக்கி இரா நின்றேன்

நீயே எனக்கு சர்வவித ரஷகன் என்று நான் துணிந்த பின்பு
நீ எனக்கு இந்த விபூதியிலே எவ்வளவு துன்பங்களை தந்து அருளினாலும்
அவற்றை எல்லாம் நன்மையாகவே கருதி
மிக நன்றி அறிவு பாராட்டி மேன்மேலும் அன்பு செய்து
வருவேனே அன்றி
உன்னை சிறிதும் குறை கூற மாட்டேன் என்று அருளுகிறார்
இந்த உபமானத்தாலே

———————————————————————————-

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading