பெருமாள் திருமொழி-பாசுரங்கள்-4-1/2/3/4/4-5- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

அவதாரிகை

அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்.. பகவத் சேஷத்வத்தை விட

இது வரை ஆழ்வாருக்கு – பகவத் விஷய ஞானம் பிறந்தது -ஞானம் வர வர தான்  அடைய ஆசை பிறக்கும் -அறிவு ஏற்பட்டால் தன் ருசி வளரும் பசி வந்தால் தான் கிட்ட ஆசை பிறக்கும்

/அவன் வர வர விஷய தாகமும் பிறந்து -மற்ற விஷயத்தில் ருசியும் குறைந்து –

-அனுபவிக்கும் இடத்தில்-பிரகாசிக்கும் இடத்தில் -திரு அரங்கத்தில் -அனுபவித்தார்- அடியார்கள் குழாம் களை  உடன் கூடுவது

-ஆடி ஆடி- மணி இழந்தால் போல /முன்பு விபவம் இழந்து தூது விட அர்ச்சை இழந்து வருந்தி-காசு பொன்னை இழந்தார் போல

-ஈட்டம் கண்டிட ஆசை தசையும்  பிறந்து -ததீய சேஷத்வம்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-முடிந்த நிலை/வேட்டகமும் புக்கககும் ஆசை பிள்ளை பெண் கொள்வது போல /

அனுகூல்ய சங்கல்பமும் பிரதி கூல்ய வர்ஜனமும் செய்தாலும்/ருசியும் பிறந்து  பகவத் பிராப்தி கிட்ட வில்லை ஆறி இருக்க முடிய வில்லை இங்கேயே கைங்கர்யம் வேண்டும் .

பிறப்பாலே ஏற்பட்ட ஜன்மம் உயர்ந்தது இல்லை என்று அறிவிக்கிறார்/

ஸ்ரீ வைகுண்டம் சென்று தான் இல்லை ஏகாந்தமாய் சேவை சாதிக்கும் திரு மலையில் எதேனும் ஆக பிரார்த்திக்கிறார்

/அனுசந்தானம் பண்ண பண்ண இந்த நிலை கிட்டும்/அன்பு தன் பால் வைத்தாலும் -விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் -முடிந்த நிலம்

/அடியார்கள் ஈட்டம் கண்டிட பாரித்தார் /போந்தார் போந்த்கு எண்ணி கொள் /கூட்டத்தை பார்த்தால் கண் பெற்ற பயன் நாம சந்கீர்தம் காத்து பெற்ற பயன் பாகவத ஸ்பர்ச இன்பம் பெற

/அவர்களை ஒழிந்த வற்றில் ஆசையும் விட்டார்/நிராசை வளர்த்த பின்  ஆசை வளர்த்தால் அடித்தாலும் புடைத்தாலும் அவர் தானே /

வியாதி தொலைதல் நம /பகவத் அனுபவம் நாராயண /சர்வ தரமான் பரித்யஜ்ய- ஆனபின்பு- மாம் ஏகம்-பற்ற  வேண்டும்-

ஆண்டான் ஆழ்வான்-சம்வாதம் புல்கு பற்றற்ற -விட்டே பற்ற வேண்டுமானால் உம்மை போல்வார் தான் / கொஞ்சம் தொலைத்து அவனை பற்றியதும்  மற்றவை தன் அடைவே போகும்/

விரோதியும் போக -பகவானை அடைய வில்லையே-இனி என் கிட்ட வில்லை பகவத் லாபம்-ஆள் பார்த்து உளி தருவாய்–திரு மழிசை ஆழ்வார்-

இதன் குறை அவன் தலையில் இல்லை/சீதையே காட்டி கொடுத்தாளே எல்லா ஆழ்வாருக்கும் /மம துஷ்க்ருதாம் கிஞ்சித்-பெரும் குற்றம்-லஷ்மணன் இடம் அபசாரம் //

– சிறு குற்றம்- அம்மான் இருக்க அம் மானை பிரார்த்தித்து //எதிவா ராவணச்யம் -அவனே வந்து இருந்தாலும்-எதிர் நோக்கி இருக்கிறானே அவன் மேல் குற்றம் இல்லை/

ஏதத் விரதம் மம /காத்து இருக்கிறான் தாள் பார்த்து  உளி தருவேன் என்றும் கண்டு கொள் /

ஆள் பார்த்து உளி தருவாய் -சேஷ பூதன் கிடப்பானா என்று பார்த்து இருக்க -தாள் பார்த்து -இனி மேல் மாறாமல் நீ தான் கண்டு கொள்ள வேண்டும்/

ஒருத்தனை பிடிக்க ஊரை வளைப்பாரை போல/ முகத்தை திருப்பி போகாமல் அவனை நோக்கி பார்க்க வேண்டும்/

தான் ஏற நாள் பார்த்து இருக்கிறான்/ நெற்றி கொத்தி பார்த்தாலும் பசை  இல்லாது இருந்தாலும் விலகாமல் கூடவே இருக்கிறான்

/ஒட்டி வந்த எம்பெருமான்/இழந்த தற்கு வேற காரணம்-சரீர முடிவில்- ஷத்ரிய சரீரம்-முடிவில் பகவன் லாபம் நிச்சயம்

-பரிகிரகித்த சரீரம் படி போகம் அனுபவிக்க -குறை அற்று இருந்த பின்பு-மோஷம் தர திரு உள்ளம் போலும்-

உத்க்ருஷ்டம் என்று ப்ரக்மித்த ஜன்மம் /என்று நினைத்து இருக்கிறேன் என்று நினைத்து ஆறி இருக்கிறானோ-

ஆழ்வார்கள் நினைத்த படியே மோட்ஷம் கொடுப்பான்–நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே- வாட்டாற்றான்

-அது நமது விதி வகையே  இருள் தரும் மா ஞாலத்தில் இருந்து அனுபவித்த ஆழ்வாரின் சரீரத்தில் ஆசை கொண்டார்/-மங்க ஒட்டு உன் மா மாயை என்றார் ஆழ்வார்/

நாம் ஆசை பட்ட படி-மரணம் ஆனால் -ஆக்கி இல்லை- வைகுந்தம் தருகிறான் –

தமக்கு கிரம பிராப்தி போராது-ஆர்த்த பிராப்தி/ அறிவிப்பே அமையும்-ஒன்றி ஆக்கை புகாமல் உய்ய கொள்வான்  நின்ற திரு வேம்கடம்

-என்றும்  மந்தி பாய் வட வேங்கட மா மலை  வானவர்கள் சந்தி செய்ய நின்றான்/

-கைங்கர்யம்-ஆழ்வார் தன்னையே பாதம் ஆடை ..கண்கள் தாவினத்தை சொல்லி கொள்கிறார்

/நாமும் வேவ் வேறு பிரயோஜனம் கேட்ப்போம்/ திரு வேங்கடத்தில் நின்றவன் சயனித்தான்-வடக்கு வாசல் வழியாக- நின்றால் புறப் பட தயார் -கிடந்தால் பேரென் என்று இருப்பவர்

/வரத்து வழி  சொல்ல முதல் பாசுரம்-.சதுர மா மதிள்- இலங்கை செற்று- தெற்கு வாசல் வழியால் புகுந்தான் என்றார்

/பெரிய பெருமாள் தாமே சம்சாரம் அறுக்கவும் கைங்கர்யம் கொள்ளவும் திரு மலையிலே நிற்கிறார் –

-அன்று-காடும் வானரமும் வேடும் உடை வேங்கடம்-ஏகாந்த திவ்ய தேசம் அது /இன்று தான் இப்படி -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-

அஷ்ட கல்யாண குணங்களில் சாம்ய பத்தி கொடுக்கிறான்/-

அரையர் அமலன் ஆதி பிரான் பாசுரம் அனுசந்தித்த பின்பு திரு வேங்கட யாத்ரை விட்டாரே-ஒரே வ்யக்தி-துடிப்பு ,கைங்கர்ய ருசி ,ருசி விரோதியில்-சம்சார காம குரோதம்- அருசியும் அறிவிக்க

ஆவிஷ்கரிகிறார்-அறிவிக்கிறார்/எம்பிரான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே-சொரூப நிரூபகமாக சேஷத்வம் கொடுக்கும் சரீரமே வேண்டும்

/ஞானம் முதல் பத்தில் / முக்தி ஏற்றம் சொல்லி ஆழ்வார் /பிரார்த்தித்தார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே அறிவித்து

ஒழிவில் காலம் உடனே மன்னி வழு இலா அடிமை  எல்லாம் பிரார்த்திக்கிறார்

/இழந்த கால இழவு தொடராமல் /பரதன் நாட்டில் இருந்த கைங்கர்யமும் லஷ்மணன் காட்டுக்கு வந்து செய்த கைங்கர்யமும்வேண்டும் என்கிறார்

இது மட்டும் இல்லை 24 மணி நேரமும் வேண்டும்/உடம்போடு இல்லை/

விளக்கு கதவு மாலை -ஏதேனும் ஆக உன் உடன் இருக்க வேண்டும்//

பொன் வட்டிலோ/பள்ளி கட்டிலாகவோ/அந்தரங்க விருத்தி வேண்டும்

/அணையை ஊற புனைய -பூம் பாவை- பெரிய பிராட்டியார்- திரு அனந்தாழ்வான்-நித்யர்-பாம்பு

/ ஊற புள்ளு- வாகனம்- -நித்யர் வடிவு கொண்டார்/புனைய -தம் அம் துழாய் தாள் இணை மேலும் -இதுவும் நித்ய சூரி வடிவு

/திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை  பெரு மக்கள் பரிகிரகிப்பார்கள் – தாங்களாக ஏற்று கொண்டார்கள்/

/அடியும் பொடியும் பட அடி பட –  பூத்த  தோர் நீள் ..கதம்பம் ஏற -திரு வடி பட்டதால் பூத்தது –

அமுத கலசம்-கோகுலத்தில் கதம்ப மரம் உட்கார்ந்தாராம்-தளிர் புரை யும் திரு வடி என் தலை மீது-இருக்க ஆசை பட்டார் சுகர் உத்தவர்

/பொடி பட ஜன்மம்-ராச கிரீடை பண்ண-ராசமண்டலம்-சந்தோஷம் அதிகம்-மறைய -தேடினார்கள் -திரு வடி பட -அந்த மணலில் துகளாக பிறக்க

-அவனது அடி வேணும் பாகவதர் பொடி போதும்/ பர்வதம் -குலசேகர் ஆழ்வார் பவனம் -ஆள வந்தார்- அடிமை தனம் தெரிந்த வீட்டில் புழுவாக பிறக்க ஆசை பட்டார்

– ஏதேனும் ஆக -பெரியோர்கள் பிரார்த்தித்து பெறுவார்கள் /அகம் கதம்போ பூயோசம்/எந்த ஜன்மம் முக்கியம் இல்லை கைங்கர்ய ஜன்மமே வேணும்/

புஷ்பக விமானம் விசுவாவசு திரிசானு- நல்லது -சொல்ல அவன் பொல்லாது சொல்வான்/ஜனி பிரார்திகிரார்கள் முனிவர்கள் என்றான்

-பன்ன கேசு– சர்ப்பம் மரம் புலி மான் கல் கொடி குகை அருவி  யாக /தயா சதகம்-42 ஸ்லோஹம்-விருஷ கிரி வன பிறவி பிரார்த்திக்கிறார்

/பிள்ளை பெருமாள் ஐ யங்கார்   புல்லாய் சிலையாகி கிடந்தமை/ பிறவி பிறந்து என் செய்தோம்-புல்லாகவோ கல்லாகவோ-சேஷத்வம் சித்திக்கும் ஜன்மமே வேணும்

/வாக்கால் தவறு- பஷி சரீரத்தால் தாவரம் பிறக்கிறோம்/மனசால் குற்றம்-தாழ்ந்த மனிசர்/சாஸ்திரம் சொல்லும்-பாபம் அடியாக -சாமான்ய சாஸ்திரம் அது இது விசேஷ தர்மம்

/அனந்தாழ்வான்-தயிர் சதம் எறும்பு-மீண்டும் மலை ஏறி விட்ட ஐதீகம்/நாதஸ்வரம் தாளம் புஷ்பம் உள்ளே இருக்கும் -வாசி நமக்கும் இவற்றுக்கும் /

————————————————————————————————

4-1–ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்

ஆன் ஏறு    ஏழ்    வென்றான் அடிமை திறம் அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்   பிறப்பேனே –4-1

——————————————————–

ஸ்வாமி புஷ்கரணி -சிறகு முளைத்தால் பறந்து விடுமே-நித்ய கைங்கர்யம் கிட்டாதே- யோசித்து மீன் என்பார்

/ஒவ் ஒன்றாக மாற்றி -படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே என்கிறார் /

குலேசேகர படி– அனைவருக்கும்-எல்லா கோவிலிலும்-குலேசேகர படியை- கொடுத்தார் திரு வேங்கடம் உடையான்

– கௌசல்யா சுப்ரஜா – ராமர்-இவர்  எடுத்து கொண்டார்-ஏதேனும் என்பார்-அதுவும் அவன் தான் முடிவு எடுத்து கொள்ள வேண்டும்

-திரு வேங்கடம் உடையானாகவே ஆக பாரிகிறார்/அவன் தானே நித்யம்/ரிக் வேதத்திலே எடுத்து காட்ட -10  புராணங்களிலும்/துவயம் பூர்வ  உத்தர வாக்கியம் ஆழ்வார் இங்கே அனுபவித்தார்/

பரதனை-ராஜன்-என்றதும் துடித்தானே பரதன்-நானே ஈஸ்வரன் ஆசை படலாமா -வழி அல்லா வழி சென்று அதி கிரமித்த துடிப்பு இவருக்கு

/மாம்சம் பருத்த உடல்-மன்னன் ஆகிய -பிறவி வேண்டேன்-இதுவே உடலுக்கு செல்வம் /சரீரத்தில் புத்தி போக அடிமை திறத்தில் புத்தி குறைகிறது

கைங்கர்ய விரோதியான ஜன்மம் வேண்டாம் என்கிறார் /வளைந்த திரு சங்கம் இடக் கையில் கொண்டவன்

-ஸ்வாமி புஷ்கரணியில் என்றும் வாழும் குருகாய் /நப் பின்னை பிராட்டிக்கு -கும்பன்- யசோதை சகோதரன்-ஏழு ரிஷபங்கள்–

சரிதாமா -பிள்ளை -அடிமை செய்வதை விரும்புவது-திறம்-எழுந்தும் பாடியும் துள்ளாதார் ..ஊன் மல்கி மோடு பருப்பார் –

மாமிசத்தில் ஜிகாசை வெறுப்பு பிறக்க வில்லை/ஞானம் உயர  புத்தி வளரும் உடல் வளர ஞானம் குறையும்/

/வலக் கை ஆழி  இடக் கை சங்கம்-சொல்ல வேண்டுமா-ஏற்றம் உண்டு-கோன்=ஸ்வாமி /ஸ்வாமி புஷ்கரணி- அனைத்துக்கும் தலையாய புஷ்கரணி  /ஸ்வாமி உடைய புஷ்கரணி/

மனுசர்க்கு தேவோ போல தேவர்க்கும் தேவன்/ ஒ ஒ உலகின் இயற்க்கை ஈன்  தாய் இருக்க மணை   நீராட்டு

-முதற் பெரும் கடவுள் நிற்ப/அனைவரையும் ஸ்வாமி ஆகும் புஷ்கரணி/நாரை  ஆவது பெற -தாழ்ந்த ஜன்மம் -என்று இல்லை-சிங்கம் ஆவது என்று சொல்ல மாட்டோம்-

ராஜா பிறவி -சிங்கம் மற்ற பிறவி கிட்டே வராது

பிரகிருதி புருஷ விவேகம் பண்ணுகைக்கு யோக்யதை உள்ள மனுஷ ஜன்மம் வேண்டாம்-ரட்ஷிக்கும் பொறுப்பு- ஷத்ரிய பொறுப்பு வேண்டாம்/

கைங்கர்யத்தில் எல்லை நிலம் -திர்யக் ஆக பிறக்க அமையும்/நல்ல ஜன்மம் எது-பகவத் கைங்கர்யம் கிடைத்த ஜன்மமே வேண்டும்

/ராமன் தூது விட்டது  -குரங்குகள்-ஆழ்வார்கள் தூது விட்டது பட்ஷி ஜாதி பெருமை பெற்று போனது /

/அயோத்யா வாசிகள் ஆக இருக்க ஆசை /காட்டிலே அயோதியை  தேடாதே என்னை தேடாதே சுமத்ரை லஷ்மணன்-நடக்கிற ராமனை சேவிக்காதே/ கானகமே மிக விரும்பி போனான் ராமன் /

வித்வான் கோஷ்ட்டி விட்டு இடை பிள்ளைகளில் ஒருவராக பட்டர் உரி அடி கோஷ்ட்டிக்கு போனாரே அனுக்ரகம் அங்கு தான் என்று

/ஊன் உடன் ஒட்டி வாழாமல் வெட்டி -மாறனில் மிக்கும் ஓர் தேவு உளதோ-மால் தனில்/

/கைங்கர்யம் பன்ன சரீரம் தேவை /சரீரம் வளர ஆத்மா இளைக்கும் -ஆத்மா நித்யம் நிர்விகாரம் ஆனதே-

/ இது காரும் ஆத்மாவை வெய்யிலில் வைத்து தேகத்தை நிழலில் வைத்தார்-இன்று ஆழ்வார் ஆகிறார் மூல மந்த்ரம் பெற்றதும் –

/பெற்றதும் திரு முகம் -தேஜஸ்- உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-திரு முகத்திலே தெரியும் படி இருக்கிறார்/

வாசு தேவ தனுஸ் சாயா -கற்பக காவு-வாழ சாப்பிடனும்//ஷட் பாவ விகாரம் இல்லையே ஆத்மாவுக்கு/

/ சரீரம் இழைத்தால் -சருகாக போவதால் சரீரம் தேகம் -வளர்ந்தால் /தர்ம பூத ஞானம் /தரமிக் ஞானம் ஞான மாயன் –

அஹம் அஹம் சொல்லி கொண்டே இருக்கும் -தூங்கும் பொழுதும்-இது குறையாது மலராது /

தர்ம பூத ஞானம் இது கடிகாரம் -சங்கோசம் உண்டு விகாசம் உண்டு கர்மாதீனம் ஆக /கிருபையாலே -மாற்றனும் /விதியை மதியால் வெல்லலாம் கிருபையாலே/

ஆனை ஆத்மா பெரிசு பூனை ஆத்மா சிறிசு என்பர் சிலர் / அடுத்த ஜன்மாவில் என்ன ஆகும்//

அசநேவ அஸ்ய பவதி / பிரமம் இல்லை என்றால் நீயும் இல்லை-ஞானம் இல்லை/-ஞான சங்கோசம்-கர்மாவால்- கர்ம ஜன்மாவால் வந்தது

– அத வேண்டாம்/ யான் வேண்டேன்-யான்-தனித்து சபதம் இட்டு சொல்கிறார் -தலை இட்டு முடித்து கொள்பவர்-சந்தனம் பூசி -கொண்டு இருக்கும் அவர்கள் உடன் விலக்க–

விவேக ஞானம் கொண்ட நான்-சரீரத்தின் ஹேயம்/ஆத்மாவின் வைலஷண்யம்/இது தான் சேஷம் என்ற ஞானம் அவன் தானே அறிவிக்க நான் வேண்டேன்

-மயர்வற மதி நலம் பெற்றதால் யான் வேண்டேன் .இத்தை ஏன் வேண்டாம் வேறு என்ன வேண்டும்

/விரோதி போக்கி கைங்கர்யத்தில் அந்வயிகிறான்-

7 எருதுகளை முடித்து நப் பின்னியை சேர்த்து கொண்டது போல/சூட்டு–கோட்டிடை ஆடும் கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே  -கோவை வாயாள் பொருட்டுba

என் திரு மகள்- சேர் மார்பனே என்னும்—அன்று ஓர் ஏழும் தழுவிய ஆய் மகள் அன்பனே என்னும் /

/விரோதி போக்கி அவனை கொடுக்கும் சக்தன் //மாதா பக்கலில் சிநேகம் பண்ணின பிதாவை அனுவர்த்திக்கும் புத்திரன்  போல/பின்னை கேள்வன் என்பதால் /

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை- அடிமை திறம்-

-சக வைதேக்யா கிரு ச அனுஷு-பிரியா அடிமைக்கு அழும் தொழும் ருசி சானுஷு -சர்வம் கரிஷ்யாமி-/கைங்கர்ய ருசி உள்ளவரை இடது திரு கரத்திலே கொண்டான்-

நித்ய கைங்கர்யம் கொள்பவன்-ஆசை உடையார் இடம் கைங்கர்யம் கொள்வான்/வளைந்து பவ்யமாக இருக்கிறார்

/பகவத அனுபவ செருக்காலே -லஷ்மணன் போல-உடல் அழகு காட்சிக்கு நோக்காய் இருக்கிற-அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு

-வேற்றுமையில் படர்க்கையில்-பார்த்து சமாளிக்க முடிய வில்லையே//

இடக் கையில் காணில் சங்கம் இடத்தான் என்கிறார் /வலக் கை ஆழி நின் வல மார்பினில் மங்கை என்கிறார் இவர் படி இதுவே/

வேங்கடவற்கு என்னை விதிகின்று/

தன் வேங்கடத்து- சொந்தம் இதில்- கைங்கர்யம்/ எவ்வளவு நின் கோவில்என்ன– திரு அரங்கம் நம் வூர்/

அடியார்கள் இடம் கைங்கர்யம் கொள்ள -சாத்திய –தாய பதியிலே-திரு கடித்தானத்தில்-/

விரஜை அமானவன் போல கோனேரி குருகு/வித்யுத் லோகம்-வருண இந்த்ரன் சத்ய லோகங்கள் தாண்டி  மூல பிரகிருதி தாண்டி கூட்டி போவான்/

வாழும்- கோவில் வாசம் போல -குருகு வாழும்/கோனேரி இருக்கும் போன்ற சொல் இன்றி வாழும் என்கிறார் அங்குத்தை வாசம் தானே போகமாய் இருக்கும் இருந்தாலே வாழ்ச்சி –

தொழுது எழு தொழுவதே எழுகை//நாரையாய் பிறப்பேன்-புண்ய சரீரம் ஷத்ரிய மனுஷ சரீரம் வேண்டாம் அகங்காரத்துக்கும் அபிமானத்துக்கும் வேண்டாம் -பய ஜனகம்-தேவை அற்ற அகங்காரம்

பிரக்ருது புருஷ விவேகம் இன்றி பர ரஷணம் வேண்டாத படி ,பாப யோனியே இருந்தாலும்-

பிறக்க -திரு மலை யிலே வேண்டும் /பிறவி வேண்டேன் பிறப்பேனே-என்கிறார் நாலாவது வரியில்-

அன்று போல இல்லை-பிறவி அன்று போல அது வாழ்வதற்கு தானே கிருபையால் பிறக்கிறார்

/கைங்கர்யத்துக்கு தானே /திரு வேங்கடத்தில் கைங்கர்யத்துக்கு வேண்டுகிறார்

——————————————————————————————————————————-

திரு வேங்கட மலையில் தமக்கு உள்ள
ஆதர அதிசயத்தை வெளியிடுபவராய்
திருமலையோடு சம்பந்தம் உள்ள
ஒரு பிறப்பை பிரார்த்திக்கிறார் இதில்-

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
நாளுக்கு நாள் மாமிசம் வளர்ந்து
தடிப்பதாகிற செல்வம் உடைய
இந்த மனித உடம்பு எடுத்து பிறத்தலை
விவேகம் பெற்ற நான் இனி விரும்ப மாட்டேன்

ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
நப்பின்னை பிராட்டிக்காக ஏழு எருதுகளை
ஜெயித்தவனான எம்பெருமானுக்கு
கைங்கர்யம் செய்வதையே நான் வேண்டுவது அல்லாமல்

கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
வளைந்து இருக்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
இடது திருக் கையிலே உடையனான
எம்பெருமானுடைய
திரு வேங்கட மலையிலே

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே
திருக் கோனேரி என்கிற
ஸ்வாமி புஷ்கரணியிலே
வாழ்கிற நாரையாகவாவது
பிறக்கக் கடவேன்
எம்பெருமானார்க்கு பிரியமான புஷ்கரணி
புஷ்கரணிகள் எல்லா வற்றுக்கும் தலையான புஷ்கரணி
ஸ்வாமி ஆக்கும் புஷ்கரணி
குருகு -அன்னம் க்ரௌஞ்சம்-நீர் வாழ் பறவைகள்
அன்றிக்கே பொதுவான பறவை என்றுமாம்
பிறவி வேண்டாம் என்றவர்
குருகே பிறப்பேன் என்பதால்
இங்கே பிறப்பது ஸ்ரீ வைகுண்ட வாழ்வுடன் ஒக்கும்

திருவேங்கட மலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால்
விவேகம் அற்றதோர் திர்யக் ஜாதியாகவாவது பிறப்பதும்
அடியேனுக்கு பரம உத்தேச்யமாம்
அதற்கு விரோதியான இம்மானிடப் பிறவியும் ஒரு நாளும் வேண்டா
அடிமைத் திறமாவது
திருவடி திரு வநந்த ஆழ்வான் இளைய பெருமாள் போலே
ஒழிவில் காலம் எல்லாம் உடனே இருந்து
வழு இலா கைங்கர்யம் செய்யப் பெருகை-

———————————————————————————

4-2-ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்

தேனார் பூம் சோலை  திரு வேங்கட சுனையில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

——————————————————————————————————————–

குறையாத யௌவனம்   -ஆனாத செல்வம்//அரம்பையர்கள் தற் சூழ -சொர்க்க லோக வாழ்வு  வான் ஆளும் செல்வம் வேண்டேன்

/மண்  அரசும் வேண்டேன்/தேன் அழகாக பொழியும் பூக்கள்  -வண்டு மொய்த்தும் பூக்கள் -சுனையில்- மீனாக பிறக்கும் விதி- மகா பாக்கியம்-

நித்ய யுவ -இளமை இன்பம் -ஆனந்த வல்லி- மனுஷ்ய ஆனந்தம் முதல் படி /தேவ ஸ்திரீகள் சூழ -தேவேந்தரன் பதவியும் வேண்டேன்

/ஜோதிஷ்டோம  யாகம் பண்ணி பெரும் பதவி-பரம தர்மிகன் உத்தமன் யார் என்று கேட்க நிஜம்  சொன்னால் தற் பெருமை போய் சொல்ல தெரியாதவன் கீழே தள்ள

/குற்றத்தை தலையில் போட்டு தள்ளுவான் /நாமோ அபராத ஆலயம்-தோஷங்கள் நிறைந்து பெருமாளோ-குற்றங்கள் நடுவில் நல்லது  என்று பேர் வைக்கும் குற்றத்தை தேடுகிறான்-குற்றத்தையே குணமாக வாட்சல்யத்தால் கொள்கிறான்

/தங்கம்-குந்துமணி போல அவனுக்கும் இந்த்ரனுக்கும் /வான் இடை புயலை மாலை வரை இடை பிரசம் ஈந்த தேன் இடை கரும்பு

-அவனே கரும்பு சாறு போல-வளர தேன் கொட்டி-கங்கை போல தேன் ஓட -தேன் இடை கரும்பு-அவன்-சாற்றை திருவினை மருவி வாழார்//

சுனை நீராடுதல்-தை நீராட்டம்-பிரம அனுபவம் -தயரதன் பெற்ற மரகத மணி தடம்- அவனே தடம்– படி துறை ஆழ்வார் ஆச்சார்யர்கள்//சுனையில் மீனாய் பிறக்கும் -விதி உடையேன் ஆவேன்-

வாதம் மா மாகன் -வாயு  குமரன் /மற்கடம்-குரங்கு- விலங்கு மற்று ஓர் சாதி- இறக்கம்

/மற்று ஓர் சா தி அதிலும் விலங்கு அதிலும் குரங்கு அதிலும் வாத மா மாகன் –

மற்றவை கைங்கர்யம் கிடைக்கும்/வாயு குமரன்-துர் அபிமானம் பிறக்குமே -தேவன்  பிள்ளை என்கிற அபிமானம்

/அது போல மீனாக பிறக்கும் பாக்கியம் வேண்டும் என்கிறார்/சொர்க்க போகம்-இங்கு விட உசத்தி -இதை விட நித்யம்

இது போல சாவதி-எல்லை- இன்றி நிரவதியமாய் முடிவு இல்லாமல் இருக்குமே –

அவையும் பூமியில் கிடைத்த மண் அரசும்- சேர்த்து கொடுத்தாலும் வேண்டாம் /

இந்த லோக அரசு வேண்டாம் தனியாக முன்னே சொல்லி விட்டதால் சேர்ந்து உம்மை தொகைக்கு அர்த்தம் கொள்ள வேண்டும்

/வேதத்துக்கு புருஷார்த்தம் சொர்க்கம்  என்பர் தப்பாக பலர்-கீதை/கர்மாக்களை செய்யணும் கைங்கர்யமாக /

கெடாத சம்பத் -தபஸை கெடுப்பதே தொழில் -மேல் விழ -கொள் என்று கிளர்ந்து எழுந்த -உலகு இயற்க்கை -வர வர வைராக்கியம் விலகும்

/அனுக்ரகம் கொடுக்கும் முன் செல்வம் பறிப்பேன்-உத்தவர் இடம் கண்ணன் சொல்கிறான்/ பக்தி வளர்வது ஒன்றும் இல்லாமல் போனால் தானே /

ஆபத்து வரும் காலத்திலேயே தான் நினைகிறார்கள்//கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்-பயன் அல்ல செய்து பலன் அல்ல நெஞ்சே -வேண்டேன் என்கிறது –

இல்லை செய்யவில்லை நமக்கு பிராப்தி இல்லை/ சக்தி இருந்தாலும் இல்லா விடிலும் -சீதை திரௌபதி போல சர்வ ரட்சகன் அவன் சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லை என்கிறார்

/தனி மா தெய்வம் -மற்று உளோமோ நாம் /அவனே பரம் தெய்வம் பகவத அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யமே புருஷார்த்தம் /அதனால் தான் வேண்டேன் என்கிறார்

தேன்-ஆர் பொழில் சூழ்- தேன் வண்டுகள் நிறைந்த குளிர் அருவி வேங்கடம் /குருகாய் பிறப்பில்-சிறகு உண்டே

-வேங்கடம் எல்லை கடந்து பறக்க யோக்யதை இருக்குமே- -உத்பத்தி ஸ்திதி லயம் மொன்றும் திரு மலையில் மீனுக்கு /

பிறக்கும் விதியே போதும்-பிறக்க வேண்டாம்- பாக்கியம் இருந்தால் போதும்/

சீட்டு கொடும் கூவி  கொள்ளும் காலம் குருகாதோ- எழுதி கொடு தேவகி 10 வருஷம் கோபிகள் 1 பகல் பொழுது சீதை 10 மாசம் பரதன் 14 வருஷம் அது போல இன்னது சொல்-இன்னக நாளையாக இனி  சிறிது-நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன் /மாசுச சொல்லே  /கைகளை காட்டினால் அமையும்/

——————————————————————————————

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
அழியாத யௌவனம் ஆகிய
சம்பத்தை உடைய
அப்சரஸ் ஸ்திரீகள்
தன்னைச் சூழ்ந்து நிற்க

வாநாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
மேல் உலகத்தை அரசு ஆள்கின்ற
ஐஸ்வர் யத்தையும்
இப் பூ லோகத்தை அரசாளும் ஆட்சியையும்
வருத்தம் இன்றி கிடைப்பதாகிலும்
யான் விரும்ப மாட்டேன்-பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போலே இவை

தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
தேன் மிக்க மலர்கள் உள்ள
சோலைகள் உடைய
திரு வேங்கட மலையில் இருக்கின்ற
சுனைகளிலே

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே-
ஒரு மீனாக பிறக்கத் தக்க
பாக்யத்தை உடையேனாகக் கடவேன்-

குருகே இருந்தால் சிறகுகள் உண்டே
திருவேங்கட மலையில் பறந்து போவமும் முடியுமே
மீன் அப்படி இல்லையே
சுனையில் இருந்து பிரிந்தால் முடிந்தே போகுமே
குருகோ அது உண்ணும் மீனோ வாசி இல்லை
திருமலையிலே யேதனுமாகவே இவரது அபேஷை –

—————————————————————————————–

4-3–பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்

துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்

மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்

பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3

————————————————————————————————————-

ஜலம் வற்றுமே /அதனால் மீனில் இருந்து மாருகிறார்/கீழ் கழித்த மனுஷ்ய பிறவியும் கேட்கிறார் பொன் வட்டில் பிடித்து புக

ஆரா அமுதே-ஏரார் கோல திகழ கிடந்தாய் கண்டேன் அம்மானே-.கைங்கர்யம்- பண்ணுவது ஆழ்வார் இல்லை ப்ர்ஹ்மாதிகள் இல்லை

-சீரார் செந்நெல் கவரி வீசும் -நெல்லுக்கு சீர்மை இதனால் தானே/

/மீனாக ஆசை பட்டார்/ தண்ணீர் வற்றினால் -பறவையும் மீனும் சொல்லி-உயிர் இல்லாத -அசித் -ஸ்தாவர- சொல்ல போகிறார் அடுத்து –

இதில்-/ பொன் வட்டில் பிடித்து புக விரும்புகிறார்/வைகுண்ட நீள் வாசல்-திரு மலை அப்பன் வாசலை குறிக்கும்

/இன்றும் அதே பேர்/செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்-அவனே செய்விக்கிறான் பாசுரத்தில் உள்ள பெயரை வைக்க ஆக்கி இருக்கிறான்

/நீள் வாசல்-பிரயோஜனாந்தர் என்பதால் நீள் வாசல்/கைங்கர்ய பரர்-திரு கரக கையர் –வட்டில் கையர்–ராஜா ஆக இருக்கும் பொழுதும்  அனைவரும் காத்து இருக்க

-போய் இருக்கிறார் இப் பொழுது கைங்கர்யத்துக்கு போகிறார் -இதுவே வேண்டும்-துன்னிட்டு-நெருக்கி/வட்ட வாய் நேமி /

/வெய்யதோர் தழல் உமிழும் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிகிற்றியே /

படிக்கம்-உமிழும் நீர்-பொன் வட்டில்-அந்தரங்க விருத்தி செய்யும் கைங்கர்ய பரர் /

/பார தந்த்ரத்துக்கு உறுப்பாய்- இட்ட வைத்த படி இருக்க- கீழில் கழித்த மனுஷ  ஜன்மமும் பெற தயார் என்கிறார் இதில்

நாமம் கற்ற ஆவலிப்பு/ அச் சுவை வேண்டேன்/பிறவி வேண்டேன்/முன்னுக்கு பின் முரணா/

சேஷத்வ பார தந்த்ர்யதுக்கு ஏற்ற உடல் வேண்டும்/அபிமானம் -துங்க செல்வனை போல செல்வ நம்பி/

அபிமான பங்கமாய்-ஆண்டாள்/தொண்டன் என்ற அபிமானம் வேண்டும்/பின்னப் பட்ட சடை/ பின்  தொங்கும் சாட்சி/பின்னே வர்த்திக்கும் ருத்ரன்/-மூன்று வித அர்த்தம்..

//தாள் சடையும் நீள்  முடியும்/நான் முகனை நாராயணன் படைத்தான்- ஒரு தலை -நான்கு-ஐந்து -ஆறு தலை/ சங்கரனைதான் படைத்தான்

/ஆழ பொருளை நான் சொல்கிறேன்-பெருக்க இல்லை சம்சாரம் தொலைக்க ஆழ பொருளை சொல்கிறேன் என்கிறார்-திரு மழிசை/

சடை கண்ணில் பட -அதனால் ருத்ரனை முதலில் சொல்கிறார்/

சாஸ்திர வாக்கியம் — சிகைய மத்யே பரமாத்மா விவச்தித்த– ச பிரம்மா ச சிவா ச இந்திர -சரீரமாக கொண்ட பரமாத்மா

-அஷரம்-அழிவற்ற முக்தாத்மா-மூவரிலும் உயர்ந்த –சுராட்-தோஷம் இல்லாதவர்-விடுதலை பெற்றவன்- /

இவருக்கும் அந்தர் ஆத்மா //ராமாயணமும்-பிரம்மான் சிவன் இந்த்ரன் எதிர்த்தும் லாபம் இல்லை ராமன எதிரியாக வந்தால்/நெருக்கி கொண்டு இருக்க /

மின் -ஜோதிஸ் வட்ட சுடர் ஆழி-வாய் இல் இருந்து உமிழும்
/வெய்ய தோர் தழல் உமிழ் சக்கரம் -பிரதி கூலருக்கு  உமிழும் அணு கூலருக்கு  தேஜஸ்  வட்ட வாய் நேமி வலம்  கையா என்னும்
-சிட்டனே மார்பில் பூணூல் போட்டு கோவில் இடிக்கும்/இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும். எழுந்துலாய் மயங்கும் .கை கூஒப்பும் தேறியும் தேறா விடிலும் மாயன் திறத்து தான் இந்த திரு//நப்பாசையில் எழுந்து பார்க்கிறாள் வர வில்லை என்று  மயங்குகிறாள /கெட்டேன்-நஞ்சீயர்
/ கட்டமே காதல் என்று மூர்சிக்கும்/-காதலன் அருகில் இல்லையே கடல் வண்ணா கடியை காண் என்னும்
/சங்கு சக்கரம் சேர்த்து சொல்ல முடிய வில்லை /புகல் அரிய/பணிக்கு கடவன் என்று ஆழ்வாரை புக –
அடியார் குழாம் கூட சேர்ந்து-சஜாதீயனாக கடை நிலை ஊழியனாக-கிங்கரர் ஜாதி மனிசன் பறப்பன எல்லாம் சேரும் இந்தஜாதியில்-மனிசர்
/சைதன்யம் வேண்டாம் /செண்பகம் /ஸ்ரீ திரு வேண்டும்-செண்மகமாய்  இருக்கும் கைங்கர்ய ஸ்ரீ /ஒண் பவள வேலை
-உலாவ கால் முளைத்து அலை போல /திரு பாற்கடலில் கண் தியிலும் மாயோன் கழல் இணை காண வண்டுகளுக்கு ஆசை
/ பண்-ராகம்/ பகரும் ஸ்வாபம் /பாடுகின்றன /இரண்டு தடவை பாட்டு தெரிந்த வண்டு கள்   பாடுகின்றன /
—————————————————————————————–
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
திரித்து விட்ட சடையை உடையனான சிவனும்
சதுர்முகனும்
தேவேந்த்ரனும்
சதுர முகன் பின்னிட்ட ருத்ரனும் என்றுமாம்துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
நெருக்கி
உள்ளே புகுவதற்கு சாத்தியம் அல்லாமல்
இருக்கின்ற
பூலோக வைகுண்டம் ஆகிற
திருமலையில் உள்ள திருக் கோயிலின்
நீண்ட திருவாசலிலே

மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
மின்னலை வளைத்தால் போலே
சோதிமயமாய் விளங்குகின்ற
வட்ட வடிவமான சக்ராயுதத்தை உடைய
திருவேங்கடமுடையான்
வாய் நீர் உமிழ்கின்ற

பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே
தங்க வட்டிலை
கையில் ஏந்திக் கொண்டு
அந்தரங்க பரிஜனங்கள் உடன்
நானே உள்ளே புகும்
பாக்யத்தை பெறக் கடவேன் –

இவர் அந்தரங்க கைங்கர்ய பரர என்று அனைவரும்விலகி வழி விட
கீழே மீன் -திருமலை வாசமே -கைங்கர்யம் செய்ய முடியாதே
உள்ளே புக்கு கர்ப்ப க்ருஹம் சேர்ந்து அருகில் நின்று கைங்கர்யம் செய்ய பெறுவேனாக –
பிரார்த்திக்கிறார் இதில்-
———————————————————————————-
4-4–ஒண் பவள வேலை வுலவு  தண் பாற் கடலுள்கண் துயிலும்  மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து

செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

—————————————————————————–

/துர் அபிமானம் வருமே-அதனால் ஸ்தாவரம்

ஒளி உள்ள பவளம்-வேலை-கடல் அலை/ கடற்கரை -வுலவும்–பவளம் சேர்ப்பது தான் வேலை-இருந்தும் உலவுகிற்தாம்

/குளிர்ந்த பாற் கடலில் கண் வளருகிறான் கள்ள நித்தரை உறங்குவான் போல் யோகு செய்கிறான்-மாயோன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள்

/வண்டு  இனங்கள்-கூட்டம் கூட்டமாக -புஷ்பகம் கொடுக்கும் செண்பகம்-மனுஷ சரீரம் சொன்னதும் ராஜா நினைவு வர-வேண்டாம் –

ராவணன் விதுரன் எல்லாருக்கும் பொது தானே மனுஷ ரூபம்/ அவனுக்கு உருப்பாய்-ஸ்தாவரம்

-கிடந்தோர் கிடக்கை-கண் துயிலும்-இதுவே ஆச்சர்யம்-மாயோன்- திரு மாலை -கங்கையில் புனிதமாய-  எங்கள் மால் இறைவன் ஈசன்  கிடந்த தோர் கிடக்கை கண்டும் –

அத்வீதீயம் ஆன கிடக்கை/அன்பு, இறைவன், நியாமகன் மூன்றும் வேண்டாம்

கிடந்த அழகு போதும் /அரவின் அணை மிசை மேய மாயனார்/இருந்தான் கண்டு கொண்டே/ நின்றும்  சேவை//ஏரார் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் அம்மானே

கிடந்த நாள் கிடந்தாய் ….உன் திரு உடம்பு அசைய /-ஆழ்ந்த காதல் ஆழ்வார்/

அங்கு சென்று கிட்டி காண ஒண்ணாத அருமை தீர இத் தேசத்திலே சேவிக்க

/இயல் கற்று-கற்காமல் இன்றியே-வார்த்தை சொல்லும் பொழுதே பண்ணாய் இருக்கை/

/கண்ணனை தேடி கொண்டு போகும் கோபிகள் சுச்வரதுடன் அழுதார்கள்/ கலை இலங்கு -கண்ண புரத்தில் /தாங்கள் பாடுகிற பாட்டுக்கு

-ஆழ்வார்கள் பாடும் பாட்டுக்கு கூட சேர்ந்து வண்டுகள் பாடுகின்றனவாம்

/வண்டு இனங்கள்-சேர்ந்து ஒரே சுரத்துடன் -கோஷ்டி கானம்/கைங்கர்ய ஸ்ரீ-

அருகில்  இருப்பதே உத்தேசம்/ஸ்தாவரம் ஆக இருக்க தயார் இது கிடைத்தால் /இல்லை என்றால் ராஜா பிறப்பும் வேண்டாம்

——————————————————————————————

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
ஒளியுள்ள பவளக் கொடிகளை கரையிலே
கொணர்ந்து
கொழித்த அலைகள் உலாவுகிற
குளிர்ந்த திருப் பாற் கடலிலே

கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
யோக நித்தரை செய்து அருள்கின்ற
ஆச்சர்ய சக்தி யுக்தனான எம்பெருமானுடைய
இரண்டு திருவடிகளை சேவிக்கும் படியாக

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
இசையே பேசுகிற
வண்டுகளின் கூட்டங்கள்
பண்ணிசை பாடப் பெற்ற திரு மலையிலே

செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே
சண்பக மரமாய் நிற்கும் பாக்கியம்
உடையேனாகக் கடவேன்
அங்கு நிற்கும் ஸ்தாவரமாவது-வேண்டுகிறார் –
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம்
புஷ்ப மண்டபம்
தேனிலினிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -பெரியாழ்வார்
கீழே பொன் வட்டில் பிடிக்கும் கைங்கர்யம் பெற்றால்
களவு செய்ய ஆசை தோன்றி சிறை இருக்கவும் நேரலாமே-

———————————————————————————–

4-5–கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து

இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்

எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்

நம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5

—————————————————————

செண்பக  பூ -புஷ்பக மண்டபம் /தோ மாலை சேவை //தோள் களில் தொங்கும் மாலை/புஷ்பக அலங்காரத்தில் ஆசை /

அர்த்தம்  கற்பிப்பார்கள் பறித்து கொண்டு போக நிற்கிறான்/ சிலர் தலையில் வைத்து கொள்வார்களே வேண்டாம்

/தம்பகம் ஆகிய தவம்-தபஸ் பண்ணி/முன்பு திரு -தானாகவே கிருபையால் /யானை மேல்  பெருமை தோன்ற வீற்று இருந்து இன்பம் அனுபவிக்கும் செல்வமும் அரசும் வேண்டேன்

/-கம்பம்-கண்டவர் நடுங்கும்  படி மத யானை /செல்வம் பலம் அரசு-சாதனம் இரண்டும் வேண்டாம்

/தத்வம் ஹிதம் புருஷார்த்தம்- /இன்பு அமரும் செல்வம் புருஷார்த்தம் என்றால் ஹிதம் அரசு தானே

/ எம்பெருமான் ஈசன் நமக்கு  சுவாமி

/கண்ணி குறும் கயிறு- நல்ல கயிறு வேற பயன்/தம்பகம் அவனுக்கு மட்டுமே வேறு ஒன்றுக்கும் உதவாமல் இருக்க

/பிரயோஜனத்துக்கு இன்றி இல்லாமல் /கண்டார் எல்லாரும்  நடுங்கும் படி-கம்பம்-நடுக்கம் –

வார் கெடா -ஆனை-கவள மால் யானை நால் திசை நடுங்க மும் மதம்-குவலயாபீடம் -மதத்தால் கம்பம் விட்டு அவிழ்க்க படாத யானை

/ராஜாவை மட்டும் மேற் கொள்ள விடும் யானை -அபிமானம் வளரும் –

என்பக்கலில் விசேஷ கடாஷம்/ஈசன் வானவர்க்கு என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதி/

எம்பெருமான் ஈசன்/அரங்கம் ஆளி என் ஆளி /அகில ஜகத்  சுவாமி அஸ்மின் சுவாமி /

தீந்து போகும் ஸ்தாவரம் /தபஸ் -அநேக ஜன்ம சாத்திய  தபஸ் பலம் என்று நினைக்கிறார் /

————————————————-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
தன்னைக் கண்டவர்களுக்கு அச்சத்தால்
நடுக்கத்தை விளைக்கின்ற
மதம் கொண்ட யானையினது
கழுத்தின் மேல் வீற்று இருந்து

இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
இன்பு அமரும் செல்வம் -நாநா விதமான
சுகங்களை பொருந்தி அனுபவிக்கும்படியான
ஐஸ்வர் யத்தையும்
அதற்க்கு காரணமான
இந்த அரசாட்சியையும்
நான் விரும்ப மாட்டேன்

எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
எல்லாரும் தலைவனான பெருமானுடைய
அழகிய திரு மலையிலே

நம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
புதராய் நிற்கும்படியான
பாக்யத்தை உடையேனாகக் கடவேன்
சென்மகமாக பிறந்தால் யாராவது பிரபு இத்தை தம் வீட்டுக்கு கொண்டு போய் நாட்டக் கருதி –
கற்பகக் காவு கருதிய –இப்பொழுது இந்த்ரன் காவினில் –முற்றத்துள் உய்த்தவன் போலே
அப்படி விரும்ப காரணம் ஆகமாட்டாத புதராக ஆசைப் படுகிறார்
தம்பகம் -புல் கோரை செடி கொடி முதலியவற்றின் புதர்
இலை காய் கனி நிழல் ஒன்றுக்கும் உதவாத ஸ்தம்பம்

—————————————————————————————-

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளைதிருவடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading