பெருமாள் திருமொழி–பாசுரங்கள்4-6/7/8/9/10/4-11- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்/ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை–

4-6–மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்

அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்

அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன்  ஆவேனே –4-6

——————————————————————————————————-

பொற் குவடு-சிகரம் ஆக பாரிகிறார் -தம்பகம் முடிய வாய்ப்பு உண்டு

/குளிர் அருவி வேங்கடம்/வெந்நீருக்கு பயன் படுமே /திரு மலையில் முகடாக -பொன் மயமான பெருமாளின் ஆஸ்தானம்

/தென தென  என்று ஆலத்தி வைத்து பாசுரம் பாடும் வண்டுகள்/சாம கானம் போல ரீங்காரம்/வேங்கடத்துள்-

இதில் தான் உள்/இடுப்பு இருப்பதை ஊகித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்/

/பிடிக்காதவரை கொண்டாடுகிறாரே–யதார்த்த ககனம்-மின் இடை மடவார்கள்  நின் அருள் சூடுவார் ஆழ்வார்/

-அங்கே போ என்று கதவடைத்து பேசும் பொழுதும்-இருபத்தை சொல்லி பாடுகிறார்/

/கிம் அர்த்தம் புண்டரீகாஷம்  புக்தம் விதுர போஜனம்-மடி தடவாத சோறு -தாமரை கண்ணன் என்று இருப்பதை சொன்ன்னது போலதவத்தேன்-

அவன்  கடாஷம் தான் இதில் சொல்கிறார்  /கொதிக்க  தவத்தன் கொள்கை அற்றேன்-கதிக்கு பதறி பாசுரம் /கோர மா தவம் செய்தனன் கொல்/நம் பிரயத்தனம் இல்லை

/எங்கும் பக்க நோக்கு அறியான் -அவன் தான் கோர  மா தவம் செய்தான் /பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடையே –

-மெய் மலர் தூவி கை தொழுததால் அக்காவே தீ வினைகள்-அனுக்ரகமே  அடி/ஸ்தாவரம் -ஒரு நாள் இருந்து இல்லாமல் போகுமே-திரு மலையில் ஏக தேசம் ஆக இருக்க ஆசை படுகிறார்

கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடும் /வண்டுகளும் பாடும் இங்கு/

போது அறிந்து  வானரங்கள் -பூம் சுனை புக்கு -முதலை பிடிக்காது -திரு மலையில்-பெருகு மத வேழம்  மா பிடிக்கு முன் நின்று இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்/

5200 வருஷம் ஆன பின்பு கலியுகம் -ராமானுஜர்-ஆண் யானை/ தொண்டர் பெண் யானை/ இரு கண் -பூர்வ உத்தர துவயம்  வாக்கியம்

/ அருகு இருந்த தேன்- திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் தோய்த்து -/பேத அபேத ஸ்ருதி வாக்யங்களை கடக ஸ்ருதி கொண்டு சம்வயப்படுத்தி அருளினவர் என்றுமாம் –
/எல்லாம் பக்தி தலை எடுத்து காடும் வானரமும் வேடும் அங்கு பக்தி /அது போல பொற் குவடு

அப் படி பட்ட- விளக்கும் சொல் இல்லை/நின் தாள் நினைந்து இருந்த இவளை–

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் திவளும் வெண் மதி போல் ..செழும் கடலில் அமுதினில் பிறந்த .அவளும் நின் ஆகத்து ..குவலயம் கண்ணி

-ஒன்றுக்கு எல்லா முகமும் சாரும் போலும் /கொல்லி அம் பாவை..நின் தாள் நினைந்து இருந்த இவள்- இது ஒன்றே/

சமுத்ரத்துக்கு கொல்லி மலை/ மார்பின் ஆலிங்கனம் அவள் இவளோ நின் தாள் நினைந்து இருகிறாளே/

பெருமை சொல்ல சொல் இல்லை-இவள்/சமன் கொள் வீடு கொடும் தடம் குன்றமே -மலையே  மோட்ஷம் தரும்

/சுக்ரீவன் குரங்குகளை அங்கே போய் தேட வேண்டாம் என்றானே/

ஆகாசத்து ஆகாசமே நிகர் கடல்/ராம ராவண யுத்தம்போல பொற் குவடு

இணை அடி -ஒன்றுக்கு ஓன்று தான் உபமானம் /உபாயத்துக்கும் உபேயத்துக்கும்-/

அரும் தவம்-அவ் அருகு ஆகாதல் -நித்ய வாசம் /முன்பு தவம் இங்கு அரும் தவம்/மகா பாக்கியம் /

————————————————————————————————————————————————

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
மின்னல் போன்ற சூஷ்மமான
இடையை உடையவர்களான
ஊர்வசியும் மேனகையும் போன்ற

அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
அழகிய ஸ்திரீகளின்
பாட்டும் ஆட்டமும் ஆகிய
அவற்றை
யான் விரும்ப வில்லை

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
வண்டுகள் கூட்டம்
தென் தென் வென்று ஆலத்தி வைத்து
இசை பாடப் பெற்ற
திருமலையிலே

அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே
அப்படிப் பட்ட பொன்மயமாக சிகரம்
ஆவதற்கு உரிய அருமையான
தவத்தை உடையேனாகக் கடவேன்

தம்பகத்தையும் களைந்து எறியக் கூடுமே
அங்கன் இன்றிக்கே ஒரு படியாய் இருக்கும்
திருமலையில் ஒரு பகுதியாக கடவேன் என்று அபேஷிக்கிறார்-

———————————————————————————–

4-7–வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்

கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்

கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

————————————————————————–

பக்தர் வரும் பொழுது சிகரம் வர முடியாதே ஆறாய் இருந்தால் அனைவரையும் தீண்டலாமே

/ பக்தர் சக்தி இல்லாதவர் என்பதால்/ஒரே சந்திரன் வானம் முழுவதும் ஒளியால் பிரகாச படுத்தி -போல

-ஒரே  வெண் கொற்ற குடை கீழே இருக்கும் ஜகத் சக்கரவர்த்தி – -வேண்டாம்-

தேன் மிக்க பூ- பூ மிக்க சோலை -சோலை  மிக்க திருவேங்கட மலையில் -மா மதி-பூர்ண சந்திரன்

/மகா நவமி தேவ பெருமாளும் பெரும் தேவி தாயாரும் ஒரே குடை கீழ் சேவை/இதை ஒரு பொருளாக அறியேன்

-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்- போல கொள்ளாள் இல்லை தூக்கம் என்ற வஸ்துவே தெரியாது

லஷ்மணன் 14 வருஷம் கண்ணை இருக்க பிடித்து தூங்காமல் இருந்தது போல இல்லை

/ தெரிந்து விட்டால் வாசனை திருப்பாது//காட்டு ஆறாக – ந்மலையில் இருந்து சம தளம் போகும்-கடலில் சேர – ஆறு போல இல்லை/

எல்லாரும் அனுபவிக்கும் படி /நட்ஷத்ரங்கள் எல்லாம் சந்திரனை வணங்குவது போல மன்னர்கள் எல்லோரும் வணங்கும் சக்கரவர்த்தி/

/அம் கண்  மா ஞாலத்து  அரசர் அபிமான பங்கமாய் வந்து  உன் பள்ளி கட்டில் கீழ்/

/ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் –பெரு நாடு காண பிச்சை இம்மையிலே தாம் கொள்வர் –

மா மழை முக்குளில் மாய்ந்து மாய்ந்து-நீர் குமிழி போல – செல்வம் இருந்து அனைவரும் தெரிந்து கொண்டாடும் செல்வம் அறியேன்

/கழுத்துக்கு  பூணொடு காதுக்கு குண்டலம்-போட்டு கொண்டால் நாம் பார்க்க முடியாது பிறர் பார்த்து பொறாமை பட

/சக்யம் பற்றி வந்தால் கீழே போகும்- அங்கே புறப் பட்டு அங்கே முடியும் காட்டு ஆறு ஆக  ஆசை படுகிறார்

———————————————————

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
ஆகாயத்தை தனக்கு இடமாகக் கொண்டு
விளங்குகிற பூர்ண சந்தரன் போன்ற
ஒற்றை வெண் கொற்றக் குடைக் கீழ்
ராஜாதி ராஜனாய்

கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
பெருமை தோன்ற இருந்து
அனைவராலும் கொண்டாடப் படுவதற்கு
காரணமான
செல்வத்தை நான் ஒரு பொருளாக
மதிக்க மாட்டேன்

தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
தேன் மிக்க மலர்கள் உள்ள
சோலைகள் உடைய திரு மலையின் மேலே

கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே-
ஒரு கானாறாகப் பெருகும்படியான அத்யாவச்யத்தை
உடையவன் ஆகின்றேன்
பொன் குவடாக முன்பு பாரித்தார்
அதிலும் அநுபவத்தி
புதிசாக தேவாலயங்கள் கட்டுபவர்கள்
சிலாமயமாக மூல விக்ரஹம் ஏறி அருளப் பண்ண
மலை முகடு களில் பெரிய பாறைகளை உடைத்துக்
கொண்டு போகலாமே
பெயர்த்துப் போக முடியாத கானாறாக பாரிக்கிறார் இதில்-

—————————————————————————————–

4-8–பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்

முறையாய  பெரு  வேள்வி குறை முடிப்பான் மறை யானான்

வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்

நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

—————————————————

காட்டு ஆறு இயற்க்கை யாக தோஷம் உண்டு–காணாமல் போகுமே / பிரமன் ருத்ரன் இந்த்ரன் போல்வார் சக்திக்கு தக்க யக்ஜம் குறை முடிப்பான்-

-பலம் -தரும் -வேதத்தால் பிரதி பாத்தியன்-சொல்ல படுபவன்-அவனுடைய -பாதையாக- அடியார் ஸ்ரீ பாதம் பெற

/யுக கோடி சகஸ்ராணி- விஷ்ணும் ஆராத்ய -பத்மம் -ஏழு லோகம் ஆள/

/பெரு வேள்வி/மா பாவம் கபாலம்  விட -கோபால கோளரி//சாதக வேஷம்

-சடை முடி/தீஷை-அனுபவிக்க -பிறை-தாள் சடையும் நீள் முடியும் -கொடுக்க//ஒண் மழுவும் சக்கரமும் பாசுரம்//யாகமும் பலமும் அக்னியும் அவன் தானே-

இவனே பற்ற தக்கவன்/வெறி-பரிமளம்-ஸ்ரீ பாத தூளி பட வழியாக இருக்க –

தொண்டர் அடி பொடி கிடைத்தால் கங்கை நீர் ஆட்டமே வேண்டாம் என்றாரே

———————————————————————————

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
இளம் சந்திரன் ஏறி இரா
நின்றுள்ள சடையை உடையவனும்
ப்ரஹ்மாவும்
தேவேந்த்ரனும்

முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
தம் தம் யோக்யதைக்கு தக்கபடி செய்கின்ற
பெரிய யாகங்களின் பயனாக
அவர்களது குறையைத் தீர்த்து
அவர்களது கோரிக்கையைத் தலைக் கட்டு
அருளுபவனும்
வேதங்களில் பரம் பொருளாக
கூறப்படுபவனுமான
குறை முடிப்பான் –
குறைகளை தீர்ப்பான் -வேண்டுகோளைப் பூர்த்தி செய்பவன்
அநிஷ்ட நிவ்ருத்தியும்
இஷ்ட பிராப்தியும் -செய்து அருளுபவன்

வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளை உடைய
திரு வேங்கட மலை மேல்

நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே
போகிற வழியாய் கிடக்கின்ற
நிலையை உடையேனாகக் கடவேன்-

ஆறு வற்றியும் போகலாமே
திருமலை வாழ்ச்சி இழக்கவும் நேரிடலாமே
ஸ்ரீ பாகவதர்களின் பாத தூளி படும்படி
வழியாய் கிடக்கும் நிலைமை பிரார்த்திக்கிறார்

——————————————————————————————

4-9–செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!

நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்

படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

————————————————

எம்மா வீட்டில் எம்மா வீடு பாசுரம் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே பாசுரம் போல இந்த பாசுரம்

/குலசேகரன்  படி-இன்றும் பெயர் /கைங்கர்ய ஆசையில் இழிந்து இதை பிராதிகிறார்/

செடி-பாபம்/அஞ்ஞானம் /வல்வினை-சம்சார சம்பந்தம்-தீர்க்க திரு வேண்டுமே-

திரு மாலே/நெடியானே- காலத்தால் நீண்டவன்- நெடு காலம் நினைவு கொண்டு-விடாமல் ரட்ஷிகிறவன்

-தாமரையாள் சீதை குலைக்குமேல் / அடியார்-அநந்ய பிரயோஜனர்/வானவர்- -தங்கள் காரியம்-பிரயோஜ னாந்தர  பரர்/ அரம்பையர்-அந்ய பரர்கள்-மற்றவருக்கு சேஷ பட்டவர்கள்/

பாபம் தொலைக்க வந்த இடத்தில்  கர்மம் சேர்கிறோம்-.போக்கி அருளும் -சர்வ பாபேப்யோ

/நெடியானே-ஆஸ்ரித பட்ஷ பாதம் -எல்லை காண ஒண்ணாத படி/கோயிலின்-வாசல் தனி சிறப்பு/கோவில் வாசல் /ராமன் என்ற பேர் பெற்ற மன்னன் -பேருக்கு பெருமை போல

/கோவில் -இன் -இனிமையான வாசல்/வரை புரை திரை  -தனி மா தெய்வம்-வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை-கடல் அமுதல் கொண்டு உகந்த பெம்மான்

/கிடந்தது இயங்கும்-கூடி சஞ்சரிக்க படும்-/தன் திருவடிகளில் தலை சாய்த்தார் பாபம் பிறவி தொலைத்து /பாபம் பிறவி -விதை மரம் போல/வேரோடு தீர்க்கும் /புருஷ கார பூதை இருப்பதால் –

குற்றம் பாராமல் மன்னித்து விடும்/குற்றம் பண்ணினவர்களே இல்லையே /குற்றம் ஒன்றே இல்லையே/நிழல் போல்வனர் பூ  நீளா தேவி மார்/

ராஷசிகளை காலில் விழாமலே  சரண் என்று சொல்லாமலே மாதர் மைதிலி /

நெடுமாலே- அவளே ஆகிலும்  சீதை குலைக்குமேல்- என் அடியார் அது செய்யார் செய்தாலும் நல்லதே செய்தார்

/நன்மை என்று சொல்லலாம் படி யாவது தீமை இருக்கிறதா -பேரை சொன்னாய் கோவிலை வலம் வந்தாய் அடியார் விடாய் தீர்த்தாய்

/கையும் வில்லும் திரு கோலம்- விளையாட்டு பொருளா- கதை- ரிஷி-கதை /சொல்லை சத்யம்-பிரதிக்ஜை

/உலகம் உண்ட பெரு வாயா—உலப்பில் கீர்த்தி அம்மானே-நிலவும் சுடர் சூழ் -நிறைந்த ஜோதி வெள்ளம்-நெடியாய்-அடியேன் ஆர் உயிர்

-சௌந்தர்யத்தில்   எல்லை காண முடியாது/கண்ணன்  கழிலினை- வினை வல்இருள் என்னும் முனைகள் வெருவிப்போம் சுனை நன் மலர் இட்டு நினைமின்  நெடியானே-சித்த வேண்டா சிந்திப்பே அமையும் –  //நெடியானே -தன் நினைவில் நீடித்து இருப்பன் /

நினைவு அற்று கல் போல கிடக்க வேண்டும் –பார தந்த்ர்யதுக்கு அசேதன சமாதி ஆகவும் வேண்டும் -எப் படி வைத்தாலும் கேள்வி கேட்க்காமல்

-ஊன சோடச வருஷ- மறுத்தான் தசரதன் முதலில் ராமனை

அனுப்பி வைக்கும்  பொழுது எடுத்து கொடுத்தார்-அனுப்பி வைக்க வில்லை பூ போல கொடுத்தார் –

/காண்பேனே–இரண்டும் வேண்டும்/சேராத வற்றை சேரும் சக்தி/நாராயணாய –

புருஷார்த்தம்-வேண்டி பெறனும் கைங்கர்யம்-உனக்கே நாம் ஆட் செய்வோம் ஆட் செய்து ஆழி பிரானை சேர/

புருஷார்ததுக்கு காணவும் வேணும் என்கிறார் //கைங்கர்யம் பண்ணும் பொழுது அகங்காரம் வரும்-தொண்டு புரிவதால் நேரடியாக நமக்கு  ஆனந்தம்-கூடாது

/அவன் சந்தோஷம் -பார்த்து மகிழலாம் -நித்யம் ஆக இருக்கும் இது /கிடந்ததை பார்த்து நீ சிரிக்க-உன் பவள வாய்-காண்பேனே /மற்றை நம் காமங்கள் மாற்று பிரத பல தர  விரோதி இது

பரம பத சோபானம் பெரிய பாம்பு போல இது

/98  வந்து கைங்கர்யம்-இரட்டை -நம -போட்டு 100 போகலாம் என் ஆனந்தம் இல்லை களை அற்ற கைங்கர்யம்

/தூயோமாய் வந்தோம் துயில் எழ பாடினோம் உபாயத்தில் தூய்மை பிராப்யத்தில் தூய்மை இரண்டும் ஆண்டாள் சொல்கிறாள் /

கறவைகள்- திரு வடி பற்றும் பொழுது உபாயாந்தர சம்பந்தம் கூடாது அவன் இடம் நான் பண்ணினோம் என்ற எண்ணமும்  கூடாது /

சவ ஸ்பர்சம் போல நீச ஸ்பர்சம் போல  இரண்டும்/ சிற்றம் சிறு காலே திரு வடியில் கைங்கர்யம்

/ நம்  இன்பமும் தோஷம் விஷ போஜனம் போல முதல்/வுஜ்ஜிஷ்ட அசனம் போல  புழுவும்  மயிரும் பட்டால் போல்–

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அஹ ம் அன்னம் அஹ ம் அன்னாதாக /பரணசாலை- இல்லை குரம்பை கட்ட -நான் ஆனந்தம் சீதை ஆனந்தம் நீ ஆனந்தம் பிரித்து சொன்னதும் அழுதானே

/உகக்கும் –நாங்கள் வியக்க இன்புறுத்தும்  பசு நிரை மேய்க்க போகல் – பராங்குச நாயகி உடல் இளைக்க

-அவன் பித்து பிடிக்க – வர்ணாஸ்ரம தர்மம் -தாய் சொல்ல மீற மாட்டேன்

-வேறு பெண்ணை பார்க்க -அவளையும் கூட்டி என் கண் முகப்பே இரு என்கிறார் ஆழ்வார்/உன் திரு உள்ளம் உகப்பே வேணும்/என் பெண்மை ஆற்றோம்..

இரண்டாம் திரு அந்தாதி -மாலே நெடியானே கண்ணனே- சர்வாதிகனே /அளவிட பட முடியாதவன்

—————————————————————–

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
செடி போலே அடர்ந்து உள்ள
கருமங்களை ஆஸ்ரிதருக்கு போக்கி அருளுகிற
ஸ்ரீ யபதியான பெருமானே

நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
பெரியோனே
திரு வேங்கடமுடையானே
உனது சந்நிதியின் உள் வாசலிலே

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
பாகவதர்களும்
மற்றைத் தேவர்களும்
அப்சரஸ் ஸ்திரீகளும்
இடைவிடாது சஞ்சரிக்கப் பெற்ற

படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன
படியாய் பொருந்தி
உனது பவளம் போன்ற
திரு வதரத்தை காண்பேனாகக் கடவேன்

வழி மாறக் கூடுமே
வழியாக இருப்பதைக் காட்டிலும்
எம்பெருமான் திருவருள் நோக்கம் பதியுமாறு
அவன் கண் முகப்ப்ளிலே
அந்தரங்கர் பாத தூளி படும்படியும்
ஒரு அசேதனப் பொருளாகி அதிலும்
உனது பவள வாய் காணும் சைந்தன்யத்தையும் பெற்று
இன்றும் குலசேகரப் படி எல்லா திருக் கோயில்களிலும் இந்த பாசுரம் ஒற்றியே உண்டு

—————————————————————————————-

4-10-உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்

அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்

செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

———————————————————————————————–

இது இது என்று சொன்னவர் -எது சொல்லும் யோக்யதை இல்லையே

அசித் -படியாய் கிடந்ததும் சிவந்து பவள வாய்-தாவி -சிக்கென  செம்கண் மாலே- சிக்கென பிடித்ததும் மலர்ந்தது போல

/அவன் விட்ட வழி/வேண்டாம் மட்டும் முதலில் சொல்லி /9 பாசுரம் மட்டும் விதி விலக்கு/பெற்றாலும்-பெற்றால் ஆதரிபீரா கேட்டதாக கொண்டு பதில்

/எனக்கு ஸ்வாமி/அழகன் ஸ்வாமி இரண்டு ஏற்றம்/ஏதேனும்-பதார்த்தம்-தரிசனமும் கைங்கர்யமும் வேண்டும்

/இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய்-அஞ்ஞானம் கர்ம ஜன்மம் வேண்டாம்-சத்யம்- இனி யாம் உறாமை என்றார் ஆழ்வாரும்

உபரி தன லோகம்-மேல் உள்ள  லோகங்கள் /செம் பவள வாயான்- உருப்பசி விட வைக்கும் அழகு

/கொண்டல் வண்ணனை-மற்று ஒரு இடம் போக விடாமல் இருக்கும் அழகு

/எனக்கு ஸ்வாமி-எந்த தாழ்ந்த வஸ்து வானாலும் ஆக வேண்டும்/

அனந்தாழ்வான்- இவ் விஷயம் திரு வேம்கடத்தான் ஆகவே என்பாராம்/

சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷி ஆகிலும்/ பட்டார் நிர்வாகம்-

நானும் அறிய வேண்டா திரு வேம்கடத்தானும் அறிய வேண்டா ஆரும் அறிந்து என்னை கொண்டாட வேண்டாம்-சர்வக்கஜன் கூட  தெரியாமல் –

———————————————————————————————————————-

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
மேல் உலகங்களை எல்லாம்
ஒரு கொற்றக் குடையின் கீழே அரசாண்டு
ஊர்வசியினுடைய அழகிய

அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
பீதாம்பரம் அணிந்த அல்குலை
அடையப் பெறினும்
அதனை விரும்ப மாட்டேன்

செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
சிவந்த பவழம் போன்ற
வாயை உடையவனான
எனது அப்பனுடைய
திரு வேங்கடம் என்ற பெயரை உடைய

எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
அழகிய திருமலையின் மேலே
ஏதேனும் ஒரு பதார்த்தம் ஆகக் கடவேன்

ஸ்வர்ண கவசம் போட்டு மூடினாலும் மூடுவார்களே
ஒரு பிறவியும் தாமாக விரும்பி சொல்ல மாட்டாதாராய்
ஏதேனும் என்கிறார் அதனால்-

——————————————————————————————-

4-11-மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்

பொன்  இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி

கொன் நவிலும்  கூர் வேல் குலசேகரன் சொன்ன

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11

கதற வேண்டாம் இப்படி இருக்க வேண்டும்- பாங்காய பக்தர்கள் ஆவார்/

விலகாமல் குளிர்ந்த சாரல் உடைய -தாள்வரைகள் /வணங்கி பிரார்த்தித்து அருளிய இந்த பதிகம்

/வேல் வீசுவதில் சாமர்த்தியம்/பரம்பிய-பன்னிய-எட்டு திக்குகளிலும் – -/

ஏற்ற பக்தர்கள் ஆவார்/பொன் -உயர்த்தி /சேவடிகள் -கண்டால் கால் வாங்க முடியாத அழகு

/பிணிப்படும் படி/தலையால் வணங்கி கவி பாடினார் புரிந்து இறைஞ்சி/இஷ்ட விநியோக அர்ஹர் ஆவார்கள்

—————————————————————————

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
நிலை பெற்ற
குளிர்ச்சிஉள்ள சாரல்களை உடைய
வடவேங்கடதிரு மலையில்
எழுந்து அருளி இருக்கும் பெருமானது

பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
பொன் போன்ற சிவந்த திருவடிகளை
சேவிப்பதற்கு ஆசைப்பட்டு
வணங்கி

கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பகைவர்களை கொல்லுதலைப் பயின்ற
கூர்மையான வேல் ஆயுதத்தை உடைய
குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே
ஆராய்ந்த நூல்களில் கூறிய
இலக்கணத்துக்கு இசைந்த
தமிழ் பதிகத்தை கற்று வல்லவர்கள்
அந்த பெருமான் திரு உள்ளத்துக்கு
இனிய பக்தர்கள் ஆவார்கள்

இந்த திரு மொழியை அடி ஒற்றி

மாடாக நிழற்று செழுமரனாகத் தவச் சிறிய
பூடாகக் குழைத்த நறும் புதலாக வளிப்படுமோ
ரோடாகப் பெறுவம் எனில் உயிர் காள் நற்கதி பெறலாம்
வீடாகத் திரு நெறி மால் வீற்று இருக்கும் வேங்கடத்தே

என்று திரு வேங்கடக் கலம்பகத்தில் அருளிச் செய்து உள்ளார்

——————————————————————————————

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

/பெரிய வாச்சான் பிள்ளைதிரு வடிகளே சரணம்.

குலசேகர ஆழ்வார் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading