ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -104.கையில் கனி என்ன /105செழும் திரை பாற் கடல் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

104—-கையில் கனி என்ன

கையில் கனி என்ன  கண்ணனை காட்டி தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் ,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண்  சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் ராமானுச !என் செழும் கொண்டலே

ஆளவந்தார்  இடம் கீதை ஞானம் கொடுத்து ருசி பிறப்பித்து அரங்கனை காட்டி தந்தாள் போல -உபதேச ஞான லாப மாதரம் ரசிகிறபடி கண்டால் ,பகவத் விஷயத்தை சாஷாத் கரிதீராகில் உமக்கு எப்படி ரசிகிறதோ என்று எம்பெருமானாருக்கு கருத்தாக கொண்டு பகவத் விஷயத்தை விசதமாக காட்டி தரிலும் தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன் //இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதி யிலும் கால் பாவுவன் அல்லது தரியேன் என்கிறார்/..எம்மா வீடு திறமும் செப்பம்-பிரசங்கிக கூட வேண்டாம் //சிற்றம்  சிறு காலே போல இந்த பாசுரம்–பறை பேதி வாத்தியம் கொண்டு வைத்தான்-பொருள் கேளாய்-பெற்று கொள்பவர் சொல்வதை கொடுக்கிறவன் கேட்க்க வேண்டும்- இன்று பறை கொள்வான் அன்று கான்-உனக்கே நாம் ஆட செய்வோம் -என்றால் ஆண்டாள் /// எம்மா வாட்டு திறமும் செப்பம்.. அம்மா அடியேன் வேண்டுவது ஈதே /உன் செம்மா பாதம் தலையில் வைக்க வேண்டும் -ஆழ்வார் /சொரூபம் காட்டி தர உம் ரூபமே  போதும்/ரூப குணமே சிறந்தது -அர்ச்சைக்கே ஏற்றம் –பக்தர் நெஞ்சில் ரூபத்துடன் வ்யாபிகிறான்- மெய்யில் பிறங்கிய சீர் /

நிரயம்-நரகம் /வென் நரகம்-சம்சாரம்/இங்கு கிடக்கிலும் -அதையே சொல்வேன்-உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்/சோதி விண் செரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்/எதை செய்தாலும் இதே -மற்றை காட்டி மயக்கேல்/இதை கொண்டே தரிப்பேன்-கால் பாவுவேன் எங்கும் –இதுவே புருஷார்த்தம் /கிடக்கில் என் சேரில் என் என்ற பாட பேதம்/லஷ்மணன் -முதல் படி கட்டில் வைத்தால் என் காட்டில் வைத்தால் என்-பரதன் நிலை போல /சீதை போல-நரகம் சொர்க்கம் எது கேட்டு விளக்கினாலே சார்ந்து இருந்தால் காடே சொர்க்கம் பிரிந்தால் நாடே நரகம்/ அது போல  ஸ்வாமி உம் சீரை அனுபவித்து கொண்டால் நரகமும்

சொர்க்கம் தான்// இல்லை என்றால் சோதி விண் கூட நரகம் போல் தான் /பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்

செழுமை மாறாத கொண்டல்/கருணை குறையாத -விலஷனமான மேகம்-கண்ணனை காட்டி கொடுத்தாரே கொண்டல்/ சீரை காட்டியது செழும் கொண்டல்/போய் போய் வர்ஷிப்பது போல ஸ்வாமியும் /நான் இருந்த இடத்தில் வந்து காட்டி கொடுத்தீரே /அமலன் ஆதி  அடியார்க்கு ஆட் படித்தி என்று காட்டி கொடுத்த பிரான் போல எங்களுக்கு பிரகாசிப்பித்தது அருளின உபகாரரரே /எம் செழும் கொண்டல்-ஆஸ்ரித சுலபன்-முந்தானையில் கொள்ளலாம் படி மாணிக்க கல்/ ஸ்ரிய பதியாய்-காட்டி தரிலும்-எங்கும் உளன் கண்- அவனே சர்வ வியாபகன்- அதை கூட காட்டி தருவீரகில்-கூட-பிரமம் அவன் -அவனையே காட்டி தந்தால்-சீரே பெரிசு-என்பதால்/சாஷாத் கரிப்பித்து தரிலும் -அடைய அறிய பக்தி -ஸ்வாமி தான் பக்தி/ கீழ் பாசுரத்தில் நரசிம்ஹர் கீர்த்தி-பின் வாசல் தெள்ளி சிங்கர்/ இங்கு கிருஷ்ணா பக்தி -முன் வாசல்/தேவரீர் உடைய திவ்ய விக்கிரகத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி குணங்கள்-ரிஷிகள் போல்வார் சொரூப குணங்கள்/பகத் பக்தர்களுக்கு உசந்த குணம் காட்டுவான்-விக்ரக குணம்/ ஆழ்வான் போல்வாருக்கு சொரூப குணம்/மற்று ஒண்டும் வேண்டேன்/ உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் வேண்டேன்-தேவு மற்றுஅறியேன்//ரூபம் கண்ணன் விட ஸ்வாமி படி எடுத்து காட்டும் படி அல்லவே//அன்னைமீர்காள் என்னை முனிவது திரு குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்/என் நெஞ்சினால் நோக்கி -ஆழ்வார் கேட்டது போல /

கண்ணன் கருப்பு கண்ணன் என்னும்  கரும் தெய்வம்/ இவர் ராமானுஜ திவாகரன்/ ஆயர் குலத்திளினில் தோன்றும் அணி விளக்கு அச்சுத  பானு- மெய்யில் பிறங்கிய சீர் திரு மேனி கருப்பு தானே -என்றார்/இதனால் மெய்யில் பிறங்கிய சீர் -ரூப /அவன் இருள் அன்ன மா மேனி-/சீர் பிரகாசிக்காது ஆங்கு/ மாலா காரருக்கும் அக்ரூரர் காட்ட வேண்டி இருந்ததே /இங்கு சங்கை இன்றி தானே பிரகாசிக்கும் சீர்/வன் சேற்று அள்ளல்- நிரயத் தொய்யில்-விடியா வென் நரகம்- பாபம் கூடி கொண்டே இருக்கும் இங்கு –தேஜோ ரோபமானபரம பதத்தை பிராபிக்க்கவுமாம்-தேவரீர் உடைய திரு மேனி குணத்தையே அனுபவிக்க -இதற்கும் தேவரீர் தான் பிராசதம் செய்து அருள வேண்டும்-/பிறந்க்தல்-பிரகாசம் //இந்த அனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பேன்/இது இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் என்கை

பொழிந்ததால் செழும் கொண்டல்/மனசு பயிர்-முகம் வாடி ஆத்மா ஞானம் இன்றி /முக்தி கொடுக்கும் ஞானம் இன்றி-வாடினேன் வாடி என்று இருந்து /ஆத்மாவை வெய்யில் வைத்த நமக்கு ஒரு பாட்டம்  மழை பெய்து -சம்பந்த ஞானம் உணர்த்தி ஞான ஜீவனம் கொடுத்து சத்தை உண்டாக்கி -கூடினேன் கூடி குளிர்ந்து ஆத்மாவை நிழலில்வைத்து /தன் திருவடிகளில் சேர்த்து கொண்டு -செழும் கொண்டல்-அபேஷியயையும் உருவாக்கி பொழிகிறார் /பத்துடை எளியவன் தூது போனது /கண் நுண் சிறு தாம்பால் கட்டு உண்டு /அடி உண்டு -எள்கு நிலை -அஞ்சு நோக்கும் /கொற்ற குடையாக கோவர்த்தனம் உதரணம் பண்ணியும்-குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -ஆகிஞ்சன்யம் -கோவிந்தா பட்டாபிஷேகம் பண்ணி கொண்டாயே-அகம் பாந்தவ ஜாதி சௌலப்ய சூசுகம்-கண்ணன் என்பதற்கு இது வரை -திண்ணன் வீடு முதலாய் எல்லாம் தருபவன் -பரனுமாய் -தரிலும்- உம்மை தொகைக்கு-பெருமை /உன் தன் -ஸ்வாமி திருமேனி காட்டி/அவன் அனைவருக்கும் பொது-பதிம் விச்வச்ய-உலகுக்கோர் முந்தை தாய் தந்தை/-அதில் இல்லை/அனந்யார்கம்-தேவரீர் -பக்கலில்-எப்பொழுதும் ப்ரீதி உம் இடம் தானே /அத்தை பிரசங்கிபதும்-எம்மா வீட்டு திறமும் – செப்பம்-ஆழ்வார் -செய்யேன்

பிராப்யம் பெருமாள் தானே- உன் தன் பிறங்கிய சீர் சொல்லலாமோ-அநாதி கால சம்சாரத்தில் உழன்று இருக்கிறேன்-என் உடன் சேர்ந்து அவனும் கிடக்கிறான்/-கார்டை கொண்டு கண்டேன் அல்லேன்- எங்கு இருக்கிறோம் தெரியவில்லை / ஸ்வாமி அவதரித்த அன்றே கரை  மரம் சேர பெற்றேன்- தேவரீரே பிராப்யம் என்கிறார் அமுதனார் /விஸ்வரூபம் காட்டி- அநு கூலருக்கும் பிரதி கூலருக்கும் கீதை உபதேசம் பண்ணியும் ஒருவருக்கும் ஆகிலும் முமுஷை ஜனித்தது இல்லை

அர்ஜுனன் போன்றவருக்கும் கூட தேவரீரை செவித்தவாறே ஊமைக்கு தெரிந்து விக்ரகதோடே காட்டி வீட்டையும் கேட்க்காமல் கொடுத்து அருளினீர் ஆழ்வான் கேட்டு அருளி பேறு இழந்தோம் என்றாரே/ நெடு வாசி//பெருமான் என் தண்மை பார்த்து தண்டிப்பான் என்று பயம்/ நாராயணன் -சோஷயதி-அலர்த்த கடவ ஆதித்யனும் உலர்துவான் தண்ணீரில் இல்லாத தாமரையை //உன் சம்பந்தத்தால் தான் கிட்டும்/நீர் சொல்கிற படியே வந்தாலும்-குழந்தைக்கு பால் சக்கரை போல நீர் -ஆச்சார்யர் வேண்டும்- -இது அவர் படி பேசினாலும் -சம்பந்தம் வேண்டும் என்று காட்டுகிறார்/ஆள வந்தார் சேவை கிடைக்க வில்லை என்று அரங்கனை சேவிக்காமல் போனீரே-உம் படி தான் நடந்தேன்/என்கிறார் அமுதனார்/ச்வாதந்த்ரம் -சீறி அருளி சம்சாரத்தில் அலுத்து வைத்தாலும்/ வான் உளர் இன்பம் எய்தில் என் மற்றை நரகம் எய்தில் என்-நிரயம்-சீதா வாக்கியம்–நரகம்-சம்சாரம்/கிருபை செய்து அருளி சோதி விண்  செரிலும்-சுத்த சத்வ மயம்-இவ் அருள் நீ செய்யில் தரிப்பன்/ சீரை முற்றூட்டாக அனுபவிக்க கொடுத்தால்-தரியேன் இனி உன் சரணம் தந்து சன்மம் கழியாயே/களைவாய் துன்பம் ..கலை கண் மற்று இலேன் –ந தேகம் ந பிராணன் சேஷ அபிலேஷகம் நாசா ஆத்மாநாம் -ஆளவந்தார்-சேஷத்வம் அடிமை தனம் இருந்தால் வேண்டும்/நரகமும்  சுவர்க்கமும்  மலர் கோன் பிரிவதும் பிரியாததும் –அருளால பெருமாள் எம்பெருமானார் -பிரத பர்வம் அருளியது போல அமுதனார்/

105—-செழும் திரை பாற் கடல்

செழும் திரை பாற் கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ்
விழுந்து இருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திரு பாதன் ராமானுசனை தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே

எல்லாரும் சம்சாரம் த்யாஜ்யம் பரம பதம் உபாதேயம் என்று அறுதி இட்டு ,வச்தவ்ய தேசம் அதுவே என்று அங்கெ போக ஆசை படா நிற்க ,நீர் பரம பதத்தையும் சம்சாரத்தையும் சஹபடியா நின்றீர் –உமக்கு வச்தவ்ய தேசமாக நீர் தாம் அறுதி இட்டு இருப்பத்து எது என்ன அருளி செய்கிறார் இதை

இச்சுவை தவிர அச்சுவை வேண்டேன் என்றார் தொண்டர் அடி  பொடி ஆழ்வார்/ -பிறவி வேண்டேன் -உபய விபூதியும் வேண்டேன்/அரங்கமே வச்தவ்யம் என்றார்//இங்கு அமுதனார்  ஸ்வாமி யை தொழும் பெரியோர் எழுந்து இரைத்து ஆடும் இடமே அடியேனுக்கு இருப்பிடம் என்கிறார் /ஈடும் ..ஆடும்.பாடும் என் நா அவன் -ஆழ்வார்/ஸ்வாமி வைபவம்-நல் வேதியர்கள் தொழும் திரு பாதம் படைத்தவர்/உறங்குவான் போல் யோகு செயும் -மாயன்- ஆஸ்ரித சேஷ்டிதன்-திருவடி கீழ் விழுந்து இருப்பார்- சனக – சனத்குமாரர் போன்ற முனிவர்கள் -மேவும்-விரும்பும்-ஞானி ஸ்வாமி/பிள்ளை ஊமை செவிடன்- திரு பாற்கடல் போய் வந்து பேசிய வார்த்தை-கேட்டு இருக்கிறோம்/பிரத்யட்ஷ பிரமாணம் இது  மேவு நல் /ஞானம் என்று கொண்டு-அந்த ஞானம் படைத்த ஞானி ஸ்வாமி நமக்கு உபதேசித்தார்/சரம பர்வ நிஷ்ட்டையே //மகா பாரத சாரத்வாத்/ரிஷி அனைவராலும் பாட பட்டது /வியாசரால் தொகுக்க பட்டது பீஷ்மரால் உரைக்க பட்டது கீதையின் அர்த்தம் ஒத்து போகும் -உபாதேய தமம் சகஸ்ரநாமம் /திரண்ட பொருள்-துஷ்யந்தச ரமச்யச்த ஆடி பாடி இதுவே எனக்கு ப்ரீதி என்கிறான் சத்தம் கீர்த்தனம் என்றான் அந்த ஞானி எனக்கு வேண்டியவன் அவனுக்கு புத்தி யோகம் கொடுக்கிறேன் – என்னை அடைகிறான்/அது போல இங்கும் செழும் பொருள்/பாத்ம புராணம்-பாகவத பிரபாவம்-பக்தி அழ நாரதர் தேட-சனக சனத்குமாரர் சொல்லியது-மகத்த பாத ரஜஸ் தலையால் தரிப்பதே பேறு என்றார்களே -இதுவே திரண்ட பொருள் கபிலரும் தேவ பூதைக்கு அருளியது-

சாது சங்கமமும் பாத ராஜசே பாபம் போக்கும் என்றார்/அஜா மலன்-யமனும் இதை சொல்வான் அவதூத சண்டாசியும் இதையே சொல்வார்/எழுதி வைத்தார்கள் /அனுஷ்டித்து உள்ளம் கை நெல்லி  கனி போல ஸ்வாமி கொடுத்தார் /பிரகாச படுத்திய பெருமை ஸ்வாமிக்கே//வேதியர்கள் சன சனத்குமாரர்./நல் வேதியர் ஞானம் கனிந்து  பக்தி மார்க்கத்தில் வந்த நல் வேதியர்கள்-கூரநாத  குருகேசர் பிள்ளான் எம்பார் ஆண்டான் கிடாம்பி  ஆச்சான் வகுட நம்பி போல்வார்

அங்கு உற்றேன் அல்லேன் இங்கு உற்றேன் அல்லேன்-ஆழ்வார்/ தவிக்கிறார்/ அமுதனார் கதறவில்லை இதே இருப்பிடம் என்கிறார்/எது இருப்பிடம் என்று தைரியமாக அருளுகிறார் இதில்.//பகவத் வைபவம் சொல்லி -ஸ்வாமி திரு உள்ளம் மகிழ-அழகிய திரைகளை உடைத்தான திரு பாற்கடலிலே -கடலோதம் கால் அலைப்ப கண் வளரும்-என்கிற படியே துடைகுத்த உறங்குவாரை போல அத் திரைகள் ஆனவை திருவடிகளை அனுகூலமாக அசைக்க கண் வளரா நிற்பானாய் -உறங்குவான் போல் -திரு வாய் மொழி 5-4-11-யோகு செய்கிற ஆச்சர்யத்தை உடையவன் ஆனா சர்வேஸ்வரன் உடைய குணத்தில் ஈடு பட்டு -பைய துயின்ற பரமன்-தூங்கும் பொழுதும் பரமன் இவன்–ஜிதந்தே- -ரிஷிகேச- இந்தரியங்களை ஜெயிக்க பண்ணுபவர்- என்று திருவடிகளில் கீழே விழுந்து இருந்த-வசத்தில் இன்றி விழுந்து -விழுந்து இருப்பார்- என்றுமே-  வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்-நித்ய படி-ச்வபாவத்துக்கு  ஒரு காலும்  சலனம் அற்று இருக்கிற கலக்கம் இல்லா நல் தவ முனிவரும் -இது ஒரு ஞான வைபவமே -திரு வாய் மொழி 8-3-10-/இத்தையே பலகாலும் ஸ்லாகித்து கொண்டு போருகையாலே-இத்தையே-ஞானம்-என்று  அவர்கள் நெஞ்சில் மேவப் பட்ட விலஷனமான ஞானத்தை உடையராய் பரம வைதிகரான அவர்கள் பிரனாமாத்ய அனுவர்தன்களை பண்ணி நின்று உள்ள திருவடிகளை  உடைய எம்பெருமானாரை -நித்ய அஞ்சலி புடாஹ்ருஷ்டா -என்கிற படியே —சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் அவ அனுபவ ஜனிதஹர்ஷா பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே கிளர்ந்து கடல் இறைத்தால் போலஇரைத்து கொண்டு  -நீள் ஓதம் வந்து அலைக்க-மன்னாதன் திருவடிகளை திரு வல்லி கேணி /

மேவுவது ஞானம் ஞானி அல்ல /உண்டோ  கண்கள் துஞ்சுதல் -அநிமிஷரையும் உறகல் உறகல் என்பார் பெரி ஆழ்வார்/–கண் துயில்  மாயன் / கண் வளரும்  கடல் வண்ணன் கமல கண்ணன் /விழித்து இருக்கும் ஸ்வாமி யை பற்றனும்/தொழும்- நமஸ்காரம் போன்ற வற்றை பண்ணி கொண்டு இருக்கும் பெரியோர் -அனுபவித்து ஆடி பாடி சம்ப்ரம வியாபாரங்களை பண்ணி கொண்டு அவர்கள் அடியவன் ஆன எனக்கு-வச்த்தவ்ய தேசம் /செழுமை-அழகு-பெருமை  / அலைக்கு கடலுக்கு மாயனுக்கு கொண்டு/பாற்கடல் பள்ளி கொள் மாயன் -பாட பேதம் /

ஆழ்வான் ஆண்டான் போல்வார் இறைந்து ஆடும் இடமே வச்தவ்யம்  /செழும்-அழகு பெருமை ஆச்சர்யம் / தரிக்காமல் இருக்க -ஜலான் துக்ருதம் மீன் போல துடிப்பேன்-/மெய்யில் பிறங்கிய சீரை அனுபவிக்க-இடம்- ஒலுவில் காலம் எல்லாம் பிரார்த்தித்த ஆழ்வாருக்கு திரு மலை காட்டினது போல-நலம் அந்தம் இல் நாடு போக ஆசை  பட்டார்-வானவரும் அங்கு முழுவதும் அனுபவிக்க முடியாமல் இங்கு வருவார் என்று காட்டி கொடுத்தார் -அங்கு எங்கு எங்கு கலங்கினார் ஆழ்வார்/இங்கு -, அமுதனாருக்கு கலக்கம் இல்லை/ ஞானம் மட்டும் இருந்த சன சனத் குமராதிகள் /சேவித்து கொண்டு இருப்பவர்கள் -உபாயமாக/ அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் ஆழ்வான் ஆண்டான் போல்வார் ஆக மூவரையும் சொன்னார் இதில்//செழுமை அலைக்கு அழகாய்// கடலுக்கு பெருமையாய்நளி நீர் கடல் படைத்து – – தான் ஓர் பெரு நீர் தன் உள்ளே தோற்றி – -நாராயண -நார-நீர் -இருப்பிடம்-பராசரர் -மனத்துள்ளான் மா கடல் நீர் உளான்  மலராள் தனத்து உள்ளான் -புண்டரீகர் இக் கடலை இறைத்தாரே திரு கடல் மல்லையில்—தாளும் தோளும்முடியும்  சமன் இலாது  பல பரப்பி-கடல் படைத்தான்/செழுமை-மாயனுக்கு -ஆஸ்ரித சேஷ்டிதமே//கும்ப கர்ணன் -தொடை தட்டுவது போல உறங்குவாய்/தொடை குத்துவாரை போல-திரைகள் ஊஞ்சலில் கண் வளருகிறான் உறங்குவான் போல் யோகு செய்கிறான் -மாயன்-வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து- மூலம் திரு பாற்கடல் நாதன்.

அவதாரங்களுக்கு காரண -கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்-சேரா சேர்க்கை மாயன்/பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து-சதா நிஷ்ட்டை/ அடி கீழ் அமர்ந்து புகுந்து -நிழலும் அடிதாரும் போல -பிரியாத -கலக்கம் இல்லாத சனத் சனத்குமாரர்கள்/பர பரன் என்றே தெரிந்து எளியவன் என்று தெரியாமல் /சரம பர்வ ஆசார்ய நிஷ்ட்டை -ஞானம் -வேதியர் தொழும்-தஸ்மை -பரம யோகினே -பிரணாமி லஷ்மண முனி /தொழும் பெரியோர் /கைகள் கூப்பி சொல்லி/பறவைகளை/ புணர்த்த கையினராய்  அடியேனுக்கு போற்றுமினே-/நித்ய அஞ்சலி /எழுந்து இரைத்து ஆடும் இடம்/ உன்மத்தகமாய்-மேல் மேலும் எழுந்து /திருவடிகள் பட்ட  இடம்/சரமாவதி தாசனாக /கும்பிடு நட்டம் ஆடி -ரசம் உண்டு -இவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம்/ பாட்டி கேட்க்கும் இடம் எல்லாம் வகுத்த இடம் இது அன்றோ எழில் ஆளி என்றான்/பரகால  நாயகி இருக்கும் இடமே –திருவடி தாமரையே என்று காட்டினானாம் –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading