ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதி -69.சிந்தை யினோடு கரணங்கள் /70.என்னையும் பார்த்து /71.கூர்ந்தது அத் தாமரை ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

69—-சிந்தை யினோடு கரணங்கள்

சிந்தை யினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்

அந்தம் முற்று ஆழ்ந்து  அது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து

எந்தை ராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

எந்தை-தந்தை-என்னை கை பிடித்து தூக்கி விட்டார்/யாரோ பண்ண  வில்லை../அசித் போல கிடந்த அன்று- முன் நாள்- சிருஷ்டிக்கு முன்/ சிந்தை-மனச- கரணங்கள்- 10 இந்தரியங்களும் –நாம ரூபம் இன்றி-அந்தம் உற்று -முடிந்து ஆழ்ந்தது -அதை கண்டு- இன் ஒரு கண்டு -சங்கல்பித்து-பல வடிகளால் ஆக -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சிருஷ்டிக்க சங்கல்பித்து -கண்டு /அவை- ஆழ்ந்து போன கரணங்களை -அன்று–பிரார்தியாத  அன்று -அருளால்- அனுக்ரகத்தாலேயே -தந்தான்–நீர்மையினால் வ்யாபரிக்கைக்கு ஈடாக அருளினான் அரங்கன்//இவன் கூட-தன் சரண் தந்திலன்- சம்சாரத்தில் அழுத்த வழி கொடுத்தவன் உதாரணத்துக்கு அவன் சரண் தர வில்லையே -உடல் ஜன்மா கொடுத்த தந்தை ஞான ஜன்மா கொடுத்த தந்தை- வகுத்த சேஷி-/எந்தை-தான் அது தந்து-இன்று வந்து என்னை  எடுத்தனன்

ஈஸ்வரனை காட்டில் தன் விஷயத்தில் உபகார எண்ணம் தோற்ற -உபாகார ச்ம்ர்தி தான் இந்த பாசுர விஷயம்- நினைந்து ஆனந்த படுகிறார்..

ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று–பிரளயம்-கடல் சூழ்ந்த காலம் என்று நினைப்போம்-அன்று -தண்ணீரே இல்லையே /ஆகாசம் முதலில்-வாயு அக்நி தண்ணீரே பிர்த்வி சிருஷ்டி / லயம் பிரத்வி-தண்ணீர்- அக்நி-வாயு- ஆகாசம்-அகங்காரம் -மகன்–தமஸ்- அவ்யக்தம்-மூல பிரகிருதி -ந்ய்மிதிக்க பிரளயத்தில் தான் கடல் சூழ்ந்து இருக்கும்/சமுத்ரத்தில்- ஆல் இலை சயனம்/ மூன்று லோகம் அழிந்த நைமித்திக பிரளயம்  /பிராக்ருத பிரளயத்தில் யாரும் இல்லா அன்று -/சிந்தை முதலில்- இந்தரியங்களில் ஓன்று தான்-தலைவன் மனசு என்பதால்/பிராதன்யம் தோன்ற எடுத்தார்../அழிந்தும் போனது அந்தம் முற்றது -சிதைந்தது  முடிந்தும் போனது நாசம் அடைந்தது காரணமும் காரியமும்..//மழை பொழிந்தது நெல் விளைந்தது போல //

அசித் போல இருந்த அன்று /என் தனக்கு–இது இவன் உடையது என்று பிரமித்து -எனேக்கே எனக்காய்- தனைக்கே ஆக  எனை கொள்ளும் ஈதே இன்றி // சம்சாரிகளில் திரு வுள்ளம் -இவற்றை வ்யாபரிக்கை ஈடாகி -கொடுத்தான்- தையால்- பிரார்த்திக்க வில்லை/ அவனுக்கு இவைற்றை  உபயோகிக்காமல் என் தனக்கு /கிருபையால் கொடுத்து அருளிய அரங்கனும் கூட-அலம் புரிந்த நெடும் கை-இவனுக்கு- கரணங்கள் தந்து அருளியது போல சரண் அருள வில்லை/ அநிஷ்ட பிராப்தியும் இஷ்ட நிவ்ருதியும் அருளினான்//ராமானுஜர்-எந்தை- கருத்து ஸ்வாமி தான்/ஜனகராய் கொண்டு பிறப்பித்தார்-ஞான ஜன்ம -அருளி..வந்து அரங்க செய்ய தாள் இணை சேர்த்தாரே ஆழ்வான் மூலம் /வந்து-ஸ்ரீ பெரும் புதூர் பிறந்த்க்ஹு  காஞ்சி ஸ்ரீ ரெங்கம் எனக்காக  வந்து /என்னை-சம்சார அரணவம் -அரங்கனோ பிரளய அரணவத்தில் இருந்து எடுக்க-இது ஒரு வுபகாரமே ஆச்சர்யம்

அதி துர் லபம்-அறிவுக்கு அரியது கிடைக்கவும் அரியது// பிரளயத்தில் கிடைக்காத கரண முதலானவை கிட்டினாலும் சம்சார விலக்கு கிட்டுவது துர்  லபம் / தம் திருவடிகள் உபாய உபயமாக தந்து- தன் திருவடி=ஆழ்வான்/சம்பந்தம் கொடுத்து சம்சாரத்தில் இருந்து உத்தரித்தார்/ பிரார்த்திக்காமல் இருவரும் கொடுத்தார்/ அவன் அனைவருக்கும் கொடுக்க ஸ்வாமி என்னை மட்டுமே எடுத்தார் விசெஷனம்/அவன் தேவை இல்லாதவற்றை கொடுக்க ஸ்வாமி தேவை உள்ளதை கொடுத்தார்/மனசு-பிரதானம் பொங்கு ஐம்புலனும்-மனசை கடைசியில் மானாங்கர மனம் என்றார்/ பந்தத்துக்கும் மோஷத்துக்கும் மனசு தான் காரணம்//ஒன்றும் தேவும் ஒன்றி கிடக்கும் எல்லாம்/பூர்வ அவஸ்தையில் சேர்வதே லயம்/தமச பரமோ தாதா -மண்டோதரி//சிதைந்து -ஆத்மா தத்வம் அறிவது இயலாத நிலை /கண்டு- தானே கண்டு- பிரார்திக்காமலே கடாஷித்து /பகுச்யாம் என்று /தமக்கு பரிகரம் ஆகும் என்று திருவடி தாமரைகளில் கைங்கர்யம் பண்ண /பொருள் என்று இவ் உலகம் படைத்து //அப் படி பட்டவன்-தூரச்தான் கூப்பிடு -பத்ம நாபாவோ-பத்ம பாதாவோ-=/அரங்கனும்-என்ஊரிலே இருக்க நான் எப்படி ஆறி இருக்க முடியும் //காரியம் வேற செய்கிறான் என்று ஆறி இருக்கவோ /வைத்த அஞ்சல் என்ற கையும் கவித்த முடியும் புன் சிரிப்போடு திரு வடிகள் காட்டி கொண்டு  கருட வாகனும் நிற்க என்றோ ஆழ்வார் அருளி இருக்கிறார்/..-உம்பியை நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும்–எம் பிரானை என் சொல்லி மறப்பேனோ ஆழ்வார் கேட்பது போல/

அடியேன் ஜனித்த திவ்ய தேசத்தில் நித்ய சந்நிதினாய் அபாய ஹஸ்தத்துடன் இருந்தாயே –கை காட்டுவதை வாயால் புன் சிரிப்புடன் காட்டி கொண்டு இருகிறாயே../அரங்கனும் — உயர்வு சிறப்பு உம்மை /ஸ்ரீ சரணாரவிந்தம்-சர்வே வேதாக எத் பதம் சொல்லுமோ/-வாமனந்தி/தனம் மதியம் தவ பாத பங்கஜம் கதா புன-சரணாம் பூஜை துவயம் மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதி திரு பொலிந்த  சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் /கொடுக்காதது -சாமான்யம் இலை- தன் சரண்-உத்தமன் உத்தம வஸ்து தந்திலன் தன் உடன் சேர்த்து கொண்டது இல்லை-அநாதி கால கர்ம பார்த்து அனுக்ரகம் மறந்து நிக்ரகம் -முதலில் இதை பார்த்ததும்..-சம்சார நிவர்தனமாக அனுக்ரகம் காட்டாமல்//சுழலில் விட விட்டு -தன் சரண் தந்திலன்-அனர்த்தம் எல்லாம் அருளினார்-சம்சாரம்-துர் வியாதி-விஷயாந்திர காடுகள்-நிழல் அனுபவிக்க ஆசை- புத்திர தார கிருக  ஷேத்திர இவை எல்லாம்  கானல் நீர் போல-க்ருத்ய அக்ருத அறிவு இன்றி- திக் மோகம் பிடித்து -கிலேசமே மிஞ்சி –

வந்து அவை என் தனக்கு  ராமானுசன் -எந்தை-தந்தை -மோஷத்துக்கு ஹேது-ஞானம் கொடுத்தால்/அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்/ஞானம் ஒன்றாலே மோஷம் -தந்தை தனயனுக்கு சொத்து கொடுக்கணும் ..சொத்தை கொடுத்தார்..சொத்து அரங்கன் இடம் இல்லை-கொடுக்க வாய்ப்பு இல்லை//ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் கொடுப்பன்-தானே வைகுந்தம் தரும்/ மன்னு மா மலர் தாள்  பொருந்தாவருக்கு தந்திலன் //அவிவேகம் பகுத்தறிவு- இன்று துக்கம்-சேர்ந்து -இன்று வந்து என்னை எடுத்தினன்/இந்த திசையிலே ஸ்ரீ பெரும் புதூரில் காஞ்சி  தேவ பிரான் அனுக்ரகம்  பெற்று இருந்து -ஸ்ரீ ரெங்கம் தேடி வந்து பரகத ச்வீகாரம்  கொண்டு/பிரார்த்திக்காமல் இருக்கும் பொழுதே -தானே அதை தந்து சொத்து ..இவருக்கே சொந்தம் -வச பட்டு இருக்கிறார் /உபாய உபயமாக புத்தி தெரிவித்து /என்னையே- ஏ வாகாரம்/ என்னை கூட நீசனாக இருந்த ..சர்வ சக்தனாலும் எடுக்க முடியாத பிரபல பாபிஷ்டன்-செவி வழி செய்தி இல்லை என்னை பிரத்யட்ஷ  சாஷி /சாஸ்திரம் கொண்டு ஆச்சார்யர் அவன் இடம் சேர்கிறார்..\

70–என்னையும் பார்த்து

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த

உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்

பின்னையும் பார்க்கில் நலம் உளதே வுன் பெரும் கருணை

தன்னை என் பார்ப்பர் ராமானுசா ! வுன்னை சார்ந்தவரே

பெற்ற தந்தை முன் சொல்/வளர்த்த தந்தை பற்றி இதில் அருளுகிறார்../ ஈன்ற முதல் தாய் வளர்த்த  இத தாய் போல //  ஞானம் பிறவி கொடுத்த  வளர்த்த தந்தை ஸ்வாமி மட்டுமே /பண்ணி முடித்த உபகாரம் சொல்லி கிடைக்க வேண்டியவற்றை இதில் அருளுகிறார் /என்னையும்-அநாதி காலம் உழன்று இருக்கும் -கர்ம வாசனை -இயல்பு-அனுஷ்டானம்/நேர் எதிர் தட்டை இருக்கும் உன்னை பார்த்து -அருள் செய்வதே நலம்//அன்றி- பின்னையும்  பார்க்கில்- என் இடம் ஏதாவது நன்மை என்னும் பேர் இடலாம் தீமை இருக்கிறதா என்று பார்த்தால்- ஆராய புக்கால்-ஒன்றும் இல்லை//உன்னை சார்ந்தவர்- ஆழ்வான் ஆண்டான் போல்வோர்—உன் பெரும் கருணை தன்னை என் பார்ப்பார் ?–எடுத்த குழந்தையை கை விடாமல் -குற்றம் பார்த்து கை விடாமல்-/அறிவி ஒன்றும் இல்லா ஆட குளம் குறை ஒன்றும் இல்லா கோவிந்தா/ பார்த்தால் கை விட தோன்றும் ..பார்த்து – நீசன் என்று இரங்கி கொடு.. இரண்டு அர்த்தங்கள் ..

நீராய் நிலனாய்–சிவனாய்-ஜகத் ஆகாரம் -பெற்ற அம்சம் சொல்லி- கொடுக்க வேண்டியதை கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய்– விக்ரக விசிஷ்டனாய் காட்டி அருள்..அது போல அமுதனாரும்-ஸ்வாமி திரு முகம் பார்த்து கேட்கிறார்../வாசனை இன்னும் /சம்சாரத்தில் இருப்பதால் கருணை காட்டி இதை போக்க வேண்டும் என்கிறார்..தேவரீர் அங்கீகரித்து அருளின பின்பும் துர்வாசன ப்ராபல்யத்தாலே விபரீத ருசி பூயிஷ்டனாய் இருக்கிற என்னையும் ,பார்த்து அருளி ,அந்த  ருஷ்ய  அனுகூனமாக ,விஷயாந்தரன்களிலே மண்டி திரிகிற என் உடைய துர் விருத்தத்தையும் பார்த்து அருளி ,தோஷமே பச்சையாக அங்கீ கரிக்கைக்கு ஈடாய் இருந்துள்ள அசந்கேயமான அநேக குணங்களை உடைய தேவரீர் தம்மையும் பார்த்து அருளில் ,இதுக்கு முன்பு செய்தவோபாதி மேல் உண்டான அம்சத்துக்கும் நிர்ஹெதுகமாக கிருபை பண்ணி அருளுகையே நல்லது ..இது ஒழிய மீளவும் ஆராயும் அளவில் என் பக்கல் ஒரு நன்மை உண்டோ ? நன்மை உண்டாயே கார்யம் செய்ய வேணும் என்னில் ,தேவரீர் திருவடிகளை ஆச்ரயித்து இருப்பார் தேவரீர் உடைய நிரவதிக கிருபை தன்னை எண்ணாக காண்பார்கள் ? குறைய காணோர்களோ என்ற கருத்து.

பழகிய கர்ம யோகத்தை விடாதே பழகியதால் வாசனை பலம்/ தேக ஆத்மா புத்தி உடன்பன்னினால் வாசனை இருக்காது மூன்று வித த்யாகம் வேணும் அடிப்படை அஞ்ஞானம் தொலையனும். வாசனை நீக்கினால் தான்  மோஷம்..

வாசனை -வியாபித்து இருக்கும் -மறைந்து இருக்கும்../ரிபு சம்வாதம் – 1000 வருஷம் பின்பு வர /நிறைய சாப்பிட்ட பின்பு-பசி ஆத்மாவுக்கு இல்லை சரீரம்-தேக ஆத்மா அபிமானம் தொலைய வில்லை. 1000 வருஷம் கழித்து வர -வூர்வலம்.ராஜா கதை /ஆணை அம்பாரி //மேல் கீழ் என்ன நீரா நானா /புரிந்து கொண்டார் /வாசனை போகாது / இதனால்-ருசி பிறந்து /அனுபவம் -தெரிவில்லா அளவில்லா சிற்று இன்பம் /எண்ணில்-அசந்கேயமான-பல்- கூட்டங்களாக கூட எண்ண முடியாத குணங்கள்//என்னையும் என் இயல்பு /உன்னையும் உன் இயல்பு பல் குணம் பல் குற்றம்/காமம் குரோதம் முடிக்கும் உன் இயல்பு/அங்கும் மூன்று இங்கும் மூன்று //உன்னை சார்ந்தவர்கள்  குற்றம் சொல்வார் –இதுவும் -இப் படி பட்ட பெரும் கருணையும்-இத்தனை தானா -என்பர் /

என் கர்ம -வாசனை சொரூபமே வாசனை /இயல்பு-ருசி ஸ்வாபம்-அனுஷ்டானத்தில் கொத்தை ..இரண்டு பார்த்து -ஒன்றை பார்த்தாலே போதும் இரண்டையும் பார்த்து -அப்ரேமேயம்-அஷய கீர்த்தி- உம்மை தொகை எட்டு குணங்களிலும் தாரை வைத்தால் போல..என்னையும் பார்த்து மறுபடியும் என் இயல்பு-அனுஷ்டானம் -இல்லாத என்னை- அதனால் மீண்டும் என்-உன் அனுக்ரகதுக்கு பின்னும் இப்படி இருக்கிறேனே-ஆத்ம குணம் இன்றி -சம தரிசனம் பார்க்காமல்-/அசந்கேயம் அநேகம்-கல்யாண தமங்கலாய் -கல்யாண /கல்யாண தரம்-பெருமாள் இடம்/சுவாமிக்கு கல்யாண தமம்-சேஷோவா-சைன்ய நாதாவோ -ஸ்ரீ பதி வேத்யி- அவனுக்கு தான் தெரியும்–மங்கள ஸ்லோகம் -ஸ்வாமி பெருமை/எதிராஜா மங்களம்–மதி சாய -ந கோவிந்த குணம்-புத்தியால் குணம் பேசி முடிக்க முடியாது/குற்றம் தோஷத்தை போக்யமாய் கொள்ளும்-பிரகிருதி இல் உள்ள பல குற்றங்களை நான் போக்யமாக கொண்டேன்/ என் தோஷத்தை போக்யமாய் ஸ்வாமி  கொள்ளும்/ என் குற்றம் என்னை கெடுக்கும் உன் குணம் உம்மையும் வாழ வைத்து அடியார்களை வாழ வைக்கும்/ என்னை பார்த்தால் உபய விபூதி இல்லை உன் குணம் பார்த்து உபய விபூதி கொடுத்தான் இரண்டையும் எண்ணி முடிக்க முடியாது /தாழ்ச்சியில் எனக்கு நிகர் நான் தன் வாழ்ச்சியில் உம்மை விட மேல் பட்டவர் இல்லை/பரம காருன்யர் நான் நீசர்களில் நீசன் அபராத சக்கரவர்த்தி /

வாட்சல்யாதி குணங்களை விளக்கு போல கிருபை காட்டும்- மழை ஏரியில் பெய்தால் நன்மை அதனால் பாத்திர பூதன் நான் தான்/ஆழ்வான் ஆண்டான் போல்வார் காட்ட முடியாது…அளைபய லாபம்-கிடைத்தற்கு அரியவன் நான்-கல்யாண குணங்களுக்கு பெருமை பர பாகம் அடியேனை கை கொண்டால்/நாலூரான் விஷயமாக ஆழ்வான் அருளிய வார்த்தை உமது திடமான அங்கீகார பலத்தால் தானே /உம்மை சார்ந்தவர்கள்- மகா விசுவாசம் குறையும் படி என்னை  கை விடாதீர் /பெரும் கருணை-உம் உடையது -அதற்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீர் -கருணை பெருமாள்-தன் சரண் தந்திலன்/ராமன் காருன்யனா ஆஸ்ரித பாரதந்த்ரனா-பாதுகை பார்த்து-காடு நோக்கி போனதும் பிரிந்து பரதன் பின் போனதாம்/ ரெங்க நாத மணி பாதுகை அங்கு/ இங்கு ஆண்டான் பார்த்து-ராமன் போல தோற்காமல் பெயரை தக்க வைத்து கொள் என்கிறார்..இதுவேயோ -அதிகாரம் உண்டேல் அரங்கர் இரன்காவோ/ இல்லை என்றால் தான் நீ  இரங்க  வேண்டும்/

71—-கூர்ந்தது அத் தாமரை

சார்ந்த என் சிந்தை வுன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும்

கூர்ந்தது அத் தாமரை தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே

தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய் வினை யதனால்

பேர்ந்தது வண்மை ராமானுசா ! எம்பெரும் தகையே !

வண்மை ஒவ்தார்யம் வள்ளல் தன்மை-பார்த்ரம் பாராமல் வழங்கிய தன்மை/ என்னையும் என் இயல்பையும் பார்த்து உன் பல் குணம் பார்த்து கொடு/பார்க்காமலே கொடுத்தார் இங்கு /கீழே பிரார்த்தித்தது பல ராமானுஜன்/இங்கு ராமானுஜர் ராமர் போல-தேவை இடாதார் நம் திரு ஆராதனா பெருமாளாய் வந்தார் /-சர்வ தர்மான்-அனைத்தையும் விடு தன்னை பற்ற -மாம்- வட்சலனாய் சுலபனாய்/அகம் சர்வக்ஜன் பூர்ணன்-உன்னை விடுகிறேன்-அசக்தனாய் அபூர்ணனாய்-இது கீழ் பாசுரம் போல் துவா- அருள் செய்வதே நலம்.தாழ்ச்சி பார்த்த்கு மேன்மையை பார்த்து அருள/ இங்கு ராமன்- மித்ர பாவனை வந்தாலும்-சீதை கை பிடித்தாலே போதும் என்கிறாள் ராவணனை/ திரு தேர் தட்டு வாசகம் கடல் கரை வாசகம்/ நான் விடேன் ராமன் வார்த்தை நீ பற்று கண்ணன் வார்த்தை..என்னை மட்டும் பற்று எல்லாம் விட்டு விட்டு வா சொல்ல வில்லை /சர்வ லோக சரண்யன் /அதனால் தேவை இடாதவர்/

எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று இசைந்து ,தம் உடைய விசேஷ கடாஷத்தாலே இவர் உடைய ஞானத்தை ஸ்வ விஷயத்திலே  வூன்றும் படி விசதம் ஆக்கி அருள தாம் லபித்த அம்சங்கங்களை அனுசந்தித்து க்ருதாரதர் ஆகிறார் /ஏரி தானே பாய்ச்சி-அருளினார் என்று பாசுரம் இடாமலே இதில்- துயர் அரு சுடர் அடி தொழுது எழு-கடைசியில் முதலில் உயர்வற உயர்நலம் உடையவன்- நடுவில் மயர்வற மதி நலம் அருளினான் இருக்கிறது-அது பகவான் விஷயம் இங்கு ஸ்வாமி விஷயம் நடுவில் பாசுரம் வேண்டாம்/ வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்- அடுத்த பாட்டு எழுந்து ஆடி- அந்த நாமம் கேட்டதும்../விற் பெரு விழவும்-கிரமம் மாறினது வேகமாக முடித்தான் என்பதால் வீர வேகம் /அது போல ஸ்வாமி கிருபை வேகமாக விளைந்து பலன் கிட்டி ஆனந்தம் அடைகிறார்/ வண்மை -அனுக்ரகத்தால் சிந்தை  தாள் இணைகளில் சார்ந்தது /அன்பு மிக்கது-கூர்ந்தது // செய்கை குணங்களுக்கு தீர்ந்தது //என் செய்வினை உன் கடாஷத்தால் பேர்ந்தது- காணாமல் போனது// நான்கு பேறுகள் //கொள்ளுகிறவன் சிறுமையும் கொடுகிறவனின் சீர்மையையும் பாராமல் கொடுக்கும் ஒவ்தார்யம்-ஆசை உடையோர்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தானே –பாராமலே அருள் செய்தான்-ராமன் தீயவன் ஆனாலும் கை கொள்வேன் என்றானே– ஆழ வந்தாரும் நாத முனிகளை பார்த்து -தாழ்ச்சி பாராமல் அர்த்தம் இல்லை பெருமை இருந்தாலும் பாராமல் -அருள வேண்டினாரே அது போல -இந்த வள்ளல் தனத்தால் என்னை எழுதி கொண்ட பெருமை உடையவரே !-தோற்ற துறை இது/சிருவடி தோற்ற துறை ராமனின் தோள் வீரம் போல -என் உடைய நின்றவா நில்லாத நெஞ்சானது -வகுத்த செஷியான தேவரீர் உடைய

பரஸ்பர சத்ருசமான திருவடிகளின் கீழே நிழலும் அடிதாரும் போலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி விட்டது /இணை-உபாயத்துக்கும் உபேயதுக்கும்/சார்ந்தது-நிழல் தேடி ஒண்டி இருந்தார் /அந்த பரம போக்யமான-தாமரை-திருவடிகளுக்கு -சிநேகம் -நிரவதிகம் ஆகும் படி மிக்கது-புருஷார்த்தம் இங்கு முன்பு தஞ்சம்/வந்த பின்பு அனுபவிக்கும் பொழுது போக்கியம்-தாமரை-//உன்னுடைய தாள்/-சம்பந்தம்-  அத் தாமரை—போக்யத்வம்-காதுகன் ஆனாலும் விட ஒண்ணாது ஆகிலும் கொடிய என் நெஞ்சே அவன் என்றே கிடக்கும் போக்யத்வம் விடாத்கு உன் தாள் ஆக இருக்க வேண்டியது இல்லை/அடி கீழ் புகுந்த பின்பு-என் உடைய வருத்தி -செய்கை-தேவரீர் உடைய  குண அனுபவ ஜனித ப்ரீத்தி காரிதை ஆகையாலே அந்த குணங்களுக்கே அற்று தீர்ந்தது/ நாமங்களைபாட வந்தவர் குண கீர்த்தனம்-நாமமே குணங்களால் தானே /ஒரு திரு நாமத்துக்கு நூறு குணம் இங்கு /அன்பு தூண்டி செய்த செய்கை

அனுவப ஜனித-ப்ரீதி -தூண்டிய -கைங்கர்யம்  /உன் தன-குணங்களுக்கே- அசாதாரணமாக உன் இடம் மட்டுமே-பல ராமானுஜர் இடம் இல்லை என்று காட்ட //ஏன் செய்வினை-பூக்க மருந்தும் மருத்துவனும் நீ-அதற்க்கு ஏற நிவர்திகர் நோயும் அறிந்து  நோய் முதலும் அறிந்து -முன் செய் வினை- நீ செய்-அது வினையால்- கடாஷம்/பிரயத்தனம்/பிரபத்தியால்-ஆக மூன்றும் –  /செய்வன-கிருஷி -அதனால்/பாட பேதம்../பெர்ந்தது-மலை போல சேர்த்து வைத்த வினைகள் விட்டு நீங்கியது /நான்கு பாக்கியம்..நீ செய்வன அதனால்-அவற்றால்-ஒருமை பன்மை மயக்கம்/கூர்தல்-மிகுதி-கொழுந்து விட்டு வளரும்-சிந்தை அன்பு செய்கை -வண்மை உடைய ராமனுசரே! என்று கூப்பிடுகிறார்! /மனசை முதலில் அடங்கின படியையும்-அடைந்த பின்பு போக்யதையில் ஈடு பட்ட படியும்/கைங்கர்யத்தில் ஈடு பட்ட படியையும்/வினைகள் சும்மானாது ஓடினதையும் /-வள்ளல் -வசிஷ்டர் சண்டாளம் வாசி இன்றி தன திருவடிகளை வைத்த வாமனன்-திரு விக்ரமனனுக்கு பாசுரம்-சுருங்கின படியால் தானே வளர்ந்தான்-சொவ்சீல்யம்வாமனனுக்கு தான்/ நீள் வான் குறள் உருவாய்/வாமனன் சீர் இராமனுசன் முன்பே சொல்லியது போல /மோஷம் -மாலா காரருக்கும் கண்ணன் போல/அசேஷ விசேஷலோக சரண்யன்  -ராமன் போலவும்/ரகசியம் வழங்கிய பெரும் தகை-/ஏக தேச வாசியாய் இருந்தும் தேவரீர் திருவடிகளில் -ந நமேயம்-போல ராவணன் -நின்றவா நில்லா நெஞ்சு சஞ்சலத்துடன் நிலை மாறி-பிரம இந்த்ரன் லோகமும் புல் போல நினைக்கும் மகாத்மாக்காள் ஆச்ரயித்து இருக்கும் – உன் –வெய்யில் தவித்து நிழலில்  புகுமா போல

தாப த்ரயங்களால் தவித்து -சார்ந்தது -கீழ்- அமர்ந்து புகுந்து /பள்ளி கட்டில் கீழ் /மாட மீமிசை கஞ்சன்-விலக விலக பயத்தால் மேலே போனான்/புகுந்த பின்பு-இருந்தும் கூடி புஷ்கலமாக-செவ்வி நாற்றம் குளிர்த்தி விகாசம் -போக்யத்வம்-/உன் தன குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை//மனசு வாய் காயம் மூன்றும் உன் இடம் வந்தன /வகுத்த சேஷி /குணங்களுக்கே  தூண்டி அற்று தீர்ந்தது /யதிராஜ விம்சதியிலும் ஜீயரும் வாய் குணங்களையே பாடும் என்றார் நாமம் இல்லை/ நெஞ்சினாரும் அங்கெ  ஒழிந்தார்-ஆழ்வார்  அங்கு-ராமன் பின் போன தசரதன் கண் போல /என் கண் போனது என்றார் அபிமானம்.என் ராமன் என் கண் நினைக்கிறார் ராமன் கண் பின் போனது // மனம் வாக்கு காயம் மூன்றும் போனதால் செய்வினை-சேர்க்க முடியாது-உடையவர் இடம் உடமை போனதால் மீண்டும் செய்வினை செய்ய ஆள் இல்லை இங்கு ../உன் கடாஷத்தால் வினைகள் எல்லாம் பெயர்ந்தன-உன் செய்வினை- பங்குனி உத்தரத்தில்  கேட்க்கும் பொழுது எங்களுக்கு எல்லாம் போனது/மலை பேர்ந்தது  போல -பண்டை பல் வினை பாற்றி அருளினான்-

நீ செய் வினை அதனால்-நான்கும் என் சிந்தை சார்ந்தது அன்பு வளர்ந்தது செய்கை குணங்களுக்கு தீர்ந்தது –வினைகள் பேர்ந்தது /முன் செய்வினை-நான் மட்டும் பண்ணினது இல்லை வந்தேறி வேற-பிரம வித்துகள் /பிர பத்தி பண்ணி அருளின -கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் பண்ணிய பாபங்கள் போக்க இதுவே காப்பு-ஜீயர் //பாபம் சேர்க்க நான் போக்கு நீர் /செடியாய வில் வினைகள் தீர்க்கும் திரு மாலே// தமர்கள் கூட்டும் வல்வினை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி// ஸ்ரீ  ரெங்கராஜன் -திரு அரங்க செல்வன்–உமக்கு வசம்-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading