பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியை தொடரும் படி நல்க வேண்டும் அரு சமய
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து
இப்படியை தொடரும் ராமானுசா! மிக பண்டிதனே !.
திரு கச்சி நம்பி- ராமானுஜர் திரு முடி சம்பந்தத்தால் தான் மோஷம்/ திரு மால் இரும் சோலையில் அருள பாடு ஸ்வாமி சம்பந்தம் உடையாரை சொல்ல பெரிய நம்பி சம்பந்ததார் வராமல் இருக்க கூட்டு அருளினது போல/ சம்பந்தம் தான் முக்கியம்/அநிஷ்டம் தொலைந்தது பார்த்தோம் முன்பு/இஷ்ட பிராப்தி இதில்..இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபெஷிதமான தேவரீர் திரு வடிகாலில் பிராவண்யா அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் என்கிறார்.. நேருக்கு நேராக பிரார்த்திக்கிறார்.. ஆண்டாளும்-மாலே மணி வண்ண -ஆலின் இலையாய் அருள் -போல//மிக்க பண்டிதனே -ராமானுசா ஸ்ரீ மன் நாரயண போல- ஞான பொலிவை நினைத்து ஓங்கி குரல் கொடுக்கிறார் ../மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப் படி-ஞாலம் -வூர் வூராக போய்-தொடர்ந்து//வந்து ஓட விரட்டி- அமுதனாரை பிள்ளை உறங்காவல்லி தாசரை அருளியது /பிடி-பெண் யானை..களிறு -ஆண்யானை//விஷயாந்தரம் தேடி போய் இருந்தேன்/ யான் உன் சீர் பிறங்கிய -மிகுதியாக ,பிரகாசிக்கும்-அடியை தொடரும் படி-மன்னு மலர் தாள்-நல்க வேண்டும்../பெண் யானை தொடர்ந்து ஆண் யானை போல/ மிக பண்டிதன் நீர் தா/ இப் படியை தொடரும்-நல்லோரை மட்டும் இல்லை, அரு சமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்தீரே /வழு இலா அடிமை-பிராவன்யதுடன்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய -உந்த -கைங்கர்யம் /தூர் மண்டி கிடக்கிற பாஹ்ய ஷாட் சமயங்கள்-சாஸ்திர விரோதம்-நீர் நுமது -வேர் முதல் மாய்த்து /அறிவு கேடு குடி கொண்டவர்கள் -சிதைந்து ஓட வைத்தும்/ நல்லோரை விஷயீகரித்தும்/படி-இட ஆகு பெயர்- படியில் உள்ளோரை தொடர்ந்து..இரா மேடம் வூட்டுவாரை போல தொடர்வார்/வஸ்து ச்வாபம் அறிந்து -பிரம ரஜசை விரட்ட /பிள்ளை உறங்கா வல்லி தாசரை/ யாதவ பிரகாசரை/ யக்ஜா மூர்த்தி -வேவேறு முறைகள்/அர்ஜுனன் விதுரர் குசேலர் இவர்கள் இடம் கண்ணன் காட்டியது போல/மிக்க பண்டிதன்–அள்ள அள்ள குறை இல்லாத ஞானம் உள்ளவர்-பண்டிதன் இரண்டும் செய்தது – -மிக்க-தொடரும்-நடந்தது என ?..தொடர்ந்து போனது சபலம் ஆனது -பாடி கொண்டு இருக்கிறேனே அவஸ்துவாக இருந்தேன்-.பொருள் என்னும் இவ் உலகம் படைத்தவன்-சபலம் -சோம்பாது பல் உலகம் படைத்து கொண்டு இருக்கிறான் -அவன் பண்டிதன்/ ஸ்வாமி மிக்க பண்டிதன்/பிடியை தொடரும் களிறு- யாராலும் தடுக்க முடியாது .என்ன- தான் அன்ன பாடம் இல்லை-சீர் -மன்னு மா மலர் தாள்-போல பின்னாட்டி அழகான மென்மையான பிரகாசிக்கும் அடியை /தொடரும் படி நல்க வேண்டும்..மோகத்தால் போகும் பெண் யானை உதாசீனமாய் இருக்கிறது..என் பெண் யானை என்பதால்- சொரூப கிருத தாஸ்யம்/ குண க்ருபா தாஸ்யம் இல்லை/ ராமானுசா நீ ஸ்வாமி என்பதால் வரணும் குணம் நல்லது பண்ணுகிறீர் என்று இல்லை / ஆழ்வானை திண்ணையில் இருக்க சொல்லி இருந்தாரே //திரு வெள்ளறை சோழியனை–எங்கள் ஆழ்வான்-பெயர் கொடுத்தார்- ஸ்ரீ பாஷ்யம் முடித்து கொடுத்ததால்/ நடாதூர் அம்மாள் ஆசார்யன்-திரு வெள்ளறையில் செவிக்கணும்
சேஷத்வம் பிரதானம் /ஞாதுருத்வம் இல்லை என்றார் ஆழ்வான் -சேஷி செஷன்-எங்கு வைத்தாலும் திண்ணையிலே இருக்க-மாற்றி எழுத சொல்ல/அடி தளம்-தாமரையாள் சீதை குரைக்குமேல்-போல-இட்ட படி இட்ட இடத்தில் வைத்தாலும் இருக்கணும்/பெண் யானை திருஷ்டாந்தமிதனால் தான் /குறுக்க யார் வந்தாலும் திரும்பாது-நம் பெருமாள் திருவடி சேர சொல்வார்கள்-அதை தவிர்த்து சரம பர்வத்தில் நிற்க /சீர் பிறந்கியது -மாறாது- அத்ரி சீதை- அனுசூயை-ராமன் .குணம் பிரித்து காட்டு பதி விரதம் காட்டி காட்டுகிறேன்/ அது போல் சீர் பிறந்காது..யான் உன் அடியை தொடர்வேன் -நல்க வேண்டும்-பிரார்திகிறாரே இங்கு-கர்மா நிபந்தனம்-அங்கு- இங்கு தள்ளலை-கிருபை உந்தனும் ஸ்வாமி பின் போக/–கர்மா ஆவது கிருபை ஆவது வேலை செய்யணும் அதனால் பிரார்த்திக்கிறார் க்ருபைக்கு போந்தது என் நெஞ்சு பொன் வண்டு-போல/களிறு என்று என்னை சொல்லலாம்/ அன்ன-பெயர் எச்சம் -அன்ன என்றால்–களிற்றை ஒத்தவன் -என்ன -என்பது –அடியை தொடரும் பிராப்ய விஷயத்துக்கு திருஷ்டாந்தம்
ப்ராவண்யா பிரார்த்தனை அப்ராதன்யம் ஆகும் //அதனால் என்ன என்பதே பாடம்..
பிறங்குதல் -பிரகாசம் /மருள் செறுதல் அறிவு கேடு திரளுகை /ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-பிராபக பிரதான பாசுரம் கைங்கர்ய பிரார்த்தனை இங்கு இல்லை /பட்டருக்கு முன் ஆறு -உபாயம் சரண்- பிராப்யம் என்பர் /எனக்கு எந்த உபாயம் என்று யோசித்து சிறந்த உபாயம் திரு வடி என்று தேர்ந்து கொடுத்தாய்-பட்டர்/வந்து- சிதைந்து போகவும் /அரு- ஆறு / அருந்த சமயம் /அனுஷ்டானம் தசை யில் படுத்தும் சமயங்கள் -ஆட்டை அறுத்தும் தலையை அறுத்து கொடுத்தான்/பசம தாரணம் பூசி கொண்டு/சிங்கம் கண்ட யானை போல ஓடி போவார்கள் /74 பேர் சேனை/அவசரம் பார்த்து அருள திரியும்- வாய்ப்பு கிடைக்குமா -அப்பனுக்கு ஆழி அளித்து/ திரு நாரயண புரம் காடாகி இருந்ததை நாடாக்கி /செடியார் ஆக்கை அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திரு மாலே -தூறு மண்டின சம்சாரம் -போல செடி இங்கும்//பிடியை தொடரும் களிறு போல விஷயாந்தரம் தொடர்ந்து போனேன்-அது போல உன் பின்னால் போக தன்னையே உபமானம் ../பிரகலாதன் சொல்லிய ஸ்லோகம்-படி-ஸ்வாபம்/நல்க வேண்டும்../அடியை தொடரும் படியாக அருள வேண்டும்-.ஆசை பிறந்து இடைவிடாமல் ஏக பக்தி-பிடி களிறு பத்னி பர்தா-மாதா பிதா யுவதி-பத்நித்வம் அங்கும் உண்டு/புருஷோத்தமன் சேலேய் கன்னியரும் – பெரும் செல்வமும் –அழகிய பெண்-ப்ரீதி தோற்ற சொன்னார்/சுமந்த்ரன் திரும்பி வந்ததும்-தசரதன்-கௌசல்யை வருத்தம் அடைவது பற்றி -தாசி தோழி பார்யை சகோதரி போல -என்கிறான்-நாட்டில் படை எடுத்து வென்று புது மனைவிக்கு ஹாரத்தி பண்ணி வர வேர்ப்பாள்-
64—-பண்டரு மாறன்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேத கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் ! உங்கள் வாழ்வு அற்றதே
பிடி என்றார் முன்பு/ இங்கு களிறு என்கிறார் -எதிர்த்து வரும் முட்டி தள்ளி விடும்–மத ஜலம் வழியும் ஆனந்த கண்ணீர் /வேத வேதாந்தம் தண்டங்களாக கொண்டு-த்ரி தண்டம்-//ப்ரீதி பிரகறேஷத்தல் ,பாஹ்ய குத்ருஷ்டிகலாகிற வாதிகளை பார்த்து –ராமனுஷ முனி ஆகிற யானை -உங்களை நாடி கொண்டு இந்த பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு போயிற்று/ சாஸ்திர கை கொண்டு வந்தார்/மெய்ம்மை கொண்ட- பொய்யை ஒழிக்க- மெய்ம்மை கொண்ட நல் வேதம் என்கிற கொழும் தண்டம்…./நல்லோருக்கு அடங்கி ஸ்ரீ ரெங்கத்தில் இருக்கும் அப் பொழுது அப் பொழுது ஆனந்தம் பாய்ந்து வர -மதம் பிடித்து திரு நாரயண புரம் திருமலை காஷ்மீர் போய்- பண் தரு-ராகம் இன் இசை- இளமை பசகு படைத்த தமிழ் உண்டார் களித்தே மயக்கம் மதம் பிடித்த யானை போல ஓடி வந்தார் ../எங்கள்-சம்பந்தம்-ஆனந்தம் ஏற பாடுகிறார்../யானை-வேகம்- தண்டு- குடித்த- இசை நாலையும் பார்த்து பயப் படனும்/ மாறனின் -நான்கு பிர பந்தங்களையும் சேர்த்து சொல்கிறார் –/எங்கள்-அடங்கிய ஆண் யானை என்கிறார் /இதில் /மண்டி வந்து ஏன்றது உங்களுக்கு /கட்டவும் அடிக்கவும் கண்ணன் போல/கூடாரை வெல்லும் சீர் கூடியவர் இடம் தோர்ப்பான்/ ஆரும் ஓர் நிலைமையென அறிவரிய எம்பெருமான்..ஆரும் ஓர் நிலைமையென அறிவு எளிய எம்பெருமான்/ராமானுச முனி வேழம் -மூன்று அர்த்தம்/மாறன் பண்ணாலே தரும் -இன் இசையே உற்பத்தி கொடுக்கும் ..திரு துழாய் அங்குரிக்கும் பொழுதே பரி மளிக்கும் போல சாம வேதமும் இசையும் பிரிக்க முடியாது /பாய் மதம்-ஒழுகா நின்று உள்ள மதம் /விண்டிட -விஸ்தாரம் அடைய -வளர -அவிகாராய என்று இருப்பவனும் தென்னா தென்ன ஆடுவானே -ஸ்வாமி இருக்கும் நிலை கேட்கணுமா ../சத்தியமே -வேத நூல் ஓதுகின்றது உண்மை -பொய்மை அறுக்க-இருப்பதை இருப்பதாக/ இருப்பதை இல்லை அத்வைதம் இல்லாததை இருக்கு என்பர் அபூர்வம் தோற்றி மகா பூர்வம் என்பர்-மீமாம்சன் வாதம்/கயிறு-சர்ப்பம்- பார்த்தவன் அபிப்ராயத்தாலே இதுவும் உண்மை என்பார் ஸ்வாமி -எண்ணம் மாறும் வரை அந்த எண்ணம் மெய் தானே /விலக்ஷணமான வேதம்-பிரமாணங்களில் நல்லது உளன் சுடர் மிகு சுருதியுள்/ கொழும் தண்டம் கொழுமை எழில் இரண்டும் சங்கோடு சக்கரம் ஏந்தி தட கையன் அழகும் வீசினால் ஆயுதம் /அது போல தண்டம்- வஜ்ர தண்டம் வாதியருக்கு முக்கோல் தன் அழகு
வேகம் கண்டு பயந்து.. சாஸ்திரம் கை வைத்த இடம் தோறும்..வாழ்வு-வாழை அடியாக சிஷ்யர்கள் இல்லாமல் போனதே-லோகம் பிழைத்ததே -ஏகாரம் ஈற்று அசை யாய் தலை கட்டுமாம்/பண்டே உள்ளதாய்-பண் தரு-பண்டு அருமையான மாறன் பசும் தமிழ்-12000 தடவை சொல்லி தான் நாத முனிகள் பெற்றார் -அருமை-அது ஒண்ணாது…பூர்வ கால வாசி தான் குறிக்கும் காலத்தில் இருந்த வஸ்து குறிக்காது /பண்டு காமனவாரும்-போல/ விண்டிட -விள்ளுதல்-விரிதல் /மன்டுதல்-தள்ளுதல்-ஒரு சாஸ்திர வாக்கியம் கொண்டு பல வற்றை தள்ளினாரே /
சிதைந்து ஓடினரே -பிடித்து வாதியர்காள் என்கிறார் அவர்களை பார்த்து..வேரோடு உங்கள் வாழ்வு அற்று போனது என்கிறார் //எங்கள் ராமானுசன் வேழம்-என் எம் எங்கள் பாட்டு தோறும் விக்ரக திருமேனி- விஷய பிரேமத்தால் -அங்குசம்- முன் வைக்கிறார்/மத்த கஜம் -அப்ராக்ருத கஜம்..ஞான சங்கோசம் இன்றி /தவாறன வழியில் போவாரை உபதேசித்து, நிரசித்து , நல் வழிக்கு போவோரை ரஷித்து /முனி மனன சீல யானை/விரோதிகளை சித்ரவதை -வெட்க்கி ஓட வைப்பார் – பண்ணவும் பரிகிரவர்களை பட்டாபிஷேகம் பண்ணியும் -மாலை விழுந்தால் ராஜா /கண்ட பேரை- ஸ்வாமி கடாஷித்த பேரை/ராமானுச முனி வேழம்/ ராமானுசர் முனிகின்ற வேழம் / இரு பெயர் ஒட்டு பண் தொகை /எங்கள் வேழம்-அனுகூளர் வேழம் மண்டி -பிரதிகூலம். முனியார் துயரங்கள்- நடு நிலை யாளர் என்பாரே/செற்றாருக்கு வெப்பம் கொடுப்பாய் துயில் எழாய்/செற்றார் திறல் அழியும் கோவலன்/ அறுப்பதே கருமம் கண்டாய்/ பராங்குச பராசரர் -ஹிம்சிகிறார் வேதவிருதமாய் பேசுவோரை /பகவத் பாகவத விரோதி என்பதால்..வைஷண்யம் இல்லை /எங்கள்-திரு வாய் மொழி அறிய கற்று வல்லார் வைஷ்ணவர் ஆழ கடல் ஞாலத்து உள்ளே -அனைவருக்கும் எங்கள்/மாறன் தமிழ்- ஆறாம் வேற்றுமை தொக்கி இருக்கும் /எழுத்து அசைசீர்பந்தம் அடி தொகை ஓசை நிரை .. இனம் யாப்பு பண் இசை தாளம்-யாழின் இசை வேதத்தின் இயல் -இது எல்லாம் இதுக்கும் உண்டு/அமையும் படி பாடினார் /
பாட்டினால் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் /துருவன் பகவத் அனுக்ரகத்தால் பாடினது போல/ ஆனந்த வழிந்து -தனி கேள்வி இல்லை துணை கேள்வி /
வியாசர் துவாபர யுகம் தோறும் வெளி இடுவது போல மாறனும் கலி யுகம் தோறும் ஆவேச -ததார்யன்-பிராமணன் //ராமன்-சத்ரியன் / கண்ணன்-வைஸ்ய/மாறன் /புராணம் பண்டு/ அருமை-/மால் தனில்-மாறனில் மிக்கு ஓர் தெய்வம் உளதோ/பசுமை செவ்வி இளமை தூய்மை இயற்கையாக தாயை போன்ற தமிழ் நங்கை சிறு முனிவர் வாய் மொழியின் செய்-வள்ளுவர் அகஸ்தியர் ஒவ்வையார்/கன்னி தமிழ் தாய் தமிழ் இரண்டும்/ஆனந்தம் பாய் மதம்-லஷ்மி நாதன்-கடல் கருணை நீர் ஆழ்வார் பருகி நாதமுனி – பெரிய முதலியார் குன்று/ மணக்கால் நம்பு உய்ய கொண்டார் அருவி ஆளவந்தார் ஆறு ஐந்து சிற்றாறுகள் மூலம் ராமானுஜர் ஆகிய பொய்கையை ஏரி பூரித்து 74 மதகு கள் வழியே சம்சாரிகளை ரஷித்ததாம் அழகிய தண்ணீர் /அடி பணிந்தொரை அவரே தேர்ந்து எடுத்து இருக்கிறார் அந்த ச்வாதந்த்ர்யம் /கவி அமுதம்/தொண்டர்க்கு அமுதுண்ண சொல் மாலை/ அமுதம் உண்டு விளைந்த ஆனந்த /விண்டிட எக் காலத்திலும் எவ் இடத்திலும் /மதம்-நான்கு அழகன் பிறப்பு தனம் வித்யா போல /தமிழ் பசும் தமிழ் பண் தரு மாறன் தந்த நான்கும்/
பரத்வம் காட்டி கொடுக்கும் நல் வேதம்/தண்ணீர் அக்நி பஞ்ச பூதம் அதனால் குளிர்ந்து இருக்கும் தண்ணீர் போல/மெய்ம்மை -சர்ப்பம்-கயிறு பிரமம் /ஞானம் நிவர்தகம் /பாக்ய குதிருஷ்டிகள் பிரமம் போக்குவது போல -சேதன அசேதன விசிஷ்ட பூதன் -தண்டாக ஏந்தி கொண்டு தீப வஜ்ர /அருள் என்னும் தண்டால்/திரு வாய் மொழியே தண்டாக கொண்டு /சகாரத்தாலே -தண்டமும் ஏந்தி-தண்டு + உம =தண்டும் /கதையை கையில் எடுத்து கொண்டு நின்ற மாதரம் அன்றிகே- அலங்காரமாக கொண்டு வந்தது போல அன்றி சங்கோடு சக்காராம் ஏந்தும் தட கையன்-காலாலே மிதித்தும் -வேத ரூபமான தண்டை ஏந்தி வைத்து கொண்டு எதிர்த்தது-தன் அரசாக எண்ணி சேது ஹிமாசலம்-வெங்கடாசலம் சரஸ்வதி யாதவாசலம் திவ்ய தேசங்களில் பிரதி வாதங்களை நிரசனம் பண்ணி /சிஷ்ய பிர சிஷ்யர் கூட்டம் அழிய -முடித்தார்/சங்கரர் பாஸ்கரர் யாதவர்–சாய்வுறு வாதியர் மாய்குவர் சதுர் மறை வாழ்ந்திடும் நாள் /
தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் அது கண்டு பொறுத்து இருப்பான் -கோன்/எதிகளுக்கு கோனாகி –தன்னை தான் பாடி-பாசுரங்களின் பலத்தால் /கலி மிக்க -வலி மிக்க சீயம்மேல் சொல்ல போகிறார் கஜ -கதி இன்று சிம்க-கதி பின்பு /ஆழ்வார் பாசுரம் கொண்டு ஸ்வாமி பண்ணியதும் பார்க்கணும்
65—-வாழ்வு அற்றது
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தீனருக்கு அந்
நாழற்றது நம் ராமானுசன் தந்த ஞானத்திலே
எம்பெருமானார் -எழுந்து அருளி வந்து -உபகரித்து அருளின ஞானத்தாலே -வாழ்வு அற்றது-தொல்லை வாதியர்க்கு/என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது /பூமி தவம் பெற்றது /தத்துவ நூல்- வேதங்கள் சாஸ்திரங்கள் சந்தேகம்-கூழ்- தீர்ந்தது..குற்றம் எல்லாம் பதித்த குணத்தினருக்கு-சந்தேகம் போய் குணம் மட்டும்/ குற்றத்தையே ஸ்வாபம் உள்ளவர்க்கு நாழ் -குற்றம்-அற்றது –ஐந்தும் பலிதம் ஸ்வாமியால்//கர்மாவேலேயே அதிகாரம்-பலத்தில் இல்லை//ஞானம் கொடுத்தார் ஸ்வாமி-.காரணத்தை அறிந்தால் காரியம் அறிந்தது போல- எந்த ஒன்றை தெரிந்து கொண்டால் எல்லாம் அறிந்தது போல/உத்தாரகர்-ஞான பகிர்ந்து கொண்டால் பெருகும்..அடியார் பலவான் ஆகி எல்லாம் தானே நடக்கும்..//நம் ராமானுசர்..பகவத் ராமானுசர் என்பர் வட இந்தியாவில்–வைபவம் தெரிந்து நமோ- நெருக்கத்தால் நம் ..ஆரா அமுதன்-அபரியாப்த அம்ருதம்-/கல்வியில் சிறந்த கம்பன் போல கல்வியால் சிறந்த /தொல்லை வாதியர்- வாதத்துக்கு தொன்மை ../பயிர் உள்ள அன்றே களை இருக்கும்/விசிஷ்டாத்வைதம் வந்த அன்றே –சகஜ பக்தி அங்குரிக்கும் பொழுதே பரி மளிப்பது போல /ஆதி உண்டு அந்தம் உண்டு கர்மா போல ஸ்வாமி வந்ததும் போயின/இல்லாத பக்தி பிறந்து வளர -கீதை 10 அத்யாயம் அருளியது போல/
வாழ்வற்றது -மோஷம் இழந்தான்../களை போனதாலே பயிர் முளைக்கும்/ மறையவர் தம் தாழ்வு அற்றது..இரண்டு இடத்திலும் அற்றது–என்றும்-சர்வ காலத்திலும்-/பூ பாரம் போகினதால்-தரணி வாழ்ந்தது உடம்பு போனது இல்லை ஞானம் பெருகி -இன்பம் பேரு பெற்றது -தவம் பெற்றது -ஏற்ற வல்லார் திரிதலால் தவம் உடைத்து இத் தரணி தானே-குலேசேகர ஆழ்வார்/அரக்கர் இளைத்த பாபம் -தவம் உடைத்து தரணி-கம்பர் -சீதை ராமர் திரு கல்யாணம்/ தீர்தகராய் திரிந்து -முதல் ஆழ்வார்கள் /தத்துவ நூல் கூழ் எல்லாம் அற்றது -சந்தேகம் தீர்ந்தன /குற்றம் எல்லாம் பதித்த குணம் உடையோர்க்கு குற்றம் தீர்ந்தது ..ஞானம் பெறுவதால் பயன்/ ஸ்வாமி -திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளிய போதே – திக் விஜயம் போனதில் -வாதியர்கள் அனைவரும் சிதைந்து ஓடி போனார்களாம் /மறையவர் தம் வாழ்வு அற்றதும் லோகம் அனைவரும் வாழ்ந்து போவார்கள்//வகுத்த சேஷி ஸ்வாமி-தம் கிருபை தூண்ட -நிர்கேதுகமாக உபகரித்து அருளின ஞானம் /
அற்றது -என்று-தெய்வ சம்பத் அசுர சம்பத் என்று கீதையில்- அவர் அவர் அபிப்ராயத்தாலே/ வரத்தினில் சிரத்தை மிக்க- சிரத்தை உடன் இருந்தேனே/அடியார்களுக்கு கொடுத்ததை மறக்கிறான் /அடியார்களின் குற்றங்களை மறக்கிறான்-மறப்பதே குணம் அது போல அறுப்பதே இங்கு/வைதிக மார்க்கம் தலை நிமிர்ந்து -தர்மம் தாங்கும் தார்மிகரால் தாங்க படும்/ என்றும் தொல்லை என்பதை இங்கும்-கொண்டு பழைய மறைவார்கள்/ பழைய தாழ்வு //என்றும்-வாசனை உடன் கழிந்து சர்வ காலமும் என்ற படி/ஈஸ்வரனின் க்ருஷிகளுக்கு இவர்கள் தானே -அனுகூலர்- பயிர் /அவர்கள் -களை /களை பறித்து பயிர் விளையுமா போல/இதனால் தவம் தாரணி பெற்றது/பர அவர -அவன் பரன் நாம் அவர-பரத்துக்கும் சொவ்லாப்யத்துக்கும் எல்லை- அது அதுவாக தான் இருக்கும் இது இதுவாகத்தான் இருக்கும்- தத்வ-யாத்தத்மிக பிரவர்த்திகமாய் உள்ள – சாஸ்திரம் கலக்க பட்டு -பகு நாயகமாய் விவசரித்து போய் -ஸ்ரீ பாஷ்யம் அருளி- அந்தர் ஜுரம் போக்கினார் -ராமானுஜ திவாகரர் / பரம யோகி- சேர்ந்து இருக்கிறார் / ஞானம் கொடுத்து ,கலக்கம் தெளிவித்து பிரகாசித்தார் //கூள்ப்பு-சம்சயம் /குற்றம் எல்லாம் பதித்த-துர்மானி போன்ற சமஸ்த துரிதங்களும் -உள்ள ஸ்வாபம்-பாபம் நசிக்க பண்ணினார்/
————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply