ஸ்ரீ ஹனுமத் பிரபாவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

 ஸ்ரீ ராமாயணம்- சிறை இருந்தவள் ஏற்றம்/ ஸ்ரீ மகா பாரதம் – தூது போனவன் ஏற்றம் /நாம் பார்க்க போவது ஸ்ரீ ராமாயணத்தில் தூது போன – குருவின் ஏற்றம் பார்க்க போகிறோம்..ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை../ஸ்ரீ மகா லஷ்மி உடன் சேர்ந்து ரஷிகிறான் ../தகப்பன்  ரஷகன் இல்லை – ஹிரண்யன் பார்த்தோம்/ ராவணன் -சகோதரனும் ரஷகன் இல்லை/நீ கிடக்கும் பண்பால் கால் ஆளும்/தூங்கும் பெருமாளை – காகாசுரன் விருத்தாந்தம் -யாரும் ரஷகர் இல்லை..எல்லாம் அவன் ஆதீனம் ..அவனுக்கே வாயு பிராணன் ஆக சீதைக்கும் பரதனுக்கும் விபீஷணனுக்கும் இருந்தவர் ஸ்ரீ ஹனுமான் தானே.. சால பல நாள் உகந்து  உயிர் கள்  காப்பான் –கோல திரு மகளோடு /இருவருக்கும் உயிர் மீட்டு தந்தது இவர் தானே /அக்னி குண்டத்தில் இறங்க குகனும் பரதனும் இருக்க ரஷித்தாரே /லஷ்மணனுக்கும் சஞ்சீவி மலை கொண்டு வந்தாரே /பேசி தலை கட்ட முடியாது சொல்லி கேட்டு சத்தை பெற மழை பொழிந்து சமுத்ரம் நிறையாது ஆனாலும் மழை பொழிவது போல சத்தை பெற தானே ..அது போல..ஞானி பக்தன் விரக்தன் வாக்மி நாலு முகம் சிறிய திருவடிக்கு /ராம தாசன் ராம தூதன் /சௌர்ய வீர பராக்ரமங்கள் /மந்த்ரி மார்களில் தலைவன் / பிராணன் கொடுத்தவன் ஒன்பது முகங்கள் ..

ஹனுமான் தொடக்க மான வானவர்கள் இடம் சுக்ரீவர் பேச ஆரம்பிக்கிறார் விபீஷண சரணகதியில்..வயசில் மூத்தவர் ஜாம்பவான் இள அரசு பட்டம் அங்கதன்/பெரி ஆழ்வார் பொங்கும் பரிவால் தானே பெற்றார் -பிறந்த முதல்வர் இல்லை ராஜா இல்லை நிறைய பாசுரங்கள் அருள வில்லை இருந்தும் பொங்கும் பரிவு இவர்க்கே தான்..கண்ணனை நாம் ரசிக்கணும் என்ற நினைவு பொங்கும் பரிவு.. என் நம்பி பிறந்த ஏழு திங்களில்-சகடாசுரனை முடித்தார் என்கிறார் திரு மங்கை ஆழ்வார் / நாலு ஐந்து திங்கள் அளவில் என்கிறார் பெரி ஆழ்வார்  ..திருஷ்ட்டி  நாலா ஐந்தா ஒன்பதா இருபதா என்று குழப்ப /பீஷ்மர் சேனா பதி சொலி அங்கு  /பீமன் -அர்ஜுனனை தர்மனை சொல்ல  வில்லை –ஐந்து பேரை கொல்ல மாட்டேன் என்று இவர் சபதம் இட / நூறு பேரை கொல்லுவேன் என்று  அவன் சபதம் இட்டதால் ../அது போல ஆபத்து காலத்தில்-விபீஷணனால் சுக்ரேவர் கண்ணோட்டத்தில் ஆபத்து என்று நோக்கி – ஹனுமானால் தான் பிரயோஜனம் நிகர் வேறு இல்லை என்று காட்ட பட்டது ..

அகஸ்தியர் ராமன் இடம் வாலி ராவணன் கதை கேட்டு ஹனுமான் பலத்துக்கு இவை ஒப்பு இல்லை என்றார் பெருமாள் குறுக்கே பேசி ..இவ் வளவு சக்தி இருக்க சுக்ரீவனுக்கு உதவ இல்லையே தன் பலம் தெரியாததால் -காரணம் என்ன என்று கேட்டார் அதுலம் பலம் அவர்கள் பலம் இவர் பலத்துக்கு அதுலம் துல்யம் சொல்ல முடியாது .காணாமல் கோணாமல் கண்டு-காலை -மத்யானம்-மாலை – சந்த்யா வந்தனம் வாலி பண்ணும் பொழுது ராவணன் -வாலி கதை..நண்பன் என்று கொண்டான் ..சௌர்யம் சாமர்த்தியம் பலம்  தைர்யம் பாண்டித்தியம் நீதி சாஸ்திரம் போல்வன ஹனுமான் இடம் குடி கொண்ட கோவில் என்கிறார் ராமன் அகஸ்தியர் இடம்../ ராமாயணம் குடி கொண்ட கோவில் ராமனுஜன் போல…பட்டர் தேகம் தாழ்வு உபன்யாசம் பண்ணியும் தன் உடம்புக்கு அலங்காரம் -கோவில் என்ற நினைவில் பண்ணி கொள்வார்.. அறிவு உள்ளவன் பிரம வின் சரீரம் என்று புரிந்து கொள்ளணும்/ந மதிர் மம ..-ராமன் வாக்கியம் -ஹனுமான் பற்றி சொல்ல சஞ்சயன் மதிர் மம -என்று அவன் பராக்கிரமம் சொல்லுகிறார்/ அறிவார் ஆத்மா ஞானி தான் ஆதிமா மே மம -கண்ணன்..ஹனுமான் பெரியவர் நான் கண்ட நல்லது -ஞான பிரானை அல்ல நான் கண்ட நல்லது. கிருஷ்ணனே சிறந்தவர் மதுர கவி மதம் ஆழ்வாரே சிறந்தவர் ..நம்பி என்றக்கால் அமுதூரும் என் நாவுக்கே..நமக்கு ஊராது கண்ணன் நாமம் சொல்லியே உஊற வில்லையே அது மேல் படி

சௌர்யம் வீரம் பராக்கிரமம் /தயை கருணை கிருபை வேறு../எதிரிகளை கண்டு கலங்காமல் நிற்பது சௌர்யம் உள் புகுந்து அடிப்பவன்  வீரம் தனக்கு ஒன்றும் ஆகாது இருப்பது பராக்கிரமம்.-இவை மிகுந்த ராமனே ஹனுமானை இவற்றால் கொண்டாடுவது ஏற்றம்..சாந்தணி தோள் சதிரன்-சந்தன அலங்காரத்துடன் போக கன்யா ஸ்திரிகள் வேல் கயல் சேல் விழியால் நோக்க அவை  பதிந்து முத்தரை அழியாமல் யுத்தம் பண்ணினான் – பராக்கிரமம்../லஷ்மணன் கோபத்துடன் வர -ஹனுமான் தாரையை போக சொன்னனே -சாதுர்யம் ஏப் பொழுது என்ன பண்ண வேணும் என்று தெரிந்தவர்.. பிள்ளை உறங்கா வல்லி தாசர் தன் பத்னிக்கு குடை பிடித்து போக சுவாமி அரங்கன் முன் கூட்டி சென்று நீண்ட அப் பெரியவாய கண்களை காட்ட சொல்லி திருதினாரே அந்த சாதுர்யம் ..

மூலிகை கொண்டு வர மலையை கொண்டு வந்தாரே சாதுர்யம் பலம் இருந்ததால் தானே/ தைர்யம் -தீரன்-இந்த்ரியங்களை அடக்கினவன் தான் .பாண்டித்தியம் சாஸ்த்ரங்களை கற்று இருக்கணும் விபீஷணனை கொல்ல சொல்லியதும் ராமன் முகம் கன்னி போவதை பார்த்து தர்ம சாஸ்திரம் சொல்லி அவனை சேர்த்து கொள்ள  சொன்னான்/ தூதன்சொல்ல வேண்டியதை சொல்லி தர்ம சாஸ்திரம் தெரிந்ததை காட்டினாரே/ராவணனை இவரே கொன்று இருக்கலாமே பலம் தெரிந்தவர்  இப் பொழுது தூதன் பண்ண கூடாது என்று ..பலம் இருப்பதை காட்டிய லஷனம் வாலில் நெருப்பை வைத்ததும்  எரித்து காட்டினாரே..

அவாப்த சமஸ்த காமன் -ராமன் சொல்வது —  ஹனுமானின் பாகு பலத்தால் -தோள் பலத்தால் தான் அடைய போவதாக சொல்கிறான்..கண்ணன் ருக்மிணி இடம் எனக்கும் ஒன்றும் இல்லை அடியவர்களுக்கும் ஒன்றும் இல்லை என்றான். மயங்கி விழ -அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அடியார் என்னையே அடைந்ததால் ஒன்றும் வேண்டியது இல்லை -அவாப்த சமஸ்த காமன்..அப்படி பட்ட ராமன் ஹனுமானை புகழ–சுக்ரீவனை  ஹனுமான் உதவாததன் காரணம் என்ன என்று கேட்க்க – அகஸ்தியர் சொல்ல ஆரம்பிக்கிறார்  -கேசரி அஞ்சனா -வாயு பகவான் அனுக்ரகத்தால் மாருதி -அஞ்சனா சுதன்-ஆஞ்சநேயர் /.. வாயு சுதன் =மாருதி /சூர்யனை பழம் என்று பிடிக்க போக/ வாயு குளிர்ந்த காற்று வீச/ சூர்யன் சுடாமல் இருக்க குழந்தை காக்க / ராகுவும் பிடிக்க வர .தாவி அவன் இந்த்ரன் ராஜ்ஜியம் போய் சொல்ல .ஐராவதம்  ஏறி வந்து பார்க்க ஐராவதத்தை  பிடிக்க போக .வஜ்ராயுதத்தால் கொஞ்சம் அடிக்க விரல் நுனியால் ஹனுக்கு கபோலம்  உடைந்து -வாயு மூச்சை இழுத்து பிடித்து போக பிரம -பெரிய காரியம் செய்ய போகும் குழந்தை -வரம் கொடுங்கோள் என்று சொல்ல இந்த்ரன்இந்த்ரன் ஹனுமான் பெயர் சூட்டி/வஜ்ராயுதம் பிடிக்காது / தனக்கு இருக்கிற சக்தி ஞானம் கொடுக்க/யமன் /யமனும் வரம் கொடுக்க/சூர்யன்-சாஸ்திர உபதேசம் /வருணன் நீர் சரமம் படுத்தாது/ பிரம –  பிரம அஸ்தரம் பிடிக்காது /அமித்ரானாம்- விரோதிகளுக்கு பயம் மித்ரர்களுக்கு அபாய பிரதானம் கொடுப்பார்/ நரசிம்கன் கோபமும் பிரசாதமும்/ சிங்கம் யானைக்கு -பிளிறல்-கர்ஜித்து இருக்கும் பொழுதே குட்டிக்கு பால் கொடுக்கும்.. /பாஞ்ச சன்ய ஒலி-ஹிருதயம் உளுத்து போக அதே ஒலி கேட்டு உயிர் தரித்தார்கள் ருக்மிணியும் ஆண்டாளும்/லஷ்மணனை தூக்க ராவணனால் முடிய வில்லை-ஹிமாசலம் தூக்க முடிந்தவன் பரதன் தம்பியை தூக்க முடிய வில்லை -பரதன் பக்தி தெரிந்து .. ஹனுமான் தூக்க -இலகுவாக குரங்கு தூக்கி கொண்டு போனது என்கிறார் வால்மீகி -எளியவனும் தூக்கி /யாரும் ஓர் நிலைமையென அறிவு  அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையென அறிவு எளிய எம்பெருமான்..–கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா கூடுவர் இடம் தோற்கிறான் தன் இடையே கிடைக்கும்

கிட்டே போக போக  அபயம் தள்ளி போக தள்ளி போக பயம் ../பள்ளி கட்டில் கீழே -ஆண்டாள் பாசுரம்.. மனத்தால் நெருங்கனும்..பாய்ந்து போகும் ஜாதியில் சிறந்தவன் வரம்.. எங்கும் தங்கி இளைப்பு ஆற வேண்டி இருக்காது 100 யோசனை சமுத்ரம் குழந்தை சூரியன் நோக்கி போனாரே /காம ரூபி வேண்டிய ரூபம் எடுத்து கொள்ளலாம் /பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த-பிராணன் விட நஞ்ச முலை சுவைத்தான் பிராணனை விடும் படியாக – / குஞ்சி குழல் பின் தாள-மேல் குஞ்சி கீழ் குழல் குஞ்சி முன்  ஏற  /.வழி பாதை போல/வேண்டிய வழியில் போகலாம் ..காம சாரி -தடை மீறி போக கூடியவன்..காம கக -நினைக்கிற படி போக கூடியவன் /கீர்திமான் வரம் கொடுத்தார் ..வில் ஆண்டான் -வில்லை ஆழ்வான்/ பலம் இருந்தும் அடக்கி கொள்வான்../வரம் வந்ததும் பலம்காட்ட /அஸ்தரம் கதை சீதை சொல்ல/

சபதம்– வில்லை விட மாட்டேன்– ரஷிக்கும் தீஷை  /ப்ருகு முனிவர்கள் சாபம் -நினைவு போகும் /வரம் போல கீர்த்தி பெருகும்/ சீறி அருளாதே சீற்றமே அருள் தான் ..ஜாம்பவான் போல்வார் பேச நினைவு வந்தது அகஸ்தியர் கதை சொல்லி / கொண்டாட ஆரம்பிக்கிறார்தானும் பராக்கிரமம் உத்சாகம் உடையவன்..சீதை தேடும் பஷத்தில் இந்த குணத்தை காட்டினாரே ..சௌசீல்யம் மாதுர்யம் -பேச்சில் இனிமை  சத்தியமே பேசி அப்ரியம் பேசாமல் .பிரவ்ருத்தி நிவ்ருத்தி மார்க்கம் தெரிந்தவர் காம்பீர்யம் சாதுர்யம் மெச்ச தகுந்த வீரம் தைர்யம் -சேர்ந்த இவை போல யார் இடமும் இல்லை ..நம் ஆழ்வார் சீதை பரதன் போல்வார் ஒவ் ஒரு குணத்துக்கு சாம்யம் உண்டி நம் ஆழ்வாருக்கு ஒப்பு போல ராமனின் 16 கல்யாண குணங்கள் சேர்க்கை போல சூர்யன் கொடுத்த -நவ வ்யாக்ருதி பண்டிதர் /கிழக்கு பர்வதத்தில் இருந்து மேற்கு பர்வதம் வரை/ கல்லாத கலை இல்லை ஓர் சொல்லால் வெளி படுத்துவார்- கம்பன் /மேன்மை காட்டிய இடம் பார்ப்போம் அடுத்து எளிமை ஆச்சர்ய பக்திகள் பார்ப்போம்../சீதை இடம் -மாய சிரஸ் காட்டி ராவணன் துன்புறுத்த -மேல் கிளையில் இருந்து கீழ் கிளையில் இறங்கி -ராம கதை சொல்ல ஆரம்பித்து -ராம தூதன் -உம்மையே த்யானித்து கண்டு  பிடித்து -then போல இனிய வாக்கு கேட்டு -ராம கதை சொன்னவனை வணங்க பார்த்தாள்/குரல் தழு தழுக்க-/சீதை கடாஷம் கிட்டய பின்பு தாசோகம் கோசலேந்த்ர்யா/முன்பு தூதன் என்றவர் இப்பொழுது தாசன் என்கிறார்/கூப்பிய கைகளும் -ஆகிஞ்சன்யம் காட்டுகிறார் இத்தால்-/குற்றம் கண்டு அகலாமல் இருக்க அஞ்சேல் என்ற கை அவனுக்கு -அபாய ஹஸ்தம்-நாராயண அஸ்தரம் எதிர்க்க அஞ்சலி மட்டும் /ஞானம் உள்ளவன் -கிரீடம் ஸ்வாமித்வம் காட்டும் /கைங்கர்யம் கேட்க்க சாய்ந்த முடி இவருக்கு /  அவன் வாய் மாசு ச சொல்லும்/ நாம் நம :  சொல்லி -எனக்கு நான் அல்லேன் -அவனுக்கே உரியவன் /ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள் அவனுக்கு –நாம் சேர்த்து போக புகல் இடம் ஒன்றும் இல்லை -நாலும் காட்ட -தாதார்ச- சீதை கண்டாள்- பின்காதிபதி மந்த்ரி-உபகாரன் – வாதாத்மஜம்  -போகும் பிராணனை தரிக்க /சூர்ய -ராஷசர்களை போக்க வீர்யம் உள்ளவன் /

ரூப ரகித ஸ்பரிசவான் வாயு-அவரே வாயு குமாரனாக வந்து பிராட்டிக்கு /தென்றல் விரகத்தில் சுடும் என்பதால் வர வில்லை /சூர்யன் கால் ஊன்றி நின்றால் போல ஹனுமான் நின்றார் /சூர்யன் பயந்து போவான் ..

அடுத்து ராவணன்  இடம் பேசுகிறார்.. பிரம்மா ருத்ரன் இந்த்ரன் வந்தும் பிர யோஜனம் இல்லை ராமன் இடம் அபசாரம் படாதே .ராம தாசன் தூதன் சத்ய வசனம் கடை பிடி என்கிறார். வாக் சாதுர்யம்  ..சத்யம் -உண்மை முதலில் ..முகத்தை பார்த்து பேசுவது பொய் என்று நினைப்பது தெரிந்து /ஒரு படியாய் இருக்கும் என்றும் சத்யம் ..ராம தாசன் குருஷ்வ செய்வாய் -மம வசனம் நடை பிடிப்பாய் -கிருபையால் பேசுகிறேன் -என் ராமன் சொத்து ஓன்று கூட விட்டு போக கூடாது என்று உபதேசம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-/மதியம் என்றால் -என்னது என்றால்-விடுவதும் துவதீயம்  என்றால்-அவனது என்றால்- சேர்வதும்  /இரக்க சுபாவத்தோடு வசனம் -தூதன் -மாம் அகம் போல எளியவன் வலியவன்  போல /

தெருவில் சுத்தி இருந்த சுக்ரீவனை ராஜா ஆக்கினேன் மம வசனம் கேள் நீயும் ராஜாவாக இருக்க /ராம தாசன் ஏக வசன காரன் பிறந்த வளர்ந்த இடம் ஓன்று கண்ணனுக்கு எல்லாம் இரண்டு சொல்லும் தாரமும் இரண்டு தாய் தந்தையும் இரண்டு குலமும் யது இடையர் /ஏலா பொய்கள் உரைப்பான் /நானோ ராம தாசன் ../ராமயிதி தி ராம ஆனந்தம் கொடுக்கும் அவனின் தாசன் .சரணாகத வச்தலன் /ராமன் வாக்கியம் இல்லை தாசன் வாக்கியம் -பாகவத வாக்ய பெருமை /தத்வ உபதேசம் தத்வ தரிசி வசனம் -தத்தவத்தை கண்டு உணர்ந்த அடியாரின் பேச்சு மதிப்பு அதிகம்..

திரு குறுங்குடி நம்பி வைஷ்ணவ நம்பி ஆன விருத்தாந்தம்..அண்ணல் தோன்றிய அப் பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆயினரே ../ராம தூதச்ய -தூதுவ நீதி தெரிந்தவன் என்கிறார் இத்தால்..ராம தூதனுக்கு வாலில் நெருப்பு சீதா  தூதனுக்கு ஆலிங்கனம் பெற்றார்/பண்ணின காரியம் தூதுவன் காரியம் போல செய்ய வில்லையே  /வானரச்ய-குரங்கின்  ச்வாபம் என்கிறார் /மனுஷர்களும் ராஷசர்களும் மாறி வேண்டும் என்று பேசலாம் நான் சத்தியமே பேசுவேன்-மனிசன் புலி குரங்கு கதை/வ்யாகர- வானர சம்வாதம்

அடுத்து விபீஷன சரணா கதி கட்டம்..சம்ஸ்கார சம்பத் உடன் எழுந்து பேசுகிறார் ஞான வாசனை உடன்../மந்த்ரிகளின் தலைவன் ராஜா தவறாக பேசினால் தட்டி பேசும் மந்த்ரி/ வசனம் நான்கு லஷணம் முன்னுக்கு பின் முரண் படாமல் பேசினார்-சொல்லும் சொல்லும் சொல்லும் அர்த்தமும் பொருந்தி/ குறைந்த சொல் நிறைந்த அர்த்தம் கொண்டு-பிரயோஜனம் உள்ள சொல் கடல் ஓசை போல் இல்லாமல் /ராமனை விபீஷணன் உடன் சேர்த்து  வைக்க /மதுரமான பேச்சு /வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு. அஷ்ட புயத்து பாசுரம்- காமுகன் பேச்சை சொல்ல கூடாது/ வாய் அழகையே பார்த்து மயங்கி என்ன சொன்னான் தெரிய வில்லை /லகு -சுருக்கமாக சொன்னார் /ராமன் திரு முகம் கன்னி இருப்பதை பார்த்து -முதல் வார்த்தையாக உன் வார்த்தை ஜெயிக்க ப்ரஹஸ் பதிக்கும் முடியாது என்றார் /சுக்ரீவன் முகத்தை பார்த்ததும் -ராம கவ்ரவத்துக்கு யதார்த்தம் உண்மை பேச வந்து இருக்கிறேன் எனக்கு பெருமை சேர்க்க  பேச வில்லை நீசன் நான் .பெரிய திரு மலை நம்பி -வார்த்தை ..சிறு மா மனிசர் –பட்டர்-

ராஜா -காலில் விழுந்தவனை ரஷிகிறவனே என்று நினைவு படுத்துகிறார் சுக்ரீவனுக்கு ..ஆராய்ந்து முடிவு எடுக்கணும் /வாதம் -ஜெயிக்க பேசுவது விதண்ட பிடித்த முயலுக்கு மூன்று கால்/  ஜல்பம் பிதற்றல் அப்நிவேசம் பற்று தல் உடன் /எதார்த்தம் ஆக பேசுனேன் உண்மை தான் -பயம் போக்கினார் சுக்ரீவனுக்கு ..

12 ஸ்லோககன்களால் ராமன் ஹனுமத் பிரபாவம் லஷ்மணன் இடம் சொல்கிறார்

துன்பினை துடைத்து  மாய  தொல் வினை தன்னை நீக்கி தென் புலத்து –மீளா நெறி கொடுக்கும் ..என்பு உருகி அன்பு பெருகிற்று பரம புருஷன் ..புரிந்தது எல்லாம் தன்னை பற்றி சொல்லி கொள்கிறார் ..பாபம் எல்லாம் விலகும் அழுக்கு எல்லாம் போகும் கண்ட பின்பு ./உருகி நீர் பண்டம் ஆனார் பேச்சை கேட்டு /லஷ்மணனை பேச சொன்னார் ../வேகம் அதிகம் -தடுத்தார் -உபதேசிக்க -வாக் வைபவம் ..-ரிக் வேதம் கல்லாமல் போனால் இப்படி பேசி இருக்க முடியாது. யஜுர்.. சாம .. எதிர் மறையில் பேசினார்..அர்த்த பூர்த்தி ஆணி தரமாக புரிய வைக்க//ஒவ் ஒன்றிலும்  வெவ் வேற பயன் சொல்லி  ..விநயம்-ரிக் வேதம் / தாரணம்-யஜுர் வேதம் -/ வைதிஷ்ய பூர்த்தி -வித்வான் சாம வேதத்தால் //தூயோமாய் வந்து -தூயோமாய் வந்தோம் 3/16 பாசுரம் கவலை- இது போல தாண்டி  பண்ணாமல் இருக்க  யஜுர் வேதம் /வியாகரணம் மீமாம்சம் தர்க்கம் மூன்றும்  -சொல் குற்றம் பொருள் குற்றம் இன்றி  முரண்பாடு இன்றி -மூன்றும் -பேசி இருக்கிறான்..

நீட்டியும் குறித்தும் பேச விலை அவிச்த்ரம் /சுரம் மாறாமல் /ந முக நேத்ரா- -விகாரம் இன்றி நெற்றி சுருங்காமல் பேசினார் /புருவ நெறிப்பு இன்றி /அதி வேகமாக பேச வில்லை / நடுவில் பாட  கூடாது / தலை அசையாமல்/எழுதி வைத்து கொண்டு பேச வில்லை /கொண்டாடுகிறார் விரிஞ்சனோ விடலவலனோ-பிரம்மாவோ சிவனோ–கம்பர் ஸ்ரீ ராம தூதம் சிரசா நமக ..வாக் சாதுர்யம் கிட்டும் பக்தி கைங்கர்யமும் வரும்..

பக்தி மகாத்மயம் பார்ப்போம் /பரர்திகி .தொடக்கம் ஸ்ரீ ராம நாமங்கள்..ராமயிதி இதி ராம ..-வசிஷ்டரை  திரு மேனி அழகு தூண்டி திரு நாமம் வைக்க ..ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத் துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே ../அன்று அவை எனக்கு பட்டினி நாளே-பெரி ஆழ்வார்..பேர் ஆயிரம் கொண்ட தோர் பீடு உடையான் நாராயணா என்று ஓவாது உரைக்கும்.. .நா வாயில் உண்டே .இச்சை மட்டுமே வேணும் திரு நாமம் சொல்ல …ஸ்ரீ ராம நாமத்தாலே -இஷ்வாகு -தர்ம சாஸ்திரம் உணர்ந்த சுபம் ஆன திரு நாமத்தாலே ரஷிப்பேன் என்று சங்கல் பித்தி கொண்டு பேசுகிறார் ..தயிர் சோர்  பழம் அடிசில் கொண்டு -கிளியை வளர்த்தார் ஆழ்வார்..கண்ணன் நாமமே குளறி கொன்றீர் ..பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் கண்ணன் உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்தான் ராமன் -கறப்பார் ராம பிரானை அல்லால் மற்று கற்பரோ..கிருஷ்ணா த்ருஷ்ண தத்வமே இப்படி அருளி இருக்கிறாரே ..மனத்துக்கு இனியன் என்று கண்ணனுக்கே பிறந்த ஆண்டாளும் அருளுகிறாள்..பகவத் குண தர்ப்பணம்-கண்ணாடி/பீடிகை -மிருத சஞ்சீவினி ராம நம என்று சொல்லி ஆரம்பிக்கிறார்..

எட்டு லஷணங்கள் பக்திக்கு உண்டு….மத பக்த ஜன வாத்சல்யம் முதல் லஷணம்/விபீஷணன் இடம் ராம நாமம் கேட்டதும் ரஷசன் ஆய இருந்தாலும் -கொள்ளலாம் கொடுக்கலாம் ஞானம் பகிர்ந்து கொள்ளலாம் -நிகரான ஆசனம் கொண்டு அடியவரை பூஜிக்கணும்/பக்தன் என்று உணர்ந்து சேர்த்து கொள்ள சொன்னாரே ..

குற்றம் பார்க்கும் யோக்யதை படைத்த பகவான்/ பிறப்பித்த ஸ்ரீ தேவி யம தர்ம ராஜன்.மூவர் மட்டுமே/ நமன் தமரால் ஆராய பட்டு அறியார் விஷ்ணு  பக்தர்கள்../அன்று அதனை ஈன்று உகந்த ஆ -அழுக்கை காதலிக்குமே../பூஜை பண்ணுபவர் ஆமோதித்தல் இரண்டாவது லஷணம் -ஸ்ரீ ரமம் பாடும் இடம் எல்லாம் இருப்பவர் /தானே பூஜை பண்ண வேண்டும்-மூன்றாவது லஷணம் -கைங்கர்யமே பூஜை..வலிவிலா அடிமை -உடனாய் மன்னி -திரு உள்ளம் நினைத்த படி செய்தார்..இருவரையும்  சேர்த்து வைத்த கைங்கர்யம்..ஆலிங்கனம் யாம் பெரும் சம்மானம்-பாதி உபாகாரம் தான் .நீர் இரண்டு உயரை காத்தீர் நானோ ஒரு உயரை தான் காத்தேன் ஆலிங்கனத்தால் ../டம்பம் காட்ட கூடாது -அடுத்த லஷணம் –அவாப்த சமஸ்த காமன் அவன் -அடங்கி செல்ல வேணும் /மடி தடவாத சோறு /பிரத் உபகாரம் எதிர் பார்க்காமல் கைங்கர்யம் செய்யணும்..

வினயமே வடிவு ஆஞ்சநேயருக்கு /குவித்த கைகள் /மத் கதா ஸ்ரவனே பக்தி ஐந்தாம் லஷணம் -துஷ்யந்திச ரம யந்திச -சொல்லி கேட்டு ஆனந்தம் -எத்ர எத்ர ரகுநாத கீர்த்தனம் –அங்கு எல்லாம் வந்து இருப்பார் ..அறியாமல் உளறினாலும் ராம நாமம் இன்பம்தருமே .-இளைய புண் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே..குழல் இனிது  யாழ் இனிது தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்/சுரம் இழந்து மயிர் கூச்சு இட்டு இருப்பவன் பக்தன் -ஆறாம் லஷணம் பாஷ்ப வாரி பரி பூர்ண லோசனம் இவருக்கு – சொல்லி படி வண்  பொன்னி பேர் ஆறு போல கண்ண நீர் -சேறு செய் தொண்டர் சென்னிக்கு அணிவனே -குலேசேகரர்/இடைவிடாமல் சிந்தனையில் கொண்டு இருக்கணும்..ஏழாம் லஷணம் -மோஷமே வேண்டாம் -அனுச்மரணமே நித்யம் கொண்டவர்/ ஏழும் வந்த பக்தன் எதையும் கேட்க்காமல் சுயம் புருஷார்த்தமாக இருக்கணும் பிரதியாக எதையும் கேட்க்க கூடாது குழந்தை கொஞ்சுவது ஆனந்தத்துக்கு தானே-எட்டாவது லஷணம் ..ராம ஆலிங்கனமும் கேட்க்க வில்லை அவனே கொடுத்தான் ..

இவை மிலேச்சன் இடம் இருந்தாலும் பூஜிக்க தக்கவன்-கருட புராணம்..பக்தி மார்க்கம் பரப்பினார் ஹனுமான் .  இதனால் தான் அனைவருக்கும் பொது .பக்தி வெளிப் பாடு தான் நாம சங்கீர்த்தனம். ஏரி நிரம்பி மதகு வழியாக  வெளியே வருவது போல .

தர்மத்துக்கு தலை குனிவு இன்னும் ஏற்படவில்லை கல்கி அவதாரம் வரவில்லையே ..தினம் முதல் யுகம்/ யாகம் யக்ஜம்-புத்தியால் இல்லை -கையால் பண்ணும் செயல் த்ரேத யுகத்தில் / அடுத்து அர்ச்சனை -வேதம் சாஸ்திரம் தெரிய வேண்டாம் த்வாபர யுகத்தில் / கலி யுகம்  கேசவ நாம சங்கீர்த்தனம் போதும்/மீனவன் ரத்னம் -வியாபாரி-ராஜா -மூவரும்  போல-ரத்னம் தான் சகஸ்ர நாம சங்கீர்த்தனம் -சுயம் பிரயோஜனத்துகே பண்ணனும்..அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும். திரௌபதிக்கு  ஆபத்திலே புடவை சுரந்தது திரு நாமம் வைபவம்  இறே/கோவிந்தம் உன் தன்னை படி ஆடை உடுப்போம்..-நாமம் பாடியே ஒருத்தி பெற்றாளே-நீயே நேரில் இருக்க உடுக்க மாட்டோமா ?..கட்டி பொன் போல அவன் பணி பொன் போல இது ..

ஆபரணம் பண்ண இது தானே உதவும்..அவன் தன்னை இல்லை செய்வாரும் திரு நாமம் கொண்டு காரியம் செய்வார் அம்மே என்பான் கதறும் பொழுது .

துஷ்கரம்  க்ருதவான் ராம -பிரபு சாமான்யவர் வருத்தம் தெறியாமல் .யானை ஏற்றம் தெரிந்தவன் பெண் அவதாரம் எடுக்காத பிரபு சீதை பிரிந்து இன்னும் உயிர் தரித்து இருக்கிறானே -சோகமே கொன்று இருக்கணும்..சீதை இன்றி அசத் சமம்..படி எடுத்து உரைத்து காட்டும் படித்து அன்று அவன் படிவம்- மூன்றே சொலி -ராம-இடல் முழுவதும் அழகு சமுதாய சோபை -லாவண்யம் -லவணம் -உப்பு-ச்வாபம்  தெரியாமல் கலந்து இருப்பது போல- /கமலா பத்ராஷா-சௌந்தர்யம் -அவயவ சோபை / சர்வ பூத மனோகர-அழகினால் அனைவரையும் அடி பணிய வைத்தார்   /அமலன் ஆதி பிரான்-பாத கமலம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டதுவே போல/கால் கண்டார் காலே கண்டார் கண் கண்டார் கண் கண்டார் போல லாவண்யம் என்கிற  கப்பலில் ஏரி அனுபவிக்கலாம் -பட்டர் முடி சோதி ..திரு மாலே கட்டுரையே.கட்டுரைக்கில் -சுட்டு உரைத்த நன் பொன்  ஒவ்வாது….நீண்டு செறிந்து குழன்றுநெடு நீலம் பூண்டு .. நெய்த்து  கடை சுருண்டு .குழல் வர்ணனை -கம்பர்..

அம்மாவாசை கால ராத்திரி இருட்டு சாரம் பட்டை தேர்த்து ஸாரம் எடுத்து -அன்று மாயன் குழல் ஹனுமத் பக்தி அயனம் ஸ்ரீ ராமாயணம்

பூசல் பட்டோலை மகா பாரதம்..ஸ்ரீ பாகவதம் அருளி வருத்தம் தீர்த்து கொண்டார்.வியாசர்..நெறி முறைகள் மாறி கிடந்தன சரி படுத்த ராமன் அவதாரம்/ சேஷத்வம் காட்ட லஷ்மணன் / பரதன் பார தந்த்ர்யம்  காட்ட /பாகவத சேஷத்வம் பாரதந்த்ர்யம் காட்ட சத்ருக்னன் /வலிய சிறை புகுந்தாள் பிராட்டி /சக தர்ம சாரிணி /பிராண தாதா-ஆசார்யன் ஹனுமான்  

கண்டேன் சீதையை -த்ருஷ்டா சீதை- எல்ல குரங்குகளும் சொல்ல -மது வனம் இருந்ததால் ராமன் முதுகு தப்பித்தது ..ஆனந்தம் போக்கு வீடு/கண்டனன் கற்ப்புக்கு அணியை .களி நடம் புரிய இற பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் சேர்ந்து /ஆலிங்கனம்-வாத மாமகன்  மற்கடம் விலங்கு மற்று ஓர் சாதி -பரதன் அக்ரூரர் மாருதி பரிஷ்கவித்த திரு மார்பு  -மா மணி பூண் குலாவி திகழும் -புருடன் கௌஸ்துபம் பிரகிருதி மருவாகி ஸ்ரீவத்சம் /உத்தம மத்யம அதம புருஷன்/ஏவி யதற்கு  மேல் நினைத்ததை செய்தவன்-உத்தமன் / சொன்னதை செய்தவன் மத்யமன்/ சொன்னதை செய்யாதவன் அதமன் ..பிரம்மாஸ்திரம் -ஜாம்பவான் எழுந்து -அஞ்சனை திரு வயிறு வாய்தாளே அந்த -ஹனுமான்- பிராணன் உடன் இருகிராரா  முதல் கேள்வி-கேட்டார் விபீஷணன் இடம்….மாருதி – முக்ய பிராண தேவதை..விஜய ராகவன் செய்தி சொன்ன உடன் பிராட்டி -உபாகாரத்துக்கு பிரதி பண்ண ஒன்றும் இல்லை -ஆனந்தம்..கை கூப்பி தலை வணங்க-செருக்கு இன்றி அஞ்சலி ஹஸ்தத்துடன் ..திருவடி மதித்த  ஐஸ்வர்யம் -ஸ்ரீ இலங்கை./-கைகேயி பிள்ளை பரதனை விட்டு ஸ்நானம் இல்லை பாஞ்ச சன்ய அம்சம் / லஷ்மணனை விட்டால் தூக்கம் இல்லை ஆதி சேஷன் என்பதால் /

பெரிய கண்/ இடுப்பு குறை /வால் இல்லை –குரங்குகள் பிராட்டி பார்த்து வியந்தன ..பரதன் குகன் காக்க ஹனுமான் ..அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன் இங்கும் ராம கதை சொல்லி ..தெரிந்த ஒரே மருந்து .–.என் வயில் பிறந்த காதல் /அழுதனன் நீர் பெரும் கோலம் ../பரத பிரபாவம் உலகோர் அறிய /பிராண தாத இவரே ..சேர்த்து வைத்து ஆச்சர்ய கைங்கர்யம்..அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் உணர்த்தி தடை நீக்கி உம்பர் திவம்  என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி கட்டுபவர் ஆச்சார்யர் ….நாரதர் = மனிசர் உடம் சம்பந்தம் பட்ட அஞ்ஞானம் கெடுப்பவர் /ஞானம் கொடுப்பவர்..தேசிகன் அழகாகா காட்டியது -சீதா -ஜீவாத்மா /அசோகா வனம் -/சரீரம் உப்பு கடல் -சம்சார சாகரம் /ராவணன்- மனசு /10 தலைகள் -10 இந்த்ரியங்கள் =கர்ம ஞான இந்திரியங்கள் வாக்கு பாணி பாத வாயு உபத்/  மோந்து  உண்டு உழலும் கண்டு கேட்டு /ஐவர் திசை திசை வலித்து இழுக்கின்றனர் /ராமன் விருத்தாந்தம் தெரியாமல் பகவத் விருத்தாந்தம் தெரிய வில்லை / சொல்ல ஹனுமான் இங்கு ஆசார்யன் / கணை ஆழி -சங்கு சக்கர லாஞ்சனம் /சொரூப நாசம் வராமல் இருக்க ஆச்சார்யர் /மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் ..

தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்..திருமலை அனந்தாழ்வான் இருந்தாரே.. ராமானுஜ ஆலிங்கனம் அனந்த ஆண் பிள்ளையோ/பாம்பு கடிக்க -இரண்டு பாம்பு கடி பட்ட பாம்பு இது கடிச்ச பாம்பு- விரஜா நதி பர வாசுதேவன்/ கோனேரி திரு வேங்கடம் உடையான் கைங்கர்யம்//அகன்காரம்மமகாரம் காமம் குரோதம் தொலைத்து சேர வைக்கிறார்..இல்லாத சம்பந்தம் உருவாக்க வில்லை ஞானம் தான் இல்லை..ஒழிக்க ஒழியாத சம்பந்தம் சுவாமி-சேஷி பத்தி -பர்தா /வாசுதேவன் கதை கேட்டால் புண்யம் கங்கை நதி ஸ்நானம் போல சம்பந்த ஞானம் இருந்தால் தான் மோஷம் /மீனுக்கும் ஞானம் இருந்தால் மோஷம்..இதை உணர்த்தி தடைகளை நீக்கி சேர்த்து வைக்கிறார்/ வியாபாரி கர்பிணி மனைவி விட்டு போக -பிள்ளை தகப்பனை பார்க்க வில்லை/ ஒரே துறை முகத்துக்கு வர -சண்டை வர -இருவரையும் தெரிந்த ஒருவர் சம்பந்தம் உணர்த்த -வித்யாசம் -ராவணனுக்கு சீதை வாச பட வில்லை நாம் மனசுக்கு வாச பட்டு இருக்கிறோம்/ பகவானுக்கு நம்மை பற்றி தெரிந்து இருக்கிறான்-யான் ஒட்டி  என் உள் இருத்துவம் என்று இலன்  ..தான் ஒட்டி வந்து என்  தனி நெஞ்சம் வஞ்சித்து .என் உள் இருந்தான் ..தரு துயரம் ..அழும் குழவி அது போல் இருந்தேனே /செம் கமலம் நீரில் இருந்தால் அலற்துகிறான் ஜலத்தில் இருந்து நீக்கினால் உலர்த்துவான்/ஜீவாத்மா ஞானம்  பெறுவது பகவானால் -நீர் நிலை போல ஆசார்யன்../நிரந்குச ச்வாதத்ர்யம் உண்டு அவனுக்கு ..ஆனையும் அரசும் செய்பவை கேட்க முடியாதே ..அங்குசம் போல .ஆச்சார்யர்..கை பிடித்து கார்யம் கொள்வது  போல நேராக அவன் இடம் போவது/காலை பிடித்து கார்யம் கேட்பது ஆச்சார்யர் மூலம் /தள்ளுவது முடியாது..உள்ளுவார் உள்ளத்தை உள்ளமாய் கொள்ளோமே- ஆழ்வார்கள் அனைவரையும் சேர்த்து சொல்கிறார்..ராமன் விபீஷணனை சுக்ரீவன் மூலம் ஏற்று கொண்டது போல..குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -கோன் வச்மி குணவன் -பிராட்டி  தானே இறங்கி வந்து முத்தா ஹாரம் -கண்ணால் பெருமாளை பார்க்க -ஹனுமத் பிரபாவம் தெரிந்து -யாம் பெரும் சம்மானம் –

ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி /சிநேகம் -தசரதன் காட்டியது போல /பக்தி-லஷ்மணன் பரதன் காட்டியது போல /நித்யம்  உண்டு-ஸ்ரீ ரெங்க தனத்திலே இருந்து தொண்டர் அடி போடி ஆழ்வார் போல் இச் சுவை தவிர அச் சுவை வேண்டேன்/ என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா-திரு பாண் ஆழ்வார் போல.. ராமனே அரங்கன்..ஆலிங்கனம் பண்ணிய உன் கந்தம் மாறாமல் இங்கேயே இருக்க வேண்டும்.. ஸ்ரீ ராமாயணமே திரு வாய் மொழி போல உயர்ந்த மதிள்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading