தோளுக்கினியானில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும் ஸ்ரீபாதம் தாங்கிகள்’
வார்த்தை அர்த்தம்
பெருமாள் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு, ஸம்ப்ரதாய அர்த்தம் – ராமர்
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
பிராட்டி ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
தாயார் ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
நம்பெருமாள் ஸ்ரீரங்க கோவில் உற்சவர், ஸம்ப்ரதாய அர்த்தம் – ராமர்
பெரிய பெருமாள் ஸ்ரீரங்க கோவில் மூலவர், ஸம்ப்ரதாய அர்த்தம் – நம்
கண்ணன்
பெரிய பிராட்டி ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
தேவ பெருமாள் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்
உற்சவர் கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி
மூலவர் கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
செல்வர் உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)
யாக பேரர பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும்
உற்சவ மூர்த்தி.
கோயிலொழுகு கோவிலின் வரலாறு
கிடந்த திருக்கோலம் சயநினித்து எழுந்தருளும் சேவை.
வீற்றிருந்த திருக்கோலம் அமர்ந்து எழுந்தருளும் சேவை.
நின்ற திருக்கோலம் நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.
ஆழ்வார் பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், ஸம்ப்ரதாய அர்த்தம் –
நம்மாழ்வார்
பெரிய உடையார் ஜடாயு
இளைய பெருமாள் இலக்குவன்/லக்ஷ்மணன்
எம்பெருமானார் இராமாநுஜாசார்யன்
இளையாழ்வார் இராமாநுஜாசார்யன்
யதிராசர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
யதீந்திரர் இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
ஸ்வாமி முதலாளி, ஸம்ப்ரதாய அர்த்தம் – இராமாநுஜாசார்யன்
ஆழ்வான் கூரத்தாழ்வான்
ஆண்டான் முதலியாண்டான்
லோகாச்சார்யர் நம்பிள்ளையின் மற்றொரு பெயர்
பட்டர் பராசர பட்டர்
நாயனார் அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)
வேதாந்தாசாரியார் வேதாந்த தேசிகன்
ஜீயர் ஸன்யாசி, ஸம்ப்ரதாய அர்த்தம் – மணவாள மாமுனிகள்
பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் மணவாள மாமுனிகள்
வரத த்வய ப்ரஸாதம் பிள்ளை லோகாச்சார்யார் – 2 வரதனுக்கான வெகுமதி –
காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்
கோவில் கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் – ஸ்ரீரங்கம்
மலை, திருமலை மலை, ஸம்ப்ரதாய அர்த்தம் – திருப்பதியிலுள்ள 7 மலைகள்
பெருமாள் கோவில் விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் – காஞ்சீபுரம்
சடாரி (ஸ்ரீ சடகோபம்) எம்பெருமானாரின் பாத கமலங்கள்
ஸ்ரீ ராமானுஜம் ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
மதுரகவிகள் நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
முதலியாண்டான் இராமாநுஜரின் பாத கமலங்கள்
அந்ந்தாழ்வான் திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்
பொன்னடியாம் செங்கமலம் மணவாள மாமுனியின் பாத கமலங்கள்
அரையர் எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும்
அனுசந்திப்பவர்
தேவரீர் பிறரை குறிக்கும் முறை
அடியேன் தன்னை கூறிக்கொள்ளும் முறை
அடியோங்கள் தன்னை கூறிக்கொள்ளும் முறை
தாஸன் அடிமை, அடியேன்
ஆசார்யர் குரு, ஆசான்
பூர்வாசார்யர் ஆசாரியரின் முன்னோடிகள்
பரமாசார்யர் ஆசாரியரின் ஆசார்யர், ஸம்ப்ரதாய அர்த்தம் – யமுனாச்சார்யர்
(ஆளவந்தார்)
திவ்யப்ரபந்தம், அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்
உபயவேதாந்தம் ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்)
மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)
ஸ்ரீசூக்தி ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்
க்ரந்தம் புத்தகம்
வ்யக்யானம் விளக்கம்
காலக்ஷேபம் க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/
சொற்பொழிவு
உபன்யாசம் சொற்பொழிவு
உபயவிபூதி நித்ய மற்றும் லீலாலீலா விபூதிகள்
நித்ய விபூதி ஸ்ரீவைகுண்டம் – எம்பெருமானின் ஆன்மீக பாகம் – லௌகீக
பாகத்தின் 3 மடங்கு
லீலா விபூதி எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் – ஆயிரமாயிரம்
லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்
விரஜா நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி
விஷயந்தரம் எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்
சேஷி தலைவன்
சேஷன் தொண்டன்
சேஷத்வம் தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு
பாரதந்த்ரியம் தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்
அன்ய சேஷத்வம் எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின்
தொண்டனாக விளங்குதல்
தேவதாந்த்ரம் ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்
பஞ்ச ஸம்ஸ்காரம் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5
சடங்குகள்
பர அன்ன நியமம் தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல்
(கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர்
புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு …
வெறுமனே மானுடனாகப் பிறந்து வளர்ந்து நிற்பதை மட்டும் நோக்குவதில்லை
சம்பிரதாயத்தில்.
ஒருவன் உலக ரீதியாகப் பிறப்பதுவே கூட உண்மையில் பிறவியில்லை என்கிறார் ஆழ்வார்.
பின் எது பிறவி?
எவன் ஒருவன் அநாதிகாலமாகத் தன் அறிவை மூடியுள்ள அறியாமையிலிருந்து விடுபட்டு
நல்லது கெட்டது விவேகம் வளர்ந்து, திருமந்த்ர உபதேசத்தால் தன் உண்மையான ஆத்ம
ஸ்வரூபம் என்ன என்று உணர்கிறானோ அப்பொழுதுதான் அவன் உண்மையில் பிறக்கிறான்.
‘அன்று நான் பிறந்திலேன்’ என்று? உலகில் பிறந்த அன்று. பிறந்தபின் மறந்திலேன்
— திருமந்த்ர உபதேசத்தால் ஆத்ம ஸ்வரூபம் கைவரப்பெற்ற பின் ஒரு நாளும்
மறந்திலேன். அப்படி ஸ்வரூப ஞானம் என்ற தனத்தை உள் பொதிந்து வைத்துக் கட்டிய
செல்வ முடிப்பாய் இருப்பது திருமந்த்ரம் ஆகிய அஷ்டாக்ஷரம் ஆகிய
திருவெட்டெழுத்து. அந்தத் திருவெட்டெழுத்தின் ஞானம் வாய்க்கப் பெற்றோர் மனிதரே
ஆயினும் தம் ஸ்வரூபமாகிய பகவத் சேஷத்வத்தை உணர்ந்த படியால் அவர்கள் மற்ற
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நடமாடும் பகவத் ஆலயங்களாய் ஆகிவிடுகிறார்கள். ஒரு
ஸ்ரீவைஷ்ணவர் மற்ற ஸ்ரீவைஷ்ண்வருக்கு என்றால் பரஸ்பரம். ‘எம்பிரான் அடியார்
யாரவர் எம்மை ஆளுடைய கோக்களே’ என்ற பாவமே அங்கு விஞ்சி நிற்கிறது.
அவர்களை விளிக்கும் பொழுது சாதாரண உலகியல் மரியாதையான உங்கள் நீங்கள் தாங்கள்
போதுமோ? எனவே ‘தேவரீர்’ என்று விளி பரிபாஷையாக வருகிறது.
வைணவம் என்றாலே பணிவு என்பதை உலகுக்கு உணர்த்தும் தொடராக விளங்கப்
போகிறது. மாடமாளிகையாய் இருக்கும் தன் வீட்டை குடிசை என்றும் எப்போது
விழுமோ என்றிருக்கக் கூடிய அடுத்தவர் சிறு குச்சைக் கூட திருமாளிகை
என்றும், தன்னை அடியேன் என்றும் தாஸன் என்றும் ஒவ்வொரு மூச்சிலும் பணிவு
பணிவு என்பதையே வலியுறுத்தும் நெறியில் புழங்கும் பல செற்கள்..
———————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
January 1, 2014 at 8:58 am |
Very fantastic and meaningful, educative lines Swami which remains an eye opener for all of us!! Thanks so much Swami for the great details!