117th ஸ்லோஹம்..
தவம் ஹி சுந்தர ! வநாத்ரி நாத ! ஹே
வேங்கடாஹ்வைய நகேந்திர மூர்த்தனி ,
தேவ சேவித பதாம்புஜ த்வய;
சம்ஸ்ரிதேப்ய இஹா திஷ்டசே சதா ..
விபவ அவதாரங்களை அடைவே அநுபவித்து/நடுவில் மூன்று ஸ்லோகங்கள் திரு மலை ,பெருமாள் கோயில், திரு அரங்கம் பெரிய கோயில் அருளி செய்து அடுத்து கல்கி அவதாரம் அநுபவிகிறார்..தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னும் இவையே முலையா -பெரிய திரு மடல் -என்கிற படியே தெற்கு திருமலை யோடு சேர்த்தி ஆகையாலே கோயில் திரு மலை பெருமாள் கோயில் க்ரமம் இருக்க -அதனை முந்துற எடுத்தார் ..இவ் இரண்டு திரு மலைகளோடு ஹச்திகிரி ஆகிற திரு வத்தி மா மலைக்கும் பர்வதத் வேந ஒரு சேர்த்தி உண்டாகையாலே அடுத்து அதனை எடுத்தார் ..அனந்தரம் பாரிசேஷ்யாத் கோயில் அநுசந்திக்க படுகிறது..
சுந்தர ! வநாத்ரி நாத ! ஹே –வாரீர் திரு மால் இரும் சோலை தலைவரான அழகரே !
தவம்-தேவரீர்
வேங்கடாஹ்வைய நகேந்திர மூர்த்தனி –திரு வேங்கடம் என்னும் திருமலை உச்சியிலே
தேவ சேவித பதாம்புஜ த்வய–சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும் -மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றும் சொல்லுகிறபடியே வானவர் தொழும் திருவடி தாமரை இணையை வுடையராய் கொண்டு
;இஹ சம்ஸ்ரிதேப்ய சதா திஷ்டசே –இத் தளத்திலே அடியவர்களுக்கு ஸ்வ அபிப்ராயத்தை தெரிவித்து கொண்டு என்ஜான்றும் எழுந்து அருளி இருகிறீர் ..ஸ்வ அபிப்ராயம் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்பதாம் சஸ்ரிதேப்ய என்கிற சதுர்த்தியும் திஷ்டசே என்கிற ஆத்மனே பதமும் இங்கனே பொருள் பெருவிக்கும்..யத் தஸ்மை திஷ்தேன்ய:-ஸ்ரீ குணா ரத்னா கோசம்
-அரையர் திரு வேங்கட யாத்திரை விட்ட ஐதீகம்/ஆடஹ்துக்கு அபிநயம் திரு வடியை பற்று வலது திரு கரம் காட்டும் சம்சாரம் பெரும் கடல் முழம் கால் வரை வற்ற விடுவேன் இதை இடது திரு கை காட்டும்/அர்ச்சை பெருமாளும் அழகரே என்கிறார் /காட்டில் வேங்கடம் கண்ண புர நகர் -ஆண்டாள் /அனைவரும் அழகரே /இரண்டு திரு மார்புகள் இரண்டு மழையும்/ உலகம் ஏத்தும் தென் ஆனாய் வட ஆனாய் /வேடர் வானவர் வானரங்கள் சேவிக்கும் மலைகள் அருவிகள் நிறைந்த /வேம்= எறிதல் கடம் =பாபங்கள் ஒரே சொல் சமஸ் கருத்திலும்
தமிழும் அதே பொருள். /மோஷ மார்க்கம் =வேம் இந்த லோக ஐஸ்வர்யம்= கடம் / ஆதிசேஷன் உடம்பு அஹோபிலம் வால் சிமாசலம் /ஸ்ரீ சைலம் / ஸ்ரீ வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரணி தடே/சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் /மேலை வீடு =ஸ்ரீ ரெங்கம் ..பதின்மர் பாடும் பெருமாள் /வானவர்கள் சந்தி செய்ய நின்றான் ..அரங்கத்து அரவின் அணையான் ..
கோவில் திருமலை பெருமாள் கோவில் /தொடர்பு மலைகளை சொல்லி ஸ்ரீ ரெங்கம் /அனைத்து அர்ச்சை பெருமாளையும் சொன்ன மாதிரி – வேர் பற்று /
118th ஸ்லோஹம்..
ஹஸ்தி சைலநிலையோபவன் பவான்
சாம்ப்ரதம் வரதராஜ சாஹ்வய;
இஷ்டமர்த்த மனுகம்பயா ததத்
விச்வமேவ தயதே ஹி சுந்தர
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பரிஜாதத்தின் ஒவ்தார்யத்தை அநுபவிகிறார் இதில்..
சுந்தர பவான் சாம்ப்ரதம் வரதராஜ சாஹ்வய;ஹஸ்தி சைல நிலையோ பவன்–வாரீர் அழகரே ! தேவரீர் இப்போது வரம் தரும் பெருமாள் என்று திரு நாமம் உடையீராய் திரு அத்தி மா மலையிலே வாழ்பவராய் கொண்டு ..
இஷ்ட மர்த்த மனுகம்பயா ததத் –திரு அருளாலே அரத்தி தாரத்த பரிதான தீஷிதராய்
விச்வமேவ தயதே ஹி –உலகுக்கு எல்லாம் அருள் புரியா நின்றீர்..
சதுர முக பர்மா தான் ஒருவன் சாஷாத் கருத்து அநுபவித்து கழிக்க அஸ்வ மேத யாகம் செய்து எம்பெருமானை பெற்றான் சாதகஸ் த்ரிசதுரான் பய கணான் யாசதே ஜலதரம் பியாசயா சோபி பூரயதி விச்வமம்பசா ஹந்த ஹந்த மகாதாமுதாரதா என்றும்
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமால் என்றும் சொல்லுகிற படியே பேரு உத்தேஷ்டாவான ஒருவன் அளவிலே சுவறி போகாமல் உலகு எல்லாம் பேர் அருள் பெற்று வாழா நின்றது..
அபய ஹஸ்தம் வரதனுக்கு /வரத ஹஸ்தம் இல்லை /பிரசித்தம் ..சம்பிராயதுக்கு அனைத்தையும் கொடுத்தவன் ../தான ஹஸ்தம் அழகருக்கு / வேழ மலை ஆனை மலை -கஜேந்திரன் கூப்பிட வந்தவன் கா =பிரமன் அவனால் பூஜிக்க பட்ட காஞ்சி /
யானை எட்டும் பூஜித்த மலை /அனுகம்பா -தயை கருணை/ ஆஸ்ரிதர் துக்கம் பார்த்து நடுங்குபவன் அனுகம்பா / பிராட்டிக்கும் திரு நாமம் அனுகம்பா -பெரும் தேவி தாயார் அல்லது தயை உடன் சேவை ./கஜேந்திர தாசர் -திரு கச்சி நம்பிக்கு திரு நாமம் ஆறு வார்த்தை அருளினார் /அபாய பிரதானம் கொடுப்பவர் வரதர் /ரஷிகிறேன் /ஏதத் விரதம் மம/ காண்டகு தோள் அண்ணல்- அமுதனார் -பெயர் வைத்தது அழகர் / கண்ட வாற்றால் உலகே தனக்கு என்று தேவ ராஜன் /இளையாள்வாரை ராமானுஜராக ஆகினவரே வரதன் தானே /சேராதன உளவோ பெரும் செல்வருக்கு-அரங்கன் அனுபவித்தான் / திரு கண்டேன் என்று அனுபவித்தவர் பேய் ஆழ்வார் -முதல் இருவரும் திரு விளக்கு காட்டியதால் /அக்னி தழும்பு உடன் சேவை -ஹோம குண்டத்தின் நடுவில் / திரு மலை மூல மூர்த்திக்கு பிரதாண்யம் காஞ்சியில் உத்சவருக்கு ஸ்ரீ ரெங்கத்தில் இருவருக்கும் மூலவர் ஆழ்வார்கள் உத்சவர் ஆசார்யர்கள் / பொலிந்த நின்ற பிரான் ஆதி பிரான் இருவரையும் மங்களா சாசனம் ஆழ்வார் /பரம சுவாமி மூலவர் மேம் பட்டவர் இல்லை உத்சவர் சுந்தர தோள் உடையான் இருவருக்கும் ஏற்றம் இங்கே /தேவ பெருமாள் பிராட்டி உடன் தான் எழுந்து அருளுவார் அனுகம்பயா /ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றி மலை ஏறுவார் / ஒரு படி சேர்த்து ஒரே தோசை அழகர் கோவிலில் அக்கார வடிசிலும் வெண்ணெயும் பிராதன்யம்..
119th ஸ்லோஹம்..
மத்யே ஷீரபயோதி சேஷ சயனே சேஷ சதா சுந்தர !
தவம் தத்வைபவமாத்மனோ புவி பவத் பக்தேஷு வாத்சல்யாத:
விஸ்ரான்யாகில நேத்ர பாத்ர மிஹா சந் சஹ்யோத்பவாயாஸ் தடே
ஸ்ரீ ரங்கே நிஜதாம்னி சேஷ சயனே சேஷ வநாத்ரீச்வர !
குடதிசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி கடல் நிற கடவுள் எந்தை அரவணைத் துயிலுமாற்றை திரு வரங்கம் பெரிய கோயிலிலே அநுபவித்து இனியர் ஆகிறார்
..ஷீர சாகர தரங்க சீகர சார தாரகித சாரு மூர்த்தயே போகி போக சயநீய சாயினே மாதவாய -என்கிற படியே திரு பாற்கடலில் அரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் கோலம் காட்டில் எரித்த நிலாவாக அன்றோ உள்ளது..அது அங்கனே ஆகாமே கண் படைத்தார் எல்லாரும் கண்டு கழித்து வாழலாம் படி -திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்கின்ற படியை பேசுகிறார்..
வநாத்ரீச்வர சுந்தர !–வாரீர் திரு மால் இரும் சோலை மலை தலைவரான அழகரே !
மத்யே ஷீரபயோதி சேஷ சயனே சதா சேஷ –திரு பாற் கடலின் இடையே அரவணை பள்ளியிலே அநவரதம் பள்ளி கொண்டு அருளா நின்றீர்
ஆத்மனோ தத் வைபவம் புவி பவத் பக்தேஷு விஸ்ராண்ய–சேஷ சாயித்வ ரூபமான அந்த ச்வகீய வைபவத்தை
இந் நில வுலகத்திலும் பக்தர்கள் வாத்சல்யாதிசயத்தாலே காட்டி கொடுக்க திரு வுள்ளம் பற்றி..
அகில நேத்ர பாத்ரம் சந்–எல்லார் உடைய கட புலனுக்கும் இலக்காய் கொண்டு
மிஹ சஹ்யோத்பவாயாஸ் தடே –இங்கே திரு காவேரிக் கரையிலே
நிஜதாம்னி ஸ்ரீ ரங்கே –விசேஷித்து தன நிலமான திரு அரங்கம் பெரிய கோயிலிலே
சேஷ சயனே சேஷ–அரவணை மேல் பள்ளி கொண்டு அருளா நின்றீர்..
பெரிய ஸ்லோஹம் எல்லாமும் பெரிசு கோவிலிலே /யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே -குலே சேகரர் /பூர்ணம் இங்கே தான் .. வியூக சவ்ஹார்தம் இங்கே குணம் ஸ்ரீராப்தி சயன பெருமாளே இவர் என்கிறார் ஆழ்வான் இந்த ஸ்லோஹத்திலே / இதை கொண்டே நாயனார்-வியூக சவ்ஹார்தம் – இப்படி அருளி இருக்கிறார் / ராவணனும் சிசிபாலனும் நன்றாக இருக்கணும் என்கிற சவ்ஹார்தம் இவனுக்கு /கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ நாம் பிரார்த்திக்கிறோம் / ரொட்டி பிரசாதம் இங்கும் அங்கும் -அழகர் கோவிலும் அரங்கத்திலும் /யோக நித்தரை உறங்குவான் போல் -ரஷிகக/திரு பார் கடல் போல அன்றி அனைவருக்கும் இலக்காகி /சக்ய மலையில் இருந்து வரும் காவேரி கரையில் -நிஜ தாமம் -பூலோஹா வைகுண்டம்.. இனிது இறைத்து திவலை மோத/தென்னீர் பொன்னி திரை கையால் அடி வருட /காவேரி கங்கை போட்டியில் இத்தால் ஜெயித்தாள்/வண்டினம் ஆடும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை ஆனதும் அடைந்தாள் /திரு பாற் கடல் சத்ய லோகம் இஷ்வாகு அயோதியை ராமன் விபீஷணன் பரிசாக பெற்ற பிரணவா காரம் ஜகன் நாதன் நாராயணன் பெயர் அப்பொழுது /தென் திசை இலங்கை நோக்கி /
ஸ்நானம் பானியம் தீர்த்தம் துலா காவேரி தீர்த்தம் நதிகளின் பாப்பம் தொலைத்து குளிப்பவர் பாவம் தொலைத்து மரங்களை தேன் போல கொடுத்து வளர்த்து வீதி சுத்தம் பண்ணி திட்டு உயந்து தூக்கி பெரிய பெருமாளை காட்டு கிறாள் இதற்க்கு கங்கை நுரை எள்ளி நஹை ஆடுவது போல -பட்டர்/தெளிவிலா கலங்கி நீர் சூழ் -தொண்டர் அடி போடி / தென்னீர் பொன்னி /தெளிந்து இருக்கு .. உள் இருக்கும் எல்லாம் தெரியும் ../பெண்ணை உசந்த இடத்தில் கொடுத்து -சீர் பண்ண /அடித்து கொண்டு வருகிறாள் /பார்க்க போகிறோம் கலக்கம் / வருத்ததுடன் போகும் போது கலக்கம் /கண்ணை திறந்து சேவிக்கணும் த்யானமே பகவத் தரிசனம் வீட்டில் போய் அசை போடணும் கோவிலிலே மேயணும்/
30௦ திவ்ய தேசங்கள் காவேரி கரையில் ஸ்ரீ ரெங்க பட்டணம் ஸ்ரீ ரெங்கம் அப்ப குடத்தான் கபிஸ்தலம் திரு குடந்தை பரிமள ரெங்கம் திரு எழுந்தூரில்..கால் சிலம்பில் போட்டி இன்றி சிலம்பாறு இங்கே
120th ஸ்லோஹம்
கல்கீபவிஷ்யன் கலிகல்க தூஷிதான்
துஷ்டான சேஷான் பகவன்! ஹநிஷயசி ,
ஸ ஏஷ தச்யாவ சரஸ்சு சுந்தர:
பிரசாதி லஷ்மீச சமஷமேவ ந:
என்றைக்கோ செய்வதாக திரு உள்ளம் பற்றி இருக்கிற அந்த அவதாரத்தை மகா க்ரூரர்கள் மலிந்து உள்ள இக் காலத்திலேயே செய்து அருளுவது நன்று என்கிறார்
லஷ்மீச பகவன்! சரிய பதியான திரு மால் இரும் சோலை மலை பெருமானே !
கல்கீபவிஷ்யன்–இனி ஒரு கால் கல்கி அவதாரம் செய்து
கலிகல்க தூஷிதான் சேஷான் துஷ்டான ஹநிஷயசி–கலி கல்மஷ தூஷிதர்களான சகல துஷ்டர்களையும் தொலைத்து அருள போகிறீர் .. அதற்க்கு சமய ப்ரதீஷை வேணுமோ
தச்ய ஸ ஏஷ அவசர சு சுந்தர:–அதற்க்கு இந்த சமயந்தான் மிக வாய்ப்பானது
ந சமஷமேவ பிரசாதி –எங்கள் கண் முகப்பே பாபிகளை தொலைத்து அருள வேணும் கல்கி அவதாரம் செய்து தொலைக்க வேண்டிய பாபிகள் மலிந்து இருப்பதாக ஆழ்வான் திரு வாக்கில் வெளி வந்தால் அக் காலத்தின் கொடுமையை என் என்போம் !
428000௦௦௦ கழித்து வேண்டாம் இப்பொழுதே இருக்கிறார்கள் கிரிமி கண்ட சோழன் நாலூரான் போன்றோர் /கலி -432000௦௦௦ வருஷம் ..சம்பள கிராமம் விஷ்ணு யசஸ் கவ்சிக கோத்ரம் வெள்ளை குதிரை நீண்ட உடை வாள் உடன் /ஆயிரம் சதுர யுகம் பின்பு தான் பிரளயம் 10௦ மடங்கு ஒரு சதுர் யுகம் அதுவும் மூன்று லோகம் அழியும் பிரம்மா பகல் கழியும் /100௦௦ வருஷம் பிரம்மா ஆன பின்பு ஏழு லோகம் அழியும் பிராக்ருத பிரளயம் அது ../கலி முற்றி விட்டது ஆயிரம் வருஷம் முன்பே என்கிறார் ஆழ்வான் -தர்மம் வாட ஆரம்பிக்க வில்லை/கலி முற்றிய அனர்த்தம் பாகவதத்தில் உண்டு ..
அதர்மம் தலை குனிய வில்லை வாட வில்லை அப்புறம் பட்டு போகணும் நிறைய கோலாகலம் அனர்த்தங்கள் வரும் பசி பட்டினி தலை விரித்து ஆடும் ..கருத யுகம் முளை இட ஆரம்பிக்கும்
லஷ்மி சே-திரு உடன் சேர்த்து கல்கி பகவானை சொல்கிறார்..மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்ஹா திரு கல்யாணம் கேள்வி படா விடிலும் விட்டு பிரியாமல் எல்லா அவதாரத்திலும் இருக்கிறாள்..
121 st ஸ்லோஹம்..
ஈத்ருசாஸ் த்வதவதார சத்தமா:
சர்வ ஏவ பவதாச்ரிதான்
ஜனான் த்ராதுமேவ ந கதாசிதன்யதா
தேன சுந்தர பவந்தமாஸ்ரையே
இந்த ஸ்லோஹத்தினால் திரு மால் இரும் சோலை அழகர் திருவடிகளிலே ச்வாபிமத சித்திக்காக பிரபத்தியும் செய்து அருளுகிறார் ..ப்ரபத்திக்கு அபேஷிதங்களான குண விசேஷங்களை எல்லாம் கீழே பஹு முகமாக பரக்க அருளி செய்து இதிலே சரணம் புகுகிறார்..
சுந்தர ஈத்ருசாஸ் த்வ தவதார சத்தமா:சர்வ ஏவ பவதாச்ரிதான் ஜனான் த்ராதுமேவ–அழகரே ! இப் படிப் பட்ட உம்முடைய மிக சிறந்த திரு அவதாரங்கள் எல்லாமும் -பரித்ராணாம் -என்கிற வாய் ஓலைப் படியே சாது பரித்ராணதிற்க்கேவே ஆம்
ந கதாசித ன்யதா ந–அவதாரத்திற்கு இதுவே பிரயோஜனம் அல்லது வேறு பிரயோஜனம் இல்லை
பவந்த மாஸ்ரையே –இத் திரு மலையிலே வந்து திரு அவதரித்து இருப்பதுவும் சாது பரித்ராணத்திற்காகவே ..ஆதலால் அடியேனையும் ஒரு சாதுவாக திரு வுள்ளம் பற்றி ரஷித்து அருள வேணும் என்று தேவரீரை சரணம் புகுகிறேன் என்றார்..
சரணா கதி அழகர் இடம்/ பல அவதாரம் கொண்டு -சித்ரா பவ்ர்ணமி அன்று பல அவதாரத்துடன் சேவை சாதிக்கிறான் /ஆஸ்ரிதர்களை ரஷிக்கத் தானே அவதாரங்கள் -முக்ய பிரயோஜனம் /ஹம்ச ஹயக்ரீவ பத்ம நாப போன்ற பல பல / ஆள் இல்லை தளிரில் வட பத்ர சாயி/ நர நாராயணன்/ தாதி வாமன ஹரி -கஜேந்திர அஜிதன் -அமுதம் கடைய -மோகினி திரு மோஹூர்–/மனசு வியாபாரம் சரணா கதி பிரார்தானா மதி- வேறு போக்கிடம் இல்லை அவனே தஞ்சம் என்ற புத்தி தான் /ஆறு விதம்– பிடித்ததை செய்து பிடிக்காததை விட்டு -வீடுமுன் முற்றவும்/ விசுவாசம் /முதல் ஒன்றுமில்லை /ஆத்மா சமர்ப்பணம் /பிரார்த்தனை..
122nd ஸ்லோஹம்..
த்வாமா மனந்தி கவய:கருனாம்ருதாப்திம்
த்வாமேவ சம்ஸ்ரித ஜநிக்ன முபக்ன மேஷாம் ,
யேஷாம் வ்ரஜன்நிஹா ஹி லோசன கோசரத்வம்
ஹை சுந்தராஹ்வ! பரிசச்கரிஷே வநாத்ரிம் ..
சரணா கதி சபலமாகியே தீர வேணும் என்பதற்காக நான்கு ஸ்லோஹம் அருளி செய்கிறார்
ஹை சுந்தராஹ்வ த்வாமா கவய:கருனாம்ருதாப்திம் ஆமனந்தி—வாரீர் அழகரே ! அப்ரத்யஷா தத் வார்த்த சாஷாத் கார ஷமர்களான பராசர பாராசர்யாதிகள் தேவரீரை அருள் கடலாக சொல்லுகின்றார்கள்..
த்வாமேவ சம்ஸ்ரித ஜநிக்ன மேஷாம் முபக்னம் (ஆமனந்தி )—ஆஸ்ரிதர்களுக்கு சம்சார விமோசகராகவும் அவர்களுக்கு ஆஸ்ரய பூதராகவும் தேவரீரையே சொல்லுகிறார்கள் எவர்களுக்கு என்னில்..
இஹ ஹி யேஷாம் லோசன கோசரத்வம வ்ரஜன்பரிசச்கரிஷே –இன் நிலத்திலே யாவர் சிலர்க்கு கட்புலனுக்கு இலக்காகி திரு மால் இரும் சோலை மலையை பரிஷ்க்ருதமாக்கி அருள்கின்றீரோ..
பராசர பாராசார் யாதிகளான மகர்ஷிகளின் வாக்கு பொய் ஆகாதபடி அருள் புரிய வேணும் என்றதாயிற்று..
சரணா கதி பலிக்க நான்கு ஸ்லோகங்கள் /பலிக்காத இடங்கள் பல உண்டு /கருணை கடல் நீர்/கொஞ்சம் காட்ட தானே /பிறவியை அறுத்து கொடுப்பவர் -ஜன அர்த்தணன்/வட்கலா பெருமாள்/ஜனார்த்தன பெருமாள் /அதிகமான வாரத்தில் அலை வீசும் இடம் வட்கலை/கண்ணுக்கு இலக்காக இருந்து சேவை சாதித்ததே கருணை / மூப்பு பிறப்பு பிணி –வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன்/பொலிக பொலிக -நேமி பிரான் தமர் போக்குவார் என்கிறார் /பற்றிலார் பற்ற நின்றான் -ஆஸ்ரியமாக இருக்கிறான்/வாலி இடம் தாரை நிவாச வருஷம்ராமனை பற்றிய சுக்ரீவனின் பலம் /
123rd ஸ்லோஹம்..
அசக்யம் நோ கிஞ்சித் தவ நச ந ஜானாசி நிகிலம்
தயாலு: ஷந்தா சாஸி ,அஹமபி ந சாகாம்சி தரிதும்,
ஷமோதாஸ் த்வச்சேஷோ ஹயகதிரிதி ச ஷுத்ர இதி ச
ஷமாஸ் வைதாவன்னோபலமிஹா ஹரே சுந்தர புஜ!
ஹரே சுந்தர புஜ! தவ அசக்யம் நோ கிஞ்சித் –ஹரே சுந்தர புஜ! வாரீர் சுந்தர தோள் உடைய பெருமாளே ! சர்வ சக்தரான தேவரீருக்கு செய்ய முடியாதது ஒன்றும் இல்லை காணீர் ..சங்கல்ப மாத்ரத்தாலே எதையும் செய்ய வல்லீர் என்கை..
நிகிலம் ந ச ந ஜானாஸி–சக்தியில் குறை இல்லாதா போல ஜ்ஜானத்திலும் குறை இல்லை கிடீர் — உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -என்ன பட்ட தேவரீர் அறியாதது ஓன்று இல்லை..
தயாலு: ஷந்தா சாஸி–ஜஜான சக்திகளுக்கு மேலே தயா குணமும் ஷமா குணமும் உடையீராய் நின்றீர்..
தேவரீர் படியை விண்ணப்பம் செய்த அடியேன் என் படியையும் விண்ணப்பம் செய்து கொள்கிறேன் கேட்டு அருளீர்..
அஹமபி சாகாம்சி தரிதும் நஷம–அடியேனோ செய்த பாபங்களை பிராய சித்தாதிகளால் போக்கி கொள்ள ஷமன் ஆகின்றிலேன் பாபங்கள் கூடு பூரித்து கிடக்கிறது என்கை
அத –தேவரீர் சர்வஜ்ஜ்த்வ சர்வசக்தத்வ தயாலுத்வ ஷமாநிதித்வாதி குண பூரணராய் இருப்பதனாலும் அடியேன் பாப நிபர்கன ஷாமன் அன்றிகே இருப்பதனாலும்..
த்வச்சேஷோ இதி ஹயகதிரிதி ஷுத்ர இதி ச–தேவரீருக்கு சேஷப் பட்டவன் வேறு புகல் அற்றவன் பிறரும் கண் எடுத்து பார்க்க தகாத நீசன் ஆனவன் என்னும் இக் காரணங்கள் கொண்டும்..
ஷமஸ்வ–சர்வ அபசாரங்களையும் ஷமித்து அருள வேணும்..
ந இஹ ஏதாவத் பலம் -தேவரீர் உடைய ஜஜான சக்தி யாதிகளை அனுசந்திப்பதும் அடியோங்கள் உடைய அஜ்ஜான அசக்திகளை அனுசந்திப்பதுமே இங்கு எங்கள் பக்கல் உள்ள கைமுதல் என்கை..
நோபாலம் =ந + அபலம் –ந ஏதாவத் அபலம் ஷமஸ்வ –அபலம் =அபசாரம்–
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் நீ அறிவு ஓன்று இல்லாதா ஆய் குலம்/ மேடு குறைந்து பள்ளம் நிரப்பி /அசக்யம் -முடியாதது ஒன்றும் இல்லை உமக்கு /சங்கல்பத்தால் செய்ய வல்லீர் /தயை உடையீர் /குணங்களை எண்ண முடியாது நம் தோஷங்களையும் எண்ண முடியாது விரல் விட்டு என்ன முடியாது இரண்டையும் சாம்யம் இதிலும் நமக்கு /பாப கடல் தாண்ட முடியாது ..அனுபவித்து தொலைக்க முடியாது 1/2 வினாடி பாபம் தொலைக்க பல கல்பம் வேணும்..சேஷ பூதன் அடிமை ரசிக்கும் பொறுப்பு / அகதி புகல் இடம் அற்றவன்/ சூத்திரன் – நீசன் /குளித்து மூன்று -கர்மஅறிவு பக்தி இல்லை /நோற்ற நோன்பு இலேன் /உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் /புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே / நாகணை மிசை நம்பிரானே சரணே சரண் /கடல் வண்ணா கதறுகின்றேன் /இதை சொல்லுவதே நமக்கு பலம் ..எதுவும் இல்லை என்பதால் உன் இடம் வந்தோம் / வேறு அதிகாரம் இல்லாததே அதிகாரம் சரண கதிக்கு /நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் ஜோதிக்கு / கஜேந்திரன் ஜடாயு கிடைத்த மோஷம் வேணும் /நாத முனி பார்த்து மோஷம் கேட்டார் ஆளவந்தார் /அபய கேது அவன் குணம் சித்திப்பது பய ஹேது நம் தோஷம் நினைப்பது..
124th ஸ்லோஹம்..
லங்கா யுத்த ஹதான் ஹரீன் த்விஜசுதம் சம்பூக தோஷாம்ருதம் சான்தீபன்ய பிஜம்மருதம் த்விஜ ஸுதான் பாலாம்ச்ச வைகுண்டகான்
கர்ப்பஞ் சார்ஜு நிசம்பவம் வ்யுதராஸ் ச்வேனைவ ரூபேண
ய; ச்வாபீஷ்டம் மம மத்குருரோச் சததசே நோ கிம் வநாத்ரீச்வர !..
பண்டு ராம கிருஷ்ண அவதாரங்களிலே செய்து அருளின அதி மானுஷ மகோபகார விசேஷங்களை எடுத்து உரைத்து , இப்படி விலஷன சக்தி யுக்தரான தேவரீர் எம் அபேஷிதம் தலை கட்டாமை ஓன்று உண்டோ என்கிறார்..
லங்கா யுத்த ஹதான் ஹரீன்–இலங்கையில் நடந்த ராஷச யுத்தத்திலே கொலை உண்டு ஒழிந்த வானர முதலிகளையும்..
சம்பூக தோஷா ம்ருதம் த்விஜசுதம்—தவம் புரிய தகாத சூத்திர யோநியிலே பிறந்த சம்புகன் தவம் புரிதல் ஆகிற குற்றத்திற்கு பலனாக அகால ம்ருத்யுவை அடைந்த அயோத்யா வாசி பிராமண குமாரனையும்..
மருதம் சான்தீபன்ய பிஜம்—மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை -என்கிற படியே பிரபாச தீர்த்தத்திலே மாண்டு போன சாந்தீபனி புத்த்ரனையும்..
வைகுண்டகான் த்விஜ ஸுதான் பாலான் ச–பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் -பெரி ஆழ்வார் -பாசுரம் படி தன அடி சோதி சேர்ந்த பிராமண புத்ரர்களான நான்கு சிசுக்களையும் ..
ஆர்ஜு நிசம்பவம் கர்ப்பஞ்ச— மருமகன் தன சந்ததியை உயிர் மீட்டு என்றும் உத்தரை தன சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் என்று பேசப் பட்ட அச்வத்தாமாவின்
அபாண்ட வாஸ்த்ர ப்யோகத்தினால் கரி கட்டையாய்
விழுந்த அபிமன்யு புத்ரனையும் .
வ்யுதராஸ் ச்வேனைவ ரூபேண வ்யுதர–பண்டு இருந்த வடிவில் சிறிதும் குறையாமே சிதையாமே அப்படியே புநருத்தாரம் செய்து அருளிற்றோ–அப்படிப் பட்ட தேவரீர்..
ச்வாபீஷ்டம் மம மத்குருரோச் ச ச்வாபீஷ்டம் நோ ததசே கிம்–அடியேனுக்கும் அடியேனது ஆசார்யரான எம்பெருமானாருக்கும் அபீஷ்டமானத்தை கொடுத்து அருளாது ஒழியுமோ? /அவசியம் கொடுத்து அருளும் என்கிற ப்ரத்யயம் உள்ளது எமக்கு–
உடமை= சொத்து உடையவர் -=உபய விபூதியையும் சொத்தாக ஒப்புவித்தான் இவர் இடம் /அவர் சம்பத்ததால் அனை வருக்கும் வாழ்ச்சி/ முற் பட்டவர்களுக்கு திரு முடி பிற பட்டவர்களுக்கு திரு வடி சம்பந்தத்தால் /அவரே கூரத் ஆழ்வான் சம்பத்ததால் மோட்ஷம் என்று கேட்டு சந்தோஷ பட்டார் -காஷாய மேல் துணியை போட்டு கூதாடினாராம் கேட்டதும் /.நாலூரானுக்கும் வாழ்ச்சி பிரார்த்தித்து பெற்று கொடுத்தார் /மனித நேயம் நிரந்தவர்..அவர் நாண நன்னயம் செய்தவர் /மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக் குறும்பு அறுத்தவர் /நாக்குக்கு பேரு கிட்டதான் பேசுகிறோம் /காதுக்கு பேரு கிடைக்க கேட்கிறோம்/ மலை ஜலத்தால் சமுத்ரத்துக்கு புது பொலிவு வாராது போல நாம்பேசி அவன் பெருமை கூடாது சம்பந்தத்தால் நமக்கு பெருமை /நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று சொல்லி கொள்வார் /திரு மலை நம்பிகள் தாமே வந்து உடையவரை பார்த்து என்னை விட தாழ்ந்தவர் இல்லை என்றார் /குற்றத்தை நல்லதாக கொள்வதே வாத்சல்யம் /ரட்சித்து கொடுத்த சரித்ரங்கள் பல சொல்லி காக்கும் இயல்பினான் கண்ணன் -/குரங்குகளை உயிர் மீட்டு கொடுத்தது /
சத்ருக்னன் தசரதனனுக்கு ஈம சடங்கு பண்ண இழந்து/ ஜடாயு விராதன் கபந்தன் சரயு சரபங்கன் போன்றோருக்கு பண்ணி ராவணனுக்கும் பண்ண முன் வந்தான் /விரோதி இல்லை இவனுக்கு யாரும் எப்போதும்/ உயிர் இருக்கும் வரை அவன் என்னை விரோதியாக நினைத்தான் இப்பொழுது அப்படி நினைக்க முடியாது /பிரஜைகள் நன்மையே நினைத்து துக்கம் தானே அனுபவிக்கும் ராஜாதி ராஜன் /
ராம ராஜா இடம் பிரஜை ஒருவன் தப்பான ராஜ்யம் நடத்துகிறாய் என்று சொல்ல அவனே போய் தேடி -சம்பூகன் -தலை கீழ் தொங்கி செய்ய கூடாததை செய்து தெரிந்து கொண்டு – அவனை கொன்று /குழந்தை உயிர் பெற்று எழுந்தது /இரண்டு கதை ராமன் விருத்தாந்தம் சொல்லி /நீர் மோர் பானகம் 25 பட்சணம் அப்பம் கலந்த சிற்று உருண்டை போல்வன ..இல்லாதவருக்கு தான் பண்ணி பார்க்கணும் சர்கர வர்த்தி திரு மகன் இடை பிள்ளை நேர்மை உரு எடுத்தவன் ஒரு சொல் வில் / விளையாட்டுக்கும் ஆனந்த்துக்கும் கண்ணன் ராம மந்த்ரம் குழந்தை ஐஸ்வர்யம் கிருஷ்ணா மந்த்ரம் 1000௦௦௦ வருஷம் ஆன பின்பு சீதை கர்ப்பம் வெட்கம் அப்பனுக்கு நான் தேவலை 60000௦௦௦௦ வருஷம் ஆனது –சந்தான பிரார்த்தனை/ இடப் பிள்ளை இடம் கோபால மந்த்ரம் சொல்லி சொத்து பெறனும்/ஆய கலைகள் 64 –64 நாளில் கற்று கொண்டான் /அவந்திகா -உஜ்ஜைன் -சாந்தீபன் இடம் பாடம் பெற்றான் -ஆச்சார்யர் விரும்பினதை சிஷ்யன் தரனும் ..பிரபாச ஷேத்ரத்தில் போன பிள்ளையை மீது கொடுத்தான் ..கடல் அரசன் இடம் போராடி மீட்டு கொடுத்த சரித்ரம்/கிருஷ்ணனின் திரு மேனியை பார்க்க தேவிகள் குழந்தைகளை /மாதவத்தோன்../கர்பத்திலே காத்த சரித்ரம் அடுத்து -அபிமன்யு -உத்திரை தேவி -பரிஷித் .கரி கட்டையாய் பிறக்க திரு வடிகளால் தீண்டி -பிரம்மா சாரி உண்மையாய் இருந்தால் /சத்யம் உண்மையானால் சொலி உயிர் பிச்சை அளித்தான் /அவன் அவன் உடம்போடு கொண்டு கொடுத்தான்..
125th ஸ்லோஹம்
ஆயோத்யிகான் சபசுகீடத்ருனாம்ச்ச ஐன்தூன்
கிங்கர்மனோ நு பத! கீத்ருசா வேத நாடயான்,
சாயுஜ்ய ல்பய விபவான் நிஜ நித்ய லோகன்
சாந்தா நிகான் அகமையோ வனசைலநாத !..
முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்து , தரிக்க மாட்டாதே போர க்லேசித்த பெருமாள் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று பரம பதம் போலவே அபுநாவ்ருத்தி யாகிற சாந்தாணிகம் லோகம் அளித்து அருளினார் என்பதை இந்த ஸ்லோஹத்தில் அருளி செய்கிறார்..
ஆயோத்யிகான் சபசுகீடத்ருனாம்ச்ச ஐன்தூன் –அயோத்ய வாசிகளை, பசுகளும், கீடங்களும் புற்களும் உட்பட சகல ஜந்துக ளையும்..
சாயுஜ்ய லபய விபவான் நிஜ நித்ய லோகன்
சாந்தாநிகான் அகமையோ–
சாயுஜ்யம் என்னும் மோஷத்திலே அடைய கூடிய செல்வம் மல்கிய ஸ்ரீ வைகுண்ட துல்ய பாகவத அனுபவ அனுகூலங்கலான சாந்தாநிகம் என்னும் லோக விசேஷங்களை ப்ராபிக்க செய்து அருளிற்றே இது..
கிங்கர்மனோ நு கீத்ருசா வேத நாடயான்,–அந்த ஜந்துக்களை என்ன கர்ம யோகம் உடையன வாகவும் எவ் விதமான ஜஜான யோகம் உடையனவாகவும் திரு உள்ளம் பற்றியோ ? ஒன்றிலும் அன்வயம் இன்றிக்கே..
அதிகாரம் இருந்தால் தனா நல்லது பண்ணுவாய் / நிர்ஹெதுக கிருபை பண்ணுபவன்-ச்வாதந்த்ரன் /ஜடாயு /கஜேந்திரன் /முதலை வாயில் காலை கொடுக்காமல் தவம் பண்ணி காலம் போக்கினோமே -ரிஷிகள் /குப்தார் காட்-சரா சரங்களை வைகுந்தம் ஏற்றிய இடம் சரயு நதி கரையில் /கார்ய வைகுண்டம் -சாத்தானிக லோகம் கூட்டு கொண்டு போனான் பசு புல் பூச்சி களையும் ஜந்துக்களையும் /சாயுஜ்ய லப்ய கொடுத்தான் /கிம்கர்மன: ?வேதனம் -ஜஜான யோகம் உண்டா ? ஆகையால்-இத் உடன் ச்லோஹம் சொல்லி விட்டார் அடுத்து ஒன்றும் சொல்ல வேண்டாம் சூடு சுரணை அதிகம்/நிர்பந்தித்து பெற முடியாது / குளம் வெட்டி மழை பொழிய சொல்ல முடியாது /வனத்திடை ஏரி போல /சரணம் சொல்லி விட்டு காத்து இருக்கணும் / மனது அடைத்து வைப்பதாம் மாலை /வினைய ஆஞ்சநேயர் ஒதுங்கி நின்றார் –சொல்லின் செல்வர் /உன் தயையே வேணும்
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..
Related
This entry was posted on November 2, 2010 at 5:41 pm and is filed under ஸ்தவம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply