. 107th .ஸ்லோஹம
ஹே சுந்தரைகதர ஜன்மனி கிருஷ்ண பாவே
த்வே மாதரவ் ச பிதரவ் ச குலே அபி த்வே
எகஷணா தனுக்ருஹீதவத; பலம் தே
நீலா குலேன சத்ருசீ கில ருக்மிணீ ச
இது முதல் பத்து ச்லோஹங்களால் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவம்..
அழகருக்கும் கண்ணனுக்கும் உள்ள அபேதத்தை திடப் படுத்துகிறார் மாதா பிதாக்கள் இருவர் குலங்கள் இரண்டு -தகுதியாக மனைவியர் இருவரை பரி கிரஹிக்கைக்கு போலும் என்று அருளி செய்கிறார் இதில்.
கதர ஜன்மனி கிருஷ்ண பாவே –கண்ணனாக தோன்றின ஓர் அவதாரம் தன்னிலே
த்வே மாதரவ் ச பிதரவ் ச குலே அபிச –தாய்மார் இருவரையும் தந்தையர் இருவரையும் குலங்கள் இரண்டையும் –தேவகி யசோதை/வசுதேவர் நந்த கோபர்கள் யது குல கோபால குலங்கள் ஆக எல்லாம் இரண்டாக..
எகஷணா தனுக்ருஹீ தவத; தே பலம் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் -என்னும் படி ச்வல்ப்ப காலம் தன்னிலேயே பரிக்ரஹித்து அருளின தேவரீருக்கு
உத்தேச்யம் யாது என்னில் –அதனை உள்ளபடி அறிய பெற்றோம் கேளீர் என்கிறார்
குலேன சத்ருசீ நீலாச ருக்மிணீ ச கில–கோபால குலத்திற்கு தகுதியாக நப்பின்னை பிராட்டியையும் ஷத்ரிய குலத்திற்கு தகுதியாக ருக்மிணி பிராட்டியையும் பெறுதர்க்கே யாம் இத்தனை..
ஆண்டாளும் பெரி ஆழ்வாரும் நம் ஆழ்வாரும் கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் /ஏறு திரு உடையான் /நித்ய திரு ஆராதனம் பண்ணுகிறோம் /ராமானுஜரால் கைங்கர்யம் பண்ணி அமுது செய்த பெருமாள்..யசோதை தூக்கி தூக்கி பருத்த திரு கன்ன நதுப்புகள் கொண்ட அழகர்..ஒரு பிறவியில் இரு பிறவி ஆனவர் இருவர் ஷத்ரியன் வைஸ்யன்/திரு மழிசை ஆழ்வாரும் பார்கவர் பிராமண குலம் பிரம்பு அறுத்து ஜீவிக்கும் திருவாளன் ..நப்பினை ருக்மிணி தேவியரை பற்றத்தான் ..அடல் ஆயர் தம் கொம்பினுக்கே..
அந் தூபம் தரா நிற்கவே ஓர் மாயையினால்/ ஈட்டிய வெண்ணெய்- தொடு உண்ண போந்து பிரதான காரணம் அவதாரத்துக்கு இது..ஆயனாகி ஆயன் மங்கை வேய தோள் விரும்பினாய் -திரு சந்த விருத்தம்-கும்பன் பெண் நப்பின்னை -குல ஆயர் கொழுந்து -ஆயர் குலத்திலே அமைந்த திவ்ய மகிஷி-/நிறைய பாசுரங்கள் நப்பின்னை பிராட்டிக்கு தான் / புருஷ காரமாக ஆண்டாள் இவளை பற்றுகிறாள்-18 19 20 பாசுரங்களில் / இடையனுக்கு மணம் புரிய விரும்பினான் கும்பன்/ருக்மிணி பிராட்டி – பெரியாழ்வார் இரண்டு இடங்களிலும் ,திரு வாய் மொழியில் ஒரு இடத்திலும் ருக்மிணி பிரஸ்தாபம் உண்டு–பீஷ்மகன் பெண் /ராமனுக்கு எதிலும் ஓன்று /சொல்லும் இரண்டு இவனுக்கு ஏலா பொய் சொல்வான்/நவமி அரண்மனை வெளிச்சம் /அஷ்டமி சிறை இரவில் அவதாரம்/நீளா தேவி அம்சம் நப்பின்னை /ருக்மிணி ஸ்ரீ தேவி அம்சம் /த்வாரகையில் எட்டு மகிஷிகளுக்கு தனி சன்னதிகள்/விதர்ப தேசம் -ருக்மிணி /ருக்மி மூத்த அண்ணன் சிசுபாலன் என்று ஏற்பாடு பண்ண /ராஷச விவாகம் ஆனாலும் கண்ணன் கூடத்தான் -சொல்லி அனுப்பினாள்/குல தேவி பூஜைக்கு போவதையும் சொல்லி /அங்கு வா / கண்ணாலம் கோடித்து கன்னி தன்னை கை பிடிக்க .. திண்ணர்ந்து இருந்த சிசிபாலன் அண்ணாந்து இருக்கவே தேசு அழிந்து ..-முன் பண்ணியது எல்லாம் சிசு பாலன் பண்ண கை பிடித்தல் கண்ணன் தானே ..பேணும் வூர் பேணும் அரங்கமே/
பிட்டூரில் ஹனுமான் -லவ குச கட்டி போட்ட இடம்/ ஜாம்பவான் -அது போல் கண்ணனிடம் அடிக்க முடியாமல் கண்ணன்..ஜாம்பவதி தேவி கல்யாணம்-திரு தங்களில் இன்றும் சேவை /சத்யா பாமா திரு கல்யாணம் /-சமந்தக மணி / சூர்யா தேவன் பிள்ளை காளிந்தி/யம தர்ம ராஜன் கூட பிறந்தவள் யமுனா அவள் தான் காளிந்தி /யமுனையில் குளித்து கருப்பு..சிசுபாலனும் அர்ஜுனனும்
அத்தை பிள்ளைகள் அத்தை பெண் மித்ரா விந்தா /சத்யா அடுத்து நக்னசித் ராஜாவின் பிள்ளை பாகவதத்தில் உள்ள கதை ஏழு காளைகளை முறித்த கதை ஹரி வம்சத்தில் உண்டு/ ஸ்ருத கீர்த்தி -பத்ரா என்கிற பெண்/-/லக்ஷ்மணா பெண் அடுத்து ..நப பின்னை–நல +பின்னை /முன்னை –
மூதேவி முன் தோன்றினாள் பிராட்டிக்கு முன்
/சேட்டை ஜேஷ்ட்டா -தன மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கிறீரே/பின்னை =ஸ்ரீ தேவி/நல சேர்த்து அவளை விட நன்மை ஏற்ற /ருக்மிணி-பெருமை /நப பின்னை -எளிமை.கண்ணனுக்கு தக்க பின்னை -எளிமை உடன்– நப பின்னை/.கோவை வாயாள் பொருட்டு – பிராட்டி உள்ள அந்த புரத்தில் கோலம் போட/எருதுகள் பட்டு-ஏற்றின் கொம்பால் கீறி கோலம் /சாமர்த்தியமாக பண்ணினான் -சித்தரஞ்ச லலிதா க்ருஹம்-பட்டர்/மாட்டு பொங்கல் அன்று அடக்கி மணம் புரிந்தான்..pஎன் திரு மகள் சேர் மார்பனே /நில மகள் கேள்வனே /ஏழு எருதும் தழுவிய ஆய மகள் அன்பனே /ஒரு கொம்புக்காக ஏழு கொம்பில் குதித்தான் /பிறந்த வளர்ந்த குலத்துக்கு ஏற்ற..
108th ..ஸ்லோஹம்..
த்வம் ஹி சுந்தர யதா ச்தனந்தய;
பூத நாசத நமதாஸ் ததா நுகிம் ,
ஜீர்ணமேவ ஜடரே பயோவிஷம்
துர்ஜரம் வத ததாத்மனா சஹ..
யசோதா ஸ்தனன்தயன் மட்டும் இன்றி பூதனா ஸ்தனன்தயன்..
விஷயத்தையும் அமுதமாக உண்டு அவளை முடித்து அருளினான்..
பிறரால் உண்டு அறுக்க முடியாத விஷம் அவளது ஆவியோடு கூடவே தேவரீர் உடைய திரு வயிற்றில் ஜீரணமாகி ஒழிந்ததோ ? இதை தேவரீர் தாமே அருளி செய்ய வேணும்..அந்த விஷம் உமக்கு ஜீரணம் ஆனா அளவே அன்றிக்கே அவள் உயரை தானே முடித்து நின்றதே –இது என் கொல்! –சைசவத்திலும் பரத்வம் குறைய நில்லாத அவன் பெருமை பேசப் பட்டது..
பாம்பு பால்-அமிர்தம் சாப்பிட்டு விஷம் கொடுக்கும்/ இவனோ விஷம் சாப்பிட்டு அமிர்தம் -பரம பதம் கொடுத்தான் ..பொற் கால் இட்டாள் பூதனை/ முதலில் வந்தவள் /தாய் உருவில் வந்த வஞ்சனை பேச்சி /சரித்ரம் சொன்ன அனைவருக்கும் மோட்ஷம் /
நீல கண்டனுக்கு கழுத்துடன் நின்றது அன்று/ தவழ்ந்து தளர் நடை இட்டு சென்று -காட்டி கொடுத்தான் இருந்த இடத்தை -பேய் முலை வாய் வைத்து பித்தரே என பிறர் ஏச நின்றாய் /தனக்கே என்று இருப்பதை ஆனந்த மாக கொள்வான்/பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த -நாடு மத்யம் போல இரண்டு சப்தம் இல்லை -பிராணன் விடுமாறு /பெரு மா வஞ்ச பேய்- விட்டில் பூச்சி ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கில் விழுந்து /அவித்யை தான் பூதனை/ அகங்காரம் மம காரம் தொலைத்தான் இரண்டு முலைகள் / மிகு ஜ்ஜானம் -இளம் குழவி /பேய்ச்சி முலை யூடு உயிர் உண்டான் /12 மைல் நீல சரீரம் நறு மனம் வீசித்தாம் கண்ணன் ஸ்பரிசத்தால் பிணம் மனகிறது ..பசு மாட்டின் வாலை சுற்றி கொழு மோர் காய்ச்சி ரட்சிக்க எல்லாரையும் வேண்டி கொள்கிறாள் யசோதை/
பேய் முலை நஞ்சுண்டான் / வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்தான் சேர்த்து அருளுகிறாள் ஆண்டாள்
109th ..ஸ்லோஹம்..
ஆஸ்ரிதேஷு சுலபோ பவன் பவான்
மர்த்யதாம் எதி ஜகாம சுந்தர
அஸ்து நாம ததுலூகலே கியத்
தாம பத்த இதி கிம் ததாஸ்ருத
சவ்லப்ய பரம காஷ்டையில் ஈடு பட்டு உருகி பேசுகிறார்..
அழகரே !கட்கிலியான உருவத்தை கண்ணுக்கு இலக்காகாம் படி ஆக்கி /
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து -என்றும்
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா வார்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் -என்றும் –
எழில் கொல் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எல்கு நிலையம் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொல் சென்சிருவாய் நெளிப்பதுவும் -என்றும்
சொல்லுகிற படியே கண்ணி நுண் சிறு தாம்பினால் உரலோடு கட்டு உண்டு ஏங்கி அழுது கிடந்தது எதற்காக ? இக் குணத்தை எந்த வகுப்பில் சேர்ப்பது ? என்கிறார் ..
..மனுஷ்ய யோனியில் பிறந்த காலத்து -மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஆழ்வார் ஆறு மாசம் மோஹிப்பதற்காகவே நீ உரலிலே கட்டுண்டு அழுது நின்றது
..நீயே கட்டுண்டவன் ஆக செய்து கொண்டாய்-தாம பத்த இதி அறுத்த -என்கிறார்
பேய் முலை நஞ்சுண்டான் / வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்தான் சேர்த்து அருளுகிறாள் ஆண்டாள் எத்திறம் -மோஹித்தார் ஆழ்வார்–துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி / நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா /தத் அஸ்து -அது கிடக்கட்டும் ..பத்த இதி =கட்டுண்ண பண்ணி / பின்பு -அழுகை வேறயா ?நடிப்பதிலும் நிஜமாகவே நடிகிறாயே/கட்டு படித்தி தான் பழக்கம்/ இயல்பில் மாறி -சர்வேஸ்வரன் மாத்தி கொள்கிறான் /சம்சார கட்டை அவிழ்க்க அவனை நோக்க அவனோ இந்த கட்டை அவிழ்க்க /குருவி கட்டின கூட்டையும் பிரிக்க முடியாது நம்மாலே -பிள்ளை நறையூர் அரையர் /பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ ?/பத்துடை அடியவர்க்கு.. உரலினோடு ஏங்கி இருந்த எளிவே/ விஜித் ஆத்மா விதே ஆத்மா -அடங்குபவன் –பொத்தை உரலை கவிழ்த்து அடைக்கலம் கொடுததையையும் சேர்த்து கட்ட /உத்தர பந்தம் பட்டம் கட்டி/அழுகையே வித்யாசம் கருப்பு மேல் பருத்து நாடு சிறுத்து கீழ் பருத்து /செவ்வாயும் காட்டி அழுகையும் அஞ்சு நோக்கும் /பச்சை பசும் போய் பேசுவான் /உரவிடை-உதர இடை -நாடு சுருக்கல் இடை குறைப்பு /மார்பில் சேர்த்து மாட்டு பெண்ணை சேர்த்து கட்டினாள்/
கேட்டு ஆழ்வாரை அழ வைத்தீரே -யசோதையை அழ விடாமல் / வசம் உள்ள இடத்தில-பக்தர்கள் – தானே செல்லு படி ஆகும்/எதோ உபாசனம் தத் பலம் தர்க்க சாஸ்திரம்/ இது வெட்க பட்டு போனதாம்/ உரலோடு கட்டு பட்டவனை த்யாநித்தால் சம்சார கட்டு விலக நியாய சாஸ்திரம் காட்டில் ஒளிந்து போனதாம்.-தேசிகன்../அழுகையும் அஞ்சி நிற்கும் அந் நோக்கும் தொழுத கையும் –தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் /தொழுதது ஆய்சிகள் அனைவரையும் தரிசிக்க வாய்ப்பு கொடுத்ததால் /செய்தது சரி கண்ணன்/ ராமன் சரியானதை செய்வான்/வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திரு கோலம் -நஞ்சீயர் திரு ஆராதனபெருமாள் — சதங்கை அழகியார் -நாக பழம் கொண்டா கேட்டார் சொப்பனத்தில் பக்கத்து வீட்டு மனிசர் இடம் /
110th ..ஸ்லோஹம்..
சுந்தரோருபுஜ ! நந்த நந்தாஸ் த்வம்
பவன் பரமர விப்ரமாலக;மந்திரேஷு
நவநீத தல்லஜம் வல்லவீதிய முத்த
வ்யசூசுர:
நவநீத சவ்ர்யம் நினைவுக்கு வர களவு கண்டது வெண்ணெயோ ஆய்ச்சியர் உள்ளத்தையோ என்று வினவுகிறார்
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று என்றும்
அண்டத்து அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் என்றும் சொல்லுகிற படியே தேவரீர் வண்டு ஒத்த திரு குழல் கற்றையை
உடைய நந்தன் மதலையாய் கொண்டு..
மந்திரேஷு நவநீத தல்லஜம் வ்யசூசுர ? முத்தவல்லவீதியம்–ஆயர் மனைகளில் புக்கு வெண்ணெய் யைத்தான் களவு கண்டீரா? அல்லது ஆய்ச்சிகளின் உள்ளத்தை தான் கொள்ளை கொண்டீரா? –இரண்டையும் தான் கொள்ளை
கொண்டேன் எனபது எம்பெருமான் விடை ..நவநீத சொரனாய் இருந்த நிலை தன்னாலே கோபி மநோஹரநாயும் இருந்த படி.
.நவநீத தல்லஜம்-ஸ்ரேஷ்ட வாக்கியம் ..வெண்ணெய்க்கு சிறப்பாவது கண்ண பிரான் கை கொள்ள பெருகை..
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நிஜ கள்வர் நாம் தான்/ அழகிய குழல் உடன் வருகிறார் ..திருட வருபவர் இப்படி மை வண்ண நறும் குஞ்சி/ கோபிகள் மனசை திருட /பரம போகய உருவுடன் /அழகை காட்டி ஈர்க்க சாஸ்த்ரன்களால் திருத்த முடியாது என்று /மனசை மயக்கி குல்லா வந்தா /கலி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூம் குழல்கள்/ இயற்கையில் மணம் உண்டு குழலுக்கு /கந்தம் கமழும் குழலி /குண்டலங் காதுக்காகா தலைக்கா தோளுக்கா பக்தன் உள்ளத்துக்கு என்று புரிந்து கொண்டேன் /தல்லஜம் =உயர்ந்த /விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் உடன் கோபி பிடித்தாள்/ நீ யார் -பாலா ராமன் தம்பி /எதற்கு வந்தாய் /ஏன் வீடு என்று வந்தேன் /வெண்ணெய் பாத்ரிரத்தில் கை வைத்தது எதற்கு /கன்று குட்டி இருக்கா என்று /இருந்ததா /சொல்லி விட்டு போக காத்து இருந்தேன்/ இருக்கா பார்த்த கையில் வெண்ணெய்/ காற்றில் கடியனாகி ஓடி அகம் புக்கு /மனசதி திருடினான் இப்படி/ கை பட்ட உயர்கு வெண்ணெய்க்கு -திரு கோஷ்டியூர் -நம்பியை அழைக்காத நர நாசன் சொல்லாதவர் குடித்த தண்ணீரும் பாபம் பண்ணித்தாம்-அசித் கூட கர்மம் சம்பாதிக்கும் / சீரார் தயிர் கடந்து வெண்ணெய் திரண்டு-தயிருக்கு சீர் -கலியன் /இடை நோவ -கடைய /இளம் பெண்கள் கண்ணனே ரட்ஷிப்பான் என்ற எண்ணம் /
வெறும் பாத்ரம் /எனக்கு ஆரா அமுதாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் என்னை முற்றம் பருகினாய்/ஆத்மா =வெண்ணெய்/
துணி திரி காதில் யசோதை/மாற்றி கொண்டு போனதால் தாமசம் /எல்லாம் நப பின்னைக்கு /கோபம் மாற்ற /அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -பரகால நாயகி..
111th ..ஸ்லோஹம்..
காலியச்ய பணதாம் சிரஸ்து மே
சத்கதம்ப சிகரத்வமேவ வா
வஷ்டி ஜுஷ்ட வனசைல! சுந்தர !
தவத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யயோ !
நம்பி மூத்த பிரானோடு கூடவே பிருந்தாவனத்திற்கு எழுந்து அருளுவது வழக்கம் ..ஒரு நாள்-
ஏகதா து விநா ராமம் க்ருஷ்னோ பிருந்தாவனம் யயவ்–என்ற படி அவனை ஒழிய போக தொடங்க ,காளியன் விஷ அக்னி கக்குவதை சொல்ல ,மடுவில் உள்ள கடம்ப மரத்தின் மேல் ஏறி நின்று நர்த்தனம் செய்து வலி அடக்கினான் ..
காலியச்ய பணதாம் சிரஸ்து மே சத்கதம்ப சிகரத்வமேவ வா
–காளிய நாகத்தின் மதகமாகவோ கடம்ப மரத்தின் உச்சியாகவோ ஆக பெற வேணும் என்று தம் திரு முடி விரும்புவதாக அருளுகிறார்..
யயோ தவத் பதாப்ஜயுக மர்ப்பிதம் –தேவரீர் உடைய திரு அடி தாமரை இணையை வைத்து அருள பெற்றவை அன்றோ அவை..தேவரீர் உடைய திரு அடி தாமரை இணையை வைத்து அருள பெற்றவை அன்றோ அவை அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா வுன் கோலப் பாதம் என்றும் கோல மாம் ஏன் சென்னிக்கு வுன் கமலம் அன்ன குறை கழலே என்றும் கதா புன –தவச் சரணாம் புஜத்வயம் மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி என்றும் பிரார்த்தித்து பெற வண்டிய பேரு அனாயாசமாக அவற்றுக்கு கிடைத்தது..
விஷ்டி -விரும்புகிறது ..
உத்தவர் சுகர் /கதம்ப குறுந்த மரமாக ஆசை பட்டார்கள்/ படியாக பவள வாய் காண -..எது வாக வாது ஜனிக்க ஆசை பட்டார் குலேசேகர்/அடிமை திறம் அல்லாத பிறவி வேண்டாம் ..குருகு/செண்பக மரம் /வழியாக /மீன் /பொன் வட்டில் பிடிக்கும் படிகம் /அவனாகவே பிறந்து அவனை சேவிக்கணும்/கலிங்கன் தலை பண்ணின பாக்கியம்/ கதம்ப மரத்தின் உச்சியில் திரு அடி வைத்து குதிதானாம்/சவ்பரி ரிஷி-கருடன் சாபம் /மாடு கரை வர மாட்டான் /பூத நீள் கதம்பம் -எல்லாம் பட்டு போக இது மட்டும் /அமிர்தம் கொண்டு -வினதா பிள்ளை உட்கார்ந்து சொட்டு பட்டு பச்சை பசேல் /திருவடி பட்டு பூத்தது -அந்த சொட்டு வேணுமா /வித வித நாட்டியங்கள் ஆடினானாம் அதன் தலை மேல் /ராசா கிரீடை போது மறைத்தான் கோபிகள் அநுகாரம் பண்ணும் போதும் துஷ்ட காளிங்கன் வேஷம் /அந்த பக்தை திரு வடி பட்டால் போதும்..கோபிகள் திரு அடி பட்ட மண் துகள்களில் ஒன்றாக இருந்தால் போதும்..தடம் தாமரை பொய்கை புக்கான் போர் களமாக நிருத்தம் செய்தான்/ திரு ஆய் பாடியே போர் களமாக -கோபிகள் மயங்கி விழும் படி ஆனதாம் ../அடிச்சியோம் என் தலை மிசை நீ அணியாய் /திரு பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் /கதா புன மதிய மூர்தனம் அலங்கரிஷ்யதே / ஸ்ரீ சடாரி சாதிக்கும் போது -ஸ்ரீ ரெங்கத்தில்-அரையர் -பருபதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பத்தி போல் ..கேட்காமல் நட்டான்/ அது போல் நீயும் திரு பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்/ நின் செம் மா பாத பரப்பு தலை சேர்த்து-ஆழ்வார் /பாதுகா பட்டாபிஷேகம் நின் இளையவருக்கு அளித்த பரிசு கேட்டான் விபீஷணன் /வூமை கேட்டு கொள்ள தம் திரு அடி தாமரைகளை வைக்க ஆழ்வான் அந்த வூமையாக பிறக்காமல் போனோமே -மயங்கி விழுந்தார்..
112 th ..ஸ்லோஹம்..
கூஹித ச்வமஹிமாபி சுந்தர !
தவம் வரசே கிமிதி சக்ரமாக்ரமீ:
சப்தராத்ரமததாச்ச கிம் கிரிம்
ப்ருச்சதச்ச சுஹ்ருத : கிமக்ருத :
மானுஷ்யகம் கொண்டாட வந்த இடத்திலே பரத்வமே பொலியும் படியான அதி மானுஷ க்ருத்யங்களையும் வூடு வெளி இட்டது எதற்கு என்று வினவுகிறார்..
சுந்தர ! தவம் கூஹிதச்வ மஹிமாபி வரசே கிமிதி சக்ர மாக்ரமீ–
அழகரே !தேவரீர் -ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒழித்து வளர்ந்தது ச்வகீய சக்தி விசேஷங்களை எல்லாம் மறைத்து இறே அப்படி இருந்தும் -கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரர்க்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் -என்றும் -ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கென்று ஆயர் விளைவு எடுப்ப பாசன நல்லன பாண்டிகளால் புகப் பெய்த வதனை எல்லாம் போய் இருந்து அங்கு ஒரு பூத வடிவு கொண்டு உன் மகன் இன்று நங்காய் ! மாயன் அதனை எல்லாம் முற்றும் வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் என்றும் சொல்லுகிறபடியே இந்திர பூஜையை தடை செய்து அவனை யுத்தோன் முகனாக ஆகி கொண்டது என்னோ ?
சப்தராத்ர மததாச்ச கிம் கிரிம்–
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மதுசூதனன் எடுத்து மரித்த மழை -என்றும் -செப்பாது உடைய திருமால் அவன் தன
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மழை -என்றும் சொல்லுகிற படியே
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு
திரு உகிர் நொந்தும் இல என்னும் படியாக ஏழு நாள் வாடாதே வதந்காதே மலையை தாங்கி நின்றது என்னோ ?
ப்ருச்சதச்ச சுஹ்ருத : கிமக்ருத :–மலை எடுத்து நின்ற அதி மாநுஷ சேஷ்ட்டி தம் கண்டு ஆச்சரியப் பட்ட ஆயர்கள் -நீ தேவனா? தானவனா? யஷனா? கந்தர்வனா ?-என்று கேட்க்க -சீற்றம் கொண்டாயே ஏன் ?என்று கேட்கிறார்
மூன்று கேள்விகள் /
தேவேந்திர சமாராதனையை தடுத்தது ஏன் ? முதல் கேள்வி..
பராத் பரனான தான் வளருகிற வூரிலே தேவதாந்த்ரத்திர்க்கு ஆராதனை யாவது என் என்று இருந்த படியாலே தடுத்தாக இதற்க்கு விடை..
இந்திரனை தலை அறிந்து பொகட வேண்டி இருக்க மலையை குடையாக எடுத்து நின்றது ஏன் ? அடுத்த கேள்வி..
இந்திரன் உணவை கொண்ட நாம் உய்ரையும் கொள்ள வேணுமா ? மலையே ரஷகம் என்ற வார்த்தையை மெய்யாக்கி அவன் கை சலித்து தானே ஓய்ந்து போய் நிற்கட்டும் என்று ஆன்ருசம்சயம் கொண்டாடி நின்றது தான் சமாதானம்
சீற்றம் கொண்டது ஏன் ?
பரத்வதில் வெறுப்பு கொண்டு மனுஷ்ய சஜாதீயனாய் அதிலும் இடையனை ஆசையோடு தான் வந்து பிறந்து இருக்க–தேவத்வமும் நிந்தையானவனுக்கு–ஆச்சர்ய ஹ்ருதயத்தில் அருளி செய்த படி வேறாக சந்கித்து கேட்டது நிந்தா ரூபமாக தோற்றுகையாலே சீற்றம் உண்டாயிற்று..
ஆக மூன்று சமாதானங்களினால் விலஷணமான குண அனுபவம் செய்து அருளினார்..
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி -அபசாரம் பட்டாலும் தண்டிக்காத குணம் /பெருமை பீரிட்டு வரும் /அலோகிக ரூபம் மறைத்து கொள்ள அவதரித்தாலும் /ஏழு வயசில் நடந்த சேஷ்டிதம்/கற்புடைய மட கன்னி காவல் பூண்டவள் -திரு கோவலூரில்/ பதினெட்டாம் கருப்பும் காவல் தெய்வம் -மலையாள தந்த்ரிகர்கள் பெருமாளின் சக்தி குறைக்க பதினெட்டு பெயர் உடன் வர தன அழகை காட்டி ,அவர்களை மாற்றி வேற யாராலும் துன்பம் வராமல் காக்கிறார்கள்../தேவ தாந்த்ரர்கள் பிரசாதம் பக்தர்களுக்கு கூடாது என்று தானே உண்டான் ..அவனுக்கு எல்லாம் சேரும்/ துரோணா சல மலையின் பிள்ளை கோவர்த்தனம்.. முனிவர் இதை தவம் இருக்க –போகும் பொழுது அளவை சுருக்கி கீழே வைக்க கூடாது– பிருந்தாவனம் தாண்டும் பொழுது அனுபவத்தால் பெருகி /அவன் கையில் ஏற ஆசை .. அட்டு குவி சோறும் தயிர் வாவியும் நெய்-சோற்று மலை /வரை எடுத்து மழை காத்ததும்/ தீ மழை காத்து குன்றம் எடுத்தானே /கோவிந்த பட்டாபிஷேகம் இதற்க்கு ஜலம் கொட்டி /த்வாரகா தீசன் /கை ஒஞ்சி மழையை நிறுத்தினான்/ மது சூதனன் எடுத்து மடுத்த மலை /கப்பாக மடித்து /தாமரை மலரே -மலையை பிடித்தது போல கொடுத்து கவித்த மழை /விரல் கோலமும் அழிந்தில வாடிற்றில திரு உகிர் நொந்தும் இல /கல் எடுத்து கல் மாரி காத்தாய் /குன்றம் எடுத்த குளிர் மழை காத்தவன் /குன்று குடையாய் எடுத்தான்..வைகுண்ட விரக்தாய -வந்தவனை /அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே..
113rd ..ஸ்லோஹம்–
ஹே நந்த நந்தன ! சுசுந்தர !சுந்தராஹ்வா !
ப்ருந்தாவனே விஹரஅத்தாஸ் தவ வல்லவீபி ,
வேணு த்வனி சரவண தஸ் தருபிஸ் ததா வை
சக்ராவபிர் ஜதுவிலாய மஹோ விலில்யே..
வேணு கானத்திலே மரங்களும் மலைகளும் கூட உருகின படியை பேசி அநுபவிகிறார்..
ஹே நந்த நந்தன ! சுசுந்தர !சுந்தராஹ்வா !–நந்த கோப சுநுவாக திரு அவதரித்த அழகரே !அழகர் என்று திரு நாமம் படைத்தவரே !
ப்ருந்தாவனே விஹரஅத்தாஸ் தவ வல்லவீபி ,–முன்பு பிருந்தா வனத்தில் ஆயர் மங்கைகளோடு லீலா ரசம் அனுபவியா நின்ற தேவரீர் உடைய..
வேணு த்வனி சரவண தஸ்–குழல் வூதும் இசையை கேட்டதனாலே..
சக்ராவபிர் ஜதுவிலாய மஹோ விலில்யே..—மலைகளும் மரங்களும் தீயோடுடன் சேர் மெழுகு உருகுமா போல உருகின படி என்னே !
நாவலம் பெரிய தீவினில் வாழும் என்கிற திரு மொழியில்-மருண்டு மான் கணங்கள் மெய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர ,இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே -என்றும் -மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே -என்றும் அருளி செய்த பாசுரங்கள் இங்கே அனுசந்தேயங்கள் ..சைலோக்னிச்ச ஜலாம்பபூவ -பட்டர்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்..
/ஆச்சார்யர் மூலம் உபதேசம் போல புல்லான் குழல் ஓசை/ பீஷ்மர் உபதேசித்தது போல ராமானுஜர் போல /ராமனும் க்ரிஷ்ணனுமே குருக்களை தேடி கற்று கொண்டால் போல /தன திரு அடிகளில் சேர்க்க தான் எல்லாம் /நலம் அந்தமில் நாட்டில் சேர்க்க /உயர் காத்து ஆள் செய்மின் வஞ்ச கள்வன் மா மாயன் ..கலந்தான் வுண்டிட்டாய் இனி வுண்டு ஒழியாய்- அழகர் தான் ஆழ்வாரை உடலோடு கொண்டு போய் காட்டட இருந்தான் நித்யர்களுக்கு /ஆழ்வார் /ஏழு சுர ஸ்தானம் –ஒரே காற்று /ஆத்மா எல்லாம் ஒரே ஆகாரம் –சிங்க உருவில் கர்ஜிக்கிறார் யானை பிளிறுகிறார் மயில் அகவுகிறார் –எடுத்த கொண்ட உடலின் படி தன்மை மாறும்/அதை காட்ட ஏழு துளைகள் ../மலை உருகித்து-அழல் வாய் பட்ட மெழுகு போல இதன் உள்ளே இருந்த அவனால் வந்த மாற்றம் / யமுனை ஓட வில்லை -தண்ணீர் தன்மை மாறித்து ஆகாசம் உரு எடுத்து கொண்டு வந்து கேட்டது நெருப்பு குழு குழு என்றதாம் பூமி பிளந்து உருக ஐந்தும் தன்மை மாரி /பிருந்தா நெருஞ்சி முள் /துளசி 168 மைல் பெரிசு 7 லஷம் பசுக்கள் இருந்ததாம் ./10௦ வருஷம் கண்ணன் பட்ட மகிழ்ச்சி யாரும் பெற்றதில்லை/ கோபிகள் மடியில் படுத்து ஆத்மாவும் ஆத்மாவும் கலந்த இன்பம்/ .பக்தி என்னும் காமம்..கூடி இருந்து குளிர -சரீர இன்பம் இல்லை..மேல் தோன்றி பூ /நடு காதில் பூ/ கீழ் காதில் பூ/ வன மாலை /புஷ்ப தோட்டம் போல வர்ண கலவை உடன் அலங்காரம்..அடுத்து புல்லான் குழல் /திரு அடிகள் யமுனை தொட மரத்தின் மேல் அமர்ந்து நதியில் தாமரை புஷ்பம் பரிசாக வர / மூங்கில் மரம் அகங்காரம் பட /அதரத்தில் ஏறிய பெருமை /சிந்தயந்தி -கேட்டு இன்பம் /நேரில் வரா முடியாமல் துக்கம் /இரண்டாலும் கர்ம தொலைந்து -கட்டு அவிழ்ந்து மோஷம்/மான் கணங்கள் மெய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர எழிதிய சித்திரம் போல் இருக்க /மரங்களும் திசை தோறும் திரும்ப -மது தாரைகள் பாய –ஆனந்த கண்ணீர் போல /கால் பரப்பி இட்டு செவி ஆட்டகில்லா -பசுக்கள் வள்ளல் பெரும் பசு/பாத்திரம் மட்டும் மாற்றினால் போதும் கீதை போல கேட்காமல் அருளியது போல /வுயரம் என்பதால் கால்களை பரப்பி கான அமிர்தம் -செவி ஆட்டாமல் ரசித்தன /குயில் வெட்கி பாட வில்லையாம் /வேதம் மரம்ரிஷிகள் குயில்கள்/
114 th ..ஸ்லோஹம்..
காயம் காயம் வனகிரிபதே தவம் ஹி ப்ருந்தாவநாந்த:
கோபீ சந்கைர் விஹரசி யதா சுந்தர வ்யூடபாஹோ !
ராசாரம் போத்சவ பஹுவிதப்ரேம சீமந்திநீதாம்
செதாஸ் செதாஸ் தவ ச து ததா காம் தசாமன்வபூதாம் ..
மரங்கள் மலைகள் பட்ட பாடு கிடக் கட்டும் /அவன் உடைய ஹ்ருதயமும் ,கோபிகளின் ஹ்ருதயமும் பட்ட பாடு ஆராய்கையில் -இது அவன் திரு உள்ளத்திற்கே தெரியும் அத்தனை என்று தெளிந்து அவன் தன்னையே கேட்டு அருளுகிறார் இதில்..
தவம் ப்ருந்தாவநாந்தகாயம் காயம் யதா கோபீ சந்கைர் விஹரசி –தேவரீர் பிருந்தா வனத்தின் உள்ளே வேணு கானத்தை அடுத்து அடுத்து செய்து கோபிகள் திரளோடு லீலா ரசம் கொண்டாடின காலத்திலேயே ..
ராசாரம் போத்சவ -ராசக் கிரீடை–குரவை கூத்து .
.அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவ: மாதவம் மாதவஞ் சாந்தரே அங்கனா-என்கிற படியே ஒவ் ஓர் ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ் ஒரு கண்ணனாக பல வடிவு எடுத்து ஆடின ஒரு கூத்து ..அப்போது
-இத்தமா கல்பிதே மண்டலே மத்தியக: சஜ்ஜகவ் வேணுனா தேவகி நந்தன; -என்று அந்த ராசக் கிரீடை மண்டலத்தின் நடுவே இருந்து கொண்டு கண்ணன் அற்புதமாக வேணு கானம் செய்வான் ..ஆய்சிகளின் ப்ரேமம் பேச்சுக்கு நிலம் அன்றே . அப்படி வாசமா கோசரமான ப்ரேமம்
இப்படி அழகரை நோக்கி கேள்வி கேட்ட ஆசிரியருக்கு என்ன சமாதானம் கிடைத்து இருக்கும் என்னில் -இப்போது நீரும் நாமும் கலந்து பரிமாறுகையில் நம் இருவர் உள்ளம் என்ன நிலையில் நின்றதோ இந்த நிலை தான் அப்போதும் என்று கொள்ளீர் – குடமாடு கூத்தர் -திரு நாங்கூர் பெருமாள் /ராச மண்டலங்கள் இன்றும் உண்டு / பூ மா தேவி உன் கூத்தால் சிலிர்த்து புல் முளைத்தது /காயம் காயம் -இடை வெளி விடாமல் /ஆனந்தம் அதிகம் என்று குறைக்க கண்ணன் காணாமல் போய்/அதனால் விரக தாபத்தால் -தேடி போக /ஒருத்தி கால் சுவடி பார்த்து போக /ஒரு பகல் ஆயிரம் வூழியாலோ / இரண்டு கால் சுவடு மாறி/ அவளுக்கு அகங்காரம் தோள் மேல் தூக்கி i வா என்று சொல்லி இருப்பாள் / புஷ்பம் பறிக்க சொல்லி இருப்பாள் /வைத்து விட சொல்லி இருப்பாள் குனிந்தால் நிமிர்ந்து பார்த்தல் கண்ணனை காணும் / தனியாக விட்டு விட்டு போனான் /சுரம் போட்டு அழுதார்கள் /இருவர் உள்ளமும் இருந்த
நிலை ஆழ்வானின் நிலை போல அழகரை சேவிககும் பொழுது
/ விஷ்ணு ரூபம் மணவாளன் /புருஷோத்தமன் /
115th ..ஸ்லோஹம்..
இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம்
இமயம் அத்புதம் அதிப்ரியங்கரம்
தேன கம்சமுக கீடசாசனம்
சுந்தரால்பகமபி பிரசச்யதே-..
தேனுகன் பிலம்பன் காளியன் எனும் தீப்பப் பூடுகள் அடங்க வுளக்கினதும் -என்றும் வார்கடா வருவியானை மா மலையின் மறுப்பினை குவடு இறுத்து உருட்டி வூர்கொள் திண பாகன் உயர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று கஞ்சனை தகர்த்ததும் முதலான துஷ்க்றுத் விநாசன சரிதைகள் விசேஷ மாக உண்டு..இவை கிரிமி கீட நிரசநப்ராயமே அல்லது விக்கிரம செயலில் சேர்ந்தவை இல்லை..இருந்தும் கம்ச வதம் முதலான கீட நிபர்கனங்களையும் பக்தர்கள் புகழ்ந்து பேச காரணம் என்ன அதி மானுஷ ச்தவத்தில் -யா கம்ச முக்க்யன்ரூப கீட நிபர்ஹநோத்தா சா நிர்ஜித த்ரிஜகஅத்தாஸ் தவ நைவ கீர்த்தி -ச்பஷ்டமாகவே அருளி செய்து இருந்தும் -/செய்கிற செயல் பாராமல் செய்தவன் யாவன் ஒன்றையே பார்த்து சகல சரித்ரங்களையும் சம ரீதியாக புகழ்ந்து பேச கடமை பட்டவர்கள் பக்தர்கள்..
இங்கிதம் நிமிஷிதம் ச தாவகம்–எது வாக்கிலும் தேவரீர் உடையதாக இருக்கும் அத்தனையே/ இங்கிதம் -அபிப்ராய அனுரூபமான சேஷ்ட்டிதம்/கண் இமைத்தல் நிமிஷிதம் /எங்களுக்கு சரித்திர பர்யந்தம் வேண்டா இங்கித நிமிஷிதங்களே போதும்
ரம்யம் அத்புதம் அதிப்ரியங்கரம் -தேவரீர் உடைய எல்லாம் ராமணீயம் அத்புதம் பரம யோக்யமுமாய் இருக்கும்..
கம்சமுக கீடசாசனம் சுந்தரா அல்பகமபி பிரசச்யதே- கம்சன் முதலிய புழுக்களை தண்டித்ததும் கூட சிறு சேவகமே இருக்க செய்தேயும் குலாவ படுகிறது –நம் ஆழ்வார் திரு வாய் மொழியில்-5-10-2- அது இது வுது என்னலாவன வல்ல என்னை வின் செய்கை நைவிக்கும் -என்று அருளிய பாசுரத்தின் விவரணம் இது
கிள்ளி களைந்தானை /போல ராவணனை -வாலி-கார்த்த வீர்ய அர்ஜுனன்/ பரசுராமன்-ராமன் -அங்கதன் சொல்லி காட்டியது / தாவ கம் -நீ செய்தது ஆனால் -எது ஆனாலும் .இதனால் தான் கம்சனை தொடக்கமாக பலரையும் கொன்றாய் ராவணனை கொன்றாய் என்பதை கேட்டதும் இனிமை -இங்கிதம் இமை கொட்டுவது போல /
நமையும் பிராட்டியுடன் சேர்த்து அணைக்கிறான் /அவனை அவனுக்காக பற்றுகிறோம் /போத யந்த பரஸ்பரம் /ரம்யம் அற்புதம் /அல்ப செயல்களும் பெரும் செயல்கள் தான் ..
116th ..ஸ்லோஹம்..
வாராணசீதகன பவ்ண்ட்ரக பவ்மபங்க
கல்பதரு மாஹாரண சங்கர ஜ்ரும்பனாத்யா
அநிச்ச பாரத பல்க்ரதநாதயாஸ் தே
கரிடாஸ் சுசுந்தர புஜ ! ச்வரனாம் ருதானி..
அல்பகமபி-என்றாரே கீழே — அல்பம் இன்றிக்கே அனல்பம் என்று மதிக்க கூடிய சேஷ்டிதங்கள் சிலவற்றை எடுத்து உரைத்து இவை எல்லாம் கர்ணாமிருதமான சரித்ரங்கள் என்கிறார் இதில் ..
வாராணசீதகன பவ்ண்ட்ரக பவ்மபங்க –பவ்ண்டரகன் என்பான் அரசன் வாசுதேவன் பெயர் உடன் இருக்க சங்கு சக்கரம் கிரீடம் செய்வித்து தான் அணிந்து கொண்டு /தூதன் மூலம் கிருஷ்ணன் இடம் அவற்றை அணிய கூடாது இல்லையேல் யுத்தம் செய்ய வருக என்றான் /சீறி சினந்து திரு ஆழியினால் தலை அறுத்து கொன்றான் –கேள்வி பட்ட காசி அரசன் பிசாசை ஏவி விட திரு ஆழி ஆழ்வான் அதை துரத்தி கொண்டு காசி அளவும் போய் அதையும் அதன் உடன் சேர்ந்த கணங்களையும் காசி பட்டணத்தையும் நீறாக்கி மீண்டனன்-பவ்ண்ட்ரக பங்கம்/ வாரணாசீ தஹனம்
–பவ்ம பங்கம்/ கல்பதரு மாஹரண –பவ்மன் என்ற நரகாசுரன்/வராகன்-பூமி ச்பர்சத்தால் அச–சமயத்தில் சேர்ந்து பெறப் பட்ட அசுரன்-நரகன்-ப்ராக்ஜோதீஷ்-பட்டணம் இருந்து கொண்டு வந்த அனைவரையும் நலிய ,வருணன் குடையும்,மந்திர கிரி கிகரமான ரத்ன பர்வதத்தையும் அதிதி குண்டலங்களையும் , ஐராவத யானையையும், அடித்து கொண்டு போக -இந்திரன் முறை இட -கண்ணன் அந்த நகர் ஏறி சகர ஆய்தத்தை பிரயோகித்து ,நரகாசுரனை அறுத்து தள்ளி அழித்து,,16001 கன்னிகைகளையும் ஆட கொண்டு,..தேவ லோகம் சென்று அங்கு உள்ள பாரிஜாதம் புஷ்பம் -மறுத்து போர் செய்த இந்திரனை சகல தேவ சைன்யங்களுடன் சங்க நாதத்தால் பங்க படுத்தி –தருவை த்வாரகைக்கு கொண்டு போக..
சங்கர ஜ்ரும்பணாத்யா-பாணாசுர யுத்தத்திலே ஜ்ரும்பக அஸ்த்ர பிரயோகம் பண்ணி சிவ பெருமானை கொட்டாவி விட்டு கொண்டு கிடக்கும் படி செய்தது முதலான..
அன்யாச்ச பாரத பல கரத நாதய: தே க்ரீடா –மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலை வளைய திண தேர் மேல் முன் நின்று செய்த லீலைகளும் எல்லாம்
.. ச்ரவணாம் ருதானி — தேவரீர் திறத்திலே விச்மயப் பட தக்கவை அல்லவாகிலும் ஒவ் ஒரு சரிதையும் செவிக்கு அமுதமாய் இருப்பவை அன்றோ ..செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும் கவிகளே காலப் பண தேன் உறைப்ப துற்றி புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே அவி வின்றி ஆதரிக்கும் எனது ஆவியே -திரு வாய் மொழி –
ஹஸ்த குலம் /புஸ்தக சாலை பராமரிப்பும் /புர மத நிரச்தனம் /வாதூல குலம் முதலி ஆண்டான் /இருவரும் தண்டும் பவித்ரமும் போல விட்டு பிரியாத சிஷ்யர்கள்..பவ்மகன் -பூமாச்ரன் நரகாசுரன்/அன்யாச்ய -இதை தவிர..பார்த்தனுக்கு தேர் வூர்ந்து பாரத யுத்தம் முடித்தான்..சகாதேவன்-பாண்டவ தூதனாய் போய் இருக்கும் பொழுது பேசினது / குழல் முடித்தால் என் அவிழ்த்தால் என் அந்தத்தில் முடிக்கும் வகை அடியேற்கு தெரியும் ஓ ஆதி மூர்த்தி –தானே தூதனாய் போய் / கீதை உபதேசித்து சண்டை போட சொல்லி /கண்ணன் கிளம்பினதும் காண்டீபமே தூக்க முடியவில்லை /மாயப் போர் தேர் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்தான்–தீர்பாரை பாசுரம் மன்னார் குடிக்கு சமர்பித்தார் மா முனிகள் /கலோச்மி -தான் என்கிறான் ௧௧த் அத்யாயத்தில் /துச்சோதணனை அழல விளித்தானே அச்சோ /வண் பொன்னி பேர் ஆறு போல கண்ண நீர் கொண்டு -சேறு எனக்கு திலகம் -குலசேகரர் /ஆநந்தம் நித்யம் அவன் சரிதம் /பவ்ண்டரீக வாசுதேவனை பங்க படுத்தி காசி பட்டன் தகனம் /கருது இடம் நினைத்து பொருதும் சக்கரத்தன்/பிராக் ஜோதிஷம் பட்டணத்தில் இருந்து நரகாசுரன் பல பறித்து / வருணனின் குடை .-அதிதி தேவி குண்டலங்கள் ..மேரு சிகரம் பேர்த்து /இந்த்ரன் பிரார்த்திக்க /குந்தி தேவி துன்பம் கொடுக்க பிரார்த்திக்க -நல்லது வந்தால் உன்னை மறப்பேன் என்று /முராசுரன் -நரகாசுரனின் முக்ய தளபதி அவனை முடித்தான்-அதனால் முராரி திரு நாமம் அவனுக்கு / சதுர் தசி அன்று முடித்தால் நரக சதுர் தசி /சத்ய பாமை உடன் போக பாரி ஜாத மரம் கேட்க்க /தருண ஹரண-மரத்தை அபகரதிதது /பாணாசுர யுத்தத்தில் -ராவணனும் அசோக வனத்தில் சேர்த்து அடைத்து வைத்து இருந்திருந்தால் அங்கேயே சுகமாக சேர்ந்து இருந்து இருப்பார்கள் -தெரியாமல் முடிந்தே போனான் /நேர் செறிந்தான் கொடி..கார்திகையானும்../தாக்கூர் த்வாரகை -காலயவன்/குகையில் முசுகுந்தன் -தூங்கும் வரம் பெற்று தூங்க குகையில் திறந்து பார்த்ததும் சாம்பல் ஆவான் –கலையவன் இடற பஸ்மம் ஆனான் /சிசுபாலன் முடித்த சரித்ரம் /அமாவாசை மாற்றி -சகாதேவன் துரியோதனன் மாற்றி கொள்ள வில்லை சதிர் தசி அன்று தர்பணம் பண்ண சூர்ய சந்திரர் சேர்ந்து அருகில் வர -அமா வாசை இன்று தான் /
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Related
This entry was posted on November 1, 2010 at 9:19 pm and is filed under ஸ்தவம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply