27th ஸ்லோஹம்..
சதா சமஸ்தம் சக தீஷதே ஹி ய;
பிரதட்ஷ்ய த்ருஷ்ட்யா யுகபத்வா ஸ்வஸ்த:
ஸ ஈத்ருச க்ஜானாநிதிர் நிதிஸ்து ந :
ஸிம்ஹாத்ரி குஞ்ச்ஜெஷூ சகாஸ்தி ஸுந்தர ;
ஷாட் குணத்தில் தலையான கஜான குணத்தை அனுபவிகிறார் ..ஒரு கிலேசம் இன்றி ஏக காலத்தில் பிரத் யட்ஷ த்ருஷ்டியாலே சகல பிரபஞ்சங்களையும் என்றும் ஒக்க சாஷாத் கரிகிறானோ இப் படி பட்ட யுகபத் சர்வ சாஷாத் கார சமமான க்ஜானதிற்கு நிதியான அந்த பகவான் -அந்தர்ஹிதோ நிதி ரசி த்வம சேஷ பும்ஸாம் என்று ஸ்ரீ வைகுண்ட ச்தவதில் அருளிய படி அஷய நிதியாக கொண்டு விருஷாத்ரியில் -மடங்கள் நின்று அதிரும் மால் இரும் சோலையின் லதாக் க்ருஹங்களில் சேவை சாதிக்கிறான்
க்ஜானம் மட்டும் சொல்லும் ஸ்லோஹம். இது -ஒளி விடுகிறான் ..மடவரல் – வநாத்ரி விருஷாத்ரி போல இதில் சிம்காத்ரி -சிங்கங்கள் குடி இருக்கும் இடம் -குஞ்சம்-புதர் லதா கொடிகளால் மண்டபம்…அதில் அழகன் ..ச்வதாக -புலன்கள் உதவி இன்றி சதா சமஸ்தம் எப்பொழுது எல்லாவற்றையும் பார்கிறான் .வைத்த மா நிதியாக இருக்கிறான் கஜான செல்வம் படைத்தவன்..
28th ஸ்லோஹம்….
ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தய:
கீத்ருக் விதாஸ் சுந்தரபாஹு சம்ஸ்ரையா :
யோசவ் ஜஜக்ஜ்ஜன்ம லய ஸ்திதி கிரியாஸ்
சங்கல்பதொல்பா துப கல்பயத்யஜ:
யோசவ்-யாவர் ஒரு அழகர் .. அல்பாத் சங்கல்பத -மிக சிறியதொரு சங்கல்பம் கொண்டு –சகல ஜகதுக்கள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்காரன்களை நடத்தி கொண்டு போருகிராரோ , அப்படி பட்ட அழகரை அவலம்பித்து இருக்கிற ஐஸ்வர்யம், தேஜஸ் ,பலம், வீர்யம்,சக்தி ஆகிற இக் குணங்கள் அபரி சேத்யமான வைபவத்தை உடையவைகள்..
29th ஸ்லோஹம்..
யத் கல்பாயுத போகதொபி க்ருசதாம் யாயான் ந தாவத் பலம்
எஷ் வேகச்ய ததாவிதைஸ் சதஜைரம் ஹோபி ருத்சீமபி: ,
அச்தாதா விஹா சம்ஸ்ருதாவுபசிதைஸ் சன்னம் சுசுந்தம் ஜனம்
சந்னத்யா ஷமதே ஷனாத் வணகிரி பிரஸ்த ப்ரியஸ் ஸுந்தர:
யத் கல்பாயுத போகதொபி க்ருசதாம் யாயான்-யாதொரு பாபம் ஆனது பதினாயிரம் கல்பம் பலானுபவம் செய்ய பெற்றாலும் ஷயிக்க மாட்டாதோ
தாவத் பலம் எஷ் வேகச்ய-எந்த பாபங்களுள் ஒரு பாபத்திற்கு அவ வளவு மிடுக்கு உள்ளதோ
ததாவிதைஸ்-அப்படி பட்டவைகளாய்
சதஜை:–இடை வீடு இன்றிக்கே செய்ய படுமவையாய்
ருத்சீமபி: ,-எல்லை கடந்தவையாய்
அச்தாதா விஹா சம்ஸ்ருதாவுபசிதைஸ்-அநாதியான இந்த சம்சார மண்டலத்திலே வளர்ந்து செல்லும் அவையான
பாபங்களாலே திரோஹிதாத்மா ச்வரூபனாய்
அத ஏவ சுதாராம் அவசன்ன னான ஒரு பிராணியை
திரு மால் இரும் சோலை அடி வாரத்தில் திரு உள்ளம் உகந்து வர்த்திதிக்கும் அழகர் பிராணிபாத மாத்ரமே பற்றாசாக நொடி பொழுதில் ஷமைக்கு இலக்காக்குகிறான்
–யத் பிரம கல்ப நியுதாநுபவேபி என்னும் ஸ்லோஹம் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவதில் அருளி இருக்கிறார்
–காளி தாசனும் பிராணி பாத ப்ரதீகாராஸ் சம்ரம்போ ஹி மகாத்மாநாம்..
30th ஸ்லோஹம்….
யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வபாவ:
பாதச் சாயம் சம்ஸ்ரிதோ யோபிகோபி,
தாஜ்ஜாதீயஸ் தாதருசஸ் தத் ஸ்வபாவ :
ச்லிஷ் யத்யேனம் சுந்தரோ வத்சலத்வாத்
புரை அற கலந்து பரிமாறும் குணம் – வாத்சல்யம் –எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர் என்று இருந்தாலும் காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்று ஓர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் திரு மால் இரும் சோலை எந்தாய்.என்று..
யஜ்ஜாதீயோ — தேவ மனுஷ்யாதி ஜாதிகளில் ஏதேனும் ஆகவும்
யாத்ருசோ — ஒழுக்கத்தில் ஏதேனும் ஆகவுமாம்
யத் ஸ்வபாவ –இயல்பு ஏதேனும் ஆககவுமாம்
பாதச் சாயம் சம்ஸ்ரிதோ -திரு வடி நிழலில் ஒதுங்கினனாக அமையும்
ஏனம் ஜனம் –இப்படி பட்ட பிராணி யோட
தாஜ்ஜாதீயஸ் தாதருசஸ் தத் ஸ்வபாவ : ச்லிஷ்யதி — ஜாதி ஆசார ச்வாபாவங்களில் வேற்றுமை இன்றி
-தோஷ போகாதா ரூபம் ஆனா வாட்சல்யதை அனுபவித்தார்
மன்னிக்கிறார் குப்பை சேர்த்தல் ஒழிக்கனுமே தோஷத்தை போக்யமாக கொள்வான் -அதுவே வாத்சல்யம். திரு உள்ளம் உகந்ததால் ..சரணாகதி பண்ணினதும்..
..31st ஸ்லோஹம்..
நிஹிநோ ஜாத்யா வா பருசம குசலைர்வா ச்வசரிதை:
புமான் வை ய:கச்சித் பஹோத்ருணமபி ச்யாதகுணதா:
பஜந்தம் தம் பச்யேத் புஜகபதிநா துல்யமபி ய:
வநாத்ரி பிரஸ்தஸ்தஸ் ஸ மம சரணம் ஸுந்தர புஜ:
சமத்வ குணம் -மந்தர்களையும் சர்வாத்ம நா நிஹினர்களையும் மகாத்மான்கள் ஓடு ஒக்க திரு உள்ளம் பற்றுதல் .. கடை கேட்ட நித்ய சம்சாரிகளையும் திருவடி திருவனந் ஆழ்வான் முதலானோரோடு ஒக்க திரு உள்ளம் பற்றுகை
பகவத் பஜனம் என்கிற குணம் வாய்க்கும் ஆகில் –ஜாதியினாலும் தீய நடத்தைகளினாலும் குணம் ஒன்றும் இல்லாமல் தண்ணியனாகவும்-திரு மால் இரும் சோலை மலை அடி வாரம் தன்னில் உறையும் அந்த ஸுந்தர தோள் உடையான் எனக்கு புகல்
குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு ,பின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவர் ஆனோம், எம் முழையன் பின் வந்த அகன் அமர் காதலைய! நின்னொடும் எழுவரானோம் –
அன்று ஈன்ற கன்று போல கொள்வான் ..திருவடி திரு வனந் ஆழ்வானையும் தள்ளி -ஜாதியால் நடத்தையால் குணத்தாலும் திரணம்- புல் போல சாமான்யன் ஆக இருந்தாலும்-சரணம்-பஜனம் -பண்ணினால் – அன்று ஈன்ற கன்று போல கொள்வான் ..திருவடி திரு வனந் ஆழ்வானையும் தள்ளி -ஜாதியால் நடத்தையால் குணத்தாலும் திரணம்- புல் போல சாமான்யன் ஆக இருந்தாலும்-சரணம்-பஜனம் -பண்ணினால் – சுக்ரீவன் கிரீடம் கொண்டு வந்ததும்-ராமன் கிம் கார்யம் சீதையால் -குரங்கு -ஜாதி ஆசாரம் இல்லாதவன் நான்கு மாசம் மறந்து இருந்தவன் -இது -இவள் அடைந்து என்ன பண்ணுவேன் இவனை இழந்து என்றானே ….தயா தேவி ஆறாக வந்து பள்ளம் மேடு சமம் ஆக்குவது போல -தேசிகன்
32 nd ஸ்லோஹம்….
ஏகைக மங்கல குணானு பவாபிநந்தம்
ஈத்ருக் த்வியாநிதி ஸ ஸுந்தர தோஷ்ணி க்ருஷ்ணே
தேய சதந்த்விதி நியந்துமனா: ஸ்ருதிர் ஹை
னைவைஷ வாங்மனச கோசர இத்யுதாஹ.
ஸுந்தர தோஷ்ணி க்ருஷ்ணே–அசங்யேய கல்யாண குண கண நிதியான ஸுந்தர தோள் உடையான் பக்கலிலே
ஏகைக மங்கல குணானு பவாபிநந்தம–ஒவ் ஒரு திரு கல்யாண குணத்தையும் அனுபவிப்பதனால் உண்டாகும் ஆனந்தத்தை
இப்படி பட்டது என்றும் இவ்வளவிற்று என்றும் பரிச் சேதிக்க புகுந்த வேதமோ என்றால் இது வாக்குக்கும் மனசுக்கும் எட்டவே மாட்டாதது என்று சொல்லி தலை காட்டிற்று
னைவைஷ வாங்மனச கோசர இத்யுதாஹ.-என்று ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -51-நான்காவது பதத்துடன் இதே பொருள் தான்..வேத புருஷன் –யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா- என்று மீண்ட படி போல ..
பக்தியில் தோய்ந்த மனசால் காண முடியும் ..பிரபாவாத் பரமாத்மா -அவன் நிறைவு வந்து சேரும் நம் குறைகள் எல்லாம் மறையும் ..தீயினில் தூசாகும் ..அவனை பேசி முடிக்க முடியாது..ஆனந்தம் அளவிட்டு பார்க்க -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சொல்ல ஆரம்பித்து -ஆனந்த வல்லியில் -தேவர் இந்திரன் பிரகஸ்பதி பிரஜா பதி -சத்ய லோகம் வரை போய் -எட்டாது -மீண்டும் -தே சதம் தே சதம் சொல்லி அவரை கீழே மனுஷ ஆனந்த நிலை வைத்து -சமுத்திர உப்பு எங்கும் உப்பு குறிக்கும் அது போல ஆனந்த மயம் அவனது ..அது போல் ஆழ்வானும் ஸ்லோகம் சொல்லாமல் மீண்டு விடனும் என்கிறார் தேய சதம் -வாக்கியம் உபயோகிறார் ..வாக்கும் மனசுக்கும் கொசரத்வம் எட்டாதவன் என்கிறார்..சோம்பாமல் திரும்பி திரும்பி சொல்வார் மனசு வேகமாக நினைக்கும் என்பதால் பிரித்து சொல்கிறார்..பிரயத்தனம் பண்ணினார் 6/17 /1/5 குணங்களை சொல்லி முன்பு …. ஆனந்தம் தடை படாது தனி குணம் இது .அன்ன மய பிராண மய மனோ மய விக்ஜான மய ஆனந்த மய -பஞ்ச க்ரோசங்களுக்குள் ஜீவாத்மா அதற்குள் பரமாத்மா இருக்கிறார் …அவன் ஆனந்தம் அளவுக்கு உட பட்டது இல்லை கால தேச வஸ்து கடந்து .முக்தாத்மாவுக்கு ஆனந்தத்தில் சாம்யம் கிட்டுமே ..ராமன் சீதை லக்ஷ்மணன் மூவருக்கும் சம மான ஆனந்தம் என்கிறார் வால்மீகி.. தூங்கினால் ஆனந்தம் தூ மணி நோற்று ஸ்வர்கம் பாசுரங்கள் இரண்டும் தூக்க பாசுரம்..தகப்பனார் சேர்த்த சொத்தை பிள்ளை அனுபவித்தால் ஆனந்தம் சமம் தானே அவனுக்கு வாரிசு என்று ஒத்து கொள்ளனும்..ஏற்று கொண்ட ஆனந்தம் அவர்களுக்கு கைங்கர்யம் பண்ணின ஆனந்தம் இவருக்கு ..தொடர்பு ஒழிக்க ஒழியாத ஒன்பது சம்பந்தம் .பிராப்த விஷயம் ..மாறு உளதோ இம் மண்ணின் மிசையே ஏற்கும் புகழ் வண் குருகூர் சடகோபன்ஆழ்வார் சொல்லி மீள மாட்டார்
கூரத் ஆழ்வான் ஆழ்வார் திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply