21 st ஸ்லோஹம்..
..யத் ச்வாயத்த ஸ்வரூப ஸ்திதி கிருதிக நிஜெச்சாநியாம் யஸ்ய சேஷ
அனந்தா சேஷ பிரபஞ்சஸ் தாதா இஹ சிதி வாசி தவ புர்வாசி சபத்தை :
விச்வைஸ் சபத்தை:பிரவாச்யோ ஹதவ்ருஜினதையா நித்யமே வானவத்ய :
தம் வந்தே சுந்தராஹ்வம் வனகிரிநிலையம் புண்டரீகாயதாட்ஷம் ..
தேவோஹம் மனுஷ்யோஹம் -இவை தேவ மனுஷ்ய சப்தங்கள் சரீரங்களை சொல்ல வல்லவே ..ஆத்மா ஸ்வரூபத்தை அல்ல ..தேவ சரீர விசிஷ்ட மனுஷ்ய சரீர விசிஷ்ட ..அஹம் ஸ்தூல அஹம் கிருஷ என்று ஜீவாத்மாவை சொல்லுவதை போல ..எம்பெருமான் சகல சப்த வாச்யன்-விச்வைஸ் சப்தை:பிரவாச்ய ;-என்கிறார் ..இந்த சரீர லக்ஷணம் சமஸ்த பிரபஞ்சத்தின் இடத்திலும் –அவற்றின் ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள் அவன் அதீனமே ..அவன் உடைய இச்சா தீனமே ..சகல ஜகத் பாகவத சேஷ பூதம் /சகல ஜகத் பகவான் ..சர்வம் கழு இதம் பிரம்மா என்றும் ஜகதாத்ம்ய மிதம் சர்வம் என்றும் தத் த்வமசி என்றும் தேஹோ தேஹினி காரனே என்றும் பட்டர் அருளியது போல ..வ்ருஜினம் =பாப்பம் ஹேய சம்பந்தம் ..அபக்த பாப்மாவாகையாலே எப்போதும் ஹேய பிரத்யநீகனாகவே இருப்பவன் ஹத என்று பரத்வம் ச்வாபம் சொல்கிறது..இத்தால் முக்த புருஷ வ்யாவ்ருத்தி ..உயர்வற உயர்நலம் பதிகத்தில் நாம் அவன் இவன் உவன் /அவர் அவர் தம தமது /நின்றனர் இருந்தனர் ஆகிய மூன்று பாசுரங்களினால் அனைத்தும் -சகல சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகள்-அவன் ஆதீனம் என்று சொல்லி அடுத்த பாசுரத்தில் உடன் மிசை உயிர் என என்று ஜீவாத்மாவை த்ருஷ்டான்தீகரித்து உளன் சுடர் மிகு சுருதியுள் என்று தலை கட்டினார் ஆழ்வார் ..அந்த சாயையிலேயே இந்த ஸ்லோகம் அமைந்து உள்ளது..
22nd ஸ்லோஹம்..
குணஜம் குணினோ ஹி மங்கலத்வம் பிரமிதம் பிரத்யுத யத் ஸ்வரூப மேத்ய தம நந்த ஸூகாவ போத ரூபம் விமலம் ஸூசுந்தர பாஹூம் ஆச்ரயாம..
குணஜம் குணினோ ஹி மன்கலத்வம் பிரமிதம் பிரத்யுத யத் ஸ்வரூப மேத்ய தம நந்த சூகாவ போத ரூபம் விமலம் சுந்தர பாஹூம் ஆச்ரயாம :பங்கு ஸ்லோஹம் ஸூ மணி த்யுமணி சந்திர சந்தன சம்பக அரவிந்தாதிகளை மங்கள வஸ்துகளாக நாம் சொல்வது அவற்றில் ஒளியும் தண்ணளியும் நறு மனமும் ஆகிய மங்கள குணங்கள் இருப்பது பற்றியே ..இந்த ரீதியானது எம்பெருமான் பக்கலில் விபரீதமாக கொள்ள தக்கதாய் நின்றது ..அவை பகவத் சம்பத்தாலே தான் மங்கலத்வம் பெற்றவை பகவத் ஸ்வரூபத்தை ஆச்ரயித்தே இந்த குணங்கள் நிறம் பெறுகின்றன ..அநந்த ரூபம் -தேச கால வஸ்து பரி சேதம் இல்லை /சுக ரூபம் ஆநந்த மயம் என்ற படி..அவபோத ரூபம் என்றது கஜான மயம் என்ற படி..அகில ஹேய பிரத்யநீகனாய் இருக்கிறான்..
சர்வச்ய சைவ குணத்தோ ஹி விலக்ஷன த்வம் என்று ஸ்ரீ வைகுண்ட ச்தவதிலும் குண யத்தம் லோகே குணிஷூ ஹி மதம் மங்கல பதம் என்று வராத ராஜ ச்த்வதிலும் எதத் சமான அர்த்தமாய் இருக்கும் எம்பெருமானுக்கு பர துக்க துக்கித்வம் குணமே அன்றி தோஷம் இல்லை எதுவாயினும் அவனை பற்றி உள்ளது சுப குணமே ஒழிய வேற ஓன்று அன்று..
சுந்தார்ஹ்வம்-சுந்தரனை அழகரை வணகுகிறார்..சரீரத்தை சொல்லும் சப்தங்கள் சித்தாகவே கொள்ள படுவது போல /பருத்து இளைத்து தேவன் மனிதன் உடல் தேகம் சப்தம்.. எல்லாம் நான்- போய் சேர்ந்தது போல விஸ்வ சப்தங்கள் எல்லாம் பரமாத்வாவை குறிக்கும்.. அவனால் நியமிக்க பட்டு அவனால் தாங்க பட்டு அவர் பிரயோஜனமாய் அவர் உடைய சேஷமாய் அவனுக்கு த்ரவியமாய் -ஐந்து லக்ஷணம் ..உண்டு
சுந்தார்ஹ்வம்-சுந்தரனை அழகரை வணகுகிறார்..சரீரத்தை சொல்லும் சப்தங்கள் சித்தாகவே கொள்ள படுவது போல /பருத்து இளைத்து தேவன் மனிதன் உடல் தேகம் சப்தம்.. எல்லாம் நான்- போய் சேர்ந்தது போல விஸ்வ சப்தங்கள் எல்லாம் பரமாத்வாவை குறிக்கும்.. அவனால் நியமிக்க பட்டு அவனால் தாங்க பட்டு அவர் பிரயோஜனமாய் அவர் உடைய சேஷமாய் அவனுக்கு த்ரவியமாய் -ஐந்து லக்ஷணம் ..உண்டு..எல்லாம் அவன் ஆயத்தம் -ஸ்வரூப ஸ்திதி கருதிக நிஷேச்சா நியாமய ச்வசெஷானந்த அசேஷ பிரபஞ்ச -தாதா -அதனால் ..சமநாதி வியாகரணம் -சகலம் ஜகத்து பாகவதா சேஷ பூதம் ..வை அதிகரணம் -வேற்றுமை உறுபி மாறினால்….நான் தேவன் -வஸ்து வேறு வேறு ..ஜகத் பிரமம் ..சரீரம்..அவத்யம் அனவத்யம் நித்யமேவ அனவத்ய -எப்போதும் தோஷம் இன்றி தன இசையால்..-எப்போதும் தோஷம் இன்றி தன இச்சையால் நெருக்கம் இருந்தாலும் தோஷம் தட்டாமல்..
சீல குணம் காட்ட அர்ச்சை..ஸ்வரூப குணத்தால் சாமான்யர்களை ஈர்க்க முடியாது என்று ரூப தால் காட்டுகிறான் ..ஸ்வரூப குணத்தை சொல்லி ரூப குணம் சொல்கிறார் வேத முதல்வன் ஆதி அம சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தான் .. -காரணத்வம் சொல்ல இரண்டாம் பத்து -முதல் பத்து கடைசியில் ஸ்வரூபம் சொல்லி பத்தாம் பாத்து -சோராத எப்போருல்க்கும் ஆதி -வாயும் திரை உகளும் பதிகம்..பொருள் என்று இவ் உலகம் படைத்தான்-காரணத்வம்-கிளர் ஒழி இளமை -முடிவிலும் இதே அர்த்தம் ரூபத்தால் அருளியது போல..
விமலன் ஹேய பிரதி படன் எதிர் தட்டு ..சூரிய பிரகாசம் இருட்டு போல..அனந்த ரூபம் -திரு வித பரிச்சேத வர அரைய படுத்த முடியாது-சத்யம் -நித்யமாக இருக்கிறான் ..கஜான ..சுக ரூபம் -ஆனந்தம் -அவபோத-கஜான மயன் /கரிய கோல திரு உரு போல . சத்யம் கஜான ஆனந்தம் பிரமம் போல …நந்தா விளக்கே பாசுரம் போல..குணத்தில் இருந்து பிறந்தது குண ஜ -இவன் ஸ்வரூபத்தில் எது சேர்ந்தாலும் மாறு பட்டு அவனை ஆச்ரயித்து குணத்துக்கு மங்கலம் கொடுக்கிறான்..தேசத்தால் -விபு ஆனா படியால் /காலத்தால் இல்லை நித்யன் என்பதால்/ வஸ்து அந்தர்யாமி என்பதால் /எல்லைக்கு உட்படுத்த முடியாது..-ஆனந்த மயன்..வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத ஆனந்த மயன்– உணர் முழு நலன் -சிக்க ரூபம்.. க்ஜானம் இருந்தால் தான் வரும் அப போத ரூபம்..-ஆகையால் விமலன்..இதே கருத்தை விடாமல் வைகுண்ட ச்தவதிலும் வரதராஜ ச்தவத்திலும் அருளி வலி உறுத்துகிறார்– குணத்தை தோஷமாக கொள்ளும் விபரீத க்ஜானதாலும், பரத்துக்க துகித்வம் இத்தால் தோஷம் அற்றவன்..நம் தோஷம் அவன் சம்பந்தம் பட்டு குணம் ஆக மாறுகிறது ..திரு உள்ளபடி முக்கியம்..சாஸ்திரம் விரோததிதை செய்ய கூடாது /ராவணன் சம்பந்த பட்டு விபீஷணன் ஆக வில்லையே ..ஆகட்டும் என்கிற சத்ய சங்கல்பம் வேணும்….பிராய சித்தம் தெரிந்து கொண்டு/ பண்ணி /மீண்டும் பண்ணாமல் உறுதி கொண்டு/பண்ணிட்டோமே என்ற பச்சா தாபம் கொல்லணும் நான்கும் வேணும்..இதனால் அவன் திரு உள்ளம் உகந்து பிரீதியால் மாற்றுகிறார் ….
23rd ஸ்லோஹம்….
அதிபதி தாவதி ஸ்வ மஹிமா நுபவ பிரபவத்
சுககக்ருத நிச்தரங்க ஜலதீயாத நித்ய தசம்
பிரதி படமேவ ஹேய நிகரச்ய சதா பிரதிமம்
ஹரிமிஹா சுந்தராஹ்வா முபயாமி வநாத்ரி தடே
தன வைபவத்தை தானே அனுபவித்து உகந்து இருக்கும் நிலைமை நித்யோதித தசை /தன விபூதியை அனுபவித்து உகந்து இருக்கும் நிலைமை சாந்தோதித்த தசை ..முந்தின தசையை அனுபவித்து பேசுவது இந்த ஸ்லோஹம்..அலை ஓய்ந்த கடலின் நிலைமை போல ..தமசுக்கு தேஜஸ் போலவும் சர்ப்பத்துக்கு கருடன் போலவும் ஹேயமான அவதா சமூஹத்திற்க்கு எதிர் இவர் ..இத்தால் நித்ய முக்த வ்யாவ்ருத்தி ..ஹேய பிரத்ய நீகத்வம் முக்தர்களுக்கு சமசரண தசையில் கிடையாது ..நித்யர் களுக்கு அது பகவத் இச்சா தீநமாகையாலே சவா பாவிகம் அன்று.. அபிரதிமம் -ஒப்பற்றபடி .இப்படி பெருமை வாய்ந்த அழகா பிரானாரை திரு மால் இரும் சோலை அடிவாரம் தன்னில் அநுபவிகின்றேன் என்கை..
தன உடைய மகிமையால் பிரதிஷ்டை ..நினைக்க நினைக்க ஆனந்தம் தழும்பு கிறது ..தெளிவுக்கு நடு கடல் போல-ஜல தீயத நித்ய தசம் – நித்யோதிக திசை/ நிஸ் தரங்க அலை அற்று ..வ்யூஹா மூர்த்தி சாந்தோதிஹா திசை.. ஐந்து நிலைகளிலும் இவை உண்டு.. அனுபவமும் நித்யம் பிறந்த ஆனந்தமும் நித்யம்…விஹ்ரகம் இருக்கும் இடத்திலும் தப்பு பன்னுஹிறோம்..பேசும் தெய்வம் ..நினைகிறவனுக்கு அனுகூல்ய புத்தி உள்ளோர்க்கு ..பிர பத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் ..அர்ச்சையில். சரணா கதி பண்ணுகிறார்கள் ஆழ்வார்கள் ..தடம்-தாழ்வரை -ஆழ்வார் புர மலை சார போவது கிரியே அயன் மலை என்கிறார்.. கிரி மலை ருசிர சானுக்களிலே பிரியா அடிமை ..சானு தாழ்வரை ..வநாத்ரி தடி ..திற முடை வளத்தால் தீ வினை பெருக்காது அற முயல் ஆழி தர்ம ரட்ஷனதுக்கு .புர மலை நோக்கி செல்லுங்கோ ..அதி பதித அவதி- தள்ளப் பட்ட எல்லை உடன் கூடிய -எல்லை அற்ற -சுகம் ..சதா எப்போதும்/ ஹேயம் தள்ள தக்க தோஷம்கள்/சதா அப்ரதிமம் -ஒப்பார் மிக்கார் இல்லார் -யார் இவன் -ஹரி இரண்டே எழுத்து ..பெருமை ..பாபம் போக்குபவன் என்பதால் ..ஆச்ரயிகிறவர் தோஷங்களையும் போக்குபவன்..அமலன் இத்தால் மோட்ஷ பிரதத்வம்..ஹரி சொன்னதும் ச்லோஹதின் போக்கு மாறி நமக்கு சுகம் தரும்.. இக -நடு கடலில் தேடாதே .மலை தாழ்வரையில் மேல் ஏறி சிரம பட வேண்டாம்.. உபயாமி-தான் போய் அனுபவிகிறார்….நம் உடன் சேர்ந்து உழல மாட்டார் ..
ஆளவந்தாரும் / நினைவுக்கு அப்பால் பட்ட /அற்புதம் திவ்யம் நித்யம் யவனம் ச்வாபம் லாவண்ய மய கடல் ..பிரமத்துடன் கூட இருந்து அனுபவிக்கிறான் –சஹா சுருதி -பால் மோர் கலந்த சோறு நாம் சாப்பிட / குமார போஜனம் இருவர் சேர்ந்து சக போஜனம்..கல்யாண குணங்களோடு சேர்ந்த பகவானை நாம் அனுபவிகிரோமா /முக்தனும் பிரமனும் சேர்ந்து குணங்களை அனுபவிகிரார்களா -குமார போஜனம் போல இருவரும் சேர்ந்து கல்யாண குணங்களை அனுபவிப்பார்கள்.. தானே தன்னை அனுபவிக்கிறான் ..அதே ரீதியில் இந்த ஸ்லோகம்..அவரே விச்வம் என்பதால் தன்னை பற்றி நினைந்தால் நமக்கு நல்லது .. யானே நீ என் உடமையும் நீயே ..ஹரி -தேவர் பின் தொடர்ந்து செல்வார்கள் அவன் திருடன் என்பதால் திருட்டு கொடுக்க –பாபம் கொடுக்க ..எஞ்சாமல் வயிற்று அடக்கினார் ..ஆபத் சகன் –மால் அரி கேசவன் -ஆஸ்ரித வ்யாமொஹம் மால் அதனால் பாபம் போக்கி கேசவன்
அந்தர் யாமியாக இருந்தும் அமிர்தமாய் இருக்கிறான்
24th ஸ்லோஹம்……
சதா ஷாட் குண் யாக்யை: ப்ருதுல பல விச்சா நசகன
பிரபா வீர்யை சவர்யை ரேவதி துறை ரேதிததசம்
த்ருமச்தொமா ஷமாப்ருத் பரிசார மகோத்யான முதிதம் பிரபத்யேத்யா ரூடஸ்ரிய மிமமஹம் சுந்தர புஜம்..
ஷாட் குணிய சம்பதியை அநுபவித்து பேசுகிறார் ..க்ஜானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் என்கிற ஆறும் ..பகம் இவை ..இவை உடையவன் பகவான் ..அசமத் ஆதிகளுக்கு இவை அற்பமாய் இருக்கும் ..அனல்பமாய் அவதி கடந்து உள்ளது எம்பெருமானுக்கே அது தோன்ற -பிருதுல -அவதிவிதுரை -என்கிற விசேஷணம்..ஆனந்த வல்லியில் ஆனந்த குணம் ஒன்றுக்கு காட்ட பட்ட இயதாராஹித்யம் சகல குணங்களுக்கும் ஒக்கும் ..ஏதிததசம்-அதிசயமான ஸ்வ வைபவத்தை உடையவர் ..த்ருமஸ் தோமாஷ் மாப்ருத் என்று திரு மால் இரும் சோலையும் பரிசரம் என்று தாழ் வரையும் அங்கு உள்ள மஹோத் யானத்திலே -பெரியதோர் சோலையில் முதிதம் -திரு உள்ளம் உகந்து வர்த்திப்பவர் ஏறு திரு உடையராய் சுந்தர தோள் உடையரான பெருமாளை அடியேன் அடி பணி கின்றேன் என்றார்
ஏறு திரு உடையான் -வணங்குகிறேன் ..பற்றுதல் தகுந்த குணங்கள்..சொல்லி தான் சரணா கதி..இதம்-இது என்றும் இத்தம் இப்படி என்றும் தெரிந்து கொள்ளணும்..அடிப்படை வர்ணம் மூன்று தான் ..கலந்து பல வர்ணங்கள்.. அது போல ஆறு குணங்கள்..எப்போதும் பஞ்ச பிரகாரங்களிலும் உண்டு..ஷட் குணம்..பக சொல்லுக்கு பொருள் ..தான -தனவான் போல பக உடையவர் பகவான் ..பிட்ஷார்த்தி நமையும் தனவான் எனபது போல ..சிலரையும் பகவான் என்கிறோம்.. ஏக தேசம் இருப்பதால் உப சாரத்திற்கு வியாச பகவான் என்கிறோம்..தேவர் திரு மாளிகை கதை போல உபசார உக்தி..பல -தாங்கும் திறம்/ விக்ஜான-அனைத்தையும் திரி காலத்து உள்ளவற்றையும் பிரடக்ஷயமாக நேரே காண கூடிய திறன்/சகன -சக்தி அனைத்தையும் படைக்கும் திறன்/ பிரபா தேஜஸ் எந்த ஒளியும் இருட்டு/ வீர்யம் நிர் விகாரம் ஆகாத தன்மை ஐஸ்வர்யம் உபய விபூதி நாதன்..எல்லை அற்று இருக்கும் ..தாழ்வரையில் பெரிய தோட்டம் இருக்கு ஆனந்தமாக இருக்கிறவர்.. நூபுர கங்கையில் தொட்டி திரு மஞ்சனம்
சிருஷ்டி-ஐஸ்வர்யம் வீரம் ஸ்தி சக்தி தேஜஸ் சம்காரதுக்கு -கஜான பல இவை தேவை .சங்கர்ஷணன் அணிருத்ணன் பிரத்யும்னன் -காரியத்துக்கு பிரதானம் .திவ்ய தேச குணங்கள் காட்டி விசேஷித்து அருளியது போல
25th ஸ்லோஹம்……
சவ்சீல்ய ஆஸ்ரித வட்சலத்வ மருதுதா சொவ்ஹார்த்த சாம்யார்ஜவை தைர்ய ஸ்தைர்யா சுவீர்யா சவ்ர்யா க்ரிதிதா காம்பீர்ய சாதுர்யகை: சவ்ந்தர்யான்வித சவ்குமார்யா சமதா லாவண்யா முக்க்யைர் குணை: தேவ: ஸ்ரீ தருஷண்ட சைல நிலையோ நித்யம் ஸ்திதஸ் சுந்தர:
ஷாட் குணங்களின் பரிணாம விததி ரூபமான பல திரு குணங்களில் சிலவற்றை கூறி அனுபவிகிறார் ..ஸ்வரூப நிரூபக குணங்கள் /நிருபித ஸ்வரூப குணங்கள் என்ற வகுப்பு /ஆச்ராயண சவ்கார்யா பாதக குணங்கள் ஆசித்த காரியா பாதக குணங்கள் என்ற வகுப்பு/திவா ஆத்ம ஸ்வரூப ஆஸ்ரித குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹ ஆஸ்ரித குணங்கள் என்ற வகுப்பு -இதுவே முக்யமாக கொள்ள தக்கது . சவ்சீல்ய வாட்சல்யாதி குணங்கள் ஸ்வரூப ஆஸ்ரிதங்கள் …சவ்ந்தர்ய சவ்குமார்யாதிகள் விக்ரக ஆஸ்ரிதங்கள் –தவ வரத ராஜோத்தம குண வீசி மனோ சாங்க்யா;பிரணத ஜன போகம் பிரசுவதே -என்று இவரே வரத ராஜ ச்தவதில் அருளிய படியே இத் திரு குணங்கள் அனுபவ ரசிகர்களுக்கு பரம போக்யங்களாக இருக்கும்..
சவ்சீல்ய—-சீலம் என்றாலும் சவ்சீலம் என்றாலும் ஒக்கும் -மகான் நீசர்களோடு புரையற கலந்து பரிமாறுகை -குக பெருமாள் போல்வார் இடம் காட்டி அருளிய குணம் இது
ஆஸ்ரித வட்சலத்வ — என் அடியார் செய்யார் செய்தாரே ல் நன்று செய்தார் என்பர் போலும் -குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் அது ..வாத்சல்யம்
மருதுதா-மார்த்வம் -இது ஸ்வரூப குணமாகவும் விக்ரக குணமாகவும் கொள்ளள படுவது உண்டு ..மேலே சவ்குமார்யம் என்று தனியே சொல்லுகையாலே இங்கே ஸ்வரூப குணமாக கொள்ள அடுக்கும் ..மகாத்மபிர் மாம் அவலோக்யதாம்நய ஷனேபி தி யத் விரஹோதி துச்சஹா : என்று ஆளவந்தார் அருளி செய்த படி ஆஸ்ரிய விச்லேஷம் பொறாமை .
.மகாத்மாக்கள் விரகாம் சாஹியாத மார்த்த்வம்
சொவ்ஹார்த்த சர்வ ஜன ஹிதை ஷித்வம் அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து இருக்கும் குணம்
சாம்ய -சமோஹம் சர்வ பூதேஷு ந மீ த்வேஷ்யோச்தி ந பிரியா ; கீதை போல அபிஜன வித்யா வருத்தங்களில் வாசி பாராதே ஆஸ்ரயணீ யத்வே சர்வ சமனாய் இருக்கை
சாம்யார்ஜவைஆர்ஜவ -மனோ வாக் காயங்களாகிற கரண த்ரயமும் ஒன்றி நில்லாத சம்சாரிகளோடு கலந்து பரிமாறும் இடத்து செவ்வியனாய் இருக்கை
ஸ்தைர்ய– அநிஷ்டங்கள் மென் மேலும் வந்து புகுந்தாலும் நெஞ்சில் விகார லேசமும் இன்றி இருக்கை
ஸ்தைர்யா ஆஸ்ரிதர்களை கை விடாமல் திண்ணிய உஊற்றம் கொண்டு இருக்கை அபயம் ஜீவிதம் எயஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஜாம் சம்ஸ்ருத்ய பிராஹ் மனேப்யோ விசேஷத்த : என்றும் மித்ரா பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன என்றும் ஏதத் வரதம் மம என்றும் அருளிய குணம்
சுவீர்ய– அரிய பெரிய போர் செய்தாலும் ஆயாசம் இன்றி இருக்கை
சவ்ர்யா-போர் களத்தில் சவ்ர்யா-ஏகாகயாய் சென்று புகுந் வல்லமை சூரத்வம் சதுர தச சஹாஸ்ராணி ரஷசாம் .பீமா கர்மாணாம்.ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி என்று வயிறு பிடித்த காலத்திலும் அசஆகாய சூரா அநபாய சாஹச என்று கொண்டாடும் படி இருக்கை
கருதிதா— க்ருத்கிருத்யத்வம் அடியார்களுக்கு செய்ய வேண்டியதை செய்து தலை கட்டுகி அபிஷிச்ய லங்காயாம் ராசா செந்தரம் விபீஷனம் கருத க்ருத்யஸ் ததா ராமோ விச்வர பிரமுமொத ஹ : என்கிற படி கருத் க்ருத்யனாய் இருக்கை..
காம்பீர்ய -திரு உள்ளத்தின் .. ஆழம் அறிய ஒண்ணாது இருக்கை..அடியார்க்கு என் செய்வன் என்று இருத்தி நீ
சாதுர்யக– பிறரால் நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாத பெரிய செயல்களை எளிதாக செய்து தலை கட்ட வல்ல சதிர்
சௌந்தர்ய-வடிவழகு -சூதனாய் கள்வனாகி தூர்தரோடு இசைந்த காலம் மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்து வேனை போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகு -விமுகர் உடைய வைமுக்யத்தை மாற்றி ஈடு படுத்தி கொள்ள வல்ல அழகு
சவ்குமார்ய -புஷ்ப காச மென்மை-வடி விணைஇல்லா மலர் மகள் மற்றை நிலா மகள் பிடிக்கும் மெல் அடி
சமதா முன்பே சாம்ய குணம் சொல்லி இதில் திவ்ய மங்கள விக்ரக குணமான சமத்வத்தை -சாமுத்ரிகத்தில் சொன்ன படி சம பரிமாண சாலியான அவயவங்கள் உடைமை
லாவண்ய -அவயவ சோபை சவ்ந்தர்யம் ..சமுதாய சோபை லாவண்யம்
முக்க்யைர் குணை:..நித்யம் ஸ்தித :– ச்லோஹம் தலை கட்டுகி யாலே சந்தொபந்த நிர்ப்பந்தத்தினால் நிற்க வேண்டிற்று .அசந்கயேய கல்யாண குண கண-என்ன கடவது இறே-இப் படி பட்ட திரு குணங்கள் ஓடே தீர்த்தம் பிரசாதே எஞ்சான்றும் உளன்
அவன் சகுணன் நிர் குணன் இல்லை..வேதங்கள் ஸ்வரூபத்தில் பரத்வத்தில் நோக்கு அருளி செயலோ ரூபத்தில் எளிமையில் அர்ச்சையில் நோக்கு ..பதி மூன்று ஸ்வரூப குணங்களையும் நான்கு ரூப குணங்களையும் பட்டியல் இடுகிறார்..சவ்சீல்யம் ராம அவதாரத்தில் முக்யமாக காட்டினான் ..அசய அவதார தத்வ சாரம் – பட்டர்.. ஆஸ்ரித வியாமோகம்/பார தந்த்ர்யம் கிருஷ்ண அவதாரம் காட்டிய முக்ய குணம்..தசரதன் ஸ்வர்கம் போக சிசுபாலனுக்கும் மோட்ஷம் தந்தான் .. சமதாகுணம் சொரூபத்திலும் ரூபத்திலும் திரு மேனி அளவு பட்டு சம மாக இருக்காய் .கொள்ளை கொள்ளும் அழகு சம பரிமாணத்துடன் ..ச்யாமோ யுவா -ஸ்ரீ பாஷ்யத்தில் அருளியது போல ..விருத்த லக்ஷணம் முழு கொம்பு அரை கொம்பு மொட்டை கொம்பு போல சாமோ யுவா சிவந்த கண்கள் சம பரிமாணத்துடன் இருக்கிறார்….தேவ தத்தன் பெயர் சாஸ்திரம் பிடிக்கும் ..விடாமல் தேவ தத்தன் கேதாராம் ..பெரிய நிலம் குறுகி இருக்கும் நிலம் தேவ தத்தன் ..இன்று பறந்தாலும் அவனது கேதாரம் என்று சொல்லும் மிர்த்து கடம் மேடம் பிடிக்கும்.. திருஷ்டாந்தம் வேற தெரியாது இல்லை விளக்க சொன்னார்கள்..சுந்தர்யமும் சுகுமாரமும் சேர்த்து அருளினார் ..தொடக்க மான ஆதி சப்தம் சொல்லி குண கண போல ..
..இதனையும் விளையாட்டாக கொண்டவன் சுந்தரன் -தேவு -தாது ..நித்ய அழகன் ..சீலம் -குணவான் -பெருக்கும் குணம் சீலமே அதனால் வால்மீகி இதை முதலில் சொல்லி குறித்தார் .செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின்.. ஆழ்வார்களை ஜாக்கிரதை படுத்து கிறார் நம் ஆழ்வார் பட்டு சொல்கிறார் .. முன் வந்த உருகுமால் நெஞ்சத்து பதிகத்தில் . ஆளவந்தார் .வசி வதான்யாக குணவான் ருசு சுசி என்கிறார். வால்மீகி போல .இதி தொடக்கமாக என்று சீலத்தில் ஆரம்பித்தார் பிரதாந்யம் என்று ..பரத்வம் கணுக்கால் வாத்சல்யம் இடுப்பு .தயை திரு கண்கள் வரை ஆழம் சவ்சீல்யமோ முழுக வைத்திடும்..கண்ணன் தலைவர்கள் உடன் கை கொக்க வில்லை ..இடைக்கை வலக்கை அறியாத ஆயர்கள் உடன் அஹம் பந்து என்கிறான் ..தீ மனம் கெடுத்து – தர்மம் அதர்மாக மயங்கி -கீதா சாஸ்திரம் கொடுத்தான் பட்டுடுக்கும் ..பிராட்டி பிரிவால் போல ராமன் தவித்தானே..அநித்ரம் சததா ராமன் -அருள் புரிந்த சிந்தை அடியாருடன் வைத்தான் ..சாம்யம் அநந்த பத்மநாபன் காட்டும் ஆபத்தில் குணம்..புடவை சூரன்தான் புருவம் நெருத இடத்தில் தேரை நிறுத்தி எல்லாம் அவளுக்கு ..ரிணம் பிரவர்திதம் கலங்கிய உள்ளதுடன் போனான் ..
நவ ரச பாட்டு /இவையும் அவையும் .ஆகியும் ஆக்கியும் காக்கும் -சம்கார சிருஷ்டி ஸ்திதி/இதோடு விடாமல் வஸ்து ஸ்திதி ஆக சத்தை இருக்க – அவையுள் தனி முதல் -அவற்றுள் புகுந்து / எம்மான் ஸ்வாமித்வம் ..கண்ண பிரான் உபகாரகன் /என் அமுதம்-பரம போக்கியம் /அவருக்கு தான் நமக்கு இல்லை /சுவையன் ராசிக்யம் உள்ளவன் -விக்கித்து மயங்கினாலும் சோகித்தாலும் அவன் கிருபை வழிந்து போகும் /கூரத் ஆழ்வான் உபன்யாசம் போய் கால தாமதமாக வந்து இப்படியும் ஒரு பிரகிருதி உண்டே ஆழ்வான் என்றார் .. திருவின் மணாளன் /ஈடு பட்டால் தான் அனுபவம் இதுக்கு அழுதால் நம் கஷ்டத்துக்கு அழ வேண்டாம் /மெய் அடியார்கள் தம் ஈட்டம் கண்டு -பெருமாள் திரு மொழி/சுவையை கத்து கொண்ட இடம் திருவின் மணாளன் ..அமர்ந்த திரு கோலத்தில் இருந்து நின்ற நம் பெருமாள் இடம் சொல்லி கொடுத்தாள் /என் உடை சூழல் உளானே – அரு சுவை பாட்டு -அருகல் இலாய பெரும் சீர் -அமரர்கள் ஆதி முதல்வன் நீல் நன் மேனி வண்ணன் லாவண்யம் செந் தாமரை கண்ணன் ஒரு அவயவம் – சவ்ந்தர்யம்..படி எடுத்து –சொல்ல வல்லது அல்ல அவன் படிவம்..பொறு சிறை புள் உவந்துஏறும் / பூ மகளார் தனி கேள்வன் /ஆறு ரசங்களும் பாடினார் ..வினையேன் வினை தீர் மருந்தானாய் – மருந்து -அனுபவ விரோதிகளை தொலைக்க கூடியவன் விண்ணோர் தலைவா-அனுபவிக்கும் தேசத்தில் இருகிறவன் / கேசவா அனுபவிக்க கேசம் /மனை சேர் ஆயர் குல முதல்/ மா மாயன்/ மாதவா /மரா மரங்கள் ஏழும் எய்தாய்/ஸ்ரீதரா /.அவ்ஜ்வல்யம் ஒல்லி ஏற்றுவதால் ..இணையாய் -ஒன்பது குணங்கள் பாசுரம்..
26th ஸ்லோஹம்……..
எஷ்வேகச்ய குணச்ய விப்ருடபி வை லோகோத்தரம் ச்வாச்ரயம்
குர்யாத் தாத்ருச வைபவை ரகணிதைர் நிச்சீம பூமாநவிதை
நித்யைர் திவ்ய குணைஸ் ததோதி கசுபத் வைகாச்ப தாத்மாஸ்ரையை : இத்தம் சுந்தர பாஹூ மஸ்மி சரணம் யாதோ வநாதரீச்வரம்
ஒரு குணத்தில் ஏக தேசத்தில் யத் கிஞ்சிதம்சம் இருந்தாலும் அவ் இடத்தின் உத் கர்ஷம் வாக்குக்கு நிலம் இன்றி இருக்கும் விப்ருட் =பிந்து என்ற படி .அத்யல்ப பாகம்
தாத்ருச வைபவை = ஏக தேச சம்பந்த மாத்திரத்தாலே ச்வாஸ்ரயத்தை நிறம் பெருவிக்க வல்ல பெருமை ஒவ் ஒரு திரு குணத்திற்கும் உண்டு
அகணிதை = அப்படி பட்ட குணங்களுக்கு எண்ணிக்கை இல்லை ஆற்றில் மணலை எண்ணினாலும் எண்ண போகாதவை பகவத் குணங்கள்
சிந்தை மற்று ஒன்றின் திறத்து ஆகாதபடி துவக்க வல்ல பெருமை -தோன்ற பூம -பத பிரயோகம்
நித்யை-இவை ஆகமா பாயி அன்றிக்கே ச்வரூபானு பந்திகள்
ததோகிக ச்வதவை காச்பத ஆத்மாஸ்ரையை -தம்மை காட்டிலும் சீரிய ச்வாஸ்ரயத்தை -திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையவை
கற்பக காவன நற் பல தோள்கள் ..பூங்கொத்து போல ஆயுதங்கள் ..சேர்த்து அனுபவிக்க முடியாத கல்யாண குணங்கள்..பட்டியலில் சிறு திவலை-இதுவே அவனை புரு ஷோத்தமன் ஆக்கும் -மஹிமா கடலில் சிறு துளிதான் தேவர்கள் – எடுத்தாலும் அனுபவிக்க முடியாது -சமுத்ரத்தில் ரத்னம் போல இவன் குணங்கள்..அப்படி பட்ட பெருமை பட்ட குணங்கள் எண்ணில் அடங்காதாவை..எல்லை அற்றவை ..ஆழம் காண முடியாதவை ..நித்யமாக இருக்கும் ..அதிக ச்வபத்வம் சொரூபம் அவனுக்கு ..
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply