பிரபந்த அமுது –

தெரிந்து எழுதி வாசித்து கேட்டு வழி பட்டு பூசித்து போக்கினேன் போது -நான் முகன் திரு அந்தாதி -63

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் 
சீர் கலந்த சொல் நினைந்து  போக்கார் யேல் சூழ வினையின் ஆழ துயரை  என் நினைந்து போக்குவர் இப்போது.–பெரிய திரு அந்தாதி-86..

பெரி ஆழ்வாரும் திரு மகளாரும் கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி னார்கள்..
இருவருக்கும் மங்களா சாசனத்தில் வூற்று..
மின் அனைய நுண் இடையார்–ஆண்டாள்- விரி குழல்  மேல் நுழைந்த வண்டு இன் இசைக்கும் வில்லி புத்தூர்-பெரிய ஆழ்வாரும்-
இனிது அமர்ந்தாய்  மென் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் வுறைவான்  –

சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே  -பெரிய ஆழ்வாரும்-
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்து இழியும் சிலம்பாறு உடை மால் இரும்சோலையே-ஆண்டாள்
இருவருக்கும்  திரு மால் இரும்  சோலையில் ஈடுபாடு
சிலம்பியல் ஆறு உடைய–கலியனும்
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய்  ஒப்பன் சிந்தும் புறவில் தென் திரு மால் இரும் சோலையே-
பெரிய ஆழ்வாரும்-சிந்துர செம் போடி போல்  திரு மால் இரும் சோலை எங்கும் இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திடனவால்-ஆண்டாள்- இந்திர கோபம் =பட்டு பூச்சி..

பாணிக்க வேண்டா நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே  -பெரிய ஆழ்வாரும்-
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க  வுறுதிர் ஆகில்-ஆண்டாள்..பாணித்தல் = கால தாமதம்

ஓட்டம் + தாரா = ஒட்டரா =ஓடி வந்து..என் இடைக்கு ஒட்டரா அச்சோ அச்சோ-பெரிய ஆழ்வாரும்- 
ஒட்டரா வந்து என் கை பற்றி -ஆண்டாள்..

கடியன் கொடியன் நெடிய மால்  உலகம் கொண்ட அடியன்..கடியன்-மேல் விழுந்து விரைந்து கலக்கிறான்..
கொடியன்- கல் நெஞ்சதனாய் பிரிந்தும் போகிறான்..
ஆகிலும் கொடிய என் நெஞ்சம்  அவன் என்றே கிடக்கும் எல்லே–திரு வாய் மொழி 5-3-5..

குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே ..

ஆறா அன்பின்  அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே

அண்ணலே உன் அடிசேர அடியேற்கு ஆவா என்னாயே

பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே..

திணரார் சாரங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என் நாளே..

மெய் நான் எய்தி என் நாள் உன் அடிகள் அடியேன் மேவுவதே..

நொடியார் பொழுது உன்ன பாதம்  காண நோலாது ஆற்றேனே..

நோலாது ஆற்றேன் உன பாதம் காண..

அந்தோ ! அடியேன் உன  பாதம் அகலகிலேன் இறையுமே..

புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே..

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்..

திரு அடியின் சம்பந்தமும் திருவின் சம்பந்தமும் உள்ள பதிகம்-உலகம் உண்ட பெரு வாயா..

ஆழ்வார் , எம்பெருமானார்  ,ஜீயர்  ,திரு அடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading