ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ–ஸ்ரீ ஆழ்வாரும்‌ -ஸ்ரீ எம்பெருமானாரும்‌-ஸ்ரீ தேசிகரும் -ஸ்ரீ மா முனிகளும்-

ஸ்ரீ ஆழ்வாரும்‌ ஸ்ரீ எம்பெருமானாரும்‌

திருவரங்கத்தமுதனார்‌ நம்மிராமாநுசனைப்‌ புகழும்‌ இராமாநுச நூற்றந் தாதியின்‌ ஆரம்பத்தில்‌ * மாறனடி பணித்துய்ந்தவன்‌ ‘” என்று புகழ்கிறார்‌. யதிராஜ விம்சதி ஆரம்பத்தில்‌ மணவாளமாமுநிகளும்‌ இராமாநுசனை ” பராங்குச பாத பக்தம்‌!’ என்று ஏத்துகிறார்‌. ஆழ்வார்‌ திருநகரியில்‌ ஆழ்வார்‌ பாதுகைக்கு இராமாநுசன்‌ !’ என்றே வ்யவஹார முள்ளது. ஆழ்வார்‌ பாசுரங்களை வளர்த்த இதத்தாய்‌ இராமாநுசன்‌ என்று அநுபவிக்கறார்‌ ஸ்ரீபராசரபட்டர்‌-ப்ரமேய பூதனான கண்ணனுக்கும்‌ ப்ரமாண பூதமான திருவாய்மொழிக்‌கும்‌ பலவாறாக ஸாம்யத்தை நிர்வஹித்துள்ளனர்‌ நம்‌ பெரியோர்‌. எங்ஙனே யென்னில்‌ இங்ஙனேயாகும்‌:–கண்ணனுக்குத்‌ தாய்மார்‌ இருவர்‌. தேவகியும்‌ யசோதையுமாவர்‌. அவ்விருவர்‌–*ஒருத்தி மகனாய்ப்‌ பிறக்து ஒரிரவில்‌ ஒருத்தி மகனாய்‌ ஒளித்து வளர ‘!’ என்றிறே ஆண்டாள்‌ அருளிச்‌ செய்தாள்‌-திருவாய்மொழிக்கும்‌ தாய்மார்‌ இருவராவர்‌. ஈன்ற முதற்றாய்‌ சடகோபன்‌ மொய்ம்பால்‌ வளர்த்த இதத்தாய்‌ இராமாநுசன்‌ ” என்றிறே பட்டர் அருளிச்‌ செய்தார்‌. கண்ணன்‌ சுலபனாயும்‌ ‘துர்லபனாயுமுளன்‌. ** பத்துடையடி வர்க்கெளியவன்‌ பிறர்களுக்கரிய்‌ வித்தகன்‌ ” என்றிறே ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தார்‌. திருவாய்மொழியும்‌ அப்படியே. ஸாது பரித்ராணத்துக்கும்‌ துஷ்ட நிராசத்துக்குமிற கண்ணனுடைய திருவவதாரம்‌. திருவாய்‌ மொழியும்‌ நண்ணாவசுரர் நலி வெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த” விறே அவதரித்தது. இப்படிப் பலபடிகளால்‌ ப்ரமேய பூதனான கண்ணனோடு ஸாம்யம்‌ பெற்றுள்ள திருவாய்‌ மொழியான ப்ரமாணத்துக்கு வளர்த்த இதத்தாய்‌ இராமாநுசன்‌. தம்முபதேசத்தாலும்‌ தம்முடைய நிர்வாகங்களாலும்‌ தம்முடைய சிஷ்யர்கள்‌ மூலமாக இட்டருளிய வ்யாக்கியானங்களாலும்‌ திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய்‌ இராமா நுசனிறே. ஆளவந்தாருடைய ஸாக்ஷாத்‌ சிஷ்யரான திருமாலையாண்டானிடத்து அடிபணிந்து திருவாய்‌ மொழியின்‌ அர்த்தங்களை கேட்டார்‌ இராமாநுசர்‌. ஆளவந்தார்‌ அருளிச்‌ செய்ததாக திருவாய்மொழிக்குத் திருமாலை யாண்டான்‌ அருளிச்செய்த நிர்வாகங்களை செவி மடுத்த நம்மிராமாநுஜன்‌ அந்த நிர்வாகங்களுக்கு மேலான அர்த்த நிர்வாகங்களை அனுக்ரகித்‌திருப்பது ஈட்டில்‌ பிரசித்தமிற அவற்றை ஈண்டு நாம்‌ அனுபவிப்போம்‌.

1-துயரறு சுடாடி :–நம்‌. (1. 1. 1)
துயரறுக்குமென்று முன்புள்ள முதலிகள்‌ அருளிச் செய்யும்‌படி ஸமஸ்த துக்காபநோதன ஸ்வபாவமான திருவடிகள்‌. ஸமஸ்தாத்மாக்களுடையவும்‌ துக்கத்தை போக்குகையே ஸ்வபாவமான திருவடிகள் -* துயரறு சுடரடி’” என்று எம்பெருமானார்‌ அருளிச் செய்யும்படி. வ்யஸநேஷு மனுஷ்யாணாம்‌ ப்ருசம்‌ பவதி துக்கித? என்றால்‌ துக்க நிவ்ருத்தியும்‌ அவனதாய்‌ இருக்குமிறே. இவர்‌ துயரறத்‌ தான்‌ துயர்‌ தீர்ந்தானாய்‌ இருக்கை-இத்தால்‌ இவர்‌ மயர்வற அவன்‌ துயரற்றபடி. :

2-வீடுமின்ப்ரவேசம்‌:–
இத்திருவாய்‌ மொழி தன்னை ஆளவந்தார்‌ அருளிச்‌ செய்தாராகத்‌ திருமாலை யாண்டான்‌ பிரபத்தி விஷயமாக்கி நிர்வஹித்துக்‌ கொண்டு எம்பெருமானாரும்‌ அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து பாஷ்யம்‌ தலைக் கட்டின பின்பு பக்தி விஷயமாக்‌ அருளிச்‌ செய்து கொண்டு போருவர்‌, பின்பு எம்பாரும்‌ அப்படியே யருளிச்‌ செய்தார்‌–

3-கள்வர்க்கு: நம்‌, 1.4. 8
அப்படிப்பட்ட வஞ்சகர்க்கு என்பர்‌ ஆளவந்தார்‌, அன்று அச் செயல்‌ செய்ததும்‌ அக் குண சேஷ்டிதங்களாலே என்‌ நெஞ்சைய பஹரித்து ஈடுபடுத்து கைக்காக விறே என்பர்‌ எம்பெருமானார்‌ (24000 படி).-ஈட்டில்‌ :-வஞ்சகர்க்கு என்று திருமாலை யாண்டான்‌ நிர்வஹிக்கும்படி. எம்பெருமானார்‌–ஒன்றை நினைத்து ஒன்றைச்‌ செய்தவர்க்கு என்று அருளிச்‌ செய்வர்‌. மாவலியை வஞ்சித்ததும்‌ என்னை வஸீகரிக்கைகாக. கீழ்‌ தான்‌, பெரு நிலம்‌ கடந்த நல்லடிப்போது”!” என்றிறே ஆசைப் பட்டதும்‌. *உலகம்‌ கொண்ட அடியன்‌ அறிவருமேனி மாயத்தனாலும்‌ கொடிய வென்‌ நெஞ்சம்‌ அவனென்றே கிடக்கும்‌?” என்றும்‌ ‘ அன்றொரு கால்‌ வையமளந்த பிரான்‌ வாரான்‌ என்று ஒரு கால்‌ சொல்லாதுலகு ”” என்றுமிறே இவர்‌ கிடப்பது. திரு மங்கை யாழ்வாரும்‌ * முன்னம்‌ குறளுருவாய்‌ மூவடி மண் கொண்டளந்த மன்னன்‌ சரிதைக்கே மாலாகிப்‌ பொன்‌ பயந்தேன்‌ ” என்று இவர்களெல்லாரும்‌ ஈடுபடுவது இச் செயலுக்கிறே–

4-தோற்றோம்‌–நம்‌. 2. 1. 7–கீழும் மேலும்‌ போருகிறபடி யொழிய சப்த ஸ்வாரஸ்யத்தைப்‌ பற்ற எம்பெருமானார் அருளிச்‌ செய்து போருவது ஒன்று உண்டு. அம்மங்கி யம்மாளும்‌ அத்தையே நிர்பந்தித்து போரும்‌, அதாகிறது–நான்‌ பிரிவாற்றாதார்‌ அனேகர்‌ கூடச்‌ கட்டிக் கொண்டு கூப்பிடா நிற்க, இருள்‌ வந்து முகத்தை மறைக்க, அத்தைப்‌ பார்த்து !*ஆற்றாமைக்குப்‌ போக்கு விட்டு தரிக்க வொட்டாதே நீ வந்து நலியக் கடவையோ “‘ என்கிறார்‌.

5-இனி வந்து கூடுவனே :–நம்‌. 3: 2. 1.
இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று நிராசராகிறார்‌ என்று முன்புள்ள முதலிகள்‌, எம்பெருமானார்‌–நிராசரானால்‌ பின்னை முடிவாரொருவர்‌. ஒன்பதாம்‌ பாட்டில்‌ நிராசராக, பத்தாம்‌ பாட்டில்‌ அவன்‌ வந்து ஸமாதானம்‌ பண்ணினானாக அமையும்‌ என்‌றருளிச்‌ செய்வர் –

6-ஆவி சேர்‌ இத்யாதி :–நம்‌. 3, 4, 10-
ஆவி யுண்டு ப்ராணாச்ரயமான சரீரம்‌, அத்தோடு சேர்ந்திருந்துள்ள உயிருண்டு. ஆத்மா, அதின்‌ பக்கல்‌ அந்த சரீரகதமான பால்ய யெளவநாதிகள்‌ ஒன்றாலும்‌ ஒரு ஸம்பந்தமும்‌ இல்லையாம் படியாக அநுஸந்திக்கிற அநுஸந்தாந மானது அந்த ஆத்மாவுக்குக்‌ கூடா நின்ற பின்பு அப் பொருள்‌. அவனையும்‌ கூடத் தட்டில்லை. இங்ஙனன்றிக்கே இதுக்கு வேறேயும்‌ இரண்டு பொருள்‌ சொல்லுவர்கள்‌ என்று அருளிச்‌ செய்வர்‌. இவன்‌ பக்கலிலே பக்தி யுண்டாகில்‌ அவனைக்‌ கிட்டலாமென்றும்‌, புறம்புண்டான உபாயாந்தரங்களிலுண்டான பற்று அடைய விட்டு அவனையே பற்றில்‌ அவனைக்‌ கிட்டலாமென்றும்‌, அன்றியே ௮ந்திம ப்ரத்யயம்‌ உண்டாமாகில்‌ அவனைக்‌ கூடலாம்‌ என்றுமாம்‌, இத்தை எம்பெருமானார்‌ கேட்டருளி இவ் வியாப்தியைச்‌ சொல்லி நின்ற பின்பு இனி வியாப்ய வஸ்து கதமான தோஷங்கள்‌ வ்யாபகனானவனுக்குத்‌ தட்டாதென்னுமிடம்‌ அவச்யம்‌ சொல்ல வேணும்‌. ஆன பின்பு இத்தையே சொல்லிற்றாக வமையுமென்று அருளிச்‌ செய்வர்‌.

7-*அடிக் கீழ்‌ புக நின்ற செங்கண்‌ மால்‌”! நம்‌-3-6-6-
ஹிரண்யன்‌ பக்கல்‌ சீற்றம்‌ செல்லா நிற்க, ப்ரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாயிருந்தபடி எங்ஙனே என்று எம்பெருமானரைச்‌ சிலர்‌ கேட்க, ஸிம்ஹம்‌ . ஆனை மேலே சீறினலும்‌ குட்டிக்கு முலை யுண்ணலாம்படி யிருக்குமிறே, என்றும்‌, ஆச்ரித வாத்ஸல்யத்தாலே அவர்கள்‌ விரோதிகள்‌ மேலே சீறின சிற்றமானால்‌ பின்னை அவர்களுக்கு அணைய வொண்ணாதபடி இருக்குமோ என்றும்‌ அருளிச்‌ செய்தார்‌.

8-தத் பக்தைர்‌ வா ஸமாகம;: (நம்‌. 3- 7. ப்ரவேசம்‌) என்கிற விடத்தில்‌ வா” என்றத்தை அவதாரணத்திலே யாக்க உத்தேச்யம்‌ தானே இங்கே ஸித்திக்குங்‌ காண்‌, என்று எம்பெருமானார்‌ அருளிச் செய்த வார்த்தை. ப்ராப்யத்‌தில்‌ ப்ரதமாவதி பகவச் சேஷத்வத்‌தனவிலே நிற்கை-சரமாவதி பாகவத சேஷத்‌ தளவிலே வருகை (கச்சதா) இதுக்கு எம்பெருமானர்‌ ** பயிலும்‌ சுடர்‌ ஒளியிலும்‌ :* நெடுமாற்கடிமையிலும் ‘? அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்கனாழ்வான்‌ அனுஷ்டித்து காட்டினான்‌ என்று அருளிச்‌ செய்வர்‌. இவ் வர்த்தத்துக்கு அடி திருமந்த்ர மாயிற்றிறே. அது மூலமாக அனுஷ்டிக்கவே இதில்‌ சொன்னதை செய்த தாமிறே .

9-சென்று இத்யாதி:–நம்‌. 5. 2. 6. சென்று அவர்களைத்‌ தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌ என்று பணிக்கும்‌ திருமாலையாண்டான்‌. அவர்களோடே சென்று ஸர்வேச்வரனைத்‌ தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌ என்று அருளிச்‌ செய்வர்‌ எம்பெருமானார்–

10-வலையுள் ளகப்பட்டேன்‌ :-நம்‌. 5-3-6.
அப்பொதுவானதில் அன்றிக்கே அவன்‌ என்னைக் குறித்து நோக்கின நோக்கிலும்‌ ஸ்மிதத்திலுமன்றோ நான்‌ அகப்பட்டது. ஆழ்வார்‌ திருவரங்கப்‌ பெருமாள் அரையர்‌ வலையாக அபிநயித்துப்‌ பாடா நிற்க, திருக் கண்களைக்‌ காட்டி யருளினார்‌ எம் பெருமானார்‌. “கமலக்‌ கண்ணனென்றும்‌ நெடுங்கயிறு:: என்றக்‌ கடவதிறே. அனுகூலம்‌ போலே யிருந்து தப்பாதபடி அகப்படுத்திக்‌ கொள்ளும்‌ நோக்கிலே அகப்பட்டேன்‌.

11-நின்றவாறும்‌ இருந்தவாறும்‌ கிடந்த வாறும்‌ :–நம்‌. 5, 10, 6.
என்று ஆழ்வார்‌ திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ பாடா நிற்க “இவை யெல்லாம்‌ தொட்டிலிலே ” என்றருளிச்‌ செய்தார்‌ எம்பெருமானார்‌-தொட்டிற்‌ பழுவைப்‌ பிடித்துக்‌ கொண்டு நிற்கும்படியும்‌ தரித்து நிற்க மாட்டாமை ‘ விழுந்திருக்கும் படியும்‌ அது தான்‌ பொறுக்கமாட்டாமை சாய்ந்து கிடக்கும் படியைச்‌ சொல்லுகிறது-

12-புகுமூர்‌ :–தம்‌ 6, 1.1.
எம்பெருமானர்‌ தெற்கே எழுந்தருளா நிற்க எதிரே வருகிறாள்‌ ஒரு பெண்‌ . பிள்ளையைக்‌ கண்டு எங்கு நின்று” மென்ன *திருக்கோளூரில்‌ நின்றும்‌” என்ன, அவ் வூரில்‌ புக்க பெண்களும்‌ போகக் கடவரா யிருப்பார்களோ என்று அருளிச்‌ செய்தார்‌.

13-மூவுலகு இத்யாதி:–நம்‌. 7. 2. 10.
*மூவுலகாளியே கடி கமழ்க்‌ கொன்றைச்‌ சடையனே நான்முகக் கடவுளே என்றும்‌ வடிவுடை வானோர்க்குத்‌ தலைவனே என்றும்‌’” என்று திருமாலை யாண்டான்‌ வையதிகரண்யமாக்க நிர்வஹிக்கும்‌. என்றும்‌-என்னுமது என்று மவனாய் . எம் பெருமானார்‌ கேட்டருளி ஸாமானாதி கரண்யத்தாலே அருளிச்‌ செய்தருளினார்‌. த்ரைலோக்யத்திற்கும்‌ கடவனான இந்திரனுக்கு அந்தர்யாமியாய்‌ நின்று அவ்னுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே என்றும்‌. பரி மளத்தை யுடைத்தான கொன்றையைச்‌ சடையிலே யுடைய ருத்திரனுக்கு அர்தர்யாமியாய்‌ நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே என்றும்‌. அவர்களோடு இவ் வருகுள்ளாரேர்டு வாசியற எல்லாருக்கும்‌ நிர்வாஹனா யிருக்கிற சதுர்முகனாகிற தேவதைக்கு அந்தர்யாமி யானவனே என்றும்‌.

14-இதுவல்லால்‌:–நம்‌ 8, 7. 3.
இதுக்குத்‌ திருமாலையாண்டான்‌ பணிக்கும்‌ படி நாட்டார்‌ ஐச்வர்யங்‌ களில்‌ தலையாகச்‌ சொல்லுவது த்ரைலோக்யைச்வர்யத்தையிறே. அதுவும்‌ எனக்கு ஒரு சரக்கல்ல என்கிறார்‌ என்று. . எம்பெருமானார்‌ அருளிச் செய்யும்படி. என்னுடைய இருதயத்திலே புகுந்து எழுந்தருளி இருக்கற இருப்பொழிய வீற்றிருந்தேழுலகும்‌ தனிக்கோல்‌ செல்ல இருக்கு மிருப்பையும்‌ தனக்கு ஐச்வர்யமாக நினைத்திருக்குமோ என்று பார்த்தால்‌ அதுவும்‌ ஒரு சரக்காக நினைந்திருக்கிறிலன்‌ என்று. இதுவே ப்ரகரணத்திற்குச் சேருவது–

15-அடியேனுள்ளான்‌ 9, 8. 2,
எம்பெருமானார்‌ நியமனத்தாலே திருக் கோட்டியூர்‌ நம்பி ஸ்ரீபாதத்திலே ஆறு மாஸம்‌ ஆழ்வான்‌ ஸேவித்து நின்று, போரப் புக்கவாறே, ஆழ்வான்‌! ஆழ்வார்‌ ** அடியேனுள்ளான்‌ ” என்றபடி கண்டாயே என்ன, க்ருதார்த்‌ தனானேன்‌ என்று போந்தானாம்‌ ”

16-புகழும்‌ பொருபடை நம்‌. 8. 9. 3.-ஹேதிபி; சேதநா வத்பி: உதீரிதஜயஸ்வநம்‌ ‘* என்று திவ்யாயுதங்கள்‌ அவனைப்‌ புகழும்படியாதல்‌, சத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:” என்கிறபடியே கையுமாயுதமுமாய்ப்‌ பொருத்த மிருந்தபடி யென்‌ என்று சத்ருக்கள்‌ புகழும்‌ படியைச்‌ சொல்லுகிறது என்று எம்பெருமானார்‌ அருளிச்‌ செய்யும்படி.

17-ஆருயிர்‌ பட்டது எனதுயிர்‌ பட்டது :–நம்‌. 9. 6, 9. நான்‌ பட்ட பாட்டை நித்ய ஸூரிகளே தான்‌ பட்டார்‌ உண்டோ. பகவத்‌ குணங்களுக்கு அபூமியாயிருக்கிற ஸம்ஸாரத்திலே நான்‌ பட்ட பாட்டை நித்ய விபூதியிலே உள்ளவர்கள்‌ தான்‌ பட்டார்களோ என்கிறார்‌, இங்கு எனதுயிர்‌ பட்டது அங்கு ஆருயிர்‌ பட்டது என்‌று எம்பெருமானார்‌,

18-தெளிவிசும்பு :–நம்‌. 9. 7. 8. பரமபதம்‌ தேசமாயிருக்க அத்தைக்‌ காற்கடைக்‌ கொண்டு என்‌ நெஞ்சிலே நித்ய வாஸம்‌ பண்ணுகிறவன்‌ என்று சிற்றாட் கொண்டான்‌ பணிக்கும்‌. பரமபதத்தில்‌ பண்ணும்‌ வ்பாமோஹத்தை என்‌ நெஞ்சிலே பண்ணி வர்த்தியா நின்றான்‌ என்‌று எம்பெருமானார்‌,

19-குறுக்கும்‌ வகை உண்டு கொலோ :–நம்‌. 9, 8. 1, குறுக்கு மென்று ௮த்தேச பாஷை, எம்பெருமானார்‌ திருவடி தொழ எழுந் தருளா நிற்க, திருநாவாய்‌ எத்தனையிடம்‌ போரும்‌ என்று எதிரே வருகிறார்‌ சிலரைக்‌ கேட்டார்‌. குறுக்கும்‌! என்றார்களாய்‌, .அத்தைக்‌ கேட்டு, இப்‌ பாஷையாலே யருளிச்‌ செய்வதே ஆழ்வார்‌ என்று போர வித்தராயருளினார்‌.

20-அது நமது விதி வகையே:-நம்‌. 10. 6. 1. அது நமது பாக்யாநு குணமாக விறே என்று இதுக்குப்‌ பூர்வர்கள்‌ நிர்வஹிக்கும்படி. இத்தை எம்பெருமானார்‌ கேட்டருளி, இத் திருவாய்‌ மொழியில்‌ மேலோடுகிற ரஸத்தோடு சேராது. நாம்‌ விதித்தபடியே செய்வானாயிருந்தான்‌ என்கிறார்‌ என்‌றருளிச்‌ செய்வர்

21-மடித்தேன்‌;:–10. 8.8.
எம்பெருமான்‌ உலாவி யருளுகிறவர்‌ முடியப் போகாதே நடுவே மீண்டருள எம்பார்‌ கதவை யொருச்சரித்து திருமாலிருஞ்சோலை யாகாதே திருவுள்ளத்தில்‌ ஓடுகிறது என்ன, ‘ஆம்‌ அப்படியே” என்‌றருளிச்‌ செய்தார்‌.

எங்கள்‌ கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா ! பொங்கு புகழ்‌
மங்கையர்‌ கோனீந்த மறையாயிர மனைத்தும்‌
தங்கு மனம்‌ நீ எனக்குத் தா
”” என்றும்‌,
ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமாஜசமுனி தன்‌
வாய்ந்த மலர்ப்‌ பாதம்‌ வணங்குகின்றேன்‌–ஆய்ந்த பெரும்‌
சீரார்‌ சடகோபன்‌ செந்தமிழ்‌ வேதம் தரிக்கும்‌
பேராத உள்ளம்‌ பெற”
என்றும்‌
அடியார்கள்‌ எம்பெருமானாரைப்‌ பிரார்த்திக்கிறார்கள்‌. எம்பெருமானா ரருளாலே அருளிச்‌ செயல்‌ அவகாஹனம்‌ அமையுமென்‌றபடி.

வான்‌ திகழும்‌ சோலை மதிளரங்கர்‌ வண் புகழ்‌ மேல்‌ ஆன்ற தமிழ்‌ மறைகளாயிரமும்‌– ஈன்‌ற
முதல்‌ தாய்‌ சடகோபன்‌ -மொய்ம்பால்‌ வளர்த்த இதத்தாய்‌ இராமாநுசன்‌.
–

ஸ்ரீ நம்மாழ்வாரும் ஸ்ரீ தேசிகரும்

எல்லா வற்றுக்கும்‌ முதன்மையான ப்ரமாணம்‌ வேதம்‌. இது கடல்‌ போன்றது. கடலில்‌ அமுதம்‌ பிறந்தது. பிராட்டியும்‌ தோன்றினாள்‌. முதலைகள்‌ மீன்கள்‌ முதலி யனவும்‌ வாழ்ன்றன. அவ்வாறே வேதத்தில்‌ ஜீவ வர்க்கத்துக்கு வேண்டியனவும்‌ வேண்டாதனவுமான பல அம்சங்கள்‌ பொதிந் துள்ளன. அதன்‌ முடியாகிய வேதாந்தத்‌ தொகுதி வேதம் போலன்றி ஆன்மாக்கள்‌ உய்வதற்கு உரிய வழிகளைக்‌ காட்டுவதுடன்‌ எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌-திருமேணி, குணங்கள்‌ முதலியவற்றை விளக்க, அவனை அனுபவிப்பதற்கும்‌ வழி செய்கின்றது. பற்பல உலகியற்‌ பலன்களையும்‌ பொது வறிவையும்‌ பெற விரும்பும்‌ மனிதர் வேதத்தை ஆராய்ந்து அதில்‌ தங்களுக்கு வேண்டிய அம்சங்களை எடுத்துக்‌ கொண்டு பலன்‌ பெற முயல்கின்றனர்‌. ஆனால்‌ வேதாந்தம்‌ ஸாதாரண பலன்களையும்‌ அதற்கு வேண்டிய வழிகளையும்‌ காட்டுவதில்‌ முக்கிய நோக்‌கின்றி மோக்ஷம்‌ பெறும்‌ வரை உள்ள சிறந்த வாழ்வுக்கு வழி வகுப்பதையே குறிக்‌ கோளாகக்‌ கொண்டுள்ளது. இந்த வேதாந்தத்தின்‌ உட்கருத்‌துக்களை உள்ளவாறு உணர்ந்து பயன்படுத்திக்‌ கொள்வது கடினம்‌. பித மதத்தினர்‌ தாம்‌ ஒரு கொள்கையைப்‌ பற்றி வேதாந்த வாக்யங்களுக்கு அதற்கு ஏற்றவாறு பொருள்‌ கொண்டு தங்கள்‌ மதத்தைப்‌ பிரசாரம்‌ செய்து பிறரை மயக்குகின்‌றனர்‌. ஆஸ்திகத்‌ தன்மை யுடையவர்‌ தங்கள்‌ நல் வாழ்வுக்கு வழி தேடுவ தற்கு அவசியமான தத்துவ உணர்ச்சியையும்‌, செய்ய வேண்டிய உபாயத்தையும்‌, அடைய வேண்டிய பலனையும்‌ எளிதில்‌ நன்கு உணர்ந்து கொள்ளக்‌ கடினமான வேத வேதாந்தக்‌ கடல்‌ இடம்‌ தரவில்லை. ஓரளவுக்கே அறிவு படைத்த ஜீவ ராசிகளால்‌ வேதக் கடலுள்‌ புகுந்து துருவிப்‌ பார்த்து அவசியமான அம்சங்களைக்‌ காண முடிகின்றதா? எல்லோரும்‌ எளிதில்‌ உணர்ந்து தமக்கு நல்வழி வகுத்துக்‌ கொள்வதற்கு ஏற்ற ஒரு திவ்ய ஸூக்தியை உலருக்குக்‌ காட்டுவது கருணைக்‌ கடலான எம்பெருமானது கடமை யாயிற்று. ஸ்ரீவைருண்டத்தில்‌ உள்ள நித்ய ஸுூரிகளை இந் நிலவுலகில்‌ ஆழ்வார்களாக அவதரிப்பித்து அவர்கள்‌ திருவாக்கினின்று இனிய தமிழில்‌ நாலாயிரம்‌ பாசுரங்கள்‌ கொண்ட அருளிச்‌ செயலைத்‌ தோற்றுவித்து உலகுக்கு அளித்துக்‌ கவலை தீர்ந்தான்‌ எம்பெருமான்‌.

நம்மாழ்வார்‌ பெருமை
இந்த அருளிச்‌ செயலே தமிழ்‌ மறையென வழங்குகின்றது. இது வடமொழி மறை போலவே தென்மொழி மறை யென வழங்கப்‌ பெற்று அடியார்களை வாழ்விக்கும்‌ உயரிய ஸாதந மாக விளங்குகின்றது. இவ்வருளிச்‌ செயல்‌ பதின்மூவர்‌ திருவாக்கினின்று அவதரித்த ஸ்ரீ ஸுக்தியாயினும்‌ நம்மாழ்வார்‌ ஸ்ரீமந் நாத முனிகளுக்காகவே பரமபதத்தினின்று மறுபடியும்‌ இவ் வுலகுக்கு எழுந்தருளி அவருக்கு அருளிச்‌ செயல்‌ முழுவதையுமே தம்‌ திருவாக்கினாலேயே உபதேசித்தருளிய பெருமையை நினைந்து நம்மாழ்வார்‌ ஸ்ரீஸூக்தியாகவே பெரியோர்கள்‌ கொண்டனர்‌. ஆழ்வார்‌ என்ற தனிச்‌ சொல்‌ நம்மாழ்வாரையே குறிப்பிடுவதாகப்‌ பூர்வாசார்யர்கள்‌ காலத்திலிருந்தே தொடர்ந்து வரும்‌ கொள்கை. அதனாலேயே ஆசார்யன்‌ வாயிலாக அருளிச் செயலின்‌ எந்தப்‌ பகுதியை அத்யயநம்‌ செய்தாலும்‌ தொடக்கத்திலும்‌ பதிக முடிவிலும்‌ அந்தந்த ஆழ்வார்களின்‌ திருநாமத்தைக்‌ கூறாமல்‌ *ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌: என்றே அநுஸந்திப்பது தொன்று தொட்டு வரும்‌ முறையாகி விட்டது. நம்மாழ்வாரை அவயவியாகவும்‌ மற்ற ஆழ்வார்களை அவருக்குத்‌ திருவவயவங்களாகவும்‌ பெரியோர்கள்‌ கண்ட முடிவினின்றும்‌ நம்மாழ்‌ வருக்கு உள்ள தனிப்‌ பெருஞ்சிறப்பை நன்கு உணரலாம்‌. இவ் வம்சம்‌ நம்மாழ்வாரின்‌ பெருமை, வெள்ளத்துக்கு ஒரு கால்வாயாகும்

தேசிகன்‌ தமிழ்‌ மறையோன்‌
எம்பெருமானுடைய ஐந்து உருவங்களில்‌ பரரூபத்தின்‌ பெருமை விளக்கத்துக்கு வேதாந்தங்களையும்‌, வ்யூஹ ரூபத்துக்கு ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம்ஹிதைகளையும்‌, ராமருஷ்‌ ணாதி விபவ ருபத்துக்கு இதிஹாஸ புராணங்களையும்‌, அந்தர்யாமி ரூபத்துக்கு ஸ்ம்ருதி களையும்‌ ப்ரமாணமாகக்‌ கொண்டு அந்தந்த ரூபங்களைப்‌ பற்றி விரிவாய்‌ உணர்வது போல்‌ அர்ச்சைத்‌ திருமேனிகனின்‌ பெருமையை அறிந்து அநுபவம்‌ பெறுதற்குக்‌ தமிழ்‌ மழையே பேருதவி புரிவதால்‌ இதை அர்ச்சாவதார வேதமெனக்‌ கொண்டனர்‌ பெரியோர்‌, இந்தத்‌ தமிழ்‌ மழையை ஸ்ரீ தேசிகன்‌ தமது உடைமையாக்கிக்‌ கொண்டு பேசுவது மிகவும்‌ அழகு. நமக்கு உபய வேதாந்தமும்‌ இரு கண்கள்‌. பெரிய பெருமாளால்‌ *உபய வேதாகந்தாசார்யன்‌ ‘ என்ற விருதை அருளப்‌ பெற்றிருந்தும்‌ உலகில்‌ உள்ளோர்‌ தம்மை இன்ன கோத்ரத்தைச்‌ சார்ந்தவர்‌ என்‌று சொல்லிக் கொள்வது போல்‌ ஸ்ரீதேசிகன்‌ தம்மைத்‌ * தமிழ்‌ மறையோன்‌ ” என்‌று பெருமிதத்துடன்‌ கூறிக் கொள்ளுகிறார்‌. மேலும்‌ ஸ்ரீதேசிகன்‌ ஆழ்வாரின்‌ அருளிச்‌ செயலை உலகில்‌ உள்ள சிறந்த வாக்குக்களின்‌ ஸாரமெல்லாம்‌ ஓன்று திரண்ட அமுதமொழி யென்றும்‌, அமைதி யென்‌னும்‌ சாந்தி ரஸத்துக்கு எல்லை நிலமாய்‌ நிற்பதுடன்‌ அநுபவிப்பவர்க்கும்‌ அமைதியை அளிக்கவல்லதென்‌றும்‌, ஸம்ஸார மண்டலத்தில்‌ எழும்‌. துன்பங்களினின்று விடுபடுதற்கு முதற்சாதனமென்றும்‌, பெருமாளும்‌ பிராட்டியுமாய திவ்ய தம்பதிகளைக்‌ கண்‌ ணெதிரே கொண்டு வந்து நிறுத்துவதென்றம்‌ வாயாரப்‌ புகழ்ந்து மகழ்கிறார்‌.

செவிக்கினிய தமிழ்மறை
தமிழ்மறை ‘ என்ற சொல்லே அருளிச்‌ செயலின்‌ இனிமையைச்‌ சேர்த்துக்‌ காட்டும்‌. தமிழ்‌ நிகண்டுக்கள்‌ தமிழ்‌ எனும்‌ சொல்லுக்கு இனிமையைப்‌ பொருளாய்க்‌ காட்டுகின்றன. திருவடி பிராட்டியிடம்‌ இராமபிரானது செய்தியைச்‌ சிறையில்‌ விண்ணப்பம்‌ செய்ய முற் படும் போது வடமொழியில்‌ பேசினால்‌ இரரவணன்‌ பேசுவதாய்க்‌ கருதிப்‌ பிராட்டி அஞ்சக்‌ கூடுமென்று நினைத்து இனிமை மொழியில்‌ பேசியதாய்‌ வால்மீகி கூறியதற்குத்‌ திருவடி தமிழில்‌ பேசியதாகவே கருத்தென்பர்‌ ஆராய்ச்சி வல்லுநர்‌. இனிமையே உருக் கொண்டது அருளிச் செயல்‌. அதற்கு ஏற்ற நல்ல வாய்ப்பு. ஆழ்வார்‌ அவதரித்த திருக்குருகூரில்‌ எங்கும்‌ குளிர்ந்த சோலைகள்‌. ஆழ்வார்‌ திருவாய்‌ அமுதச்‌ சொற்களைப்‌ பொழியும்‌ தன்மையது. அவை ஈரம்‌ நிறைந்த தமிழ்ச்‌ சொற்கள்‌. அந்தத்‌ தமிழின்‌ இனிய இசை அமுத வெள்ளமாய்‌ பெருக்கு எடுத்து ஓடுகின்றதாம்‌ அவ் விசையின்பத்தை அநுபவித்தவர்களைப்‌ போற்‌றுமவர்களைப்‌ புகழ்‌பவராம்‌ ஆழ்வாரின்‌ சடரான நாத முனிகள்‌. இவ்வாறு பேசுகின்றார்‌ அமுதனார்‌. வேடன்‌ ஆண் பறவையைக்‌ கொன்றதும்‌ வால்மீகி முணிவனுக்குப்‌ பிறந்த சோகமே ஸ்ரீமத்‌ ராமாயணமாக வடிவு கொண்டது போல்‌, எம்பெருமானை நெஞ்சார அனுபவித்ததால்‌ ஆழ்வாருக்குப்‌ பிறந்த’ இன்ப வுணர்ச்சி வெள்ளமே அருளிச்‌ செயலாக உருக் கொண்டதால்‌ செவிக்கனிய மறை யாயிற்று என்கிறார்‌ ஸ்ரீதேசிகன்‌.

அருளிச்செயலில்‌ பொதிந்த ஸாராம்சங்கள்‌
அருளிச்‌ செயலை ஸகல வேதங்களினுடையவும்‌ ஸகல சாஸ்த்ரங்களுடையவும்‌ ஸாரமென்பர்‌ பெரியோர்‌. சேதநர்கள்‌ தங்கள்‌ நல்வாழ்வுக்கு முக்யமாய்‌ அறிய வேண்டியவை எவை சரீரத்திலும்‌ வேறுபட்ட ஜீவாத்மா. அவற்றுக்கு நாயகனான பரமாத்மா, அவனை மகிழ்விக்கும்‌ உபாயம்‌–அவனே மோக்ஷம் தருதல்‌–அவனிடம்‌ அபசாரம்‌ செய்வதால்‌ வரும்‌ துன்பங்கள்‌–பாகவதர்களின்‌ பெருமை–அவர்களை வழி படுவதால்‌ வரும்‌ மனவமைதி முதலியன தாமே. இத்‌துணை ஸாராம்சங்களையும்‌ ஆழ்வார்‌ தம்‌ திவ்ய ஸூக்தியில்‌ தெளிவித்திருப்பதை ஸ்ரீதேஸிகன்‌ நமக்கு எடுத்துக்‌ காட்டுகின்றார்‌.

அருளிச்செயலுள்‌ எம்பெருமான்‌ குணங்கள்‌ அடங்குதல்‌
வடமொழி வேதாந்தம்‌– தமிழ்மறை முடி ஆகிய இரண்டுக்குமே எம்பெருமானுடைய திருக் கல்யாண குணங்ககளப்‌ போற்றிப்‌ புகழ்வதில்‌ தான்‌ முக்ய நோக்கு என்பதில்‌ சிறிதும்‌ ஐயமில்லை, ஆனால்‌ அவ்விரண்டனுள்‌ அருளிச்‌ செயலுக்கு அவன்‌ குணங்களைத்‌ கெளிவிப்பதில்‌ உள்ள பெருஞ்சிறப்பைக்‌ காட்டுகின்றார்‌ தேசிகன்‌. தாயின்‌ கர்ப்பத்தில்‌ குழந்தை அடங்கக்‌ கிடப்பது போல்‌ அருளிச் செயலினுள்‌ எம்‌ பெருமானுடைய குணங்களெல்லாம்‌ அடங்கக்‌ கிடக்கின்‌றமையைக்‌ காண்கின்றார்‌ தேஸிகன்‌. வேதங்களோ உபநிடதங்களோ மற்ற நூல்களோ அருளிச்‌ செயலைப்‌ போல்‌ எம்பெருமான்‌ குணங்களைக்‌ கையில்‌ கனியாகப்‌ பிடித்துத்‌ தர வல்லனாகா என்ற கருத்து தேசிகன்‌ திருவுள்ளத்தில்‌ ஊன்‌றி விட்டது. முன்னோர்களின்‌ ஐதிஹ்யம்‌ ஒன்று உண்டு. ஒருகால்‌ அறிஞர்கள்‌ பலர்‌ ஒன்‌று கூடிய சபையில்‌ எம்பெருமான்‌ குணங்களை முழுவதும்‌ காட்ட வல்ல நூல்‌ ஒன்‌றும்‌ தோன்ற வில்லையே என்று கவலை கொண்டார்‌களாம்‌. அருளிச் செயல்‌ அவதரித்தபின்‌ அதை அவர்கள்‌ நன்கு அநுபவித்து விட்டு அதனுள்‌ அவன்‌ குணங்கள்‌ அனைத்தும்‌ அடங்கக்‌ கண் முன்‌ தெரிவதைக்‌ கண்டு மறு படியும்‌ அவர்கள்‌ ஒன்று கூடி அதனுள்‌ அடக்கக்‌ குணங்கள்‌ இல்லையே என்று பின்னும் கவலையை வெளியிட்டார்களாம்‌. இந்த்‌ ஐதிஹ்யத்தின்‌ உட்கருத்து என்ன? அருளிச்‌ செயல்‌ அவனுடைய திருக் குணங்களை மிகத்‌ தெளிவாய்‌ விளக்கும்‌ திறனுடையது என்பதும்‌, அந்த ஆற்றல்‌ மற்ற ப்ரமாணங்களுக்கு இல்லை யென்பதும்‌ தாமே! இதைத்‌ தான்‌ தேஸிகன்‌ ஆழ்வார்‌ பாசுரங்கள்‌ எம்பெருமானுடைய குணக் குழுவைத்‌ தம்‌ கர்ப்‌ பத்தில்‌ கொண்டன என்று அருளிச்‌ செய்கின்றார்‌. ஆழ்வார்‌ தாமே பெரிய திருவந்தாதித்‌ தொடக்கத்தில்‌ அவனுடைய திருக் குணங்களைத்‌ தம்‌ பாசுரங்களில்‌ பொதிந்து விடுவதற்‌குத்‌ தம்முடன்‌ ஓத்‌துழைக்குமாறு தம்‌ நெஞ்சையே அழைக்கின்றார்‌–

அவனை அநுபவிக்க அருளிச்செயலே ஸாதநம்‌
ஜீவனுடைய ஸ்வரூபம்‌–எம்பெருமான்‌ திருமேனி–திருக் குணங்கள்‌ முதலிய வற்றில்‌ தெளிவான அறிவு ஏற்பட்‌ வேண்டுமானால்‌ தமிழ்‌ மாலைகளின்‌ வடிவமான அருளிச் செயலை ஆசார்யனிடம்‌ பக்தி சிரத்தைகளுடன்‌ அத்யயனம்‌ செய்ய வேண்டும்‌. அங்ஙனம்‌ தாம்‌ கற்றதால்‌ வேதங்களைக்‌ கொண்டு அறிய முடியாத ஸுக்ஷ்ம ரஹஸ்‌யங்கள் யெல்லாம்‌ தெளிந்து கொண்ட பெருமையை அருளிச்‌ செயலால்‌ பெற்றதாகத்‌ தேசிகன்‌ கூறிக் கொள்கின்றார்‌. வேதங்கள்‌ எடுத்துக்‌ காட்டாத வேத புருஷனுக்கும்‌ புலனாகாத ரஹஸ்யங்களைக்‌ கூட அருளிச்‌ செயலால்‌ தாம்‌ தெளிந்து கொண்டதைத்‌ தேசிகன்‌ பேசுவதாகச்‌ சுவை படக்‌ கூறுவர்‌ சில அறிஞர்கள்‌. அளவற்ற ஓர்‌ அமுதக்‌ கடல்‌, அதைப்‌ பருக ஒருவனுக்கு வேட்கை. அப்படியே வாரிப்‌ பருக முடியுமா? அதற்காக ஓர்‌ அல்லித்தண்டை எடுத்து அதன்‌ துவாரத்தாலே உறிஞ்சி யுறிஞ்சி இயன்‌ற வளவுக்குப்‌ பருசச்‌ சுவை காண்கின்றான்‌. அவ்வாறே எம்பெருமான்‌ ஓர்‌ ஆராவமுதக்‌ கடல்‌, அவனை அப்படியே வாரிக்‌ கொண்டு விழுங்க ஆசை தான்‌. இயலுமா? அதற்‌ காகத்‌ தமிழ்மொழியில்‌ உள்ள அருளிச்‌ செயலை அவனை அநுபவிக்கச்‌ சாதனமாகக்‌ கொள்கிறான்‌ ரஸிகன்‌, எப்படி? அவன்‌ திருமேனி–குணம்‌—லீலைகள்‌ முதலியவற்ஹை அருளிச்‌ செயலைக்‌ கொண்டு கண்ணாரக்‌ கண்டு அநுபவித்துப்‌ பேரின்பம்‌ காண்கின்றான்‌. எத்தகைய அழகிய உவமானம்‌! இவ் வுவமையைக்‌ காட்டியவர்‌ தேசிகன்‌.–

நம்மாழ்வாரே ப்ரபந்ந ஸந்தாந கூடஸ்த்தர்‌
மோக்ஷத்தை அடைவதற்குப்‌ பக்தி-ப்ரபத்தி என்னும்‌ இரண்டே உபாயங்கள்‌ உள்ளன வென்று உபசிடதமும்‌ மற்ற சாஸ்த்ரங்களும்‌ முறை யிடுகின்‌றன. பக்தி யோகம்‌ செய்தற்கு எத்தனையோ வரையறைகள்‌. விரைவில்‌ பலன்‌ பெறுவது இயலாது, அதற்குத்‌ தகுதிகளைச்‌ சிந்திக்கும்‌ போது அஞ்ச வேண்டி வரும்‌. ப்ரபத்தி எல்லோரும்‌ செய்தற்கு ஏற்‌ற எளிய உபாயம்‌. இரண்டும்‌ மறை கண்ட உபாயங்களே-நம்மாழ்‌ வாருக்கு முன்பும்‌ பலர்‌ ப்ரபத்தியை அநுஷ்டித்துப்‌ பலன்‌ பெற்றுள்ளனர்‌. ஆனால்‌ நம்மாழ்வார்‌ காலத்துக்குப்‌ பின்பே ப்ரபத்திக்குப்‌ பெருஞ்செல்வாக்கு ஏற்பட்டுப்‌ பெரும்பாலோர்‌ ப்ரபத்தியையே உபாயமாகக்‌ கொண்டுள்ளனர்‌. ஆழ்வார் தாம்‌ தம்‌ ஸ்ரீ ஸூக்த்திகளின்‌ வாயிலாகவும்‌ தமது அநுஷ்டாநத்தின்‌ மூலமாகவும்‌ ப்ரபத்திக்கு மிக்க செல்வாக்கை உண்டாக்கிப்‌ புத்துயிரளித்தார்‌. பிற்காலத்‌தனரும்‌ இந்த எளிதான வழியையே கைக் கொள்ளும்படி செய்தருளினார்‌. இப்படி. ப்ரபந்நர்களின்‌ ஸந்ததிக்கு இவரே முக்கிய மூல புருஷராயிருப்பது பற்றி ப்ரபந்ந ஸந்தாந கூடஸ்த்தரென வழங்கப்‌ பெற்றார்‌. இந்த வழக்கு யாரால்‌ வந்தது? எம்பெருமானாலேயே. ஆழ்வார்‌ தாமே கூறுகின்றார்‌-தம்மை ப்ரபந்ந ஸந்தாந கூடஸ்த்தராக்குவதற்கு ஸங்கல்பித்து விட்டானாம்‌ எம்பெருமான்‌. தன்னைப்‌ பற்றிய தெளிந்த அறிவைத்‌ தந்தானாம்‌, பிரமன்‌ கலைமகளை வால்மீகி முனிவன்‌ வாயில்‌ புகச்செய்‌து இராமாயணத்தைத்‌ தோற்றுவித்தது போலன்றி எம்பெருமான்‌ தானே தம்‌ நாவில்‌ புகுந்து அவனே பாடுவித்தது திருவாய்மொழி என்‌கிறார்‌ ஆழ்வார்‌. அதன்‌ வாயிலாகப்‌ ப்ரபத்தி நெறியைத்‌ தம்‌ வாயினால்‌ அவனே பேசு வித்து ப்ரபந்ந ஸந்தாந கூடஸ்தராக்கி விட்டான்‌ என்று பேசுகின்றார்‌ ஆழ்வார்‌.

ஆழ்வார்‌ அவதரித்த குலத்தின்‌ பாக்கியம்‌
ஆழ்வாரிடம்‌ ஸ்ரீதேசிகனுக்கு உள்ள ஈடுபாட்டின்‌ மிகுதி. அவர்‌ அவதரித்த குலச் சிறப்பையும்‌ போற்றத் தூண்டுகிறது. ஆழ்வார்‌ தாம்‌ அவதரிப்பதற்கு ப்ராஹ்மண க்ஷத்திரிய வைச்யர்‌ ஆகிய முக் குலத்தையும்‌ விட்டு வேளாளர்‌ குலத்தில்‌ அவதரிப்‌பானேன்‌? அது மட்டும்‌ அன்றே! அந்தக்‌ குலத்தில்‌ அவதரித்த ஆழ்வார்‌ ஆசார்ய சிரேஷ்டராய்‌ விளங்கும்‌ ஸ்ரீ மந் நாதமுனிகளுக்கும்‌ பரமாசார்யராய்‌ பூலோகத்தில்‌ அவதரித்துள்ள ஆசார்யர்களுக்குள்‌ முதல்வராய்‌ விளங்கும்‌ ஆச்சர்யத்தைச்‌ சிந்திக்கின்றார்‌ தேசிகன்‌. அதற்குக்‌ காரணமும்‌ காட்டி யருள்கின்றார்‌. எம்பெருமானுடைய திருவவய வங்களில்‌ திருவடி தானே சரணமடைதற்கு இடமாய்‌ விளங்குவது! திருவடியைப்‌ பிடித்‌தால்‌ தானே அவன்‌ அன்பும்‌ கருணையும்‌ சுரக்கும்‌! அவன்‌ திருவடியினின்று தோன்றி யது வேளாளர்‌ குலம்‌ ஒன்றே. மற்ற அவயவங்களினின்று தோன்றிய மற்ற குலங்‌களுக்கு இப் பெருமை கிட்டவில்லையே-அந்தக்‌ குலம்‌ அவன்‌ திருவடியினின்‌று பிறந்ததை வேதமும்‌ ஓதுகின்றதே! அக்குலத்துப்‌ பிறந்தாலும்‌ பகவத்‌ பக்தி யுடையவனாகில்‌ அவனை மற்றவர்கள்‌ மிக மதித்துப்‌ பாராட்ட வேண்டு மென்பதை உலகுக்கு உணர்த்‌தவே ஆழ்வார்‌ வேளாளர்‌ குலத்தில்‌ அவதரித்தார்‌. எம்பெருமான்‌ திருவடியினின்று தோன்றிய சிறப்புடன்‌ ஆழ்வார்‌ அவதரித்த பெருமையும்‌ சேர்ந்து அக் குலமும்‌ எல்லோரும்‌ கொண்டாட உரியதாபிற்‌.று. இதுவே தேசிகன்‌ கண்டு வெளியிட்ட உண்மை.

அருளிச்செயல்‌ கற்ற வைஷ்ணவனாக வேண்டுதல்‌
ஆழ்வார்களின்‌. அருளிச்செயல்‌, தமிழ்‌ மறையென்றும்‌, தமிழ்‌ மறைமுடியென்றும்‌ வழங்கும்‌, வடமொழியில்‌ வேதத்தினும்‌ சிறந்தது வேதாந்த மெனப்படும்‌ உப நிடதம்‌. வேதத்தை அத்யயனம்‌ செய்தே அந்தணத்‌ தன்மையை நிலை நிறுத்திக்‌ கொள்ள வேண்டுவது போல்‌ அருளிச்‌ செயலை ஆசார்யன்‌ வாயிலாக ஓதிக்‌ கற்றே வைணவத்‌ தன்மையைப்‌ பெற்றாக வேண்டும்‌. அருளிச்‌ செயலிலும்‌ வேதம்‌ வேதாந்தம்‌ என்ற பாகுபாட்டைக்‌ கண்டனர்‌ பெரியோர்‌. மற்ற ஆழ்வார்களின்‌ பாசுரப்‌ பகுதியை வேத மெனவும்‌ நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழியை வேதாந்தமெனவும்‌ கொண்டனர்
பெரியோர்‌. மற்ற ஆழ்வார்களின்‌ பாசுரப்‌ பகுதியை வேதமெனவும்‌ நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழியை வேதாந்தமெனவும்‌ கொண்டனர்‌ பழங்காலத்துப்‌ பெரியோர்‌. வடமொழி வேதத்தை முழுதும்‌ அத்யயநம்‌ செய்ய வாய்ப்புப்‌ பெறாதவர்‌ உபநிஷத்தையோ புருஷ ஸூக்தத்தையோ அத்யயநம்‌ செய்தால்‌ தான்‌ தம்மை அந்தண ரென்று சொல்லிக்‌ கொள்ள உரிமை உண்டு அவ்வாறே மற்ற மூவாயிரம்‌ பாசுரங்‌களைப்‌ பயில இயலாதார்‌ திருவாய்மொழியை மட்டுமாவது அத்யயநம்‌ செய்தால்‌ தான்‌ அவர்களிடம்‌ வைணவத் தன்மை நிலை நிற்கும்‌. எம்பெருமானது திருவுள்ளத்தை உகப்பிக்கத்‌ திருவாய்மொழியினும்‌ சிறந்‌த ஸாதநம்‌ இல்லை யென்பது உறுதி–

அருளிச்செயலைக்‌ கல்லாதவரும்‌ உய்ய வழி
ஸ்ரீதேசிகன்‌ கண்ட உண்மை என்ன? அருளிச்‌ செயலைக்‌ கல்லாதவரிடத்து எம்‌ பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதில்லையாம்‌, எல்லோருக்கும்‌ அதனைக்‌ கற்கும்‌ பாக்கியம்‌ கிட்டுகின்றதா? வடமறையில்‌ உள்ள ஊற்றத்தால்‌ தமிழ்மொழியில்‌ உள்ள அருளிச்‌ செயலைக்‌ கற்கும்‌ பேறு பெறாதவர்‌ பலர்‌. எம்பெருமான்‌ திருவுள்ளத்தை ஈர்த்து வசப்‌ படுத்த வல்ல இனிய ஓசை பெற்ற அருளிச்‌ செயலின்‌ பெருமையை உணராததால்‌ அதனைக்‌ கற்காது கை விட்டுப்‌ பொழுது போக்குமவர்‌ பலர்‌, இத்தகைய தெளர்ப்பாக்‌கிய முடையாரிடம்‌ எம்பெருமான்‌ திருவுள்ளத்தில்‌ அன்பு எந்நாளும்‌ ஏற்படாதாம்‌. இந்த ஜீவராசிகளிடமும்‌ ஆழ்வாருக்குக்‌ கருணை சுரக்கின்றது. வைணவராய்ப்‌ பிறந்தாலாவது நற்கதி பெறட்டுமே என்ற குளிர்ந்த எண்ணம்‌ ஆழ்வாருக்கு அவர்களையும்‌ உய்விக்க ஒரு வழி கண்டார்‌ ஆழ்வார்‌, தாமே ஸ்ரீசடாரி யுருக் கொண்டு அதனுள்ளே புகுந்தும்‌ நின்றார்‌. அவர்கள்‌ அர்ச்சைத்‌ திருமேனியை வந்து ஸேவிக்கும்போது அவர்கள்‌ முடியில்‌ ஸ்ரீசடாரி அமருவதால்‌ இந்த பாக்கியத்தையாவது பெற்றார்களே யென்று அவர்களிடம்‌ திவ்ய தம்பதிகளுக்குக்‌ கருணை சுரக்குமாம்‌. ஜீவ ராசிகளிடம்‌ இத்தகைய கருணை கொண்டு வாழ்விக்கும்‌ பெருமையை நினைந்து எல்லாரும்‌ ஆழ்‌வாரைப்‌ பக்தியுடன்‌ தொழுகின்றார்களாம்‌. தேஸிகனது எத்தகைய அழகிய உண்மை விளக்கம்‌ ! இதைத்‌ திருவுள்ளத்துக்‌ கொண்டு தான்‌ எம்பெருமான்‌ திருவடியில்‌ முடியை வைப்பதற்கு ஆழ்வார்‌ திருவருள்‌ வேண்டுமென்று தேசிகன்‌ முடிவு கூறுகின்‌றார்‌. ஸ்ரீசடாரி தான்‌ ஆழ்வார்‌, ஆழ்வார்‌ தாமே ஸ்ரீசடாரி!

வானுலகிலும்‌ அருளிச்‌ செயல்‌ கோஷ்டி
இந்த அருளிச்‌ செயலின்‌ அநுஸந்‌தாநம்‌ இவ் வுலகில்‌ மட்டுமா -தேவ லோகத்‌திலும்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ கூடச்‌ சிறப்பாய்‌ நடப்பதாய்‌ ஆசார்யர்கள்‌ கண்டனர்‌. ஒரு விசேஷம்‌ பார்ப்போம்‌-திருமாவிருஞ்சோலைமலை. அம்மலையின்‌ திருநாமத்தைக்‌ கூறினாலே திருமால்‌ நேரில்‌ ஓடிவந்து நெஞ்சு நிறையப்‌ புகுவதாய்க்‌ காண்கின்றார்‌ ஆழ்வார்‌. அங்கே சிலம்பாறு பெருகி ஓடுகின்றது. எம்பெருமானாருக்கு ஞான புத்திரராய்‌ பரம அந்தரங்கரான ஆழ்வான்‌ தாம்‌ கண்ணாலே கண்டதை நமக்குக்‌ காட்டுகின்றார் –தேவலோகத்தினின்‌று கின்னரப்‌ பெண்கள்‌ அழகரை ஸேவிக்க ஆசைப்பட்டுத்‌ திரு மாலிருஞ்சோலை மலையின்‌ தாழ்வரைக்கு வந்து சேருகின்றனராம்‌. ௮ந்த வகுப்பினர்க்கே இயற்கையாக எம்பெருமான்‌ அருளியுள்ள குரலின்‌ இனிமையோடும்‌ பொருட்சுவை யுணர்ச்சியோடும்‌ கருத்தில்‌ தெளிவுடனும்‌ அப்பெண்கள்‌ மகிழ்‌ மணம்‌ வீசும்‌ திருவாய்‌ மொழியைப்‌ பாடுகின்றனராம்‌. அதைக்‌ கேட்டு அந்த மலையின்‌ கற்பாறைகள்‌ உருகிச்‌ சிலம்பாறாய்ப்‌ பெருகுவதாய்க்‌ கண்டு வியப்புற்‌று அருளிச்‌ செய்கின்றார்‌. சிலம்பாற்றின்‌ அவதார ரஹஸ்யத்தைக்‌ கண்டு விட்ட பெருமிதம்‌ ஆழ்வானுக்கு, ஆழ்வானிடம்‌ பக்தி மிகுந்த ஸ்ரீதேசிகனோ பின்னும்‌ மேலே ஒரு படி சென்று பேசி யருள்கின்றார்‌–பரம பதம்‌ சேர்ந்த சேதநன்‌ அங்கே நித்ய ஸூரிகளுடனும்‌ முக்தி பெற்றவர்களுடனும்‌ சேர்ந்து ஒரு கோஷ்டியாக அமர்க்து ஸாமகாநம்‌ ‘ செய்வதுடன்‌ பல்லாண்டென்று தொடங்கும்‌ அருளிச்செயலையும்‌ ஸங்‌கீத லோகத்திலேயே இது வரை அமையாத அற்புத தெய்விக – கானத்துடன்‌ பாடி பகவத்‌ குணங்களை அநுபவிப்பதாயும்‌ தாமும்‌ அதில்‌ கலந்து கொண்டு இன்புறுவதாயும்‌ தம்‌ பிரபந்தத்தில்‌ அருளிச்‌ செய்கின்றார்‌. அடியார்களுக்கு இம்மையில்‌ மட்டுமன்றி மறுமையிலும்‌ அதிலும்‌ ஸ்ரீவைகுண்டத்திலும்‌ அருளிச்‌ ‘ செயலின்‌ அநுஸந்தாநம்‌ சாச்வதமாய்‌ நடைபெறுவதைக்‌ காண்கின்றார் தேஸிகன்‌.

தமிழ்‌ மறையும்‌ நித்யமானது
அருளிச்‌ செயலும்‌ வேதம் போல்‌ நித்யமான தென்பதும்‌ , ஒவ்வொரு கல்பத்‌திலும்‌ அவதரிப்பதென்பதும்‌.ஆசார்யர்கள்‌ கண்ட உண்மை. சப்த மென்பது தோன்றி அழிவதால்‌ அநித்ய மென்று தீர்ந்திருக்க, சொற்றொடர்களாலான வேதம்‌ எப்படி நித்யமாகும்‌? என்ற கேள்விக்கு ஸ்ரீபாஷ்யகாரர்‌ தாமே விரிவாக விடை அருளிச்‌ செய்துள்ளார்‌. ஸர்வேச்வரன்‌ கற்பம் தோறும்‌ வேதத்தை முந்திய சொற்றொடரின்‌ வரிசை சிறிதும்‌ மாறாது கண்டு பிரமனைப்‌ படைத்து அவனுக்கு வேதத்தை உப தேசித்து அவனைக்‌ கொண்டு வஸிஷ்டர்‌ முதலியவர்கள்‌ வழியாக வேதத்தின்‌ அமைப்பில்‌ சிறிதும்‌ மாறுபாடின்றி உலகில்‌ பரவச்‌ செய்ய, அங்ஙனம்‌ நிற்பதுவே வேதத்தின்‌ நித்யத்‌ தன்மையாகும்‌ என்பது ஸ்ரீபாஷ்யத்தில்‌ அருளிய முடிவு, அங்ஙனமே கற்பந்தோறும்‌ ஆழ்வார்களின்‌ அவதாரமும்‌ அவர்களின்‌ திருவாயினின்‌று அருளிச்‌ செயல்‌ தோன்றுவதும்‌ பாசுரங்களின்‌ உருவத்தில்‌ சிறிதும்‌ மாறுபாடின்றி அநு சந்தான முறை வருவதும்‌ நடை பெறுவதால்‌ வடமொழி மறை போல்‌ தமிழ்‌ மறையும்‌ நித்யமென்று ஆசார்யர்கள்‌ ஒரு முகமாய்க்‌ கண்டு பேசினர்‌. ஸ்ரீதேஸிகனும்‌ அருளிச்‌ செயல்‌ ஆழ்வாரிடமிருந் து கற்பந் தோறும்‌ அவதரித்துக்‌ கொண்டேயிருப்‌ பதைத்‌ திருவுள்ளத்துக்‌ கொண்டு ஆழ்வாரைப்‌ பற்றிப்‌ பேச நேரும்‌ பல இடங்களிலும்‌ அருளியச்‌ செயலை இயற்றியவர்‌ என்று கூறாது கண்டவரென்றே வழங்கி யிருப்பதும்‌ இதனை வலியுறுத்தும்‌ . ஸ்ரீதேஸிகன்‌ போற்றும்‌ ஸ்ரீபட்டரும்‌ அருளிச்‌ செயலை ஆழ்வார்‌ ஸாஷாத் கரித்ததாகவே அருளிச்‌ செய்துள்ளார்‌. அருளிச்‌ செயலின்‌ சாசுவதத்‌ தன்‌மைக்கு இன்னும்‌ வேறு என்ன சான்று வேண்டும்‌.

நம்மாழ்வார்‌ ஆழ்வாரும்‌ ஆசார்யனு மாதல்‌
இந்நிலவுலகில்‌ முதன்‌ முதலாக” அவதரித்த ஆசார்யன்‌ யார்‌? நம்மாழ்வாரே. அவருக்ரு ஆசார்யனாய்‌ விளங்கும்‌ ஸேனை முதலியாரோ ஸ்ரீவைகுண்டத்தினின்று பரமபதநாதன்‌ நியமனப்படி இந் நிலவுலகில்‌ வந்து ஆழ்வாருக்குத்‌ திருவாழி திருச்சங்கு பொறித்து உபதேசமும்‌ செய்து விட்டு மீண்டும்‌ ஸ்ரீவைகுண்டத்துக்கே சென்று விட்டார்‌. ஆகவே நம்மாழ்வாருக்கே முன்போ அவர்‌ காலத்திலோ பூவுலகில்‌ அவதரித்து வாழ்ந்த ஆசார்யன்‌ யாராவது உண்டாவென்று சிந்தித்துப்‌ பாருங்கள்‌. ஆழ்வார்களின்‌ கோஷ்டியிலும்‌ மற்ற ஆழ்வார்களைத்‌ தமக்கு அவயவங்களாகக்‌ கொண்டு தாம்‌ அவயவியாக நின்று முதன்மை பெற்று விளங்குமவர்‌ நம்மாழ்வார்‌ ஒருவரே. இந்தத்‌ தனிப் பெருமை, திருமந்திரம்‌ ஒன்றே ரஹஸ்ய வகுப்பிலும்‌ வியாபக மந்திர வகுப்பிலும்‌ சேர்ந்து தனிப் பெருமையுடன்‌ விளங்குவது போன்றதாகும்‌.

அருளிச்‌ செயல்‌ வேதமும்‌ உபப்ரும்ஹணமு மாதல்‌
தமிழ்மறை சுதந்திரமான முறையில்‌ வேதமாகவும்‌ உபநிடதமாகவும்‌ விளங்குவதோடு வேதத்தின்‌ நுண்ணிய கருத்தை விளக்கும்‌ உப ப்ரும்ஹண வகுப்பிலும்‌ சேர்ந்து பிரகாசிக்கன்றது. இந்த அம்சத்தை இன்னும்‌ சற்று ஆராய்ந்தால்‌ வேதங்களின்‌ பொருளைத்‌ தெளிவாய்‌ அறிவதற்கு இதிஹாஸமும்‌ புராணமும்‌ உதவி செய்வதற்கு மேலும்‌ மிகப்‌ பெரியதோர்‌ அளவுக்கு அருளிச்‌ செயல்‌ சிறிதும்‌ ஐயம்‌ எழாதவாறு வேதங்களின்‌ ரஹஸ்யங்களை விளக்கிக்‌ காட்டுவதால்‌ உபப்ரும்ஹணங்களுள்ளும்‌ தலை சிறந்து விளங்குவதாக ஸ்ரீதேசிகன்‌ புகழ்த்தருள்கின்றார் . அருளிச்‌ செயலை மறை யாகவே கொண்டு சிந்திக்கும் போது பழமையான உபநிஷத்துக்களுள்‌ முதன்மை பெற்று விளங்குவதாகவும்‌ காண்கின்றார்‌ தேசிகன்‌. அதனால்‌ தான்‌ அர்ச்சைத்‌ திருமேனி திருவீதியில்‌ எழுந்தருளும்போது தமிழ் மறை கோஷ்டியை எம்பெருமான்‌ நாடித்‌ தொடர்வதும்‌ தொன்று தொட்டு வரும்‌ ஸம்ப்ரதாயமாகி விட்டது.

ஆளவந்தாரின்‌ ஈடுபாடு-தேசிகள்‌ விளக்கம்‌
ஆளவந்தார்‌ ஸ்ரீ ஸூக்திகளுள்‌ ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம்‌ தனிச்‌ சிறப்புப்‌ பெற்றது. புராணங்களுள்‌ மிகச்‌ சிறந்ததால்‌ ஸ்ரீ விஷ்ணுபுராணம்‌ புராணரத்நம்‌ என்‌றும்‌, மந்த்ரங்‌களுள்‌ ஒப்பற்ற த்வயம்‌ மந்த்ர ரத்நம்‌ என்றும்‌ வழங்குவது அனைவரும்‌ அறிந்ததே . அவ்வாறே ஸ்தோத்ரங்களுள்‌ முதலவதாரம்‌ பெற்று ஆளவந்தாருக்குப்‌ பின்னிட்ட எம்பெருமானார்‌ உள்ளிட்ட எல்லா ஆசார்யர்களின்‌ அநு ஸந்தாநத்துக்கும்‌ ஏற்றதாயுள்ளமை பற்றி இது ஸ்‌தோத்ர ரத்நமென வழங்குகின்றது இதில்‌ ஐந்தாவது சுலோகம்‌ ‘மாதா பிதா யுவதய:’ என்று தொடங்குவது அருளிச்‌ செயலின்‌ அநு ஸக்தாநத்தின்‌ போதெல்லாம்‌ முன்பு அனைவரும்‌ அநுஸந்திக்க வேண்டிய ஸ்லோகமா தலின்‌ இதாய் அறியாத வைணவர்‌ இலர்‌. ஸ்ரீஸ்தோத்ர ரத்த்துக்கு விரிவான உரையிட்டு டருளிய ஸ்ரீ தேஸிகன்‌ இச்சுலோகத்துக்கு அருளிய உரை: ஓர்‌ அற்புதப்‌ படைப்பும்‌ ஆளவந்தாருக்கு ஆழ்வாரைப்‌ பற்றிப்‌ பொங்கி யெழுந்த பக்தி வெள்ளத்துடன்‌ தம்முடைய பக்திப்‌ பெருக்கையும்‌ சேர விட்டு இந்தஸ் ஸ்லோகத்துக்கு விரிவுரை யருளி இருவர்‌ பக்தி வெள்ளத்துக்கும்‌ வடிகால்‌ விடுகின்றார்‌ தேசிகன்‌ –

ஸ்ரீதேசிகன்‌ இடும்‌ ௮வதாரிகை
இஸ்ஸ்லோகத்‌துக்குத்‌ தேசிகன்‌ இடும்‌ அவதாரிகையே விலக்ஷணமானது, ஆளவந்தார்‌ கீழ்ஸ் ஸ்லோகத்தால்‌ பராசர மஹர்ஷியை வணங்கி விட்டார்‌. உடன்‌ ஆழ்வார்‌ திருவடிகளைத்‌ தொழுகின்றார்‌. குறிப்பிட்டுப்‌ பராசரரைத்‌ தொடக்கத்தில்‌ துதிக்கக்‌ காரணம்‌ யாது வேதாந்தார்த்தங்களை நிர்ணயித்து விளக்கும்‌ ஸ்ரீவிஷ்ணு புராணம்‌ என்‌னும்‌ அற்புதக்‌ கிரந்தத்தை அவர்‌ அருளியதேயாகும்‌. அடுத்து ஆழ்வார்‌ திருவடிகளே இலக்கு. ஏன்‌? கீழ்க்கூறிய ஸ்ரீவிஷ்ணு புராணத்தைக்‌ காட்டிலும்‌ ஆழ்வாரின்‌ அருளிச்‌ செயல்‌ வேதாந்தங்களின்‌ ரஹஸ்யார்த்தங்களை மிகக்‌ தெளிவாய்‌ விளக்குவதே காரணமாகும்‌. அருளிச்‌ செயலைக்‌ கேட்பவர்க்கு உடனேயே எம்பெருமானிடம்‌ ஈடு பட்டு உள்ளம்‌ மகிழ வாய்ப்பு ஏற்படுமாம்‌. மேலும்‌ அதன்‌ அநுஸந்தாநத்தைச்‌ செவி சாய்த்ததுமே அவன்‌ திருவுள்ளத்தில்‌ மகழ்ச்சி பொங்கச்‌ செய்கின்றதாம்‌ அருளிச்‌ செயல்‌. எல்லாச்‌ சாதியாரும்‌ அநுஸந்தித்து நல்வாழ்வு பெறுதற்கு வழிகாட்டியா யுள்ளது. மேலும்‌ ஆளவந்தாருக்குப்‌ பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு ஆழ்வார்‌ நேர்‌ ஆசார்யனாய்‌ விளங்குகின்றார்‌. எப்படி? இருவர்க்கும்‌ மிகுந்த இடையீடு உள்ளதா யிற்றே என்று கேட்கலாம்‌. நாதமுனிகள்‌ பல காலம்‌ கொடுந் தவம்‌ புரிந்து ஆழ்‌வாரைப்‌ பரமபதத்தினின்று இந் நில வுலகுக்கு மறுபடியும்‌ எழுந்தருளச்‌ செய்தார்‌. பரம புருஷனது ஸங்கல்பமும்‌ இதற்கு முதற்‌ காரணமாய்‌ நின்றது. ஆழ்வார்‌ நேரில்‌ எழுந்‌ தருளி அதுவரையில்‌ மறைந்திருந்த–ஸகல உப நீஷத்துககளின்‌ ஸாரமான அருளிச்‌ செயல்‌ முழுதையுமே ஸ்ரீமந்‌ நாதமுனிகளுக்கு உபதேசித்தருளி முதல்‌ ஆசார்யரானார்‌. உபநிடதம்‌ எம்மெருமானையே தாய்‌-தந்தாய் -ஸஹோதரன்‌ முதலிய எல்லா உறவினனாயும்‌ ஓதுகின்‌றது . அதைத்‌ தழுவி இப்பொழுது ஆளவந்தார்‌ ஆசார்யனான ஆழ்வாரையே, அவர்‌ திருவடிகளையே எம்பெருமானுக்கு உள்ள எல்லா உறவுமுறையும்‌ உடையனவாகக்‌ கொண்டு ஐந்தாவது ஸ்லோகமிட்டு வணங்குகின்றார்‌.

ஸ்ரீதேசிகன்‌ தரும்‌ பொருள்‌ விளக்கம்‌
அவர்‌ திருவடிகளில்‌ ஈடுபட்டுப்‌ பேசும்போது ஆழ்வாரையே மறந்து விடுகின்றார்‌ ஆள வந்தார்‌. சாஸ்த்ரங்களெல்லாம்‌ தாயின்‌ பெருமையைக்‌ கூறும்‌ போது அவன்‌ பத்து மாதம்‌ சுமந்து பெற்றெடுத்து வளர்த்துப்‌ புதல்‌வனின்‌ கலத்தைப்‌ பேணுதலைக்‌ கருதித்‌ தந்தையினும்‌ மிகச்‌ சிறந்தவளாகப்‌ புகழ்கின்றனர்‌. அத்தகைய தாய்‌ தமக்கு ஆழ்வார்‌ திருவடிகளே என்கின்றார்‌ ஆளவந்தார் -அடுத்து தந்தையின் நினைவு வருகின்றது. தந்தை புத்திரனை நல்வழிப்‌ படுத்திச்‌ சிறந்த நிலைக்கும்‌ கொண்டு வருமவனாதலின்‌ மிக்க மதிப்‌ புக்கு உரியன்‌. “அடுத்து நிற்பவள்‌ மனைவி. தம்பதிகள்‌ ஒற்றுமையுடன்‌ வாழ்க்கை நடத்தினால்‌ அறம்‌-பொருள்‌-இன்பம்‌ ஆகியவை எளிதில்‌ கிட்டு மென்று கூறுகின்றது சாஸ்த்ரம்‌. இந்தத்‌ தந்தை-மனைவி என்ற உறவினர்‌ மூறையிலும்‌ நின்று தம்மைக்‌ காப்பன ஆழ்வார்‌ திருவடிகளே யென்கின்றார்‌. பின்‌ புத்திரர்களைப்‌ பார்ப்போம்‌. குடும்பத்தில்‌ அவர்களுக்கு முக்கிய ஸ்தாநம்‌ உண்டு, புத்திரர்களைக்‌ கண்டாலே பெற்றோர்களுக்குப்‌ பெருமகிழ்ச்சி. முது மையில்‌ பெற்றோர்களைக்‌ காப்பவர்‌புத்திரர்களே. மேலும்‌ ப்ரபந்நர்களல்லாத பெற்றோர்களைப்‌ புத்‌ என்னும்‌ நரகத்தில்‌ விழாமல்‌ காப்பதால்‌ புத்திரர்‌ என்று பெயர்‌ வந்ததாகவும்‌ கூறுவர்‌; முன்னோர்கள்‌ நம்‌ குலத்தில்‌ புத்திரன்‌ பிறப்‌பானா என்று ஏங்கியதும்‌ உண்டு; புத்திரன்‌ பிறந்து அதிலும்‌ வைணவச்‌ சிறப்பைப்‌ பெறுவானாயின்‌ பித்ருக்களும்‌ பிதா மஹர்களும்‌ தோள்களைத்‌ தட்டி மகிழ்ச்சியால்‌ கூத்தாடுவதும்‌ உண்டு என்று ப்ரமாணங்கள்‌ கூறுகின்‌றன, இத்தகைய சிறப்புப்‌ பெற்ற புத்திரர்கள்‌ போல்‌ தம்‌ அன்புக்கு உரியனவாய்த்‌ (தமக்கு உதவி புரிவனவாயுள்ளன ஆழ்வாரின்‌ . இரண்டு திருவடிகளே என்‌கிறார்‌. அது. மட்டுமன்று. ஒவ்வொரு குடும்பத்துக்கும்‌ சில உடைமைகள்‌ உண்டே! அவையாவன-பணியாளர்‌-அடியார்கள்‌-வீடு-நிலம்‌-செல்வம்‌ முதலியன-இவை ஒருவருடைய வாழ்க்கையை வளம்‌ பெறச்‌ செய்வன. மற்றும்‌ இம்மைப்‌ பயன மறுமைப்‌ பயன்‌ முதலியவற்றுக்குச்‌ சாதனமாயுள்ள அனைத்‌துமே தமக்கு ஆழ்வார்‌ திருவடிகள்‌ தாம்‌ என்கிறார்‌ ஆளவந்தார்‌-மேலும்‌ தமக்கு இவ்வுலகில்‌ மட்டும்‌ அல்ல-மோக்ஷம்‌ பெற்ற பின்பும்‌ தமக்கு ஆழ்வார்‌ திருவடிகளே தஞ்ச மென்கிறார்‌. எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பெறுதற்குக்‌ கூட அவனைக்‌ காட்டிலும்‌ ஆழ்வார்‌ திருவடிகளையே கதியாய்ப்‌ பற்ற வேண்டுமாம்‌-

ஆசார்யன்‌ கருணை எம்பெருமானதினும்‌ விஞ்சியது
எம்பெருமானது கருணை சேதநர்களிடம்‌ அநாதியாக இருப்பினும்‌ அது ஆசார்யனது அருளை எதிர்பார்த்தே பலன்‌ கொடுக்க வல்லதாம்‌. மேலும்‌ அவன்‌ கருணை சேதநனது கருமத்துக்குத்‌ தகுந்தபடி தீய பலனையும்‌ கொடுத்தே தர வேண்டியதாதலின்‌ லீலா ரஸம்‌ கலந்தே இருக்கும்‌. ஆசார்யனது கருணையோ எம்பெருமானது சீற்றத்தைப்‌ போக்கித்‌ தீய பலன்‌ வராமல்‌ காக்கின்றது. எம்பெருமானுக்குச்‌ சிலரைக்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு கீழே தள்ளும்‌ கருத்தும்‌ மறுபடி பாபத்தைச்‌ செய்யத்‌ தூண்டும்‌ செயலும்‌ உண்டு. ஆசார்யனுக்கோ சிஷ்யனை நற்செயல்‌ புரியுமாறு செய்வதிலேயே ஆர்வமும்‌ அவனுக்கு நல்வாழ்வளிப்பதிலே நோக்கமும்‌ இயற்கையில்‌ அமைந்தன. மேலும்‌ எம்பெருமான்‌ அசுரத் தன்மையருக்குச்‌ சாஸ்த்ரங்களுக்கு விபரீதமான உபதேசங்களைச்‌ செய்து தீய செயலிலேயே மண்டி யிருக்கச் செய்து பயனை அநுபவிக்கச்‌ செய்யும்‌ தன்மை உண்டு. ஆசார்யனோ சாஸ்த்ரத்தைத்‌ தழுவிய நல்லுபதேசத்தையே செய்து நல்வழிப்படுத்தி இன்பமுறையே செய்‌வான்‌. இங்ஙனமே இன்னும்‌ பல வேற்றுமைகள்‌ எம்பெருமானுக்கும்‌ ஆசார்‌ யனுக்கும்‌ இருப்பதைக்‌ கொண்டு அவனினும்‌ ஆசார்யனுக்கு உள்ள சிறப்பு மிகுதியால்‌ ஆசார்யன்‌ எப்பொழுதும்‌ போற்றுதற்கு உரியன்‌ என்று விளக்க ஆசார்ய ஸார்வபெளமருக்கு எம்பெருமானினும்‌ மிக்க சிறப்பை வலியுறுத்திப்‌ பேசுகின்றார்‌.

ஆழ்வார்‌ திருவடிகளே இரு ஸந்ததிக்கும்‌ சரண்‌
இத்தகைய பரமாசார்யசான நம்மாழ்வார்‌ திருவடிகளே பிறப்பினால்‌ எமக்கு முன்னோர்களான தந்த பாட்டனார்‌ முதலியவர்களுக்கும்‌, பின்னிட்டுத்‌ தோன்றுமவர்களான புத்திரர்‌ பேரர்‌ முதவிய பின்‌ ஸந்ததியினர்க்கும்‌ கீழ்‌ கூறிய எல்லா உறவினரும்‌ எல்லாச்‌ செல்வமுமாய்‌ நிற்பன. மேலும்‌ நமக்கு ஜஞாந ஸந்ததியார்‌ என்று சொல்லப்படும்‌ முன்னோர்களான ஆசார்யன்‌–ப்ராசார்யன்‌ முதலிய ஆசார்ய பரம்பரைக்கும்‌ பின் வரும்‌ சிஷ்பன்‌ அவனுக்குச்‌ சிஷ்பன்‌ என்று தொடர்ந்து செல்லப் போகும்‌ சிஷ்ய ஸந்ததிக்கும்‌ இப்படி எதாவது வழியில்‌ தம்மைச்‌ சேர்ந்த அனைவருக்குமே எல்லாமாய்‌ நிற்பன ஆழ்வார்‌ திருவடிகளே

ஆழ்வாரே முதல்‌ ஸ்ரீ வைஷ்ணவ குலபதி
நாதமுனிகள்‌ ஸம்ப்ரதாயத்தைச்‌ சேர்ந்த அனைவருக்கும்‌ முதல்வரான குலபதியாய்‌ விளங்குமவர்‌ நம்மாழ்வாரே, நம்‌ முன்னோர்களான பெரியோர்‌களுக்கும்‌ ஜ்ஞாநம்‌-வைராக்யம்‌ முதலிய நற்குணங்கள்‌ ஆழ்வார்‌ திருவருளா லேயே வந்தன-ஆழ்வாரை முதற்‌ குலபதியாகக்‌ கூறத்‌ தடை என்ன? ஒவ்‌வொருவரும்‌ தங்கள்‌ கோத்ரத்துக்குக்‌ கூடஸ்த்தராக ஒரு முனிவரைக்‌ கூறிக்‌ கொள்வது போல்‌ ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குக்‌ கூடஸ்த்தராகக்‌ கூறிக்கொள்ள ஆழ்வாரே உரியர்‌. எல்லோருக்கும்‌ முதல்‌ ஆசார்யனான எம்பெருமானே பொதுவான கூடஸ்த்தனா யிருப்பினும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களான அனைவருக்கும்‌ சிறப்பு முறையில்‌. கூடஸ்த்தராய்‌ விளங்குமவர்‌ ஆழ்வாரே. ஸ்ரீவைஷ்ணவ குலத்தைக்‌ காத்தருள்பவரும்‌ அதன்‌ தலைவரும்‌ ஆழ்வாரே.

ஆழ்வார்‌ திருவடிகளின்‌ சிறப்பு
ஆழ்வாருடைய இரண்டு திருவடிகளும்‌ இயற்கையாக மிக்க அழகுடையனவாய் ஸகல மங்களங்களையும்‌ அனிப்பனவாய்‌ விளங்குவன, அக் காலத்தில்‌ உள்ள ஸாத்துவிகப்‌ பெரியோர்கள்‌ ஆழ்வாரின்‌ இரண்டு திருவடிகளிலும்‌ மகிழம்பூமாலையை அணிவித்து அம்மலர்களால்‌ அருச்சித்‌தனர்‌, அந்த மாலைகள்‌ அத்திருவடிகளின்அழகை மேலும்‌ வளர்க்கின்றன, ௮ந்த மகிழ மணத்தை நாம்‌ முகரும் போது ஆழ்வார்‌ அருளிச்‌ செயலிலும்‌ அந்த மணம்‌ நிலையாய்‌ நின்று வீசுவதைக்‌ குறிப்பிடுவது போன்ற உணர்ச்சி உண்டாகின்றது. ஆழ்வார்‌ திருவாக்கின்று அவதரித்த அருளிச்‌ செயலே பர தேவதை இன்னாரென்று நிர்ணயித்துத்‌ தரவல்லது ஆதலின்‌ அதிலும்‌ ஆழ்வாருக்கே உரிய மகிழமலர்‌ மணம்‌ வீசுவதாய்க்‌ காண்பது மிகப்‌ பொருத்தமே. ஆழ்வார்‌ திருவடிகளில்‌ உள்ள அழகிய சின்னங்களை ஸேவிக்கும்‌ போது ஆழ்வார்‌ ஸ்ரீவைஷ்ணவப்‌ பேரரசுக்கு முடி சூடிய மன்னரெனத்‌ தெளிவாய்ப்‌ புலனாகின்றது. தம்மை அடைந்தவருக்கு வைணவச்‌ செல்வத்தை அளிப்பன அத்‌ திருவடிகள்‌. அவற்றின்‌ பெரு மிடுக்கைத்‌ காணும்‌ போது எம்பெருமானுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்தற்காக வெளியே புறப்பட முற்படுவன போல்‌ தோன்றுகின்றது. அந்தத்‌ திருவடிகள்‌ இரண்டும்‌ ஒன்றுக்‌ கொன்று ஒத்திருப்பதற்கு வேறு உவமை கூற முடியாது. அந்த இரண்டுக்‌ குள்ளேயே ஒன்றை மற்றொன்றுக்கு உவமையாய்க்‌ கூறிக் கொள்ள வேண்டும்‌, இரண்டு தேவதைகளையுடைய யாகங்களில்‌ ஹோமத்தில்‌ இருவரையுமே இலக்காகக்‌ கொள்ள வேண்டுவது போல்‌ இரண்டு திருவடிகளும்‌ பிரிக்க முடியாமல்‌ சேர்ந்தே நாம்‌ வழிபடுதற்கு உரியன. இப்படி. அநுபவிப்பதற்கு ஏற்ற எல்லை யற்ற இனிமை யுடையனவாய்‌ நம்மைக்‌ கைவிடாது ரக்ஷிப்பனவான ஆழ்வார்‌ திருவடிகளை வாக்கினால்‌ போற்றுவதும்‌ மனத்தால்‌ திஸ்யானிப்பதும்‌ மட்டு மின்றி மிக்க பக்தியுடன்‌ தலையினாலும்‌ எப்பொழுதும்‌ தொடர்ந்து வணங்கிக்‌ கொண்டே யிருக்து முக்கருவிகளையும்‌ பயன்‌ படுத்திக்‌ கொண்டேயீருப்பேன்‌, என்று கூறி முடிக்கின்றார்‌ ஆளவந்தார்‌.

ஸ்ரீ தேசிகன்‌ தீர்ப்பு–முடிவுரை
இங்ஙனம்‌ ஆழ்வார்‌ திருவடிகளைப்‌ பற்றி ஆளவந்தார்‌ அருளிச்‌ செய்த ஸ்லோகத்துக்கு அவர்‌ திருவுள்ளத்தில்‌ பொதிந்துள்ள கருத்தினை நம்‌ தேசிகன்‌ நம்‌ கண்முன்‌ காட்டி விளக்கி யருளினார்‌. பின்‌ ஆழ்வார்‌ விஷயத்தில்‌ அறியாதார்‌ எழுப்பும்‌ சங்கைக்கு விடை கூறி அவர்கள்‌ வாயை மூடுகின்றார்‌ நம்‌ தேசிகன்‌, சிலர்‌ ஆழ்வார்‌ தோன்றிய ஜாதி முதலியவற்றைக்‌ கூறிக்‌ கொண்டு அறியாமையால்‌ சில கேள்விகளைக்‌ கேட்கின்‌றனராம்‌. தமிழ்‌ மறையைக்‌ கண்டருளிய ஆழ்வார்‌ பெருமை அதி யற்புத மானது. தத்துவத்தை நன்கு கேட்டு உணர்ந்தவர்களுக்கு இங்குக்‌ குழப்பம்‌ எதுவும்‌ ஏற்படாது. எம்பெருமான்‌ பிராட்டியை நோக்க தேவி தேவ ரஹஸ்யங்களென்று சில உண்டு, அவற்றைப்‌ பற்றியும்‌ அவை போன்ற மற்ற அம்சங்களிலும்‌ , வீண்‌ ஆக்ஷேபம்‌ செய்வதில்‌ பயன்‌ இல்லை. செவிடனும்‌ குருடனும் போல்‌ மெளன மாயிருப்பதே அறிஞர்‌ கடமை’ என்று அருளிச்‌ செய்ததை உள்ளத்துக்‌ கொண்டு ஆழ்வார்‌ விஷயமும்‌ ஒரு தேவ ரஹஸ்ய மெனக்‌ கண்டு அறிஞர்கள்‌ திருப்தி யடைய வேண்டும்‌. இதுவே இந்தஸ் ஸ்லோக வுரையில்‌ கடைசியில்‌ ஸ்ரீதேஸிகன்‌ வெளியிட்ட தீர்ப்‌பு

—

ஆழ்வாரும்‌ மணவாள மாமுநியும்‌
ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரன்‌ திருமாலாலருளப்பட்ட சடகோபன்‌ * என்னும்படி ஆழ்வாருக்கு* மயர்வற மதிலமருள, இப்படி நிர்ஹேதுக கடாஷ பாத்ர பூதரான வாழ்வாரும்‌ அருள்‌ கொண்டாயிர மின்றமிழ்ப் பாடினான்‌ ” என்னும்படி, திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களை*பண்ணார்‌ பாடலாம்படி பாடி யருளி , அநந்தரம்‌ தம்முடைய நிரவதிக க்ருபையாலே மதுரகவி ப்ரப்ருதி ஸஜ்ஜநங்‌ களுக்கு **அந்தாதி மேலிட்டறிவித்தேனாழ்‌, பொருளைச்‌ சிந்தாமற்‌ கொண்மினீர்‌ தேர்ந்து?” என்னும்படி யுபதேித்து, அவ்வளவு மன்றிக்கே * ஊரும் நாடுமுலகமும் தம்மைப் போலே யாம்படிசெயல்‌ … நன்றாகத்‌ , திருத்திப்‌ பணி கொண்டருளி நடத்திப்‌ போந்த வநந்தரம்‌ நெடுங்காலம்‌ சென்றவாறே இத் திவ்ய ப்ரபந்தங்கள்‌ ஸங்குசிதமாய்ப்‌ போன படியைத்‌ திருவுள்ளம் பற்றி, * இதுக்காவாரார்‌ “‘ என்‌று பார்த்து, நாதமுனிகளை (அருள் பெற்ற நாதமுனி ” என்னும்படி, தம்முடைய கடாஷா விசேஷத்தாலே கடாஷித்தருளி , இவர்க்கு திவ்ய ஜ்ஞாநத்தை யுமுண்டாக்‌கி , அந்த திவ்ய சஷுர்‌ மூலமாகவே ஸரணாகத புரஸ்ஸரமாக தீர்க்க ஸரணாகதியான திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந் தங்களையும்‌ ப்ரகாஸிப்பித்தருளினார்‌-
இப்படி, ஆழ்வாருடைய திவ்ய கடாக்ஷத்துக்கு விஷய பூதரான நாதமுனிகளும்‌ இத்தமிழ்‌ மறைகளை இயலிசையாக்கி நடத்‌தியும்‌, அதுக்கு மேலே குருகை காவலப்பன்‌, உய்யக் கொண்டார்‌ துடக்கமான ஆஸ்‌திகரைக்‌ குறித்து, ப்ரபத்யர்த்த ஸஹிதமாக வித்தை ப்ரஸாதிக்க, அவர்களுமப்படியே அவர்‌ திருப் பேரனார்க்கு மணக்கால்‌ நம்பி முகேந ப்ரஸாதிப்பிக்க, பின்பு அவரும்‌ அத்தை வர்த்திப்பிக்க,-
அவர்‌ கடாக்ஷ லக்ஷ்ய பூதராய்‌மாறனடி பணிந் துய்ந்த எம்பெருமானாரும்‌, ** வளர்த்த: விதத் தாய்‌” என்‌னும்படி. வர்த்‌திப்பித்துக் கொண்டு பின்பு, *ராமாநுஜ பதாம்போஜ ஸமாஸ்ரயண ஸாவிகளான கோவிந்த கூராதிப பட்டார்ய நிகமாந்த முநி பர்யந்தமாய்‌ உபதேஸ பரம்‌ பரயா சங்குசித வ்யாக்யாநமாக நடந்து : சென்ற விது நம்மாழ்வார் அவதாரமாய் நம்பிள்ளை யென்று பேர் பெற்ற லோகாசார்யராலே லோகமெம்கும்‌ வெள்ள மிடும்படி. *தீர்த்தங்களாயிரமான திருவாய்மொழி விஸத வ்யாக்க்யாந ரூபமாய்‌ ப்ரவஹிக்க அது மேலோரளவும்‌ விஸ்த்ருதமாயிற்று.

இப்படி பரம்பரயா நடந்த திருவாய் மொழியினீட்டின்‌ ஸம்ப்ரதாய க்ரமம் தான்‌ ஜீயரிடத்திலே “மணவாளமாமுனியான வேரி தேங்க” என்‌னும்படி தேங்கிற்று-அத்தைப் பற்ற யிறே ‘தமிழ் வேதமாகிய வோத வெள்ளங்‌ கரை கண்ட கோயில்‌ மணவாளமாமுநி” என்‌றும் சொன்னார்கள்‌-இப்படி முப்பத்தாறாயிரப் பெருக்கராகையாலே (மதிளரங்கர்‌ வண் புகழ்‌ மேலான்‌ற தமிழ் மறைகள்‌”‘ என்னும்படி தம் விஷயமான திருவாய் மொழியினர்த்‌தத்தை இவரிடத்‌திலே கேட்க வேணுமென்று பெருமாள்‌ தாமும் திருவுள்ளமாய்‌ “ஸ்ருத்வா கூடம்‌ ஸடரிபு கிராமர்த்த தத்வம்‌ தவதுக்தம்‌’” என்னும்படி. யாழங்காற்பட்டுக்‌ கேட்‌டருளினாரிறே –அதின்‌ பின்பு ஸ்ரீ பட்ட நாதமுனி வாந மஹாத்ரி யோகி துடக்கமான வாசார்யர்‌ களாகிற கால்களாலே புறப்பட்டுக்‌ காடுங் கரம்பு மெங்கு மேறிப்‌ பாய்ந்து பலித்தது. இப்படி ஈஸேஸி தவ்ய விபாக மற ஸ்வ ஸூக்‌தியாலே வஸீ கரிக்க வல்ல வைபவமானது * மணவாளமாமுனி தோற்றிய பின்னல்லவோ தமிழ்‌ வேதந் துலங்கியது?” என்றும்‌, மணவாளமாமுனி வந்திலனேலாற்றிற் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே “? என்றும்‌ ௮ந்வய வ்யதிரேகங்களிரண்டாலும்‌ சொல்லப் பட்டது.

ஏவம்வித :மாஹாத்ம்ய: யுக்தரான விவர்‌ தம்முடைய வநுபவத்துக்குப் போக்கு வீடாகவும்‌, திருவாய்மொழியினுடைய துர்க்க்ரஹமான வர்த்தங்களை யெல்லாருமறியும்‌ படி ஸூ க்ரஹமாகவும்‌ ஸூ வ்யக்தமாகவும்‌, *’சொல்லும் பொருளுந்‌ தொகுத்துரைத்‌தான்‌! என்னும்படி – ஸங்கதியாக விப் ப்ரபந்தத்திலே யருளிச் செய்கிறார்‌. ஈட்டில்‌ ஸங்கதியே யாயிற்று இவர் தாமிப்படி. ஸங்க்ரஹித்தருளிச்‌ செய்கிறது-இப் ப்ரபந்தங்களுக்கு அநேக நிர்பந்தங்க ளுண்டாயிறே யிருப்பது; அதெங்கனே யென்னில்‌; வெண்பா” என்கிற சந்தஸ்ஸாகையும்‌, இப்படியான விப்பாட்டில்‌ முற்‌பாதியிலே ஓரேர்‌ திருவாய்மொழியின்‌ தாத்பர்யமும்‌,தத் ஸங்கதிகளடைகையும்‌, பாட்டுக்கள் தோறும்‌ ஆழ்வார்‌ திருநாமங்கள்‌ வருகையும் , அதில்‌ தாத்பர்யங்களைத்‌ தத் பர்‌யந்தமாகப்‌ பேசுகையும்‌, அந்தாதியாய்‌ நடக்கையுமாகிற வைந்து நிர்ப்பந்த முண்டா யிருக்குமாயிற்று: .இது தான்‌ பாலோடமுதன்ன வாயிரமான திருவாய்மொழியின்‌ ஸாரமாகையாலே திருவாய்மொழி நூற்றந் தாதியாந்தேனை”” என்னும்படி. ஸரஸமான நிரூபகமாய்‌, ஆயிரத்தின்‌ ஸங்கரஹ மாகையாலே ஒரோ திருவாய்மொழியினர்‌த்தத்தை யோரேர் பாட்டா யருளிச் செய்கையாலே ௮து தான்‌ நூறுபாட்டாய்‌, அல்லும் பகலுமநுபவிப்பார்க்கு நிரதிஸய போக்யமாய்‌, அவ்வளவு மன்றிக்கே உடையவர்‌ நூற்றந்தாதியோபாதி ஆழ்வார்‌ நூற்றந்தாதியு முத்தேஸ்யமாகையாலே ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரேமமுடையார்க்கு, அநவரதாநுஸந்தேய முமாயிருப்பதொன்றாயிற்று, இதில்‌ சரம பர்வமான வாழ்வார்‌ “தருவடிகளி யிறே ப்ராப்ய ப்ராபகங்களாக -நிஷ்கர்ஷிக்கிறது; ௮து தான்‌ பராங்குஸ பாத பக்தராய்‌ *சடகோபர்‌’ தே மலர்த்தாட்‌ கேய்ந்தினிய பாதுகமா மெந்தை யிராமானுசனளவும்‌ வந்திருக்குமிறே. ஆழ்வார் தாம்‌ திவ்ய மஹிஷிகளுடையவும்‌, -திவ்ய ஸுிரிகளுடையவும்‌, முக்தரு டையவும்‌, முமுஷுக்களுடையவும்‌ படிகளை யுடையரா யிருக்கையாலே உடையவரும்‌ இவர்‌ விஷயத்திலே யாயிற்றீடு பட்டிருப்பது-

உயர்வே பரன் படியை யுள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டுரைத்து-மயர் வேதும்‌
வாராமல்‌ மானிடரை வாழ்விக்கும் மாறன்சொல்‌
வேராகவே விளையும் வீடு -1-
உயர்வே பரன் படியை -யுள்ளதெல்லாம் தான்‌ கண்டு)
பரத்வத்தில்‌ பரத்வமாயிற்று இத் திருவாய்மொழியில்‌ ப்ரதிபாதிக்கப்படுகிறது-ஸர்வ ஸ்மாத்‌ பரத்வத்தை யாயிற்று. !மயர்வற உயர் நலம்‌ ‘ என்றருளிச்‌ செய்தது)-உள்ளதெல்லாமாவது–முதற்பாட்டில்‌ கல்யாண குண யோகமும்‌ நித்ய விபூதி யோகமும்‌ விக்ரஹ வைலக்ஷண்யமும்‌, இரண்டாம்‌ பாட்டில்‌, இவற்றுக் காஸ்ரயமான இவ்வாத்ம ஸ்வருபம்‌ சேதநா சேதந விலஷணமென்னுமதுவும்‌, மூன்றாம்‌ பாட்டில்‌ நித்ய விபூதியோ பாதி ததீயத்வாகாரத்தாலே அவனுக் கந்தரங்கமாய்த்‌ தோற்று லீலா விபூதி யோகமும்‌, நாலாம்பாட்டில்‌ அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம்‌ அவனதீநம் என்னுமதுவும்‌, ஐந்தாம் பாட்டில்‌ அதினுடைய ஸ்திதியும்‌ அவனதீந மென்னு.மதுவும்‌, ஆறாம்பாட்டில்‌ அதினுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும்‌ அவனதீநமென்னுமதுவும்‌, ஏழாம் பாட்டில்‌ ஐகத்துக்கு மீஸ்வரனுக்கு முண்டான ஸரீராத்ம பாவமும்‌; எட்டாம்பாட்டில்‌ (இதுக்கசையாத குத்ருஷ்டி நிரஸநமும்‌) திரிமூர்த்தி ஸாம்ய வாத நிரஸநமும்‌, ஒன்பதாம் பாட்டில்‌ ஸூந்யவாதி நிரஸநமும்‌, பத்தாம்பாட்டில்‌ வ்யாப்தி ஸவ் கர்யமுமாகிற விவை-இப்படி, உள்ள தெல்லாவற்றையும்‌,(தான்‌ கண்டு,) திவ்யம்‌ ததாமி தே சஷுஸ் : பஸ்ய மே யோகமைஸ்வரம்‌ ” என்னும்படி* மயர்வறமதி நலமருளி, அவன்‌ ப்ரஸாதத்தாலே காட்டக் கண்டு.
(உயர்வேத நேர் கொண்டுரைத்து) அபெளருஷேயமாய்‌ நித்ய நிர்தோஷமாய்‌ ப்ரதியக்ஷாதி ப்ரமாணங்கள்‌ போலே ஹேத் வந்தரங்களாலழிக்க வொண்ணா தாகையாலே ஸர்வ ப்ரமாணோத் க்ருஷ்டமான -ஸ்ருதிச்சாயையாலே யருளிச் செய்‌து இப்படி வேத மார்க்‌காநுஸாரியாயாயிற்று: முதற்பாட்டு துடங்கி யருளிச் செய்தது; அத்தைப் பற்‌ற விறே ‘ (உயர் வேத நேர் கொண்டுரைத்‌து) என்றிவரருளிச்செய்கிறது, * சுடர் மிகு சுருதி *’ என்‌றிறே ஸ்ருதி ப்ரமாணத்தை யங்கீ கரித்தருளிற்று. **அஹந்தா ப்ரஹ்மணஸ்‌ தஸ்ய” என்று ஸ்வரூப அந்தர்பாவ முண்டாகையாலே ஸ்வரூபம்‌ புக்கிடத்தே ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டி யுமுண்டாகக்‌ குறை யில்லை,
(மாறன்‌ சொல்‌ வேராகவே விளையும்‌ வீடு] அதாவது-இப்படி ஸகல ஜீவோஜ்‌ ஜீவந தத் பரரான வாழ்வார்‌ திவ்ய ஸூக்தி யடியாக பகவத்ஜ்ஞாந முண்டாய்‌, அதடியாக மோக்ஷ லாப மென்றபடி; ஸுக்தி மூலமாகவே முக்‌தி பலிக்குமிறே . ததுக்தியாலேயாதல்‌; தத் விஷயமான வுக்தியலேயாதலாகலாமிறே. ‘*தென்குருகூர் நகர் நம்பிக்கன்பனாய்‌ மதுரகவி சொன்ன சொல்‌ நம்புவார் பதி வைகுந்தம்‌ காண்மினே’” என்னக் கடவதிறே-

வீடு செய்து மற்ற வையு மிக்க புகழ்‌ நாரணன்‌ தாள்‌’
நாடுநலத்தாலடைய நன்குரைக்கும்‌– நீடு புகழ்‌
வண் குருகூர்‌ மாறனிந்த மானிலத்தோர்‌ தாம் வாழப்‌
பண்புடனே பாடி யருள் பத்து.
(வீடு செய்‌து)
இதில்‌ தம்முடைய திரு வுள்ளம் போலே அநுபவத்துக்குத்‌ துணை யாய்த்‌ திருந்தும் படி ஸம்ஸாரிகளைக் குறித்துப்‌ பரோபதேசம்‌ பண்ணுகிற பாசுரத்தை யநு பவித்து அருளிச் செய்கிறார் –(மற்றெவையும்‌) பஜந விரோதிகளாய்‌ .அஹங்கார ஹேதுவாயுள்ள தடங்கலும்‌ முமுக்ஷுவுக்கு த்யாஜ்யமிறே.-(நாடு நலத்தாலடைய நன்குரைக்கும்‌) ‘*வீடுசெய்மின்‌” *இறையுன்னுமினீரே”‘ என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும்படி இவருபதேஸிக்கிறது. அத்தை நினைத்து நாடுநலத்தாலடைய ‘ என்றது. நலத்தாலடைகையாவது–எல்லையிலன்னலம்‌ புல்கு’” “அவன்‌ முற்றிலடங்கே’”. ஈசனடங்கெழில் அக்தென்றடங்குக வுள்ளே” இறை யுள்ளிலொடுங்கே’? **ஒடுங்க வவன் கண்‌’” என்று அங்கநா பரிஷ்வங்கம் போலே அபி நிவேறத்தாலே யாஸ்ரயிக்கும்படியை விதித்தபடி-உபதேஸத்துக்கு நன்மையாவது-நிர்ஹேதுகமாகவும்‌, உபதேஸ்யார்த்தங்களில்‌ ஸங்கோச மின்றிக்கே உபதேசிக்கையுமென்‌றபடி. (பண்புடனே பாடி யருள்பத்து) பண்பு-ஸ்வபாவம்‌, தம்முடைய க்ருபா ஸ்வபாவத்தாலேயாதல்‌, ஒளதார்ய ஸ்வபாவத்தாலே யாதல்‌ பரப்பறப்‌ பாடி யருளினது பத்‌துப்பாட்டாயிற்‌று.-“பாட்டுக்கு க்ரியையும்‌, பத்துக்குக்‌ கருத்தும்‌!” என்கையாலே பத்துப் பாட்டுக்கு முயிர்ப்பாட்டு ப்ரதாநமாயிருக்கும்‌, அந்த நிதாநப்பாட்டுக்கு ஸேஷமாயிருக்கும்‌ மற்றப்‌ பாட்டடங்கலும்‌; இது இத்திருவாய்மொழி. திவ்ய ப்ரபந்தத்துக் கெல்லாமுள்ளதொன்றிறே –வீடுமினென்‌று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக வுபதேசித்து ” என்று ஆசார்யஹ்ருதயத்திலே நாயனாரு மருளிச்‌ செய்தார்‌. இத்தை பக்தி பரமாக யோஜித்து பாஷ்யகாரர்‌ , பாஷ்யம்‌ தலைக்‌ கட்டி யருளின பின்பு, ப்ரபத்தி பரமாக யோஜித்த கிரமததைப் பற்‌றவாயிற்று ஆசார்யர்‌ களெல்லாரு மப்படியே யோஜித்தார்கள்‌ ; இவருமப்படியே யருளிச் செய்தார்‌-

பத்துடையோர்க்கென்றும்‌ பரனெனியனாம்‌ பிறப்பால்‌
முத்திதரு மாநிலத்தீர்‌ மூண்டவன்பால்‌–பத்தி செயும்‌
என்றுரைத்த மாறன்‌ றனின்‌ சொல்லா ற்போம்‌ நெடுகச்‌
சென்ற பிறப்பாமஞ்சிறை-3-
(பிறப்பால்‌)
அவதாரத்தாலே; ‘பல் பிறப்பா யொளி வரும்‌” என்றத்தை நினைக்‌கிறது.(முத்தி தரும்‌), அவதரித்த விடத்தே -பக்ஷிக்கும்‌ ராஷஸ்ஸுக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுக்கும்‌ (நெடுகச்‌ சென்ற பிறப்பாமஞ்சிறை) அநாதிகாலம்‌ தீர்க்கமாய்ப் போந்த ஐந்மமாகிற க்ரூரமான சிறை, அறுவர் தம் பிறவி யஞ்சிறை’” என்மத்தை யநு விதாநம்‌ பண்ணின படி-த்யக்த்வா தேஹம்‌ புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந !’ என்னக் கடவதிறே –

அஞ்சிறைய புட்கள்‌ தமை யாழியாலுக்கு நீர்‌
என் செயலைச்‌ சொல்லுமென விரந்து–விஞ்ச
நலங்கியதும்‌ மாறனிங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும்‌ பத்தி வளம்‌
(ஆழியானுக்கு நீர்‌) ‘கடலாழி நீர்‌ தோற்றி யதனுள்ளே கண் வளருமடலாழி யம்மானை
?? என்றத்தைக்‌ கடாக்ஷித்த படி, முதல்‌ தூதுக்கு விஷயம்‌ வ்யூஹ மிறே.(என் செயல்‌) தன்னாற்றாமையை ஆவிஷ்கரித்தமை; –என் பிழையே நினைந்தருளி யருளாது திருமாலார்க் கென்‌ பிழைத்தாள் திருவடியின்‌ தகவினுக்‌ கென்றொரு வாய்ச்‌ சொல்‌” என்று அவனபராத ஸஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும்‌ இதிலே ஸூஸிதம்‌–

வளமிக்க மால்‌ பெருமை மன்னுயிரின்‌ தண்மை
உளமுற்றங்கூடுருவ வோர்ந்து– தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால்‌ நீடிலகு சீலத்தால்‌ பாங்குடனே சேர்த்தான்‌ பரிந்து-

அவன்‌ பெருமையையும்‌ தம்‌ சிறுமையையும்‌ நினைத்து ஸுரி போக்யனானவனை அயோக்யனான நான்‌ கிட்டி தூஷிப்பதில்‌ அகன்‌று போகை நன்றென்று தாமகலப் புக, * ஆழ்வீர்‌ ! உம்முடைய பொல்லாங்கைப் பாராதே நம்முடைய செல்லாமையைப் பாரீர்‌ !! என்‌று ‘*ஆக்ரம்ய லோகாந் ‘” என்ற திரிவிக்ரமாபதாந ஸித்தமான தன்‌ ஸெளஸீல்‌யத்தையும்‌, நவநீத செளர்ய விருத்தாந்த ஸித்தமான தன்‌ செல்லாமையையுங் காட்டித்‌ தம்மை அவன்‌ சேர்த்துக் கொள்ள, அத்தாலே தாம்‌ அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை யருளிச்‌ செய்கிற வளவேழுலகலெர்த்தத்தை -வளம் மிக்க!” . இத்யாதியாலே யருளிச்‌ செய்கிறார்‌.-திருவாய்ப்பாடியல்‌ வெண்ணெயோபாதி இவரையும்‌ சேர விரும்பினான்‌. வைகலும்‌ வெண்ணெய்‌ கைகலந்துண்டான்‌ பொய்கலவாது, என்‌ மெய் கலந்தானே என்னக் கடவதிறே –

இவை யறிந்தோர்‌ தம்மளவி லீசனுவந் தாற்‌ற
அவயவங்கடோறு மணையும்‌–சுவையதனைப்‌
பெற்றார்வத்தான் மாறன்‌ பேசின சொற் பேசு மால்‌
பொற்றாள்‌ நஞ்சென்னி பொரும்‌.
(இவை யறிந்தோர்‌ தம்மளவில்‌
) இந்த ஆர்‌ஜவ குணத்தை யறிந்தவர்கள்‌ விஷயத்திலே. (ஈசனுவந்தாற்‌ற வவயவங்கள்‌ தோறுமணையும்‌ சுவை யதனைப் பெற்று) ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருஷ்டனாய்‌ ஸாத்மிக்க ஸாத்மிக்க, ஸர்வா வயவங்களிலும்‌ ஸம்ஸ்லேஷிக்கும்‌ ரஸந் தன்னைப்‌ பெற்றுப்‌ பொறுக்க பொறுக்க உறுப்புத் தோறும்‌ சறிப்புத் தீரக்‌ கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று என்னுடைச் சூழலுளானே! -அருலிலானே” ‘ஒழிவிலனென்னோடுடனே-கண்ண னென்னொக் கலையானே’ . “மாயனென் னெஞ்சினுளானே’” *என்னுடைத்‌, தோளிணையானே’ என்னுடை. நாவினுளானே?! “கமலக்‌ கண்ணனென் கண்ணினு ளானே” என்னெற்றியுளானே” “என்‌னுச்சியுளானே” என்று தலைக்கு மேலே ஏறின படியை அடி யொற்றின படி–

திண்ணிதா மாறன்‌ திருமால்‌ பரத்துவத்தை நண்ணி யவதாரத்தே நன்குரைத்‌த–வண்ணமறிந்து
அற்றார்கள்‌ யாவரவரடிக்கே யாங்கவர் பால்‌
உற்றாரை மேலிடா தூன்‌-
(நண்ணி யவதாரத்தே நன்குரைத்த)
திருமால்‌ பரத்துவத்தை அவதாரத்தே நண்ணி நன்குரைத்த முதற்றிருவாய்மொழியிலே ஸ்ருதிச் சாயையாலே பரத்வே பரத்வத்தை யருளிச் செய்தாப் போலன்றிக்கே ; இதிஹாஸ புராண ப்ரகரியையாலே அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை’ யாஸ்ரயணீயமாம்படி நன்றாக’ வருளிச் செய்‌து -இப்படி யருளிச் செய்யுமிடத்து ! க்ருஷ்ண ஏவ ஹி லோகாநா முத்பத்தி : அபிசாப்யய: என்றும்‌ -ஸ ஏஷ ப்ருது தீர்க்காஷஸ்‌ ஸம்பந்தீ தே ஜநார்தந என்றும்‌ * அர்ச்ச்ய மர்ச்சிது மிச்சாமஸ்‌ ஸர்வே ஸம்மதந்து மர்ஹத ” என்றும்‌ பாதேந கமலா பேந ” ப்ரஹ்ம ருத்ரார்சிதேந ச என்றும்‌’ ப்ரமாணங்களைப்‌ பின் சென்று இறே யருளிச் செய்தது –

புகழொன்று மாலெப் பொருள்களும் தானாய்‌ நிகழ்கின்‌ற நேர்‌ காட்டி நிற்க–மகிழ்மாறன்‌ எங்குமடிமை செய விச்சித்து வாசிகமாய்‌ அங்கடிமை செய்தான்‌ மொய்ம்பால்‌-
(எப்பொருள்‌களும் தானாய்‌ நிகழ்கின்‌ற நேர் காட்டி நிற்க)
ஸமஸ்த வஸ்துக்களும்‌’ தானென்லும்படி ஸர்வ ஸப்த வாச்யனாய்‌ வர்த்திக்கிற ப்ரகார ப்ரகாரி பாவத்தை ப்ரகாஸிப்பித்துக்கொண்டு இவர்க்கு ஜ்ஞாந ஸாஷாத்காரமாம்ப்டி நிற்க-(மகிழ்மாறன்‌) வகுளதரரான வாழ்வார்‌,(எங்குமடிமை செய விச்சித்‌து) ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே யடிமை செய்ய விச்சித்து. (வாசிக மாயங்கடிமை செய்தான்‌); அப்படி யாசைப்பட்ட அவ் விஷயத்திலே-( என்கோ -என்கோ” என்று வாசிகமாக அடிமை செய்தார்‌-மொய்ம்பு-மிடுக்கு, * கண்ணாவானென்றும்‌: “மண்ணோர்‌ விண்ணோர்க்கு ‘” என்றும்‌, ‘ வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு” என்றும்‌, ! கண்ணா யேழுலகுக்கு முயிராய வெங் கார் வண்ணனை விண்ணோர்‌ தாம்‌ பரவும்‌ பொழில்‌ வேங்கடவேதியனை :” என்றும்‌, * தாய்‌ தந்தை யுயிரா கின்றாய்‌-பாகின்‌ற தொல்‌ புகழ்‌ முவுலகுக்கும்‌ நாதனே பரமா தண்‌ வேங்கடமேகின்றாய்‌ ‘ என்றும்‌, “* திருவேங்கடத்தானுக்கு என்‌ கட்பாசம்‌ வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கு ” என்‌றும்‌, ** அம்பரம்‌” இத்யாதியாலும்‌--அவனுடைய வுபய விபூதி நிர்வாஹகத்வத்தையும்‌ அந்தர் வ்யாப்தியையும்‌ ஸர்வ கால வர்த்தித்தவத்தையு மருளிச்‌ செய்கையாலே, : வ்யாப்தி யநு ஸந்தாந ரூப வாசிக கைங்‌கர்யம்‌ – திருவேங்கடத்‌ தென்னானை யென்னப்ப னெம்பெருமானுக்கேயிறே யேற்றிருப்பது -அத்தைப் பற்ற விறே அங்கடிமை செய்தான்‌ ”? என்‌றிவரருளிச் செய்ததது.

செய்ய பரத்துவமாய்ச்‌,சீரார் வியூகமாய்த்‌
துய்ய விபவமாய்த்‌ தோன்றி வற்றுள்‌–எய்‌துமவர்க்கு
இந் நிலத்திலர்ச்சாவதார மெளி தென்றான்‌
பன்னு தமிழ் மாறன்‌ பயின்‌று –
(அர்ச்சாவதாரமெளிதென்றான்‌
)ஸெளலப்யத்தாலே அர்ச்சாவதாரம்‌ ஸமாஸ்ரயணத்துக்கு, சஷுர் விஷயமுமாய்‌, நித்ய ஸந்நிதி யுமுண்டாதையாலே ௮தி ஸூலபமென்‌கிறார்‌. நெஞ்சினால்‌ நினைப்பான்‌ யவனாகும்‌ நீள் கடல்‌ வண்ணன்‌ ”‘ என்‌றத்தை நினைக்கிறது.-எளிவரும்‌ இணைவனா மென்றவை பரத்வமாம்படி அவனாகும்‌ ளெளலப்ய காஷ்டையைக் காட்டி. !* என்றாரிறே –ஸ்ரீமத்யாயதநே விஷ்ணோஸ்‌ ஸிஸ்யே நரவராத்மஜ “ என்றும்‌- நரராயண முபாகமத்‌ ‘ என்றும்‌-விபவத்தாலே அர்ச்ச்யமான வேற்றமுண்டாயிறே யிருப்பது (பன்னு தமிழ் மாறன் பயின்று) த்ரவிடத்தையே நிரூபகமாக வுடையரான வாழ்வார்‌, * பண்ணிய தமிழ்‌ * என்னும்‌ படி ப்ரமாண சரமத்தை வெளியிட்டாப் போலே, ப்ரமேய சரமமான அர்ச்சாவதார மெளிதென்று வெளி யிட்டருளினா ரென்கை.

ஒருநாயகமா யுலகுக்கு வானோர்‌ : இருநாட்டிலேறி யுய்க்குமின்பம்‌–திரமாகா மன்னுயிர்ப் போகந்தீ.து மாலடிமையே யினிதாம்‌ பன்னி யிவை மாறனுரைப்பால்‌-(மன்னுயிர்ப்போகம்‌ தீது), இறுகலிறப்பு என்று ஸங்கோச ரூப மோக்ஷமாகை யாலே அதுவும்‌ தோஷ யுக்தமாயிருக்கும்‌.-மன்னுயிர்ப் போக மென்கையாலே — நித்ய மான. வரத்மாநுபவம்‌- கீழிலவை போலே அஸ்த்திர போகமன்றிக்கே நித்ய போகமா யிருந்ததே யாகிலும்‌, பர ப்ரஹ்மாநுபவத்தைக்‌ குறித்துச்‌ சிற்றின்பமாயிருக்கு மாகையாலே–தீதென்றது.

வீற்றிருக்குமால்‌ விண்ணில்‌ மிக்க மயல்‌ தன்னை
யாற்றுதற்காத்‌ தன்‌ பெருமையான தெல்லாம்‌ -தோற்றவந்து –
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறுரைத்தான்‌
சென்ற துயர் மாறன்‌ தீர்ந்து
(வீற்றிருக்குமால்‌)
இதில்‌—அப்ராக்ருத விபூதியில் அசாதாரணாகாரத்தைக் காட்ட வநுபவித்‌து ஹ்ருஷ்டராகிற படியைப்‌ பேசின’பாசுரத்தை யநுவதித்தருளிச்‌ செய்கிறார்‌, விலக்ஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷணாயுத பத்நீ பரிஜா விஸிஷ்டனாய்க் கொண்டு பரம பதத்திலே வ்யாவ்ருத்தி தோற்ற விருக்கிற மேன்மையும்‌, லீலா விபூதியிலுள்ளாரெல்லாரையும்‌ ஸ்ருஷ்ட் யநுப்ரவேஸாதிகளாலே ரக்ஷிக்கிற வளவன்‌றிக்கே மநுஷ்யாதி ரூபேண வந்தவதரித்து ரக்ஷித்துக் கொண்டு போருகிற படியையும்‌ இவர்க்குக்‌ காட்டிக் கொடுத்து ஸர்வேஸ்வரன்‌ இவரோடே வந்து பூர்ண ஸம்ஸ்லேஷம்‌ பண்ணி யருள, அத்தைக் கண்டு சூழ் விசும்பணி முகிலுக்கு மேல்‌ அங்கே சென்றால்‌ பண்ணுகிற மங்களா ஸாஸநத்தை, இங்கே யிருந்து அவனுடைய வுபய விபூத் யைஸ்வர்யத்துக்கும்‌ மங்களாசாஸநம் பண்ணி க்ருதக்ருத்யராய்‌, ‘உபய விபூதியிலு மென்னோடொப்பாரில்லை *’ என்று ஹ்ருஷ்டராகிற *வீற்றிருந்தேழுலகில்‌ தாத்பர்யத்தை யருளிச் செய்கிறார்‌ -வீற்றிருக்கு மால்‌ விண்ணில்‌ ” இத்யாதியாலே யென்கை-

ஏறுதிருவுடைய வீசனுகப் புக்கு
வேறுபடிலென்னுடைமை மிக்க வுயிர்‌–தேறுங்கால்‌
என்றனக்கும்‌ வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நந் தமக்குப் பேறாக நண்ணு.
[ஏறு திருவுடைய வீசன்‌)
பிராட்டி ஏகாயநை யாகையாலே -நஹி மே ஜீவிதேந – இத்யாதியாலே-அத்தலைக் குறுப்பல்லாத வாத்மாத்மீயங்களில்‌ நசை யற்றபடி சொன்னாள்‌ , இவர்‌ மிதுநாயநராகையாலே திருமகளும்‌ கூறாளும் தனி யுடம்பன்‌ – என்றும்‌, மலர்மாதருறை மார்பன்‌:” என்றும்‌, ‘ பட நாகத்‌ தணைக் கிடந்த பரு வரைத் தோள்‌ பரம் புருடன்‌ ‘? என்றும்‌ இப்படி ஸ்ரீயபதியா யிருக்கிற ஸர்வேஸ்வரனுடைய வுகப்புக்குப்‌ புறத்தியான மாமை முதலான வுடைமையோடு உயிரோடு வாசியற வேண்டா வென்கிறார்‌.

நண்ணாது மாலடியை நானிலத்தே வல் வினையால்‌
எண்ணாராத் துன்ப முறுமிவ் வுயிர்கள்‌–தண்ணிமையைக்‌
கண்டிருக்கமாட்டாமற்‌ கண்கலங்கு மாறனருள்‌
உண்டு நமக்குற்ற துணை யொன்று.
(நானிலத்தே)
நாலு வகைப்பட்ட பூமியிலே. அதாவது-குறிஞ்சி நிலமான திருமலைகளிலும்‌, முல்லை நிலமான திருக்கோட்டியூர்‌ திருமோகூர்‌ தொடக்கமான ஸ்தலங்களிலும்‌, மருத நிலமான கோயில்‌ பெருமாள் கோயில்‌ தொடக்கமான ஸ்தலங்களிலும்‌, நெய்தல்‌ நிலமான திருவல்லிக்கேணி திருப்புல்லாணி திரு வல்லவாழ்‌ திருவண்வண்டூர்‌ தொடக்கமான ஸ்தலங்களிலும்‌, ஸூலபனாயிறே அவனிருப்பது -அந்த ஸெளலப்யமே ஹேதுவாக அவன்‌ திருவடிகளை யாஸ்ரயியாதே-(தண்ணிமையைக்‌ கண்டிருக்க மாட்டாமல்‌) இவர்களநர்த்தத்தைக்‌ கண்டாற்ற மாட்டாமால்‌ (கண்கலங்குமாறன்‌) திருக் கண்களுக்‌ திருவுள்ளமும்‌ கலங்கிப் போரு மாழ்வார்‌-(அருளுண்டு நமக்குற்ற துணை யொன்று) இப்படி ஈஸ்வரனுங்கூடக்‌ கை விட்ட ஸம்ஸாரிகளையுமகப்பட விடமாட்டாமல்‌ ஈஸ்வரனோடே மன்றாடு மாழ்‌வாருடைய வருள்‌, அந்தரங்கமான ரக்ஷையாக நமக்கொன்றுண்டு, வேறொரு ரக்ஷகாந்தார் தேட வேண்டா, தானே ரக்ஷகமாயிருக்கும்‌-அருள்‌ கொண்டா யிரமின்‌றமிழ்ப்பாடினானருள்‌ கண்டீரிவ்வுலகினில்‌ மிக்கதே’‘ என்னக் கடவதிறே –

ஒன்றுமிலைத்தே விவ்வுலகம்‌ படைத்த மால்‌ அன்றியென வாருமறியவே– நன்றாக மூதலித்துப்‌ பேசி யருள்‌ மொய்ம் மகிழோன்‌ தாள் தொழவே காதலிக்கு மென்னுடையகை.
ஒன்றும் தேவிலர்த்தத்தை “* ஒன்‌றுமிலைத் தேவு
:என்‌று தொடங்கி யருளிச்‌ செய்கிறாரென்கை–(மூதலித்துப்பேசி யருள் மொய்ம் மகிழோன்‌) அதாவது இனி பரத்வ விஷயமாகப் பரோபதேஸம்பண்ண வேண்டாதபடி நன்றாகவே சேதநர்‌ திருந்தும்படி-அர்ச்சாவதாரத்திலே பரத்வத்தை யுபதேசிக்கையாலே, பரத்வ விஷய ஸங்காய் தீர்ந்து இருக்கக் கண்டு, சாத்தின வழகிய திருமகிழ்‌ மாலையும்‌ ஸம்ருத்தமாய்‌ அதுவே நிரூபகமாம்படியான வாழ்வாரென்கை.-நாட்கமழ்‌ மகிழ்மாலை மார்பினன்‌ மாறன்‌ சடகோபன்‌ -என்‌றத்தைப் பின்‌ சென்‌றபடி.-கேஸரமாலா லங்க்ருத வக்ஷஸ்தலரான வாழ்வார்‌ காதலிக்கை–பத்தி பண்ணுகை, கெளதூஹலிக்கை யாகவுமாம்‌.

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்‌
மலிவுதனைக்‌ கண்டுகந்து வாழ்த்தி–உலகில்‌
திருந்தாதார்‌ தம்மைத்‌ திருத்திய மாறன்‌ சொல்‌
மருந்தாகப்‌ போகும்‌ மன மாசு,
பூமகள் கோன்‌ தொண்டர்‌ மலிவாவது
–நித்ய ஸித்தர்‌ ஸ்‌வேத த்வீபவாஸிகள்‌ முதலான திருமாலடியாரெங்கும்‌ திரண்ட ஸம்ருத்தி, நித்ய ஸித்தர்க்கும்‌ ஸ்வேத த்வீப வாஸிகளுக்கும்‌ ஸமாநராய்த்‌ திருந்தத்‌ திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்க ளென்‌றுமாம்‌.(உலகில்‌ திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்‌ மருக்தாகப்‌ போகும் மன மாசு) ஒன்றும் தேவிலுபதேஸத்திலுந் திருக்தாதே யொதுங்கி யிருந்த வர்களைக்‌ குறித்து பரத்வோபதேஸம்‌ பண்ணித்‌ திருத்தியும்‌, அதிலும்‌ திருந்தாதவர்களைத் தேடித் தடவிப்‌ பிடித்து ப்ரத்யவாய புரஸ்ஸரமாகத்‌ திருத்தியும்‌ சொல்லுகிற ஆழ்வார்‌ஸ்ரீ ஸூக்த் யவ் ஷதமடியாக மநோ மாலின்யம்‌ நிவ்ருத்தமாம்‌. ஸ்ரீவைஷ்ணவ ஸாஜாத்ய புத்தியும்‌, தேவதாந்தரங்களிடத்தில்‌ பரத்வ புத்திய மாமிறே –மநோ மாலிந்யமாவது ; * மனனகமலமறக்‌ கழுவி” என்றாரிறே-விஷ வ்ருஷ பலங்கள்‌ கைக் கூடினவர்‌ அடிமை புக்காரையுமாட்செப்‌வாரையுங் காண, லோக த்வீபாந்தரங்களினின்றும்‌ போந்த தேவர் குழாங்களைக்‌ கண்டு காப்பிட்டு ப்ரஹ்லாத விபீஷணர்‌ சொற் கேளாத வரக்கரசுரர்‌ போல்‌வாரைத்‌ தடவிப் பிடித்து, தேச கால தோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்‌. நீங்கள்‌ நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவு மவரோ டொக்கத்‌ தொழில்‌ யுக தோஷமில்லையா மென்று விஷ்ணு பக்தி பரராக்கி“‘ என்றிறே யருளிச் செய்தது.-

வைகல்‌ திரு வண் வண்டூர்‌ வைகுமிராமனுக்கென்
செய்கை தனைப்‌ புள்ளினங்காள் செப்புமெனக்‌-கைகழிந்த
காதலுடன்‌ தூதுவிடுங் காரிமாறன் கழலே
மேதினியீர்‌ நீர் வணங்குமின்‌.
(வைகல்‌ திருவண்வண்டூர்‌ வைகுமி ராமனுக்கு) **தேறு நீர்ப் பம்பை வட பாலைத்‌ திருவண்வண்டூர்‌, மாறில்‌ போரரக்கன் மதிள்‌ நீழெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்‌
” என்றத்தை நினைக்கிறது. இரண்டாம்‌ தூதுக்கு விஷயம்‌ விபவ மிறே. “*வ்யவஸாயஜ்ஞர் ரஷண ஸ்தைச்யம்‌ பம்போத்தர தேஸஸ்தம்‌ ‘” என்றாரிறே – திருவண்வண்டூரிலே பிற்பட்டாரை ரக்ஷிக்கைக்கு ஸர்வ காலமும்‌ நித்ய வாஸம் பண்ணுகிற சக்ரவர்த்தித் திருமகனுக்கு ஜநக குல ஸுந்தரி ‘*ஜீவந்தீம்‌ ” என்று ஆள்‌ விட்டதும்‌ பம்பா பரிஸர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக்‌ குறித்தாயிற்று.

பொன்னுலகு பூமி யெல்லாம்‌ புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கியம்புமென–மன்னு திரு
நாடு முதற்றூது நல்கி விடு மாறனையே
நீடுலகீர்‌ போய் வணங்கு நீர் .
(மன்னு திருநாடு முதற்றூது நல்‌கிவிடு) திருநாடுமூதலாவது–*மூன்றாம்‌ தூதுக்கு விஷயம்‌ பரத்வ த்வயம்‌ ” என்கையாலே திருநாடும்‌ நெஞ்ச நாடும்‌ விஷயம்‌. *மா மதுவார் தண்டுழாய்‌ . முடி வானவர் கோனைக் கண்டு
” என்றும்‌, *மாசறு நீலச் சுடர்‌ முடி வானவர்கோனைக் கண்டு” என்றும்‌, **கார்த்திரள்‌ மாமுகில் போல்‌ கண்ணன்‌ விண்ணவர்கோனைக் கண்டு”’ என்றும்‌, *! எங்குச்‌ சென்றாகிலுங்கண்டு” என்றும்‌-பரத்வாந்தர்யாமித்வ விஷய தூத ப்ரேஷண மாயிருக்குமித் திருவாப்மொழி

உலகுய்ய மால்‌ நின்ற வுயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டவன்றன்‌–மலரடியே
வன் சரணாப்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன்சரணாய்‌ நெஞ்சமே யுள்‌.
(அவன்றன்‌ மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன்‌ ) திரு வேங்கடத்‌ தானே புகலொன்றில்லா வடியே னுன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே’””
என்று தம்‌ வெறுமையை முன்னிட்டு அவன்‌ திருவடிகளை நிரபேக்ஷோபாயமாக ஸ்வீகரித்த ஆழ்வாருடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரி. அகல கில்லேனென்‌று-பூர்வ வாக்யமநு ஸந்தித்தார்‌” என்னும்படி ஸ க்ரமமாக ஸரண வரணம்‌ பண்ணுகையாலே, சாத்தின திருமகிழ்மாலையும்‌ ஸம்ருத்தமாயிற்று. ஸரண்பன்‌ * தண்டுழாய்‌ விரை நாறு கண்ணியனானாப் போலே, ஸரணாகதரான விவரும்‌ மகிழ் மாறனானார்‌. அது ஸேஷித்வ தியோதகம்‌. இது ஸேஷத்வ த்யோதகம்‌. அவர்‌ பூம் துழாயானடியை யடைந்தாப்‌ போலே, இவரும்‌ ‘மகிழ்‌ மாறன் தாளிணையே யுன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌”? என்கிறார்‌; நெஞ்சே! வருளாபிராமமான திருவடிகளை யுனக்கு உபாயமாக அத்யவஸித்துப் போரு என்கிறார் –

கண்ணிறைய வந்து கலந்த மாலிக்கலவி
திண்ணிலையா வேணுமெனச்‌ சிந்தித்துத் -தண்ணிதெனு
மாருயிரினேற்‌றமதுகாட்ட வாய்ந்துரைத்தான்‌
காரி மாறன் றன் கருத்து
(தண்ணிதெனுமாருயிரினேற்ற மது காட்ட
— இவர்‌ !சிறியேனுடைச்‌ சிந்தை என்ற நுஸந்தித்துப் போருகிற வாத்மாவினுடைய பெருமையானதைக்‌ காட்டி யருள. (ஆய்ந்துரைத்தான்‌) ஆத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யாராய்ச்‌ செய்தார்‌.-அதாவது-தாஸஸ்ய”’ “தாஸோஹம்‌” என்னும்படி, “கண்கள்‌ சிவந்து” என்று தொடங்கி *அடியேனுள்ளான்‌” என்றும்‌ “அடியேனுள்ளான்‌” என்று தொடங்கி “உணர்விலும்பரொருவனே”” என்றும்‌ “உணர்விலும்பரொருவனை”‘ என்று தொடங்கி என்னுணர்வினுள்ளே யிருத்தினேன்‌” என்று இரண்டரைப்‌ பாட்டாலும்‌ தனக்கு ஸ்ரீ கெளஸ்துபம் போல ஸேஷமா யிருக்கிற படியையும்‌, ஆத்மாவினுடைய ப்ரக்ருதே: பரத்வமும்‌. ஜ்ஞாத்ருத்வாதிகளும்‌ போக்‌யதையும்‌ ஜ்ஞாநாநந்தத்வமும்‌ முதலாக வருளிச்‌ செய்தவை யென்கை.-

எங்காதலுக்கடி மாலேய்ந்த வடிவழகென்‌ றாங்காது பற்றாசா வாங்கவன்பா–லெங்குமுள்ள
புள்ளினத்தைத்‌ தூதாகப் போக விடு மாறன்‌ தாள் உள்ளனினார்க்குத்‌ தீங்கை யறுக்கும்
தம்பிழையும் சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த ஷமா தீக்ஷா ஸாரஸ்ய சவ்ந்தர்யங்களை யுணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வத்வயார்ச்சைகள்‌ தூது நாலுக்கும் விஷயம்‌’? என்றிறே ஆசார்ய ஹ்ருதயத்திலே நாயனாரு மருளிச்‌ செய்தது-“அபராத ஸஹத்வாச்ச விபோஸ் ஸம்பந்த வைபவாச்‌ | ஐகரஸ்யாச்ச ஸெளந்தர்யாத்‌ கடகாந் யாசதே முநி:” என்றிறே வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரு மருளிச் செய்தது.–

கண்ணனடியிணையிற்‌ காதலுறுவார்‌ செயலை
துண்ணமுறவே சுருங்கச் செப்பியே–மண்ணவர்க்குத்‌
தானுபதேசிக்கை தலைக் கட்டினான்‌ மாறன்‌
ஆனபுகழ்சேர்‌ தன்னரு
ள்‌.
(மண்ணவர்க்கு) பூமியிலுண்டான ஸர்வாத்மாக்களுக்கும்‌ (தானுப தேசிக்கை தலைக் கட்டினான் மாறன்‌) பிராட்டி (௧) *விதித” இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தாப்‌ போலே, தாமுபதேசித்துக்‌ கொடு போந்த பரோபதேஸத்தைப்‌ பரிஸமாப்தி பண்ணி யருளினார்‌ பெருமதிப்பரான வாழ்வார்‌.

அருளாலடியிலெடுத்த மாலன்பா
லிருளார்ந்த தம்முடம்பை யிச்சித்து–இருவிசும்பி
லித்துடன்‌ கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லு மாறன்‌ செஞ்சொல்‌,

(இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன்‌ செஞ்சொல்‌) விதி பரதந்த்ரனாய்‌, ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா ‘* இத்யாதிப் படியே பிராட்டி திருவுள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப்போலே, இவரநுமதி பார்த்தே யிருந்தவவனுடைய ஸூத்தியைச்‌ சொல்லுமாழ்வாருடைய ஸ்ராவ்யமான ஸய்தங்கள்‌-இவர்‌ தம்‌ தேஹ்த்தை யொழியக் கொடு போக வேணுமென்றபடியே பரதந்த்ரனாப்‌ நின்ற குண ஸூத்தியைப்‌ பேசினபடி யென்கை, * விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத்பாத்ரமென்ற பாத்ர ஸூத்தியிறே

செஞ்சொற்பரன்றனது சீராருமேனி தனில்‌
வஞ்சித்துச் செய்கின்‌ற வாஞ்சை தனின்‌–விஞ்சுதலைக்‌
கண்டவனைக் காற்கட்டிக்‌ கை விடுவித்துக் கொண்ட
திண்டிறல் மாறன் நந்திரு,
(சீராரும்‌ மேனிதனில்‌)
* தனிச்சிறையில்‌ விளப்புற்று அஸ்நாதையா யிருந்த பிராட்டி வடிவைக்‌ காண வாசைப்பட்டாப் போலே, * பிறவியஞ்சிழறையிலே ஜ்ஞாந பக்த்யாதிகள்‌ விஞ்சி யிருக்கிற விக்ரஹத்திலே–கை விடுவித்துக் கொண்ட-திண்டிறல் மாறன் -சர்வ சக்தன் சரீரத்தோடு கொடு போக வேணும்‌’” என்று கர க்ரஹணம் பண்ண, இவர்‌, சரண க்ரஹணம்‌ பண்ணி விடுவித்துக் கொண்ட திருடமான ஸக்தியை யுடைய ஆழ்வார்‌, (நந்திரு) ஸம்பச்ச ஸாத்விக ஜநஸ்ய” என்னும்படி ஆழ்வாரான மாறன்‌ நம்முடைய ஸம்பத்து.-

திருமால்தம்பால்‌ விருப்பஞ்செய்கின்‌ற நேர்கண்டு
அருமாயத் தன்‌றகல்விப்பானென்‌–பெருமால்‌
இன்றென்‌ பாற்செய்வானென்னென்ன விடருற்று நின்றான்‌
துன்னு புகழ் மாறனைத்தான்‌ சூழ்ந்து.
(அருமாயத்தன்‌ றகல்விப்பானென்‌ பெருமால்‌ நீ யின்றென்பால்‌ செய்‌ வானென்னென்
ன) அன்றநாதிகாலம்‌ துரத்யயமான ப்ரக்ருதியிலே யிட்டு வைத்து அகற்றி விடுவானென்‌ ? இன்று நிர்ஹேதுகமாக நிரவதிக வ்யா மோஹத்தை, ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வசக்தியாய்‌ நிரஸ்த ஸமஸ்த ஹேயனான நீ அஜ்ஞனாய்‌ அஸக்தனுப்‌ ஹேய ஸம்ஸர்க்கார்ஹனா யிருக்கிற வென்விஷயத்‌ திலிப்படிச்‌ செய்வானென்னென்றுகேட்க. * இன்றென்னைப்‌ பொருளாக்கத்‌ தன்னை யென்னுள்‌ வைத்தான்‌ | அன்றென்னைப் புறம்‌ போகப்‌ புணர்த்ததென்‌ செய்வான்‌ | குன்றென்னத் திகழ்‌ மாடங்கள்‌ சூழ் திருப்பேரா | னென்றெனக்‌ கருள்‌ செய்ய வுணர்த்தலுற்றேனே ‘ என்றத்தைக் கடாக்ஷித்தருளிச்‌ செய்தபடி-இப்படி அநாத்யநாதர ஹேதுசொல்லென்று மடியைப் பிடித்துக்கேட்க, அவனும்‌ சில ஹேது பரம்பரைகளை இவருத்தரத்துக்கு ப்ரதயுத்தரமாகச்‌ சொல்லிக் கொடுபோக , இவர் தம் நாவீறுடைமையாலே அவனை நிருத்தானாம்‌ படி பண்ண (என்னவிடருற்று நின்றான்‌) இப்படி இவரருளிச் செய்ய, மேல்‌ போக்கடி காணாமல்‌ தரையைக்‌ கீறிக் கவிழ்‌ தலையிட்டு ஸ்தப்தனாய்‌ நின்றான்‌.(துன்னு புகழ் மாறனைத் தான்‌ சூழ்க்து) “இது நிர்ஹேதுகமாகாதே! என்று அவன்‌ விஷயீகாரத்திலே விக்ருதராப்‌ அத்தாலே வந்த ஸம்ருத்தமான யஸஸ்ஸையுடைய வாழ்வாரை , அத்த யஸஸ்ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து இடருற்று நின்றான்‌ !. “*ஸர்வஜ்ஞனும்‌ நிருத்தரனாய் நிற்பதே” என்று இவர்க்கீடு பாடா யிருக்கிறது.-

சூழ்ந்து நின்ற மால்‌ விசும்பில்‌ தொல்லை வழி காட்ட
ஆழ்ந்ததனை முற்றுமநுபவித்து–வாழ்ந்தங்‌
கடியருடனே யிருந்த வாற்றை யுரைசெய்தான்‌
முடி மகிழ் சேர் ஞானமுனி.
(சூழ்ந்து நின்ற மால் விசும்பில்‌ தொல்லை வழி காட்ட)
கீழ்‌ இவரைச் சூழ்ந்து “கொண்டு நிருத்தரனாய் நின்‌ற ஸர்வேஸ்வரன்‌, “*ஏஷா ஸாத்ருஸ்யதே” இத்யாதிப்‌ படியே பரமாகாஸத்தில்‌ *ஐகதஸ் ஸாஸ்வதே மதே என்று பூர்வ மார்க்சமான அர்ச்சிராதி மார்க்கத்தைக்‌ காட்ட, அமந்த்ர ஜ்ஜோத்ஸவ கோஷம் போலே ஏறப்‌ பெறுகிற வெழுச்சியை ஸூஸிப்பிக்கிற மேக ஸமுத்ர பேரீ கீத காஹள ஸங்க ஸீஸ்துதி கோலாஹலம்‌ செவிப் படும் படியையும்‌, அலங்கார விதிம் க்ருத்ஸ்நாம்‌ காரயாமாஸ வேஸ்மக:”‘ என்கிறபடியே அங்குள்ள ஆதி வாஹிக ஸத்கார கிரமத்தையும்‌, மேல் நித்யஸூரிகள்‌ ப்ரத்யுத்கதராய்‌ ஸத்கரிக்கும் க்ரமத்தையும்‌ த்வாராத்யக்ஷராதரிக்கும் க்ரமத்தையும்‌, திவ்யாப்ஸரஸ் ஸத்கார க்ரமத்தையும்‌, ஸர்வேஸ்வரனும்‌ பெரிய பிராட்டியாரு மாதரிக்கும்படியையும்‌, திவ்யஸூரி பரிஷத்திலே யிருந்து ஆசக்த நிர்ப்பரரா யநுபவிக்கும்படியையும்‌, “தொல்லை வழி காட்ட” என்றவதிலே யிவ்வளவு மநுவர்த்தித்தபடி.

முனி மாறன்‌ முன்புரைசெய்‌ முற்றின்பம்‌ நீங்கித்‌
தனியாகி நின்று தளர்ந்து–கனியாம்‌
பரமபத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
யொருமை யுற்றுச்‌ சேர்ந்தானுயர்ந்து.
கண்டு களிப்பவளவும்‌-பரஜ்ஞாக கர்ப்ப பரபக்தி, இருந்தமையென்‌றது பூர்ண பரஜ்ஞாகம்‌, முடிந்த அவாவென்றது-பரம பக்தி. இவை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்த் யவஸ்தைகள்‌” “ஏவம்‌ விதமான பரம பக்தியாலே பரிபக்வராய்‌ பலத்‌ தாடே சேர்ந்தார்‌” என்கிற திருவாய்‌ மொழியினர்த்தத்தை இப் பிரபந்தத்தி லிப்‌ பாட்டாலே ஸேகரித்தருளினாராயிற்று,

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading