நான்கு பாதங்களும் ஒன்றானவை
கடைநின்றமரர் கழல்தொழுது* நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்…. இரண்டாம் திருவந்தாதி 11
கடைநின்றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை
யாரோத வல்லாரவர்…. நான்முகன் திருவந்தாதி 55
———
3,4 பாதங்கள் ஒன்றானவை
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்ட என் கண்ணினை களிக்குமாறே –திருமாலை–17
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்-13
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம்மாயனே! அருளாய்
என்னும் இன்தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே….பெரிய திருமொழி 2-7-10
பொன்னுமாமணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமாநகரமர்ந்தானை
மன்னுமாமாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாயொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்நாளும் பழவினை பற்றறுப்பாரே….பெரிய திருமொழி 5-7-10
வண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டைநம் வினைகெடவென்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணியநின்று அங்கண்டமொடகலிடமளந்தவனே
ஆண்டாயுன்னைக் காண்பதோர் அருளெனக்கருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே….பெரிய திருமொழி 6-1-1
6-1-1 முதல் ஒன்பது பாசுரங்கள் ஒரே பின்னடியில் அமைந்தவை.
—————–
சிறு மாறுதலுடன் 3,4பாதங்கள் ஒன்றானவை
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் – தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்* அண்டத்து
இருசுடருமாய இறை…. மூன்றாம் திருவந்தாதி 38
நீயே உலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும் – நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும்” அண்டத்து
இருசுடருமாய இவை…. நான்முகன்திருவந்தாதி 20
————
மூன்றாம் பாதம் ஒன்றானவை
மின்னனைய நுண்மருங்குல்
மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
புன்னை பொன்னேய்தாதுதிர்க்கும் புள்ளம்பூதங்குடிதானே
என்னைம்புலனும் எழிலும் கொண்டு….பெரிய திருமொழி 5-1-6
மன்னுமுதுநீர் அரவிந்தமலர்மேல் வரிவண்டிசை பாட
அன்னம் பெடையோடுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே-..பெரிய திருமொழி 7-5-9
கொல்லையென்பர் கொலோ?
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நடங்க இளமான் செல்ல மேவினளே….. திருவாய்மொழி 6-7-4
மல்குநீர்க்கண்ணொடு …..
செல்வம்மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே…..திருவாய்மொழி 6-7-7
சீர்கண்டுகொண்டு …
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
பார்பரவின்கவி பாடும் பரமரே-திருவாய்மொழி 7-9-5
ஆர்வனோ? ஆழியங்கை
ஏர்விலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே…. திருவாய்மொழி 7-9-8
கோதில வண்புகழ்…….
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஒதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே…. திருவாய்மொழி 4-2-4
மாதர் மாமண்மடந்தை ……..
பாதங்கள் மேலணி பைம்பொன் துழாயென்றே
ஓதுமால் எய்தினள் என்தன் மடந்தையே…. திருவாய்மொழி 4-2-6
————–
மூன்றாம் பாதம் சிறுமாறுதலுடன் ஒன்றானவை
குடையா விலங்கல் கொண்டேந்தி
குடியாவண்டு கள்ளுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடிதானே-பெரிய திருமொழி 5-1-7
வடிவாய் மழுவே படையாக….
குடியாவண்டு கொண்டுண்ணக் கோலநீலம் மட்டுகுக்கும் அடியேன் கண்டு கடியார் புறவிற் கண்ணபுரத்து கொண்டேனே….பெரிய திருமொழி 8-8-6
————
நான்காம் பாதம் ஒன்றானவை
மாடமாளிகைசூழ் திருமங்கை
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே….பெரிய திருமொழி 5-8-10
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே….பெரிய திருமொழி 7-3-10
———-
தொடக்கம் ஒன்றானவை
அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய் தொண்டர்கள் பூச்சூட்டவாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-7-9
அண்டத்தமரர் பெருமான் ஆழியான்…. வைக்குங் கொலோ….பெரியாழ்வார் திருமொழி 3-8-7
அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளுமெல்லாம் அமுது செய்த வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-2
அண்டமும் இவ் வலைகடலும் அவனிகளும் குலவரையும் உண்டபிரான் திருத்தேவனார் தொகையே…. பெரிய திருமொழி 4-1-5
அருளாதொழியுமே ஆலிலைமேல் * அன்று தெருளாத நிற்பார்க்கு முன்… மூன்றாம் திருவந்தாதி 19அருளாதொழிவாய் அருள் செய்து……. தென்திருநாவாய் என்தேவே … திருவாய்மொழி 9-8-8
அவரிவரென்றில்லை அரவணையான் பாதம் எவர்வணங்கி .. நாளும்தொடர்ந்து… இரண்டாம் திருவந்தாதி 2அவரிவரென்றில்லை அனங்கவேள் தாதைக்கு எவரும் எதிரில்லை…. தோற்றான் ஒருங்கு
நான்முகன் திருவந்தாதி 56
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் ….. என்று மதித்து-இரண்டாம் திருவந்தாதி 50அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் .. வெற்பு… நான்முகன் திருவந்தாதி 39
அறிந்தறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் செறிந்தெழுந்த … .பற்றறுதல் பான்மையே… திருச்சந்தவிருத்தம் 74அறிந்தறிந்து தேறித்தேறி யான் எனதாவியுள்ளே நிறைந்த ஞான ……கண்டுகொண்டே-திருவாய்மொழி 4-7-7
அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு எம்பாவாய்… திருப்பாவை 24அன்றிவ்வுலகம் அளந்த அசைவேகொல் நின்றிருந்து நெஞ்சமே காண்… நான்முகன் திருவந்தாதி 34
அன்றுலகமளந்தானையுகந்து …….நின்றும் துரப்பன்… நாச்சியார் திருமொழி 5-10
அன்றுலக மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் ….. மணிமாடம் சேர்மின்களே
…. பெரிய திருமொழி 6-6-5
ஆங்குமாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடமளந்து… திருவயிந்திரபுரமே.. பெரிய திருமொழி 3-1-5
ஆங்குமாவலி வேள்வியில் இரந்துசென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம! திருவெள்ளறை நின்றானே…. பெரிய திருமொழி 5-3-9
இரும்பனன்றுண்ட நீர்போல் எம்பெருமானுக்கு * என்தன் அரும்பெறலன்பு ….பருகினேற்கு இனியவாறே…. திருக்குறுந்தாண்டகம் 7–இரும்பனன்றுண்ட நீரும் போதரும் கொள்க* என்தன் அரும்பிணி பாவமெல்லாம் களிக்குமாறே …. திருக்குறுந்தாண்டகம் 13
உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்து பெண்ணாக்கை … எண்ணுவரே…. நாச்சியார் திருமொழி 11-7-உண்ணாது உறங்காது உணர்வுறும்……உயிராயின காவிகளே-…திருவிருத்தம் 66
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற்றங்கேக பாடிப்பற-பெரியாழ்வார் திருமொழி 3-9-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்…….. மாலிருஞ் சோலையதே…. பெரியாழ்வார் திருமொழி 4-3-1
உலவு திரையும் குலவரையும்…….… சாளக்கிராமம் அடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-5-3
உலவு திரைக்கடல் பள்ளி கொண்டுவந்து………அணியாலியம்மானே…. பெரிய திருமொழி 3-5-7
உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்றோர் முதல் திருவந்தாதி 99–உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் விண்ணொடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண்ணொடுங்கத் தானளந்த. மன்--மூன்றாம் திருவந்தாதி 40-உளன்கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் உள்ளுவாருள்ளத்து – உளன்கண்டாய் தன்னொப்பான் தானாய் உளன்காண் தமியேற்கும் என்னொப்பார்க் கீசனிமை|-… நான்முகன் திருவந்தாதி 86
ஊழிதோறூழி ஒவாது * வாழிய வென்றே.. மாமுதலடியே—திருவாசிரியம் 4
ஊழிதோறூழி உலகுக்கு நீர் கொண்டு தோழியரும் …… நைவாயே ….திருவாய்மொழி 2-1-5-ஊழிதோறூழி உருவும் பேரும் செய்கையும் ஆழியாரே…. திருவாய்மொழி 7-3-11
எந்தை தந்தைதந்தை தந்தைதம்……….…..பல்லாண்டு பாடுதுமே-திருப்பல்லாண்டு 6
எந்தை தந்தை தம்மான் என்றென்று …..இந்தளூரீரே…. …. பெரிய திருமொழி 4-9-9
எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை….காரெழிலண்ணலே …. திருவாய்மொழி 3-3-2
எனக்காவார் ஆரொருவரே! எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் – புனக்காயாம்
பூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ
மாமேனி காட்டும் வரம்.-முதல் திருவந்தாதி 89
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி -51-
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா. … காண். இரண்டாம் திருவந்தாதி 55
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும். காப்பு-நான்முகன் திருவந்தாதி 92
ஏழை பேதை ஓர்பாலகன் வந்து என்|-மூதுரையுமிலளே… பெரியாழ்வார்திருமொழி 3-7-4 ஏழை பேதை இராப்பகல் * தன|கேழில்……வாட்டேன்மினே. திருவாய்மொழி 2-4-10
ஓதியாயிர நாமங்கள் உணர்ந்தவர்க்கு…பிரிதி சென்றடைநெஞ்சே…. பெரிய திருமொழி 1-2-9
ஓதியாயிர நாமம் பணிந்தேத்தி ……..அணியாலியம்மானே. பெரிய திருமொழி 3-5-9
கண்டு கொண்டு என்னைக்….…..சடகோபனருளையே-.கண்ணிநுண் சிறுத்தாம்பு 7
கண்டு கொண்டு என் கைகளார ……..வந்திடகில்லாயே. திருவாய்மொழி 4-7-8
கண்டு கொண்டு என் கண்ணிணையாரக்….அடியேனே. திருவாய்மொழி 9-4-9
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு…அடியேனிடரைக் களையாயே… பெரிய திருமொழி 1-10-1 கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை…..களையாயே-. பெரிய திருமொழி 4-7-1
கலையிலங்கும் அகலல்குல் அரக்கர்……..வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-4
கலையிலங்கும் அகலல்குல் கமலப்பாவைகதிர்முத்த……என் செங்கண்மாலே– பெரிய திருமொழி 4-4-5
கல்லார் மதிள்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்வல்லாகம்…………….நறையூரில் கண்டேனே. பெரிய திருமொழி 6-8-8
கல்லார் மதிள்சூழ் கச்சிநகருள் நச்சி .நமோநாராயணமே-. பெரிய திருமொழி 6-10-5
கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை பற்றியெறிந்த .அக்காக்காய். பெரியாழ்வார் திருமொழி 2-5-5
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ்– என்னை உய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-8
கன்னிநன் மாமதிள் சூழ்தரு என்குட்டனே முத்தம் தா…. பெரியாழ்வார் திருமொழி 3-3-2
கன்னிநன் மாமதிள் புடைசூழ் …….பாங்காய பக்தர்களே.. பெருமாள் திருமொழி 8-11
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் கற்ற திண்ணனவே. திருவிருத்தம் 8-காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற. செய்கின்றவே-திருவாய்மொழி5-6-3
காரிகையார்க்கும் உனக்கும்……இருடீகேசா என்தன் கண்ணே. பெரியாழ்வார் திருமொழி 2-3-10
காரிகையார் நிறைகாப்பவர் ……..என் சின்மொழிக்கே.. திருவிருத்தம் 19
கார்த்தண் கமலக் கண்ணென்னும்…..….விருந்தாவனத்தே கண்டோமே-. நாச்சியார் திருமொழி 14-4
கார்த்தண் முகிலும் கருவிளையும் ….பக்தலிலோசனத்துய்த்திடுமின். நாச்சியார் திருமொழி 12-6
காலையெழுந்து கடைந்த இம்மோர்…..….என்செய்கேனோ..பெரியாழ்வார் திருமொழி 10-7-2
காலையெழுந்திருந்து கரிய குருவிக்….வார்த்தையுரைக்கின்றவே…. நாச்சியார் திருமொழி 9-8
காலையெழுந்து உலகம் கற்பனவும் …..பெயர் குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…….
என்னதாவி மேலதே…. முதல் திருவந்தாதி 66
குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட…என்னதாவி மேலதே-திருவாய்மொழி 4-3-7 குரைகழல்கள் குறுகினம் நம் ……மெய்ந்நின்று கமழுமே…. திருவாய்மொழி 10-6-7
குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் ஒன்றிநின்ற ………கற்பார்க்கே-. திருவாய்மொழி 7-4-11
குன்றமெடுத்து ஆநிரை காத்தவன் தன்னை மன்றில்புகழ் .சாரகில்லாவே – பெரிய திருமொழி 11-8-10
குன்றமெடுத்து மழைதடுத்து இளையாரொடும் மன்றில் குரவை .. …..ஆர்கொலோ–. பெரிய திருமொழி 11-2-1
குன்றால் மாரி தடுத்தவனைக் ……நிறைந்தேனே…. பெரிய திருமொழி 7-6-4
குன்றால் மாரி பழுதாக்கிக் …..கண்ணபுரம் நாம் தொழுதுமே ……. பெரிய திருமொழி 8-6-9 குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் என்வசமல்லவே…. பெரியாழ்வார் திருமொழி 3-4-4
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா! ……அரங்கத்தரவணைப் பள்ளியானே-. பெரியாழ்வார் திருமொழி 4-10-9
கொங்குமலி கருங் குழலாள்கௌசலை …..தாலேலோ…. பெருமாள் திருமொழி 8-31
கொங்குமலி கருங் குவளை கண்ணாக……..செறி வளையே…. பெரிய திருமொழி 8-3-8
கொண்டல் வண்ணனைக்கோவலனாய்—.காணாவே–. அமலனாதிபிரான் 10 கொண்டல் வண்ணா! இங்கே போதராயே! கோயிற்பிள்ளாய். .கலவிதானே. –பெரியாழ்வார் திருமொழி 2-9-4
கொண்டல் வண்ணா! குடக்கூத்தா! ஒருநாள் வந்து தோன்றாயே— திருவாய்மொழி 8-5-6
சலங்கொண்ட இரணியனது…….வணங்கு மடநெஞ்சே…. பெரிய திருமொழி 3-9-1 சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த …….நடலை நோய் செப்புமினே…. நாச்சியார் திருமொழி 8-6-
செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ……ஊழி பெயர்த்திடும்கொன்றே-. திருவாய்மொழி 5-2-5
செய்கின்ற கிதியெல்லாம் யானே யென்றும் செய்வானின்றனகளும்…………..திறத்தே…. திருவாய்மொழி 5-6-4
சேயன்அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் ..மற்றறியேனே–. பெரிய திருமொழி 1-10-8
சேயன் அணியன் சிறியன் பெரியன்……..தொழில் பூண்டாயே-. பெரிய திருமொழி 2-1-8
சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன் ஆயன் துவரை…. மெய்ஞ்ஞானமில்-நான்முகன் திருவந்தாதி 71
சோத்தென நின்று தொழவிரங்காள்..–என்னை உய்த்திடுமின்…. பெரிய திருமொழி 9-5-9 சோத்தென நின்னைத் தொழுவன் வரம்தர பேய்ச்சி .கொட்டாய் சப்பாணி …. பெரிய திருமொழி 10-5-5-
ஞாலமுற்றும் உண்டு ஆலிலைத்துயில் …..…. இல்லை வருதுயரே-. பெரியாழ்வார் திருமொழி 3-7-11
ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாதன்…..பார்த்தன் பள்ளி பாடுவாளே-. பெரிய திருமொழி 4-8-6=
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த .எவ்வுயிர்க்கும் நீ-. நான்முகன் திருவந்தாதி 19
தவம் செய்து நான்முகனே பெற்றான் * தரணி நிவந்தளப்ப………. பேர்மொழிந்து பின்…. இரண்டாம் திருவந்தாதி 78
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்…..வந்துலாகின்றதே--. திருவிருத்தம் 74
தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர்…..விண்மீதே …. திருவாய்மொழி 6-9-4
தாங்கரும் சினத்துவன் தாள்……திருமணிக்கூடத்தானே…. பெரிய திருமொழி 4-5-4
தாங்கரும் போர் மாலி படப்….. கண்டேன் நானே…. பெரிய திருமொழி 2-10-4-
தாராய தணதுள் போரானைக்.. ….கவர்வானோ… பெரிய திருமொழி 3-6-6
தாராய தண்துளவ வண்டுழுத…கண்டாள் கொலோ. பெரிய திருமொழி 8-1-4-
திடவிசும்பெரிநீர் திங்களும் சுடரும்….கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே…. பெரிய திருமொழி 4-3-3
திடவிசும்பெரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் ……சுரனே…. திருவாய்மொழி 1-1-7-
திருமாலிருஞ் சோலையானேயாகிச் அருளையீந்த அம்மானே— திருவாய்மொழி 10-7-6- திருமாலிருஞ் சோலை மலையே……….முதல்வன் ஒருவனே— திருவாய்மொழி 10-7-8-
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து —-தென்திருப்பேரே–. திருவாய்மொழி 10-8-1
தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை …………….இயம்பிக் காணே-.. திருநெடுந்தாண்டகம் 26
தேமருவு பொழில்புடைசூழ் ……வினையாய நண்ணாவே…. பெரிய திருமொழி 8-3-10
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை…….ஒருகாலும் பிரிகிலேனே…. பெரிய திருமொழி 7-4-4-தேராளும் வாளரக்கன் செல்வம்…..என்றல்லால் பேசலாமே…. திருநெடுந்தாண்டகம் 20
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் .இராகவனேதாலேலோ
…. பெருமாள் திருமொழி 8-10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும்….பொலிவர் தாமே.– பெரிய திருமொழி 11-6-10-
தொண்டெல்லாம் நின்னடியே தொழுதுய்யுமா கண்டு தான் ….தக்கதே–. பெரிய திருமொழி 8-2-8-தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி…..….பரவுவேனே…. திருக்குறுந்தாண்டகம் 11-
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் நிகரில் சூழ் .புண்ணியமே – திருவாய்மொழி 6-3-3 நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்….….எனை யூழியானே…. திருவாய்மொழி 7-3-10
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்த ………….. அல்லலில்லையே-பெரியாழ்வார் திருமொழி 3-9-11-
நந்தன் மதலை நிலமங்கை நல் துணைவன் அந்த முதல்வன் கோல்தும் !…. பெரிய திருமொழி 8-4-9-
நீலத்தடவரை மாமணிநிகழக் …….அணியாலி யம்மானே…. பெரிய திருமொழி 3-5-2-நீலத்தடவரைமேல் புண்டரீக நெடுந்தடங்கள் போல பொலிந்து ….. .கோலங்களே-திருவிருத்தம் 39
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ…. பெரியாழ்வார் திருமொழி 1-8-3-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற்பொய்கைபுக்கு அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற…. பெரியாழ்வார் திருமொழி 3-9-5-
பண்டை நாளாலே நின்திருவருளும் ….திருப்புளிங்குடிக்கிடந்தானே…. திருவாய்மொழி 9-2-1
பண்டை நான்மறையும் வேள்வியும்…….அரங்கமாநகரமர்ந்தானே…. பெரிய திருமொழி 5-7-1
பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய…….புனலரங்கமே…. பெரியாழ்வார் திருமொழி 4-9-4
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மதுவாயில் செல்வப் பெருஞ்சங்கே…. நாச்சியார் திருமொழி 7-9-
பந்தணைந்த மெல் விரலாள் பாவைதன் ….. எவ்வுள் கிடந்தானே…. பெரிய திருமொழி 2-2-4
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகி………அமரர் கோவே… பெரிய திருமொழி 7-8-7-
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் …செங்கழுநீர் சூட்டவாராய்…. பெரியாழ்வார் திருமொழி 2-7-5
புள்ளினை வாய் பிளந்து பொருமாகரி ….வல்லள் கொலோ…. பெரிய திருமொழி 9-9-7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி சப்பாணி
…. பெரிய திருமொழி 10-5-7
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை. . எம்பாவாய்…. திருப்பாவை 13-புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை …….. உய்யுமாறு எனக்கே…. திருவாய்மொழி 5-7-9
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து அடியேனை யாளுகந்து………..திருக்கோட்டியூரானே ….பெரிய திருமொழி 9-10-8
பூங்குருந்தொசித்து ஆனை காய்ந்து அரிமாச் செகுத்து ஆங்கு வேழத்தின் இளமையே … பெரிய திருமொழி 11-2-2-
பெற்றார் தளை கழலப் பேர்ந்தங் கயலிடத்து உற்றாரொருவரும்…… ..சப்பாணி…. பெரிய திருமொழி 10-5-4
பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய் செற்றார் படிகடந்த ..நின்று
…. முதல் திருவந்தாதி 20-
பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருத்தண்கால் ஊரானைக் .தென்னரங்கத்தே
…. பெரிய திருமொழி 5-6-2-பேரானைக் குடந்தைப் பெருமானை இலங்கொளி சொ
வாரார் .கண்டு கொண்டு களித்தேனே-….பெரியதிருமொழி 7-6-9
மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும். .வந்து காணீரே-.பெரியாழ்வார் திருமொழி 1-2-18
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும்…..…மணந்தானைக் கண்டாருளர்
….பெரியாழ்வார் திருமொழி 4-1-9
மண்ணும் மலையும் மறிகடலும்மாருதமும் விண்ணும்……………உண்டோவுன்வாய் –முதல் திருவந்தாதி 10
மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா…..பணிமின் நீரே--திருமாலை 9
மற்றுமோர் தெய்வம் உளதென்று …….கண்ணபுரத்துறையம்மானே-பெரிய திருமொழி 8-10-3
மனத்துள்ளான் வேங்கடத்தான்………பிளந்த மகன்-…. இரண்டாம் திருவந்தாதி 28
…. திருமாலை 9-மனத்துள்ளான்மாகடல் நீருள்ளான்…மருந்து…. மூன்றாம் திருவந்தாதி 4
…. பெரிய திருமொழி 8-10-3
மாடமாளிகை சூழ் மதுரைப் பதி நாடி….. .கூடிடு கூடலே-நாச்சியார் திருமொழி 4-5-மாட மாளிகை சூழ் திருமங்கை மன்னன் ஒன்னலர்…….-.பாவம் நில்லாவே…. பெரிய திருமொழி 5-8-10
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியிலுழைக்கும் ஊனே யாக்கை ……திருவிண்ணகர் மேயவனே…. பெரிய திருமொழி 6-2-3
மானேய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்துலவும் ஊனேய் கண் …..திருவிண்ணகரானே
….பெரிய திருமொழி 6-3-3
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய்! மாதவா!கூனே சிதைய .சேருமாறு வினையேனே…. திருவாய்மொழி 1-5-5
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் …..முலை யுணாயே -.பெரியாழ்வார்திருமொழி 2-2-6-மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் ……
..அருந் தவத்தனாவேனே….பெருமாள் திருமொழி 4-6
மின்னனைய நுண் மருங்குல்…. வணங்கு மடநெஞ்சே--.பெரிய திருமொழி 3-9-5
மின்னொத்த நுண்ணிடையாய்! …..ஓர் அடையாளம்….பெரியாழ்வார் திருமொழி 3-9-5
மின்னொத்த நுண்ணிடையாளைக்.மட நம்பி! நீயே….பெருமாள் திருமொழி 6-5-
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை .வந்து காணீரே….பெரியாழ்வார் திருமொழி 1-2-12
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு…. இடரில்லையே….பெரியாழ்வார் திருமொழி 1-4-10-
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட–அஞ்சன. இல்லை இடர் தானே
….பெரியாழ்வார் திருமொழி 1-3-10 –-வஞ்சனையால் வந்தவள் தன் உயிருண்டு வாய்த்த வணங்கு மட நெஞ்சே….பெரிய திருமொழி 3-10-9
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் ….….கண்டாள் கொலோ….பெரிய திருமொழி 8-1-9
வண்டமரும் மலர்ப்புன்னை வரி ழல்………என்ஒளிவளையே….பெரிய திருமொழி 8-3-7-வண்டமரும் சோலை வயலாலி…..கோல்தும்பீ….பெரிய திருமொழி 8-4-10
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய…….விரும்புவரே–….பெரிய திருமொழி 3-8-10
வண்டார் பொழில் சூழ் நறையூர்…… இல்லை துயரே–….பெரிய திருமொழி 7-4-10
வண்ணக் கருங்குழல் மாதர்வந்து …..எல்லே பாவமே….பெரியாழ்வார் திருமொழி 3-2-4
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் ….சாழலே….பெரிய திருமொழி 11-5-5
வந்தாய் என்மனத்தே வந்து நீ ….மறவாமை பெற்றேனே….பெரிய திருமொழி 8-9-5-….வந்தாய் என் மனம் புகுந்தாய் .என்றும் விடேனே….பெரிய திருமொழி 1-10-9-
வந்தாய் போலே வந்தும் என் …. அணுகிற்பனே… திருவாய்மொழி 3-2-5
வந்தாய் போலே வாராதாய் ……அகலகில்லேன் இறையுமே–… திருவாய்மொழி 6-10-9
வம்பவிழும் துழாய் மாலை ……ஒருவர் அழகியவா….பெரிய திருமொழி 9-2-4-வம்பவிழ் வானவர் வாயுறை –பள்ளி எழுந்தருளாயே –திருப்பள்ளியெழுச்சி -8-
வம்பவிழ் கோதை பொருட்டா –சாது சனங்களினிடையே –-திருவடி –3-5-4-
வம்புலாம் கூந்தல் மனைவியை –நைமிசாரண்யத்துள் எந்தாய் –பெரிய திருமொழி -1-6-4-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி –தென்னரங்கமே –பெரிய திருமொழி -5-4-5-
வாரணிந்த கொங்கை யாய்ச்சி —பெறுவர் தாமே –பெரியாழ்வார் –2-2-11-
வாரணிந்த முலை மடவாய் –ஓரடையாளம் –பெரியாழ்வார் –3-10-4-
வாராரும் முலை மடமாள் வைதேவி –இமையவரோடு இருப்பாரே -பெரியாழ்வார் -3-10-10-
வாராரும் முலை மடமாள் பின்னைக்காகி –என் செங்கண் மாலே -பெரியாழ்வார்-4-4-4-
வாராரும் இளங்கொங்கை மைதிலியை —திருத்தேவனார் தொகையே –பெரிய திருமொழி –4-1-8-
வாராளும் இளம்கொங்கை வண்ணம் ….. எங்ஙனம் நான்செப்புகேனே….பெரிய திருமொழி 5-5-7-வாராளும் இளம்கொங்கை……… இழந்தேன் என் பெய்வளையே….பெரிய திருமொழி 8-3-9-
வாழ்த்தி அவனடியைப் பூப் புனைந்து………..தங்கு–….பெரிய திருவந்தாதி 84
வாழ்த்திய வாயராய் வானோர் ….…தாமரையாமலர்….மூன்றாம் திருவந்தாதி 96
வெஞ்சினக் களிறும் வில்லொடு அல்லல் தீர்ந்தேனே…. பெரிய திருமொழி 4-3-7
வெஞ்சினக் களிற்றை விளங்காய் ………கண்டு கொண்டேனே….பெரிய திருமொழி 7-10-8
வெந்திறல் களிறும் வேலைவாய் ….வதரியாச்சிராமத்துள்ளானே--….பெரிய திருமொழி 1-4-7
வெந்திறல் வாணன் வேள்வியிட…….நம்மையாளுமரசே….பெரிய திருமொழி 11-4-5-
வெள்ளை நுண் மணற் கொண்டு…….. என்னை எய்கிற்றியே….நாச்சியார் திருமொழி 1-2
வெள்ளை நுண் மணற் கொண்டு…..…… உன்முகத்தன கண்களல்லவே–.நாச்சியார் -2-5-திருமொழி 2-5
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் ……….கைசெய்யக் கண்டாருளர்….பெரியாழ்வார் திருமொழி 4-1-7–வெள்ளைவிளிசங்கு இடங்கையில்…… என் வேங்கடவன் வரக்கூவாய்-.நாச்சியார் திருமொழி 5-2
வெற்பென்று வேங்கடம் பாடும்……புகும்--….மூன்றாம் திருவந்தாதி 69
வெற்பென்று வேங்கடம் பாடினேன்… காண்….நான்முகன் திருவந்தாதி 40-
வையமெல்லாம் பெறும் வார்கடல் வாழும்…….மாதவனே! இங்கே வாராய்….பெரியாழ்வார் திருமொழி 2-3-3
வையமெல்லாம் உடன்வணங்க வணங்கா….கண்டுகொண்டேனே….பெரிய திருமொழி 8-8-7
————————
முடிவு ஒன்றான பாசுரங்கள்
இல்லை பாவமே–செந் நெலார் வயல் சூழ் –இம் மன்னுபாடல் வல்லார்க்கு இல்லை பாவமே …. பெரியாழ்வார் திருமொழி 1-1-10 ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை… பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லைபாவமே —நாச்சியார் திருமொழி-4-11-
இடரில்லையே
1) மைத்தடங்கண்ணி யசோதை சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே.. பெரியாழ்வார் திருமொழி 1-4-10
z) என்றும் எனக்கினியானை என்………. மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே… பெரியாழ்வார் திருமொழி 3-2-10-
வினைபோமே
1) ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர்தங்…..சொல்லுவார் வினை போமே--. பெரியாழ்வார் திருமொழி 1-6-11
2) போதமர் செல்வக் கொழுந்து ………பத்தருள்ளார் வினை போமே... பெரியாழ்வார் திருமொழி 2-8-10
மக்களைப் பெற்று மகிழ்வரே
1) ஆய்ச்சியன்றாழிப்பிரான் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே…பெரியாழ்வார் திருமொழி 1-9-10
2) ஆயனுக்காகத் தான்கண்ட கனாவினை…… வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
…. நாச்சியார் திருமொழி 6-11
கழலிணை காண்பர்களே
1) புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி……..கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே
…. பெரியாழ்வார் திருமொழி 3-3-10—2)மருதப் பொழிலணி மாலிருஞ–கண்ணன் கழலிணை காண்பர்களே.... பெரியாழ்வார் திருமொழி 4-2-11-
பரமான வைகுந்தம் நண்ணுவரே
1) விண்ணின் மீது அமரர்கள் விரும்பித்…….பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே… பெரியாழ்வார் திருமொழி 3-4-10
2) அரவில் பள்ளி கொண்டுஅரவம் ……..பரவுமன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.... பெரியாழ்வார் திருமொழி 3-5-11-
தூமணி வண்ணனுக்கு ஆளரே
1) மாயவன்பின் வழிசென்று ……. தூமணி வண்ணனுக்குஆளரே-. பெரியாழ்வார் திருமொழி 3-8-10
2) மாயவனை மதுசூதனனைமாதவனை …. தூமணி வண்ணனுக்கு ஆளரே--… பெரியாழ்வார் திருமொழி 4-10-10
8. அல்லலில்லையே-நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று…… ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரியாழ்வார் திருமொழி 3-9-11
2) அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட்கலி கன்றி* சொல் வல்லார்க்கு அல்லலில்லையே... பெரிய திருமொழி 10-1-10
3) பாதம் நாளும் பணியத் தணியும் பிணி… ஆதியானை அடைந்தார்க்கு அல்லலில்லையே
…. திருவாய்மொழி 9-10-9-
நண்ணுவாரொல்லை நாரணனுலகே- காமர்தாதை கருதலர்சிங்கம் .. நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவாரொல்லை நாரணனுலகே... பெரியாழ்வார் திருமொழி 5-1-10
2) மல்லை மாநகர்க்கிறையவன் தன்னை….. நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவாரொல்லை நாரணனுலகே-.… பெருமாள் திருமொழி 7-11
10. அணுக்கர்களே / அணுக்கரே-வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே…..
சாயை போலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே.. பெரியாழ்வார் திருமொழி 5-4-11-பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்..ஆய்ந்தேத்த வல்லாரவரும் அணுக்கரே.. நாச்சியார் திருமொழி 7-10
நலந்திகழ் நாரணனடிக்கீழ் நண்ணுவாரே
1) திடர்விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத் நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலந் திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 1-11
2) தில்லை நகர்த் திருச் சித்திர கூடந்தன்னுள் நல்லியலின் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணனடிக் கீழ் நண்ணுவாரே… பெருமாள் திருமொழி 10-11-
பாங்காய பத்தர்களே
1) மன்னிய தண்சாரல் வடவேங்கடத்தான் தன் …… பன்னியநூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே… பெருமாள் திருமொழி 4-11
2) கன்னிநன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் பன்னியநூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே... பெருமாள் திருமொழி 8-11
பயில்வார்க்கு இல்லை பாவங்களே
1) கண்ணாய் ஏழுலகுக்குஉயிராய எங்கார் வண்ணனை….. பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே... பெரிய திருமொழி 1-9-10
2) தேடற்கரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற…..பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே… பெரிய திருமொழி 9-9-10-
வானவராகுவர் தாமே / வானவர் தாமே
1) வில்லார்மலி வேங்கடமாமலை மேய … வல்லாரவர் வானவராகுவர் தாமே… பெரிய திருமொழி 1-10-10- நல்லனபுடை வேதியர் மன்னிய நாங்கூர் …வல்லரென வல்லவர் வானவர் தாமே–…. பெரிய திருமொழி 4-7-1
15. இடமாகும் வானுலகே–.மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கட மலை………
மன்னுபாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே... பெரிய திருமொழி 2-1-10
2) ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர் தலைவன்….நாலுமாறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.. பெரிய திருமொழி 9-10-10
நாளும் பழவினை பற்றறுப்பாரே
1) அன்னமும் மீனும் ஆமையும் அரியும் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப்பாரே.… பெரிய திருமொழி 2-7-10
2) பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து……. பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறுப்பாரே... பெரிய திருமொழி 5-7-10
இமையவரோடும் கூடுவரே
1) மன்னுளார்புகழ் வேதியர் நாங்கூர் எண்ணிலாத பேரின்பமுற்று இமையவரோடும் கூடுவரே... பெரிய திருமொழி 3-2-10
2) வார்கொள் மென்முலை மடந்தையர்……. ஏர்கொள் வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும் கூடுவரே--…. பெரிய திருமொழி 8-5-10
18. பாவம் நில்லாவே-மாடமாளிகைசூழ் திருமங்கைமன்னன் ……..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்பாட நும்மிடைப் பாவம் நில்லாவே… பெரிய திருமொழி 5-8-10-தோடுவிண்டலர் பூம்பொழில் மங்கையர் …..பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.… பெரிய திருமொழி 7-3-10
3) மீனோடு ஆமை கேழல் அரிகுறளாய்……தேனாரின்சொல் தமிழ்மாலைசெப்பப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 8-8-10
4) சிலையால் இலங்கை செற்றான் நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே... பெரிய திருமொழி 9-6-10-
இவை பாடி ஆடுமினே
1) செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்…. வருநீர் வையமுய்ய இவை பாடி ஆடுமினே-… பெரிய திருமொழி8-9-10
2) மெய்ந்நின்ற பாவமகல ஐயொன்றுமைந்தும் இவை பாடி ஆடுமினே-…. பெரிய திருமொழி 11-7-10
20. நல்குரவே–கலையுலாவல்குல் காரிகை திறத்துக் உலவ சொல்மாலை வான்றும் வல்லவர்க்கில்லை நல்குரவே... பெரிய திருமொழி 9-1-10
2) ஆய்ச்சியாகிய அன்னையால் நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே-…. திருவாய்மொழி 6-2-11
21. பாவம் பயிலாவே-மூவராகிய ஒருவனை மூவுலகுண்டுஉமிழ்ந்தளந்தானை ….. பாவுதண்டமிழ்ப் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே… பெரிய திருமொழி 3-1-10
2) சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச் சலசயனத்து ….பாரார் இவை பரவித்தொழப் பாவம் பயிலாவே… பெரிய திருமொழி 7-9-10-
22. செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
1) சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது…… . செந்தமிழ்ப்பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே... நாச்சியார் திருமொழி 9-10
2) சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்…..செந்தமிழ்ப்பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே... திருவாய்மொழி 6-5-11
—————-
கவலை தரும் பகுதிகள்
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில்
அத்ததின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே -1-2-6-
வந்த முதலை குழாத்தை வலி செய்து
தந்த களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-
அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி
மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து
பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-
விண் கொள் அமரர்கள் வேதனை தீர
மண் கொள் வசுதேவன் தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே-1 3-10 –
மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -1-4 10-
துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவா தொரு கால் தூய கரும் குழல் நல் தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே -1 5-7 –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளரத் தொடர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே – 1-7 11- –
கத்தக் கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொதிந்து கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்து தலைவன் குடி கெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆயர்கள் ஏறு என்னைப் புறம் புல்குவான் -1 9-3 –
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித்
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்த திரு வயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் ஆழியான் என்னைப் புறம் புல்குவான் -1-9 7- –
வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2- 1-10 – –
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 -7- –
ஓட ஓட கிண் கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயை பற்ப நாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்து இட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை யாடி
ஓடி ஓடி போய் விடாதே உத்தமா நீ முலை உணாதே -2 2-10 – –
வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –
சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –
என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரானே ஓடாதே வாராய் -2 4-2 – –
கன்றினை வாலோலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்தோடி ஓர் பாம்பை பிடித்துக் கொண்டாடினாய் போலும்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி நீ பிறந்த நல் திரு நாள்
நன்று நீ நீராட வேண்டும் நாரணா நீராட வாராய் -2 4-8 – –
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆள் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-1 – –
பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்த அமரர் பெருமான் அழகமர்
வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கறுத்து எதிரிட்டு நின்ற கஞ்சனை கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடி
சிறுக்கன்று மேய்ப்பாற்க்கு ஓர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா – 2-6-3-
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –
தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2 7-4 –
மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7 – –
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் -2 10-9 –
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடைக்
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின்
கொடியனேன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 -2-9 –
கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –
புற்று அரவு அல்குல் யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல் வண்ணன் கழல் இணை காண்பர்களே -3 3-10 –
சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –
சிந்துரப் பொடி கொண்டு சென்னி யப்பிப் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்
அந்தரம் இன்றி தன்னெறி பங்கியை யழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை எதிர் நின்று அங்கு இனவளை இழவேல் என்னச்
சந்தியின் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல் கின்றதே – 3-4-8-
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 4-10 –
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவில் பொலி மறை வாணர் புத்தூர் திகழ பட்டார் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் நன்குடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3- 5-11 –
மாயவன் பின் வழி சென்று வழி இடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றம் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லை தண் புதுவை பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 -10-
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –
தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10-
கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –
தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக் காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-
மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-
பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-
கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-
பெருவரங்கள் அவை பற்றி பிழக்கு உடை இராவணனை
உருவரங்க பொருது அழித்து இவ்வுலகினை கண் பெறுத்தானூர்
குருவு அரும்ப கொங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே என் திரு மால் சேர்விடமே – 4-8 5- –
பருவரங்கள் அவை பற்றி படை யாலித்து எழுந்தானை
செருவரங்க பொருது அழித்த திருவாளன் திருப்பதி மேல்
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு
இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 -8-10 –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-
சாமிடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கோடு சக்கரம் ஏந்தினானே
நாமடித்து என்னை யனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத் துன்றிறத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னை சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே -4- 10-2 –
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே – 4-10 -10-
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே ஏழையேன் இடரைக் களையாயே – 5-1 -9-
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திரு மால் இரும் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமைத் திறம் நேர்பட விண்ணப்பம் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவைக் கோன் விட்டு சித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே– 5-3- 10- –
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…..தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது-5-நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய…. தூயோமாய் வந்தோம்- துயிலெழப் பாடுவான்–16-
நாச்சியார் திருமொழி
வெள்ளை நுண்மணற் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து-1-2-
வெள்ளை நுண்மணற்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்-2-5-
தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்--12-2-
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்--12-4-
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply